சுரேஷ் ஒரு முடிவிற்கு வந்தவனாய் துணிக்கடையில் ஏறி….. பையுடன் இறங்கினான்.
வீட்டிற்கு வந்ததும், ”நாளை உனக்கு என் பிறந்த நாள் பரிசு !” மனைவியிடம் நீட்டினான்.
மலர்ச்சியுடன் வாங்கிப் பிரித்த பவிஷா முகம் சுருங்கியது.
”என்னங்க…! புடவையா ?” பரிதாபமாகப் பார்த்தாள்.
”ஆமாம். ஏன் கட்டிக்க மாட்டியா ?” ஏறிட்டான்.
”கட்டிப்பேன் இருந்தாலும் சுரிதார் எனக்குப் பழகிப் போச்சு. அழகா இருப்பேன்.”
”அதைவிட இது அழகா இருக்கும் கட்டிக்கோ.”
”என்ன புதுசா சொல்றீங்க ?”
”இன்னைக்கு நம்ம நாட்டுல பிறப்பு விகிதம் குறைந்து போய் தாம்பத்திய உறவும் லேசாய் மங்கிப் போக வேலைப் பளு…. இத்தியாதிகள் மட்டுமில்லாமல் பெண்கள் உடையும் ஒரு காரணம் தெரியுமா ? பகல்ல சுரிதார். இரவு நைட்டி பேர்ல ஒரு தலைகாணி உறை.” நிறுத்தினான்.
”புரியலை.!?”
”பவிஷா ! பெண்கள் புடவையில வந்தா……சின்ன மாராப்பு விலகலில் ஆண்களுக்கு கிடைக்கும் சின்ன கிறுகிறுப்பு, மாராப்பு இடுக்கில் தெரியும் பக்கவாட்டு அழகைப் பார்க்கும் போது ஏற்படுற ஒரு கிளுகிளுப்பு, குறுகுறுப்பு, மனசை சுண்டி இழுக்கும் ஜாக்கெட்டிற்கும் புடவைக்கும் தெரியற இடைவெளிப் பிரதேச அழகு எல்லாம் என்னதான் சுரிதார் போட்டு துப்பட்டா போட்டு மறைக்காம வந்தாலும் கிடைக்காது தெரியுமா.? ”பார்த்தான்.
பவிஷாவிற்குக் கணவன் மனம் புரிந்தது முகம் மலர்ந்தது.