என் தவற்றோ

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 4,259 
 
 

அமிர்தாவை அவசரமாக மருத்துவமனையில் அட்மிட் பன்னிவிட்டு குறுக்கும் நெடுக்கமாக நடந்துக் கொண்டு இருந்தார் முத்துலிங்கம்,மனைவிக்கு பிரசவவலி வீட்டில் இருக்கும் போதே வந்துவிட்டது,அவசர அவசரமாக வண்டியைப் பிடித்து கொண்டு வந்து சேர்த்து விட்டார்,திகதி கொடுத்திருந்தது என்னமோ இரண்டு வாரங்கள் கழித்து தான்,அதற்கு முன்பே அமிர்தாவிற்கு வலி வந்ததில் கொஞ்சம் பதட்டம் ஆகிவிட்டார் அவர்,வந்து அட்மிட் பன்னியதுமே,மருத்துவமனையில் நீங்கள் போய் பிறகு வாருங்கள்,தற்போது பார்வையாளர் நேரமும் முடிந்து விட்டது என்று அவரை வெளியில் அனுப்பி விட்டார்கள்,வீட்டிற்கு போவதற்கு மனமில்லை அவருக்கு,வெளிப்பக்கம் நடந்துக் கொண்டு இருந்தார்,எப்படியும் ஐந்து மணிக்கு மறுப்படியும் பார்வையாளர்களை உள்ளே விடுவார்கள்,தற்போது மூன்று மணி இன்னும் இரண்டு மணித்தியாலம் இருக்கு ஒரு காப்பி குடித்தால் தெம்பாக இருக்கும் என்று தோன்றியது அவருக்கு

அருகில் இருந்த ஒரு காப்பி கடைக்குள் நுழைந்தார் முத்துலிங்கம்,ஒரு சிறுவன் கதிரையை காட்டி உட்காருங்கள் சார்,சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா என்றான் அவன்,வேண்டாம் சூடாக ஒரு கப் காப்பி மட்டும் கொண்டு வா போதும் என்றார் அவர்,சுட சுட வடை,பஜ்ஜி இருக்கு சார் என்றான் அவன்,எனக்கு ஒன்னும் வேண்டாம் என்றார் அவர் சற்று நேரத்தில் சூடாக கொண்டு வந்து வைத்த காப்பியை குடித்து முடித்துவிட்டு பணத்தை பையனிடம் கொடுத்து விட்டு மிகுதி சில்லரையை நீயே வைத்துக் கொள் என்று கூறியப்படி வெளியில் வந்தார் அவர்,நேரத்தைப் பார்த்தார் நான்கு மணி,மெதுவாக மருத்துவமனையை நோக்கி நடந்தார் அவர்,கடந்த காலம் அவர் முன்பே வந்துப் போனது,சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர்,வீட்டிற்கு மூத்தப் பிள்ளை,அதையடுத்து ஒரு தம்பியும் தங்கையும் பிறந்தார்கள்,மூவரையும் முடிந்தளவு படிக்க வைத்து கரை சேர்த்து விட்டார்கள் அவர்களின் பெற்றோர்கள்,ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பகையாளிகள் என்பது உண்மையாகி போனது அவர்கள் குடும்பத்தில்

இருந்த சொத்தை பிரித்து பங்கு போடும் போது ஏற்பட்ட தகராறு இன்னும் சரியாகவில்லை,எங்களுக்கு நீங்கள் மூன்று பேரும் பிள்ளைகளே இல்லை,நாங்கள் உயிருடன் இருக்கும் மட்டும் எங்கள் முகத்தில் முழிக்காதீங்கள் என்று வீராப்புடன் தனியாக வாழும் பெற்றோர்கள்,அதைப் பற்றி சிறிதும் கவலைப் படாத பிள்ளைகள் என்று தான் சொல்ல வேண்டும் மூவரும்,அனைவரும் தனி தனியாக குடும்பத்துடன் வாழ ஆரம்பித்து விட்டார்கள்,அமிர்தா அவர்கள் வீட்டில் இரண்டாவது பெண்குழந்தை,அவளின் பெற்றோர்களுக்கு ஓர் ஆண் குழந்தை இல்லையென்பது மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது,கடைசி காலத்தில் நமக்கு கொள்ளி வைக்க ஒரு பிள்ளை இல்லையே என்று இருவரும் கவலைப் படுவார்கள்,தற்போது கடைசி மகள் வீட்டில் தான் இருக்கார்கள் இத்தனைக்கும் மகனை விட மருமகன் நன்றாகவே அவர்களை கவனித்துக் கொண்டாலும் அவர்களுக்கு அதில் திருப்தி இல்லை

அமிர்தாவிற்கு இதற்கு முதல் ஒரு பெண்குழந்தை பிறந்தது,நான்கு மாதங்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ்வதற்கு வரம் வாங்கி வந்ததுப்போல் மறுப்படியும் கடவுளிடமே தஞ்சம்,இருவரும் அதில் கொஞ்சம் உடைந்து தான் போனார்கள்,ஆனாலும் கொஞ்சம் ஆறுதல்,சரி பெண் குழந்தை தானே என்ற மனநிலை இருவருக்கும்,அதனால் தான் என்னமோ பிறந்த குழந்தை பெற்றோர்களின் மனநிலை புரிந்து போய் கடவுளிடமே சேர்ந்து விட்டதோ தெரியவில்லை,எப்போதுமே ஆண் பெண் என்று பிரித்துப் பார்க்க தெரியாதவர் அவர் மட்டும் தானே இந்த உலகத்தில்,நாட்கள் ஓடியது மறுப்படியும் அமிர்தா கற்பமானாள்,இருவரும் எதிர்பார்த்தது ஆண் குழந்தையை மட்டும்,அதனால் தான் முத்துலிங்கத்திற்கும் இவ்வளவு பதட்டம்,கடவுளிடம் எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுத்து விடு என்பது தான் இருவரினதும் பிராத்தனையும்,அவருக்கு நேரம் போகவில்லை,இன்னும் சிறுது நேரத்தில் பார்வையாளர் நேரம்,அது மட்டும் சமாளித்துக் கொண்டு வெளிப்பக்கம் நின்றார்,அப்போது மருத்துவமனையில் பார்வையாளர்கள் நேரத்தை தெரிவிக்க மணி அடித்தது,வாயிற்கதவு திறந்ததும் வெளிப்பக்கம் நின்ற அனைவரும் பரபரப்பாக உள்ளே போனார்கள்,முத்துலிங்கமும் அவசரமாக உள்ளே சென்றார்,மனம் திக் திக் என்று இருந்தது

குழந்தை பிறந்து இருக்குமா என்ற சந்தேகத்துடன் நடந்தார்,அமிர்தா குழந்தையுடன் கட்டிலில் படுத்து கிடந்தாள்,அவளை கண்டதும் தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது,மெதுவாக அவள் அருகில் சென்று தலையை தடவினார் அவர்,அவள் மெதுவாக கண் திறந்து பார்த்தாள்,எப்போது இங்கு கொண்டு வந்து விட்டார்கள் என்றார் அவர்,சற்று முன்பாக தான் இங்கு வந்தேன்,நிறையவே வலி எனக்கு,வேண்டாம் என்று போய் விட்டது,இவ்வளவு சிரமம் பட்டு பெண் குழந்தை தான் கிடைத்திருக்கு என்றாள் கவலையுடன்,அதை கேட்டதும் முத்துலிங்கத்திற்கும் முகம் வாடியது,குழந்தையை எட்டி கூட பார்க்கவில்லை,சிறுது நேரம் அமைதியாக இருந்தார்கள் இருவரும்

குழந்தை அழுதது அம்மா குழந்தையை தூக்கி பாலை கொடு என்று அங்கு வேலை செய்த தாதி ஒருத்தி அதட்டினாள் அமிர்தாவை,இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்,முத்துலிங்கம் குழந்தையை மெதுவாக தூக்கி அமிர்தாவிடம் கொடுக்கும் போது கூட ஆண் குழந்தையாக பிறந்து இருக்கலாம் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது,அவள் குழந்தையை வாங்கியப் போதும் அதே எண்ணம் அவளுக்கும் ஏற்பட்டது,நீ ஆண் குழந்தையாக பிறந்து இருக்கலாமே,ஏன் கடவுளே இப்படி எங்களை சோதிக்கின்றாய்,ஏற்கெனவே ஒரு பெண்குழந்தையை கொடுத்து பறித்துக் கொண்டாய்,மீண்டும் பெண் குழந்தையை கொடுத்திருக்க என்று வேதனைப் பட்டுக் கொண்டே பால் ஊட்டினாள்,அந்த பிஞ்சு குழந்தை இது எதுவும் அறியாது,அம்மாவிடம் பாலை உறுஞ்சி குடித்தது,சற்று நேரத்தில் மருத்துவர் வந்தார்,அமிர்தா கணவரை கண்டதும் அவரை தனியாக அழைத்த மருத்துவர் இனி உங்கள் மனைவி பிள்ளை பெத்துக்க கூடாது,முடியவும் முடியாது,அவர்களின் கர்பபை பலவீனமாக இருக்கு இதுவே கஷ்டப் பட்டு தான் பெற்றெடுத்தார்கள்,இனி கருத்தடை அருவை சிகிச்சை செய்து கொண்டால் நல்லது,ஊசி மாத்திரையை விட அது உடம்பிற்கு நல்லது இரண்டு பேரும் முடிவெடுத்து சொல்லுங்கள் என்று கூறிவிட்டு அவர் மற்றவர்களை பார்க்க சென்று விட்டார்

முத்துலிங்கம் மெதுவாக வந்து மனைவி பக்கம் உட்கார்ந்தார்,மருத்துவர் என்ன சொன்னார் என்றாள் அவள்,இனி உன்னாள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதாம் என்று சொன்னார் என்றதும் அவளுக்கு கண்கலங்கியது,இனி ஓர் ஆண் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று பெருமூச்சி விட்டாள் அவள்,முத்துலிங்கத்திற்கும் அது கவலையாக தான் இருந்தது,இனிமேல் ஆண் குழந்தைக்கு வழியில்லை என்று ஏக்கமாக இருந்தது,ஒரு குழந்தை இருக்கு தானே என்று ஆறுதல் அடைய முடியவில்லை இருவருக்கும்,ஆண் குழந்தையாக பிறந்திருந்தால் நம் பெயர் சொல்ல ஒரு பிள்ளை இருந்திருக்கும் என்று முத்துலிங்கம் பெருமூச்சி விட்டார்,ஆமாங்க முதல் ஆண் குழந்தை தானே எதிர் பார்த்தோம்,அதுவும் பெண்குழந்தையாக தான் பிறந்தது,இந்த குழந்தை சரி ஆண்குழந்தையாக பிறந்திருக்கலாம் இதுவும் பெண்குழந்தை நாங்கள் அதிஷ்டம் கெட்டவர்கள்,இனியும் நினைத்தால் கூட பெற்றுக் கொள்ள முடியாது ஒரு ஆண் குழந்தையை என்று சொல்லும் போதே அவள் கண்கள் குளமாகியது,பார்வையாளர் நேரம் முடிந்து விட்டது,முத்துலிங்கம் புறப்பட்டு விட்டார்,அநேகமாக நாளைக்கு வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைக்கின்றேன்,பவானியை நாளைக்கு வேலைக்கு வர சொல்லுங்கள் என்றாள் அமிர்தா,சரி நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன்,நீ உடம்பை பார்த்துக் கொள் என்று கூறி விட்டு அவர் வெளியில் வந்து விட்டார்

குழந்தையை தூக்குவோம்,கொஞ்சிவோம் என்ற நினைப்பே அவருக்கு வரவில்லை,திரும்பி கூட பார்க்காமல் வெளியில் வந்து விட்டார்,பிறந்து ஒரு நாள் முழுமையாக ஆகவில்லை அந்த குழந்தை செய்த ஒரே பாவம்,பெண் குழந்தையாக பிறந்தது மட்டும் தானே,அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? தூக்கி கொஞ்ச வேண்டிய அப்பாவே கண்டுக் கொள்ளாமல் வெளியில் வந்ததில் ஆச்சிரியம் இல்லை,பல பெற்றோர்கள் பெண்குழந்தையை விரும்புவது இல்லை,வீட்டுக்கு வந்தப் பிறகும் ஆண் குழந்தை பிறந்து இருக்கலாம் என்ற நினைவாகவே இருந்தது,கடவுளிடம் கோபபட்டார்,உனக்கு எத்தனை நேத்திக் கடன் வைத்தேன் இப்படி பன்னிட்டியே என்று கடவுளை நொந்துக் கொண்டார் அவர்,சாப்பிட பிடிக்கவில்லை,போய் படுத்து விட்டார்,மறுநாள் காலையில் பவானிக்கு தகவல் அனுப்பி விட்டார்,அவளும் வந்து சேர்ந்தாள்,அம்மாவிற்கு குழந்தை பிறந்து விட்டதா ஐயா?ஆண் குழந்தையா? பெண் குழந்தையா என்று ஆர்வமாக கேட்டாள் பவானி,பொட்டபுள்ள பெத்து இருக்கா என்று சலிப்பாக சொன்னார் அவர்,பரவாயில்லை ஐயா வீட்டுக்கு சீதேவி தானே என்று அவள் ஆனந்தம் பட்டுக்கொண்டாள்,எத்தனை மணிக்கு அம்மாவை அழைத்திக்கிட்டு வருவீங்கள் ஐயா,ஆலாத்தி கரைத்து வைக்கனும் வீட்டுக்கு புது செல்லக் குட்டி வருவாள் என்றாள் அவள்,இப்போது அது மட்டும் தான் குறை என்று மனதில் ஓடியது முத்துலிங்கத்திற்கு,எதுவும் வாய்விட்டு வெளியில் சொல்லவில்லை

பவானி பரபரப்பாக வீட்டு வேலைகளை செய்தாள்,முத்துலிங்கத்திற்கு தோசையும் சட்னியையும் செய்து மேஜை மீது கொண்டு வைத்தாள்,ஆனால் அவருக்கு தான் சாப்பிட முடியவில்லை,என்னையா இப்போதே சிக்கனமா?பெண்குழந்தை பிறந்து விட்டது என்று ஒரு தோசையை மட்டும் சாப்பிடுறீங்கள் என்றாள் கிண்டலாக,இல்லை எனக்கு சாப்பிட முடியவில்லை என்று எழுந்து விட்டார் அவர்,காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள் பவானி,நேரம் செல்ல செல்ல பவானிக்கு இருப்பு கொள்ளவில்லை,ஐயா அம்மாவை போய் கூட்டிட்டு வரவில்லையா என்றாள் அவள்,போகனும் தற்போதே விடமாட்டார்கள் என்றார் அவர்,மருத்துவமனையில் வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து இருந்தாள் அமிர்தா,குழந்தை அழும் போது எல்லாம் அவளுக்கு எரிச்சலாக வந்தது,என் வயிற்றில் வந்து பிறந்து விட்டு என் உயிரை எடுக்குது,எத்தனை தடவைகள் தான் பால் கொடுப்பது,பாலை குடிப்பதும் பிறகு துணியெல்லாம் நனைத்து வைப்பதுமே வேலையாகப் போய்விட்டது,குழந்தை அழுதால்,பாலை கொடு கொடு என்று போதா குறைக்கு இங்கு வேலை செய்யும் தாதிமார்களிடம் வேறு ஏச்சி பேச்சி எல்லாம் வாங்க வேண்டியிருக்கு,இதற்கு உன்னிடம் குழந்தை வரம் கேட்டு கும்பிடாமலே இருந்து இருக்கலாம்,ஆண் குழந்தையாவது பெத்து எடுத்திருப்பேன் என்று அவளும் கடவுளை நொந்துக் கொண்டாள்

முத்துலிங்கம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்,யார் மீதோ உள்ள கோபத்தை கனவனிடம் காட்டினாள் அவள்,இவ்வளவு நேரம் சென்று,ஆடி அசைந்து வாறீங்கள் இரவு முழுவதும் கொஞ்சமும் தூக்கம் இல்லை எனக்கு,அழுது அழுது என்னுயிரை எடுத்து விட்டது என்றாள் அவள் வேண்டா வெறுப்பாக,சரி சரி விடு இப்போது வீட்டுக்கு போய்விடலாம் என்று ஆறுதல் படுத்தினார் அவர்,மூவரும் வீடு திரும்பினார்கள்,பவானி ஓடிவந்து ஆலாத்தி எடுத்தாள்,குழந்தையை அவள் கையில் வாங்கும் போது அவள் உடல் சிலிர்த்துப் போனது,எத்தனை குழந்தைகள் அவள் பெற்று இருந்தாலும்,முதல் முதல் பச்சிளம் குழந்தையை கையில் வாங்கும் போது அது ஒரு தனி இன்பம்,தன் வயிற்றில் பிறக்கவில்லை என்பது எல்லாம் இரண்டாம்பட்சம் தான்,அவள் அந்த குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டுப் போய் அமிர்தா அறையின் கட்டிலில் போட்டாள் பவானி,குழந்தை மெதுவாக கண்களை திறந்துப் பார்த்தது ஒரு நிமிடம் அந்த குழந்தையையை தன் கைகளால் வருடிவிட்டாள் எவ்வளவு பூ போல் இருக்கின்றது,சின்ன சின்னதாய் கை கால்களை வைத்துக் கொண்டு தொடுவதற்கே பயமாக இருக்கு அந்த குழந்தை நெற்றியில் மெதுவாக முத்தத்தை வைத்து விட்டு குழந்தையை விட்டு வருவதற்கு மனமில்லாமல் அறையை விட்டு வெளியில் வந்தாள் பவானி

அமிர்த்தா உடம்பிற்கு சூடாக தண்ணி ஊற்றிவிட்டாள் பவானி,அந்தி நேரம் நாளைக்கு தலைக்கு தண்ணி ஊத்திக்களாம் இல்லையென்றால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்றாள் பவானி,பரவாயில்லை இப்போதே தலைக்கு தண்ணி ஊத்திவிடு மருத்துவமனை வாடை எனக்கு என்னவோ போல் இருக்கு என்றாள் அமிர்தா,அதற்கு மேல் மீற முடியாதே சரியென்று தலைக்கும் சேர்த்து தண்ணியை ஊத்திவிட்டாள் அவள்,அதற்கிடையில் குழந்தை பசி தாங்காமல் அழுதது,பவானி பதறிப் போனாள்,அம்மா குழந்தை அழுகின்றது என்றாள் அவள்,அது பிறந்ததில் இருந்து அழுதுக்கிட்டு தான் இருக்கு,அதையே பார்த்துக் கொண்டு இருந்தால் நம்ம வேலையை எப்போது செய்வது,கொஞ்சம் அழட்டும் என்றாள் அமிர்தா,பவானி தலையை துவட்ட துண்டை எடுத்து கொடுத்து விட்டு அவசரமாக அறைக்குச் சென்று குழந்தையை அவள் கையில் தூக்கி கொண்டாள்,முத்துலிங்கம் யாருடைய குழந்தையோ அழுகின்றது,அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததுப் போல் உட்கார்ந்து இருந்தார்,ஆறுதலாக அமிர்தா மாற்றுத் துணியை மாற்றிக் கொண்டு வந்தாள்,தலை முடியில் தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்தது,அப்படியே முடியை அள்ளி முடிந்துக் கொண்டு,குழந்தையை வாங்கி பாலூட்டினாள் அமிர்தா,உனக்கென்ன அவ்வளவு அவசரம்,குளிக்க கூட விடாமல் என்று குழந்தையை அதட்டினாள் அவள்,பாவம் அந்த குழந்தை

தனக்கு பசி தீர்ந்தால் போதும் என்று பாலை குடித்தப்படியே தூங்கிவிட்டது,பவானி அவள் வீட்டுக்கு புறப்பட்டு விட்டாள்,அம்மா இரவு சாப்பாடு எல்லாம் செய்து வைத்து விட்டேன்,காலையில் வந்து விடுவேன்,வரும் போது ஏதாவது வாங்கிட்டு வரனுமா என்றாள் அவள்,இல்லை வாங்குவதற்கு ஒன்றும் இல்லை என்றாள் அமிர்தா,நாளைக்கு பாப்பாவிற்கு தண்ணி ஊத்தனும் தானே,நாங்கள் மூலிகை இலையெல்லாம் அவித்து குழந்தையை குழுப்பாட்டுவோம் என்று இழுத்தாள் அவள்,சரி எதையாவது கொண்டு வந்து அவித்து குளுப்பாட்டி விடு என்றாள் அமிர்தா,சரி அம்மா என்று அவள் சென்று விட்டாள்,அன்று இரவு குழந்தை இடைக்கிடை அழுதது,அமிர்தா தூக்க கலக்கத்துடன் பாலை கொடுத்து தூங்க வைத்தாள்,அடுத்த நாள் பவானி ஆடாதோடை இலை,நொச்சி இலை,துளசி என்று ஐந்து வகை இலைகளை பறித்து வந்து அவித்து அளவான சூட்டில் தண்ணியை கலந்து வைத்து விட்டு,நீங்கள் குளுப்பாட்டுங்கள் அம்மா என்றாள் அமிர்தாவிடம்,எனக்கு பயமாக இருக்கு நீயே குளுப்பாட்டி விடு என்று பவானி கையில் குழந்தையை கொடுத்தாள் அவள்,முதல் தண்ணி ஊத்துவதற்கு கொஞசம் நடுக்கமாக தான் இருந்தது பவானிக்கும்,தன் மூன்று குழந்தைகளையும் வளர்த்தவள் தான் அவள்,பல ஆண்டுகளுக்குப் பிறகு மறுப்படியும் குழந்தையை குளுப்பாட்ட கொஞ்சம் தயக்கமாக இருந்தது,குழந்தை சுகமாக எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் குளித்தது,பவானிக்கு அதுவே சந்தோஷமாக இருந்தது,அமிர்தா தண்ணி அள்ளி ஊற்றினாள்,பவானி குழந்தையை குப்புறப் போட்டு தலையை தட்டி விட்டாள்,நன்றாக துடைத்து அமிர்தா கையில் குழந்தையை கொடுத்த பவானி,அம்மா பசிக்கும்,பால் கொடுத்து படுக்கப் போட்டால் குழந்தை சுகமாக தூங்கும் என்றாள்,சரி நீ மற்ற வேலைகளை பாரு என்று கூறிவிட்டு,குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே சென்று விட்டாள் அமிர்தா

குழந்தையை தூங்க வைத்துவிட்டு வந்த அமிர்தாவிடம்,குழந்தைக்கு பெயர் வைக்கவில்லையா அம்மா என்றாள் பவானி,வைக்கனும் இனி தான் தேடனும்,ஆண்குழந்தை பெயர்களாக தேடி வைத்து இருந்தோம்,அது தான் பொட்ட புள்ளையா போய்விட்டதே,இனி மறுப்படியும் பெயரை தேடி ஏதாவது பார்த்து வைக்கனும் என்று சளிப்பாக சொன்னாள் அவள்,எந்த எண்ணில்,எந்த எழுத்தில் பெயர் வைக்கனும் என்பதையெல்லாம் பார்த்து தானே பெயர் வைக்கனும் என்றாள் பவானி,அப்படி பார்த்து இதற்கு பெயர் வைத்து நம்ம தலையெழுத்து என்ன மாறவா போகுது,ஏதாவது பெயர் இருந்தால் நீயும் பார்த்துக்கிட்டு வா என்றாள் அமிர்தா பவானியிடம்,உண்மையாகவா அம்மா என்றாள் ஆச்சிரியத்தோடு அவள்,ஆமாம் மறுப்படியும் நமக்கு பெயர் எல்லாம் தேடமுடியாது என்றாள் அமிர்தா,சரியம்மா நாளைக்கு தேடிக்கிட்டு வருகிறேன் என்று சந்தோஷமாக சொன்னாள் அவள்

அடுத்த நாள் பவானி வந்தவுடன்,அம்மா நான் பெயர் தேடிக்கிட்டு வந்தேன் புனிதா எப்படியம்மா இருக்கு என்றாள் அமிர்தாவிடம்,எப்படி இருந்தால் என்ன பெயர் சொல்லி கூப்பிட ஒரு பெயர் வேண்டும்,இதுவே நன்றாக தான் இருக்கு,ஐயாவிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு,இதையே வைத்து விடுவோம் என்றாள் அமிர்தா,சரியம்மா என்றாள் பாவானி குழந்தை பிறந்து பதினாறாவது நாள் பெயர் வைக்க ஏற்பாடு நடந்தது அமிர்தாவின் சகோதரிகள் பெற்றோர்கள் முத்துலிங்கத்தின் பெற்றோர்கள் மட்டும் வந்து இருந்தார்கள்,தம்பி தங்கை வரவில்லை இன்னும் சில சொந்தங்கள் மட்டும் வந்து இருந்தார்கள்,அமிர்தாவின் பெற்றோர்கள் என்னடி நீயும் ஓர் ஆண் குழந்தையை பெத்துக்காம பொட்ட புள்ளைய பெத்து வைத்திருக்க மூத்ததும் பொட்ட புள்ளை அதுவும் இல்லாமலே போய்விட்டது,இதுவும் இது மாதிரி பெத்திருக்க,கடைசி காலத்தில் நம்மை மாதிரி கஷ்டம் தான் படப் போற என்றார்கள் அவர்கள்,ஏன் உங்களை நன்றாக தானே பார்த்துக் கொள்கிறோம் என்றாள் அமிர்தாவின் தங்கை,அதன் பிறகு வாய் திறக்கவில்லை அமைதியாக இருந்துவிட்டார்கள் அவர்கள்

இதை எதையும் அறியாத அந்த குழந்தை அனைவரையும் தனது சின்ன கண்களில் உற்று உற்றுப் பார்த்தது,பவானியை காணும் போது மெதுவாக சிரித்தது அந்த குழந்தை,தன்னை எந்த நாளும் குளுப்பாட்டுவதாக பவானி படுத்தும் பாட்டை நினைத்து சிரித்ததோ தெரியவில்லை,புனிதா என்று பெயரை வைத்து விட்டார்கள்,அமிர்தா முத்துலிங்கம் வந்தவர்களை கவனித்துக் கொண்டு இருந்தார்கள்,பவானி இடைக்கிடை குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டாள்,வேலை இல்லாத நாட்களில் கூட அமிர்தா புனிதாவிற்கு பால் கொடுக்க சிரம்மபடுவாள்,இன்று குழந்தை பசிக்கு அழுவதையும் கணக்கெடுக்கவில்லை இதை நன்கு அறிந்த பவானி,குழந்தையை தூக்கி சமாதானம் செய்து அணைத்துக் கொள்ளும் போது தன்னை மறந்து தூங்கும்,மெதுவாக தொட்டிலில் போட்டுவிட்டு மற்ற வேலைகளை கவனிக்குக் போது சற்றென்று எழுந்து அழ ஆரம்பிக்கும்,புனிதாவை மறுப்படியும் ஓடி வந்து தூக்குவது பவானி தான்,அம்மா பாப்பா பசிக்கு அழுகிறது கொஞ்சம் பாலை கொடுங்கள் என்றாள் அமிர்தாவிடம்,எனக்கு இப்போது முடியாது,இத்தனை சொந்தங்கள் வந்து இருக்கும் போது,அவர்களை கவனிக்க வேண்டும்,நீ ஒன்னு பன்னு பால்மாவும் போத்தலும் வாங்கி வைத்திருக்கேன்,பாலை ஊற்றி புனிதாவிற்கு கொடுத்து விடு என்று கூறி விட்டு அவள் சென்று விட்டாள்

பவானிக்கு எதுவும் புரியவில்லை,பிறந்து இரண்டு வாரங்கள் ஆகும் குழந்தைக்கு புட்டிப் பாலா ஆச்சிரியமாக இருந்தது அவளுக்கு,புனிதா பசி தாங்காமல் அழுதாள்,இதற்கு மேல் இந்த குழந்தை தாங்காது,பாவம் என்று உடனே பால்மாவை கொதிநீரில் போட்டு நன்றாக கரைத்து வடிகட்டி,பாலை நன்றாக ஆத்தி,பால் புட்டியில் போட்டு புனிதாவை மடியில் வைத்து பாலை கொடுக்க ஆரம்பித்தாள் பவானி,முதலில் குடிக்க தெரியாமல் அழுத குழந்தை,பிறகு மெதுவாக உறிஞ்சி குடிக்க பழகி கொண்டது,இனிமேல் தாயிடம் தாயபால் கிடைக்காது என்பதை அறியாத குழந்தை,குடித்து முடித்தவுடன் கைகால்களை அசைத்து பவானியைப் பார்த்து சிரித்தது,பவானி குழந்தை நெற்றியில் அழுத்தமாக முத்தத்தை பதித்தாள்,சிறிது நேரத்தில் அமிர்தா பவானியை போய் சாப்பிட சொன்னாள்,அமிர்தா கையில் குழந்தையை கொடுத்து விட்டு பவானி சாப்பிட போனாள்,வெளியில் இருந்து பகல் உணவை ஓடர் பன்னி இருந்தார்கள்,அதனால் பவானிக்கு வேலை குறைவாகவே இருந்தது சாப்பிட்ட தட்டுகளையெல்லாம் கழுவி வைத்து விட்டு எஞ்சியிருந்த உணவையெல்லாம் பாத்திரங்களில் போட்டு மூடி எடுத்து வைத்தாள்,அமிர்தாவின் குடும்பம் மட்டும் அன்று தங்கி விட்டு அடுத்த நாள் போவதாக முடிவெடுத்தார்கள்,மற்றவர்கள் அனைவரும் புறப்பட்டு சென்று விட்டார்கள்,பவானி அமிர்தாவிடம் இரவு சாப்பாடு எதுவும் செய்து வைக்கனுமா என்று கேட்டாள்,வேண்டாம் குழம்பு எல்லாம் இருக்கு,தோசை மாவு இருக்கு தானே,ஊற்றி கொடுத்து விடலாம்,எல்லோருக்கும் காப்பி போட்டு கொடுத்து விட்டு,கொஞ்சம் துணி கிடக்கு,அதை அலசி போட்டுவிட்டு நீ புறப்படு,போகும் போது குழம்பு கொஞ்சம் எடுத்துக்கிட்டு போ மறக்காமல் என்றாள் அமிர்தா,சரியம்மா என்று பவானி அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு புறப்பட்டு விட்டாள்

நாட்கள் வேகமாக ஓடியது,தாய்பால் குடிக்காமல் புட்டிபால் மட்டுமே குடித்து வளர்ந்த புனிதா எப்போதும் பவானியிடம் ஒட்டிக் கொள்வாள்,அமிர்தாவிற்கு அது வசதியாகவே இருந்தது,தனக்கு தொல்லை இல்லாமல்,யாரிடமாவது குழந்தை வளர்ந்தால் போதும் என்ற எண்ணம் அவளுக்கு,முத்துலிங்கத்திற்கோ வீட்டில் ஒரு குழந்தை இருக்கு என்ற எண்ணம் துளியும் இல்லை,தனக்கும் குழந்தைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதுப் போல் வேலைக்கு ஓடிக் கொண்டு இருந்தார் அவர்,அந்த வீட்டில் பவானி மட்டுமே எந்த வேறுபாடும் இல்லாமல் குழந்தையை நன்றாக கவனித்துக் கொண்டாள்,அதுவும் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை,தற்போது நான்கு வயதாகும் புனிதாவிற்காக பணம் செலவு செய்து வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ள விரும்பவில்லை இருவரும்,இதை நன்கு அறிந்த பவானி.மனதை சமாதானம் படுத்திக் கொண்டு வேறு வேலையை தேடிக் கொண்டாள்,புனிதா பாலர் பள்ளிக்கு செல்வதற்கு தொடங்கினாள்,அழுது ஆர்பாட்டம் பன்னும் மகளை,அமிர்தா அதட்டி பாடசாலையில் விட்டு விட்டு வந்து விடுவாள்,நாட்கள் செல்ல அந்த அழுகையெல்லாம் நிறுத்திவிட்டு சந்தோஷமாக பாடசாலைக்கு போக ஆரம்பித்து விட்டாள் புனிதா

அமிர்தா மகளிடம் சிறு சிறு வேலைகள் வாங்க ஆரம்பித்தாள்,புனிதாவிற்கு அது சந்தோஷமாகவே இருந்தது,அம்மாவிற்கு உதவி செய்து தருகிறேன் என்று அவளாகவே போய் நிற்பாள்,சிறு குழந்தை படிக்க அவசியம் இருக்கவில்லை அப்போது,நாட்கள் செல்ல செல்ல,வாசலுக்கு தண்ணி தெளித்து,கோலம் போட்டு,வீட்டை பெருக்கி,துணிகளை காயவைத்து விட்டு தான் பாடசாலைக்கே போகவேண்டும் என்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது,மாலை நேரத்திலும் காய்ந்த துணிகளை மடித்து வைக்க வேண்டும்,காப்பி போடனும்,காய்கறிகளை நறுக்கி தரவேண்டும் என்பது அமிர்தாவின் கட்டளை,முடியாது என்று வாய் திறக்க முடியாது,அப்பா முத்துலிங்கத்திடம் இவள் வேலை எதுவும் செய்து தருவதில்லை என்று அமிர்தா ஒரு வார்த்தை சொன்னால் போதும்,அவர் மேலும் கீழும் குதித்து,வீட்டை இரண்டு படுத்தி விடுவார்,அதைவிட வேலைகளை செய்து விடுவதே மேல் என்று நினைப்பாள் புனிதா,மகளுக்கு காய்சல் தலைவலி என்றால் கூட பதறாத பெற்றோர்கள்,மாத்திரை போடு சரியாகிவிடும் என்று அலட்சியமாக கூறுவார்கள்

புனிதா வயதுக்கு வந்து விட்டாள்,அதையே தொல்லையாக நினைத்தாள் அமிர்தா,வேலை வேலைக்கு சமைத்து போடனும்,தலைக்கு தண்ணி ஊத்தனும்,பொட்ட புள்ளையாக பிறந்து நமக்கு தொல்லை தருகிறது,இதுவே ஆண் பிள்ளையாக இருந்தால்,எவ்வளவு நன்றாக இருக்கும்,எவ்வளவு தான் பொட்ட பிள்ளைய விழுந்து விழுந்து கவனித்தாலும்,நாளைக்கு நம்மையா தாங்கபோகுது,கட்டி வேறொருத்தன் வீட்டுக்கு தானே போகும்,இதற்கு ஏன் கஷ்டப் படனும் என்ற நினைப்பு அமிர்தாவிற்கு,முத்துலிங்கத்திற்கு வீண் செலவு என்ற கவலை,இதில் பாவப்பட்ட ஜென்மம் புனிதா,நாட்கள் செல்ல செல்ல அவளுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்தது,பெற்றோர்கள் தன்னை சுமையாக நினைக்கின்றார்கள் என்பது,பாடசாலையில் மற்ற பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் பற்றி பெருமையாக பேசும் போது,புனிதா அமைதியாக இருப்பாள்,அம்மா வேலைகாரியை விட கேவலமாக நடத்துவதையும்,அப்பா தனக்கு மகள் இருப்பதுவே செலவாக நினைப்பதையும் வெளியில் சொல்ல முடியாதே,ஏதோ படிக்க வைக்கின்றார்கள்,அது போதும்,அதை விட வேறு எதுவும் அவர்கள் இடத்தில் எதிர்பார்க்க முடியாது என்பது அவளுக்கு தெரியும்,பரதநாட்டியம் கற்றுக் கொள்கிறேன் என்றாள் சிறுவயதில்,அது எதுவும் தேவையில்லை,படித்தால் மட்டும் போதும் என்றார்கள் அவர்கள்,அதனால் வீட்டில் எதையும் ஆசைப்பட்டு கேட்பதும் இல்லை,பென்சில் பேனா முடிந்துவிட்டால் கூட கேட்பதற்கு பயம் அவளுக்கு,அதற்கும் கோப்படுவார்கள் பெற்றோர்கள்,புனிதாவின் ஆசைகள் எதுவும் நிறைவேறவில்லை என்று தான் கூறவேண்டும் கடைசியாக அவள் தேர்ந்தெடுத்த படிப்பை கூட அவள் இஷ்டத்திற்கு படிக்க விடவில்லை அதை படித்தால் மாப்பிள்ளை அமைவது எல்லாம் சிர்மமாக இருக்கும்,நாங்கள் தெரிவு செய்யும் பாடங்களை எடுத்துப் படி என்றார்கள் அவர்கள்

அதற்கும் தலையை ஆட்டினாள் அவள்,பட்டப் படிப்பை முடிக்கும் முன்பே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் புனிதா வீட்டில்,மகளை இவ்வளவு படிக்க வைத்திருக்கோம்,இதற்கு மேல் சீதனம் எல்லாம் கொடுக்க மாட்டோம் என்று ஆரம்பித்தவர்கள் எந்த மாப்பிள்ளையும் அமையாத காரணத்தினால்,அவர்கள் கொள்கையை கொஞ்சம் மாற்றிக் அமைத்துக் கொண்டார்கள்,படிப்பை முடித்தவுடன் சேமிப்பில் இருந்த தொகையில் கொஞ்சத்தை செலவு செய்து புனிதாவை தமணுக்கு கட்டி வைத்து விட்டு அத்துடன் அவர்கள் கடமைகள் முடிந்து விட்டது என்று நிம்மதி பெருமூச்சி விட்டார்கள்,புனிதாவிடம் மாப்பிள்ளை பார்க்கின்றோம்,கட்டிக்கனும் என்று தகவல் மட்டுமே சொல்லப்பட்டது,அதற்கும் வாய்திறக்கவில்லை அவள்,இந்த வீட்டில் இருப்பதை விட எவனிடமாவது கழுத்தை நீட்டி போய்விடுவது நல்லது என்று தோன்றியது,அதனால் அவன் எப்படி பட்டவன் என்பதையெல்லாம் அவள் ஆராய போகவில்லை,தமன் மனைவி ஆகிவிட்டாள் புனிதா,அவன் குடும்பத்தில் பெற்றோர்கள்,தமணுடைய ஒரு அண்ணன் அண்ணி ஒரு ஆண் குழந்தை என்று கூட்டு குடும்பமாக இருந்தார்கள்

புனிதா யாரிடமும் அதிகமாக பழகமாட்டாள் எப்போதும்,அவளுடைய அறையை விட்டு வெளியில் வருவதும் குறைவு,அதற்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டது,என்னம்மா எந்த நேரமும் அறையில் அடைந்து என்னத்தை பன்னுற,கொஞ்சம் வெளியில் வந்து சகஜமாக பழகுவதற்குப் பாரு என்றார் அவளின் மாமியார்,புனிதா அதற்கு தலையை மட்டும் ஆட்டினாள்,தமண் இதையெல்லாம் பெரிது படுத்தவில்லை அவன் வீட்டில் இருப்துவும் குறைவு,காலையில் வேலைக்கு ஓடும் அவன்,மாலையில் வந்தும் லெப்டாப்புடன் உட்கார்ந்துக் கொள்வான்,இவன் ஏன் திருமணம் செய்தான் என்ற சந்தேகம் அடிக்கடி புனிதாவிற்கு ஏற்படும்,பணத்திற்காக ஓடுறானா?இல்லை என்றால் மன அமைதிக்காக ஓடுறானா? என்று எதுவும் புரியவில்லை அவளுக்கு,அவளிடம் கதைப்பதுவும் குறைவாகவே இருந்தது,அவளின் பெற்றோர்களும் அவளிடம் கலகலப்பாக கதைத்தவர்கள் இல்லை என்பதால் அவளுக்கு இதுவும் பெரிதாக தெரியவில்லை,தமண் குடும்பத்துடனும் கேட்டதிற்கு மட்டுமே பதில் கூறும் புனிதா அதிகளவு பேச்சை வளர்த்துக் கொள்வதற்கு விரும்புவது இல்லை,அவள் வீட்டில் எதிலும் தலையிடுவது இல்லை,என்பது மற்றவர்களுக்கு அது பெரிதாக தெரிந்தது,அவளை அப்படி தான் வளர்த்து இருக்கார்கள் என்பது மற்றவர்களுக்கு தெரிய வாய்பில்லையே

நாட்கள் சென்றது,தமண் ஆபிஸ் பக்கம் வீடு பார்த்து போவதற்கு யோசித்தான்,புனிதாவிடம் இதை பற்றி எதுவும் கூறவில்லை,ஆனால் வீட்டில் உள்ளவர்கள் புனிதாவை தான் குறையாக சொன்னார்கள்,அறையில் இருந்தே புருஷனை கைக்குள் போட்டுக் கொண்டு தனிக் குடித்தனம் போவதற்கு ஏற்பாடு பன்னிவிட்டாள்,மகனை எங்களிடம் இருந்து பிரித்து விட்டாள் என்று அவள் மீது கோபபட்டார்கள் தமண் பெற்றோர்கள்,இருவரும் தனிக் குடித்தனம் போய் விட்டார்கள்,தமணிடம் எந்த மாற்றமும் இல்லை,அதே வேலை,அதே ஓட்டம் என்று தான் இருந்தான்,ஒருத்தி காலையில் இருந்து வீட்டில் தனியாக இருக்கின்றாள்,அவளை வெளியில் கூட்டிட்டு போவோம்,இல்லை என்றால் மனம் விட்டு பேசுவோம் என்ற நினைப்பே தமணுக்கு இல்லை,ஏதோ கட்டி விட்டோம் கடமை முடிந்து விட்டது என்று அவன் இருந்தான்,கட்டில் சுகத்திற்கு மட்டும் அவள் தேவைப்பட்டாள்,அதற்கு மறுப்பு சொல்வதில்லை அவள்,கழுத்தில் தாலி என்று இருக்கும் போது இதுவும் ஒரு கடமை என்று தான் அவளுக்கு நினைக்கத் தோன்றும்,போட்ட வேஷத்திற்கு நடித்து தானே ஆகவேண்டும் விருப்பமோ,விருப்பம் இல்லையோ அதை நன்கு அறிந்து வைத்திருந்தாள் புனிதா

அதன் விளைவு தாய்மை என்ற பட்டம் மட்டுமே அவளுக்கு கிடைத்தது,இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தாள்,இரட்டை குழந்தைகள் ஆண் பெண் என்று ஒரே தடவையில் அது கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது,அவளின் பெற்றோர்கள் மகள் தாய்மை அடைந்து இருக்காள் என்று வந்து தாங்கவும் இல்லை,தமண் குடும்பமும் வந்து பார்க்கவும் இல்லை,தமணுக்கு இது எல்லாம் பெரிதாக தெரியவும் இல்லை,புனிதாவிற்கு இது எதுவும் ஆச்சிரியமாகவும் இல்லை,மகளுக்கு ஆண் குழந்தையும் பிறந்திருக்கு என்றவுடன் மட்டும் பெற்றோர்கள் வந்தார்கள் பேரக் குழந்தைகளை பார்ப்பதற்க,வந்தவர்கள் ஆண் குழந்தையை மட்டும் தூக்கி கொஞ்சுவது,அவன் அழுதால் மட்டும் புனிதாவை பாலை கொடு பாலை கொடு பசி தாங்க மாட்டான் என்று அவளை அதட்டுவதும்,பெண் குழந்தையை தூக்குவதும் இல்லை,கொஞ்சுவதும் இல்லை,அழுதால் கூட கணக்கெடுப்பதும் இல்லை என்று இருந்தாரகள்,எதுவும் சொல்லக் கூடாது என்று அமைதியாக இருந்தாள் புனிதா,அவர்கள் அடிக்கடி வர ஆரம்பித்தார்கள்,வரும் போது எல்லாம் இப்படி தான் நடந்துக் கொண்டார்கள்,புனிதாவிற்கு அது சற்றும் பிடிக்கவில்லை ஒரு நாள் பெற்றோர்களிடம் நேரடியாகவே கூறி விட்டாள்,நான் குழந்தைகளை ஆண் பெண் என்று வித்தியாசப் படுத்தி வளர்க்க விரும்பவில்லை,இரண்டும் என் குழந்தைகள்,பத்து மாதம் சுமந்து ஆசையாக பெற்றெடுத்தேன்,பாராபட்சம் காட்டி குழந்தைகளை நீங்கள் பார்க்காதீங்கள்,நான் பெண் குழந்தையாக பிறந்தது என் தவறும் இல்லை,என் மகள் பெண் குழந்தையாக பிறந்தது அவள் தவறும் இல்லை,கடவுள் கொடுத்தது என்று கூறியதும புனிதாவின் பெற்றோர்களுக்கு அது பிடிக்கவில்லை,அவர்கள் வருவதை குறைத்துக் கொண்டார்கள்,புனிதா அதற்காக கவலை படவும் இல்லை,அவள் இரண்டு குழந்தைகளையும் பிரித்து பார்க்காமல் வளர்த்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *