என் நேர்மைக்கு இது தான் பரிசா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 4,774 
 
 

‘தாய் மாமன்’ உறவு விட்டுப் போகக் கூடாது என்று என் அம்மா அவள் தாய் மாமன் வேலுவை கல்யாணம் பண்ணிக் கொண்டாள்.

என் அப்பா ஒரு ‘பில்டிங்க் கன்ட்ராக்டா¢டம்’ ஒரு ‘மேசன்’ வேலைப் பார்த்து வந்தார்.என் அப்பா நான் பிறக்கும் வரை ரொம்ப ஒழுக்கம் உள்ளவாரகத் தான் இருந்தாராம்.அவருடைய அம்மாவும் அப்பாவும் விஷ காய்ச்சல் வந்து ஒரே நாளில் இறந்துப் போன துக்கம் தாங்காமல் அவர்கள் ‘காரியம்’ பண்ண பணம் போதாமல் அவருடைய நண்பர்கள் இடம் கடன் வாங்கி அம்மா அப்பா காரியத்தை செய்து முடித்தாராம்.

அவருக்கு வரும் சம்பளம் குறைவாக இருந்ததாலும்,வீட்டு செலவு அதிகமாக இருந்ததாலும் அந்த கடனை அவரால் சா¢யாக அடைக்க முடியவில்லை.அவர் படும் கஷ்டத்தைப் பார்த்து என் அம்மா நான்கு வீடுகளில் வேலைக்குப் போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து வந்து அப்பாவுக்கு உதவியாக இருந்து வந்தாளாம்.என் அப்பா மாசம் பொறந்ததும் என் அம்மாவுக்கு சம்பளம் வந்ததும், அதை அப்படியே வாங்கிக் கொண்டு போய் விடுவாராம்.என் அம்மா கொடுக்க மறுத்தால் அவர் என் அம்மவை அடிப்பாராம்.அந்த அடிக்கு பயந்து என் அம்மா தனக்கு வந்த மொத்த சம்பளத்தை எல்லாம் கொடுத்து விடுவாளாம்.

அந்த மாதிரி என் அம்மா கொடுத்த பணத்தை என் அப்பா அவர் வாங்கின கடனை அடைக்காமல் குடிக்க ஆரம்பித்தாராம்.கூடவே வேலை செய்து வரும் இடத்தில் ஒரு ‘சித்தாள் பொம்பளையோடு’ ஒரு சின்ன வீடு வைத்துக் கொண்டு வந்தாராம்.

என் அம்மாவுக்கு என் அப்பா ‘குடிக்கற’ விவரமும்,’சின்ன வீடு’ சமாசாரம் தொ¢ந்த அன்றே, என் அம்மா,அவரை விட்டு விட்டு எங்க ஆயா வீட்டுக்கு வந்து விட்டாங்களாம்.என் அம்மா என் ஆயா வீட்டுக்கு வந்த பிறகு மறுபடியும் என் அப்பாவோடு ‘வாழ்க்கையே’ நடத்தலையாம்.என்னை வைத்துக் கொண்டு தனியாக இருந்து வந்தாங்களாம்.

என் அம்மா தனக்கு வந்த சம்பாத்திய பணத்தில் எங்க ஆயா வீட்டுக்கு பக்கத்திலே ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு என் அம்மா தனியாக வாழ்ந்து வந்தாளாம்.
எனக்கு ஐந்து வயது ஆகி கொஞ்சம் விவரம் தொ¢ய ஆரம்பிக்கும் போது,என் அம்மா மேலே சொன்ன அவங்க கதையை முழுக்க என் கிட்டே சொல்லி அழுதாள்.எனக்கு என் அப்பா முகமே ஞாபகம் இல்லே.

விஜயதசமி அன்று என் அம்மா அவங்க குடிசைக்கு பக்கத்திலே இருந்த ஒரு சின்ன பள்ளிக் கூடத்திலே,அவங்க கேட்ட பணத்தை கட்டி என்னை சேர்த்து படிக்க வைத்தாள்.நானும் அந்தப் பள்ளிக் கூடத்திலே நன்றாக படித்து வந்தேன்.என் அம்மா நான் நன்றாகப் படித்து வருவதைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டாள்.

என் அம்மா என்னைப் பார்த்து “சங்கர்,நீ நல்லா படிச்சு ஒரு நல்ல வேலைக்குப் போகனும்ன்னு நான் ரொம்ப ஆசைப் படறேன்.நீ எல்லா பாடங்களையும் கஷ்டப் பட்டு படிச்சு எல்லா ‘க்ளாசிலேயும்’ ‘பாஸ்’ பண்னனும் என்ன” என்று என்னைப் பார்த்து சொன்னாள்.நான் உடனே “அம்மா நீங்க கவலை யேப் படாதீங்க.நான் வாத்தியார் சொல்லிக் குடுக்கற எல்லா பாடங்களையும் நல்லா படிச்சு எல்லா ‘க்ளாஸ்’லேயும் நிச்சியமா பாஸ் பண்ணுவேன்.நீங்க வேணா பாருங்க”என்று சொல்லி என் அம்மாவை
சந்தோஷப் படுத்தினேன்.என் அம்மாவும் மிகவும் சந்தோஷப் பட்டாள்.

பணம் கட்டி படிக்கும் அந்தப் பள்ளீ கூடத்திலே எட்டாவது ‘பாஸ்’ பண்ணினேன்.

அந்த வருட லீவின் போது எங்க வியாதியால் தவித்து வந்த என் ஆயாவும்,தாத்தாவும் அடுத்து அடுத்து இறந்துப் போனார்கள்.என் அம்மா அவள் சேர்த்து வைத்து இருந்த பணத்தில் இருவரையும் ‘அடக்கம்’ பண்ணி விட்டு வந்தாள்.

நிறைய வீடுகளில் மாடிப் படி ஏறி இறங்கி வேலை செய்து வந்த என் அம்மாவுக்கு இரண்டு கால் முட்டியும் மிகவும் வலிக்க ஆரம்பித்தது.அவள் ஒரு ‘ஆயுர்வேத டாக்டா¢டம்’தன் முட்டி வலியைக் காட்டி,உள்ளுக்கு மாத்திரையும், முட்டிகளில் தடவிக் கொள்ள ஒரு களிம்பையும் வாங்கிக் கொண்டு வந்து, அந்த களிம்பை தன் முட்டிகளில் தடவிக் கொண்டு வந்து,சுடு தண்ணீரையும் விட்டு வந்தாள்.

என் அம்மா வீட்டில் இருந்த போது என்னைப் பார்த்து” சங்கர்,உனக்கு இந்த தை மாசம் வந்தா, பதிமூனு வயசு முடிஞ்சு பதினாலு வயசு ஆரம்பிக்கப் போவுது.இந்த வயசிலே,உனக்கு ‘எல்லா விவரமும்’ கொஞ்ச கொஞ்சமா தொ¢ய வரும்.நீ வாழக்கையிலே நல்லா ஒழுக்கம் உள்ள பிள்ளையா வாழ்ந்து வரணும்.உங்க அப்பா மாதிரி இந்த ‘குடிக்கு’ எல்லாம் ஆசைப் படவே கூடாது.குடி குடியைக் கெடுக்கும்.ஒரு நாள் ராத்திரி உங்க அப்பா குடிச்சுட்டு வந்தார்.நான் அவர் கிட்டே’நீங்க குடிச்சுட்டு வந்து இருகிறதாலே, நான் உங்க கூட இருக்கப் போறது இல்லேன்னு சொன்னவுடன்,அவர் நீ போய்க்கோ,நீ இல்லேன்னா என்ன,நான் நிரந்தரமா என் சித்தாள் ராணீ கூட போய் இருந்துக்கறேன் னு’ சொன்னப் போது தான்,எனக்கு அவருக்கு இன்னொரு ‘பொம்பளே சகவாசம்’ இருந்துன்னு தொ¢ய வந்திச்சு.உடனே நான் அவரே விட்டுட்டு எங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டேன்.அது போவட் டும் அது பழைய கதை” என்று சொல்லி விட்டு கொஞ்சம் தண்ணீரைக் குடித்தாள்.

பிறகு என்னைப் பார்த்து”ரெண்டாவதா உனக்குக் கல்யாண வயசு வந்ததும்,நான் உயிரோடு இருந்தா,உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் கட்டி வக்கிறேன்.ஒரு வேளே நான்…” என் அம்மா சொல்லி முடிக்கவில்லை,நான் உடனே என் அம்மா வாயைப் பொத்தி “ நீங்க மேலே ஒன்னும் சொல்லாதீங்க.நீங்க நிச்சியமா உயிரோடு ரொம்ப வருஷம் என்னுடன் இருந்து வந்து, எனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பாத்து கல்யாணம் கட்டி வப்பீங்க.இனிமே அந்த மாதிரி எல்லா பேசாதீங்க” என்று சொன்னேன்.

உடனே என் அம்மா “சா¢ சங்கர் நான்,அந்த மாதிரி எல்லாம் இனிமே பேசலே.நான் என்ன சொல்ல வந்தேன்னா,நீ வாழக்கையிலே, திருடறது,பொய் சொல்றது,குடிக்கறது,கல்யாணத்துக்கு முன்னாலேயும் சா¢,அப்பாலேயும் சா¢,வேறே எந்த ‘பொம்பளே சகவாசமும்’இல்லாம,இருந்து வந்து, முறையா கல்யாணம் கட்டிக் கிட்டவ கூடத் தான் வாழ்ந்து வரணும்.நீஎந்த வித கெட்ட பழக்கமும் இல்லாம ஒரு நல்ல குடி மகனா வாழ்ந்து வரணும்” என்று சொன்னதும் உடனே நான் “அம்மா, நிச்சி யமா நீங்க ஆசைப் படறது நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாம ஒரு நல்ல குடிமகனா வாழ்ந்து வருவேம்மா” என்று சொன்னதும் என் அம்மா மிகவும் சந்தோஷப் பட்டாள்.
வருடாந்திர லீவு முடிந்ததும்என்னை ஒன்பதாவது வகுப்பில் சேர்க்க என் அம்மாவிடம் போதிய பண வசதி இல்லை.என் அம்மா என்னைப் பார்த்து “சங்கர்,விலை வாசி ரொம்ப ஏறிக் கிடக்குது.நான் வேலே செஞ்சு வந்த ஒரு அம்மா அவங்க வீட்டைக் காலி பண்ணி கிட்டு, அவங்க பையன் கூட இருந்து வர அமொ¢க்கா போயிட்டாங்க.அந்த அம்மா எனக்கு கணீசமா மூவாயிரம் ரூபாய் சம்பளம் குடுத்துக் கிட்டு வந்தாங்க.அந்த பணம் இப்போ எனக்கு இல்லே.நம்ம குடிசைக்கு வாடகையை ஏத்தி விட்டாரு அந்த குடிசைக்கு சொந்தக்காரர். அதனால்லே நான் இந்த வருஷம் ஒரு கார்ப்பரேஷன் பள்ளீ கூடத்லே சேக்கறேன்.நீ அந்தப் பள்ளிகூடத்லே படிச்சு வா” என்று சொல்லி விட்டு என்னை ஒரு கார்ப்பரேஷன் பள்ளீகூடத்தில் சேர்த்தாள் என் அம்மா.

நான் அந்த பள்ளிகூடத்திகு போய் படித்துக் கொண்டு வந்தேன்.அந்த பள்ளீகூடத்தில் ஒரே வாத்தியார் ரெண்டு மூனு ‘சப்ஜெக்ட் பாடங்களை சொல்லிக் கொடுத்தார்.எல்லா ‘சப்ஜெக்ட் பாடமும் அரை குறையாகத் சொல்லிக் கொடுத்தார்.மாணவர்கள் கேட்கும் எந்த சந்தேகங்களுக்கு சா¢யான பதிலும் சொல்லாமல் ‘ஏனோ தானோ’என்று பதில் சொல்லி வந்தார்.

வருடாந்திர பரி¨க்ஷ¢ல் நான் ரொம்ப சுமாராகத்தான் மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணினேன்.

அந்த கார்ப்பரேஷன் நான் மெல்ல ‘ப்லஸ் டூ பாஸ் பண்ணி முடித்தேன்.அது வரை என் அம்மா முடியாமல் வீட்டு வேலைக்குப் போய் வந்தாள்.

நான் ‘ப்ளஸ் டூ பாஸ்’ பண்ணி முடிந்ததும், என் அம்மா என்னைப் பார்த்து “சங்கர்,எனக்கு முட்டி ரொம்ப வலிக்குது.ரெண்டு வீட்டுக்கு நான் மாடிப் படி ஏறிப் போவணும்.எனக்கு சுத்தமா மாடிப் படி ஏறவே முடியலே.அப்படி மெல்ல ஏறிப் போனாலும் அவங்க வீட்லே குந்திக் கின்னு பாத்திரம் தேய்க்கறது ரொம்ப கஷ்டமா இருக்குது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது “அம்மா,நீங்க இப்படி கஷ்டப் பட்டு எல்லாம் வீட்டு வேலைகெல்லாம் போய் வறாதீங்க.நான் ஏதாச்சும் ஒரு வேலையேத் தேடி கிட்டு போய் வறேன்” என்று சொல்லி முடிக்கவில்லை என் அம்மா’ வேணாம் சங்கர்.நீ இந்த சின்ன வயசிலேயே வேலைக்கு எல்லா போவ வேணாம்” என்று சொன்னாள்.

“அம்மா இனி மேலே நான் படிக்கறதுன்னா பணம் கட்டித்தான் படிக்கணும்.இலவச படிப்பு முடுஞ்சுடிச்சி.நீங்க இந்த முட்டி வலியோட வீட்டு வேலேங்க எல்லாம் செஞ்சுக் கிட்டு வர வேணாம். வீட்டிலே மெல்ல சமையல் வேலையை செஞ்சுக் கிட்டு வாங்க.நான் ஒரு வேலேயேத் தேடி கிட்டு போய் சம்பாதிச்சுக் கிட்டு வறேன்” என்று சொல்லி விட்டு வேலைத் தேட ஆரம்பித்தேன்.

எனக்கு எந்த கம்பனியிலும் வேலைக் கிடைக்கவில்லை.எல்லா கம்பனிக் காரர்களும் எனக்கு ‘கம்ப்யூட்டர்’ வேலைத் தொ¢ந்து இருந்தால் தான் வேலைக் கொடுக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள்.

நான் ஒரு ‘கம்ப்யூட்டர்’ கற்றுக் கொடுக்கும் ஆபீஸ்க்குப் போய் விசாரித்தேன்.அந்த ‘ஆபீஸ்’ ‘கம்ப்யூட்டர்’ கற்றுக் கொடுக்க குறைந்த பக்ஷம் ஆறாயிரம் ரூபாயை இரண்டு தவணையாகக் கட்ட வேண்டும் என்று சொன்வார்கள்.கூடவே ‘நான் ஒரு ‘கம்ப்யூட்டரை’ வீட்டிலே வாங்கி வச்சுக் கிட்டு, அவங்க சொல்லிக் கொடுக்கறதை நான் வீட்டிலே பழகி வர வேணும்’ என்று சொன்னார்கள்.

நான் ஆறாயிரம் ரூபாய் அந்த ஆபீஸ்க்கு கட்டி,முப்பதாயிரம் ரூபாய் ஒரு ‘கம்ப்யூட்டரும்’ வாங்க என் கிட்டே ஏது பணம்.நான் மனம் ஒடிந்துப் போனேன்.என் அம்மாவிடம் சொல்லி வருத்தப் பட்டேன்.” மணி, நீ வேறே எங்காச்சும் வேலை தேடு.உனக்கு வேலே கிடைக்கற வரைக்கும் நான் வேலைக்குபோயாறேன்” என்று சொல்லி விட்டு தன் முட்டி வலியோடு வீட்டு வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.என் அம்மா ஒரு வீட்டு வேலையை முடித்துக் கொண்டு அடுத்த வீட்டுக்குப் போக மாடிப் படியை கொஞ்சம் வேகமாக இறங்கும் போது,கால் தவறி அந்த மாடிப் படியில் இருந்து கீழே விழுந்து விட்டாள்.மெல்ல முடியாமல் எழுந்து வாசலில் போய்க் கொண்டு இருந்த ஒரு ஆட்டோவைப் படித்துக் கொண்டு வீட்டுக்கு விந்தி விந்தி நடந்து வந்தாள்.அப்போது தான் வேலைத் தேட கிளம்பத் தயாராகிக் கொண்டு இருந்தேன்.

வேலைக்குப் போன என அம்மா வித்தி வித்தி வருவதைப் பார்த்த நான் பதறிப் போய் “ஏம்மா விந்தி விந்தி நடந்து வறங்க.என்ன ஆச்சு உங்களுக்கு” என்று கேட்டதும் என் அம்மா தனக்கு நடந்ததை எல்லாம் விவரமாகச் சொன்னாள்.நான் உடனே ஒரு ஆட்டோவைப் பிடித்து எதில் என் அம்மாவை ஏற்றீக் கொண்டு அருகில் இருந்த மருத்தவ மணைக்கு அழைத்துப் போய் அங்கே இருந்த டாக்டா¢டம் காட்டினேன்.

அந்த டாக்டர் என் அம்மாவின் காலை ‘எக்ஸ் ரே’ எடுத்துப் பார்த்து விட்டு,பிறகு என்னைப் பார்த்து “தம்பி உங்க அம்மா கால் எலும்ப்லே ரெண்டு முறிவு இருக்கு.நான் அதுக்கு மாவுப் பட்டுப் போடணும்.’எக்ஸ் ரேவுக்கும்’ மாவுக் கட்டுக்கும் மொத்தம் மூவாயிரம் ரூபாய் ஆகும்” என்று சொன்னவுடன் எனக்கு அழுகையே வந்து விட்டது.

நான் டாக்டரைப் பார்த்து என் குடும்ப நிலைமையை விவரமாகச் சொல்லி “என் கிட்டே அவ்வளவு பணம் இல்லே சார்.நான் ஆயிரம் ரூபாய் தான் எடுத்து வந்து இருக்கேன்.நீங்க தயவு செஞ்சி,அந்த ஆயிரம் ரூபாயே வாங்கிக் கிட்டு என் அம்மாவுக்கு மாவுக் கட்டுப் போடுங்க.நான் இன்னிக்கே எங்காச்சும் ஒரு வேலைக்குப் போய்,எனக்கு சம்பளம் வந்ததும், நான் மீதி ரெண்டாயிரம் ரூபாயை நிச்சியமா உங்களுக்குத் தறேன்.என்னெ கொஞ்சம் நம்புங்க டாக்டர்” என்று அவர் காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினேன்.

உடனே அந்த டாக்டர் “சா¢ தம்பி, நான் உங்க அம்மாவுக்கு மாவுக் கட்டுப் போடறேன்.நான் உனக்கு மூனு மாசம் அவகாசம் தறேன்.நீ எனக்கு மீதி ரெண்டாயிரம் ரூபாயைக் கொண்டு மறக்காம கொண்டு வந்துத் தரணும் சா¢யா” என்று சொன்னதும் நான் என் கைகளைக் கூப்பி அவருக்கு நன்றி சொல்லி விட்டு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ டாக்டர்.நான் நிச்சியமா இன்னும் மூனு மாசத்துக்குள்ளே மீதி ரெண்டாயிரம் ரூபாயை உங்களுக்கு கொண்டு வந்துத் தறேன்” என்று சொன்னதும் அந்த டாக்டர் என் அம்மாவின் காலை ‘ஆபரேஷன்’ பண்ணி,மாவுக் கட்டுப் போட்டு விட்டு “தம்பி,உங்க அம்மா அடிப்பட்ட இந்த காலை ஜாக்கிறதையா வச்சுக் கிட்டு வரணும்.மறுபடியும் இந்த கால்லே எந்த முறிவும் ஆவாம பாத்துக் கிட்டு வரணும்.உங்க அம்மாவை மறுபடியும் ஒரு மாசம் ஆனதும் இங்கே இட்டுக் கிட்டு வந்து காட்டு.நான் அவங்க மாவுக் கட்டேப் பிரிச்சிப் பாத்து,‘எக்ஸ் ரே’ பண்ணிப் பாத்துட்டு எலும்புங்க சேந்து இருக்கா ன்னு சொல்றேன்”என்று சொல்லி அனுப்பினார்.

நான் என் அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டு விட்டு,எங்க வீட்டுக்கு பக்கத்திலே இருந்த ஒரு ஹோட்டலிலே சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்து இருவரும் சாப்பிட்டோம். என் அம்மா என்னைப் பாத்து “மணி,நான் கொஞ்சம் அவசரப் பட்டு என் காலே ஒரு படிக்குப் பதிலா, ரெண்டாவது படிலே வச்சுட்டேன்.இப்ப முதலுக்கே மோசம் ஆயிடுச்சி.நான் இன்னும் ஒரு மாசத்து க்கு வேலேக்கே போவ முடியாது.போறாததுக்கு டாக்டர் ‘பீஸ்’ மூவாயிரம் குடுக்கணும்.இப்ப நீ ஒரு வேலேக்கு அவசியமா போய் வறணும்ன்னு ஆயிடுச்சே.அந்த கடவுள் நமக்கு ஏன் இப்படி ஒரு சோத னையேக் குடுத்து இருக்கார்.நான் யாருக்கும் ஒரு தீங்கும் பண்ணலையே “என்று தலையிலே அடித்து க் கொண்டு அழுதாள்.

நான் என் அம்மாவை சமாதானைப் படுத்தி விட்டு,அவங்க காலை ஜாக்கிறதையா வச்சுக் கிட்டு இருக்க சொல்லி விட்டு வேலே தேட கிளம்பினேன்.நான் என் மனதில் ‘நாம எப்படியாவது, ஏதாவது ஒரு வேலேயே இன்னிக்குத் தேடிக் கிட்டே ஆவணும்.நம்ம அம்மா சேத்து வச்சு இருந்த மொத்த பணமும் இப்போ செலவு ஆயிடுச்சி’ என்று நினைத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தேன்.

மெயின் ரோடிலே இருந்த ஒரு மளிகைக் கடை வாசல்லே ஒருந்த ஒரு ‘போர்ட்டை’ப் பார்த்ததும் எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை.அந்த ‘போர்ட்டில்’ “கடை வேலைக்கு ஆட்கள் தேவை” என்று எழுதி இருந்தது.நான் உடனே அந்த மளிகைக் கடை முதலாளியைப் பார்த்து “சார்,நான் ‘ப்லஸ் டூ’ பாஸ் பண்ணி இருக்கேன்.நான் எந்த வேலையும் செய்ய தயாரா இருக்கேன்.எங்க அம்மா வீட்டு வேலை செஞ்சு வந்தாங்க.ஆனா இப்போ அவங்க கால்லே எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கு. அவங்க ளாலே இப்போ வீட்டு வேலைக்குப் போவ முடியாது.நான் சம்பாதிச்சு வந்தாத் தான் எங்க வீட்லே அடுப்புப் புகையும்” என்று என் கையைக் கூப்பிக் கேட்டேன்.

அந்த முதலாளி என்னை ஏற இறங்கப் பார்த்தார்.கொஞ்சம் நேரம் யோஜனைப் பண்ணி விட்டு, என்னைப் பார்த்து “தம்பி நீ படிச்சு இருக்கற படிப்புக்கு ஏத்தா மாதிரி என் கிட்டே வேலே.என் கடை சாமான்களே, எங்க கடை சைக்கிளை எடுத்துக் கிட்டு,ஆர்டர் குடுத்தவங்க வீட்லே குடுத்துட்டு, அவங்க குடுக்கற பணத்தே வாங்கியாறணும்.’டெலிவா¢ பாய்’ வேலே.நீ அதே செய்வாயா.அந்த வேலேக்கு எட்டாவது படிச்சு இருத்தாலே போதும்.நீ’ ப்லஸ் டு பாஸ்’ பண்ணி இருக்கேன்னு சொல் றயே” என்று சந்தேகத்துடன் கேட்டார்.

நான் உடனே “சார்,நான் அந்த வேலேயே நிச்சியமா செய்யறேணுங்க.எனக்கு சைக்கிள் நல்லா ஓட்ட வரும்ங்க.தயவு செஞ்சிஅந்த வேலேயே எனக்குக் குடுங்க” என்று கெஞ்சினேன்.நான் கெஞ்சு வதைப் பார்த்த அந்த முதலாளி பரிதாப பட்டு எனக்கு அந்த வேலையை தர ஒத்துக் கொண்டு என்னைப் பார்த்து “தம்பி,நான் உனக்கு இந்த வேலேயேத் தறேன்.உனக்கு மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளம் தறேன்.நீ இந்த வேலேயே நல்லா செஞ்சு வந்தீன்னா,அடுத்த வருஷம் இன்னும் கொஞ்சம் சம்பளம் போட்டுத் தாறேன்”என்று சொன்னதும் நான் அவர் காலைத் தொட்டு வணங்கி என் நன்றி யை சொல்லி விட்டு அன்றில் இருந்து அந்த மளிகைக் கடையிலே அந்த முதலாளி சொன்ன வேலை யை செய்து வந்தேன்.

வீட்டுக்கு வந்து என் அம்மாவிடம் நான் சந்தோஷமாக எனக்குக் கிடைத்து இருக்கும் மளீகைக் கடை வேலையைச் சொன்னேன்.ஆனால் என் அம்மா சந்தோஷப் படவில்லை.

என் அம்மா என்னைப் பார்த்து “மணி எனக்கு மட்டும் இந்த கால் முறிவு ஏற்படலேன்னா,நீ படிச்சு இருக்கும் படிப்புக்கு உனக்கு இன்னும் நல்ல வேலே கிடைச்சு இருக்கும்.நீ செய்யற அந்த வேலேக்கு எட்டாவது படிச்சு இருந்தாலே போதும்.நம்ம போறாத வேளே.நீ இப்போ ஒரு வேலேக்கே போயாகணும்ன்னு ஆயிடுச்சே.நான் இன்னும் கொஞ்ச ஜாக்கிறதையா இருந்து இருக்கணும். என்னாலே தான் உனக்கு நீ படிச்சு இருக்கற படிப்புக்கு ஏத்த வேலே கிடைக்கலே” என்று சொல்லி அழுதாள்.

என் அம்மாவை மெல்ல சமாதானப் படுத்தி விட்டு அந்த மளிகைக் கடை வேலைக்குப் போய் வந்துக் வர முடிவு பண்ணினேன். நான் தினாமும் காலையிலே நாலு மணிக்கே எழுந்து ‘காபி’ப் போட்டு விட்டு,நாஷ்டாவும் மதியம் சமையலும் பண்ணி வைத்து விட்டு,என் அம்மாவுடன் நாஷ்டா வையும் சாப்பிட்டு விட்டு,‘காபி’யையும் குடித்து விட்டு,சமைத்து வைத்து இருக்கும் சமையலை மதியம் சாப்பிட்ட சொல்லி விட்டு,மளிகைக் கடைக்கு வேலைக்குப் போய்க் கொண்டு இருந்தேன்.

எனக்கு முதல் மாச சம்பள பணம் வந்ததும் நான் என் அம்மாவை டாக்டர் கிட்டே அழைத்துப் போய் என் சம்பள பணத்தில் அவருக்கு ஒரு ஐனூறு ரூபாயைக் கொடுத்து விட்டு,மீதிப் பணத்தை இன்னும் ரெண்டு மாசத்தில் கொடுப்பதாய் சொல்லி விட்டு,என் அம்மாவின் மாவுக் கட்டை பிரித்துப் பார்க்க சொன்னேன்.

அந்த டாக்டரும் என் அம்மாவின் மாவுக் கட்டைப் பிரித்து விட்டு,என் அம்மாவின் காலை ‘எக்ஸ் ரே’ எடுத்துப் பார்த்து விட்டு “தம்பி எனக்கு சொல்லவே ரொம்ப வருத்தமா இருக்கு.இவங்க காலை ஜாக்கிறதையா வச்சுக் கிட்டு வறலே போல இருக்கு.உடைஞ்ச எலும்புங்க சேரவே இல்லே. இவங்க வயசுக்கு நான் மறுபடியும் ஆபரேஷன் பண்றது சா¢ இல்லே.இவங்க இந்தக் காலை அதிகமா ஊனிக் கிட்டு நடக்காம ஒரு ‘வாக்கரே’ வச்சுக் கிட்டு நடந்து வறது தான் நல்லது” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
என் அம்மாவை ஒரு நான் ஒரு ‘வாக்கர்’ வாங்குகிற வரைக்கும்,அந்த அடிப் பட்ட காலை மிகவும் ஜாக்கிறதையாக வைத்துக் கொண்டு வரச் சொன்னேன்.எனக்கு நாலு மாச சம்பளம் வந்ததும், அந்த டாக்டருக்குக் கொடுக்க வேண்டிய மீதி பணத்தைக் கொடுத்து விட்டு கடைக்குப் போய் என் அம்மாவுக்கு ஒரு ‘வாக்கரை’ வாங்கிக் கொண்டு வந்துக் கொண்டு அதை வைத்து நடந்து வரச் சொன்னேன்.

அன்று வீட்டு வந்ததும் நான் என் அம்மாவிடம் “இன்னிக்கு நான் மளிகை சாமான்கள் குடுத்துட்டு பணம் வாங்கற வீட்லே தவறுதலாக என் கிட்டே எரனூறு ரூபாய் அதிகமா குடுத்தாங்க.நான் அவங்க குடுத்த பணத்தை ஒரு தடவைக்கு ரெண்டு தடவை மறுபடியும் மறுபடியும் எண்ணீப் பாத்துட்டு,அவங்க தவறுதலா எனக்குக் குடுத்த எரனூறு ரூபாயை நான் திருப்பிக் குடுத்தேன். அவங்க என்னைப் பார்த்து ’இவ்வளவு நேர்மையா இருக்கியே தம்பி இந்த சின்ன வயசிலே’ன்னு சொல்லி பாராட்டினாங்கம்மா” என்று சொன்னதும் என் அம்மா “அப்படித் தான் இருக்கணும் மணி. மத்தவங்க பணத்துக்கு நாம ஆசைப் படவே கூடாது” என்று என் முதுகிலே தட்டி சந்தோஷப் பட்டாள்.

நான் என் அம்மா சொன்னதை என் வாழ்ங்க்கையிலே கடைப் பிடித்து வந்து ஒரு நேர்மையான வாழக்கையை வாழ்ந்து வந்தேன்.

எனக்குத் திருமண வயது வந்ததும் என் அம்மா அவங்களுக்கு தொ¢ஞ்சவங்க கிட்டே எல்லாம் சொல்லி எனக்குப் ‘பொண்ணு’க் கேட்டாங்க.நானும் என் அம்மாவும் ‘பொண்ணு’க் கொடுக்க ஒத்துக் கொண்ட வீட்டுக்குப் போய் ‘பொண்ணு’ப் பார்த்தோம்.அவங்க வீட்டிலே பெண்ணின் அம்மாவும், அப்பாவும் என் அம்மாவைப் பார்த்து “உங்களுக்கு சொந்த வீடு இருக்குதா,பையன் கிட்டே எவ்வளவு சொத்து இருக்குது.ஒரு வேளே “சிறுசு” ரொம்ப ஆசைப் பட்டா கல்யாணம் ஆன பிறவு அவங்க ‘தனிக் குடித்தனம்’ போய் இருக்க நீங்க சம்மதம் தருவீங்களா” என்று கேட்டதும் என் அம்மா ஆடிப் போய் விட்டாள்.

என் அம்மா அமைதியாக “எங்களுக்கு சொந்த வீடு,பூர்வீக சொத்து எல்லாம் இல்லீங்க.அவனுக்கு வர மாச சம்பளம் தான் எங்க கிட்டே இருக்கு.என் பையன் என்னே இந்த வயசான காலத்லே, தனியா தவிக்க விட்டுட்டு தனிக் குடித்தனம் எல்லாம் வர மாட்டாங்க.என் பையன் ரொம்ப நேர்மை யான பையங்க.அவன் கிட்ட எந்த கெட்ட பழக்கமும் இல்லீங்க”என்று சொன்னாள்.

அவர்கள் உடனே “வெறும் நேர்மையை மட்டும் வச்சுக் கிட்டு இருந்தா போதாதுங்க.சொந்த வீடோ இல்லே பூர்வீக சொத்தோ உங்க பையனுக்கு இருக்கணும்.நாங்க உங்க பையணுக்கு எங்க ‘பொண்ணே’க் குடுக்க முடியாதுங்க” என்று நிர்தாட்சனயமாக சொல்லி விட்டார்கள்.

நானும் என் அம்மா ஆறு பெண்கள் வீட்டுக்குப் போய் ‘பொண்ணு’ப் பார்த்தோம்.எல்லா வீட்டிலேயும் முதலில் பொண்ணுப் பார்த்த அம்மா அப்பா கேட்டதையே கேட்டார்கள்.என் அம்மாவும் அவங்க சொன்ன பதிலையே சொன்னாங்க.அவங்களும் முதல் வீட்டிலேஅதே பதிலையேத் தான் சொல்லி எங்களை அனுப்பினார்கள்.என் அம்மாவும் நானும் வீட்டுக்கு வந்து சேர்த்தோம்.

வீட்டுக்கு வந்த என் அம்மா மனம் உடைத்து என்னைப் பார்த்து “மணீ, உங்க அப்பா ஒழுக்கம் கெட்டவருன்னு நினைச்சுத் தான் நான் உன்னே இட்டுக் கிட்டு தனியா வந்தேன்.என்னாலே வீட்டு வேலே செஞ்சு சொத்தும் சேக்க முடியலே,வூடும் வாங்க முடியலே.போறாததுக்கு நான் என் காலை உடைச்சுக் கிட்டு வூட்லே குந்திக் கிட்டு இருக்கேன்.பொண்ணு குடுக்கறங்க எல்லாம் சொத்து இருக்குதா,சொந்த வூடு இருக்குதா,’தனி குடித்தனம்’ போவ ஒத்துப்பீங்களான்னே கேக்கறாங்களே. நாமும் ஆறு பொண்களேப் பாத்துட்டு வந்தோம்.ஒரு பொண்ணும் உனக்கு அமையலையே. யாரும் பொண்ணுக் குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களே.உனக்குக் கல்யாணமே ஆவது போல இருக்கே” என்று அழுதுக் கொண்டு சொல்லும் போது என் அம்மா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு தரையிலே சாய்ந்து விட்டாள்.

அப்படி சாயந்து விழுந்த என் அம்மா பிறகு கண்ணே முழிக்கவில்லை.

நான் அழுதுக் கொண்டேஎன் அம்மாவை அடக்கம் பண்ணி விட்டு வந்தேன்.

நான் ஒரு தனி மரம் ஆனேன்.ஆனால் என்னிடம் கல்யாண வயதுக்கு வந்த எல்லா ஆண் களுக்கும் ‘வயது பெண்களிடம்’ இருக்கும் ’ஈர்ப்பு’ இருந்து வந்தது.

ஆறு வருடங்களாக என் வேலையில் நான் மிகவும் நேர்மையாக இருந்ததை கவனித்த என் கடை முதலாளி,நான் கொண்டு வந்துக் கொடுத்தப் பணத்தை எண்ணாமலே அவர் கல்லாவில் போட்டுக் கொண்டு வந்தார்.அந்த அளவுக்கு அவருக்கு என் நேர்மை மேலே நம்பிக்கை இருந்தது.

கடையிலே வேலை செய்து வந்த ரெண்டு ‘சேல்ஸ் பெண்கள்’ தங்கள் காதலை என்னிடம் மறை முகமாகத் தொ¢வித்தார்கள்.

நான் அவர்கள் காதலை ஏற்று அவர்கள் கூட பழகி வந்து என் ‘கல்யாண ஆசையை’ வளர்ந்துக் கொண்டு வந்தேன்.ஆறு மாசம் ஆனதும் ஒரு நாள் அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு எங்கள் காதல் தொ¢ய வந்தது.அவர்கள் இந்த ‘காதலை’ ஏற்று என்னை அவர்கள் வீட்டுக்குக் கூப்பிட்டார்கள்

அந்தப் பெண்ணின் அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்த்து “உங்களுக்கு சொந்த வீடு இருக்குதா.பூர்வீக சொத்து ஏதாச்சும் இருக்குதா ”என்று என் அம்மாவுடன் நான் முன்னம் பல தடவை ‘பொண்ணு’ ப் பார்க்க போன போது கேட்ட கேள்விகளையே கேட்டார்கள்.அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் “எனக்கு சொந்த வீடோ,இல்லைப் பூர்வீகச் சொத்தோ இல்லீங்க.உங்க பொண்ணே நீங்க எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிங்கன்னா,நான் காலம பூராவும் அவளை கண் கலங்காம காப்பாத்தி வருவேங்க” என்று சொன்னதும்,அவர்கள்”இதோ பாருங்க.உங்களுக்கு சொந்த வீடும் இல்லே.பூர்வீகச் சொத்தும் இல்லே.இந்த மளிகை வேலையை மட்டும் நம்பி, நாங்க உங்களுக்கு எங்க பொண்ணே கல்யாணம் கட்டிக் குடுக்க முடியாதுங்க” என்று சொல்லி எங்க காதலை,கல்யாணத் தில் கொண்டு போய் சுபமாக முடிக்காமல்,’மலரும்’ முன்னமே கிள்ளி எறிந்து விட்டார்கள்.

நான் மிகவும் வருத்தப் பட்டு வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தேன்.வரும் வழியில் ஒரு ‘ட்ரான்ஸிஸ்ட்டர்’ பெட்டியில் இருந்து ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் ‘என்னும் பாட்டு ஒலித்துக் கொண்டு இருந்தது.இந்த பாட்டு என் வாழ்க்கைக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று எண்னம் இட்டாவாரே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

விலை வாசி எல்லாம் விஷம் போல ஏறி வரும்,இன்றைய கால கட்டத்தில் நான் எனக்கு வரும் சம்பள பணத்தில் வயிறார மூனு வேளை சாப்பிட்டுக் கொண்டு கொஞ்சம் பணமும் சேர்த்து வைத்துக் கொண்டு வருகிறேன்.

என்னுள் கொழுந்து விட்டு எரியும் என் ‘கல்யாண ஆசையை’ என்னால் நேர்மையான வழியிலே இருந்து வந்து ‘அணைத்துக் கொள்ள’ முடியாமல் தவித்து வருகிறேன்
’தவறான வழியிலே’ போய் அந்த ‘ஆசையை’ தீர்த்துக் கொள்ள ஆசைப் படும் போது எல்லாம், என் அம்மா எனக்கு சின்ன வயதிலே சொன்ன ‘புத்திமதிகள்’ஞாபகத்துக்கு வந்து என்னைத் தவறான வழியில் போக விடாமல் தடுக்கிறது.

வருடங்கள் ஆக, ஆக, எனக்கு வயது கூடிக் கிட்டுத் தான் போகுமே ஓழிய குறையப் போவது இல்லை.

எனக்கு இப்போது வயது முப்பத்தி இரண்டு.

நான் இப்போது இருப்பதைப் போலவே நேர்மையான வழியிலே திருமணம் செய்துக் கொள்ள ஆசைப் பட்டு வந்தால்,இன்னும் இரண்டு வருடம் ஆனதும்,ஏன் இப்போதே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வரும் ‘பெண்’ என்னை ‘ஒரு வயதானவர்’ என்கிற பட்டத்தை ‘சூட்டி விட’ப் போகிறார்கள்

அப்புறம எனக்கு எங்கே திருமணம் நடக்கப் போகிறது!!!!.

நான் ஒன்று சொல்ல ஆசைப் படுகிறேன்.

என்னிடம் ஒரு வீடும் இருந்து,நிறைய பூர்விக சொத்தும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.இந்த இரண்டையும் நம்பி பெண்ணின் பெற்றோர்கள் சந்தோஷமாக எனக்கு அவர்கள பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம்.

கல்யாணம் ஆகி ரெண்டோ மூனோ வருடங்களில் நான் ‘நடத்தை கெட்டு’ இருந்து வந்து, என் வீட்டையும்,பூர்வீக சொத்தையும் அழித்து விட்டேன் என்றால், பெண்ணை எனக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் என்ன பண்ணப் போகிறார்கள்.

அவர்களால் முடிந்தது எல்லாம் ஒன்று தான்.

கோவம் வந்து ஒரு ‘நடத்தை கெட்டஆம்பளையோடு நீ இருக்க வேணாம்’ என்று நினைத்து அவர்கள் பெண்ணை அவர்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுப் போய் ‘வாழா வெட்டியாக வைத்துக் கொண்டு வந்து காலம பூராவும் அழுதுக் கொண்டு இருப்பார்கள்.

பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் ‘ஒரு நாள் இல்லை,ஒரு நாள்அழியும் இந்த வீட்டை யும்,பணத்தையும் தான் ‘நிரந்தரம்’ என்று எண்ணாமல் தங்கள் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ள வரும் பையனை தங்கள் பெண் மனதார ஆசைப் படுகிறாளா,அந்தப் பையன் நேர்மை யானவனா,தங்கள பெண்ணை காலம் பூராவும் கண் கலங்காமல் காப்பாற்றி வருவானா என்பதை எல்லாம் தீர விசாரித்து தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க முன் வராமல் இருக்கும் வரையில்,என்னைப் போன்று சொந்த வீடு, பூர்வீக சொத்து இல்லாத நேர்மையான இளைஞர் களின் வாழக்கையிலே திருமணம் என்பது நிச்சியம் ஒரு “கானல் நீர்” தான்.

பெண்ணைப் பெற்ற பெற்றோர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *