இனிய நெஞ்சங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2022
பார்வையிட்டோர்: 1,213 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூரிலிருந்து மலாக்கா செல்லும் விரைவு பஸ்ஸில் நானும் என் மனைவி கவிதாவும் எங்களின் இரண்டு , பிள்ளைகளோடு ஏறி அமர்ந்தோம். பஸ் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன எங்களின் இருக்கைகள் பஸ்ஸின் மத்தியில் இருந்தது. எங்கள் பெட்டி, பொருட்கள் அடங்கிய பை இவற்றை எங்கள் இருக்கையின் மேலே கொடுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பாக வைத்துவிட்டு நன்கு அமர்ந்து கொண்டோம் என் ஆறு வயது மகளும் பத்து வயது மகனும் பஸ்ஸின் ஜன்னலோரத்தில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார்கள்.

பயணிகள் ஒவ்வொருவராக வந்து தங்களின் இருக்கைகளை தேடி அமர்ந்து கொண்டிருந்தனர். கண்டக்டர் ஒவ்வொருவரின் பயணச் சீட்டையும் கையில் வாங்கி சரி பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு சிலர் இன்னும் வந்து சேரவில்லை.

பஸ் காலை ஒன்பது மணிக்கு புறப்படுவதாக டிக்கட்டில் குறிப்பிட்டிருந்தபடியால், நான் காலை எட்டு மணிக்கு எழுந்து என்னைத் தயார் செய்து கொண்டேன். என் மனைவி கவிதா அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் என் குடும்பத்தில் யாருக்கும் வேலையில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கும் சேர்த்து உணவு தயாரிக்க வேண்டியிருப்பதாலும் தன் அம்மாவின் தங்கையான (சித்தியை) சின்னம்மாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மலாக்காவில் போய் பார்க்க இருப்பதாலும் என் மனைவி கவிதாவுக்கு இரவெல்லாம் தூக்கமே வந்திருக்காது. இந்தப் பயணத்தில் அவள் மிகவும் குதூகலமாக இருந்தாள். பொதுவாக என் மனைவி கவிதா பள்ளி விடுமுறையில் வெளியூர் பயணம் மேற்கொள்வதை பெரிதும் விரும்புவாள். தொடக்க நிலை நான்கில் பயிலும் என் மகன் பாபுவும் இரண்டில் பயிலும் மகள் ரேணுகாவும் இந்த விடுமுறையில் வெளியூர் செல்ல அதிக விருப்பம் தெரிவித்ததால் நானும் புறப்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்தேன்.

நான் என் பெற்றோர்களோடு குடும்பத்தில் ஒன்றாகவே வசிக்கிறேன் எனக்கு ஒரு தம்பியும் தங்கையும் திருமண வயதில் வீட்டில் இருக்கிறார்கள்.

எனக்கு திருமணமாகி இந்த பத்து ஆண்டுகளாக குடும்பத்தில் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஐந்து ஆண்டுக்கு பிறகு திருமணம் செய்துக் கொண்ட என் தம்பி அவன் மரைஎவியோடு ஆறே மாதத்தில் தனிக்குடித்தனம் சென்று ககபோகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். நான் குடும்பத்தில் மூத்த மகன். என்னால் பொறுப்பில்லாமல் தனிக்குடித்தனம் செல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. அதிலும் என் தந்தை வாத நோயால் அவதிப்பட்டுக் கொண்டு நடக்க முடியாமல் வீடே கதியென்று இருக்கும்போது என்னால் என்ன செய்ய இயலும். ஆனால் என் மனைவி கவிதா திருமணமாகி முதல் ஐந்து ஆண்டுகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சிறந்த முறையில் என் குடும்பத்திற்கு பணி செய்து இல்லறம் நடத்தி வந்தாள்.

என் தம்பி திருமணம் செய்து கொண்டவுடன் தனிக் குடித்தனம் சென்றதுதான் கவிதாவுக்கு மிகுந்த மன வேதனை அளித்தது.

நடக்க முடியாத நோயாளியான என் தந்தைக்கு வீட்டில் சேவை செய்ய இரண்டு பேர் தேவைப்பட்டனர். சற்று வயதான என் அம்மா. திருமணத்திற்கு நிற்கும் தம்பி, தங்கை இவர்களும் தங்களின் தே வக ளை தாங்க ளே செய்து கெ ள்ளமாட்டார்கள் . என் மனைவியைத்தான் செய்து தரும்படி கட்டாயப் படுத்துவார்கள். இதற்கிடையில் ஏற்கனவே திருமணம் செய்து க்ண்ட என் பெரிய தங்கையின் பிள்ளைகள் வேறு அடிக்கடி எங்கள் வீட்டில் வந்து தங்கினர். வீடு எப்போதும் அமர்க்களப்படும். இந்த ஆழ்நிலை வயதான என் அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் \ இந்த இதமான சூழ்நிலையை வரவேற்றனர் ஆனால் ஒருவருக்கு இன்பம் அளிப்பது மற்றொருவருக்கு தொல்லையாக இருக்கின்றதே !

என் மனைவி பாசி நிறைந்த படிக்கட்டில் ஏறியவள் போல என் குடும்பத்தில் எல்லா பொறுப்புகளையும் ஏற்று நிற்க முடியாமல் தவித்தாள்.

ஒரு நாள் என் மனைவி கவிதா என்னிடம் வந்து “குடும்பத்துல பிறந்த அனைவர்க்கும் பெற்றோரை கவனிச்சுக்கற உரிமையிருக்கறப்போ உங்க தம்பி மட்டும் தனிக்குடித்தனம் போயி சந்தோசமா வாழறாரு நாம மட்டும் இங்க கஷ்டப்பட்டுக்கிட்டு வாழ்க்க நடத்தறோம்” என்றாள், அழுது கொண்டே.

அவள் என்றுமில்லாமல் இன்று இப்படி திடீரென்று சொல்லிக்கொண்டு அழுவதைக் காண எனக்கே மனம் சங்கடமாக இருந்தது. ஆனால் அவளுக்கு ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் கூற வேண்டும் என நினைத்து நான் அவளிடம்,

“கவிதா, என்ன நீ சின்னப்பிள்ளையாட்டம்… கண்ண துடைச்சிக்க, நான் ஒனக்கு ஏதாவது குற வச்சிருக்கேனா சொல்லு” என்று கேட்டவுடன், அவள், “இல்லேங்க, என்னால இப்போ எல்லாத்தையும் கவனிக்க முடியல” என்றாள். அவளின் நிலையை நானும் சற்று சிந்தித்துப் பார்த்தேன்.

பகல் முழுதும் அலுவலகத்தில் பொறுப்புடன் வேலை செய்து களைத்து வீட்டீற்கு திரும்பும் போது என் மனைவியின் முகத்தில் புன்னகையை காண முடியாமல் என் மனமே மிகுந்த வேதனைப்படும். அவளையும் குறை கூற முடியாது. வீட்டில் இயந்திரம் போல் கழன்று கொண்டு வேலை செய்வாள். என்னை இன்முகத்தோடு வரவேற்று காப்பி தரவில்லையே என்று நான் ஒரு நாளும் குறை கூறியது கிடையாது. ஆனால் என் அம்மா வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டாள்.

என் மனைவியை ஏதாவது குறை கூறிக்கொண்டே அவள் மனதை நோகச் செய்துவிடுவார். நான் ஏதாவது சொல்லப் போக அங்கு ஒரு பூகம்பமே வெடிக்கும்.

பொறுப்புடன் வேலை செய்து வருபவளை பாராட்ட மனம் வரவில்லை யானாலும் எதுவும் பேசாமல் இருந்தாலே அங்கு பிரச்சனைக்கே இடமிருக்காது. இத்தனைக்கும் என் மனைவி கவிதா ஓரளவு படித்தவள் அவளும் எவ்வளவுதான் பொறுப்பாள்.

கணவன் வீட்டில் வேலை செய்து களைத்தால், இளைப்பார தாய்வீடு சென்று வரலாம் என்றாலும் அவள் பெற்றோர்களும் அண்மையில் ஒருவர் பின் ஒருவராக காலமாகி விட்டனர். கவிதாவின் ஒரே அண்ணன், அவன் மனைவி பிள்ளைகளோடு கிளிமண்டியில் நான்கு அறை வீட்டில் இனிய முறையில் வாழ்க்கை நடத்தி வருகிறார் என்றாலும், தான் போய் அவர்களின் இனிமையை கெடுக்க விரும்பவில்லை என்று கூறிவிடுவாள். ஏதாவது விஷயம் இருந்தாலொழிய கவிதா அவள் அண்ணன் வீட்டிற்கும் செல்ல மாட்டாள்.

நான் இப்படியே சிந்தித்து இரண்டு ஆண்டுகளும் ஓடி விட்டன. வீட்டில் எப்போதும் ஏதாவது பிரச்சனை. வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லை அலுவலக த்திற்குச் சென்றால் க வனத்து டன் வேலை செய்ய இயலவில்லை.

ஒரு நாள் என் மனைவி என்னிடம் “நாமும் தனிக்குடித்தனம் செல்லலாம்” என்று கூறி வற்புறுத்திய போது,

அவள் என் வீட்டில் படும் அல்லல்களைக் கண்டு மனம் துணிந்து ஒரு நாள் என் மனைவியை அழைத்துக் கொண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் நான்கு அறை வீட்டிற்கு பதிவு செய்து விட்டு வந்தேன். வீடு கிடைக்க எப்படியும் ஒரு வருடம் ஆகலாம். அதற்குள் என் தங்கைக்கு திருமணத்தை முடித்து விட்டு தம்பிக்கும் திருமணம் செய்து அவனை வீட்டில் பெற்றோர்களோடு இருக்கும்படி ஏற்பாடு செய்துவிடலாம் நான் அடிக்கடி என் பெற்றோர் இல்லத்திற்கு வந்து பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

மாதங்கள் சில ஓடின. என் தங்கைக்கும் வரன் அமைந்து அவள் கணவன் வீடு சென்றாள். என் தங்கையின் கணவன் வீடும் ஒரளவுக்கு எங்கள் குடும்பத்தைப் போன்று பெரிய குடும்பமாக இருந்தது என் தங்கை கல்யாணி அவள் கணவன் வீட்டில் அதிக பொறுப்புக்களை ஏற்கும்புதுதான், என் மனைவியின் மீது என் தங்கையும், என் அம்மாவும் சற்று பாசமுடன் நடந்துக் கொண்டனர்.

என் மனைவி பிள்ளைகளின் பள்ளி விடுமுறையில் மலாக்காவில் வசிக்கும் தன் சித்தியின் வீட்டிற்கு செல்லலாம் என என்னிடம் போது, நானும் துணிநது என அமமா டம அனும கடட அலுவலகத்தில் என் வருடாந்திர விடுமுறையிலிமுந்@ ஒரு வரரம ரழுதிக கொடுத்து அனுமதி பெற்று புறப்படுவதற்கான ஏறபாடடை செயதேன.

அந்த நாள் இன்று வந்த போது பிள்ளைகளை விட என்னை விட, மனைவி கவிதா மிகவும் ஆனந்தப்பட்டாள். தன் வாழ்க்கையே எங்கள் குடும்பமாகவும் என்னையே தெய்வத்திற்கு பிறகு பூஜித்துத கொண்டிருக்கும் என் மனைவியை உல்லாசமாக வெளியூ பயணம அழைத்துச் செல்வது எனக்கும் பெருமையாகவே இருந்தது.

பெற்றோர், உடன் பிறந்தோர் இவர்களைப் போல் என் மனைவியையும் மதித்து அவளுக்கும் சம அந்தஸ்து தர வேண்டும் என்பதே என் குறிக்கோள்.

பஸ் புறப்படும் நேரம் வந்து விட்டது. கைக்கடிகாரத்ஐப் பார்த்தேன் சரியாக மணி காலை ஒன்பது என்று காட்டியது. பயணிகள அனைவரும ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்து விட்டனர் எனஉறுதி செய்த டிரைவர் நேரத்தில் எல்லோர் பாஸ்போர்ட் ஜொகூர் பாருவை அடைந்து அங்கு கஸ்டம்ஸில் எல்லோர் பாஸ்போர்ட்டு சோதனைக்குட்பட்ட பிறகு மீண்டும் கிளம்பி சில மணி நேரத்தில் மலாக்கா போய் சேர்ந்தோம். என் மனைவி கவிதா, தன சிததியிடம நாங்கள் வருவதை முன் கூட்டியே தெரியப்படுத்தியிருந்தாள்.

நாங்கள் அவர்களின் இல்லத்திற்கு சென்று சேர்ந்த போது, வாசல் கதவு திறக்கப்பட்டு அவர்கள் எங்களின் வருகையை எதிபார்ததிருந்தவர்கள் போல் உள்ளேயிருந்து ஓடி வந்து உபசரித்தனர். ஆனால், அவர் கணவர் மட்டும் உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமலே எஙகள நலததை விசாரித்தார். அப்போதுதான் நாங்கள் கவனித்தோம் அவர் ஒரு விபத்தில் காலில் அடிபட்டு மாற்றுக்கால் பொறுத்தியிருப்பதை . பின்னர் நாங்கள் அதைப் பற்றி விசாரித்தபோதுதான் அண்மையில் விபத்து ஏற்பட்டி கால்கள் இரண்டையும் இழந்து விட்டதை தெரிவித்தார்.

ஆபத்து என்பது எந்த நேரத்திலும் வரலாம், ஆனால் அதனால் ஏற்படும் பாதிபுக்களை என்னவென்று சொல்வது. இப்போது அந்தக் குடும்பத்தின் நிலைமையை கேட்கும் போதும் பார்க்கும் போதும் மிக பரிதாபமாக இருந்தது.

குடும்பத்தின் ஆணி வேரான தந்தை தன் கடமைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பரிதாப நிலைமையில் இருந்ததை பார்க்கும் போது கல்லான இதயங்களைக் கூட கண்ணீர் வரச் செய்துவிடும் அளவு இருந்தது. பின்பு நான் அவர்களிடம் “அத்தை! இதப்பத்தி எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட தெரிவிக்காம இருந்திடிங்களே” என வினவிய போது அவர் பதிலுக்கு எங்களிடம் சோகத்துடன் “சந்தோசப்படற விசயமாயிருந்தா உடனே தெரிவுபடுத்துவோம். எங்க வாழ்க்கையின் விடிவெள்ளிய மறைத்த மூடுபனியாயிற்றே எப்படி சொல்ல முடியும்” என்று கூறினார்.

என் மனைவி அவர்களுக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு, “ஏதோ இதுவரைநகுமாவுது சித்தப்பாவை உயிரோடு பார்க்க முடிந்ததே அதற்கு இறைவனுககு நனறி சொல்லுங்கள்” என்று கூறினாள்.

“இல்லேம்மா இரண்டு கால்களும் நடக்க முடியம நான் இந்த இருப்பதைவிட ஒரேடியா ஆண்டவனிடம் போய் சேரநதிருககககூடாதா” என மாமா கண்ணீருடன் கூறியதைக் கேட்ட நான்,

“அப்படியெல்லாம் பேசாதீங்க மாமா, உங்க பிள்ளகளுக்க நீங்கள் உயிரை வெறுக்கக்கூடிய அளவுக்கு இது கொடியது இல்லை” என்றேன்.

அதற்கு மாமா “என் பிள்ளைகளின் நிலைய பாருங்க, மூத்தவன் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வேலைக்குப் பேறான். காலையில் வீடு வீடாகச் சென்று (பேப்பர்) பத்திரிக்க போடறான். பதினாறு வயதிலேயே எத்தன வயதிலேயே அவனுக்கு எத்தன பொறுப்பு ஏற்பட்டு விட்டது” வருத்தப்பட்டார்.

வீட்டில் மற்ற இரண்டு பிள்ளைகளை பார்க்க வேண்டி இருப்பதால் அவர் மனைவி வேலைக்குச் செல்ல இயலாமல் வீட்டிலேயே கைத்தொழில் செய்யும் பாபொருட்டு கூடை பின்னி கடைகளுக்கு கொடுத்து ஏத்தி பணம் சமபாதிதது குடும்பம் நடநதது. அவர்களின் நிலைமையை பார்க்கும் போது மனதிற்கு கஷ்டமாகத்தான் இருந்தது.

அங்கு தங்கி இருந்தபோது ஒரு நாள் என் மனைவியிடம், அவள் சித்தி எங்கள் பற்றி விசாரித்த போது, என் மனைவி கவிதா நிலையைப் எங்கள் வீட்டின் நிலையை எடுத்துக் கூறி ஒரு போவதைப் தனிக்குடித்த எங்கள் ஒரு நாள் என் மனைவியிடம்

“நீங்கள் நினைப்பது தவறு, குடும்பத்துல தாய், தந்தை என்று பெரியவர்கள் இல்லையென்று நாங்க வருத்தப்படுறோம், உனக்கு பாக்கியம் கிடைசிருககு. குடும்பம்னா ஏதாவது பிரச்சன வரத்தான் செய்யும். ஆனா, அது நீடிக்காது. பல நல்ல வாய்ப்புக்கள் குடும்பத்தோடு இருப்பதிலதான இருககு.குடும்பம் என்பது தேன்கூட்டப் போன்றது. அந்த குடும்ப பந்தத்தின் பாசம் விலை மதிக்க முடியாதது”

”இப்போ எங்கள” பாரு, அணைத்து ஆறுதல் சொல்ல யாரும் இல்ல தனிமையில் கஷ்டப்படறோம்” என்று கூறியதைக் கேட்டதும் நானும் என் மனைவியும் பதில் எதுவும் சொல்ல முடியாமல் சிந்தித்தோம்.

கல்லடிப்பட்ட குளத்து நீர் தெளிவடைந்து வருவதுபோல எங்கள் மனதின அடியில் தங்கியிருந்த மாசு அகன்று மனம் தூய்மையானது. மறைந்திருந்த சில உண்மைகள் தெரிய வந்தன. எங்கள் பிள்ளைகளைப் பற்றி சிந்தித்துப் பார்த்தபோது, அவர்களை வளர்ப்பதில் நாங்கள் கஷ்டப்பட்டதாக தெரியவில்லை. வீட்டில் எஎல்லா வேலைகளையும் என் மனைவி கவனித்தாலும், பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால், அம்மா தன்னைக் கூட பாராமல் என் பிள்ளைளை பாசத்துடன் பராமரித்து வந்துள்ளார். என் பெற்றோர்களுக்கு வயதாகிவிட்ட போதிலும் இன்னும் எனக்கு எப்படி ஆதரவு அளித்து, அன்பு செலுத்தி உற்சாகப்படுத்தி வருகிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தபோது.

உறவுகளின் பாசப்பிணப்புதான் சிறந்த வாழ்க்கையாக இருக்கும் என்பதை நானும் என் மனைவியும் உணர்ந்தோம். என் மனச்சுமை குறைந்து மனதிலே ஒரு அமைநி நிலவியது

மலாக்காவில் உள்ள இடமாற்றமும், இயற்கை சூழலும் எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் பிள்ளைகளுக்கும் நல்ல மனமாற்றத்தை தந்தது. எங்களின் வருகையால் கவிதாவின் சித்தி குடும்பத்திற்கும் மன மகிழ்ச்சியும், ஆறுதலும் கிடைத்ததாகவும், புத்துணர்வோடு வாழ ஊக்கம் கிடைத்ததாகவும் அவர்கள் கூறியதைக் கேட்ட எஙகளுக்கும மகிழ்ச்சியாக இருந்தது.

அன்பை பரிமாறிக் கொண்டு அவர்களிடம் நன்றி கூறி மீண்டும் நாங்கள் சிங்கப்பூர் திரும்பிய போது, வானில முழுமதி எங்களை வரவேற்றாள். வீட்டில் என் அம்மா, அப்பா, தம்பி, தங்கை எல்லோரும் நாங்கள் ஒரு வாரம் வீட்டில் இல்லாமல், வீடு கலகலப்பு இல்லாமல் இருந்ததாகவும், எங்களை பார்க்க ஆவலுடன ஓடி வந்து என் அம்மா தன் பேரக் குழந்தைகளை கடடி அணைத்து முத்தமிட்டு தழுவிக் கொண்டார்.

நாங்கள் வீட்டில் இல்லாமல் அவர்கள் மனம் உற்சாகமின்றி காணப்பட்டதை அறிந்து, அவர்கள் எங்களின் மேல் எவ்வுளவு நேசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆறுதலும ஆனந்தமும் அடைந்தோம்.

அப்போது என் தம்பி என்னிடம் ஒரு கடிதம் வந்திருப்பதாகக் கூறி தந்தான்.அந்தக் கடிதம் வீடமைபபு வளர்ச்சிக் கழகத்திலிருந்து வந்திருந்தது. கடித்தை பிரித்துப் பார்த்தேன். நான் பதிவு செய்திருந்த வீடு எங்களுக்கு கிடைத்திருப்பதாக தகவல் இருந்தது. என் மனைவி கவிதா கடிதத்தை என்னிடமிருந்து வாங்கி பார்த்துவிட்டு, அதை கிழிக்கப் போன போது, வேகமாக நான் அதை வாங்கி,

“கட்டாயம் நான் இந்த வீட்ட வாங்கத்தான் போறேன்” என்றதும், என் மனைவி அதிர்ச்சியுடன், “என்னங்க சொல்றீங்க?” என்றாள்.

“ஆம்! இந்த வீட்டிலிருந்து நாம எல்லேருமீ ‘ஜுரங்’ல, இருக்கிற புது வீட்டுக்கு போயிடுவோம்” என்று கூறியதும், எலலோருக்கும் இரட்டிப்பு சந்தோசம் ஏற்பட்டது. ஆனால் என் தம்பி மடடும் எனனிடம்,

“அண்ணா நானும் விரைவில் திருமணம் செய்யலாம்னு நினைக்கிறேன்.’’ நீங்க இது நாள் வரைக்கும் குடுமபத்துல இருந்து கவனித்ததைப் நானும், என் மனைவியும் பார்த்துக்கறோம்.’’ என்றான். அதைக் கேட்டவுடன் என் தம்பி இவ்வுளவு விரைவில் பொறுப்புடன் விளங்குவான் யாருமே எதிர்பார்க்கவில்லை.

சௌந்தர்யமே வீட்டிற்கு வந்தது போல இருந்தது. திருமணமான என் தங்கையும் என்னைக் காண வந்திருந்தாள்.

என் குடும்பத்தை இப்போது பார்க்கும் போது வாசனை நிறைந்த பல மலர்கள் சேர்ந்து கட்டப்பட்ட கதம்பமாலையாக, இனிய நெஞ்சங்கள் நிறைந்தரவர்களாக, ஒருவருக்காக மற்றொருவர் என் வாழ் முற்படுவதை உணர்ந்து என் மனம் பண்பாடிச் செல்லும் நீரோடையாக இருந்தது.

– ஒலிக்களஞ்சியம் 96.8 ஜுன் 1990, ’பிரகாசம்’ சிறுகதை தொகுப்பு, முதற்பதிப்பு : மே 2006, சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *