(1968ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-7 | அத்தியாயம் 8-14
1. பிரிவு
டாண்! டாண்! என்று நான்கு தடவை ஒலித்த கடிகாரத்தின் ஓசை படுக்கையிலே ஆனந்தமயமான நித் திரை செய்துகொண்டிருந்த மைதிலியின் நித்திரையைக் கலைத்தது. கண்களைக் கசக்கியபடியே எழும்பிய மைதிலி வழக்கம்போல் “முருகா என்று மனத்துக்குள் தன் இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்துக் கொண்டாள். பின், அவசர அவசரமாக எழுந்து தன்ன கிலே உலகை மறந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்த் ஆருயிர்க் கணவன சுந்தரத்தைத் தட்டியெழுப்பினாள். விறைத்த கட்டையைப் போல கிடந்த கணவனை விழித்தெழும்படிச் செய்வது அவளுக்குச் சுலபமாகப்படவில்லை. “அத்தான், எழுந் திருங்கள் என்று மைதிலி ஆறாவது தடவையாகக் கூறும் பொழுதுதான் “உம்” என்ற அலுப்பொலி சுந்தரத்தின் வாயிலிருந்து வந்தது. அத்தான் நேரமாகிறது, எழுந் திருங்கள். இப்பொழுது எழுந்தால்தான் கொழும்பு மெயிலைப் பிடிக்கலாம்.” மனைவி மைதிலியின் குரல் அவனை எழும்பச் செய்தது. நெட்டு முறித்துக்கொண்டே எழுந்த அவன் தனது கைகளை மைதிலியின் மென் தோள்மேல் போட்டான். நாணுற்ற அவள், ” அத்தான், கைகளை எடுங்கள் நீங்கள் என்னை இப்படிக் கொஞ்சிக்கொண் டிருந்தால் நான் எப்படி உங்களுக்கு ஆகாரம் தயார் பண்ணமுடியும்?” என்றாள். ” என்றாள். மனைவி மைதிலியின் அன்புக் கண்டிப்பு சுந்தரத்தைப் பணியவைத்தது. சமையலறையை நோக்கி மயிலாக நடந்து சென்ற மனைவியின் அழகை இரசித்துக்கொண்டே சுந்தரம் குளியலறையை நோக்கி ஓயிலாக நடந்தான்.
இரு வார விடுமுறைக்குப் பின் இராணுவ முகாமுக்குத் திரும்பும் கணவனைக் கவலையோடு நோக்கிய மைதிலி யால் பதில் பேசமுடியவில்லை. அந்தப் பேதை உள்ளம் பதைபதைத்தது. தன அன்பனைப் பிரியப் போகிறோமே! என்ற நினைப்பு அவளது தொண்டையை அடைத்தது. அவரின் கண்கள் நீரோட்டமாயின. ஆதர வோடு தன் மனைவியை அணைத்த சுந்தரம், “என்ன மைதிலி? சிறுபிள்ளை மாதிரி அழுகிறாய். உம்…. நான் என்ன மீண்டும் வரவே மாட்டேனா ? ஆறு மாதத்தில் திரும்பிவிடுவேன். இதற்குப் போய் இப்படி அழுகிறாயே! அசடு சுந்தரத்தின் பேச்சு மைதிலியின் துயரத்தை மேலும் பெருக்கிவிட்டது. பொதுவாகத் துயருற்ற ஒரு நெஞ்சுடன் பேச்சுக் கொடுத்தால் அந்நெஞ்சின் துயரம் கூடுவது இயற்கையல்லவா? இதுபோலவே மைதிலியின் துயரும் முன்னிலும் பெருகியது. ” அன்பே, உங்களைப் பிரிந்து ஆறுமாத காலமும் எப்படியிருப் பேன் ? ” என்றபடியே சுந்தரத்தின் நெஞ்சில் முகம் புதைத்து விம்மினாள் மைதிலி. ஆதரவோடு அவள் கண் ணீர்த் துளிகளைத் துடைத்த அவன், “மைதிலி, நான் உன்னை விட்டு ஆறுமாத காலம் பிரிந்திருந்தாலும் நான் எழுதும் கடிதங்கள் வாராவாரம் உன்னுடன் பேசிக் கொண்டேயிருக்கும். மேலும் உனக்குத் துணையாக உன் தாயும் தம்பி ரவியும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நீ அழுவது நியாயமா?” சுந்தரத்தின் தேறுதல் மொழி களைக் கேட்ட மைதிலியின் நெஞ்சம் சற்று ஆறுதலடைந் தது. பெருமழையின் பின்பு சொட்டுச் சொட்டாக விழு கின்ற துமியலைப் போல வேகம் குறைந்த மைதிலி, “அத்தான், நீங்கள் சந்தோஷமாகப் போய்வாருங்கள் ” என்றாள். மைதிலியின் முகம் இப்பொழுது பூரண சாந்தி யுடன் காணப்பட்டது. இதைக் கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டான் சுந்தரம். சற்று முன்னால் கவலை மிகுந்து காணப்பட்ட மைதிலி களிப்போடு காணப்பட்டாள். இதிற் புதுமையொன்றும் இல்லையே ! பெண்ணுள்ளம் ஒரு பலூன் போன்றது. ஒருமுறை துன்பத்தால் விரியும்; உடனேயே தணிந்துவிடும். இது மைதிலிக்கு மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்கமுடியும்?
வீட்டுக்கு வெளியே நின்ற வாடகை வண்டியில் காலை ஊண்டிய சுந்தரம் மெதுவாக மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில், ” மைதிலி, உடம்பைப் பத்திரமாகப் பார்த்துக் கொள். கஷ்டமான வேலையொன்றும் செய்யாதே. மறுமுறை இங்கு நான் வரும்போது என்னை வரவேற்க வேறொரு ஜீவனும் இருக்கும் இல்லையா?” என்றான். சுந் தரம் கடைசியாகச் சொன்ன சொற்கள் மைதிலியை நாணு றச் செய்தது. ” போங்கள், உங்களுக்குச் சமய சந்தர்ப் பமே தெரியாது.’ மனைவி சொன்னதைக் கேட்ட சுந்தரம், “நான் போகட்டுமா?” என்றான். திடுக்குற்ற மைதிலி, ” போய்வாருங்கள். வாரா வாரம் உங்கள் கடிதங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பேன்.” எனறு சொல்லி அன்போடு தன் கணவனை வழியனுப்பினாள். அவளின் நெஞ்சம் வாடகை வண்டி சென்ற திக்கைப் பார்த்துத் தனக்குள் ஏங்கிக் கொண்டது.
2. அவள்
மைதிலி ஒரு சாதாரண பள்ளியாசிரியரின் மகள். அவள் தந்தை பாழும் குடிக்கடிமைப்பட்டவர். அவரது குடிப் பழக்கமே அவரது ஆயுளையும் குறுகிய காலத்திற்குள் முடித்துக்கொண்டது. தந்தையின் மறைவுக்குப் பிறகு மைதிலியும் அவளது சகோதரியும் தாயும் தம்பியும் அனாதை களானார்கள். ஆண் துணையில்லாத மைதிலியின் குடும்பத் தைக் கண்டு எள்ளி நகையாடியது ஊர். மைதிலி எங்கே யாவது வெளியே கிளம்பினால் அவளைப் பார்த்து பரிகசிப் பது “கட்டாக்காலி’ களின் பொழுதுபோக்காகிவிட்டது. மறைந்த தன் தந்தையின் பெயரில் வந்துகொண்டிருந்த சொற்ப சம்பளமே தஞ்சமென்றிருந்தது மைதிலியின் குடும்பம். இந்த இக்கட்டான நிலையிலேதான் தெய்வம் போல வந்தான் சுந்தரம். அவன் மைதிலியைச் சந்தித்த முதல் சந்திப்பிலேயே தன் உள்ளத்தை அவளுக்குப் பறி கொடுத்துவிட்டான். அவளது எளிமையும் அம் மங்கை யின். சுந்தரவதனத்திலே இழைந்தோடிய அசாதாரண சாந்தியும் சுந்தரத்தைப் பித்தனாக்கிவிட்டன. ஆரம்பத் தில் மைதிலி அவனோடு பழகியபோது எல்லா ஆண்களை யும் போலவே சுந்தரமும் இருப்பான் என்று நினைத்தாள். இருப்பினும் பழகப் பழகத்தான் ஆண் வர்க்கத்திற்கே சுந்தரம் ஓர் அணி விளக்கு என்பதை அவளாற் புரிந்து கொள்ள முடிந்தது அவள் அவனைப் பூரணமாக விரும் பினாள். இரு மனம் கலந்தால் பிறகென்ன ? சுந்தரம்- மைதிலி திருமணம் சிறப்பாக நடந்தது. சிறுவய திலேயே தாயையும் தந்தையையும் இழந்த சுந்தரம் தன் மாமன் ஆதரவிலேயே வளர்ந்தான். அவர் அவனை பீ. ஏ. வரை யும் படிக்க வைத்தார். சுந்தரத்தை ஒரு முழு மனிதனாக்கித் தன் மகள் நிலாவழகியை அவனுக்கே மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று விரும்பியது மாமனது உள்ளம். ஆனால், சுந்தரம் மைதிலியை மணந்ததின் மூலம் மாமனாரின் எண்ணத்திலே இடி விழுந்தது. சுந்தரத்துக்கு அவர் ஜென்மப் பகைவனானார். மைதிலியின் பிரேமைக் காக உலகையே விலை பேசத் தயாராக இருந்தான் சுந் தரம். இருவரும் வாழ்க்கைப் பாதையிலே கைகோர்த்துச் சென்றார்கள். சுந்தரத்தின் பீ. ஏ. படிப்பும், அவனது கட்டுடலும் இராணுவத்திலே அவனுக்குத் தளபதி வேலையை வாங்கித் தந்தது சுந்தரத்தினால் வறுமையில் வாடிய மைதிலியின் குடும்பம் பெருமைப்பட்டது ஊரா லும் உலகாலும் பொருளில்லை என்ற காரணத்தினால் ஓடுக் கப்பட்ட மைதிலியின் குடும்பக் கௌரவம் உயர்ந்தது சுந்தரத்தின் விருப்பத்தின் காரணமாக எச் எஸ்.சீ. சித்தி யெய்திய மைதிலியின் தங்கை கலா பீ. ஏ படிப்பதற்காகப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பப்பட்டாள்.
இப்பொழுது அவளுக்குக் கோடை விடுமுறை விட் டிருந்தார்கள். அவள் வந்தது சுந்தரத்தைப் பிரிந்து வாடிய மைதிலிக்கு எவ்வளவோ ஆதரவாக இருந்தது. ஓய்வு நேரங்களில் தங்கை கலாவுடன் பேசிக் களிப்பதில் மைதிலிக்குத் தனியான ஓர் ஆனந்தம் ஏற்பட்டது. கலாவின் கலகலப்பான பேச்சும் கபடற்ற மனமும் சுந்தரமில் லாத துயரத்தை ஓரளவுக்குக் குறைத்தது. சுந்தரம் விடை பெற்று ஐந்தாவது நாள். எவ்வளவுதான் பிற இன்பங்கள் கிட்டியபோதிலும் சுந்தரத்தைப் பிரிந்து கழித்த அந்த ஐந்து நாட்களும் ஜீவன் இல்லாத நாட்களாகவே தென் பட்டது மைதிலிக்கு உலகத்தில் ஒரு பெண்ணுக்கு மாறாத இன்பத்தைக் கொடுப்பது கணவனின் அணைப்பும் அவனது அன்புந்தானே? சிந்தனை வயப்பட்டிருந்த மைதிலி தன் தங்கை கொண்டுவந்த அஞ்சலை ஆவலோடு பிரித்தாள். அது சுந்தரம் அவளுக்குத் தீட்டிய காதற் கடிதம். அவன் எழுதிய ஒவ்வொரு எழுத்துக்களும் வான் நட்சத்திரங்களாக மிளிர்ந்து, மைதிலிமேல் அவன் கொண்டிருந்த மையலை எடுத்துக் கூறுவதாக இருந்தது. அந்த அன்பு மடலை நீங்களுந்தான் படித்துப் பாருங்களேன்.
அன்புள்ள மைதிலி !
ஆழ்கடலின் முத்தாய்- அன்பின் முத்தாய் – அன்பின் விளக்கமாய் பெண்மையின் இலக்கியமாய் விளங்கிடும் என் கற்கண்டே! உன்னைப் பிரிந்து நான் இங்கே வான் மழை காணாப் பயிராய் – அனலிடைப் புழுவாய்த் துடிக்கின்றேன். வளர்ந்து நிற்கும் அழகு மலைகளை மலையுச்சியிலே ஊற் றெடுக்கும் நீர் வீழ்ச்சிகளைப் – பாய்ந்து செல்லும் ஜீவ நதிகளையெல்லாம் நான் பார்க்கும்போது உன்னையே நினைக்கின்றேன். கண்ணே, எனது இதய தாகத்தை விரக வேதனையை எப்படித்தான் எழுத்தில் வடிப் பேன் ? பொழுதெல்லாம் உன்னருகிலே இருக்க வேண்டு மென்றே நான் விரும்புகிறேன். ஆனால், கடமை என்ற மூன்றெழுத்து என் ஆசைகட்கெல்லாம் தடைபோடு கிறதே! என் இதய வீணையிலே காதல் நாதம் மீட்டு கின்ற கவினோவியமே உன் உடம்பை நீ பத்திரமாகப் பார்த்துக்கொள். தாய்மையின் பொலிவிலே இருக்கும் உனக்குச் சிரமமான வேலைகள் ஆகாதல்லவா ? மற்றும் எனது அன்பை உன் தாய்க்கும் ரவிக்கும் சொல்லு. கலாவும் விடுமுறைக்கு அங்கு வந்திருக்கின்றாள்தானே ? மைதிலி, ஆறு மாதங்கள் பறந்தோடிவிட்டால் உன்னை அணைக்க நான் ஓடோடி வந்துவிடுவேன். இக்கடி தத்தை நான் எழுதும்போது நேரம் இரவு பத்து. கண் களைத் தூக்கம் ஈர்க்கின்றது. விடை கொடு, மறு மடலில் சந்திப்போம்.
என்றும் உன்,
சுந்தரம்.
ஆசைக் கணவனின் நேச மடலைக் கைகளிலே ஏந்தியபடியே கற்பனை வானிற் பறந்தாள் மைதிலி. அவளது சிந்தை அணு ஒவ்வொன்றும் இன்பத்தின் எல்லை யைத் தொட்டன. வெகுநேரத்திற்குப் பின் தன் சிந்தனை யிலிருந்து விடுபட்ட மைதிலி புதியதோர் உத்வேகம் தன்னைப் பற்றியிழுக்கக் கணவனுக்குப் பதில் மடல் எழுத ஆரம்பித்தாள். ஒருவித இன்பத் தடுமாற்றத்தில் உழன்ற மைதிலி தன் அன்பையும் ஏக்கத்யுைம் எழுத்தாக எழுதி னாள் சுந்தரத்துக்கு. அதனைத் தபாலிற் சேர்க்கும்படி தம்பி ரவியிடங் கொடுத்த பிறகுதான் மைதிலிக்கு நிம்மதி ஏற்பட்டது.
3. கடிதங்கள்
ஒருமாத காலம் கடந்துவிட்டது. மைதிலியின் தங்கை கலாவின் விடுமுறை இன்றோடு முடிவடைகிறது. இன்று அவள் பேராதனைக்குப் புறப்படுகிறாள். தன் அன்புத் தங்கை பல்கலைக் கழகத்திற்குப் புறப்படுவதையிட்டூ அவ ளுக்கென்று பிரத்தியேக பலகாரங்கள் தயார். செய்து கொடுத்தாள் மைதிலி. கவனமாகப் படிக்கும்படி தன் தங்கைக்குப் புத்தி கூறி அனுப்பி வைத்தாள். கலாவைப் பொறுத்தவரை அவள் மைதிலியின் நெஞ்சில் முழுமை யாகக் கலந்திருந்தாள். ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மைதிலி கலாவைக் கடிவாள். அதுதான் கலாவின் ஒழுங்கீனம். ஒழுங்கீனம் என்றால் நடத்தையில் என்று அர்த்தம் கொண்டு விடாதீர்கள். அவள் தங்கமானவள். ஆனால், தான் பாவிக்கும் எந்தப் பொருளையும் பக்குவ மாய்ப் பேணுந் தன்மை அவளுக்குக் கைவராது.
அவள் பாவிக்கும் அறையே கலாவின் அசிரத்தைக்குத் தக்க எடுத்துக்காட்டாகும். இதுவே கலாவிடம் மைதிலிக் குப் பிடிக்காத அம்சம். தன் தங்கை சென்ற பின்பு அவ து அறையைச் சுத்தப்படுத்துவதே மைதிலிக்குப் பெரிய வேலையாக இருந்தது. சிதறிக் கிடந்த பத்திரிகைகளையும் நாவல்களையும் வரிசையாக அடுக்கி வைத்த மைதிலி “இந் தக் கலாவுக்கு இவ்வளவு வயதாகியும் பொறுப்புணர்ச்சி இல்லையே” என்று தன் தங்கையைக் கடிந்தபடி புத்தகங் களை அடுக்கி வைத்தாள் ஒரு புத்தகம் மைதிலியின் நெஞ் சைக் கவர்ந்தது. ” கிரௌஞ்சவதம்’ என்ற அந்த நாவலை அவள் கண்ணுற்றபோது அவள் எதிரே சுந்தரத்தின் முகம் தெரிந்தது. ஆம், தான் கல்யாணம் கட்டிய புதி தில் இதைப் போன்று எத்தனை எத்தனையோ புத்தகங்களை மைதிலிக்கு அவன் வாசித்துக் காட்டியிருக்கிறான். அப் படி இந்தப் புத்தகத்தையும் படித்துக் காட்டி மகிழ்வதற்குச் சுந்தரம் இல்லையே ! என்றபோது மைதிலியின் நெஞ்சம் கவலையால் நெகிழ்ந்தது. கையிலிருந்த நாவலின் பக்கங் களைப் புரட்டிய மைதிலி அந்த நாவலின் நடுவிலிருந்து கீழே விழுந்த கடிதத்தைக் கண்டாள். ஆச்சரியம் பொங்க அதைக் கைகளிலே எடுத்தாள். தன்னையறியாமல் அந்த மடலை ஊன்றிப் படித்தாள். அதனைப் படிக்கப் படிக்க வியப்பும் துயரும் மின்னலும் இடியும்போல மைதிலிக்கு ஏற்பட்டன. நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பின. அந்தக் கடிதத்தை அவள் மட்டுமல்ல, நீங்களும் எதிர் பார்த்திருக்கமாட்டீர்கள்.
அன்பே கலா,
கண்ணும் இமையுமாகக் கலந்து பழகிய உன் காதலை இந்தக் கோடை விடுமுறை பிரித்துவிட்டது. கல்லூரி நாட்களிலே நீ என் அருகிலேயே இருந்தாய் இதனால் மாறாத இன்பம் கண்டேன். இன்றோ தீராத சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறேன். கண்ணே! ஏன்தான் விடுமுறை என்ற ஒன்றை விட்டு இளம் உள்ளங்களை விரகதாபம் அடைய வைக்கின்றார்களோ தெரிவில்லை. பிரேம வானின் பொன் நிலவே. என் காதல் இன்னமுதமே, நெஞ்சகத் தைத் தழுவி நிற்கும் குளிர்த் தென்றலே, நீ என் பக்கத்தேயில்லாத காரணத்தாலோ என்னவோ வெண் நிலா கூட என்னை வேதனை செய்கிறது. நட்சத்திரங்களெல்லாம் என்னைப் பார்த்து நகைப்பாகக் கண சிமிட்டுகின்றன. கலா, உன் காந்த மேனியைத் தழுவிக் கொண்டே யிருக்க வேண்டும்போல் தோன்றுகிறது. உம்… என்ன செய்வது கல்லூரி தொடங்கும்வரை பல்லைக் கடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதானே.. பிரம்மாவின் அற் புத சிருஷ்டியே ! இம் மடல் கண்டவுடன் உன் மறுமடலை உடனே எழுதுக. இதோ உனக்கொரு முத்தம்.
ஆருயிர்,
ராஜன்.
ராஜன் ! யார் இந்த ராஜன் ? மைதிலியால் வியப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. தன் காதலைப் பற்றி உற்ற சகோதரியான தன்னிடம் கூடக் கலா சொல்லாதது மிகுந்த ஆச்சரியத்தையும் வேதனையையும் கொடுத்தது. பொது வாக எந்த விஷயமானாலும் மைதிலியைக் கேட்டுவிட்டுத் தான் கலா செய்வாள். ஆனால், இந்தக் காதல் விஷயம்? ராஜன் என்பவன் யாரோ? எந்த ஊரோ? நல்லவனோ கெட்டவனோ ? எதையுமே மைதிலியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த முறை கோடை விடுமுறைக்கு வந்தபோது கலா இடைக்கிடையே கடிதங்கள் எழுதிய தும், தான் கேட்டபொழுது, தன் தோழிக்கு எழுதுவ தாக அவள் மழப்பியதும் மைதிலியின் நினைவுக்கு வந் தது. மைதிலியைப் பொறுத்தவரை அவள் தன் கணவ னான சுந்தரத்தைத் தவிர ஆண் வர்க்கத்தையே எதிர்த் தாள். அந்த அளவிற்கு வெகுளி மனப்பான்மை மிக்கவள் இந்த நிலையில் தன் சகோதரி ஒருவனைக் காத அவள் லிப்பதாகத் தெரிந்ததும் மைதிலியின் உள்ளம் எனன பாடுபட்டிருக்கும்! ! கலாவை எப்படித் திருத்துவது என்றே மைதிலிக்கு விளங்கவில்லை. அவளைப் பொறுத்த மட்டில் கலா ஒரு குற்றவாளியாகவே காணப்பட்டாள். வெகுநேரச் சிந்தனையின் பின் தன் அருமைத் தங்கைக்குப் பல புத்திமதிகள் கூறி, ஆடவர்களின் ஆசை வார்த்தை களால் மோசம் போக வேண்டாம் என்று பணித்து, ‘சுந்தரத்தைப் போல் எல்லாரும் நல்லவனாய் இருக்க முடியாது என்று எடுத்துக் கூறி, நீண்ட ஒரு கடிதத்தை எழுதினாள் மைதிலி. அக் கடிதத்தைத் தபாலில் சேர்க்கச் சொன்ன பின்புதான் எரிமலையாகக் குமுறிக் கொண் டிருந்த மைதிலியின் இதய வேகம் தணிந்தது.
4. காதற் புறாக்கள்
செங்கதிரோன் மேற்கை நாடிக்கொண்டிருந்தான். மனோகரமான மாலைவேளை. வசந்தகாலத்துத் தென்றல் வீசிக்கொண்டிருந்தது. பேராதனைப் பல்கலைக் கழகத்தை அடுத்திருந்த தனிமையான பூங்காவிலே இரு காதற் புறாக்கள் காதலின்பம் சுகித்துக்கொண்டிருந்தன. தன்னிலை மறந்திருந்த அவ்விரு புறாக்களிலும் ஆண் புறா முதன் முதல் பேச்சை ஆரம்பித்தது. “கலா ஏன் மனவாட்டத் துடன் காணப்படுகிறாய்; நான் காரணத்தை அறியலாமா?” ஆணின் குரலுக்கு மறுமொழியாகத் தன் கையி லிருந்த கடிதத்தைக் கொடுத்தாள் அப்பெண். அதாவது கலா. கடிதத்தைப் படித்த ஆணின் -ராஜனின் முகத்தில் இலேசான புன்னகை அரும்பியது. அதற்கு அர்த்தம் அறிந்துகொள்ள விரும்பிய கலா, ஏன் சிறிக்கிறீர்கள்?” என்றாள். தொடர்ந்து சிரித்த ராஜன் “கலா, உன் அக்கா ஒரு வெகுளி. அவள் கருத்துப்படி பார்த்தால் ஆணினத் தையே உலகத்திலிருந்து அழித்தால்த்தான் அவள் சாந்தி காணுவாள்போல் இருக்கிறது. அன்புடன் ராஜன் தோளிற் கை வைத்த கலா, “ராஜன் உங்களை அக்கா ஒருமுறை நேரிற் பார்த்துவிட்டால் தன் சுந்தரத்தை விடத் தாங்கள்தான் நல்லவர் என்று முடிவு கட்டி விடுவாள்” என்றாள். ஆதரவோடு அவள் கரம் பற்றிய ராஜன் “கலா, யாருக்கு யார் நல்லவராய் இருந்தால் எனன. உனக்கு நான் நல்லவனாய் இருந்தாற் சரி தானே” என்றான். இதைக் கேட்ட கலா “ராஜன், எனக்குச் சகோதரியாய்க் கிடைத்த மைதிலியைப் போல் இந்த உலகத்தில் யாருக்குமே ஒரு சகோதரி கிடைக்க முடியாது. அவள் தன்னலமற்ற தெய்வம். எங்கள் குடும்பம் ஏழ்மையில் வாடிக்கொண்டிருந்தபோது எமக்குச் சாப்பாடுகூடச் சரிவரக் கிடையாத அத்தகைய நேரத்தில் தன் பங்கை எனக்கும் என் தாய்க்கும் தம்பிக்கும் தந்து விட்டுத் தான் மட்டும் பட்டினியாக இருப்பாள் மைதிலி. என் சகோதரியின் மேம்பட்ட குணத்தினை நீங்கள் அவ ளோடு பழகினால்தான் புரிந்துகொள்ள முடியும் என்று கூறித் தன் தமக்கையைப் புகழ்ந்தாள் கலா. இதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட ராஜன் இந்த இருபதாம் நூற் றாண்டிலும் இப்படிப்பட்ட சகோதரிகளா ? என்று சொல் லிக்கொண்டே கலாவை அணைத்தான். தனிமை அவர் களுக்கு சுவர்க்கமாயிருந்தது. அத் தனிமையின் இனிமை யில் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டார்கள். கலா வின் பொன்னான கன்னங்கள் புண்ணாகும் வண்ணம் அவள் முகத்தில் முத்தமாரி பொழிந்தான் ராஜன். அவர் களிருந்த அச் சோலையிலே கூவிக் கொண்டிருந்த மாங் குயில் கூடக் காதலரின் கூடல் கண்டு ஜோடி இல்லாத் தன்னிலை நினைந்து பொறாமைப்பட்டது. அந்தி நிலவு வானத்தில் தோன்றும் வரை இன்பத்தின் அணைப்பி லிருந்து பிரியாது பிறவிப் பயனைக் கண்டார்கள் கலாவும் ராஜனும். காதலைப் போன்று உள்ளத்திற்கும் உடலுக் கும் நினைவுகளுக்கும் ஆனந்தத்தை அள்ளி அளிக்கக் கூடிய அமிழ்தம் வேறென்னதான் இருக்க முடியும்?
5. எண்ணத்தில் வீழ்ந்த இடி
“அக்கா உனக்குக் கடிதங்கள் கடிதங்கள் வந்திருக்கின்றன.” தம்பி ரவி கொண்டு வந்த கடிதங்களை உற்று நோக்கி னாள் மைதிலி அதில் ஒன்று அவளது ஆருயிர் சுந்த ரம் எழுதியது. அடுத்த கடிதம் அன்புத் தங்கை கலா எழுதியது. இரண்டு மடல்களிலும் எதை முதலிற் படிப் பது என்று தடுமாறிய மைதிலி. தன் கணவனின் கடிதத் தையே முதற்கண் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள்.
என்னருமை மைதிலி,
இந்தக் கடிதம் உனக்கு வியப்பும் வேதனையும்தான் தரும். ஆயினும், தயவு செய்து முழுக்கப் படி. கண்ணே, கொங்கோ என்ற கறுப்பர் நாட்டில் சுதேச கலகக் காரர்களுக்கும், ஐ. நா. மன்ற அங்கத்துவ நாடுகளின் வீரர்களுக்கும் கடுமையாகச் சண்டை நடப்பது பற்றி உனக்கு நான் சொல்லியிருக்கின்றேனல்லவா? அந்தக் கொங்கோப் போரில் பங்குபற்றுவதற்கு ஐந்நூறு படை ஐ வீரர்களைத் தந்துதவும்படி ஐ நா. மன்றச் செயலாளர் இலங்கையைக் கேட்டிருக்கின்றார். இலங்கை அரசாங்கம் தன் நல்லெண்ணத்தைக் காட்டுவதற்காகப் படைகளை அனுப்புவதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கின்றது. கொங் கோவிற்குப் படையையிட்டுச் செல்லும் மூன்று மேஜர் களில் என்னையும் ஒருவனாக அரசாங்கமும். இராணுவ மேலிடமும் தெரிந்துள்ளன. மறுக்கமுடியாத நிலையில் நான் வெளிநாடு போகிறேன். அன்பே மைதிலி, இதை எழுதும்போது என் நெஞ்சம் வேகுகின்றது. ஆனால். இதைப் படிக்கும்போது நீ எப்படி வருந்துவாய் என்ப தையும் நான் அறிவேன். என்றபோதிலும் கடமையி லிருந்து என்னால் நழுவ முடியவில்லையே.
மைதிலி, அன்பே, பெரும்பாலும் ஒரு வருடத்தில் இலங்கை திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எதையுமே சரியாகச் சொல்ல முடியவில்லை. மேலும், உன் உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். உனது தாயின் சுகம் இப்பொழுது எப்படியிருக்கிறது? உன் தங்கையைப் பற்றியும் எழுதியிருந்தாய். மைதிலி, அவளுக்குத் தக்க வயது வந்து வீட்டது யாரைப் பிடிக் கிறதோ அவனையே அவள் மணந்து கொள்வாள். படிக் கும் காலத்திற் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கவனமாகப் படிக்கச் சொல். உன் தம்பியையும் கவன மாகப் படிக்கச் சொல். நான் திரும்பும்வரை அவன்தானே உங்கள் குடும்பத் தலைவன். மேலும், மாதாமாதம் உன் பேருக்குப் பணமும் கடிதமும் அனுப்புவேன்.
வேறு எழுதுவதற்கொன்றுமில்லை. மறுமடலை நான் உனக்குப் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்தே எழுத முடியுமெனக் கருதுகிறேன். என் அன்பே. மனதை அலையவிடாது தைரியமாக இரு. பிரிவுதான் பிரேமைக்குப் பொலிவூட்டுகிறது.
இவ்வண்ணம்,
அன்பின்,
சுந்தரம்.
கணவனின் கடிதம் மனைவியின் நெஞ்சிலே வேதனைப் புயலைக் கிளப்பியது. ஆறு மாதந்தான் கணவனைப் பிரிந் திருக்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால், இனிமேல் எத்தனை மாதங்களோ, இன்றேல் வருடக் கணக்காகவோ தன் கணவனைப் பிரிந்திருக்க வேண்டும் என்பதை மைதி லியால் புரிந்துகொள்ள முடியாதிருந்தது. அவளால் சும்மா இருக்க முடியவில்லை. படுக்கையில் விழுந்து புலம் பினாள். அன்புக் கணவனின் பிரிவு நேச மனைவியின் நெஞ்சில் எத்தனை மடங்கு வேதனையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு மைதிலியின் நிலை தக்க உதாரணமாக அமைந்தது.
காலையிலிருந்து மாலை வரையும் மைதிலி இடையறாது கண்ணீர் பெருக்கினாள். மரங்களை, வீடுகளை, செடி,கொடி களை அழிக்கின்ற புயலுக்கும் ஓய்வுண்டு. ஆனால், அழு தழுது வடியும் மைதிலிக்கு மட்டும் ஓய்வே கிடைக்கவில்லை. பெண்களுக்கு எத்தனையோ ஆற்றலை ஆண்டவன் கொடுத்திருக்கின்றான். சாந்தம், அன்பு, எழில் இவற்றிற் கெல்லாம் உருவகமாகப் பெண்ணைப் படைத்த ஆண்ட வன், பிரிவைத் தாங்கும் சக்தியை மட்டும் ஏனோ கொடுக்க வில்லை ! அப்படி இந்த ஆற்றலைக் கொடுத்திருந்தால், காட்டாற்று வெள்ளம்போல் – பரவி வருந் தீயைப்போல் மைதிலியின் உள்ளத்திற் பொங்கிய தாபமும் தணிய வழி பிறந்திருக்கும் மைதிலிக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந் தது. ஆமாம், அரசாங்கத்தின் மீதுதான் அவளுக்கு ஆத் திரம். ஆயினும்; தன் கணவன் தாய்நாட்டிற்குப் பெருமை தேடித் தரப்போகிறான் என்று நினைத்து மைதி லியின் ஆத்மா சந்தோஷமடைந்தது.
6. சுந்தரம்
ஐ நா. மன்றத்தின் அழைப்பின் பேரில் கொங் கோவை நோக்கித் தம் பயணத்தை ஆரம்பித்த இரா ணுவ வீரர்கள் இன்ப வெள்ளத்தில் மிதந்தார்கள். தாய் நாட்டின் புகழை நிலைநாட்டுவோம் என்ற இன்ப நினை வினால் ஈர்க்கப்பட்டு வீரர்கள் ஆனந்தக் கடலில் மிதந் தார்கள். ஆனால், அத்தனை வீரர்களிலும் ஒருவனின் நெஞ்சில் மட்டும் சோகம் கப்பிக் கிடந்தது. கப்பல் இலங்கையை விட்டு விலக விலக அத் தளபதியின் துன் பம் அதிகரித்தது. அவன்தான் சுந்தரம். அவனுக்குத் தன் மனைவி மைதிலியை நினைக்கும்போது மனத்தாங்கல் கூடியது. இன்னும் ஐந்து மாதத்தில் தனக்குப் பிறக்கப் போகும் செல்வத்தைக் கொஞ்ச வழியில்லையே! என்று நெஞ்சம் மிக வருந்தினான் சுந்தரம் எவ்வளவுதான் மைதிலியின் நினைவை மறக்க முயன்றாலும் மறக்க முடிய வில்லை. மைதிலியின் மைவிழிகள். பட்டுக் கன்னங்கள், முல்லைப் பற்கள் இவற்றையே நினைந்து நினைந்து உருகி னான். அப்பொதெல்லாம் அவன் மனம் இந்த மேஜர் வேலையை விட்டுவிட்டுத் தனது ஆசைக்குரிய மைதிலியை ஓடிச் சென்று தழுவலாமா என்று எண்ணும். ஆனால், மறுகணமே கடமை என்ற மூன்றெழுத்தும் அவனது மனோரதத்திற்குத் திரையாக அமைந்துவிடும். இலங்கை யிலிருந்து புறப்பட்ட ஐந்நூறு வீரர்களுக்கும் தலைமையிட் டுச் சென்றவன் சுந்தரம். இரண்டாமவன் நாயகம். மூன்றாமவன் சில்வா. இந்த மூவரில் சுந்தரம் ஒருவன் தான் மதுவையும் மங்கையையும் வெறுப்பவன். மற்றைய தளபதிகள் மூச்சு விட மறந்தாலும் மது அருந்துவதையும் மங்கையரைத் தழுவுவதையும் மறக்கமாட்டார்கள். அவர்கள் எல்லாரும் பிரயாணம் செய்த ‘ மேரி கப்பலில் பெண் களுக்குக் குறைவேயில்லை. அதுவும் அழகு சுந்தரிகள்! இந்த நிலையில் மேஜர்களான நாயகமும் சில்வாவும் மனம் பேதலித்ததில் ஆச்சரியம் இல்லையே.
சுந்தரம் மட்டும் பிற மகளிரைத் தழுவுவதற்கு மனம் ஒப்பாதவன். காரணம், அவன் உணமையான மனித இதயம் மிக்கவன். அவனை எப்படியாவது மகிழ்விக்க வேண்டும் என விரும்பிய நாயகம் சுந்தரத்தைத் தன் அறையில் நுழையும்படி கூறிவிட்டு அகன்றான். நாயகம் அழைத்த காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாத சுந்தரம் அங்கே சென்றான். அவ்வறையிலே கண்ட காட்சி யால் அருவருப்புற்றான். காரணம், அவ்வறையிலே இருந்த கட்டிலில் ஒரு பருவக் கட்டழகி யிருந்தாள். சுந்த ரத்திற்குக் கண்களினால் ஜாடை காட்டினாள் அவ்வழகி. அவ் அலங்கோலக் காட்சியைக் கணட சுந்தரம் காறி உமிழ்ந்துவிட்டுத் தன் அறைக்குப் போய்விட்டான். அவ னுக்கு மேஜர் நாயகத்தின்மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அவனுள்ளமோ இகத்திலும் பரத்திலும் பிரிய சகி மைதிலியே என் கூடல் மகள் என்று சொல்லிக் கொண்டிருந்தது. சுந்தரத்தைப் பொறுத்தவரை மைதிலி தெய்வ மகள். மைதிலியின் அன்பினிலே கிட்டும் சுகம் புனிதமானது. ஆண்களும் கற்பினைப் பேண வேண்டு மென்பது அவசியமானது என்ற கருத்தையுடையவனவன்.
கப்பற் கண்ணாடியூடாக ஆழியின் பொங்கியெழும் அலைக் கூட்டத்தை அவதானிக்கும்போது சுந்தரத்தின் நெஞ்சம் நிலையின்றித் தவித்தது. மைதிலியின் சுந்தர நினைவு அவன் இதயத்தை ஈர்த்தது. பாரதியின் ‘நீலக் கடலலையே உன் நெஞ்சின் அலைகளடி என்ற மோகனக் கவிதையின் உயிர்த்துவத்தைச் சுந்தரம் நினைத்துக் கொண்டான்.
தாய் தாட்டின் புகழை நாட்டப் போய்க்கொண்டிருக் கும் இராணுவப் படையினர் கொங்கோப் போரிலே உயிரை யும் கொடுக்கவேண்டி வரலாம் என்பதைச் சுந்தரம் அறி வான. அவன் அத்தகைய வீர மரணத்தை நிச்சயம் ஆவலோடு வரவேற்பான். பள்ளியிற் படிக்கின்ற காலத் திலே அவனது சரித்திர ஆசிரியர் நெப்போலியனைப் பற்றியும் அலெக்சாண்டரைப் பற்றியும் கரிபால்டியைபு பற்றியும் கற்பிக்கின்ற நேரத்திலே, சுந்தரம் அவர்களைப் போல் தானும் ஆகக்கூடாதா? என்று நினைப்பான். சாவைச் சந்தோஷத்தோடு வரவேற்கத் தயங்காத சுந்த ரத்திற்குத் தான் போரிலே இறந்துவிட்டால் மைதிலியின் நிலை சிறகிழந்த பட்சியின் நிலையாகிவிடுமே என்பதை நினைக்கும்போது, சாவு அவனைப் பீதியுறச் செய்வதாகத் தான் இருந்தது.
தாமெல்லாம் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கச் சுந்தரம் மட்டும் எதையோ பறி கொடுத்தவன் மாதிரி நீலக் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந் தது பிற இராணுவ வீரர்களுக்கு நகைப்பேற்படுத்தியது.
7. உலகம் இருண்டது
ஆறு மாதங்கள் மின்னல் போல் மறைந்தன. அந்த ஆறு மாதங்களும் மைதிலியின் வாழ்விற் பெரும் சோத னைக் காலம். அவளின் அன்புக் கணவன் கடமையைப் பெரிதென நினைந்து போர்முனை சென்றுவிட்டான். மைதிலியோ தூண்டிற் புழுவாய்த் துடித்தாள். உணவு செல்லாது, உறக்கங் கொள்ளாது மனதைத் தன் கணவ னிடமே கொடுத்துவிட்ட மைதிலி நெஞ்சம் மிக வெந் தாள். இரவுகள் வந்தன. சென்றன. விண் மீன்கள் பூத் தன, மறைந்தன. கதிரவன் தோன்றினன், மறைந்தனன்* நிலவு வந்தது, போனது. ஆனால், மைதிலியின் ஆசைக் கணவன் மட்டும் இன்னமும் வரவில்லை. கொங்கோப் பகுதி யில் இடைவிடாது கடுஞ் சண்டை நடப்பதாகவும் அதிலே இதுவரை இலங்கையைச் சேர்ந்த பல இராணுவ வீரர் கள் இறந்துவிட்டதாயும் வானொலியின் வாயிலாகவும் செய்தித் தாள்கள் மூலமாகவும் செய்திகள் கிடைத்துக் கொண்டிருந்தன.
தினமும் மைதிலி “கடவுளே, என் கணவனை என் னிடம் பத்திரமாகத் திருப்பிச் சேர்த்துவிடு என்று தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டாள். கணவனைப் பிரிந்த வேதனை ஒருபுறம் இருக்கத் தங்கை கலாவின் விஷயமும் மைதிலிக்குத் திருப்தியைத் தரவில்லை. கலா கல்லூரி காலத்திலேயே காதலுலகில் நுழைந்தது, மைதிலி விரும்பாத ஒன்றென்றாலும் கலாவோ தன் காதலை சிக் கெனப் பற்றியவளாகவேயிருந்தாள். இத்தோடு மட்டும் மைதிலியின் மனக் கஷ்டம் நீங்கவில்லை. ஊதாரியாகத் திரியும் தன் தம்பி, சாவைச் சந்திக்கத் தருணம் பார்த் திருக்கும் வயோதிபத் தாய். இவர்களெல்லாம் மைதிலிக்கு இன்னல் தருபவராகவே இருந்தார்கள். மைதிலி பெண் களுக்கெல்லாம் மணி விளக்குப் போன்றவள். அவளது இதயம் பிரேமையின் பொற்கோயில். கோடி துயரங்கள் மைதிலியைக் கூடி நின்றாலும் அடிக்கொருதரம் சுந் தரம் கொங்கோவிலிருந்து தீட்டுகின்ற கடிதங்கள் ஓரள வுக்கு மனச் சாந்தியைத் தந்தது.
அன்று முதலாம் தேதி.
சுந்தரத்தின் மடலை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மைதிலி. அஞ்சலூழியன் கையிலே தந்து சென்ற கடி தத்தை ஆவலோடு பிரித்தாள் அவள். அதைப் படிக்கப் படிக்க இன்பமும் துன்பமும் மைதிலிக்கு மாறி மாறி ஏற் பட்டது.
இராணுவ நிலையம்,
கொங்கோ.
என் ஊனிலும் உயிரிலும் இரண்டறக் கலந்துவிட்ட மைதிலி.
இக் கடிதம் வெளிநாட்டிலிருந்து நான் உனக்கு எழு தும் ஐந்தாவது கடிதம். ஆறாவது கடிதம் எழுதுவேனோ என்னவோ ! உயிரோடிருந்தால் நிச்சயமாக எழுது வேன். அன்பே. அனுதினமும் இங்கு நடக்கும் கொடிய போரிலே பல வீரர்களின் உயிர்கள் பலியாகிக் கொண்டே யிருக்கின்றன. இதுவரை இலங்கை வீரர்களில் நானூற் றுக்கு மேற்பட்டோர் இறந்துவிட்டார்கள். எனது சக தளபதி சில்வாவும் அவர் தலைமையிலே சென்ற ஐம்பது வீரர்களும் நேற்றைய போரிலே இறந்துவிட்டார்கள். ஒருவேளை நானும் இறக்கவேண்டி வந்துவிட்டால்? இந்த வரிகளைப் படிக்கும்போது உனது நெஞ்சம் என்ன மாய் வேதனையுறும் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால், ஒருவேளை உன் அன்புக்குரிய சுந்தரம் போரிலே இறந்துவிட்டாலும் என் ஆத்மா என்றென்றும் உன்னையே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். எத்தனை ஜென் மங்கள் எடுத்தாலும் உன்னை மறவேன். காதற் பைங்கிளியே, நீ படும் கஷ்டங்களையெல்லாம் என்னால் உணரமுடிகிறது. என்ன செய்வது? மைதிலி, துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்து விடுவோம். இன்பம் செய்யும் முருகனை நீ பிரார்த்திப்பாயாக. துன்பமெலாம் பறந்துவிடும். அன்பே, மேலும் உனக்கு நான் ஒன்று சொல்ல வேண் டும். இது பத்தாம் மாதம்தானே! ஏனடி என் இரா ஜாத்தி நகைக்கின்றாய். இத்தோடு மடலை முடிக்கின்றேன். கடவுள் விரும்பினால் நாம் மறுமடலிற் சந்திக்கலாம்.
என்றும் உன்,
சுந்தரம்.
மடலைத் தன் கண்களிலே ஒற்றிக்கொண்டாள் மைதிலி. அவளது வாய் தன்னை யறியாமல் “அவருக்கு ஓர் ஆபத் தும் வரக்கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டது. நெஞ்சமோ ஏக்கக் கடலாகியது. இரு தினங்கள் சென்றன.
ஒரு வெள்ளிக்கிழமை. அன்றுதான் கிருஷ்ண ஜெயந்தி. கோகுலபாலனென்றும் மோகனக் கண்ணனென்றும் அன் பர்களால் விரும்பிப் பூஜிக்கப்படுகின்ற கண்ணன் பிறந்த நாளிலே மைதிலிக்கும் தனி ஈடுபாடு இருந்தது, அதி காலையிலேயே படுக்கையை விட்டெழுந்த மைதிலி நீராடி. வீடு பெருக்கி, வாசலில் அழகிய கோலமிட்டு, கண்ணன் படத்திற்கு முல்லை மலர்களைச் சூட்டிவிட்டு, ஆண்டாளின் திவ்விய சிருஷ்டியான “திருப்பாவை ” யைப் படிக்க ஆரம் பித்தாள். அதைப் படிக்கப் படிக்க மைதிலியின் துன்பங் கள் படிப்படியாகக் குறைந்தன.
அவள் மனக்கண முன்னே புல்லாங்குழலேந்திய கண்ணன் முறுவலித்து வந்தான். குழல் இன்னிசை எழுப்புகின்றது. ஈடற்ற பகவத் பிரேமை வயப்பட்ட மைதிலி திடீரென்று இடுப்பைப் பிடித்துக் கொண்டாள். அவளது மேனி சிலிர்த்தது. இன்பமும் துன்பமும் செறிந்த ஓர் அசாதாரண அனுப வம் அவளுக்கு ஏற்பட்டது. அவளது உள்ளம் அவ ளிடம் ” மைதிலி நீ தாயாகப் போகிறாய் என்று சொல்லிக் கொண்டது.
தொட்டிலிற் படுத்துச் சிறுமலர் வாய் திறந்து சிரித் துக்கொண்டிருந்த மழலை அமிழ்தை நெஞ்சோடு அணைத் துக் கொண்டாள் மைதிலி. அவளுக்குச் செல்வம் பிறந்து இன்றோடு முப்பது நாட்கள் பூர்த்தியாகின்றது. தன் பெண் குழந்தை கிருஷ்ண ஜெயந்தியிற் பிறந்தபடியால் அதற்குக் ‘கண்ணம்மா என்று பெயர் வைத்தாள் மைதிலி. அத்தோடு பாரதிமேல் அவளுக்கிருந்த அள வற்ற பக்தியும் அப் பெயரைத் தன் குழந்தைக்கு வைக்க ஒரு காரணமாயிருந்தது. கோகிலத்தைப் போன்ற குர லினிமை கொண்ட மைதிலி தன் அமுத வாய் திறந்து பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” என்ற பாட்டைப் பாடினாள். பாரதியின் பாட்டைப் பாடியபடியே தன் செல்வத்தைத் துயிலச் செய்தாள் அவள்.
பால் வடியும் முகத்துடன் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காண்கையில் மைதிலியின் முகம் வாட்டமுற்றது. பிறந்த செல்வம் இன்னும் தந்தை முகம் காணவில்லையே!” என்ற மைதிலியின் மெல்லிய குரலையும் முந்திக் கொண்டு இரு வெண் மல்லிகைகள் கண்ணினின்று விழுந்தன.
‘டிரிங்’ ‘டிரிங்’ என்று வாசலில் ஒலித்த மணியோசை மைதிலியை வாசலை நோக்கி, ஓட வைத்தது. அவளுக் குக் கலா ஒரு கடிதம் எழுதியிருந்தாள். வாரக் கடைசி யிற் கலாவுக்கு விடுமுறை வருவதாகவும் அதனால் வீட் டுக்கு வருவதாகவும் கலா எழுதியிருப்பதாகவும் மைதிலி ஒரு கணத்தில் உணர்ந்து கொண்டாள். தன தஙகை வருவதில் மைதிலிக்கு மகிழ்ச்சிதான். காரணம், பொழுது போகாமல் வாடிய மைதிலிக்குத் தங்கையின் கலகலப்பான பேச்சுப் புதிய காந்தியை அளிக்கும் என்று எதிர்பார்த் தாள். இத்தோடு வாதநோயினால் வாடுகின்ற தாயாருக் கும் உதவக் கலாவின் வருகை பயன்படும் என்று நம்பி னாள் அவள். ஒரு சில நிமிடங்களில் எத்தனை எத்த னையோ எண்ணங்களை எண்ணிய மைதிலி, விரைவாக மடலைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள். அந்தக் கடிதம் அவளுக்கு ஆனந்தத்தைத் தந்தாலும் கடைசியிற் கலா எழுதிய சில வரிகள் மைதிலியின சிந்தனையைக் கிளறி விட்டன. அம் மடலைப் பாருங்கள்.
பேராதனை.
கண்ணின் மணியாம் சோதரி,
உனக்குக் குழந்தை பிறந்ததை யறிந்தபோது அள விலா மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், குழந்தை பிறந்த நேரத்தில் அத்தான் இல்லாதது உன்னைப் போலவே எனக்கும் கவலையைத் தருகின்றது மேலும், எம் தம்பி கட்டுப்பாடில்லாமல் சுற்றித் திரிவதாய் எழுதியிருந்தாய். முயன்றால் அவனைத்திருத்தலாம்.
மற்றும், அம்மாவுக்குச் சுகம் எப்படி? இங்கு சில நாட்களாய்க் கடும் மழை. அக்கா. நான் இந்த வாரம் யாழ்ப்பாணம் வரும்போது என்னுடன் எனது பிரிய ராஜனும் வருவார். எங்களை வரவேற்க எனது பெறாமகள் கண்ணம்மா முன் வருவாளா ?
உன் அன்பு,
கலா.
மடலைப் படித்த மைதிலி தன் தங்கை யாழ்ப்பாணம் வரும்போது ராஜனையும் கூட்டி வருவதையிட்டுச் சிந்தித் தாள. அவளின் மனம் என்னவோபோல் இருந்தது. மைதிலியைப் பொறுத்தவரை தன்னை அறியாமலேயே ராஜனை வெறுத்தாள். இந்த வெறுப்பு ராஜன் வரப் போவதாக அறிந்ததும் விஸ்வரூபம் எடுத்தது. ஆயினும். எவ்வளவோ கஷ்டப்பட்டு அந்த வெறுப்பை மனதுக்குள் அடக்கி வைக்க முயன்றாள். தங்கையின் மடலை வானொலி மேசையில் வைத்த அவள், வானொலிப் பெட்டியை முடுக்கி விட்டாள். அவள் முடுக்குவதற்கும் இலங்கை வானொலி யில் அவசர அறிவிப்பு வெளியாவதற்கும் நேர வேறுபாடு இருக்கவில்லை. அந்த அறிவிப்பு அவளைக் கற்சிலை யாக்கி விட்டது.
வானொலி அறிவிப்பு
இலங்கை, ஐ.நா. மன்றத்தின் வேண்டுகோளுக் கிணங்கக் கொங்கோப் போருக்கனுப்பிய இலங்கை இராணு வப் படையில் மேஜர் சில்வா உட்பட நானூற்று ஐம்ப துக்கு மேற்பட்ட வீரர்கள் போரிலே வீர மரண மடைந் ததை நேயர்கள் அறிவீர்கள். இப்பொழுது மேலும் மற் றொரு தளபதியாகிய சுந்தரத்தையும் இழந்து விட்டோம். கொங்கோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரா ணுவ விமானம். ஆபிரிக்காவின் இருண்ட காடுகளுக்கு மேலாகப் பறக்கும்போது திடீரெனத் தீப்பற்றியது. அதிலே சென்ற தளபதி சுந்தரமும் மற்றும் ஏழு இரா ணுவ அதிகாரிகளும் இறந்து விட்டார்கள். இதில் மூவர் அமெரிக்கர், மூவர் இந்தியர், ஒருவர் இலங்கையர். சுந் தரத்தின் மறைவை யொட்டி ஐ. நா. மன்றச் செயலாளர் அனுப்பிய அனுதாபச் செய்தி இலங்கையின் இராணுவ தலைமைப் பீடத்திற்குக் கிடைத்தது. சுந்தரத்தின் மறைவை யிட்டுத் தனது ஆழ்ந்த அனுதாபத்தை அவரின் குடும்பத் தாருக்கு இலங்கை அரசாங்கம் தெரிவித்துக் கொள்கிறது.”
வானொலிச் செய்தி மைதிலியின் நெஞ்சில் பேரிடி யாய் இடித்தது. துயர மழை அவள் உள்ளத்திலே பொழிந்தது. பிரிவு மின்னல்கள் அங்கே மின்னின. வாழ்க்கையை இழந்துவிட்ட சூனிய உணர்வு மைதிலி யைப் பிடித்துக்கொண்டது. அவளது பிரேமாலயம் இடிந்துவிட்டது. தாள முடியாத அதிர்ச்சியால் மைதிலி பதறினாள். தனது இல்லற விளக்கு அணைந்து விடுமென அவள் கனவுகூடக் காணவில்லை. தனது இன்பக் கோட் டைகள் யாவும் தகர்ந்து விட்டதாக அறிந்தாள் மைதிலி. யாரைத் தன் இதயத்தில் ஏற்றியிருந்தாளோ – யாரைத் தன் வாழ்வின் துணையென்று எண்ணியிருந்தாளோ – யாருக்காக வாழ்ந்திருந்தாளோ அந்தச் சுந்தரம் போய் விட்டார். அவளின் உலகமே இருண்டுவிட்டது.
– தொடரும்…
– அவள் (நாவல்), முதற்பதிப்பு: செப்டம்பர் 1968, விஜய பிரசுரம், மல்லாகம்.