(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிங்கப்பூரில் அது ஏதோ ஒரு குட்டித் தெரு. தெருக்களுக்குப் பெயர் வைத்து மாளவில்லை. அந்தக் குட்டித்தெருவுக்கு நினைவில் நிற்காத ஏதோ ஒரு பேர் போட்டிருந்தார்கள். லோரோங் என்பது மட்டும் நினைவுக்கு வருகிறது. லோரோங் லோரோங் என்றால் சிறிய ஒரு தெருதானே. பெயரில் என்ன வந்து கிடக்கிறது… காரிய சாதனை என்ன என்பதுதானே பிரச்னை…
அடுத்த தெருவைக் கடந்துவிட்டால் (அந்தப் பெரும் சாலைக்குப் போய் விடலாம், என்ற நினைப்பில் நடந்தேன் அவ்வளவுதான். எவ்வளவோ நேரம் நடந்து விட்டேன். எதிர்பார்த்து நடந்த அந்தப் பெருஞ் சாலைக்கு நான் இன்னும் வந்தபாடில்லை. திசை தெரியாத காட்டிற்கு வந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு .. எங்கே இருக்கிறோம் எப்படிப் போகவேண் டும் என்றொரு தீர்மானத்துக்கே வரவியலாத அளவுக்கு வெறும் சந்து பொந்துகள் நிறைந்த இடம் அது. திரும் பிய திசையெல்லாம் லோரோங் மயம். வாடகை வண்டிகள் கூட அதிக நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது. வந்தது வரட்டும் நடந்தே பார்த்துவிடு வோம்… துணிவு பிறந்தது நடந்தேன்… நடந்தேன்…
வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பீரங்கிக் குண்டு வெடித்தது போன்ற பிருமாண்டமான ஓசை அதிர்ந்தது. பக்கத்தில் எங்கோ விழுந்திருக்க வேண்டும். இடி அத்தனை பயங்கரமாக இடித்தது. மின்னல் கீற்று கள் பளிச் பளிச்சென்று மின்னிக் கண்ங்களில் நீலம் பூக்கச் செய்தது. நினைத்த இடத்துக்கு வந்துவிட மாட்டோமா என்ற எழுச்சியில் எட்டி நடைபோட் டேன். இன்றியமையாத நிலை… ஆயினும் அங்கே போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று சிறுநீர் கழிக் காமல்கூட விரைந்தேன். நடையிலும் வேகம் மனத் திலும் வேகம் -பதினைந்து பதினைந்து காசு கஞ்சத்தனத்துக்குக் கிடைத்த பரிசு.
இயற்கையோடு போராடிப் பார்த்தேன். தோல்வி எனக்குத்தான். புயலும் மழையும் சீறிக்கொண்டு இருந்தது. போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு ஓடிப்போய் ஒரு காப்பிக் கடைக்குள் நுழைந்து அடைக் கலமானேன். முதலில் ஆத்திரம் அடங்கிற்று. ஆவேசம் தணிந்தது. ஒரு கப் காப்பியுடன் இருக்கையில் அமர்ந் தேன். இரண்டு பேர் மட்டும் அமரும் ஒரு சிறிய மேசை ஓதுக்குப் புறமாகக் கிடந்தது. தனிமையை விரும்பி அந்த சிறுமேசையை ஆதிக்கம் கொண்டேன். கடைசி யில் ஒரே கூட்டம்… மழைக்கு ஒதுங்கியவர்களை அகதி களாக நினைத்துக் கொண்டேன். அகதிகளை ஆதரிக் கும் திருநாடுகளை நெஞ்சார வாழ்த்தினேன். நேரம் நீண்டுகொண்டே இருந்தது. பேய்க்காற்றும் பெரு மழையும் நீடித்துக் கொண்டே இருந்தது.
கடைக்காரன் சிரித்துக் கொண்டான். காப்பிக் கோப்பைகள் மேசைகளில் பெருகும்போது அவன் களிப்புகொள்ளாமல் இருப்பானா…? என்னுடைய மேசைக்கு சூடான ஒரு காப்பி வந்தது. நான் திடுக் கிட்டுப் போனேன். ஆர்டர் கொடுக்கவில்லையே என்று அதிர்ந்துபோய் அசைந்தபோது, எதிரே ஓர் உருவம் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் என்று குரலை நீட்டி நெளித்து அமர்வதற்கு அனுமதி கேட்டது. ஏறிட்டுப் பார்த்தேன். என் கண்களில் பார்வை இருட்டிக் கொண்டு வந்தது. தலைசுற்றியது. மயக்கம் வருவது போன்ற உணர்வு. மெய்சிலிர்த்தது வாந்தி வந்துவிடுவதற்கு அறிகுறியாக உப்புச்சுவை உமிழ்நீர் வாயில் சுரந்தது. கணநேரத்தில் தலையை அசைத்தேனோ என்னவோ எனக்கு நினைவில்லை. அழற்சிப் பார்வையில் அனுமதி பளிச்சிட்டிருக்க வேண் டும். அமர்ந்தான், அவன். என் கண்கள் அவனையே நிலைகுத்தி நின்றுவிட்டன. வேடிக்கைப்பொருளாக அவன் இல்லை என்பதை நீங்கள் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள். வெறுக்கத்தக்க ஓர் அவலட்சணத் தின் பிரதிபிம்பமாகத்தான் இருந்தான். ஆமாம், முகத்தில் ஓர் அங்குலம் கூட இடைவெளியில்லாமல் பெரியதும் சிறியதும் ஆன குமிழ்கள் போன்ற கட்டிகள். அவைகளில் சில வெடித்திருந்தன. சிலவற்றில் சீழ் வடிந்து கொண்டிருந்தன. சிலவற்றில் சீழ்வடிந்து காய்ந்து விட்டிருந்த வறட்சிக்கோடுகள் பல பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. மொத்தத்தில் பார்க்கச் சகிக்கமுடி யாத பரிதாபக் காட்சி. எப்படியோ எல்லாம் விகார மாகக் காட்சியளிக்கும் அந்தப் பாழ்பட்ட முகத்தை எப்படிச் சொல்லி விளக்குவது?
ஏதாவது சொல்ல முடியுமா? எல்லோருக்கும் பொது இடம். குடித்திருந்த காப்பி குமட்டிக் கொண்டு வந்தது. சமாளித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அவனைப் பார்க்கவே சகிக்க வில்லை. பார்க்காமலும் இருக்கமுடியவில்லை. அவன் பார்க்காத சமயத்தில் அவனைப் பார்த்தேன். அவன் பார்க்கும்போது தரையைப் பார்த்தேன். அருவருப்பை முகபாவங்கள் காட்டிக்கொடுத்து விடுமோ என்று அஞ்சினேன். பாவம் அவன் எந்த பாவமும் இல்லா மல் அமர்ந்திருந்தான். கண்களுக்குத் திரைபோட முயன்றேன். முடியவில்லை பார்த்தும் பார்க்காமலும் அவனைப் பார்த்தேன்.
இயற்கையின் விசித்திரங்களை எண்ணிப் பார்த்துக் கொண்டேன்! உலகத்தில் மனிதர்களைப் படைத்து உருவாக்குவது இறைவன்தான் என்றால் அவன் தன் படைப்பிலே ஏன் இத்தனை பாகுபாடு? இப்போது, எப்போதோ என் நண்பர் ஒருவர் சொன்ன சொற்கள் நினைவுக்கு வந்து நின்றன! எத்தனை கோடி மக்கள்? எத்தனை கோடி மாற்றங்கள்! உடலமைப்பு குர லமைப்பு, நடையடைப்பு இப்படி ஒவ்வொரு மனிதனுக் கும் வெவ்வேறு அமைப்பு. அவனுக்குத்தான் எத்தனை ஆற்றல். இப்படிச் சொன்ன அந்த படைப்பு இரகசியம் தான் சிந்தனையலைகளில் வந்து முட்டி மோதியது.
உலகப் படைப்புகளில் கூன், குருடு, செவிடு, பேடு நொண்டி, முடம், அவலட்சணம் அவலட்சணம் ஆகியன அனந்தம் அனந்தம். ஏன் இப்படி? அதைவிட அவர்களைப் படைக் காமல் விட்டிருந்தால் என்ன? கடவுளைக் கடிந்து கொண்டேன்! முற்பிறப்பு என்று இம்மை மறுமைத் தத்துவங்களிலும் எண்ணம் எடுத்தடி வைக்காமல் இல்லை. எவ்வளவோ நேரம் அப்படியே!
எடுத்த எடுப்பில் எச்சில் விழுங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு இழிவுணர்ச்சி கொண்ட நான்! இப்போது இரங்கல் தீர்மானத்துக்கு வந்துவிட்டேன். காந்தியடிகளின் ஜீவகாருண்யம் என்ற உயிர்வதைத் தடுப்புத் தத்துவத்தை ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கன்றைக் கொன்றுவிடும்படி சொன்னாராம்! அணுஅணுவாக சித்திரவதைப்பட்டு துடிப்பதைவிட ஒரேயடியாகக் கொன்றுவிடுவது நல்லது என்று காந்தி வருந்தினாராம்! ஏன், அது இவனுக்குப் பொருத்தமாக இருக்கக்கூடாது? உதவாக்கரையாகி உருவம் சிதைந்து உலவுவதைவிட ஒரே போக்கில் முடிந்துவிட்டால் என்ன? வருவதற்கு ஒரே வழி; போவதற்குத்தான் பல வழிகள் இருகின் றனவே – தமிழ் நாட்டுச் சிறுகதை மன்னன் புதுமைப் பித்தன் சொன்ன புதுமையும் என்னுடைய சிந்தனைக்கு எட்டியது! இது அவனுக்குத் தெரியாத ஒன்றோ? பின் ஏன் அந்த முடிவுக்கு வராமல் இருக்கிறான்? பிறவி யிலேயே இப்படியா? பிறகு வந்த கோளாறா? இப் போது கனிவும் கருணையும் மாறி ஆய்வு செய்யும் வேட்கை பிறந்தது.
சிந்திக்கச் சிந்திக்க சிந்தனை வெவ்வேறு திருப்பங் களின் முனைகளைத் தொட்டு விடுகிறது! இறுதியில் எந்த ஒன்றும் நிலையாமல் ஆகிவிடுகிறது! எவ்வளவு பெரிய உண்மை! எப்படியெப்படியோ சிந்தித்துக் கொண்டிருந்த எனக்கு என்னவோபோல் இருந்தது! காப்பி குடிக்கத் துணிந்துவிட்டேன்! எச்சிலை விழுங்கிக் கொள்ளும் மனப் பக்குவம்கூட இல்லாமல் இருந்த நான் அடியோடு மாறியிருந்தது எனக்கே ஒரு வியப்புத்தான். எல்லாம் சூழ்நிலைதான் காரணம். தனிமையும் அமைதி யுல் விரும்புகிறவர் தகரக் கடைக்குப் பக்கத்தில் தங்கி யிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டால், அதுவும் அவருக்குப் பழகிப் போய்விடுகிறது. சாக்கடைக்குப் பக்கத்தில் இருக்கின்ற குடில்களில் இருந்து பழகிப் போனவர்களுக்கு நாற்புறமும் இருந்து வருகின்ற நாற்ற மும் நறுமணமாகி விடும். மனம் என்பது மாறும் தன்மையைக் கொண்டது என்பதற்கு என் மனமே ஒரு பெரிய சான்று.
காப்பி வந்தது. கலக்கி விட்டுக்கொண்டேன். ஒரு கணமும் தாமதிக்காமல் ஒரே மூச்சில் இழுத்துவிட்டேன். கொஞ்ச நேரத்தில் மனம் வேறு மார்க்கத்துக்குப் போய் விட்டால், காசு வீணாகி விடும் என்ற எண்ணம். அத்தோடு கொஞ்சம் கதகதப்பும் வேண்டியிருந்தது. சிகரெட் புகைக்க டப்பாவைத் திறந்து சிகரெட் எடுத் தேன். தீப்பெட்டியைக் காணோம். தேடினேன். அவன் தன்னுடைய தீப்பெட்டியை நீட்டினன். பேசலில்லை என்கரங்களும் அதை வாங்கிக் கொண்டன. நன்றி சொல்ல வேண்டியதுதான் நயத்தகு நாகரிகம். சொன் னேன். சிரித்துக் கொண்டான். பாதகமில்லை. அமைப்பு அது. செழிப்பு இருந்தது என்று சொல்ல முடியாது. வரட்சி நன்றாகத் தெரிந்தது. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை. ஆமாம் இப்போதும் கொஞ்சம் பெரிய தூற்றல் இருந்து கொண்டுதான் இருந்தது. நீண்ட நேர அமைதி பெரும் வேதனையாக இருந்தது. வேட்கையைத் தீர்த்துக் கொள்ள விரும்பினேன். பேசி னேன். பேசினான். அந்த பேச்சின் அதிமதுரச்சாற்றினை அப்படியே நான்உங்களுக்குதருகிறேன். விரசம் தொனிக் காதவாறு எழுதிவிட வெகுவாக முயன்று முனைந்திருப் பது முழுவதையும் படித்த பின்னர் உங்களின் கருத்துக் குப் படலாம். முயற்சிக்குப் பாராட்டுகள்.
நான் ஒரு பெரிய அழகனல்ல. அதற்காக அவலட்சணத்தின் மொத்தப் பிறப்பிடமாய் இப்போது இருக்கும் இந்தக் குரூபியான தோற்றத்தையும் நான் பெற்றிருக்கவில்லை. கட்டழகன் இல்லாவிட்டாலும். கட்டுக்குலையாம லிருந்தேன். பட்டதாரியல்ல, படித்த வன்! பண்பின் பிறப்பிடமல்ல, பழகத் தெரிந்தவன்! கருணைக் கடல் அல்ல, களிவு இருந்தது என்னிடம்! நேர்மையின் உறைவிடமல்ல, நெறி பிறழாத் தன்மை இருந்தது! ஊதாரியல்ல, உதார குணமிருந்தது.
பள்ளிப் பருவத்தைத் தாண்டினேன். படித்து முடித்துவிட்டு அல்ல; பல தடவை தேர்வுகளில் தோல்வி யடைந்த என்னுடைய வெறுப்பு பெற்றோர்களின் ஆத்திரம்! இவை யிரண்டும் எனது பள்ளி வாழ்க்கைக்கு முத்தாய்ப்பு வைத்தன. நடுத்தரமான வருமானமுடைய குடும்பத்தார் வழக்கப்படி வேலை தேடும் படலம் வந்து விட்டது. வேலைக்கு நான் அலைந்தேன். வேலை தேடிப் பிழைத்துக் கொள் என்று விரட்டினார்கள் பெற்றோர் கள். பாவம் அவர்கள்தாம் என்ன செய்வார்கள்? குடும்ப பாரம் அப்படி!
வேலை தேடித் தரும் அரசாங்க அலுவலகத்தில் பெயரைப் பதிந்து வைத்தேன். வேலையற்றவன் பட்டய அட்டை என் சட்டைப் பையிலிருந்தது. அத்துக்கூலிக்கு மண் வெட்டச் சென்றுவந்தேன். அந்தி வேளையில் ஐஸ் தண்ணீர் விற்று வந்தேன். வாயும் வயிறுமிருக் கிறதே வளர்த்துத்தானே ஆகவேண்டும்! கையேந்தாமல் வாழ்வது கேவலமில்லை என்பது தான் என் முடிவாக இருந்தது.
கையை ஊன்றிக் கரணம் பாய்ந்து கொண்டிருந் தேன். காலமும் பல குட்டிக் கரணங்களைப் போட்டு முடித்துவிட்டது. வாலிபத்தின் வாயிலில் கால் வைக்கத் தொடங்கிய நேரம். வயதும்வருகிறது. உணர்வும்தானே உண்டாகிறது. அப்பாவிற்கும் அகில உலக மேதைக்கும் பருவப்பாட்டில்மட்டும்பேதமேஇருப்பதில்லை. சிலருக்கு வாய்த்துவிடுகிறது; வேறு சிலருக்கு வாயூறச்செய்கிறது. அந்த வேறுபாடு காலம் காலமாக இருந்துவரும் சங்கல் பம்தானே! வாலைப் பருவம் என்னிடம் வாலை ஆட்டிக் காட்டியது. வயப்பட்டுவிட்டேன்.
அவள்… என்னுள்ளம் கொள்ளைகொண்ட அவள், எண்ணங்களை ஈர்த்துக் கொண்ட அவள், சிரிக்கவும். அழவும் வைத்த அவள் யாரென்றே தெரியாது. வழியில் வந்தாள். விழிகள் பார்த்துவிட்டன. வழி தவறு என்று தெரிந்தபின்னரும் கூட வந்துவிட்டபின்மாற்றுவானேன்? குருட்டுத் தைரியம் பிறப்பதில்லையா? அதுபோல் ஏதோ ஒன்று சொல்லத் தெரியவில்லை. மனத்தில் நினைக்கிறேன். தெளிவாகச் சொல்லத் தெரியாத குறைதான்! வளையம் வந்தேன்; வலம் வந்தேன்.
அக்கம்பக்கத்தில் அனைவரும் அர்த்தம் தோய்ந்த பார்வையோடு என்னைப் பார்த்தார்கள்.
விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் வேறயா? இன் னும் என்ன மாதிரியெல்லாமோ அர்ச்சனைகள் எனக்குக் கேட்டும், கேட்காமலும், ஜாடைமாடையாக என்று சொல்வார்களே, அப்படி நடைபெற்றறுக்கொண்டுவரத் தொடங்கின. பெரியவர்களையும் பிரபலமானவர்களை யும்கூட பேதமே இல்லாமல் பேசித் தீர்க்கும்போது மிகச் சாதாரணமான என்னைப் பேசுவதை எப்படித் தடுத்து நிறுத்தமுடியும்? பேசிக் கொண்டிருந்தார்கள். ஆமாம்,ஏசிக்கொண்டுதான் இருந்தார்கள்.
இளமை வேகம் எதையும்சிந்திப்பதில்லை. முதுமைச் சோர்வு முடிவுக்கு வருவதுமில்லை. முன்னதின் முனைப் பிலிருந்த எனக்கு முடிவு தெரிந்தாக வேண்டு மென்ற துடிப்பு,முறுக்கேறியிருந்த நேரம். முடுக்கிவிட எனக்கென்று கொஞ்சம் பின்னணியும் இருந்தது. பட்டுத் தீரட்டும் பார்த்து ரசிப்போம்-இப்படியொரு கும்பல் பட்டாலும் படும் பாக்கியம் போல் நடக்கட்டும்-இது வேறொரு கூட்டம்.
இருமுனைகளிலும் திரிக்கும் தாம்புக்கயிறு விரைவில் முறுக்கேறும் தானே?
பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதினேன். வந்தார் கள் வரைமுறை பிறழாமல் சந்தித்துப் பேசினார்கள். தொலைவாக நான் எங்கும் போகவில்லை. தூரத்து உறவுதான் என்பதை மகிழ்ச்சியுடன் சொன்னார்கள் எனக்கு அதுவா தேவை? அந்த அதுதான் வந்து விட்டதே! முடிவு என்ன? முந்திக் கொண்டுதான் கேட்டேன். அத்தனை அவசரம்!
நிரந்தரமான ஒரு வேலை கிடைத்த பிறகுயோசிக்க லாம் என்று சொல்லிவிட்டார்கள் என்று பெற்றோர்கள் சொன்னார்கள்.
வேலை தேடுவதை விட வேறு எனக்கென்ன வேலை? எதற்கும் வேளை வரவேண்டாமா? எதுவும் நடக்கக் கூடிய நேரத்தில், எல்லாம் தானாக நடக்கும் என்பது தானே ஆண்டவன் கட்டளை! ஆத்திகர்களைச் சோதிப் பார்! நாத்திகர்களைத் தண்டிப்பார்! இரண்டுக்கும் வேறுபாடில்லை. காரியசித்தி காலம் தாமதித்துத் தானே! இரண்டும் கெட்டான் எனக்கு என்ன தீர்ப்போ!
ஏன் இந்த வீண் ஆராய்ச்சி எல்லாம்… வீணாக மனத்தை அலைக்கழித்துக் கொள்ளாமல் வேலை தேடு வோம்! முடிவுக்கு வந்து, மிகவும் மும்முரமாக அந்த முயற்சியில் ஈடுபட்டேன்.
வேலை கிடைக்கும் வேளை வரவில்லை. வேதனை தான் என்றாலும் விரக்தி யடையாமலிருந்தேன். வெறுப்பு சிற்சில சமயங்களில் தோன்றத்தான் செய்தது. வாழப்பிறந்தவர்கள் என்ற உணர்வு இருக்கிறது வழி வகைகள் தாம் அமையாமல் இருந்தன. அமைத்துக் கொள்ளும் ஆற்றலுமில்லை! நலிந்தேன். வலிவும் பொலிவும் மட்டும் இருந்தால் போதுமா? நலிவும் இருக்கக் கூடாது தானே?
ஒவ்வொரு வீட்டிலும் புதிய காலண்டர்கள் தொங் கிக் கொண்டிருந்தன. என் குடிசைக்கும் புதிய காலண் டரைக் கொண்டு போய் தொங்க விட்டேன். பழைய நாட்காட்டியை புதை பொருளாக்கினேன். ஒரு வருடம் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது! புது வருடம் கூடப் பிறந்து விட்டது. ஓயாமல் சிந்தித்து வருந்தத் தொடங் கினேன். புது வருடம் சிலருக்கு நல்லதாகவும் சிலருக்கு கெட்டதாகவும் அமைவது இயல்பு தானே!
எனக்கு நல்லது வந்தது. ஆம் வேலைக்கு வருமாறு அழைப்பு வந்தது. காத்திருந்தவனாயிற்றே! கதறிக் கொண்டு பறந்தேன்.
வேலை கிடைத்தது. என்ன வேலை தெரியுமா? மருத்துவமனையில் பிணங்களைத் குவிக்கும் அறைப் பாது காவலன் வேலை. வெயில் படாத வேலை, உடல் நோகாத வேலை. இதைவிட வேறு எனக்கு என்ன வேண்டும்! பேய் பிசாசு புந்தியானா என்ற வகைகளில் சிந்தனையை கொஞ்ச நேரம் செலவழித்து பீதியும் கல வரமும் ஏற்பட்டது. வேண்டாமென்று சொல்லி விட லாமா! வேறு வேலை கொடுக்க எவ்வளவு நாள் ஆகுமோ! வலிய வந்த சீதேவி, உதைத்துத் தள்ன முடியுமா? மனப் பயம்தானே தவிர மற்றொன்றுமில்லை என்ற சிந்தனை யும் எட்டத்தான் செய்தது.
என்ன வேலை என்று யாராவது கேட்டால் என்ன பதில் செல்வது! என்னை நானே கேட்டுக் கொண்டேன், பெரிய மருத்துவ மனையில் வேலை செய்கிறேன் என்று சொல்லி விடலாம். எனக்குப்பதில் கிடைத்துவிட்டது! பிணங் காக்கும் வேலைதான்! அரசாங்கச் சட்டப்படி மருத்துவ சோதனைக்குச் சென்றுவந்தேன். எனக்கென்ன கேடு… எல்லாம் சரியாக இருந்தது. எல்லாம் முடிந்து விட்டது. துணிந்தவனுக்குத் துக்கமில்லை… எனக்குக் தூக்கமும் இல்லை. நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
உன்னை நான் நெஞ்சாரக் காதலிக்கிறேன். அது உனக்குத் தெரிய வேண்டுமே…
எனக்கெப்படித் தெரியும்? நான் மனநூல் கற்றுத் தேறவில்லை…
என் நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொண்டிருக்க. வேண்டும்…
துப்புத் துலக்கும் வேலை எனக்கில்லை; பாத்திரம் துலக்கியிருக்கிறேன்…
நான் உன்னைப் பார்த்த முதல் நாளிலிருந்தே நேசித்து வருகிறேன்…
இருக்கலாம் அது எனக்குத் தெரியாது; தெரிந்து கொள்ளவும் நினைக்க வில்லை…
இன்றாவது தெரிந்து கொண்டாயல்லவா? இனி அந்தக் குறையும் இல்லை…
அந்தமட்டில் நீங்கள் புத்திசாலிதான்…அறிவித்து விட்டீர்களே! நல்லது.
உன்னைப் பெண் கேட்க என் பெற்றோர்கள் வந்திருந்தார்களே…
எத்தனையோ குடும்பத்தினர் சம்பந்தம் கேட்டு வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள்…
எனக்குத் தெரியும் நீ சம்மதித்திருக்க மாட்டாய் என்று சமர்த்து…
ஆமாம் சம்மதிக்கவில்லை. நான் மட்டுமல்ல, என் பெற்றோர்களும் தான்…
உன் பெற்றோர்கள் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை..
ஏன் அப்படி? என் பெற்றோர்கள் மீது மட்டும் அவ்வளவு ஆழமான நம்பிக்கை…
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
என்னசொன்னார்கள்? எப்போது? யாரிடம்? எதைக் காப்பாற்ற?
எவ்வளவு சீக்கிரமா மறந்து விட்டாய்? ஆமாம்; ஓராண்டு முடிந்து விட்டது அல்லவா?
எதைப்பற்றி என்று சொன்னால் என்னாலும் ஊகிக்க முடியுமல்லவா?
நம் திருமண விசயமாக என் பெற்றோர்களிடம் உங்கள் பெற்றோர்கள் சொன்ன வாக்குறுதி…?
ஓஹோ அதுவா? வேலை கிடைக்கட்டும் பார்ப்போம் என்று சொன்னதுதானே?
ஆமாம் நினைவுக்கு வந்து விட்டால் எல்லாமும் மிகச்சாதாரணம் தானே!
எத்தனையோ பிரச்னைகள்! ஆமாம்; பிரச்னைகளின் மொத்தக் கூட்டுருவம் தானே மனிதன்!
ஆழமான தத்துவம்! அருமையான சந்தர்ப்பத்தில் சொல்லுகின்றாய். ஆற்றலுள்ளவள்தான் நீ…
பாராட்டுக்கு நன்றி! பல்லைப் பிடுங்க வந்தேன். கை வைக்க முடியவில்லை!
ஓஹோ! அதுதான் கதுப்புக் கன்னத்தில் வீக்கமா? சரி புறப்படு; என பெற்றோர்கள் வருவார்கள்!
ஏன்? எதற்கு? எப்போது? காரணமில்லாமல் வர மாட்டார்களே?
காரணகாரியம் இல்லாமலா? காரணத்தோடுதான். கல்யாணப் பேச்சு. பருவத்தே பயிர் செய்.
வளர் நிலம்தானா? இல்லை வெறும் கலர் நிலம் தானா? எந்த இடம்? எப்போது?
கிண்டலா செய்கிறாய்? உன்னைத்தான்…பார்த்துத் தான்… பேசத்தான்.
முற்றுவினை தொடர் ஆவதில்லை. முற்றுப் புள்ளி நீங்குவதுமில்லை. வினைமுற்று தொடங்குவதில்லை!
என்ன நீ என்னென்னவோ சொல்லுகிறாய்? தோற்றம்… தொடக்கம் முடிவு என்று?
வெளிப்படையாகவே சொல்கிறேன்! விவேகம் இருந்தால் நீங்கள் பெண் கேட்க வரவேண்டாம்!
சொன்ன சொல்? வாக்குறுதி மறந்து விட்டீர்களா அடியோடு?
ஆகட்டும் பார்க்கலாம் என்றால் அதுவேதான் முடிந்த முடிவா?
சொன்ன சொல்லுக்கு விலையிருக்க வேண்டும்! அது தான் மனிதப் பண்பு!
சொல்லாத சொல்லுக்கு பொருளேதுமில்லை.. சொல்லில் பொருளில்லை! எடுத்துக் கொள்கின்ற விதத்தில் தான் பொருளே அடங்கியிருக்கிறது!
தெளிவாகத் திறந்த மனத்தோடு பேசியிருக்கலாம்… சொல்லியிருக்கலாம்!
முகத்தில் அறைந்தால்தான் அறையா? முட்டாள்களுக்கு எதுவும் புரிவதில்லை!
அவளே அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை. நின்று கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. விருட்டென்று விரைந்தாள். சொல்ல வேண்டியது எல்லாவற்றையும்தான் சொல்லி விட்டாளே!
உலகம் உருண்டை என்று படித்துக் கொடுத்த ஆசிரியர் என்னென்னவோ நிரூபணங்கள் சொல்லி விளக்கப்படுத்தினார். அது எனக்குப் அப்போது விளங்க வும் இல்லை! நான் ஒப்புக் கொள்ளவும் இல்லை! இன்று பூமி உருண்டைதான் என்பதை உணர்ந்தேன்! உலகம் சுழல்வது தெரிந்தது! அதன் வேகமான சுழற்சியோ என்னவோ நான் நினைவிழந்து விட்டேன்!
விழித்தெழுந்த போது வீட்டிலிருந்தேன்! கண்கள் மயங்கியிருந்தன. தெளிவு இல்லாமல் இருந்தது. மது மயக்கம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்! மாது தந்த மயக்கம்தான் என்பதை யாரிடம் எப்படிச் சொல்ல முடியும்?
கொஞ்சம் கூடுதல்தான். புதுப் பழக்கம். தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று சிலேடைக் கவியாக நினைத்துக் கொண்டு அவர்களின் அந்த முடிவை நான் அப்படியே ஓப்புக்கொண்டேன்! அதிகமாகப் போகாமல் பார்த்துக் கொள், அறிவுரை சொன்னார்கள். அதுவும் என்னை இடித்துக் காட்டிய இரட்டைப் பொருளாகவே இருந்ததாக எனக்குப் பட்டது!
வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எழுந்து போய்க் குளித்து விட்டு, இப்போது உண்மையிலேயே மது மயக்கம் தேடி சென்றேன்! கவலை தீர்க்கும் அரு மருந்தாய் அதைத் தானே சொல்லுகிறார்கள். அந்தப் பொழுது அபிலாசைதான் அது! வெறும் மனப்பிரமை என்பதைப் பிறகு உணர்ந்தேன்.
ஒருதலைக் காதல் ஒரு போதும் உருப்பெறுவதில்லை! நான் மட்டும்தான் அவளைக் காதலித்தேன்! அவள் என்னை விரும்பவில்லை! அவள் விருப்பத்தை தெரிந்து கொள்ளவும் இல்லை! பெண்களைத் தியாகச் சுடர் என்று வர்ணிக்கிறார்களே! அவள் ஏன் இந்தத் தியாகத்தைச் செய்யக் கூடாது? விரும்பித் தொலைத்து விட்டான்! இருந்து விட்டுப் போகட்டுமே! என்று ஏன் அவள் எண்ணியிருக்கக் கூடாது? என் பைத்தியக்கார மனம் அப்போது இப்படியெல்லாம் எண்ணிப் பார்த் தது! ‘வண்ண மலர்ச் சோலையிலே பூக்களுக்கா பஞ்சம்?’ என்று மலேசியக் கவிஞர் தம் கவிநயத்தை நாடகமொன்றில் வசனமாக அமைத்திருந்தார்கள்! அது என் நினைவுக்கு வந்தது! கேவலம்! நுகர்ந்து கசக் கும் தன்மையிலா அவளை நேசித்தேன்! தொடுதல் அரிதான தொலைவிலிருந்து விடுதலரியா விருப்பம் கொண்டிருந்தேன்! ஆத்ம சாந்தி ஆன்மீக உறவு மானசீகமான மாசற்ற உறவு!
தெய்வீகக் காதலில் தோல்வியுற்ற நூறு பேர் இருந் தால் இந்த உலகத்தையே ஆட்டிப் படைப்பேன் என்று யாரோ ஓருவர் சொன்னதாக நண்பர்களில் ஒருவர் சொல்லியது, இப்போது நினைவுக்கு வந்து நின்றது. விரக்தி வரும்போது இலட்சியம் இல்லாத நிலை… நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு ஏற்படுகிறது. பழுத்த அனுபவசாலிதான், இதனை சொல்லியிருக்க வேண்டும்.
எவ்வளவு அமைப்பாகவும், ஆழமாகவும் நான் கட்டி வைத்திருந்த மனக் கோட்டையை, ‘முட்டாள் களுக்கு எதுவும் புரிவது இல்லை’ என்ற ஒரே சொல்லில் இடித்துத் தகர்த்துப் பொடிப் பொடியாக்கி விட்டாள்! வெடி குண்டுக்குத்தான் கபளீகர பக்தி இருப்பதாகக் கேட்டும், பார்த்தும் இருக்கிறேன்! உயிரைக் குடிக்கும் சக்தி மட்டும் தானே அதற்கு? உணர்வையே அழிக்கும் சக்தி, மனிதனின் சொல்லுக்கு இருப்பதை அறிந்து கொண்டேன்! ஏட்டறிவோ கேட்டறிவோ இல்லை! இது பட்டறிவு…பட்டை தீட்டிய அறிவு.
எத்தனையோ நாட்கள்! எப்படியெப்படியோ சிந்தனை! இறுதி முடிவு ! ஒரே முடிவு! வைராக்கியம் பிறந்து விட்டது! பட்டை தீட்டிய வைரமாக அது மாறி விட்டது.
என்ன? ஆம்; சாவதற்குள் ஒரு முறையாவது என்ற வெறியுணர்வுதான் அந்த வைராக்கியம்! ஒரு மரக்கொம்புத் தேனுக்கு மட்டும்தானா சுவை? சுவை, மரத் திலா இருக்கிறது? இல்லை; தேனில்தான் இருக்கிறது. தெரிந்ததுதான்…தெரிந்தும் ஏன் இந்த வெறிப் போராட்டம்? அவளை, அவளையே சாவதற்குள் என்ற வைராக்கியம்? விளக்கத் தெரியவில்லை…விவரிக்க வார்த்தை கிடைக்கவில்லை அல்லது முடியவில்லை. ஏதோ ஒன்று எனக்குச் சொல்லவோ தோன்றவோ இல்லை. ஒரே பிடிவாதம். ஒரு பெரும் வைராக்கியம்! மனத்தில் ஏற்பட்டு விட்டது. தடுக்க முடியவில்லை. தடுத்து நிறுத்தும் சக்தியும் எனக்கு இல்லை. இயற்கை யாகப் பிறந்துவிட்ட உள் உணர்வுக்கு உடன்பட்டுத் தீர வேண்டிய நிலை! என்ன செய்வேன்? ஏதோ ஒன்று என்னை ஆட்டிப் படைப்பதாக என்னால் உணர முடி கிறது. எதிர்த்து நிற்கும் வலிமையை இழந்து விட்டேன்! சரியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது… சாதிக்கும் சக்தியை அந்த ஏதோ ஒன்றும் பெற்றிருந்தது.
விவரிப்பானேன்! வெறி பிடித்து விட்டது. காட்டு மிராண்டித்தனமான அந்த வேட்கை உணர்வுக்கு நான் இட்டுக்கொண்ட பெயர்தான் வைராக்கியம். சபதம், பிடிவாதம், சவால் என்பதெல்லாம். நில நூல் வரலாற் றுக் கணக்குப்படி, சூரியன் பூமியை இரண்டுமுறை வலம் வந்துவிட்டான். ஆனால் நானோ? எப்படியெல்லாமோ திட்டமிட்ட அவளை வட்டமிட்டுப் பார்த்து விட்டேன். காதல் வலையில் தான் சிக்கவில்லையே. இன்னொரு கண்ணிலும் அந்தக் கன்னி அகப்படவில்லை.
ஒருநாள் மாலை ஐந்து மணி ஆகியிருக்க வேண்டும். வேலைக்கு வந்தேன். வருகை குறிப்பேட்டில் கையெழுத் திட வழக்கம்போல விரைந்து கொண்டிருந்தேன். எதிரில் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. சோகம் தோய்ந்த முகத்தோடு இதயம் கவர்ந்தவளின் பெற்றோர்கள் வந்து கொண்டிருந்தார்கள். தூரத்து உறவாயிற்றே! அணுக்கமான உறவு அமைந்திருக்க வேண்டியதுதான் அம்சம் என்று சொல்வார்களே அந்த பிராப்தம் என்பது அணுக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதற்காக மனிதாபிமானத்தையே மறந்துவிட முடியுமா? இல்லை. மனம்தான் கேட்கிறதா? அறிமுகம் என்ற ஒன்றுக்காகவாவது கேட்டுத்தானே ஆக வேண்டும்? விசாரித்தேன். விபரம் தெரிந்தது.
“நச்சுக் காய்ச்சல்” விஷ ஜுரம் மிகவும் கடுமையாக இருந்தது; நினைவிழந்து விட்ட நிலை; டாக்டர்கள் நம்பிக்கையற்றுப் போய் விட்டதாகக் கூறுகிறார்கள்! சொன்னதுதான் தாமதம். அந்த மருத்துவமனையே இடிந்து நொறுங்குவது போல ஒருவகை அதிர்ச்சி! ஏன்? ஏன்? உயிரோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்து ஒன்றியிருந்த பாசமா? அல்லது வைராக்கியம் நிறை வேற்றப்படாமல் போய்விடுமே என்ற மருட்சியா?
அப்படியா? என்னையறியாமல் வார்த்தை சிதறியது. அன்பு, அவசரம், ஆத்திரம் இப்படி இன்னும் பல ஒன்பான் ரசமும் ஒருங்கே அமைந்திருந்தது… அந்த அப்படியா என்ற ஒரே சொல்லில்.
நச்சுக் காய்ச்சலா? நஞ்சுடைமைக்காரிக்கு வர வேண்டிய நோய்தான்! என்னுடைய நெஞ்சகத்தின் பஞ்ச பூதங்களில் ஒன்று வெறிச் சிரிப்பு வெற்றிச் சிரிப்பு சிரித்தது. நடக்கவில்லை, ஓடினேன்! அவளைப் பார்க்கத்தான்! கடன்பட்ட ஒருவன் நோய்வாய்ப்பட் டிருக்கின்றான் என்றால் கடன் கொடுத்தவனும் வேண்டிக் கொள்கிறான்! கருணை பிறந்தது எனக்கு! கடவுளை நிர்மலமான முகத்தோடு நினைவிழந்து கிடந்த அவளைப்பார்த்தேன்! அது அந்த மாதிரிக் கனிவுதானா? எனக்குத் தெரியவே இல்லை. அவள் சாகக்கூடாது என்று என் உள் மனம் சொல்லிக் கொண்டது. அவள் அற்ப ஆயுசுக் காரியல்ல! இன்னொரு மனம் சொன்னது. அவளை நான் சாகவிட மாட்டேன். நான் சொல்லிக் கொண்டது. பைத்தியக்கார மனம் பேதலித்தது. ஆக்க வும் அழிக்கவும் ஆண்டவனால்தான் முடியும் என்று அகில உலகமும் நம்பும்போது நான் இப்படிச் சொல்லிக் கொண்டது பைத்தியக்காரத்தனம்தானே! விரக்தியின் எல்லைக்கோட்டுக்கு வந்துவிட்டவன் உலகத்தையே துச்சமென மதிக்கிறான். அப்போது அவனுக்கு ஒரு விதமான அசுரபலம் பிறக்கிறது. அதற்கப்புறம் ஆண்ட வனாவது ஆள்பவனாவது? அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் ஆதிக்க சக்தியைப் பெற்றுவிட்டதாக கருதிக் கொள்கிறானா? அனுவரதமும் தன் கையில் என்று நினைத்துக் கொண்டு விடுகிறானா? நானும் இப்போது அப்படிப்பட்ட நிலையில்தான் இருந்தேன் ! அவளைச் சாகவிட மாட்டேன். ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டேன்.
அடிக்கொரு தடவை, அவளை வந்து பார்த்துவிட்டு சென்றேன். அன்று முழுமையும் நான் தூங்கவில்லை! அன்று மட்டுமா தூங்கவில்லை? பகலை இரவாக்கி இரவைப் பகலாக்கும் பழக்கத்துக்கு நான் எப்போதோ வந்துவிட்டேன்! இருந்தாலும் இயற்கையை வெல்ல முடிவதில்லை. விழிப்பு இருக்கும். இமைகள் மூடியிருக்கும். இன்று அதுவும் இல்லை! என் இமைகள் அடைபட வில்லை. அவள் தம் விழிகள் திறக்கவே இல்லை; ஏன் அசையவே இல்லை. எத்தனையாவது தடவையாக பார்க்க வந்தேன் என்று எனக்குத் தெரியாது. எண்ணி லடங்காததல்ல. எண்ணிக் கொள்ளவில்லை என்பது தான். இந்தத் தடவை நான் வந்து பார்க்கும்போது தாதிமார்கள் பரபரப்பாகப் பரிசோதனை செய்து கொண்டு இருந்தார்கள். பதுங்கிச் சென்றுவிட்டேன். என் மனம் ஊசலாடியது. அங்கே அவள் உயிர் ஊசலாடியிருக்குமோ? இன்பம்-துன்பம் எதுவாயினும் மனம் அமைதி கொள்வதில்லை, அலைக்கழித்தேன்.
இரண்டு பேர் சேர்ந்து வண்டிப்படுக்கை ஒன்றைத் தள்ளிக்கொண்டு வந்தது, தொலைநோக்கில் தெரிந்தது அவள்தானா…? ஆண்டவனே அவளாக இருக்கக்கூடாது அங்கலாய்த்து கொண்டது, மனம். குதிரைப் பந்தயச் சீட்டு எண்களைப் பத்திரிகையில் வந்துள்ள எண்க ளோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்குவோர் எல்லோ ரும் கடவுளே கருணை காட்டு என்று கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் கண்ணோட்டம் விடுகிறார்கள். அதற்காக எல்லோருக்குமா அடித்து விடு கிறது? இல்லையே என் மனக்கொதிப்பிலே உருவான அங்கலாய்ப்பும் பொய்த்து விட்டது. என் வரைக்கும் சாகாவரம் பெற்றஅவள்தான் செத்துப்போய் வந்தாள் மணக் கோலத்தில் பார்க்கத் துடித்தவளைப் பிணக் கோலத்தில் பார்த்தேன். அடைக்கலம் தர வேண்டியது என் பொறுப்பு, தானே. நாளை வரை நான்தானே அவளுக்குத் துணைவன்? அதாவது காவலன்? கொண்டு வந்தவர்கள் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள்.
இறப்பு என்றவுடனே நல்லவர் கெட்டவர் என்று பார்ப்பதில்லை. பாவம் முடிந்துவிட்டதா? என்று தானே உள்ளம் நெகிழ்கிறது. எனக்கும் அப்படித்தானே. விழிகள் குளங்களாகியிருந்தன. நீரில் பிரதி பிம்பங்களை பார்ப்பதில்லையா? பழைய நினைவு கள். ஆம். அதுதான் பசுமையான நினைவுகள் முதல் பைத்தியக்காரத்தன மான வெறியுணர்வு வரை அனைத்துக்கும் உரிய பழைய நிழல்கள் விழி நீரில் பளிச்சிட்டு மறைந்தன. வரிசை பிடித்து வந்து சென்றன.
வைராக்கியம் வைத்தாயே! முடிந்ததா உன்னால்? சாவதற்குள் ஒரு முறை என்று சபதம் செய்தாயே! சவால் விட்டாயே! சாதிக்க முடிந்ததா உன்னால்? உன் பிடிவாதம் எங்கே? மலையடிவாரத்திலிருந்து எக்காளக் குரல் எழுப்பி யாரோ என்னைக் கேலி செய்வதுபோன்று இருந்தது.உறங்கிக்கொண்டிருந்த உணர்வுகளை உசுப்பி விட்டது யார்? உள்ளத்தின் அடித்தளத்தில் புதைந்து போய் விட்டிருந்த உணர்வுகளை உலுக்கி விட்டது யார் யார்? வீறிட்டெழுந்தேன்.
நானும் பதிலுக்குக் குரல் கொடுத்தேன். சாவதற் குள் என்றுதானே நான் சவால்விட்டேன். அவள்தான் செத்துவிட்டாள். நான் இன்னும் சாகவில்லை. செத்துப் போய் என்னுடைய வைராக்கியத்தைச் சிதறடித்துவிடப் பார்க்கிறாள், விடமாட்டேன். விடமாட்டேன்…அவள் முந்திக்கொண்டு என் சபதத்தை உடைத்தெறியப் பார்க் கிறாள். விடமாட்டேன் வெடிபிடித்த ஓலம் அது.
பிணமடா பிணம்! உயிரற்றற வெறும் ஒரு சதைப் பிண்டம். உணர்வதா? எலும்பு போர்த்த தோல், அமைதிக் குரல் ஒலித்தது. மரம்தானே விழுந்துவிட்டது. கொம்புத் தேன் கொட்டுண்டு கிடக்கிறது. வைராக்கி யத்தைத் நீர்த்துக் கொள்ள வழி பிறந்துவிட்டது; பிணக் கொட்டகையை நோக்கி நடந்தேன். மின்சார விளக்கு எரிந்தது. அணைந்தது.
குப்பை மேட்டில் கொட்டுண்டு கிடந்த சோற்றுப் பொட்டலம் ஒன்றைக் கிளறிக்கிளறி நாய் ஒன்று நாக்கை சொடக்கான் போட்டுக்கொண்டு தின்று கொண்டிருந் தது. அந்தப் பொட்டலம்தான் கொம்புதேன் சுவையில் இதழ் தந்த அமுதத்தை இறுமாந்து விழுங்கிக் கொண் டிருந்தேன், வைராக்கியம், சபலம், பிடிவாதம், சபதம் நிறைவேறி விட்டதாகக் கைகாட்டுச் சிரித்தது. வெறிக்கொண்ட மனம் மிதியடி அந்த தடையொலி கேட்டு நாய் நடுகுண்டு சரேலெனப் பாய்ந்து ஓடியது. எனக்கு ஒருவகை நடுக்க நெஞ்சம் துணுக்குற்றது மிரள மிரளவிழித்தேன். திடிர்சலசலப்அல்லபுனாலா? இதுவரை மனிதப் பிறவி வெததகக் கேட்டோ, கண்டோ அறியாத செய்யத்தக்காத ஒன்றைச் செய்துவிட்டனாலா ஒரு னேளை புது அனுபவத்தில் இப்படித்தானோவெருட்சியும் மருசியும் பீதியையும் கலவரத்தையும் உண்டுபண்ணிக் கொண்டே இருந்தன. அமைதியே இல்லை. அலைக்கழிந்து கொண்டிருந்தன்.
வியர்த்துக் கொட்டியது? உடலிலே ஏதோ மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கருதிக் கொள்ளக்கூடிய இனம் தெரியாத ஒரு கலவரம், அசூயை பேதலிப்பு உடம்பைச் சுற்றிப் பலமுறை துடைத்து விட்டுக் கொண்டேன். அடிக்கடி அவ்வாறு செய்து கொண்டும் ஓர் அதிருப்தி இப்போது என்ன செய்து கொள்ளவேண்டும் என்றே என்னாலே முடிவுக்கு வரமுடியவில்லை.
திரும்பும் திசையெல்லாம் எள் இதயராணி கர்ண கடூர பார்வைப் பிழம்பை வீசிக்கொண்டு என் கழுத்தை நெறிக்க வருவது போன்ற திக்பிரமை கண்களை மூடி னாலும் கனப் பொழுதில் அவள் உருவம் தோன்றி என்னை மிரட்டியது, அரூபம் அடைந்து விட்டாளா? அதற்குள் ஆவியாகி என்னைத் தொடர்கிறாளா? மரணாவஸ்தை என்று சொல்வார்களே அதை அனுப வித்தேன். உலகில் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பல்வேறு வகையான சந்தர்ப்பங்களில் உணர்வுகளின் ஆதிக்கத்துக்கு ஆட்பட்டு தயாராக முடியாத சூழல்களில் தவறுகளை இழைத்து விட்டு அதன் எதிரொலிக்கு இலக் காகி அல்லலும் அவஸ்தையும் அடைந்து விடுகிறான், எங்காவது தனியொரு மலைப்பிரதேசத்துக்கு சென்று நின்று கொண்டு ஓவென்று வாய்விட்டுக் கதறியழ வேண் டும் போல தோன்றியது- குமைந்தேன் குமுறினேன் வாய்விட்டுக் கதறிவிட்டால் பைத்தியக்காரன் என்று சொல்லிவிடுவார்களே? இப்போது மட்டும் என்ன சித்தம் குழம்பாமலா இருந்தது.
பகலவன் இருளரக்களைத் துரத்தி விட்டுக் கொண் டிருந்தது. பளபளவென்று விடிந்து விட்டது, எப்போது விடியும் வேலை முடியும் என்று காத்திருத்தவன் போல ஓடிவிடக்கூடியவன் அன்று மட்டும் காத்திருந்தேன். வேண்டப்பட்ட குடும்பத்தில் ஒருத்தி செத்து விட்டாள் என்பதற்காகவா; வெளிப்பட்டு விட்டால் என்ற பயத்தாலா? ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தகாலம். ஆமாம் யங்காரவாதிகளின் அட்டகாசங்களால் அரசியலார் ஊரடங்கும் உணவுக் கட்டுபாடும் போடப் பட்டிருந்த நேரம், மாலை ஆறுமணியிலிருந்து காலை ஆறுமணி வரை ஊரடங்குக் கட்டுப்பாடு. செய்தி கிடைத்து சிந்தை நொந்து கலங்கிப்போய் வந்தார்கள். அவர் தம் பெற்றோர்கள் ஒரே செல்வ மகளை இழந்து விட்டார்கள். இயற்கையின் தீர்ப்புக்கு இவர்கள் என்ன செய்ய முடியும். கதறித்துடித்தார்கள், கலங்கிக் கொண் டிருந்தார்கள். கடமைகளை உணர்த்திக் கொண்டிருந் தேன். வைத்தியமனையிலேயே இறந்து விட்டதால் பிண அறுவைப் பரிசோதனை இல்லை!சடலத்தைக் கொடுத்து விட்டார்கள் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தால் முடியுமா? அவர்களுக்கு பரிதவிப்பு; எனக்கு ஒரே பர பரப்பு: தகனக்காட்டுக்கு கொண்டு செல்ல பட்டது. இறுதிச் சடங்கு முடிந்து எல்லோரும் வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். இப்பொழுது தான் என்சுவாசப்பை ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியது. வெப்பக் கனல் நிறைந்த பெருமூக்சு ஒன்று வெடித்துச்சிதறியது.
எத்தத்தீய ஒன்றையும் முதல் முறையாகச் செய்யும் ஒருவனுக்கு அச்சம் கலவரம் அமைதியின்மை ஐயம் பயங்கரம ஆகியவைகள் ஏற்பட்டுமிரட்டுகின்றன. இரண்டாவது முறையிலும் அவன் அதிக வெற்றி பெற்று விடுகிறான் என்றால் பழுத்த அனுபவசாலி ஆகிவிடு கிறான். பழகிப் போன பிறகு மனக்குமைச்சல்களைத் துச்ச மாகமதிக்கிறான் மரக்கட்டையாகி விடுகிறான். அப்படி ஒன்று அவனுக்கு ஏற்படுவது இல்லை. சர்வ சாதாரணமாகி விடும் போது இயந்திரமாக இயங்கத் தொடங்கி விடுகிறான். இயந்திரங்களுக்கு உணர்வுகள் ஏற்படுவதாகச் சொன்னால் அது எவ்வளவு பெரிய பொய்யாகி விடும்? நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தால்தானே நினைவுச் சுழல்கள் வரும்? பழகிப் போய்விட்டால் பதனியும் பழரசம் ஆகிவிடுகிறது. பழக்கம் தொடர்ந்தது-நீண்டது.
காலப்போக்கில் என் முகத்தில் சிறுசிறு கொப்பு ளங்கள் தோன்றின. பெரியவர்கள், நண்பர்கள் மோகப் பரு என்று கேலி செய்தார்கள்! பருவக் கோளாறு முகத்தில் தெரிகிறது எனப்பரிகாசம் செய்தார்கள். பருவாக இருந்த கொப்புளங்கள் சிறுகச், சிறுகப் பெரி தாகிக் கொண்டே வந்து கட்டிகளாக உருவாகத் தொடங்கின. மஞ்சள் அரைத்துப் பூசு ; நல்ல ஸ்னோ வாக வாங்கித் தடவும் என்றெல்லாம் எத்தனையோ பேர் சொன்ன கைவைத்தியம் அனைத்தும் செய்து பார்த்தாயிற்று! பயன்தெரியவில்லை. பாதிப்பு பல்கி பெருகிவிட்டது. டாக்டரைத் தேடிச் சென்று காட்டி னேன்! வைத்தியரிடமும் வக்கீலிடமும் பொய் சொல்லக் கூடாது என்பார்கள். விபரங்கள் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னேன். இரத்தம் ஆய்வுக்கூடம் வரை சென்று திரும்பியதும், இரத்தத்தில் நஞ்சு கலந்து விட்டது; ஒன்றும் செய்வதற்கில்லை என்று டாக்டர் கையை விரித்து விட்டார்.
ஏதாவது ஒன்றைத் தெரிந்து கொண்டுவிட்டு ஒருவன் தத்துவங்கள் எல்லாம். தனக்குத் தெரிந்து விட்டதாகக் கருதிக் கொள்கிறானே அது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது நான் புரிந்துகொண்டு வருந்தினேன். வருந்தி என்ன ஆகப்போகிறது? கண் கெட்ட பிறகு கதிரவன் வழிபாடா?
என்ன ஆகிவிடப் போகிறது, என்று இறுமாந்து உலகப் பிறவிகளில் எந்த ஒன்றும் செய்யாத மாயா தவம் ஒன்றை நான் செய்ததன் விளைவுபற்றி டாக்டர் எனக்குப் படிப்படியாகச் சொல்லி முடித்தார். அவர் சொன்ன உடற்கூறு நுட்பங்கள் பெரும் வியப்பை மட்டு மல்ல, விகிர்ந்த உணர்வுகளையே உண்டாக்கி விட்டது. தன்வினை தன்னைச் சுடும் என்பார்கள். நான் செய்த வினைப்பயன் என்னைச்சுட்டு சாம்பலாக்கிக் கொண் டிருக்கின்றது. விதிப்பயன் அல்ல-இது வினைப்பயன் தான்.
என்னைப் பரிசோதித்த டாக்டர் கூறிய உடற்கூறு நுணுக்கங்களை நீங்களும் தெரிந்து கொள்ளத்தானே வேண்டும்! மனிதர்களின் உயிர் போனவுடன் இயங்கும் உறுப்புகள் எல்லாம் தத்தம் கடமைகளை முடித்துக் கொள்கின்றன. மின்சாரம் நின்றுவிட்டால் இயந்திரங் கள் எப்படி இயங்கும்? இயங்காது போன சுரப்பிகளி விருந்து வெளிப்படுகின்ற பல்வேறு வகை திரவங்கள் நஞ்சாக மாறுகின்றன! உணர்வுகளை உண்டாக்கும் ‘நிணநீர்’ நஞ்சுத் திரவமாக மாறுகிறது! அதனால் தான் பிணம் நாற்றமெடுக்கிறது! இரத்தம் உறைந்து போனவுடன் உடம்பு சில்லிட்டு விடுகிறது. உடலும் ஸ்தம்பித்த நிலையடைந்து விடுகிறது, உடம்பிலுள்ள இரத்தம் உறைந்தவுடன் நீர், நிணநீர், மற்றும் எல்லாவிதமான திரவங்களும், நஞ்சுப் பொருளாக மாறுகின்றன. அதனால்தான் பொண நாத்தம் என்று இகழ்ந்துரைக்கத் தக்க அளவு இழிவானதொரு நாற்றத்தை நுகர நேரிடுகிறது. அணுக் களின் மொத்தக் கூடடுருவம்தான் மனிதன், அணுக் கள்தாம் உடலை இயக்குகின்றன… என்றுகூடச் சொல்லலாம். உயிர்விட்ட மனிதனின் உடம்பிலுள்ள அணுக்கள் செத்தொழிந்து நஞ்சுப்பொருளாகின் றன. இது இறைவனின் தீர்ப்பு. இதற்கு யாராலும் எதுவும் செய்ய முடியாது. கடவுள் உன்னைக் காப்பாற்றட்டும் என்றுகூறி வழியனுப்பி விட்டார். நிர்மலமான உள்ளத் தோடு, வெறிச்சோடிய பார்வையோடு திரும்பிவிட்டேன். உலகமக்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து என்னைக்கண்டு பாவிப்பயல் என்று திட்டுவது எனக்குப் புலனாகிறது.
அவன் தன் வரலாற்றைச் சொல்லி முடித்துவிட் டான். அமைதியோடு கேட்டுக்கொண்டு வந்த நான் வெறித்தனம் தந்த பரிசு என்றேன். வினாவையும், விடையையும் உள்ளடக்கியிருந்த சொற்கள் அவைகள். அவன்… பெருமூச்சு விட்டுக்கொண்டான். பயங்கர மிருகங்களும், பறவையினங்களும் கூடச் செய்ததாகக் கேட்டோ பார்த்தோ அறியாத இந்தத் தீயசக்தி ஒன்றுக்கு ஆளானவனுக்கு இறைவன் நல்ல தீர்ப்புதான் வழங்கியிருக்கிறான். வார்த்தைகள் வெடித்து, வர வில்லை. வைது கொண்டேன்.
கடையில் கூட்டம் குறைந்திருந்தது. வெளியில் எட் டிப் பார்த்தேன். வானம் வெறிச்சோடிக் கிடந்தது. எழுந்தேன். வழிப்பயணம் சொல்லிக்கொள்ள வாயெ டுத்தேன். வார்த்தைகள் வெளியே வர மறுத்துவிட் டன. அவன் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டான். செய்துவிட்ட தவறுகளுக்குப் பிராயச்சித்தமாக இருப் பதற்குத்தான் கடவுள் கண்ணீர் சுரக்கச் செய்திருக் கிறானோ? அவன் அழுத அழுகையின் பிரதிபலிப்பு இன்னும் நிற்கவில்லை. தெருவில் நடக்க ஆரம்பித்து விட்டான். அவன் சென்ற திசையில் ஒளிமணிகள் உறைந்து விட்டிருந்தன. தொலை தூரம் போய்விட் டான். நெடுந்தொலைவு போய்விட்டவனின் கதை நெஞ்சத்துக்குள் அழுந்திப் பதிந்தது.
ஊரைச் சொன்னான்; பேரைச் சொல்லவில்லை.
“ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது; பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது.” என்ற பொன்மொழிகள் அவனுக்கு நினைவு வந்திருக்க வேண்டும்… இரண்டையுமே சொல்லாமல் கதையைச் சொல்லி முடித்து விட்டான், பேரும் ஊருமா முக்கி யம்? நெஞ்சு நெகிழச் செய்யும் அவலட்சணத்தின் வர லாறு தெரிந்தது. அதுபோதும். நான் தெருவில் இறங்கி, வாடகை வண்டி அமர்த்திக்கொள்ளக் காத்து நின்றேன். அவனைப் போலவே மற்றெரு உருவம் அதோ அந்தக் குப்பை மேட்டில் நின்றுகொண்டிருப் பதாக உணர்கிறேன். சே. சே… என்று’ என்னையுமறி யாமல் பலமுறை வார்த்தைகள் வந்து கொண்டிருந் தன. அருவருப்பினாலா? அனுதாபத்தினாலா? என் னால் யூகிக்க முடியவில்லை. வண்டியின் வேகத்தை என் மனோவேகம் மிஞ்சிக்கொண்டிருந்தது.
– தமிழ் முரசு, 31-1-1971.
– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.