இரகசியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 9,066 
 
 

குமார் தனது சிறு வயதில் மிகவும் கஷ்டத்தை அனுபவித்தவன். அதனால் கல்லூரி படிப்பை முடித்த கையோடு நல்ல நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து நல்ல மகிழ்ச்சியாக ஆடம்பர வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.

கல்லூரியில் நன்றாக எல்லோரிடமும் பழகும் குணம் கொண்டவன். இவனது குணத்திற்காவே அபி என்ற சக மாணவி குமாரை காதலித்தாள். குமாரும் அபி மீது காதலை வைத்திருத்தான். ஆனால் அவளிடம் சொல்லாமல் மறைத்தான்.

அபியின் ஒருதலை காதலாக இருந்த நேரத்தில் கல்லூரியின் இறுதி ஆண்டும் முடியும் நிலையில் அபி தனது காதலை குமாரிடம் சொல்லிவிட்டாள். குமாரும் அவளின் காதலுக்கு அங்கிகாரம் கொடுத்துவிட்டான்.

அதற்கு பின் அவர்களின் காதல் ஒரு ஆண்டுகளாக நல்ல முறையில் சென்றது..

குமார் நினைத்தைப் போன்றே கல்லூரி படிப்பை முடித்த கையோடு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்த்துவிட்டான்..

நாளடைவில் அபியின் பெற்றோர்களுக்கு இவர்களின் காதல் தெரிந்துவிடுகிறது. அபியின் குடும்பத்தார்கள் இவர்களின் காதலை ஏற்கவில்லை…

அபியும் குமாரும் எவ்வளவோ முயன்றார்கள் ஆனாலும் அவளின் பெற்றோர்களின் மனம் மாறுவதாகயில்லை..

சரியென்று இருவருமே அவர்களது காதலை தியாகம் செய்தார்கள்..

பின் அபி அவளின் பெற்றோர்களளின் பேச்சைக் கேட்டு திருமணம் செய்துக் கொண்டு வெளி மாநிலத்திற்கு சென்றுவிட்டாள்.

குமார் அவனது ஆசைகளை ஓவ்வொன்றாக பூர்த்து செய்ய முற்பட்டான். நன்றாக சுற்றுலா செல்வதும், நண்பர்களுடன் வெளியே செல்வது என்று ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தான்.

அப்படியே இரண்டு வருடங்கள் கழித்து அவனது அத்தை மகள் மலரை திருமணம் செய்துக்கொள் என்று குமாரின் அம்மா கேட்டார். அதற்கு குமார் யோசித்தான்,

மலர் குமாரின் அப்பாவின் தங்கையின் மகள் சொந்தத்தில் திருமணம் வேண்டாம் என்று நினைத்தான். அதுமட்டும் இல்லாமல் மலர் பத்தாம் வகுப்பு வரையில் தான் படித்தவள். வெளியே மாடனாக வரமாட்டாள். நமக்கான ஜோடியாக இவள் இல்லை என்றாலும் அவனது அம்மாவிற்காக மலரை திருமணம் செய்துக் கொண்டான்.

ஏனென்றால், அப்பா இல்லாமல் அம்மாவின் மிகுந்த கஷ்டத்தில் வளர்ந்தவன். அதனால் அவனது அம்மாவின் பேச்சை தட்டாமல் செய்வான்.

வாடகை வீட்டில் இருந்தாலும், குமார் ஆடம்பரமாகவே இருந்தான். அவனது அம்மாவையும் நன்றாகவே பார்த்துக் கொண்டான்.

திருமணம் முடிந்த நாளிலேயே தன்னை பற்றி எல்லா விவரங்களையும் தனது மனைவி மலரிடம் சொல்லிவிட்டான் குமார்.

மனைவியிடம் எதையுமே மறைக்கக்கூடாது என்ற எண்ணதில் அவனது காதல் தோல்வி என்று எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றையும் சொல்லிவிட்டான்.. அதைப் போன்று மலரும் அவளை பற்றிய முழு விவங்களையும் ஒன்று விடாமல் குமாரிடம் பகிர்ந்தாள்.

பின் ஒருரை ஒருவர் புரிந்துக் கொண்டு, ‘இனி நம் வாழ்க்கையில் மட்டும் நீங்கள் கவனத்தை செலுத்துங்கள். உங்கள் அன்பு எனக்கு மட்டுமே சொந்தம்’ என்றாள் மலர்.

குமார் இதைக் கேட்டுக்கொண்டே மலரை கட்டியணைத்துக் கொண்டான்.

குமார் தனது மனைவிடம், இன்னும் நாம் வசதியாக மாற வேண்டும் வாடகை வீடு என்றாலும் பணத்திற்கு எவ்வித குறையும் வரக்கூடாது..

தற்போது நமக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இப்போது வேண்டாம்.

அப்படி உனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இருந்தால், அதை ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப் போடு.

நாம் ஒரு நல்ல நிலைக்கு வந்து விடுவோம். அதன்பின் நாம் குழைந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றான்.

இதை ஏற்கனவே என்னிடம் அத்தையும் அம்மாவும் சொல்லியச்சு மாமா….!

நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள் குழந்தை நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது பார்த்துக் கொள்ளலாம் மாமா என்று சொன்னாள்.

ஆனாலும் விதி வலியது மலர் திருமணம் முடிந்த மூன்றாவது மாதத்திலேயே கர்ப்பிணியாகினாள். அதை குமாரிடம் சொல்ல மிகுந்த ஆவலுடன் ஆர்வத்திலும் மகிழ்ச்சியாக இருந்தாள். இதில் குமார், அவனது அம்மா போட்ட திட்டத்தை மறந்தாள்

மலர் தான் கர்ப்பம் ஆனதை அத்தையிடம் சொன்னாள் பிரச்சினை வந்துவிடும், குமார் வந்ததும் இதை பற்றி சொல்லி அத்தையை சமாதானம் செய்ய சொல்லலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

குமார் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான். மலர் தான் கர்ப்பமாக இருப்பதை மிக மகிழ்ச்சியாக சொன்னாள். ஆனால் அது குமாருக்கோ அதிர்ச்சி.

உடனே மலரை பார்த்து, ‘இதை அம்மாவிடம் சொல்லி விட்டாயா?’ என்றான். அதற்கு மலர், ‘இல்லை மாமா உங்க கிட்டதான் முதல் முறையா சொல்றேன்’ என்றாள்.

‘இத அத்தைகிட்ட சொல்லிடுங்க, நாம இந்த குழந்தைய வளர்க்கலாம் மாமா’ என்று குமாரிடம் கேட்டாள்.

குமாரோ யோசிக்காமல், ‘இந்த கருவை நாம் கலைத்துவிடலாம் மலர்..!’

இப்போதே நமக்கு குழந்தை பிறந்துவிட்டால் அவ்வளவுதான் அப்புறம் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடுவேன்.

அது மட்டுமில்லை உனக்கு இப்போது தான் 20வயதே ஆகிறது எனக்கோ 26வயது தான் ஆகிறது ஆகையால் நாம் இந்த கருவை கலைத்து விடலாம்..

சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் குழந்தையை நாம் பெற்றுக்கொள்வோம் என்று மலரின் மனதை மாற்ற முயற்சி செய்தான்.

ஆனால் மலரின் மனம் இதை ஏற்கவில்லை. மீண்டும் குமார் மலரின் மனதை மாற்ற முயற்சி செய்தான்.

ஏன் நம் கணவர் இப்படி சொல்கிறார்.

அந்த கடவுளே பார்த்து நமக்காக இந்த குழந்தையை தந்துவிட்டார்.

ஆனால் இவரோ குழைந்தையை கலைப்பதிலேயே குறியாக இருக்கிறாறே என்று நினைத்துக் கொண்டே குமாரிடம் சொன்னாள்,

ஒரு பெண் அவளது வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பாள், ஆனால் தனது கருவை மட்டும் கலைக்க சம்மதிக்க மாட்டாள்.. இதை புரிந்துக் கொள்ளுங்கள் மாமா என்று தனது கணவன் குமாருக்கு புரிய வைக்க முயற்சித்தாள்.

ஆனாலும் குமார் இதை ஏற்கவில்லை, ‘இதை பற்றி அம்மாவிடம் நான் சொன்னால் அவ்வளவு தான் மலர்..நமக்கு என்ன சொன்னாங்கனு உனக்கு நியாபகம் இல்லையா?. நல்லா யோசி மலர்’ என்று மீண்டும் மீண்டும் அவளின் மனதை மாற்ற நினைத்தான் குமார்.

மலரும் வேறு வழியில்லாமல் கருவை கலைக்க சம்மதம் சொன்னாள்.

பின் இந்த குழந்தை கலைக்க போற விசயத்தை யாருக்கும் நீ சொல்லக்கூடாது என்று மலரிடம் சத்தியமும் வாங்கிக் கொள்கிறான் குமார்.

கரு கலைப்பு மாத்திரையை மலருக்கு கொடுத்து கருவை கலைத்தான்… அவன் கலைத்தது கருவை மட்டுமல்ல, அவனது வாழ்க்கையில் நடக்க போகும் சந்தோஷத்தையும் தான் என்பதை அப்போது குமார் உணரவில்லை.

தனது வயிற்றில் உயிர் பெற்ற முதல் குழந்தையை கலைத்து விட்டோமே என்ற எண்ணம் அதிகமாகவே மலரை பாதித்தது.

தான் ஒரு கொலை குற்றவாளியே என்று மனதில் நினைத்துக் கொண்டு மனவேதனையில் கிடந்தாள். அவளின் அடக்க முடியாத கோவம் வெறி எல்லாம் அவளின் ஆழ் மனதில் தீயாக நின்றது..

அப்படியாக மூன்று மாதங்கள் சென்றுவிட்டது.

பின் மலர் நினைத்தாள், என்னதான் நான் கர்ப்பமாகாமல் தாம்பத்திய உறவில் ஈடுப்பட்டாலும்.. நமக்கே தெரியாமல் மீண்டும் குழந்தை உருவாகிவிட்டால் என்ன செய்வது..? அப்படி உருவாகிவிட்டாலும் நம் கணவர் மீண்டும் கருவை கலைக்க சொல்லி விடுவாரறே என்ற அச்சத்தில் நிலை தடுமாறினாள்..

ஏனெனில் குடும்ப வாழ்க்கைக்கு தாம்பத்திய உறவு என்பது இன்றியமையாதவை. அந்த தாம்பத்திய உறவு நடைபெறவில்லை என்றால் கணவன் மனைவி இடையே சண்டைகளும் எதற்கேடுத்தாலும் கோவமான வார்த்தைகளும் விட்டுக்கொடுத்து செல்வது மன அழுத்தம் நிம்மதி சந்தோஷம் என்ற சகலமும் பறிப்போகும். மொத்தத்தில் இல்வாழ்க்கை நரகமாக மாறி கணவன் மனைவி பிரிய வேண்டிய நிலைக்கே எடுத்துச் சென்றுவிடும்…

அந்த அளவிற்கு கணவன் மனைவியின் தாம்பத்திய உறவு பலம் பெற்றது.

மலர் என்னதான் அவளுக்கு அவளளே சமாதானம் செய்துக் கொண்டாலும், ஏனோ அவளின் மனம் கணவனுடன் தாம்பத்திய உறவிற்கு செல்ல ஒத்துழைப்பு தரவில்லை…

குமாரும் மலரின் மனநிலையை புரிந்துக்கொண்டு அமைதியாக இருந்தான். ஆனாலும் மலர் மீது சற்று கோவத்திலும் இருந்தான்.

சிறிது காலம் தாம்பத்திய உறவு வேண்டாம் என்று சொல்லிவிடுவது தான் நல்லது என்று மலர் தீர்மானித்தாள்.

அதன்படியே அவள் மனதில் நினைத்ததை குமாரிடமும் சொல்லிவிட்டாள். அதற்கு குமாரும் அவளின் மனதை புரிந்துக் கொண்டு மலரின் எண்ணதிற்கு சரிறென்று தலையை ஆட்டினான்.

குழந்தை கலைத்த சோகத்திலிருந்து மலரால் வெளியவே வர முடியவில்லை. அவளின் முகம் வாடியது, குமாரின் அம்மா மலரின் நடவடிக்கையை பார்த்து சந்தேகித்து மலரிடம் கேட்டாள்.

‘என்ன மலர், முகம் வாடிப் போயிருக்கு. ஏதேனும் உடல்நிலை சரியில்லையம்மா..?’

அல்லது குமார் ஏதேனும் சண்டைப் போட்டானா என்று கேட்டதும்..

மலர் பயந்துவிட்டாள். பின் அதெல்லாம் ஒன்றுமில்லை அத்தை. எனக்கு மாதவிடாய், அதன் வலியை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் தான் என் முகம் இப்படி வாடி கிடக்குது என்று சொல்லி சமாளித்து விட்டாள்.

ஆனால் மலரின் அத்தை விடுவதாக இல்லை மலர் எதையோ நம்மிடம் மறைக்கிறாள். அதை நம்மிடம் சொல்லாமல் மறைக்கிறாள் என்று நினைத்து..

என்னடி நீ இப்படி சொல்லிட்ட, நானும் உன்னை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. நீ நீயாகவே இல்லை. எதையோ பறிக் கொடுத்ததைப் போன்று முகத்தை வைத்திருக்கிறாய் மலர் என்றதும்.

மலர் பயத்தில் நடுங்கிவிட்டாள்.

‘நீ ஒரு வேலை கர்ப்பமாக இருக்கிறாயா… அதை என்னிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறாயா?’, என்றாள். அதற்கு மலர் எதையும் யோசிக்காமல் இல்லை அப்படி ஒன்றுமில்லை அத்தை என்று சொன்னாள்.

ஆனாலும் மலரின் அத்தை விடுவதாகயில்லை, நீ எதோ மறைக்கிறாய். அது என்னவென்று தான் எனக்கு தெரியவில்லை என்றதும், மலர் பதரிக் கொண்டு இல்லை இல்லை அத்தை உண்மையாகவே மாதவிடாயின் வலி காரணமாகவே நான் இப்படியுள்ளேன் என்று சமாளித்தாள்.

குமார் வேலையில் இருந்து வந்ததும், ஒரு இரண்டு வாரங்கள் நம் வீட்டிற்கு சென்று வரலாம். அப்போது தான் நம் மனம் சற்று நிம்மதி பெறும் என்று தனக்கு தானே மனதில் பேசிக் கொண்டுயிருந்தாள்.

குமாரும் வீட்டிற்கு வந்தான். அவனை பார்த்ததுமே கண்ணீரோடு பேச ஆரம்பித்தாள், ‘நான் என் பெற்றோர்களின் வீட்டிற்கு செல்கிறேன். இங்கேயே இருந்தால்… என் முகமே என்னை காட்டிக் கொடுத்துவிடும் மாமா…’

என்னால் அந்த நாளை மறக்கவே முடியவில்லை, இதில் வேறு காலையில் அத்தை என் முகத்தை பார்த்து சந்தேகமடைந்து ஏன் நீ இப்படி இருக்க என்று கேள்வி கேட்டார்கள்.

நானும் எனக்கு மாதவிடாய் என்று சொல்லி சமாளித்துவிட்டேன். இனி அவர்களுக்கு என் மீது சந்தேகம் பெரியதாகவே வந்துவிட்டது மாமா அவர்களை இனி என்னால் சமாளிக்க முடியாது..நான் என் வீட்டிற்கு செல்கிறேன் இரண்டு வாரம் கழித்து வருகிறேன் என்று அழுதாள் மலர்.

இதை கேட்ட குமார் நீ எங்கும் போகக்கூடாது என்னோடு தான் நீ இருக்க வேண்டும்…

நீ இப்போது உங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டாள், அம்மாக்கு உன் மீது சந்தேகப்பட்டது உண்மையாக போய்விடும். அப்பறம் இவர்களுக்குள் ஏதோ ஒன்று நடந்துள்ளது என்று அவர்களே ஒரு முடிவிற்கு வந்துவிட்டால்?.

நமக்கும் தேவையில்லாமல் குடும்பத்திலும் சண்டை தான் வரும் என்றான்.

ஆனால் மலரின் மனம் இதை ஏற்பதாகவேயில்லை….

மலர் குமாரிடம், ‘மாமா என்னால் ஒரு நொடிக்கூட இங்க இருக்க முடியாது மாமா நான் கண்டிப்பாக போய்யே ஆக வேண்டும்…என்னை சமதானம் செய்யாதே மாமா என்று சொல்லிவிட்டு தனது துணி பெட்டியை எடுத்தாள்..

அப்போது குமார் சட்டேன்று மலரின் கண்ணத்தில் அறைந்தான். அதில் மேலும் மலரின் மனம் இறுகிப்போனது அடக்க முடியாத கோவத்தையும் அழுகையோடு குமாரிடம் சண்டையிட்டாள்.

இவர்களின் சண்டை சத்தம் அடுத்த அறையில் இருந்த குமாரின் அம்மாவின் காதுகளில் விழ இவர்களின் அறைக்கு ஒடி வந்து கதவை தட்டினால் குமார் கதவை திறத்ததும் ஏன் இப்படி சண்டை போடுறிங்கா…இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டாள்.

அதற்கு மலர், குமார் மீதான கோவத்தை அவனின் அம்மா மீது காண்பித்தாள். இது எங்களுடைய தனிப்பட்ட விசயம், இதில் நீங்கள் தலையீடாதீர்கள் என்று முகத்தில் அடித்தார்ப் போல் மலர் சொல்லிவிட்டாள்.

இதை எதிர்பாகத குமாரின் அம்மா, ‘உன்னை போய் என் பையனுக்கு கட்டிவைத்தேன் பார் அது தான் என் முதல் தப்பு இப்படி பஜாரி மாதிரி கத்துகிறாள். பார் டா குமார்’.

நான் உன்னை சந்தேகப்பட்டது சரியாகதான் உள்ளது எதையோ மறைச்சி பேசுறிங்க என்றதும், குமார் அதலாம் ஒன்றுமில்லைம்மா என்றான். அதற்கு மலர் சத்தமாக அவர்களை இங்கிருந்து போக சொல்லுங்கள் மாமா, இல்லையென்றால் நடக்கிறதே வேற’, என்றாள்.

குமார் கோவத்தில் மீண்டும் மலரை அடித்துவிட்டான். அம்மாவை வீட்டுதர குமாரின் மனம் வரவில்லை. இதை எதிர் பார்க்காத மலர், குமாரின் செயலுக்காகவே இனி நான் இந்த வீட்டிற்கே வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டே அவளின் பெற்றோர்களின் வீட்டிற்கு சென்று விட்டாள்.

குமாரும் மலர் போவதை கண்டுக்கொள்ள வில்லை.

திருமணமான ஆறு மாதங்களிலேயே பிரிவுக்கான முதல் அச்சாரமாக இந்த சண்டை அமைந்தது.

மலரின் கோபத்தை சரியாக குமார் புரிந்துக் கொள்ளவில்லை..அவளாகவே தான் வீட்டை விட்டு போனாள். ‘அவள் போனதைப் போன்றே திரும்பி வரட்டும் நான் போய் அவளை அழைத்துக் கொண்டு வரமாட்டேன்மா’ என்று அவனது அம்மாவிடம் சொன்னான்.

இதை சற்றும் எதிர் பார்க்காத குமாரின் அம்மா என்ன சண்டைனு முதல்ல எனக்கு சொல். அவள் ஏன் இப்படி கோவத்தில் போறாள்.

அதற்கு குமார் அது ஒன்றுமில்லை. அம்மா அவளின் அம்மாவை பார்க்க வேண்டுமென்றாள். அதற்கு நான் வரவில்லை நீ மட்டும் போ என்றேன், அதற்கு என்னிடம் சண்டை போடுகிறாள். அதான் நான் அடித்துவிட்டேன்மா என்றான்..

இதை கேட்ட குமாரின் அம்மா, ‘நீ போய் அவளை அழைத்து வராதே. அவளாகதானே சென்றாள். அவளாகவே வரட்டும். எனக்கு தெரியாமல் நீ போக்கூடாது’ என்றாள்.

குமாரும் சரியென்று அமைதியாக இருந்துவிட்டான்.

கோவமாக சென்ற மலர் நினைத்தாள் நமது கணவன் நான் இல்லாமல் ஒரு நாளும் இருக்க மாட்டார், நம்மை பார்க்க ஒடிவருவார். அப்படி வந்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அவருடனே சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் அவளின் வீட்டில் இருந்தாள்.

மலரின் அம்மா, ‘ஏன் திடீர் என நம் வீட்டிற்கு தனியாக வந்துவிட்டாய்?. எதாவது பிரச்சினையா மலர்?. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்.என்னால் முடிந்ததை, நான் செய்கிறேன்’ என்றாள்.

அதற்கு மலரும் அதெல்லாம் ஒன்றுமில்லைமா, சற்று மாதவிடாய் வலி. அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உன்னையும் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதான் நான் வந்தேன்மா என்றாள் மலர்.

மற்ற விசங்களை மறைத்துவிட்டாள்.

குமார் வருவான் என்று எதிர் பார்த்தாள் மலர். ஆனால் அவன் வரவில்லை, சரியென்று குமாருக்கு ஃபோன் செய்தாள். மலரின் அழைப்பை துண்டித்துவிட்டு ஒரு குறுச் செய்தியை அனுப்பினான் குமார்.

‘என் பேச்சை கேக்காமல் தானே நீ சென்றாய்?. பின்பு எதற்கு எனக்கு போன் செய்கிறாய்?. நீ உங்கள் வீட்டிலே இரு. நான் ஏதுவும் உன்னை கேக்க மாட்டேன். உனக்கு விருப்பம் வரும் போது இங்கே வா, அதுவரையில் என்னிடம் பேசாதே’ என்று எழுதி அனுப்பிவிட்டான்

இதை படித்த மலர் மீண்டும் குமார் மீது கோபம் கொண்டு பதில் அனுப்பினாள். ‘நீங்களே வந்து என்னை அழைத்து செல்லும் வரையில், நானும் அங்கே வரமாட்டேன் மாமா’ என்று தட்டிவிட்டாள்.

மலரின் பதிலை பார்த்து கடுகடுத்தான் குமார்.

பின் மலரும் அவளின் அம்மாவிடமும் சொல்லிவிட்டாள். எனக்கும் குமாருக்கும் சிறிய சண்டை, அவரே வந்து அழைத்துப் போகும் வரையில் நான் இங்கதான் இருப்பேன் என்றாள். அவர்களும் உன் விருப்பம் என்றார்கள்.

மலர் அவர்களுக்கு ஒரே செல்ல மகள், ஆகையால் சலுகைகள் ஏராளம்.

நாட்கள் வாரமானது, அப்படியே நான்கு மாதம் சென்றுவிட்டது கணவனும் மனைவியும் போசாமல் இருந்தார்கள்..

கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல மனம் வராமல் ஒருவரை ஒருவர் குறைகளை பேசிக்கொண்டே போனார்கள்.

குமாரின் அம்மா இதை இப்படியே விட்டால் சரிவராது என்று மலரின் வீட்டிற்கே சென்று மலரை சமாதனம் செய்து அழைத்து சென்றாள்.

குமார் மலர் வருவதை எதிர் பார்த்து அவளுக்கு பிடித்தமானதை தயார் செய்து வைத்தான்..

மலரும் வந்துவிட்டாள், பின் இருவரும் தங்களின் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார்கள்.

மறுநாள் இரவு தாம்பத்திய உறவுக்கு தயாரானான் குமார். ஆனால் மலர், ‘எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்னை மன்னித்திவிடுங்கள்’ என்றதும் குமாருக்கு கோபம் அதிகமானது.

‘நீண்டா நாட்களாகவே நாம் சரியாக பேசவில்லை, நமக்குல்லும் எதுவும் நடக்கவில்லை. நீ இப்படியே வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் போது, எனக்கு உன் மீது எரிச்சல் தான் வருகிறது மலர்’, என்று திட்டினான்.

அதற்கு மலர் கோவப்படாமல், ‘அது இல்லை மாமா முதலில் நீங்கள் என்னிடம் மனம்விட்டு பேசுங்கள். நான் இப்போது உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது உங்களின் அன்பான வார்த்தைகளை தவிற எனக்கு வேறு எதுவுமே வேண்டாம் மாமா’ என்றாள்.

அதற்கு குமார் வெடுக்கென, ‘உன்னை போய் தொட்டேன் பார், என்னை செறுப்பால் அடிக்க வேண்டும்’ என்று சொல்லிட்டு வெளியே சென்றான்.

அதன் பின் மலர் மிகுந்த மன வேதனைப்பட்டாள்.

கணவனை சும்மா இருக்கும் நேரத்திலும் அல்லது ஏதேனும் வேலையில் இருக்கும் போதுக்கூட சண்டையை உருவாக்கி அதன் பின் சமாதானம் செய்துவிடலாம். ஆனால் தாம்பத்திய உறவின் போது ஏதேனும் சொல்லிவிட்டாலோ அல்லது வேண்டாமேன்று தள்ளி சென்றாலோ அப்போது வரும் கோவத்தை கணவனோ மனைவியோ அவரவர்களின் மனதிலேயே வைத்துக் கொண்டு அதன் பின் கணவனனோ அல்லது மனைவியோ எதேனும் சிறிய தவறு செய்தால் போதும் அப்பொழுது தான் அவர்களது கோபத்தை பார்க்க முடியும்..

அப்படி ஒரு சண்டை நடக்கும் அதை அவ்வளவு எளிதில் சமரசம் செய்வதென்பது இயலாத காரியமாக மாறிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின் இரண்டு நாள் கழித்து மலர் தாம்பத்திய உறவிற்கு தயாரானாள், ஆனால் அதை குமார் நிராகரித்து விட்டான்..

அதன் விளைவு மலரின் மனம் மேலும் பாதித்தது. குமாரிடம் தான் அவமானம் பட்டேன் என்ற விரக்தியில் நின்றாள்.

மீண்டும் இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டார்கள், மலர் அவளின் அத்தையின் அறையில் படுக்க ஆரம்பித்தாள். அது நாளடைவில் அதையை பின்பற்றினாள்.

மலரின் இந்த செயலை பார்த்து குமார் மலரை வெறுக்க தொடங்கிவிட்டான்.

இப்படியே ஒரு ஆண்டு சென்றது அவர்களது திருமணநாளில்கூட இருவரும் பேசவில்லை, ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்தார்கள்

என் மனதை நீ புரிந்துக் கொள்ளவில்லை. உன் மனதை நான் புரிந்துக் கொள்ளவில்லை என்று மாறி மாறி குறைகளை பற்றியே பேசி பேசி அவர்களுக்குள் நீண்ட இடைவெளியே வந்துவிட்டது.

குமாரின் அம்மா, மலர் ஏன் திடீரென்று தன அறையில் படுக்கிறாள் என்று எந்த கேள்வி கேக்கவில்லை..அவர்கள் குழந்தை வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இவர்கள் தனித்தனியாக படுத்துக் கொள்கிறார்களோ என்று நினைத்து அமைதியாக எதையும் கண்டுக்காமல் விட்டால்.

அதன் விளைவு, குமார் மலர் இருவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறி கடைசியில் விவாகரத்தில் முடிந்தது.

இப்படி மனதில் இரகசியம் வைத்து மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே மறைத்து வாழ்க்கையை நடத்துவதால் தான் உலகில் முக்கால்வாசி தம்பதிகள்
விவாகரத்து செய்கிறார்கள்.

திருமணம் என்று நடந்துவிட்டால் ஆண்களை விட பெண்களை மட்டுமே இந்த சமூதாயம் உற்றுப் பார்க்கும்.அவள் எப்பொழுது கர்ப்பணியாகிறாள், அப்படி ஆகவில்லை என்றால் அப்பெண்ணுக்கு பல பட்டங்களை தர பார்க்கும்.

இல்வாழ்க்கை என்பது கணவன் மனைவி இருவருமாக ஒன்றென்று நினைக்க வேண்டும். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராட வேண்டும்.

இல்வாழ்க்கைக்கு தாம்பத்திய உறவு முக்கியம் தான், ஆனால் அதற்கு தெளிவான மனமும் கணவன் மனைவி இருவருக்குமே அதில் உடன்பாடு இருந்து உறவில் ஈடுபட்டால் தான் அந்த இல்வாழ்க்கை இனிக்கும்.

உறவில் கணவனுக்கு விரும்பமிருந்தும், அதில் மனைவிக்கு விரும்பம் இல்லை என்றால் அவர்களை கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவில் ஈடுபடாதீர்கள். அப்படி ஈடுப்பட்டால் மன அழுத்தம், வெறுப்பு, சண்டை போன்ற பிரச்சனைகளே வரும்..

உங்களுக்கு ஒர் உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்

நம்மில் பலருக்கும் தெரியவில்லை, தாம்பத்திய உறவும், உடலுறவும் ஒன்று தான் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டும் வெவ்வேறு உணர்வுகளை கொண்டது என்பதை எப்போது உணரப் போகிறீர்கள் அல்லது தெரிந்துக் கொள்ளபோகிறோமோ..?

தாம்பத்திய உறவு என்பது உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், கணவன் மனைவி இருவருடைய மன உணர்வுகளை புரிந்துக் கொண்டு உறவில் நீடிப்பது தாம்பத்திய உறவு.

உடலுறவு என்பது கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டுமே உறவில் செயல்பட வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். அவை உடல் மீதான ஆசை மட்டுமே தவிற மனதால் தோன்றும் உணர்வு அல்ல.

விருப்பமே இல்லாத நிலையில் நிச்சயம் உறவு வேண்டும் என்று கட்டாயமாக உறவு வைத்துக்கொள்ளுதல் தான் உடலுறவு என்பதை உணருங்கள்.

முடிந்தவரையில் மனதில் கோவத்தை தேக்கி வைத்து விடாதீர்கள் அது வாழ்க்கையை அழித்துவிடும். கணவன் மனைவிற்குல் சண்டை வந்தால் முதலில் நன்றாக மனம் விட்டு பேசுங்கள் எதற்கு கோவம் வந்தது? யார் மீது தவறுள்ளது? என்றும் பின் ஒருவர்க்கொருவர் மன்னிப்பு கேளுங்கள். எல்லாவற்றையும் பகிருங்கள், கோபத்தை பொறுமையாக கையாலுங்கள். முக்கியமாக விட்டுக்கொடுத்து செல்லுங்கள் வாழ்க்கை சிறந்து விளங்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *