புஷ்பாவிற்கு ரெண்டு பிள்ளைங்க, செந்தில் மலர். செந்தில் மலர் ரெண்டு பேருமே வேலைக்கு போனத்துக்கு அப்புறம் புஷ்பாக்கு ரெஸ்ட் தான். மலர் வேலைக்கு போற கம்பெனி பஸ் வந்து அவள பிக்கப் பண்ணிக்கும், ஆனா அவ வீடு இருக்க இடம் சின்ன சந்து அதனால அவ போற நேரத்திலும் வேலை விட்டு வர நேரத்திலும், அவள கொண்டு போய் பஸ் ஸ்டாப்ல யாராவது விடணும். மார்னிங் ஷிப்ட்னா மலரே நடந்து போயிருவா. நைட்ல தனியா வரமுடியாது. அப்ப செந்தில் தான் போய் கூப்படணும். செந்திலு போகாம, கூட வேலை செய்ற ரூம்ல இருக்க பசங்கள வசந்த் அவனுக்கு தம்பிமாறி, அவன் நம்பிக்கைக்கும் உரியவன். எனவே அவன போய் கூப்டு வர சொல்லிருவான்.
மலருக்கு செந்தில் ஏன் வரல அப்படின்னு தோணும். அவனிடம் கேட்டுக்கொள்ள மாட்டா. புஷ்பாவிடம் புலம்புவாள், அவளோ அவனுக்கு வேலை இருந்திருக்கும் அதனால அப்படி பண்ணிருப்பான். முடிஞ்சா அவன் வரமயா போயிருவான் என அவள் கூற, மலரும் என்னமோ நீ சொல்ற என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
இவ்வாறு சில நாட்கள் நகர அன்னைக்கு செந்திலுக்கு லீவு. அவன் வீட்டில்தான் இருந்தான். மலருக்கு அன்று வேலை. என்ன ட்ராப் பண்ணு செந்தில் என சொல்ல இல்ல மலர் நான் ரூமுக்கு போறேன். வசந்த் வருவான் அவன் கூட போய்டு என்று சொல்லிட்டு போய்டான்.
பாத்தியா உன் மகன வீட்ல இருக்கும்போது கூட வசந்த் அண்ணந்தான் வரணுமா என்னமோ சொன்ன, முடிஞ்சா வந்துடுவான்னு இப்படியே இருக்கட்டும், நான் இருக்கும்போது தெரியாது அவனுக்கு என சொல்லிட்டு வசந்த் உடன் மலர் கிளம்பிவிட்டாள்.
புஷ்பாக்கு மலரின் வருத்தம் புரிந்தது காலம் பதில் சொல்லும் என விட்டுவிட்டாள். வருடங்கள் கடந்தது, தூரத்து சொந்தம் சொல்லியனுப்பியதாக பெண் கேட்டு வந்தனர். பையன் வெளியூரில வேலை பாக்குறான், நல்ல சம்பளம் வாங்குறான். உங்க பொண்ணு, உங்களால என்ன முடியுமோ அத போட்டு அனுப்புங்க. கல்யாணச் செலவு நாங்களே ஏத்துக்குறோம். இது அவனோட ஜாதகம், பொருத்தம் பாருங்க சரியா இருந்தாமேற்க்கொண்டு பேசலாம். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுணு பேசுனாரு மாப்பிள்ளையோட அப்பா. புஷ்பா மகன் கிட்ட பேசிட்டு சொல்றேன் என சொல்லிட்டு அனுப்பிட்டா.
செந்தில் கிட்ட சொன்னா புஷ்பா ஜாதக பொருத்தம் பாருங்க நல்லா இருந்தா பேசி முடிக்கலாம்னு சொல்லிட்டான். பொருத்தம் எல்லாம் நல்லா இருக்கலாம் பண்ணலாம்னு சொல்லிடாங்க செந்திலு என புஷ்பா சொல்ல, மலர் கிட்ட கேட்டுருங்க மா என்கிறான்.
மாப்பிள்ளை பேரு என்ன போட்டா இருக்கானு கேக்குறா பேரு ராஜா டி இந்தா என போட்டாவ காட்டுகிறாள் புஷ்பா. ராஜா மாறி தான் இருக்காரு, அவள் சம்மதம் சொல்லிட்டா. மாப்பிள்ளை வீட்ல சம்மதம் சொல்லிட்டா புஷ்பா.
கல்யாணம் வேலை பாக்க சொந்தபந்தம் எல்லாம் வந்துருச்சு. மலர் ராஜா கூட பேசுன வண்ணமா இருக்கா. கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது. வந்த சொந்தமும் போக ஆரம்பிச்சாங்க. கண்ணமூடி தொறக்குற நேரத்துல முடிஞ்சு போச்சுல மா வீடே வெறுச்சோடி போன மாறி இருக்கு என்கிறான்.
மறுவீடு அழைப்பு வந்துச்சு, ராஜாவும் மலரும் வந்தாங்க. சிறப்பா விருந்து வச்சான் செந்தில். மறுநாள் சரி நாங்க கிளம்புறோம்னு சொல்லிட்டு எந்திரிக்க நான் பைக்ல விடவா மாப்பிள்ளைனு கேட்டான் செந்தில். உங்களுக்கு எதுக்கு மச்சான் சிரமம், டாக்ஸி புக் பண்ணிருக்கேன். என் பொண்டாட்டிய நான் தான பாத்துக்கணும்.
டாக்ஸி வந்ததும் இருவரும் சென்று விட்டனர். அவன் சொன்ன வார்த்த அவன் மனச விட்டு போகல. என் தங்கச்சிய நான் தானா கூட்டிட்டு போய்ருக்கணும், வீட்ல இருக்கறப்ப கூட நான் அவள கூட்டிட்டு போகாம வசந்த கூட போக சொல்லிருக்கேன். இவதான அப்படின்னு அலட்சியமா இருந்துட்டேன். ரொம்ப வருத்தபட்டு இருப்பாள மா என கூறி கண் கலங்க, புரிந்து கொண்டது மகிழ்ச்சி. ஆனால் காலம் கடந்து விட்டது. மலர் வேறொருவனுக்கு சொந்தமாகிவிட்டாளே என சொல்லிக் கொண்டே அவனை தேற்றுகிறாள் புஷ்பா.