இன்பமான பூகம்பம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 3,322 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3

“எதுக்குடா அலர்றே?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் சாரதம். 

“நாளை தாதர்ல…” 

“தாதர்ல!” 

“அவ வர்றா!”

”ரேவதியா..! அமெரிக்காவிலிருந்து எப்படியடா மடையா தாதர் எக்ஸ்ப்ரெஸ்ல வர முடியும்?”.

“நானும் மொதல்ல அப்படித்தான் நினைச்சேன், மாமி… அப்புறம்தான் தெரிஞ்சது, ரேவதி பஞ்சநதம் பாம்பே வரை பிளேன்ல வந்திருக்கா. அங்கேயிருந்து..”

“சரி, வேறு என்ன சொன்னா?”

“மாமா சென்ட்ரல்ல அவளை ரிஸீவ் பண்ணனுமாம்.” 

“லங்கிணிக்கு அமெரிக்காவிலேர்ந்து பாம்பே வரை துணையில்லாம வரத் தைரியம் இருக்கு, சென்ட்ரல்லேந்து வீடு வரை வர முடியலையோ?” 

“யாரானும் நம்ப சென்ட்ரல் ஸ்டேஷன் ஆட்டோ, டாக்ஸிக்காரங்களைப் பத்தி ரேவதியை பயமுறுத்தியிருப்பாங்க….” 

“சரி. இப்ப நான் என்ன செய்யணும்டா, சத்யா?” 

“குலுங்காம அலுங்காம இருங்கோ, அதுவே போதும், மாமி. நான் எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.” 

“சரிடா சத்யா!” என்ற சாரதம் திடீரென்று குழைந்தாள், “சத்யா”. 

அவளுடைய குரலின் நெகிழ்ச்சியில் கரைந்து போய்விட்டதுபோல சத்யா நடித்தான். 

“என்ன மாமி?” 

“ஏதோ ஒரு ரகசியத்தை நேத்து நீ மறைச்சு வைச்சியே, அது என்னடா! நீயும் மாமாவும் அஞ்சாறு வருஷத்துக்கு முன்னால பாம்பேய்க்கு சின்னமாமாவைப் பார்க்கப் போனது பத்திப் பேசினீங்களே. அது என்ன லிஷயம்டா, சத்யா?:.” 

“மெல்ல் மெல்லத் தெரிய வரும், மாமி”

“எங்கிட்ட சொல்லப்படாதா?”

”படலாம். ஆனா இப்ப வேண்டாம்.”

“ஏண்டா சத்யா? நான் யார்ட்டேடா ரகசியத்தைச் சொல்லிடப் போறேன்?”

“வேற யாருக்குத் தெரிஞ்சாலும் கூட தப்பு இல்லே. மாமி” 

“அப்படீன்னா!” 

“உங்களுக்கு மட்டும்தான் இப்பத் தெரியப்படாது” 

“நீ நாசமாப் போக” 

“தாங்கி யூ மாமி,” என்ற சத்யா, “இப்ப எங்கிட்ட உதிர்த்த இந்த வார்த்தையை தப்பித் தவறி கூட நாளைக்கு வரப் போற ரேவதியிட்ட உதிர்த்திடாதீங்க, அமெரிக்காவிலேர்ந்து வாற பெண். கையில் ரிவால்வர் இருக்கும்!” 

”உலக்கையால் ஒரு போடு போடுவேன்!” என்றாள் சாரதம். 

சத்யா சிரித்தான். 

“என்னடா சிரிக்கிறே?” 

“ரேவதியை நினைச்சுப் பார்த்தேன். சந்தோஷமா இருந்தது. அதான் சிரித்தேன்!” என்றான் சத்யா. 


அன்று மாயை வீடு குருஷேத்திரமாக மாறியது. “மாடியில் இருக்கிற ரெண்டு ரூம்ல எதையும் நாங்க ஒழிச்சு கொடுக்க மாட்டோம்!” என்றாள் சாம்பசிவத்தின் முத்த பெண் வைதேகி.

“சுபா, நீயாவது…” 

“முடியாதுப்பா… கவுன் போட்ட நாள்லேந்து நானும் அக்காவும் இந்த மாடியில இந்த ரெண்டு ரூம்ல இருந்துட்டு வர்றோம். அதில ஒண்ணைக் காலி பண்ணுன்னா என்ன அர்த்தமாம? இப்பவே என் ரூம்ல சத்யா தன்னோட பெட்டியை வைச்சுட்டு அடிக்கடி, கதவைத் தட்டி இம்சைப் படுத்தறான். அத்தை புள்ளையாச்சேன்னு நானும் பேசாம இருக்கேன். இப்ப ரூமையே காலி பண்ணுன்னா என்ன அர்த்தம்?” 

“வேற வழி தெரியலேம்மா சுபா” என்றார் சாம்பசிவம். 

“அப்ப ஒண்ணு செய்யுங்க!” 

“என்னம்மா?” 

“பாபுவோட ஒய்ஃப் இப்ப இங்கே இல்லே… அம்மாட்ட கோபிச்சுக்கிட்டு பிறந்த வீடு போயாச்சு. அந்த ரூமை பாபு ஒழிச்சுக் கொடுக்கட்டும்.” 

”ஜஸலக்கடி கும்மா!” என்ற பாபு, “என் ஒயிஃப் அடிக்கடி அம்மா வீட்டுக்குப் போய் இருகிகிறது எல்லார்க்கும் தெரிஞ்சதுதான். அவ திடீர்னு திரும்பி வந்து எங்கே என் ரூம்ன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேனாம்” என்றான் பாபு. 

”இந்த புகுந்த வீடே வேண்டாம்னு உதறி எறியறங்ளுக்கு அதில ஒரு ரூம் கேட்க என்ன உரிமை இருக்காம். அப்பா, சுபா சொல்றதுதான் சரி. பாபு ரூமை ஒழிச்சுக் கொடுக்கட்டும். திண்ணையிலேயோ இல்லே மாடி வெராந்தாவிலோ படுத்துக்கட்டும்” என்றாள் வைதேகி. 

”நத்தில் டூயிங்!” என்ற பாபு, “லேடீஸ் ஹாஸ்டலுக்கு வைதேகி போகட்டும். ரெயில்வே ஆடிட் ஆபிஸ்ல மாசம் ரெண்டாயிரத்து முன்னூறு வாங்கறாளே? அது கொஞ்சமாவது கரையட்டும்”

‘”டோண்ட் பி ஸில்லி, பாபு! ஒரு பொண்டாட்டியை ஒரு ரூம்ல வைச்சுட்டு வாழத் தெரியாத புறம்போக்கு நீ! லேடீஸ் ஹாஸ்டலுக்குப் போகச் சொல்றியா? நீ என்னை விட மூணு வயசு பெரியன், நீ காசி யாத்திரை புறப்படறப்பவே, சுத்து முத்தும் ஒரே பேச்சு, ‘வயசான ஒரு தங்கை கலியாணத்துக்கு நிக்கறப்ப இத்தத் தடியனுக்கு என்ன அவசரம்’னு.. மத்த வீட்லயெல்லாம் தங்கையை ஒரு இடத்தில் கொடுத்துட்டுத்தான் அண்ணன் மஞ்ச வேஷ்டியே கட்டிப்பான் ” 

“உன்னை ஒரு டஜன் பேர் பெண் பார்க்க வந்தா! எவன்…”. 

”மூடுடா உன் வாயை?” என்று சாரதம் கத்திக் கொண்டே களத்தில் குதித்தாள். பிறகு, “உன் தங்கையைப் பத்திப் பேசு உனக்கே வெட்கமாயில்லே,” என்றாள். 

“இதில வெட்கப்படறத்துக்கு என்ன இருக்கு! உள்ளதைச் சொன்னேன்” 

இப்போது வீரா குறுக்கே வந்தான்.. 

“வைதேகி லேடீஸ் ஹாஸ்டலுக்கும் போக லேண்டாம்;. சுபா காலேஜ் ஹாஸ்டலுக்கும் போக வேண்டாம். பாபு தன் ரூமையும் விட்டுக் கொடுக்க வேண்டாம்; வரப்போறவ நம்ப சித்தப்பா பெண் நம்பளோட ஒண்ணுவிட்ட தங்கை.” 

“அதன் மூஞ்சியைக் கூட நீங்கள்லாம் பதினைஞ்சு வர்ஷமாப் பார்த்தில்லே. எனக்கு மறந்தே போயிட்டது. நம்ப வீட்ல மட்டும் ஒரு தொழுவம்னு ஒண்ணு இருந்தா அதை அங்கே கட்டி வைப்பேன்!” 

சாம்பசிவம் சிரிக்கவில்லை. 

பாபு, வைதேகி, வீரா, சுபா யாரும் சிரிக்கவில்லை. 

தான் பேசியதே குற்றமோ என்று சாரதம் நினைத்தாள். எல்லோருடைய முகங்களையும் மாறிமாறிப் பார்த்தாள். 

திடீரென்று சத்யா மட்டும் சிரித்தாள். கலகலப்பு அறை முழுதும் எதிரொலித்தது. 

“மாமி, இப்ப நீங்க பேசினது மட்டும் ரேவதிக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்! சுட்டுப் பிடுவா சுட்டு” என்றவன். “வீரா நீ ஏதோ சொல்ல வந்தியே அதைச் சொல்லித் தீர்த்து விடு” என்றான். 

”விசேஷமா எதுவும் இல்லை, சத்யா… இந்த ரேவதி நாளைக்கு சாயங்காலம்தான் வரப் போறா. நாம ஏன் இப்பவே ருமை ஒழிச்சு வைக்கறதில் நம்ப நேரத்தை வீணடிச்சு ஆர்க்யு பண்ணிக்கனும்? அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பொண். இந்தக் கார்ப்பரேஷன் தண்ணியைக் கூடக் குடிப்பாளோ என்னமோ? அவ வரட்டும். வீட்ல எல்லா ரூம்களையும் பார்க்கட்டும். பிடிச்சதை எடுத்துக்கட்டும். அவளும் சுபாவும் ஒரு வயசுன்னா ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகலாம்… ஏன் ரெண்டு பேரும் ஒரே ரூம்லேயே கூட தங்கிக்கலாம்னு ரேவதி சொல்லலாம்!” என்றான் வீரா. 

இதன் பிறகு யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் வீரா மேலும் தொடர்ந்தான். 

“அம்மா, நீ உன்னை மாத்திக்கணும். விருப்பு வெறுப்புகள் மனுஷ மனசுகள்ளே இருக்கறது சகஜம்தான். ஆனா நீ மூஞ்சியே மறந்து போன ரேவதி பேர்ல ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கிறது நல்லது இல்லே. நாகரீகம் இல்லே. உனக்கு உன் மச்சினன் மீது கோபம் இருக்கலாம். ஓர்ப்படிமேல பொறாமையும் வெறுப்பும் இருந்திருக்கலாம். ஆனா இதையெல்லாம், அம்மா அப்பா ரெண்டு பேரையும் இழந்துட்டு, நம்ப வீட்டு நிழல் ஒண்ணுதான் ஆதரவா இருக்க முடியும்ங்கற நம்பிக்கையோட வர்ற ஒரு பெண் மேலே காட்டறது சரியில்லை.” 

“போதும்டா உன் கீதாபதேசம்!” என்றாள்.

“அம்மாவை யாராலும் மாத்த முடியாது. வீரா!” – சுபா. 

“அம்மா, வீரா சொல்றதிலேயும் நியாயம் இருக்கு!” என்றாள் வைதேகி. 

“அம்மா எல்லாம் கொஞ்ச நாளுக்குத்தானே?” என்றான் பாபு. 

சாரதம் கணவரைப் பார்த்தாள். 

அவரும். அவனைப் பார்த்தார்.

பிறகு –

“ரேவதிக்கு எந்த இடம்னு நீங்க எல்லாரும் அலசிட்டீங்க. இல்லாத தொழுவம்னு தீயும் சொல்லிட்டே சாரதம்! ஆனா அவ மனசில் என்ன வைச்சுட்டு இப்ப வர்றாளோ! தெய்வத்துக்குத்தான் வெளிச்சம்!” என்றார். 

– தொடரும்…

– இன்பமான பூகம்பம் (நாவல்), வெளியானது: ஜூலை 1995, மாலைமதி மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *