எனக்குக் கல்யாணமே வேணாம்… நான்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 6,725 
 
 

செல்வம் எண்ணூர் ‘பவுண்டரியில்’ ஒரு ‘மெக்கானிக்கா’க வேலை செய்து வந்தான். பல்லாவரத்தில் இருந்து காலை ஆறு மணிக்கெல்லாம் நாஷ்டா பண்ணி விட்டு,கையில் பகலுக்கு சாப்பாடும் எடுத்துக் கொண்டு போய் வந்தான்.செல்வம் வேலை முடித்து வீட்டுக்கு வந்து சேரும் போது மணி ஏழு அடித்து விடும்.

பிரவசத்திற்காக மணைவி ராஜாத்தியை அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ஹாலில் காத்துக் கொண்டு இருந்தான் செல்வம்.‘கடவுளே ராஜாத்திக்கு சுகப் பிரசவம் ஆக வேணுமே’ என்று தங்கள் குல தெய்வமான மைலம் முருகக் பெருமானை வேண்டிக் கொண்டு அங்கு காலியாய் இருந்த ஒரு சோ¢ல் கண்ணை மூடிக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தான் செல்வம்.ராஜாத்தியை சேர்த்து ஒரு மணி தான் ஆகி இருக்கும்.’லேபர் வார்ட்டில்’ இருந்து வெளியே வந்த ஒரு நர்ஸ் “உங்க சம்சாரத்திற்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருக்குங்க.இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு,நீங்க உங்க சம்சாரத்தையும்,குழந்தையையும் வந்து பாக்கலாம்” என்று சொன்னதும்,செல்வத்துக்கு உடம்பில் பாதி தெம்பு குறைந்தது போல இருந்தது.

‘தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்’ என்று ரொம்ப ஆசையாய் இருந்தான் செல்வம். ஆனால் அவனுக்கு இப்போ ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பது வேதனையைக் கொடுத்தது.

’முறைப் பொண்ணு ராஜாத்தியே கட்டிக்கடா.அவ ரொம்ப நல்லப் பொண்ணு.நான் சின்ன வய சிலே இருந்து அவளே பாத்து இருக்கேன்.நம்ம உறவு விட்டுப் போவக் கூடாதுடான்னு’ன்னு சொன் னதாலே தானே,அவ நல்ல கருப்பா இருந்தா கூட பரவாயில்லே,அம்மா சொன்னதுக்கு மா¢யாதை குடுக்கணும்ன்னு தானே நான் ராஜாத்தியே கல்யாணம் கட்டிக் கிட்டேன்.கொஞ்சம் வெள்ளையா இருக்கிற பொண்ணு வேணும்ன்னு நான் ஆசைப் பட்டேன்.இப்போ பொறந்து இருக்கும் குழந்தையா வது கொஞ்சம் கலராப் பொறந்து இருக்கான்னு போய் பாக்கலாம்.இந்த குழந்தை பெரியவளா ஆனா, அவளைக் கல்லாணம் கட்டிக் குடுக்கும் போது நாம ரொம்ப கஷ்டபடாம இருக்கலாமே.இப்ப எல்லாம் பொண்ணே பாக்க வர ஆம்பளே பசங்க எல்லாம் பொண்ணு வெள்ளையா இருக்கணும்ன்னு தானே ஆசை படறாங்க.கடவுளே,என்னுடைய இந்த ஆசையையாவது,நிறை வேத்தி வைப்பா’ என்று யோஜ னைப் பண்ணிக் கொண்டு இருக்கும் போது, நர்ஸ் வந்து ”நீங்க உள்ளே போய் உங்க குழந்தையே பாக்கலாங்க” என்று சொல்லி விட்டுப் போனாள்.

உடனே செல்வம் ‘லேபர் வார்டுக்கு’ உள்ளே போய் குழந்தையையும் தன் மணைவியையும் பார்க்கப் போனான்.‘பெட்டில்’ மணைவி ராஜாத்தி அழுதுக் கொண்டு இருந்தாள்.
செல்வம் அவளை தேத்தறவு பண்ணி விட்டு,பக்கத்தில் இருந்த ‘ஸ்டீல்’ தொட்டிலில் கண் ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்த குழந்தையை மெல்ல பார்த்தான்.
குழந்தை அம்மாவைப் போலவே நல்ல கருப்பாய் இருந்தது.குழந்தை முகத்தைப் பார்த்த செல்வத்துக்கு வானமே இடிந்து அவன் தலையில் விழுந்தது போல இருந்தது.குழந்தையின் உதடு மூக்கில் இருந்து ஒரு அங்குல அகலத்துக்கு சதையே இல்லாமல் இடைவெளியுடன் இருந்தது.

“முருகா,நீ எனக்கு ஒரு பெண் குழந்தையை குடுத்து,அதை நல்ல கருப்பா குடுத்தது போதா துன்னு,அந்த குழந்தை முகத்தை இப்படி விகாரமா வேறே குடுத்து இருக்கியே. நான் உன்னை தின மும் வேண்டி வந்ததுக்கு,இது தான் நீ குடுத்து இருக்கும் அருளாப்பா முருகா’ என்று சொல்லி தன் தலையில் அடித்துக் கொண்டு மெல்ல அழுதான்.

உடனே ராஜாத்தி தன்னை சமாளித்துக் கொண்டு ”இதோ பாருங்க,இந்தக் குழந்தையை நான் பத்து மாசம் சுமந்து பெத்து இருக்கேங்க.அது கருப்பா இருந்தாலும் சரி,உதடு கிட்டே கொஞ்சம் கிழிஞ்ச மாதிரி இருந்தாலும் சரி.இது என் குழந்தைங்க.அதை நான் செல்லமா வளத்து வருவேங்க. நீங்க கவலைப் படாம சந்தோஷமா இருந்து வாங்க”என்று சொன்னதும் செல்வம் கொஞ்சம் சமாதானம் அடைந்து அழுவதை நிறுத்தினான்.

ராஜாத்தி ஹாஸ்பிடலை விட்டு வீட்டுக்கு குழந்தையுடன் வந்ததும்,ராஜாத்தியின் அம்மா வீட்டுக்கு வந்து இருந்து குழந்தைக்கு மாலா என்று பெயர் வச்சு விட்டு,ராஜாத்திக்கு குழந்தையைக் குளிப்பாட்டுவது எப்படி,குழந்தையை தூக்கிக் கொள்வது எப்படி என்று எல்லாம் சொல்லிக் கொடுத்து விட்டு, ஒரு வாரம் ராஜாத்தி கூட இருந்து விட்டு அவள் வீட்டுக்குப் போனான்.

செல்வமும் ராஜாத்தியும் குழந்தை மாலாவை அவர்களால் முடிந்தவரை சந்தோஷமாக வளர் த்து வந்தார்கள்.செல்வத்திற்கு வரும் சம்பளம் குடும்ப செலவுக்கே போதாமல் இருந்து வந்தது. அத னால் அவனால் குழந்தை மாலாவுக்கு உதடு ஆபரேஷன் பண்ண முடியவில்லை.

மாலாவுக்கு மூன்று வயது ஆனவுடன்,ராஜாத்தி மறுபடியும் குழந்தை உண்டாகி விட்டாள்.

‘ரெண்டாவது குழந்தைப் பிறந்தா வீட்டு செலவு இன்னும் அதிகம் ஆகி விடுமே’ என்று நினைத்து செல்வம் தன் P.Fல் ஒரு எண்பதாயிரம் ரூபாய் ‘லோன்’ எடுத்து மாலாவுக்கு ‘உதட்டை சேர்த்து வைத்து தைக்கும்’ ஆபரேஷனைப் பண்ணினான்.

ஆபரேஷன் நன்றாக முடிந்து இருந்தாலும் மாலா உதடுகள் ‘ஆபரேஷன்’ பண்ணின இடத்தில் மிகவும் தடிப்பாக இருந்தது.’ஆபரேஷன் பண்ணியும் மாலா உதடு தடிப்பா இருக்கே.எல்லாருக்கும் இருப்பது போல சாதாரணமா இல்லையே’ என்று செல்வமும் ராஜாத்தியும் கவலைப் பட்டார்கள். தங்கள் வருத்தத்தை மனதிலேயேப் போட்டு புதைத்து இருவரும் சந்தோஷமாகப் பழகி வந்தார்கள்.

பிரசவ வலி எடுத்ததும் செல்வம் ராஜாத்தியை ஹாஸ்பிடலில் பிரசவத்திற்காக சேர்த்தான். ரெண்டு மணி ஆனதும் ‘ராஜாத்திக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்து இருக்கு’ என்று நர்ஸ் சொன்ன தும் செல்வத்திற்கு உகலமே இருண்டு விட்டது போல இருந்தது.

’கடவுளே,இந்தக் குழந்தையே கூட எனக்கு ஒரு பெண் குழந்தையா குடுத்துட்டயே.அதை ஒரு ஆண் குழந்தையா குடுத்து இருக்கக்கூடாதா,இனிமே நான் உன்னை வேண்டியே வரப் போவதே இல்லே.நான் ‘நாஸ்திகனா’க மாறிடப் போறேன்’ என்று தன் மனதில் கடவுளைத் திட்டிக் கொண்டு யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.

“நீங்க இப்போ உள்ளே போய் அவங்களே பாக்கலாம்” என்று ‘நர்ஸ்’ சொல்லி விட்டுப் போனாள். ‘நர்ஸ்’ சொல்லி விட்டு பத்து நிமிஷம் ஆனதும் செல்வம் ‘நாம உள்ளே போவாம இருந்தா பாவம் ராஜா த்தி ரொம்ப கவலைப் படுவா.நாம உள்ளே போய் பாக்கலாம்’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டு செல்வம் எழுந்து,ராஜாத்தியைப் பார்க்கப் போனான்.ராஜாத்தியின் கண்கள் அழுது அழுது சிவந்து இருந்தது.செல்வம் ”அழாதே ராஜாத்தி. என்ன பண்றது சொல்லு.அந்த கடவுளுக்கு நம்ம கொஞ்சம் கூட பேர்லே கருணையே இல்லையே” என்று சொல்லி தன் மணைவிக்கு சமாதானம் சொன்னான்.

பிறகு பிறந்த குழந்தையைப் பார்த்தான் செல்வம்.குழந்தை நல்ல வெளுப்பாகவும்,அழகாகவும் இருந்தது.செல்வம் மிகவும் சந்தோஷப் பட்டான்.தன் மணைவியைப் பார்த்து “அழாதே ராஜாத்தி, இந்த குழந்தே,நல்ல கலரா,ஆழகா பொறந்து இருக்கு” என்று சொல்லி விட்டு,குழந்தையின் கைகளை த் தொட்டுப் பார்த்தான்.தன் கணவன் சந்தோஷப் படுவதைப் பார்த்த ராஜாத்தி தன் அழுகையை நிறுத்தி விட்டு “ஆமாங்க,குழந்தே கலரா,அழகா இருக்குங்க” என்று சொன்னாள்.

ரெண்டு பெண் குழந்தைகள் பொறந்தது போதும்,’இனிமே குழந்தைங்க வேணாம்’ன்னு என்று இருவரும் நினைத்தார்கள்.ராஜாத்தி ‘கருத்தடை ஆபரேஷன்’ பண்ணிக் கொண்டாள்.

ரெண்டாவது குழந்தைக்கு பாலா என்று பேர் வைத்து, முடிந்த வரை ரெண்டு பெண் குழந் தைளையும் செல்லமாக வளர்த்து வந்தார்கள் செல்வமும் ராஜாத்தியும்.

அந்த வருஷம் சென்னையில் வெய்யில் கொளுத்தியது.காலையில் ஆறு மணிக்கெல்லாம் சுட ஆரம்பித்து அந்த சூடு ராத்திரி பத்து மணி வரைக்கும் குறையாமல் இருந்து வந்தது.சூடு அதிகமாய் இருந்து வந்ததால் ஜுரம் வந்த மாலாவுக்கு அம்மை போட்டி விட்டது.ஒரு மாசம் இருந்து வந்த அந்த அம்மை நோய் குணம் ஆனாலும்,மாலாவின் முகத்தில் நிறைய தழும்புகளை விட்டு விட்டு சென்றது. நெற்றி,தாடை,கழுத்து எல்லா இடங்களிலும் நிறைய தழும்புகள் வந்து,அவள் கருப்பு உடம்பை இன்னும் கருப்பாகக் காட்டியது.

குழந்தை பாலா ரெண்டு வயசு ஆகியும் எழுந்து நின்றால் நிற்க முடியாமல் உடனே உட்கார்ந்து கொண்டு வந்தாள்.நிறைய நேரம் பாலா தவழ்ந்தே வந்துக் கொண்டு இருந்தாள்.இதை நினைத்து மிகவும் கவலைப் பட்ட செல்வமும் ராஜாத்தியும் குழந்தை பாலாவை நல்ல டாக்டரிடம் அழைத்துப் போய் காட்டினார்கள்.பாலாவை நன்றாகப் பா¢சோதனைப் பண்ணீன டாக்டர் “உங்க குழந்தைக்கு ‘போலியோ’ வந்து இருக்குங்க.குழந்தைக்கு காலில் பலம் இல்லே.இதுக்கு வைத்தியம் பண்ண வேண்டும்” என்று சொன்னார்.செல்வமும் ராஜாத்தியும் இங்கிலிஷ் வைத்தியம் பண்ண ரொம்ப செலவு ஆகுமே என்று நினைத்து “நாங்க அப்புறமா கைலே கொஞ்சம் பணம் சேந்த்தம் வறோம்ங்க” என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்கள்.

அக்கம் பக்கத்தில் விசாரித்த செல்வமும் ராஜாத்தியும் பாலாவுக்கு ‘ஆயிர்வேத மருத்துவம்’ பண்றது தான் தான் நல்லது,விலையும் அதிகம் ஆவாது’ என்று நினைத்து, பாலாவை தூரத்தில் இருந்த ஒரு ‘ஆயுர்வேத’ டாக்டர் கிட்டே தூக்கிக் கொண்டுப் போய் வைத்தியம் பார்த்து வந்தார்கள்.

வைத்தியம் பார்த்த அந்த ஆயுர்வேத டாக்டர் “உங்க குழந்தைக்கு குறைஞ்ச பக்ஷம் ரெண்டு வருஷத்துக்கு வைத்தியம் பண்ணி வந்தாத் தான் குழந்தை காலில் நடக்க பலம் வருங்க” என்று சொல்லி விட்டு வைத்தியம் பார்த்து வந்தார்.

இதற்கிடையில் செல்வத்தை ‘பாக்டரியில்’ ஷிப்ட்டில்’ போட்டு விட்டார்கள்.இதனால் அவ னால் பாலாவை ஆயுர்வேத டாக்டர் சொல்லி இருந்த நேரத்திற்கு அழைத்து போக முடியவில்லை. ராஜாத்தியும்,மாலாவும் பாலாவை ஆளுக்கு பாதி தூரம் தூக்கிப் போய் வைத்தியம் பார்த்து வந்தார்கள்

ரெண்டு வருஷ ஆயுர்வேத வைத்தியத்திற்கு பிறகு பாலா மெல்ல தன் சொந்தக் காலில் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.பாலா ஆயுர்வேத வைத்தியம் முடிந்து அவள் மெல்ல நடக்க ஆரம்பிக்கும் வரை, ராஜாத்தியும் செல்வமும் மாலாவை ஸ்கூலில் சேர்க்கவில்லை. மாலாவுக்கு எட்டு வயது ஆகும் போது செல்வம் மாலாவையும்,பாலாவையும் ஒன்றாக ஒண்ணாம் ‘க்லாஸில்’ பக்கத்தில் இருந்த கார்பரேஷன் ‘ஸ்கூலில்’ சேர்த்தார்கள்.

செல்வம் தனக்கு வரும் மாச சம்பள பணத்தில் ரெண்டு குழந்தைகளுக்கும் துணி மணிகள், பாட புஸ்தகங்கள்,நோட் புத்தகங்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்து,வீட்டு வாடகையும் கொடுத்து, மத்த செலவுகளையும் சமாளிக்க முடியாமல் மிகவும் திணறி வந்தான்.

போதிய போஷாக்கு இல்லாததாலும்,ரெண்டு குழந்தைகளைப் பெற்ற ராஜாத்திக்கு, பாலாவை மூன்று நாளைக்கு ஒரு தரம் ஆயிர்வேத டாகடரிடம் தூக்கிக் கொண்டு போனதாலும் கால் மூட்டு வலி ஆரம்பித்தது.அதறகு ஒரு வைத்தியமும் பண்ணிக் கொள்ளாமல் இருந்ததால், ராஜாத்திக்கு கால் மூட்டு வலியால் மிகவும் கஷ்டப் பட்டு வந்தாள்.
பத்து அடி நடந்தால் கூட அவளுக்கு காகில் வீக்கம் அதிகமாகி உடனே உட்கார வேண்டிய தாய் ஆகி வந்தது.செல்வம் ஒரு நாள் தன் வேலைக்கு லீவு போட்டு விட்டு ராஜாத்தியை டாக்டர் கிட்டே காட்டி ‘செக் அப்’பண்ணினான்.

செக் அப்’ பண்ண டாக்டர் செல்வத்திடம் ”இவங்க முட்டி எலும்பு ரொம்ப தேஞ்சுப் போய் இருக்கு.ஒன்னும் பண்ண முடியாதுங்க.இவங்க அதிகமா நடந்து வராம நான் கொடுக்கும் மாத்திரை களை தவறாம சாப்பிட்டு வரட்டுங்க”என்று சொல்லி மாத்திரை எழுதிக் கொடுத்தார்.ரெண்டு மாசம் தான் ஆகி இருக்கும்.ராஜாத்திக்கு கால் முட்டி வலி மிகவும் அதிகம் ஆகி அவள் வெறுமனே சோ¢லே யே எந்த வேலையும் செய்யாமல் உட்காரந்துக் கொண்டு வர வேண்டிய தாய் ஆகி விட்டது.இதைப் பார்த்த செல்வம் மிகவும் வருத்தப் பட்டான்.

மாலா தான் காலையிலேயே எழுந்து,அம்மா சொல்வதை கேட்டு எல்லோருக்கும் நாஷடா, சாப் பாடு,எல்லாம் பண்ணிக் கொண்டு வந்தாள்.அக்காவுக்கு சமையல் பண்ண பாலா உதவி பண்ணி வந் தாள்.பிறகு இருவரும் நாஷ்டா சாப்பிட்டு விட்டு,மதியம் கொஞ்சம் சாப்பாட்டையும் கையிலே எடுத்துக் கொண்டு,ஒன்றாக பள்ளி கூடம் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்

மாலாவுக்கு வயது பதிமூன்று வயதாகும் போது நாளாக நாளாக அவள் உடம்பு கொஞ்சம் பருமனாக ஆகி வந்தது.பயந்து போய் மாலா அவள் சாப்பிட்டு வரும் ஆகாரத்தை மிகவும் குறைவாக சாப்ப ¢ட்டு வர ஆரம்பித்தாள்.ராஜாத்தியும் செல்வமும் மிகவும் கவலைப் பட்டார்கள்.

செல்வம் ஒரு நாள் மாலாவை ஒரு டாகா¢டம் அழைத்துப் போய் காட்டினான்.டாகடர் மாலாவுக் கு பல ‘டெஸ்ட்டுகள்’ செய்து,அவளை நன்றாக பா¢சோதனைப் பண்ணின பிறகு செல்வத்தைப் பார்த்து “இந்தப் பொண்ணுக்கு ‘தைராயிடு’ ப்ராப்லெம் இருக்குங்க.நான் எழுதி கொடுக்கும் மாத்தி ரைகளை தவறாம சாப்பிட்டுக் கிட்டு வரச் சொல்லுங்க” என்று சொல்லி விட்டு ‘தைராயிடு’ மாத்திரை களை எழுதிக் கொடுத்தார்.செல்வம் மருந்துக் கடையில் டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை வாங்கி வந்து மாலாவை தவறாம சாப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னான்.

ஏற்கெனவே வீட்டு செலவை சமாளிக்க முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்து செல்வம் மருத்துவ செலவுகளும் கூடசேர்ந்துக் கொள்ளவே, குடும்ப செலவை சமாளிக்க முடியாமல்,ஒவ்வொரு மாசமும் தன் நண்பர்களிடம் கடன் வாங்கி வந்து குடும்பத்தை நடத்தி வந்தான்.மாலாவும் பாலாவும் ஒன்றாக பத்தாவது பாஸ் பண்ணினார்கள்.மாலாவும் பாலாவும் வருடாந்திர லீவை வீட்டிலே சும்மா இருந்து கழித்து வந்தார்கள்.

அன்று செல்வத்திற்கு ‘ஷிப்ட் ஆப்’ நாள்.மாலாவும் பாலாவும் தங்கள் சிநேகிதியைகளைப் பார்க்க வெளியே போய் இருந்தார்கள்.

செல்வம் ராஜாத்தியிடம் “ராஜாத்தி மாலாவுக்கு வயசு ஏறிக் கிட்டே போவுது. என்னிடமோ பாங்கில் அதிக பணம் ‘பாலன்ஸ்’ இல்லே.நண்பர்ங்க கிட்டே நிறைய கடங்க பாக்கி வேறே இருக்கு. மாலாவுக்கு கல்யாணம் பண்றதுன்னா குறைஞ்ச பக்ஷம் ஒரு ஐஞ்சு லக்ஷ ரூபாயாவது வேண்டும். அதனாலே நான் என் அண்ணன் கிட்டே போய் ஊர்லே இருக்கிற நிலத்திலே எனக்கு சேர வேண்டிய பாதி நிலத்தை அவருக்கே எழுதிக் கொடுத்து விட்டு ஒரு ஐஞ்சு லக்ஷ ரூபாயை வாங்கி வறேன். அந்தப் பணத்லே முதல்லே மாலா கல்யாணத்தை நாம பண்ணிட்டா,அப்புறமா நாம பாலா கல்யாண த்தைப் பத்தி இன்னும் ஒரு ஐஞ்சு வருஷம் கழிச்சு யோசிக்கலாம்” என்று சொன்னான்.

உடனே ராஜாத்தி “ஏங்க,ஊர்லே இருக்கிற நிலத்தை இப்போ வித்துட்டா,அப்புறமா நம்ம கீட்டே சொத்துன்னு சொல்லிக்க ஒன்னும் இருக்காதேங்க.நாம அப்புறமா என்ன பண்றதுங்க”என்று கவலையுடன் கேட்டாள்.

”ராஜாத்தி,இன்னும் ரெண்டு வருஷத்துக்குள்ளாற நாம எப்படியாவது மாலா கல்யாணத்தைப் பண்ணிடணும்.இன்னும் வயசு அதிகம் ஆகி கிட்டு போனா அவளுக்கு கல்யாணம் பண்றது ரொம்ப கஷ்டமா போயிடும்.இப்பவே அவளுக்கு வயசு கொஞ்சம் அதிகம் தான்” என்று பேசிக் கொண்டு இருப்பதை வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்த மாலாவும்,பாலாவும் கேட்டவுடன்,வீட்டுக்கு உள்ளே போகாமல் வாசலிலேயே நின்றுக் கொண்டு அவர்கள் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்துக் கொண்டார்கள்.ராஜாத்தியும் செல்வமும் மாறி மாறி பணக் கஷ்டத்தைப் பத்தியும்,மாலா கல்யாணத் தை பத்தியும்,அவர்களுக்கு இருக்கும் கடன்களைப் பத்தியும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
‘அப்பா அம்மா பணக் கஷ்டத்தைப் போக்க அவர்கள் ரெண்டு பேரும் என்ன பண்ணலாம்’ என்று யோஜனை பண்ணீ கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள் மாலாவும் பாலாவும்.’இருவரும் ஏதாவது ஒரு கடையில் ‘சேல்ஸ் கர்ளாக’வேலைக்கு சேந்து வீட்டுக்கு பணம் சம்பாதிச்சு வருவது’ என்று முடிவு பண்ணி, அப்பா அம்மாவிடம் சொன்னார்கள்.

ராஜாத்தி “அவங்க வீட்டிலே இருந்து மக்கறதை விட கடைக்குப் போய் வேலை செஞ்சுட்டு வரட்டுங்க” என்று சொல்லி விட்டு பெண்கள் ரெண்டு பேர் கிட்டேயும் “இதோ பாருங்க,’நாம தான் வேலைக்கு போய் சமபாதிச்சுக் கிட்டு வறோம்’ என்கிற கர்வத்திலே நீங்க இந்த சினிமாவிலே, டீ.வீ. லே வர மாதிரி ‘அம்மா நான் அவனை காதலிக்கிறேன்,இவனை காதலிக்கிறேன்’ ன்னு சொல்லக் கூடாது தொ¢யுதா.அப்படி சொல்லிக் கிட்டு வந்தீங்கன்னா,நான் உங்களே வூட்டுக்கு உள்ளேயே சேக்க மாட்டேன்” என்று கண்டிப்பாகச் சொன்னாள்.

அடுத்த நாளே மாலாவும் பாலாவும் பல்லாவரத்தில் புதியதாக திறந்து இருந்த ஒரு பெரிய துணிக்கடையில் ‘சேல்ஸ் கர்ள்’ வேலைக்கு சேர்ந்தார்கள்.

செல்வம் நாலு நாள் லீவு எடுத்துக் கொண்டு தன் சொந்த ஊரான மரவணூர் போய் தன் அண் ணனுடன் ஒரு நாள் இருந்து விட்டு பிறகு தன் கஷ்டத்தை எல்லாம் விவரமாகச் சொல்லி அண்ண னப் பார்த்து “அண்ணே,நான் என் பங்கு நிலத்தை உங்களுக்கு எழுதி குடுத்துடறேன். நீங்க எனக்கு ஐஞ்சு லக்ஷம் ரூபாய் தர முடியுமா”என்று கேட்டான்.செல்வம் சொன்னதைக் கேட்ட பெருமாளுக்கு சந்தோஷமாய் இருந்தது.‘இந்த சாக்கிலாவது நம்முடைய பூர்வீக மொத்த நிலத்தையும் நம் போ¢லே மாத்திக்கிடலாம்’ என்கிற பேராசையால் “சரி செல்வம்,நீ உன் பங்கை என் பேருக்கு எழுதிக் குடுத்துடு நான் உனக்கு இப்போ ரெண்டு லக்ஷ ரூபாய் பணம் தறேன்.மீதியை இன்னும் மூனு மாசத்லே ஏற்பா டு பண்ணி தந்துடறேன்” என்று சொன்னதும் செல்வம் அண்ணன் சொன்னதை நம்பி தன் பங்கு நிலத்தை அண்ணன் பேருக்கு எழுதிக் கொடுத்து விட்டு,அண்ணன் கொடுத்த ரெண்டு லக்ஷ ரூபா யை வாங்கிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தான்.

சென்னை வந்து ஆறு மாசம் ஆகியும் அண்ணன் கிட்டே இருந்து ஒரு பதிலும் கிடைக்க வில்லை.செல்வம் பொறுத்து பொறுத்துப் பார்த்து விட்டு தன் பொறுமை எல்லை மீறிப் போனதால் ஊருக்குப் போய் தன் அண்ணனை மீதி மூனு லக்ஷ ரூபாயைக் கேட்டான்.ஆனால் பெருமாள் “என் கிட்டே இப்போ பணம் இல்லே செல்வம்.எனக்கு பணம் வரும் போது தறேன்.நீ வெறுமனே என்னை இங்கே வந்து எனக்குத் தொல்லைக் குடுக்காதே” என்று கடுமையாகச் சொல்லி செல்வத்தை அனுப்பி விட்டான்.மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டே செல்வம் சென்னை வந்து சேர்ந்தான்.சென்னைக்கு வந்து ராஜாத்தியிடம் சொல்லி அண்ணன் பெருமாள் சொன்னதைச் சொல்லி அழுதான்.

அன்று ‘பாக்டரியில்’ செல்வம் கவலையுடன் இருந்ததால்,கொஞ்ச கவனக் குறைவால் ஓடும் மோட்டார் ‘கியா¢ல்’ தன் கையை விட்டு விட்டான்.அவன் வலது கை மணிக்கட்டு வரை தூண்டிக்க பட்டு ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது.அருகில் வேலை செய்து வந்தவர்கள் செல்வத்தை உடனே ‘பாக்டரி ஹாஸ்பிடலுக்கு’த் தூக்கிக் கொண்டு போய் வைத்தியம் பண்ணினார்கள்.பிறகு செல்வத்தி ன் நண்பர்கள் செல்வத்தை ஒரு பெரிய ஹாஸ்பிடலுக்கு ஒரு ‘ஆம்புலன்ஸில்’ அழைத்துக் கொண்டு போனார்கள்.அங்கே இருந்த டாக்டர் செல்வத்திற்கு மயக்க மருந்துக் கொடுத்து அவன் வலது கையில் மணிக்கட்டு வரை அறுவை சிகிச்சை பண்ணினார்.செல்வத்திற்கு மயக்கம் தெளிந்தவுடன்,‘ஆம்புலன் ஸி’ல் அவனை பல்லாவரத்தில் அவனது வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள் அவன் நண்பர்கள். செல்வம் வீட்டுக்கு வந்த கோலத்தைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் ராஜாத்தி.

’இப்படி அநியாயமாக தன் கணவன் வலது கை ஒன்னுக்கும் பிரயோஜனம் இல்லாமல் ஆயிடுச்சே.இனிமே நாம் என்னப் பண்ணப் போறோம்,இந்த குடும்பத்தை எப்படி நடத்தி வரப் போறோம்’ என்கிற கவலையில் மயக்கம் ஆகி விழுந்தாள்.’ஆம்புலன்ஸ்’வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்திலே இருந்தவர்கள் ராஜாத்தி வீட்டுக்கு வந்தவர்கள் ராஜாத்தி முகத்தில் தண்ணியை தெளித் து மயக்கத்தை தெளிய வைத்தார்கள். ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்த மாலாவுக்கும்,பாலாவுக் கும்,அப்பாவின் கையைப் பார்த்து அதிர்ச்சி அடைத்து “அப்பா,அப்பா என ஆச்சு உங்க கைக்கு” என்று கேடார்கள்.செல்வம் அழுதுக் கொண்டே ‘பாகடரிலே’ நடந்த ‘அசம்பாவிதத்தை’ விவரமாக சொன்னான்.அதைக் கேட்டதும் இருவரும் அவரைக் கட்டிக் கொண்டு அழுதார்கள்.ராஜாத்தி இன்னும் அழுதுக் கொண்டே இருந்தாள்.

செல்வத்தால் இனிமேல் ‘பாக்டரியில்’ ‘மெக்கானிக்காக’ வேலை செய்ய முடியாது என்று முடிவு பண்ணி ‘பாக்டரி’ மேலிடம் செல்வத்தை வேலையில் இருந்து ஓய்வு கொடுத்து அவருக்கு சேர வேண்டிய பணத்தை ‘பட்டுவாடா’ பண்ணி விட்டார்கள்.

அன்று மத்தியானமே சாப்பிட்டு விட்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்த செல்வம் தன் மணைவி யைப் பார்த்து “ராஜாத்தி,இனிமே என்னால் எந்த வேலைக்கும் போய் வர முடியாதுன்னு ஆயிடுச்சி. ’பாக்டரியில்’ இருந்து வந்த பணத்தையும் அண்ணன் கொடுத்த பணத்தையும் வச்சுக் கிட்டு மெல்ல மாலா கல்யாணத்தை நாம முடிச்ச்சிடலாமா.இல்லை,இந்தப் பணத்தில் நாம ஒரு சின்ன மளிகைக் கடைப் போடலாமா”என்று கேட்டான்.உடனே ராஜாத்தி “மளிகை கடை எல்லாம் இப்போ போட வேணாங்க.மாலா கல்யாணத்தே முதல்லெ முடிச்சாகணுங்க”என்று கண்டிப்பாக சொன்னதால் செல் வம் மளிகை போடும் ஆசையை விட்டு விட்டு தனக்கு தொ¢ந்தவர்கள்,நண்பர் கள்,உறவுக்காரர்கள் எல்லோரிடமும் மாலாவுக்கு ஒரு நல்ல பையனாகப் பார்த்து சொல்லும்படி கேட்டான்.

பருவம் அடைந்ததும் ஏற்கெனவே நல்ல கலரா இருந்த பாலா,இன்னும் அழகு பொம்மையாக பார்க்க அழகாய் ஆகி வந்துக் கொண்டு இருந்தாள்.

அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொரு ஞாயித்துக்கிழமை பையன் பெற்றோர்களுடன் மாலா வை ‘பெண்’ பார்க்க வந்தார்கள்.ராஜாத்தியால் நடக்க முடியாமல் இருந்து வந்ததால் மாலாவை நன்றா க அலங்காரம் பண்ணி பாலா தான் ஹாலுக்கு அழைத்து வந்தாள்.மாலாவைப் பெண் பார்க்க வந்த பையனும்,அவனது பெற்றோர்களும் “மாலா எங்களுக்கு வேணாங்க.நீங்க பாலாவை எங்க பையனுக் கு கல்யாணம் பண்ணிக் குடுத்தா,நாங்க கல்யாணம் பண்ணி கொள்றோம்க.வேணும்ன்னா நாங்க எங்க செலவிலேயே கல்யாணத்தே செய்யறோமுங்க.நீங்க நல்லா யோஜனைப் பண்ணி எங்களுக்கு சொல்லுங்க”என்று தீர்மானமாக சொல்லி விட்டு போய் விட்டார்கள்.

ராஜாத்திக்கும் செல்வத்திற்கும் என்ன பண்ணுவது என்றே தொ¢யவில்லை.செல்வம் தன் மனைவி ராஜாத்தியைப் பார்த்து “எப்படி பெரியவ இருக்கும் போது சின்னவளுக்கு கல்யாணத்தே பண்றது.அது சரி இல்லையே” என்று கவலையோடு கேட்டான்.உடனே ராஜாத்தியும் “ஆமாங்க நீங்க சொல்றது சரிங்க,நாம அப்படி பண்ண கூடாதுங்க” என்று சொல்லி அவளும் கவலைப் பட்டாள்.

அப்பா,அம்மா கஷ்டப் படுவதைப் பார்த்த பாலா ”அம்மா,அப்பா,நான் பிறந்தப்ப என் கால்ங்க விளங்காம இருந்தப்போ,அக்கா மாலாவும்,அம்மாவும் என்னை எத்தனை நாள் துக்கிக் கிட்டு ஆயுர் வேத வைத்தியம் பண்ணினாங்க என்பதை நான் இன்னும் மறக்கலே.இன்னைக்கு நான் நல்லா நடக் கிறேன்னா,அது அவங்க பண்ண உதவியால் தானே.அதனாலே அக்காவுக்குக் கல்யாணம் ஆவாம நான கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்”என்று அடித்துச் சொல்லி விட்டாள்.பாலா சொன்னதைக் கேட்டு ராஜாத்தி அவளைக் கட்டிக் கொண்டு அவளுக்குத் தேத்தறவு சொன்னாள்.

மாதங்கள் ஓடிக் கொண்டு இருந்ததே ஒழிய, மாலாவை ஒரு பையனும் கல்யாணம் பண்ணிக் கொள்ள முன் வரவில்லை.செல்வம் கையில் இருந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக கறைந்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தது.அண்ணனும் தர வேண்டிய பணத்தைத் தராமல் ஏமாற்றிக் கொண்டு வந்தான்.அண்ணன் பல மாசங்கள் ஆகியும் ஒரு பதிலும் சொல்லாமல் இருந்ததால், அந்தப் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அறவே போய் விட்டது செல்வத்திற்கு.

வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் இருந்த செல்வத்திற்கு எல்லா துக்கமும் ஒன்றாய் சேர்ந்து அழுத்தியதால் அவனுக்கு ரத்த கொதிப்பு அதிகம் ஆகி அவன் ஒரு நாள் காலையில் எழுந்தவுடம் மயக்கமாகி கீழே விழுந்தான்.ராஜாத்தியும் ரெண்டு பெண்களும் செல்வத்தை உடனே ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு ஓடினார்கள் செல்வத்தை நன்றாக பா¢சோதனைப் பண்ணிப் பார்த்த டாக்டர் அவருக்கு ‘ஆஞ்சியோ’ எடுத்துப் பார்த்து அவன் ‘ஹார்ட்டில்’ மூன்று அடைப்பு இருக்கு’ என்று சொல்லி ‘அவனுக்கு உடனே ‘ஹார்ட் அபரேஷன்’ பண்ணியாக வேண்டும்’ என்று சொல்லி விட்டார்கள்.

ராஜாத்தியும் ரெண்டு பெண்களும் கலந்துப் பேசி செல்வத்துக்கு உடனே ‘ஹார்ட் ஆபரேஷன்’ பண்ணும் படி டாக்டர் கிட்டே சொன்னார்கள்.டாக்டர் இந்த ‘ஆபரேஷனுக்கு’ ரெண்டு லக்ஷ ரூபாய் ஆகும் என்று சொல்லவே,ராஜாத்தி பாங்கில் இருந்து ரெண்டு லக்ஷ ரூபாயைக் கட்டி டாக்டரிடம் ‘ஹார்ட் ஆபரேஷனை’ பண்ணச் சொன்னாள்.செல்வத்திற்கு ‘ஹார்ட் ஆபரேஷனை’ பண்ணி ரெண் டு நாள் பூரா ICU வில் வைத்துக் கொண்டு இருந்து விட்டு,அவன் உடம்பு ‘நார்மல்’ ஆனவுடன் அவ னை ‘வார்டில்’ கொண்டு வந்து விட்டார்கள்.ஐந்து நாட்கள் கழித்து செல்வத்தை வீட்டுக்கு அழைத்து வந்தாள் ராஜாத்தி.

கையில் மீதி இருக்கும் பணத்தில் எப்படியாவது மாலா கல்யாணத்தை முடிக்க செல்வமும் ராஜாத்தியும் முயற்சி பண்ணியும் பெண் பார்க்க வரும் வரும் பையன்கள் எல்லோரும் முதலில் வந்த வர்கள் சொன்ன பதிலையே சொல்லி விட்டுப் போய்க் கொண்டு இருந்தார்கள். மனம் உடைந்துப் போனார்கள் செல்வமும் ராஜாத்தியும்.

கொஞ்ச நேரம் யோஜனை பண்ணி இருவரும் “அம்மா,பாலா ’பாக்டரிலே’ இருந்து கிடைச்ச மூனு லக்ஷ ரூபாயிலே என் ‘ஹார்ட் ஆபரேஷன்’ செலவு போவ மீதம் அதிகம் இல்லாம ரொம்ப கொஞ்சம் தான் இருக்கு.எங்களால் மாலாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியலே.அதனால்லே அடுத்து பெண் பார்க்க வரும் பையனோட அம்மாவும்,அப்பாவும் முன்னம் வந்தவங்க சொன்னா மாதிரியே சொன்னா,நீ அவங்க செலவிலே கல்யாணம் பண்ணிக் கிட்டு சந்தோஷமா வாழ்ந்து வாம்மா நாங்க மாலாவை எங்க கூட வச்சு கிட்டு,ஒரு சின்ன மளிகை கடை வச்சுக் கிட்டு,சம்பாதிச்சு பிழைச்சு வரோம்.நீயாவது கல்யாணம் பண்ணிக் கிட்டு சந்தோஷமா வாழ்ந்து வாம்மா” என்று பாலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்கள்.

”அப்பா,நீயும் அம்மாவும் என்னை வளர்க்க எவ்வளவு கஷ்டப் பட்டு வந்தீங்கன்னு எனக்கு நல்லாத் தொ¢யும்.அம்மாவும் மாலா அக்காவும் என்னை தூக்கி போய் என் கால்ங்களுக்கு வைத்தியம் பண்ணாங்க.என் கால்ங்களுக்கு நல்ல பலம் வரைக்கும்,அக்கா மாலா பள்ளிக் கூடம் போவாம என் கால்ங்க சரியாப் போன பிற்பாடு எட்டாவது வயசிலே என் கூட ஓண்ணாம் ‘க்லாஸ்’ படிக்க ஆரம்பிச்ச தை எல்லாம் நான் இன்னும் மறக்கலேப்பா.எனக்கு உங்களோடு இருந்து வர சந்தோஷமே போதும். பொண்ணு பாக்க வந்தவங்க எல்லாம் அக்கா கருப்பாவும்,உடல் பருமனாவும் இருப்பதாலே வேணாம் ன்னு சொல்லிட்டு,நான் கொஞ்சம் கலராவும் பாக்க அழகா இருகிறதாலே என்னை செலவு இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாங்க.அக்காவுக்கு கிடைக்காத இந்தக் கல்யாண வாழக்கை எனக்கும் வேணாம்ப்பா.எனக்கும் கல்யாணமே வேணாம்ப்பா.நான் காலம் பூராவும் உங்களோடவே இருந்து வர சந்தோஷமே எனக்குப் போதும்ப்பா” என்று சொல்லி ரெண்டு பேருடைய கால்களையும் பிடித்துக் கொண்டு அழுதுக் கொண்டு சொன்னாள் பாலா.

பாலா சொன்னதைக் கேட்டு அசந்து விட்டார்கள் செல்வமும் ராஜாத்தியும்,மாலாவும்.செல்வ மும் ராஜாத்தியும் தங்கள் கால்க¨ளைப் பிடித்து அழுதுக் கொண்டு இருக்கும் பாலாவை மெல்ல எழு ப்பி அவள் அழுகையை ஓயப் படுத்தினார்கள்.அடுத்த நாளே செல்வம் ஒரு சின்ன கடையாக வாட கைக்குப் பார்த்து தன் கையிலெ இருந்த பணத்தைப் போட்டு ஒரு சின்ன மளிகைக் கடையை ஆரம் பித்தான்.ராஜாத்தி கல்லாவில் உட்கார்ந்துக் கொண்டு வியாபாரம் ஆகும் பணத்தை வாங்கிப் போட்டு சில்லறையை கொடுத்து வந்தாள்.செல்வ ம் ‘ஹோல்ஸேல்’ வியாபாரிகள் இடத்தில் போய் மளிகை சாமான்களை எல்லாம் கடைக்கு வாங்கிப் போட்டான்.மாலாவும் பாலாவும் அவர்கள் செய்து வந்த ‘சேல்ஸ் கர்ள்’ வேலையை விட்டு விட்டு அப்பா மளிகைக் கடையிலேயே மளிகை சாமான்கள் வாங்க வருவோர்களுக்கு அவர்கள் கேட்ட மளிகை சாமான்களை எடைப் போட்டு பொட்டலம் செய்து கொடு த்து வந்தார்கள்.

ஒரு நாள் செல்வத்திற்கு உடம்பு மோசமாகி,அவன் ‘ஹோல்ஸேல்’கடைக்கு கிளம்ப இருந்த போது மயக்கம் போட்டு விழுந்து விட்டான்.டாக்டர் வந்து பார்ப்பதற்குள் அவன் உயிர் போய் விட்டது. ராஜாத்தியும் கணவன் மேல் விழுந்து விழுந்து அழுது,அழுது,அவளும் அடுத்த ரெண்டாவது மணியி லேயே இறந்து விட்டாள்.மாலாவுக்கு நாப்பது வயது ஆகும் போது அவளுக்கு ‘தைராயிடு வியாதி அதி ம் ஆகி அவளுக்கு ‘கான்ஸர்’ நோய் வந்து விட்டது.பாலா மாலாவுக்கு ‘கான்ஸர்’ வியாதிக்கு மருந்துகள் வாங்கிக் கொடுத்து,அவளை வீட்டிலேயே இருந்து நிறைய ஓய்வு எடுத்து வருபடி சொல்லி விட்டு,மளிகை கடையை தனியாகவே நடத்தி வந்தாள்.ஆறு மாச காலத்திலே மாலாவுக்கு ‘கான்ஸர்’ வியாதி ரொம்ப முத்திப் போய் அவள் இறந்துப் போனாள்.பாலா அக்காவுக்கு எல்லா ‘ஈமக் காரியங்க ளையும்’ செய்து முடித்தாள்.பல வருஷங்கள் தனியாக அந்த மளிகைக் கடையை நடத்தி வந்து நிறைய ஏழை மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் பண்ணி வந்தாள் பாலா.

எழுபது வயசு ஆன உடனே ‘தன்னால் இனிமே அந்த மளிகைக் கடையை நடத்தி வருவது கஷ்டம்’ என்று நினைத்து,பாலா அந்த மளிகைக் கடையை வித்து விட்டு அந்தப் பணத்தை ஒரு அனாதை பெண்கள் வாழ்ந்து வரும் ஒரு இல்லத்திற்கு கொடுத்து விட்டு,அந்த இல்லத் தலைவி இடம் தன் கதை பூராவையும் சொல்லி விட்டு,தான் இறந்த பிறகு தன் உடலை அடக்கம் பண்ணச் சொல்லி விட்டு கேட்டுக் கொண்டு,அங்கேயே வாழ்ந்து வந்தாள்.

பாலா சொன்ன கதையைக் கேட்டு அந்த இல்லத் தலைவி அசந்துப் போனாள்.பாலாவை வாயார புகழ்ந்தாள்.

பாலா காலம் முடிந்ததும் அந்த இல்லத் தலைவி,அந்த விடுதியில் இருந்த பெண்களை கூப்பிட்டு,பாலாவை அந்த விடுதியில் ஒரு ஓரமாக அடக்கம் செய்து விட்டு பாலாவின் கதையை முழுக்க சொன்னார்.

கூடி இருந்த பெண்கள் எல்லாம் பாலா ‘தன் குடும்பத்திற்கு செய்த தியாகத்தை’ எண்ணி வியந்துக் கொண்டு இருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *