“அப்பா, அப்பா இன்னைக்கு நம்ம தாத்தா, பாட்டியைப் பார்க்க போறாமா? அவங்க ஊர் எப்படி இருக்கும் அப்பா? சொல்லுங்க பா? சொல்லுங்க? என்று வினாவினாள், ஐந்து வயது சிறுமி ஊர்மிளா.
“அதுவா, நம்ம அங்க தான, போறோம் நீயே பாப்ப! என்று அவளை அமைதிப்படுத்தினார் அப்பா. எல்லா பொருள்களையும் எடுத்துக் காரில் போட்டுக்கொண்டு அவர்கள் புறப்பட்டனர்.
ஊர்மிளாவின் ஆவளால் வண்டியில் அவளால் அமைதியாக இருக்கவே முடியவில்லை. ஏதாவது ஒவ்வொன்றாக கேட்டு நச்சரித்துக் கொண்டே இருந்தாள்.
(நகரத்தை விட்டு பொள்ளாச்சி வழியாக கார் வருகிறது.)
அந்த ரோட்டில் பெரிய தென்னைமரங்களும் குளுர்ச்சியான நிழலும் நிறைந்த அமைதியான ரோடாக இருந்தது. களைப்பு மிகுதியால் காரை விட்டு வெளியே இறங்கி இளநீர் கடைமுன் நின்றனர்.
ஊர்மிளா, “தாத்தா ஊர் வந்துருச்சாப்பா”?
“இல்லமா உனக்கு தாகம் அடிக்குமல! இந்த இளநீர் சாப்பிடுரையா? என்றார் அப்பா.
ஊர்மிளா “இல்ல எனக்கு வேண்டா, நா கூல்டிங்க்ஸ் குடிச்சுக்கறன்னு” சொல்லிவிட்டு காருக்குள் செல்கிறாள். (காரணம் அவள் நகர்புற வளர்ப்பு அவ்வாறு.)
“ ஏங்க உங்களுக்கு இந்த ஊர் எல்லா பழகுனது தான, சின்ன வயசுல இருந்து இங்க தான பொறந்து வளர்ந்தது எல்லா, அதா பழைய ஞாபகம் வருது போல” என்றாள் அம்மா கல்யாணி.
அப்பா, “ஆமாம் கல்யாணி நம்ம கல்யாணத்துக்குப் பின்னாடி வேல கெடச்சு, இந்த ஊர விட்டு போனது தா, அதுக்கு அப்போற இப்ப தா வாரோம். அடையாலமே மாறி இருக்கு. புது ரோடு எல்லா போட்டு இருக்கு” என்று பேசிக்கொண்டு இளநீர் குடித்து விட்டு , இருவரும் வண்டியில் ஏறினார்கள்.
(ஒரு பெரிய தென்னந்தோப்புக்குள் கார் வந்தது.)
அம்மா “இந்த இடம் இவ்வளவு பசுமையா இருக்குதே இது யார் உடையதது”? என்று கேட்டாள் ஊர்மிளா. அம்மா, “அந்த தோப்பு தாத்தாவுடைது தாம்மா”. என்று சொல்ல, அவர்கள் தாத்தா வீட்டிற்கு கார் வந்தனர். அவர் வீடு பெரியதாய் பழைய ஓட்டு வீடாக இருந்தது. முன்புறம் வலது, இடது என இருபுறமும் வேப்பமரம். அதன் நடுவில் பூச்செடிகள், வீட்டின் பின்புறம் முருங்கைமரம் வளர்ந்து காய் தொங்குகிறது. கொஞ்சம் தள்ளி வாழை மரமும் அதன் அருகில் சுண்டைக்காய் செடியும் இருந்தது.
அவர்கள் வந்ததும், பாட்டி வாங்க கண்ணு வாங்க, ன்னு அன்போடு மகிழ்ச்சி பொங்க அழைத்தாள்.
நலம் எல்லாம் விசாரித்தபிறகு வீட்டிற்க்குள் அழைத்து சென்று மரநாற்காலியில் அமரச் செய்தாள். சின்ன பிள்ளைப் போல் ஓடிப்போய் அவர்களுக்கு குடிக்க மோர் கொண்டு வந்தாள்.
வீட்டைப் பார்த்தாள், பழையதாயினும், அரண்மனைக்கு நிகர் தோற்றம் அளித்தது. ஊர்மிளாவும், கல்யாணியும் அந்த வீட்டை மேலே, கீலே என பார்த்து வியந்தார்கள்.
ஊர்மிளா “என்ன பாட்டி இது”?
பாட்டி,” மோர்ம்மா குடி குளுகுளுன்னு இருக்கும்”!
மோர்ரை பார்த்து பிடிக்காத வண்ணம் அதை அப்படியே வைத்து விட்டாள் ஊர்மிளா.
மகன் “அப்பா எங்கம்மா என்று கேட்க”?
பாட்டி, “அவர் கொல்லையில பின்னாடி இருக்காரு, காலையில தோப்புக்குப்போய்ட்டு இப்பதா வந்தாரு, இருப்பா நா போய் கூட்டிட்டு வர்ரேன்னு,” சொல்கிறாள்.
ஊர்மிளா, “நா போற” என்று சொல்லிக்கொண்டு ஓடினாள்.
மாமரத்தடி நிழலில் கயிற்றுக்கட்டில் படுத்துக்கொண்டுந்தார் தாத்தா. இளமையான தோற்றத்துடன் நிம்மதியாக ஓய்வு எடுத்துகொண்டு இருந்தார்.
அவரைப் பார்த்ததும் வயிற்றில் ஓடிப்போய் ஒரு குத்து வைத்து எழுப்பினாள். ஊர்மிளாவைப் பார்த்ததும் மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது. அவளை அன்போடு தழுவிக்கொண்டார்.
ஊர்மிள, “தாத்தா நீங்க ரொம்ப சக்தியோடு ஆரோக்கியமா, முடி கூட நெரைக்காம, இளமையா இருக்கிறிங்க எப்படி தாத்தா”?
லேசாக சிரித்து விட்டு,” எனக்கு நல்ல மனைவி, அறிவுள்ள நல்ல மகன்கள், என்னை சுற்றி உறவினர்கள், நல்ல வேலையாட்கள், பொறாமை, கோவம் ஏதும் இல்லாம நல்ல மனசோட, இயற்கையான உணவு, சான்றோர் எல்லாரும் வாழக்கூடிய ஊர்ல இருக்கறங்கம்மா எல்லா நல்ல மனசு தாம்மா காரணம்” எண்ணம் சரியா இருந்தா எல்லாம் நல்லது தா நடக்கும். அதா முடிகூட நெரைக்கல’’, என்று சொல்லி சிரித்தார்.
இதைக்கேட்ட ஊர்மிளாவுக்கு தாத்தா மீது மரியாதை வந்தது, அவரைப்பார்த்து பெரிமிதம் கொண்டாள்.
“இருதாத்தா வறேன்னு” சொல்லிகொண்டு உள்ளே ஓடினாள். மோர் டம்ளர் இரண்டு எடுத்துட்டு வந்து தாத்தாவுக்கும் தந்து தானும் குடித்தாள்.
யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்என வினவுதிர்
ஆயின்
மாண்டளன் மனைவியொடு மக்களும்
நிரம்பினர்
யாங்கண் டனையர்என் இளையரும்
வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்
அதன்தலை
ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே!
புறநானூறு 191
கதைகரு: நல்லமனைவி,மக்கள்,உறவினர்கள், மற்றும்யார்மீதும்கோவம், போட்டி, பொறாமை இல்லாமல் வாழும் வாழ்க்கை உள்ளவர்களுக்கு என்றுமே இளமைதான். ‘’எண்ணம் தான் எல்லாமே’’.