(1968ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-7 | அத்தியாயம் 8-14
8. ஆறுதல்
ஒரு வாரம் சொல்லாமலேயே பறந்துவிட்டது. சுந்தரத்தின் அகால மரணத்தைக் கேள்விப்பட்டு மூர்ச்சித்து விட்ட மைதிலி இன்றுதான் கண் விழித்தாள். அதுவும் எத்தனையோ டாக்டர்களின் பகீரதப் பிரயத்தனத்தின் பின்புதான் அவள் உணர்வு பெற்றாள். மெதுவாய்க் கண் விழித்துத் தன்னைச் சுற்றிலுமுள்ளவர்களைப் பார்த்தாள்.
பேராதனையிலிருந்து வீடு வந்திருந்த தங்கையின் முகம் அவளுக்குப் பழைய நினைவுகளை ஏற்படுத்தியது. “கலா, அவர் போய்விட்டாரடி!” மைதிலியால் பேச முடியவில்லை. துயரத்தின் காரணத்தால் அவளின் குரல் அத்தனை ஈனமாக இருந்தது. தன் தமக்கையை அணைத்த கலா பொல பொல எனக் கண்ணீர் சிந்தினாள். சோபை இழந்த முகத்துடனும், மெலிந்த தோற்றத்துடனும், ஆறாய்ப் பெருகிய கண்ணீருடனும் காட்சி தந்த மைதிலி யைக் கலாவால் பார்க்கச் சகிக்கவில்லை துக்க மேலீட்டால் “அக்கா என்று கூறியபடியே தன் தமக்கையின் கேசத்தைக் கோதிவிட்டாள் கலா. வெகு நேரத்திற்குப் பின்புதான் மைதிலிக்கு ஓரளவு அமைதி ஏற்பட்டது.
“அக்கா. இவர்தான் ராஜன்.’ கலா அறிமுகம் செய்த அவளின் காதலனை ஏறிட்டுப் பார்த்தாள் மைதிலி. ஒளி ததும்பும் விழிகள் அலை அலையாய்ச் சுருண்ட கேசம் களையான முகம், அந்த முகத்தில் விளைந்து நின்ற கம்பீரம். இவற்றோடு காட்சிதந்த ராஜனை உற்று நோக்கினாள் மைதிலி. அவள் ராஜனைப்பற்றி இதுவரை யும் தப்பாகத்தான். அபிப்பிராயம் கொண்டிருந்தாள். ஆனால், பார்த்த முதற் பார்வையிலேயே ராஜன் யோக் கியமான குடும்பத்திலே பிறந்தவன் என்பதை அறிந்து கொண்டாள்.
அவளது மனம் அவளையும் மீறிக்கொண்டு “ராஜன் எல்லா விதத்திலும் கலாவுக்குப் பொருத்தமானவன்தான் என்று கூறிக்கொண்டது. ஒரு விநாடியில் ராஜனை எடை போட்டுக்கொண்ட மைதிலி அவனை நோக்கி, “வணக்கம்” என்று கை கூப்பினாள். பணிவுடன் அவள் வணக்கத்தை ஏற்றுக்கொண்டான் ராஜன்.
பின்பு. மைதிலியும் கலாவும் ராஜனும் மனம் விட்டுப் பேசினார்கள். கணவனை இழந்த மைதிலிக்குத் தக்க ஆறு தல் மொழியைச் சொன்னான் ராஜன். சிலமணி நேரத்தி லேயே ராஜன் மைதிலியின் இதயத்தை ஈர்த்துவிட்டான். அவனோடு பேசியதன் மூலமாக மைதிலியின் துன்ப நினைவு கள் ஓரளவுக்குக் குறைந்தன. என்றபோதிலும், மறைந்த தன் மணாளனின் மோகனரூபம் மட்டும் மைதிலியின் நெஞ்சில் பசுமையாகக் காட்சி தந்தது. கள்ளமில்லாத சிரிப்பால் இந்த உலகத்தையே ஆளலாம் என்பது முற் றிலும் உண்மையே / ராஜனின் கள்ளமில்லாத சிரிப்பும், கபடமற்ற உள்ளமுமே இதற்கு ஏற்றதொரு சான்று. எந்த மனிதர்களையும் தன்வசப்படுத்தும் சக்தி அவனது சிரிப்பிற்கு வாய்ந்திருந்தது. அவனது கள்ளமில்லாச் சிரிப்புத்தான் மைதிலியின் நெஞ்சிற்கு ஆறுதலாயும், கலா விற்குக் கனவுலகில் மிதக்கச் செய்யும் சந்தோசமாகவும் இருநதது.
இந்தச் சூழ்நிலையிலேயே பொழுதைக் கழித்தாள் தன் அன்புச் செல்வம் கண்ணம்மாவின் மழலை அமிழ்த மும் மைதிலிக்கு ஆத்ம திருப்தியளித்தது. மரத்தினின்று சருகுகள் உதிர்வதைப்போல முப்பது நாட்களும் கடந்து விட்டன. கலாவின் விடுமுறை முடிவடைகின்றது.
ராஜனும் கலாவும் அன்று பேராதனைக்குப் புறப்படு கிறார்கள். அவர்களைப் பிரிவது மைதிலிக்குச் சிரமமாக இருந்தது. நாம் ஒருவரிடம் மனம்விட்டுப் பழகிவிட்டால் அவரைப் பிரியும்போது வருகின்ற துன்பம் தவிர்க்க முடி யாதது அல்லவா ? அன்பின் இயல்பே அதுதானே !
யாழ்நகரைவிட்டுக் கொழும்புக்குப் புறப்படும் மெயில் வண்டி புறப்படுவதற்குத் தயாராக நின்றது. மெயில் வண்டியிற் பிரயாணம் செய்ய வந்தவர்களில் பெருந் தொகையானவர்கள், விடுமுறை முடிந்து பல்கலைக் கழகத் துக்குத் திரும்பும் மாணவர்களாகவே காணப்பட்டனர்.
ஜோடி சேர்ந்து தம் பிரயாணத்தைத் தொடங்கப் போகும் ராஜன் – கலா இருவரது நெஞ்சிலும் மைதிலியைப் பிரியப் போகிறோமே! என்ற துன்பம் எழவே செய்தது. கலாவோ எரிதழலில் விழுந்த மெழுகானாள். அவளுக்கு மைதிலியைப் பிரிவது பெரும் வேதனையாக இருந்தது. அதுவும் சென்ற விடுமுறைக்குத் தான் திரும்பும்போது மஞ்சளும் குங்குமமும் அணிந்து சுமங்கலியாகக் காட்சி தந்த மைதிலி இம்முறை மஞ்சள் இழந்து, குங்குமம் அழிந்து காட்சி தந்தது கலாவின் தாங்கமுடியாத துயரத் திற்கு ஆதாரமானது கலா, இந்த வருடத்தோடு உனது பீ. ஏ. படிப்புப் பூர்த்தியாகிறதல்லவா ? கடைசி வருடம். நீ கவனமாகப் படிக்க வேண்டும். ஆர்வத்தோடு தன் தங்கையிடம் சொன்னாள் மைதிலி.
கலா தமக்கையை அன்போடு நோக்கியபடி. ‘அக்கா! இந்தமுறை நானும் என்னவரும் முதல்தர சித்தி எய்து வோம்” என்றாள். கலாவின் குரலிலே நம்பிக்கை துளிர்த் தது. பாம்’ எனப் பலமாகக் குரலெழுப்பிய டீசல் வண்டி பெரும் பூதம்போல் நிலையத்தைவிட்டுப் புறப்பட்டது. வேதனையோடு கையசைத்து விடைபகன்றாள் மைதிலி. அலைகடலைவிட ஆழமாக அன்புநீர் தேங்கிய அந்தப் பெண்ணுள்ளத்தைப்பற்றி மற்றவர்கள் தெரிந்திருக்க நியாயம் இல்லையல்லவா?
9. தம்பி
மனிதர்கள் இயற்கையில் எவ்வளவோ நல்லவர்கள். அவர்களைச் சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே தீயவர்க ளாக மாற்றுகிறது. இந்தத் தத்துவம் ரவியைப் பொறுத்த வரையில் அசைக்க முடியாத உண்மை. சிறு வயதிலேயே தந்தையை இழந்த அவன், மனம் போனபடி வாழத் தொடங்கினான். அவனது கம்பீரம் பலரை அவனுக்கு நண்பர்களாக்கியது. இந்த நிலையில் சந்தன ஓடையாக இருந்த அந்த உள்ளம் சாக்கடையாகியது. “பிஞ்சிலே பழுத்தவர்கள் என்று சொல்லப்படும் வகையைச் சேர்ந் தவன் ரவி. அவனுக்குத் தன் தாயிடமோ, தமக்கைக ளான மைதிலி, கலா ஆகியோரிடமோ இம்மியளவும் பயம் கிடையாது.
வாழககையைப் பெரியவர்கள் இரண்டு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஒன்று ‘இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கை மற்றையது எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கை’.
இதில் இரண்டாவது வகை வாழ்க்கையைத்தான் ரவி வாழ்ந்தான். ஆம்! அவன் தன் மனம்போல் வாழ்ந்தான். சிகரட் குடித்தல், மது அருந்துதல், மற்றைய தகாத செயல்கள் எல்லாம் அவனிடம் ஒருமித்து நின்றன. இந்த நிலையில் அவன் படிப்பைப் பற்றிக் கேட்கவா வேண்டும் ? பெயருக்காக எஸ். எஸ். சி. வகுப்பில் ஒரு மாதம் இருந்தான். பின்பு அவன் மழைக்குக்கூடக் கல் லூரிப் பக்கம் ஒதுங்கவில்லை. இந்த முறை அவன் அக்கா கலா விடுமுறைக்கு வந்தபோது அவன் வீட்டில் இல்லை. தன் தோழர்களோடு வெளியூர் போயிருந்தான். இன்று தான் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு வந் திருந்தான். அவனுக்குச் சுற்றுப் பயணம் போகப் பணம் எப்படிக் கிடைத்தது என்று கேட்கின்றீர்களா? அது தான் அக்காவின் மோதிரம் பத்திரமாக இருந்ததே! அந்த மோதிரம் மைதிலிக்குச் சுந்தரம் முதன் முதலாகக் கொடுத்த அன்புப் பரிசு. அதனைத் தன் தம்பி ரவி கள வாடிச் சென்றதை மைதிலி அறிவாள்.
அதனைப் பற்றித் தன் தங்கையிடமோ, ராஜனிடமோ. ஏன் நோயாளியாகிய தன் தாயிடமோகூட அவள் சொல்லவில்லை. காரணம், அவள் ரவிமேல் வைத்த பாசம். அவள்தான் ரவிமேற் பாசம் வைத்திருந்தாளே தவிர அவன் அவளை விரும்பினானா? அதுதான் இல்லை. அலைகடல் போல் அன்பு வைத்த சகோதரியை அறவே வெறுத்தான் அவன். அவனது உள்ளம் அந்த அளவிற்கு மரத்துப் போயிருந்தது. அந்தக் கல் நெஞ்சத்திற்கு மைதலியின் அன்பை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?
அலைபாயும் ரவியின் நெஞ்சம் கேவலமான பண்புகளை ஏற்றிருந்ததே தவிர அன்பை ஏற்கவில்லை. காரணம். அவளைப் புரிந்துகொள்ள ரவியால் முடியாததேயாகும். தன் சகோதரன் தன்னை வெறுத்தபோதிலும்கூட மைதிலி அவனை விரும்பினாள். அன்பிற்கே உரிய பொறுமையும் சாந்தமும் அவளிடம் விஞ்சி நின்றன.
‘அக்கா’.
வெகுநாட்களுக்குப் பின் வீட்டிற்கு வந்த ரவியை ஏறிட்டு நோக்கினாள் மைதிலி “யார் தம்பியா ? வா அப்பா வா இவ்வளவு நாட்களுக்குப் பிறகாவது உனக்கு வீட்டு நினைவு வந்ததே”. அக்காளின் உபசரிப்பு ரவிக்கு முக் கியமாய்ப் படவில்லை. “அக்கா, அதெல்லாம் இருக்கட்டும். இப்போது எனக்கு ஐம்பது ரூபாய் பணம் அவசரமாக வேண்டும் என்றான் ரவி. “என்னப்பா ரவி விளையாடு கிறாயா? கூப்பன் பொருட்கள் எடுக்கவே பணம் இல்லா திருக்கின்றதே! இந்த நிலையில் ஐம்பது ரூபாவிற்கு நான் எங்கு போவேன்?” அக்காவின் மேல் ரவிக்குக் கோபம் கோபமாய் வந்தது. “எனக்கு வேண்டியது பணம்.” ரவி அலட்சியமாய்க் கேட்டான். அவனின் அலட்சியப் பேச்சு மைதிலிக்கு என்றுமில்லாத கோபத்தை வரவழைத்தது.
“டேய் ரவி, வந்ததும் வராததுமாகப் பணத்தைக் கேட்டால் நான் என்ன செய்வேன்? பணம் இல்லை யென்று உனக்கு எத்தனை தடவை சொல்வது ? உன் னால் நான் படும் கஷ்டங்கள் ஒன்றா இரண்டா ? பள்ளிக் கூடம் போகிறேன் என்று சொல்லிவிட்டுக் கண்டபடி ஊர் சுற்றுவதும், கண்டவர்களோடு சேர்வதும். சீ, சீ, ரவி! எங்கள் அம்மா படுத்த படுக்கையாய்க் கிடக்கின்றார். அவ ருக்கு வைத்தியம் பண்ணவே பணம் போதவில்லை. இந்த நேரத்தில் நீ பணம் கேட்டால் நான் என்ன செய் ?’ வது மைதிலி துன்பம் தாளமாட்டாமல் கண்ணீர் விட்டாள். அவளின் உருக்கமான பேச்சும், அவள் உகுத்த கண்ணீரும் ரவியின் கல் நெஞ்சைக் கரைக்கவில்லை. அவனது பிடிவாதத்தைக் கண்டு பக்கத்திற் படுத்திருந்த நோயாளியான தாயாருக்கே பொறுக்கவில்லை.
“டேய் ரவி, அக்காவுக்கேன் வீண் கஷ்டத்தைக் கொடுக்கின்றாய்?”
தாயின் பேச்சு ரவியின் கோபத்தைக் கிளறிவிட்டது. “நீ வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.” ரவி தாயின் மேல் எரிந்து விழுந்தான். அந்தத் தாயும் அவன் குணம் அறிந்து முணுமுணுப்புடன் முடங்கிவிட்டார். இவற்றை யெல்லாம் அசட்டை செய்த ரவி மேலும் தொடர்ந்தான். “அக்கா உன் முடிவென்ன ? பணம் தருகிறாயா, இல் லையா? அன்பு. பாசம் அப்படி இப்படி என்று சொல்வ தில் ஒன்றும் இல்லை. அவற்றைச் செய்தல்லவா காட்ட வேண்டும். என்மேல் உனக்கு அன்பிருந்தால் என் தேவைக்கு நீ பணம் தராதிருப்பாயா ?” தன் தம்பியின் கபடப் பேச்சு மைதிலியின் நெஞ்சை மேலும் உருக்கி விட்டது. “ரவி, இந்தா, இந்தா. வளையலை வைத்தாவது பணத்தைப் பெற்றுக்கொள்.” தன் கையிலுள்ள ஒரே தங்க வளையலையும் தம்பியிடம் கொடுத்தாள் மைதிலி. அதைப் பெற்ற ரவி வெற்றிச் சிரிப்போடு விரைந்து சென்றான். மைதிலிக்கோ தன் தம்பியை நினைக்கின்ற போது ஆத்திரத்தைவிட அனுதாபமே மேலெழும்பியது.
நாட்கள் நடந்தன. வரவர ரவியின் குணமோ மோச மாகிக்கொண்டே வந்தது அவன் தீயவர்களோடு சேர்ந்து இயற்கைக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவ தாக மைதிலியிடம் பலர் முறையிட்டார்கள். பதினெட்டு வயதாகியும் ரவியின் நடத்தை பொறுப்பற்றதாகவே யிருந் தது. சீரழிந்து கொண்டிருக்கும் தன் தம்பியைத் திருத்து வதற்கு மைதிலி எவ்வளவோ முயற்சியெடுத்தாள். அவ ளது முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராயின. ” தன் மகன் இப்படிக் கெட்டழிகிறானே என்ற ஏக்கம் தாயின் நோயையும் அதிகரித்தது.
10. சோதனை
அன்று சனிக்கிழமை. இரவு ஒன்பது மணியிருக்கும். வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருந்தன. மைதிலியின் தாயின் உடல்நிலை எதிர்பாராத விதமாக கவலைக் கிடமாகியது. திடீரென நேர்ந்த இந்த மாற்றத் தினால் மைதிலி துடித்தாள். அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை இந்த அகால நேரத்திலே டாக்டரை நாடிப் போவதென்றால் அது அவளால் இயலாத காரியம் அத்தோடு வழக்கமாகத் தன் தாயாருக்கு வைத்தியம் பார்க் கும் டாக்டரும் இப்போது ஊரில் இல்லை. அப்படிக் கூட்டி வருவதாயிருந்தால் ஊர்க் கோடியில் அமைந்திருக்கும் டாக்டர் நந்தகோபாலனைத்தான் அழைத்து வரவேண்டும். இந்த இரவு நேரத்தில் அவ்வளவு தூரம் நடந்துபோய் டாக்டரைக் கூட்டி வருவது பெண்ணொருத்தியால் ஆகக் கூடிய காரியமா? வெளி முன்றலில் படுத்துக்கிடந்த தம்பி ரவியைக் கூப்பிட்டாள். பதிலில்லை. தட்டி யெழுப்பினாள். தமக்கையின் பகீரதப் பிரயத்தனத்தின் பின் டாக்டரைக் கூட்டிவரச் சென்றான் ரவி. மைதிலியின் நெஞ்சம் “பொறுப்புணர்ச்சி யற்ற தன் தம்பி டாக்டரைக் கூட்டி வருவானா ? அப்படியானால் அவர் எப்போ வருவார் ? ” என்ற ஏக்கத்தில் மிதந்தது. நேரம் செல்லச் செல்லத் தாயின் நிலை மேலும் கெட்டுக்கொண்டே போனது. வெளியே பெய்த பேய்மழையும் பலத்த இடியும் பயங்கர மின்னலும் நடக்கப்போகும் பயங்கரத்தை அறிவித்துக் கொண்டிருந்தன. அருகே இருந்த குமரன் கோயில் மணி பன்னிரு முறை அடித்து ஓய்ந்தது.
மைதிலியின் நெஞ்சம் மட்டும் ஓயாமல் துடித்துக் கொண்டேயிருந்தது. அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அங்குமிங்கும் உலாவினாள். தன் குல தெய்வமான முரு கனை அந்நேரத்தில் பிரார்த்தித்தாள்.
டாக்டரைக் கூட்டிவரச் சென்ற ரவி வழியில் தன் நண் பன் மணியைச் சந்தித்தான். மணியின் விருப்பின்பேரில் இரண்டாம் காட்சி’ படம் பார்க்கச் சென்றுவிட்டான் ரவி. படம் பார்த்துக் கொண்டிருந்த லயிப்பில் தன் தமக்கை, தாயின் நோய் அதிகரித்ததினால் டாக்டரைக் கூட்டிவரச் சொன்னதையும் மறந்து விட்டான்.
வீட்டில் மைதிலியோ புழுவெனத் துடித்தாள். மணி ஒன்றரையாகி விட்டது. இன்னமும். ரவி திரும்பவில்லை. இந்தக் காரணத்தை விளங்காத மைதிலி பொறுமையை இழந்தவளாய் டாக்டரின் வீட்டை நோக்கிக் கிளம்பினாள். அவள் கொண்டு செல்லக் குடையொன்றைக் கையில் எடுத் தாள். அக் குடையைச் சுந்தரம் பரிசாகக் கொடுத்திருந் தான். ஒரு கணம் மறைந்த தன் கணவனைச் சிந்தித்த மைதிலி பெருமூச்சு விட்டபடியே விரைந்தாள். அவளின் குழந்தை கண்ணம்மா தொட்டிலில் கண்ணயர்ந் திருந்தாள். தாயோ சாவோடு போராடிக் கொண்டிருந்தாள். இத்தகைய சூழ்நிலையில் கொட்டும் மழையை, கொடிய மின்னலை, பேரிடி முழக்கத்தை எல்லாம் பொருட்படுத்தாது டாக்டர் வீடு நோக்கி விரைகின்ற மைதிலி உண்மையி லேயே எத்துணை பெரியவள்.?
நடுநிசி. ஊரே உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தது. எதனையும் பொருட்படுத்தாது மைதிலி விரைந்து கொண் டிருந்தாள். மைதிலியின் செயல் கண்டு இடி சிரித்தது. மின்னலோ கண் சிமிட்டியது. கால் வயிற்றுச் சோற்றோடு தெருவோரக் கடை வாசல்களில் படுத்திருந்த நாய்கள் அவளைப் பார்த்துக் குரைத்தன. இவற்றையெல்லாம் மைதிலி சட்டை செய்யவில்லை. வரவர அவளின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தது. உயர்ந்த கட்டடம். அதன் முன்னே அழகான முல்லைக் கொடிகள். மாடியறை யில் மட்டும் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதுதான் டாக்டர் நந்தகுமாரின் வீடு.
மைதிலி வாசலை நாடுவதற்கும் டாக்டரின் வீட்டி போவ லிருந்து ஒரு பெண் அவளைக் கடந்துகொண்டு தற்கும் சரியாக இருந்தது. அந்த மங்கை மைதிலியை அலட்சியமாகப் பார்த்தபடி வெளியே போனாள். ”யாரிது? உம்…… யாராயிருந்தாலும் நமக்கென்ன ?” தனக்குத் தானே சொல்லிக்கொண்ட மைதிலி அறிவிப்பு மணியை அடித்தாள். உள்ளேயிருந்து இரவு உடையுடன் வெளியே வந்த நந்தகுமாருக்கு வந்த விஷயத்தைச் சொன் மைதிலி. “அப்படியா? வந்து உள்ளேயிருங்கள் ” என்று வரவேற்ற டாக்டர் வீட்டினுள்ளே சென்றார்.
அழகோவியமான மைதிலியைக் கண்டதிலிருந்து டாக் டரின் மனதில் ஏதேதோ சலனங்கள். அவரது நெஞ்சில் விபரீத எண்ணங்கள் படர்ந்தன. தனது மனைவி மஞ் சுளாவையும் மகளையும் அவர் கதிர்காமத்திற்கு அனுப்பி இருந்தார். இந்தத் தனிமையே அவரது நெஞ்சிலே ஆசையின் நாதத்தை மீட்டியது. சற்று நேரம் மனச் சாட்சியோடு போராடிய டாக்டர் மனச்சாட்சியைத் தூக்கி எறிந்தார். அவரது முகத்தில் விபரீத புன்னகை தவழ்ந்தது.
“ஐயோ…”
டாக்டர் வீட்டு மாடியிலிருந்து கிளம்பிய ‘ஐயோ என்ற அலறலைத் தொடர்ந்து ‘உதவி. உதவி’ என்ற குரல் கேட்டது. இதைக் கேட்ட மைதிலி திடுக்குற்றாள். மீண்டும் அந்த அவல ஒலி கேட்கவே பொறுமையிழந்த மைதிலி மேல்மாடியை நோக்கி ஓடினாள்.
அங்கே ஓர் அறை. அழகான படுக்கையறை. நீல நிற விளக்கொன்று மெல்லிய ஒளியைப் பரப்பிக்கொண் டிருந்தது. படுக்கையறையைச் சுற்றி அலங்கோலமான படங்கள் மாட்டப்பட்டிருந்தன. மைதிலி அந்தப் படுக்கை யறையிலே நின்று ஏதும் அறியாது திகைத்துக் கொண் டிருக்கையில் படீரென அந்தப் படுக்கையறைக் கதவு சாத்தப்பட்டது. திகைத்தவளாய்த் திரும்பிப் பார்த்த மைதிலி கற்சிலையானாள். அவளை நோக்கி மோக முறுவலுடன் டாக்டர் நந்தகுமார் நெருங்கிக் கொண்டிருந்தார். “வேண்டாம் டாக்டர் வேண்டாம்” என்ற மைதிலியின் அலறலைப் பொருட்படுத்தாத டாக்டர், “அழகுத் தெய்வமே, வா அப்படியே ; என்னை அணைத்துக்கொள். கொஞ்ச நேரம், கொஞ்ச நேரந்தானே!” மைதிலியைப் படுக்கைமுன் தள்ளினார் டாக்டர். பின்பு தன் முகத்தை மைதிலியின் முகத்திற்கு அருகே கொண்டுபோனார். அப்பொழுது மைதிலி தன் சக்தி எல்லாவற்றையும் திரட்டி ‘ஐயோ’ என்று அலறினாள்.
இரண்டாம் காட்சிப் படம் பார்த்துவிட்டு நண்பன் மணியை அவன் வீட்டிலே சேர்த்த ரவி வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் மாடி வீடொன்றிலிருந்து கிளம்பிய ‘ஐயோ! ‘ என்ற குரல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. தெருவிலிருந்து அந்த வீட்டு வாசலை நாடிய ரவிக்கு மீண் டும் ‘ ஐயோ’ என்ற குரல் கேட்டது. தெளிவாகக் கேட்ட அந்தக் குரல்?— அவனால் சிந்திக்க முடியவில்லை. விரை வாக மாடிப்படிகளைக் கடந்து சில வினாடிகளுக்குள் படுக்கையறையை அடைந்தான்.
ஆனால், உள்ளே பலத்த போராட்டம் நடந்துகொண்டிருந்தது. வேகமாகக் கதவைத் தள்ளிய ரவி, தன் அக்கா டாக்டருடன் போராடிக் கொண்டிருப்பதையும் கண் டான். ஒரே பாய்ச்சலில் டாக்டரை நாடிய ரவி. ஆவேச மாக அவர்மேற் பாய்ந்து மூர்க்கத்தனமாக உதைத்தான் ‘தானாடும் முன்னே தன் தசையாடும்’ என்பார்களே, அந்த அசுரபாசம் இப்போதுதான் ரவியின் நெஞ்சில் நிரம்பி யிருந்தது. ஆத்திரம் தீரும்மட்டும் டாக்டரை அடித்தான். பக்கத்திற் கிடந்த இரும்புச் சங்கிலியொன்றை யெடுத்து டாக்டரின் மண்டையைத் தாக்கினான். மறுகணம் டாக்டர் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். ரவியின் வாயோ,”காமக் குரங்கே! அக்காவிடமா வாலாட்டினாய்?” என்று கர்ஜித் தது. நாயைப்போல் படுத்துருண்ட டாக்டர்,”ஐயோ! கொலை! கொலை!” என்று அலறினார்.
பொலிஸ் நிலையத்தில் தலையைக் கவிழ்த்துக்கொண்டு நின்றான் ரவி. அவன் அருகில் நின்றாள் அவள் தமக்கை. மைதிலியை விசாரித்த இன்ஸ்பெக்டர் அவளை வீடு போகு மாறு பணித்தார். மைதிலியோ நெஞ்சம் குமைந்தாள். தனக்காகக் கொலைகாரனாகிய தன் தம்பியை அவளாற் பார்க்க முடியவில்லை. அவனை விட்டுப் பிரியவும் முடியவில்லை. கண்களிலே கண்ணீர் மல்க வீடு திரும்பினாள் மைதிலி.
வீட்டை யடையும்போது பொழுது புலர்ந்து கொண் டிருந்தது. வீட்டினுள் அடியெடுத்து வைத்த மைதிலி ‘ அம்மா’ என்று கத்தினாள். அங்கே அவளைப் பெற்ற அன்பு அன்னை இறந்து கிடந்தாள். ” அம்மா! நீ போய்விட்டாயா?” என்றபடியே தாயின்மிசை விழுந்து மைதிலி அழுதாள். இரவெல்லாம் கொட்டிய மழைகூட மைதிலி வடித்த கண்ணீருடன் போட்டி போட முடியாமல் ஓய்ந்து விட்டது.
11. அம்மா
விசாலமான வகுப்பறை பீ. ஏ கடைசி வருடம் மாணவ மாணவிகள் குழுமியிருந்தார்கள். பேராசிரியர் “தமிழ்த்திரு’ அவர்கள் புறநானூற்றில் பிசிராந்தையாரின் அற்புதப் பாடல் ஒன்றுக்கு நயம் சொல்லிக் கொண்டிருந் தார். அந்தப் பாடம் முடிய, அகநானூற்றில் ஒரு பகு திக்கு விளக்கம் நடந்தது. தலைவன் தலைவி உறவு பற்றி விளக்கம் நடந்தபோது கலாவின் கமல விழிகள் கள்ளத் தனமாக ராஜனை நாடின. ராஜனும் கலாவைப் பார்த்து மென்னகை புரிந்தான். இந்நேரம் வகுப்பறைக்குள் நுழைந்த சேவகன் ஒரு தந்தியைப் பேராசிரியரிடம் கொடுத்துவிட்டுச் சென்றான். “மிஸ் கலா. உங்களுக்குத் தந்தியொன்று வந்திருக்கிறது.’ பேராசிரியர் கொடுத்த தந்தியை வியப்போடு வாங்கிய லா ஒதுக்குமுகமாகச் சென்று அதனைப் பிரித்தாள்.
”அம்மா இறந்துவிட்டார். உடனே வருக.”
மைதிலி.
தந்தியைப் படித்த கலாவின் தலை சுற்றி வேதனை செய்தது. தேம்பித் தேம்பி அழுதாள். செய்தி கேட்ட ராஜன் அவளை எவ்வளவோ தேற்றினான்.
பேராசிரியர் தமிழ்த்திருவும் ஆறுதல்மொழி சொன்னார். கலா அதிபரின் அநுமதி பெற்று அநுமதி பெற்று ஒரு கிழமை லீவு எடுத்து யாழ்ப்பாணம் புறப்பட்டாள். ராஜனும் யாழ்ப் பாணம் வருவதாகச் சொல்லவே கலா தடுத்துவிட்டாள். ஆனால், ராஜனே அவளை வழியனுப்பி வைத்தான்.
“கலா, அம்மாவைப் பார். எம்மைப் பெற்ற கண் கண்ட தெய்வத்தைப் பார்.” கலாவால் துயரத்தைத் தாங்க முடியவில்லை. ஆகவேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றும் நடந்தன. தாய்க்கு இறுதிக் கடனை ஆற்றுவ தற்காக ரவிக்குப் பொலிசார் ஒரு சிறுபொழுது விடுதலை கொடுத்திருந்தார்கள். தன் தாயின் மரணத்தில் தனது மூர்க்கத்தனத்திற்கும் பங்கிருக்கிறதென ரவி அறிவான். அந்த உண்மை அவனுக்குக் காலம் கடந்தே தெரிந்தது. தாயின் சிதைக்குத் தீ மூட்டித் திரும்பும்போது ரவி துய ரத்தின் எல்லைக் கோட்டுக்கே சென்றுவிட்டான். அன்ன மிட்ட அந்தக் கைகள் சீராட்டித் தாலாட்டிய அந்தக் கைகள தீயரக்கனுக்கு உணவாகியது.
“அம்மா! போய்வா என்று என்று ரவி கூறும்போது அவனிடம் உண்மையான உருக்கம் நிறைந்திருந்தது. தாய், தெய்வத்தின் பிரதிபிம்பம். அன்னையின் பெரு மையை ஆயிரம் ஆயிரம் காவியங்களாலும் போற்றிப் புகழ முடியாது. ரவி இப்போ பழைய ரவியல்ல. அவன் திருந்திவிட்டான். புது மனிதனாகிவிட்டான். என்றபோதி லும் சட்டத்தின்முன் அவன் கொலைகாரன் இதை நினைத்தபோது மைதிலிக்குப் பெருந் துன்பமாக இருந் தது. அவள் தனது கணவனின் பள்ளித் தோழனான முரளீதரனையே ரவிக்காக வாதாடும்படி ஏற்பாடு செய் திருந்தாள். பணம் கொடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இது இப்படியிருக்க ஒரு வாரத் தவணை முடிந்து கலா பல்கலைக் கழகத்திற்குப் பயணமானாள். போகும் போது தான் போய்ச் சேர்ந்ததும் ராஜனை யாழ்ப்பாணம் அனுப்புவதாய்க் கூறி விடை பெற்றாள். மைதிலிக்கு ராஜன் வருவது சந்தோசமாகவே யிருந்தது அவன் வருவது தம்பியின் வழக்கு விஷயத்திற்கும் உதவியாய் இருக்கும் என் று அபிப்பிராயப்பட்டாள் மைதிலி.
12. விசாரணை
டாக்டர் நந்தகுமாரைக் கொலை செய்ததாக ரவிமேல் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. மைதிலியின் பேரிலும் விசா ரணை நடந்தது. ரவி டாக்டரைக் கொலை செய்த கொலை யாளியென்றும், ரவியின் கூற்றுப்படி டாக்டர் அவன் சகோதரியைக் கற்பழிக்க முயன்றதாகக் கூறப்படுவது ஏற் கக் கூடியதாக இல்லையென்றும், காரணம், டாக்டரின் நன்நடத்தையைப் பற்றி உலகமே அறியும் என்றும், ஆகவே, டாக்டரைக் கொலை செய்த ரவிக்கு மரண தண் டனைதான் கொடுக்க வேண்டுமென்றும், அதுவே எதிர் காலத்தில் அவனைப் போன்றவர்கள் தோன்றாது தடுப்ப தற்கு ஏற்ற வழியென்றும் முழங்கினார் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்.
ரவியின்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு அவ னைத் தீயவனாக நீதிமன்றத்துக்குக் காட்டியது. ரவியைப் பொறுத்தவரையில் அவன் வாழ்வதற்கு விரும்பவில்லை. இறந்தால், தன் தாயை, அத்தான் சுந்தரத்தை, ஏன் சிறு வயதில் இறந்த தன் தந்தை ஆகியவர்களையெல்லாம் சந் திக்கலாம் என்ற நினைப்பு அவனுக்குச் சாவின்மேல் இனம் தெரியாத பற்றை ஏற்படுத்தியது.
ரவியின் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற் றுக் கொண்டிருந்தது. தன் தம்பியை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்த மைதிலிக்கு ராஜனின் ஆறுதல்மொழி சாந்தியைத் தருவதாக இருந்தது. நீதிமன்றத்துக்குப் போகும்போது ராஜனையும் கூட்டிக் கொண்டுதான் மைதிலி போவாள். அவர்கள் இருவரும் ஒன்றாகப் போவதைப் பார்த்து வம்பளப்பதற்கென்றே தெருவில் திரிகின்ற இரட் டைக் கால் நாய்கள் வசை பாடின. மைதிலி இதையிட்டு வேதனையுற்றாலும் எப்போதோ தன் கணவன் தனக்குச் சொல்லிய “நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கு முக்கியமே தவிர, மற்றவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அல்ல” என்ற ஞானி எமெர்சனின் வாக்கு அவள் ஞாபகத்திற்கு வந்தது.
அன்று தன் தம்பியின் வழக்கின் தீர்ப்பு நாள். “தீர்ப்பு என்னவோ ?” என்று மனம் பதைத்துக் கொண் டிருந்தாள் மைதிலி. ராஜன் அவளைத் தேற்றிக்கொண்டிருந்தான்.
ரவியின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் முரளீதரன் மிகத் திறமையாக வாதாடினார். ரவி சிறுபிள்ளையென்றும் அவன் செய்தது கைமோசக் கொலையென்றும் அற்புதமாக வாதாடினார் முரளீ இதன்பின் நடுவர்களின் அபிப்பிரா யப்படி நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். எல்லாருடைய காதுகளும், கூர்மையாகக் காணப்பட்டன. ராஜனும் மைதிலியும் மிக ஆர்வமாக இருந்தார்கள். ரவியோ மனம் சோர்ந்தவனாய்க் காணப்பட்டான். அவ னுக்குத் தெரியும் தனக்கு மரண தண்டனைதான் கிடைக்கு மென்று.
“சாம்பசிவத்தின் மகனான டாக்டர் நந்தகுமாரை, ரவி கொலை செய்தான் என்பதை ரவியே ஒப்புக்கொள்கிறான். ஆனால், நாம் டாக்டர் கொலைசெய்யப்பட்ட நோக்கத்தை அறியவேண்டும். நந்தகுமாரைத் தாய்க்கு நோய் மாற்றுச் செய்ய அழைத்துவரப் போயிருக்கிறாள் மைதிலி. அவரோ மைதிலியோடு சரசமாட முயன்றிருக்கிறார். அவர் அறை யிலே உடைந்து கிடந்த கண்ணாடி வளையல்கள் இதை மெய்ப்பிக்கின்றன சகோதரியின் அழுகைக் குரல் படம் பார்த்துவிட்டுத் தெருவில் வந்துகொண்டிருந்த எதிரியின் காதில் கேட்டிருக்கிறது ஓடிவந்து பார்த்த எதிரி தன் உற்ற சகோதரி டாக்டரின் ஆசைப் பிடியில் அகப்பட்டுத் திணறுவதைக் கண்டான். தன் சொந்தச் சகோதரியை வேற்றான் ஒருவன் கற்பழிக்க முயலும்போது யார்தான் பொறுமையாக இருக்க முடியும்? ஆத்திரம் முற்றி டாக்டரை எதிரி கொலை செய்து விட்டான். இக்கொலை ஒரு கைமோசக் கொலை. ரவியினது சூழ்நிலையில் இப்படித் தான் நடந்திருக்கும் நடுவர்களின் தீர்ப்பும் என் கருத் தையும் ஒட்டி அமைந்திருப்பதனால் ரவிக்கு ஆறு வருடச் சிறைத் தண்டனை அளித்துத் தீர்ப்புக் கூறுகிறேன்.”
நீதிபதியின் நீண்ட உரை முடிந்தது. ‘தனக்கு மரண தண்டனைதான்’ என்று மனம்விட்டுப் போயிருந்த ரவிக்கு நீதிபதியின் தீர்ப்பு மகிழ்வூட்டுவதாக இருந்தது. தான் அனுபவிக்கப்போகும் ஆறு வருடச் சிறை வாழ்க்கையும் தன்னை உயர்ந்த மனிதனாக்குமென்பதை ரவி உணர்ந் திருந்தான். ஆறு வருடங்கள் சகோதரியைப் பிரிந்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்தின் வயப்பட்ட ரவி தான் செய்த குற்றங்களை யெல்லாம் மன்னிக்கும்படி சகோதரியிடம் வேண்டிக்கொண்டு பொலிஸ் வண்டியில் ஏறினான். மைதிலி தன் தம்பிக்குத் துயரோடு விடைகொடுத் தனுப்பினாள். துயருற்ற மைதிலியை ஆறுதற்படுத்திய ராஜன், ” வழக்கு முடிந்து விட்டதால் நாளை பல்கலைக் கழகத்திற்குப் புறப் பட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
13. விடிவு
எங்கு பார்த்தாலும் பயங்கர மிருகங்கள் திரிகின்ற பெரிய காடு. கார்மேகத்தைவிட இருண்ட காடுகள். அங்கே சூரியன் உதிப்பதைக்கூடக் காணமுடியாது. அக் காடுகள் ஆபிரிக்காக் கண்டத்தைச் சேர்ந்தவை. இருண்ட கண்டம்’ என்ற பெயர் ஆபிரிக்காவுக்கு எவ்வளவு பொருத்தம் ! அத்தகைய ஆபிரிக்காவிலே – காங்கோப் பகுதியைச் சுற்றியிருத்த இருண்ட காட்டிலேதான் அந்த மனிதன் கடந்த ஆறு வருடங்களாய் வாழ்ந்து வருகிறான். தனது பாவனைக்காக ஒரு சில மரங்களைக் கொண்டு ஒரு சிறு குடிலைச் செய்திருந்தான் அவன். அதுவே அவனது வசிப்பிடம். கொடிய அக் காட்டுப் பகுதியும், பயங்கர மிருக இனங்களும் புதிய உலகமாகவே அவனுக்குக் காட்சி தந்தன. அவன் கண்ட பழங்களையெல் லாம் பறித்துண்டான். அழுக்குக் குட்டைகளிலிருந்து நீர் பருகினான். இந்த வாழ்வில்லா வாழ்வை அவன் வாழ்ந்து கொண்டிருந்தும்கூடத் தெய்வம் அவனைச் சாக விடவில்லை. விரும்பியிருந்தால் அந்தப் பயங்கர விபத்து நடந்த நேரத்திலேயே செத்திருக்க வேண்டும், ஆறு வரு டங்களை அந்தக் காட்டுப்புறங்களிலேயே கழித்தான். கொடிய மிருகங்களைத் தவிர வேறு எதையுமே அவன் காணவில்லை ?
இந்நிலையில் ஒருவித ஏகாந்தப் ஏகாந்தப் பித்து பித்து அவனைப் பிடித்துவிட்டது என்றே கூற வேண்டும். ஆறு வருடங் களாகப் புதிய இருண்ட உலகத்தில் வாழும் அந்த மனி தன் எங்கோ – எத்தனையோ மைல்களுக்கப்பால் வாழ்கின்ற ஒருத்தியை மட்டும் நெஞ்சிலே நினைத்திருந்தான். அவனது நெஞ்சிலே மேகப் பரப்பில் தோன்றுகின்ற மின்னலைப் போல அந்த ஒருத்தியின் நினைவும் தோன் றித் தோன்றி மறைந்தது.
வழக்கம்போல் அன்றும் பொழுது புலர்ந்தது. பொழுது புலர்ந்தது என்பதைப் புள்ளினங்கள் கிளப்பிய இன்னொலியி லிருந்து அம் மனிதன் அறிந்து கொண்டான். ஊரில் என் றால் சேவல் கூவும், உதய சூரியனின் பொற்கதிர்கள் அழ குடன் மிளிரும். இதன் மூலம் பொழுது புலர்வதை அறி யலாம். ஆனால், அந்த இருண்ட காட்டிலே சேவல் கூவுமா? சூரியன் உதிக்குமா? எத்தனை எத்தனையோ விதமான பறவைகளெல்லாம் ‘கீச்’, ‘கீச் எனக் கத்தின. புலிகள் உறுமித் திரிந்தன. இன்னும் எத்தனையோ மிருக வகைகள் வெளிக் கிளம்பின. நீடிய காலக் காட்டு வாழ்க் கையால் அந்தப் பயங்கர மிருகங்கள் கூட அவனுக்கு அச் சத்தைத் தரவில்லை !
இப்படியாக மலர்ந்த காலை நிகழ்ச்சிகளை வழக்கம் போல் இரசித்தான் அந்த மனிதன் அப்பொழுது எதிர் பாராதவிதமாக ‘டுமீல்’ என்ற துப்பாக்கிச் சத்தம் மிக அருகில் கேட்டது. அந்தச் சத்தத்தைக் கேட்ட காட்டு மனிதனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. கொடிய மிருகங் களின் கூக்குரல்களைக் கேட்டு ஆறு வருடங்களாக அவற் றிலேயே ஊறித் திளைத்திருந்த அந்த மனிதன் துப்பாக்கி “யாரோ வெடிக்கும் சத்தம் கேட்டு மிக மகிழ்ந்தான். மனிதர்கள் உலாவுகிறார்கள் என்ற சொல் அவனது வாயிலிருந்து வெளிக் கிளம்பியது. அவனது சிந்தனை இப்படி ஓடிக் கொண்டிருக்கும்போது அவனுக்குச் சமீபத் தில் மனிதர்கள் சில பேர் ஆங்கிலத்தில் பேசி வருவது கேட்டது. பயங்கரத் தாடியுடனும் மாற்றமிக்க தோற்றத் துடனும் காட்சியளித்த அந்த மனிதனுக்கெதிராகத் துப் பாக்கியை நீட்டினார்கள் வந்தவர்கள். “நீ யார்?” எனக் கேட்டார்கள் பல வருடங்களுக்குப் பிறகு மனிதர்களை, மனிதக் குரல்களைக் கேட்டு நெஞ்சம் களித்த அந்த மனி தன் தன் வரலாற்றைக் கூறினான். அவனின் வரலாற்றைக் கேட்ட வேட்டைக்கார ஆங்கிலேயருக்கு அதிசயமும் இரக் கமும் அவன்பால் ஏற்பட்டன. நல்ல மனம் படைத்த அந்த ஆங்கிலேயர்கள் அவனையும் தங்களுடன் அழைத்துக் கொண்டு தாங்கள் அடித்திருந்த தற்காலிகக் கூடா ரத்தை நோக்கிப் போனார்கள்.
காட்டு மனிதன் புதுப்புது எண்ணங்கள் தன் இத யத்தை மேவ அவர்களைத் தொடர்ந்தான். இருண்டு கிடந்த தன் வாழ்க்கைப் பொழுது விடியப்போகிறது என்ற எண்ணம் அந்த மனிதனது உள்ளத்திலே சுந்தரக் கனவு களைத் தோற்றின.
“இந்தாருங்கள், சாப்பிடுங்கள். எழிலே உருவான ஏந்திழை ஒருத்தி கைகளிலே உணவுத் தட்டை ஏந்திய படி நின்றாள். நீல விழிகள் – சிவந்த மேனி – முத்துப் பற்கள் – பட்டுக் கன்னங்கள் இவற்றுடன் காட்சியளித்த அந்த அழகோவியத்தைப் பார்த்து அசந்தே போனான் சுந்தரம். அவனது கண்கள் அந்த ஆங்கிலக் கிளியை உற்று நோக்கின. மீண்டும் அவள். “இந்தாருங்கள், சாப்பிடுங்கள் ” என்ற போதுதான் சுய நினைவுற்றான் சுந்தரம். உணவை வாங்கி ஆர்வமாய் உண்டான். அவன் உண்ணும் அழகையே பார்த்துக் கொண்டிருந்தாள் மேரி – அந்த ஆங்கில மங்கை. சுந்தரம் உணவை முடிப்பதற்கும் கூடாரத்திற்குள் இரு ஆங்கிலேயர் நுழைவதற்கும் சரியாயிருந்தது.
வந்த ஆங்கிலேயர்களில் வயது மூத்தவர் மேரி பக்கம் திரும்பித் தன் கைகளிலே கொண்டுவந்த மானின் மாமி சத்தை வாட்டச் சொல்லிக் கொடுத்தார். பின், சுந்தரத் தின் பக்கம் திரும்பிய அவர், “மிஸ்டர் சுந்தரம், நாம் இந்த வாரக் கடைசியில் இங்கிலாந்து திரும்புகிறோம் என்றார். அவர் சொல்லியது சுந்தரத்திற்குப் பரம சந் தோஷமாக இருந்தது. அப்படியானால் விரைவில் இலங் கைக்குப் போக என்னால் முடியும். இலங்கை என்றவுடன் மோகனமான நினைவுகள் அவனது நெஞ்சிலே விண் மீன்களைப்போல் படர்ந்தன. மைதிலி இப்போது தாயாகியிருப்பாள் என்றெண்ணும்போது சுந்தரம் பரவசக் கடலில் ஆழந்தான். ஆனால், மைதிலியும் – அரசாங்கமும், ஏன் உலகமுமே தான் இறந்துவிட்டதாக எண்ணிக்கொண் டிருக்குமென்பதை நினைத்தபோது சுந்தரத்திற்குத் தன் மேலேயே ஆச்சரியமாக இருந்தது.
ஒரு வாரம் பறந்தது. ஜேம்ஸ்சும் றொபேட்டும் மேரி யும் சுந்தரமும் இங்கிலாந்து மீண்டார்கள். இங்கிலாந்தில் மேலும் ஒரு வாரத்தைக் கழித்தான் சுந்தரம். அன் று திங்கட்கிழமை. பிரமாண்டமான லண்டன் விமான நிலை யத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய ஜேம்ஸ், மேரி, றொபேட் ஆகியவர்களிடமிருந்து கண்ணீர் மல்க விடை பெற்றான் சுந்தரம். “உங்களை நான் என்றுமே மறக்க மாட்டேன். என் வாழ்க்கையிற் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர் தாங்கள்” என்றான் சுந்தரம்.
அன்பு எத்தனை மகத்தானது! இனம், மொழி போன்ற கட்டுக்களை யெல்லாம் உடைத்து எறிந்துகொண்டு ஓற் றுமை கீதத்தை முழங்குகின்ற அன்பில்லாவிட்டால் மனித வாழ்வில் என்னதான் அர்த்தம் இருக்கிறது ? மூவரிடமும் விடைபெற்ற சுந்தரம் விமானத்தில் ஏறினான். இருக்கை யில் அமர்ந்த அவனுக்கு ஓர் ஆச்சரியம் காத்விருந்தது. ஆம்! அங்கேயிருந்தது அவனது மாமன் மகள் நிலா வழகிதான். அவளை ஆச்சரியத்தோடு பார்த்தான் சுந்தரம். அவளோ சுந்தரத்தைப் பேராச்சரியத்துடன் பார்த்தாள். ஜெட் விமானம் இலங்கை நோக்கிப் புறப்பட்டது.
14. புயல் ஒய்ந்தது
கழிந்த ஆறு வருடங்களிலும் மைதிலியின் வாழ்விலும் பல மாறுதல்கள் நடந்திருந்தன. அவளின் அன்புச் செல் வம் கண்ணம்மாவிற்கு ஆறு வயது முழுமை பெற்றிருந்தது. மைதிலியின் தங்கை கலாவுக்கும் ஐந்து வயதுக் குழந்தையிருந்தது. அந்தக் குழந்தைக்குச் சுந்தரத்தின் பேரையே வைத்திருந்தார்கள்.
கலாவும் ராஜனும் வாழ்ந்த வாழ்க்கையைக் கண்டால் ஆசையை வென்ற ஞானியே காதல் வாழ்வை ஏற்றிட முனைந்திடுவான். அந்த அளவிற்கு ஆனந்தமயமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் அவர்கள். கலா வீணையாக இருந்தாள். சுந்தரம் தந்தியாக இருந்தான். அவர்கள் இருவரும் இணைந்து பிரேமையின் அமுத நாதத்தை மீட்டினார்கள். ஆண்டவன் அவர்களுக்கு எந்தக் குறை யுமே வைக்கவில்லை. பீ ஏ. சித்தியெய்தியவுடனேயே ராஜனுக்கும் கலாவுக்கும் கல்லூரி ஒன்றில் ஆசிரிய நிய மனங் கிடைத்தது. இருவரும் ஜோடியாகக் கல்லூரிக்குப் போவார்கள். ஜோடியாக வருவார்கள். அவர்கள் வாழ்ந்த ஆனந்தமயமான வாழ்வை இரசிப்பதிலும், தன் செல்வமான கண்ணம்மாவுடனும் சுந்தரத்துடனும் கொஞ்சி விளையாடுவதன் மூலமாகவும் தன் குறையெல் லாம் மறந்தாள் மைதிலி. அன்று மைதிலி அளவுக்கு மீறிய ஆனந்தப்பட்டாள். காரணம், அன்றுதான் அவள் தம்பி ரவிக்குச் சிறைத் தண்டனை முடிந்து விடுதலை கிடைக் கின்றது. அவனை அழைத்து வருவதற்காக ராஜன் முதல் நாளே கொழும்புக்குப்பு றப்பட்டுவிட்டான். இன்று பகல் யாழ்ப்பாணம் வரும் யாழ்தேவியில் ரவியும் ராஜனும் வர வேண்டும். அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த் துக் கொண்டிருந்தார்கள் மைதிலியும் கலாவும்.
‘பாம்’ என்ற ஒலியுடன் வீட்டு முற்றத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய மனிதனைக் கண்டவுடன் ‘என் தெய்வமே!’ என்று கூச்சலிட்டாள் மைதிலி. அவள் கண்களை அவளால் நம்பவே முடியவில்லை. அவள சிந்தையணு ஒவ்வொன்றும் மகிழ்ந்தது. ” அத்தான்! நீங் களா ? மைதிலி அதிசயித்தாள். காரிலிருந்து இறங்கி அருகே வந்த சுந்தரம் தன் மனைவியை அன்புடன் அணைத்துக் கொண்டான் தானும் தன் நாடும் ஏன் உலகமுமே இறந்துவிட்டதாய்க் கூறப்பட்டுவந்த தன் இதய தெய்வம் நேரில் வந்தது மைதிலிக்கு அளவற்ற ஆனந்தத்தைத் தந்தது.
மைதிலி தன் அன்பனின் ஸ்பரிசத்திலே மெய்ம் மறந் தாள். பக்கத்திலே தன் தங்கை இருப்பதையும் மறந்து சுந்தரத்தை அணைத்தாள் மைதிலி. கலாவோ ஆனந்தக் கண்ணீர் மல்க ஆறுவருடங்களுக்குப் பின் சேர்ந்த அந்த ஜோடியை மனதுக்குள் வாழ்த்தினாள்.
“மைதிலி, மைதிலி,” சுந்தரம் வார்த்தை பேச முடி யாதவனாய்த் தன் மனைவியை அணைத்திருந்தாள். உண்மையில் பிரிவு சக்தி மிக்கதுதான்! ஆறு வருடங் கள் எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் ஜோடிப் பறவைகள் பிரேமை பிரேமை வானத்திற் சிறகடித்தன. சுந்தரம் தன் அன்புக் குழந்தை கண்ணம்மா வைக் கொஞ் சினான். அக்குழந்தை ஆறு வருடங்கள் பார்த்தறியாத அப்பாவை ஆச்சரியத்தோடு பார்த்தது.
தன் தாயிறந்தது – ரவி சிறை செல்ல நேரிட்டது- கலா மணமுடித்தது எல்லா விஷயங்களையும் சுந்தரத்திற் குச் சொன்னாள் மைதிலி. ஆறு வருடங்களும் தமக்குள் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களை நினைக்குந்தோறும் சுந்த ரத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் தான் சென்ற யுத்த விமானம் விபத்துக்குள்ளானது தொடக்கம் விமா னத்திலிருந்து திரும்பும்போது இங்கிலாந்திற் கல்வி பயின்று திரும்பிய நிலாவழகியைச் சந்தித்தது வரை சகல விஷயங்களையும் சொன்னான்.
அவன் தன் மாமனார் இறந்ததைச் சொல்லியபோது சுந்தரத்தின் குரல் தளர்ந்தது. இந்த நேரத்திலே ரவி யும் ராஜனும் வந்து சேர்ந்தார்கள். ஆறு வருடங்களின் பின் தன் தம்பி வீட்டுக்கு வந்ததையிட்டு மைதிலி மனச் சந்தோஷம் அடைந்தாள். சுமார் ஏழு வருடங்களுக்குப் பின் அத்தானைக் கண்ட மகிழ்ச்சியில் ரவியும் இதயம் பூரித்தான்.
மைதிலியின் வாழ்வில் ஏற்பட்ட துயரின் இருள் நீங்கி இன்ப ஒளி பிறந்தது.
“மைதிலி இதோ இந்த மடலை……” சுந்தரம் பேச்சை முடிக்கவில்லை. அதற்குள் அவனைக் கடிந்த மைதிலி, ” இதோ நம் பாரதியின் அமுதக் கவிதை என்று சொல் லிக் சொல்லிக் கொண்டே வானொலிப் பெட்டியின் ஒலி யைப் பலமாக்கினாள். பாரதியின் சுவர்க்க கீதத்தைச் சுந் தரம் மைதிலி மட்டுமல்ல, பக்கத்தறையிற் படுத்திருந்த ராஜன் கலா ஜோடியும் உற்றுக் கேட்டார்கள்.
“சுட்டும் விழிச் சுடர்தான் – கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?
வட்டக் கரியவிழி – கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ
பட்டு நீலக் கரும்பு டைவை
பதித்த நல் வயிரம்
நட்டநடு நிசியிற் தெரியும்
நட்சத்திரங் களடி
சோலை மலரொளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – உனது
நெஞ்சின் அலைகளடி
கோலக் குயிலோசை – உனது
குரல் இனிமையடி
வாலைக் குமரியடி – கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்.”
ஆகா! எத்தனை அற்புதமான கவிதை! காலத்தின் வேகத்தை யறியாத – ஜீவ கவிதையின் வடிவிலக்கணத்தை யறியாத மூடர் நீங்கலாக மற்றவர்கள் யாவரும் பாடலை இரசிப்பார்கள்.
மைதிலி தன்னையும் மறந்து “வாழ்க பாரதி என்று கத்தினாள். அப்படியே அவள் சுந்தரத்தின் மார்பிற் சாய்ந் தாள். பக்கத்தறையிலும் இந்த நாடகமே நடந்தது. ஒரு சில நிமிடங்கள் பாரதி பாட்டுக் கேட்ட பரவசத்தில் சுந் தரத்திற்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. தன் கையிற் கொண்டு வந்த மடலை மைதிலியிடம் கொடுத் தான். அம் மடலில் சுந்தரத்தை மீண்டும் மேஜர் வேலைக்கு வரும்படி அரசாங்கம் தயவாகப் பணித்திருந்தது. அதைப் படித்தபோது மைதிலியின் மனம் சற்றுக் கோணியது. அது கண்டு சிரித்த சுந்தரம். ‘மைதிலி, உன்னை நான் இனிப் பிரியமாட்டேன். நான் வேலைக்குப் போகும்போது நீயும் என்னுடன் வருவாய்” என்றான். அப்பொழுது அங்கு வந்த ரவி தந்தியொன்றைச் சுந்தரத்தின் கையிற் கொடுத்தான். அதனைப் பிரித்த சுந்தரத்தின் முகத்திற் பரவசம் காணப்பட்டது.
“நான் நாளை வருகிறேன் ”
“நிலாவழகி”
தந்தியை மைதிலியிடம் கொடுத்த சுந்தரம் ரவியை அர்த்தபுஷ்டியோடு பார்த்து, “ரவி, என் மாமன் மகள் இனி உனக்குரியவள்” என்றான். ரவியோ பணிவோடு தலை கவிழ்ந்தான். ரவி – நிலாவழகி திருமணத்திற்கு இசைவு கூறிப் பக்கத்து வீதியிலுள்ள முருகன் கோயில் மணி ஒலித்தது.
(முற்றும்)
– அவள் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1968, விஜய பிரசுரம், மல்லாகம்.