எப்படி ஒட்டகங்களை பிரிச்சுக்கறது….

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 4,246 
 
 

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2

ராஜஸ்தானில் ஒரு சின்ன கிராமத்தில் வசித்து வந்தார் ரணதீர் ராணா.அவர் தன் மணைவி ராதாவுடன் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டு வந்தார்.அவா¢டம் ஆறு ஏக்கர் புஞ்சை நிலம் இருந்து வந்தது.அந்த புஞ்சை நிலத்திலே கோதுமை பயிரிட்டு வந்து தன் குடும்பத்தை நடத்தி வந்தார்.

அவரிடம் இருபது ஒட்டகங்கள் இருந்தது.

தங்களுக்குப் பிறந்த முதல் ஆண் குழந்தைக்கு மஹாவீர் ராணா என்று பெயர் வைத்து படிக்க வைத்துக் கொண்டு இருந்தார்.அடுத்து பிறந்த பையனுக்கு பீமவீர் ராணா என்று பெயர் வைத்து அவனையும் படிக்க வைத்துக் கொண்டு இருந்தார் ரணதீர் ராணா.

அவரிடம் இருந்த ஒட்டகங்கள் எண்ணிக்கை பெருகி,அவை இருபத்தி ரெண்டு ஆயிற்று.

பீமவீர் ராணா பிறந்து எட்டு வருடங்கள் கழித்து அவர்களுக்குப் பிறந்த பையனு க்கு சூர் வீர் ராணா என்று பெயர் வைத்து படிக்க வைத்துக் கொண்டு இருந்ததார் ரண தீர் ராணா.

மஹாவீர் ராணாவுக்கு இருபத்தி ரெண்டு வயது ஆகும் போது அவர் அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணீ வைத்தார்கள் ரணதீர் ராணா தம்பதிகள்.
அவரிடம் இருந்த ஒட்டகங்கள் எண்ணிக்கை இப்போது இருபத்தி நாலு ஆயிற்று.

ரெண்டு வருடம் கழித்து ரணதீர் தம்பதிகள் பீமவீர் ராணாவுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணீ வைத்தார்கள்.

கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆனதும் மஹா வீர் ராணாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்போது சூர் வீர் ராணாவுக்கு வயது பன்னிரண்டு.

ரணதீர் ராணாவிடம் இருந்த ஒட்டகங்கள் எண்ணிக்கை இப்போது இருபத்தி ஆறு ஆயிற்று.

ஒரு மாசம் தான்ஆகி இருக்கும் ராதா திடீர் என்று இறந்து விட்டாள்.ராதா இறந்த வருத்தம் தாங்காமல் ரண தீர் ராணா படுத்த படுக்கை ஆகி விட்டார்.அவருக்கு வைத்தியம் பலிக்காமல், அவர் ஒரு உயிலை எழுதி வைத்து விட்டு இறந்துப் போய் விட்டார்.

அப்பாவை அடக்கம் பண்ணி விட்டு மஹா வீர் ராணா அப்பா உயிலைப் பிரித்துப் படித்தான். அதில் அவர்:

“மஹாவீருக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு.அதனால் அவன் ரெண்டு ஏக்கர் புஞ்சை நிலத்தையும்,ஒன்னில் மூனு பங்கு ஒட்டகங்களே எடுத்துக்கணும். பீம வீருக்கு இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கு. அவன் ரெண்டு ஏக்கர் நிலத்த்தையும், மஹாவீர் எடுத்துக் கிட்டுப் போன பிறகு, மீதி இருக்கும் ஒட்டகங்கள்ளே பாதியே எடுத்துக் கிட்டு,சின்னப் பையனான சூர்வீர் மீதி இருக்கற ஒட்டகங்களே குடுக்கணும். ஆனா நீங்க மூனு பேரும் எந்த ஒட்டகத்தையும் கொல்லக் கூடாது. என் உயிர் போன பதினைஞ்சு நாளுக்குள்ளே நான் சொல்லி இருகிறபடி செஞ்சு முடிக்கணும்.எந்த காரணத்தை கொண்டு நீங்க முனு பேரும் நான் எழுதி இருக்கும் உயிலில் சொன்னபடி பண்ணாம இருக்கக் கூடாது” என்று எழுதி இருந்தார்.

மூன்று பிள்ளைகளும் ஒரு பெரிய ஆல மரத்தின் அடியில் உட்கார்ந்துக் கொண்டு யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

அதே ஆலமரத்தின் அடியிலே அந்த 26 ஒட்டகங்களும் நிழலுக்காக ஒன்றாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தன.

மூன்று பேரும் நன்றாகப் படித்து இருந்தார்கள்.

மஹாவீர் ரெண்டு தம்பிகளைப் பார்த்து “அப்பா உயில்படி நான் ரெண்டு ஏக்கர் புஞ்சை நில த்தை எடுத்துக்கறேன். ஆனால் 26 ஒட்டகங்களை ஒன்னில் மூனு பங்கு போட்டா,ரெண்டு ஒட்டங் கங்களை கொல்ல வேண்டி வருமே. அப்பா எந்த ஒட்டகத்தை யும் கொல்லக் கூடாதுன்னு உயில் எழுதி வச்சுட்டுப் போய் இருக்காரே. எப்படி அப்பா உயில் படி நாம இந்த 26 ஒட்டங்களை பிரிச்சு எடுத்துக்கறது” என்று கேட்டான்.

உடனே இரண்டு தம்பிகளும் “ஆமாம் அண்ணா.அப்பா புஞ்சை நிலங்களை நாம சுலபமா பிரிச் சிக்கிடலாம்.இந்த ஒட்டகங்களை தான் நாம எப்படி பிரிச்சிக்கறது. ஒரு வழியும் தெரியலையே” என்று சொன்னார்கள்.

ஆனால் ரணதீர் ராணா உயில் படி மூன்று பிள்ளைகளும்,ஆறு புஞ்சை நிலங்க ளையும்,26 ஒட்டகங்களையும் பிரிச்சு எடுத்துகிட்டாங்க.

எப்படிங்க?

(அடுத்த அத்தியாத்தை படியுங்க. உங்களுக்குப் புரியும்).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *