கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 2,795 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

சிதம்பரம்.

இது ஒரு பாடல் பெற்ற சிவ ஸ்தலம்.

தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுக்குள் இன்று ஆகும்,சிதம்பர ம் ஆலய நகர்,என்றும் நாட்டிய நகரம் என்றும் அழைக்கப் படுகிறது.தமிழ் நாட்டின் நாட்டியதிற்கும்,கட்டடக் கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம்.

சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று ஒரு பெயரும் உண்டு.புலிக்கால் முனிவராகிய வியாக்கர பாதர் பூஜை பண்ணிய இத்தலதற்கு புலியூர் என்கிற பெயரும் உண்டு.இந்தக் கோவிலுக்கு சிதம்பரம் என்று பெயர் வந்ததற்கு காரணம்:

‘சித்’என்றால் ‘ஞானம்,’அம்பரம்’ என்றால்’ஆகாசம்’. உண்மையிலே இந்த ஊரை “சித் அம்பரம்” என்று அழைக்க வேண்டியது.ஆனால் காலப் போக்கில் அந்தப் பெயர் மறுவி “சிதம்பரம்” என்று அழைக்கப் பட்டு வருகிறது.

ஆனால் சில அறிஞர்கள் இந்த ஊருக்கு உண்மை பெயர் “திருச்சிற்றம்பலம்” என்பது தான். காலப் போக்கில் இந்த பெயர் மறுவி “ சிதம்பரம்”என்று ஆகி விட்டது என்றும் கூறுகின்றனர்.

சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழமையானது,பெருமை வாய்ந்தது.

இந்த ஊரில் சைவர்களின் முக்கிய கடவுளான சிவ பெருமானின் நடராஜா¢ன் ஆலயமும், வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால்,கோவிந்தராஜ பெருமாள்,புண்டா£க வல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் சிதம்பரம் திருச்சித்ர கூடம் கோவிந்தராஜன் ஆலயமும் இருக்கிறது.

சிதம்பரம் நகரம் சென்னைக்குத் தேற்கே சுமார் 290 கிலோ மீட்டர் தொலைவில்,சீர்காழி நகரத்துக்கும்,கும்பகோனம் நகரத்துக்கும் நடுவில் அமைந்து இருக்கிறது.

சைவ சித்தாந்தப் படி குருக்கள் வேலையை நன்றாகக் கற்று வந்த மஹாதேவ குருக்கள்அந்தக் கோவிலில் ஐந்து வருட காலமாக வேலை செய்து வந்தார்.நடராஜர் கோவிலில் பரம்பரை பரம்பரையாக குருக்களாக இருந்த குடும்பத்தில் இருந்தவர்கள் தான் நடராஜருக்கு பூஜை செய்து வந்தார்கள். மஹாதேவ குருக்கள் அந்த மாதிரி பரம்பரையிலே வந்த ஒரு குருக்கள்.

ரமணி குருக்கள் மஹாதேவ குருக்களுக்கு முன்னாலே சிதம்பரம் கோவில்லே ஒரு குருக்களாக வேலே செய்து வந்தார்.அவர் திருமணமே பண்ணிக் கொள்ளாமல் ஒரு பிரம்மசாயியாகவே வாழ்ந்து வந்தார்.

ரமணி குருக்கள் இடமும்,மஹாதேவ குருக்களிடம் பல பிராமண இளைஞர்கள் குருக்கள் வேலையை கற்று வந்து,தமிழ் நாட்டில் உள்ள சிவன் கோவிகளில் குருக்களாக வேலை செய்து வந்துக் கொண்டு இருந்தார்கள்.

மஹாதேவ குருக்கள் தம்பதிகளுக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆனதும்,அவர்களு க்கு ஒரு பெண் தான் பிறந்தாள்.அந்தக் குழந்தைக்கு காமாக்ஷி என்று பெயர் வைத்து மிகவும் செல்ல மாக வளர்த்து வந்தார்கள் மஹாதேவ தம்பதிகள்.மஹா தேவ குருக்கள் சம்சாரம் மரகதம் மிகுந்த தெய்வ பக்தி உள்ள்வளாக இருந்தாள்.காலையிலும் மாலையிலும் அம்பாளை நன்றாக வேண்டிக் கொண்டு வந்தாள்.

காமாக்ஷி பிறந்த பிறகு மஹாதேவ குருக்கள் தம்பதிகளுக்கு குழந்தையே பிறக்க வில்லை.

மஹாதேவ தம்பதிகள் திமும் குருக்கள் அபிஷேகம் பண்ணி, பூஜைகள் பண்ணிக் கொண்டு வந்துக் கொண்டு இருந்த நடராஜரை விடாமல் வேண்டிக் கொண்டு வந்தார். மஹா தேவ குருக்களின் மணைவி மரகதம் வீட்டிலே காலையிலும், மாலையிலும் நிறைய அம்பாள் ஸ்லோகங்கள்,அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதி,லலிதா சஹஸ்ரநாமம் எல்லாம் தவறாமல் சொல்லிக் கொண்டு வந்து,வீட்டிலே இருந்த அம்பாளுக்கு பூஜை செய்து,‘நைவேத்யம்’ செய்து,கற்பூரம் காட்டி விட்டு, நமஸ்காரம் பண்ணி வந்தாள்.

காமாக்ஷிக்கு மூன்று வயது ஆனதும் மஹாதேவ குருக்கள் அவளை அருகில் இருந்த ஒரு ‘நர்ஸரி’ பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்துக் கொண்டு வந்தார்.காமாக்ஷியும் சந்தோஷமாக அந்த ‘நர்ஸரி’ பள்ளி கூடத்திற்குப் போய் படித்துக் கொண்டு வந்தாள்.

சிதமபரத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது ‘சிவபுரி’ என்னும் ஒரு சிறிய ஊர்.

இந்த ஊரில் இருக்கும் சிவபுரி உச்சி நாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் கோவில் தேவார பாடல் பாடப் பட்ட ஒரு தலங்களில் ஒன்று.இந்த ஊரில் தான் சிவ பெருமான் அகத்திய மா முனிவருக்கு காட்சி அளித்ததாக பழைய நுல்களில் சொல்லப் பட்டு இருக்கிறது.

ஒரு தடவை திருஞானசம்பந்தரும், மற்ற அறுபத்தி மூன்று நாயன்மார்களும் இந்த தலத்திற்கு வரும் போது பகல் பண்ணிரண்டு மணி ஆகி விட்டது.அப்போது சிவ பெருமான் கோவில் பணியாளர் வடிவில் வந்து எல்லோருக்கும் உணவு அளித்தாராம்.

இதனால் இந்த கோவிலுக்கு உச்சி நாதர் என்று இன்னொரு பெயரும் உண்டு.சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக் கோலத்துடன் அருள் பாலிகக்¢றார்.இத் தலத்தின் இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கறார்.

இந்த ஊரில் வசித்து வசித்து வந்தார்கள் கணேசன் தம்பதிகள். கணேசன் நாலு ஏக்கர் நஞ்சை நிலத்தையும்,நாலு ஏக்கர் புஞ்சை நிலதையும் வைத்துக் கொண்டு விவசாயம் பார்த்து வந்தார். கணேசன் தம்பதிகள் தவறாமல் ஒவ்வொரு திங்கட் கிழமையிலும்,பிரதோஷம் அன்றும் அந்த சிவன் கோவிலுக்குப் போய் சுவாமி அர்ச்சனைப் பண்ணி விட்டு,சுவாமி தா¢சனம் பண்ணிக் கொண்டு வந்தார்கள்.
அந்த ஊரில் இருந்த பள்ளி கூடத்தில் எட்டாவது வரைக்கும் தான் வகுப்புகள் இருந்தது.

கணேசன் தம்பதிகளின் பெண் பத்மா அந்தப் பள்ளீக் கூடத்தில் எட்டாவது ‘பாஸ்’ பண்ணி னாள்.

பத்மா மேலே படிக்க ஒரு ‘மினி’ பஸ் ஏறி சிதம்பரம் தான் போய் வர வேண்டி இருந்தது.

அந்த ஊரில் அனேகமாக பையன்கள் தான் சிதம்பரம் போய் மேல் படிப்பு படித்து வந்தார்கள். ஒன்றோ இரண்டோ பெண்கள் தான் சிதம்பரம் போய் படித்துக் கொண்டு வந்தார்கள்.கணேசன் தம்பதிகளுக்கு தங்கள் பெண் பத்மாவை சிதம்பரம் அனுப்பி,மேலே படிக்க வைப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லை.

அந்தக் காலத்தில் பல குடுமபங்களீல்,பெண் ‘வயதுக்கு வந்து விட்டாள்’ என்றால், அவளைத் தனியாக ரொம்ப தூரம் எல்லாம் படிக்க வைக்க அனுப்பக் கூடாது என்கிற வழக்கம் இருந்து வந்தது. கணேசன் தம்பதிகள் அந்த வழக்கத்துக்கு ஒரு விதி விலக்கு இல்லையே!.

“பத்மா,நீ எட்டாவது படிச்சது போறும்.சிதம்பரத்துக்கு எல்லாம் போய் மேலே படிக்க வேணாம் இந்த சிவ புரிலே இருந்து ஒண்ணோ,ரெண்டொ பொண்கள் தான் சிதம்பரம் போய் படிச்சுண்டு வறா.நிறைய புருஷப் பசங்க தான் அங்கே போய் படிச்சுண்டு வறா.நீ அவளோட அந்த ‘மினி பஸ்லே’ தனியா எல்லாம் போக வேணாம். நீ ஆத்லேயே இருந்துண்டு வா”என்று சொன்னார்கள் பத்மாவின் பெற்றோர்கள்.

பெற்றோர்கள் சொன்னதுக்கு மறுப்பு ஒன்றும் சொல்லாமல் “சரி,நான் ஆத்லேயே இருந்துண்டு வறேன்”என்று சொல்லி விட்டு,பத்மா வீட்டிலேயே இருந்து வந்தாள்.

‘குறிஞ்சி மலர்’ பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும் என்று நாம் கேள்விப் பட்டு இருகிறோம்!.ஒரு சில தம்பதிகளுக்கு அந்த மாதிரி முதல் குழந்தை பிறந்து பன்னிரண்டு வரு டங்கள் கழித்து,அடுத்த குழந்தை பிறப்பதை நாம் பார்த்தும்,கேட்டும் வந்து இருக்கிறோம்.

கணேசன் தம்பதிகளுக்கு பத்மா பிறந்து பன்னிரண்டு வருடம் கழித்து ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.

கணேசன் தம்பதிகளுக்கு சந்தோஷம் தலை கால் புரியவில்லை.பிறந்த ஆண் குழந்தை மிகவும் அழகாகவும் கலராகவும் இருந்தத்தால் அந்தக் குழந்தைக்கு ‘சுந்தரம்’ என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள் கணேசன் தம்பதிகள்.
சுந்தரத்திற்கு நான்கு வயது ஆனதும் அவனை அந்த ஊரில் இருந்த பள்ளீ கூடத்திலே சேர்த்து படிக்க வைத்தார் கணேசன்.

ஒரு நாள் சாயங்காலம் கணேசன் விவசாய வேலையைக் கவனித்து வந்து விட்டு, தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு,நெற்றியில் விபூதியை இட்டுக் கொண்டு,சாயங்கால சந்தியா வந்தனத்தை முடித்து விட்டு,சுவாமி ரூமுக்குப் போய் நிறைய மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு, ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,எழுந்துக் கொண்டு “கமலா, கமலா” என்றுக் கூப்பிட்டார்.

”என்னண்ணா,ஏன் கூப்பிட்டேள்.என்ன சமாச்சாரம்.ரொம்ப அவசரமான சமாச்சாரமா” என்று சமையல் ரூமில் இருந்த கமலா சமையல் வேலையை அப்படியே விட்டு விட்டு,தன் கைகளை ஒரு துண்டினால் துடைத்துக் கொண்டே வந்து கேட்டாள் கமலா.

“கமலா,நான் வயல்லே இருந்து ஆத்துக்கு வந்துக் கொண்டு இருக்கும் போது யோஜனைப் பண்ணிண்டே வந்தேன்.நம்ப பத்மாவுக்கு வயசாயிண்டே போறது இல்லையா.அவளுக்கு நாம ஒரு சீக்கிரமா ஒரு கல்யாணத்தேப் பண்ணி வக்க வேணாமா சொல்லு” என்று கேட்டார் கணேசன்.

“நீங்கோ இப்போ தான் யோஜனைப் பண்ண ஆரம்பிச்சு இருக்கேள்.எனக்கு சதா அந்த யோஜனைத் தான் என் மனசிலே ஓடிண்டு இருக்கு.நான் தானே ஆத்லே இருந்துண்டு தினமும் பத்மாவைப் பாத்துண்டு வறேன்.உங்களுக்கு என்ன.காத்தாலே வயலுக்குப் போனா,சாயங் காலம் தானே எல்லா வேலேயும் முடிச்சுண்டு ஆத்துக்கு வறேள்.நானே இன்னும் ஒரு வாரம் போனா பத்மா கல்யாணத்தேப் பத்தி உங்களுக்கு ஞாபகப் படுத்தலாம்ன்னு தான் காத்துண்டு இருந்தேன்” என்று சொன்னாள் கமலா.

“கமலா,அது அதுக்கு நேரம் வர வேணாமா சொல்லு.இப்போ வந்து இருக்கு.என் பால்ய ‘ஸ்னேகிதன்’ ரகுராமனும்,அவன் சம்சாரமும் ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாலே வந்த விஷ ஜுரத்லே ஒரு மணி நேர வித்தியாசத்லே இந்த ‘லோகத்தே’ விட்டுப் போயிட்டா.அவா எனக்குத் தூரத்து உறவு…….” என்று கணேசன் சொல்லிக் கொண்டு இருக்கும் போது கமலா பொறுமை இழந் தவளாக,“அவாளே இப்போ ஏன் நினைச்சுண்டேள்.பத்மா கல்யாணத்துக்கும்,’பரலோகம்’ போயிட்ட, உங்க தூரத்து உறவுக்காராளுக்கும் என்ன சம்பந்தம்” என்று சற்று கோவமாகக் கேட்டடாள்.

கணேசன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

“அவா ரெண்டு பேரும் உயிரோடு இருக்கும் போது,அவ பொண்ணு ரமாவுக்கு காலா காலத்லே ஒரு கல்யாணத்தே பண்ணி முடிச்சா.கல்யாணத்து அப்போ ரமா தம்பி ராமசாமி ரொம்ப சின்னப் பையன்.அவன் கிட்டே ரகுராமன் வச்சுட்டுப் போன நிலம் நீச்சு எல்லாம் நிறைய இருக்கு.அந்தக் குடும்பம் நல்ல ஒரு ‘ஸ்ரேஷ்டமான’ குடும்பம்.அவன் பத்தாவது சிதம்பரத்லே படிச்சு ‘பாஸ்’ பண்ணி இருக்கான்.அவன் வயசு பத்மாவுக்கு ஈடா இருக்கும்.அவனே ஒரு எட்டு பாத்துட்டு,அவன் நம்ப பத்மாவே கல்யாணம் பண்ணிக்கா ஆசைப் படறானான்னு கேக்கலாம்ன்னு நினைச்சேன்.அப்படி பண்ணலாமான்னு நான் உன்னேக் கேக்கலாமேன்னு நினைச்சுத் தான்,சுவாமிக்கு ஒரு நமஸ்காரத் தை பண்ணினதும், நான் உனக்குக் குரல் குடுத்தேன்” என்று சொன்னார் கணேசன்.

“நேக்கும் அவா குடும்பம் நன்னாத் தெரியும்.அவா உடும்பம் ஒரு ‘ஸ்ரேஷடமான’க் குடும்பம் தான்.நீங்கோ ஒரு எட்டுப் போய் அவரைப் பாத்து கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்து விட்டு,உங்க அபிராயாயத்தே சொல்லி கேளுங்களேன்.அவர் ‘சரி’ன்னு சொன்னா,நம்ப பத்மா ஜாதகத்தேக் குடுத்துட்டு,அவர் ஜாதகத்தே வாங்கிண்டு வாங்கோ.அந்த அம்பாள் ‘அனுக்கிரஹம்’ இருந்தா,அந்த பையனுக்கு நம்ம பத்மாவை கல்யாணம் பண்ணிக் குடுக்கலாமே.அந்த நல்ல சம்மந்தம் பதமாவுக்குக் கிடைக்கட்டுமே.அப்படி பண்ணா பதமாவுக்கு மாமனார் ,மாமியார், பிடுங்கல் ஒன்னும் இல்லலாம சந்தோஷமா வாழ்ந்துண்டு வருவாளே” என்று சொன்னாள் கமலா.

அடுத்த நாளே கணேசன் ராமசாமியை சந்திக்கப் போனார்.

ராமசாமி சிதம்பரத்திலே பத்தாவது ‘பாஸ்’ பண்ணி விட்டு,வருடாந்திர லீவில் இருந்த போது, அவனுடைய அம்மாவும்,அப்பாவும் அப்போது சிவபுரியிலே மிகவும் பரவலாக வந்த விஷ காய்ச்சலில் இறந்துப் போய் விட்டார்கள்.அதற்கு பிறகு ராமசாமி மேலே படிக்காமல்,தன் பெற்றோர்கள் வைத்து விட்டுப் போன நாலு ஏக்கர் நஞ்சை நிலத்திலும்,இரண்டு ஏக்கர் புஞ்சை நிலத்திலும் விவசாயம் பார்த்து வந்தார்.

கணேசனைப் பார்த்ததும் ராமசாமி “வாங்கோ,மாமா,எங்கே இவ்வளவு தூரம் வந்து இருக்கேள். ஆத்லே மாமி,உங்க பொண்ணு,பையன் எல்லாம் சௌக்கியமா” என்று விசாரித்து விட்டு, கணேசனை வீட்டுக்குளே அழைத்துப் போனார்.

“எல்லோரும் சௌக்கியமா இருக்காப்பா.உங்க அக்கா,அத்திம்பேர்,அவா குடும்பத்து மனுஷா எல்லாம் சௌக்கியமா இருக்காளா”என்று பதிலுக்கு விசாரித்தார் கணேசன்.”எல்லாரும் சௌக்கியமா இருக்கா மாமா.ரமா மாமியாருக்குத் தான் உடம்பு சித்தே படுத்தறது.அந்த மாமிக்கு சக்கரை வியாதி இருக்கு.அந்த மாமியோட பத்மா ரொம்ப சிரமப் பட்டுண்டு வறா.அவளும் அவ ஆத்துக்காரரும், அடிக்கடி டாகடரை போய் பாக்க வேண்டி இருக்கு.அந்த மாமிக்கு ‘வாய் கட்டுப் பாடு இல்லே’.தவிர ரெண்டு வேளையும் சாதம் சாப்பிட்டுண்டு வறா.ரெண்டு வேளேயும் சாதம் சாப்பிட்டா உடம்ப்லே சக்கரை எப்படி குறையும் சொல்லுங்கோ” என்று சொல்லி வருத்தப் பட்டார் ராமசாமி.

கொஞ்ச நேரம் லோகாபிராமமாக பேசிக் கொண்டு இருந்து விட்டு,“என் பொண்ணு பத்மா சிவபுரியிலே இருக்கிற பள்ளீக் கூடத்லே எட்டாவது ‘பாஸ்’ பண்ணினதும்,நானும், என் ஆத்துக்காரி யும் பத்மா சிதம்பரம் எல்லாம் போய் மேல் படிப்பு படிக்கவேணாம்ன்னு நினைச்சு,அவளே ஆத்லேயே வச்சுண்டு வறோம்அவளுக்கு இந்தத் தை மாசம் வந்தா இருபது வயசு ஆறது.அவளே உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க,நானும் என் ஆத்துக்காரியும் ரொம்ப ஆசைப் படறோம்.நான் நோ¢டை யாவே உங்களேக் கேக்கலாம்ன்னு தான் இங்கே புறப்பட்டு வந்தேன்” என்று தயங்கிக் கொண்டே கேட்டார் கணேசன்.

‘இவா சம்மந்தம் நல்ல சம்மந்தம் ஆச்சே.நம்ம அப்பாவும்,அம்மாவும் இப்போ உயிரோடு இருந்து இருந்தா ‘சரி’ன்னு தானே சொல்லி இருப்பா’ என்று நினைத்து சந்தோஷப் பட்டார் ராமசாமி.

கொஞ்ச நேரம் ஆனதும் “நீங்கோ என் அப்பாவோட பால்ய ‘ஸ்னேகிதர்’.எங்க அம்மா,அப்பாவு க்கு உங்க குடும்பம் ரொம்ப பழக்கம்.நேக்கு உங்க பொண்ணேக் கல்யாணம் பண்ணிக்கறதிலே எந்த ஆக்ஷபணையும் இல்லே மாமா”என்று வெளிப் படையாக சொன்னார் ராமசாமி.

உடனே ராமசாமி கணேசன் பெண் பத்மாவின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு,தன் ஜாதகத்தை கணேசனிடம் கொடுத்தார்.

ஜாதகத்தை வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரம் ஆனதும் “நான் போயிட்டு வறேன்.உங்க வாத்தியார் கிட்டே ரெண்டு ஜாதகத்தையும் குடுத்து பொருத்தம் பாக்கச் சொல்லுங்கோ.நானும் எங்க வாத்தியார் கிட்டே ரேண்டு ஜாதகத்தையும் குடுத்து பொருத்தம் பாக்கறேன்.அந்த ‘ஈஸ்வர சங்கல்பம்’ இருந்தா இந்த கல்யாணம் நடக்கட்டுமே” என்று சொல்லி விட்டு எழுந்துக் கொண்டார் கணேசன்.

ராமசாமி கணேசனை வாசல் வரைக்கும் போய் வழி அனுப்பி வைத்தார்.

“கமலா,நான் ராமசாமியைப் பாத்தவுடன்,என்னைப் பாத்து ‘வாங்கோ,மாமா,எங்கே இவ்வளவு தூரம் வந்து இருக்கேள்.ஆத்லே மாமி,உங்க பொண்ணு,பையன் எல்லாம் சௌக்கியமா’ன்னு விசாரிச்சார்.நான் கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்துட்டு,நான் போன விஷயத்தை ராமசாமி கிட்டே நோ¢டையாவே கேட்டேன்.அவரும் ‘எனக்கு உங்க பொண்ணேக் கல்யாணம் பண்ணிக்கறதிலே எந்த ஆக்ஷபணையும் இல்லே’ன்னு வெளிப் படையா சொன்னார். அப்புறமா அவர் பத்மா ஜாதகத்தை வாங்கிண்டு,தன்னுடைய ஜாதகத்தை எனக்குக் கொடுத்தார்” என்று சந்தோஷமாகச் சொன்னார் வீட்டுக்கு வந்த கணேசன்.

“நேக்குக் கேக்கவே ரொம்பவே சந்தோஷமா இருக்கு.பகவான் ‘அனுக்கிஹத்தாலே’ ரெண்டு ஜாதகங்களும் நன்னா பொருந்தி இருந்து,இந்த இடம் நம்ம பத்மாவுக்கு அமைஞ்சா ரொம்ப நன்னா இருக்கும்.அவா ரொம்ப சந்தோஷமா இருந்துண்டு வருவா” என்று சந்தோஷமாகச் சொன்னாள் கமலா.

அடுத்த நாளே கணேசன் வாத்தியாரை வீட்டுக்கு வரவழைத்து ரெண்டு ஜாதங்களையும் காட்டினார்.

வாத்தியார் தன் மூக்குக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு,பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு ரெண்டு ஜாதங்ககளையும்,ஒரு அரை மணி நேரம் அலசிப் பார்த்து விட்டு,மெல்ல தன் மூக்குக் கண்ணாடியைக் கழட்டி விட்டு ”கணேசன் சார்,ரெண்டு ஜாதகங்ககளும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்கு.நீங்கோ இவா ரெண்டு பேருக்கும் பேஷாக் கல்யாணம் பண்ணி வக்கலாம்.இவா ரெண்டு பேரும் அமோகமா இருந்துண்டு வருவா” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

“ரொம்ப சந்தோஷம் வாத்தியார்”என்று சொல்லி விட்டு அவருக்குத் தர வேண்டிய தக்ஷணையைக் கொடுத்து வாத்தியாரை அனுப்பி வைத்தார் கணேசன்.ராமசாமிக்கு ‘·போன்’ பண்ணி ஜாதகங்கள் நன்றாகப் பொருந்தி இருக்கும் சந்தோஷ சமாசாரத்தை சொன்னார் கணேசன்.

உடனே ராமசாமியும்”நானும் எங்க வாத்தியார் கிட்டே ரெண்டு ஜாதகங்களையும் காட்டினேன் அவரும் ரெண்டு ஜாதகங்களுக்கும் நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னார்” என்று சந்தோஷ மாகச் சொன்னார்.

“நீங்கோ ஒரு நல்ல நாளாப் பாத்து,உங்க அக்கா,அத்திம்பேரையும்,ரமா மாமியாரையும், மாம னாரையும் அழைச்சுண்டு எங்காத்துக்கு வந்து எங்க பொண்ணேப் பாருங்கோ” என்று கணேசன் சொன்னதும்,“சரி மாமா,நாங்க ஒரு நல்ல நாளாப் பாத்து உங்க ஆத்துக்கு வறோம்”என்று சொன்னார் ராமசாமி.

ஒரு நல்ல நாளாகப் பார்த்து ராமசாமி,அவன் அக்கா,அத்திம்பேர் குடும்பத்துடன் கணேசன் வீட்டுக்கு வந்து பதமாவைப் ‘பொண்ணு’ப் பார்க்க வந்தார்கள்.எல்லோரும் உட்கார்ந்துக் கொண்டதும் “கமலா,பத்மாவை எல்லோருக்கும்,நமஸ்காரம் பண்ணச் சொல்லு” என்று கணேசன் சொன்னதும் கமலா உள்ளே போய் பத்மாவை அழைத்துக் கொண்டு வந்து “பத்மா,எல்லோருக்கும் ஒரு நமஸ்காரத் தைப் பண்ணும்மா” என்று சொன்னதும் பத்மா வந்து இருந்த எல்லோருக்கும் பொதுவாக ஒரு நமஸ்கா ரத்தைப் பண்ணி விட்டு ‘பவ்யமாக’ தரையிலே உட்கார்ந்துக் கொண்டாள்.

ராமசாமிக்கு பத்மா பிடித்து இருந்து,பத்மாவுக்கும் ராமசாமியைப் பிடித்து இருந்தது. இரு குடுமபங்களும் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்தார்கள்

பத்மா எல்லோருக்கும் அம்மா பண்ணி இருந்த ‘ஸ்வீட்’ காரத்தைக் கொண்டு வந்துக் கொடுத் தாள்.அவர்கள் எல்லோரும் சாப்பீட்ட பிறகு கமலா எல்லோருக்கும் சூடாக ‘கா·பி’யைக் கொடுத் தாள்.’கா·பி’யைக் குடித்து விட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,ராமசாமி எல்லோரி டமும் சொல்லிக் கொண்டு,தன் அக்கா குடும்பத்தை அழைத்துக் கொண்டுக் கிளம்பினார்.
கணேசனும் கமலாவும் அவர்களை வழி அனுப்பி வைத்தார்கள்.

ராமசாமி வாத்தியாரைக் கூப்பிட்டு,‘நிச்சியதார்த்ததுக்கு’ ஒரு முஹூர்த்த நாள் கேட்டு அந்த தேதியை கணேசனுக்கு ‘·போனில்’ சொன்னார்.குறிபிட்ட அந்த முஹூர்த்த நாளீல் கணேசன் கமலாவை அழைத்துக் கொண்டு ராமசாமி வீட்டுக்கு போனார்.வாத்தியார் ரெண்டு குடும்பங்களுக்கு ம் ‘நிச்சியதார்த்ததை’ பண்ணினதும்,இரு குடும்பங்களும்,,தாம்பூலம்,மாற்றிக் கொண்டார்கள். அன்றே வாத்தியார் இருவர் நக்ஷத்திரத்துக்கும் ஒத்துப் போகும் ஒரு முஹூர்த்த நாளைப் பார்த்து சொன்னார்.

அந்த முஹூர்த்த நாளில் கணேசன் தம்பதிகள் எல்லா உறவுக்காரர்களையும் அழைத்து,தங்கள் பெண் பத்மாவை ராமசாமிக்கு வெகு விமா¢சையாகக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள்
அந்தக் கால வழக்கப் படி கணேசன் தம்பதிகள் ‘ஐந்து நாள்’ கல்யாணம் பண்ணினார்கள்.

ஆறாவது நாள் பத்மா கண்களில் கண்ணீர் முட்ட,அவள் அப்பா,அம்மா,சுந்தரம் மூவா¢டமும் சொல்லிக் கொண்டு,அவள் கணவனுடன்,‘புக்ககம்’ கிளம்பினாள்.

கமலா பத்மாவைப் பார்த்து “பத்மா, நீ புக்காத்துக்குப் போறே.இந்த மாதிரி சமயத்லே நீ கண் கலங்கக் கூடாது.நீ சந்தோஷமாப் போய் வரணும்”என்று பத்மாவைக் கட்டிக் கொண்டு சொன்னாள்.
கணேசன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

அந்த வருடம் சுந்தரம் ஐந்தாவது ‘பாஸ்’ பண்ணி விட்டு ஆறாவது படித்து வந்தான்.

ராமசாமி தன் பெற்றோர்கள் வைத்து விட்டுப் போன நாலு ஏக்கர் நஞ்சை நிலத்திலும்,இரண்டு ஏக்கர் புஞ்சை நிலத்திலும் விவசாயம் பார்த்து வந்து,பத்மாவுடன் சந்தோஷமாகக் குடித்தனம் பண்ணி வந்தான்.ராமசாமிக்கு இப்போது கல்யாணம் ஆகி விடவே,அவர் இப்போது தன் மணைவி பத்மாவை அழைத்துக் கொண்டு அடிக்கடி ரமா,அத்திம்பேர்,ரமாவின் மாமனார், மாமியார் எல்லோரையும் போய் பார்த்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தார்.

கல்யணம் ஆன மறு வருஷமே,ராமசாமி தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்தது.அந்த குழந்தையை ‘தொட்டில் போடும் விழாவுக்கும்’,அடுத்த நாள் நடந்த ‘புண்யாசானத்துக்கும்,’நாம கரணம்’ விழாவுக்கும் கணேசன் தம்பதிகளும்,சுந்தரமும் போய் சிறப்பித்தார்கள்.இந்த ரெண்டு விழா வுக்கும் ரமாவும்,அவள் கணவரும் வந்து சிறப்பித்தார்கள்.

ராமசாமி தம்பதிகள் பிறந்த குழந்தைக்கு ராதா என்று பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள்.

மூன்று வருடம் ஆனதும் ராமசாமி தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. இந்த குழந்தையை ‘தொட்டில் போடும் விழாவுக்கும்’,அடுத்த நாள் நடந்த ‘புண்யாசானத்துக்கும், நாம கரணம்’ விழாவுக்கும் கணேசன் தம்பதிகளும் ,சுந்தரமும் போய் சிறப்பித்தார்கள்.இந்த ரெண்டு விழாவுக்கும் ரமாவும்,அவள் கணவரும் வந்து சிறப்பித்தார்கள்.

ராமசாமி தம்பதிகள் பிறந்த ஆண் குழந்தைக்கு சாம்பசிவன் என்று பெயர் வைத்தார்கள். ராமசாமி தம்பதிகள் தங்களுக்கு முதலில் ஒரு பெண் குழந்தையும்,அதற்கு அப்புறம் மூன்று வருஷம் கழித்து ஒரு ஆண் குழந்தையையும் பிறந்ததை நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

ராதாவுக்கு நாலு வயது ஆனதும் அந்த ஊரில் இருந்த ஒரு சின்னப் பள்ளிக் கூடத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்தார் ராமசாமி.

சாம்பசிவனுக்கு நாலு வயது ஆனதும் அதே பள்ளி கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தார் ராமசாமி.

அந்த வருஷம் சுந்தரம் சிவபுரியிலே எட்டாவது ‘பாஸ்’ பண்ணி விட்டு,சிதம்பரத்துக்கு ஒரு ‘மினி பஸ்’ ஏறிப் போய் ஒன்பதாவது ‘க்லாஸ்’ படித்து வந்தான்.அந்த வருடம் ராதா அந்தப் பள்ளி கூடத்தில் ஆறாவது ‘பாஸ்’ பண்ணினாள்.

அடுத்த வருடம் சுந்தரம் சிதம்பரத்தில் பத்தாவது ‘பாஸ்’ பண்ணினான்.அவனுக்கு மேலே படிக்க வேண்டும் என்கிற ஆசை இல்லை.ஒரு நாள் அவன் தன் அப்பா,அம்மாவைப் பார்த்து “எனக்கு மேலே படிக்க ஆசை இல்லே.நான் அப்பாக் கூட வந்து விவசயத்தே நன்னா கத்துக்கலாம்னு ரொம்ப ஆசைப் படறேன்” என்று சொன்னதும் கமலா திடுக்கிட்டாள்.

“என்னடா சொல்றே சுந்தரம்.நீ ஒரு புருஷப் பையன்.நீ மேலே படிச்சு ஒரு கிராஜுவேட் ஆயி, சிதம்பரத்லே ஒரு நல்ல வேலே பாத்துண்டு வரணும்ன்னு நான் ரொம்ப ஆசைப் பட்டுண்டு இருக்கும் போது,நீ என்னடன்னா,’எனக்கு மேலே படிக்க ஆசை இல்லேனு சொல்றயே’.நன்னா இல்லேடா நீ சொல்றது.பத்மா பொம்மணாட்டி குழந்தே.நாங்க அவளே மேலே படிக்க வக்கலே.நீ மேலே படிக்கணும் அவன் சொல்றதே கேட்டுண்டு நீங்கோ சும்மா இருக்கேளே.அவனுக்கு சித்தே எடுத்து சொல்லக் கூடாதோ” என்று கணவனைப் பார்த்து கத்தினாள் கமலா.

கணேசன் ஒன்னும் சொல்லாமல் வெறுமனே சிரித்துக் கொண்டு இருந்தார்.கமலாவுக்கு கோவம் பொத்து கொண்டு வந்தது.

“நான் இங்கே புலம்பிண்டு இருக்கேன்.நீங்கோ என்னடான்னா என்னமோ பிள்ளே சொன்னதே கேட்டு சிரிச்சுண்டு இருக்கேள். நன்னாவே இல்லே நீங்கோ பண்றது.ஒரு அப்பா வா இருந்துண்டு பெத்த பிள்ளைக்கு எது நல்லது,எது கெட்டதுன்னு சொல்ல வேணாமோ” என்று மறுபடியும் கோவத்துடன் கத்தினாள் கமலா.

“கமலா,நேக்கு நீ சொல்றதும் நியாயம்ன்னு படறது.சுந்தரம் சொல்றதும் நியாயம்ன்னு படறது. நான் யார் பக்கம் பேசறது சொல்லு.அவன் ஒரு புருஷப் பையன்.அவன் என் கிட்ட வந்து ‘அப்பா எனக்கு மேலே ஆசையா இருக்குன்னு கேட்டு இருந்தான்னா,நான் என்ன வேணாம்ன்னா சொல்லப் போறேன் சொல்லு.அவனே ‘எனக்கு மேலே படிக்க ஆசை இல்லே’ன்னு சொல்லும் போது,நானும், நீயும் அவனே மேலே படி மேலே படின்னு சொன்னா மட்டும் அவன் படிக்கப் போறானா.இல்லையே” என்று தன் இயலாமையை நிதானமாகச் சொன்னார் கணேசன்.

சுந்தரம் அவன் சொன்னதையே சொல்லி வந்தான்.கமலா அவள் சொன்னதையே சொல்லி வந்தாள்.கணேசனுக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.அவர் யார் பக்கம் பதில் சொல்லு வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டு இருந்தார்.

சுந்தரம் தன் அம்மாவைப் பார்த்து “அம்மா, நான் சொல்றதே கொஞ்ச நன்னா கேளுங்கோம்மா. நீங்கோ சொல்ற மாதிரி நான் மேலே படிச்சுட்டு,சிதம்பரத்லே ஒரு நல்ல வேலே பண்ணிண்டு வந்தே ன்னா,நான் சிதம்பரத்லேயே தான் தங்கி இருக்கணும்.வாரத்லே ஒரு நாள் தான் நான் இங்கே வந்து உங்களேப் பாத்துட்டுப் போக முடியும்.அப்புறமா எனக்குக் கல்யாணம்ன்னு ஒன்னு ஆச்சுன்னா,நான் பொண்டாட்டி குழந்தேங்க கூட சிதம்பரத்லேயே தான் இருந்துண்டு வரணும்.அப்போ வாரம் ஒரு தடவை நான் வந்துண்டு இருந்தது,கொஞ்ச,கொஞ்ச குறைஞ்சு மாசத்துக்கு ஒரு தடவையோ ரெண் டு மாசத்துக்கு ஒரு தடவையோன்னு ஆயிடும்.இப்பவே அப்பாவுக்கு சில நாள் ரொம்ப முடியாமத் தான்,அந்த விவசாயத்தேப் போய் கவனிச்சுண்டு வறதே நான் பாத்து இருக்கேன்….” என்று சொல்லி தன் கண்களில் துளித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

உடனே கணேசன் ”அவன் சொல்றது ரொம்ப சரி.நான் இல்லேன்னு சொல்லலே.நேக்கு சில நாள் ரொம்ப முடியாமத் தான் இருக்கு.இருந்தாலும் அறுவடை நாள்ளேயும்,வேலைக்காராளுக்கு கூலி குடுக்கற நாள்ளேயும் ரொம்ப சிரமமாத் தான் இருக்கு.இருந்தாலும் நான் ஒன்னும் சொல்லாம போயிண்டு வறேன்.நேக்கும் வயசாறது இல்லையா சொல்லு” என்று கேட்டார்.

“நீங்கோ இந்த நாள் வரைக்கும் ஒன்னும் சொல்லாம போயிண்டு வறேளே.என் கிட்டேயாவது சொல்லக் கூடாதா.நான் யாரோவா சொல்லுங்கோ.உங்க ஆத்துக்காரி தானே” என்று வருத்ததுடன் கேட்டாள் கமலா.”அம்மா,அதனால்லே நான் என்ன சொறேன்னா,நான் கொஞ்ச கொஞ்சமா அப்பா கூட போய் வியசாயத்தே பத்தின எல்லாம் விஷயம் எல்லாத்தையும்,இன்னும் ரெண்டோ மூணோ, வருஷத்லே மொள்ள கத்துண்டு வந்தேன்னா,அதுக்கு அப்புறமா அப்பா என் கூட முடிஞ்சப் போ வரட்டும்.முடியாத நாள்ளே அவர் ஆத்லே ‘ரெஸ்ட்’எடுத்தக்கட்டும் நான் தனியாப் போய் வறேன். ஒரே பையனான நான் அப்பாவுக்கு இந்த உதவியே பண்ணியே ஆகணும்ம்மா” என்று சொன்னான். சுந்தரம் அப்படி சொல்லி விட்ட பிறகு கமலாவுக்கு என்ன பதில் சொல்றது என்றே தெரிய வில்லை.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *