(1992 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பள்ளிப் பக்கம் பிரச்சினை. “படிப்பும் வேண்டாம் பள்ளியும் வேண்டாம். பிள்ளை வந்திடட்டும். கடவுளே…..” பெற்றவர்கள் நேர்ந்தார்கள்.
பொம்மர்களும் ஹெலிகளும் போய்த் தொலைய, பிஞ்சுகள் வந்தார்கள். பள்ளியின் வாயிலில் பதட்டமும் பயமுமாய்ப் பார்த்திருந்தவர்கள் பிள்ளைகளை அணைத்துக் கொண்டார்கள்.
“பயந்திட்டியா ராசா?”
“அம்மா நாலு குண்டுதான் போட்டவங்கள் ஒருக்கா ஒரு பொம்மர் பதிஞ்சுது. ஆனா குண்டு போடாம எழும்பி விட்டுது..அது ஏன் அம்மா?”
– வெளிச்சம் ஆடி/ஆவணி-1992
– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.