என்றும் நீ எங்கள் செல்ல மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2021
பார்வையிட்டோர்: 4,925 
 

பார்த்திபனுக்கும், வசந்திக்கும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை பாக்கியம் கிட்டவில்லை அவர்கள் பல டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார்கள் . காரணம் அறிய பல பரி சோதனைகள் செய்ய வேண்டும் செலவாகும் என்றார்கள் . குழந்தை கிடைக்க சிலர் இனத்தவர்கள் சொன்னார்கள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று அவர்கள் ஏறி இறங்காத கோவில் கள் இல்லை /எல்லாம் செய்தாகிவிட்டது குழந்தை அவர்களுக்கு பிறக்கவில்லை என்ற மனக்கவலை அவர்களை வாட்டியது ஒரு பிரபல மகப்பேறு டாக்ரிடம் அவர்கள் ஆலோசனை கேட்டார்கள். பல பரிசோதனைகளுக்குப் பின் அவர் சொன்னார் வசந்தின் கருப்பை கருத்தரிக்க கூடிய நிலையில் இல்லை பெண்களில் கருவுறாமைக்கான பெரும்பாலான நிகழ்வுகள் முட்டைகளை உற்பத்தி செய்வதில் உள்ள பிரச்சனைகளால் விளைகின்றன. முதன்மை கருப்பை பற்றாக்குறையில், கருப்பைகள் இயற்கையான மாதவிடாய் முன் செயல்படுவதை நிறுத்துகின்றன. பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமில்கருப்பைகள் தொடர்ந்து முட்டையை வெளியிடாமல் இருக்கலாம் ஆனால் பார்த்திபனின் விந்து இன்னும் சக்தி உள்ளதாக இருக்கிறது” டாக்டர் காரணம் சொன்னார்.

“இந்த நிலையில் எப்படி நாங்கள் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆகலாம்” என்று பார்த்திபன் தம்பதிகள் கேட்டார்கள்

“நீங்கள் ஒரு வாடகைத் தாயின் முட்டை மூலமும் உங்களுடைய கணவனுடைய விந்துவையும் பாவித்து ஒரு குழந்தையை உங்களுக்கு உருவாக்கலாம்” என்று டாக்டர் ஆலோசனை சொன்னார். பார்த்திபன் வசதியுள்ளவள் அதனால் தங்களுக்கு குழந்தை அவசியமென்று தீர்மானித்து ஒரு வாடகைத் தாயினுடைய முடையையம் பார்த்திபனின விந்தையும் பாவித்து குழந்தையைபெற தீர்மானித்தார்கள். அந்த குழந்தையை வடகைத் தாயே சுமப்பாள்

***

அந்த மருத்துவ முறையில் இரண்டு வருடங்களுக்குப் பின் பார்த்திபன் தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தைபிறந்தது ஆனால் குழந்தையை பெற்றெடுத்தது ஒரு வாடகை தாய், பிறந்த ஆண் குழந்தை தோற்றத்தில் பார்த்திபன் போலவே இருந்தது அது வசந்திக்கு மனதில் ஆறுதலை கொடுத்தது . பிறந்த குழந்தையை தன் வயற்றில் சுமக்கவிடாலும் அவன் தங்கள் மகன் என்று தன் மனதை தேற்றிகொண்டாள் வசந்தி.

பிறந்த குழந்தைக்கு கார்த்திகேயன் என்ற பெயர் வைத்தார்கள்

அவனைப் கட்டியப் பிடித்து முத்தம் கொடுத்து, வசந்தி பாடினாள் அவனை தூங்க வைக்க.

“ஆராரோ ஆரரிரோ
ஆரடிச்சா ஏனழுதாய் என் மகனே
அடிச்சவரை சொல்லியழு
கிள்ளியவரை சொல்லிவிடு
தொட்டாரைச் சொல்லியழு
தொட விடாமல் நான் காப்பேன்
அத்தை அடிச்சாளோ
அன்னமிட்ட கையாலே
உன் மாமி அடிச்சாளோ
மருந்து போடும் கையாலே
பாட்டி அடிச்சானோ
அகப்பை தண்டாலே
மாமா அடிச்சானோ
மல்லிகைப்பூச் செண்டாலே
யார் ஆடிசவர் உன்னை
சொல்லடா என் செல்லமே
உன்மேல என்றென்றும் என்பாசம்
நான் சாகும் வரை இருக்குமடா
எங்கள் குலம் பெயர் துலங்க,
வந்து பிறந்தாய் செல்ல மகனே
உன் மேல் உள்ள என் பாசத்தை
எவராலும் மாற்ற முடியாதடா.
நான் வாழும் வரை
நீ என் மகனடா”

***

குழந்தை பிறந்த மூன்று மாதத்தில் வசந்தி சொன்னாள் “கார்த்திக் நீ என் மகன். உன் அப்பாவைப் போலவே இருக்கிறாய்”

கார்த்திக்கும் தன் பொக்கை வாயினால் மூன்று மாதத்தில் சிரித்து அவர்களை கவர்ந்தான்.

“பார்த்தீர்களா அத்தான் உங்கள் மகன் எப்படி பிறந்தான் என்பது மட்டும் ஒருபோதும் இவனுக்கு சொல்லக்கூடாது . தெரிந்தால் இவனுக்கு எங்கள் மேல் உள்ள பாசம் போய் விடும்”.

அதுக்கு பார்த்திபன் ஒப்புக்கொண்டன்.

கார்த்திக்கு மூன்று வயது ஆனதும் வீட்டில் உள்ள சாமான்களைக் கீழே போட்டு உடைத்தான் புத்தகங்களை கிழித்தான் சுவர்களிலும் சித்திரம் அ வரையத் தொடங்கினான். வசந்தி தடுக்கவில்லை.

அதை பார்த்த வசந்தி சொன்னாள் “நீ என்ன செய்தாலும் நீ எங்களுடைய ஒரே மகன் அதுவும் செல்வ மகன் “என்று சொல்லி அவன் செய்யும் குறும்புத்தனங்கள் வசந்தி பார்த்து ரசித்தாள்.

கார்த்திக் பள்ளிக்கு தொடங்கினாள் பாடசாலைக்கு கொண்டு போய் வருவது வசந்தி தலைமை ஆசிரியர் பார்த்திபனையும் வசந்தியையும் கூப்பிட்டு சொன்னார்.

“உங்கள் மகன் படிப்பில் ககெட்டிக்காரன், வகுப்பில் முதல் மாணவன்”

அதுக்கு வசாந்தி சொன்னாள் “மாஸ்டர் யாவன் என்களின் ஒரே மகன், இவன் அன் கணக்கரை பூல் புத்திசாலி .அவனின் பார்ப்வையை பாருங்கள் சரியாக் என் அத்தானை போன்ற பார்வை, கார்த்திக்கின் குரல் என் அத்தானின் குரல் போன்றது”

“என்ன செலவானாலும் எங்கள் மகனை படிப்பித்து டாக்டராக்குவது எங்கள் பொறுப்பு”

கார்த்திக் நடக்கும் போல் சிரிக்கும்போது பார்க்கும்போது ஓடும்போது இதையெல்லாம் பார்த்துவிட்டு வசந்தி தன் கணவனுக்கு சொல்லுவாள் “அத்தான் பார்த்தீர்களா எங்கள் மகன் சரியாக உங்களை உரிந்து வைத்திருக்கிறன். நடையிலும், பார்வையிலும், சிரிப்பிலும், அசல் நீங்கள்தான்”

தன் கணவனின் பிரதிபலிப்பு மகனில் இருபத்தை அவள் அடிகடி சொல்லிக் காட்டுவாள் ஆனால் ஒரு கார்த்திக்கை தன்னோடு ஒரு போதும் ஒப்பிட்டு வசந்தி சொன்னதில்லை அவளுக்கு தெரியும் அவன் தன் கரு முட்டையில் இருந்து உருவானவன் இல்லை அந்த கவலை அவளின் மனதை பாதித்தது அதை வெளிக்காட்டால் மகனை கனவனுடன் ஒப்பிட்டு சொல்லி தன் மனதை திருப்தி படுத்திக் கொள்வாள்.. மகன் மேல் உள்ள பாசத்தின் மூலம் அந்தக் குறையை நிவர்த்தி செய்தாள்.

ஆனால் தன்னில் உள்ள குறையை நினைத்து அவளின் மனதுக்குள் எப்போதும் ஒரு ஆதங்கம் இருந்து கொண்டே இருந்தது.

***

கார்த்திக் வளர்ந்து படித்து டாக்டர் ஆனான்.

அதுவும் ஒரு மகட் பேறு டாக்டர் ஆனான்.

ஒரு நாள் கார்த்திக் வசந்தியிடம் கேட்டான் “அம்மா நீ எனக்கு ஒருஉண்மையைச் சொல்ல் வேண்டும்”

வசந்திக்கு மகன் என்ன கேட்கப் போகிறான் என்ற பயம் மனதுக்குள் வந்து விட்டது , அனால் அதை காட்டிக் கொள்ளமல் சொன்னாள்

“என்ன கேட்கப் போகிறாய் மகன்?”

“நான் உன் கருப்பையில் உருவாகி நீ சுமந்து பிறந்தவனா?”

“ஏன் கார்த்திக் இப்படி கேட்கிறாய் நீ எங்கள் மகன் தானே உன்னை பார்த்தால் உன் அப்பாவைப் போலவே இருக்கிறாய் நடையிலும் சிரிப்பிலும் புத்தியிலும்”

“அது கிடக்கட்டும் அம்மா நீ எதையோ ஒன்றை மறக்கிறாய் நான் உன் வயிற்றில் உண்மையாக வளர்ந்து நீ என்னை பெற்றுவளா?”

வசந்தி பதில் சொல்லவில்லை.

“ஏன் நீ பதில் சொல்ல தயங்குகிறாய்?”

“ஏன் காரத்திக் இந்த திடீர் கேள்வி உன்னிடம் இருந்து வருகிறது”

“என்னை மருத்துவக் கல்லூரியில் படிப்பித்த என் மருத்துவ பேராசிரியர் உண்மையைச் சொல்லிவிட்டார். அவர் அப்போது உங்களுக்கு குழந்தை பெறுவதற்கு வழி சொன்னவர். இதுவரை அந்த ரகசியத்தை அவர் உங்களுக்கு மட்டும் தெரிய வைத்திருந்தார். ஆனால் நான் ஒரு வாடகை தாயின் கருப்பை முட்டையில் இருந்தும் என் அப்பாவின் வித்துவில் இருந்தும் நான் உருவானேன், அந்த வாடகை தாய் யார் என்று எனக்கு சொல்ல மறுத்து விட்டார். ஆனால் உங்களுக்கும் அப்பாவுகும் நிட்சயம் தெரியும் காரணம், அவ என்னை பிரசிவிக்கும் போது உங்களுக்கும் அபபாவுக்கும் நட்சயம் தெரிந்து இருக்கும் நீங்கள் சொல்லாவிட்டால் பரவாயில்லை. இது உங்கள் கருப்பையில் இருந்த பிரச்சனையால் உங்களால் கருத்தரிக்க முடியவில்லை, ஆகவே ஒரு வாடகைத்தாய் வைத்து அப்பாவின் விந்துவுடன் அந்த வாடகை தாயின் முட்டையுடன் சேர்த்து என்னை உருவாக்கினீர்கள்”.

“ஏன் உன் பேராசிரியர் டாக்டர் அந்த தாயின் பெயரை சொல்லவில்லையா?”

“இல்லை அம்மா அது மருத்துவத்துறையில் வாக்குறுதி சத்தியம் அதனால் அவர் எனக்கு சொல்லமாட்டார்”

“கார்த்திக்! நானும் உன் அப்பாவும் இதுவரை உனக்குச் சொல்ல ஒன்றைச் சொல்லுகிறேன். உன்னை வயிற்றில் சுமந்த தாய் இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது”

“என்ன சொல்லுகிறீர்கள். என்னை வயிற்றில் சுமந்த தாய் இறந்து விட்டாளா?. அப்படியானால் நான் ஏன் அவளுக்கு என் கடமைகளைச் செய்ய வில்லை?”

“அதைப் பற்றி யோசிக்காதே. அவ உன்னை பிரசவிக்கும் முன்பே ஒரு மகன் இருக்கிறான் அவன் இப்போது இங்கே இல்லை அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டான்”

அதைக்கேட்ட சற்று நேரம் அமைதியான கார்த்திக் சசொனான் “வயிற்றில் சுமந்த அந்த தாயின் பெயரையாவது சொலுங்கள் அம்மா”.

சரி என்னை நீ வற்புறுத்தி கேட்தால் நான் சொல்லுகிறேன் உன் மனதில் பதிய வைத்து விடாதே அவளின் பெயர் சாரதா”

“நன்றி அம்மா நான் என்ன சுமந்த தாயின் மரணத்திற்கு போகாவிட்டாலும் அவளுக்கு நான் ஆண்டு திவசம் செய்திருக்க வேண்டும்” .

“கார்த்திக்! அதைப் பற்றி நீ கவலைப்படாதே அவ மறைந்த தினம் நீவிரதமிருந்து உணவு அருந்தினார். ஆனால் நான் உனக்கு அதை சொல்லவில்லை வேறு ஒரு காரணத்தைச் சொல்லி விட்டேன். என்னை மன்னித்து விடு” என்றாள் வசந்தி.

“நீங்கள் இருவரும் சரியான புத்திசாலிகள் தானம்மா. ஆனால் ஒன்று சொல்கிறேன் உங்கள் இருவருக்கும் எனக்கு உங்கள் இருவர் மேல் உள்ள பாசம் ஒருபோதும் மறையாது. நீங்கள் இருவரும் என்னை பாசத்துடன் வளர்த்து படிப்பித்து டாக்டராக்கியவர்கள்” என்றான் கார்த்திக்.

அவனை இறுக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள் வசந்தி. பார்த்திபன் கண் கலங்கிப் போனான்..

*யாவும் உண்மை கலந்த புனைவு*

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *