எல்லாம் அவன் செயல்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 1,543 
 
 

அண்ணா கொஞ்சம் காரை நிறுத்துங்க..

அந்த ஸ்பாட்ல ஒரு போட்டோ எடுத்துக்கலாம் வாங்கப்பா.. 

அம்மா காமாட்சியும் அப்பா சுந்தரேசனும் மூன்றரை வயது பேரன் விஷ்ணுவை தூக்கிக் கொண்டு இறங்கினர்.

மொபைலில் க்ளிக்கனர்.. அந்த ஸ்பாட் என்னவென்று இவர்களுக்குத்தான் தெரியுமே.. திருப்பதி வரும் போதெல்லாம் விஷ்ணுவுக்கு முதல் மொட்டை, இரண்டாவது மொட்டை போடும் சமயத்தில் இங்கு நிறுத்தித்தானே போட்டோ எடுத்துக் கொள்வார்கள்.. 

மகள் ப்ரீத்தி யாருக்கும் தெரியாமல் விழியோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.. ஆனால் காமாட்சியும் சுந்தரேசனும் அதை கவனிக்கத் தவறவில்லை..

காட்டேஜில் இறங்கும் போது லேசாக தூறல்.. குளிர்ந்த காற்று  வீசியது..அப்பா அவனுக்கு அந்த ஸ்வெட்டரை போட்டு விடுங்க. காதை நல்லா கவர் பண்ணுங்க.

சீனிவாசா கோவிந்தா.. வேங்கடரமண கோவிந்தா..
என்ற பாடல் தான் எங்கு திரும்பினாலும்.  விஷ்ணுவுக்கு தாத்தா இருந்தால் போதும். வேறு யாரையும் சட்டை செய்ய மாட்டான். அவ்வளவு செல்லம். 

ரூமில் செக்கின் செய்தனர்.. டிரைவர் கையில் 200/- ரூபாய் தந்த சுந்தரேசன்..நாங்க குளிச்சிட்டு ரெடியாகிட்டு போன் பண்றோம். எதாவது சாப்ட்டுக்கோப்பா.. தரிசனம் 12.30 க்குத் தான்.. கியூவில் கொண்டு போய் விடணும். தயாரா இருப்பா..

காமாட்சி பேரனை குளிப்பாட்டத் தயாரனாள்.. என்னங்க வெந்நீர் சூடாவே வர்ல. போய் கேளுங்க என்று அங்கலாய்த்தாள்.. விஷ்ணுவுக்கு டைஃபர் கட்டி புது டிரஸ் போட்டு எல்லோரும் தயாராகினர்.. அருகிலுள்ள ஓட்டலில் சாப்பிட்ட பின்பு.. கார் க்யூ காம்ளக்ஸ் நோக்கி கிளம்பியது..

கியூ வளைந்தது.. நெளிந்தது. ஒரு கூண்டில் அடைத்தனர். மறு கூண்டில் ஏற்றினர். ஒரு வழியாக மற்றொரு கூண்டில் வெகு நேரமாகியும் திறக்காமல் இருக்கவே கூட்டம் ஆங்காங்கே அமர்ந்தது. பகவானை தரிசிக்கப் போகிறோம் என்ற பரவசம் ஒருபுறம் இருந்தாலும் இதுபோன்று மணிக்கணக்கில் நெரிசலில் படும் அவஸ்தையை கண்டால் சிறு எரிச்சல் சிலருக்கு ஏற்படுவதில் ஐயமில்லை. ஆனால் அத்துனை ஜரிகண்டிகளுக்கு மத்தியில் ஆண்டவனை தரிசிக்கும் அந்த சில நொடிகள் காணக் கிடைக்காத அரும் நிகழ்வு. ஏடுகுண்டலவாடா, வேங்கடரமணா, கோவிந்தா கோஓஓவிந்தாஆஆ எனும் ஒலியில் உண்டாகும் பரவசத்தை சொல்லி மாளாது. 

ப்ரீத்தி சில நிமிடங்களாக தூரத்தில் அமர்ந்திருந்த ஒரு நபரை உற்றுப் பார்க்கிறாள்.. கண்களை கசக்கியபடி திரும்ப திரும்ப பார்த்தபடியே இருந்ததை பார்த்த சுந்தரேசன், என்னம்மா ப்ரீத்தி யார பாக்கிற. ரொம்ப நேரமா பாத்திட்டிருக்கேன் அந்தப் பக்கமாவே பாத்துகிட்டிருக்கியே..

அப்பா இங்க வாங்களேன்.. அதோ பாருங்க.. அந்த மூன்றாவது படியில ஒருத்தர் உட்கார்ந்து இருக்காரே.. அவர மாதிரியே இல்ல..

யாராவது நம்மையே பார்க்கும் போது நம்மையும் அறியாமல் ஒரு instinct நம்மை அவர்களை நோக்கி பார்க்க வைக்கும் என்பார்களே..அது போலவே நடந்தது.  சட்டென அங்கு உட்கார்ந்திருந்த நபர்..இவர்களை பார்க்க…ஆமாம் ப்ரீத்தி அவர மாதிரியேதான் இருக்கு..என்றார் சுந்தரேசன். காமாட்சியை அழைத்து காதில் முணு முணுக்க.. அவளும் ஆமாங்க நம்ம மாப்பிள்ளை கோவிந்த் ஐ பாக்கிறா மாதிரியே தான் இருக்கு அந்த தம்பிய பாக்கிறச்சே..

கூட்டம் லேசாக நகர..அந்த நபர் மட்டும் நகராமல் இவர்கள் நெருங்கும் வரை காத்திருக்க… விஷ்ணு அப்பா..அப்பா.. என்று தாவ.. விஷ்ணு சும்மா இரு.. அவரு உங்க டாடி இல்ல என்று கோவமாய் பிள்ளையை தன்பக்கம் இருந்தாள் ப்ரீத்தி.

பறவால்ல மேடம், கொழந்த தான. விடுங்க.. By the bye என் பேரு ராகுல். நான் சென்னை. ரொம்ப நேரமா என்ன வாட்ச் பண்ரீங்க..Right?

ஒருத்தர போல ஏழு பேர் இருப்பாங்க உலகத்திலேன்னு சொல்லுவாங்க.  உங்கள பாக்கிறதுக்கு எங்க மாப்பிள்ளை கோவிந்த் ஐ பாக்கிறாப்போல இருக்கு.. இதோ பாருங்க, இது தான் அவர் போட்டோ.. என்றார் சுந்தரேசன்.

Yes..true. திரை உலகத்தில் கூட ரஜினி சாரும் நளினிகாந்த் என்ற நடிகரும்  ஒரே மாதிரி இருப்பாங்க கிட்டத்தட்ட. அதே போல விஜயகாந்தும் சரவணன்ங்கிற நடிகரும் ஒரே சாயலில் இருப்பாங்க. இப்போ கேரளாவில் ஒரு பையன் reels போடறான் youtube ல. அப்படியே MGR மாதிரியே இருக்கும் அந்தப்பையன். Now Am excited. உங்க மாப்பிள்ளையை பாக்கணும் போல இருக்கு. சார் வர்லியா மேடம்..என்று ராகுல் கேட்க…

Sorry. அவர் எங்க கூட இல்ல..I mean நம்ம சேவிக்கப்கோகிற கோவிந்தன் என்னோட கோவிந்த் ஐ கூட்டிகிட்டுப் போய்ட்டாரு. விஷ்ணுவோட இரண்டாவது பிறந்த நாள் தான் அவரோட இறந்த நாள். கேக் வாங்கப் போனவரு accident ல போய்ட்டாரு என்று விம்மினாள்..

Oh my god. Really sorry. கேக்கிறதுக்கே கஷ்டமா இருக்கு. சிறிது இடைவெளிக்குப் பிறகு.. மேடம் நான் ஒண்ணு சொல்லலாமா..

உங்க கோவிந்த் சார் தான்  இந்த கோவிந்தன் சந்நதியில நம்மை சந்திக்க வெச்சிருப்பாரோன்னு ஏன் எடுத்துக்க கூடாது.  யாருக்கு தெரியும். என்னமோ சொல்லணும்னு தோணிச்சி.  Sorry.

மறுபடியும் விஷ்ணு அப்பா என்று கூறிக்கொண்டு தாவ…ப்ரீத்தி தடுத்தாள்.. அவரு டாடி இல்ல அங்கிள்னு கூப்பிடு.

அங்கிள்.. அங்கிள் என்று ஒ(க)ட்டிக்கொண்டான் விஷ்ணு.. தந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தான் என்று கூட சொல்லலாம்.. 

அய்யா கியூ நகர இன்னும் 1-1/2 மணி நேரம் ஆகும். இப்பத்தான் சீனியர் சிட்டிசன், உடல்  ஊனமுற்றோர் சேவை திறந்து விட்டிருப்பாங்க. பகல் 1 to 2.30 வரைக்கும் அந்த கியூ போகும். என்னோட அம்மாவும் அப்பாவும் அதுலதான் போறாங்க.

மேடம்..விஷ்ணு பாத்ரூம் போய்ட்டான்னு நினைக்கிறேன்..

Oh my god.. Sorry sir. அப்பா விஷ்ணுவ தூக்கிட்டு வாங்க. க்ளீன் பண்ணிட்டு வந்துடலாம்..

அய்யா நீங்க இருங்க. கூட்டமா இருக்கு.. நான் தூக்கிட்டு போறேன். மேடம் நியூ pamper எடுத்துட்டு வாங்க. விஷ்ணுவை gents toilet இல் உட்கார  வைத்து க்ளீன் செய்து புது papers கட்டிவிட்டு வெளியில் கூட்டி வந்தான் ராகுல்..

Mr. Ragul..ரொம்ப தேங்க்‌ஸ்… உங்களுக்கு எதுக்கு இவ்வளவு சிரமம்.

பறவால்ல மேடம். என் பையனா இருந்தா செய்ய மாட்டேனா..இதுக்கு போயி….

உங்களுக்கும் பையன் தானா.. என்ன வயசு.. அவனை ஏன் கூட்டிட்டு வர்ல. What is she doing? அடுக்கடுக்காக கேள்விகள் வருவதற்குள்…

மேடம் மேடம்.. வெயிட்.. எனக்கு கல்யாணமே ஆகல. கல்யாணம் நடந்து, எனக்கும் ஒரு பையன் பொறந்து, அவன் இப்படி பண்ணா செய்ய மாட்டேனான்னு சொன்னேன்..

OK OK.. என்னை பேர் சொல்லியே கூப்பிடலாமே ராகுல் சார்…

நீங்களும் sir ஐ கட் பண்லாமே..

Done..

பரஸ்பரம் இருவரும் கியூவில் வெகு நேரம் பேசிக் கொண்டிருக்க.. காமாட்சி.. எப்பவுமே இருக்கமா இருப்பாளே ப்ரீத்தி. கவனிச்சியா இப்போ..

ஆமாங்க..அவள இப்படி பாக்கிறதுக்கு மனசுக்கு சந்தோஷமா இருக்குங்க. ஹும் தரிசனம் முடிஞ்சா ஆளுக்கொரு மூலையா போகப் போறோம். அதுவரைக்கும் தான் இந்த சந்தோஷம்..

புரிந்து கொண்ட சுந்தரேசன்.. இந்தாங்க தம்பி என்று LIC AGENT விசிட்டிங் கார்டை நீட்டி.. உங்களோட கார்டை தரீங்களா..

அய்யா என்னோட கார்டு மேடம் கிட்ட குடுத்திருக்கேன்.. சாரி..ப்ரீத்தி கிட்ட குடுத்திருக்கேன்..

காமாட்சியும் சுந்தரேசனும் ஒருவருக்கொருவர் புருவங்களை உயர்த்தி ஓக்கே என்பது போல் தலை ஆட்டிக் கொண்டனர்..

பெருமாள் சந்நிதானம் நெருங்கியது. ராகுல் தனது தோளின் மீது ஏற்றிக் கொண்டான் விஷ்ணுவை. இதை சற்றும் எதிர் பார்க்காத ப்ரீத்தியின் கண்கள் கசிந்தன. முக ஒற்றுமை மட்டுமல்ல அதெப்படி இவன் செய்கைகளும் கோவிந்த் ஐப் போலவே அமைகின்றன. கோவிந்தும் சந்நிதானம் நெருங்கும் சமயம் விஷ்ணுவை இப்படித்தானே தூக்கிக் கொள்வான்.. நொடிப் பொழுதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன அவளது உள்ளத்தில்.. என்ன நினைத்தாளோ அதுவும் நடந்தது சில நாட்களில்…

திருப்பதி சென்று வந்ததிலிருந்தே பெரிய மாற்றத்தை கண்டனர் ப்ரீத்தியிடம் அவரது பெற்றோர். அடிக்கடி  போனில் பேசுகிறாள். மெசேஜ் வந்த வண்ணம் இருக்கிறது. சந்தோஷமான முகத்துடன் இருக்கிறாள்.

என்னங்க இந்த மாற்றத்துக்கு அந்த தம்பி காரணமா இருக்குமோ என்ற காமாட்சியின் கேள்விக்கு ஏன்? உனக்கு சந்தோஷம் இல்லையா அதுல என்றார் சுந்தரேசன். நம்ம மாப்பிள்ளை போன பிறகு பித்து பிடிச்சாப்போல தானே இருந்தா. இப்ப அவள பாக்கிறதுக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..

ஒரு நாள் காரில் வந்து இறங்கினர் ராகுலும் அவரது பெற்றோர்களும்.. வாங்க வாங்க..என்ன தட்டுல பூ, பழம் வெத்தில பாக்கு..என்ன விசேஷம் ராஜமாணிக்கம் சார்.. அன்னிக்கி மலையில பாத்தது.. எப்படி இருக்கீங்க எல்லாரும்..

நல்லா இருக்கோம். விசேஷம் தான். ஆனா உங்க கையில தான் இருக்கு. பீடிகை போடாமல் விஷயத்துக்கு வரேன். ராகுலை உங்க பொண்ணு ப்ரீத்திக்கு கேட்டு வந்திருக்கோம் முறைப்படி..

அதை ஊகித்த சுந்தரேசன், நல்ல விஷயம் தான்.. ப்ரீத்தி எல்லாருக்கும் காபி எடுத்துட்டு வாம்மா என்று சொல்லி வாய் மூடுவதற்குள் காபி கோப்பைகளுடன் வந்து நின்றாள்..

என்னம்மா ப்ரீத்தி உனக்கு இஷ்டம் தானே என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே..விஷ்ணு அங்கிள் என்று கூறியபடி ஓடிவந்து கட்டிக்கொண்டான்.. விஷ்..நீ இனிமே இவர டாடின்னே கூப்பிடலாம் என்று கூறினாள்..

ப்ரீத்தி-ராகுல் கல்யாணம் சிம்ப்பிளாக ஒரு கோயிலில் நடந்தேறியது.

ராகுலின் வீட்டில். பெட்ரூம் அலங்காரம் நடந்து கொண்டிருந்த்தை பார்த்த ப்ரீத்தி.. அப்பா..அம்மா உங்க ரெண்டு பேரிடமும் கொஞ்சம் பேசணும். சிறிது தயக்கத்துடன் மேலும் கூறினாள் எனக்கு  பயமா இருக்குமா..

சொல்லுடி என்ன பயம் திடீர்னு. நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாளா தீர்க்கமா பேசிட்டுத்தான் இந்த கல்யாண முடிவு எடுத்திருக்கீங்கன்னு எங்களுக்கு ஓரளவுக்கு தெரியும். இப்போ எதுக்கும்மா பயம்..விஷ்ணு முழிச்சிக்கப்போறான்,  போ உள்ள..

அதில்லம்மா.. நான் சொல்றத காது குடுத்து கேளுங்க ரெண்டு பேரும். இந்த விஷயத்தை ராகுல் கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு. இப்போ வரைக்கும் விஷ்ணு மேல பிரியமா பாசமா இருக்காரு. அவனும் அப்பா அப்பானு ஒட்டிக்கிறான். But அதெல்லாம் எத்தனை நாளைக்கு மா.. நாளைக்கே இவர்மூலமா இன்னொரு குழந்தைக்கு தாயானால் இதே பாசம் விஷ்ணு மேல வைப்பாரா ராகுல்.

மாற்றாந்தந்தை கொடுமைனு எதுவும் இல்லையா.. புரியுதாமா.. விஷ்ணுவ நெனச்சிப் பாருங்கம்மா. நெறைய ஆம்பளைங்க கல்யாணத்துக்கு முன்னால ஒரு மாதிரியும் ஆன பிறகு வேற மாதிரியும் நடந்துக்கிறத பாக்கிறோம் இல்லையா. சொல்லுமா. எந்த ஒரு லேடியோட குரலும் மேரேஜ் ஆன பிறகு எடுபடுமா? எடுபட்டிருக்கா?? ப்ராக்டிகலா நான் யோசிக்கிறது தப்பாம்மா.. இதை போய் நான் எப்படி ராகுல் கிட்ட சொல்லுவேன்..

நீ சொல்றது எல்லாம் கரெக்ட் தான். சொல்ற நேரம் தான் தப்பு.. அப்படின்னா நீ தான் கேர்ஃபுல்லா இருக்கணும் இன்னிக்கி. நேரம் பாத்து பக்குவமா எடுத்து சொல்லு மாப்பிள்ளைக்கு. ஓக்கேவா. கவலைப்படாத. கண்ணு கலங்கிருக்கு பாரு. தொடச்சிக்கோ..என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே..

ப்ரீத்தி என்று குரல் கொடுத்துக் கொண்டே மாமியார் கமலம் உள்ளே வந்தாள்..

வாங்க சம்மந்திமா. ரெடியாயிட்டிருக்கா. போங்க கூட்டிட்டு் வருகிறோம் எனக்கூறிவிட்டு, அவள் போன பின்பு.. என்னங்க நம்ம பேசிகிட்டு இருந்ததை எல்லாம் கேட்டிருப்பாங்களோ..

தெரியலையே. கேட்டிருப்பாங்கன்னு தான் தோணுது.. பாக்கலாம் விடு.

சுந்தரேசன் அனுமானித்தது போலவே தான் நடந்தது. அனைத்தையும் கேட்ட கமலம் கணவனிடம் கேட்டவற்றை கூறுகிறாள். அந்நேரம் பார்த்து எங்கேயோ வெளியில் சென்றுவிட்டு பைக்கை பார்க் செய்த ராகுலிடம்… கொஞ்சம் உள்ள வந்துட்டு போப்பா என்றனர் பெற்றோர்..

அப்படியா. அவளோட ஆதங்கம் அர்த்மானது தானேப்பா. சரி நான் பாத்துக்கிறேன் என்று உள்ளே சென்றான் ராகுல்..

ஹேய்..ராகுல்..எங்க போனீங்க இவ்வளோ நேரம்.. விஷ்ணு டாடி டாடின்னு கேட்டுட்டு தூங்கியே போய்டான். என்ன ஒரே அமிர்தாஞ்சன் வாசனை. தலைவலியா ராகுல்.

ஆமாம் கொஞ்சம் தலைய பிடிச்சி விடு. இந்த ஒத்த தலவலி வந்தா ரெண்டு மூணு நாள் படுத்தும் என்ற பாசாங்கு வார்த்தையை நம்பினாள். சிறிது நேரம் தலை பிடித்து விட்டிருந்தவளிடம் நீ போய் படுத்துக்கோ. நான் இங்கேயே சோஃபாவில படுத்துக்கிறேன்..

அப்பாடா மூன்று நாள் தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்டாள்.  அடுத்த நாள்.. வெகு நேரமாகியும் ஆபீசுக்கு கிளம்பாமல் இருந்த ராகுலிடம்..லீவு போட்டிருக்கியா ராகுல் எனக் கேட்க..

ஆமாம் என்னோட ப்ரென்ட் அஷோக் டாக்டரா இருக்கான் அவன்கிட்ட காமிச்சி செக் பண்ணிக்கலாம்னு இருக்கேன்.

நான் வரட்டுமா ராகுல்.

ஹேய். நீ இங்கேயே இரு. அப்பா அம்மா வந்திருக்காங்க இல்ல. விஷ்ணுவையும் பாத்துக்கணும். ஓக்கேவா. எங்க அப்பா அம்மா வராங்க டியர்..நான் பாத்துக்கிறேன். Don’t worry..

சிறிது நேரம் கழித்து கார் ஹார்ன் அடிக்கும் சத்தம் கேட்டு வந்து கேட்டை திறந்தாள் ப்ரீத்தி. என்னங்க ஆச்சி. மாமா கார் ஓட்டிட்டு வராரு. உங்களுக்கு தலைவலி ஜாஸ்தியா இருக்கா.

ஆமாம் வலி அதிகமா தான் இருக்கு. கார் கதவைத்திறந்து சுந்தரேசனும் ப்ரீத்தியும் அவனை கூட்டிக்கொண்டு வர, அம்மாடி ராகுல் எங்க ரூம்லேயே இருக்கட்டும். பவர்ஃபுல் இன்ஜக்‌ஷன் போட்டிருக்காங்க.் மாடியில உங்க ரூமுக்கு வேண்டாம் இப்போ.  தலை சுத்தப்போவுது. அதுக்காக சொல்றேன்.

ஓக்கே மாமா. இங்கேயே இருக்கட்டும் அதனால என்ன. மிகவும் சோர்வாக இருந்த ராகுலுக்கு தலை பிடித்து விட்டாள்.

ஒரு வாரத்துக்கும் மேலாக கீழேயே அப்பா அம்மா ரூமில்தான் இருந்தான் ராகுல். அதன் பிறகு அவர்கள் ரூமுக்கு சென்றவன் ப்ரீத்தியிடம் மிகவும் ஜோவியலாக பழகத் தொடங்கினான்.

ஒரு நாள்..

ராகுலின் ஷோல்டர் பேக்கை செக் செய்யும் போது, ஒரு மெடிக்கல் ரிப்போர்ட் (Swathy clinic)  folder ஐ பார்கிறாள் யதார்த்தமாக.

அதில்,

Vasectomy deceleration என்று  ஒரு பேப்பர் இருந்தது.  அதைப் பார்த்ததும் அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஆண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை தான் அது. முழுவதுமாக அந்த ஃபைலை ஆராய்ந்தாள்..

என்ன மாமா இது.. நீங்க ரெண்டு பேரும் தான் deceleration ல witness கையெழுத்து போட்டிருக்கீங்க..

அம்மாடி நான் சொல்றத கேளு. First night அன்னிக்கி நீ உங்க அம்மா அப்பாவிடம் பேசிட்டிருந்தது எல்லாம் எங்களுக்குத் தெரியும்.

தியாகச் செம்மல்னு ஒரு பட்டம் குடுத்தா அது உன் புருஷனுக்குப் பொருந்தும். எந்த ஒரு ஆணும் செய்யத் துணியாத தியாகத்த பண்ணிருக்கான் அதுவும்  உனக்காக. எங்களுக்கே கார்ல ஏறிய பிறகு தான் தெரியும் என்று விவரித்தார் ராஜமாணிக்கம்.

என்னடா சொல்ற. நீ ஏன்டா பண்ணிக்கணும்.

அப்போ ப்ரீத்திய பண்ணிக்க சொல்ரீங்களா. எப்பவுமே பொண்ணுங்க தான் செஞ்சிக்கணுமா. நான் என் ப்ரென்ட் அஷோக் கிட்ட சொல்லிட்டேன். எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். நீங்க ரெண்டு பேரும் அவன் காட்ற deceleration ல கையெழுத்து போட்டா போதும். அம்மா.. அப்பாவுக்கு எடுத்து சொல்லும்மா. ப்ரீத்தி பாவம்மா..

அப்பா சொல்றதுல என்னடா தப்பு. எங்க ரெண்டு பேருக்கும் அந்த பாக்கியம் இல்ல, அதனால உன்ன தத்து எடுத்துக்கிட்டோம். அதுவும் கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி..அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளே அதே கோயில்ல உன்ன அடையாளம் காட்டுனா.  ஆனால் உனக்கு என்னடா குறை.. நீ ஏன்டா இந்த ஆப்ரேஷன் செஞ்சிக்கிற..

அம்மா.. அப்பா.. Argue பண்ணாதீங்க ப்ளீஸ். தயவு செஞ்சி இதுக்கு மட்டும் ஒத்துக்கோங்க. என் முடிவில் எந்த மாற்றமும் இல்ல என்றான் விடாப்பிடியாக.

சரிப்பா. உன் விருப்பம்.

Thanks. அப்பா இன்னொரு விஷயம். உங்களுக்கு நான் தத்துப் பிள்ளைங்கிறது அவளுத் தெரியாது. சொல்லும் போது சொல்லிக்பலாம்னு விட்டுட்டேன். இப்போதைக்கு தெரிய வேண்டாம்ப்பா. சரியா..

இதுதாம்மா நடந்தது. ஆனால் முழு மனசில்லாம தான் நாங்க சம்மதிச்சோம்.

மாமா.. அத்தை..சொந்த மகனா இல்லாட்டியும் எவ்வளோ பொறுப்பா வளர்த்திருக்கீங்க. உங்கள நெனச்சா பெருமையா இருக்கு. உண்மையிலேயே ராகுல் செஞ்சது மிகப் பெரிய தியாகம் தான் என்று சொல்லும்போதே ராகுலும் வர..அந்த folder ஐ பார்க்க..

Yes..ராகுல் இவளுக்கு எல்லா உண்மையையும் சொல்லிட்டோம்.

ஓடிவந்து ராகுலைக் கட்டிக்கொண்டு அழுதாள் ப்ரீத்தி. நான் தான் சுயநலமா யோசிச்சேன். அதுக்காக நீங்க எந்த எல்லைக்கும் போவீங்கன்னு எதிர்பார்கல ராகுல். You are great..

சில மாதங்கள் கடந்தன.

ஒரு நாள்..

ப்ரீத்தி திடீரென வாந்தி வருவது போல் குமட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.  Yes..அவள் கருவுற்றிருப்பதை காட்டியது அந்த கருவி.. ஆனால் ஏன் அந்த புன்முறுவல் அவள் முகத்தில்?

ராகுலுக்கும் அவனது பெற்றோருக்கும் பெரும் அதிர்ச்சி. இது எப்படி சாத்தியம்?

ப்ரீத்தி..நீ என்ன சொல்ற. நிஜமாவா. வா, ஒரு டாக்டர போய் பார்க்கலாம். நீயா எதாவது உளராத.

டாக்டர பார்த்தா.!! கர்ப்பம் இல்லேன்னு சொல்லிடுவாங்களா. நீங்கள் ஆச்சரியப்படறதுல நியாயம் இருக்கு. நான் சொல்றத கவனமா கேளுங்க.

அன்னிக்கி உங்களோட அந்த folderல உள்ள  swathy clinic க்கு போன் அடிச்சேன். உங்க ப்ரெனரட் டாக்டர் அஷோக் நம்பர் கேட்டு வாங்கி அவர் கிட்டே பேசினேன்.  அவரும் ஒரு பக்கா gentleman உங்களைப் போலவே..

எல்லோரும் ப்ரீத்தி என்ன சொல்ல வருகிறாள் என்று ஆச்சரியமாக பார்க்க.. உள்ளே டாக்டர் அஷோக் என்ட்ரி..

மச்சான் என்ன மன்னிச்சிடு. அன்னிக்கி என்ன நடந்ததுன்னா..

டாக்டர் நீங்க செஞ்சது மிகப் பெரிய துரோகம். எப்படி நீங்க அவங்க அப்பா அம்மாவிடம் deceleration வாங்கி இந்த ஆப்ரேஷனை பண்ணீங்க மனைவி உயிரோடு இருக்கும் போது. என்னோட consent தான முக்கியம். உங்கள நான் சும்மா விடப் போறதில்ல. உங்க ப்ரென்ட்டுன்னா எத வேண்ணாலும் செய்வீங்கேளா. No rules ஆ.. என்னோட consent தேவை இல்லையா சொல்லுங்க.

மேடம் நான் சொல்றத கேளுங்க. அவன்கிட்ட நான் எவ்வளவோ சொன்னேன். மச்சான் உன் மனைவி சம்மதம் இல்லாம பண்ணக்கூடாதுடா. அவங்களுக்கு தெரிஞ்சி கேள்வி எழுப்புனா ப்ரச்சனை ஆயிடும்னு.. அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா மேடம்.

விஷ்ணு மேல வெச்சிருக்கிற அன்பு குறையாம இருக்கணும்னு அவ விரும்புறாடா..

அதுக்கு முழுமையான தீர்வு இதான் மச்சான். நீ தைரியமா செய். பிரச்சை வராது. வந்தா நான் பாத்துக்கிறேன்னு சொன்னாரு மேடம்.. மேலும் நான் கேட்டேன். டேய் நான் வேண்ணா உன் ஒய்ப் கிட்ட பேசி அவங்கள  convince பண்றேன்டான்னு சொன்னதுக்கு அதுக்கும் ஒத்துக்கல.

ஓவென்று கதறினாள். அங்கு இருக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வீசினாள் ப்ரீத்தி. நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. எனக்காக இவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவரா என் பையன் பேர்ல பாசம் இல்லாம நடந்துக்கப் போறாரு. No chance.

நான் கூகிள்ல படிச்சேன். இந்த ஆப்ரேஷன் பண்ணிகிட்டவங்க மீண்டும் குழந்தை பெத்துக்க விரும்புனா reserversal surgery பண்ண முடியும்னு. நான் அவர திரும்ப கூட்டிட்டு வரேன். நீங்க பண்ரீங்க. அவரு குழந்தையையும் நான் என் வயித்துல சுமக்கணும். அவர் மட்டும் தான் தியாகம் செய்வாரா..

நீங்க மட்டும் reversal surgery பண்ணலேன்னா.. இதோ இந்த கத்திரிக்கோலாலா இங்கேயே என் கழுத்துல குத்திப்பேன் என்று ஆக்ரோஷமாய் மிரட்ட..

மேடம் stop it.. நான் அந்த அப்பரேஷனே பண்ணல ராகுலுக்கு.. போதுமா என்ன நம்புங்க. எந்த ஒரு உண்மையான டாக்டரும் அப்படி செய்யமாட்டாங்க.் சும்மா அவனோட திருப்திக்காக ஆப்பரேஷன் success னு சொல்லி அனுப்பினேன். பின்னால பிரச்சனைன்னு வந்தா பாத்துக்கலாம்ங்கிற தைரியத்துல.

நீங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் தியாகத்துல மிஞ்சிட்டீங்க. கிரேட்..

இதான் மச்சான் நடந்தது.

இருவருமே ஒருவருக்கொருவர் சாரி சாரி என்று மகிழ்ச்சியில் இருக்க.. மேடம் இங்க வாங்க என்ற அஷோக் அவளது நாடி பிடித்து மச்சான் conform pregnant தான் என்றான்.

ராகுலும் ப்ரீத்தியும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். அப்போது ராகுலின் அப்பா “நீ வர வேண்டிய இடத்துக்குத்தாம்மா வந்திருக்க”  என்று வாழ்த்த யாரும் அதை வார்த்தையை அப்போது சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை..ஆனால் கமலம் மட்டும் கணவனை விநோதமாக பார்த்தாள்.

அன்று இரவு படுக்கையில் கமலம் கணவனிடம் ஏன் அப்படி சொன்னீங்க எனக் கேட்டாள்..

சம்மந்தி வீட்டு மறுவீடு விருந்துக்குப் போனோமே அப்போ.. ப்ரீத்தியோட முதல் கல்யாண ஆல்பம் பார்க்கும் போது, அதிலிருந்த ஒரு போட்டோவில்.
லஷ்மண்குட்டி & ஸ்ரீலேகா family welcomes you என்று மண்டப வாசல்ல எழுதியிருந்தது.

இந்த பேரு எங்கேயாச்சும் கேட்டாப்போல நியாபகம் வருதா கமலம் உனக்கு..

ஆமாங்க..வித்தியாசமான பேரு. இப்போ நியாபகம் வருதுங்க. அந்த நிகழ்ச்சியை நினைவு கூற,

விடிந்தும் விடியாத நேரம். ஆண்டாள் கோயில் வாசலில் ஒரு தம்பதி பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தையை கொண்டு வந்து வைத்துவிட்டு போகும் போக..

அய்யா அம்மா யாரு நீங்க? பொறந்த கொழந்தைய இப்படி விட்டுட்டுப் போரீங்களே. நியாயமா

நியாயமில்லை தான். ஏற்கனவே ஒரு பொட்டப் பொண்ணு. இப்ப ஒரு ரெட்டை பசங்க. எங்களால முடியாதுய்யா. நாங்க ரொம்ப ஏழைங்கய்யா. இதுக்கு ஆயுசு கெட்டியா இருந்தா எங்கேயாச்சும் வளரட்டும்.

குழந்தை வரம் தேடித்தான இந்த கோயிலுக்கு வராங்க. ஏன்.. நீங்களே அதுக்குத் தானே வந்திருக்கீங்க..

அய்யா உங்க ரெண்டு பேரோட முகத்தையாவது காட்டுங்க. சரியா தெரியல. அந்தப் ஜமுக்காளத்தை முகத்திலேந்து எடுங்க.

அய்யா எங்க மூஞ்சிய பாத்து என்ன பிரயோஜனம். அந்த கொழந்த முகத்த பாருங்க. தேவைன்னா எடுத்துட்டுப் போங்க. பெத்த வயிறு குளிரும். அழுதுகிட்டே இருக்கா..

கண்டிப்பா எடுத்துட்டுப் போய் வளக்கிறேன். உங்க பேரையாவது சொல்லிட்டுப் போங்க…

அய்யா என் பேரு லஷ்மண்குட்டி.. பொன்டாட்டி பேரு ஸ்ரீலேகா போதுமா.. பேரை தெரிஞ்சிகிட்டு் என்ன செய்யப் போரீங்களோ..

கமலம் கூறினாள். அப்படின்னா நம்ம ராகுல்.. அந்த கோவிந்த் ஒட….

புரிஞ்சா சரி..  திருப்பதி சென்று திரும்பி வந்தால் திருப்பம் நிகழும்னு சும்மாவா சொன்னாங்க..

எல்லாம் அவன் செயல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *