ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 2,975 
 
 

அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 | அத்தியாயம்-14

உடனே ராமசாமி “நீ சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’மங்களம்.நானும் தினமும் ‘ஹிண்டு’ பேப்பர் படிக்கிறேனே. நீ சொன்னா மாதிரி எல்லா கம்பனியும் வேலைக்கு ஒரு ‘கிராஜுவேட்டை’த் தான் அப்ளை பண்ண சொல்றா” என்று வருத்ததுடன் சொன்னார்.

சாயங்காலம் ராமநாதன் வேலையில் இருந்து வீட்டுக்கு வந்ததும் மங்களம் தன் ‘ஆபீஸி’ல் இருந்து வந்த ‘லெட்டரை’ அழுதுக் கொண்டே காட்டினாள்.’லெட்டரை’ப் படித்த ராமநாதனுக்கு ‘ஷாக்காக’ இருந்தது.”இப்போ தான் சுதாவும் ரமாவும் பள்ளிகூடம் போக ஆரம்பிச்சு இருக்கா. நாளுக் கு நாள் ஆத்து செலவும் ஜாஸ்தியா ஆயிண்டு வந்துண்டு இருக்கு.இப்போ பாத்து மங்களத்துக்கு அவ பண்ணீண்டு வந்த வேலை இப்படி திடீர்ன்னு போகணுமா.எல்லாம் நம்ப போறாத வேளை” என் று சொல்லி விட்டு ‘லெட்டரை’ மறுபடியும் மங்களத்திடம் கொடுத்து விட்டு தன் ‘ஷ¥வை’ கழட்டினான்.

அடுத்த நாளில் இருந்து மங்களம் வீட்டிலேயே ‘நிரந்தரமாக’ இருந்து வந்தாள்.

சுதா “ட்வெல்த்’ பாஸ் பண்ணிணாள்.சுதா எல்லா ‘சப்ஜெக்ட்டிலும்’ ரொம்ப சுமாராகத் தான் ‘மார்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணீ இருந்தாள்.உடனே மங்களம்” என்ன சுதா,நீ ரொம்ப சுமாரா தான் எல் லா ‘சப்ஜெக்ட்டிலும்’’ மார்க்’ வாங்கி இருக்கே.இந்த ‘மார்க்கு’க்கு உனக்கு எந்த ‘காலேஜிலும்’’ சீட்’ தர மாட்டாளே”என்று கொஞ்சம் கோவமாகச் சொன்னாள்.
ராமநாதன் சுதா ‘மார்க் ஷீட்டை’ வாங்கிப் பார்த்தான்.மங்களம் சொன்னபடி சுதா எல்லா ‘சப்ஜெ க்ட்டிலும்’ கம்மி ‘மார்க்’ தான் வாங்கி இருந்தாள்.

அவரும் ”ஆமாம்.அம்மா சொல்றது ரொம்ப சரி.உனக்கு எந்த ‘காலேஜிலும்’ ‘சீட்’ கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.’டொனேஷன்’ குடுத்து தான் ‘காலேஜிலே’ ‘சீட்’ வாங்கணும். SC, STகாராளுக்கு பரவாயில்லை.இந்த ‘மார்க்’ வாங்கினவாளுக்கு ‘சீட்’ கிடைக்கும்.’பார்வர்ட்’ ஜாதிக்காராளுக்கு ‘சீட்’ கிடைக்காதே” என்று சொல்லி அலுத்துக் கொண்டார்.

சுதா அம்மா அப்பா சொன்னதைக் கேட்டவுடன் ”அம்மா,அப்பா எனக்கு மேலே படிக்கணும் ன்னு ஆசை இல்லே.எனக்கு ஒரு வேலைக்குப் போகணும்ன்னு தான்ஆசையா இருக்கு.நான் வேலை க்கு ‘ட்ரை’ பண்ணப் போறேன்” என்று சொன்னதும் ராமநாதன் சுதாவை பார்த்து “சுதா,நீ வெறுமனே ‘ட்வெல்த்’தான் ‘பாஸ்’ பண்ணி இருக்கே.அந்த படிப்புக்கு பெரிய வேலை ஒன்னும் கிடைக்காது.நான் உன்னே ‘டொனேஷன்’ குடுத்து B.Com.சேக்கறேன்.நீ கஷ்டப் பட்டு படிச்சா, உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும்” என்று சொன்னார்.

உடனே மங்களம்” சுதா,இந்த தப்பே மட்டும் பண்ணாதே.வெறுமனே ‘டெந்த்’ மட்டும் படிச்சி, அதுவும் எல்லா ‘சப்ஜெக்ட்டிலும்’ கம்மி ‘மார்க்’ வாங்கி இருக்கும் உனக்கு எங்கேயும் ஒரு வேலையும் கிடைக்காது.நான் பண்ண தப்பே நீயும் பண்ணதே.இதோ பார்.நான் வெறும் ‘டெந்த்’ தான்.ஆனா எல்லா ‘சப்ஜெக்ட்டிலும்’ ரொம்ப ஹை ‘மார்க்’ வாங்கி இருக்கேன்.அந்த காலத்லே எப்படியோ எனக்கு ஒரு வேலை கிடைச்சது.ஆனா இப்போ வேறும் ‘டெந்த்’ படிப்புக்கு நல்ல வேலையே கிடைக்காது” என்று தன் பெண்ணை எச்சரித்தாள்.

சுதா “அப்பா,அம்மா எனக்கு மேலே படிக்கற ஆசையே இல்லே.அப்பா நீங்க வீணா ‘டொனே ஷன்’ எல்லாம் குடுத்து என்னே B.Com எல்லாம் சேக்காதீங்கோ.நான் படிக்க மாட்டேன்.எனக்கு ஒரு வேலைக்குத் தான் போகணும்னு ஆசையா இருக்கு” என்று பிடிவாதம் பிடித்து வந்தாள்.

மங்களமும் சுதாவை தனியாக அழைத்துக் கொண்டு போய் தன் கணவன் சொன்னதை சொல் லிப் பார்த்தாள்.உடனே சுதா “அம்மா எனக்கு மேலே படிக்க கொஞ்சம் கூட ஆசையே இல்லே எனக்கு வேலைக்குப் போகத் தான் பிடிச்சு இருக்கு” என்று தீர்மானமாக சொல்லி விட்டு வேலைக்கு மும்முற மாக தேடி வந்தாள்.

ரமா மிக நன்றாகப் படித்து வந்து எல்லா வகுப்பிலேயும் முதல் மானவியாக ‘பாஸ்’ பண்ணி வந்தாள்.ராமநாதனுக்கும் மங்களத்துக்கும் ரொம்ப சந்தோஷம்.இருவரும் ரமாவை பாராட்டி” ரமா, நீயாவது ரொம்ப நன்னா படிச்சு ஒரு ‘கிராஜுவேட்’ ஆகணும்” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

உடனே ரமா “நீங்க ரெண்டு பேரும் கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ.நான் நிச்சியமா நன்னா படிச்சு ஒரு ‘டபுள் ‘கிராஜுவேட்’ஆவேன்.அது தான் என் ஆசை” என்று பட்டென்று சொன் னாள்.உடனே ராமநாதன் “ரமா,நீ சொல்றதே கேக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி ரமாவின் தலையை வருடி விட்டான்.உடனே மங்களமும்”எனக்கும் ரொம்ப சந்தோஷமா இரு க்கு ரமா.நான் ஒரு ‘கிராஜுவேட்டே’ ஆகலே.ஆனா நீ ஒரு ‘டபுள் கிராஜுவேட்’ ஆக ஆசைப் படறே” என்று சொல்லி அவளும் ரமாவின் தலை வருடி விட்டாள்.

ரமா சொன்னதை கேட்டு ராமசாமியும்,விமலாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ராமசாமி “பெரிய பேத்தி ‘கிராஜுவேட்’படிப்பு எனக்கு வேணாங்கறா.ஆனா என்னுடைய சின்ன பேத்தி அவளே ஓரு ‘டபுள் ‘கிராஜுவேட்’ ஆவேன்னு சொல்றா.ரெண்டு பேத்திகள்ளே எவ்வளவு வித் தியாசம்.ஆச்சரியமா இருக்கே.’மடுவுக்கும், மலைக்கும் இருக்கிற வித்தியாசமா’ இருக்கே” என்று சொ ன்னதும் ”ஆமாம் எனக்கும் அப்படித் தான் படறது” என்று சொல்லி தன் கணவன் சொன்னதை ஆமோதித்தாள் விமலா.

சொன்னதைப் போலவே சுதா தினமும் வீட்டில் ‘காபி டிபன்’ சாப்பிட்டு விட்டு வெளீயே போய் வேலை தேடி வந்தாள்.அவளுக்கு பிடித்தார் போல ஒரு நல்ல வேலை அவளுக்கு கிடைக்க வில்லை.’நாம ஆத்லே வேலைக்குப் போகப் போறோன்னு சொல்லி இருக்கோம்.நல்ல வேலையாத் தான் பாத்து சேரணும்.அவசரப் பட்டு ஒரு சாதாரண வேலைலே சேந்து விடக் கூடாது’ என்று தன் மனதில் சொல்லிக் கொண்டாள்.விடாமல் ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொண்டு இருந்தாள் சுதா.

வெய்யில் அதிகமாக இருந்ததால் சுதாவுக்கு தாகமாக இருந்தது.

அவள் வழியில் இருந்த ‘க்ரேஸ் சூப்ப்ர் மார்கெட்டுக்கு’ ப் போய் ஒரு ‘கூல் டிரிங்க்’ குடிக்கலாம் என்று ஆசைப் பட்டு அந்த ‘சூப்ப்ர் மார்கெட்டுக்கு’’உள்ளே நுழைய போனாள்.வாசலில் இருந்த கூர்க் கா வாசல் கதவை த் திறந்து சுதாவை உள்ளே அனுப்பினார்.உள்ளே நுழைத்த சுதா,அந்த சூப்பர் மார்கெட்டு பூராவும் ஏ.ஸி.போட்டு இருந்ததால் ‘ஜில்’ என்று இருந்தது.சுதா இது வரை ஏ.ஸி.யில் இருந்து இல்லாததால் கொஞ்ச நேரம் அவள் அந்த ஏ.ஸி காற்றை சந்தோஷமாக அனுபவித்து வந் தாள்.அந்த ‘சூப்ப்ர் மார்கெட்டுக்கு ’ரொம்ப சுத்தமாகவும், நிறைய அறையில் எல்லா மளிகை சாமான்க ளும்,கார்கறிகளும்,பழங்களும் ‘நீட்டாக’ அடுக்கி வைக்கப் பட்டு இருந்தது.’ஒரு சூப்ப்ர் மார்கெட்டு க்கு’ன்னா இப்படித் தான் ஆத்துக்கு வேண்டிய எல்லா சாமானகளும்,காய்கறிகளும்,பழங்களும் ஒரே இடத்லெ கிடைக்குமா’ என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.

சுதா அந்த ‘சூப்ப்ர் மார்கெட்டை’சுற்றிப் பார்த்தாள்.அவளுக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. மடிப்பு கலையாத அந்த கடை ‘யூனிபாரத்தை’’ போட்டுக் கொண்டு, பீட்டர் யாரோ ஒரு ‘கஸ்டம ரோடு’ பேசிக் கொண்டு இருந்தான்.சுதா மெல்ல அவன் அருகில் போய் “ஹை பீட்டர்,நீங்க இங்கேயா வேலை செய்யறேள்” என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.சுதாவைப் பார்த்ததும் பீட்டருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.படிக்கும் போது இருந்ததை விட சுதா இன்னும் அழகு தேவதை போல இருந்தாள். அவளை ஆச்சரியமாக மேலும் கீழுமாக பார்த்துக் கொண்டு இருந்தான்.

பீட்டர் பதில் ஒன்றும் சொல்லாமல் இருக்கவே சுதா பொறுமையை இழந்து “நான் உங்களே கேட்டே இருக்கக் கூடாது.நான் கேட்டதுக்கு நீங்கோ பதில் சொல்லாம என்னமோ என்னையே மேலு ம் கீழுமா பாத்துண்டு இருக்கேளே” என்று கோவமாக பதில் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு ‘கூல் டிரிங்க்’ இருக்கும் இடத்தை தேடி அந்த இடத்துக்கு வந்தாள்.

பீட்டர் “சுதா,சுதா” என்று கத்திக் கொண்டே அவள் பின்னால் வந்து “ரொம்ப சாரி சுதா.உன் னே பாத்ததும் நான் அப்படியே அசந்து போய் நின்னுக் கிட்டு இருந்தேன்.நீ பாக்க ரொம்ப அழகா இருக்கே.இங்கே எதுக்கு வந்தே சுதா” என்று சுதாவிடம் மன்னிப்பு கேட்டான்.அவன் சாரி சொன்னது ம் சுதா அவனைப் பார்த்து “பீட்டர்,நான் ‘ட்வெல்த்’ ‘பாஸ்’பண்ணிட்டேன்.எனக்கு மேலே படிக்க ஆசை இல்லே.ஒரு வேலையைத் தேடிக்கலாம்ன்னு இருக்கேன்.வெளியிலே ரொம்ப வெய்யிலா இருந் தாதாலே ஒரு ‘கூல் டிரிங்க்’ குடிக்கலாம்ன்னு இந்த ‘சூப்ப்ர் மார்கெட்டுக்கு’உள்ளே நுழைஞ்சேன்” என்று சொன்னாள்.

உடனே பீட்டர் அந்த ‘கூல் டிரிங்க்’ கடைக்கார பெண்ணைப் பார்த்து “இவங்களுக்கு ஒரு நல்ல ‘கூல் டிரிங்க்’ குடுங்க” என்று சொல்லி விட்டு ஒரு நூறு ரூபாய் நோட்டை அந்த கடைகார பெண்ணி டம் நீட்டினான்.அந்த கடைகார பெண்ணும் ஒரு நல்ல ‘கூல் டிரிங்கை’ திறந்து சுதாவிடம் நீட்டினாள். சுதா தன் மனதுக்குள் ’ஏண்டா நாம இவர் கிட்டே ‘கூல் டிரிங்க்’ குடிக்க வந்தோம்ன்னு சொன்னோம். அவர் இப்போ நமக்கு ஒரு ‘கூல் டிரிங்கை’ வாங்கிக் குடுத்து இருக்காரே’ என்று வருத்தப் பட்டுக் கொண்டே அந்தப் பெண் கொடுத்த ‘கூல் டிரிங்கை’ வாங்கிக் குடித்துக் கொண்டு இருந்தாள்.

பீட்டர் சுதா ‘கூல் டிரிங்க்’ குடிக்கும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான்.

கொஞ்ச நேரம் ஆனதும் பீட்டர் சுதாவைப் பார்த்து “சுதா,இந்த ‘சூப்ப்ர் மார்கெட்டிலே’ ‘கஸ்ட மர்கள்’ வாங்கின சாமான்களுக்கு ‘பார் கோடை ப் பாத்து ‘பில்’ போட்டு விட்டு,அப்புறமா அவங்க குடுக்கற ‘காஷை’ வாங்கி,கல்லாலே போட்டுட்டு,மீதி சில்லறையைக் குடுக்கற வேலை உனக்கு பிடி ச்சு இருக்கா சொல்லு.நான் இந்த கடை முதலாளியைப் பாத்து உனக்கு இந்த வேலையை வாங்கித் தறேன்” என்று சொன்னதும் சுதாவுக்கு பீட்டர் சொன்னது ரொம்ப பிடித்து இருந்தது.

உடனே சுதா “எனக்கு அந்த மாதிரி வேலை ரொம்ப பிடிச்சு இருக்கு.நீங்க தயவு செஞ்சி இந்த கடை முதலாளி கிட்டே சொல்லி எனக்கு வாங்கித் தர முடியுமா” என்று ஆவலுடன் கேட்டாள். உட னே பீட்டர் “சுதா உனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சி இருக்கா.நான் முதலாளி கிட்டே உனக்கு இந்த வேலை வாங்கி குடுத்த பிற்பாடு,நீ ‘எனக்கு இந்த வேலை பிடிக்கலேன்னு’ சொல்லக் கூடாது என்ன” என்று கேட்டதும் “எனக்கு இந்த மாதிரி வேலை ரொம்ப பிடிச்சி இருக்கு.நீங்க உங்க முதலாளி கிட்டே சொல்லி எனக்கு இந்த வேலையை வாங்கி குடுங்க” என்று சொன்னதும்,பீட்டர் சந்தோஷப் பட்டுக் கொண்டு,”சரி சுதா நீ என் கூட வா” என்று சொல்லி சுதாவை அழைத்துக் கொண்டு கடை முதலாளி ரூமுக்குப் போனான்.

கடை முதலாளி பீட்டரைப் பார்த்ததும் “என்ன பீட்டர்,என்ன விஷயம்.யாரு இந்தப் பொண்ணு” என்று கேட்டதும் பீட்டர் “முதலாளி,இந்த பொண்ணு பேர் சுதா.சுதா நான் படிச்ச பள்ளீக் கூடத்லே தான் படிச்சு,இப்போ ‘டெந்த் பாஸ்’ பண்ணி இருக்கா.இவளுக்கு ‘பில்’ போட்டு ‘காஷ்’ வாங்கற வே லை ரொம்ப பிடிச்சு இருக்காம்.சுதா ரொம்ப நல்ல பொண்ணு.அவ ஒரு ஐயர் வீட்டுப் பொண்ணு. பள்ளி கூடம் படிக்கற நாள்ளே இருந்து எனக்கு சுதாவை ரொம்ப நல்லாத் தொ¢யும்.நீங்க தயவு செ ஞ்சி அந்த மாதிரி ஒரு வேலையை சுதாவுக்கு குடுக்க முடியுமா” என்று பவ்யமாகக் கேட்டான்.

உடனே அந்த கடை முதலாளி “பீட்டர், நீ சுதா ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொல்றதாலே நான் சுதாவுக்கு அந்த வேலையைத் தறேன்” என்று சொல்லி விட்டு ”சுதாவைப் பார்த்து “நீ வர திங்கக் கிழமையிலே இருந்து கடைக்கு காத்தாலே எட்டு மணிக்கு வா.உனக்கு அந்த வேலைக்கு நான் ஒரு மாசம் ‘ட்ரெயினிங்க்’ தறேன்.நீ அந்த வேலையை நல்லா கத்துண்டு வந்தா,ஒரு மாசம் கழிச்சு, நீ அந்த வேலையை செஞ்சு வரலாம்,ஆனா ஒன்னு.இது ‘காஷ்’ சமபந்தப் பட்ட வேலை.எந்த திருட்டு வேலையும் செய்யக் கூடாது.இது ரொம்ப முக்கியம்.உனக்கு நான் மாச சம்பளம் ஆறாயிரம் ரூபாய் தறேன்.உனக்கு சம்மதமா” என்று கேட்டு சுதாவைப் பார்த்தார்.

உடனே சுதா “சார்,நான் பகவான் சாட்சியா சொல்றேன்.நான் திருடவே மாட்டேன்.என்னை நம்புங்க” என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்டாள்.உடனே அந்த கடை முதலாளி சுதாவை வர திங்கக் கிழமையில் இருந்து வேலைக்கு சேரச் சொன்னார்.முதலாளி ரூமை விட்டு வெளியே வந்து சுதா கண்களில் கண்ணீர் மலக “உங்களுக்கு எப்படி ‘தாங்க்ஸ்’ சொல்றதுன்னே எனக்கு தொ¢யலே” என்று கைகளை கூப்பி சொன்னாள்.

உடனே பீட்டர் “சுதா,முதலாளி உனக்கு வேலையை குடுத்து இருக்கார்.நான் இருக்கேன்.நீ கவலைப் படாம இந்த வேலையில் சேந்திடு” என்று சொல்லி சுதாவுக்கு ¨தா¢யம் சொன்னான். சுதா வுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

உடனே சுதா பீட்டரைப் பார்த்து மறுபடியும் ‘தாங்க்’ பண்ணி விட்டு சந்தோஷமாக தன் வீட்டு க்கு வந்தாள்.அப்பா அம்மா கிட்டே ‘தனக்கு ‘க்ரேஸ் சூப்ப்ர் மார்கெட்லே’ ஒரு நல்ல வேலை கிடைச்சு இருக்கு’ என்று சொல்ல ஒரு நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

சுதா வீட்டுக்கு வந்து சாயங்காலம் அப்பா வீட்டுக்கு வரை பொறுமையாய் இருந்தாள்.

அப்பா வேலையை விட்டு வீட்டுக்கு வந்து ‘காபி’ குடித்ததும் சுதா தன் அம்மா அப்பாவிடம் ”எனக்கு ‘க்ரேஸ் சூப்ப்ர் மார்கெட்டிலே’ ஒரு ‘பில்’ போடும் வேலை கிடைச்சு இருக்கு.அந்த வேலை க்கு எனக்கு ஒரு மாசம் ‘ட்ரெயினிங்க்’ தருவா.நான் அந்த வேலையை நல்லா கத்துண்டு வந்தா,ஒரு மாசம் கழிச்சு,நான் அந்த வேலையை செஞ்சு வரலாம்,எனக்கு மாச சம்பளம் ஆறாயிரம் ரூபாய்.நான் வர திங்கக் கிழமையிலே இருந்து அந்த வேலைக்குப் போய் வரப் போறேன்” என்று சந்தோஷமாக சொன்னாள்.
உடனே மங்களம் ”என்ன வேலை கிடைச்சு இருக்கு ன்னு சொன்னே,வெறுமனே ‘பில்’ போடும் வேலையா,இல்லை ‘பில்’ போட்டுட்டு,கூடவே காஷ¤ம் வாங்கும் வேலையா”என்று கேட்டாள்.

உடனே சுதா “அம்மா,நான் சாமாங்க ‘பார் கோடை’க் காட்டி,’பில்’ போட்டு விட்ட பிறகு,அந்த ‘பில்லுக்கு’ காஷை வாங்கிண்டு சில்லறை தரணும்” என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

மங்களம் ’இந்த பொண்ணு இந்த ‘காஷ்’ வாங்கற வேலைக்குச் சேரப் போகிறாளே.இவ ரொம்ப ஜாக்கிறதையா இருந்து வரணுமே’என்று தன் மனதில் சொல்லிக் கொண்டு ‘நாம இந்த ‘காஷ்’ வேலை செஞ்சுண்டு வந்து தானே,ஒரு நாள் ‘காஷ் ‘ஷார்ட் ஆகி இப்போ அந்த நல்ல வேலையை போக்கிண் டுட்டு ஆத்லே சும்மா உக்காந்துக் கொண்டு இருக்கோம்’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள்.

சுதா சொன்னது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சும்மா இருந்தார் ராமநாதன்.அவருக்கும் சுதா இந்த ‘காஷ்’ சம்மந்தப் பட்ட வேலை செய்து வருவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை.’சுதா சின்னப் பொண்ணு ஆச்சே.’காஷ்’ வேலையிலே ரொம்ப ஜாக்கிறதையா இருந்து வரணுமே.மங்களம் இந்த ‘காஷ்’ வேலை செஞ்சு வந்து ‘காஷ் ஷார்ட்’ஆயி,அவ வேலையை இப்போ போக்கிண்டு விட்டா’ என்று யோஜனைப் பண்ணி கவலைப் பட்டார்.

ராமசமியும் விமலாவும் ஒன்னும் சொல்லாமல் இருந்தார்கள்.அவர்கள் இருவருக்கும் சுதா முதல் முதல்லே இந்த ‘காஷ்’ வேலை செஞ்சு வருவது கொஞ்சமும் பிடிக்கவில்லை.ஒன்னும் சொல்லா மல் சும்மா இருந்து வந்தார்கள்.

சொன்னது போல சுதா திங்கக் கிழமை காலையிலே குளித்து விட்டு நன்ராக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு டிபன் சாப்பிட உட்கார்ந்தாள்.ராமசாமி சுதாவைப் பார்த்து “சுதா,இன்னிக்கு நீ அந்த ‘க்ரேஸ் சூப்பர் மார்கெட்டி’லே வேலைக்கு சேரப் போறே.சுவாமிக்கு ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு வரக் கூடாதோ.குளிச்சுட்டு நன்னா ‘டிரஸ்’ பண்ணிண்டு நேரே ‘டிபன்’ சாப்பிட வந்து இருக்கியே” என்று கோவித்துக் கொண்டார்.சுதா எழுந்து போய் சுவாமிக்கு ஒரு நமஸ்காரம் பண்ணி விட்டு ‘டிபன்’ சாப்பிட உட்கார்ந்தாள்.

சுதாவுக்கு ‘டிபனை’க் கொடுத்து விட்டு “இனிமே நீ காத்தாலே தினமும் சுவாமிக்கு ஒரு நம ஸ்காரம் பண்ணிட்டுத் தான் ‘டிபன்’ சாப்பிட வரணும் தொ¢யறாதா”என்று விமலா கொஞ்சம் கடுமை யாக சொன்னதும் சுதா “சரி பாட்டி,நான் இனிமே நீ காத்தாலே தினமும் சுவாமிக்கு ஒரு நமஸ்காரம் பண்ணிட்டு ‘டிபன்’ சாப்பிட வறேன்” என்று சொல்லி விட்டு பாட்டி கொடுத்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு வேலைக்குப் போக கிளம்பினாள்.

“சுதா,நீ இப்போ வேலைக்குப் போனா,எப்போ ஆத்துக்குத் திரும்பி வருவே” என்று கேட்டாள் மங்களம்.

உடனே சுதா “அம்மா,எனக்கு சரியாத் தொ¢யாது.இன்னைக்கு வேலைக்குப் போனாத் தான் தொ¢யும்”என்று சொல்லி விட்டு கிளம்ப நினைத்த போது, விமலா “சுதா மத்தியானத்துக்கு கொஞ்சமா தயிர் சாதம் பிசைஞ்சு தறேன்.அதே சாப்பிடு.நீ சாப்பிட்ட ‘டிபன்’ எத்தனை மணி நேரம் தாங்கும்” என்று சொல்லி ஒரு சின்ன ‘டிபன் பாக்ஸில்’ ‘கட’ ‘கட’ என்று தயிர் சாதததை பிசைந்துக் கொண்டு வந்து சுதாவிடம் கொடுத்தாள்.சுதா பாட்டி கொடுத்த தயிர் சாத ‘டிபன் பாக்ஸை’ எடுத்துக் கொண்டு சந்தோஷமாக வேலைக்குக் கிளமபினாள்.

உடனே ராமநாதன் “சுதா,உன் ஆசைப் படி நீ இன்னிக்கு அந்த ‘க்ரேஸ் சூப்ப்ர் மார்கெட்’ வே லைக்கு போய் வறப் போறே.நீ ரொம்ப ஜாக்கிறதையா அந்த வேலையை பண்ணீண்டு வந்து அந்த ‘க்ரேஸ் சூப்ப்ர் மார்கெட்’ அதிகாரிகள் கிட்டே நல்ல பேர் வாங்கிண்டு வரணும்.ஒரு மாச ‘ட்ரெயினிங்க்’ ஆன பிற்பாடு ‘நீ ‘பில்’ போட்டு ‘கஸ்டமர்கள்’ கிட்டே ‘காஷ்’ வாங்கும் போது ரொம்ப கவனமா இருந்துண்டு வா. அவா குடுக்கற ரூபாய் நோட்டுகளை எல்லாம் ஒரு தடவைக்கு ரெண்டு தரம் கவனிச்சு வாங்கு.அதே மாதிரி அவாளுக்கு சில்லறை குடுக்கும் போது ரொம்ப கவனமா இருந்து வா” என்று எச்சரித்தார்.

உடனே சுதா “சரிப்பா,நான் வேலையிலே ரொம்ப கவனமா இருந்து வறேன்.நீங்க கவலைப் படாம இருந்து வாங்கோ” என்று சொல்லி விட்டு வேலைக்குக் கிளம்பிப் போனாள்.
ராமநாதன் சொன்னதைக் கேட்டதும் மங்களத்துக்கு ‘சுரீர்’ என்று இருந்தது.

’நம்ப ஒரு ‘காஷியர்’ வேலை செஞ்சு வந்தப்ப பத்தாயிரம் ரூபாய் ‘ஷார்ட்’ வந்ததினால், நாம இப்போ அந்த வேலையை போக்கிண்டு வந்து இருப்பதை ‘அவர்’ சொல்லி காட்டறாரா’ என்று நினை த்து மிகவும் கவலைப் பட்டுக் கொண்டு வந்தாள் மங்களம்.

சுதா சுப்பர் மார்கெட்டில் நுழைந்ததும் பயத்துடன் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு இருந் தாள்.சுதாவைப் பார்த்த பீட்டர் உடனே சுதா அருகில் வந்து “வா,சுதா” என்று சொன்னதும் தான் சுதா வுக்கு அவள் பயம் அவளை விட்டு விலகியது.பீட்டர் சுதாவை அழைத்துக் கொண்டு கடை முதலாளி இடம் ”சார்,சுதா வேலைக்கு இன்னைக்கு வந்து இருக்கா” என்று சொன்னதும் அந்த முதலாளி உட னே “பீட்டர், நீ சுதாவை அழைச்சுக் கிட்டு போய் ‘பில்’ போடும் வேலைக்கு ஒரு மாச ‘ட்ரெயினிங்க்’ குடு.சுதாவை அந்த வேலையை கவனமா கத்துக் கிட்டு வர சொல்லு” என்று சொல்லி அனுப்பினார்.

பீட்டர் சுதாவை அழைத்துக் கொண்டு ஒரு காலி ‘கவுண்டருக்கு’ சுதாவை அழைத்துப் போய், ‘பில்’ போடும் வேலையை சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தான்.சுதாவும் ‘பீட்டர் ‘கஸ்டமர்கள்’ வாங்கும் சாமான்களுக்கு எப்படி ‘பார் கோடை’ப் பார்த்து ‘பில்’ போடறார்’ என்று கவனமாக கவனித்துக் கொண்டு வந்தாள்.

அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்த சுதா தன் அம்மாவிடம் “அம்மா, என் வேலை பத்து மணி க்கு ஆரம்பிக்கறது.மத்தியானம் ஒரு மணி நேரம் ‘லன்ச்சுக்கு’விடறா.அப்போ எந்த வேலையும் இல் லே.அப்புறமா மறுபடியும் வேலை செஞ்சு வர ஆரம்பிச்சேன்.ஆறு மணிக்கு என்னே ஆத்துக்கு அனுப் பி இருக்கா” என்று தன் கடை வேலை நேரத்தை சொன்னாள்.”சரி,அப்பா சொன்னா மாதிரி நீ வேலை யிலே ரொம்ப கவனமா இருந்தா வா” என்று சொன்னாள்.உடனே சுதாவும்” நான் வேலையிலே கவன மா இருந்து வறேம்மா.நீங்க கவலைப்படா இருந்து வாங்கோ” என்று சொன்னாள்.

‘கஸ்டமர்கள்’ வராத இருக்கும் போது பீட்டர் சுதாவிடம் நிறைய பேசி தன் குடும்பத்தைப் பத்தி சொல்லி விட்டு,சுதாவின் குடும்பத்தை பற்றியும் கேட்டான். சுதாவும் தன் குடும்பத்தை பீட்டருக்கு சொன்னாள். பீட்டர் பேசினதும்,சுதா பேசினதும்,இருவருக்கும் ரொம்ப பிடித்து இருந்தது.

’பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தால் பற்றிக் கொள்ள ரொம்ப நேரம் ஆகுமா என்ன!!!

அந்த ஒரு மாச ‘ட்ரெயினிங்க்’ முடிவதற்குள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார காதலிக்க ஆரம்பித்தார்கள்.

இருவரும் சந்தோஷமாக மனம் விட்டு பேசிக் கொண்டு வந்தார்கள்.ஒரு நாள் பீட்டர் சுதாவைப் பார்த்து “சுதா,எனக்கு உன்னே ரொம்ப பிடிச்சு இருக்கு.உன்னே கல்யாணம் பண்ணிக் கொள்ள எங்க அப்பாவும் ஆயாவும் நிச்சியமா சம்மதம் குடுபாங்க.நீ மெல்ல நம்ம காதலை உங்க அப்பா அம்மா கிட் டே சொல்லி சம்மதம் வாங்க முடியுமா” என்று நோ¢டையாகவே கேட்டான்.
சுதா வெட்கப் பட்டு “எனக்கும் உங்களை கல்யாணம் பண்ணீக்கறதிலே ரொம்ப சந்தோஷம் தான்.ஆனா எங்க அம்மா,அப்பா,தாத்தா,பாட்டி,என்னை ஒரு கிருஸ்தவ பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க விரும்பவே மாட்டாங்களே.நான் என்ன பண்ணட்டும்” என்று சொல்லும் போது அவள் கண்களீல் கண்ணீர் தளும்பியது.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீன பீட்டர் “சுதா, நீ தான் எபடியாவது நம்ம காதலை அவ ங்க கிட்டே சொல்லி கல்யாணத்துக்கு சம்மதிக்க வக்கணும்.’ப்லீஸ்’ சுதா.கொஞ்சம் ‘ட்ரை’ பண்ணேன் நான் கல்யாணம் பண்ணி கிட்டா உன்னே தான் கல்யாணம் பண்ணீப்பேன். நான் வேறே எந்தப் பொ ண்ணையும் கல்யாணம் கட்டிக்க மாட்டேன்.நான் உன்னே கல்யாணம் பண்ணி கிட்டா உன்னே காலம் பூராவும் கண் கலங்காம வச்சு குடித்தனம் பண்ணுவேன் சுதா.இது சத்தியம் சுதா” என்று கண்களில் கண்ணிர் மல்க சொன்னான்.

உடனே சுதா “நான் நிச்சியமா எங்க ஆத்லே சொல்லி அவா எல்லாருடய சம்மதத்தையும் வாங்க’ ட்ரை’பண்றேன்.எனக்கு ஒரு ஆறு மாச ‘டைம்’ குடுங்கோ” என்று சொன்னாள். உடனே பீட்டர் “ரொம்ப ‘தாங்க்ஸ் சுதா”என்று சொல்லி சுதாவை தாங்க் பண்ணினான்.

அன்று இரவே பீட்டர் சுதாவை பற்றின எல்லா விவரத்தையும் தன் அப்பா,ஆயாவிடம் சொல்லி தன் காதலையும் அவர்களிடம் சொல்லி சுதாவை கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதம் வாங்கி விட் டான்.

ஒரு மாச ‘ட்ரெயினிங்க்’ முடிந்ததும் சுதா ‘கஸ்டமர்களுக்கு’ ‘பில்’ போட்டு விட்டு அந்த ‘பில்லு க்கு’ பணத்தை அவர்களிடம் வாங்கி, மீதி சில்லரையை கொடுத்து வந்தாள்.அந்த மாச இறுதியில் சுதாவுக்கு சமபளம் வந்தது.அவள் அந்த சம்பளத்தை அப்பா அம்மா இடம் தராமல் தன்னிடமே வைத்துக் கொண்டாள்.

சுதா பாட்டி கொடுத்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு வேலைக்குக் கிளம்ப தயாரானாள்.பாட்டி கொண்டு வந்த தயிர் சாத ‘டிபன் பாக்ஸை’ சுதா எடுத்துக் கொள்ளாமல் “பாட்டி, இந்த தயிர் சாத ‘டிபன் பாக்ஸ்’ வேணாம்.எங்க ‘சூப்பர் மார்கெட்டிலே’ சாப்பிடநிறைய சூடா கிடைக்கறது.அதிலே எனக்குப் பிடிச்ச சாப்பாட்டை,நான் சூடா வாங்கி சாப்பிடப் போறேன்” என்று சொல்லி விட்டு வெறும் கையுடன் வேலைக்குக் கிளம்பிப் போனாள்.

மூனு மாசம் போனதும் மங்களம் சுதா வேலையில் இருந்து எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்ததும் “சுதா,நீ வேலைக்குப் போய் மூனு மாச சம்பளம் வாங்கிண்டு வந்து இருக்கே. ஆனா உன் சம்பள பணத்தே என் கிட்டேயோ,இல்லே அப்பா கிட்டேயோ குடுக்காம இருக்கே.சம்பளம் வந்தா அந்த சம்பளத்தே அம்மா அப்பா கிட்டே குடுக்க வேணாமா” என்று சற்று கடுமையாகக் கேட்டாள்.

உடனே சுதா கவலைப் பட்டாமல் “நான் எனக்கு வந்த சம்பள பணத்தை யார் கிட்டேயும் தரலே ம்மா.நான் அந்த பணத்தை என் ‘பாங்க்’ கணக்கிலே போட்டு வச்சுக்கப் போறேன்” என்று சொன்னது ம் மங்களத்துக்கும் ராமநாதனுக்கும் ‘ஷாக்காக’ இருந்தது.அவர்கள் இருவருக்கும் என்ன சொல்வது என்று தொ¢யாமல் முழித்துக் கொண்டு இருந்தார்கள்.

இரவு படுத்துக் கொண்டு இருக்கும் போது ராமநாதன் மங்களத்தைப் பார்த்து “மங்களம் சுதா இப்படி சொன்னப்புறமா,நாம அவளே ஒன்னும் கேக்க முடியாது” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

சுதா மாசா மாசம் தனக்கு வித விதமான புது புது ‘டிரஸ்களை’ எல்லாம் வாங்கிப் போட்டுக் கொண்டு வேலைக்குப் போய் கொண்டு இருந்தாள். காலில் போட்டுக் கொண்டு இருந்த சாதாரண மான செருப்பை தூர ஏறிந்து விட்டு நல்ல ‘பாஷனா’ செருப்பை போட்டுக் கொண்டு வர ஆரம்பித்தாள்.

ரெண்டு மாசம் ஆனதும் நன்றாக தலையை வாரிக் கொண்டு கொஞ்சம் பூவை வைத்துக் கொண்டு வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்த சுதா ஒரு நல்ல ‘சலூனு’க்குப் போய் தன் தலை மயிரை ‘ஸ்டைலாக’ வெட்டிக் கொண்டு வந்தாள்.

சுதா வீட்டுக்கு வந்ததும் விமலா “என்ன சுதா,நீ என்ன உன் தலை மயிரை இப்படி கன்னா பின்னானு வெட்டிண்டு வந்து இருக்கே.பொம்மணாட்டிகள் தலை மயிரை வெட்டிக்கவே கூடாது ன்னு உனக்குத் தொ¢யாதா.பெரியவாளை ஒரு வார்த்தை கேக்காம ஏன் இப்படி உன் தலை மயிரை வெட்டிண்டு வந்து இருக்கே” என்று சுதாவைப் பார்த்து கத்தினாள்.

ராமநாதனும்,ராமசாமியும்,மங்களமும் சுதாவை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் மூனு பேருக்கும் சுதா தன் தலை மயிரை இப்படி ‘ஸ்டைலாக’ வெட்டிக் கொண்டு வந்தது துளிக் கூட பிடிக்கவில்லை.

சுதா “பாட்டி சூப்பர் மார்கெட்டிலே’ வேலை செஞ்சிண்டு வர பொண்களும் இப்படித் தான் தலையை ‘ஸ்டைலா’ வெட்டிண்டு வேலைக்கு வறா.நான் ஒருத்தி தான் ‘பட்டிக்காட்டு பொண்ணே’ப் போல தலையை எண்ணையைத் தடவி,நன்னா ‘மழுங்க வாரிண்டு’ பூவையும் வச்சுண்டு வேலைக்கு ப் போயிண்டு வந்து இருக்கேன். இப்போ இது தான் பாஷன் பாட்டி”என்று சொல்லி விட்டு குளிக்கப் போனாள்.

குளித்து விட்டு வேறே ‘டிரஸ்’ போட்டுக் கொண்டு சாப்பிட உட்காத்துக் கொண்டாள்.

சுதா சொன்ன பதிலைக் கேட்டதும் ராமநாதனும்,மங்களமும் ராமசாமியும் அசந்துப் போய் வாயடைத்து நின்றுக் கொண்டு இருதார்கள். சுதா யாரையும் கேட்காமல் தன் தலை மயிரை இப்படி ‘ஸ்டைலாக’ வெட்டிக் கொண்டு வந்து விட்ட பிறகு,யாரேலேயும் ஒன்னும் செய்ய முடியாதே.எல்லோ ரும் சும்மா இருந்து விட்டார்கள்.எல்லோரும் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு படுக்கப் போனார்கள்.

படுத்துக் கொண்டே விமலா ராமசமி இடம் “பாத்தேளா சுதா பண்ணதே.எனக்கு உடம்பு எல்லாம் கொதிச்சது. பொம்மணாட்டிகள் இப்படி தலை மயிர வெட்டிக்க கூடாதே.அவ பண்ணதே பாத்த நீங்களும் தானே சும்மா ஒன்னும் சொல்லாம நின்னுண்டு இருதேள்” என்று கேட்டாள்.

ராமசாமி பொறுமையாக “விமலா,சுதா நம்மே தலை மயிரை வெட்டிக்கறதுக்கு முன்னாடி கேட் டு இருந்தா,நாம அவளுக்கு அது தப்பு பண்ணக் கூடாதுன்னு சொல்லி இருக்கலாம்.அவ தலை மயி ரை வெட்டிண்டு வந்து நின்னுண்டு இருக்கும் போது சொல்லி என்ன பிரயோஜனம் சொல்லு.இந்த பொண்ணுக்கு ஏன் தான் புத்தி இப்படி ‘தறி கெட்டு’ப் போறதுன்னே எனக்குத் தொ¢யலே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

படுத்துக் கொண்டே ராமநாதனும் மங்களத்தைப் பார்த்து “மங்களம் இந்த சுதா பண்ணது ரொம்ப தப்பு.சுதா தன் தலை மயிரை வெட்டிக்க போறதுக்கு முன்னாடி,ஏன் பெரியவாளை கேட்டு இருக்க க் கூடாது.அப்படி கேட்டு இருந்தா, நாம அவளுக்கு சொல்லி இருக்கலாமே”என்று சொல்லி வருத்தப் பட்டார்..

உடனே மங்களம் “அவ யாரை என்ன கேட்டா.அவ இஷடத்துக்குத் தானே எல்லாத்தையும் பண்ணீண்டு வறா.முதல்லே வித வித ‘பாஷன் டிரஸ்’ எல்லாம் வாங்கிண்டா.அப்புறமா ‘பாஷ னான’ செருப்பு வாங்கிண்டா.இப்போ அவ தலை மயிரை ‘பாஷனா’ வெட்டிண்டு வந்து நிக்கறா. எல்லாத்துக்கு மேலே அவ சொன்ன பதிலைக் கேட்டேளா.அந்த ‘சூப்பர் மார்கெட்லே’ வேலை செஞ்சு வரும் பொண்ணுங்க எல்லாம் என்ன ஜாதியோ.அவா எல்லாம் தலையை அப்படி ‘ஸ்டைலா’ வெட்டிண்டு இருந்தா,இவளும்மா அவ தலை மயிரை இப்படி ‘ஸ்டைலா’ வெட்டிண்டு வந்து நிக்கணும்.சுதா ஆத்லே இருக்கிற பெரியவாளை ஒரு வார்த்தை நிச்சியமா கேட்டு இருக்கணும் இவளே எப்படி நான் திருத்தி அவளே ஒரு நல்ல பிராமண பொண்ணேப் போல இருந்துண்டு வர சொல்றது.நான் என்ன பண்ணட்டும்.எனக்கு ஒரு வழியும் தெரியலயே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டாள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *