ஆடிய ஆட்டம் என்ன, தேடிய செல்வம் என்ன…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 5,501 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

திவான் பஹதூர் சுந்தரம் ஐயர் தஞ்சாவூரில் 200 ஏக்கர் நஞ்சை நிலத்தோடும்,100 ஏக்கர் புஞ்சை நிலத்தோடும் பணக்கார தோரனையில் வாழக்கை நடத்தி வந்தார்.அந்த வட்டாரத்திலேயே அவர் போல இரண்டு பணக்காரார்கள் தான் இருந்து வந்தார்கள்.இவ்வளவு பணம், நிலம்,திவான் பட்டம்,அப்போது தஞ்சாவூரில் இருந்த வெள்ளைக்காரர்கள் சினேகம்,செழுமை எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்.அவருக்கு குழந்தைகளே இல்லை.

தினமும் சுவாமியை ‘பகவானே எனக்கு பட்டம்,பணம்,நல்ல மணைவி, நிலம் புலன் எல்லாம் நீ குடுத்து இருக்கே. ஆனா எங்களுக்குப் பிறகு இதை எல்லாம் அனுபவிக்க ஒரு குழந்தையைக் குடுக்க மறந்து விட்டயே.எங்களுக்கு ஒரு குழந்தையைக் குடுக்கக்கூடாதா’ என்று சுந்தரமும் ராதாவும் மனம் உருகி வேண்டிக் கொண்டு வந்தார்கள்.
எல்லா தஞ்சாவூர் கோவில்களுக்கும் மூனு கால அபிஷேகம்,பூஜை பண்ண பணம் கொடுத்து வந்தார்கள்.நிறைய ஏழைகளுக்கு துணி மணிகள் கொடுத்து அன்னதானம் எல்லாம் பண்ணி வந்தார் கள்.வயலில் வேலை செய்து வரும் எல்லா வேலைக்காரர்களுக்கும் பண உதவி,அவர்களுக்கு துணி மணிகள் எல்லாம் தவறாமல் வாங்கிக் கொடுத்து வந்தார்கள் சுத்தரம் தம்பதிகள்.

ஆனால் அவர்களுக்கு குழந்தை பிறக்கவே இல்லை.அவா¢ன் ஆங்கிலேய நண்பர்கள் அவரைப் பார்த்து “மிஸ்டர் திவான், நீங்க இங்கே ஏன் கஷ்டப் பட்டு வா£ங்க.பேசாம சென்னைக்குப் போய் நல்ல ‘சிட்டி லைபபை எஞ்சாய்’ பண்ணி வாங்க.கூடவே அங்கே இருக்கிற இங்கிகிஷ் டாக்டர் கிட்டே உங்க ‘வைப்’ உடம்பைக் காட்டி நல்லா ‘செக் அப்’ பண்ணி,அவங்க பண்ற ‘ட்¡£ட்மென்டை’ பண்ணி க் கிட்டு வாங்க.உங்களுக்கு குழந்தைப் பிறக்கலாம்” என்று சொன்னதும் சுந்தரம் அவர் மணைவியை கேட்டார்.ராதாவுக்கு தஞ்சாவூரை விட்டுப் போக சென்னைக்குப் போக பிடிக்கவில்லை.

ஒரு வழியாக ராதா தன் மனதை மாத்திக் கொண்டு விட்டு “சரி.நீங்கோ சொல்றா மாதிரி நாம சென்னைக்குப் போகலாம்”என்று சொன்னவுடன் சுந்தரம் மிகவும் சந்தோஷப் பட்டார்.சுந்தரம் உட னே தஞ்சாவூரில் இருந்த பங்களா,நஞ்சை நிலம்,புஞ்சை நிலம் எல்லாவற்றையும் விற்று விட்டு எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்னைக்கு குடி ஏறினார்.

சென்னைக்கு வந்ததும் தஞ்சாவூரில் இருந்த ஒரு ஆங்கிலேயர் உறவுக்காரர் ஒருவா¢ன் பொ¢ய பங்களாவை ஆறு லக்ஷ ரூபாய்க்கு வாங்கினார்.

தன் மணைவியை அழைத்துக் கொண்டு போய் ஒரு நல்ல பொ¢ய இங்கிகிஷ் டாக்டர் கீட்டே காட்டி செக் அப் பண்ணினார் சுந்தரம்.ராதாவை செக் அப் பண்ண டாக்டர் ”மிஸ்டர் திவான்,உங்க மணைவிக்கு ‘ப்ராப்லெம்’ ஒன்னும் இல்லை.நான் குடுக்கிற மாத்திரைகளை அவங்க தவறாம மூனு மாசத்துக்கு சாப்பிட்டு வந்தா போதும்.அவங்களுக்கு நார்மலாகவே குழந்தை பிறக்கும்” என்று சொல் லி ராதாவுக்கு மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார் அந்த டாக்டர்.

சுந்தரத்திற்கும் ராதாவுக்கும் டாக்டர் சொன்னதைக் கேட்டு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. அவர்கள் ரெண்டு பேரும் அந்த டாக்டரை ‘தாங்க்’ பண்ணி விட்டு,அவர் ‘பீஸையும்’ கொடுத்து விட்டு அவர் எழுதிக் கொடுத்த மாத்திரைகளை ‘மெடிக்கல் ஷாப்பில்’ இருந்து வாங்கிக் கொண்டு பங் களாவுக்கு வந்தார்கள்.ராதா தவறாமல் மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு வந்தாள்.

டாக்டர் சொன்னா மாதிரி ராதா மூனு மாசம் முடிந்ததும் கருவுற்றாள்.பத்து மாதம் ஆனதும் ராதாவுக்கு ஒரு நல்ல நாளில் ரெட்டை குழந்தைகள் பிறந்தது.சுந்தரம் தம்பதிகள் அந்தக் குழந்தைகளுக்கு ராஜன், வரதன் என்று பேர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள்.

குழந்தைகளையும் நல்ல பணக்காராக் குழந்தைகள் படிக்கும் ஸ்கூலில் சேர்த்து படிக்க வைத் தார்கள் சுந்தரம் தம்பதிகள்.‘மெட்ரிக் பாஸ்’ பண்ணதும் ரெண்டு பிள்ளைகளையும் கிண்டி ‘இஞ்ஜினி யரிங் காலேஜில் ‘கெமிக்கல் இஞ்சினியரிங்க் கோர்ஸில்’ படிக்க சேர்த்தார்.நான்கு வருஷ படிப்புக்கு பிறகு ராஜனும்,வரதனும் ‘கெமிக்கல் இஞ்சினியரிங்கில்’ ‘BE’ பட்டம் வாங்கினார்கள்.

சுந்தரம் தம்பதிகளுக்கு ரொம்ப சந்தோஷமாய் இருந்தது.பிள்ளைகள் BE பாஸ் பண்ண சந் தோஷத்தை கொண்டாட எல்லா நண்பர்களையும் அழைத்து ஒரு பொ¢ய ‘ஹோட்டலில்’ ஒரு ‘பார்ட்டி கொடுத்தார்கள்.

தங்கள் ரெண்டு பையன்களும் ‘இஞ்சினியர்கள்’ ஆகி விட்டதை நினைத்து சுந்தரம் தம்பதிகள் சந்தோஷப் பட்டு,இருவரையும் கூப்பிட்டு “நீங்க இனிமே ரெண்டு பேரும் மேலே என்னப் பண்ணப் போறேள்” என்று கேட்டார்கள்.உடனே அவர்கள் ரெண்டு பேரும் “அப்பா நாங்க ரெண்டு பேரும் ‘கெமிக்கல் இஞ்சினியரிங்க்’ பாஸ் பண்ணி இருக்கோம்,‘இப்ப ‘ப்லாஸ்டிக்’ன்றது மார்கெட்லே புதுசா வந்து இருக்கிற ஒரு சாமான்.நாங்க ரெண்டு பேரும் ஒரு ‘ப்லாஸ்டிக் பாக்டரி’ ‘செட் அப்’ பண்ணி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கோம்”என்று ‘கோரஸா’க சொன்னார்கள்.சுந்தரமும் ராதாவும் மிகவும் சந்தோஷப் பட்டடார்கள்.

சுந்தரம் உடனே ‘ப்லாஸ்டிக்’ பிஸினஸ்ஸிலேயே’ இருக்கும் ஒரு ஆங்கிலேய நண்பரைப் பார் த்து தன் மகன்கள் ரெண்டு பேருடைய ஆசையைச் சொல்லி ரெண்டு ‘ப்லாஸ்டிக் பாக்டரி’ ஆரம்பிக்க வேண்டிய இடம்,மெஷினா¢கள்,கச்சாப் பொருள் வாங்கும் இடம், ‘ப்லாஸ்டிக்’ தொழிற்சாலையில் வேலை செய்ய பழக்கப் பட்டவர்கள்,எல்லாவற்றையும் எல்லாம் ஏற்பாடு பண்ணச் சொன்னார்.

அந்த ஆங்கிலேய நண்பரும் சுந்தரத்தின் பையன்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணி, கிண்டியில் இரண்டு ‘ப்லாஸ்டிக் பாக்டரிகளை’ ஒரு நல்ல நாள் பார்த்து திறந்து வைத்தார்.சுந்தரமு ம் ராதாவும் ரெண்டு ‘பாக்டரிக்கும்’ போய் அந்த விழாவில் கலந்து கொண்டு ரெண்டு பையன்களை ம் ஆசீர்வாதம் பண்ணி விட்டு கொஞ்ச நேரம் ‘பாக்டரியில்’ இருந்து விட்டு பங்களாவுக்கு வந்தார்கள்.

ராஜனும்,வரதனும் தினமும் ‘பாக்டரிக்கு’ப் போய் வந்துக் கொண்டு எல்லா வேலைக்காரர்க களிடமும் சகஜமாகப் பழகி இவர்களும் வேலையைக் கற்றுக் கொண்டு,வந்து தாங்கள் கற்று வந்த ‘கெமிக்கல் இஞ்சினியரிங்க்’ அறிவுத் திறனையும் உபயோகப் படுத்தி புது விதமான ‘ப்லாஸ்டிக்’ பொரு ள்களை தயார் பண்ணி மார்கெட்டில் விற்று வந்தார்கள்.

’ப்லாஸ்டிக்’ தொழிலைப் பற்றி நிறைய ’பாரின் புக்ஸ்’ எல்லாம் வர வழைத்து அதைப் படித்து விட்டு,‘பாரினில்’ இருந்து நவீன ‘மெஷின்களை’ இறக்குமதி செய்து, தங்கள் ‘பாக்டரியில்’ அவை களை பொருத்தி,இயங்க செய்து,தங்கள் ‘ப்லாஸ்டிக்’ வியாபாரத்தை பெருக்கி வந்தார்கள் இருவரும்.

ரெண்டும் ‘ப்லாஸ்டிக் பாக்டரியும்’ நல்ல லாபத்தில் நடந்துக் கொண்டு இருந்தது.இரண்டு பையன்களும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் வந்து ‘பிலாஸ்டிக்’ தொழிலில் இருந்த எல்லா நுணுக் கங¨ளையும் எல்லாம் நன்றாகக் கற்று வந்தார்கள்.ரெண்டு ‘பாக்டரிக்கும்’ IITபடித்த ரெண்டு ‘ஜென ரல் மானேஜர்களை’ வேலைக்கு வைத்துக் கொண்டார்கள்.
பணக் கஷ்டம் இல்லாமல் நல்ல நிலையில் இருக்கும் போதே நம் இரண்டு பிள்ளைகளுக்கும்

நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று ஆசைப் பட்டனர் சுந்தரம் தம்பதிகள். தங்கள் செல்வாக்குக்கு ஏற்றார் போல் இரண்டு பணக்கார குடும்பத்தில் பெண் எடுத்து தன் மகன்கள் ரெண்டு பேருக்கும் ஊரே புகழும்படி வெகு சிறப்பாக கல்யாணத்தை நடத்தி முடித்து வைக்க வேண் டும் என்று ஆசைப் பட்டார்கள்.
சுந்தரம் தம்பதிகள் ஆசைப் பட்டது போல ராஜனுக்கு ஒரு பணக்கார இடத்தில் ஒரு நல்ல பொண்ணு கிடைத்து ஊரே புகழும்படி வெகு சிறப்பாக கல்யாணத்தை நடத்தி முடித்து வைத்தார்கள். வரதன் ஜாதகத்திற்கு ஏற்றார் போல ஒரு பெண் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

ராதா ஒரு நாள் தன் கணவணைப் பார்த்து “நமக்கு வயசு ஏறிண்டே போறது.நம்ம உடம்பு நன் னா இருக்கும்போதே, நாம ஏன் ஒரு ‘யூரப் ட்ரிப்’ போய் வரக் கூடாது.எனக்கு ‘யூரப்’ பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு”என்று கேட்டாள்.உடனே சுந்தரம் “சரி ராதா,நாம் ‘யூரப்’ நிச்சியமா போய் வரலாம்.எனக்கும் அந்த ஆசை ரொம்ப நாளா இருக்கு” என்று சொல்லி ராதா சொன்னார்.

அன்று ஞாயித்துக் கிழமை.சுந்தரம் தன் பையன்களிடம்” நாங்க கூடிய சீக்கிரம் ‘யூரப் டிரிப்’ போய் வரலாம்ன்னு இருக்கோம்.‘யூரப் டிரிப்’ போய் வந்த பிறகு,நாங்க ரெண்டு பேரும் ஆறு மாசம் ஒரு பையனோடவும்,அடுத்த ஆறு மாசம் இன்னொரு பையனோடவும் இருந்து வரலாம் என்று முடிவு பண்ணி இருக்கோம்.அதனாலே நான் என் சொத்து பூராவையும்,இந்த பங்களாவையும் உங்க ரெண்டு பேருக்கும்,சம பாகமா பிரிச்சுக் குடுத்துட்டா, நீங்க ரெண்டு பேரும் இந்த பங்களாலே ஒன்னா இருந்துண்டு வந்து,என் பணத்தை உங்க ‘பிஸினஸ்’ஸூக்கு உபயோகப் படுத்தி வர சௌகா¢யமா இருக் கும்.வரதனுக்கும் கல்யாணம் ஆகி இருந்தா எங்களுக்கு கவலை இல்லாம இருந்து இருக்கும். ஆனா அவனுக்கு ஒரு நல்ல பணக்கார பொண்ணா இன்னும் கிடைக்கலைன்னு நினைச்சா என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”என்று சொன்னார் சுந்தரம்.

உடனே ராஜனும் அவன் மணைவி லலிதாவும் ”நீங்க கவலையே படாம இருங்கோ.உங்களுக்கு ரொம்ப வயசு ஆறதுக்குள்ளே நீங்க ‘யூரப் டிரிப்பை’ முடிச்சுண்டு வந்து விடுங்கோ.நாங்க அவருக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து வக்கறோம்.நீங்க ‘யூரப் டிரிப்’ முடித்துக் கொண்டு வந்ததும் அவருக்கு எங்களுக்கு பண்ணா மாதிரி ஊரே புகழும்படி சிறப்பா கல்யாணத்தை பண்ணி முடிக்கலாம்ப்பா” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

அடுத்த நாள் சுந்தரம் தங்கள் குடும்ப வக்கீலை பங்களாவுக்கு வரச் சொல்லி தன்னிடம் இருந்த மொத்த பணமும்,பங்களாவும் ரெண்டு பிள்ளைகளும் சமமாக வரும்படி ஒரு உயில் எழுதினார்.

சுந்தரமும் லலிதாவும் ”ராஜா,வரதா இப்போ இருக்கற மாதிரி நீங்கோ ரெண்டு பேரும் ஒத்துமை யா இருந்துண்டு வரணும்”என்று சொன்னதும் ராஜனும் வரதனும் “நாங்க ஒத்துமையா இருந்து வரு வோம்,நீங்கோ ரெண்டு பேரும் சந்தோஷமா ‘யூரப் ட்ரிப்’போய் வாங்கோ”ன்று சொன்னார்கள்.

குடும்ப ஜோஸ்யர் சொன்ன நல்ல நாள் ஒன்றில் சுந்தரமும் ராதாவும் ‘யூரப் டிரிப்’ கிளம்பிப் போனார்கள்.அவர்கள் போன ‘ப்ளேன்’ நடுக் கடல் மேலே போய்க் கொண்டு இருக்கும் போது தீவிர வாதி ஒருத்தன் வைத்த வெடி குண்டால் சுக்கு நூறாய் வெடித்து நடுக் கடலில் விழுந்து விட்டது. அந்தப் ‘ப்ளேனில்’ இருந்த ஒருவரும் உயிர் பிழைக்கவே இல்லை.ராஜனும், வரதனும்ஆத்து வாத்தியா ரைக் கூப்பிட்டு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எல்லா ‘ஈமக் காரியங்களையும்’ செய்து முடித்தார்கள்.

மூனு மாசம் ஆனதும் ராஜன் ஒரு நாள் வரதனைக் கூப்பிட்டு “வரதா, என் மணைவி நீ இங்கே இருந்து வருவதை விரும்பலே.அவளுக்கு ‘ப்ரைவஸி’ இல்லைன்னு அவ ‘பீல்’ பண்றா.அதனால்லே நீ தனியா போய் இருந்து வா” என்று கொஞ்சம் கடுமையாகச் சொன்னார்.வரததனுக்கு ராஜன் சொன் னதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது.அடுத்த பத்தாவது நாளே வரதன் ஒரு பங்களாவாகப் பார்த்து அதை வாங்கி அங்கே குடி போய் தங்கி வந்தார்.

அப்பா அம்மா தவறிப் போன முதல் வருஷம் இருவருக்கும் ‘பிஸினஸ்’ நன்றாகப் போய்க் கொண்டு இருந்தது.

அந்த வருஷமே ராஜன் தம்பதிகளுக்கு ஒரு அழகான ஆண் குழந்தைப் பிறந்தது.அந்த குழந் தைக்கு பேர் வைக்கும் ‘பன்ஷனில்’ வரதன் கலந்துக் கொண்டு குழந்தையை ஆசீர்வாதம் பண்ணினான்.

‘அண்ணா மன்னி பாத்து சொல்ற எந்த பொண்ணையும் நாம கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது’என்று நினைத்து வரதன் தன் ‘ஜெனரல் மேனேஜரு’க்கு மிகவும் தெரிந்த,சேலத்தில் இருந்த ஒரு ஜவுளிக்கடைக்காரரின் பெண் கமலாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார்.ராஜனும் லலிதா வும் சென்னையில் இருந்து சேலத்துக்கு வந்து வரதன் கல்யாணத்தில் கலந்துக் கொண்டு,அன்று சாயந்திரமே சென்னைக்குத் திரும்பிப் வந்து விட்டார்கள்.

வரதன் கமலாவோடு தன் பங்களாவில் வேலைக்காரன்,சமையல்காரன்,தோட்டக்காரன் எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷமாய் இருந்து வந்தார்.

இரண்டு வருஷம் ஓடி விட்டது.வரதன் கமலா தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. ராஜனும் லலிதாவும் அந்த குழந்தைக்கு பேர் வைக்கும் ‘பன்ஷனில்’ கலந்துக் கொண்டு குழந்தையை ஆசீர்வாதம் பண்ணி விட்டு வந்தார்கள்.

ராஜனுக்கு நாளாக நாளாக பணத்தாசை அதிகம் ஆக ஆரம்பித்தது.அந்த பணத்தாசை பேரா சையாகி மாறியது.’எப்படியாவது வரதன் ‘பாக்டரிலே’ தயாராகும் பொருள்களை வெளி மார்கெட்லே விக்க முடியாதபடி பண்ணனும்.தன் ‘பாக்டரிலே’ தயாராகும் பொருள்கள் மட்டும் தான் மார்கெட்லே கிடைக்கணும்.அப்படி பண்ணா,நாம தயாரிக்கும் பொருள்களுக்கு விலையே அதிகம் ஏத்தி விக்கலம்’ என்று யோஜனைப் பண்னி விட்டு அதற்கு ஒரு ‘ப்ளான்’ பண்ணினார்.

அடுத்தது ராஜன் எப்படியாவது இந்த பங்களாவை மொத்தமா தன் பேர்லே மாத்தி எழுதிக் கொ ள்ளணும் என்று நினைத்தார்.ராஜன் அவர்கள் குடும்ப வக்கீலை அவன் பங்களாவுக்கு வரச் சொல்லி அவருக்கு நிறைய லஞ்சம் கொடுத்து,பங்களாவை அவன் அப்பா தன் பேருக்கு எழுதிக் கொடுத்தது போல ஒரு உயிலைத் தயார் செய்து,அந்த உயிலில் அவன் அப்பாவைப் போலவே கை எழுத்துப் போட்டார்.

பிறகு ‘ரெஜிஸ்தர் ஆபீஸருக்கு’ நிறைய லஞ்சம் கொடுத்து,அந்த பங்களாவை முழுக்க தன் பேர்லே மாத்தி அதற்கு பத்திரங்களையும் தயார் பண்ணி வைத்துக் கொண்டு விட்டார்.

அடுத்த வாரமே ராஜன் ‘பாங்கு’க்குப் போய் ‘பாங்க் மானேஜரு’க்கு லஞ்சம் கொடுத்து, அப்பா ‘சேவிங்க்ஸ் அக்கவுண்டில்’ தன் பேரை ‘நாமினேஷன்’ போட்டு,தன் அப்பா ‘அக்கவுண்டில்’ இருந்த மொத்த பணத்தில் வெறும் ஒரு முப்பதாயிரம் ரூபாயை மட்டும் வைத்து விட்டு மீதி எல்லாம் பணத் தையும் தன் ‘சேவிங்க்ஸ் அக்கவுண்டுக்கு’ மாற்றீக் கொண்டார்.

வரதன் தொழிற்சாலைக்கு ‘ஆர்டர்’களை கொடுத்து வந்த கம்பனிக்கு ராஜன் ‘லஞ்சம்’ கொடு த்து, ‘ஆர்டர்’கள் கொடுக்காமல் பண்ணினார். அந்த கம்பனிகளுக்கு தன் தொழிற்சாலையில் தயாரிக்கும் பொருட்களை எல்லாம் கம்மி விலைக்கு விற்று வந்தார் ராஜன்.இப்படி பல வழிகளில் ராஜன் வரதன் ‘பிஸினஸை’ வளர விடாமல் கெடுத்து வந்துக் கொண்டு இருந்தார்.

வரதன் தன் ‘பாக்டரியில்’ தயாராகும் பொருள்கள் மார்கெட்டில் விலை போகாமல் தேக்கமாய் இருந்து வருவதை கவனித்தார்.இது நாள் வரையில் நன்றாய் போய்க் கொண்டு இருந்த தன் தொழிற் சாலையின் வருவாய் குறைந்து வருவதன் காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார் வரதன்.தன் ‘பாக்டரி’யின் யூனியன் தலைவர்களை எல்லாம் ஒரு ‘மீட்டிங்க்கு’க் கூப்பிட்டு விசாரித் தார்வரதன்.அவர்கள் எல்லோரும் ‘எங்களுக்குக் காரணம் தெரியவில்லை’என்று சொல்லி விட்டார்கள்.

வீட்டுக்கு வந்து தன் மணைவி கமலாவிடம் சொல்லி மிகவும் வருத்தப் பட்டார் வரதன்.தன் கணவன் இப்படி கஷ்டப் படுவதைப் பார்த்த கமலா மிகவும் வேதனைப் பட்டாள்.வரதன் இரவில் தூக் கமே வராமல் புரண்டு புரண்டு படுத்து வந்தார்.’கமலா தினமும் கோவிலுக்குப் போய் ‘அப்பா முருகா அவருக்கு நிம்மதியைக் குடு’ என்று கடவுளை வேண்டிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள்.

வரதன்,கமலாவையும் அழைத்துக் கொண்டு,ஒரு ஜோஸ்யர் வீட்டுக்குப் போய் தன் ஜாதகத் தைக் காட்டி தன் செய்து வரும் தொழில் மிகவும் மந்தமாய் போய்க் கொண்டு இருக்கிறது என்றும், வியாபாரம் நன்றாக நடந்து வர ஏதாவது ‘பரிகாரம்’ பண்ண வழி கேட்டார்.

ஜோஸ்யர் வரதன் ஜாதகத்தை நன்றாகப் பார்த்து விட்டு ”இப்போ உங்க ஜாதகம் பிரகாரம் உங்க ளுக்கு ஏழரை நாட்டு சனி நடக்குது.அதனால் தான் நீங்க செஞ்சு வரும் தொழிலில் இந்த மந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டு இருக்கு.நீங்க சனி பகவானுக்கு நிறைய அபிஷேகம்,அர்ச்சனை எல்லாம் பண்ணி வாங்க.வியாபாரத்தில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்படலாம்.இருந்தாலும் அதிக முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை.இந்த ஏழரை வருஷம் உங்களுக்கு தீராத கஷ்டமும்,வியாபாத்தில் நஷடமும், கடன் தொல்லை அதிகமாகவும் தான் ஆகும்”என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

ஜோஸ்யருக்கு பணத்தைக் கொடுத்து விட்டு மிகவும் வருத்ததோடு வீடு வந்து சேர்ந்தார்கள். ஜோஸ்யர் சொன்னது போல கமலா சனிக் கிழமைகளில் சனி பகவான் கோவிலுக்குப் போய் அபிஷேக மும்,அர்ச்சனையும் தவறாமல் பண்ணிக் கொண்டு வந்தாள்.

தன் கூடப் பிறந்தவனால் தன் ‘பிஸினஸ்’ மோசமாகும் என்று வரதன் கனவிலும் நினைக்க வில்லை.ஆனாலும் தன் அண்ணன் மீது சந்தேகம் மட்டும் இருந்தது வரதனுக்கு.தன் சந்தேகத்தை தன் மணைவியிடம் சொன்னார் வரதன்.உடனே கமலா “அவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாருங்க. வேறே ஏதாவது காரணம் இருக்கும்ங்க.நீங்க ஒரு ‘துப்பு துலக்கும் நபரை’ப் பாத்து உங்க சந்தேகத்தை கேளுங்கோ.அவர் கண்டு ப் பிடிப்பார்” என்று சொன்னாள்.அடுத்த நாளே வரதன் ஒரு பொ¢ய துப்புத் துலக்கும் கம்பனிக்குப் ‘போன்’ பண்ணி அந்த ஆபீசரை தன் அலுவலகத்துக்கு வரச் சொன்னார்.

அடுத்த நாள் அந்த ஆபீசர் வந்ததும் ”சார்,என்னுடைய ‘பாக்டரி’ நல்ல லாபத்தில் போயி ண்டு இருந்தது.ஆனா ஒரு ஆறு மாசமா என் வியாபாரம் ரொம்ப மந்தமா போயிண்டு இருக்கு. யாரோ ஒரு நபர் தான் இந்த சூழ்ச்சி செஞ்சு வறார்.என்னால் அந்த நபர் யார்ன்று சரியா கண்டு பிடிக்க முடிய லே.நீங்க தீர விசாரிச்சு யார் அந்த நபர்ன்னு எனக்குக் கண்டு பிடிச்சிக் சொல்லுங்க” என்று கேட்டார் வரதன்

அந்த ஆபீஸர் ஒத்துக் கொண்டு ”சரி, இப்ப எனக்கு ‘அட்வான்ஸா’ ஒரு முப்பதாயிரம் ரூபாய் குடுங்க.நான் வேலையை முழுக்க செஞ்சு முடிச்ச பிறகு நீங்க என் ‘பாலன்ஸ்’ பணத்தை குடுங்க” என்று சொன்னதும் வரதன் ஒத்துக் கொண்டு அந்த ‘ஆபீஸருக்கு’ முப்பதாயிரம் ரூபாயைக் கொடுத்தார் வரதன். மூனு வாரம் தான் ஆயிற்று.

அந்த ‘ஆபீசர்’ ‘பாக்டரியில்’ எல்லாரையும் விசாரித்து,மார்கெட்டிலிலும் விசாரித்து, யூனியன் தலைவர்களையும்விசாரித்து,வரதன் வியாபாரம் மந்த நிலைக்கு ‘யார் காரணம்’ என்று கண்டுப் பிடித் துக் கொண்டு வந்து வரதன் ‘ஆபீஸ்’க்கு வந்து எல்லா ‘டிடேல்ஸையும்’ புள்ளி விவரத்தோடு சொன் னார்.வரதனுக்கு அந்த ‘ஆபீஸர்’ சொன்னதை நம்ப முடியவில்லை.ஆனால் அந்த ‘ஆபீஸர்’ எந்த வித சந்தேகம் இல்லாமல் தான் சொன்னதை நிரூபித்தார்.

வரதனுக்கு அவர் சொல்வதில் முழு நம்பிக்கை ஏற்பட்டது.அந்த ‘ஆபீஸர்’ கேட்ட மீதி பணத் தைக் கொடுத்து அவரை ‘தாங்க்’ பண்ணி அனுப்பினார் வரதன்.மனம் உடைந்துப் போய் வீட்டுக்கு வந்தார் வரதன்.அந்த ‘ஆபீஸர்’ சொன்னதை கமலாவிடம் சொன்னார் வரதன்.அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.இருந்தாலும் கணவனுக்கு ¨தா¢யம் சொன்னாள்.
சுதாவை பணக்காரர்கள் படித்து வரும் ஒரு பள்ளிகூடத்தில் சேர்த்தார் வரதன்.

ஒரு மாசம் போனதும் “கமலா,நம்ம ‘பாக்டரி’ நிலைமை இப்படி நீடிச்சா, இன்னும் சில மாசத்து க்குள்ளேயே நான் ‘பாக்டரியை’ மூட வேண்டியதாய் இருக்கும்” என்று சொல்லி தன் தலையில் கையை வைத்துக் கொண்டு அழுதார் வரதன்.

வீட்டு செலவு,‘பாக்டரி’யில் தொழிலாளர் சம்பளம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரதனை அழுத் தவே, அவர் அடுத்த நாள் ‘பாங்கு’க்குப் போய் தன் பங்களா ‘டாக்குமெண்ட்ஸை’ வைத்து ஆறு லக்ஷ ரூபாய் ‘லோனா’க வாங்கிக் கொண்டு வந்தார்.

அடுத்த நாள் காலையில் எழுந்ததும் வரதன் “கமலா,நான் அண்ணா ‘ஆபீஸ்’க்குப் போய் அவனைப் பாத்து ‘என் வியாபாரத்தை கெடுக்காதே.இந்த நிலை இன்னும் கொஞ்ச மாசம் நீடிச்சா நான் என் ‘பாக்டரி’யை மூடி விடும் நிலைமை வந்துடும்.தயவு செஞ்சி என் ‘பிசினஸ்ஸை’ கெடுக்கா தே”ன்னு கேட்டுட்டு வரட்டுமா.நீ என்ன சொல்றே கமலா” என்று கேட்டார் வரதன்..

கமலா உடனே “நீங்க சொல்றது நல்ல ‘ஐடியா’ தாங்க.நான் வேணாம்ன்னு சொல்லலே.நீங்க அவர் கிட்டே ஜாக்கிறதையா பேசுங்க.சண்டை மட்டும் போட்டுடாதீங்கோ.கோவமா பேசி உங்க ரெண்டு பேருடைய உறவை முறிச்சுக்காதீங்கோ. அது நல்லது இல்லே” என்று சொன்னாள்.

நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு வரதன் கடவுளை வேண்டிக் கொண்டு ராஜன் ‘ஆபீஸ்’ க்கு வந்தார்.வாசலில் இருந்த கூர்க்கா கிட்டே சொல்லி விட்டு உள்ளே போனார் வரதன்.

வரதன் தன் ‘ஆபீஸ்’க்கு வருவதை ‘ஆபீஸ்’ கண்ணாடி வழியாகப் பார்த்த ராஜன்,வரதனை உள்ளேயே கூப்பிடாமலே இருந்தார்.வரதனுக்கு பொறுமை எல்லை மீறி விட்டது.வாசலில் நிற்கும் பியூனை வேகமாக தள்ளி விட்டு உள்ளே போகலாம் போல அவருக்கு கோபம் வந்தது.அந்த நேரம் பாத்து அவருக்கு கமலா சொன்ன ‘அட்வைஸ்’ ஞாபகத்துக்கு வந்தது.தன்னை அடக்கிக் கொண்டார் வரதன்.கோட்டு போட்ட ஒரு நபர் வெளியே வந்ததும்,வரதன் பியூனைத் தள்ளிக் கொண்டு ராஜன் ரூமுக்குள் போனார்.
”சார்,சார்,உள்ளே போகாதீங்க,ஐயா ரொம்ப ‘பிஸியா’ இருக்காருங்க,நீங்க வெளியே வாங்க, வெளியே வாங்க” என்று கத்திக் கொண்டே அந்தப் பியூன் ரூமுக்குள் ஓடினான்.ஆனால் வரதன் கவ லைப் படவில்லை.“நீ வெளியே போ.நான் உங்க ஐயாவை ஒன்னும் கடிச்சு சாப்பிட மாட்டேன் பயப் படாதே” என்று சொல்லி அந்தப் பியூனை வெளியே போகச் சொன்னார் வரதன்.

ராஜன் ‘கோட் சூட் டையுடன்’ கம்பீரமாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தான்.அவன் வாயிலே இருந்த ‘பைப்புக்கு’ மூன்று தடவை ‘லைட்டரால்’ பற்ற வைத்து,மூன்று தடவை புகையிலை புகையை அனாயாசமாக காற்றில் விட்டான்.தன் அண்ணன் இப்படி மாறிப் போய் இருப்பதை பார்த்து ஆச்சரிய ப் பட்டார் வரதன்.தன் மனதில் ‘மனுஷாளுக்கு பணம் நிறைய வந்துட்டா இப்படித் தான் மாறுவா போல இருக்கு’ என்று நினைத்துக் கொண்டார் வரதன்.

ராஜனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.சுட்டு எரிக்கும் கண்களோடு வரதனை மேலும் கீழும் பார்த்தார் ராஜன்.”இங்கே ஏன் நீ வந்தே.நான் ‘பிஸியா’ இருக்கேன்னு உனக்குத் தெரியாதா.அந்த பியூனே சொன்னானே.அவனையும் மீறி நீ ஏன் என் ‘ஆபீஸ்’குள்ளே வந்தே” என்று கோபமாகக் கேட்டார் ராஜன்.“நான் ஒன்னும் உன் டயத்தை ‘வேஸ்ட்’ பண்ண இங்கே வரலே.உன் கிட்டே ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போகலாம்ன்னு நான் வந்தேன்” என்று சொன்னார் வரதன்.

“என்ன பேசவேண்டும் என்னோடு,சீக்கீரமா சொல்லு,எனக்கு நிறைய வேலை இருக்கு”என்று சொன்னார் ராஜன்.“நீ பண்றது கொஞ்சம் கூடா நன்னா இல்லேண்ணா.இப்படி எல்லா இடத்திலேயும் லஞ்சம் கொடுத்து நீ ஏன் என் தொழிலில் நஷடம் வர வழைச்சு இருக்கியே.என் ‘பாக்டரி’யே இப்ப மூடி விடற நிலைக்கு நீ கொண்டு வந்து விட்டுட்டேயே.நீ அப்பா அம்மாவுக்கு பண்ணிக் கொடுத்த சத்தியத்தை மறந்துட்டாயா.என்னையும் கொஞ்சம் வாழ விடு”என்று சொல்லும் போதே வரதன் கண் களில் நீர் துளும்பியது.வரதன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ராஜன் வில்லன் சிரிப்பு சிரித்தபடி”நான் அப்படித் தான் செய்வேன்.இது ‘பிஸினஸ்’.‘பிசினஸ்ஸி ல்’ இதெல்லாம் ரொம்ப சகஜம் வரதா.நீ உன்னால் என்ன முடியுமோ அதை செஞ்சிக்கோ.இனிமே இங்கே வராதே.உடனே வெளியே போ” என்று சொல்லி வாசலில் இருந்த பியூனை கூப்பிட்டு வரதன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளச் சொன்னார்.வரதன் வெளியே போகாமல் நின்றுக் கொண்டு இருந்ததைக் கவனித்தார் ராஜன்.“நான் இப்போ வெளியே போயிண்டு இருக்கேன்“என்று சொல்லி விட்டு வெளியே கிளம்பிப் போய் விட்டார் ராஜன்.

கொஞ்ச நேரம் கழித்து தன் கோபத்தை அடக்கிக் கொண்டு ரூமை விட்டு விரக்தியாக வெளி யே வந்தார் வரதன்.மெல்ல தன் மனதை தேற்றிக் கொண்டு தன் வீட்டுக்கு வந்த வரதன் தன் மணை வியிடம் தன் அண்ணன் இருந்த ‘ஸ்டைலை’யும்,அவன்‘ஆபீஸி’ல் நடந்ததை சொல்லி ரொம்பவும் வருத்தப்பட்டார்.

”எனக்குப் புரியறது உங்க கஷ்டம்.நான் நடக்கிறதே எல்லாம் பாத்துண்டு தானே இருக்கேன். காலம் இப்படியே போயிடாது.நமக்கும் ஒரு நல்ல காலம் நிச்சியமா வரும்.அது வரைக்கும் நீங்கோ பொறுமையா இருந்துண்டு வாங்க.கூடிய சீக்கிரம் நல்ல காலம் வரும்” என்று பொறுமையாக பதில் சொன்னாள் கமலா.

‘”நம்ப ‘பாக்டரி’ இப்போ ரொம்ப நஷடத்திலே போயிண்டு இருக்கு.வாங்கி வந்து இருக்கும் ‘கச்சாப்’ பொருள்கள் எல்லாம் ‘கோடவுன்லே’ அப்படியே கிடக்கறது. உற்பத்தி பண்ண பொருள்கள் எல்லாம் மார்கெட்லே விலை போகாம தேங்கி நிக்கறது.தொழிலாளிகளுக்கு சம்பளம் குடுக்கவே என் கிட்டே பணம் இல்லை.‘பாங்கு லோனும்,அசலும் வேறே நான் கட்டணும்.நான் பணத்துக்கு எங்கே போவேன் கமலா” என்று கண்ணில் கண்ணீர் தளும்பக் கேட்டார் வரதன்.

”மறுபடியும் ‘பாங்கி’லே இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி நிலைமை சமாளியுங்கோ பாக்கலாம்” என்று சொல்லி அவரை சமாதானப் படுத்த முயன்றாள் கமலா.படுக்கப் போனார் வரதன்.படுத்த அவ ருக்குத் தூக்கமே வரவில்லை.‘நமக்கு நாலா பக்கம் கடன் இருக்கு.நம்மால் ‘பாக்டரிக்குப்’ போய் அதை சரிவர நிர்வாகம் பண்ணவே முடியலே.இந்த நிலைமை இப்படியே நீடிச்சா நாம் என்ன பண்ண போறோம்.’பாங்கு’க்கு போய் ‘இன்னும் ‘லோன்’ வேணும்ன்னு கேட்டா,அவா தருவாளோ,தர மாட்டா ளோ’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.

காலையில் எழுந்து வரதன் பல் தேய்த்து விட்டு வந்து ‘டைனிங்க் டேபிளில்’ உட்கார்ந்துக் கொண்டார்.அவர் முகம் ரொம்ப வாடி இருந்தது.அவருக்கு கையிலே காப்பியைக் கொடுக்க வந்தாள் கமலா.தன் கணவன் முகத்தைப் பார்த்தாள் கமலா.தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.”என்ன இது, உங்க கண்க ரெண்டும் இப்படி சிவந்து இருக்கு.ராத்திரி பூரா நீங்க தூங்கவே இல்லையா” என்று கவ லையுடன் கேட்டாள் கமலா.

“ஆமா கமலா,நான் ராத்திரி பூராவும் தூங்கலே.எனக்குத் தூக்கமே வரலே. நான் என்ன பண்ண ட்டும் சொல்லு.ஒரு யோஜனைக்கு மேலே ஒரு யோஜனை சமுத்திர அலைகள் போல என் மனசிலே வந்துண்டே இருந்தது”என்று சொல்லி காப்பியைக் குடிக்க ஆரம்பித்தார் வரதன்

கமலா கொடுத்த ‘காபி டிபனை’ சாப்பிட்டு விட்டு ‘பாங்கு’க்குக் போனார் வரதன்.வரதன் ‘பாங்க்’ மேனேஜர் ரூமில் நுழைந்ததும் “வாங்க மிஸ்டர் வரதன்” என்று அவரை வரவேற்றார் ‘பாங்க்’ மேனேஜர்.

வரதன் மெல்ல சிரித்துக் கொண்டு “சார்,எனக்கு இன்னும் மூனு லக்ஷ ரூபாய் உடனே தேவை ப்படறது.நீங்கோ எனக்கு தர முடியுமா” என்று கேட்டார்.”சார்,நான் ஏற்கெனவே உங்களுக்கு ரொம்ப கடன் குடுத்து இருக்கேன்.அதுக்கே நீங்கோ ‘ரெகுலரா’ அசலும் கட்டலே.வட்டியும் கட்டலே. இனி மே உங்களுக்கு நான் கடன் தர முடியாது”என்று தீர்மானமாகச் சொன்னார் மேனேஜர்.

வீட்டுக்கு வந்த வரதன் “கமலா,’பாங்க்’ மானேஜர் நான் ‘ரெகுலரா’ அசலும் கட்டலே,வட்டியும் கட்டலே.இனிமே உங்களுக்கு கடன் தர முடியாது” ன்னு சொல்லிட்டார்” என்று சொன்னார்.கணவன் சொன்னதைக் கேட்ட கமலா மிகவும் வருத்தப் பட்டாள்.

கலெக்டர் ஆபீஸ் போய்க் கொண்டு இருந்த ராஜன்,வரதன் தன்னிடம் வந்து சண்டைப் போட்டதை நினைத்து மனம் கொதித்தார்.அவனை மறுபடியும் பழி வாங்க வேண்டும் என்று எண்ணினார்.

தன் ஆபீஸ்க்கு வந்ததும் முதல் வேலையாக தன் தொழிற்சாலை ‘யூனியன் தலைவரை’ தன் ‘ஆபீஸ்’க்கு வரச் சொன்னார் ராஜன்.யூனியன் தலைவர் வந்ததும் ராஜன் அவனுக்கு லஞ்சம் கொடு த்து “நீங்க வரதன் ‘பாக்டரி’ ‘யூனியன் தலைவர்களை’ என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க” என்று சொல்லி அனுப்பினார்.

அடுத்த நாள் சாயங்காலம் வரதன் ‘பாக்டரி யூனியன் தலைவர்கள்’ ராஜன் ரூமுக்கு வந்தார் கள்.அவர்களிடம் ராஜன் தன் ‘ப்லானை’ச் சொல்லி,அதை நடத்தச் சொல்லி அவர்களுக்கு ‘லஞ்சம் ’ கொடுத்தார்.அவர்கள் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.உடனே ராஜன் “அந்த ‘பாக் டரிலே ‘ஸ்ட்ரைக்’ நடந்து உங்க தொழிளாலர்களுக்கு வேலை இல்லாமப் போனா நான் ஆரம்பிக்கப் போற புது ‘ப்¡க்டரியிலே’ வேலை நிச்சியமா போட்டுத் தறேன்” என்று சொல்லி வில்லனை போல் அவர்களிடம் கண்ணை சிமிட்டினார்.

அடுத்த நாள் வரதன் ‘பாக்டரி’ யூனியன் தலைவர்கள்’ வரதனைப் பார்த்து “சார், விலை வாசி எல்லாம் ரொம்ப ஏறி வருது.அதனால்லே நீங்க உடனே எல்லா தொழிளாலர்களுக்கும் சம்பள உயர்வு, போனஸ் உயர்வு, ‘இன்சென்டிவ்’ உயர்வு எல்லாம் தரணும்”என்று கேட்டார்கள்.வரதனுக்கு அவர்கள் கேட்டது அதிர்ச்சியாய் இருந்தது.அவர் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *