(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நீரை இரு கூறாக்கிக்கொண்டு “சிதம்பரம்” கிளம்பி விட்டது
அகத்தில் உள்ள மகிழ்ச்சி முத்தையா மூகத்தில் தெரித்தது. தன் மகன் மாதவன் அத்தக் கப்பலில் காலுக்குக் கட்டுப் போட்டுக்கொள்ளச் செல்வதை நினைத்து நினைத்து இன்புற்றபடி துறைமூகத்தைவிட்டுக் கிளம்பினார்.
“பயல் இங்கிருந்தால் கெட்டுப்போவான், எவளையாகிலும் இழுத்துக்கிட்டு வந்து ஊரை மறந்திடுவான். ஊருக்கு அனுப்பி பயலுக்கு – அக்கா மகளைக் கட்டிவச்சிடனும்’ எனும் எண்ணத்ஓல் தான் தன் மகனை ஊருக்கு அனுப்பிவைத்தரர். ஆனால், அவனை ஊருக்கு அனுப்பிவைப்பதற்கு மற்றொரு காரணமூம் இருத்தது.
துறைமுகத்தைவிட்டுக் கிளம்பிய முத்தையா தான் குடி யிருக்கும் வாடகை வீட்டுக்குப்போக மனமில்லாமல் நேராக அஞ்சலை வீட்டிற்குச் சென்றார். முத்தையாவைக் கண்டதும் அஞ்சலையின் முதுமைப் பெற்றோர், ”ஏன் தம்பி பிள்ளையாண்டானை அனுப்பி வச்சிட்டியா?” என்று முகத்தில் உள்ன சுருக்கங்கள் மேலும் சுருங்க சிரித்தபடி கேட்டனர்.
முத்தையா, “ஆமா” என்றார். பிறகு அவர்களுக்காக வரும்வழியில் வாங்கிக்கொண்டு வந்திருத்த ‘ஓராங்துவா’வை அரைக்கால் சட்டைப் பைக்குள் இருத்து எடுத்துக்கொடுத்தார். அவர்கள் முகத்தில் மூல்லைக்காடு மண்டியது. கொஞ்சநேரம் மூவரும் பேசிக்கொண்டிருத்தனர். “வியர்த்துக்கிடக்குது கொஞ்சம் கொல்லைப்பக்கம் போயிட்டு வறேன்“ என்று சொல்லி விட்டு முத்தையா வெளியில் வந்தார்.
அங்கு அஞ்சலை துவைத்த துணியை உதரிக் காயப் போட்டுக் கொண்டிருந்தாள். பெட்டைக் கோழியைச் சேவல் துரத்திக் காண்டு சென்று கொண்டையை அலகால் கவ்வி அமுக்கிச் சிறகுகளைச் சிலிர்த்தது. அதைப் பரர்த்ததும் அஞ்சலையின் மூகம் வாடிவிட்டது . எண்ணங்கள் பலவாறாகச் சிறகடித்து ப்பறந்தன . ஓருமணம் ஆகவில்லை என்றாலும் இருபத்தொன்பது அகவை திரம்பிய அவள் மூகம் மினுமினுப்பு இழந்து சிறிது கிழடு தட்டியிருந்தது : அகவை கூடிவிட்ட ஏக்கத்தால் தான் அவள் அப்படி நின்றாள்.
இவ்வனவு அகவை ஆனபின் ஏன் திருமணம் ஆகவில்லை என்று கேட்கத் தோன்றும் . மாப்பிள்ளைப் பஞ்சமும் குயில் நிறமுந்தான்.
மூத்தையா வந்ததைக்கூட அவள் பார்க்கவில்லை –
அவர் “என்ன அஞ்சலை, துணி காயப்பேரடுறியா?” என்று குரல் கொடுத்தபடி முறுவலித்தார்.
அவள் சற்று திடுக்கிட்டுச் சுதாரித்துக்கொண்டு , “ஆமா” என்றாள் .
“ஏன் மூகவாட்டமாக இருக்கிறாய்?” என்று கேட்டார்.
“ஒன்றுமில்லை” என்று செரல்லியபடி துணி வைத்திருத்த நெக்ழி வாளியைக் குனிந்து எடுத்துக்கொண்டு நடத்தாள். அவள் மூன்னே செல்ல, மூத்தையா காற்றோட்டமாக பின்னே சென்றார். இருவரும் வீட்டிற்குள் சென்றனர். “அஞ்சலையின் பெற்றோர் மூகம் சிவந்திருந்தது, எல்லாம் ‘ஓராங்துவர’ சாராயத்தின் வேலைதான்.
“தம்பி எங்களுக்கு நீதாம்ப்பா துணையா இருக்கிறே. ஆனான பிள்ளைய இன்னும் கட்டிக்கொடுக்காமே இருக்கிறோம் என்கிறதை நினைக்கிறப்போ வயிற்றைக் கபீர்னு பிடிக்குது. கண்கருத்த ஒரு ஆம்பிள்ளை இல்லையேங்கிற குறைய நீதாம்பா போக்கனும். ஒரு நல்ல பையனாப்பார்த்து இவளைக் கட்டிக் கொடுத்துடனும்ப்பா” என்றாள் அஞ்சலையின் தாய்.
– கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன(சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்டு 1978, தை நூலகம், நாச்சியார்கோவில், தமிழ்நாடு