(2007 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“உம்மா…உம்மா … உம்மா …” “என்ன மகள்…… இப்படி ஓடி வார்….?”
பாடசாலை விட்டு வந்த என் பேர்த்தி தன் உம்மாவை விழிக்கும் வார்த்தைகள் அன்றைய தினசரிகளை வாசித்துக் கொண்டிருந்த எனது காதில் விழுகின்றன….. iran “உம்மா , எங்கள் டீச்சருக்கு பேசத் தெரியாது……
என்ன மகள் சொல்றீங்க…….? அப்படி பேசக் கூடாது……
*இல்ல உம்மா…நீங்க சொல்வீங்க தானே…. வாடி, போடி, அடியே என்று பேச வேண்டாம். அது….. கெட்ட வார்த்தை …… வாங்க, போங்க, எனப் பேசச் சொல்லி தானே சொல்வீங்க…..?”
“ஓம் சொன்ன…இப்போ அதற்கென்ன…?”
“எங்கட டீச்சர் அப்படியில்ல உம்மா.. கோபம் வந்தா எங்கட டீச்சர்….. வாயப் பொத்துங்கடி….. அடியே இங்க வாடி….. என்று பேசுறார் உம்மா …… இது கெட்ட பேச்சு தானே…?” .
“ஆமாம்…மச்சர்மார் அப்படி பேசினா கணக்கெடுக்க வேணாம். ” என் மகள், அவள் மகளின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தவிப்பது என்னால் உணர முடிந்தது…..
“மகள் ரைஸ் இங்க வாங்கோ….” செல்லமாக நான் என் பேர்த்தியை கூப்பிட்டேன்.
“வாரேன் அப்பா…..” ஓடி வந்து என் மடியில் விழுகிறாள்….
“என்ன உம்மா, நீங்க உம்மாக்கிட்ட ( என்ன சொன்ன…?” செல்லமாகக் கேட்டேன்.
“பாருங்க அப்பா….. எங்கட டீச்சர் இன்டர்பெல்லுக்கு திண்ண சொன்னாங்க…… நாங்க எல்லாரும் திண்ட. அப்ப என்ட கூட்டாளி சரீபா என்ட தண்ணி போத்தல எடுத்த….. அது அப்படியே மேசையில் கொட்டிட்ட, இதைக் கண்ட டீச்சர் பெரம்ப எடுத்துக் கொண்டு வந்து….. அடியே! எல்லாரும் ஒழுங்கா திண்ணிய. நீ மட்டும் மேசையில தண்ணிய கொட்டிய…… ஒன்னய…… தொடை 2…… என்றா…… நான் பயந்தன்….. சரீபா அழுதாங்க. பாவம்…. அந்த டீச்சர் பயமுறுத்தின…… டீச்சர் சரியில்ல தானே…..!”
“அப்படி சொல்ல வேணாம் மக….. டீச்சர்மார் நல்லவங்க…. கோபம் வந்தா ஒங்கட உம்மா ஒங்களுக்கு ஏசுவார் தானே” என்றேன்…. பயர்பா “ஓம் அப்பா …..”ces
“அது மாதிரிதான் டீச்சர் மாரும்…. அவங்க சொல்லிற மாதிரி நாங்க கேட்கணும்….. கோபப்பட நடக்கக் கூடாது….. அவங்க எங்களுக்கு பாடம் சொல்லி தருவாங்க….. விளையாட சொல்லி தருவாங்க….. டான்ஸ் சொல்லி தருவாங்க…. பாட்டு சொல்லி தருவாங்க…… நாங்க நல்லாகப் படிச்ச வேணும்” என்றேன்…..
ஓம் அப்பா…. எனக்கு பசி….. உம்மா பசி…..” என கூவியவாறு ஓட்டம் பிடித்தாள். பி நான் சிரித்துக் கொண்டேன்…… காப்பகம்
‘என் பேர்த்தி பாடசாலை சென்று மூன்று மாதமில்லை….. மச்சரைப் பற்றிய அபிப்பிராயம் திசை மாறுகிறது. தண்ணீர் கொட்டிய பிள்ளையின் மனநிலை எப்படியோ..! வீட்டுச் சூழலில் வாழும் பிள்ளைகள் பாடசாலை சூழலுக்குப் புகும் பொழுது புதுச் சூழலை எதிர் கொள்வர்…… இவைகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் தெரிய வேண்டும்…. இது ஆசிரிய பயிற்சியின் ஓர் அங்கம்….. எல்லா பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கும் இது தெரியும்….. ஆனால் ஒரு சாரார் இதை கவனத்தில் கொள்வதில்லை …… சிலர், பிள்ளைகள் மனதை அறிந்து நடப்பர்….. இவர்களை பிள்ளைகளும் கவர்ந்து கொள்வார்கள்….. சிலர் இப்படியான அபிப்பிராயங்களை ஏற்க மாட்டார்கள்….. என்றாலும் ஆசிரியர்கள் பயில்கட்டை தூக்கும் பட்டதாரிகள் அல்ல; M உயிரோடு விளையாடும் உயிரோட்டங்கள்….. இவர்களையும் பாடசாலையையும் வழி நடத்துவது அதிபர் பொறுப்பு…..’ – இப்படியாக என் மனம் ஆசிரியர், மாணவர் என்ற வட்டத்தினுள் சுற்றியது……
ஒரு நாள் எனக்கு பாடசாலை போக வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று அதிபரை சந்தித்தேன்… அதிபர் நடுத்தர வயது இளைஞர்; பட்டதாரி, அதிபர் ஆளுமையில் விசேட தேர்வு பெற்றவர், எல்லாவற்றையும் விட – நல்ல சுறுசுறுப்பானவர். எவர் மனதையும் நோகவைக்காதவர் என்பவற்றை எனக்கு அவருடன் கதைத்த சிறிது நேரத்தில் அறியக் கூடியதாக இருந்தது. பாடசாலை வெளி விவகாரங்களையும் கதைத்தார். நானும் கதைத்தேன். இச்சந்தர்ப்பத்தில் என் பேர்த்தியின் அபிப்பிராயத்தை சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. சொன்னேன்; – அதன் பின் ஆசிரிய, மாணவ உறவு முறைகளையும் கதைத்தோம்..
“உங்க கருத்துகளை ஆசிரிய மன்றில் கதைப்பேன்” என்றார். அவர் பேச்சில் அவசரம் தொனித்தது….. சங்கோஜத்தையும் உணர்ந்தேன். அதிபரிடமிருந்து விடைபெற்றேன்…… அவர் மன நிலையை மனதினுள் எடை போட்டேன்…யார் எது கூறினாலும் மனதினுள் குடும்பத் தலைவன் தன் குடும்பத்தை பிறர் விமர்சிப்பதை விரும்ப மாட்டான். குடும்ப தவறுகளை மறைக்கவே பார்ப்பான்… இது போலத்தான் சில அதிபர்களும்…இதற்கு எமது பாடசாலை தலைவரும் விதிவிலக்கல்ல என்பதைக் காண்கிறேன்.
பாடசாலை என்பது ஒரு சமூக வட்டம். மாணவர், ஆசிரியர் அதிபர் என்ற வட்டம்….. சமூகத்தோடு இணையும் பொழுது ஆளுமை நிறைந்த சமூகத்தை உருவாக்க முடியும்; இதைத்தான் இஸ்லாமிய விழுமியங்களும் உணர்த்துகின்றன. இப்படியான எண்ணங்கள் அதிபர் வசம் இருப்பதைக் கண்டேன். சிறப்பான எண்ணக்கருக்களுடன் மன நிறைவோடு வீடு வந்தேன்.
ஒரே ஒரு நாள்தான் என் எண்ணக்கருக்கள் என்னை வட்டமிட்டன. மறுநாள் என் கோட்டை சாம்ராஜ்யம் சரிந்தது. ‘சே…… இப்படியும் மனிதர்கள். இவர்கள்தான் நான் காணத்துடிக்கும் சமூகமா…….? கனவுகளும், நிஜங்களும் சிதைவுறுமா? கேள்விக் கணைகளால் என் மனம் அலை பாய்ந்தது.
அன்று வித்தியாலயத்தில் முற்பகல் நேரத்தில் விளையாட்டு நிகழ்வுகளும் மாலை வேளையில் கலை விழாவும் நடைபெறுவதாக அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. எனக்கும் அழைப்பிதழ் கிடைத்தது, சென்றேன்…
அழகான முறையில் பாடசாலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறு சிறு பந்தல்கள் வரவேற்றன…… ஒவ்வொரு இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர்….. இல்லங்களுக்கிடையேயான போட்டி அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருந்தது. பழைய மாணவர்கள் ஓடி ஓடி செய்யும் உதவிகள்; எதிர்கால மாணவர் நலன் கருதி ஏற்படுத்தியுள்ள தொழில் நுட்ப வழி முறைகள் என் மனதைக் கவர்ந்தன…… நான் விளையாட்டுத் திடலைச் சுற்றிப் பார்த்தேன்.
“சே…. சே…சே…இந்த டீச்சர்மார்களுக்கும் மாஸ்டர்மார்களுக்கும் இது ஒரு வேலையாகப் போச்சு; வெளயாட்டும், கூத்தும், புறாஜலும், எல்லாத்துக்கும் சல்லி…. சல்லி… சல்லி; இவை தேவையோ…? புள்ளைகள் படிக்கிறாங்களோ இல்லையோ சல்லி சம்பாதிக்க கெட்டிக்காரர்கள்!”
இவ்வசனங்கள் என காதில் விழுந்தன; சத்தம் வந்த திசையில் நானும் நடந்தேன். அங்கே சிறு கூட்டம்….. பலர் கூடியிருந்தனர். எல்லாரையும் நான் அறிவேன்…… அதில் சில நபர்களை என்னால் மறக்க முடியாது. மூளை சலவைக்கு உட்படுத்தப்பட்ட கவர்க்கத்து கனிகள் என தம்மை காண்பித்துக் கொள்பவர்கள். தாம் சொல்லுவதுதான் சரி என…. எதிர்காலத்தில் தாம் முகம் கொடுக்க வேண்டியவைகளை அறிய முடியாதவர்கள். இவர்கள் பேசிய கதைகள் தான் என்னை வாட்டியது.
“அங்கே பாருங்க அந்த ஷைத்தான் கோட்டையை! உம்மாட பேர்ல ஒரு மண்டபத்தை, ஸ்கூலுக்கு கட்டிக் கொடுத்துள்ளாராம். நாலைந்து கோடி செலவாம். தேவைதான். ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தா. போற இடத்துக்காவது நன்மை கிடைக்கும்” என நல்லோர் மனதில் நஞ்சை தூவிக் கொண்டிருந்தனர். 11
எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என் எண்ணக்கருக்கள் சிதறுவதை அப்பொழுதுதான் உணர்ந்தேன்…… – ‘ஒரு பாடசாலை சிறப்படைந்தால் பல சிறைக்கூடங்கள் மறையும்…. இது அறிஞர் ஒருவரின் வாக்கு…… ஆனால் இங்கே….? நான் இதை எதிர்பார்க்கவில்லை. வாய்க்கு வந்தபடி கதைக்கிறார்களே! சிந்தனையாளர்களையும், உலமாப் பெருமக்களையும் உருவாக்கக்கூடிய ஒரு மண்டபத்தை கீழ்த்தரமான விமர்சனங்களால் விமர்சிக்கிறார்களே! என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை…
இம்மண்டபத்தை அந்நிய பாடசாலை ஒன்றுக்கு கட்டிக் கொடுத் திருந்தால்; கட்டிக் கொடுத்தோரை சிலை வைத்து கும்பிட்டிருப்பார்கள்….. சமுதாய நோக்கில்லாதவர்களின்….. இந்த விஷமத்தனமான கதைகளால் ஊர் இரண்டுபடும்…… ஊர் இரண்டு பட்டால் பாடசாலை வளர்ச்சி பாதிப்படையும்…என்னால் இதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
அது நாளைய சந்ததியை நினைத்துப் பார்த்து வடிக்கும் இரத்தக் கண்ணீர்”
– மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.