ஆடிய ஆட்டம் என்ன, தேடிய செல்வம் என்ன…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2020
பார்வையிட்டோர்: 5,357 
 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

கொஞ்ச நேரம் கழித்து வரதன்”இதோ பாருங்க.உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லே.நம்ப ‘பாக்டரி’ இப்போ ரொம்ப நஷ்டலே போயிண்டு இருக்கு.இந்த நிலைமைலே என்னால் நீங்க கேக்கற சம்பள உயர்வு,போனஸ் உயர்வு ‘இன்சென்டிவ்’ உயர்வு எல்லாம் இப்போ தர முடியாது” என்று சொன் னார்.ஆனால் ‘யூனியன் தலைவர்கள்’ உடனே அவர்கள் கேட்டதை வரதன் கொடுத்தே தீர வேண்டும் என்று கேட்டு பிடிவாதம் பிடித்து வந்தார்கள்.

வரதன் அவர்களைப் பார்த்து “தயவு செஞ்சி ‘ஸ்ட்ரைக் மட்டும் பண்ணாதீங்க.நம்ம ப்காடரி’ இப்போ ரொம்ப நஷ்டத்தில் ஓடிண்டு இருக்கு”என்று கெஞ்சினார்.ஆனால் ‘யூனியன் தலைவர்கள்’ பதில் ஒன்னும் சொல்லாமல் எழுந்துப் போய் விட்டார்கள்.

வரதன் ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசரை’ தன் ரூமுக்கு அழைத்து “நாம் இப்போ ‘பாங்கு’க்கு கட்ட வேண்டிய கடன் எவ்வளவு பாக்கி இருக்கு.அதற்கு வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்.அந்த ‘டீடேல் ஸ்ஸை’ கொண்டு வாங்க”என்று சொன்னார்.

’அக்கவுண்ட்ஸ் ஆபீசர்’ உடனே தன் ‘ரூமு’க்குப் போய் தான் ரெடியாக வைத்து இருந்த வரவு செலவு கணக்கை வரதன் ‘ரூமு’க்குக் கொண்டு வந்து “சார்,நாம ‘பாங்கு’க்கு கட்ட வேண்டிய பாக்கி நாலு லக்ஷத்தி இருபத்தி ஆறாயிரம் ரூபாய்” என்று சொன்னார்.”இவ்வளவு பணமா நாம ‘பாங்கு’க்கு கட்டணும்” என்று கேட்டார் வரதன்.

”ஆமாம் சார்,நாலு மாசமா நாம ‘பாங்கு’க்கு பணமே கட்டலே” என்று ‘அக்கவுன்ட்ஸ் ஆபீசர் ’ சொன்னதும் வரதன் “அப்படியா,சா¢ நீங்க போங்க” என்று அவரை வெளியே அனுப்பி விட்டு யோஜ னைப் பண்ணினார்.

வீட்டுக்கு வந்த வரதன்,தன்னிடம் இருந்த ரெண்டு காரில் ஒரு காரை விற்று விட்டார்.வீட்டில் வேலை செய்து வந்த சமையல் கார மாமி,வேலைக்காரன்,தோட்டக்காரன் மூவரையும் வேலையில் இரு ந்து நிறுத்தி விட்டார்.அன்றில் இருந்து பள்ளிகூடத்திற்கு காரில் போய் வந்துக் கொண்டு இருந்த சுதா தன் ‘ப்ரெண்ட்ஸ்களுடன்’ ‘பஸ்’ஸில் போய் வந்துக் கொண்டு இருந்தாள்.

ஒரு வாரம் ஓடி விட்டது.மணி பதினொன்னு இருக்கும். ‘யூனியன் ஹெட் ஆபிஸில்’ இருந்து ஏகநாதனுக்கு ‘பாக்டரி ஸ்ட்ரை நோடீஸை’ ‘கொரியரில்’ வந்து இருந்தது.
வாங்கிப் பிரித்துப் படித்தார் வரதன்.’இந்த வாரம் திங்கக் கிழமையில் இருந்து ‘பாக்டரிக்கு’ ஒரு தொழிளாலர் கூட வேலைக்கு வர மாட்டார்கள்” என்று குறிப்பிட்டு இருந்தது. அவர்கள் அனுப்பி இருந்த ‘ஸ்ட்ரைக் நோட்டீஸில்’.அதை வாங்கி தன் ‘டிராயரு’க்குள் போட்டார் வரதன்.

வீட்டுக்கு வந்ததும் கமலாவைக் கூப்பிட்டு “கமலா,’யூனியன் ஆபிஸ்’ இருந்து எனக்கு ‘ஸ்ட் ரைக் நோட்டீஸ்’ அனுப்பிட்டா.வர திங்கக் கிழமையில் இருந்து யாரும் வேலைக்கு வர மாட்டா” என்று சொல்லி நிறுத்தினார்.

”இப்ப நாம் என்ன பண்ணப் போறோம்.இந்த திங்கக் கிழமைலே இருந்து ‘பாக்டரி’ மூடி இருக் குமா.முழுக்க மூடிட்டா நாம் எப்படி ‘பாங்கு’க்கு பணம் கட்டறது.மீதி செலவை எப்படி சமாளிக்கறது. நீங்க என்னப் பண்ணப் போறேள்” என்று தன் கணவன் கையைப் பிடித்துக் கேட்டாள் கமலா.வரதன் அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தார்.
நிறைய பணம் சேரவே ராஜன் ECR ரோடில் ஒரு புதிய பங்களா ஒன்றை வாங்கி அதற்கு கோலாகலமாக ‘கிருஹபிரவேசம்’ விழா’ நடத்தினார்.‘கிருஹபிரவேசம்’ விழாவுக்கு வரதனுக்கு அழைப்பே அனுப்பவில்லை ராஜன்.தன் கணவர் இப்படி பண்ணதைப் பார்த்த லலிதா மிகவும் வருத்தப் பட்டாள்.

”நீங்கோ பணறது கொஞ்சம் கூட நன்னாவே இல்லே.உங்க தம்பியையும்,அவர் சம்சாரத்தையும் இப்படி பகைச்சுண்டு வரலாமா.அவா நமக்கு சாபம் குடுத்தா அது நம்ம குடும்பத்தைத் தாக்குமே” என்று கவலையுடன் சொன்னாள்.உடனே ராஜன் “அவன் என் ‘ஸ்டேடஸ்’க்கு ‘லாயக்கு’ இல்லே” என்று கர்வமாகச் சொன்னான்.
லலிதா தன் மனதில் ‘உங்க தம்பியே,உங்க ஸ்டேடஸ்’க்கு லாயக்கு இல்லாவதவனா பண்ணதே இவர் தானே.அது எனக்குத் தொ¢யாதா என்ன.இவர் அம்மா அப்பா உயிரோடு இருந்து இருந்தா,இவ ரே இப்படி பண்ண விட்டு இருப்பாளா.அண்ணா தம்பி ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்கணும்ன்னு சத்தியம் வாங்கிண்டு அவ பரலோகம் போயிட்டா.ஆனா இவா ரெண்டு பேரும் அப்படி இல்லையே’ என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள்.

வரதன் குடும்ப நண்பர் வரதனுக்கு ‘போன்’ பண்ணி “உங்க அண்ணா ECR ரோடில் ஒரு புதிய பங்களா ஒன்னை வாங்கி அதுக்கு கோலாகலமா ‘கிருஹப் பிரவேசம் பண்ணாரே.ஆனா நீங்க ளும் உங்க சம்சாரமும் அந்த ‘பன்ஷனுக்கு’ வரலையே.உங்களுக்கு உடம்பு ஏதாவது சா¢ இல்லையா” என்று கேட்டதும் வரதன் அவரிடம் “நீங்கோ சொன்னதுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’.எங்க ரெண்டு பேரு டைய ‘ரிலேஷன்ஷிப்’ இப்போ நன்னா இல்லே” என்று மொட்டையாக சொல்லி விட்டு வருத்ததுடன் ‘போனை‘ ’கட்’ பண்ணினார்.

‘கிருஹப் பிரவேசம்’விழா விஷயத்தைக் கேள்விப் பட்டு மிகவும் வருத்தப் பட்டார் வரதன். மனைவி இடம் சொல்லி அழுதார்.கமலா தன் கணவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
கொஞ்ச நேரம் ஆனதும் வரதன் தன்னை சுதாரித்துக் கொண்டு கமலா “அண்ணா, ECR ரோ டிலே ஒரு பங்களா வாங்கிண்டு இருக்கான்.அவன் என் அப்பா அம்மா இருந்து வந்த பங்களாவை வாடகைக்கு விடுவான் போல இருக்கு.அப்படி அவன் வாடகைக்கு அந்த பங்களாவை விட்டா,அந்த வாடகைலே எனக்கு பாதி பணம் சேரணுமே.நான் போய் அவனை கேட்டுட்டு வறேன்”என்று சொல்லி விட்டு ராஜன் பங்களாவுக்குப் போனார் வரதன்.

வரதனைப் பார்த்ததும் ராஜன் ”இங்கே ஏண்டா இங்கே வந்தே.உனக்கும் எனக்கும் என்னடா இருக்கு இப்போ.நீ யாரோ, நான் யாரோடா இப்போ” என்று கத்தினார்.
வரதன் மிகவும் நிதானமாக “ஏன் அண்ணா அப்படி சொல்றே.என் ‘ப்லாஸ்டிக்’ வியாபாரத்தைத் தான் நீ அடியோடு ஒழிச்சுட்டே.உன்னுடைய தயவாலே நான் அந்த ‘ப்லாஸ்டிக் வியாபாரத்லே ‘ஜீரோ’ ஆயிட்டேன்.நான் இப்போ ரொம்ப பணக் கஷ்டத்லே இருந்துண்டு வறேன்.நான் இப்போ உன்னைக் கேக்க வந்தது எல்லாம் அப்பா அம்மா வாங்கின இந்த பங்களாவைப் பத்தி தான்” என்று மெல்ல கேட்டார் வரதன்.

உடனே ராஜன் “உனக்கும் இந்த பங்களாவுக்கும் என்னடா சம்பந்தம்.அப்பா இந்த பங்களா முழுக்க எனகுத் தான் சொந்தம்ன்னு அவர் உயிரோடு இருக்கும் போது ஒரு உயில் எழுதிக் குடுத்து இருக்காரே.உனக்குத் தொ¢யாதா.இனிமே அந்த பங்களாவைப் பத்தி கேட்டுண்டு இந்த பக்கமே வரா தே.அவர் ‘சேவிங்க்ஸ் புக்லே’ முப்பதாயிரம் ரூபாய் ‘பாலன்ஸ்’ இருக்கு.அதிலே பாதி பதினைஞ்சாயி ரம் உனக்கு சேரணும்.அதே நான் இப்போ உனக்குத் தறேன்” என்று சொல்லி விட்டு தன் ‘ப்ரீப்’ கேசைத் திறந்து பதினைஞ்சாயிரம் ரூபாயை எடுத்து வரதனிடன் கொடுத்தான்.

ராஜன் சொன்னதைக் கேட்டு திடுக்கிட்டார் வரதன்.

”அடப் பாவி,இந்த மோசடியையும் நீ பண்ணி என்னை ஏமாத்தி விட்டாயா.அப்பா ஒரு போதும் அவ்வளவு கம்மிப் பணத்தை தன் ‘சேவிங்க்ஸ் அக்கவுண்ட்’லே வச்சுண்டு வந்து இருக்கமாட்டார். தவிர இந்த பங்களாவை முழுக்க உன் பேர்லே எழுதியும் குடுத்து இருக்க மாட்டார்.நீ சொல்றது சுத்தப் பொய்.நீ ஏதோ ‘போர்ஜரி’ பண்ணித் தான் அந்த பங்களாவையும்,அவர் பணத்தையும் உன் பேர்லே மாத்திண்டு இருக்கே.எனக்கு இந்த பதினைஞ்சாயிரம் ரூபாய் வேணவே வேணாம்.அதையும் நீயே வச்சுண்டு இன்னும் சந்தோஷமா இருந்துண்டு வா.நான் ‘ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ்’க்கு போய் விசா ரிக்கப் போறேன்” என்று சொல்லி விட்டு பங்களாவை விட்டு வெளியே வந்தான் வரதன்.
வரதன் போனதும் லலிதா “நீங்கோ பணறது ரொம்ப சா¢யே இல்லே.அவர் பாவம் ரொம்ப நொடி ஞ்சுப் போய் இருக்கார்.அவர் சாபம் குடுத்தா அது நம்ம குடும்பத்தைத் தாக்கும்.உங்க கிட்டே தான் இவ்வளவு பணம் இருக்கே.இப்பவாவது அவருக்கு கொஞ்சம் பணம் குடுத்து உதவுங்களேன்” என்று கணவனைக் கெஞ்சினாள்.

ராஜன் அதற்கு பதில் ஒன்னும் சொல்லாமல் அன்றைய பேப்பரைப் படித்துக் கொண்டு இருந் தார்.லலிதா மிகவும் வருத்தப் பட்டாள்.

அண்ணனைத் திட்டிக் கொண்டே‘ரெஜிஸ்தர் ஆபீஸ்’க்குப் போய் அங்கு இருந்த அதிகாரி இடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பங்களாவை பத்தி விசாரித்தார் வரதன்,
அந்த அதிகாரி பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவனுடைய உதவி அதிகா ரியைக் கூப்பிட்டு வரதன் சொன்ன பங்களாவின் ‘ஒரிஜினல் பத்திர காப்பி’யைப் பார்க்கச் சொன்னார். வரதன் பொறுமையாக உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.ஒரு மணி நேரம் கழித்து அந்த உதவி அதிகாரி மேல் அதிகாரி இடம் வந்து “சார்,அந்த பங்களா ராஜன் என்பவர் மேலே ரெஜிஸ்தர் ஆகி இருக்கு” என்று சொன்னார்.அந்த அதிகாரி சொன்னதை கேட்டு வரதனுக்கு தூக்கி வாரிப் போட்டது.

வருத்தப் பட்டுக் கொண்டே வீட்டுக்கு வந்து கமலாவிடம் தன் அண்ணன் பண்ண எல்லா மோசடிகளையும் சொல்லி வருத்தப் பட்டார்.வரதன் சொன்னதைக் கேட்டு கமலாவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.உடனே கமலா “வாங்கோ,ரொம்ப நேரம் ஆயிடுத்து.நீங்கோ வேறே ரொம்ப களைப்பா இருக் கேள்.கை காலே எல்லாம் அலம்பிண்டு முதல்லே சாப்பிட வாங்கோ.அப்புறமா மத்ததே நாம நிதானமா பேசலாம்”என்று சொல்லி விட்டு தட்டைப் போட்டு தான் சமைத்து வைத்து இருந்த சாப்பாட்டை பறி மாறினாள்.வரதனும் தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தார்.

சாப்பிட்டு முடிந்ததும் வரதன் கமலா சாப்பிட்டு விட்டு வரும் வரையில் காத்துக் கொண்டு இரு ந்தார்.கமலா சாப்பிட்டு முடிந்ததும் வரதன் “வா உக்கார் கமலா.இனி மேலே நாம் ஒன்னும் பண்ண முடியாது.நான் வீட்டுக்கு வரும் போது யோஜனைப் பண்ணிண்டே வந்தேன்.நான் ‘பாங்கு’க்குப் போய் நம்ம பங்களா,கார்,‘பாக்டரி’,எல்லாத்தையும் மொத்தமா ஏலத்லே விக்கச் சொல்லிட்டு ‘பாங்க்’ க்கு நான் கட்ட வேண்டிய பாக்கியை எடுத்துண்டு,மீதி என்ன பணம் இருக்கோ அதை என் கையிலே தரச் சொல்லப் போறேன்.இனிமே நான் ‘ப்லாஸ்டிக் பாக்டரியை’ நடத்தப் போறது இல்லே கமலா. ’ஸ்ட்ரைக் நோட்டீஸ்’ குடுத்த தொழிலாலர்கள் இனிமே ‘பாக்டரிக்கு’ வே¨க்கு வரவே வேணாம். மூடின ‘பாக்டரி’ மூடினதாவே இருக்கட்டும்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண் டார்.

தன் கணவன் சொல்வதை ஆச்சா¢யமாகக் கேட்டுக் கொண்டு இருந்தாள் கமலா.

கொஞ்ச நேரம் ஆனதும் வரதன்” ‘பாங்கு’ எனக்கு குடுக்கிற மீதி பணத்தை வச்சி நாம் வேறே ஏதாவது ‘பிசினஸ்ஸை’ நான் பண்ணப் போறேன் கமலா.இது தான் என் ‘ப்லான்’. நான் பண்ணப் போற ‘பிசினஸ்ஸிலே’ அந்த நய வஞ்சகன் ராஜன் என்னை ஒன்னும் பண்ண முடியாது.நான் பண் ணப் போற ‘பிஸினஸ்ஸை’ கொஞ்சம் கொஞ்சமா நன்னா நடத்தி வந்து,நாம முன்னுக்கு வந்து, சந் தோஷமா இருந்து வந்துண்டு,நம்ம சுதாவை நன்னா படிக்க வச்சு,அவளை ஒரு நல்லப் பையனாப் பாத்து கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டு,அப்புறமா நாம் சந்தோஷமா இருந்து வரலாம்.நாம் ஒரு புது வாழ்க்கை தொடங்கலாம்.இது தான் என் புது ‘ப்லான்’.இந்த ‘ப்லானை’ நான் முழு வெற்றிகரமா முடிக்க, நீயும் என்னோடு கை கோத்து வந்து எனக்கு உதவியா இருந்து வரணும்.நீ செய்வியா கமலா” என்று கமலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணில் நீர் மல்கக் கேட்டார் வரதன்.
தன் கணவன் சொன்னதைக் கேட்ட கமலாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை

’இப்ப இருக்கற ‘பாக்டரி’,இந்த பங்களா,கார்,எல்லாத்தையும் வித்து விடப் போறாராமே.அப்புற மா புது ‘பிசினஸ்’ ஆரம்பிக்கப் போறாராமே.அப்புறமா சந்தோஷமா இருந்து வரப் போறாராமே.இது எல்லாம் நடக்குமா.இல்லை இதெல்லாம் இவர் வெறுமனே கட்டும் ஆகாய கோட்டையா.இவை எல்லா ம் நடை முறைக்கு வருமா’ என்று அவள் நம்ப முடியாமல் தவித்தாள் கமலா.

தன் கணவன் சொன்னதைக் கேட்டு கமலா ஆகாயத்தைப் பார்த்து யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

“என்ன கமலா,நான் என் ‘ப்லானை’ச் சொல்லிண்டு இருக்கேன்.நீ என்னமோ ஆகாசத்தே பார்த்துண்டு யோஜனை பண்ணிண்டு இருக்கே.நான் சொன்னதுக்குப் பதில் சொல்லு கமலா” என்று சொல்லி கமலாவின் தோளைப் பிடித்துக் கொண்டுக் கேட்டார் வரதன்.

”நீங்கோ சொல்ற ‘ப்லான்’ கேக்க நன்னாத் தான் இருக்கு.எல்லாம் நீங்கோ சொல்றா மாதிரி நன்னா போகுமாங்க” என்று பயத்தோடு கேட்டார் கமலா.”நிச்சியமா போகும் கமலா.நீ கவலையே படாதே.நான் சொன்னபடி பண்ணி என்’ ப்லானை’ வெற்றிகரமா முடிச்சு காட்டறேன்.இது நிச்சியம் கமலா” என்று சொன்னார் வரதன்.உடனே “உங்களுக்கு அவ்வளவு ¨தா¢யம் இருந்தா,நீங்கோ அந்த புது ‘பிஸினஸ்ஸை’ ஆரம்பியுங்கோ.நான் உங்களுக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பையும் நிச்சியமா தறேன்.நீங்கோ கவலையே பட வேணாம்” என்று சொல்லி தன் கணவனுக்கு தைரியம் சொன்னாள் கமலா.

ரவி B.E.படித்து முடித்தவுடன் ராஜன் தம்பதிகள அவனை மேல் படிப்புக்காக அமெரிக்கா அனுப்பி வைத்தார்கள்.ரவி அமெரிக்கா போனதை நினைத்து சந்தோஷப் பட்டார்கள் இருவரும்.

ஜோஸ்யர் சொன்ன ஏழரை நாட்டு சனி முடிந்தவுடன் வரதன் கமலாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போய் சனி பகவானுக்கு ஒரு அர்ச்சனையைப் பண்ணிக் கொண்டு சனி பகவானை நன்றாக வேண்டிக் கொண்டார் வரதன்.’பகவானே,நான் ஆரம்பிக்கப் போற புது ‘பிஸின்ஸ்’லே என க்கு எந்த கஷ்டமும் இல்லாம் சௌக்கியமா வச்சுண்டு வா.நான் இது வரைக்கும் பட்ட கஷ்டம் போது ம்பா சனி பகவானே’ என்று வேண்டிக் கொண்டார்.

வரதன் கமலாவிடம் சொல்லிக் கொண்டு ‘பாங்கு’க்குப் போனார்.’பாங்க் மானேஜரி’டம் சார், நீங்க என்னுடைய பங்களா,கார்,’ப்லாஸ்டிக் பாக்டரி’ எல்லாவற்ரையும் ஏலத்தில் விட்டுட்டு, நான் உங்களுக்குக் கட்ட வேண்டிய பாக்கி ‘அம்மவுண்டை’எடுத்துண்டு,மீதி பணத்தை எனக்குக் குடுங்க. நான் இனிமே அந்த ‘பாக்டரியே’ நடத்தப் போறதே இல்லே” என்று சொல்லி விட்டு வந்தார்.

ஒரு வாரம் கழித்து ‘பாங்க்’ மானேஜர் வரதனை பாங்குக்கு வரச் சொன்னார்.வரதன் வந்ததும் “சார்,உங்க பங்களா,கார்,’ப்லாஸ்டிக் பாக்டரி’ மூனையும் ஏலத்லே விட்டு வந்த பணத்லே,எங்க ‘பாங்க்’ பாக்கியை எடுத்துக் கிட்டு,மீதி பணம் ஆன ரெண்டு லக்ஷ ரூபாயை நான் உங்களுக்கு இப்போ தறேன்” என்று சொல்லிவிட்டு,ஏலத்தில் வரதன் காருக்கு,பங்களாவுக்கு ‘ப்லாஸ்டிக் பாகடரி’ க்கு வந்த பணத்தின் ‘ஸ்டேட்மெண்டை’க் காட்டினார்.

வரதன் பாங்க் மானேஜர் காட்டின ‘ஸ்டேட்மெண்டை’ மூன்று தடவை திருப்பி திருப்பிப் படித்துப் பார்த்தார்.அவருக்கு மிகவும் வருத்தமாய் இருந்தது.’நம்ம பங்களா,கார்,’ப்லாஸ்டிக் பாக்டரி’ மூனையும் நாம எவ்வளவு பணத்துக்கு வாங்கினோம்.இப்போ மூனும் இந்த விலைக்காப் போய் இரு க்கு.ஒரு ஏலம்ன்னு விட்டா கம்மிப் பணத்துக்கு தானே ஏலம் எடுக்க வறவா வாங்குவா’ என்று நினை த்து மிகவும் வருத்தப் பட்டார்.வரதன் கண்களில் கண்ணீர் முட்டியது.

ஒரு அரை மணி நேரம் கழத்து வரதன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே’சா¢ சார்.நான் நீங்க குடுத்த ‘ஸ்டேட்மெண்டை’ப் பாத்துட்டேன்.மூனும் ரொம்ப கம்மியான விலைக்குத் தான் போய் இருக்கு” என்று சொன்னதும்,அந்த ‘பாங்க் மானேஜர்’ வருத்தப் பட்டுக் கொண்டே” ஆமாம் சார், நீங்க சொல்றது ரொம்ப சா¢.எந்த பொருளையும் ஏலத்லே விட்டா,ஏலம் எடுக்க வறவங்க ரொம்ப கம்மி விலைக்குத் தான் எடுப்பாங்க” என்று சொன்னார்.

ஒரு பத்து நிமிஷம் ‘பாங்க் மானேஜரி’டம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,வரதன்”ரொம்ப தாங்க்ஸ் சார்.நீங்க காரையும்,‘ப்காடரியையும்’ இப்பவே எடுத்தக்கலாம்.நான் வேறே ஒரு வீட்டை இன்னும் பத்து நாள்ளே பாத்துண்டறேன்.எனக்கு பங்களாவே ஒரு பத்து நாள் வச்சுக்க டயம் குடுங்க” என்று கேட்டதும் அந்த ‘பாங்க் மானேஜர்’ ஒத்துக் கொண்டார்.வரதன் தான் இத்தனை நாள் உபயோக ப் படுத்தி வந்த காரை ‘பாங்கி’லேயே விட்டு விட்டு வருத்தத்தோடு வீட்டுக்கு வந்தார்.

வரதன் ஒரு ஆட்டோவை வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து கமலாவிடம் ‘பாங்கி’ல் நடந்த எல்லா சமாசாரங்களையும் வருத்ததுடன் சொன்னார்.

எட்டு நாட்களில் வரதன் கே.கே.நகா¢ல் ஒரு சின்ன வீடாய் வாடகைக்குப் பார்த்து பங்களாவில் இருந்த சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு தங்கினார்.அன்று சாயந்திரமே வரதன் அவர் தங்கி வந்த பங்களா சாவியை ‘பாங்க்’மானேஜர் இடம் கொடுத்து விட்டு,அவர் கொடுத்த ரெண்டு லக்ஷ ரூபாயை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

தன்னுடைய வீட்டுக்கு பக்கத்திலேயே,ஒரு சின்ன கடையாக வாடகைக்குப் பார்த்து ஒரு மளிகை கடையை ஆரம்பித்து நடத்தி வர ஆரம்பித்தார் வரதன்.தன் வீட்டுக்கு வேண்டிய மளிகை சாமான்களை கடையில் இருந்து எடுத்துக் கொண்டு குடும்பம் நடத்தி கொண்டு வந்தார் வரதன்.

இரண்டு வருஷம் ஆனதும் சுதா ‘ட்வெல்த் பாஸ்’ பண்ணினாள்.வரதனும் கமலாவும் சுதா ‘ட்வெல்த் பாஸ்’ பண்ணினது போதும்,அவளுக்கு தங்களிடம் இருந்த பணத்தில் ஒரு கல்யாணத்தை ப் பண்ணி வைக்க முடிவு பண்ணீனார்கள்.

ராஜன் தன் ‘பாக்டரி’ பக்கத்திலேயே இன்னொரு இடத்தைப் பார்த்து ஒரு ‘ப்லாஸ்டிக்’ ‘பாக் டரி’ ஆரம்பித்தார்.ராஜன்,வரதன் ‘பாக்டரியில்’ வேலை செய்து ‘யூனியன் தலைவரிடம்’ சொன்னது போல அந்த ‘பாகடரி’யிலே வரதன் ‘பாக்டரி’யில் வேலை செய்து வந்த எல்லாத் தொழிளாலர்களை யும் வேலைக்கு எடுத்துக் கொண்டார்.’வரதன் பாக்டரி யூனியன் தலைவர்களும்’ எல்லா தொழிலா ளர்களும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.எல்லோரும் ராஜனுக்கு தங்கள் நன்றியைத் தொ¢வித்துக்
கொண்டார்ர்கள்.

அமெரிக்காப் போன ரவி அவன் படிப்பு முடிந்து MS ‘பாஸ்’ பண்ணினான்.இந்த சந்தோஷ சமாசாரத்தை அப்பா அம்மாவுக்கு ‘போன்’ பண்ணி சொன்னான்.ரவி சொன்னதை கேட்ட ராஜனும் லலிதாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ராஜன் லலிதாவிடம் “லலி, ரவி ஒரு MS ‘பாஸ்’ பண்ணிட்டான்.அவனை சென்னைக்கு சீக்கி ரமா திரும்பி வரச் சொல்லி,என் ‘பாக்டரிகளை’ ‘மானேஜ்’ பண்ணீண்டு வரச் சொல்லிட்டு,நான் ‘ஹாய்யா’ ஒரு ‘ரிடயர்ட் லபை எஞ்சாய்’ பண்ணிண்டு வரலாம்ன்னு ரொம்ப ஆசைப் படறேன். அப்புறமா ரவி நன்னா செட்டில் ஆனவுடனே அவனுக்கு ஒரு நல்ல பணக்கார பொண்ணாப் பாத்து ‘ஜாம்’ ‘ஜாம்’ந்னு ஒரு கல்யாணத்தை பண்ணீ வச்சுட்டு,என் அம்மா அப்பா பண்ணா மாதிரி ஒரு ‘யூரப் டூர்’,’ஆஸ்திரேலியா டூர்’ ரெண்டும் பாக்கணும்ன்னு ரொம்ப ஆசை ப் படறேன்” என்று சொன் னார்.உடனே லலிதா “எனக்கும் யூரப்,ஆஸ்திரேலியா எல்லாம் சுத்திப் பாக்க ரொம்ப ஆசையா இரு க்கு.நாம நிச்சியமா போய் வரலாம்” என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.

ஒரு மாசம் ஆனதும் ரவி அம்மா அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி “அப்பா,அம்மா உங்க ரெண்டு பேருக்கும் ரெண்டு ‘க்லாட் நியூஸ்’ சொல்லப் போறேன்.முதாலாவதாக எனக்கு ஒரு அமெரிக்கக் கம்பனிலே ஒரு நல்ல வேலே கிடைச்சு இருக்கு.ரெண்டாவதாக நான் ஒரு அமெரிக்கப் பொண்ணே காதலிச்சுக் கல்யாணம் பண்ணீண்டு,நான் ஒரு ‘அமெரிக்க சிடிஸன்’ ஆயீட்டேன்.எனக்கு இந்தியா வரப் பிடிக்ககலே.நான் அமெரிக்காவிலேயே இருந்து வரப்…..” என்று ரவி ‘ஸ்பீக்கர் ‘போன்’லே சொன்னதைக் கேட்ட லலிதா “ரவி இனிமே இந்தியாவே வரமாட்டானா.நான் அவனுக்கு ஒரு கல்யா ணத்தே பண்ணி வச்சு,அவனுடனும் மாட்டுப் பொண்ணோடவும் சந்தோஷமா…” என்று சொல்லிக் கொண்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ’பொத்’ என்று சோபாவில் சாய்ந்தாள்.

ஏற்கெனவே ஒரு ‘ஹார்ட் பேஷண்டான’ லலிதாவுக்கு ரவி பேசினதைக் கேட்டதும் நெஞ்சு இன்னும் வலி அதிகம் ஆகி,சாய்ந்தவள் தலை நிமிரவே இல்லை.

லலிதா உடம்பைத் தொட்டுப் பார்த்த ராஜனுக்கு தேள் கொட்டியது போல இருந்தது.லலிதா உடம்பு ‘ஜில்’ என்று இருந்தது.ராஜன் தன் மணைவி லலிதாவின் தலையை தன் மடி மேலே வைத்துக் கொண்டு “லலிதா,நீ இப்படி திடீர்ன்னு என்னே விட்டுட்டுப் போயிட்டயே.நான் ஒரு தனி மரம் ஆயிட் டேனே.இனிமே இந்த பங்களாலே நான் எப்படி தனியா வாழ்ந்துண்டு வறப் போறேன்.யாருக்காக இப் படி தனியா தவிச்சுண்டு வரப் போறேன்” என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

ராஜனின் வேலைக்காரன் ஒரு ‘ஐஸ் பெட்டியை’ யும் ரெண்டு மாலைகளையும்வாங்கி வந்தான். அவனும் சமையல் கார மாமாவும் லலிதாவின் ‘பூத உடலை’ மெல்ல தூக்கி அந்த ‘ஐஸ் பெட்டி’ க்குள் வைத்து,இருவரும் லலிதா ‘ஐஸ் பெட்டி’ மேலே மலையைப் போட்டார்கள்.விஷயம் கேள்விப் பட்டு ராஜனின் நண்பர்கள் எல்லாம் ராஜனுடைய பங்காளாவுக்கு வந்தார்கள்.எல்லா நண்பர்களும் லலிதா ‘ஐஸ் பெட்டி’ மேலே அவர்கள் வாங்கிக் கொண்டு வந்த ரோஜாப்பூ மாலைகளைப் போட்டு லலிதா வுக்கு வணக்கம் செலுத்தினார்கள்.

ஒரு மணி நேரம் அழுதுக் கொண்டு இருந்து விட்டு ராஜன் லலிதா உடம்பை ‘தகனம்’ பண்ணி விட்டு வந்தார்.அன்றில் இருந்து ராஜன் அந்த பங்களாவிலே ஒரு தனி மரம் ஆனான்.அவனுக்கு வாழவே பிடிக்கவில்லை.மூன்று மணிக்கு ஒரு தரம் ‘பைப்’ பிடித்து வந்தவன்,இப்போது பையித்தியம் பிடித்தவன் போல அரை மணிக்கு ஒரு தடவை ‘பைப்’பைப் பிடித்து வந்தான்.அவன் ‘பாக்டரிகளுக் கு’ எல்லாம் போகாமல் பங்களாவிலேயே இருந்து வந்தார்.

கமலா சேலத்தில் இருந்த ஒரு தன் உறவுக்காரர் பையனின் ஜாதகத்தை வாங்கி சுதா ஜாதகத் துடன் பொருத்தம் பார்த்து,பையனுக்கும் சுதாவுக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடித்து இருக்கவே ஒரு நல்ல முஹ¥ர்த்த நாளில் கல்யாணம் வரதன் கமலா தம்பதிகள் சுதா கல்யாணத்தை செய்து முடித்தார் கள்.கல்யாணம் ஆன இரண்டாவது நாளே சுதா அம்மா,அப்பாவிடம் சொல்லிக் கொண்டு,தன் கணவனுடன் சேலத்திற்குப் போய் விட்டாள்.

ஒரு வருடம் ஓடி விட்டது.

அன்று காலையில் சமையல் கார மாமா கொடுத்த இட்லியின் ஒரு துண்டை எடுத்து ராஜன் வாயிலே போட்டுக் கொண்டான்.அந்த இட்லித் துண்டை ராஜனால் முழுங்கவே முடியவில்லை.கொ ஞ்சம் தண்ணீரைக் குடித்து மெல்ல அந்த துண்டை தொண்டைக்குள் முழுங்கினான்.அவனால் அடு த்த துண்டை சாப்பிடவே முடியவில்லை.உடனே ராஜன் தன் டிரைவருடன் ‘அப்போலோ ஹாஸ்பிட லுக்கு’ப் போய் தன் ‘பாமிலி’ டாக்டரிடம் அவன் ‘ப்ராப்லெத்தை சொன்னான்.

அந்த டாக்டர் உடனே ராஜனின் தொண்டைக் குழாயை ‘ஸ்கேன்’ பண்ணிப் பார்த்தார்.அவருக்கு ‘ஷாக்’காக இருந்தது.”என்ன மிஸ்டர் ராஜன்,நீங்க உங்க புற்று நோயை இவ்வளவு முத்த வச்சுட்டு இருக்கீங்க.உங்க தொண்டை குழாய் முழுக்க அடைச்சு இருக்கே.உங்களாலே இனிமே ஒன்னும் ‘சா லிடா’ சாப்பிடவே முடியாதே.நீங்க வெறுமனே ‘லிக்விட் டயட்லே’ தான் இருந்து வரணும்”என்று சொன்னதும் ராஜனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.”அப்படியா சார்,கொஞ்ச நாளாவே எனக்கு வேகமா சாப்பிட முடியாம இருந்துது.இது தான் காரணமா டாக்டர்” என்று சொல்லும் போது,அவனை அறியா மல் அவன் அழுதான்.

அந்த டாக்டர் ராஜனைப் பார்த்து” மிஸ்டர் ராஜன்,உங்க வைப் உங்க கூட இல்லையா” என்று கேட்டார்.

ராஜன் அழுதுக் கொண்டே அந்த டாக்டரிடம் “என் ‘சன்’ அவன் அமெரிக்கா படிப்பு முடிஞ்சி ஒரு வேலை கிடைச்சதும், அவன் ஒரு அமெரிக்கப் பொண்ணே கல்யாணம் பண்ணீண்டு, ஒரு அமெ ரிக்க ‘சிடிஸன்’ ஆயிட்டான்.அவன் இனிமே இந்தியா திரும்பி வர மாட்டேன்னு எங்களுக்கு ‘போன்’ பண்ணீ சொன்னான்.இந்த ‘ஷாக்கிங்க் நியூஸை’ தாங்கிக்க முடியாம என் ‘வைப் ஹார்ட் அட்டாக்’ வந்து ஐஞ்சு நிமிஷத்துக்கு எல்லாம் செத்துப் போயிட்டா டாக்டர்.அவ போனப்புறமா நான் ஒரு தனி மரம் ஆயிட்டேன்.என் கவலையை மறக்க நான் மூனு மணிக்கு ஒரு தரம் ‘பைப்’ பிடிச்சு வந்தவன், பையித்தியம் பிடிச்சவன் மாதிரி அரை மணிக்கு ஒரு தடவை ‘பைப்’பைப் பிடிச்சுண்டு வறேன்.நான் ’பாக்டரி’க்கும் போறதே இல்லே” என்று சொன்னார்.டாகடர் ராஜன் சொன்னதைக் கேட்டதும் மிக வும் வருத்தப் பட்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த டாக்டர் ”’பைப்’ பிடிக்கிறதாலே தான் உங்களுக்கு இந்த புற்று நோய் வந்து இருக்கு” என்று சொன்னார்.டாக்டர சொன்னத்தைக் கேட்டு ராஜன் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டு இருந்தார்.

ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்.ராஜன் வெறுமனே ‘லிக்விட் டயட்லே’ இருந்து வந்ததால், அவன் உடம்பில் பலம் இல்லாமல் பேசவே மிகவும் கஷ்டப் பட்டுக் கொண்டு வந்தான்.அவன் மூச்சு விடவே மிகவும் சிரமப் பட்டுக் கொண்டு வந்தான்.ராஜனுக்கு நாம ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டோம் என்று தொ¢ந்து விட்டது.ராஜன் அழுதுக் கொண்டே டாகடரிடம்” டாக்டர்,இது தான் என் தம்பி வரதன் ‘செல் போன் நம்பர்.நீங்க… தயவு.. செஞ்சி.. அவரையும்.. அவர் சம்சாரத்தையும். என்னே வந்து கொஞ்சம்.. பாக்க.. சொல்ல முடியுமா” என்று மூச்சு முட்ட முட்டச் சொன்னான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

டாக்டர் வரதனுக்கு ‘போன்’ பண்ணீனார்.வரதன் ‘டாய்லெட்டில்’ இருந்ததால் கமலா தான் ‘செல் போனை’ ஆன்’ பண்ணிப் பேசினாள்.’போனில்’ ”நான் டாக்டர் ‘அப்போலோ ஹாஸ்பிடலில்’ இருந்து டாக்டர் சேகர் பேசறேன்” என்று சொன்னதும் கமலா “சொல்லுங்கோ டாக்டர்” என்று கேட்ட தும் டாக்டர் “மிஸ்டர் வரதன் இருக்காரா” என்று கேட்டதும் கமலா “நான் அவருடைய ‘வைப்’ தான் பேசறேன்.என்ன விஷயம் சொல்லுங்கோ” என்று கேட்டதும் அந்த டாக்டர் “மிஸ்டர் வரதனின் ‘பிரதர்’ ராஜன் இப்போ இங்கே வைத்தியம் பாத்துக் கிட்டு வறார்.அவர் மூச்சு விடவே ரொம்ப கஷ்டப் பட்டுக் கிட்டு வறார்.அவர் உடம்பு ரொம்ப மோசமா இருக்கு.நீங்க உங்க ‘ஹஸ்பெண்டை’ அழைச்சுக் கிட்டு கொஞ்சம் ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ வர முடியுமா” என்று கேட்டார்.உடனே கமலா “டாக்டர், நாங்க இன்னும் ஒரு மணி நேரத்துகுள்ளே ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ வறோம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது வரதன் ‘டாய்லெட்டில்’ இருந்து வெளியே வந்தார்.

கமலா ‘அப்போலோ ஹாஸ்பிடல்’ டாக்டர் சொன்ன மொத்த சமாசாரத்தையும் சொல்லி விட்டு “இந்த நேரத்லே நாம எந்த பழி உணர்சியை மனசிலே வச்சுக்கக் கூடாது.அவர் உடம்பு ரொம்ப மோச மா இருக்காம்.நீங்க உடனே ‘ரெடி’ ஆகி கிளம்புங்க” என்று சொன்னதும் வரதன் ஒரு பக்கம் ஆச்சா¢ய மும்,ஒரு பக்கம் தன் அண்ணன் மேலே கோவமாயும் இருந்தார்.கமலா சொல்லவே வரதன் ‘ரெடி’ ஆனார்.இருவரும் ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு ‘அப்போலோ ஹாஸ்பிடலுக்கு’ப் போய் விசாரித் துக் கொண்டு ராஜன் இருந்த ‘பெட்’ அருகில் போனார்கள்.

தன் தம்பி வரதனையும் கமலாவையும் பார்த்ததும், ராஜன் தன் கையைக் கூப்பி ”வரதா…. …என்னே..மன்னிச்சு..” என்று சொல்லும் போது அவனுக்கு மூச்சை மிகவும் அடைந்தது.ராஜன் விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.அருகில் இருந்த் டாக்டர் “மிஸ்டர் ராஜன், நீங்க இப்போ இந்த மாதிரி ‘எமோஷனல்’ ஆகி அழ எல்லாம் கூடாது” என்று கண்டிப்பகச் சொன்னார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ராஜன் தன் அழுகையை நிறுத்தி விட்டு வரதனைப் பார்த்து “வரதா, நான் இப்போ ஒரு அனாதே..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது மறுபடியும் ராஜனுக்கு மூச்சு முட்டியது.மெல்ல சமாளித்துக் கொண்டு ‘எனக்கு….நீங்கோ..ரெண்டு.. பேரும்..தான்” என்று சொல்லும் போது ராஜனால் மேலே பேச முடியவில்லை.ராஜன் என்ன சொல்ல வந்தார் என்பதை கமலா புரிந்துக் கொண்டாள்.

“நீங்கோ காவலைப் படாதேள்.நாங்க ரெண்டு பேரும் உங்களே அனாதையா விட மாட்டோம்” என்று சொன்னதும் ராஜன் மறுபடியும் ‘எமோஷனல்’ ஆகி “ரொம்ப.. தாங்க்ஸ்மா..” என்று சொல்லும் போது அவன் தலை சாய்ந்து விட்டது.உடனே அருகில் இருந்த டாக்டர் தன் ‘ஸ்டெத்தை’ வைத்து பார்த்து விட்டு ரெண்டு நிமிஷம் ஆனதும் “’ஹீ இஸ் நோ மோர்’” என்று சொல்லி தன் ‘ஸ்டெத்தை’க் கழட்டினார்.வரதன் “டாக்டர்,என் அண்ணா அனாதை இல்லையே..” என்று சொல்லி முடிக்கவில்லை அந்த டாக்டர் ராஜன் குடும்பத்தை பற்றி சொன்னா எல்லா விஷயங்களையும் சொன்னார்.டாகடர் சொன்னதைக் கேட்டு வரதனும் கமலாவும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

ராஜன் இறக்க சில நிமிடங்கள் முன்னால் கமலா சொன்னது போல வரதன் தன் அண்ணாவின் ‘பூத உடலை’ ‘ஹாஸ்பிடலில்’ இருந்து வாங்கிக் கொண்டு போய் தகனம் பண்ணி விட்டு,வீட்டுக்கு வந்து குளித்து விட்டு,வேறே துணீகள் போட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.வரதன் பக்கத்து வீட்டில் டீ.வீ.யில் “ஆடி ஆட்டம் என்ன,தேடிய செல்வம் என்ன” என்கிற பாட்டி ஒலித்துக் கொண்டு இருந்தது.வரதன் மனத் திரையில் இறந்துப் போன தன் அண்ணன் ராஜன் ‘செய்தது’ எல்லாம் ஒன்று ஒன்றாக ஓடிக் கொண்டு இருந்தது.அவன் கண்களிலும் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *