இராமாயண கலகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 174 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொனியை ரித்தெடுக்க நேரயோத்திய

சதையானவள் தன் பொறுமையின் சுமை எவருக்கும் தெரியாது போய்விட்ட நிலையில், தன் கதையையே ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள். இராமன், அவன் தேசத்து மக்கள் தன்னை விமர்சித்த தொனியை வைத்து ஒதுக்கியதையும், அதனால், புத்திரர்களைத் தனியே வளர்த்தெடுக்க நேர்ந்ததையும் யோசித்துக் கொண்டாள். தேவர்களுக்கொப்பான அயோத்தியாபுரி மக்களே தன்னைச் சந்தேகிக்க நேர்ந்ததை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்தாள். எந்த உயிர் விவகாரமும் மனக்குறுக்கல்களின் வீச்சுக்குத் தப்பி நடக்க முடியாதா’ என்கிற ஏக்கம் வர ஆரம்பித்தது. இந்த மனித கணங்களின் மனக்குறுக்கல்களுக்குத் தன்னையே தண் டித்துக்கொள்கிற மாதிரி இராமன், வனவாசத்திற்குத் தன் மனைவியையே அனுப்பிவைத்திருக்கிறான். மக்களுக்கு இதனால் அறிவு வந்துவிடுமா? இராமனின் ஆட்சியில் கவலை வர இடமேது?

தன் புத்திரர்களை இராமன் அயோத்திக்குக் கொண்டு போய்விட, எந்த மண்ணில் இருந்து வந்தாளோ அந்த பூமியே திறந்து, அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளப் போவதற்கு முன் தன் மனச்சுமையை இறக்கிவைக்கும் வண்ணமாக அயோத்தியாபுரி மக்களை நினைத்து, உண்மையும் நேர்மையும் இவர்களுக்கு என்றுமே தெரியப்போவதில்லை’ என்று ஏங்க லானாள். இராமனை நினத்துக் கைகூப்பிப் பூமாதேவியுடன் ஐக்கியமானாள்.

இது ஒரு சாபமாகிப் போனது.

இராமன் சீதையைக் காட்டிற்கு அனுப்பியது தெரிந்ததி லிருந்து விபீடணனுக்கு கவலையெடுத்தது. தன் தமையனின் செயல்களால் அவனை எதிர்க்கும் தருமசங்கடத்தில் இருந்த போது, இராமனின் சாத்தியப்பாதையின் வலிவே அவனுக்கு உதவியாக இருந்தது. விபீடணன் தன் சந்ததியரிடம் இலங்கையின் பாரத்தைக் கொடுத்துவிட்டு வானப்பிரஸ்தத்திற்குத் தயாரானான்.

இராமன் காலமும் முடிந்தது. அயோத்தியாபுரியில் இரகுகுல வம்சத்தினருக்குள் முரண்பாடுகள் தோன்றலாயின.

வானர அரச வம்சத்துக்குள்ளும் பூசல்கள் பெருகின. பல்வேறு மக்களும் அவ்வப்போது கலகநிலைக்குள்ளானார் கள். தேவர்களானாலென்ன மனித கணங்களானாலென்ன அவ்வப்போதான கலகநிலைக்குத் தப்ப முடியாது போயிற்று.

தன்னில் இப்பாரங்களை ஏற்ற பூமாதேவிக்கு, தன் சீதைப் பிராயத்தில் நடந்த சம்பவங்களினால் மனம் கல்லாகிப்போனது. உலகக்காப்பாளன் தனக்குப் பூமாதேவியின் முடிவு தெரிந்ததே என்று புன்னகைக்கலானான்.

இரகுகுல வம்சத்தினரும், வானரதேச அரச வம்சத்தின ரும், விபீடண வம்சத்தினரும் அவ்வத் தேசத்து மக்களும் சந்ததி சந்ததியாகப் பலவாறாகவும் பல நேரங்களிலும் கலகப் படலானார்கள்.

உலகக்காப்பாளன் சயன நிலையில் இருந்து புன்னகைக்க லானான். பூமாதேவி பொறுமையுடன் இருந்தாள்.

அவ்வப்போது அமைதியும் இருந்தது.

கலகங்கள் பல்வேறு விதமாகவும் இருந்தன. சண்டை களாகவும் இருந்தன. விவாதங்களாகவும் இருந்தன. பூசல் களாகவும் இருந்தன. தங்கள் நாடென்றும், தங்கள் வீடென்றும், தங்கள் காணியென்றும் முரண்பட்டார்கள். செல்வம் சேர்க்கும் சண்டைகளும் இருந்தன.

கலகங்கள் நிலையாகிற நிலை ஏற்படலாயிற்று. அயோத் தியாபுரியையும் ஈழத்தையும் அந்நியர் படையெடுக்கலாயிற்று. வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் படையெடுப்புகள் பெருகக் கொஞ்சம் கொஞ்சமாக வானர தேசமும் மாறலாயிற்று. பிரிவுகள் வளர்ந்து கொண்டேயிருந்தன.

காப்பாளன் தன் புன்னகையையும் நிறுத்தவில்லை; பூமா தேவியும் தன் பொறுமையையும் இழக்கவில்லை.

வானர மன்னருக்குத் தெற்கிலிருந்தும் உதவி கிடைத்தது. விபீடண வம்சத்து மன்னர் அவ்வப்போது வடக்கிலிருந்தும் உதவி பெற்றுக் கொண்டார்கள்.

மக்களை நிறுத்த முடியுமா? வடக்கேயும் தெற்கேயும் தங்கள் வாழ்க்கைகள் இழுத்தபடி போய் வந்து கொண்டிருந்தார்கள். சேது அணை ஈழத்துப் போக்குவரத்துக்கு உதவியாக இருந்தது.

காலப்போக்கில் தேவர்கள், வானரர்கள், அரக்கர்கள் யாவரும் மனிதர்களானார்கள். நாட்டு நிலவரங்கள் யாவை யும் மாறிப்போயின.

வெட

இராமாயண கலகம்

– ஸ்ரீதரன் கதைகள்

ஆனால், கலகங்கள் நிற்கவில்லை. பூமாதேவியின் பொறுமை யிலும், உலகக்காப்பாளனின் புன்னகையிலும் மாற்றம் எதுவும் இல்லை .

செல்வங்கள் சேர்ந்தென்ன, இலக்கியங்கள் வளர்ந்தென்ன, கலகங்கள் நின்றபாடாக இல்லை. கோவில்கள் வெறுமே பெருகி, விரதமிருந்து, இயற்கையாய் விளைந்ததையும் நெருப்பில் பொங்கியதையும் படைத்து, ஊர்ப்பவனி வந்து, கூத்தாடிக் கோலாகலப்பட்டு இறைகளுக்கு விழா எடுத்தென்ன, கலகங்கள் நின்றபாடாக இல்லை.

கலகம் மிகுந்த போது அமைதியடைய வேண்டுமென்றி ருந்தது.

அமைதி வந்ததும் உண்டு.

அமைதி இருந்தபோது கலகநிலைக்கு வித்திடுவோர் தோன்றினர்.

தெற்கிலிருந்தவர்களுக்கு வடக்கேயுள்ளவர்கள் மேலான அந்நியர்களாகத் தோற்றினார்கள். வடக்கேயிருந்தவர்களுக்குத் தெற்கேயுள்ளவர்கள் கீழான அந்நியர்களாகத் தோற்றினார் கள்.

இக்காலவோட்டத்தில், மன்னர்கள் வம்சம் தொடர்ந்தது போன்று படகோட்டி குகனின் வம்சமும் தொடர்ந்தது; பட கோட்டும் தொழிலும் தொடர்ந்தே வந்துகொண்டிருந்தது. அவ்வம்சத்துத் தோன்றலொருவனுக்குப் பரதன் என்று பெயர் வைத்திருந்தார்கள். அறிவுள்ளவனாகவும் உற்சாகமானவனாகவு மிருந்தான். சிறுவயதிலேயே பல மனிதர்களையும் சம்ப வங்களையும் படகுத் தொழிலால் பார்த்தவனாகவுமிருந்தான். பரதனுக்கு இராமனின் கதை அவன் தந்தை வழி முன்னோர் களால் தெரிந்திருந்தது. அவர்கள் போலவே, இராம குடும்பத்தில் பக்தி மிக உள்ளவனாக இருந்தான். பரதன் இளவயதின னானாலும், இவ்வுலகை அறிய வேண்டுமென்கிற அவாவுடைய வனாக இருந்தான். அவனுக்கு, இராம கதையின் முழு விவரங் களையும் அறிந்து, உணர்ந்து சேவித்துக்கொள்ள வேண்டுமென்கிற

ஞான நோக்கு வயதையும் மீறி எழலாயிற்று.

எப்படியாவது இராமன் இருந்த அயோத்திக்குப் போய் வர வேண்டுமென்கிற எண்ணம் அவனுள் உருவாகியது.

படகோட்டுவதைத் தன் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கு நோக்கிப் போனால், அயோத்தி நகர் சிதிலமடைந்தி ருந்தது. விசாரித்துப்பார்த்ததில், மன்னர்கள் வேறு இடத்தில் நகர் அமைத்துக்கொண்டு போய்விட்டதாக அவ்விடத்து மக்கள் சொன்னார்கள். “இராம கதை தெரியுமா?” என்று பரதன் கேட்டபோது, ஊரில் ஒரு முதிய கிழவனுக்குத்தான் தெரியும் என்று சொன்னார்கள். பரதன் அந்தக் கிழவனைத் தேடிக் கொண்டு போனான். போனது, வீண் முயற்சியானது; கிழவன் கிடைக்கவில்லை. பரதன் மிதிலை நகர் நோக்கிப் புறப்பட்டான்.

இராமாயண கலகம்

ஸ்ரீதான் கதைகள் –

செய்து தாய் வற்

“சீதா தேவியே! பொறுமையின் எல்லையே! தங்கள் காலடி 280 பட்ட இடத்தைத் தரிசிக்க அருள் வேண்டும்” என்று பிரார்த் தித்துக்கொண்டு போனால், மிதிலை நகர் எங்கிருக்கிறது என்றே பலருக்குமே தெரியவில்லை. மிதிலை என்று சிலர் காட்டிய ஊரும் சிதைந்திருந்தது. சிதிலமடைந்த அரண்மனைக் கட்டடக்

கற்கள் குவியலாக இருந்தன.

“சீதாபிராட்டியே , இராமன் உன்னைக் காட்டிற்கு அனுப்பியதால், இந்தச் சாபமிட்டனையோ!” என்று பரதன் நொந்து கொண்டான்.

ஒவ்வோரிடத்துக்குப் போகவும் பல நாட்களாயின. அவன் மனமுடைந்து தன் ஊருக்கு வந்து சேர்ந்தான்.

மன்னர்கள், தேச எல்லைகள் யாவுமே எங்கும் மாறி யிருந்தன. “இராமபிரானே! தங்கள் சீதாபிராட்டியை மக்கள் அவதுாறு சொன்ன காரணத்திற்காக, இந்தச் சாபமிட்டுச் சென்றீரோ” என்று வணங்கலானான்.

ஊருக்குத் திரும்பி வந்த பரதனின் மனக்கவலை நிற்க வில்லை . பஞ்சவடிக்குச் சென்று சீதையும் இராமனும் தடம் பதித்த பூமியை வணங்கலாம் என்று தீர்மானித்தான். “விவா கம் செய்து கொள்” என்று தாய் வற்புறுத்தினாள். “உலக விவரம் தெரிந்த பின்னர் செய்து கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் பரதன் பஞ்சவடி தேடிப் புறப்பட்டான். பஞ்சவடி எங்கேயென்று யாருக்கும் தெரியவில்லை . அவன் பேசியது எவருக்கும் புரிய வில்லை. மக்கள் பல்வேறாகவும் பேசிக்கொண்டார்கள். மொழிகள் மாறுபட்டிருந்தன. காவியுடையில் பல்வேறு மனிதரைப் பார்த் தான். ஆனால், எவரும் முனிவர்கள் மாதிரித் தோன்றவில்லை . பல படகோட்டிகளைப் பார்த்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

அவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

தங்களுக்கு வேறு எதிர்காலமில்லை என்பதாலேயோ என்னவோ கிழவர்களுக்கு மட்டுமே பழங்கதைகளில் ஆர்வம் இருந்தது. சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். இளை ஞர்கள் இன்பத்தைத் தேடிக்கொண்டிருந்தார்கள். நடுத்தர வயதினர் குடும்ப பாரத்தைச் சுமந்துகொண்டிருந்தார்கள். ஒரு கிழத் தம்பதியரே, பஞ்சவடி என்கிற இடத்துக்கான பாதையை பரதனிடம் சொல்லிவிட்டு, “அப்பாதைக்கூடாகப் போகும் சக்தி தங்களுக்கு இல்லை” என்று பின் தங்கிவிட்டார்கள்.

காட்டில் எதுவும் தெரியவில்லை . பஞ்சவடியைத் தேடி அலைந்தானே தவிர, தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இராமனை யும் சீதையையும் மனதில் நிலைநிறுத்தி, இலக்குவனையும் மனதில் ஏற்று எங்கெங்கும் தேடிப்பார்த்தான். வனவிலங்கு களையும் அக்கறை அற்ற மனிதரையுமே எதிர்கொள்ள நேர்ந்தது. ஒருவருக்கும் இடம் தெரியவில்லை .

“என்மனத்திறைவனே! நான் உன்னைப் பார்ப்பதென்பது முடியாது. உன் தடங்களே உன் பிரதிநிதிகள். நான் உன்

தன் பஞ்ர்

UNEL

இராமாயண கலகம்

– ஸ்ரீதரன் கதைகள்

தடங்களைக் கண்டு வணங்க வரம் தருக!” என்று பிரார்த்தித் துக்கொண்டான். தன் பாட்டன் சொன்ன கதைகள் நினைவி லெழுந்தன. அவன் மனமே அசரீரியாக , ” சேதுவுக்குப் போ” என்று கட்டளையிட்டது.

மனதில் வலிவு ஏற்றுக்கொண்டு தெற்கே சேது அணை யைத் தேடிக்கொண்டு பயணமானான். பாதையில் எதிர் கொண்ட மற்றக் கடினங்களைப் போல் மொழி வித்தியாசங் களும் அவனை வருத்தலாயின. அவன் ஒன்று சொன்னால் வேறோர் அர்த்தமாக இருந்தது. அவன் போன ஊர்களில்

அவன் மொழி தெரிந்தவர்கள் குறைவாகவே இருந்தார்கள். பிரயாணத்தின் மூலமாக மொழிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிகளையும், மனித உயிர்க்கோப்பின் உள்வடத்தின் தொடுப் புகளையும் கொஞ்சங்கொஞ்சமாக அறிந்து கொள்ளலானான்.

போன பாதையில் செழிப்பும் இருந்தது. வறுமையும் இருந்தது. அறிவும் இருந்தது. அறிவின்மையும் இருந்தது. அன்பும் இருந்தது. வெறுப்பும் இருந்தது.

ஆறுகள் கரைகளுக்குள் நிதானமாக ஓடும் காலமும் உண்டு. வெள்ளப்பெருக்கெடுப்பதும் உண்டு. “இராமனே வழிகாட்டு! வழிகாட்டு!” என்று பிரார்த்திக்கொண்டே போய்க்கொண் டிருந்தான்.

தெற்கே போகப்போக ஆலயங்களும் வழிபாடுகளும் பெருகியிருப்பதைக் கண்டான். ஆனால், கலகங்களும் நின்றதா கத் தெரியவில்லை . யுத்தங்களும் ஓயவில்லை .

பரதன் அலைந்து திரிந்து இராமேசுவரத்தை அடைந்தான். இராமனையே கண்டது போல் புளகாங்கிதமடைந்தான். அங்கே இராமர் அணை, ஒரு தரும் யுத்தத்திற்குப் பேருதவியாய் இருந்த பேறையெண்ணிக் கடலலைகளின் பலம் நிறைந்த வீச்சையெல்லாம் எதிர்த்தபடி, தாயொரு சேயினை அணைக்கு மாப்போல் ஈழத்தைத் தொடுத்தவாறு இருந்தது. மக்கள் இரு பக்கமுமாகப் போய் வந்துகொண்டிருந்தனர். தன் முன்னோர்கள் சொன்ன மாதிரி ஐந்து நாட்களில் இப்பேரணையைக் கட்டி முடித்திருப்பார்களா?

சேதுவை, வானரருதவியுடன் நிலைநிறுத்திய தசரத் குமாரன் இவ்வணைமேல் இலக்குவனுடனும் அனுமனுடனும் வானர சைனியத்துடனும் நடந்து ஈழத்தை எட்டவில்லையா? “இதோ! இதுவே இராமன் கால்பட்ட மண்! இதுவன்றோ இராமனின் தடம்!” என்று சிலாகித்துக்கொண்டான். ஈசுவர வழிபாட்டை இராமேசுவரத்தில் மேற்கொண்டபின்னர், சேதுக்கரையில் அமர்ந்து, இவ்வணைக்குப் பின்னால் இடங்கள் எப்படியிருக்கும் என்று ஆச்சரியப்படலானான்.

அயோத்தி, மிதிலை, பஞ்சவடி என்று தேடி அலைந்த பரதனுக்கு, இராமேசுவரம் ஒரு நிலையான புள்ளியாகத் தோன்றியது. அவ்வூரில் தங்கி, இராமனைத் தியானம் செய்து கொள்ள எண்ணங்கொண்டு அங்கே இடம் தேடலானான்.

வெட

இராமாயண கலகம்

ஸ்ரீதரன் கதைகள் –

அப்போதே தன்னைப் போன்று பல பேர் இராமன் கால் 282 பட்ட மண்ணைத் தேடிக்கொண்டு வந்திருப்பதை அறிந்தான். அவர்கள் ஒரு மடத்தில் தங்கியிருந்தார்கள். அவர்களுடன் ஒரு பொழுது போனது.

“இந்த அணை தொடுக்கும் ஈழம் உள்ளே எவ்வாறிருக்கும்?” என்று அவர்களைப் பரதன் விசாரித்தான்.

“அரக்கர் வாழ்ந்த பூமி” என்றான் ஒருவன். “விபீடணனை அரக்கன் என்று சொல்ல முடியுமா?” என்று இன்னொருவன் கேட்டான்.

“சீதாதேவி பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டிருந்தாளே!” என்றொருத்தி சொன்னாள் . யுத்த பூமிகளையும் தாண்டி, இராமேசுவரம் வந்த கதைகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

“ஈழத்திலும் யுத்தம் நடக்கிறதாமே?” என்றொருத்தன் விசாரித்தான்.

“யுத்தம் இல்லாத இடமேது?” என்று ஒரு முதியவன் விளித்தான்.

இராமேசுவரத்திற்கு வந்ததே போதும் என்றும், தங்கள் ஊர்களுக்குத் திரும்பப் போவதாகவும் பேசிக்கொண்டார்கள்.

காலையில் பரதன், இராமர் அணைப் பக்கம் போய் மறுபடியும் அதன் வியாபகத்தையும் எழிலையும் இரசித்துக் கொண்டான்.

அங்கேயும் அணைப் பக்கமாக ஓடங்கள் இருந்தன. ஆற்று ஓடங்களல்லாது கடல் ஓடங்கள். அலைகளின் வீச்சை எதிர்க்க உறுதியாகக் கட்டப்பட்ட பெரிய ஓடங்கள். மீனவர்கள் அவ்வோடங்களை இலாவகமாகக் கையாள்வதையும் பார்த்துக் கொண்டான். மறுபடியும் தன் மனத்திரையிலிருந்த இராமனின் நடையை இந்தச் சூழலின் பின்னணியில் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தபோது….

திமுதிமுவென்று சத்தம் கேட்டது. தாரைதப்பட்டை களுடன் ஓர் இராணுவ சேனை வருவதைக் கண்டான். யானைகள், குதிரைகள், ஆயுதந்தரித்த வீரர்கள் படைப்படை யாக வந்து கொண்டிருந்தார்கள். அணையில் ஏறி ஈழம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

பரதன் என்னவென்று விசாரித்தான். தெற்கில் யுத்தம் நடக்கிறதென்றும், அவ்வூரரசன் தென்னாட்டு மன்னனிடம் உதவி கோரி, உதவிக்காகப் படை போகிறது என்று தெரிய

வந்தது.

“மறுபடியும் அங்கே கலகமா?” பரதன் யோசிக்கலானான். முதியவர் ஒருவரை அணுகி, ஈழத்தில் அரசி எவளையேனும் சிறைப்படுத்தியிருக்கிறார்களோ என்று விசாரித்துக்கொண்

டான்.

இராமாயண கலகம்

“அங்கே என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. இந்த முறை சேனை ஈழம் நோக்கிப் போகிறது. அங்கிருந்து இங்கு வருவதும் உண்டு” என்று முதியவர் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

“அங்கே போக வேண்டாம்” என்று இன்னொருத்தன் அறிவுரை சொன்னான். பரதனின் வியப்பு அடங்கவில்லை. சேனையின் பின்னணியாக யானைப்படையொன்று போய்க் கொண்டிருந்தது.

பரதன் ஒரு கணம் யோசித்துவிட்டு, அந்த இராணுவ சேனையின் பின்னால் அணைப்பாதையில் ஈழத்தை நோக்கி நடக்கலானான். அப்பாதையில் இன்னும் சில பிரயாணிகளும்

அவனைப் போல் போய்க் கொண்டிருந்தார்கள். சீதாதேவியை எப்படிச் சிறைப்படுத்தியிருந்தார்கள் என்று அறிய ஆவலா னான். விபீடண வம்ச மன்னர் எப்படி நாட்டை ஆள்கிறார்கள் என்று அறியவும் ஆசைப்பட்டான். ஈழக்கரையை அடைந்தபோது மாலையாகிவிட்டது. இராணுவ சேனை நாட்டுக்குள் போய் விட்டது. பரதன் தங்க இடம் தேடிய போது, திருக்கேதீசுவரக் கோவிலை எல்லோரும் காட்டினார்கள். அங்கே போய், இறைவனை வழிபட்டுக் கோவில் மடத்தில் இருந்தவர்களை விசாரிக்கலானான்.

“என்ன யுத்தம்? ஏன் இராணுவ சேனை போகிறது? விபீடணன் சந்ததியினர் ஆள்கின்றனரோ?” என்றெல்லாம் விசாரித்தான். விபீடணனைப் பற்றியே பல பேருக்குத் தெரிய வில்லை . சிலர் சொன்னமட்டில் ஈழமும் கூறுபட்டிருந்தது. குறுநில மன்னர்களுக்குள் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. குறுநில மன்னனொருவன், பாண்டிய மன்னனிடம் உதவி கேட்க, பாண்டிய சேனை தெற்கே போய்க்கொண்டிருந்தது.

கலகங்கள் ஓய்ந்ததாகத் தெரியவில்லை . இராமன், இரா வணனை மாய்த்தும் உலகில் இறைமை வென்றதாகத் தெரிய வில்லை. சச்சரவுகளும் கொடுமைகளும் நின்றதாகவும் தோற்ற வில்லை . பரதன் குழப்பமடைந்தான்.

“இராமர் கோவில் ஏதாவது இங்கிருக்கிறதா?” என்று விசாரித்தான்.

“இல்லை” என்று சொன்னார்கள். “இராவணனுக்கு?” என்று பரதன் கேட்டான்.

அங்கே இருந்தவர்கள் சிரிக்கலானார்கள். “வன்மைக்கும் மெய்மைக்கும் என்றுமே முரண். இராமனும் இராவணனும் இன்னும் வந்து கொண்டே இருப்பார்கள். இவர்களுக்காக என்னத்துக்குக் கோவில் கட்ட வேண்டும்?” என்று களைப்பாயிருந்தவன் ஒருவன் கேட்டான்.

பரதன் அதிர்ச்சியடைந்தான். இறைவன் இராமன் இவ் வுலகைக் காக்க வந்தவன். நடுநிலையானவன். தன் மனைவியையே

இராமாயண கலகம்

ஸ்ரீதரன் கதைகள் –

காட்டிற்கு அனுப்பியவன். அவனுக்கு ஊரின் நிலையே பெரிது. 284 பரதன், இவர்களுக்கு இது விளங்குமா?’ என்று யோசித்துக் கொண்டே களைப்படைந்தவனைக் கேட்டான்.

“இராமன் தன் சீதையை, அவள் துாய்மைத் தோற்றம் மக்களின் மனதில் படும்படி அவளை வனவாசத்திற்கு அனுப்ப வில்லையா?”

களைப்படைந்தவன் சிலிர்த்துக்கொண்டான்.

“இப்படி அரசர்களைப் பற்றியே கதை பேசிக்கொண்டிருக் கிறீர்களே, இதோ இப்போது போகிற சைனியம் எத்தனை கொடுமைகளை இழைக்கப்போகிறது? அரச குடும்பச் சண்டைகள் எத்தனை? படைகள் இறந்து, மக்கள் மாண்டு, அரசன் உய்வதால் மக்களடைந்த நன்மைகளென்ன? எப்போது உங்களுக்கு இவை களெல்லாம் புரியப்போகின்றது? இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? மக்கள் நசிந்து கொண்டே யிருக்கிறார்கள். வன்மைகளும் கலகங்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. களைப்படைந்தவன் இன்னும் களைப்படைந்தான்.

பரதனுக்கு இந்த நிந்தனைகள் மனவருத்தத்தைத் தந்தா லும், அவனுக்கும் குழப்பமாக இருந்தது. இராமன், தன் சீதையை மீட்க வந்தவன், என்ன செய்தான்? எங்கே யுத்தம் நடந்தது? இராவணன், கும்பகர்ணன் இவர்கள் மாளிகைகள் இருந்த இடம் எங்கே? சீதையை எங்கே வைத்திருந்தார்கள்? ஈழத்தில் என்ன நடந்தது?’ பரதன் சிந்திக்கலானான்.

மடத்தில் நித்திரை கொண்டு, அவன் அடுத்த நாள் தன் பயணத்தைத் தொடரத் தொடங்கியபோது, முதலில் சீதையைச் சிறைவைத்திருந்த இடத்தைத் தேடிப் போகலாமென்று எண்ணம் கொண்டான். அங்கே இருந்தவர்களைக் கேட்ட போது, ஒரு வருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. கிழக்கே போக வேண்டு மென்றான் ஒருவன். “அவ்விடம் தென்னிலங்கையில் இருக்கிறது” என்று வேறுசில பிரயாணிகள் சொன்னார்கள். நெடுந்துாரம் மலை ஏறிப்போகவேண்டுமென்றும் சொன்னார்கள்.

“இதுவுமொரு புண்ணிய யாத்திரையாயிற்று” என்று எண் ணியவாறு, இராமனை மனத்தில் இருத்தித் தென்னிலங்கை நோக்கிப் பரதன் புறப்பட்டான். பஞ்சவடி தேடிப் போனது போல் இதுவுமோர் கடின யாத்திரையாகிப்போனது. எல்லா இடங்களையும் மனிதரால் கோர்த்திருந்தது. விருப்பு – வெறுப்பு, இசைவு – பிணக்கு இவைகள் எங்குமிருந்தன. கலகமும் இருந்தது, அமைதியும் இருந்தது. மொழி வித்தியாசங்கள், பிரதேச வழக்கு வித்தியாசங்கள் தொடர்ந்து கொண்டேயிருந்தன.

தேடிப் போனபோது, ஓர் அழகான ஆற்றங்கரையில் அமைந்திருந்த எழிலான ஊர் ஒன்றை அடைந்தான். அந்த ஊரில் தங்கி, விசாரிக்க வேண்டுமென்கிற நோக்கம் உரு வானது. சீதாதேவியைச் சிறைவைத்திருந்த இடத்தைத் தரிசிக்க வேண்டுமென்கிற தன் அவாவை, அவ்வூர் மக்களிடம் சொன்ன

இராமாயண கலகம்

— ஸ்ரீதரன் கதைகள்

285 போது, வெகுதூரம் போக வேண்டுமென்றும், வனவிலங்குகள்

நிறைந்த காடுகளுக்கூடாக மலையேறிப் போகவேண்டுமென்றும் சொன்னார்கள். வழிகாட்டுவோன் ஒருவனைக் கூட அனுப் பலாமென்றும் சொல்லி , அன்புடன் உபசரித்தார்கள். மாணிக்க மும் இரத்தினங்களும் மிகுந்திருந்த அவ்வூரில், பரதன் சில நாட்கள் தங்கித் தன் களைப்பான பிரயாணத்திலிருந்து ஓய் வெடுத்துக்கொண்டான்.

அங்குள்ளவர்களிடமும் இராம – இராவண யுத்தத்தைப் பற்றிக் கேட்டான். அது எங்கே நடந்தது என்று தெரியாதென் றும், ஆனால், இலக்குவனின் அம்பை ஒரு தம்பதியர் பொறுப்பில் பாதுகாத்து வருகிறார்கள் என்றும் சொன்னார்கள். “இது அடுத்த தடயம்” என்று பரதன் உற்சாகம் அடைந்தான். உடனே அத் தம்பதியினரைத் தேடிப் போன போது – அவர்கள் குடிசைக்குப் பின்னால் மண்ணில் மேடையமைத்து ஒரு சிறு குடில் கட்டப் பட்டிருந்தது. அவர்களைச் சேவித்துக்கொண்டான். இலக்குவனின் அம்பைப் பத்திரமாகப் பாதுகாக்கும்படி தங்கள் மூதாதை வழியினர் வேண்டியதாகவும், விழா நாட்களில் அதை ஊர் கோலம் கொண்டு போவோம் என்றும் கூறினார்கள். “அந்த அம்பைப் பார்க்கலாமா?” என்று பரதன் கேட்டபோது, ” அதை வெறும் மனிதர் பார்க்கலாகாது” என மூதாதையர் கட்டளை யிட்டிருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். பரதனுக்கு அதுவோர் பிரச்சினையாகத் தோன்றவில்லை. நிலத்தில் விழுந்து அக்குடிலை நோக்கி வணங்கலானான். அவ்வம்பைக் காக்கும் தம்பதியரையும் மறுபடியும் சேவித்துக்கொண்டான். தன் வம்ச பரம்பரையைப் பற்றிச் சொல்லி, தான் இராமனாதியோர் தடங்களைத் தேடிக் கொண்டு யாத்திரை போவதைப் பற்றி விளக்கினான். “சீதையிருந்த இடத்தை முதல் தரிசித்தால், சீவன் முக்தி பெறுவதுறுதி” என்ற தன் நம்பிக்கையையும் சொன்னான்.

தம்பதியர் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள். ஏதோ சொல்ல முதலில் நினைத்துக்கொண்டு, பிறகு தங்களை அடக்கிக் கொண்ட மாதிரியிருந்தது. “சீதையை வனவாசம் வைத்திருந்த இடத்தைத் தாங்கள் காட்டுகிறோம்” என்று உறுதியளித்தார்கள். தம்பதியர் குழந்தைகளில் மூத்தவனுக்கு இளைஞனான பிராய மிருக்கும். அவனிடம் தாங்கள் பரதனுடன் போகப்போவதைச் சொல்லித் தாங்கள் திரும்பும் வரை என்னென்ன செய்ய வேண்டு மென்று விளக்கினார்கள். ஊரதிகாரியிடம் போய் உத்தரவு வாங்கப் போனபோது, அவன் விபரங்களைக் கேட்டுக் கூடவே ஒரு காவலாளியையும் அனுப்பிவைத்தான். அதிகாரி அத்தம்பதியரை யும் பரதனையும் மரியாதையாகவே நடத்தினான். போகும் வழியில் யுத்தம் நடப்பதைப் பற்றியும் பத்திரமாகப் போய்வர வேண்டிய சூழலிருப்பதைப் பற்றியும் கூறி வழியனுப்பினான்.

துங்கன், சந்திரை என்ற அத்தம்பதியர் காவலாளி சிங்கனு டனும் பரதனுடனும் பேசிக்கொண்டே பிரயாணம் செய்ய லானார்கள். பரம்பரை பரம்பரையாகவே இலக்குவனின் அம்பைப் பாதுகாத்துக்கொண்டு வருவதைப் பற்றி பரதனுக்கு விளக்கி

இராமாயண கலகம்

ஸ்ரீதான் கதைகள் –

னார்கள். ஆனால், “எவ்வாறு அம்பு தங்கள் மூதாதையருக்குக் 286 கிடைத்ததென்று தெரியாது” என்று கூறினர். பல விடயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டார்கள்.

‘வீணாக இலக்குவன் அம்பெய்திருக்க மாட்டான். யாருடை யவோ மார்பில் பதிந்த அம்பை எடுத்து வைத்திருந்திருக்க வேண்டும். இலக்குவன் அம்பைப் பாதுகாப்பவர்கள், இராம பாணம் ஒன்றையும் ஏன் பாதுகாக்கவில்லை? பரதன் யோசித்துக் கொண்டே நடந்தான். இதைப் போன்ற கேள்விகள் கேட்டால், ஒன்றில் “தெரியாது” என்று சொல்லிவிடுகிறார்கள் அல்லது அதைப் பற்றியொரு கதை சொல்கிறார்கள். எதற்கும் கேட்கலாம்’ என்று பரதன் அவர்களை வினாவினான்.

“இராமனின் அம்பெதுவும் கிடைக்கவில்லையா?”

துங்கன், தன் முன்னோர் காலத்தில் அவ்வாறம்பொன்று இருந்ததெனவும், அரச கட்டளையினால் அதை அப்புறப் படுத்தி, இலக்குவனின் அம்பையே பாதுகாத்து வைத்திருப் பதைப் பற்றிச் சொன்னான்.

“அரச கட்டளையை யார் விபரங்கேட்கிறார்கள்?” மனைவி நிலைமையைச் சொன்னாள்.

“நீ இளவயதுக்காரன். உனக்கெவ்வளவோ எதிர்காலம் உண்டு. அதுவே புதிராக இருக்கப்போகிறது. கடந்த கால நிகழ்வுகளைப் பற்றியே ஏன் இவ்வளவு ஆய்கிறாய்?” என்று துங்கன், பரதனைக் கேட்டான். பரதனுக்கு இது சின்ன விடய மாகப் பட்டது.

“எதிர்காலம் நிச்சயமானதில்லை . எதுவும் நடக்குமா என்று தெரியாது. ஆனால், கடந்தகாலம் நிச்சயமானது. நடந்தது. தடயம் கிடைத்துவிட்டால், நடந்தது உறுதிப்படுத்தப்பட்டுவிடும். எந்த உண்மையையும் நடந்ததை வைத்தே சொல்கிறார்கள். நடக்கப்போவதைவைத்துச் சொல்கிறார்களா? எனக்குத் தடயங் களின் உண்மை தெரிய வேண்டும்.” பரதன், அவர்களுக்குத் தன் சிந்தனைகளைச் சொன்னான்.

“அது அப்படியாக இருக்கலாம். ஆனால், உனக்கு எந்த உண்மையும் தெரிந்து என்ன ஆகப்போகிறது?” துங்கன் அறிய விரும்பினான்.

“அதுதான் நிச்சயமில்லை என்று சொன்னேனே?” என்றான் பரதன், எதிர்காலத் தொனி கேள்வியிலிருப்பதாக நினத்துக் கொண்டு.

“நடந்தது எல்லாம் தெரிய வேண்டுமென்கிறாயே, உன் வாழ்க்கையில் நடந்ததே உனக்கு ஞாபகமிருக்கிறதா?” காவலாளி யும் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வந்திருக்கிறான்.

பரதனுக்கு இந்த விடயத்தில் மிக நிச்சயம் நிறைந்திருந்தது.

“என் நினைவெல்லாம் நான் இறந்ததின் பின் என்னோடு போய்விடும். நான் அறிய வேண்டிய உண்மைகள் என் நினைவுக்கு.

அRIDIET

இராமாயண கலகம்

-ஸ்ரீதரன் கதைகள்

எனக்கு நடந்த சிலவற்றை ஞாபகம் வைத்திருக்கிறேன். மூன்று நாட்களுக்கு முன்னால் என்ன சாப்பிட்டேன் என்று ஞாபக மில்லை. ஆனால், நான் சேதுவைப் பார்த்தது நிச்சயம்” என்றான் பரதன்.

“இராம கதையைப் பற்றி மட்டுமே ஏன் இவ்வளவு அக்கறை கொண்டாய்?” காவலாளி சிங்கன் மறுபடியும் கேட்டான்.

“இவன் படகோட்டி குகன் வழியில் தோன்றியவன்.” துங்கன் சொன்னான்.

“அது நிச்சயமாகத் தெரியுமா?” என்று சந்திரை கேட்டாள்.

பரதன் இக்கேள்வியினால் மனமுடையவில்லை. “எனக்கதில் சந்தேகமே இல்லை” என்றான்.

“என்ன சந்தேகங்கொண்டு இராமனின் தடயங்களைத் தேடுகிறாய்? இராமன் இருந்தான் என்றா?” காவலாளி சிங்கன் திரும்பவும் பரதனை விசாரித்தான்.

தன் இரத்தத்தோடிரத்தமான இராம பக்தியைச் சந்தேகிக் கலான மனிதனுக்கு மறுமொழி சொல்ல பரதனுக்கு முதலில் வார்த்தைகள் வரவில்லை.

“இராம கதை உண்மைதானா என்று துலக்க வரவில்லை. இராமபிரான் சென்றவிடமெல்லாம் சென்று சேவித்து வழிபட நினைக்கின்றேன். இப்பிறப்பில், எனக்குக் கிடைக்கப்போகிற இராம தரிசனம் இத்தடயங்களே.”

பிரயாணிகள் பாதை கடினமாக இருந்தது. ஆனால், அழகு சூழ்ந்ததாக இருந்தது. இரண்டு நாட்கள் பயணம் செய்து மலைப்பட்டினம் ஒன்றை அடைந்தார்கள். ஆளுக்காள் பரிச் சயமானார்கள். ஊரின் எல்லையிலேயே, அவ்விடத்தில் யுத்தம் நடப்பது பற்றிக் கேள்விப்பட்டார்கள். ஊருக்குள் போக வேண்டா மென்று ஒருத்தன் அறிவுரை சொன்னான். வடக்கே இருந்து வந்த சைனியம் இங்கேதான் யுத்தத்திற்கு வந்திருந்தது.

ஊரெல்லையில் இருந்த அம்பலம் ஒன்றில் தங்கினார்கள். யுத்தம் அடங்கியபின் பிரயாணத்தைத் தொடருவது என்பது திட்டம். மழை பெய்ய ஆரம்பித்தது.

அம்பலத்தில், வடக்கிலிருந்து வந்தவர்களும் இருந்தார்கள். எல்லாப் பிரயாணிகளைப் போலவும் பரதன் அவர்களுடனும் பேசிக்கொண்டான். தான் சீதாப்பிராட்டியைச் சிறைவைத்திருந்த இடத்தைத் தேடிப் போய்க்கொண்டிருப்பதை அவர்களிடம் சொன்னான். வடக்கிலிருந்து வந்தவர்கள், தெற்கே மகிமை வாய்ந்த இறைத்தலம் உள்ளதென்றும், அத்தலம் நோக்கித் தாங்கள் புண்ணிய யாத்திரை போய்க்கொண்டிருப்பதைப் பரதனிடம் விளக்கினார்கள்.

சீதையைச் சிறைவைத்திருந்ததாகச் சொல்லப்படுகிற இடமொன்று குளிர் மலைப் பிரதேசத்தில் இருக்கிறதென்று ஒரு பிரயாணி சொன்னான். இராமன் இலகுவில் தேடிக்

பME

இராமாயண கலகம்

ஸ்ரீதான் கதைகள் –

கண்டுபிடிக்க முடியாதவாறு, தெற்கே மலைப் பிராந்தியத்தில் 288 சீதையை ஒளித்துவைத்திருக்க வேண்டும் என்று பரதனுக்குப்

பட்ட து.

இராம கதையைத் தன் மூதாதையர் சொல்லும் போதெல் லாம், இலங்கை ஏதோ ஒரு சிற்றுார் மாதிரியாகவும், ஊரின் மூலையில் இருந்த ஓர் அசோகவனத்தில் சீதையைச் சிறை வைத்திருந்த மாதிரியாகவுமன்றோ சொல்லிவிட்டுப் போயிருக் கிறார்கள். சேதுவைக் கடந்து, இவ்வூர் வந்து சேரவே எடுத்த துாரத்தையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லையே என்று பரதன் அங்கலாய்த்தான். அயோத்தி எங்கே, பஞ்சவடி எங்கே, சேது எங்கே எல்லா ஊர்களும் ஒரு காலடி துாரத்தில் இருந்த மாதிரி நடந்தவற்றைச் சொல்லிவிட்டார்கள். என்ன துாரம்! எவ்வளவு காலநேரம்!

இன்னோர் பிரயாணி சீதையை, இராவணன் அவ்வளவு துாரம் கொண்டு போயிருக்க முடியாது என்று அபிப்பிராயப் பட்டான். ஈழத்தின் வட மத்தியில் தான் அசோகவனம் இருக்கக் கூடியதான சுவாத்தியம் உள்ளது என்றான். பரதன் இராவண னின் புட்பக விமானத்தை எல்லோருக்கும் நினைவுபடுத்தினான். துரங்கள், இராவணனுக்கு ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது.

பரதனைக் கூட்டிக்கொண்டு போன தம்பதியர், மறுபடியும் ஆளையாள் பார்த்துக்கொண்டார்கள்.

ஒரு கெட்ட கனவாக, சீதையைச் சிறைவைத்திருந்ததை எல்லோரும் மறக்க முயல்வது போன்று பரதனுக்குப் பட்டது. வந்த பிரயாணிகள் தங்களுக்குள், “சீதையைச் சிறைவைத்திருந்த இடம் வடக்கிலா தெற்கிலா” என்று விவாதம் புரிய ஆரம்பித் தார்கள். தம்பதியர், தாங்கள் அறிந்தவரையில் தெற்கில் தான் சீதை சிறைப்பட்டிருக்க வேண்டுமென்றார்கள்.

பரதன் குழப்பமடைந்தான். முதலில் தம்பதியருடன் போய், சீதை சிறைவைத்திருக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிற இடத்தைப் பார்ப்போம். ‘பார்த்தால் தான் தெரியும்’ என்று நினைத்துக்கொண்டான்.

மழை ஓய்ந்தும் யுத்தம் அடங்குவதாக இல்லை. அம்பலத் தில், வேறு பிரயாணிகளும் வந்தடைய ஆரம்பித்திருந்தார்கள். வழிகாட்டும் தம்பதியர், அவர்கள் போக வேண்டிய வழியில் யுத்தம் நடப்பதனால், “இன்னும் ஒரு வாரம் பொறுத்துப் பார்க்கலாம்” என்று பரதனிடம் சொன்னார்கள்.

பரதன் பொறுமையை இழக்க ஆரம்பித்திருந்தான். இலங்கை யில் சீதைக்கு என்ன நடந்தது? தன் கணவனை நம்பிக் காட்டிற் குப் போனவளை நம்பாது, நெருப்பில் நடக்க வைத்தார்களே ! இங்கே என்ன நடந்தது? மெய்யாக நடந்தது எவருக்குமே தெரியாதா?

“சீதை இருந்த இடத்தை இவ்வளவு அக்கறையுடன் தேடுகிறாயே, இங்கே இந்த யுத்ததைப் பற்றி உனக்கு அக்கறை

இராமாயண கலகம்

-ஸ்ரீதரன் கதைகள்

பFIND

யில்லையா? இவ்வளவு பேர் இறந்து கொண்டிருக்கிறார்களே!” – ஒரு பிரயாணி கேட்டான்.

பரதன் விசனப்படலானான். பரதனுக்கு, அவன் கேள்வி நியாயமானதாகத்தான் பட்டது. தான் அயோத்தி என்று சொல்லப்படுகிற இடத்திலிருந்து ஈழம் வரை வந்த பிரயாணத் தில் தான் கண்ட யுத்தங்களைப் பற்றிச் சொன்னான்.

“எல்லாமிருந்தாலும் சண்டை. எதுவுமில்லாவிட்டாலும் சண்டை. மன்னர்களுக்கு ஆதிக்கம் நிலைக்க வேண்டும் அல்லது விரிவடைய வேண்டும். படைகள் சேகரித்து யுத்தம் புரிவது கூத்தாடிகள் கூத்துப் போன்றாகிவிட்டது. சச்சரவுகளை நிறுத்த மன்னர்களால்தான் முடியும் என்றாகிவிட்டது. அவர்களிடம் யார் சொல்வது? என்னத்திற்காக இங்கே இப்போது யுத்தம் நடக்கிறது?” பரதன் கடைசியாக விசாரித்தான். புண்ணிய யாத்திரை போவோன் ஒருத்தன் விபரிக்க ஆரம்பித்தான்.

ஈழம், வடக்கும் தெற்குமாக இப்போது இரு கூறாகியிருக் கிறது. தென்னிலங்கை மன்னன் ஈழம் முழுவதையும் தன் வசப்படுத்த எண்ணி, வட இலங்கை மன்னனுடன் போர் தொடுக்க , ஈழம் இரத்தக் களரியாய் மாறியிருக்கிறது. தென்னிலங்கை மன்னனின் படைகள் கடூரமான கொடுமை களை வடபக்கத்து மக்களுக்கு இழைக்க, வடக்கினரசனும் மக்களும் இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டி ருந்தார்கள். கொலைகளும் கொள்ளைகளும் கற்பழிப்புகளு மாக மனிதநேயம் அறவேயற்றுப்போன நிலைமையாகிவிட் டது. இப்போரை விரைவில் முடித்துவிடுவதற்காக தென்னிலங்கை மன்னன், பாண்டிய மன்னனிடம் படையுதவி கேட்டிருக்கிறான். ஏற்கெனவே, ஆயிரக்கணக்கில் போர்வீரர்களும் யானைகளும் உயிரிழந்த இந்தச் சண்டையில் மக்களடைந்து கொண்டிருக்கும் கொடுமைகள் பல்லாயிரம். வட இலங்கை மன்னன், சோழ மாமன்னனிடம் உதவி கோரப் போவதாக மக்களும் பேசிக் கொண்டார்கள். விபரித்தவன் மிகக் களைப்படைந்திருந்தான். அவன் சொல்லி முடிவதற்குள், கூடவந்த தம்பதியர் துங்கனும் சந்திரையும் காவலாளி சிங்கனும் “அப்படியில்லை! அப்படி யில்லை” என்று ஆவேசமானார்கள்.

“இதற்கு முடிவில்லையா?” குழப்பமடைந்த பரதனுக்கு உடன் பதில் வேண்டும் போலிருந்தது.

விபரித்தவன், கூடவந்தவர்களைப் பார்த்துத் தன் இடது நெஞ்சில் கையை வைத்து, “இங்கே ஒரு சிறுமாற்றம் வந்தால் போதும்” என்றான்.

“வருமா?” பரதன் கேட்டான்.

“உனக்குத்தான் எதிர்காலம் நிச்சயமில்லையே.” துங்கன் சொன்னான். “வரப்படாது” என்கிற நோக்கமுள்ளவனாகத் தோன்றினான்.

“ஒருநாள் வரும்” என்றான் காவலாளி.

இராமாயண கலகம்

கதைகள் ஸ்ரீதரன்

பரதன் மேலும் சிந்திக்கலானான். இராவணன் தன் 290 மக்களைக் கொடுமைப்படுத்தியதாகவோ வேறு நிலத்தை அடக்கப் புறப்பட்டவனாகவோ தெரியவில்லை. சீதாப்பிராட்டியைக் கவர்ந்து சிறைவைத்தானே தவிர, இந்த மாதிரியான கொடுமைகள் அவன் காலத்தில் நடந்த மாதிரித் தெரியவில்லை . இராம பிரான் யுத்ததைத் தவிர்க்கும் யோசனையில், அனுமனை அனுப்பவில்லையா? ஆஞ்சனேயர், இராவணனுக்கு அறிவுரை எடுத்துக் கூறவில்லையா? இராவணன் அழிந்ததுடன் எல்லாக் கொடுமைகளும் அழிந்ததாகவன்றோ தன் மூதாதையர் சொல்லித் தந்திருக்கிறார்கள். இன்னும் யுத்தங்களும் தொடர்ந்தே வரு கின்றனவே! இராமனை வணங்குவதே முதல்’ என்ற தீர்மானம் அடைந்தவனாக மற்றும் பிரயாணிகளுடன் அம்பலத்தில் பொறுமையுடன் இருந்தான். இந்தப் போர்ச் சூழலிலும் மக்கள் தலயாத்திரை போவதும், தங்கள் வாழ்க்கையை நடத்துகிற மற்ற முயற்சிகளில் மும்முரமாக இருப்பதுவும் ஆச்சரியமாக இருந்தது.

“இந்த யுத்தகளத்துக்கூடாகத் தலயாத்திரை வருகிறீர்களே. என்ன வேண்டுதல்? இந்தப் போர் முடிய வேண்டுமென்றா?” பரதன், வடக்கிலிருந்து வந்த பிரயாணிகளைக் கேட்டான்.

“இப்போர் முடிய வேண்டுமென்று ஒவ்வொரு கணமுமே எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக்கொண்டிருக்கிறோம். வேண்டுதல் ஒன்றுமில்லை. புண்ணியந்தேடுவதற்கு யுத்த பூமியில் வழியேது? இக்கடின யாத்திரையே எங்கள் தவம்.” பிரயாணிகள் தங்கள் யாத்திரையைத் தொடர ஆவலுள்ளவர்களாகத் தோற் றினார்கள்.

காவலாளி சிங்கன், “இப்பிரயாணிகளுக்குள் ஒற்றர் கூட்ட மிருக்கலாம்” என்று ஐயப்பட்டதாகத் தோற்றியது.

வந்து மூன்று, நான்கு நாட்களாகியும் யுத்தம் ஓயவில்லை. தலயாத்திரை செய்யும் பிரயாணிகள் பிரயாணத்தைத் தொடர லானார்கள். பரதனும் தன் வழிகாட்டியினரையும் காவலாளி யையும், “தாங்களும் பிரயாணத்தைத் தொடரலாம்” என நச்சரித்து, மலைப் பிரதேசப் பிரயாணத்தைத் தொடரலானான்.

அவன் கேள்விப்பட்டதைப் போன்றே மிகக் கடினமான பாதை அது. குளிர், மழை எதையும் பொருட்படுத்தாமல் தன் சக பிரயாணிகளுடன் சீதையைச் சிறைவைத்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான். யுத்தகளத்தைச் சாதுரியமாகக் கடந்து சென்றார்கள். தம்பதியர் வழிகாட்டினர். காவலாளி அவர்கள் பிரயாணத்திற்கு மிக உதவியாக இருந்தான்.

மலையின் சிறு அருவிக்கருகில் இருந்த ஓரிடத்தைக் காட்டி, “அதுதான் சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம்” என்று தம்பதியர் காட்டினார்கள். கருங்கற்களால் அமைக்கப்பட்ட சிறு மேடை ஒன்று இருந்தது. அப்பிராந்தியத்தில் குளிரும் மழையும் மிகுந்து இருந்தன. யாவரும் அவ்விடத்தைச் சோதனை செய்தனர். அங்கே சீதாதேவியைச் சிறைவைத்திருந்ததாகச் சொல்லப்பட்ட

இராமாயண கலகம்

-ஸ்ரீதரன் கதைகள்

கருங்கல் மேடையின் நடுவில், தட்டையான ஒரு கல்லிருந்தது. பரதன் அச்சூழலை முற்றும் தீவிரமாக அளக்கலானான். அசோகவனமுமில்லை, அரக்கியர் சூழ்வதற்கேற்ப மேடையு மில்லை. அனுமன் வந்து சீதையை வணங்கியிருந்திருக்கக் கூடியதான சூழலும் அங்கிருப்பதாகப் பரதனுக்குத் தோற்ற வில்லை. அவன் நம்பிக்கைத்தளம் ஆட்டமடைந்திருந்தது. மறு படியும் கேட்டான்.

“இதுதானா சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம் ? நிச்சய மாகத் தெரியுமா?”

“பாரம்பரியமாக இந்த இடத்தைத்தான் சீதை சிறை வைத்திருந்த இடமென்று தங்கள் மூதாதையர் சொல்லியிருக் கிறார்கள்” என்று தம்பதியர் அவ்விடத்தை வணங்கினர். பரதனும் வணங்கினான். ஆனால், அவன் ஐயம் அடங்கவில்லை . அவன் ஏமாற்றம் கூட வந்தவர்களுக்குக் கவலையை அளித்தது. அவ்விடம் எவ்வாறு, தங்களின் பெற்றோர்களால் தங்களுக்கு அடையாளம் காட்டப்பட்டது என்பதைப் பரதனிடம் சொன்னார்கள்.

இராமகதைத் தடங்கள் சிலவற்றை முற்றாகவே காண வில்லை. இருக்கிற சில தடங்கள் உண்மையான தடங்கள் தானா என்று தெரியவில்லை .

தன் மூதாதையர், காலங்காலமாகப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இராமபிரான் காலடி பட்ட கங்கை நதிக்கரைத் தடங்கள் எவ்வளவு நிச்சயமானவை! வெள்ளம் அள்ளிக்கொண்டு போய்விட முடியாத தடங்கள்! சேது அணை என்ன உறுதியான சேத்திரம்! கடலலைகள் கொண்டு போய்விட்டனவா? இல்லையே!

ஆனால், அயோத்தியையும் காணவில்லை. மிதிலையையும் காணவில்லை. இலக்குவனின் அம்பு என்று சொல்லப்படுகிறதன் பூர்வீகமும் முற்றாகத் தெரியவில்லை. சீதை சிறைவைக்கப் பட்டிருந்ததாகச் சொல்லப்படுகின்ற இடமும் சரியாகத் தெரிய வில்லை . நடந்தவைகள் எவருக்குமே சரியாகத் தெரியாது போய்விட்டது போலுமென்று பரதன் யோசிக்கலானான். எப்படியாகவாவது இராமகதையை முழுமுற்றாக அறிந்துவிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டான்.

வந்த பாதை வழியே திரும்பும் போதான பிரயாணமும் கடினமிகுந்ததாக இருந்தது. மேகங்கள் கூடி மழை சொரியும் அழகும், அவை அகன்று சூரியன் பிரகாசிக்கும் அழகும் இக் கடினங்களை மறக்கவைத்தன. மக்களிருந்த ஊர்களில் அவர்களை வரவேற்று உபசரித்தார்கள். காட்டுப் பாதையில் தாங்களே உணவு சேகரிக்கும்படி ஆகிவிட்டது. இராமன், சீதை, இலக்குவன் இவர்களெல்லாம் இப்படித்தான் காட்டிற்கூடாகப் போயிருந் திருக்க வேண்டுமென்று தோன்றியது. கூடவந்த தம்பதியர் தங்களுக்குள் நிறையப் பேசிக்கொண்டு வந்தார்கள். காவலாளியும் அவ்வப்போது தனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னான். “சீதை இருந்த இடத்தைப் பார்ப்பதற்கு நிறையப் பேர் வருவதாகத் தெரியவில்லை” என்று தம்பதியர் குறைப்பட்டார்கள்.

Eme

இராமாயண கலகம்

“குளிரும் மழையுமாக வேறு அங்கே இருக்கிறது.” காவலாளி 292 சிங்கன் குறைப்பட்டுக்கொண்டான்.

ஸ்ரீதரன் கதைகள் –

தம்பதியரின் பக்தியைப் பரதன் வியந்து கொண்டான்.

“இவ்வளவு கடினங்களுக்கூடாக பிரயாணம் வருகிறீர்களே. உங்கள் பக்தி பவித்திரமானது” என்றான்.

கணவனும் மனைவியும் ஆளையாள் பார்த்துக் கொண் டார்கள். கணவன் முகத்தில் சிறுநகை தோற்றியது. “இவ்வி டத்திற்கு நிறையப் பேர் வருவதாகத் தெரியவில்லையே” என்று மறுபடியும் குறைப்பட்டுக்கொண்டான்.

“இலக்குவன் அம்பைப் பார்க்க வருவோர் நிறைய உள்ளனரோ?” பரதன் கேட்டான்.

தம்பதியர் உற்சாகமடைந்தார்கள். மக்கள் அவ்வம்பைப் போற்றி வருவதை அவனுக்கு விளக்கினார்கள். அரசன் தங்க ளுக்கு, அதைப் பார்த்துக்கொள்வதற்காக மானியம் அளித்துவரு வதைப் பற்றியும், மக்களும் காணிக்கைகள் கொடுப்பதைப் பற்றியும் சொன்னார்கள்.

“சீதையிருந்த இடத்தைப் பார்த்துக்கொள்வதற்கு அரசன் ஏற்பாடுகளெதுவும் செய்திருப்பதாகத் தெரியவில்லை . அரசனி டம் அடுத்த தடவை இதையெடுத்துச் சொல்லி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எங்கள் மகன் வளர்ந்து கொண்டு வருகிறான். அவனை இவ்விடத்தைப் பார்த்துக்கொள்வதற்கு ஏற்பாடு செய்துவிடலாம்” என்று காவலாளியிடமும் சொன்னான்.

” அதற்கு முன்னர் அவ்விடத்தை உறுதிப்படுத்த வேண்டும்.” பரதனின் நிச்சயம் தம்பதியருக்குக் கோபத்தை உண்டாக்கியது.

“இல்லை! இல்லை! எங்கள் மூதாதையரெல்லாம் என்ன முட்டாள்களா? அதுதான் சீதையிருந்த இடம். துங்கன் சத்த மாகவே சொன்னான்.

பரதனுக்குத் தான் அதிதியான மனநிலை எழ, “மன்னிக்க, மன்னிக்க” என்று அவர்களை வேண்டிக்கொண்டான். ஆனால் மறுபடியும், எப்படியாகவாவது இராமகதையை முழுமுற்றாக அறிந்துவிட வேண்டும்’ என்கிற தன் அவாவை அடக்க முடியாத வனானான்.

திரும்பி வரும் பாதையில், போகும் போதிருந்த யுத்தம் முடிந்திருந்தது. யுத்தகளம் ஒரு பெரிய சவக்கிடங்காகியிருந்தது. தங்கள் கணவனென்றும் மகனென்றும் பேரனென்றும் இறந்த வர்களை மடியில் போட்டு அழுதுகொண்டிருந்தார்கள். பல அனாதைப் பிணங்களுமிருந்தன. இறந்திருந்த யானைகளையும் மற்ற மிருகங்களையும் கவனிக்க ஒருவருமில்லை . பரதன் இம் மாதிரியான துன்பக் காட்சிகளை என்றும் கண்டிருந்ததில்லை.

இராம – இராவண யுத்தம் முடிந்தபின் ஈழமும் இப்படித் தான் இருந்திருக்கும். பரதன் மிக நொந்து போனான்.

THI

a

.

.

.

.

1

.

.

இராமாயண கலகம்

t

100

மண்டோதரி எப்படி அழுதிருப்பாள்! இராவணனிற்கு இறுதிக் கிரியைகள் யார் செய்தார்கள்? விபீடணனாகத்தான் இருந்திருக்கும். இவையெல்லாம் என்ன கேள்விகள்? சீதையைச் சிறைவைத்த அரக்கனுக்கு யார் கொள்ளிவைத்திருந்தால் என்ன? பலவாறாகவும் பரதன் தன்னையே கேள்வி கேட்டுக்கொண்டான்.

பரதன் ஒரு மூலையில் இருந்து போர்க்களத்திற்கு எதிர்ப் பக்கமாய் நோக்கி அச்சூழலை ஆராய முனைந்தான். காவலாளி போரில் யார் வென்றார்களென்று அறியப் புறப்பட்டான். அவன் போனதின் பின், யுத்தகளத்தில் விழுந்து கிடந்திருந்த அம்புகளையும் கேடயங்களையும் தம்பதியர் சோதனை பண்ணினர். களத்தில் இருந்தது எதையோ எடுத்துத் தங்கள்

மூட்டையில் எவருக்கும் தெரியாதவாறு கட்டிக்கொண்டனர். காவலாளி சிறு நேரங்கழித்து வந்தான்.

பரதன், தாங்கள் எடுத்து வைத்ததைப் பார்த்தானா என்ற ஐயம் அவர்களுக்குத் தோன்றியபடியே இருந்தது.

“வடக்கிலங்கையிலிருந்து வந்த சைனியம் பின்வாங்கி விட்டது. பாண்டிய சேனையின் உதவியுடன் தென்னிலங்கைப் படை வடக்கிலங்கைப் படையை முறியடித்துவிட்டது.” காவலாளி சிங்கன் உற்சாகமடைந்திருந்தான்.

“வடக்கிலங்கை ஒழியட்டும். அழிந்தே போகட்டும்!” என்று துங்கன் பெருங்குரலில் திட்டினான். அவன் சத்தத்தைக் கேட்டுப் பரதன் திடுக்கிட்டுத் திரும்பினான். அவர்கள் திட்டுதலின் முழுக் காரணங்களையும் அறிய விரும்பினான்.

“வடக்கிலிருந்து படையெடுப்புகள் வரும்போது மக்கள் தெற்கேதான் போக முடியும். தென்னிலங்கைக்குத் தெற்கே கடலிருந்ததால், அவர்கள் எங்கு போக முடியும்?” சிங்கன் பதிலளித்தான்.

“ஆனால், தென்னிலங்கை மன்னனல்லவோ இப்போது போர் தொடங்கியிருக்கிறான்?” பரதன் தான் கேள்விப்பட்டதைச் சொன்னான்.

“வடக்கிலங்கை முற்றாக அழிந்தால் தான், நாங்கள் நிம்மதியாக இருக்க முடியும்.” துங்கன் சபிக்கும் குரலில்

சொன்னான்.

இது பரதனுக்கு தர்க்கபூர்வமானதாக இல்லை. வடக் கிலங்கைக்கு வடக்கில் வேறு தேசங்கள் உள்ளனவே! இவர்கள் பார்த்ததில்லை போன்றும். பின்னர் அவர்களும் அழிந்தால் தான் நிம்மதி கிடைக்கும் என்று தர்க்கித்துக்கொண்டே போனால், எங்கு இது முடியும்? வடக்கிலங்கைக்கும் வடக்கில் இருக்கிற பாண்டிய மன்னனிடம் உதவிக்குப் போயிருக்கிறார்களே! இது என்ன குழப்பம்? “வடக்கு – தெற்கு” என்று யாரோ இவர்களுக்குப் பிரித்துச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இந்தச் சண்டைகள் தொடர்ந்தே வருகின்றனவே! எவ்வாறு இவ்வுலகில் அமைதி வரப்போகிறது? பரதன் இவைகளைப் பற்றியும் சிந்திக்கலானான்.

இராமாயண கலகம்

ஸ்ரீதான் கதைகள்

‘இப்போது நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களெல்லாம் 294 இராமாயண காவியத்தின் தொடர்ச்சியாக ஏன் இருக்க முடியாது? இராவணன் வம்சம் என்ன ஆனது? இராவணன் மகன் இந்திரசித்துக்கு வாரிசுகள் இருக்கவில்லையா? இராவண தேசத்து மக்களுக்கு என்ன நடந்தது? இன்னும் அறிய வேண்டியது நிறைய உள்ளது. பரதன் தன் வழக்கமான ஆய்வில் இறங்கினான்.

“முதலில் இராவணன் இருந்த இடத்துக்குப் போவோம். அங்கே சில தடயங்கள் கிடைக்கக்கூடும்.”

பரதன் தம்பதியரிடமும் காவலாளியிடமும் தன் விருப் பத்தைச் சொன்னபோது, அவர்களுக்கும் முதலில் அவனுடன் போகலாம் என்ற ஆசை எழுந்தது. தங்கள் ஊரிலேயே இருந்து உலகை அளப்பதைவிட பல இடங்களையும் சென்று பார்ப்பதுவே மேலென்று தோன்றியது. காவலாளியோ ஊரதிகாரி உத்தர வில்லாது, வேறெங்கும் போக முடியாது. சந்திரைக்கு அவள் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. துங்கன், “நான் பரதனுடன் போய்வருகிறேன்” என்றான். இது அவன் மனைவிக்கும் காவலாளிக்கும் விருப்பமான திட்டம் அல்ல .

“அங்கே போர் நடந்தால், உங்களுக்கு ஆபத்து வரலாம். நீங்கள் எங்களுடன் வாருங்கள்.” மனைவி பிடிவாதமாகச் சொன்னாள்.

பரதன், தான் தன்வழியே இடங்களைத் தேடிக்கொண்டு போவேனென்றும், தனக்கு இவ்வளவுதுாரம் உதவி செய்ததை மறக்கமாட்டேனென்றும் கூறினான். இராவணன் இருந்ததாகச் சொல்லப்படுகிற ஊர் வடகிழக்கே உள்ளதென்றும், அடர்ந்த காடுகளுக்கூடாகப் போக வேண்டுமென்றும் காவலாளி திசை காட்டியபின், பரதன் அவர்களுக்குத் தன் நன்றியைத் தெரிவித்த பின், தன் பிரயாணத்தைத் தொடரலானான்.

தம்பதியரும் காவலாளியும் தங்கள் ஊர் நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். கணவனும் மனைவியும் பேசிக் கொண்டே போகலானார்கள். அதிகாரிகளிடம் சொல்லி, சீதை இருந்த இடத்தைத் தாபிக்க வேண்டுமென்றும் அங்கே தங்கள் மகனை அனுப்பலாமென்றும் மறுபடியும் பேசிக் கொண்டார்கள். காவலாளி கேட்க முடியாதவாறு துங்கன், மனைவிக்கு இரகசி யங்கள் சொல்லி கொண்டு நடந்தான்.

“கவனமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.” சந்திரை எச்சரித்தாள். அவர்கள் நடை ஊர் நோக்கித் தொடர்ந்தது.

பரதன் காடுகளுக்கூடாக இராவணனின் ஊர் தேடிக் கொண்டு, பலரிடம் விபரங்களும் வழிகளும் கேட்டுத் திருக் கோணேசுவரம் அடைந்தான். அங்கே யுத்தம் ஒன்றும் நடக்க வில்லை. அங்கு இராவணனைப் பற்றிய விபரங்களைப் பல பேரிடமும் கேட்டான். தங்களுக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள். இராவணன் கோபமடைந்தபோது கடலுக்கருகில் இருந்த பெரும்பாறையொன்றை வெட்டியிருந்த

இராமாயண கலகம்

தைக் காட்டினார்கள். அவன் வழிபட்ட சிவத்தலத்தைக் காட்டினார்கள். அவன் தாயிற்கு இறுதிக் கடன் செய்தபோது வெட்டிய வென்னீரூற்றுகளைக் காட்டினார்கள். அதைத் தவிர வேறெதுவும் தடயம் ஒன்றுமில்லை. இராவணனின் மாளிகையோ அல்லது விபீடண வம்சத்தினரின் மாளிகையோ ஒன்றையும் காணவில்லை. அசோகவனம் எதுவும் அங்குமிருந்ததாகவும்

தெரியவில்லை .

ஒரு மாலைப்பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்து தன் பிரயாண சம்பவங்களை அசைபோடலானான். மீனவர்கள் தங்கள் தேடல்களை ஓடங்களிலிருந்து எடுத்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். கடற்கரை நண்டுகள் மீனவர்களின் ஓட்டத்தைப் பொருட்படுத்தாது தங்களின் தேட்டத்தில் ஈடு பட்டிருந்தன. மீனவர்கள் ஆரவாரம் கடலலைகளின் ஓசையை மீறி எழுந்து கொண்டிருந்தது. ஆரவாரங்களிருந்தாலும் அவற்றை யும் மீறியதான அமைதியொன்று அக்கடற்கரையில் நிலவியது. கடற்கரை அருகிலிருந்த குடில்களிலிருந்து எழுந்த சமையல்களின் வாசமும் அச்சூழலின் இயற்கை இசைவை ஒத்திருந்தது.

பரதனுக்குள் இந்த அமைதி நிலவவில்லை . அவன் யோச னைகள் பெருகியிருந்தன. யுத்த முடிவில் என்ன நடந்திருக்கும்? சீதை சிறைவைக்கப்பட்டிருந்த இடம் அந்தக் குளிர் மலைப் பிராந்தியம் என்றால், அங்கிருந்து சீதையைப் பல்லக்கில் கொண்டு போய்ச் சேர்க்கவே இராமனுக்குச் சில நாட்கள் எடுத்திருக்கும். கதைகளெல்லாம் சொன்னவர்கள் பல விபரங்களை விட்டு விட்டார்கள். சீதை நெருப்பில் நடந்தது எங்கே? இங்கே ஈழத்திலா அல்லது சேதுவைத் தாண்டிய பின்னரா? கொடுமைகளை யெல்லாம் ஒடுக்கி, இராமன் நிலை நிறுத்திய தருமம் எங்கே போயினது?

கடலலைகளின் சீர் அவன் மன அலைகளுக்கிருக்கவில்லை .

“ஏய் காஞ்சனை! ஏய் காஞ்சனை! இங்கே வா!” என்று பெருங்குரல் கேட்டது. மீனவக் கிழவன் ஒருவன் கரையிலிருந்த ஒருத்தி நோக்கி விளித்தான்.

அவன் குரல் பரதனின் சிந்தையோட்டத்தை நிறுத்தியது. எங்கே அந்தக் குரல் போகிறதென்று பரதன் கழுத்தைத் திருப்பிப் பின்னால் நோக்கினால், அங்கே ஓரிளம் பெண் சிந்தனையே வடிவாகத் தன் கால்களை மடக்கியபடி கடற்கரை மண்ணில் உட்கார்ந்து கடலை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். அவளழகும் அமைதியும் பரதனைப் பாதித்தன. அவன் திரும்பி நோக்கியபோது, அவனைப் பார்த்தாள். அவன் தோற்றத்தின் செம்மையும் கண்களின் கூர்மையும் அவள் மனத்தில் பதிய, அவனை நோக்குவதிலிருந்து தன் கண்களை அவளால் எடுக்க முடியவில்லை .

“ஏய் காஞ்சனை! ஏய் காஞ்சனை! இங்கே வா!” என்று மறுபடியும் மீனவக் கிழவன் குரல் கொடுத்தான்.

இராமாயண கலகம்

“இதோ வருகிறேன் தந்தையே!” என்று கூறியபடியே, அந்தக் கிழவனை நோக்கி ஓடினாள். அவள் ஓட்டத்தின் அழகும் பரதனைக் கவர்ந்தது.

இவள் யார்? அரக்கர்கள் பூமி என்று வருணிக்கப்பட்ட இந்த இடத்திலிருந்து இத்தேவதை எவ்வாறு தோன்றினாள்? பரதன் அவளையே நோக்கலானான். அவளும் மீன்கூடை யைத் தலையில் வைத்தபடி கிழவனுடன் பேசிக்கொண்டே, பரதன் பக்கமாக நடந்துவர ஆரம்பித்தாள். பரதனை மீண்டும் நோக்கினாள். தன் உயிர் தன்னைப் பிரிந்து எங்கோ போவது போல் பரதன் உணர ஆரம்பித்தான்.

அன்று கடற்கரைக் கூதல் காற்றையும் பொருட்படுத்தாது அங்கே படுத்திருந்தான். வானத்து நட்சத்திரங்கள் மெல்ல நகர்ந்து போனது முழுவதையும் பார்த்துப் பின்னர், சூரியனின் ஆட்சியில், செவ்வானம் முதலில் வந்து, பின்னர் இரவு பகலானதையும் நித்திரை சற்றுமில்லாமல் பார்த்தவனை, எப்போது வருவாள்?’ என்கிற ஆவலே ஆட்கொண்டிருந்தது.

“ஏய் காஞ்சனை!” என்று மனமும் கூவியது.

காஞ்சனைக்கும் அவன் அடுத்த நாள் அதே இடத்தில் இருப்பான் என்று தோன்றியது. அவளும் தந்தையுடன் வந்து, வலைகளெல்லாவற்றையும் அவன் ஓடத்தில் போடவும், ஓடத்தைக் கடலில் தள்ளவும் உதவி செய்து கரைப்பக்கமாக வந்து பரதனை மறுபடியும் நோக்கிய பின்னர் தனக்கு விருப்ப மான இடத்தில் அமர்ந்து கடலை அமைதியாக நோக்கலானாள். வேர்வைப்படலம் அவள் எழிலிற்கு மெருகூட்டியது.

பரதன் அவளிடம் நடந்து போய், “காஞ்சனை!” என்று அழைத்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் முதலில் மிக வெட்கமடைந்தாள். ஆனால், அவன் முகக்காந்தியின் வலிமையில் அவள் வெட்கம் போக ஆரம்பித்தது.

“என் பெயர் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டாள். தான் முந்திய நாளன்று அவள் தந்தை அவளைப் பெயர் சொல்லி விளித்ததைப் பார்த்த விடயத்தைச் சொன்னான்.

“உன் பெயர் என்ன?” ஆவலுடன் கேட்டாள்.

தன் பூர்வீகத்தையும் தான் ஈழம் வந்த நோக்கத்தையும் விபரமாக எடுத்துச் சொன்னான். அவன் தன் காதலைத் தெரிவிக்க அவள் ஆனந்திக்கலானாள்.

“உனக்கு இராம கதை தெரியுமா?” என்று ஆவலுடன் அவளைக் கேட்டான்.

தான் இராமர் கதை கேட்டிருப்பதாகவும், ஆனாலும் பல விபரங்கள் தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள்.

“என் தந்தைக்கு நிறையத் தெரியும். அவரை நீ கேட்கலாம்.” அவள் பெருமையுடன் சொன்னாள்.

இராமாயண கலகம்

PSE

“பலருக்கும் நடந்த விபரங்கள் தீர்க்கமாகத் தெரியவில்லை .” பரதன் குறைப்பட்டுக்கொண்டான்.

“என் தந்தையைக் கேள்” மறுபடியும் காஞ்சனை சொன்னாள். அவள் பதிலின் தொனிமட்டுமே அவன் மனதில் பதிந்தது.

அவர்கள் காதல் மலரலாயிற்று.

தன் பிரயாணங்களைப் பற்றி விபரமாக எல்லாவற்றையும் சொன்னான். துங்கன், சந்திரை மற்றும் சிங்கனோடு சீதை சிறைவைக்கப்பட்ட இடத்தைத் தேடிப்போன கதைகளை, காஞ்சனை அவதானத்துடனும் சுவாரசியத்துடனும் கேட்டுக் கொண்டாள். குளிர் எப்படியிருக்கும்?’ அவளுக்கு அதையும் உணர வேண்டும் போலிருந்தது.

தினமும் அவளுடன் கடற்கரையில் அமர்ந்து கடலலைகளின் எழிலையும் வலுவையும் வீச்சையும் ஓசையையும் அவள் இரசிப் பதை நோக்குவதே அவனுக்குப் புது அனுபவமாக இருந்தது. விதம் விதமான பறவைகள், பறந்துகொண்டே பல்வேறு சங்கேதங் களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டதையும், மீனவர்கள் விட்டுப்போன மீன் துண்டுகளையும் கடற்கரையிலிருந்த மற்றும் இரைகளைக் கொத்திக் கொண்டு பறந்தேகும் இலாவகத்தையும் அவள் விடாது இரசித்துக்கொண்டேயிருந்தாள்.

“கங்கை நதி அழகானதா” காஞ்சனை அவனைக் கேட்டாள்.

“நான் இரசித்த முதல் அழகான படைப்பு நீதான்.’ பரதன் காதல் வயப்பட்டிருந்தான்.

“ஓடமோட்டும் தொழிலில் இயற்கையை இரசிக்க ஏது நேரம்? அங்கே நீ என்னுடன் வந்து பாரேன்.” அவளை அழைத்தான்.

பரதன் தங்கள் காதலை, காஞ்சனையின் தந்தையிடம் சொல்லி அவளை விவாகம் செய்துகொண்டு தன் ஊருக்குப் போக வேண்டுமென்கிற நோக்கத்தையும் சொன்னான். அவனுக்கு ‘அவர் என்ன சொல்வாரோ’ என்று தயக்கமாக இருந்தது.

மனிதரைப் பிரித்துப்பார்க்கும் வழக்கங்களை நிறையப் பார்த்துவிட்ட பரதனுக்கு வேறுவிதமான அதிர்ச்சி காத்தி ருந்தது.

காஞ்சனையின் தந்தை சேந்தனார், பரதனுக்கு அவ்வூர் விவாக வழக்கத்தை விளக்கலானார்.

“நீர் காஞ்சனையை விவாகம் செய்து கொள்வதென்றால், இவ்வூரில் தான் திருமணத்திற்குப் பின் இருக்க வேண்டும். மேலும், அவள் தாயில்லாப் பெண்.” சேந்தனார் தீர்க்கமாகச் சொல்லிவிட்டார்.

தன்னுயிரை இருகூறாக்குவதான பதிலைச் சேந்தனார் சொல்கிறாரே என்று பரதன் முதலில் யோசித்தான். சீதைக்கு நடந்த துன்பங்களெல்லாம், அவள் தந்தைதாயுடன் மிதிலையி

இராமாயண கலகம்

ஸ்ரீதரன் கதைகள் –

ITEHE

லேயே இராமனுடன் இருந்திருந்தால் நடந்திருக்காது என்பது 298 அவனுக்குப் புரிந்தது. ஈழத்தினரல்லோ இப்பாடத்தை நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார்கள் ! தன் தாயின் நினைவும் அவனுக்கு மேலோங்கியது.

“என் தாயிடம் ஒருமுறை சென்று காஞ்சனையைக் காட்டி ஆசீர்வாதங்கள் பெற அனுமதி தருவீர்களேயானால், நான் இந்த ஊரிலேயே உங்கள் வழக்கப்படி இருந்துகொள்கிறேன்.” பரதன் மனப்போரில் காதல் வென்றது.

“கடலில் மீன்பிடிக்க உமக்குத் தெரியுமா?” சேந்தனார் கேட்டார்.

“கற்றுக்கொள்வேன்” என்று பரதன் உறுதிமொழியுரைத்தான்.

திருகோணமாமலையமர்ந்தோனின் சன்னதியில் தன் தாயையும், இறந்து போன தன் தந்தையையும், அருமைத் தம்பியையும் மற்றும் தன் பாசமுள்ள சுற்றத்தாரையெல்லாம் நினத்தபடியே காஞ்சனையை மணம் புரிந்து கொண்டான். சேந்தனாருக்குப் பரதனிடம் வாஞ்சனையுண்டாயிற்று. காஞ் சனையும் அவனிடம் காதல் கொண்டவளாக இருந்தாள்.

கடலில் ஓடமோட்டுவது, கங்கையில் படகு செலுத்துவதைப் போல் இலகுவானதல்ல என்பது பரதனுக்குப் புரிந்தது. அவருடன் மீன்பிடிக்கப் போகும் போது சேந்தனாரிடம் இருந்து பல விடயங்களைப் பரதன் தெரிந்துகொண்டான். தன் பிரயாணத்து அனுபவங்களையெல்லாம் விபரித்தான். அதனால், சீதைப் பிராட்டியைச் சிறைவைத்திருந்த இடத்தைத் தேடிப்போன விபரங்கள் சொன்னான். அந்த இடத்தில் அசோகவனமொன்றை யும் தான் காணவில்லை என்பதையும் சொன்னான். போகும் வழியில் தான் கண்ட போரைப் பற்றியும் சொன்னான்.

பழங்காலத்தில், திருகோணமலையைத் திரிகூடமலையென்று கூறுவார்களென்றும், இராவணன் சிவபக்தன் என்றால், அவன் அங்கேதான் வழிபட்டிருக்க வேண்டுமென்றும் சேந்தனார் சொன்னார்.

“வடக்கத்தியர் அரக்க குலம் என்று இராவண வம்சத்தைப் பழித்துச் சொல்லிவிட்டார்கள். குபேரனை வென்றவன் என் றல்லோ இராவணன் புகழ் பரவியிருந்தது! பழங்கதைகளில் ஈழம் எவ்வளவு அழகானது, செல்வம் நிறைந்தது, விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மணிமண்டபங்களும் மாளிகைகளும் நிறைந்தது என்று கூறப்படவில்லையா? அரக்ககுலம் இழிவான குலம் என்றால், எப்படி அரக்கர் தேசம் செல்வமும் அழகும் பொருந்தியிருந்திருக்க முடியும்? எவ்வாறு அங்கே அழகான மக்கள் இருந்திருக்க முடியும்?” சேந்தனாருக்கு வடக்கே சொல்லப் படுகிற இராம கதை தெரிந்திருந்தது. தொடரலானார்.

“இராவணன் பிரமனின் வழிவந்தவன். அவனுடைய சகோதரி சூர்ப்பனகை. முதல் மனைவி மண்டோதரி. அவ னுடைய இளைய மனைவி தானியமாலி. வேறு மனைவியரும்

தொது சேந்துக்குப் பத செலுத்த

WOM

இராமாயண கலகம்

299

– ஸ்ரீதரன் கதைகள்

அவனுக்கு இருந்தனர். இவைகளெல்லாம் தெரிந்த விபரங்கள். இராவணனின் தந்தை விசுரவசு இருடிக்கு எத்தனை மனை வியர்? இராவணனுக்கும் சூர்ப்பனகைக்கும் ஒரே தாயா? சூர்ப்பனகை எதற்காகத் தண்டகாரணியம் போக வேண்டி யிருந்தது? அவளும் அழகான பெண் என்று சில நேரங்களில் வருணிக்கப்படவில்லையா? பதினான்கு சேனாதிபதிகளுடன் கரன், தூடணன் என்ற இராவணின் சகோதரர்கள் எப்படி அக்காட்டிற்கு அதிபதியாய் இருந்தார்கள்? அவர்களை இராமனும் இலக்குவனும் அழித்தபோது, கரன் தூடணாதி யோருடன் இருந்த அகம்பனன் எப்படிப் போய் இராவணனிடம் நடந்ததைச் சொன்னான்? படகில் வந்தானா? இல்லை பறந்து வந்தானா? அகம்பனன் பின்னர் இராம – இராவண யுத்தத்தில் முக்கிய பங்கு வகித்தானே! எவ்வாறு தம்பியர் விபீடணனும் கும்பகர்ணனும் மட்டுமே ஈழத்தில் இருந்தார்கள்? இராவண னின் தாய்வழிப் பாட்டனான மாலியவானை இன்னும் ஏன் இவ்வூர் மக்கள் போற்றுகின்றனர்? இராவணனின் புதல்வர்களில் முதலில் அனுமானின் கையால் மாண்டது அச்சன். அனுமான் துாது வந்த சமயம் நடந்தது அது. பின்னர் இந்திரசித்துவையும் அனுமான் எதிர்க்கலாயினும், அனுமானால் இந்திரசித்துவை ஒன்றும் செய்ய முடியவில்லை. சுவேலைமலையில் இராம், இலக்குவ சைனியம் வந்திறங்கிற்று என்று சொல்வார்கள். இம்மலை எங்கே இருக்கிறது என்று பலருக்கும் தெரியாது. யுத்தம் ஒரு பக்கம் இருக்கட்டும். இராவணாதியோரின் குடும்பங்களில் எத்தனை குழப்பம்? விபீடணன் மனைவி சரமையைத் தனியே ஈழத்தில் விட்டுவிட்டல்லோ இராமனிடம் போய்ச் சரணாகதி அடைந்தான்? இது எந்த நீதிநுாலுக்கேற்றதாக இருந்திருக்கும்? இந்திரசித்துவை இலக்குவன் எய்த இந்திராத் திரம் கொல்லலாயிற்று. தென்னிலங்கை மக்கள் காக்கும் இலக்குவனின் அம்பு அதுவாக இருக்கலாம். இராவணன் மாண்டபின்னர் மண்டோதரிக்கு என்ன ஆயிற்று என்று ஒருவரும் சொல்லவில்லை.

சேந்தனார் தனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னார். தன் மனக்கேள்விகளையும் பரதனிடம் பகிர்ந்து கொண்டார்.

பரதனுக்கு சேந்தனாரிடம் அவர் அறிவின் அகலத்தினால் மரியாதை உண்டானது. அவர் மனதிலும் கேள்விகள் தொக்கி நிற்பது குறித்துப் பரதனுக்கு யோசனைகள் பெருகின.

“நீர் இராம இலக்குவர்களினதும் சீதையினதுமான தடங் களைத் தேடுமாப் போல், நானும் இராவணாதியோரின் தடங்களைத் தேடிக்கொண்டு ஒருமுறை போய்வர வேண்டும். என் சரீரம் ஒத்துழைக்குமா?” சேந்தனார் பரதனிடம் சொல்லி ஆதங்கப்பட்டார்.

“இராமரும் சீதையும் இறைவரல்லவோ!” பரதன் பக்தியுடன் சொன்னான்.

“உண்மையில் இராவணன் எப்படியானவன் என்று அறிகிற வாய்ப்புமில்லாமல் போய்விட்டது. தடங்கள் தேடிக் கும்பிட

இராமாயண கலகம்

அல்ல. என்ன நடந்ததென்று அறிவதற்காக மட்டுமே. பக்தி இயற்கையான உணர்ச்சி அல்ல.” சேந்தனார் பரதனுக்கு விளக்கினார்.

பரதன் இப்படிப் பலமுறையும் கடலில் போகும் போதெல்லாம் சேந்தனாருடன் பேசித் தன் சிந்தனைகளை ஓட்டியபடி இருந்தான். காஞ்சனையின் அன்பும் அவள் இரசனையான போக்கும் பரதனின் காதலை வளர்த்தன. காஞ்சனையையும் கூட்டிக்கொண்டு போய் இராமகதைத் தடங்களை மீண்டும் தேட ஆரம்பிக்கலாம்’ என்று யோசனை செய்து, சேந்தனாரிடம் உத்தரவு கேட்டான்.

போர் நிலவரம் சேந்தனாருக்குக் கவலையளித்தது. தென்னிலங்கை அரசனின் கொடூரங்களுக்களவில்லை. இப் போது அவன் கை ஓங்கியிருக்கிறது. பரதனுக்கு ஊர் விவகா ரங்கள் தெரியவில்லை. என்ன செய்யலாம்? உண்மைகள் அறிய விரும்புபவனை எவ்வாறு தடுக்க முடியும்? அவர்களை அனுப்பி அனுபவம் பெறச் செய்வதேதான் சிறந்த வழி.

சேந்தனார் அனுமதி தந்து மேலும் விபரங்கள் கூறலானார்.

பழங்கதைகளில், இலங்காபுரியை ஒரு நகரமென்று விபரித்திருக்கிறார்கள். அந்நகரத்தைச் சுற்றி நான்கு பக்கமும் மதிற்சுவர் இருந்திருக்கிறது. இராம – இராவண யுத்தம் நடந்தபோது, நான்கு திசைகளிலும் இராவணன் படையணிகளைப் போருக்கு

அனுப்பியிருந்தான். கிழக்கணிக்கு, பிரகசு தன் தலைமை. தெற்கே யமனையும் எதிர்க்குமாறு ஒருவனுக்கிருவனாக மகா பாரிசுவனும் மகோதரனும் தலைமை. மேற்கில் இருந்தே இராமன் வருவான் என்று யோசித்துத் தன் அருமைப் புத்திரன் இந்திரசித்துவை அத்திசைக்காவல் தலைமையில் அமர்த்தினான். வடக்குக் காவலுக்கு இராவணனே தலைமை. விருபாச்சன் இலங்காபுரி நகர் உட்காவலுக்கான தலைவனாக்கப்பட்டான். இப்படிப் பார்த்தால் திரிகூடமலையென்கிற திருக்கோணேசுவரத் துக்கு மேற்கேதான் இலங்காபுரி என்கிற நகரம் இருந்திருக்க வேண்டும். திரிகூடமலையில் இருந்தது இலங்காபுரியென்றால் அதற்கு நான்கு பக்கம் கோட்டை வாசல் இருந்திருக்க முடியாது. திரிகூடமலைக்குக் கிழக்கே கடலல்லவோ உள்ளது? திரிகூட மலைமேல் இராவணனுடைய நகரம் இருந்தது எனவும் சொல்லி யிருக்கிறார்கள். அதுவும் இலங்காபுரியும் வெவ்வேறு இடங்களா யிருந்திருக்க வேண்டும். சீதை சிறைவைக்கப்பட்டிருந்த அசோக வனம் இலங்காபுரியென்று சொல்லப்பட்ட நகரத்தையொட்டித் திருக்கோணேசுவரத்திற்கு மேற்கே இருந்திருக்க வேண்டும். நீங்கள் மேற்கே போய்த் தேடினால், தடங்கள் கிடைக்கக்கூடும்.

“காஞ்சனை! நீயும் வருகிறாயா?” பரதன் அவளைக் கேட்டான். காஞ்சனைக்குப் பரதனுடன் பிரயாணம் செய்யப் போவதில் மிகுந்த ஆவல் எழுந்தது. கடலின் அழகு மட்டுமே இதுவரை பார்த்திருந்தவளுக்கு வனங்களும் அவற்றில் வாசம் செய்யும் பிராணிகளையும் பார்க்கப்போகிற ஆசை எழுந்தது.

இராமாயண கலகம்

“நெடுங்காடுகள் நிறைந்த பிரதேசம். கவனமாகப் போய் வாருங்கள்” என்று அனுப்பிவைத்தார் சேந்தனார்.

யானைகளும் சிறுத்தைகளும் மற்றும் பல்வேறு வகையான மிருகங்களும் நிறைந்த காட்டு வழியில் போகையில் காஞ்சனை எல்லாவற்றையும் இரசித்தாள். பயம் வந்தபோதெல்லாம் பரதனைக் கட்டிக்கொண்டாள். சிரித்தபோதெல்லாம் பரதனிடம் முத்துப் பற்களைக் காட்டித் தன் சிரிப்பைப் பகிர்ந்து கொண்டாள். தன் இரசனை எல்லாவற்றிலும் பங்கேற்கும்படி பரதனை வேண்டினாள். முள்ளில் அவள் ஆடை சிக்கியபோதெல்லாம் பரதன் அதை எடுத்துவிட்டான். தன் ஆடைத் தலைப்பினால் அன்புடன் அவன் வேர்வையைத் துடைத்துவிட்டாள். காட்டுப் பறவைகள் இன்னிசையாகவும் துயரம் தொனிக்கவும் உற்சாகமாக வும் பாடின. இலைகளில் இளந்தளிர்களும் சருகுகளும், பூவுலகின் உயிர்நிலைகளைக் காட்டிக் காட்சிகளைப் பூரணப்படுத்தின.

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் தன் சூழலை இரசித்தபடி இருந்தவளுக்கு நேற்றும் நாளையும் இல்லாத மாதிரி இருந்தது. பரதனுக்கு அது வியப்பாக இருந்தது.

“நான் இல்லாமல் இக்காட்டிற்குள் வந்திருப்பாயா?” பரதன் அவளைக் கேட்டான்.

“நீ இல்லாமல் என் உயிரே இல்லை . என் உயிர் உன்னி டத்தில் என்றால், நீயில்லாமல் நான் எங்கே போக முடியும்?” மிகுந்த காதலுடன் காஞ்சனை சொன்னாள்.

போகும் போது காட்டுப்பாதையில் காட்டாறுகள் குறுக் கிட்டன. தாமரைக்குளங்களில் நீர் பருக வரும் பிராணிகளை எதிர்பார்த்துச் சிறு முதலைகளும் காத்திருந்தன. “தண்ணீர் எடுக்கவோ குளிக்கவோ போகும் போது, கவனமாகக் குளத்தில் இறங்கு” என்று பரதன் அவளிடம் சொன்னான். போகும் பாதையை நன்றாக அடையாளம் செய்தபடி பரதன் போய்க் கொண்டிருந்தான். திரும்பும் போது பாதையில் குழப்பம் எதுவும் வரப்படாது என்கிற தீர்மானம் உடையவனாக இருந்தான்.

சில நாட்கள் பிரயாணம் செய்து ஓரழகான ஊரை அடைந்தார்கள். சோலைகளும் வாவிகளும் நிறைந்த ஊரா யிருந்தது. அழகு நிறைந்த அவ்வூரில் யுத்தம் எந்த நேரத்திலும் வரலாம் என்று அவ்விடத்து மக்கள் சொன்னார்கள். அழகிய புரம் என்ற பெயரும் மற்றும் எந்த மன்னன் அவ்வூரை ஆள்கிறான் என்பதைப் பொறுத்துப் பல்வேறு பெயர்களும் அந்த ஊருக் கிருந்தது. மடம் ஒன்றில் தங்கி, தங்கள் பிரயாணத்தின் நோக்கத் தைப் பலரிடமும் சொல்லி அசோகவனத்தைத் தேடிப்போன போது….

ஊரின் ஓரெல்லையில் மரத்தோப்பு ஒன்று கண்டார்கள். பல்வேறு நெடிய மரங்களும் அவற்றைச் சுற்றிய கொடிகளும் அம்மரத்தோப்பிற்குத் தனித்தன்மையைக் கொடுத்தன. காடு போலல்லாது தனித்தனியே ‘நான் நானாக இருக்கிறேன்’ என்று

இராமாயண கலகம்

கதைகள் – ஸ்ரீதான்

பறை சாற்றுவதுபோல் ஒவ்வொரு மரமும் கம்பீரமாக நின்றது. 302 மான்கள் அத்தோப்பிற்கு அழகூட்டியபடி அங்கங்கே தங்கள் அழகுமிக்க பார்வையை இவர்கள் பக்கம் ஒரு கணம் செலுத்தி வெருண்டு ஓடப்பார்த்துப் பின்னர் இவர்கள் அமைதியைப் பார்த்துத் தங்கள் ஓட்டத்தை நிறுத்தின. குரங்குகள் மரத்தோப்பில் பல்விதமாகவும் தங்களுக்குள் பேசியபடியே கனிகளையும் இலைகளையும் சுவை பார்த்தபடி இருந்தன. ஒரு பக்கத்தில் சிதைந்து போன ஒரு மதிற் சுவர் இருந்தது. அதையொட்டி ஓர் எறும்புப்புற்று ஓரரசனின் கோட்டைக்கு இருக்கக்கூடிய செம்மையுடன் இருந்தது. காட்டுப்பூக்களின் நறுமணம் மயக்கம் தருவதாக இருந்தது.

அத்தோப்பின் நடுவில் ஓர் ஆலமரம் இருந்தது. அப்பாரிய மரத்தின் பருங்கிளைகளைத் தாங்கிய வேர்களெல்லாம் கோவில் துாண்களைப் போலச் செம்மையாகவும் சீராகவும் இருந்தன. நடுவே மரத்தைச் சுற்றி அழகான மேடை ஒன்று இருந்தது. குரங்குகள் மரக்கிளைகளில் அமர்ந்து தங்கள் விளையாட்டுகளில் சிரத்தையாக இருந்தன. பறவைகளும் தங்கள் உல்லாசத்தில்

இருந்தன.

“ஏ பரதனே! இதைப் பார்! இந்தத் தோப்பைப் பார்!” என்று அத்தோப்பை வியந்தபடியே காஞ்சனை பரதனின் தோளை உலுக்கிச் சொன்னாள்.

பரதன் அந்த மரத்தோப்பைப் பார்த்தான். அவனுக்கும் அது ஒரு விசேடமான இடமாகப்பட்டது.

“என்னுயிர் பரதனே! இங்கே பார். இந்த மேடையைப் பார். மான்களைப் பார். இந்த மரத்தின் அழகைப் பார். இந்தத் தோப்பின் தெய்வீகச் சூழலைப் பார். இந்த எழிலான குரங்குகளைப் பார். பறவைகளின் சத்தத்தின் சுத்தத்தைக் கேள். பூக்களிலிருந்து வரும் வாசனைகளை முகர்ந்து பார். இங்கேதான் சீதை சிறைவைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்.”

ஆனால், சீதையிருந்தது சிம்சுபாமரத்தடியில் என்றல்லவா தன் மூதாதையர் சொல்லியிருக்கிறார்கள்? இது ஆலமரம்.

அசோகமரங்கள் எங்கே?

பரதன் ஒருகணம் தனக்கு இராம கதை சொன்ன தன் பாட்டனை ஞாபகப்படுத்திப்பார்த்தான்.

அவன் சந்தேகம் காஞ்சனைக்குக் கவலையைத் தந்தது.

“நீ இராமன் சீதையைச் சந்தேகித்த மாதிரி இந்த இடத்தைச் சந்தேகிக்கிறாய். நீ , சற்று இந்த இடம் முழுவதையும் இன்னொரு முறை பார். காட்டுக்கு நடுவே அமைந்து போன அழகுத் தோப்பைப் பார். கேட்கிற தொனிகளை உற்று நன்றாகக் கேள். இங்கே மலரும் பூக்களின் நறுமணத்தை நன்றாக முகர்ந்து கொள். கண்களை ஒருகணம் மூடித் திற.” காஞ்சனை தன் அழகிய கரங்களால் மெல்ல அவன் கண்களைப் பொத்தி, “என் அன்பின் பரதனே ! முதலில் தொனிகளையும் வாசங்களை

யும் ஒருகணம் உணர்” என்றாள்.

இராமாயண கலகம்

NIYIN

பரதனின் பார்வை தவிர்ந்த மற்றப் புலன்கள் யாவும் சக்தியடைந்து ஒருமைப்படுகையில், காஞ்சனை அவன் கண்களிலிருந்து தன் கரங்களை எடுத்தாள்.

“இங்கே பார்” என்றாள் மெல்லிய குரலில்.

அவன் அத்தோப்பைத் தன் கண்களாலும் உணர்ந்தபோது, புலன்கள் யாவும் ஒன்றுபட்டு அவனுள் ஓர் இன்ப அமைதியத் தந்தன.

“ஏ காஞ்சனயே! நீ சொல்வது சரிதான். இதுதான் சீதாப்பிராட்டி இருந்த இடம்! இதுவேதான்!” பரதன் குரல் எழுச்சியில் அவன் புளகாங்கிதம் தெரிந்தது.

“இங்கே கத்தாதே! மெல்லமெல்ல!” என்று விரலை வாய்க்கு முன் வைத்து அவனை அடக்கினாள். “இந்த அழகை இரசித்துப் பார்” என்று மீண்டும் தன் ஐம்புலன்களையும் கொண்டு அக்காட்சியில் ஐக்கியமானாள். பரதனும் இக்கலையைக் கற்கலானான்.

“இன்றிரவு வந்து பார்க்கலாம். சந்திரனின் ஒளியில் இத்தோப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். அனுமான் முதலில் அசோகவனத்துக்கு வந்தபோது சந்திரனின் ஒளியின் உதவியால் அல்லவா சீதாப்பிராட்டியை பார்க்க முடிந்தது.”

பரதன் உற்சாகமடைந்திருந்தான்.

“நிலாக்காயும் போதா? ஓ! என் பரதனே! பரதனே!” அவள் நாடி நரம்பெல்லாம் உருகியபடி அவனை முத்தமிட்டாள்.

அவளின் உற்சாகம் அவன் உயிரை உலுப்பியது.

மாலை அங்கு வந்தவர்கள் இரவின் வரவையும், அதை யொட்டி வரப்போகிற சந்திரப் பிரபையையும் எதிர்பார்த் திருந்தார்கள். வளர்பிறைச் சந்திரன் இன்னும் சில நாட்களில் பூரணம் பெறுகிற நிலையில் இருந்தான். சந்திரன் அடிவானத்தில் எழுந்தபோது, பின்னர் இயற்கைக் காட்சிகளெல்லாம் மயக்கும் வெண்மையாகப் போகும் விசித்திரம் நடைபெறப்போகிறதற்கான அறிகுறி ஒன்றுமில்லை. நட்சத்திரங்கள் வானில் சுடர்விடத் தொடங்க, சந்திரன் தன் மயக்கும் வலிமையைக் காட்ட ஆரம்பித்தான். இலைகளில் பட்டுத் தெறித்த சந்திரனின் ஒளி அவற்றை வெள்ளியாக்கிவிட்டுச் சீவராசிகளின் கண்களை மயக்கத் தொடங்கின. ஆலமரத்தின் கிளைகளுக்கூடாக மெல்லிய ஒளி பாய்ந்து பரவி, அம்மரத்தைச் சூழ்ந்து அணைத்துக் கொண்டது.

“என் பரதனே! என் பரதனே!” என்று முனகியபடியே காஞ்சனை மைதுன நிலையடைந்தாள்.

பறவைகள் சந்திர ஒளியினை இரசித்துப் பாடின. இரவு இரைதேடும் மிருகங்களின் ஆரவாரம் அவ்வப்போது கேட்டபடி இருந்தது.

சூழலின் அமைதியில் பரதனும் காஞ்சனையும் தங்கள் பிரயாண மூட்டைகளை அங்கே போட்டு, காதல் அணைப்புடன்

இராமாயண கலகம்

ஸ்ரீதரன் கதைகள் –

நித்திரையானார்கள். இரவு முடிகிற நேரம் பரதன் மெல்ல எழுந்தான். பறவையொலி அவனை எழுப்பிவிட்டது.

பார்த்தால்….

சந்திரன் வானத்தில் இருந்து மறைவதற்கு முன் ஆலமரத்தின் அடியில் தன் அமைதியொளியைப் பாய்ச்சிக்கொண்டிருந்தான். ஒரு வெண்புறா மேடையில் அரைத் தூக்கத்தில், துக்கம் தோன்றிய மந்தாரத் தொனியில் தன் நிலை எதையோ சொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தது. அதைச் சுற்றியிருந்த மற்றப் புறாக்கள் இவ்வெண்புறாவுடன் சம்பாடணை செய்யும் நிலையி லிருந்ததாகத் தெரியவில்லை. மரக்கிளையொன்றில் ஒரு குரங்கு அப்புறாவின் மந்தாரத் தொனிக்கேற்றவாறு தாரத் தொனியில் பதிலளித்துக் கொண்டிருந்தது. காஞ்சனையை, பரதன் மெல்ல அவளை முத்தமிட்டு எழுப்பினான். மெல்லிய குரலில்,

“ஏ காஞ்சனை இங்கே பார். இந்த அதிசயத்தைப் பார்!” என்றான்.

காஞ்சனை மெல்ல எழுந்து கண்களைக் கசக்கியபடி அவன் காட்டிய திசையில் பார்த்தாள். சூழல் புரியச் சிறு தாமதமாயிற்று.

புறாவின் குறைகளைக் கேட்டுக் குரங்கு பதிலளித்துக் கொண்டிருந்தது.

“பரதனே! இதுவேதான் அந்த இடம். இதுதான். இதுவே தான்!” காஞ்சனை அவன் தோளைப் பற்றியபடி மெல்லிய குரலில் சொன்னாள். எங்கோ இருந்து எழும்பிய காட்டுச் சேவலின் கூவலில் வெண்புறாவும் அதைச் சுற்றிய கூட்டமும் குரங்குகளும் தத்தம் கடமைகளை நினைத்தோட ஆரம்பித்தன. தோப்பு பகலை நேர்கொள்ள ஆரம்பித்தது.

பரதன் அம்மேடைக்கருகில் போய் வணங்கினான். “இத் தலத்தை எல்லோருக்கும் காட்டவேண்டும்.” பரதன் தீர்மானித்துக் கொண்டான்.

“என் தந்தையிடம் முதலில் காட்ட வேண்டும்” என்றாள் காஞ்சனை.

“எப்படி எல்லோரிடமும் சொல்லலாம்? முதலில் அழகிய புரத்துக்குப் போவோம். அங்கே சொல்லிப்பார்ப்போம்.” சிந்தனைகள் மேலும் தொடரலாயின.

அழகிய புரத்துக்குப் போனால், அங்கே ஊர் கலக நிலையில் இருந்தது.

தென்னிலங்கை மன்னன் போரில் வென்று, வட இலங்கை மன்னன் எங்கேயோ போய்விட்டான். தென்னிலங்கை மன்னனின் கொடூரங்கள் அவ்வூர் மக்களுக்குப் பிடித்தமானவையல்ல. மக்களை எல்லாவிதமாகவும் இம்சிப்பது – யானையை வைத்து மிதிப்பது, பெரும் உரலில் போட்டு இடிப்பது, பெண்களைக் கற்பழிப்பது இவையெல்லாம் அவனுக்குப் பிடித்தமானவை.

இராமாயண கலகம்

305

– ஸ்ரீதரன் கதைகள்

தென்னிலங்கை மன்னன் தன் அதிகாரத்தை அவ்வூரில் நிலை நிறுத்துவதற்காய் அங்கே வரப்போகிறானாம். இது பல பேருக்கு உகந்ததாக இல்லை. முதலில் வெற்றி விழா ஒன்று நடக்கப்போகிறது. யானைகள், பாணர்கள், நாட்டியகாரர்கள், வாத்தியகாரர்கள் மற்றும் விதம் விதமான கூத்தாடிகள் அவ்விழாவில் வரப்போகிறார் கள். வெகு விசேடமான தெய்வாம்சம் பொருந்திய பொரு ளொன்றை, வடக்கே அணைக்கு அப்பால் இருந்து வந்த முனியொருவர் தென்னிலங்கை மன்னனிடம் கொடுத்து, “நீ வெற்றி பெறுவாய்!” என்று வாழ்த்திச் சென்ற அப்பொருள் ஊர்வலம் வரப்போகிறது.

காஞ்சனையும் பரதனும் இவ்விழாவைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று முடிவெடுத்தார்கள். மக்கள் பயத்துடனும் வியப்புடனும் விழாவைப் பார்ப்பதற்காகத் தெருவில் சேர்ந் தார்கள். மக்கள் பல்தொலைவுகளிலிருந்தும் வந்து சேர்ந்தார் கள். சிறுவர், இளைஞர் , நடுவயதினர், முதியோர் யாவரும் பகல் பொழுதிலிருந்து அரச மாளிகை வீதியை நோக்கி இருபுறமும் வரிசையாக நின்றனர். கூட்டத்தில் எங்கே தங்கள் சிறுவர் தொலைந்துபோய்விடுவரோ’ என்றஞ்சிப் பெற்றோர் இறுக்கிப் பிடித்தபடி கால்வலிக்க நின்றுகொண்டிருந்தார்கள். மரக் கிளைகளில் ஏறக்கூடியவர் யாவரும் மரக் கிளைகளில் ஏறி, நடப்பது யாவையும் மேலிருந்து பார்த்து இரசித்தனர். விழா தொடங்க மாலையாயிற்று. தீப்பந்தங்களைப் பிடித்தபடி சேவகர்கள் அவ்விடத்துக்கு ஒளி சேர்த்தனர்.

கூட்டங்கூட்டமாக மக்களை மகிழ்விக்கும் பாணர்களும் நாட்டியகாரர்களும் வாத்தியகாரர்களும் கூத்தாடிகளும் விழாவில் பிரதானமாக இடம்பெற்று நடந்து வந்துகொண்டிருந்தனர். முதலில் ஒரு நாட்டியக் கூட்டம். அவற்றுக்கு வாத்தியமும் மத்தளமும் வாசிப்பவர்கள் சற்றுப் பின்னால் . மத்தள வாத் தியங்களின் ஒலி காதைப் பிளந்தது. வெவ்வேறு நாட்டியக் கூட்டங்களின் இசை ஒலிகளும் தாளங்களும் முரண்பட்டன. தனித்தனியாகக் கேட்டால், இசைவாக இருந்த சப்தங்கள் ஒன்றாகக் கேட்டால், அபசுவரத்தொனியாகக் கேட்டது. மரக் கிளைகளில் இருந்தவர்கள் அதைக் கேட்டு அவ்வப்போது தம் காதுகளைப் பொத்திக்கொண்டனரானாலும், மக்களின் கூட்டமும் விழா நடப்புகளின் தனித்தன்மையும் அவர்களை மிகவும் கவர்ந்தன. காஞ்சனையும் பரதனும் மக்களோடு மக்களாய் விழாவில் உலாவரும் யாவற்றையும் பார்த்து வியந்தனர்.

நாட்டியக் கூட்டங்கள் போனபின்னர், கூத்தாடிகள் பல்வேறு முக அலங்காரங்களுடன் தங்களின் சேட்டைகளைக் காட்டி மக்களைச் சிரிக்கவைத்தனர். தீப்பந்தங்களின் ஒளி பல்வேறு தோற்றங்களையும் கூத்தாடிகள் முகத்தில் தோற்றுவித்தது. சந்திர ஒளி அவ்விழாவிற்கு அழகு கூட்டியது. மக்கள் தங்கள் விசனங்களை அக்கணத்தில் மறந்திருந்தனர். கூத்தாடிகளுக் கடுத்ததாக அழகாக அலங்கரிக்கப்பட்ட யானைகள். ஒவ்வோர் யானையின் அம்பாரியிலும் ஒவ்வொரு பொருள் அலங்கரிக்கப் பட்டிருந்தது. முதலில் தென்னிலங்கை மன்னனின் கேடயமும்

இராமாயண கலகம்

ஸ்ரீதரன் கதைகள் –

வாளும். பின்னர் அவன் வென்ற எதிரிகளின் கிரீடங்கள். 306

ஒவ்வொரு யானைக்குப் பக்கத்திலும் ஒவ்வொரு அதிகாரி. மந்திரி , சேனாதிபதி, முக்கிய தளபதிகள் யானைகளுடன் கம்பீரமாக பவனி வந்தனர்.

கடைசியாக, ஒவ்வொரு பக்கத்திலுமாக, ஒரு நுாறு சேவகர்கள் இருக்கக்கூடும் – தட்டங்களிலிருந்து மலர்களைத் தூவியபடி வந்து கொண்டிருந்தார்கள். கட்டியக்காரர்கள் இருவர் முதல் வந்துகொண்டிருந்தனர். இவர்களுக்குப் பின்னால் மிகுந்த கம்பீரத்துடன் தன் நீண்ட வெண்தந்தங்களை இடமும் வலமுமாக ஆட்டியபடி பெருமையுடன் ஒரு வெகு உயரமான யானை வந்து கொண்டிருந்தது. அதன் மேலிருந்த தங்க அம்பாரி தீப் பந்தங்களின் ஒளியில் மின்னியது. அம்பாரியில் சிவப்புப் பட்டுத்துணியால் பத்திரமாக மூடப்பட்டிருந்தது ஒரு பொருள். அந்த யானை தனிச் சிறப்பானது, அதன் அம்பாரியில் இருப்பதும் சிறப்பானது என்று மக்களுக்குத் தெரிந்தது.

“இலக்குவனின் கேடயம்! இலக்குவனின் கேடயம்!” கட்டியக் காரர்கள் முழக்கினர்.

மக்கள் யானையில் வந்த அக்கேடயத்தைக் கைகூப்பி வணங்கினர்.

இலக்குவனின் கேடயமா? இதைப் பற்றி ஒருவரும் ஒன்றுமே சொல்லவில்லையே! பரதன் ஆச்சரியமடைந்தான்

பரதனுக்கு யானையின் பக்கத்தில் நடந்துவருபவன் யாரோ தெரிந்தவன் போலிருந்தது. கிட்டே போய்ப் பார்த்தால், அது துங்கன்!

அவன் முக்கியமடைந்தவன் என்பது அவன் உடையின் சிறப்பால் தெரிந்தது. பின்னால் சிங்கனும் ஈட்டியுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

காஞ்சனைக்கு அவர்கள் யாரென்பதை விளக்கினான். காஞ்சனையோ தீப்பந்தங்களின் ஒளியில் மாறும் முகச் சித்திரங் களை இரசித்தவாறு இருந்தாள்.

துங்கனிடம் சொன்னால், சீதாப்பிராட்டி சிறையிருந்த தோப்பை எல்லோருக்கும் சொல்லிப் பாதுகாப்பான்.’ பரதன் துங்கனையும் சிங்கனையும் தொடர்ந்து காஞ்சனையின் கையை இழுத்துக் கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தான். துங்கனிடம் போய் வணங்கினான். துங்கன் ஆச்சரியப்பட்டான்.

“பரதனே எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தாய்? இவள் யார்? இராவணன் இருந்த இடங்களைப் பார்த்தாயா? சொல்! சொல்” என்று அவசரமாக அடுக்கடுக்காகக் கேட்டான்.

பரதன் தன் பிரயாணங்களின் விபரங்களைச் சொல்லி, எப்படிக் காஞ்சனையை மணம் புரிந்துகொண்டான் என்பதை விளக்கினான். சீதாப்பிராட்டி இருந்த வனத்தைப் பார்த்ததை விளக்கியபோது, துங்கனுக்கு முகம் கறுத்தது.

s

இராமாயண கலகம்

-ஸ்ரீதரன் கதைகள்

“அந்த இடமாக இருக்க முடியாது! நாங்கள் போய்ப் பார்த்த இடந்தான் சீதை சிறை இருந்த இடம். வேறெதுவுமாக இருக்க முடியாது!” துங்கன் ஓங்கிய குரலில் சொன்னான்.

“நாளைக்கு அந்த இடத்தைக் காட்டுகிறோம். பார்த்து விட்டுச் சொல்லுங்கள்” என்றான் பரதன். துங்கனின் பதிலால்

அவர்கள் கவலையடைந்தார்கள்.

துங்கனின் அதிதிகளாக அன்றிரவிருந்து அடுத்த நாள் காலை சீதை சிறையிருந்த வனத்துக்குப் பரதனும் காஞ்சனையும் துங்கனைக் கூட்டிக்கொண்டு போனார்கள். சிங்கனும் காவலுக்கு வந்தான். அங்கே போகும் போது, பரதன் துங்கனைக் கேட்க லானான்

“நான் முதல் முறை வந்தபோது நீங்கள் இலக்குவனின் கேடயத்தைப் பற்றிச் சொல்லவேயில்லையே!”

துங்கன் வடக்கிலிருந்து வந்த முனியொருவன், போர் நடக்கும் போது, தென்னிலங்கை மன்னனுக்கு அக்கேடயத்தைக் கொடுத்து, “வெற்றிபெற” என வாழ்த்திச் சென்றதாகச் சொன்னான். தம் மன்னன் வட இலங்கை மன்னனைப் போரில் வென்றதற்கு அத்தெய்வ வாழ்த்தே காரணம் என்பதால், மக்களும் அக் கேடயத்தைத் தரிசித்துத் தன் வெற்றியில் பங்குகொள்வதற்காக அதைத் தன் வெற்றி விழாவில் ஊர்கோலம் கொண்டு போகுமாறு கட்டளையிட்டதை விபரித்தான். மன்னன் தன்னையே இதற்குப் பொறுப்பாக விட்டிருப்பதாகவும், அதற்கும் ஒரு கூடம் கட்டிப் பேணுவார்கள் என்பதையும் சொன்னான். சிங்கன் ஒரு மூலையில்

இருந்து வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.

துங்கன் முதலில் ஒன்றுமே சொல்லாமல் சீதை சிறை யிருந்த வனத்தைப் பார்த்தான். பின்னர், அத்தோப்பை இரண்டு, மூன்று முறை சுற்றிவந்து பார்த்துவிட்டு,

“இந்த இடமல்ல” என்று மிக உறுதியடைந்தவன் போல் சொன்னான்.

காஞ்சனையும் பரதனும் மிகக் கவலையடைந்தார்கள். தோற்றுபவைகளெல்லாம் உறுதியற்றுப்போகும் போல் இருந்தது. எது தெய்வ உண்மையோ அது தெரியாமல் போய்விடுமோ’ என்கிற பயம் ஆட்கொள்ள, பரதனுக்குத் தான் போன இடங் களெல்லாம் போய் இவ்வுண்மையைச் சொல்லி நீதி கேட்க வேண்டும் போலுமிருந்தது.

பிரயாணத்தேவதை அவனை மீண்டும் ஆட்கொள்ளலா னாள். கேதீசுவரத்திலும் இராமேசுவரத்திலும் மடங்களில் சொன்னால், இராம தடங்கள் தேடி வருவோர் புண்ணியம் அடைவர். கேதீசுவரம் முதலில் போகலாம்.

காஞ்சனையிடம் சொன்னபோது, தந்தைக்கு இத்திட்டம் தெரியாதது அவளுக்குக் கவலையளித்தாலும், பரதனின் துணை நம்பிக்கையளித்தது. “வருகிறேன்” என்றாள்.

இராமாயண கலகம்

கதைகள் ஸ்ரீதான்

கேதீசுவரத்திற்குப் போகப்போவதைத் துங்கனிடம் சொல்லி 308 விடைபெற்றுக்கொண்டு தங்கள் பிரயாணத்தைத் தொடர்ந் தார்கள். அவர்கள் போனவுடன், துங்கன் சிங்கனைக் கூப்பிட்டு அவன் காதில் ஏதோ சொன்னான். சிங்கனும் தன் தலையை ஆட்டி விட்டு, முன்னால் போகும் இளம் தம்பதியர் கண்டு கொள்ளாதவாறு ஈட்டியுடன் பின்னால் நடக்கலானான்.

மறுபடியும் காட்டுப்பாதை வழியில் திருக்கேதீசுவரம் நோக்கி பரதனும் காஞ்சனையும் நடக்கும் போது, காஞ்சனை உற்சாகமில்லாதவளாக இருந்தாள். கவலை பரதனையும் ஆட்கொள்ளலாயிற்று. கேதீசுவரத்தை அடைந்தபோது, மழை ஆரம்பித்தது. முதலில் சிறிதாக . தான் தங்கியிருந்த மடத்தில் சென்று தான் பார்த்த வனத்தின் இடத்தை அங்குள்ளவர்கள் ளுக்கு விளக்கினான். எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்டார் கள். அவன் சொல்லும் கதையைக் கேட்பதற்காகச் சனங்கள் கூடினார்கள்.

இவற்றையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக்கொண்டி ருந்த சிங்கன், அவனுடன் வந்தவன் ஒருவனிடம் ஏதோ சொல்லி அனுப்பினான்.

“காஞ்சனையே! இங்கிருந்து இரமேசுவரம் போய்த் தரிசித்து அங்கேயும் நாங்கள் கண்டதை எல்லோரிடமும் சொல்லிவிட்டுத் திரும்பி வரலாம். வருகிறாயா? இராமர் அணையை நீ கட்டாயம் பார்க்க வேண்டும். அங்கே அவ்வணை கடலை இருகூறாக்குவது வேறெங்கும் காண முடியாத ஓரற்புதமான காட்சி.”

கடல் இருகூறாகிறதா? காஞ்சனையைக் கற்பனைகள் சூழலாயின. அணையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னோர் பக்கத்துக்குத் தாவும் மீன்களைப் பார்க்க நேரலாம். அவைக ளைப் பிடித்துத் திரும்பவும் கடலில் சேர்க்கலாம். நண்டுகள் மணலைத் தோண்டக் கடற்கரை மணலில்லாமல் என்ன

செய்கின்றன என்று பார்க்கலாம்.

“வருகிறேன்” என்றவளைக் கூட்டிக்கொண்டு, பெய்கிற மழையையும் பொருட்படுத்தாது அணைக்கருகில் போய்க் காட்டினான். காற்றும் கடுமையாக வீச ஆரம்பித்தது. அலைகள் அணையின் இடது புறத்திலிருந்து ஓங்கிச் சாடின. அணைக்கு மேல் நீரை வாரிக்கொட்டின. தந்தையைக் கடலுக்கு அனுப்பி விட்டுக் கவலைப்படும் கணங்கள் நினைவுக்கு வர, தந்தையை நினைத்துக் காஞ்சனை ஏங்க ஆரம்பித்தாள். அணையில் மழையை யும் காற்றையும் பொருட்படுத்தாது வடக்கே நடக்கலானார்கள். பரதன் வேறு யாராவது அணைமேல் வருகிறார்களா என்று பார்த்தான். முன்னால் பார்த்தால், வேறு ஒருவரையும் அணையில் காணோம். பின்னால் பார்த்தால், இரு மனிதர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களும் தொப்பலாக நனைந் திருந்தார்கள். காற்றும் மழையும் வலுவடைய , காஞ்சனையும் பரதனும் ஓட ஆரம்பித்தார்கள். பின்னால் வந்த இரு மனிதரும் அவர்களைத் தொடர்ந்து ஓட ஆரம்பித்தனர். காஞ்சனை

இராமாயண கலகம்

ஓடுவதை நிறுத்தினாள். பரதனையும் நிறுத்தி, “பரதனே! வா திரும்பிவிடலாம். இராமேசுவரம் போக இது சரியான நேரம் மாதிரித் தெரியவில்லை ” என்று அழ ஆரம்பித்தாள். அவள் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

“காஞ்சனை! ஏன் அழுகிறாய்” பரதன் கவலை அதிகரித்தது.

“என் தந்தை ! என் தந்தை ! ஓ…” என்று காஞ்சனை விக்கி விக்கித் தேம்பலானாள். பரதனால் அவளைத் தேற்ற முடிய வில்லை. காற்றும் மழையும் தங்கள் சாடலை நிறுத்தப்போவதாகத் தோற்றவில்லை.

“கவலைப்படாதே என் காஞ்சனையே! கவலைப்படாதே! நாங்கள் உன் தந்தையிடமே போகலாம். வா திரும்புவோம்!” என்ற பரதனின் கண்களில் நீர் நிரம்பியிருந்தது. அவளை அணைத்து ஆறுதல் சொல்லி இருவரும் திரும்பினால்….

அங்கே துங்கனும் சிங்கனும் கையில் உருவிய வாளுடன் நின்றுகொண்டிருந்தார்கள். வெறிபிடித்தவர்கள் போலிருந்த அவர்களின் கோலத்தைக் கண்டு காஞ்சனை பரதனை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். மழையும் காற்றும் கூவிச் சாடின.

பரதன் “என்ன….” என்று அவர்கள் கோபத்தை அறிய விரும்பித் தொடங்கினான்.

“நீ எப்படி சீதையின் சிறையிடம் அழகிய புரிவனம் என்று சொல்லுவாய்? எவ்வளவோ கடினத்துடன் உன்னை சீதை சிறையிருந்த இடத்துக்குக் கூட்டிக்கொண்டு போனோமே! யுத்த களங்களையும் தாண்டிக் கூட்டிக்கொண்டு போனோமே! நாங்கள் என்ன மடையர்களா? ஏன் தவறான இடத்தை எல்லோருக்கும் சொல்கிறாய்? எங்கேயோ இருந்து வந்தாய் ! இந்த வடக்கிலங் கைக்காரி சொல்பேச்சைக் கேட்டு வேறோர் இடத்தைச் சீதையின் சிறையிடம் என்று காட்டுகிறாய். என்ன துணிச்சல் உனக்கு? கேட்டுக்கொள்! நான் சொல்கிற இடமே சீதையிருந்த இடம் !” என்று துங்கன் கர்ச்சனை செய்து காஞ்சனையை அவனிடமிருந்து பிரித்தெடுக்க இழுத்தான். உக்கிரமாக அலைகள் அணையின் மேல் வந்து விழுந்து தங்களின் வலுவைக் காட்டின. ஓரலை வீச்சு பரதன் மேலும், காஞ்சனை மேலும் வீழ்ந்து அவர்களை அணைமேல் தள்ளியது. சிங்கன் தன் வாளை இருமுறை ஓங்கினான்.

அடுத்த அலை வீச்சில் இரத்தம் கலந்தது. அணைமேல் அலைகள் வரிந்து தாக்கின. கடல் கொஞ்சம் கொஞ்சமாக அணையைத் தன் ஆதிக்கத்துள் கொண்டுவர முயற்சி செய்தது.

“ஒழியட்டும் இவர்கள் !” துங்கன் வெறியுடன் கத்தினான். சிங்கன் அவர்களின் மூச்சு நின்றுவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டபின்னர் இருவரும் திரும்பி ஓடலானார்கள்.

பூமாதேவி தன்மேல் விழுந்திருந்த இளசுகளைத் தன் மடியில் போட்டு அணைத்துக்கொண்டாள். அவள் கண்ணீர் பெருகப்பெருகக் கடலின் உயரம் கூடியது. அணை கொஞ்சம்

இராமாயண கலகம்

கொஞ்சமாகத் தாழ்ந்தது. வெறியர்கள் இருவரையும் ஓரலை 310 துாக்கி ஒரு பாறையில் சாடித் தொலைத்தது.

மழையும் காற்றும் அடங்க அடுத்த நாள் அணையைக் காணவில்லை.

கடலுக்குக் கீழே வானரர்கள் உழைப்பெல்லாம் அடங்கிப் போனது.

பூமாதேவி தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். உலகக்காப்பாளன் இன்னும் புன்னகைத்துக்கொண்டி ருந்தான்.

– கண்ணில் தெரியுது வானம், 2001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *