கண் விழிக்கும் தருணத்தில் என் தங்கை ‘கயல்’ குரலில் ஒரு நடுக்கம் ‘அக்கா’ என்று அழைத்த பொழுது சட்டென்று விழித்தேன். அக்கா பசிக்குது… சாப்பாடு எப்போ போடுவாங்க?. ஆம் நாங்கள் ஒரு சர்ச் ஆசிரமத்தில் வசிக்கிறோம். பாப்பா சர்ச்ல பிராத்தனை முடியனும் அதுக்கு அப்பறம் தான் சாப்பாடு என்று சொல்லிக்கொண்டே ஒரு டம்பளர் தண்ணீர் குடுத்து பசியே ஓரங்கட்டினோம். பிராத்தனைக்கு வேண்டிய பொருளை எடுத்து சென்றால் ‘பொன்னி’ பின்பு அறையே சுத்தம் செய்தாள் கூட்டம் முடிந்தது. அனைவரும் சாப்பாட்டு அறைக்கு சென்றனர். இருவரும் சேர்ந்து காலை உணவு உண்டு சர்ச்பள்ளி விரைந்தோம்.
ஐந்தாம் வகுப்பபை நோக்கி என் கால்கள் விரைந்தன. தங்கை இராண்டாம் வகுப்பு. மதிய உணவிற்கு வரிசையில் முண்டியடித்து ஒரு வழியாக சாப்பாடு வாங்கினேன் உண்டு பசியாறினோம். சிறிது நேரம் தங்கை என் மடியில் உறங்கினாள். அவள் தலைமுடியே கோதியவாறு சற்று கண் அசரும் நேரம் யாரோ தூரத்தில் பொன்னி என்று கூப்பிட்ட குரல். சற்று தளர்ந்த தேகத்துடன் கிழிந்த உடையில் ஒரு நடுத்தர வயது பெண்மணி. தாயி எப்படி இருக்க என்று கூறியவாறு இருவரையும் மார்போடு கட்டிக்கொண்டாள். அம்மா.. நீயா! இத்தனை நாளா எங்களை ஏன் பார்க்க வரல தங்கசி உன்ன நெனைச்சு சரியா சாப்பிடுறது இல்ல நைட் திடீனு தூக்கத்துல எழுந்து அம்மான்னு அழுறா.
சரி சரி அழாதீங்க நான் வந்துட்டேன்ல இனிமேல் அடிக்கடி வந்து பாக்குறேன். இப்போகூட உன் அப்பனுக்கு தெரியாம வந்தேன். அம்மா எங்ககூடவே இரு இங்க எந்த பயமும் இல்லாம இருக்கலாம். இல்ல தாயி இங்க சின்ன பிள்ளைகள் மட்டும் இருக்கலாம் பயப்பட வேண்டாம் சர்ச் பாதர் ரொம்ப நல்ல மனுசன். மீதம் இருக்கும் சாப்பாட தங்கச்சி அம்மாக்கு பிஞ்சு கையால் ஊட்டினால். தேகத்தில் வேர்த்த நீர் துளிகளை தாண்டி கண்ணீர் உருண்டோடின. என்ன பெத்த மக்கா இந்த பாவி வைத்துள்ள வந்து பொறந்ததுக்கு இவளோ கஷ்டமா? அந்த கடவுளுக்கு கண் இல்லையா?.
என்ன தாயி யோசிக்கிற? இல்லமா…நம்ம ஒண்ணா இருந்த நாட்கள நினச்சேன்..அப்போ நீ கட்டட வேலைக்கு போயிட்டு வந்து எங்களுக்கு வேணுங்குறத சமைச்சு குடுப்ப ரொம்ப சந்தோசமா இருந்தோம். அப்பா தினமும் குடிச்சுட்டு வருவார்…அப்போ ஒரு நாள் அதிகமா குடிச்சுட்டு வந்து நம்மள அடிச்சது அப்பறம் தங்கச்சி மயங்கி விழுந்துட்டா. அந்த கஷ்டத்துலயும் ஒண்ணா சந்தோசமா இருந்தோம். அந்தநாள்…. இப்போ நெனச்சலாலும் உடம்பெல்லாம் ஆடுதுமா…!! நம்ம வாழ்க்கைய புரட்டிப்போட்ட நாள். பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டு வர வழியில அப்பாவும் அவங்க நண்பர்களும் பேசிட்டு இருந்தாங்க…நிக்கலாமா? வேணாமா? யோசிச்சுகிட்டே அப்பா பக்கத்துல போகேல நீ என் காத புடிச்சு இழுத்துட்டு வந்துட்ட. அங்கேயெல்லாம் நிக்க கூடாது அவங்க ரொம்ப மோசமானவங்கனு சொல்லி முதுகுல செல்லமா ரெண்டு தட்டு தட்டி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்ட.
அன்னைக்கு ராத்திரி நாங்க சீக்கிரமா தூங்கிட்டோம். திடீர்னு நீ அழுற சத்தம் கேட்டு எழுந்து பாத்தேன் அப்பா கைல ஊசி அதுல நிறைய ரத்தம் இருந்துச்சு. நீ அப்பாட்ட வேண்டாம்ன்னு சண்டை புடிச்சும் உன்ன கீழ தள்ளிட்டு போய்ட்டார். பல நாள் இது தொடர ஆரம்பிச்சது பாவம் நீயோ படிக்காதவ ஒன்னும் புரியாம நரக வேதனையை அனுபவிச்ச. ஒருநாள் ராத்திரி… திடீர்னு கொசு கடிக்குற மாதிரி சரியான வலி கண் முழிச்சு பாத்த என் தொடையில ஊசி இருக்கு அப்பா என் தொடையில இருந்து ரத்தத்த ஊசிமூலம் எடுத்துட்டு இருக்கார். அணைக்குனு பாத்து நீ நல்லா அசந்துட்ட. அம்மானு கூப்புடுறேன் காத்து தான் வருது சத்தம் வரல என் ஒடம்புலிருந்து நிறைய ரத்தத்த எடுத்துட்டு போய்ட்டார்.
தட்டு தடுமாறி அப்பாவை பின்தொடர்ந்தேன். தெரு முக்குல ஒரு ஆட்டோ நின்னுச்சு அதுக்கு பக்கத்துல நாலு ஐஞ்சு பேரு அதுல அப்பாவும்…. டேய் இணைக்கு என் மக உடம்புல ஒரு யூனிட் ரத்தம் தான் எடுக்க முடிஞ்சது வாத்தியார் சொன்ன அளவு கிடைக்கலடா. காசு எவளோ குடுப்பார்னு தெரியல மச்சி…அதுல ஒருத்தன் ஏன்டா மாப்புள நம்மள மாதிரி பெரியவங்க ரத்தத்த எடுக்கவேண்டியது தானடா நெறய எடுக்கலாம்ல. அட போடா சின்ன பிள்ளைங்க ரத்தம் தாண்டா வேணும் அதுல பிளாஸ்மா அது இதுனு என்னமோ நெறய இருக்காம்.
ஒரு யூனிட்க்கு பத்தாயிரம் ரூபா தெரியுமா!! அப்டினா எங்க ஏரியால நிறைய பிள்ளைங்க இருகாங்க தூள் கிளப்பலாம் மச்சி…. சட்டென்று யாரோ என் பின்னங்கழுத்துல கைய வச்சு அமுதுநாங்க…! திரும்பி பாத்த நீ…தங்கச்சிய இடுப்புல வச்சுட்டு என் வாய பொத்திட்டு அப்படியே தூக்கிட்டு ஓடிவந்துட்ட. நீ வேல பாக்குற இடத்துல உன்ன பத்தி தப்பா சொல்லி வேல இல்லமா பண்ணிட்டார் அப்பா. ஒதுங்க இடம் இல்லமா ரெண்டு மூணு நாளா கிடச்சத சாப்பிட்டு ரோட்டுல படுத்து தூங்கினோம்.
பசி மயக்கத்துல எங்க போறதுன்னு தெரியாம கார்ல அடிப்பட தெரிஞ்சோம். அப்போதான் சர்ச் பாதர பாத்தோம். நம்ம நெலமைய தெரிஞ்சு சர்ச் பள்ளில எங்கள தங்க வச்சார். அப்போ நீ எங்கள விட்டுட்டு போனதுதான் இப்போதான் உன்ன
பாக்குறோம். சரி சரி மணி அடிச்சுட்டாங்க மக்கா பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆயிடுச்சு வகுப்புக்கு போங்க சாயுங்காலம் வந்து பாக்குறேன்.
கணக்கு வாத்தியார் வகுப்பு ஆரம்பிச்சாச்சு.. எனக்கோ அம்மா நெனப்பா இருந்தது பாடத்துல சரியாய் கவனம் இல்லாததை வாத்தியார் கண்டுபுடிச்சுட்டார். பொன்னி எபோபோதும் இல்லாமா எதையோ வெறிச்சு பாத்துட்டு இருக்க யாரை பாத்துட்டு இருக்கானு பக்கம் வந்து ஜன்னல் வழிய பாத்தார்… தூரத்துல ஒரு அம்மா நிக்குறத பாத்து பொன்னிட்ட கேட்டார் யாருமா அந்த அம்மா? சார்.. அது வந்து… அவங்கதான் எங்க அம்மா. அப்படியாம! ரொம்ப சந்தோசம் வகுப்பு முடிஞ்சு போய் பாருன்னு சொல்லி வகுப்பை தொடர்ந்தார். என்னடா இன்னைக்கு மட்டும் இவளோ நேரம் ஆகுது ஒரு வகுப்பு முடிய..
பள்ளி முடிந்து தங்கச்சிய என் கூட குடிக்கிட்டு அம்மாவை பாக்க தலைதெறிக்க ஓடினோம்… பள்ளி வாசல்ல ஒரே கூட்டம்!! என்னால எட்டிக்கூட பாக்க முடியல. தங்கச்சிய உக்கார வச்சுட்டு ஒருவழியா முண்டியடிச்சு உள்ள போய் பாத்தேன். ஒரு நிமிஷம் என் மூச்சு என்கிட்ட இல்ல…ஆம் என் அம்மா உயிரற்ற நிலையில் குப்பை போல் ஒதுங்கி கிடந்தாள். அம்மாக்கு என்ன ஆச்சுன்னு சொல்லிக்கொண்டே அவளை அள்ளி அணைத்துக்கொண்டேன். உங்க அம்மா இறந்து போய்ட்டாங்கமா…அவளுக்கு என்ன ஆயிருக்கும் என்று யோசிக்க கூட வயசு இல்லையே எங்களுக்கு…
அம்மா போய்ட்டாயானு!! சொல்லி சத்தம் போட்டு அழக்கூட தெரியலயே அம்மா.. இனி நாங்க என்ன பண்ணுவோம் யாரை அம்மா அம்மானு கூப்பிடுவோம். என் அழுகையை பாத்து தங்கச்சி பக்கம் வந்தாள்.. அக்கா.. அம்மா ஏன் இங்க தூங்குறாங்க…நமக்குத்தான் இப்போ ரூம் இருக்குல்ல அங்க வந்து அம்மாவை தூங்க சொல்லு என்றால். அவள் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்த சிலர் எங்களுடன் அழ ஆரம்பித்தனர்.
நாட்கள் சென்றன அம்மா நினைவுகள் மட்டும் அவ்வப்பொழுது வந்து மறையும் வழக்கம் போல் தங்கச்சி நைட் எழுந்து அம்மாட்ட போகணும்னு அழுவாள் பழகிப்போனது என் புத்திக்கு. ஆனா மனசு அடுச்சுக்குது அவ முன்னாடி நான் அழுதா எங்கள அமைதி படுத்த யாரும் கிடையாது. தினசரி செய்ற வேல மாதிரி பழகிருச்சு மனசும். வருடங்கள் ஓடின நாங்களும் பின்தொர்ந்தோம். அன்று எனக்குள் ஒரு புதிய மாற்றம் குளிக்க போன எடத்துல என் ரத்தத்தை பாத்து அலறினேன். ஆயா அம்மா ஓடிவந்து பாத்தாங்க என்ன பாத்துட்டு அவங்களுக்கு ஒரே சந்தோசம் ராசாத்தி நீ பெரிய மனுஷியாயிட்ட எதுக்கு பயப்படுற சாமி? நாங்க இருக்கோம். பெண்மை ஒரு புனிதம்… பூப்பெயர்தல் அதைவிட புனிதம்.. ஆம் அந்த நாளில் என் அம்மாவின் அருமையை உணர்ந்தேன்.. ஏன்? ஒட்டுமொத்த
பெண்மையை உணர்ந்தேன். இந்த சமூகத்தை எவ்வாறு எதிர் கொள்வேன்? நல்லது.. கெட்டது..இதையெல்லாம் எப்படி ரகம் பிரிப்பேன் என்று மனதுக்குள் ஒரு பெரிய கேள்விக்குறி.
வழக்கத்துக்கு மாற சர்ச் பள்ளில அன்று ஒரே பரபரப்பு… வாத்தியார் டீச்சர் எல்லாரும் அவங்க அவங்க வகுப்புக்கு அரக்க பறக்க ஓடுனாங்க. பாதர்அ பாத்து எல்லா பிள்ளைகளும் ஓட ஆரம்பிச்சாங்க. ஒரு வழியா பத்தாம் வகுப்பறைல போய் உக்காந்தோம். ஆஸ்பத்திரில இருந்து வெள்ள சொக்க போட்ட நெறய ஆளுங்க வந்தாங்க. ஒவ்வரு வகுப்புக்கும் ஒரு டீம் வந்தாங்க. வழக்கமா பரிசோதோனைக்கு வந்துருக்கோம்னு சொல்லிட்டு யாரும் பயப்பட வேண்டாம்ன்னு சொன்னாங்க. அதுல நெறய டாக்டர்ஸ் இருந்தாங்க பக்கத்துலேயே எங்க சர்ச் பள்ளி சிஸ்டர்ஸ் கொஞ்சம் தைரியம் வந்துச்சு. வரிசைல நின்னோம் எதார்த்தமா முன்னாடி என்ன பண்ராங்கனு பாக்கலாம்னு எட்டி பாத்தேன் .அதிர்ந்து போனேன்! அந்த டீம் ல எங்க அப்பா ஒரு ஆளு.
கால்கள் ரெண்டும் பின்னுது எனக்கு பின்னால இருக்குற பொண்ணு சீக்கிரமா போனு என் பொடானிய தள்ளிவிடுறா. தயங்கி தயங்கி முன்னாடி வரிசைல போனேன்.. பக்கம் வர வர நெஞ்சு பட படனு அடிச்சது எனக்கே வெளிய கேக்க ஆரம்பிச்சது..அதுக்குள்ள ஆபீஸ் பியூன் எல்லாருக்கும் மாஸ்க் குடுக்க ஆரம்பிச்சுட்டார். அவரு குடுக்குறதுக்குள்ள வேகமா எடுத்து போட்டுக்குட்டு வரிசைல நின்னுட்டேன். ரத்தவகை டெஸ்ட் பாத்தாங்க நான் ‘ஓ’ பொசிட்டிவ் அப்பொறம் ஹீமோகுளோபின், சுகர் இதுமாதிரி நிறைய டெஸ்ட்… எனக்கு தெரிஞ்சது அவ்ளோதான்.
இருந்தாலும் என் மனசு ஒப்பள எதோ? ஒன்னு பெரிய தப்பு நடக்குதுன்னு உறுத்திட்டே இருந்துச்சு. யாருகிட்ட போய் சொல்றதுன்னு தெரியல? என்னோட கடந்த காலா கசப்ப சொல்லி அழுக உண்மையான ‘உருவம்’ பதிஞ்ச ஆளு இல்லையேன்னு இணைக்கு என் கண்ணு தேடாத முகம் இல்ல. சுத்தி எல்லா பிள்ளைகளும் சந்தோசமா அவங்களுக்கு புடிச்ச விளையாட்டா உலகம் மறந்து ஏன்? அவங்களையே மறந்து குதுகளமா விளையாடுறத பாத்து சந்தோசப்பட மனசு ஒப்பள.
ஆஸ்பத்திரில இருந்து வந்த டீம் எல்லாரும் அவங்க பொருட்கள எடுத்துவைக்குறதுல கவனமா இருந்தாங்க அந்த சமயம் பாத்து அவங்க வந்த வண்டியோட நம்பர், கலர் அப்பொறம் வேற எதாவது தடயம் இருக்குமானு பாத்துட்டு திரும்பி பாத்த வெள்ள சொக்க போட்ட ஆளு முன்னாடி.. டக்குனு கண்ணு தெரியாத மாதிரி கைய நீட்ட ஆரம்பிச்சிட்டேன். ஏய்! பாப்பா யாரையாவது துணைக்கு கூட்டிட்டு வராம எங்க உயிர ஏன் வாங்குற? ஏற்கனவே
ஓராயிரம் பிரச்னை இதுல நீ வேற போமா ஓராமானு என்ன புடிச்சு தள்ளிவிட்டார். கண்ணனுக்கு எட்டுற தூரத்துல பாதர் கூட ஒருத்தர் பேசிட்டே போறத பாத்து அந்த முகம் தெரியாத அந்த ‘உருவம்’ யாருனு பாக்க வேகமா ஓட ஆரம்பிச்சேன். என் தேடல் தொடர இத்துடன் என் உரையே நிறைவு செய்கிறேன்.