அவசர முடிவு எடுத்தது தப்பு தான்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 3,809 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

சுதா அப்படி கோவத்திலே பேசினதை நினைத்து மிகவும் வருத்தப் பட்டான்.மறுபடியும் சுதாவுக்கு ‘போன்’ பண்ணினான் ராஜா.இந்த தடவை சுதாவின் அப்பா தான் ‘போனை’ எடுத்தார்.

தன் மாமனார் ‘போனில் வந்ததும் ”மாமா,நான் சொல்வதை கொஞ்சம்…”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே,அவர் ராஜாவை முழுக்கவே பேச விடவில்லை.

அவர் ”சுதா சொன்னது தான் எங்க முடிவும்.இனிமே ‘போனில்’ நீங்க கூப்பிட்டா நாங்க யாரு ம் போனையே எடுக்க மாட்டோம்”என்று சொல்லி போனை வைத்து விட்டார்.
ராஜாவுக்கு மிகவும் ஏமாற்றமாய் போய் விட்டது.வருத்தத்துடன் வந்து சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு யோஜனைப் பண்ணினான்.

’போட்டோவிலே இருக்கிற ஆள் என்னைப் போலவே ஒரு ‘ஷர்ட்’டைப் போட்டுக் கிட்டுப் பாக்க என்னைப் போலவே இருக்கானே.பெண்ணும் லதா போட்டுக்கிட்டு இருந்த டிரஸ்சைப் போல வே போட்டுக் கிட்டு,பாக்க லதாவைப் போலவே இருக்காளே.இந்த போட்டோங்களே பாத்தா எல்லா ரும் உண்மைன்னுத் தானே நினைப்பாங்க. சுதாவும் அப்படி த்தான் நினைச்சு, இந்த முடிவுக்கு வந்து இருக்கா.இப்போ நம்ப வாழக்கையே முடிஞ்சிப் போச்சே. யார் இந்த ‘விஷமத்தனமான’ வேலையை செஞ்சி இருக்க முடியும்.நமக்கு ‘ஆபீஸி’லே யாரும் விரோதிகள் இல்லையே.ஒரு வேளை நம்ம ஆபீ ஸில் வேலே செஞ்சுக் கிட்டு வர யாரோ ஒருந்தன் லதாவைக் காதலிக்கறான் போல இருக்கு.அவன் தான் இந்த விஷமத்தனத்தை செஞ்சி இருப்பானோ.இப்படி செஞ்சதாலே அவனுக்கு லதா எப்படிக் கிடைக்கப் போறா’ என்று யோஜனைப் பண்ணீனான்.

அவன் மூளை குழம்பியது.

அவன் ஆபீஸ்க்கு போக வில்லை.ஒரு வாரம் ஓடி விட்டது.

ஒரு நாள் காலையில் ராஜா ஆபீஸ்க்கு யாரும் வருவதற்கு முன்னாலேபோய் தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டான்.அப்போது ஐம்பத்தைந்து வயதான பியூன் பீட்டர் மட்டும் தான் ‘ஆபீஸ்’ வந்து இருந்தார்.அவர் ஓடிப் போய் “குட் மார்னிங்க் சார்.சார் ஒரு வாரமா ‘ஆபீஸ்’ வரலையே உடம்பு ஏதாச்சும் சரி இல்லீங்களா” என்று ரொம்ப கா¢சனத்துடன் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னுமில்லீங்க,மனசு தான் கொஞ்சம் சரி இல்லே”என்று சொல்லி நிறுத்தினார் ராஜா.ராஜா முகம் வாட்டமாய் இருந்ததை கவனித்த பீட்டர் “சார், நான் உங்க பியூன் தான்.நீங்க என் மானேஜர் தான்.இருந்தாலும் வயசிலே நான் உங்க அப்பாவைப் போல இருக்கேன்.உங்க மன வருத் தத்தை என் கிட்ட நீங்க மனம் விட்டு பேசுங்க.நான் என்னால் முடிஞ்சவரை உங்களுக்கு நிச்சியம் உதவி செய்வேன்.’ஆபீஸ்’ விஷயம்ன்னா எனக்கு தெரியாது.ஆனா வேறு எதாவது உலக விஷயம்ன் ன்னா நான் நிச்சியமா உங்களுக்கு உதவியா இருப்பேன்” என்று சொல்லி நிறுத்தினார் பீட்டர்.

ராஜா நெடு நேரம் யோஜனை பண்ணினான்.’நாம இந்த வேலையை நிச்சியம் ‘ரிசைன்’ பண்ணி விட்டு வேறு இடத்திற்குப் போவப் போறோம்.நம்ம மன வருத்தத்தை யாருக்கும் சொல்லப் போவது இல்லே என்று நினைச்சிக் கிட்டு இருந்தோம்.பாவம் இவர் நம்ம அப்பாவைப் போல் இருக் கார்.யாரோ ஒருத்தர் கிட்டே சொன்னாலாவது நமக்கு கொஞ்சம் மன அமைதி கிடைக்கும்.இவர் கிட்டே மட்டும் நாம நம்ம வருத்தத்தை சொல்லலாமே’ என்று நினைத்தான் ராஜா.

“பீட்டர்,நான் உங்க கிட்டே மட்டும் விஷயத்தை சொல்றேன்.ஆனா நீங்க இந்த விஷயத்தை யார் கிட்டேயும் கண்டிப்பா சொல்லக் கூடாது” என்று கண்டிப்பாக சொன்னான் ராஜா.உடனே பீட்டர் “சார்,நான் இந்த ‘ஆபீஸ்’லே உங்கக் கூட பத்து வருஷமா வேலே செஞ்சுக் கிட்டு வாரேன். நீங்க யார் கிட்டேயும் கண்டிப்பா சொல்லக்கூடாதுன்னு சொன்னப்புறமா,நான் யார் கிட்டேயும் நிச்சியமா சொல் லவே மாட்டேன்.என்னே நம்புங்க” என்று சொன்னார் பீட்டர்.

சொல்லி விட்டு ‘எமோஷனல் ‘ஆன பீட்டர் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

ராஜா தன் ‘ப்ரீப்’ ‘கேஸை’த் திறந்து,பீட்டா¢டம் ‘லெட்டா¢ல்’ எழுதி இருந்த விவரத்தைச் சொ ல்லி விட்டு,லெட்டருடன் வந்து இருந்த பத்து போட்டோக்களையும் காட்டி விட்டு “பீட்டர்,’லெட்டரை யும்’,இந்த பத்து போட்டோங்களையும் பாத்த என் சம்சாரத்துக்கு கோவம் வந்து ’இனிமே நம்ம வாழக் கை முறிஞ்சுப் போச்சு’ன்னு,ஒரு ‘லெட்டர்’ எழுதி வச்சுட்டு என்னே விட்டுட்டு,குழந்தையே எடுத்துக் கிட்டு திருச்சிலே இருக்கிற அவங்க அம்மா வீட்டுக்கு போய் விட்டாங்க” என்று வருதத்துடன் சொன்னான்.

கொஞ்ச நேரம் ஆனதும் “பீட்டர்,நான் திருச்சிக்கு ‘போன்’ பண்ணி பேசினப்ப,என் சம்சாரம் ‘நம்ப கல்யாண உறவு முறிஞ்சிப் போச்சு,நான் இனிமே அங்கே வரவே மாட்டேன்’ன்னு சொல்லிட்டா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் ராஜா.

எல்லாவற்றையும் கேட்ட பீட்டர் “எந்த கயவாளி பயங்க இந்த மாதிரி விஷமம் பண்ணி இருப்பா ன்.கர்த்தர் அவனுக்கு நிச்சியம் கூலி கொடுப்பாருங்க.கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாத பாவிங்க அவன்” என்று சொல்லி விட்டு கொஞ்சம் நேரம் ஆனதும் “இதனால் தானா லதா அம்மாவும் ஒரு வார மா ‘ஆபீஸ்’க்கு வரலே.அவங்க வீட்டுக்கும் அந்த பாவி அந்த போட்டோக்களை அனுப்பி இருப்பா ன் போல இருக்கு.அவன் நல்லாவே இருக்க மாட்டாங்க” என்று திட்டினான் பீட்டர்.

“என்ன லதாவும் ஒரு வாரமா ‘ஆபீஸ்’ வரலையா” ஆச்சரியத்துடன் கேட்டான் ராஜா.“ஆமாங்க அந்த பொண்ணும் ஒரு வாரமா ‘ஆபீஸ்’ வரலீங்க” சொல்லி நிறுத்தினான் பீட்டர்.

கொஞ்ச நேரம் ஆனதும் “நான் யாருக்கும் சொல்லமாட்டேன் சார்.அந்த கர்த்தர் மேலே சத்தி யம்.நீங்க அம்மா விலாசம் மட்டும் எனக்கு கொடுங்க.நான் சமயம் வரும் போது நீங்க நிரபராதின்னு அவங்களுக்கு சொல்லி நான் புரிய வைக்கிறேன்” என்று கெஞ்சினான் பீட்டர்.”சரி தரேன்” என்று சொல்லி விட்டு சுதாவின் திருச்சி விலாசத்தை பீட்டருக்குக் கொடுத்தான் ராஜா.“சார் உங்க போட் டோ ஒன்னையும் எனக்குக் குடுங்க.உங்க ஞாபகார்த்தமா அதே நான் என் பர்ஸிலே வச்சுக்கிறேன். உங்க மாதிரி நல்ல மனுஷன் இந்த உலகத்லே கிடைப்பது ரொம்ப கஷ்டம்.நான் பியூனாக இருந்தும் இந்த மூனு வருஷத்லே இந்த பீட்டரை, நீ£ங்க ஒரு தடவை கூட மா¢யாதை குறைவா பேசினதே இல்லீங்க. ‘வாங்க’‘போங்க’ன்னு தான் நீங்க என்னை கூப்பிடுவீங்க” என்று சொல்லும் போது பீட்டா¢ன் கண்களில் கண்ணீர் துளித்தது.ராஜா தன் போட்டோ ஒன்றையும் பீட்டருக்குக் கொடுத்தான் ராஜா.

அடுத்த வாரமே சென்னையை விட்டு பெங்களுருக்கு மாற்றல் கேட்டு போய் விட்டான் ராஜா.

லதா எவ்வளவு சொல்லியும் அவளுடைய அம்மாவும்,அப்பாவும் கேட்காமல் லதாவை வீட்டி லேயே வைத்துக் கொண்டு வந்தார்கள்.லதா மறுபடியும் வேலைக்கு போக முடியவில்லை.

அவர்கள் இருவரும் அவர்களுக்குத் தெரிந்த ஒரு கல்யாண ‘ப்ரோக்கரைப் பார்த்து லதாவுக்கு ஒரு நல்ல பையனாகப் பார்த்து,அவர்களிடம் இருந்த பணத்தையும்,லதா சம்பாதித்து சேமித்து வைத்து இருந்த பணத்தையும்,போட்டு லதாவுக்கு கல்யாணம் பண்ணீ வைத்து விட்டார்கள்.

ஒரு மாதம் ஓடி விட்டது.

அன்று ஞாயிற்றுக்கிழமை.சர்ச்சுக்கு போய் விட்டு வந்தார்கள் பீட்டரும் அவர் மணைவி ரோஸியும்.ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான் அவர் மகன் ஜான்.சோபாவில் உட்கார்ந்துக் கொண்டிருந்த பீட்டர் தன் பாண்ட் பாக்கெட்டில் கையை விட்டு தன் ‘பர்ஸை’ எடுத்து மானேஜர் ராஜாவின் போட்டோவை எடுத்து பார்த்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “ரோஸி,இந்த தங்கமான மனுஷன் என் மாஜி ‘ஆபீஸ்’ மானேஜர். இவர் பாவம் மனசு உடைந்து ‘ஆபீஸ்’ வேலையை ராஜினாமா பண்ணட்டு,எங்கோ வேறே வேலைக்கு போயிட்டார்.எவனோ ஒரு அயோக்கியப் பய அவர் வாழ்க்கைலே விளையாடிட்டான்.கோவம் வந்து அவர் சம்சாரம் இவரை விட்டு விட்டு அவங்க அம்மா வூட்டுக்குப் போயிடிச்சி” என்று சொல்லி போட் டோவையே பார்த்துக் கிட்டு இருந்தார் பீட்டர்.

”ஏங்க என்ன நடந்திச்சுங்க” என்று ரோஸி பக்கத்தில் வந்து உட்கார்ந்துக் கொண்டு கேட்டாள்

“எவனோ ஒரு கயவாளிப் பய.இவரையும் எங்க ‘ஆபீஸ்’ ‘செகரட்ரியையும்’ கண்ட கண்ட ஆபாசமான ‘போஸ்’களில் இருப்பது போல பத்து போட்டோவை எடுத்து,அவங்க சம்சாரத்திற்கு அனு ப்பி இருக்கான்.அவங்க புருஷனே என்ன ஏதுன்னுக் கூட கேக்காம கோவிச்சு க்கிட்டு அவங்க அம்மா வூட்டுக்குப் போயிட்டாங்க.இவர் பாவம் திருச்சிக்கு போன் பண்ணி எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் அவங்க கேக்காம ‘நம்ப கல்யாண உறவு முறிஞ்சிப் போச்சு,நான் இனிமே அங்கே வரவே மாட்டேன் ன்னு சொல்லிட்டாங்களாம்” என்று மன வருத்ததுடன் சொன்னார் பீட்டர்.

பேப்பர் படித்துக் கொண்டு இருந்த ஜான் ‘அப்பா ஏதோ போட்டோன்னு பேசறாரே என்னன்னு பாக்கலாம்’ என்று நினைத்து அவன் அப்பா அருகில் வந்து அப்பா கையில் இருந்த போட்டோவை வாங்கிப் பார்த்தான்.

உடனே ஜான் “அப்பா,இந்த போட்டோலே இருக்கிறவரே எனக்கு நல்லாத் தெரியும்” என்று சொன்னான். “நீ என்னடா சொல்றே” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பீட்டர்.
“ஆமாம்பா இந்த ஆளைப் போல ஒருத்தா¢ன் மூஞ்சியையும்,வேறு ஒரு ‘நடத்தை கெட்ட பெண் ணின்’ மூஞ்சியையும், நானும் எங்க கடை ஓனரும் ‘கம்ப்யூட்டர்லே ’போட்டோ ஷாப்பிங்க் டெக்னிக் கை’ செஞ்சு ஒட்ட வச்சோம்.இவர் உங்க ‘ஆபீஸ்’ மானேஜரா” என்று கேட்டான் ஜான்.

தூக்கி வாரிப் போட்டது பீட்டருக்கு. “அடப் பாவி இந்த வேலையே நீ£யும் உங்க ஓனரும் செஞ் சீங்களா.உங்களே இப்படி செய்ய சொன்ன அயோக்கியன் யாருடா”என்று சொல்லி கத்தினார்.

“அப்பா எங்க கடைக்கு ஒரு ஆள் வந்து எங்க கடை ஓனருடன் ஏதோ ரகசியமாக பேசிக் கிட்டு இருந்தாரு.நானும் என் ஓனர் பாலுவும் ‘போட்டோங்களே’ ரெடி பண்ணதும், அவர் வந்து அந்த போட் டோங்களே வாங்கிப் போனார்.அப்புறம் ஒரு வாரம் கழிச்சு என் ஓனர் கிட்டே வந்து அந்த ஆள் ‘நான் அவங்களை பிரிச்சுட்டேன் பாலு’ன்னு சொல்லிக் கொண்டு இருந்தார்ப்பா” என்று சொன்னான் ஜான்.

உடனே பீட்டர் “அந்த ஆள் எப்படி இருப்பான்டா” கத்திக் கேட்டார்.

”அவர் ‘ஹீரோ ஹோண்டா பைக்லே’ அடிக்கடி வந்து, எங்க ஓனரோடு பேசிக் கிட்டு இருப்பா ரு.ஒரு நாள் நான் உங்களே ஆபிஸி’லே பாக்க வந்தப்ப,அவரே உங்க ‘ஆபீஸ்’லே பாத்து இருக்கே ன்ப்பா” என்றான் ஜான்.”என்ன எங்க ‘ஆபீஸ்’லே அந்த அயோக்கியனேப் பாத்தியா ஜான்” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பீட்டர்.
“ஆமாம்பா,நல்லா உயரமா,கட்டை மீசை வச்சு கிட்டு இருப்பாரு அந்த ஆள்” என்று சொன்ன வுடனே பீட்டருக்கு புரிந்து விட்டது.’நம்ப கம்பனியிலே ‘ஹீரோ ஹோண்டா பைக்கை’ வச்சுக் கிட்டு, உயரமா கட்டை மீசையோட ‘அஸிஸ்டெண்ட் மானேஜர்’ சேகர் ஒத்தன் தானே இருக்கான்’ என்று யோஜனை பண்ண பீட்டருக்கு இப்போது எல்லாம் முழுக்க விளங்கி விட்டது.

அந்த வார கடைசியில் தன் பையன் ஜானையும் கூட்டிக் கொண்டு திருச்சிக்குப் போய் ராஜா கொடுத்த விலாசத்தை விசாரித்துக் கொண்டு சுதாவின் விட்டுக்குப் போனார் பீட்டர்.
“வாங்க பீட்டர்,என்ன எங்க ஐயா உங்களை தூது அனுப்பி இருக்காரா” என்று கிண்டலாகக் கேட்டு விட்டு “நான் மறுபடியும் அவரோடு வந்து வாழப் போவது இல்லை பீட்டர்.எங்க கல்யாணம் முடிஞ்சிப் போன சமாச்சாரம்.இனி நாங்க சேர மாட்டோம்.இது நிச்சியம்” என்றாள் சுதா.

“அம்மா நான் உங்க ஐயாவுக்கு பியூன் தாங்க.இல்லைன்னு சொல்லலே.நான் ஒரு முக்கியமா ன விஷயம் உங்க கிட்டே சொல்ல வந்து இருக்கேங்க.கொஞ்சம் கவனமா கேளுங்க” என்று சொன்ன தும் சுதாவும் அவள் பெற்றோர்களும் கேட்க ஆரம்பித்தார்கள்.

”அம்மா, நம்ப ‘ஆபீஸ் அஸிஸ்டென்ட் மானேஜர்’ சேகர் லதா அம்மாவைக் காதலிச்சு வந்தாரு ஆனா லதா அம்மா அவனை காதலிக்கலே.ஆனா லதா அம்மா நம்ப மானேஜரை காதலிச்சு வந்து இருக்காங்க.சேகருக்கு இதை தாங்கிக் கொள்ள முடியலே.எங்கே லதா அம்மா நம்ப மானேஜர் ஐயா வை மயக்கி,கல்யாணம் பண்ணிக்கிடுவாளோன்னு பயந்து,லதாவை பழி வாங்க நினைச்சி இருக்கா ருங்க” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

சுதாவுக்கும் அவள் பெற்றோர்களுக்கும்,இந்த பீட்டர் எதற்காக அழுதுக் கொண்டு இருக்கிறார் என்று புரியவில்லை.

அவர் மேலே என்ன சொல்லப் போகிறார் என்று பீட்டர் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பீட்டர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “என் பையன் வேலை பண்ற போட்டோ கடைக்கு சேகர் வந்து ‘ஒரு ஆணும் பெண்ணும் ஆபாசமாக இருக்கும்’ ஒரு போட்டோங்களே கடை ஓனர் கிட்டே குடுத்து,அந்த ஆண் மூஞ்சிக்கு பதிலா நம்ப ஐயா நம்ப மூஞ்சியையும்,அந்த பொண் ணு மூஞ்சிக்கு பதிலா லதா அம்மாவின் மூஞ்சியையும் ஒட்ட வச்சுக்,குடுக்கச் சொல்லி கடை ஓனர் கிட்டே சொல்லி இருக்கார்.என் பையன் ஜான் வேலை செய்ற போட்டோ கம்பனிலே ஜானும், அவங்க ஓனரும் தான் சேகர் சொன்னா மாதிரி இதை செஞ்சாங்களாம்.அப்புறமா அந்த போட்டோங்களே கடைலே இருந்து வாங்கி உங்களுக்கு அனுப்பி இருக்கார்ங்க” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் பீட்டர்.

பீட்டர் சொன்னதைக் கேட்டதும் சுதாவுக்கும் அவள் பெற்றோர்களுக்கும் பொ¢ய அதிர்ச்சியாக இருந்தது.அவர்களால் பீட்டர் சொன்னதை நம்பவே முடியவில்லை.
கொஞ்ச நேரம் ஆனதும் “இவன் என் பையன் ஜானுங்க.இவன் சொல்றதே நீங்க கொஞ்சம் நிதானமா கேளுங்க.உங்களுக்கு உண்மை விஷயம் புரியும்” என்று சொல்லி ஜானை அறிமுகப்படுத்தினார் பீட்டர்.

“நானும்,என் ஓனரும் ‘போட்டோ ஷாப்பிங்க் டெக்னிக்கை’ உபயோகப் படுத்தி சேகர் சொன் னது போல அந்த போட்டோங்களே செஞ்சுக் குடுத்தோம்”என்று சொன்னான் ஜான்.
“அப்படியா சமாச்சாரம் பீட்டர்.இதுவா நடந்த உண்மை.ஐயையோ நான் இதை எல்லாம் தீர விசாரிக்காம,அவரையும் பேச விடாம பிடிவாதமா இந்த அவசர முடிவை நான் எடுத்திட்டேனே. இப் போ என்ன பண்றது.சரி,நான் உடனே என் வீட்டுக்காரருக்கு ‘போன்’ பண்ணிப் பேசறேன்”என்று சொல்லி விட்டு ராஜா ‘செல் போனு’க்குப் ‘போன்’ பண்ணீனாள்.

அடுத்த பக்கத்தில் இருந்து இந்த ‘செல் நம்பர் புழக்கத்தில் இல்லை’ என்று பதில் வந்தது.

உடனே பீட்டர் ”அம்மா, நம்ப ஐயா எங்க ‘ஆபீஸ்’ வேலையை ராஜினாமா பண்ணிட்டு வேறே எங்கோ போயிட்டாருங்கம்மா. அவர் எங்கே போனார்ன்னு எனக்கு தெரியாதேம்மா” என்று வருத்தத் துடன் சொன்னார் பீட்டர்.

சுதா அழுதுக் கொண்டே ”பீட்டர் நம்ப ஐயவைப் பத்தி ஏதாச்சும் தகவல் தெரிஞ்சா உடனே எனக்கு போன் பண்ணுங்க.என் ‘செல் போன்’ நம்பரே உங்களுக்குத் தறேன்” என்று சொல்லி விட்டு அவள் ‘செல் போன்’ நம்பரை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தாள்.

பீட்டர் சுதா கொடுத்த காகிதத்தை வாங்கிக் கொண்டு வருத்ததோடு ”தெரிஞ்சா உங்களுக்கு நிச்சியமா ‘போன்’ பண்ணீச் சொல்றேங்க” என்று சொல்லி விட்டு மகனை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்துவிட்டடார் பீட்டர்.

சுதாவின் அப்பா சுதாவைப் பார்த்து “அம்மா சுதா,நீ ரொம்ப அவசரப் பட்டு இந்த முடிவே எடுத் து இருக்கேம்மா.மாப்பிள்ளே ‘போன்’லே பேசினப்ப,நானும்,நீ சொன்னது உண்மைன்னு நினைச்சி, நீ சொன்ன பதிலையே சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணிட்டேன்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

சுதாவும்,அவள் அப்பாவும் பேசினதைக் கேட்ட சுதாவின் அம்மா “ஆமாம்மா சுதா.அப்பா சொ ல்றா மாதிரி நீ ரொம்ப அவசரப் பட்டு இந்த முடிவே எடுத்துட்டு இருக்கே” என்று சொல்லி வருத்தப் பட்டாள்.

சுதா அழுதுக் கொண்டே”நீங்க ரெண்டு பேரும் சொல்றது ரொம்ப ‘கரெக்ட்’.அவர் எப்பவும் அந்த ‘செகட்டடா¢’ லதா ஞாபகமாவே இருந்து வந்தார்.ஒரு நாள் துக்கத்திலே கூட அவர் லதா பேரேச் சொல்லி வாய் பினாத்திக் கிட்டு இருந்தார். அதே வச்சுத் தான் நான் இந்த அவசர முடிவே எடுத்து ட்டேன்.நான் பண்ணது ரொம்ப தப்பு தான். அவர் ‘போன்’லே கிடைச்சா அவர் கிட்டே அழுது மன்னிப்புக் கேகலாம்ன்னு நினைச்சேன்.ஆனா அவர் எனக்குக் கிடைக்கலயே.நான் என்ன பண்ணட்டும்” என்று கேட்டு விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தாள்.

சுதாவின் பெற்றோர்கள் சுதாவை நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்கள்.

பிறகு இருவரும் “அம்மா சுதா.நீ அழாதேம்மா.நீ அழறதேப் பாத்தா எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு.ஒரு வேளே பீட்டருக்கு நம்ப மாப்பிள்ளை இருக்கிற இடம் தெரிஞ்சு,அவர் நம்ப மாப்பிள்ளே கிட்டே நம்ம கிட்டே சொன்ன சமாசாரத்தே சொன்னார்ன்னா, மாப்பிள்ளே நமக்கு மறுபடியும் ‘போன்’ பண்ணி பேசுவார்ம்மா.அப்போ நீ அவர் கிட்டே மன்னிப்புக் கேட்டு விட்டு, மறு படியும் சென்னைக்குப் போய் அவர் கூட சந்தோஷமா இருந்து வாம்மா” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

உடனே சுதா “அம்மா,அப்பா உங்க ரெண்டு பேருடைய வாய் முஹ¥ர்த்தம் பலிச்சு, அவர் என க்கு ‘போன்’ பண்ணீனார்ன்னா,நான் அவர் கிட்டே அழுது மன்னிப்புக் கேட்டு விட்டு, அவர் கூட சந்தோஷமா வாழ்ந்து கிட்டு வருவேன்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

இரண்டு வருஷம் ஓடி விட்டது.

ராஜாவிடம் இருந்து சுதாவுக்கு ‘போனே’ வரவில்லை.சுதாவின் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள்.

சுதாவின் அப்பா செய்து வந்த வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு அவர்கள் குடும்ப நா ளடைவில் மிகவும் நலிந்து விட்டது.சுதாவின் அம்மா அப்பாவும் வாழ்க்கை நடத்தவே மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட அவருக்கு பணம் வேண்டி இருந்தது

அடுத்த வார ஞாயிற்றுக் கிழமை சுதாவின் அப்பா,மதுரையில் வசிக்கும் தன் தம்பி இடம் ஒரு ரெண்டு லக்ஷ ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வரலாம் என்று நினைத்து சுதாவிடம் சொல்லி விட்டு, மணைவியை அழைத்துக் கொண்டு ஒரு டாக்ஸியில் மதுரைக்குக் கிளம்பினார்.

துரதிர்ஷடவசமாக சுதாவின் பெற்றோகள்,அவர்கள் சென்றுக் கொண்டு இருந்த கார் ஒரு விபத் துக்கு உள்ளாகி, இருவரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டார்கள்.
அம்மா,அப்பா இறந்துப் போன செய்தியைக் கேட்டு இடிந்துப் போனாள் சுதா.

ஒரு மாசம் ஆனதும் மெல்ல தன்னை சுதாரித்துக் கொண்டு,அப்பா செய்து வந்த வியாபாரத்தி ல் மீதி இருந்தவற்றை வந்த விலைக்கு விற்று விட்டு, ஒரு ‘டீச்சர்’ வேலைக்கு மனு போட்டாள் சுதா.

எப்பவும் தன் கணவன் ஞாபகமாகவே இருந்து வந்தாள் சுதா.ஒரு மாதம் கழித்து சுதாவுக்கு, அவள் மனு போட்ட ‘டீச்சர்’ வேலைக் கிடைத்தது.

சுதா பையன் ரமேஷை கஷ்டப்பட்டு படிக்க வைத்தாள்.

ரமேஷூம் தன் குடும்ப நிலைமையை நன்றாகப் புரிந்துக் கொண்டு, கஷ்டப் பட்டு படித்துக் கொண்டு வந்தான்.

ரமேஷ் ‘ப்லச் டூ’ முடித்ததும் சுதா ரமேஷை BE சேர்த்து படிக்க வைத்தாள்.

ரமேஷ் நான்கு வருடங்கள் கஷ்டப் பட்டு படித்து வந்து,BEயில் ’பஸ்ட் க்ளாசிலே பாஸ்’ பண் ணினான்.ரமேஷ் எல்லா IT கம்பனிகளுக்கு எல்லாம் வே¨லைக்கு ‘அப்லிகேஷன்’ போட்டுக் கொண் டு வந்தான்.

ஒரு மாதம் ஆனதும் ரமேஷூக்கு பெங்களூரில் இருந்த ஒரு IT கம்பனியில் இருந்து ‘இண்டர் வியூ’க்கு வரச் சொல்லி ஒரு லெட்டர் வந்தது.லெட்டரைப் படித்த ரமேஷூம் சுதாவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

சுதா தான் வேலை செய்து வந்த பள்ளிகூடத்துக்கு மூனு நாள் லீவு போட்டு விட்டு, ரமேஷை அழைத்துக் கொண்டு பெங்களுர் போய் ஒரு ஹோட்டலில் தங்கினாள்
’இண்டர்வியூ’ அன்று காலை யிலெ சுதா எழுந்து குளித்து விட்டு,சுவாமி இடம் அவளுக்குத் தெரிந்த சில மந்திரங்களை எல்லாம் சொல்லி விட்டு “பகவானே,ரமேஷ் இந்த ‘இன்டர்வியூ’ நல்லாப் பண்ணி அவனுக்கு இந்த IT கம்பனிலே வேலே கிடைக்க அருள் புரிப்பா” என்று வேண்டிக் கொண்டு ரமேஷை எழுப்பி, அவனை ‘இன்டர் வியூக்கு’ ரெடி பண்ணிக் கொள்ளச் சொன்னாள்.

ரமேஷ் ரெடி ஆனதும் இருவரும் அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்குப் போய் ‘டிபன், காபி சாப்பிட்டார்கள்.‘பெஸ்ட் ஆப் லக்’ என்று சொல்லி ரமேஷின் கையைப் பிடித்து,குலுக்கிச் சொல்லி விட்டு அவனை ஒரு ஆட்டோவிலே ஏற்றி அனுப்பி விட்டு,சுதா ஒரு ஆட்டோவைப் பிடித்து ஹோட் டலுக்கு வந்தாள்.

ரமேஷ் ‘இண்டர்வியூ’ வந்த ‘லெட்டா¢ல்’ இருந்த IT கம்பனிக்கு வந்தான்.

பத்து பேருடன் ரமேஷ் அந்த கம்பனி கொடுத்த ஒரு ’ப்ரோக்ராமை’எழுதினான்.அந்த கம்பனி’ ‘ஆபீஸர்’ வந்தவுடன் எல்லோரும் அவர்கள் செய்த ’ப்ரோக்ராமை’க் கொடுத்தார்கள்.

‘சீப் மானேஜர்’ எல்லோரும் செய்து இருந்த ’ப்ரோக்ராமை’ப் பார்த்து விட்டு,ஐஞ்சு பேரை ‘செலக்ட்’ பண்ணி விட்டு,அவர்களை மதியம் இரண்டு மணிக்கு பர்சனல் ‘இன்டர்வியூக்கு’ வரச் சொ ன்னார்.மதியம் சரியாக இரண்டு மணிக்கு இன்டர்வியூ ஆரம்பிதது.

ரமேஷின் ‘பயோ டேடாவை’ சீப் மானேஜர் ராஜா பார்த்தார்.

அப்பா பேர் என்ற இடத்தில் ‘ராஜா’ என்று போட்டு இருந்தது.

சட்டென்று தலையை நிமிர்த்து ரமேஷைக் கவனித்தார்.ராஜா கேட்ட கேள்விகளுக்கும் ரமேஷ் புத்தி சாலித்தனமாக பதில் சொன்னான்.

அசந்துப் போய் விட்டார் ‘சீப் மானேஜர்’ ராஜா.

பிறகு ரமேஷை பார்ர்த்து ‘ப்ளீ£ஸ் கம் டு மை ரூம் அட் பைவ் ஒ க்லாக அண்ட் கலெக்ட் யுவர் அப்பாயிண்மெண்ட் ஆர்டர்’ ”என்று சொல்லி அனுப்பினார் ராஜா.

‘ரூமில்’ உட்கார்ந்துக் கொண்டு ‘ரமேஷ் யாராக இருக்கும்.ஒரு வேளை நம்மை விட்டு விட்டு ரெண்டு வயதில் அம்மாவோடு போன நம்ம பையனா இருக்குமோ.அவன் அப்பா பேரும் ‘ராஜா’ ன்னு போட்டு இருக்கே.பாக்க என்னைப் போலவே இருக்கானே.அப்படி ஒரு வேளை இந்தப் பையன் என் குழந்தை ரமேஷாக இருந்தால் நம்மை விட அதிர்ஷடசாலி யார் இருக்க முடியும்.கடவுளே இவன் என் பையனாக இருக்க வேணுமே’ என்று தன் மனதில் வேண்டிக் கொண்டார் ராஜா.

மணி ஐந்தடிதது.

‘செகரட்ரி’ எல்லோருடைய ‘அப்பாயிண்மெண்ட் ஆர்டர்டர்களையும்’ கொண்டு வந்து ராஜா ‘டேபிளில்’ வைத்தாள்.

ராஜா ரமேஷ் ஆர்டரை மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு,மற்ற நான்கு பேருடைய ஆர்ட ரையும் அவர்களை வரச் சொல்லி கொடுத்து அனுப்பினார்.ராஜா கடைசியாக ரமேஷைக் கூப்பிட்டார்

ரமேஷ் உள்ளே வந்தவுடன் “டேக் யுவர் சீட் மிஸ்டர் ரமேஷ்” என்று சொன்னார்.”தாங்க் யூ சார்” என்று சொல்லி விட்டு ரமேஷ் பவ்யமாக உட்கார்ந்தான்.

“ரமேஷ் உன் ‘பாதர்’ பேர் ‘ராஜா’ன்னு போட்டு இருக்கு.உன் அம்மா பேர் என்ன” என்று கேட்டு விட்டு ஒரு வித எதிர்பார்போடு பார்த்துக் கொண்டு இருந்தார் ராஜா.
“என் அம்மா பேர் சுதா சார்” என்று சொன்னான் ரமேஷ்.

தன் சந்தோஷத்தை அடக்கி கொண்டு “வாட் இஸ் யுவர் ‘பாதர்’ டூயிங்க்” என்று கேட்டு ரமேஷி ன் முகததையே பார்த்துக் கொண்டு இருந்தார் ராஜா.ஒரு நிமிஷம் மௌனமாக இருந்து விட்டு “ ’ஐ ரியலி டோன்ட் நோ சார்’.எனக்கு ரெண்டு வயசாக இருக்கும் போது, என் அம்மா அவரை விட்டுப் பிரிஞ்சி வந்துட்டாங்க” என்று சொல்லி தலையை தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தான் ரமேஷ்.

ராஜா தன் சீட்டை விட்டு எழுந்து வந்து “மை டியர் சன்,நான் தாண்டா உன் ‘பாதர்’ ” என்று சொல்லி ரமேஷைக் கட்டிக் கொண்டார்.

அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் ரமேஷின் ஷர்ட்டை நனைத்தது.“நீங்க தான் என் அப்பாவா” என்று சொல்லி ரமேஷூம் தன் அப்பாவைக் கட்டிக் கொண்டான்.
‘இன்டர்வியூக்கு’ப் போன பையன் இன்னும் வரலையே’ என்று ஹோட்டல் ரூம் வராண்டாவில் நின்றுக் கொண்டு ஹோட்டல் வெளி வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தாள் சுதா.ஹோட்டல் வாசலில் ஒரு இன்னோவா’ கார் வந்து நின்றது.வெள்ளை ‘யூனிபார்ம்’,’தொப்பி’ அணிந்த ஒரு டிரை வர் ஓடி வந்து கதவைத் திறந்தான்.

ரமேஷ் ராஜாவுடன் காரில் இருந்து கீழே இறங்கினான்.சுதாவுக்கு ரமேஷை யார் இவ்வளவு விலை உயர்ந்த காரில் அழைத்து வருகிறார்கள் என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

ரமேஷ் “அம்மா,அம்மா,யார் வந்து இருக்காங்கன்னு பாரேன்” கத்திக் கொண்டே ஓடி வந்தான். ராஜாவைப் பார்த்ததும் சுதாவுக்கு தான் காண்பது ‘கனவா’ ‘நனவா’ என்று புரியவில்லை.ஒரு நிமிஷம் அவள் மனம் ஆனந்ததில் திளைத்தது.

சுதா ஓடி போய் ராஜாவின் கால்களில் விழுந்து “என்னை மன்னிச்சிடுங்க.என்னை மன்னிச் சிடுங்க.உங்களே சந்தேகப்பட்டு,தீர விசாரிக்காம,நான் அவசர முடிவு எடுத்துட்டேங்க”என்று சொல் லி ராஜாவின் கால்களை கட்டிக் கொண்டு ‘ஓ’ வென்று கதறி அழுதாள்.

மெல்ல அவள் தோள் பட்டையை தொட்டு “எழுந்திரு சுதா.அழாதே.அதான் நானே வந்துட்டே னே.நம்ம பையன் நம்ம ரெண்டு பேரையும் ஒன்னா சேர்த்து வச்சுட்டான்.சுதா நீ இவனை இவ்வளவு படிப்பு படிக்க வச்சு,‘இன்டெலிஜெண்டா’ எப்படி வளர்த்தே” என்று சொல்லி அவளை எழுப்பினான்.

”உங்க ரத்தமாச்சேங்க.அந்த மூளை எங்கேங்க போகும். அவன் என்னைப் போல அசடு இல்லீ ங்கலேங்க.நான் தாங்க முட்டாள்.நான் தாங்க அசடு” என்று சொல்லிக் கொண்டு அவன் மேல் விழுந் து விக்கி விக்கி அழுதாள் சுதா.

உடனே ராஜா “நீ மட்டும் தான் அசடு இல்லே சுதா.நானும் தான்.கல்யாணம் ஆகி,ரெண்டு வய சிலே ஒரு குழந்தை இருந்து இருந்தும்,நான் என் ‘செகரட்ரி’ மேலே கொஞ்சம் ஆசைப் பட்டது தப்பு தான்.அந்த தப்புக்கு கடவுள் எனக்கு இந்த பிரிவைக் குடுத்து தண்டிச்சு இருக்கார்” என்று சொன்ன போது,சுதா கை மேலே ராஜா கண்ணில் இருந்து ஒரு கண்ணீர் சொட்டு விழுந்தது.

கொஞ்ச நேரம் ஆனதும் ராஜா சுதாவைப் பார்த்து “உங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க சுதா”என்று கேட்டான்.

சுதா தான் சென்னையை விட்டு திருச்சிக்கு வந்ததில் இருந்து நடந்த எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னாள்.ராஜா மிகவும் வருத்தப் பட்டான்.

பல வருஷங்கள் பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடினால் சந்தோஷதிற்கு குறைவேது!!.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *