அவ்ளோதானே…! நோ ப்ராப்ளம்ப்பா…பாமா சிரித்தாள்
இப்பவே உனக்கு பொறுப்பு வந்திடுச்சிடி…அம்மா – அப்பா மகிழ்ந்தனர்.
பாமா, பிடிவாதக்காரி, பிரபல ‘ரிவர்சிபள்’ காட்டன் புடவைகளை கல்யாணத்திற்கு எடுத்திருந்தாள்.
டிசைன்ஸ் சூப்பர்…நான் எடுத்துக்கவா? என வருங்கால நாத்தனார் கேட்டாள். பாமா அப்பா தந்து விட்டார்.
அக்கா கேட்டாள், ‘என்னடி, ஹேர் பின் மாறினாலும் அலறுவியே…?’
பாமா புன்னகைத்தாள், உள்ளூர நினைத்தாள்.
ஏழைன்னு, இரண்டு வருஷக் காதலனையே மறந்தாச்சு, பணக்கார மாப்பிள்ளைக்கும் சம்மதிச்சுட்டேன்…ஆஃப்டர் ஆல், புடவையை மாத்தறதா விஷயம்…?
– ஜனவரி 2012