இருட்டும் வரை காத்திரு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 3,647 
 
 

(1971ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3

அன்றைக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை நாள்.

பெட்டகத்தின் மேலுள்ள கடலைக் கடகங்கள், பெட்டிகள், காசுவைக் சம் அடுக்குப் பெட்டிகளை எடுத்துக் கழுவி வெய்யிலிலே காயப்போட்டுக் கொண்டிருக்கின்றாள் அன்னலெட்சுமி. மணி எட்டாகியும் இன்னமும் அவள் குளிக்கவில்லை. குறுக்குக்கட்டுடனேயே அலுவல்களில் சுழன்றுகொண்டிருக்கின்றாள். சின்னராசா, தாய்க்கு ஒத்தாசையாக, வான வெளியில் பறக்கும் பட்டத்தின் வாற்கயிறுபோல அவளைப் பின் தொடர்ந்து சென்று தொட்டாட்டு அலுவல்கள் செய்து கொண்டிருந்தான்.

பூவும் பிஞ்சுமாய் மூடியிருக்கும் வத்தகக் கொடிகளுக்குத் தண்ணீர் வார்த்துக்கொண்டிருக்கின்றான் மணி. அடிவளவு வேம்பின் கீழே, பாய் விரித்து அதிலே விழுந்து குவிந்த வேப்பம் பூக்களை அப்புவும், ஆச்சியு மாய் வடகம் செய்வதற்காகப் பெட்டிக்குள் அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆச்சி அப்போதும் ஏதோ சளசளக்கிறாள்.

சின்னராசா பெட்டகத்திற்கு அருகாகப் போய் நிற்கின்றான். அந்த உடல் பிதுங்கும் கடலைக் கடகத்தை பெட்டகத்தில் பார்க்கும்போது தான் பெட்டகமும் அழகாக, நிறைந்தாற் போலிருக்கும். அல்லாது போனாலோ பொட்டகம் வடிவிழந்தாற் போல சின்ன ராசாவுக்குத் தோற்றும். உண்மைதான். மணிகூட அப்படித்தான் அபிப்பிராயப்படுகின்றான். பள்ளிக் கூடத்தில் தலைமை வாத்தியார் மாணிக்கவாசகம் இருந்தால் அவரது அறையின் பின்புற ஜன்னல் திறந்திருக்கும். அவர் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்றால் ஜன்னல மூடிச்சார்த்தியிருக்கும். அம்மாவுக்குக் கடலைக் கடகந்தான் அடையாளம். கடலைக் கடகம் இருந்தால் அம்மாவை வீட்டிலே காணலாம். பெட்டகம் வெறு முதுகோடிருந்தால் அம்மா வெளியே போய்விட்டாள் என்று நம்பிக்கையாகச் சொல்லலாம். இந்த ஒப்பு நோக்கினை நினைத்துத்கானே மனதினுள்ளே சிரித்து, தம்பிக்கும் சொன்னான் மணி. சின்னராசாவும் சிரித்தான். ஒருநாள் இதனைச் சின்ன ராசா தாயிடம் சொன்னபோது அவளும் அழகாகப் புன்னடை செய்து சின்னராசாவின் தலையினைச் செல்லமாகப் பிடித்து ஆட்டினாள்.

தாய் கன்னங்கள் குரியப் புன்னகை செய்வதனை ஆசையோடு பார்ப்பான் சின்னராசா, அவனின் உருண்டைமுகம், நெற்றியை மூடி விழும் அடர்ந்த தலை மயிர். கட்டையான தோற்றம். இந்தக் கோலத்தவனான அவன் முகத்திலே ஆசை தோன்றுகையில் அதுவே களங்கமற்ற தோர் அழகெனப்பொழியும். அவன் தன்னை வாஞ்சைத்தம்பப் பார்ப்பதனைக் கவனித்து விட்டுத்தாய் மௌனமாகிவிடுவாள். இப்படித்தான் கதிரவேலுவின் கூர்ந்தபார்வையும், அன்னலெட்சுமியின் சிரிப்பினையே கதிரவேலு மோகந்ததும்பப் பார்த்திருப்பான். அந்தப்பார்வை, அவளைத் திணறடித்து உடலெல்லாம் பரவசத்தினால் சிலிர்க் கவைக்கும். அவள் தன்வசமிழந்து நாணமாகி உடல் குழைகின்ற போதினில் அவன்; அவளது உடலெல்லாம் அவன் இழைவான். எவ்வளவு இனிமையான, இளமை களையாது அனுபவித்த சுகங்கள் அவை. ஒன்பது வருஷங்களாக வாழ்வு. அவன் மடி தவிர வேறுமடியிலே என்றுமே அன்னலெட்சுமி படுக்கக்கூடாது. அவள் அழகினைப் பார்த்து மயங்கிச் சுகித்து அனுபவித்த பின்னரும், அள்ள் அழகளித்த அக்சத்தால் தன்னையறியாது தான் அந்த வார்த்தைகளை அவன் சொன்னானோ? வெற்றிலைப் பெட்டியை எடுத்துப் பிஞ்சுப் பாக்கை அதிகம் வைத்து, துளிர் வெற்றிலையின் காம்பைக் கிள்ளி எறிந்து விட்டு வாய்க்குள் வைப்பாள் அவள். சிவக்கச் சிவக்க வெற்றிலை போடுகையில், மனமும் வாழ்வின் இறந்த கால நினைவுகளை அரைத்துத் தள்ளும்.

மனதிலேயிருந்து பல சம்பவங்களின் நினைவுகளைத் தூக்சி வீசியெறிய முடியாமலிருக்கிறது. ஒரு புதிய வாழ்வினை நினைக்கையிலேயோ. விறகை எரிக்கும் தீயைப் போலப் பழைய நிகழ்ச்சிகள் மனதினுள் வந்து புகுந்து எண்ணங்களைத் தொடராமல் நொருக்கியெறிந்து எரித்து விடுகின்றன. செல்லச்சாமிடைப் பற்றி யோசிக்க நினைவு காலடி எடுக்கையில், முன்னே நடந்த சுவடாக கதிரவேலுவோடு வாழ்ந்த வாழ்வு நினைவிற்கு வந்து விடும். செல்லச்சாமி சொல்வதுபோல மனித நலனிற்காக உழுத்துப்போன சம்பிரதாயங்களை உதைத்தெறிய அவளிற்கு இன்னமும் தைரியம் வரவில்லை.

அம்மா ஏதாவது யோசிக்கத் தொடங்கிவிட்டால் வெற்றிலை சப்பத் தொடங்கிவிடுவா. சிவக்கச் சிவக்க அவ வெற்றிலை போடுகின்றபோது பார்க்க அழகாக, மிக வடிவாக இருக்கும். ஆனால் அவ ஆச்சியைப் போலக் கண்டபாட்டிற்குக் கண்டபடி வெற்றிலையைத் துப்புவதில்லை. எழுந்து போய் வேலி ஓரமாகத்தான் துப்புவா. எதிலும் தன்னுடைய தாய் ஒழுங்காகவும், சுத்தமாகவும் இருப்பது சின்னராசாவுக்கு மிக விருப்பமாகும்.

குறுக்குக் கட்டுடனே நின்ற அன்னலெட்சுமி கடலை விற்பதற்காக பேணியையும், சின்னச் சுண்டுகளையும் தூக்கியபடி கிணற்றடிக்குப் போகின்ற போது சின்னராசாவையும் குளிக்க வரும்படி கூப்பிட்டாள்.

சின்னராசாவுக்குத் தாயோடு குளிப்பது மிகவும் விருப்பம். ஆச்சியோடு குளிக்கப் போனால் அவள் விறாண்டுவது போல் ஊத்தை உருட்டி விடுவாள். அவள் உடம்பிற்குச் சவர்க்காரம் தேய்த்து விட்டால் கண்களினுள்ளும் எரியும். ஏதாவது வாய்க்கு வந்ததைச் சளசளத்துக் கொண்டிருப்பாள். தாயோவெனில் மிகக் கவனமாக, மெதுவாக அழுக்குத் தேய்த்து விடுவாள் அவளுடைய கைகள் படும்போது பசுந்தாக, ஆசையாக இருக்கும். அவள் குனிந்து தன்னுடைய பாதங்களிலுள்ள அழுக்கினைத் தேய்த்துவிடும் போதில் அவளுடைய வெறும் முதுகினைச் சின்னராசா பார்ப்பான். தாய் எலுமிச்சம் பழ நிறத்தில், அதுவும் பளபளப்பாக இருக்கின்றாள். மினுமினுப்பான அவளது தோலின் நிறத்தையும் தன்னுடைய மங்கிய பொது நிறத்தையும் மனதிற்குள்ளே சின்னராசா ஒப்பிட்டுப் பார்ப்பான். எவ்வளவு வித்தியாசம்! சில வேளைகளிலே அதையே யோசித்தபடி அவன் மௌனமாகி நின்றால் கையினைப் பிடித்து மெதுவாக உலுப்பியபடி அவள கேட்பாள், “ஏன் ராசா பேசாமல் நிற்கிறம்?” அவனுக்கு அப்போது இனந்தெரியாத வெட்கம் வந்து விடும். ‘நீங்க நல்ல சிவப்பு’ என்பான் கூசிய குரலிலே. புன்னகை செய்வாள் தாய். ‘சரியான கள்ளப் பயல் நீ!’

திருமணமாகி முதலிரவ கழிந்த மறுநாள் கதிரவேலு அந்தக் கிணற்றிலே குளித்துக்கொண்டு நின்றான் அன்னலெட்சுமியோடு. கிணற்றடியில் அப்போது அடர்ந்து வளர்ந்த மாதுள மரமொன்று நின்றது. கனிகள் குலுங்கும் மாதுளை.

இளமையின் தலைவாசலிலே நின்ற அவர்களிருவரும் சரசக்கதைகளிலே குளித்துக்கொண்டிருந்தார்கள். கதிரவேலுவுக்கு நல்ல வாட்ட சாட்டமான உடம்பு. பொது நிறமாயினும் மினுமினுத்துக் கொண்டிருந்தான. துள்ளு மீசை. அன்னலெட்சுமி அன்றைக்கு என்றுமில்லாத அழகோடு விளங்கினாள் ஏதோ கதையின் தொடர்பிலே அவளது குங்குமமாய்ச் சிவந்த கன்னத்தைப் பார்த்துக் கொண்டே அவன் ஒரு கவிஞனைப் போலச் சொன்னான். “உன்ரை சொக்கு இந்த மாதாளம் பழம் போலே இருக்கு ….”.

அந்தச் சம்பவம் நடந்து எத்தனை வருஷங்கள் போய்விட்டன. அந்தச் சம்பவம் மட்டுமா. அவனோடு கழிந்த தாம்பத்தியத்தின் இன்பமும், துன்பமும், ஏனைய எல்லாமும் நெஞ்சிலே அழித்தெழுதமுடியா ஓவியங்களாய், பசுமையான நினைவுகளாய் நிலை கொண்டுள்ளன அந்த அவளின் ஞாபகசக்தியே புதிய ஒன்றுதான்.

அம்மா என்னைக் குளிக்க வார்க்கும்போது முதலில் நல்லாகக் கவனிச்சுக் குளிக்க வார்ப்பா . பிறகு என்னவோ நினைத்துக் கொண்டு விறுவிறு வென்று தண்ணீர் அள்ளி முதுகில் ஊற்றிக் கொண்டிருப்பா. சில வேளைகளில் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் இறைக்கிற வாட்டர்பம் முக்குக் கீழே நின்று குளிக்கிற மாதிரி இருக்கும். நான் சொன்னதுக்குப் பிறகுதான் அவ குளிப்பாட்டுவதை நிற்பாட்டுவா.

சில வேளைகளில் அன்னலெட்சுமி வளவிலுள்ள பூசனி, வத்தகைப் பழங் களைக் கடகத்துள் வைத்து பஸ்ஸில் ஏற்றிச் சந்தைக்குக் கொண்டு செல்வாள். திரும்பி வரும்போது அவளது தாய்க்குச் சாயோலை, புகையிலை முதலியனவும் பிள்ளைகளுக்குத்தின் பண்டங்களும் வாங்கிக் கொண்டு வருவாள். வீட்டிற்கு வந்ததும், “ஆச்சியிடம் கொண்டுபோய் இதைக் குடு ராசா” என்று புகையிலையையும், சாயோலையையும் அன்னலெட்சுமி சின்னராசாவிடம் கொடுத்து விடுவாள். பெட்டிகள் இழைப்பதில் ஆச்சி மிகவும் கெட்டிக்காரி. சாயோ கயினால் என்னம் வைத்துப் பெட்டி இழைக்கின்ற போதினில் அவள் யாகடனும் ஒன்றுமே பேசாமல் பெட்டி இழைப்பதிலேயே கவனமாக இருப்பாள். வாய் சளசளக்காது.

ஆச்சிக்கு இரண்டேயிரண்டு பெண் பின்ளைகள் தான் பிறந்தார்கள். இளையவள்தான் அன்னலெட்சுமி, மூத்தவளுக்குப் பெயர் பரிமளம். அவள் ஆறு பிள்ளைகளோடும், வறுமையாடும், குடிகாரக் கணவனோடும் குரும்பசிட்டியிலே சீவிக்கின்றாள். ஆச்சிக்கு அப்புவையும் கூட்டிக்கொண்டு மூத்தமகள் பரிமளம் வீட்டிற்குப் போகவேண்டுமென்று நெடுநாளாக ஆசையிருந்தது. அதற்குத் தான் இன்னமும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.

நேற்றுப் பள்ளிக்கூடம் முடிந்து வரும் போது-மறுநாள் முற்றவெளியில் வாணவேடிக்கை, வண்டிற் சவாரி முதலியன நடைபெறவிருப்பதாக நண்பர்கள் சொல்ல மணி கேட்டிருந்தான். மணிக்கு வாணவேடிக்கை பார்ப்பதென்றால் நிறைய விருப்பம். தகப்பன் உயிரோடு வாழ்ந்தபோது அவன் இரு முறை தாய் தகப்பனோடு சென்று வாணவேடிக்கை பார்த்திருக்கின்றான். தகப்பன் கதிரவேலு மிகத் தாராள குணம் படைத்தவன். பிள்ளைகள் மேலே நிறைந்த அன்பினை அள்ளிச் சொரிந்தவன். வாணவேடிக்கை பார்த்துவிட்டு வந்து தன் பிள்ளைகள் தம்மை மறந்து புளுகிக்கொண்டிருந்ததை மிகப் பரவசமாகக் கதிரவேலு பார்த்து மகிழந்து தன் மனைவிக்கும் கூப்பிட்டுக் காட்டியிருக்கின்றான்.

வாணவேடிக்கை பற்றிய நினைவுகள் மணியின் மனதிலே சீறிச் சீறி எழுந்து கொண்டிருந்தன. எப்படியும் வாணவேடிக்கை போய்ப் பார்க்க வேண்டுமென்று மணி மனதினுள்ளே உறுதிபூண்டான். தாயிடம் போகக் கேட்டால் அவள் அனுமதி தருவாளா என்பது சந்தேகம். மாலை ஐந்து மணிக்குத் தாய் கடலை விற்கப்புறப்பட்ட பின் எப்படியாவது ஆச்சியையும் அழைத்துக் கொண்டு வாண வேடிக்கை பார்ப்பதற்குப் போய் விடவேண்டும்.

இன்றைக்கு அம்மா காலையில் எழுந்து தம்பிக்குக் குளிக்க வார்க்கின்றாள். பெட்டி கடகங்கள் கழுவிக் காயவைத்திருக்கின்றது. நேற்றுக் கடையில் வாங்கி வந்த கச்சான் கடலைகளைப் பாயிலே கொட்டிக் கஞ்சல்கள் தெரிந்துவிட்டாள். சிந்தாமணிக் கடலைக்கு மஞ்சள் பூசி வைக்கப்பட்டுக் காய்கின்றது. மத்தியானம் சாப்பிட்டுவிட்டுக் கடலை வறுபாள் தாய். நிச்சயமாக ஐந்து மணிக்கு அவள் கடலை விற்கவே போவாள்.

மணி கால் முகங்கழுவிக் கொண்டு சிவபெருமான் படத்திற்கு முன்னாலே போய் நின்று முணு முணுக்கின்றான். “கடவுளே. இன்றைக்கு ஆச்சி ஒரு தடையுமே சொல்லாமல் எங்களை முத்தவெளிக்குக் கூட்டிக் கொண்டு போகவேணும். இதற்காக அம்மா எங்களோடையோ ஆச்சியோடையோ சண்டை பிடிக்கக்கூடாது”.

***

மேலே பாய்ந்து போகும் போது வேகமாகிப்போய் வானவெளியிலே வெடித்து விட்டுக் கீழே வெறுந்துண்டாகி விழும் சீறுவானம் போல, மணியின் மனமும் போகும் போதிருந்த உற்சாகம் நீங்கிச் சஞ்சலமொன்றினால் கனத்து அலுத்தே போய்த் திரும்புகின்றது.

நட்சத்திரங்களற்ற நிர்மலமான வானத்தைப் பார்ப்பதும், பெருமூச்செறிவதுமாய் வந்த மணிக்கு தன் நெஞ்சோடு மல்லிட்டு அந்தக் காட்சியினைத் துரத்த முடியாதிருக்கின்றது.

பின்னேரம் ஐந்து மணியளவில், அன்னலெட்சுமி கடலை விற்கப்போனதின் பின்பு சின்னராசாவை ஆச்சியின் முன்பு அபச்சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி ஆச்சியைச் சம்மதிக்க வைத்த பின்பு மணி ஆச்சியின் துணையோடு தம்பியையும் கூட்டிக்கொண்டு வாண வேடிக்கை பார்ப்பதற்குச் சென்றான்.

முற்றவெளியில் சனம் நிறைந்து வழிந்தது. அவர்கள் முற்றவெளிக்குள் போகின்றபோது மாட்டு வண்டிச் சவாரி முடிந்து விட்டது. சுப்பரம்மாவின் செங்காரிக்காளை முதலிடத்திற்கு வந்ததாக ஒலி பெருக்கியில் அறிவித்தவர் சிறிது நேர்த்தால் வாணவேடிக்கை தொடங்கும் என்று கம்பீரமான குரலில் அறிவித்தார்.

ஆச்சியின் இரு கைகளையும் மணியும், சின்னராசாவும் பிடித்திருந்தனர். சனவெக்கையே பிடிக்காது ஆச்சிக்கு பேரப்பிள்ளைகளை ஒரு ஒதுக்குப் புறமாக உள்ள மின்சார கம்பத்தின் கீழே அழைத்துச் சென்று பேசாமலே உட்கார்ந்துகொண்டாள்.

வாணங்கள் கருநீலவானத்தின் பின்னணியில் சீறி எழுந்து உண்ண வண்ணக் கோலங்களை வரைந்தன. பூக்களும், உருவங்களும், எழுத்துகளும் தங்க நிறத்திலே பொலிந்து பூத்துச் சிதறின. ஆச்சிக்கும் அவைகளைப் பார்க்கச் சந்தோஷமாகவேயிருந்தது. சுருங்கிய கண்களை விரித்துக்கொண்டு ஆவென்றபடி அண்ணாந்து வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். வானத்துப் பூச்சிதறலைப் பார்த்து மனம் சந்தோஷப் பெருக்கினால் விம்மித முற்ற வேளையில் சின்னராசாவின் மனத்தினில் சிறு கவலையொன்று தணற் பொறி போலச் சுட்டது.

இந்த வாணங்களைப் பார்க்கின்ற போது எவ்வளவு அழகாக உள்ளன. குடைகள், பூக்கள், எழுத்துக்கள் எல்லாம் வானத்திலே தங்க நிற மழை போல எவ்வளவு அழகாகச் சிதறுகின்றன. சிலேற்றிலே கூட இவ்வளவு வடிவான உருவங்களக் கீறமுடியாது. சீ… இவ்வளவு வடிவான வாணவிளையாட்டைப் பார்க்க அம்மா இல்லாமற்போய் விட்டா. அவ இதைப் பார்த்லதா என்றால் எவ்வளவு ஆசைப் படுவா. இந்த நேரங்களிலை கூட அம்மாவுக்குக் கடலை வியாபாரந்தான்.அவளும் என்ன செய்வா? எங்களுக்காகத் தான். அம்மாவுக்கு வீட்டை போய் இந்த வாண வேடிக்கையைப் பற்றிக் கனகதையள் சொல்லவேணும்.

நேரத்தோடு வீட்டிற்கப்போனால் தான் நல்லது என்று மணி நினைத்தான். வேடிக்கையைய் பார்த்துக்கொண்டிருக்கையில் மணிக்குத் தகப்பனின் நினைவு வந்தது. வாணவேடிக்கை பார்க்கவந்தபோது அவனுடைய தகப்பன் திரண்ட தன்னுடைய தோள்களில் மணியை ஏற்றிவைத்து ஆகாயத்தைக் காட்டிக்கொண்டிருந்தான், அவனுடைய மறுகை அணைப்பினுள் அன்னலெட்சுமி ஒடுங்கி நின்றபடி வெற்றிலையைச் சப்பிக்கொண்டிதாள்.

IruttumVarai-pic2

அந்தச் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழியுமுன்னர் கதிரவேலு எதிர்பாராதவிதமாகச் செத்துப்போப் விட்டான். அவனுடைய மரணத்தினை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. கண்மூடிக்கொண்டு உறங்குபவன் போல செத்துக்கிடந்த அவனைக் கடைத்தெருவில் இருந்து வேப்பமரத்தின் கீழே கொண்டுவந்துவளர்த்தியபோது அன்னலெட்சுமி ஓவென்று கதறியபடி கூவியவள் மறுகணம் நிலை குலைந்து போய் அவனது காலடியிலே மயங்கி விழுந்து விட்டாள். அந்தக் காட்சியைப் பார்த்தபடியே சின்னராசாவும் மணியும் பிழியப் பிழிய அழுதார்கள். இரு தயத்தையே நினைக்கும் தோறும் நெகிழவைக்கின்ற அந்தக் காட்சி அச் சடித்த சித்திரம் போல இன்றைக்கும் மணியினது நெஞ்சிலே பதிந்து போய்க் கிடக்கிறது.

ஆனாலோ, சற்று முன்னர் மணி கண்ட அந்தக் காட்சி அவனது நெஞ்சைக் குழம்பவைத்துக் கொண்டிருக்கின்றது. ஆச்சியின் பின்னாலே சின்னராசா குதூகலத்தோடு ஏதேதோ கதைத்தபடி செல்கின்றான். மானியோ, சிறுவனின் பின்னால் இழபட்டுச் செல்லும் நாய்க்குட்டிபோல அவர்களின் பின்னாலே கொடர்ந்து செல்லுகின்றான். அவனுடைய மனமோ அந்தக் காட்சியிலேய போய்த் தனித்து நிற்கின்றது. அந்தக் காட்சிதான் நெஞ்சினுள்ளேயே வளர்ந்து வளர்ந்து விசுவரூபமெடுக்கின்றது.

வாண வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில், இடையிலே சின்னராசா மணியின் கைகளைப் பற்றிச் சுரண்டினான். மணி, “என்னது?” என்று கேட்டான். சின்னராசா தலையைச் சொறிந்து கொண்டு, “ஒண்டுக்கு வருகுது” என்று பதில் சொன்னான. ஆச்சிக்கும் அது கேட்டு விட்டது. “இதுதானே போற வாற இடத்துக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு வெளிக்கிடுறதில்லை. இந்தச் சளக் கூட்டத்துக்குள்ள, இந்த வெளிச்சத்துக்குள்ளை இப்ப என்ன என்ன செய்யச் சொல்லிறாய்? எனக்குக் கால் ரெண்டும் விண்வின் எண்டு உளையுது”. ஆச்சி சளசளக்கத் தொடங்கி விட்டாள். மணிக்கு தம்பியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “அந்தப் பக்கமாகக் கூட்டிக் கொண்டு போயிட்டுவாறன்” என்று தலை சிலுப்பி நின்ற இராட்சத மரத்தடியினை மணி, ஆச்சிக்குக் காட்டினான். “சரி, கவனமாகக் கூட்டிக் கொண்டு போட்டு. இந்த வயிற்று மரத்துக்குக் கீழை சுறுக்காக வந்து விடு” என்று ஆச்சி சொன்னாள். மணி, தம்பியை அழைத்துக் கொண்டு மரத்தடிக்குச் சென்றான்.

மரத்தடிக்குப் போகும் வழியிலே சின்னச் சின்ன லாம்புகளைக் கடகத்தின் முன்னே வைத்துக்கொண்டு கடலக்காரிகள் வரிசையாக இருந்தனர். திடீரென்று மணியின் கண்கள் ஒரு லாம்பு வெளிச்சத்தினிலே போய்க் குத்திட்டன. அந்த லாம்பு வெளிச்சத்தின் மங்கிச் சிதறும் ஒளியில் அந்த வட்டமுகம்; வெற்றிலைச் சிவப்பான வாய், சிவப்புச்சீலை – மணியினுடைய இருதயம் திக்கென்றது. அந்த உருவம் வெகு நிச்சயமாக அவனுடைய தாயே தான். அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து ஒரு சிவப்பான ஆள் சிரித்துக் கதைத்துக்கொண்டிருக்கின்றான். அவனுக்கும் உருண்டை முகம். மீசையில்லை. எதற்கோ சிரித்துக்கொண்டு அவளுடைய தோளிலே அவன செல்லமாகத் தட்டுகின்றான். அந்தக் காட்சியினக் கணப் பொழுதில் மணியின் கண்கள் விழுங்கிக் கொண்டன. மணியின் உடம்பு நடுங்கியது.

மணி, அந்த வழியாகப் போகாமல் வேறு ஒரு வழியாகப் போய்ச் சின்னராசாவை சிறுநீர் கழிக்க விட்டு விட்டுத் திரும்பக் கூட்டிக்கொண்டு வந்தான், சின்னராசாவுக்குத் தாயைக் காட்டலாமா? என்று கூட அவன் நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தடுத்தது. மீண்டும் கண்களைக் கூசிப்பார்த்தான். அவர்கள் இருவரும் இப்போதும் சிரிப்பும், களிப்புமாயிருக்கின்றார்கள்.

விறிசும், வாணங்களும், வெடிகளும், ஆகாய வெளியை வெளிச்சத்சினுள் மூழ்கடித்துக்கொண்டிருக்கின்றன. ஒலிபரப்பாளர்கள் பகடியாக விமர்சனம் செய்து கொண்டிருந்தார்கள். சனவெள்ளம் குலுங்கிச் சிரித்து ஆர்ப்பரித்தது. மணிக்கு எதிலுமே மனம் ஒட்டவில்லை. அந்தக் காட்சி, மனதினுள் சித்திரமாகப் பதிந்த காட்சி. அவனது கண்ணேதிரே தோன்றித்தோன்றி வளர்ந்து கொண்டிருக்கின்றது. விறைத்துப்போன கால்களை ஆச்சி கைகளால் உரஞ்சிக் கொண்டிருக்கிறாள். “இனிப் போவோம்” என்றான் மணி. சின்னராசாவுக்கு அங்கேயிருந்து போகவே விருப்பமில்லை. ஆச்சி எழுந்து விட்டாள். இனி ஏதும் சொன்னால் அவள் சளசளப்பாள் என்ற நோக்கத்துடன் சின்னராசா எழுந்து அவர்களைப் பின் தொடர்ந்தான்.

மூசி மூசி முன்ேைல நடந்து செல்லுகின்ற ஆச்சியைப் பற்றி நினைக்கின்றான் மணி. இந்தத் தளர்ந்த வயதிலும் அவள் அவர்களின் ஆசைக்காகத் தான் களைக்கக் களைக்க நடந்து கொண்டிருக்கின்றாள். ஆச்சியை நினைக்கப் பாவமாக இருக்கிறது மணிக்கு. தன்னுடைய கஷ்டங்களையெல்லாம் மதிக்காது ஆச்சி அவர்களுக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கின்றாள். ஆனால் ஆச்சி தாயைப் பேசுகின்ற போதெல்லாம் மணி கோபத்தோடு ஆச்சியை எதிர்த்துக் கொடூரமாகப் பேசிப் பேசி அவளை அழவைத்திருக்கின்றான். ஒரு நாள், சிவப்பு நிறச் சீலையை உடுத்துக்கொண்டு தோளெல்லாம் வழியும் கூந்தலை அள்ளி முடிந்தபடி தாய் புறப்பட்டுச் சென்றபோது ஆச்சி திட்டிய திட்டுச்கள் மணியின் ஞாபகத்திற்கு வருகின்றன.–‘உனக்கேன் இந்தக் குலுக்கும் மினுக்கும் இருட்டும்வரையிருந்திட்டு வெளிக்கிட்டிட்டியோ யாவாரமெண்டு…’- அதன் பின்னர் வார்த்தைகள் நீளுகின்றன. தாயின் முன் இப்படி வெகுகாரமாக ஆச்சி கதைக்கமாட்டாள். அவளின் பின்னே தான் எல்லக்காரமான அருவருப்பூட்டும் கதைகளும். முன்னே கதைக்கும் வார்த்தைகளோ குறி தவறிய அம்புகள் போல. ஆத்திரம் கொதிக்கின்ற உள்ளத்தோடு மணி மாமரத்தின் கீழே வந்து நின்றான். புஸ்புஸ் ஸென்று மூச்சிழுத்தக்கொண்டு உழவாரமும், கடகமாய் ஆச்சி வருகினறாள். மணி கோபம் நுரைக்கத் திட்டுகின்றான் . அம்மாவை நீ திட்டுக்கின்றாய். பிறகு என்னை உனக்கு வேலை செய்ய வரச் சொல்லிறாய். தாய் கூடாது. பிள்ளை நல்லதோ! என்னாலை வரேலாது நீ போ…அங்காலை போ… – நெஞ்சைக் கூரிய அலகுகள் போலக் கொத்திப் பிடுங்குகின்ற சொற்கள். ஆச்சியின் கண்களிலே கண்ணீர் அருவியாகப் பெருக்கெடுக்கிறது ‘என்ரை குஞ்சுகளே, உங்களுக்காகத் தானே நான், நான் பெத்தமகளையே பேசிப் பேசி அழுகிறன்’…

ஒவ்வொரு காட்சியாக வந்து மணியின் மனதினுள்ளே அலை அலையாய் மோதுகின்றன. அவனுக்குத் தலைகனத்துக் கனத்து வலித்துக் கொண்டிருக்கிறது.


நித்திரையிலிருந்து திடுக்கென்று விழித்தெழுந்தான் மணி. இரவு. அவன் சாப்பிடாமலே படுத்தது வயிற்றை விறாண்டிக்கொண்டிருந்தது. குடிசையெங்கும் இருள் இருண்டு கனத்திருந்தது. வெளித் திண்ணையில் மட்டும் வழமைபோலவே சின்னலாம் பொன்று மினுக் மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. இருளுக்குக் கண்களைப் பழக்கப் படுத்திக்கொண்டு கண்களாலேயே அந்தப் பாயைத் தடவினான் மணி. அந்த நீண்ட பாயிலே தான் மணியும், சின்னராசாவும், அன்னலெட்சுமியும் படுப்பது வழக்கம். சின்னராசா மணிக்குச் சிறிது தள்ளிக் குறட்டையிழுத்துக் கொண்டு கிடந்தான். தாய்படுத்திருக்குமிடம் வெறுமையாகக் கிடந்தது. சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளக் கைகளினாற் பாயைத் தடவினான். வெறுமை.

மணி, மெல்ல எழுந்து திண்ணையில் எறிகின்ற லாம்பை கொண்டு பெட்டகத் தடிக்குப் போனான். பெட்டகம் வெறுமையாகக் கிடந்தது. சுவர்க்கோழியின் மூளையை எரிச்சலூட்டும் கிறீச்சிடலைத் தவிர அங்கு வேறோர் ஒலியுமில்லை அப்புவும் ஆச்சியும் குடிசைக்குள்ளேயே கிடந்தார்கள்.

வேம்பிலே கட்டி நின்ற மாடு அம்மா என்று கத்தியது.

மணி, அடுக்களையின் முன்னாலேயுள்ள மாமரத்தின் கீழே வந்து நின்றான். மாம்பூக்கள் லேசாய் மணத்தன. வானத்தை நிமிர்ந்து பார்த்தான், உதய நிலவு, நீலவானத்தின் கீழ்க் கோடியில் ஒலி வெள்ளத்தைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது. உச்சி வானத்தில், படுத்துக்கிடக்கும் வெண் சடை நாய்க்குட்டி போல ஒரு துண்டு முகில். மாமரத்தடியிலிருந்து படலையடிக்குச் சென்று, படலையைத் திறந்து றோட்டைப் பார்க்கின்றான் மணி. வீதியில், வெகு தொலைவிலே ஒரு மின் மினிப் பூச்சி போல வெளிச்சம் அசைந்து கொண்டிருக்கின்றது. வருவது அவனது தாயாகத் தான் இருக்க வேண்டுமென மணி நினைத்தான். அவன் அச்சமின்றிப் படலையடியிலே நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றான்…..

கிட்டடியில் வந்ததும், படலையோடு நிற்கின்ற மணியைக் கண்டதும் அன்னலெட்சுமி திடுக்கிட்டுப் போய் விட்டாள். வார்த்தைகள் அவளைக் கால்களை வாரிவிட்டு ஏய்த்தது அன்றைக்குத் தான். அன்னலெட்சுமி தன்னைச் சமாளித்துக் கொண்டு, “இந்த நேரம் ஏன்ராசா வெளியாலை வந்து நிற்கிறாய்?” என்று கேட்டாள்.

மணி பேசாது விறைத்துப் போய் நின்றான். அவளூடைய ஆகிருதியே கரைந்து போனது போலவும், வார்த்தைகளெல்லாம் அர்த்தமற்றுப் பொனது போலவும், அன்னலெட்சுமியின் மனம் கலக்க முற்றது. மணியின் முன்னே தான் ஏன் அப்படியானாள் என்பது அவளிற்கு விளங்காமலேயே, அவனது பதிலிற்காகக் காத்திருந்து தோற்றவளாய்க் கேட்டாள் அன்னலட்சுமி.

“தம்பி, நீ சாப்பிட்டு விட்டாயோ ?”

மணி மெல்லச் சொன்னான்.

“நீங்க போய்ச் சாப்பிடுங்கோ ….”

பெட்டகத்தின் மேலே கடலைக் கடகத்தை வைத்துவிட்டுக் கிணற்றடிக்குப் போய் முகம் கழுவி விட்டு வந்த அன்னலெட்சுமி மீண்டும் மணியைச் சாப்பிட வரும்படி அழைத்தாள். மறுப்பிற்குப்பின் அன்னலெட்சுமியின் வற்புறுத்தலைத்தட்டமுடியாது அவளின் பின்னே நடந்து போனான் மணி.

அன்னலெட்சுமி வேர்த்துப்போன சோற்றினைக் குழைத்து உருட்டி மணியின் கைகளில் வைத்தாள். கையிறைகளில் குழையல் சோற்றின் சொதி வழிந்து கொண்டிருந்தது. கையிலிருந்த சோற்றுக் குழையலையே சில கணம் பார்த்து விட்டுத் தன்னை மீறியதோர் துணிவினிலே தாயைப்பார்த்தபடியே கேட்டான் மணி.

“முத்தவெளியிலை நீங்க ஆரோடை இருந்து கதைச்சுக்கொண்டிருந்தனீங்க ?”

அலை ஒன்றால் தூக்கி எறியப்பட்டுத் தலைகுப்புற விழுந்தவள் போல அதிர்ச்சியுற்ற அன்னலெட்சுமி கணந்தன்னில் தன்னைச் சமாளித்துக் கொண்டாள். குரல் அதட்டிற்று.

“ஆரோடை? எப்ப?”

“இண்டைக்கு. ஒரு சிவப்பு மனிச னோடை”

அன்னலெட்சுமி அசடு போலச் சிரித்தாள்.

“நான் இண்டைக்கு முத்தவெளிக்குப் போகேல்லை. சிவன் கோயிலுக்குத்தான் போட்டு பள்சை விட்டிட்டு நடந்து வாறன்.”

அவளுடைய குரல் தாழ்ந்து ஒலித்தது. மணியால் ஒன்றும் பேசமுடியவில்லை. புஸ்ஸென்று காற்றுப்போய் விட்ட பலூனைப்போல அவனுடைய உணர்ச்சிகள் தொய்ந்து போயின.

அவனைப்போய்ப் படுக்கச்சொல்லி விட்ட, திண்ணையிலிருந்து வெற்றிலை சப்பிக்கொண்டிருந்த அவளின் முகத்தில் வழிந்த கண்ணீர் பால் நிலவொளியில் துவங்கித் தெரிந்தது.


ஆச்சி நித்திரையால் எழுப்பிய போது தான் திடுக்கிட்டு விழித்தான் மணி. வழமைபோலவே எல்லோருமே எழுந்து கிணற்றடிக்குப் போனார்கள். மணி சாயை நிமிர்ந்து பார்க்கவுமில்லை அந்நியன் போன்ற மனோபாவத்தோடு விலகி நடந்தான். அன்னலெட்சுமியோ ஒன்றையும் மனதிலே கொண்டிராதவள் போல பிள்ளைகளிருவருக்கும் பொதுவாக அடிக்கடி எதையாவது சொல்லிக்கொண்டிருந்தாள். சுவாமிப் படத்தின் முன்னால் நின்று தேவாரம் பாடுகின்றபோது மணி தன் தாயை ஓரக் கண்களால் பார்த்தான். அவள் வழமைபோலவே கைகளைக் குவித்துக் கண்களை மூடிக் கொண்டு நின்றாள்.

மணி நன்றாக நினைத்துப்பார்க்கின்றான். தாய் ஒருபோதும் பொய் சொன்னதாக அவனுக்குத் தெரியாது. பொய்சொல்லக் கூடாது, களவெடுக்கக் கூடாது என்று சிறுவயதிலேயிருந்து அவள் அடிக்கடி தங்களுக்குக் கூறிவருபவள். அவள் பொய்சொல்பவள் என்று நினைப்பதே பெரிய கஸ்டமாயிருக்கின்றது. நேற்று நான் முற்ற வெளியில் கண்டது அம்மாவாக இருக்குமா? அம்மாவிடம் நானே துணிந்து கேட்டபோது அவள் எனக்குச் சொன்ன பதில்தான் உண்மையானதாக இருக்குமா? நான் கண்ட பெண் தான் இல்லையென்று அம்மா சொல்லுறா. அப்படியானால் அது அம்மா போன்ற வேறுயாராவதாக இருக்குமா? மணியின் மனம் இன்னமும் தெளிவடைந்து ஒரு நிலைமைக்கு வரவில்லை.

சாப்பிட்டு முடிந்ததும் வழமை போலவே அன்னலெட்சுமி திண்ணையிலே போய் உட்கார்ந்திருந்தாள். சின்னராசா, தாயின் பக்கமாகப் போனான் நீல நிறமாள சீலைத்தலைப் பில் முடித்து வைத்திருந்த பதினைந்து ரூபாவை அவிழ்த்தெடுத்து ஆச்சியிடம் கொடுத்து விட்டு வரும்படி சொன்னாள் தாய். அவள் முடிச்சவிழ்ப்பதையே வெகு கவனமாகப் பார்த்துக்கொண்டு நின்ற சின்னராசாவின் மனதில் எண்ணமொன்று ஓடியது .. அம்மாவுக்கு கடுங்கலர்ச்சீலையள் உடுக்கிறதெண்டால் சரியான விருப்பம் எப்பபார்த்தாலும் கண்ணைக்குத்துகிற கிறங்கள் தான் வாங்குவா. அது தான் அவவுக்கு வடிவும்…

ஆச்சியிடம் காசைக் கொடுத்து விட்டு மீண்டும் வந்து தாய்க்குப் பக்கத்திலே சின்னராசா உட்கார்ந்தான். அன்னலெட்சுமி அவனைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டே, இராத்திரி வாணவேடிக்கை எப்பிடி ராசா இருந்தது’ என்று கேட்டாள். ‘நீங்கள் இதுகளுக்கெண்டால் வாறதில்லை’ என்ற பீடிகையோடு மனத்திற்குள் சேர்த்துவைத்திருந்த புளுகு கலந்த நினைவுகளை அவிட்டுக்கொட்டத் தொடங்கினான் சின்னராசா. கைகளும் அங்கே பாவனைகளால் வாண வேடிக்கை ஒன்றையே நடத்திக் காட்டின. மகனை இளமுறுவலோடு பார்த்துக்கொண்டிருந்த தாய், தனக்கு முன்னே அடிக்கடி நடந்து போகும் மணியைக் காணாததால் மனதினுள் வியா கூலமடைந்தாள். நேற்று அவன் கதைத்த கதைகள். பார்த்த பார்வைகள். இன்று காலை தன்னோடு நடந்து கொண்ட ஒதுக்க மனோபாவம் யாவுமே மனதிலே அடுக்கடுக்காக வந்து கொண்டிருந்தன. கடைசியாகச் சின்னராசா மீண்டும் கேட்டான்: நீங்களும் வர்ண வேடிக்கைக்கு வந்தால் நல்லாயிருந்திருக்கும். எங்களுக்கும் நல்ல சந்தோஷமாயிருக்கும். ஆச்சியோடை போனால் பெரிய கரைச்சல். அங்சையிங்கை அசைய விடா. சும்மா புறுபுறுப்புத் தன் உங்களோடை போனால் தான் சந்தோஷம். இனி எங்கை போற தெண்டாலும் நீங்க வரவேணும். வருவியளோ?”

“இனி வாறன் ராசா’ என்றபடி அன்னலெட்சுமி சின்னராசாவை மிக்க அன்போடு பார்த்துப் பெருமூச் செறிந்தாள்.

அப்போது அடுக்களையிருந்து வெளியே வந்த ஆச்சி சின்னராசாவுக்குச் சொல்வது போல உரத்த குரலிற் சொன்னாள்.

“நானும் அப்புவும் இண்டைக்குப் பின்னேரம் மூத்தவள் பரிமளத்திட்டைப் போறம். நாலு நாளிலை திரும்பி வந்து விடுவம் – கொம் மாவை யாவாரத்துக்கு அங்கை இங்கை போகவேணா மெண்டு சொல்லு”.

IruttumVarai-pic

தாயின் பட்டும் படாத கதைகளைக்கேட்டு மனத்திற்குள்ளே சிரித்தாள் அன்னலெட்சுமி.

“மணியையும் துணைக்குக் கூட்டிக் கொண்டு போகச் சொல்லு”.

“மணி எங்களோடை வரவேண்டாம். அவன் பள்ளிக்குடத்துக்குப் போறவன். நானும் அப்புவுயாய் போயிட்டு வந்திடுறம். மாட்டுக்குப்புண்ணாக்கு வைக்கவேணும். வத்தகையள் இந்த ஆளையெரிக்கிற வெக்கை யுக்குள்ளை கருகிப்போயிடும். அதுக்குந் தண்ணி ஊத்துங்க. இவங்களுக்கு நேரத்துக்கு நேரம் எல்லாம் செய்து குடுக்கவேணும். எங்கையும் போயிடாதை”

ஆச்சி சொன்னதைப் பற்றி ஒன்றுங் கூறாமலேயே பதில் சொன்னாள் அன்னலெட்சுமி.

‘றங்குப்பெட்டிக்குள்ளை வெளுத்த சீலை கிடக்குது. அதை எடுத்துக் கொண்டு போகச்சொல்லு. அக்கா வீடு, பிள்ளையள் உள்ள இடம். போகேக்குள்ளை நல்ல தாப்பாத்து இரண்டு வத்தகப்பழம் பிடுங்கிக் கொண்டு போகச் சொல்லு அல்லாட்டில் ஏன். நானே பிடுங்கித்தாறன்’

ஆச்சி எல்லாவற்றிற்கும் பொதுவாகக்கண்ணசைத்து விட்டுத்தன்னுடைய இடுங்கிய கண்களால் கூர்ந்து பார்த்தாள் அன்னலெட்சுமியை.

எனக்கு இவள் அன்னம் ஒரு தேவதை மாதிரி வந்து பிறந்தாள். இவள் ஒரு ராசகுமாரத்திபோல வாழ வேண்டியவள். இப்ப எப்படிப்பட்ட மரம் போலை போயிட்டாள். எவ்வளவு திட்டினாலும் என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு சொல்லுப்பேசியறியாள். இவளுக்கு இப்படியொரு உலைஞ்ச விதிவருமெண்டு ஆருக்குத்தெரியும்? நான் என்ன செய்ய?

ஆச்சியின் மனக்கண்களில் கண்ணீர் பெருயோடிற்று.

எங்கோ கண்காணாத தொலை துரத்திற்குச் செல்வதுபோல சின்னராசாவையும், மணியையுங் கட்டித் தழுவிக் கண்ணீர் சொரிந்து விட்டு ஆச்சி தன்னுடைய மூத்த மகள் பரிமளத்திடம் சென்று இரண்டு நாட்கள் போய்விட்டன.

அன்னலட்சுமிதான் வீட்டிலே எல்லா வேலகளையும் செய்துவந்தாள். அவள் கடலை விற்பதற்குப் போகவில்லை. சின்னராசாவும் மணியும் எல்லா அலுவல்களிலும் தாய்க்கு மிகவும் ஒத்தாசையாக இருந்தார்கள். மணி, தாயோடு முன்பு போலச்சரளமாகக் கதைக்கா விட்டாலும் அவள் சொல்வது யாவற்றையும் கேட்டு நடந்தான்.

மூன்றாம் நாள் மத்தியானம் பள்ளிக்கூடத்திலிருந்து மணியும் சின்னராசாவும் வீட்டிற்குச் சாப்பிடவந்தார்கள். சாப்பிடுவிட்டுத் திண்ணைப்பக்கமாக வத்தபோது உரித்த தோட பழத்தோல்கள் சிதறிக் கிடந்தன. சின்னராசா ஒரு தோடம்பழத்தோலைக் குனிந்து கைகளில் எடுத்தான். அன்னலெட்சுமி சட்டன்று நாக்கைக் கடித்துக் கொண்டு உள்ளே சென்று நான்கு தோடம்பழங்களைக் கைகளில் எடுத்து வந்தாள். ‘றோட்டாலை ஒருத்தன் கொண்டு போனான். வாங்கினனான்’ என்று தனக்குள் சொல்வது போல அவர்களுக்கும் கேட்கச் சொல்லிவிட்டு பிறகு ஒரு பழத்தை எடுத்துத்தானே விறுவிறுவென்று உரிக்கத்தொடங்கினாள்.

சின்னராசாவுக்குத் திடீரென்று ஏமாற்றமாகப் போய் விட்டது. எந்த நாளிலாயினும் சரி தங்களுக்குக்கொடாமல் தாய் ஒன்றுமே சாப்பிடமாட்டாள். அதுவும் முதலிலே கொடாமல் சாப்பிடமாட்டாள் என்று பிள்ளைகள் அறிவார்கள். ஆனால் இன்றைக்கோ? குடிசையின் உள்ளே போன மணி, நிலத்திலே அரைகுறையாகக் குலைந்திருந்த பாயை இறக்கி ஒழுங்காகச் சுற்றி வைத்தான். அவன் இன்று காலையில் தான் பாயை ஒழுங்காகச் சுற்றிவைத் தான். தலையணைகள் இரண்டும் வைத்த இடத்தில் இல்லாமல் கீழே பாயருகில் விழுந்து கிடந்தன.

வெளியே நின்று உள்ளே வந்த அன்னலெட்சுமி, ‘என்ன தேடுகிறாய்? இந்தா தோடம்பழம். சுறுக்காகத் திண்டிட்டு நிழலுக்குள்ளாலை தம்பியையும் கூட்டிக் கொண்டுபோ’ என்றாள்.

மணி, தலையணைகளைப் பாய்களின் மேல் வைத்து அடுக்கிவிட்டுத் தோடம் பழச் சுளைகளைக் கையிலே வாங்கிக் கொண்டான்.

– தொடரும்…

– அஞ்சலி மாத சஞ்சிகை – ஆகஸ்ட் 1971

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *