ஆசை பேராசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 809 
 
 

பரமன் வீட்டுக்கு போகும் வழியில் காந்தி சர்க்கிளில் அந்த கூட்ஸ் ஆட்டோவில் தக்காளி விற்பதைப்  பார்த்தார். போர்டில் கிலோ 10 என்று கிறுக்கி எழுதியிருக்க ஆச்சரியப்பட்டார். ரெண்டு நாள் முன்பு தான் கிலோ 50 என்று வாங்கியிருந்தார். வீட்டுப் பக்கத்தில் கடையில் எப்போதும் கொஞ்சம் அஞ்சோ பத்தோ அதிகம் இருக்கும். ஆனால், இவ்வளவு வித்தியாசம் அவர் இதுவரையிலும் பார்த்ததில்லை. எல்லா இடத்திலும் விலை குறைஞ்சிருக்காலாம் என்று நினைத்தார்.  

வண்டியில் இருந்த தக்காளிகளை நோட்டமிட்டார். சின்ன சைஸ். பொதுவாக, இந்த சைஸ் அவர் வாங்குவதில்லை. இருந்தாலும் நல்ல கலரில் ஒரே சைஸில் நன்றாகவே இருந்தன. அழுகி கெட்டுப் போனவையாக பெரும்பாலும் இல்லை. சரி, இப்போதைக்கு 1 கிலோ வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தவாறே தக்காளிகளைப்  பொறுக்கிக்  கொண்டார். ஒரு சிலர் ரெண்டு மூணு கிலோ எல்லாம் வாங்கினார்கள். மேலும் அதிகமாக வாங்க ஆலோசனை கேட்க பரமன் தன் மனைவிக்குப் போன் செய்தார். ஆனால், வழக்கம் போல் அவள் லைனில் கிடைக்கவில்லை. வேண்டிய போது கிடைக்காமல் இருப்பது தான் இந்த போனின் வேலை போலும், மனதில் திட்டினார். வீட்டிற்கு வந்தப் பின் தன் பர்சேஸ் சாசகத்தை விவரித்தார்.  

‘நீங்களும் 2-3 கிலோ வாங்கியிருக்கலாமே. இங்கே நம்ம மாமூல் கடையில இன்னிக்கும் 40 ரூபா. எல்லாத்திக்கும் என்கிட்டே எதுக்கு கேக்கணும்.’.  

‘நான் உனக்கு போன் செஞ்சேன். ஆனா நீ எடுக்கலே. நான் ஜாஸ்தி வாங்கினா நீ எதாவது சொல்லுவே.  சரி, நாளைக்கு அந்தப்  பக்கம் தானே வரேன். கூட ரெண்டு கிலோ வாங்கறேன்’. 

அடுத்த நாள் அந்த வழியாக மாலையில் வரும் போது பார்த்தால், அதே வண்டி இருந்தது. ஆனால், போர்டில் 1 கிலோ 30 , 2 கிலோ 50 ரூபா. ‘அடடா , நேத்தே வாங்கியிருக்கணும். மிஸ் பண்ணிட்டோம்.’ என்று நினைத்தவாறே அந்த ஆளிடம் கேட்டார். ‘என்னங்க, நேத்து 10 ரூபா. இன்னிக்கு கப்பென்னு ஏத்திபுட்டீங்க ?.’ 

‘நான் என்ன பண்றது, நீங்க நேத்தே வாங்கிருக்கணும். நான் என்ன பண்ண முடியும்.? 

‘சரி , இன்னும் கம்மி ஆகுமா? 

‘அத எப்படி சொல்ல முடியும். சீசன் இந்த மாதிரி இருக்கு. சொல்லறதற்கு ஒன்னுமில்ல’. 

சரி, நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். எப்படியும் நேத்து வாங்கிய தக்காளி இன்னும் 2-3 நாளுக்கு வருமில்ல’ என்றவாறே வாங்காமல் கிளம்பி விட்டார். 

நடந்ததை அறிந்த வீட்டில் மனைவி காரசாரமாகப் போட்டார். 

‘உங்களுக்கு ஒன்னும் தெரியல. குறைஞ்சது ஒரு  கிலோ வாங்கியிருக்கலாம். வெல இன்னும் ஜாஸ்தி ஆகும். கம்மி ஆகாதுன்னு பக்கத்து வீட்டு அம்மா சொன்னாங்க’. 

பரமன் தினமும் வரும் வழியில் தக்காளி விலை நிலவரம் பார்த்து வந்தார். குறையவே இல்லை. கிலோ 50க்கு வந்து விட்டது. அடடா, 30 இருந்தப்போ வாங்கியிருக்கலாம் என்று மனசு அல்லாடியாது. சரி இதான் நிரந்தர விலை போலும் என்று 1 கிலோ வாங்கினார். 

அடுத்த வந்த 2 நாட்களில் நல்ல புயல் மழை  பெய்ய ஆரம்பிக்க, தக்காளி பயிர்கள் வீணாகி வரத்து குறைந்து சந்தையில் டபாலென்று  விலை கிலோ 100க்கு வந்து விட்டது.  

பரமன் ‘அடடா , 50க்கு வித்தப்போ ஒரு 2 கிலோவாவது வாங்கிப் போட்டிருக்கலாமே ‘  என்று லாப நஷ்ட கணக்கைப்  பார்க்க ஆரம்பித்தார். 

இதெல்லாம் மனிதனின் ஆசையா இல்ல பேராசையா? எந்த அளவுகோளில் வரும் இத்தகைய மனப்பான்மை?. 

தகவல் அறிவோம் புதிய தக்காளி தினம் 

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6 அன்று, புதிய தக்காளி தினம். தக்காளி ஒரு பழம், காய்கறி அல்ல, பலர் நம்புவது போல்,
https://krishijagran.com/news/world-tomato-day-history-significance-interesting-facts-about-this-healthy-fruit/ 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *