திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்து விட்டன. ஆனாலும் மோகன் மற்றும் இந்து இருவரும் ஏதோ ஒரு மனக்குமுறலுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு தனியார் அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள். ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இந்து காலையில் எழுந்து சமைத்துவிட்டு பிள்ளைகளை எழுப்பி ரெடியாக சொல்லி அவர்களுக்கு தேவையானதை எல்லாம் ரெடி பண்ணி வைத்துவிட்டு வருவதற்குள் மோகன் எழுந்து ரெடியாகி சாப்பிட வந்துவிடுவார், சாப்பிட குடுத்து அவரை வழியனுப்பிவிட்டு பிறகு பிள்ளைகளை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அவர்கள் இருவரையும் ஸ்கூலில் விட்டுவிட்டு வீடு திரும்ப ஒன்பது மணி ஆகிடும். இந்து பத்து மணிக்கு அலுவலகம் சென்றால் போதும். எனவே வந்து அவசர அவசரமாக வீட்டை சுத்தம் செய்துவிட்டு சாப்பிடுகிறாளோ இல்லையோ டைம்க்கு கிளம்பி விடுவாள்.
வாரத்தில் இருநாள் இந்து வீட்டில் இருப்பாள். மோகனுக்கும் பிள்ளைகளுக்கும் சண்டே மட்டுமே லீவு எனவே சனிக்கிழமையே வீட்டை சுத்தம் செய்வது,வீட்டை துடைப்பது,துணியை துவைப்பது , துணியை மடித்து வைப்பது போன்ற வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு சண்டே பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவாள். இவ்வாறாக தான் நாட்கள் கடந்தன. இந்துவுடன் வேலை செய்யும் பெண்களுக்கு அவளது கணவர்கள் போனில் அழைத்து க விசாரிப்பதை பார்த்து ஏக்கம் கொள்வாள். அதைபோலவே மோகனும் ஏக்கம் கொள்வான். ஆனால் அவள் அழைத்து பேச வேண்டும் என இவனும் இவன் அழைத்து பேச வேண்டும் என அவளும் காத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர நான் ஏன் அழைத்து பேச கூடாது இருவரும் நினைப்பதில்லை. இதுவே இவர்களின் இனிமையான தகவல் பரிமாற்றங்களை நிறுத்து வைத்திருக்கிறது என்பது இருவருக்குமே புரியவில்லை.
இவ்வாறாக வருடங்கள் கடந்தன. பிள்ளைகளும் வளர்ந்துவிட்டனர். இந்துவை அலுவலகத்தில் விட அபி செல்வான். அப்போது இருவரும் நிறைய பேசிக் கொண்டே செல்வார்கள். மதிய நேரத்தில் அபி போன் செய்து அவன் அம்மாவிடம் உரையாடுவான் எனினும் மகன் அபியின் பேச்சு ஆறுதல் தந்தாலும் மோகன் இவ்வாறாக நம்மிடம் பேசவில்லையே என்ற ஏக்கம் தீரவில்லை. மோகனுடன் அதே போலவே அதிதியும் நேரத்தை செலவிடுவாள் தனது கல்லூரியில் நடந்தவற்றை கூறுவாள் ஆயினும் அவனுக்கும் இந்து இவ்வாறு இல்லையே என்ற எண்ணம் தீரவில்லை. ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டாலும் அம்மாவை போல பார்த்துக் கொள்ள முடியாதோ அதேபோலதான் கணவன் – மனைவி உறவும் என்பதை அபியும் அதிதியும் புரிந்து கொண்டனர். அன்று சண்டே மோகன்
ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அதிதி போன் பேசிக் கொண்டே ஹாலிற்கு வருகிறாள்.
இனிமே எனக்கு போன் பண்ணாத நானும் பண்ண மாட்டேன் என கூறி சண்டை போட்டு போனை வைத்துவிட்டாள். மோகன் என்ன ஆச்சும்மா ஏன் இவ்வளவு கோபம் என கேட்கிறார். என் பிரண்டு தான்பா ஸ்கூலில் ஒன்னா படிச்சோம். இப்ப வேற வேற காலேஜ்ல சேர்ந்துட்டோம். டெய்லியும் போன் பண்ணி காலேஜ்ல நடந்ததையெல்லாம் சொல்லுவா? நாலு நாளா அவ போன் பண்ணவே இல்ல ஏன்னு கேட்டா ஏன் நான்தான் பண்ணனுமா நீ பண்ணி பேசமாட்டியான்னு கேக்குறாப்பா அதான் திட்டுனேன் என சொன்னாள். நீ ஏன் போன் பண்ணல என மோகன் கேட்டான். இவ்ளோநாள் அவதான போன் பண்ணா நான் ஏன் பண்ணணும் அவ பண்ணட்டும்ன்னு வெயிட் பண்ணேன் என்றாள்.
இப்படி வெயிட் பண்ணத்துக்கு பதிலா நீயே போன் பண்ணி பேசியிருந்தா இப்ப பிரச்சனை வந்துருக்காதுல்ல என மோகன் கூறினான். அதேபோல் நீங்களும் அம்மாவின் போனுக்காக வெயிட் பண்ணாம நீங்களே போன் பண்ணி பேசியிருக்கலாமே என கூறினாள். அவள் கூறியவுடன் தான் தெரிந்தது அவன் மேல் உள்ள தவறு அதேபோல அபியும் தோட்டத்தில் துணி
காய போட்டுக்கொண்டு இருக்கும் இந்துவிடம் சொல்ல இருவரும் தன் தவறை உணர்ந்து கொள்கின்றனர். அம்மா எங்கே என மோகனும் அப்பா எங்கே இந்துவும் கேட்டுவிட்டு தோட்டத்தை நோக்கி மோகனும் ஹாலை நோக்கி இந்துவும் செல்ல வாசலில் இருவரும் சந்திக்க ஒருவக்கொருவர் மன்னிப்பு கேட்டு கொள்கின்றனர். அவர்கள் இருவரையும் இரு பிள்ளைகள் பார்க்க இருவரையும் அழைத்து அணைத்துக் கொள்கிறார்கள். அபியும் அதிதியும் கண்ணடித்துக் கொண்டனர்.