என் பிராணன் உங்க மடியிலே தான்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 3,971 
 
 

அத்தியாயம் 1 | அத்தியாயம் 2

ரவி ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.அவன் அப்பா சிவராமன் ஒரு IAS அதிகாரி.அவன் அம்மா வனஜா ஒரு தனியார் கமபனியிலே ‘ஜெனரல் மானேஜராக’ வேலை செய்து வந்தாள். இவர்கள் பங்களா அடையாரில் இருந்தது.பங்களாவிலே ஒரு வசதி இருந்து ஒரு வசதி இல்லாமல் இல்லே.அதைத் தவிர வீட்டோடு ஒரு சமையல் கார மாமி,ரெண்டு வேலைகாரர்கள்,ஒரு தோட்டக் காரன் வாசலில் கேட்டில் ஒரு கூர்க்காவும் இருந்தார்கள்.

ஆபீஸ் போய் வர சிவராமன் ஒரு சின்ன காரும் ராதா ஒரு சின்ன காரும் உபயோகப் படித்தி வந்தார்கள்.ரவி அண்ணா இஞ்சினியா¢ங்க் கல்லூரிக்குப் போய் ஒரு ‘லேடஸ்ட் மாடல்’ மோட்டார் பைக்கை உபயோகப் படுத்தி வந்துக் கொண்டு இருந்தான்.

அதே கல்லூரியிலே படித்து வந்தாள் ரமா.அவளும் ஒரு பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுதான்.ரமாவின் அம்மா சாரதா BSNL கமபனியிலே ஒரு ஜெனரல் மானேஜராக வேலை செய்து வந்தாள்.ரமாவின் அப்பா சபேசன் ஒரு பெரிய துணிக்கடையை நடத்தி வந்தார்.இவர்கள் பங்களா திருவான்மியூரில் இருந்தது.இவர்கள் வீட்டிலும் எல்லா வசதிகளும்,சமையல் கார மாமியும், வேலைக்காரர்களும்,தோட்டக்காரன், வாசல் கேட்டில் கூர்க்கா இருந்தார்கள்.

ரமாவும் கல்லூரிக்கு ஒரு ‘லேட்ஸ்ட் மாடல்’ மோட்டார் பைக்கில் தான் வந்துக் கொண்டு இருந்தாள்.கல்லுரியிலே ரவியும் ரமாவும் சந்தித்துக் கொண்டால் வெறுமனே ‘ஹாய்’ என்று சொல்லி விட்டுப் போய்க் கொண்டு இருந்தார்கள்.

இருவரும் B.E. ‘ஹை பஸ்ட் க்ளாஸ்லே பாஸ்’ பண்ணி விட்டு, INFOSIS கம்பனியில் வேலையில் சேர்ந்தார்கள். இருவரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.இருவரையும் ஒரே ‘செக்ஷனில்’, ஒரே மானேஜர் கீழே ‘போஸ்டிங்க்’ கொடுத்து இருந்தார்கள்.இருவரும் மிகவும் சந்தோஷமாக அந்த ‘செக்ஷனில்’ வேலை செய்து வந்துக் கொண்டு இருந்தார்கள்.

இருவருக்கும் ‘கம்ப்யூட்டர்’ வேலையில் திறமை மிகுந்தவர்களாக இருந்ததால், அந்த மானேஜ ருக்கு யாரிடம் எந்த வேலையைக் கொடுப்பது என்று சிரமப் பட்டு வந்தார்.மானேஜர் சொன்ன வேலை யை அவர் கொடுத்த ‘கெடு’வுக்குள் முடித்துக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் இருவரும்.இதைப் பார்த்த அந்த மானேஜர் ரொம்ப சந்தோஷப் பட்டார்.அவர் அந்த வருடக் கடைசியிலே எழுத வேண் டிய ‘அப்ரெய்ஸலில்’ இருவருக்கு மிகவும் ‘ஸ்ட்ராங்காக’ தன் ‘ரெகமண்டேஷனை’ எழுதினார்.

வேலை நேரத்திலும் சரி,வேலை முடித்து விட்டு வீட்டுக்குப் போகும் போதோ சரி ரவியும் ராதாவும் ஒருவருக்கு ஒருவர் காலேஜில் சொல்லி வந்த மாதிரியே வெறுமனே ‘ஹாய்’ என்று மட்டும் சொல்லி வந்தார்கள்.இருவரும் வேலையிலே சேர்ந்து மூன்று வருடங்கள் ஆனதும் இருவருக்கும் ஒரே நாளில் ‘பிரமோஷன்’ கிடைத்தது.

‘பிரமோஷன்’ கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட நினைத்த இருவரும்,அன்று மாலையே ஒருவருக்கு ஒருவர் சந்தித்து தங்களுக்குப் ‘பிரமோஷன்’ கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்துக் கொள்ள ஆசைப் பட்டார்கள்.ஆனால் யார் முதலில் ஒரு ‘சின்ன பார்ட்டிக்கு’ அழைப்பது என்று தெரியாமல் ‘வெயிட்டிங்க் கேம்’ ஆடி வந்தார்கள் இருவரும்.

ரெண்டு நாள் ஆனதும் அந்த மானேஜர் ரெண்டு பேரையும் பார்த்து அவர் ரூமில் பார்த்ததும் “உங்க ரெண்டு பேருக்கும், இந்த கம்பனி என் ‘ரெகமண்டேஷன்’ பேர்லே சரியா மூனு வருஷம் ஆனதும் பிரமோஷன் குடுத்து இருக்கா.இந்த மாதிரி மூனு வருஷம் முடிஞ்சதும் முதல் ‘பிரமோஷன்’ யாருக்கும் கிடைச்சதே இல்லே ‘இன் பாக்ட்’ எனக்கே நாலு வருஷம் தான் முதல் பிரமோஷன் கிடைச்சது.நீங்க ரெண்டு பேரும் இந்த ‘ஹாப்பி அகேஷனை’ ‘செலபரேட்’ பண்ணலையா” என்று கேட்டதும் ‘இது தான் சாக்கு’ என்று நினைத்து ஒரே சமயத்லே “சார்,நாங்க ரெண்டு பேரும் இந்த ‘ஹாப்பி அகேஷனை’ கொண்டாடக் காத்துக் கிட்டு இருக்கோம்.நீங்க எப்ப ‘ப்ரீயா’ இருப்பேள்” என்று கேட்டதும் அவர் சந்தோஷப் பட்டு, இந்த ‘சாடர் டே’ நான் ‘ப்ரீயா’ இருப்பேன்” என்று சொன்னார்.

உடனே இருவரும்” நாங்க ரெண்டு பேரும் கலந்துப் பேசி, உங்களுக்கு நாங்க எங்கே இந்த ‘பார்ட்டியை’ வச்சுக்கலாம்ன்னு சொல்றோம்” என்று சொல்லி விட்டு மானேஜர் ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.

ரவி தான் முதலில் ராதாவைப் பார்த்து” மிஸ் ராதா,மானேஜரே ‘பிரமோஷன் பார்ட்டி’ கேட்டு இருக்கார்.நீங்க இந்த ‘பார்ட்டியை’ எங்கே வச்சுக்கலாம்ன்னு ஆசைப் படறேள்” என்று கேட்டதும் ராதா சந்தோஷப் பட்டு ”நீங்கோ சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’. மானேஜர் கேட்ட அப்புறமா நாம சும்மா இருக்கக் கூடாது.’ஹோட்டல் தாஜ்லே’ வச்சுக்கலாமா.அந்த இடம் உங்களுக்கு சரிப் படுமா” என்று கேட்டு ரவி அவ்வளவு பெரிய ஹோட்டலில் ‘பார்ட்டியை’ வச்சுக்க அவன் ‘பர்ஸ்’ இடம் கொடுக்குமா என்பதை தெரிந்துக் கொள்ள ஆசைப் பட்டாள்.

ரவி உடனே “ ‘ஹோட்டல் தாஜ் இஸ் ஓகே பார் மீ’.நான் என்ன ஆசைப் படறேன்னா,அந்த ஹோட்டல்லே நாம மூனு பேரும்அன்னைக்கு ராத்திரி ‘பபர் டின்னர்’ சாப்பிடலாமா.உங்களுக்கு சௌகா¢யப் படுமா.இல்லே ஒரு ‘சின்ன பார்ட்டி’ வச்சுக்கலாமா” என்று கேட்டு ராதாவின் ‘பர்ஸ்’நாம கேட்டத்துக்கு இடம் கொடுக்குமா என்று அவள் பதிலுக்குக் காத்துக் கொண்டு இருந்தான்.

ராதா உடனே “ இட்ஸ் பைன் பார் மீ.’இன் பாக்ட்’ நானே உங்களே ‘பபர் டின்னர்’ சாப்பிடலாமா. உங்களுக்கு சௌகரியப் படுமான்னு கேக்கலாம்’ன்னு தான் இருந்தேன்” என்று சொல்லி ரவிக்கு தான் ‘எந்த விதத்லேயும் சளைச்சவள் இல்லை’ என்பதை பெருமையாகச் சொல்லிக் கொண்டாள்.

இருவரும் மானேஜருக்கு அவர்கள் எடுத்த முடிவைச் சொல்லி,அந்த வார சனிக்கிழமை இரவே மூவரும் ‘பபர் டின்னர்’ சாப்பீட்டார்கள்.அந்த ‘டின்னா¢ல்’ மூன்று பேரும் நிறைய அவர்கள் குடும்ப த்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.அப்போது தான் ரவிக்கும் ராதாவுக்கும் இருவர் குடும்ப ‘ஸ்டேடஸ்’நன்றாகப் புரிய வந்தது.

அடுத்த வார கடைசியிலே ரவியும் ராதாவும் ‘ஹோட்டல் சவேராவில்’ சந்தித்து,மனம் விட்டுப் பேசி வந்தார்கள்.அந்த சந்திப்பில் இருவரும் தங்கள் விருப்பு,வெறுப்பு சம்மந்தப் பட்ட விஷயங்களை, வெளிப் படையாகப் பேசினார்கள்.

ஐந்து வார சந்திப்பு முடிந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர மிகவும் விரும்ப ஆரம்பித்தால், அவர்கள் பெற்றோர்களிடம் சொல்லி கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணச் சொன்னார்கள்.

ரவியின் பெற்றோர்களும் ராதாவின் பெற்றோர்களும் ஒரு ஞாயிற்றுக் கிழமை சந்தித்து ராதா ரவி கல்யாணத்தை பண்ண முடிவு எடுத்து, ஜாதகப் பரிவர்த்தணையை செய்துக் கொண்டார்கள். ரெண்டு பேருடைய ஜாதங்ககளும் நன்றாக ஒத்துக் கொண்டு இருக்கவே ராதாவின் பெற்றோர்கள் ரவி ராதா கல்யாணத்தை இரு குடும்ப ‘ஸ்டேடஸ்’க்கு ஏற்றார் போல ‘ஜாம்’ ‘ஜாம்’ என்று ஒரு பெரிய ‘ஹோட்டலில்’ நடத்தினார்கள்.ரவி ராதா கல்யாணத்திற்கு ரவியின் பெற்றோர்கள் ஒரு சின்ன காரை வாங்கிக் கொடுத்தார்கள்.

ஒரு வார ‘ஸ்விட்ஸர்லாண்ட்’ ஹனி மூனுக்குப் அப்புறம் ரவியும் ராதாவும் ஒன்றாக காரில் வேலைகுப் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்.ஒரு மாசம் தான் இருவரும் மனம் ஒத்து எல்லா வேலைகளையும் செய்து வந்தார்கள்.இருவரும் பணக்கார குடும்பத்தில் இருந்து வந்ததினாலும்,நல்ல ‘பஸ்ட் க்ளாச்’ BE படிப்பு,கம்ப்யூட்டர் திறமை இருந்ததாலும், இருவர் இடையிலும் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருந்து,மற்ற விஷயங்களிலும் ‘டிபர்ன்ஸ் ஆப் ஒபினியன்’ தலைத் தூக்க ஆரம்பி த்தது.

சிலவற்றை ரவி பொருத்துக் கொண்டு வந்தான்.சிவவற்றை ராதா பொருத்துக் கொண்டு இருந்தாள்.

மூன்று வருடங்கள் ஆனதும் ராதா கர்ப்பம் ஆனாள்.ராதாவுக்கு ‘பிரசவ வலி’ எடுத்ததும் ஒரு பெரிய ‘நர்ஸிங்க் ஹோமில்’ சேர்த்தான் ரவி.அந்த பிரசவத்தில் ராதாவுக்கு ரெண்டு ஆண் குழந்தை கள் பிறந்தது.இரு கும்பத்தாரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ராதாவும் ரவியும் ஒரு குழந்தைக்கு ‘ராமன்’ என்றும் மற்றோரு குழந்தைக்கு ‘பரதன்’ என்று பெயர் வைத்து ரெண்டு குழந்தைகளையும் செல்லமாக வளர்த்து வந்தார்கள்.

நாளுக்கு நாள் ரவி ராதா இடையே மன வேற்றுமை அதிகம் ஆகிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தது. இந்த மன வேற்றுமை பெற்றோர்களுக்கு தெரிய வரவே அவர்கள் மிகவும் வருத்தப் பட்டார் கள்.ரவியின் பெற்றோர்களுக்கு ‘ரவியின் மேல் எந்த தப்பும் இருக்காது,ரமா தான் வீண் பிடிவாதம் பிடிச்சுண்டு வந்துண்டு இருக்கா போல இருக்கு’ என்று நீனைத்தார்கள்.

அதேப் போல் ராதாவின் பெற்றொர்கள் ‘ராதா மேலே எந்த தப்பும் இருக்காது.ரவி மேலே தான் தப்பு இருக்கும்.மாப்பிள்ளை தான் பிடிவாதம் பிடிச்சுண்டு வந்துண்டு இருக்காப் போல இருக்கு’என்று நினைத்து வந்தார்கள்.

இருவருக்கும் என்ன ‘மன பேதம்’ என்று தெரியாததால்,இரு பெற்றோர்களும் ராதா ரவி மன வேற்றுமையிலே தலை இடாமல் இருந்து வந்தார்கள்.

குழந்தைகள் ராமனுக்கு பரதனுக்கும் மூனு வயது ஆகும் போது அன்று இரவு இரண்டு பேரும் ‘நமக்குள் இருக்கும்’ டிப்பரன்ஸ் ஆப் ஒபினியனை’ வச்சுண்டு சேர்ந்து வாழந்து வருவது ரொம்ப கஷ்டமாய் இருக்கும்’ என்று தீர்மானம் பண்ணி,ஒரு குழந்தையை ரவி வைத்துக் கொண்டு, மற்றோரு குழந்தையை ராதா வைத்துக் கொண்டு ‘மியூச்சல் கன்ஸல்டில்’ ‘விவாக ரத்து’ப் பண்ணிக் கொள்ள முடிவு பண்ணி இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் சொன்னார்கள்.

ரெண்டு பெற்றோர்களும் ராதாவும் ரவியும் எடுத்த ‘முடிவை’ கொஞ்ச பரிசீலணைப் பண்ணிப் பார்த்து ஒன்றாக வாழ்ந்து வரச் சொன்னார்கள்.ஆனால் ரவியும்,ராதாவும் அவர்கள் பெற்றோர்களிடம் ‘எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப ஒத்துப் போகலே.நாங்க பிரிஞ்சி வாழறது தான் ஒரே வழி.அது தான் எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்’ என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டார்கள்.

ரெண்டு பெற்றோர்களும் மிகவும் மன வருத்தப் பட்டுக் கொண்டு. ராதாவும் ரவியும் இஷ்டப்பட்ட படியே செய்து வர சம்மதம் கொடுத்தார்கள்.

ஒரு மாசம் ஆனதும் ரவியும் ராதாவும் ‘மியூச்சல் கன்ஸல்டில்’ தனியாய் வாழ்ந்து வர முடிவு பண்ணினார்கள்.

ராதா மூன்று ‘சூட் கேஸ்களில்’ தன்னுடைய துணி மணீகளையும்,நகைகளையும், குழந்தை பரதன் ‘டிரஸ்’களையும் எடுத்து வைத்துக் கொண்டு கணவனிடமும்,மாமனார் மாமியாரிடமும் சொல்லிக் கொண்டு தன் அம்மா அப்பா வீட்டுக்கு வந்து விட்டாள்.அன்றில் இருந்து பரதன் தன் அம்மாவுடனும், தாத்தா பாட்டியுடனும் வளர்த்து வந்தான்.
ராமன் தன்னுடைய அப்பாவுடனும், தாத்தா பாட்டியுடனும் வளர்த்து வந்தான்.

அடுத்த நாளே ராமன் தன் கமபனி ‘பாஸ்ஸை’ப் பார்த்து தன் வேலையை பெங்களூருக்கு மாற்றிக் கொடுக்க ஒரு விண்ணப்பம் கொடுத்தான்.சிவராமனும்,ராதாவும் அவர்கள் பாஸைக் கேட்டு, பெங்களூருக்கு மாற்றல் கேட்டார்கள்.

மூன்று பேருக்கும் பெங்களூருக்கு மாற்றல் கிடைத்தவுடன்,சிவராமன் அவர்கள் இருந்து வந்த பங்களாவை விற்று விட்டு ரவியுடனும்,பேரன் ராமனுடனும் பெங்களூர் வந்து ஒரு மூனு ‘ பெட் ரூம் ப்லாட்’ வாங்கிக் கொண்டு,சென்னையிலே வாழ்ந்து வந்தது போல ஒரு சமையல் கார மாமியையும், வீட்டில் ரெண்டு வேலைகாரனை வைத்துக் கொண்டு,அந்த பங்களாவிலே சென்னையிலே இருந்தது போல எல்லா வசதிகளையும் செய்துக் கொண்டு பிள்ளையுடனும் பேரனோடவும் இருந்து வந்தார்கள்.

ராமனுக்கு மூன்று வயது ஆனதும் ரவி அவனை ஒரு பணக்கார பள்ளிகூடத்தில் சேர்த்து படிக்க வைத்தான்.ஒரு வேலைக்காரன் காலையில் ராமனைப் பள்ளிகூடத்தில் விட்டு விட்டு, மறுபடியும் பன்னிரண்டு மணிக்குப் போய் அழைத்து வந்துக் கொண்டு இருந்தான்.

ராதா பரதனுக்கு மூன்று வயது ஆனதும்,அவனை சென்னையிலே இருந்த ஒரு பணக்கார பள்ளி கூடத்திலே சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு வந்தாள்.ராதாவின் பெற்றோர்களுக்கு தங்கள் ஒரே பெண் ராதாவின் வாழக்கை இப்படி முடிந்ததை நினைத்து மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டு வந்தார்கள்.அது வரைக்கும்,ராதா கொஞ்ச வருஷம் கணவனோடு வாழ்ந்து வந்து,குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு,இப்போ ஒரு குழந்தையை தன்னுடன் வைத்துக் கொண்டு வாழ்ந்து வருவது அவர் களுக்கு கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.

ரவி ஆபீஸ்க்குக் கிளம்பினதும் ‘ரவி ராதா ‘ஈகோ க்லாஷாலே’ தங்கள் ஒரே பிள்ளையின் வாழ்க்கை இப்படி கல்யாணம் பண்ணிக் கொண்ட பொண்டாட்டி¨யும், ஒரு குழந்தையையும் விட்டு ‘பிரிஞ்சி வாழ’ வேண்டியதாய் ஆனதை நினைத்து மிகவும் வருத்தப் பட்டார்கள்.இந்த ‘வருத்தம்’ அவர்கள் மன நிலையை மிகவும் பாதித்து வந்தது.

அறுபது வயது ஆனதும் சிவராமன் தன் வேலையில் இருந்து ரிடையர் ஆனார்.அடுத்த நாளில் இருந்து அவர் ராமனை பள்ளிகூடத்திற்குக் கொண்டு போய் விட்டு விட்டு,அவன் பள்ளிக் கூடம் முடிந்ததும் அழைத்து வந்துக் கொண்டு இருந்தார்.சிவராமன் ரிடையர் ஆகி ஐந்து வருஷம் ஆனதும் வனஜாவும் ரிடையர் ஆனாள்.
சென்னையிலும் அறுபது வயது ஆனதும் சாரதா தன் வேலையில் இருந்து ரிடையர் ஆனாள்.

சிவராமனும் வனஜாவும் அடுத்து அடுத்து இறந்துப் போனார்கள்.ரவி அவர்கள் ரெண்டு எல்லா ‘ஈமக் காரியங்களையும் கிரமமாக பண்ணி முடித்தான்.அப்பா,அம்மா இல்லாத அந்த பங்களா ரவிக்கு சூன்யமாக இருந்தது.அவன் யோஜனைப் பண்ணினான்.ஒரு முடிவுக்கு வந்தான்.

’நாம இனிமே மனதைப் பக்குவப் படுத்திக் கொண்டு வாழந்து வர ஒரே வழி பக்தி தான்’ என்று நினைத்து அவன் வீட்டு வாத்தியாரை சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் தன் பங்களாவுக்கு காலையிலும் மாலையிலும் வரச் சொல்லி முதலில் சந்தியாவந்தன மந்திரத்தைக் கற்றுக் கொண்டு வாரத்தில் எல்லா நாட்களும் சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டு வந்தான்.

சந்தியாவந்தனம் நன்றாக பண்ண வந்த பிறகு ரவி,அந்த வாத்தியாரிடம் ருத்ரம், சமகம், புருஷ சூக்தம்,நாராயண சூக்தம்,துர்கா சூக்தம் போன்ற வேத மந்திரங்களை எல்லாம் கற்றுக் கொண்டான்.

சென்னையிலும் ரமாவின் பெற்றோர்கள் காலம் முடிந்த பிறகு ராதா தனி மரம் ஆனாள்.அவள் மனம் வெறுமையாக இருந்து வந்தது.

‘வயது ஆக வயது ஆக மனிதனுக்கு தன்னாலே விவேகம் வரும்.அந்த விவேகம் வந்தால் அவன் தன்னால் ‘ஆன்மீகத்தை’த் தான் நாடுவான்’ என்கிற பழமொழி தப்பு இல்லையே!!

ராதா அவள் வீட்டு வாத்தியாரைக் கூப்பிட்டு கல்யாணம் ஆன பெண்கள் பண்ணி வர வேண்டிய பூஜைகள்,ஸ்லோகங்கள் எல்லாவற்ரையும் நன்றாகக் கற்றுக் கொண்டு,வெள்ளி கிழமை களில் ‘மடிசார் புடவையை’க் கட்டிக் கொண்டு தவறாமல் பூஜையை பண்னிக் கொண்டு வந்தாள். சனிக் கிழமை ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் வசித்து வந்த பங்களவில் இருந்த ஒரு ‘பூஜை மாமி’ இடம் நாராயணீயம்,பாகவதம் சுந்தர காண்டம் எல்லாம் கற்று வந்தாள்.

ராமன் ‘ப்லஸ் டூவில்’ நல்ல மார்க் வாங்கினதும் அவனை BE சேர்த்தான்.அவன் BE படிப்பு முடிஞ்சதும்,அவனை மேல் படிப்பு படிக்க அமெரிக்கா அனுப்பினான்.ராமன் அமெரிக்கா போனதும் ரவிக்கு இன்னும் வெறுமை அதிகமாக தெரிய வந்தது.அவன் அந்த வெறுமையை மறக்க காலையிலு ம் மாலையிலும் பெங்களுரில் இருந்த கோவில்களுக்கு எல்லாம் போய் தான் கற்றுக் கொண்ட வேத மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டு வந்தான்.

பரதன் சென்னையிலே BE ‘பாஸ்’ பண்ணினவுடன் ராதா அவனை மேல் படிப்புக்காக அமெரிக்கா அனுப்பினாள்.

ராமன் அமெரிக்கா போய் MS ‘பாஸ்’ பண்ணினதும் ஒரு நல்ல ‘சாப்ட் வேர்’ கம்பனியிலே ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான்.

பரதனும் அமெரிக்கா போய் MS ‘பாஸ்’ பண்ணினதும் ஒரு நல்ல ‘சாப்ட் வேர்’ கம்பனியிலே ஒரு நல்ல வேலையில் சேர்ந்தான்.

வேலையிலே சேர்ந்து மூன்று வருஷம் ஆனதும் ராமன் தன்னுடன் கூட வேலை செய்து வந்த ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்ள நினைத்து அப்பாவுக்கு ‘போன்’ பண்ணினான்.ரவி ராமன் சொன்னதை சந்தோஷமாக ஒத்துக் கொண்டு ராமன் சுதா கல்யாணத்துக்கு அமெரிக்காப் போய் கல்யாணத்தில் கலந்துக் கொண்டு,ராமனோடவும், அவன் மணைவியிடனும் ஒரு வாரம் இருந்து விட்டு பெங்களூர் திரும்பி வந்தான்.

ராமன் அமெரிக்காவிலே வாழ்ந்து வர முடிவு பண்ணினதால்,ரவி பெங்களூரில் நிரந்தரமாக ஒரு தனி மரம் ஆனான்.’நாம தனி மரம் ஆனாலும் பரவாயில்லே.நல்ல வேளையா ராமன் அவனுக்குப் பிடிச்ச ஒரு பெண்ணை அவன் காதலிச்சு கல்யாணம் பண்ணீடுட்டான்.அப்படி பண்ணிக்காம இங்கே வந்து இருந்தான்னா,இங்கே இருக்கிறவா அவனுக்கு பொண்ணுக் குடுக்க வந்தா,அவா என் ‘லைப்பை’ ப் பத்திக் கேட்டு இருந்தா,அவனுக்கு கல்யாணம் நடக்கறது ரொம்ப சிரமமா இருந்து இருக்கும்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டான்.

பரதனும் வேலையிலே சேர்ந்து மூன்று வருஷம் ஆனதும் அவனுக்குப் பிடித்த ஒரு பெண்ணைக் காதலித்து கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிவுப் பண்ணி அம்மாவுக்கு ‘போன்’ பண்ணினான்.ராதா சந்தோஷப் பட்டு அமெரிக்காவுக்குப் போய் பரதன் ரம்யா கல்யாணத்தை ‘அடெண்ட்’ பண்ணி விட்டு சென்னைக்கு வந்தாள்.

ராதா சென்னையிலே தனியாக இருந்து வந்தாலும் பரதன் ‘அவனாகவே அவனுக்கு ஒரு நல்ல பிடிச்ச வாழக்கையை அமைத்துக் கொண்டதை நினைத்து சந்தோஷப் பட்டாள்.
’அப்படி பண்ணாம பரதன் சென்னைக்கு வந்து இருந்தான்னா,அவனுக்கு பொண்ணு குடுக்க வறவா என் ‘லைப்பை’ப் பத்திக் கேட்டு இருந்தா,அவனுக்கு கல்யாணம் நடக்கறது ரொம்ப சிரமமா இருந்து இருக்கும்.நான் தினமும் வேண்டி வர காமாக்ஷ¢ அம்மன் தான் அவன் மனசிலே பூந்து அவனுக்குப் பிடிச்ச ஒரு பெண்ணோடு அவன் வாழ்க்கையே அமைச்சு இருக்கா’ என்று மனதில் சொல்லிக் கொண்டு காமாக்ஷ¢ அம்மன் படத்துக்கு ஒரு நமஸ்காரம் பண்ணீனாள்.

ஐந்து வருடங்கள் ஓடி விட்டது.ரவி தன் வேலையில் இருந்து ‘ரிடையர்’ ஆனான்.அவன் தன் பங்களாவிலே தினமும் சந்தியாவந்தனம் பண்ணி விட்டு ருத்ரம்,சமகம்,புருஷ சூக்தம்,நாராயண சூக்தம் எல்லாம் சொல்லி விட்டு சமையல் கார மாமி பண்ண சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு, சாயங் கால வேளைகளில் தினம் ஒரு கோவிலாகப் போய் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு கொஞ்ச நேரம் தியானம் பண்ணி விட்டு பங்களாவுக்கு வந்துக் கொண்டு இருந்தான்.

ராதாவும் ‘ரிடையர்’ ஆனதும் தினமும் குளித்து விட்டு ‘மடிசார் புடவையை’க் கட்டிக் கொண்டு, காமாஷி அம்மனுக்கு பூஜையை பண்ணி விட்டு சமையல் கார மாமி பண்ண சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு சாயங்கால வேளைகளில் அவள் வயது மாமிகளுடன் நாராயணீயம், திருப்புகழ் எல்லாம் சொல்லி வந்துக் கொண்டு தன் பொழுதை கழித்து வந்தாள்.

ரவி காஞ்சிபுரத்துக்குப் போய் வந்து ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு காலையிலும் மாலை யிலும் ‘காஞ்சி பெரியவா’ அதிஷ்டானத்தை பன்னிரண்டு தடவை ‘ப்ரதக்ஷ¢ணம்’ பண்ணி விட்டு ‘அவர்’ முன்னாலே உட்கார்ந்துக் கொண்டு ஒரு மணி நேரம் தியானம் பண்ன ஆசை பட்டான். தன்னுடைய சமையல் கார மாமிக்கு ஒரு வாரம் லீவு எடுத்துக் கொள்ள சொல்லி விட்டு தன் காரில் ஏறி காஞ்சீபுரம்,வந்து ஒரு நல்ல ஹோட்டலில் ஒரு ரூம் எடுத்துக் கொண்டு தங்கினான்.

அடுத்த நாள் காலையிலே ரவி எழுந்து குளித்து விட்டு,நெத்தியில் பட்டையாக விபூதியை இட்டுக் கொண்டு,மயில் கண் பட்டு வேஷ்டியை பஞ்ச கச்சமாகக் கட்டிக் கொண்டு,தோள் மேலே மயில் கண்அங்கவஸ்திரத்தை போட்டுக் கொண்டு,மனதில் சில சுவாமி மந்திரங்களை சொல்லி விட்டு ‘பபே ப்ரேக் பாஸ்ட்’ சாப்பீட்டு விட்டு அன்று என்ன கிழமை என்று பார்த்தான்.அன்று வெள்ளீக் கிழமை.’சரி இவ்வளவு தூரம் வந்து இருக்கோமே காஞ்சிவர ஷேத்ரத்தின் மகிமை பொருந்திய காமா க்ஷ¢ அம்மனை தா¢சனம் பண்ணி விட்டு,அப்புறமா காஞ்சி மடத்துக்குப் போகலாம்’ என்று நினைத்து காமாக்ஷ¢ அம்மன் கோவிலுக்குப் போனான்.காமாக்ஷ¢ அம்மனை தா¢சனம் பண்ணி விட்டு,நன்றாக வேண்டிக் கொண்டு கோவிலை விட்டு வெளியே வந்து காரில் ஏறி சங்கர மடத்துக்கு வந்தான்.

வாசலில் துளசி மாலை விற்றுக் கொண்டு இருந்த ஒரு அம்மாவிடம் ஒரு துளசி மாலையை வாங்கிக் கொண்டு ‘காஞ்சி பெரியவா’ அதிஷ்டான த்துக்கு வந்து அவன் வாங்கிக் கொண்டு வந்த துளசி மாலையை ‘அதிஷ்டானத்தில்’ பூஜை பண்ணிக் கொண்டு இருப்பவா¢டம் கொடுத்தான்.அவர் அந்த மாலையை ‘பெரியவா அதிஷ்டானத்தில்’ சாத்தினார்.பிறகு ரவி ‘அதிஷ்டானத்தை’ பன்னிர ண்டு பிரதக்ஷ¢ணங்கள் பண்ணினான். ’அதிஷ்டானத்துக்கு’ ஒரு நமஸ்காரத்தை பண்ணி விட்டு, எதிரே இருந்த மேடையில் உட்கார்ந்துக் கொண்டு கண்களை நன்றாக மூடிக் கொண்டு தியானம் பண்ண ஆரம்பித்தான்.

ராதா ஒவ்வொரு மாச முதல் வெள்ளிக் கிழமையும் காமாக்ஷ¢ அம்மன் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு ஒரு அர்ச்சனைப் பண்ணி விட்டு,அம்மனை ‘பிரதக்ஷ¢ணம்’ பண்ணி நமஸ்காரம் பண்ணி விட்டு,அப்புறமா ‘பெரியவா அதிஷ்டானத்துக்கு’ வந்து பன்னிரண்டு ‘பிரதக்ஷ¢ணங்கள்’ பண்ணி விட்டு, ‘அதிஷ்டானத்துக்கு ஒரு நமஸ்காரத்தை பண்ணி விட்டுப் போவதை ஒரு வழக்கமாக வைத்துக் கொண்டு இருந்தாள்.

அந்த வெளிக்கிழமை அந்த மாசத்தின் முதல் வெள்ளீக் கிழமை.

ராதா வழக்கம் போல காமாக்ஷ¢ அம்மனுக்கு ஒரு அர்ச்சனையைப் பண்ணி விட்டு, அம்மனை ‘பிரதக்ஷ¢ணம்’ பண்ணி ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு தன் காரில் ஏறி சங்கர மடத்துக்கு வந்தாள்.வாசலில் வழக்கமாக வாங்குவது போல ஒரு துளசி மாலையை வாங்கிக் கொண்டு,மடத்துக்கு உள்ளே வந்து ‘அதிஷ்டானத்துக்கு’ பூஜை பண்ணுகிறவா¢டம் கொடுத்து விட்டு ‘அதிஷ்டானத்தை’ பன்னிரண்டு ‘பிரதக்ஷ¢ணங்கள்’ பண்ணி விட்டு,‘அதிஷ்டானத்துக்கு ஒரு நமஸ்காரத்தை பண்ணி விட்டு,எழுந்துக் கொண்டு எதிரே இருந்த மேடையைப் பார்த்தாள்.
அவள் கண்களை அவளால் நமப முடியவில்லை.

‘நாமோ யாரையோ பார்த்து விட்டு ‘அவர்’ என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோமா.மயில் கண் பஞ்ச கச்ச வேஷ்டி,தோள் மேலே மயில் கண் அங்க வஸ்திரத்துடன் தியானம் பண்ணிக் கொண்டு இருக்காரே.அவரா இருக்குமா’ என்று நினைத்து கண்களை மறுபடியும் தேய்த்துக் கொண்டு நன்றாகப் பார்த்தாள்.

‘எப்படி இருந்தவர் இப்படி ஆயி விட்டு இருக்கார்.இவரைப் பாக்கற வரைக்கும் நம் மனதிலே ஒரு சலனமும் இல்லாம இருந்ததே.இப்ப ஏன் என் மனம் சஞ்சலப் படறது.மனதைக் கல்லாக்கிண்டு இப்படியே சென்னைக்குப் போயிடலாமா’ என்று ஒரு நிமிஷம் யோஜனைப் பண்ணீனாள்.

‘அப்ப நம்ம உடம்ப்லே ‘இள ரத்தம்’ ஓடிண்டு இருந்தது.’ஈகோ’வும் நிறைய இருந்தது.நமக்கு இருந்தா மாதிரியே அவர் உடம்ப்லேயும் இள ரத்தம் ஓடிண்டு இருந்தது. ஈகோ’ இருந்து இருக்கும் இல்லையா.இனிமே நம்ம வாழ்கையிலே என்ன இருக்கு.தனிமையோ தனிமை தானே.அவா¢டம் மெல்ல போய் பேசிப் பாக்கலாமா.ஆனா அப்படி நாமா வலிய போய் பேசினா……’என்று நினைக்கும் போது பழைய ‘ஈகோ’ ஞாபகத்துக்கு வந்தது.ராதா யோஜனைப் பண்ணீனாள்.

’இந்த ‘ஈகோ’ தான் என் வாழக்கைகுக் ஒரு ‘சத்துருவா’ இருந்து வந்து அவர் கிட்டே இருந்து என்னை பிரிச்சி வச்சது இல்லையா.நாம இத்தனை வருஷமா காமாக்ஷ¢ அம்மனை வேண்டிண்டு வந்து என்ன பிரயோஜனம்.என்னைத் தொட்டு ஊறா¢ய தாலிக் கட்டினவர் எதிரே இருந்தும் அவரைப் பாத்து ’சௌக்கியமா இருக்கேளா’ன்னு ஒரு வார்த்தைக் கேக்காமப் போகக் கூடாது.அது ரொம்ப தப்பு. நாம அவரேக் கேட்டு,அவர் இன்னும் பழைய விரோதத்தை மனசிலே வச்சுண்டு எனக்கு சரியா பதில்
சொல்லலைன்னா நாம அப்புறமா ஒன்னும் பேசாம கிளம்பிப் போயிடலாம்’ என்று நினைத்து மெல்ல மேடையில் ஏறி ரவி முன்னால் நின்றுக் கொண்டாள் ராதா.

மெல்ல ¨தா¢யத்தை வர வழைத்துக் கொண்டு “சௌக்கியமா இருக்கேளா” என்று கேட்டாள் ராதா.தியானம் பண்ணிக் கொண்டு இருந்த ரவிக்கு கேட்ட குரல் மிகவும் பழக்கப் பட்ட குரல் போல இருந்ததால்,அவன் தன் கண்களைத் திறந்துப் பார்த்தான்.பட்டுப் புடவையில் மடிசார் கட்டுடன் ராதா நின்றுக் கொண்டு இருந்தாள்.

ரவியால் அவன் கண்களை நம்ப முடியவில்லை.ஒரு நிமிஷம் ராதாவை நன்றாகப் பார்த்து விட்டு “நீயா ராதா.நான் சௌக்கியமா இருக்கேன்,நீ எப்படி இருக்கே” என்று கேட்டுக் கொன்டே எழுத்தான்.உடனே ராதா “நானும் சௌக்கியமா இருக்கேன்” என்று சொன்னாள்.உடனே ரவி “ராதா நாம இங்கே ஒன்னும் பேச வேண்டாம். இங்கே நிறைய பேர் தியானம் பண்ணீண்டு இருக்கா.நாம கொஞ்ச தூரமாப் போய் பேசலாம்” என்று சொல்லி ராதாவை அழைத்துக் கொண்டு போனான்.ரவி பேசின பேச்சில் இருந்து ‘அவருக்கு’ நம்ம பேர்லே கோவம் இல்லை’ என்பதை புரிந்துக் கொண்டாள்.

ரவி சொன்னது போல இரண்டு பேரும் அந்த மேடையில் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துக் கொண்டார்கள்.உட்கார்ந்துக் கொண்டவுடன் ராதா சட்டென்று ரவிக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு “என்னே மன்னிச்சுடுங்கோ.நான் பண்ணது ரொம்ப தப்பு” என்று சொல்லி விட்டு எழுந்துக் கொண்டு ரவி பக்கத்தில் கண்களில் கண்ணீருடன் உட்கார்ந்துக் கொண்டு இருந்த ராதாவைப் பார்த்து ரவி “ராதா,நீ மட்டும் தான் தப்பு பண்ணலே.நானும் தான் தப்பு பண்ணி இருக்கேன். போகட்டும் விடு.அது நடந்துப் போன கதை.நம்ப ரெண்டு பேர் வாழ்க்கையிலும்,நாம இத்தனை வருஷமா பிரிஞ்சி வாழ்ந்து வரணும்ன்னு அந்த பகவான் நம்ப தலையலே எழுதி இருக்கார்.அதை மாத்த யாரால் முடியும்” என்று ‘வேதந்தமாக’ச் சொல்லி சுவாதீனமாக அவள் கண்களைத் துடைத்து விட்டான்.

இருவரும் எழுந்து சங்கர மடத்தை விட்டு வெளியே வந்தார்கள்.ராதா ரவியுடன் அவன் காரில் ஏறிக் கொண்டு,அவள் கார் டிரைவரை பின்னாலே வரச் சொன்னாள். இருவரும் ‘தண்ணீர் நிறைந்த ஏரி உடைந்து ஜலம் பிரவாகமா ஓடுவது போல’ அவர்கள் வாழ்க்கையிலே நடந்த எல்லா சமாசாரங்க ளையும் பறி மாறிக் கொண்டார்கள்.பிறகு ராதா “இனிமே இருக்கற கொஞ்ச வருஷமாவது நாம ரெண் டு பேரும் சேந்து ஒன்னா இருக்கலாம்.என் பிராணன் உங்க மடியிலே தான் போகணும்.அது தான் எல்லா சுமங்கலிகளுக்கும் ஆசை” என்று சொல்லி ஆசையுடன் ரவி மடியிலே படுத்துக் கொண்டாள்.

உடனே ரவி “உன் ஆசைப் போல நடக்க நான் பகவானைத் தினமும் வேண்டிண்டு வறேன்” என்று சொன்னதும் ராதா ”ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு” என்று சொல்லி அவன் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.ரவி ராதா இடம் “ராதா,நாம சென்னையிலே இருந்து வந்தா பழைய ஞாபகம் எல்லாம் வரும்.நீ என்னோடு பெங்களூர் வந்து விடு.நாம ரெண்டு பேரும் மீதி இருக்கற வருஷங்களே சந்தோஷமா அங்கே கழிச்சுண்டு வரலாம்”என்று சொன்னதும் வாழ்க்கையிலே முதல் தடவையாக ராதா “நீங்கோ சொல்றபடியே பண்ணலாம்” என்று சொல்லி ஒத்துக் கொண்டாள்.

ராதா சொன்னதைக் கேட்டு ரவி ரொம்ப சந்தோஷப் பட்டான்.

இருவரும் சென்னைக்குப் போய் ராதா இருந்து வந்த பங்களாவையும்,காரையும் விற்று விட்டு, பங்களாவிலே இருந்த எல்லா சாமான்களையும் ஒரு முதியோர் இல்லத்துக்குக் கொடுத்து விட்டு, பெங்களுருக்கு த் திரும்பி வந்து ஒன்றாக வாழ்ந்து வர ஆரம்பித்தார்கள்.

முதல் நாள் இரவே ராதா ரவியின் மடியில் படுத்துக் கொண்டு ‘நான் என் வாழ் நாள் பூராவும் ஒரு தனி மரமாவே வாழ்ந்துண்டு வரப் போறேன்ன்னு நினைச்சுண்டு இருந்தேன்.அந்த பகவான் அனுக்கிஹத்தாலே,இத்தனை வருஷத்துக்கு அப்புறமா நீங்கோ எனக்கு மறுபடியும் கிடைச்சு இருக்கேள்.அந்த சந்தோஷதே உங்களுக்கு சொல்ல என் கிட்டே வார்த்தையே இல்லே.என் உடம்பு பூராவும் சந்தோஷம் பொங்கறது…..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ராதாவால் தாங்கிக் கொள்ள முடியாமல்,அவள் தலை சாய்ந்து விட்டது.

ரவி ராதா தலையைப் பிடித்துக் கொண்டு “ராதா,ராதா “ என்று சொல்லி ஆட்டிப் பார்த்தான்.

அழுதுக் கொண்டே ரவி “ராதா,நீ மறுபடியும் எனக்கு கிடைப்பேன்னு நானும் கனவிலே கூட நினைக்கலே.நீ கிடைச்ச அன்னைலே,நாம ஒரு நாள் கூட சந்தோஷமா ஒன்னா இல்லே. நீ என்னே மறுபடியும் ஒரு ‘தனி மரமா’ ஆக்கிட்டு என்னை விட்டுப் போயிட்டயே ”என்று தலையில் அடித்துக் கொண்டான்.

– முற்றும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *