ஆண் வண்டே… ஆபத்து!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2024
பார்வையிட்டோர்: 1,972 
 
 

அத்தியாயம் 4-6 அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

லோதி கார்டன் வழக்கம் போல் மாலை நேரத்தில் வாகனங்களும் மக்களுமாய் நிறைந்து கிடந்தது. பெண்கள் நால்வரும் வாடகை காரில் வந்து இறங்கி அந்த கூட்டத்தில் கலந்தார்கள்.

கீதா தொப்புளுக்குக் கீ,,,,கீழே புடவையை இடுப்பில் தொங்க விட்டிருந்தாள். மேலே பேருக்கு ஜாக்கெட் போட்டு…. ஷிப்பான் புடவையை ஒற்றையாய் முந்தானையாய் விட்டிருந்தாள்.

பிருந்தா தொடையை இறுக்கிப் பிடிக்கிறாற் போல் ஜுன்ஸ் அணிந்து நெஞ்சில் ‘கேச் மீ’ என்று எழுதிய டி ஷர்ட் போட்டிருந்தாள்.

மேகலா, மேகலை அணிந்திருந்ததாகவே தெரியவில்லை. பிராவும் ஜட்டியும் தெரிகிறாற் போல் நைட்டிபோல ஏதோ ஒன்று அணிந்து வந்திருந்தாள்.

அர்ச்சனாதான் அடக்க ஒடுக்க பெண்ணாய் சுடிதாரில் வந்திருந்தாள். அவளுக்கு அதுதான் அழகு எடுப்பாகவும் இருந்தது.

இவர்களை அடையாளம் கண்டவர்கள் இ காணாதவர்கள் எல்லாம், ‘‘அங்க பாருங்கடா !‘‘ சொல்லி வாயைப் பிளந்தார்கள்.

பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதைப் போல் சூழ்ந்தார்கள்.

ஒரு இளவட்டம் பின்னாலேயே ஜொள்ளு விட்டுக் கொண்டு வந்தது. கூட்டத்தைச் சாக்காய் வைத்து, போக்குவரத்தைக் காரணமாய் வைத்து வேண்டுமென்றே இடி மன்னர்கள் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பித்தார்கள். ஒரு சிலர் இடித்துவிட்டுச் சென்றும் தங்கள் ஜென்ம சாபல்யத்தை பூர்த்தி செய்து கொண்டார்கள். இவர்களைத் தொட்டுப் பார்த்த ஒரு சிலர் நெருங்கி….

‘‘அட ! பூந்தோட்டமெல்லாம் எதுக்குப் பூக்கடைக்கு வருது ?…’’

‘‘சாமான் வாங்கவா ?…’’

‘‘எங்களைக் கிரங்கடிக்கவா ?’’ – ஒட்டி வந்து அவர்கள் காதுக்கு மட்டும் விழுகிறாற் போல் கேட்டுச் சென்றார்கள்.

சினிமா வண்டி பின் செல்லும் உற்சாக சிறுவர்கள் போல இவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்னாலேயே ஒரு இளைஞர் கூட்டம் சென்றது. சிலர் போல் வாயில் ஈ புகுந்து போவதுகூட தெரியாமல் பார்த்தார்கள். மொத்தத்தில் அவ்வளவு பெரிய கூட்டத்தில் இவர்கள் சின்ன சலசலப்பையே ஏற்படுத்தி விட்டார்கள். இளைஞர்களின் ஆர்வம், அட்டாகாசம் தாங்கமுடியாத ஒரு பெரியவர்இ‘‘அவுங்களை பொருள் வாங்க விடுங்கப்பா ! எங்க வியாபாரத்துல மண்ணையள்ளிப் போடுறீங்க’’ எரிச்சல் பட்டு அவர்களைத் துரத்தினார்.

பரமசிவத்திற்கு அவர்களைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறியது. உள்ளுக்குள் ஏதோ ஒன்று செய்தது. மென்று விழுங்கி அடக்கினார். பின் மெல்ல வந்து,‘‘என்ன அர்ச்சனா !’’ குழைந்தார்.

இவரை இந்த இடத்தில் அவள் எதிர்பார்க்கவில்லை. ‘ஆள் இருக்கு!’ என்று ரகசியம் சொல்லி தொழிலுக்கு அழைத்து விடுவார் என்கிற பயம்.

‘‘நாங்க ஒப்பனை பொருள் வாங்க வந்திருக்கோம் !’’ சொன்னாள்.

‘‘நல்லது. நான் உதவி பண்றேனே !’’ அவர்களுடன் கலந்தார்.

மேகலாவிற்கு இவரைப் பார்த்ததும் வேறொரு எண்ணம் தோன்றியது.

‘‘நமக்கு பருத்தி புடவையாய்க் காய்ச்சிடுச்சு !’’ அருகில் வந்த பிருந்தாவிடம் குசுகுசுத்து கண்ணடித்தாள்.

‘‘என்னடி ?’’ அவளுக்குப் புரியவில்லை.

‘‘சார் !’’ இவளே அவர் அருகில் வந்து குசுகுசுத்தாள். ‘‘என்ன மேகலா?’’

மேகலா அவர் காதருகில் குனிந்து தாங்கள் வந்த விசயத்தைச் சொன்னாள்.

அவருக்கு மயக்கம் வராத குறை. நம்பவே முடியவில்லை

‘‘நிசமாவா சொல்றீங்க ?!’’ வியப்பும் திகைப்புமாக வாயைப் பிளந்தார்.

கீதா, பிருந்தா தலையாட்டினார்கள்.

‘‘வாழ்க்கையில ஒரு மாற்றம் வித்தியாசம் வேணுமில்லே அதான் !’’ மேகலா அவர்களுடன் கலந்தாள்.

பரமசிவத்திற்கு இப்போதுதான் மெல்ல நம்பிக்கை வந்தது.

‘‘கரும்புத் தின்ன கூலி வேறயா ?! இதோ இப்பவே ஆள் புடிச்சி வர்றேன் !’’ – உற்சாகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

சிறிது தூரம் வந்ததும் சுரேஷ் கண்ணில் பட்டான். அவன் தன் மேட்டார் பைக்கில் சாய்ந்து வாய்க்கால் மடையில் காத்திருக்கும் கொக்கு போல் கூட்டத்தில் செல்லும் பெண்களைக் கவனித்தபடி இருந்தான்.

பரமசிவம் அவனைத் தொட்டு ‘‘சுரேஷ்!’’ அழைத்தார். அவன் திரும்பினான்.

‘‘சூப்பர் அயிட்டம் வந்திருக்கு.’’ என்று ஆரம்பித்து அர்ச்சனா, கீதா,பிருந்தா, மேகலாவைப் பற்றிச் சொன்ன பரமசிவம் அவர்கள் வந்த விசயத்தையும் சொன்னார்.

இவனுக்கும் ஆச்சரியம். இருந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்தான்.

ஏதோ ஒரு விடுதியில்…. மாணவிகள் நான்கு பேர் சேர்ந்து ஒரு சேவகனைப் பாலியல் பலாத்காரம் செய்து சாகடித்த சேதி எப்போதோ படித்தது ஞாபகம் வர மனசுக்குள் பயம் வந்தது. மேலும் இவர்கள் பலானவர்கள் வேறு?.. என்று நினைக்க குலையே நடுங்கியது, தன் தொழில் எதிரி ராகுலை மாட்டிவிட்டாலென்ன தோன்றியது. இப்படி சாகவில்லையென்றாலும் சீக்கு, எய்ட்ஸ் வந்து சாகட்டும் ! – நினைத்தான். உடனே பரமசிவத்திடம் இதைச் சொன்னான்.

‘‘நல்ல ஐடியா!’’ குதிக்காத குறையாய் குதித்த அவர், சடக்கென்று பியூஸ் போன பல்பாக மாறி,

‘‘அன்னயிலேர்ந்து அவன்கிட்ட எனக்குப் பேச பிடிக்கலை தம்பி !’’ என்றார்.

‘‘இதுக்கு ஏன் கவலை படுறீங்க. விசயத்தை உடைக்காம பொறுப்பை தர்மலிங்கத்துக்கிட்ட விடுங்க. அவர்தான் அவனுக்கு இப்போ நெருக்கமான தோஸ்த். அவர் சொன்னா கேட்பான். நீங்க சொன்னா சந்தேகப்படுவான். ’’ என்றான்.

பரமசிவம்… அவன் புத்திசாலித்தனத்தை உள்ளுக்குள் மெச்சி விடைபெற்றார்.

வரும் வழியில் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல அப்போதுதான் வீட்டைவிட்டு வந்திருப்பார்போல. தர்மலிங்கம் எதிர்பட்டார்.

‘‘தர்மு!’’ அழைத்தார்.

‘‘நம்ம பார்ட்டிங்களெல்லாம் வேட்டைக்கு வந்திருக்குய்யா. ’’ சேதியைச் சொன்னார்.

‘‘ராகுல்தான் சரியான ஆள் பேசி விடய்யா. ’’ என்றார். வந்ததுமே வியாபாரம். கைமேல் காசு! அவருக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை.

‘‘சரி. கவனிச்சுக்குறேன் ! நீ ஒதுங்கு.’’ சொல்லி… அர்ச்சனா இருக்கும் இடம் தேடி சென்றார்.

பரமசிவத்தை எதிர்பார்த்து நின்ற பெண்கள் தர்மலிங்கம் வந்து, ‘‘வாங்கம்மா..’’ என்று வரவேற்க துணுக்குற்றார்கள்.

‘‘ஐயா ! நீங்க ?….. ’’அர்ச்சனாதான் முதலில் தடுமாறினாள்.

‘‘நாங்க ஆம்பளைங்களுக்கும் உதவி, பொம்பளைங்களுக்கும் உதவி!’’ – என்று தன் தொழில் தர்மத்தைப் போட்டு உடைத்த அவர் , ‘‘பரமசிவத்துக்குத் திடீர்ன்னு ஒரு முக்கிய வேலை. பொறுப்பை என் தலையில கட்டிட்டு போயிட்டார்.’’ போடு போட்டார்.

அவர்கள் நம்புவதைத் தவிர வேறு வழி இல்லை.

‘‘உங்களுக்கும் ஆசை வந்ததை நினைச்சு தான் எனக்கு ஆச்சரியம். கவலையை விடுங்க நம்ம கையில சூப்பர் ஆள் இருக்கான்!’’ – இல்லாத மீசையை முறுக்கினார்.

கீதாவிற்குச் சந்தோசமாக இருந்தது, இருந்தாலும் சின்ன உறுத்தல்.

‘‘ஐயா ! ஒரு சின்ன கண்டிசன்! ’’ இழுத்தாள்.

‘‘என்ன ?’’

‘‘நாங்க யார்ன்னு வாயைத் திறக்க வேணாம். உண்மையைச் சொல்ல வேணாம்!’’

‘‘ஏன்?!’’

‘‘சொன்னா நீங்க ஏற்பாடு பண்ற ஆள் மறுக்கலாம், வெறுக்கலாம். நாங்க சாதாரண பொண்ணாய் நடந்து இந்த தொழில்ல ஆண்கள் எப்படி நடக்கிறாங்கங்குறதைப் பார்க்க விரும்பறோம். எதார்த்தம் விரும்பறோம்.’’ என்றாள்.

தர்மலிங்கத்திற்கு அவள் ஆசை நியாயமாக இருந்தது. சரிம்மா தலையசைத்தார். நாலடி தள்ளிப் போய் ராகுல் வழக்கமாய் நிற்கும் இடத்தைப் பார்த்தார். இல்லை.

அர்ச்சனாவிடம் வந்து அவள் கைபேசியை வாங்கி அவனுடன் தொடர்பு கொண்டார்.

‘‘எங்கே இருக்கே?’’

‘‘ஐ.பி.எஸ். வீட்டுல.’’

‘‘பாவி ! எந்த ஐ.பி.எஸ். வீடு.?!’’

அருகில் இருந்தவளுக்குப் பொறுக்க முடியவில்லை போல.

ராகுலிடமிருந்து பிடுங்கிஇ‘‘அவசியம் தெரியனுமா….? வைய்யா போனை!’’ கத்தி அணைத்தாள்.

தர்மலிங்கம் மீண்டும் எண்களை அழுத்தினார்.

‘‘இன்னைக்கு முடியுமா ?’’

‘‘முடியாது. காலையிலதான் வருவேன். தூங்கி பன்னிரண்டு மணிக்கு மேல ப்ரீ. புரோகிராம் கேளுங்க.?’’

தர்லிங்கம் தொலைபேசி வாயை மூடிஇ‘‘நாளைக்குதான் முடியும் என்னம்மா ?’’ அர்ச்சனாவைப் பார்த்தார்.

அவள்… கீதாஇ மற்ற தோழிகளைப் பார்த்தாள். அவர்கள் சரி என்பதற்கடையாளமாய் தலையசைத்தார்கள்.

‘‘ரேட்டைக் கேட்டுக்கோங்க. மாலை ஆறு மணியிலேர்ந்து மறுநாள் காலை ஆறு மணி வரை 5000.
உங்களுக்காக 500 குறைச்சி முடிக்கிறேன். நான் சொன்னா பையன் கேட்பான். சரின்னா இடம் சொல்லுங்க.’’ என்றார்.

கீதா சட்டென்று, ‘‘இடம்…அகல்யா 3 நட்சத்திர ஓட்டல் !’’என்றாள்.

சொன்னார்.

‘‘சரி.’’ சொன்ன ராகுலுக்குச் சட்டென்று பயம் வந்தது. ‘‘வயசு எத்தினி ?‘‘ கேட்டான்.

‘‘இருபத்தைஞ்சுக்குள்ளே…!’’

‘‘உங்களை நம்ப முடியாது. புகைப்படம் வேணும் வாங்கி வைங்க. ’’ அணைத்தான்.

‘‘சரி.‘‘ அணைத்தவர்.

‘‘உங்க புகைப்படம் வேணும்மா.‘‘ சொல்லி…கைபேசியை உரியவளிடம் கொடுத்தார்.

‘‘எதுக்குப் புகைப்படம் ?’’ மேகலா அதிர்ச்சியாய்க் கேட்டாள்.

‘‘கிழம் கட்டைகளைத் தவிர்க்க..’’ .என்று சொன்ன தர்மலிங்கம் அவன் அனுவத்தைச் சொன்னார்.

‘‘எங்ககிட்ட மட்டும் எண்பது வயசு கிழவனாய் இருந்தாலும் சின்ன பொண்ணாய் தேடி வர்றது என்ன நியாயம்?’’ – பிருந்தாவுக்குக் கோபம்.

‘‘நீங்க வேற நாங்க வேற‘‘ என்ற தர்மலிங்கம் ‘‘புகைப்படம்?’’ கை நீட்டினார்.

அர்ச்சனா விழித்தாள்.

‘‘ஏன்டி முழிக்கிறே.? இப்போ எல்லாம் அஞ்சு நிமிசத்துல ஆயிரம் போட்டோ எடுக்கலாம்.’’ என்ற மேகலா ‘‘வாங்கடி..’’ அர்ச்சனாவை இழுத்துக் கொண்டு எதிரிலுள்ள புகைப்பட நிலையத்திற்குள் நுழைந்து திரும்பிப் பார்த்தாள்.

வாசலில் கீதாஇ பிருந்தா பைக்கில் இருந்த இரு இளைஞர்களுடன் சிரித்து குழைந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘‘ஏய் !பிருந்தா ! ’’அழைத்தாள்.

கீதா மட்டும் கடைக்குள் ஓடி வந்து, ‘‘ஏய் இரண்டு பேர் வசமா மாட்டி இருக்கானுங்க. கொஞ்சறானுங்க. இன்னைக்கு எங்களை விடுங்க. நாங்க அப்புறம் பார்க்கிறோம். நீங்க போங்க.’’ சொல்லிவிட்டு நிற்காமல் வெளியே ஓடினாள்.

‘‘ச்சே !… ’’அர்ச்சனா தலையிலடித்துக் கொண்டாள்.

அடுத்து அர்ச்சனா, மேகலா ஐந்து நிமிடத்தில் ஆளுக்கு மூன்று இன்ஸ்டெண்ட் போட்டோ திரும்பினார்கள்.

ஆளுக்கொரு புகைப்படத்தை தர்மலிங்கத்திடம் கொடுத்தார்கள்.

‘‘ஆள் எப்படி இருப்பார் ? நாங்க பார்க்கனும்……’’ மேகலா இழுத்தாள்.

‘‘நியாயமான ஆசை காட்றேன் !’’ சொன்ன அவர் இ ‘‘எதிர் டி.வி. கடையில பாருங்க தெரியறார். ’’ காட்டி நகர்ந்தார். ராகுல் சோப்பு விளம்பரத்தில நூறு பெட்டிகளில் தெரிந்தான்.

அர்ச்சனாவிற்கு அது ஓராயிரம் முகங்களாய்த் தெரிந்து இடியாய்த் தாக்க….மயக்கமானாள்.

அத்தியாயம்-8

சன்னல் வழியே தர்மலிங்கம் வீட்டில் விட்டுப் போயிருந்த புகைப்படங்களில் அர்ச்சனாவின் புகைப்படத்தைப் பார்த்த ராகுலுக்கு அதிர்ச்சியாய் இருந்தது,

‘‘இவள்….இவள்…..!!!’’ உற்றுப் பார்த்தான்.

பழைய நினைவுகள் புகைப்படங்களாக மனதில் ஓடியது.

செங்கல்பட்டை அடுத்த அக்கம்பட்டி அர்ச்சனா என்கிற ஆயுர்வேதவள்ளிக்கு அது ஒரு வசந்தகாலம். பன்னிரண்டுஇ பதிமூன்று வயதில் பூப்பெய்தும் தருவாயில் நல்ல பளபளப்பாக இருந்தாள்.

அவள் ஊருக்கும் பள்ளிக்கும் மூன்று கிலோ மீட்டர் தொலைவு. மண் சாலை வழியாக… சரியாக செல்வதென்றால் ஐந்து கிலோ மீட்டர். வயல்காடுஇ கரும்புஇ பருத்திக்காடு, தென்னந்தோப்புகளையெல்லாம் தாண்டி குறுக்கே செல்வதென்றால் இரண்டு கிலோ மீட்டர் குறைவு. நடை பயணமாக நகரத்திற்கு வரும் கிராமவாசிகள் பெரும்பாலும் இந்த குறுக்கு வழியில்தான் வந்து இரண்டு கிலோ மீட்டர் நடை பயணத்தை மிச்சம் செய்வார்கள்.

சைக்கிள்இ டி.வி.எஸ் 50… போன்ற இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மட்டும் நேர் சாலை வழியே வருவார்கள். குறுக்கு வழியில் சரியான பாதை கிடையாது. அவரவர்கள் மனம் போன போக்கில் புகுந்து புறப்பட்டு வரவேண்டியதுதான். வயல்வரப்புகளில் தண்ணீர் இருந்து விவசாயம் ஆரம்பித்துவிட்டால் மக்கள் வரப்புகளில் நடந்து சுற்றிதான் வரவேண்டும். பள்ளிப்பிள்ளைகள் பெரும்பாலும் இப்படித்தான் வருவார்கள். அவர்களுக்குச் சுற்றி வருவது பிடிக்காது.

அக்கம்பட்டியில் சாம்பசிவம் பெரிய மிராசு. அவருடைய மகன் பழனிச்சாமி பட்டிணத்தில் படிப்பு. பழனிச்சாமி படித்தானோ இல்லையோ கல்லூரியில் இருந்து கொண்டே படத்தில் நடிக்க முயற்சி செய்து ஒவ்வொரு கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தான். அவன் எல்லா இயக்குநர் அலுவலங்களிலும் ஏறி இறங்கி விட்டான். பல தயாரிப்பாளர்களையும் பார்த்துவிட்டான். எல்லாரும் இன்று போய் நாளை வா என்று இழுக்கடித்தார்களேயொழிய சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை.

அதற்காக இவனும் மனம் தளரவில்லை. வாய்ப்புகள் தேடும் கூட்டத்திலேயே அறை எடுத்து தங்கி தீவிர முயற்சியில் இருந்தான். அன்றைக்கு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை. படப்பிடிப்பெல்லாம் ஓய்வு நாள். அப்பா மணியார்டர் பணத்தில் மாலை நண்பன் பாலவேலுடன் தண்ணியடித்துக் கொண்டிருந்தான். பாலவேல் கோயம்புத்தூர்க்காரன். பதினொன்றாம் வகுப்பு முடிந்ததும் சினிமா ஆசையால் நடிக்க வந்து சரியான வாய்ப்பு கிடைக்காமல் கேமரா மேனுக்கு உதவியாளாக வேலை செய்து நிரந்தரமாகிவிட்டான். இன்னும் ஐந்தாறு வருடங்களில் தனியாக ஒரு படத்திற்கு வேலை செய்துவிடும் நம்பிக்கையில் இருக்கிறான். அவனுக்கு படஉலகம் அத்துப்படி. அவனுக்குத் தெரியாத ஆட்கள் கிடையாது.

அவன்தான் , ‘‘மலராத மொட்டு பார்த்திருக்குறீயா?’’ கேட்டான்.

‘‘மலையாள படமா?’’

‘‘இல்லே. வயசுக்கு வராத பொண்ணு.‘‘

‘‘அதான் தினம் ரோட்டுல வீட்டுல நிறைய பார்க்கிறேனே !’’என்று இவன் அப்பாவியாக பதில் சொன்னான்.

‘‘முண்டம் ! அனுபவிச்சிருக்குறீயா கேட்டேன். !’’

‘‘அடப்பாவி ! அதுங்களை எப்படி ?……’’ இவன் திகைத்தான்.

‘‘பட உலகத்துல இது சகஜம.;. பொண்ணு நடிக்கனும் , பணம் காசு சம்பாதிக்கனும்ங்குற வெறியில தாய்மாருங்க தன் சின்ன வயசு பொண்ணுங்களுக்கெல்லாம் ஹார்மோன் ஊசி போட்டு, பிஞ்சுகளை வெம்ப வைச்சு விட்டு வாய்ப்பு தேடுறது அதிகம். அதுன்னா பாம்ஜி இயக்குநருக்கு இஷ்டம். உடனே வாய்ப்பு !’’ கண்ணடித்தான்.

கேட்ட இவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

‘‘மனுசனோட ரசனை அப்படி. இப்போ அவர்தான் ஒரு புதுப்படத்துக்குப் பூசை போட்டு கதாநாயகன்இ கதாநாயகியெல்லாம் தேர்ந்தெடுக்கிறார். இது சரியான சமயம். நான் சொன்னது செய்ஞ்சீன்னா வேலை முடிஞ்சுது.’’ வழியைச் சொன்னான்.

‘‘அடப்பாவி ! அவருக்கு அறுபது வயசுடா !’’ பழனிச்சாமி திடுக்கிட்டான். வுhயைப் பிளந்தான்.

‘‘அதைப் பத்தி உனக்கென்ன கவலை. அழைச்சுப் போய் பாரு பழம் பழுக்கும்.!’’ என்றவன் இ‘‘இந்த மாதிரி பொண்ணைக் காட்டிதான் தாய் இ தகப்பன் இ புள்ளை எல்லாம் ஃபீல்டுல இருக்காங்க.’’ அவர்களைச் சொன்னான்.

பழனிச்சாமியால் ஜுரணிக்க முடியவில்லை. இருந்தாலும் திரையில் மின்னும் ஆசையையும் விடமுடியவில்லை. யாரைத் தொட்டு எங்கு உதை வாங்கி கம்பி எண்ண ? பயந்தான். அதே நினைவில் திங்கள் கிழமை பொழுது போகாமல் கோடம்பாக்கம் ரயில் நிலையம் வந்தான். ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து வந்து போகும் ரயிலையும் மக்களையும் கவனித்துக் கொண்டிருந்தான்.

ஒரு இடத்தைப் பார்த்ததும் கண்கள் நிலை குத்தியது. ஆயுர்வேதவள்ளி. கையில் துணிப்பையுடன் ஒற்றை ஆளாய் கண்களில் கலக்கத்துடன் நின்றாள்.

‘நம்ம ஊர் பெண் ஏன் இப்படி ?’ என்று யோசனைவரும்போதே… ‘ இவளைப் பயன்படுத்திக்கிட்டாலென்ன ?’ என்கிற எண்ணமும் சேர்ந்து வந்து அவனுக்குக் கண்கள் மின்னியது. அப்போதே திரையில் கதாநாயகனாய் ஆடி கோடி கோடியாய் சம்பாதிப்பதாக கற்பனை வர…. ஒரு முடிவுடன் அவளை நோக்கி நகர்ந்தான்.

அருகில் சென்றுஇ‘‘ஆயுர்வேதவள்ளி !’’ அழைத்தான். அவள் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவள் இவனைப் பார்த்ததும் இ‘‘ஐயா ! ‘‘அழுதாள்.

‘‘ஏன் என்ன விசயம் ?’’ பதை பதைத்தான்.

‘‘பள்ளிக்கூட லீவுல பாட்டியோட ஊருக்கு வந்தேன். ரயில்ல தூங்கிட்டேன். எங்கியோ… வாடி இறங்கனும்ன்னு எழுப்பி முன்னால போச்சு. நான் கூட்டத்தை விட்டு இறங்குறதுக்குள்ள ரயில் கிளம்பிடுச்சு. நான் இங்கே இறங்கி நிக்கிறேன்! ’’ அழுதாள். ‘‘அழாதே ! எங்கே போகனும் ?’’ அனுதாபம் கொண்டவன் போல் நடித்தான்.

அவள் விருகம்பாக்கம் தாண்டி ஒரு ஊர் போரைச் சொன்னாள்.

‘‘உனக்கு வீடு தெரியுமா ?’’

‘‘தெரியும். ஆனா வழி தெரியாது.’’

பழனிச்சாமிக்கு பழனிச்சாமிக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போலிருந்தது.

‘‘கவலைப்படாதே ! நான் கொண்டு விடுறேன் ! வா.’’ ஆறுதலாக அழைத்தாள்.

அவளும் இவன் மனம் தெரியாமல் வந்தாள். இருவரும் ரயில் நிலையம் விட்டு வெளியே வந்தார்கள். இவன் ஒரு ஆட்டோ பிடித்தான்.

‘‘வழியில எனக்கு ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு போகலாம்.’’ ஏற்றினான்.

வடபழனியின் ஒரு மூலையில்தான் பாம்ஜியின் பட அலுவலகம் இருந்தது.

ஆட்டோ நிறுத்தி மாடி ஏறினார்கள். அலுவலகத்தில் ஆபிஸ் பையன்மட்டும் இருந்தான். பழனிச்சாமி இயக்குநர் எங்கே ? என்று கேட்க… அவர் கதை விவாவதத்துல இருக்கார் என்று ஒரு நட்சத்திர ஓட்டல் பெயரையும் இ அறை எண்ணையும் சொன்னான். திரும்பி இருவரும் மாடி இறங்கினார்கள். ஆட்டோ ஏறினார்கள். இவன் நட்சத்திர ஓட்டலில் இறங்கி ஆட்டோவை அனுப்பினான். இருவரும் உள்ளே நுழைந்து அறை முன் நின்றார்கள். பழனிச்சாமி அழைப்பு மணி அழுத்தினான். அறை தானாக திறந்தது, இவர்கள் உள்ளே நுழைய மூடியது. டீபாயில் கண்ணாடி டம்ளரும் பாட்டிலுமாக இருக்க பாம்ஜி தண்ணியில் அமர்ந்திருந்தார். கையில் ரிமோட்கண்ட்ரோல் வைத்திருந்தார்.

‘‘யார் நீங்க ?’’ சிவந்த கண்களால் ஏறிட்டார்.

‘‘எ…..எனக்குப் பட வாய்ப்பு வேணும் சார்…..’’ இழுத்தான். அவனையும் ஆயுர்வேதவள்ளியையும் பார்த்த அவர் முகத்தில் சட்டென்று பிரகாசம் வந்தது.

‘‘நான் இங்கே இருக்கேன்னு யார் சொன்னா ?’’

‘‘உ…உங்க அலுவலகப் பையன் சார்.’’

‘சரியாகத்தான் அனுப்பியிருக்கான் !’ – நினைத்த அவர் ‘‘இவ உறவா ?’’ – அவளைப் பார்த்தார்.

‘‘இல்லே சார். தெரிஞ்ச பொண்ணு.’’

‘‘என் விருப்பப்படி நடந்துக்கிட்டா உங்க ரெண்டு பேருக்குமே வாய்ப்பு.! ’’ என்றார்.

ஆயுர்வேதவள்ளிக்கு நடப்பது என்ன என்று தெரியவில்லை. மௌனமாக இருந்தாள்.

இவன்தான் ‘‘சரி சார் ! ’’ தலையசைத்தான்.

‘‘நல்லது. நான் சொல்றபடி செய் !’’ என்று சொல்லி பழனிச்சாமியைத் தனியே அழைத்து அவன் நடந்து கொள்ள வேண்டியவிதம் சொன்னார்.

‘‘சார்ர்ர் !’’ அரண்டான். நடுங்கினான்.

‘‘என்ன மிரள்றே ? நான் வயசானவன். உன்னால முடியலைன்னா என் உதவி ஆள் செய்வான். குட்டி ஷோக்கா இருக்கா. என் உதவி இல்லாம நீங்க வெளியில போக முடியாது. வாய்ப்பு கொடுக்கலைன்னு என்னை மிரட்ட வந்தீங்கஇ தாக்க வந்தீங்கன்னு ஏதாவது ஒரு பொய்க் காரணத்தைச் சொல்லி உங்களை உள்ளே தள்ளிடுவேன். எனக்குப் பெரிய பெரிய போலீஸ் அதிகாரிங்க பழக்கம். பைக்குள்ளே. நான் சொன்னபடி செய்ஞ்சா வாய்ப்பு. மறுத்தா ஜெயில் !அப்புறம் இதைப் பாரு‘‘ என்று மேசை மீது இருந்த ஒரு ஆல்பத்தை எடுத்து நீட்டினார். பழனிச்சாமி நடுக்கத்துடன் வாங்கி புரட்டினான் எல்லாம் நீலப்படங்கள். பார்க்கப்பார்க்க இவனுக்குள் இளம் நெஞ்சு சூடாகி கொதித்தது. சினிமா போதை வேறு….வெறியுடன் ஆயுர்வேதவள்ளி ம Pது பாய்ந்தான். அவள் கதற கதற…..

பாம்ஜி சோபாவில் அமர்ந்து அமைதியாய் ரசித்தார். இவன் வேர்வையில் எழ …அவள் மூர்ச்சித்துக் கிடந்தாள். மெல்ல நிதானமாக எழுந்து வந்த அவர் அவள் அருகில் வந்து அமர்ந்து மூக்கில் விரலை வைத்துப் பார்த்து, ‘‘அடப்பாவி ! கொன்னுட்டியே !?’’ மெலிதாக அரண்டார்.

இவனுக்குத் திக்கென்றது.

சந்தேகத்தில் அவள் மூக்கில் மறுபடியும் விரலை வைத்துப் பார்த்த அவர்இ‘‘நல்லவேளை மூச்சிருக்கு. கண் முழிச்சா உன்னையும் என்னையும் தொலைச்சிடுவா. பேசாம இவளை கண்காணாத இடம் கல்கத்தாவுக்கு அனுப்பிடலாம்.’’ என்றவர் இவனிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை.

கைபேசி எடுத்து எவனையோ அழைத்தார். அஜானுபாகுவான அந்த ஆளும் ஐந்து நிமிடங்களில் வந்தான். இயக்குநர் அவனிடம் என்னமோ பேசினார். பணம் கை மாறியது. அவன் கொடுத்தான். அதில் சில நோட்டுகளை எடுத்து பழனிச்சாமி கையில் திணித்த பாம்ஜி…..

‘‘ஓடிப்போயிடு’’ என்றார்.

‘‘சா…சார் வாய்ப்பு ?’’ இழுத்தான்.

‘‘ஆள் பொழைக்கிறதே ஆபத்து. நின்னா உனக்கும் விலங்கு எனக்கும் விலங்கு. கண்ணுல காணாம ஓடு. அடுத்த படத்துக்கு வாய்ப்பு தர்றேன் !’’ – துரத்தினார்.

‘ஊருக்குத் தெரிந்தால் உயிருக்கு ஆபத்து !’ – டெல்லிக்கு ரயலேறினான். இங்கு இன்டர்வியு வந்தேன். வேலை கிடைத்துவிட்டது! என்று வீட்டிற்குப் பொய்யாய் கடிதம் எழுதினான். வேலைக்காகவும் சில கம்பெனிகள் ஏறி இறங்கினான். சொற்ப சம்பளத்தில் ஒரு சின்ன கம்பெனியில் ஒட்டினான். இடையிடையே சினிமா ஆசை தலைதூக்க….விளம்பரக் கம்பெனிகளில் ஏறி இறங்கினான். அப்படியாவது தன் முகம் வெளி வந்து வெள்ளித் திரையில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை. சோப்பு விளம்பரத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவன் உடலழகைப் பார்த்து ஆசைப்பட்ட ஒருத்தி இவனை வளைத்தான். ஏற்கனவே ருசி கண்ட பழனிச்சாமி பெயரை ராகுல் என்று நாகரீகமாக மாற்றிக் கொண்டு முழு மூச்சாய் இறங்கினான்.

இதோ எதிர்பாராத விதமாக…. அர்ச்சனா.!! என்ன சிக்கல் வரப் போகின்றதோ ?! – நினைவுகளில் மூழ்கி எழுந்தவனுக்குள் உதறல் எடுத்தது.

அத்தியாயம்-9

அர்ச்சனாவும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் கதையைத் தொடர்ந்தாள்.

‘‘நான் கண் விழிச்சிப் பார்க்கும் போது ஒரு அறையில இருந்தேன். கொல்கத்தான்னு சொன்னாங்க. உடம்பெல்லாம் வலி. சின்ன பொண்ணுக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து ஆம்பளைங்க. என் வலிஇ வேதனைஇ மறுப்பு எதையும் சட்டை செய்யாம… மயக்க மருந்து கொடுத்து பொணமாக்கி வேற பாலியல் செயல். அடிஇ
உதைஇ பட்டினின்னு வேற சித்திரவதை. அப்புறம் ஒவ்வொருத்தரா நீங்க பழக்கம். நாம டெல்லி வரல்.’’ நிறுத்தினாள்.

கேட்ட மேகலாவிற்கே மனதை கலக்கியது.

‘‘அன்னையக் கஷ்டம் ! இன்னைக்கும் என் மனசுல அனலா கொதிக்குது. என் ஒவ்வொரு கஷ்டத்திலேயும் அவனைக் கொல்லனுமன்னு வெறியை ஏத்திக்கிட்டேன். அந்த ஆத்திரம் இ ஆவேசம் இப்போ அவன் முகத்ததைக் கண்டாலும் மயக்கம் தலைவலி!,’’ அர்ச்சனா தன் கொதிப்பைக் கொட்டினாள். மேகலாவிற்கும் கஷ்டமாக இருந்தது.

‘‘உன் கதையைக் கேட்ட எனக்கே அவனைக் கொல்லனும் போல தோணுது. உன் ஆத்திரம் ஆவேசம் நியாயம். ஆனா கொஞ்சம் யோசிக்கனும்…..’’ இழுத்தாள். ‘‘ என்ன…? ’’ இவள் அவளை ஏறிட்டாள்.

‘‘தப்பு செய்ஞ்சவன் ராகுல். தண்டனையாய்…அவனைக் கொல்லலாம் இ சாகலாம் நியாயம். ஆனா அவனைக் கொன்னுட்டு தப்பு செய்யாத நீ தண்டனை அனுபவிக்கிறது சரியில்லே. இப்போ நாம ஆள் தெரியாம புகைப்படத்தைக் கொடுத்திருக்கோம். உன்னை அவனுக்கு எப்படியும் அடையாளம் தெரியும். இவள்கிட்ட மாட்டினா ஆபத்துன்னு எச்சரிக்கையாகி நாளைக்கு வரமாட்டான். இப்போ நாம தூங்கி இருந்தவனை விழிக்க வைச்சிருக்கோம். நீ நினைக்கிறாப்போல எல்லாம் அவனைச் சுலபமா கொல்ல முடியாது. கொல்றதும் சரி கிடையாது. ’’நிறுத்தினாள்.

அர்ச்சனா விபரம் புரிய….குழப்பமாக கையைப் பிசைந்தாள்.

‘‘உடனே நாம தர்மலிங்கத்தைப் புடிச்சி என் புகைப்படத்தை வாங்கினா என்ன ? ’’ மேகலாவைக் கேட்டாள்.

‘‘வாங்கி… ?!’’ இவளும் அவளைப் குழப்பமாக பார்த்தாள்.

‘‘உன் புகைப்படம்தான் ராகுல் கைக்குப் போகும். அவன் நாளைக்கு நீ அழைச்சேன்னு நினைச்சு வருவான். உனக்குப் பதில் நான் அறையில இருந்தா என் கைக்கு மாட்டுவான். கொன்னுடுவேன்! ’’ தன் திட்டத்தைச் சொன்னாள்.

‘‘சட்டுன்னு கொன்னுட்டு சட்டுன்னு மாட்டிப்பே. !’’ என்ற மேகலாஇ‘‘சரி உன் வழிக்கே வர்றேன்.

தர்மலிங்கத்துக்கிட்ட புகைப்படம் வாங்க… அவர் விலாசம் தெரியுமா ?’’ கேட்டாள். ‘‘தெரியாது ! ’’அர்ச்சனா உதட்டைப் பிதுக்கினாள்.

‘‘தெரியாம எப்படி வாங்க முடியும் ? நேரா வீட்டுக்குப் போயிருப்பார்ன்னு என்ன நிச்சயம். ? மாட்டார். அவருக்கு இதுதான் சம்பாத்தியமான நேரம். எங்கே தேடியும் கண்டிப்பாய்க் கண்டு பிடிக்க முடியாது,’’

‘‘ராகுல் பலான தொழில் பண்றவன்னு விலாவாரியா போலீஸ{க்குப் போட்டுக் கொடுத்தாலென்ன ?’’ அர்ச்சனா தன் மனதில் எழுந்த அடுத்ததைச் சொன்னாள்.

‘‘செய்யலாம். போலீஸ் மாமூல் வாங்கி இருக்கும். நடவடிக்கை எடுக்குறது சந்தேகம.; எடுத்து வழக்கு பதிவு செய்து கோர்ட்டுக்குப் போனாலும் நல்ல வக்கீல் வைச்சு அபராதம் கட்டி வெளியே வர நிறைய வழிகளிருக்கு. ஒரு சாதாரண பலான பெண்ணைப் புடிச்சு அவள் அழைச்சாள் போனேன்னு வரவழைக்கலாம். அப்புறம் காட்டிக் கொடுத்தது யார்ன்னு கண்டுபிடிச்சு நம்மைத் துரத்துவான். வம்பு வேணாம் அர்ச்சனா.

இப்படி ஆக வேண்டுமென்பது விதி. போசாமல் விடு ’’ – மேகலா முடித்தாள்.

இவளுக்கு ஏற்பில்லை.

‘‘என்ன அர்ச்சனா பேசாம இருக்கே ?’’ மேகலா அவளை உசுப்பினாள்.

‘‘ஒன்னுமில்லே. எல்லாம் ராகுலைப் பத்தி யோசனைதான்.’’ ‘‘ரொம்ப குழப்பிக்காதே.! எந்த இடத்திலேயும் ஓட்டை இல்லாதபடி நல்லா திட்டம் போட்டு நிறுத்திஇ நிதானமா… நாம மாட்டிக்காத அளவுக்குச் செய்யனும். எதுவும் தெரியாது போல வெளிக்கு நடிச்சு சூத்தரதாரியாய் நடத்தனும். கொலையைத் தற்கொலை அளவுக்குப் பேச வைக்கனும். நல்லா மனசுல வைச்சுக்கோ. ராகுல் தப்பு செய்ததுக்குத் தண்டனைதான் சாவுஇ கொலை.! நீ அவனைக் கொலை பண்ணிட்டு செயிலுக்குப் போறதுக்கில்லே.’’ என்றாள்.

அர்ச்சனாவிற்குப் புரிந்தது.

‘‘போசாம எந்தவித கஷ்டமுமில்லாம எவனாவது ஒரு தாதா கொலைக்காரனை வைச்சு போட்டுத் தள்ளினாலென்ன ?’’ மேகலாவிடம் சொன்னாள்.

‘‘வேணாம். நம்ம விசயம் மூணாவது மனுசனுக்குத் தெரியக்கூடாது. தெரிஞ்சா பின்னால நமக்குத் வினை. அதுவும் நமக்கு ரொம்ப தொந்தரவு. இன்னைக்குக் காசுக்கு நாம சொன்னதைச் செய்துட்டு நாளைக்கு வெளியில சொல்லிடுவேன்னு மிரட்டி தினம் நம்மை ஓசியில அவன் அனுபவிச்சுட்டுப் போவான். இதைக் காரணம் காட்டி தன்னுடைய எல்லா தப்புக்கும் நம்மையும் உடந்தை ஆக்கிடுவான். நல்ல நாள்லேயே இவனுங்க காசு கொடுக்காம கடன் சொல்லுவானுங்க. மீறிக் கேட்டா கத்தியைக் காட்டி மிரட்டிப் போவானுங்க. கலாட்டா செய்வானுங்க. இப்படின்னா அவனுங்களுக்கு அல்வா. வம்பு வேணாம். நம்ம பிரச்சனையை நாமே தீர்த்துக்கலாம்.!’’ புpசிறில்லாமல் தெளிவாய்ச் சொன்னாள்.

அர்ச்சனாவிற்குப் புரிய…. தலையைத் தலையை ஆட்டினாள்.

‘‘அவனை எப்படி சம்ஹாரம் செய்ய ?’’ – பிடியை விடாமல் கேட்டாள்.

விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா சொன்னதைப் போல் மேகலா வெறுத்துப் போனாள்.

‘‘யோசனை செய்வோம் !’’ தன் இடத்தை விட்டு எழுந்து அறையில் மேலும் கீழும் நடந்தாள். முகம் இறுக்கமாகி தீவிர சிந்தனைக் காட்டியது, ரொம்ப நேர யோசனைக்குப் பின் ஒரு முடிவிற்கு வந்து அமர்ந்தாள்.

‘‘என்ன மேகலா…? ’’ அர்ச்சனா அவளை ஏறிட்டாள். ‘‘மொதல்ல அவன் எங்கே போறான் இ எப்படி வர்றான். கவனிக்கனும். இதை வைச்சு அவனை எப்படி முடிக்கனுமோ முடிக்கனும்.’’

‘வேணாம். ராகுலைப் போட்டுத் தள்ள இது எனக்கு கெடைச்ச நல்ல வாய்ப்பு. நீ நாளைக்கு என்கூட வரவேணாம். பயந்துடுவே கெடுத்துடுவே.!’ – அர்ச்சனா மேகலாவிடம் சொல்ல நினைத்தாள்.

சொன்னால் இவள் கண்டிப்பாய்த் தடுப்பாள். தன் கூட வருவாள். வேண்டாமென்று தடுக்க முடியாது. அப்படி தடுத்து ஒதுக்கி சென்றாலும் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் பின் தொடர்வாள். இல்லை கீதா, பிருந்தாவிடம் சொல்லி தடுப்பாள். முடியாவிட்டால் போலீசில் போட்டுக் கொடுத்து காப்பாற்றவும் வாய்ப்பு உண்டு. ராகுல் வரமாட்டான் என்பது நிச்சயமில்லை. புகைப்படத்தைப் பார்க்காமல் கூட வரலாம்.! – நினைத்த அர்ச்சனா வாயை இறுக்க மூடிக் கொண்டாள்.

இவளை இத்துடன் வெட்டி விட வேண்டும் நினைத்து…

“நீ சொல்றது சரி மேகலா. நாளைக்கு நாம போக வேணாம்.’’ வலிய சொன்னாள்.

தோழி இவ்வளவு சீக்கிரத்தில் இறங்கி வருவாளென்று மேகலா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

‘‘இதுதான் நல்லது அர்ச்சனா. நம்ம எல்லார் மனசிலேயும் வஞ்சமிருக்கு. உனக்கு உன்னை சின்ன வயசுல கெடுத்த ராகுல் மேல. எனக்கு என்னைக் காதலிச்சா மாதிரி நடிச்சு கலியாணம் செய்ஞ்சிக்கிறேன்னு நகை நட்டோட வீட்டைவிட்டு வரை வழைச்சு லாட்ஜ்ல தங்க வைச்சு என் கற்பை சூறையாடி நகை நட்டுகளையெல்லாம் கொண்டு போனதோடு மட்டுமில்லாமல் என்னை விபச்சாரத்துக்கு வித்துட்டும் போனானே அந்த பொறுக்கி, போமானி… அவன் மேல காழ்ப்பு இருக்கு. கீதாவுக்கு அடிச்சு உதைச்சு விபச்சாரத்துக்குத் தள்ளின அவள் புருசன் மேல. பிருந்தாவுக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்துக்குத் தள்ளின தன் தாய் மேல. இப்படி எல்லாருக்கும் மனசுல காயம் இருக்கு. எல்லாருமே உன்னைப் போல அவசரப்பட்டாங்கன்னா இருக்கிற வாழ்க்கையும் வீணாகிப் போகும்ன்னு எல்லாரும் பொறுத்துப் போறாங்க. நீயும் விதின்னு போனா நல்லது.‘‘ புத்திமதி சொன்னாள்.

அர்ச்சனா அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டாள். எல்லாருக்கும் காயம் உண்டென்றாலும் இவளுக்குப் பெரிது. இவளது பாலியல் ரொம்ப கொடுமையானது. மிருகத்தனமானது. அதை செய்தவன் அயோக்கியன். பார்த்து ரசித்தவன் மகா மட்டமானவன்.

இவளுக்கு நினைக்க நினைக்க வெறுப்பு வந்தது. தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

அர்ச்சனா புகைப்படத்தைப் பார்த்த ராகுலுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

‘‘இவள் ? இவள் ?……’’ மனசுக்குள் தடுமாறினான். தர்மலிங்கத்தை ஏறிட்டான்.

‘‘அவள் பேர் அர்ச்சனா. வயசு 21. ’’ என்றார்.

‘‘என்ன பண்றா ?’’

அவர்கள் உண்மையைச் சொல்லக்கூடாது என்று சொல்லி இருந்ததால் விழித்தார்.

பிழைப்பிற்கு இருவருமே வழி. உண்மையைச் சொல்லப் போய்…. இவன் வேண்டாமென்று மறுக்க…. அது அவளுக்குத் தெரிய…. இல்லைஇ ஏன் வேண்டாமென்ற அவன் குடைய…. ஏன் ஊகிக்கக்கூட வழியுண்டு. – தர்மலிங்கத்திற்குத் தர்மசங்கடமாக இருந்தது,

விழித்தார்.

‘‘உண்மையைச் சொல்லுங்க ?’’

சொல்வதைத் தவிர வழி இல்லை. உணர்ந்தவர் இ‘‘நான் சொல்றதை மனசோட வைச்சிக்கனும். எல்லா பொண்ணுங்களுக்கும் ஆசை உண்டு….’’ இழுத்தார்.

‘‘பீடிகை வேணாம். சொல்லுங்க ?’’

‘‘பலான பொண்ணு .’’

‘‘ஊர் ?’’

‘‘கொல்கத்தாவிலேர்ந்து இறக்குமதி. அங்கே ஒருத்தன் ஆசைப்பட்டு இவளை மீட்டு வந்து…. ஆசை தீர்ந்ததும் விட்டுப் போயிட்டான்.’’

‘‘இவளும் இப்படித்தானா ?’’ மேகலா புகைப்படத்தைக் காட்டினான்.

‘‘ஆமாம். ’’ தலையசைத்தார்.

‘‘இவளும் கொல்கத்தாவா ?’’

‘‘ம்ம். இரண்டு பேரும் ஒரே இடத்துலதான் இருந்திருக்காங்க. அர்ச்சனா வந்ததும் இவளும் ஒருத்தனைப் புடிச்சி அங்கிருந்து வெளியேறிட்டாள்.’’

ஆயுர்வேதவள்ளி ஏன் அர்ச்சனா என்று பெயர் மாற்றிக் கொண்டாள்..!?. புரிந்தது.

‘மாற்றப்பட்டுமிருக்கலாம். !’ நினைத்தான் ராகுல். தர்மலிங்கம் தொடர்ந்தார்.

‘‘பலான தொழில்ன்னாலும் இப்போ ரொம்ப நெறியா இருக்காங்க. கண்டவங்களோட இருக்கிறதில்லே. பணக்கார ஆளுங்க தேடிவந்தா போறாங்க. நல்ல கம்பெனி குடுத்து திரும்பறாங்க.’’

‘‘என்னை எப்படி….?’’ இழுத்தான்.

‘‘அதான் சொன்னேனே எல்லாருக்கும் ஆசை உண்டுன்னு. உங்க விளம்பர படத்தைப் பார்த்ததும் மயங்கிட்டாங்க.’’

‘இவளுக்கு என்னைத் தெரியும். எப்படி மறப்பாள். ?! மறக்க முடியாது. எதிரில் சந்தித்தால் என்ன நடக்கும் ?’

‘அடப்பாவி ! சட்டையைப் பிடிப்பாள். கண்டிப்பாக நல்லது நடக்காது. அதுவும் ஒருத்தி இல்லை. இரண்டு பேர். ஏதோ திட்டத்துடன்தான் வருகிறார்கள் !’ இவனுக்குள் தெளிவாக தெரிந்தது.

‘என்ன செய்ய…. ?’ – சிந்தனையில் இறங்கினான்.

– தொடரும்…

– 13-10-2003 மாலைமதியில் பிரசுரமான குறுநாவல்.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *