அம்பை ஏய்தவன் எங்கோ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 4,392 
 
 

பீ. ஈ படிப்பு முடித்து விட்டு ‘இன்போஸிஸ்’ கம்பனியில் வேலை செய்து வந்தாள் வனஜா.

அன்று தன் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது ரொம்ப ‘டயர்ட்டா’ இருந்த தால் ‘காபி டேயில்’ ஒரு காபி குடிக்க வந்து உட்கார்ந்தாள் வனஜா.எதிரே காபி குடித்துக் கொண் டு இருந்த மோஹன் அவளிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தான்.

“ஹாய் மிஸ்.என் பேர் மோஹன்.நான் ‘ஸ்டேட் பாங்கில்’ வேலை செஞ்சு வரேன்.உங்க பேரை நான் தெரிஞ்சுகலாமா” என்று கேட்டு விட்டு வனஜா முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான். மோஹன் பார்க்க அழகாக இருந்தான்.அவன் ரொம்ப விநயமாகக் கேட்ட விதமும் வனஜாவுக்கு மிக வும் பிடித்து இருந்தது.

வனஜா உடனே “என் பேர் வனஜா.நான் ‘இன்பொஸிஸில்’ ஒரு ‘ப்ரொக்ராமராக’ ‘வர்க்’ பண் றேன்” என்று சொல்லி விட்டு ‘பேரர்’ கொண்டு வந்த காபியை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.

“குட்,அப்போ நீங்க ஒரு ‘கம்ப்யூட்டர் டெக்கியா’.எனக்கு ‘ஆபீஸ்’ வேலை செய்து வர அளவுக் குத் தான் ‘கம்பூட்டர் ஆபரேட்’ பண்ணத் தெரியும்.கம்ப்யூட்டா¢ல் ‘ஜஸ்ட் பேஸிக் நாலெட்ஜ்’ தான் எனக்கு” என்று சொல்லி மனம் விட்டு சிரித்தான் மோஹன்.

வனஜாவும் சிரித்தாள்.பிறகு இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு விட்டு கிளம்பிப் போனார்கள்.

அதன் பிறகு வனஜா மோஹனை அடிக்கடி ‘காபி டேயில்’ சந்தித்துப் பேசி வந்தாள்.அவர்கள் இருவரும் மனம் விட்டுப் பழகி வந்தார்கள்.ஒரு நாள் மோஹன் நிறைய நேரம் வனஜாவிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, மெல்ல தன் ஆசையை வனஜாவிடம் சொல்லி விட்டு,பிறகு அவளிடம் ”நான் என் அப்பா அம்மாவிடம் சொல்லி முறைப்படி,உங்க அப்பா அம்மா கிட்டே ‘பெண் கேக்க’ச் சொல்லட்டுமா.உங்களுக்கு அதிலே சம்மதமா” என்று கேட்டான்.

வனஜா வெட்கப் பட்டுக் கொண்டே “எல்லாம் நல்லபடியா முடிஞ்சா சா¢ங்க” என்று சொல்லி விட்டு “எனக்கு ரொம்ப நேரம் ஆவுது,நான் கிளம்பறேங்க” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு எழுந்தாள்.

பெற்றோர்கள் சம்மதத்தை பெற்று மோஹன் வனஜாவைக் கல்யாணம் பண்ணிக் கொண்டான்.

தன்னை சந்தித்த முதல் நாள் எவ்வளவு நல்ல விதமாக பழகி வந்தானோ,அதே மாதிரி கல்யா ணத்திற்கு அப்புறமும் மோஹன் வனஜாவிடம் மிகவும் அன்போடு பழகி வந்தான்.
மூன்று வருஷங்கள் ஓடி விட்டது.

மோஹனின் பெற்றோர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து சின்ன வயசிலேயே இறந்துப் போய் விட்டார்காள்.அதன் பிறகு மோஹனின் பெற்றோர்கள் நிறைய பூஜைகள்,விரதங்கள்,பூஜைகள் ராமேஸ்வரத்தில் நிறைய பிரார்த்தணைகள்,பூஜைகள் எல்லாம் செய்த பிறகு,ஏழு வருஷம் கழித்து கண்ணன் தம்பதிகளுக்கு மோஹன் பிறந்தான்.
மோஹன் பிறந்தபோது கண்ணனுக்கு ஐம்பத்தி நாலு வயது ஆகி இருந்தது.

கண்ணனுக்கு ரெண்டு அண்ணங்கள் இருந்தார்கள்.பெரிய அண்ணன் ராமசாமிக்கு எழுபது வயசும்,சின்ன அண்ணன் சரவணனுக்கு அறுபது வயசும் ஆகி இருந்தது.
அவர்கள் குடும்பத்தில் ஒரு விசேஷம் என்றால் எல்லோரும் ஒன்றாகக் கூடி சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்கள்.

அன்று நடந்த விசேஷத்தில் கலந்துக் கொண்ட ராமசாமி கண்ணனைப் பார்த்து ”கண்ணா,எனக்குக் குழந்தைகளே பிறக்கலே.சரவணனுக்கு ரெண்டும் பெண் குழந்தைங்க தான் பிறந்தாங்க.அப்புறமா குழந்தைகளே பிறக்கலே.மோஹனும் உனக்கு ரொம்ப வருஷம் கழித்துத் தான் பிறந்து இருக்கான். இவனுக்கு சீக்கிரமா ஒரு ஆண் குழந்தை பிறந்தாத் தான்,நம்ம ‘சந்ததி’ வளரும்.நீ கொஞ்சம் மோஹனுக்கு சொல்லி சீக்கிரமா ஒரு பையனைப் பெத்துக்கச் சொல்லக் கூடாதா எனக்கும் சரவணனுக்கும்,ஏன் உனக்கும் வயசு கூடிக்கிட்டே போவுதே.மோஹனுக்கு சீக்கிரமா ஒரு ஆன் குழந்தை பொறந்தான்னா,அந்த பேரப் பையனைப் பாத்துட்டு நான் என் கண்ணே மூடுவேன்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் தோள் மேலே போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டார்.

கண்ணனும் அவன் மணைவியும் மோஹனிடம்,வனஜாவிடமும் தங்கள் அண்ணன் ராமசாமி சொன்னதை அடிக்கடி அவர்களுக்கு ஞாபகப் படுத்தி வந்து,“நீங்க சீக்கிரமா ஒரு குழந்தையே பெத்து க்கங்க” என்று சொல்லி வந்தார்கள்.

பெரியப்பா ஆசைப் படுவதை பண்ணி முடிக்க வேண்டும் என்று ஆசைப் பட்ட மோஹன ஒரு நாள் வனஜாவிடம் ”வனஜா,என் பெரியப்பா ஆசைப் படுவதை நாம பண்ணனும்.ஆனா நீ இது வரை கர்ப்பம் தா¢க்காம இருந்து வறே.நாம டாக்டரைப் பார்த்து நம்மை ‘செக் அப்’ பண்ணிக் கிட்டு வரலா மா” என்று கனிவோடு கேட்டான்.

உடனே வனஜா ”சா¢ங்க, நாம டாக்டர் கிட்டே போய் ‘செக் அப்’ பண்ணிக் கிட்டு வரலாங்க” என்று சொன்னவுடன் மிகவும் சந்தோஷப் பட்டு மோஹன் வனஜாவை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய டாக்டர் கிட்டே அழைத்துப் போய் ‘செக் அப்’ பண்ணினான்.

அந்த டாக்டர் பல ‘டெஸ்டுகளை’ எல்லாம் எடுத்துப் பார்த்து விட்டு,வனஜா கருப்பையை ‘ஸ்கேன்’ பண்ணிப் பார்த்தார். ‘ஸ்கேன்’ ரூமை விடு வெளியே வந்த அந்த டாக்டர் மோஜனைப் பார்த்து “ மிஸ்டர் மோஹன்,நான் ‘ஸ்கேன்’ பண்ணிப் பார்த்ததிலே இவங்க கருப்பை வளராம ரொம்ப சின்னதா இருக்கு.அந்தக் கருப்பை இனிமே வளர வாய்ப்பே இல்லை.இவங்களுக்கு இந்த ஜென்மத்தி லே குழந்தை பாக்கியமே கிடையாதுங்க”என்று அடித்துச் சொல்லி விட்டார்.

டாகடர் சொன்னதைக் கேட்ட வனஜாவுக்கும் மோஹனுக்கும் உலகமே இருண்டு விட்டது போல இருந்தது.டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்து இருவரும் அங்கு இருந்த சோ¢ல் ‘தொப்’ பென்று உட்கார்ந்துக் கொண்டார்கள்.

பத்து நிமிஷம் யோஜனைப் பண்ணின பிறகு மோஹன் ”வனஜ்,என்ன இந்த டாக்டர் இப்படி சொல்லிட்டாரே.நாம இன்னொரு டாக்டரை பாத்து அவர் ‘ஒபினியனை’க் கேக்கலாம் வா” என்று சொல்லி விட்டு வனஜாவை அழைத்துக் கொண்டு இன்னும் ஒரு பெரிய லேடி டாக்டரைப் பார்க்கப் போனான் மோஹன்.

அந்த லேடி டாக்டரும் முதல் பண்ண டாக்டர் பண்ண எல்லா ‘டெஸ்டுகளை யும்’ ‘ஸ்கேனும்’ பண்ணிப் பார்த்து விட்டு முதல் டாக்டர் சொன்னதைப் போலவே சொல்லி விட்டார்.

டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்த மோஹன் “இப்ப என்னப் பண்றது வனஜ்,இந்த பெரிய லேடி டாக்டரும் முதல் டாக்டர் சொன்னதைப் போலவே சொல்லி விட்டாங்களே.இந்த விஷயத்தை எப்படி நான் என் அம்மா அப்பா கீட்டே மறைச்சு வறது.அப்பாவும் அம்மாவும் நம்மைப் பார்த்து அடிக் கடி ‘நீங்க குழந்தையை சீக்கிரமாப் பெத்துக்குங்க’ன்னு தொந்தரவு பண்ணிக் கிட்டு இருக்காங்களே. இப்ப இதை மறைச்சுட்டா,ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த உண்மை தெரிஞ்சு விடுமே” என்று அழுதுக் கொண்டேக் கேட்டான்.

வனஜாவுக்கு என்ன பதில் சொல்வதே என்று புரியவில்லை.

’ஒரு பக்கம் தனக்குக் குழந்தையே பிறக்காது என்கிற பயங்கர உண்மை.இன்னொரு பக்கம் கல்யாணம் பண்ணின நாளில் இருந்து இது வரைக்கும் நம்மை ‘சீ’,‘தூ’,என்று ஒரு வார்த்தைக் கூட கடிஞ்சுப் பேசாதா, இவ்வளவு நல்ல குணம் உள்ள தன் கணவனை எப்படி அவர் அப்பா அம்மாவிடம் ‘நீங்க உண்மையைச் சொல்லாதீங்க,பொய்யை சொல்லுங்க’ ன்னு சொல்லுவது’ என்று தெரியாமல் அனலில் விழுந்த புழுவைப் போலத் தவித்தாள் வனஜா.

பிறகு தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு “நீங்க உங்க அப்பா,அம்மா கிட்டே பொய் சொல்ல வேணாங்க,உண்மையைச் சொல்லிடுங்க”என்று அழுதுக் கொண்டே சொன்னாள் வனஜா.

மோஹன் வருத்தப் பட்டுக் கொண்டே தன் அம்மா அப்பாவிடம் டாக்டர் வனஜாவைப் பத்தி சொன்னனதை அழுதுக் கொண்டே சொன்னான்.

ஒரு நிமிஷம் கூட ஆகி இருக்காது.

உடனே கண்ணன்” மோஜன் அப்படினின்னா,வேறே வழி இல்லே.நீ வனஜாவை இப்போ விவாக ரத்து பண்ணிட்டு வேறே ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணிக்க.அவளுக்காவது சீக்கிரமா ஒரு குழந்தைப் பிறந்து நம்ம வம்சம் விளங்கட்டும்” என்று சொன்னார்.

அன்று இரவு பூராவும் மோஹன் வனஜாவின் கைகளை பிடித்துக் கொண்டு “வனஜ்,எனக்கு இப்போ என்ன பண்றதுன்னே தெரியலே.உன்னோடு நான் காலம் பூராவும் வாழ்ந்துண்டு வரணும்ன் னு ஆசைப் படறேன்.உன்னை விவாக ரத்து பண்ணிட்டு,வேறே பெண்ணோடு வாழவே எனக்கு பிடிக்கலே,நான் இப்ப என்ன பண்ணட்டும் “என்று கேட்டு அழுதான்.

‘தன் மாமனார் மாமியாருக்குப் பிடிக்காமல் இந்த வீட்டில் வாழ்ந்து வருவது என்பது முடியாத காரியம் என்று தெரிந்ததால்,வனஜா தன் கணவனைப் பார்த்து “உங்க நிலமை எனக்கு நல்லாப் புரியு துங்க.நீங்க அவங்க சொன்னப் படியே என்னை விவாக ரத்து பண்ணுங்க.உங்க அப்பா அம்மா இஷ்டப்பட்டது போல அவங்களுக்கு ஒரு குழந்தையை பெத்துக் குடுக்கற பாக்கியம் எனக்கு இந்த ஜென்ம த்லே இல்லீங்களே.நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க” என்று சொல்லி தலையனையில் தன் முகத் தைப் புதைந்துக் கொண்டு அழுதாள் வனஜா.

இருவரும் விடிய விடிய அழுதுக் கொண்டு இருந்தார்கள்.

அடுத்த வாரமே அப்பா சொன்னது போல மோஹன் வனஜாவை விவாக ரத்துப் பண்ணி விட்டான்.

வனஜா தன் துணிமணிகள்,நகைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தன் அப்பா அம்மா வீட்டுக்கு வந்து தன் மாமியார் வீட்டில் நடந்த எல்லா விஷயங்களையும் விவரமாக சொல்லி அழுதாள்.

வனஜாவின் பெற்றோர்கள் மிகவும் வருத்தப்பட்டு அழுதார்கள்.

அடுத்த வாரமே மோஹன் வேறு ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக் கொண்டான்

இருபத்தி ரெண்டு வருஷங்கள் ஓடி விட்டது.

அன்று ‘இன்போஸிஸ்’ கமபனியில் ‘இன்டர்வியூ’ ஏற்பாடு ஆகி இருந்தது.

‘டிராபிக்’ ஜாமில் மாட்டிக் கொண்ட வனஜா தன் ஆபீஸ்க்கு வர லேட்டாகி விட்டது.

தன் காரை வேகமாக ஓட்டி வந்து தனக்கு என்று இருக்கும் ‘பார்க்கிங்க்’ இடத்தில் நிறுத்த வந்தாள்.

அங்கு இருந்த தூணைப் பிடித்துக் கொண்டு ஒரு நீல கலா¢ல் முழுக் கை சட்டையுடன் ஒரு இளைஞன் நின்றுக் கொண்டு இருந்தான்.அவன் பக்கத்தில் ஒரு பெரியவர் தன் அக்குள் கட்டையுட ன்,ஒரு காலுடன்,அவனுடன் நின்றுக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தான்.

அந்த பெரியவரைப் பார்த்ததும் வனஜாவுக்கு ‘ஷாக்காக’ இருந்தது.

‘இவர் எங்கே இங்கே நிக்கறார்.இவர் காலுக்கு என்ன ஆச்சு.பக்கத்லே நிக்கற பையன் அவருக் குப் பிறந்த பையனா’ என்று யோஜனைப் பண்ணினாள்.

‘இன்டர்வியூவுக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சி.இவரை நாம் இப்போ விசாரிக்க முடியாது’ என்று நினைத்து,தன் தலை மேலே இருந்த ‘கூலிங்க் க்லாஸை’ எடுத்து தன் கண்களில் போட்டுக் கொண்டு ஒரு ‘ஸ்கார்ப்பை’ எடுத்து தன் முகத்தை சுத்திக் கொண்டு காரை விட்டு கீழே இறங்கி காரைப் பூட்டி விட்டு வேகமாக, அந்த ஆறு அடுக்கு கட்டிடத்துக்குள் போய் விட்டாள் வனஜா.

‘இன்டர்வியூ’ ரூமுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டு ‘இன்டர்வியூக்கு’ வந்து இருந்த இளைஞ ர்களை தேர்வு பண்ண ஆரம்பித்தாள் வனஜா.

ரூமுக்குள் வந்த இளைஞன் “குட் மார்னிங்க்,மேடம்” என்று சொன்னதும் வனஜா தன் தலை யை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அந்த நீல கலர் முழுக் கை சட்டை போட்ட இளைஞன நின்றுக் கொண்டு இருந்தான்.

அவனைப் பார்த்து “’டேக் யுவர் சீட்’ ”என்று சொல்லி விட்டு, அவன் ‘பயோ டாட்டாவை’ ப் பார்க்க ஆரம்பித்தாள் வனஜா.

பிறகு அவனைப் பார்த்து “மிஸ்டர் ராஜன்,நாங்க எங்க கம்பனிக்கு ‘பஸ்ட் க்ளாஸ்’ பீ.ஈ. பாஸ் பண்ணி இருப்பவங்களைத் தான் ‘அப்ளை’ப் பண்ணச் சொல்லி இருந்தோம்.ஆனா நீங்க ‘தர்ட் க்ளாஸில்’ பாஸ் பண்ணி இருக்கீங்க…” என்று சொல்லி முடிக்கவில்லை உடனே ராஜன்” மேடம், நான் ரொம்ப ஏழைக் குடும்பத்லே இருந்து வரேன்.எனக்கு இங்கே வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை யில் தான் ‘அப்ளை’ப் பண்ணேன். தயவு செஞ்சி எனக்கு ஒரு வேலையை குடுங்க” என்றான் தன் கண்களில் நீர் மல்க.

வருத்தப் பட்டுக் கொண்டே வனஜா அவன் ‘பயோடாட்டாவில்’ அப்பா பேர் என்கிற வரிக்கு நேரே ‘கே.மோஹன்’ என்று இருந்ததைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தாள்.

’மோஹன் பையனா இந்த ராஜன்.ஏழை குடும்பம் என்று சொல்றானே.’அவர்’ பாங்கில் தானே வேலை செஞ்சு வந்தார்’ என்று கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு அவனைப் பார்த்து “நீ நாலு மணிக்கு ‘லாபி’க்கு வா.நான் உனக்கு வேலை கொடுக்க முடியுமா,முடியாதான்னு என்று அப்போ சொல்கிறேன் “என்று சொல்லி ராஜனை அனுப்பி விட்டாள் வனஜா.

உடனே ராஜன் ”ரொம்ப தாங்க்ஸ் மேடம்” என்று தன் கையைக் கூப்பிச் சொல்லி விட்டு ‘இன்டர்வியூ ரூமை’ விட்டு வெளியே போனான்.

நாலு மணிக்கு வனஜா தன் செகரட்டா¢யைக் கூப்பிட்டு “இந்த ‘லிஸ்ட்டில்’ வேலைக்கு ‘செலக்ட்’ ஆனவங்க பேருங்க இருக்கு.’லாபி’யில் இருக்கும் இளஞர்களிடம் இந்த ‘லிஸ்ட்டில்’ இருக் கும் பேர்களை சொல்லி விட்டு,ராஜன் என்கிற இளைஞனை அவர் அப்பாவோடு என் ‘ரூமு’க்கு வரச் சொல்லுங்க” என்று சொல்லி ‘லிஸ்ட்டை’க் கொடுத்தாள்.
பதினைஞ்சு நிமிஷம் ஆனதும், ராஜன் தன் அப்பாவை அழைத்துக் கொண்டு ரூமுக்குள் நுழைத்து “ ‘மே ஐ கம் இன் மேடம்’“என்று குரல் கொடுத்தான்.

ஒரு ‘பைலை’ப் பார்த்துக் கொண்டு இருந்த வனஜா,தன் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.

மோஹனைப் பார்த்ததும் வனஜா தன் சீட்டை விட்டு எழுந்துப் போய் “வாங்க,வாங்க” என்று சொல்லி மோஹனை உட்கார சொல்லி விட்டு,அவன் அக்குளில் இருந்த கட்டையை வாங்கி ஒரு ஓர மாக வைத்து விட்டு தன் சீட்டில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்.

வனஜா தன் சீட்டுக்கு வந்து உட்காருவதற்குள்,மோஹன் தன் கண்களில் கண்ணீர் மல்க “நீயா வனஜா” என்று ஆச்சா¢யமாகக் கேட்டு விட்டு,உடனே “சாரி மேடம்,நீங்களா மேடம்” என்று மாற்றிச் சொன்னான்.

அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்து அவன் ‘ஷர்ட்டை’ நனைத்தது .

வனஜா தன் கண்கள் கலங்க வருத்ததுடன் மோஹனைப் பார்த்து ”என்னங்க ஆச்சு,உங்க காலுக்கு” என்று கேட்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

தன் தலையைத் தொங்க போட்டுக் கொண்டு மோஹன் ”உங்களை நான் விவாக ரத்து பண்ணின பாவத்துக்கு கடவுள் எனக்கு சா¢யான தண்டனையைக் குடுத்துட்டாரு.விவாக ரத்து ஆயி ஒரு மாசம் ஆனதும் என் அம்மா பார்த்துச் சொன்ன ஒரு பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக் கிட்டேன்.அவ ராஜனை பிரசவிச்சவுடனே ஜுரம் வந்து இறந்துப் போயிட்டா.என் அம்மா,அப்பா, நான் மூன்று பேரும் தான் ராஜனை வளர்த்து வந்தோம்.பத்து வருஷத்து முன்னாலே எங்க ‘பாங்க்லே’ மூனு லக்ஷ ரூபாய் திருடுப் போனதற்கு என்னையும்,என் நண்பன் ஒருவனையும் அதில் ‘சிக்க’ வச்சு எங்க ரெண்டு பேரையும் வேலை நீக்கம் பண்ணி விட்டாரு என் ‘சீப் மானேஜர்’.அப்போ ராஜன் ஒன்தாவது படிச்சுக் கிட்டு இருந்தான்.சாப்பாட்டுக்கு மாசாந்திர வருமானம் இல்லாது போனதாலே, நாங்க எங்க வீட்டை கம்மி விலைக்கு வித்துட்டு,அந்தப் பணத்லே தான் ராஜன் படிப்பையும், எங்க குடும்பத்தையும் நடத்திக் கிட்டு வந்தோம்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்துக் கொண்டு இருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் மோஹன்.

சிறிது நேரத்திற்கு பிறகு “வேலே போன நாலாவது மாசம் ஒரு ‘ஸ்கூட்டர்’ விபத்லே என் வலது கால் நசுங்கி,நான் ஒரு நடை பிணமா ஆயிட்டேன்.நான் அப்போதில் இருந்து ஒன்பதாவது,பத்தாவது படிக்கற எட்டு பையங்களுக்கு என் வீட்டிலே ‘டியூஷன்’ எடுத்து வந்தேன்.போன வருஷம் என் கண்கள் ரெண்டிலும் ‘காட்ராக்ட்’ வந்து கண் பார்வை மங்க ஆரம்பிச்சதாலே, ‘டியூஷன்’ எடுப்பதை நான் நிறுத்திட்டேன்.இப்போ ராஜன் வேலைக்குப் போனாத் தான் எங்க குடும்பத்திலே அடுப்பு எரியும் என்கிற நிலைக்கு நாங்க வந்துட்டோம்” என்று சொல்லி விட்டு,மறுபடியும் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் மோஹன்.

மோஹன் சொன்னதைக் கேட்டு மிகவும் வருத்தப் பட்டாள் வனஜா.அவள் கண்களும் கலங்கியது.

உடனே வனஜா ”நீங்க கவலைப் படாதீங்க.நான் ராஜனுக்கு இந்தக் கம்பனிலே ஒரு வேலைப் போட்டுக் குடுத்து அவனுக்கு நானே முழுக்க,முழுக்க எல்லா வேலைங்களையும் சொல்லிக் குடுத்து அவனை இந்தக் கம்பனிலே நிரந்தரம் ஆக்கிடறேங்க” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

ராஜனைப் பார்த்து “ராஜன்,நீ அடுத்த வாரமே இந்த கம்பனிலே வேலைக்கு சேந்து என் கிட்டே வேலை செஞ்சு வா”என்று சொன்னதும் ராஜன் எழுந்து நின்றுக் கொண்டு தன் கண்களில் கண்ணீர் மல்க “ரொம்ப ‘தாங்க்ஸ்’ மேடம்.உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்குத் தெரியலை மேடம்” என்று தன் கைகளைக் கூப்பிச் சொன்னான்.
கொஞ்ச நேரம் ஆனதும் வனஜா மோஹனைப் பார்த்து “ உங்க அப்பா,அம்மா எப்படி இருந்து வராங்க”என்று கேட்டாள்.

”அவங்க ரெண்டு பேருக்கும் சக்கரை வியாதி வந்து ரொம்ப கஷடப் பட்டுக் கிட்டு வாராங்க” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னான் மோஹன்.

வனஜா உடனே தன் ‘செகரட்டா¢யை’க் கூப்பிட்டு “நான் கொஞ்ச சீக்கிரமா இன்னைக்கு வீட்டுக்குக் கிளம்பறேன்.யாராவது கேட்டா சொல்லு” என்று சொல்லி விட்டு அக்குள் கட்டையை எடுத்து வந்து மோஹனிடம் கொடுத்து “வாங்க போவலாம்” என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு,தன் காரிலே ஏற்றிக் கொண்டு மோஹன் வீட்டுக்கு வந்தாள் வனஜா.

ஒரு சின்ன தெருவில் இருந்தது அவர்கள் ஒரு ‘பெட் ரூம் ப்லாட்’.

‘காலிங்க் பெல்லை’ ராஜன் அழுத்தியதும் கண்ணன் மெல்ல வந்து கதவைத் திறந்தார்.

ராஜன் சந்தோஷத்தில் “தாத்தா,இவங்க தாம்ப்பா ‘இன்போஸிஸ்’ கம்பனியின் சீப் மானேஜர். ‘இன்டர்வியூக்கு’ வந்தவங்க எல்லோரும் ‘ஹை பஸ்ட் க்லாஸ்’ பையங்க தாத்தா.ஆனா இவங்க என் னையும் அப்பாவையும் அவங்க ‘ரூமு’க்குக் கூப்பிட்டு,அந்தக் கம்பனிலே எனக்கு வேலைப் போட்டுக் குடுத்து இருக்காங்க” என்று சொன்னான்.
மோஹன் உடனே “அப்பா,நம்ப ராஜனை இவங்க கீழே வேலைக்கு வச்சுக் கிட்டு,அவனுக்கு எல்லா வேலையும் சொல்லிக் குடுத்து ராஜனை அந்த கம்பனிலே நிரந்தமாக்கறேன்னு சொல்லி இருக் காங்க” என்று சந்தோஷத்தில் சொன்னான்.

கண்ணனுக்கும் மரகதத்திற்கும் வனஜாவைப் பார்த்ததும் ஆச்சா¢யமாக இருந்தது.

உடனே ரெண்டு பேரும் தங்கள் கைகளைக் கூப்பி “ நானும்,மரகதமும் மோஹனிடம் சொல்லி உன்னை விவாக ரத்து பண்ணி இருந்தும்,நீ அதை மனசிலே வச்சுக்கிட்டு பழிக்கு பழி வாங்காம, ராஜன் ‘தர்ட் க்லாஸில்’ ‘பாஸ்’ பண்ணி இருந்தும்,நீ அவனுக்கு வேலைப் போட்டுக் குடுத்து இந்த வீட்லே அடுப்பு புகைய வச்சு இருக்கேம்மா.ஆண்டவன் படைப்லே உனக்கு ‘உடல் கூறு கோளாறு’ இருக்குதுன்னு தெரிஞ்சு இருந்தும்,எங்களுக்கு ஒரு பேரக் குழந்தை வேணும் என்கிற சுய நலத்துக்கு க்காக ஒரு பாவமும் அறியாத உன்னை விவாக ரத்து பண்ணச் சொல்லி,நிறைய பாவத்தை சம்பா திச்சுக் கிட்டோம்.எனக்கும் மரகதத்துக்கும் சக்கரை வியாதி வந்து நாங்க ரெண்டு பேரும் ரொம்பக் கஷ்டப் பட்டு கிட்டு வரோம்.நீ எங்க குடும்பத்துக்கு விளக்கு ஏத்தி வச்ச தெய்வம்.எங்களை மன்னிச் சேன்னு ஒரு வார்த்தை சொல்லும்மா” என்று சொல்லி கண்ணீர் தளும்ப அழுதுக் கொண்டே தங்கள் கையைக் கூப்பிக் கொண்டு சொன்னார்கள்.

உடனே வனஜா ”நீங்க ரெண்டு பேரும் வயசிலெ ரொம்ப பெரியவங்க.நீங்க என்னைக் கை எடுத்து எல்லாம் கும்பிடக் கூடாதுங்க” என்று அவர்களிடம் சொன்னாள்.

பிறகு தன் ‘ப்ரீப்’ கேஸைத் திறந்து,மூனு லக்ஷ ரூபாய்க்கு ஒரு ‘செக்கை’ எழுதி மோஹனிடம் கொடுத்து “ராஜன் வேலைக்குப் போய் முதல் மாச சம்பளம் வாங்கற வரைக்கும் உங்க செலவுக்கு வச்சு க்குங்க.உங்க அம்மா,அப்பா ரெண்டு பேருக்கும் இருக்கிற சக்கரை வியாதிக்கு மருத்துவம் பார்த்து வாங்க.ராஜன் முதல் மாச சம்பளம் வந்ததும்,உங்க ரெண்டு கண்ணையும் ‘காட்ராக்ட்’ ஆபரேஷன் பண்ணி விட்டு பழைய படி நீங்க ‘டியூஷன்’ எடுத்து கிட்டு வாங்க.ராஜனுக்கு கல்யாணம் நிச்சியம் ஆனதும் எனக்கு அவசியம் அவன் கல்யாணப் பத்திரிக்கை அனுப்புங்க.நான் ராஜன் கல்யாணத்து க்கு அவசியம் வந்து இருந்து ‘அவங்க’ ரெண்டு பேரையும் ஆசீர்வாதம் பண்றேன்” என்று சொல்லி விட்டு ‘செக் புக்கை’ தன் ‘ப்ரீப் கேஸில்’ வைத்து மூடினாள்.

ரெண்டு நிமிஷத்துக்கு எல்லாம் வனஜா எழுந்துக் கொண்டு “என்னை இவர் கல்யாணம் பண் ணிக் கிட்ட நாள்ளே இருந்து,விவாக ரத்து பண்ற வரைக்கும் மிகவும் அன்பாக நடத்தி வந்தாருங்க. அவருக்கு கைம்மாறு பண்ண ஒரு வழியும் தெரியாம தவிச்சுக் கிட்டு இருந்தேங்க.அந்த கடவுள் தான் ராஜனை என் கிட்டே அனுப்பி இருக்காரு.நான் ராஜனை வேலைக்கு வச்சுக் கிட்டு,அந்த கைம்மாறை பண்ணி இருக்கேன்.இதுக்காக நான் கடவுளுக்கு என் நன்றியே சொல்லணும்” என்று சொல்லி மனதில் கடவுளை வேண்டிக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் வனஜா “இந்த வீடு ‘என் வீடு’ இல்லீங்க.நான் என் வீட்டுக்கு போறே ங்க”என்று சொல்லிவிட்டு தன் கண்களில் வழிந்த கண்ணீரை மறைத்த படி ‘விடு’ ‘விடு’ என்று வாச லுக்குப் போய் தன் காரில் ஏறப் போனாள்.

கண்ணனும்,மரகமும்,மோஹனும்,ராஜனும் வாயடைத்துப் போய் ஒன்றும் சொல்லாமல் சிலை களைப் போல நின்றுக் கொண்டு இருந்தார்கள்.

‘அம்பை எய்த்தவன் எங்கோ சந்தோஷமாக இருந்து வறான்.நாம் அவரை ஒன்னும் சொல்லாம,செய்யாம,தண்டனையை வெறுமனே இந்த அம்புக்கு குடுத்தோமே’ என்று நினைத்து வாயடைத்துப் போய் வருந்திக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தார்கள் மோஹனும் அவன் பெற்றோர்களும்.

மறுபடியும் கடவுளுக்கு தன் நன்றியை சொல்லி விட்டு,காரை நிம்மதியாக ஓட்டினாள் வனஜா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *