கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,725 
 

மீனா, புது வேலைக்காரி பேர் என்ன?

இப்ப அவ பேர் தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?…கூப்பிட்டு பேசணுமா?

இல்லே…ஒரு வேலைன்னா …அதை விடு…இதை எடுன்னு சொல்லலாம்லே…!

அதை எல்லாம் நான் பார்த்துப்பேன்…நீக கம்முன்னு உங்க வேலையைப் பார்த்தா போதும்…!

வாயை மூடிக்கொண்டேன். இருந்தாலும் மனமெல்லாம் அவள் நினைவாகவே இருந்தது.

ஒரு நாள் மனைவி மீனா பாத்ரூமில் இருக்கையில், வேலைக்காரி வரவும், அவளிடம்…

நீ கட்டியிருக்கிற புடவை ரொம்ப அழகா இருக்கு…என்றேன்.

சிரித்தபடியே உள்ளே சென்றாள்.

சற்றைக்கெல்லாம் மனைவி என் எதிரே வந்து நின்றாள்.

அவகிட்டே அவ கட்டியிருக்கிற புடவை அழகா இருக்குன்னு சொன்னீங்களா?

இதிலே என்ன தப்பு…அழகான புடவையா இருக்கே…இதுமாதிரி உனக்கு ஒண்ணு எடுக்கலாமேன்னு கேட்டேன்.

ம்…ம்….அப்போ இத்தனை நாளா, நான் அதை கட்டியிருந்ததை பார்க்கலே…அப்படித்தானே?

நீ கட்டியிருந்தியா…?

அது என் பழைய புடவை…நான் கொடுத்ததைத்தான் கட்டிக்கிட்டு வந்திருக்கா…உங்ககிடே அப்புறம் பேசிக்கிறேன்…முறைத்தபடியே சென்றாள்.

செய்வதறியாது வாயடைத்து நின்றேன்…!

– ஓகஸ்ட் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *