அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 24, 2021
பார்வையிட்டோர்: 2,214 
 

அத்தியயம்-8 | அத்தியயம்-9 | அத்தியயம்-10

ராமசாமி ராதாவுடனும்,மாப்பள்ளையுடனும் பேசிக் கொண்டு இருந்தார்.

மஹா தேவ குருக்கள் ‘போன்’ பேசி விட்டு,‘செல் போனை ஆப்’ பண்ணவுடன் ராமசாமி “அப்படியே பண்ணுங்கோ.எனக்கும் அது சௌகா¢யமா இருக்கும்”என்று சொன்னார்.
கொஞ்ச நேரமானதும் ராமசாமி “நேக்கு ரொம்ப சந்தோஷம்.நீங்கோ ஆசைப் பட்டா மாதிரி என் பையன் சாம்பசிவன் உங்க ஆத்து மாப்பிள்ளையாகப் போறான்.என் பையனுக்கு ஒரு நல்ல பொண் ணாக் கிடைக்கணுமேன்னு நான் ரொம்ப கவலைப் பட்டுண்டு இருதேன்.நீங்கோ ரெண்டு பேரும் தம் பதி சமேதரா என் ஆத்துக்கு வந்து இந்த சம்மந்தத்தை ஏற்பாடு பண்ணி, சுபமா முடிச்சி இருக்கேள்.  முப்பது வருஷத்துக்கு மேலேயே நடராஜர் கோவில்லே இருக்கற ஒரு குருக்கள் குடும்பம் எனக்கு சம்மந்தியா வந்து இருக்கான்னு நினைச்சா,எனக்கு ரொம்ப பெருமையாவும்,சந்தோஷமாவும் இருக்கு” என்று சொன்னார்.

“எங்களுக்கும் உங்க சம்மந்தம் கிடைச்சதை நினைச்சு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோ ஷப் படறோம்.எங்க பொண்ணுக்கும் நடராஜர் கோவில்லே இருக்கிற ஒரு குருக்கள் ஆத்துக்காரரா அமைஞ்சது எங்க பாக்கியம்” என்று சொன்னாள் மரகதம்.

கொஞ்ச நேரம் லோகாபிராமாமாகப் பேசிக் கொண்டு இருந்து விட்டு ராமசாமி எழுந்துக் கொண்டு “அப்போ நாங்க போய் வறோம்” என்று கையைக் கூப்பி சொல்லி விட்டு,ராதாவையும், மாப்பிள்ளையையும்,பிள்ளையையும் அழைத்துக் கொண்டு குருக்கள் வீட்டை விட்டு வெளீயே வந்தார்.

குருக்களும், மரகதமும் வாசல் வரைக்கும் வந்து எல்லோரையும் வழி அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்தார்கள்.

”மரகதம்,நீ சொன்னா மாதிரி நமப பொண்ணுக்கு நடராஜர் கோவில்லே பூஜை பண்ணிண்டு வரும் ஒரு நல்ல பிள்ளையாண்டான் ஆம்படையானா வறதே நினைச்சா எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொன்னார்.

“ஆமாண்ணா,ரெண்டும் குருக்கள் குடும்பம்.காமாக்ஷ¢ அன்னைக்கு ஒரு நாள் ‘முன்னே பின்னே தொ¢யாத ஒரு ஊருக்குப் போய் கஷ்டப் படறதே விட,நமக்குத் தொ¢ஞ்ச ஊருக்கு போய் நாம சௌக்கியமா இருந்து வருவது நல்லது இல்லையா சொல்லுங்கோ.’நமக்கு ஒரு சௌக்கியம் கண்லே தொ¢யும் போது,அதே விட்டுட்டு எதுக்கு ஒரு கஷ்டத்தேத் தேடிக்கணும்’ன்னு,நம்ம காமு அன்னேக் கு சொன்னாளே.அது ரொம்ப சா¢ன்னு ஆயிடுத்து.இல்லையா சொல்லுங்கோ” என்று கேட்டாள்.

“அவ சொன்னது பலிச்சுடுத்து.இப்போ மூனு பேருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி ஒரு பெரு மூச்சு விட்டார் மஹா தேவ குருக்கள்.

சாம்பசிவன் தன் அப்பா,அக்கா,அத்திம்பேருடன் ‘பஸ்’ ஸ்டாண்டுக்குப் போய், எல்லோரையும் சிவபுரிக்கு ஒரு ‘மினி பஸ்’லே ஏற்றி விட்டு தன் ‘ரூமு’க்கு வந்தான்.

அவன் மனம் சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டு இருந்தது.

சிவபுரிக்கு வந்த ராதாவும்,சுந்தரமும் ராமசாமியை அவர் வீட்டில் ஜாக்கிறதையாக விட்டு விட்டு,கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,அவர்கள் வீட்டுக்குப் போனார்கள்.

மாட்டுப் பொண்ணும்,பிள்ளையும் வருவதைப் பார்த்த கமலா “என்ன ராதா,குருக்கள் ஆத்து பொண்ணு எப்படி இருக்கா.உன் தம்பிக்கு சா¢யான ஜோடியா.பொண்னு அழகா கலரா இருக்காளா. ரெண்டு பேருக்கும் ஒருத்தரே ஒருந்தருக்குப் பிடிச்சி இருக்கா.முக்கியமா உங்க அப்பாவுக்கு அந்த பொண்ணேப் பிடிச்சு இருக்கா” என்று கேள்விகள் மேலே கேள்விகள் கேட்டாள்.

ராதா தன் செருப்பை கழட்டி வைத்து விட்டு உள்ளே வந்து “அம்மா,குருக்கள் பொண்ணு நல்ல கலரா,அழகா இருந்தா.அவ பேர் காமாக்ஷ¢.நான் அவளே ஒரு பாட்டு சொன்னப்ப அவ திருப்புகழ்லே இருந்து ‘நாத வித்து கலாதி நமோ’ என்கிற பாட்டைப் பாடினா.அவ அம்மா அவளுக்கு ‘அபிராமி அந்தாதி’ ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’,’லலிதா சஹஸ்ர நாமம்’‘நாராயணீயம்’‘திருப்புகழ் ஸ்லோகங்கள் எல்லாம் கத்துக் குடுத்து இருக்காளாம்” என்று சந்தோஷமாகச் சொல்லி விட்டு “அந்தப் பொண்ணு என் தம்பிக்கு நல்ல ஜோடியா இருப்போ.ரெண்டு பேருக்கும் ஒருத்தரே பிடிச்சு இருக்குன்னு சொல்லி ட்டா”என்று சொல்லி விட்டு ‘பாத் ரூமு’க்குப் போய் கால்களை கழுவிக் கொண்டு வந்தாள்.

உடனே கணேசன் “கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.என்னிக்கு அவா கல்யாணத்தே வச்சு£ண்டு இருக்கா” என்று கேட்டதும் “மஹா தேவ குருக்கள் கல்யாணத்துக்கு வாத்தியாரேக் கேட்டு ஒரு முஹ¥ர்த்த நாள் பாத்து சீக்கிரமா சொல்றேன்னு சொன்னார்” என்று சொன்னார் சுந்தரம்.

தனக்கு கல்யாணம் நிச்சியமாகி விடவே சாம்பசிவன் ஒரு வீட்டுத் தரகரைப் பார்த்து,”எனக்கு ரெண்டு ‘ரூம்’,ஒரு ஹால்,ஒரு சமையல் ‘ரூம்’ இருக்கும் சின்ன வீடாகக் கிடைக்குமா” என்று கேடடவுடன் அந்த தரகர் “சாமி,நான் அந்த மாதிரி வூடு இப்போ கையிலே இல்லே.இன்னும் ஒரு வாரம் கழிச்சு என்னே வந்து பாரு.நான் விசாரிச்சு வக்கறேன்.அந்த மாதிரி வூட்டுக்கு வாடகை குறைஞ்சது மூவாயிராமாவது இருக்கும்.பரவாயில்லையா சொல்லு.நான் அந்த மாதிரி ஒரு வூட்டை பாத்து,அவங்க கிட்டே சொல்லிட்டு வந்தபுறமா.நீ பின் வாங்கக் கூடாது” என்று சொன்னார்.

உடனே சாம்பசிவன் “நீங்கோ அந்த மாதிரி வீட்டைப் பாத்து எனக்கு சொல்லுங்கோ.நான் நிச்சியமா எடுத்தக்கறேன்.பின் வாங்க மாட்டேன்” என்று சொன்னதும் “சா¢ சாமி.நான் ஒரு வாரத்லே பாத்து சொல்றேன்” என்று சொன்னார் அந்த தரகர்.

சாம்பசிவன் அந்த வாரம் சனி கிழமை சிவபுரிக்குப் போய் அப்பாவைப் பார்த்தான்.

தன் அப்பாவிடம் “அப்பா,நீங்கோ இனிமே இந்த ஆத்லே தனியா இருந்துண்டு வர வேணாம். நான் சிதம்பரத்லே இருக்கிற ஒரு தரகர் கிட்டே எனக்கு ரெண்டு ‘ரூம்’,ஒரு ‘ஹால்’,ஒரு சமையல் ‘ரூம்’ இருக்கும் சின்ன வீடாக பாக்கச் சொல்லி இருக்கேன்.அவரும் இன்னும் ஒரு வாரத்லே பாத்து சொல்றதா எனக்கு சொன்னார்.அவர் அந்த மாதிரி வீட்டுக்கு குறைஞ்சது மூவாயிரம் ரூபா வாடகை இருக்கும் பரவாயில்லையான்னு கேட்டார்.நான் பரவாயில்லைன்னு சொல்லி இருக்கேன்.அந்த மாதிரி ‘ஆம்’ கிடைச்சதும் நான் இங்கே வந்து சொல்றேன்.நீங்கோ என் கூடவே தங்கி இருங்கோ” என்று சொன்னான் சாம்பசிவன்.

ராமசாமி யோஜனைப் பண்ணீனார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “நான் இங்கேயே இருந்துண்டு வறேனே சாம்பசிவா.நான் உன் கூட வந்து நிரந்தரமா தங்கறதுன்னா,நான் என் கிட்டே இருக்கிற எல்லா நஞ்சை நிலங்களையும், புஞ்சை நிலங்களையும் விக்கணும்.இந்த ஆத்தே விக்கணும்.இத்தனை வேலைகள் இருக்கு.நீ இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு காமக்ஷ¢யோட சந்தோஷமா அந்த ஆத்லே இருந்துண்டு வாயேன்.நான் சிதம் பரத்துக்கு வறதேப் பத்தி அப்புறமா யோசிக்கலாமே.இப்போ வேணாமே” என்று இழுத்தார் ராமசாமி.

“அப்பா,இத்தனை வருஷமா நீங்கோ தனியா சமைச்சு சாப்பிட்டு வந்தேள்.நான் ஒன்னும் சொல்லாம வெறுமனே வருத்தப் பட்டுண்டு இருந்தேன்.எனக்கு இப்போ கல்யாணம் ஆகப் போறது. நீங்கோ இந்த சமையல் வேலே எல்லாம் பண்ண வேண்டாமே.என் கூட சௌக்கியமா  இருந்துண்டு வரலாமே.ஏன் நீங்கோ இன்னும் தனியா இருந்துண்டு சமையல் வேலே எல்லாம் பண்ணீண்டு, வியசா யத்தையும் கவனிச்சுண்டு வரணும்.எனக்கு என்னவோ மாச சம்பளம் வறது.நீங்கோ எல்லா நஞ்சை நிலங்களையும்,புஞ்சை நிலங்களையும் வித்துட்டு,இந்த ஆத்தேயும் வித்துட்டு, வர எல்லா பணத்தை யும் ஆத்துக்குப் பக்கத்லே இருக்கிற ஒரு ‘பாங்க்லே’போட்டுட்டு மாசா மாசம் வட்டியே வாங்கிண்டு வந்துண்டு இருங்களேன்” என்று கெஞ்சினான் சாம்பசிவன்.

ராமசாமி எவ்வளவு தடவை மறுத்து வந்தாலும் சாம்பசிவன் விடாமல் பிடிவாதம் பிடித்து வந்தான்.

“அப்பா எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும்,நீங்கோ மறுத்துண்டே இருகேளே.நான் யாரோவா. உங்க பிள்ளை இல்லையா.எனக்குப் புத்தி தொ¢ஞ்ச நாள்ளே இருந்து, இந்த நாள் வரைக்கும்,நீங்கோ சொன்னதே எல்லாம் நான் பண்ணீண்டு தானே வந்துண்டு இருக்கேன்.எதுக்கும் நான் மறுப்பே சொன்னதே இல்லையே.இந்த ஒரு தடவை நான் சொல்றதே நீங்கோ கொஞ்சம் கேட்டு,அதன் படி பண்ணீ என் கூட வந்து இருந்து எனக்கு சந்தோஷத்தே தரக் கூடாதா.எவ்வளவு கெஞ்சிக் கேட்டா லும் மறுத்துண்டு வறேளே.நீங்கோ பண்றது கொஞ்சம் கூட நன்னாவே இல்லே.இதே நினைச்சா எனக்கு அழுகை,அழுகையா வறது” என்று சொல்லி விட்டு அழ ஆரம்பித்தான் சாம்பசிவன்.

சாம்பசிவன் அழுவதைப் பார்த்த ராமசாமிக்கு மனம் இளகியது.

அவர் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “சா¢ சாம்சிவா.நீ சொன்னா மாதிரியே நான் பண்றேண்.நீ அழறதே முதல்லெ நிறுத்து.நீ அழுதா அதேப் பாத்துண்டு என்னால் சும்மா இருக்க முடியாது” என்று சொல்லும் போது ராமசாமியின் குரல் தழு தழுத்தது.

ரொம்ப ‘தாங்க்ஸ்’ப்பா.நீங்கோ இவ்வளவு சீக்கிரமா உங்க மனசே மாத்திப் பேள்ன்னு நான் நினைக்கவே இல்லே” என்று அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னான் சாம்பசிவன்.

“நான் நல்ல விலை வரும் போது,என் நிலங்களைளை எல்லாம் மொள்ள வித்துண்டு வறேன். கடைசியா இந்த ஆத்தே விக்கறேன்.உனக்கு சிதம்பரத்லே ஒரு வீட்டு கிடைச்சதும், நான் உன் கூட வந்து தங்கி இருக்கேன்.நீ சந்தோஷமா சிதம்பரத்துக்குப் போய் வா” என்று சொன்னதும் சாம்பசிவன் அப்பாவோட உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு,அப்பாவிடம் சொல்லிக் கொண்டு,அக்கா அத்திம்பேர் வீட்டுக்குப் போய் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,கடைசி ‘பஸ்ஸே’ப் பிடித்துக் கொண்டு சிதம்பரம் வந்து, தன் ‘ரூமு’ க்கு வந்து சேர்ந்தான்.

அந்த வார கடைசியிலே சாம்பசிவன் அந்த வீட்டுத் தரகரைப் போய் பார்த்தான்.அந்தத் தரகர் சாம்பசிவனைப் பார்த்து “சாமி,நீ சொன்ன மாதிரி வூடு எனக்கு இன்னும் கிடைக்கலே.நீ அடுத்த வாரம் வந்து என்னேப் பார்” என்று சொல்லி அனுப்பி விட்டான்.

அந்த தரகர் சொன்னது போல சாம்பசிவன் அடுத்த வாரம் போய் அந்த தரகரைப் பார்த்தான்.

சாம்பசிவனைப் பார்த்ததும் “வா சாமி.நீ சொன்னா மாதிரி மூனு வூட்டே நான் பாத்து வச்சு இருக்கேன்.வூட்டு ‘ஓனர்ங்க’க் கிட்டே உன்னே இட்டுக் கிட்டு வந்துக் காட்டறேன்னு சொல்லிட்டு வந்து இருக்கேன். என் கூட வா.நான் அந்த மூனு வூட்டையும் காட்டறேன்.நீ உனக்குப் பிடிச்சா வீட்டே எடுத்துக்கோ.ஆனா ஒரு வூடும் பிடிக்கலேன்னு மட்டும் சொல்லக் கூடாது.புரிதா.அப்படி சொன்னா நீங்க எனக்கு இரனுரு ரூபா தரணும்” என்று கொஞ்சம் மிரட்டிச் சொன்னார்.

”நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்க.எனக்கு வீடு பிடிச்சி இருந்தாம் நான் உடனே எடுத்துப்பேன்.ஆனா அந்த வீட்டு ஓனர் வீட்டுக்கு ரொம்ப வாடகைக் கேட்டார்ன்னா,நான் எடுத்து க்க மாட்டேன்.ஏன்னா எனக்கு ரொம்ப கம்மி சம்பளம் தான் வறது” என்று சொன்னான் சாம்பசிவன்.

சாம்பசிவன் அந்த வீட்டுத் தரகர் கூடப் போய் அவர் காட்டிய மூனு வீட்டையும் பார்த்தான்

அந்த மூன்று வீடுகளில்,வாடகைக் குறைவாக இருந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ளுவதாய் தரகா¢டம் சொன்னான்.அந்த வீடு ‘ஓன’ர் சொன்ன வாடகையில் ஒரு நூறு ரூபாய் குறைத்துக் கொள்ளும் படிக் கேட்டு,அவர் ஒத்துக் கொண்டதும்,அவர் கேட்ட ஆறு மாச வாடகை ‘அட்வான்ஸை’ கொடுத்தான் சாம்பசிவன்.

அந்த வீடு கோவிலுக்கு ரொம்ப அருகாமயில் இருந்தது.

அப்புறமா வீட்டுத் தரகர் கேட்ட ‘கமிஷனை’க் கொடுத்து விட்டு,சந்தோஷமாக தன் ‘ரூமு’க்கு வந்தான்.

அடுத்த நாள் குருக்கள் சாம்பசிவனை கோவில்லேப் பாத்து “நான் வாத்தியார் கிட்டே உங்க ரெண்டு பேருடைய கல்யாணத்துக்கு முஹ¥ர்த்த நாள் பாத்து இருக்கேன்.உங்க ரெண்டு பேருடைய நக்ஷத்திரத்துக்கும் ஏத்தா மாதிரி இன்னும் ரெண்டு மாசத்துக்கு ஒரு நல்ல முஹ¥ர்த்த நாளேக் கிடைக்கலே.ஐப்பசி மாசக் கடைசியிலே முப்பதாம் தேதிக்கு ஒரு முஹ¥ர்த்த நாள் கிடைச்சு இருக்கு நீங்கோ இந்த வாரம் சனி கிழமை உங்க அப்பாவே பாக்கப் போது மறக்காம சொல்லிட்டு வாங்கோ” என்று சொன்னார்.

“நான் நிச்சியமா சொல்லிடறேன் மாமா” என்று சந்தோஷமாகச் சொன்னான் சாம்பசிவன்.

அந்த சனிக் கிழமை சாம்பசிவன் சிவபுரிக்கு வந்தபோது தன் அப்பாவிடம் “அப்பா நான் கோவிலுக்கு ரொம்ப கிட்டே ஒரு வீடு பாத்து அந்த வீட்டுக்கு ஆறு மாச ‘அடவான்ஸை’க் குடுத்து இருக்கேன்.அந்த ஆத்லே ரெண்டு ‘ரூம்’,ஒரு சமையல் ‘ரூம்’,ஒரு ‘ஹால்’ இருக்கு.இப்போ நான் அந்த ஆத்துக்குப் போய் பாலை காய்ச்சிக் குடிச்சுட்டு,ஒரு ‘புண்யாவசனத்தே’ பண்ணனும்.அதுக்கு ஆத்து வாத்தயாரேக் கேட்டு எனக்கு ஒரு நல்ல நாள் பாத்து சொல்ல சொல்லுங்கோ” என்று கேட்டான்.

உடனே ராமசாமி “கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சாம்பசிவா.அந்த ‘ஆம்’ கோவிலுக்கு ரொம்ப கிட்டவே இருக்கா.உனக்கு கோவிலுக்கு போய் வர ரொம்ப சௌகா¢யமா இருக்கும்” என்று சொன்னார்.

கொஞ்ச நேரம் போனதும் ராமசாமி ஆத்து வாத்தியாரை ‘போன்லே’ கூப்பிட்டு “வாத்தியார் சாம்பசிவன் சிதம்பரத்லே ஒரு சின்ன ‘ஆமா’ப் பாத்து  இருக்கான்.அவன் என்னிக்கு அந்த ஆத்லே பாலைக் காய்ச்சிக் குடிச்சுட்டு,ஒரு ‘புண்யாவசனத்தே’ பண்ணலாம்ன்னு,நீங்கோ ஒரு நல்ல நாள் பாத்து சொல்ல முடியுமா” என்று கேட்டார்.
பத்து நிமிஷத்துக்கு எல்லாம் அந்த வாத்தியார் “வர வாரம் புதன் கிழமை நாள் ரொம்ப நன்னா இருக்கு.அன்னிக்கே அந்த  புது ஆத்லே பாலைக் காய்ச்சிக் குடிச்சுட்டு,சிதம்பரத்லே ஒரு வாத்தியா ரேப் பாத்து ‘புண்யாவசனத்தே’ பண்ணச் சொல்லுங்கோ” என்று சொன்னார்.

“சாம்பசிவா,ஆத்து வாத்தியார் ‘வர வாரம் புதன் கிழமை நாள் ரொம்ப நன்னா இருக்கு.அன்னிக்  கே அந்த புது ஆத்லே பாலைக் காய்ச்சிக் குடிச்சுட்டு,சிதம்பரத்லே ஒரு வாத்தியாரேப் பாத்து ‘புண்யா வசனத்தே’ பண்ணச் சொல்லுங்கோ’ன்னு சொன்னார்.நீ அன்னைக்கு அந்த புது ஆத்லே பாலைக் காய்ச்சி குடிச்சுட்டு,சிதம்பரத்லே உனக்கு தொ¢ஞ்ச ஒரு வாத்தியாரே அழைச்சுண்டு வந்து,அந்த புது ஆத்துக்கு ஒரு ‘புண்யாவசனத்தே’ப் பண்ணீடு” என்று சொன்னார் ராமசாமி.

“சா¢ப்பா.நான் அப்படியே  பண்றேன்.அப்பா குருக்கள் என் கிட்டே வந்து  ‘நான் வாத்தியார் கிட்டே உங்க ரெண்டு பேருடைய கல்யாணத்துக்கு ஒரு முஹ¥ர்த்த நாள் பாத்தேன்.உங்க ரெண்டு பேருடைய நக்ஷத்திரத்துக்கும் ஏத்தா மாதிரி இன்னும் ரெண்டு மாசத்துக்கு ஒரு நல்ல முஹ¥ர்த்த நாளேக் கிடைக்கலேயாம்.ஐப்பசி மாசம் முப்பதாம் தேதி அன்னிக்கு ஒரு முஹ¥ர்த்த நாள் கிடைச்சு இருக்ககு’ன்னு சொன்னார்.உங்க கிட்டே மறக்காம சொல்லச் சொன்னார் குருக்கள்” என்று சந்தோஷ மாகச் சொன்னான் சாம்பசிவன்.

உடனே ராமசாமி “எல்லாம் நல்லதுக்குத் தான் நடக்கறது சாம்பசிவா.உனக்கு ரெண்டு மாசம் கழிச்சு,ஐப்பசி மாச கடைசியிலே கல்யாணத்துக்கு ஒரு முஹ¥ர்த்த நாள் கிடைச்சு இருக்கறதாலே, நான் கொஞ்சம் நிதானமா என்னுடைய நிலங்களை நல்ல விலைக்கு விக்கலாம். இந்த ‘ஆமையும்’ நல்ல விலைக்கு விக்கலாம்.அவசர அவசராமா நிலங்களையும் இந்த ‘ஆமையும்’ விக்க வேணாம்” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

“நீங்கோ சொல்றது ரொம்ப உண்மைப்பா.எதுக்கு நாம நஷ்டத்துக்கு விக்கணும்”என்று சொல்லி விட்டு,கொஞ்ச நேரம் ஆனதும் அப்பாவோட உட்கார்ந்துக் கொண்டு சாப்பிட்டு விட்டு,அக்கா அத்திம்பேரையும் பார்த்து,கொஞ்ச நேரம் பேசி விட்டு சிதம்பரம் வந்து சேர்ந்தான் சாம்பசிவன்.

அடுத்த நாள் சாம்பசிவன் மஹா தேவ குருக்களைக் கோவில்லேப் பாத்து “மாமா,நான் கோவில் பக்கத்லேயே ஒரு ஆத்தேப் பாத்து அதன் ஓனருக்கு ஆறு மாச ‘அட்வான்ஸை’க் குடுத்து இருக்கேன். இந்த வாரம் சனிக் கிழமை என் அப்பாவைப் பாக்கப் போனப்ப,அவர் எங்க ஆத்து வாத்தியாரே,கேட்டு அந்த ஆத்லே பாலை காய்ச்சிக் குடிக்கவும்,’புண்யாவசனம்’ பண்ணவும் ஒரு நல்ல நாளாப் பாத்து சொல்ல சொன்னார்.வாத்தியார் இந்த புதன் கிழமை நாள் நன்னா இருக்குன்னு சொன்னார்.நீங்களும், மாமியும் அந்த ஆத்துக்கு வந்து,சுபமா சுவாமி தீபத்தே ஏத்திட்டு,பாலேக் காய்ச்சி,நாம எல்லாரும் குடிச்சுட்டு,அப்புறமா நடக்கற ‘புண்யாவசனத்துக்கும்’ இருந்து விட்டுப் போக முடியுமா” என்று கேட்டான்.
உடனே மஹா தேவ குருக்கள் “நிச்சியமா வறோம்.நீ ஒரு ‘ஆம்’ வாடகைக்கு எடுத்து இருக்கே ன்னுக் கேக்க நேக்குக் ரொம்ப சந்தோஷமா இருக்கு.அந்த ஆத்து ‘அட்ரஸ்ஸே’ எனக்குக் குடு” என்று கேட்டதும் சாம்பசிவன் ஒரு காகிதத்தில் புது வீட்டு ‘அடரஸ்ஸை’ எழுதிக் கொடுத்தான்.

சாம்பசிவன் தன் வீட்டுக்கு ‘காஸ் கனெக்ஷன்’ வாங்கினான்.பிறகு கடைக்குப் போய் வீட்டுக்கு வேண்டிய சில சமையல் பாத்திரங்களையும்,நாலு சுவாமி படங்களையும்,ஒரு பித்தளை குத்து விளக் கையும்,கற்பூரம் காட்ட ஒரு கற்பூர ஹாரத்தியையும்,கால் கிலோ நல்ல எண்ணையும்,கற்பூரப் பொட்ட லமும்,ஊது வத்திப் ‘பாக்கெட்டையும்,பஞ்சுத் திரி கட்டையும் வாங்கிக் கொண்டு வந்தான்.ஒரு வாத்தியாரைப் பார்த்து தன் புது வீட்டுக்கு வர புதன் கிழமை ‘புண்யாவசனம்’ பண்ண ஏற்பாடு பண்ணீனான்.

புதன் கிழமை காலையிலேயே மஹா தேவ குருக்களும்,மரகதமும் சாம்பசிவன் கொடுத்து ‘அட்ரஸ்ஸில்’ இருந்த வீட்டுக்கு வந்தார்கள்.சாம்பசிவன் அந்த புது வீட்டில் நிறைய பூவும்,வெத்திலை யும்,பாக்குப் பொட்டலங்களையும்.நாலு தேங்காய்,ரெண்டு சீப்பு வாழைப் பழம்,ஆறு ஆப்பிள்,ஒரு பால் ‘பாக்கெட்’ அரை கிலோ சக்கரை,எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு காத்துக் கொண்டு இருந்தான்.

மஹா தேவ குருக்களையும்,அவர் சம்சாரத்தையும் பார்த்தவுடன் சாம்பசிவன் ஓடிப் போய் “வாங்கோ வாங்கோ” என்று சொல்லி வரவேவேற்றான்.ரெண்டு பேரும் அந்த வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு “ஆம் ரொம்ப நன்னா இருக்கு” என்று சொன்னார்கள்.

மரகதம் அந்த வீட்லே இருந்த சுவாமி படத்துக்கு கிட்ட இருந்த குத்து விளக்கில் ஒரு பஞ்சுத் திரியைப் போட்டு நல்ல எண்ணையை விட்டு,அந்தக் குத்து விளக்கை ஏற்றீனாள்.ரெண்டு ஊதுவத் தியை கொளுத்தி வைத்தாள்.பிறகு சமையல் ரூமுக்குப் போய் ‘காஸை’ப் பத்த வைத்து,ஒரு பாத்திர த்தில் பால் ‘பாகெட்’டை,உடைத்துக் கொட்டி காய்ச்சினாள்.பால் காய்ந்ததும்,அந்த பாலை சுவாமிக்கு ‘நிவேதனம்’ பண்ணி விட்டு,மூன்று ‘டம்ளர்’களில் சக்கரையைப் போட்டு,ஆத்துக்காரருக்கும்,சாம்பசி வனுக்கும் குடிக்கக் கொடுத்து விட்டு,அவள் ஒரு ‘டம்ளர்’ பாலைக்  குடித்தாள்.

அந்த நேரம் பார்த்து வாத்தியார் வந்து விடவே,அவருக்கும் ஒரு ‘டம்ளா¢ல்’ பாலை விட்டு சக்கரையைப் போட்டுக் கொடுத்தாள் மரகதம்.வாத்தியார் அந்த பாலைக் குடித்து விட்டு,வீட்டுக்கு ஒரு ‘புண்யாவசனத்தை’ப் பண்ணீனார்.பிறகு அந்த ‘புண்யாவசன’ ஜலத்தை எல்லோருக்கும் கொடுத்து விட்டு,பிறகு வீடு பூராவும் தெளித்தார்.

சாம்பசிவன் அந்த வாத்தியாருக்கு வெத்திலைப் பாக்குடன்,ஒரு சீப்பு வாழைப் பழத்தையும் வைத்து,’தக்ஷணையையும்’ கொடுத்து அனுப்பினான்.

வாத்தியார் அந்த வெத்திலைப் பாக்கு,சீப்பு வாழைப் பழம் ‘தக்ஷணை’ எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு “நான் போயிட்டு வறேன்” என்று சொல்லி விட்டுப் போனார்.வாத்தியார் கிளம்பிப் போன ஐந்தாவது நிமிஷம் மஹா தேவ குருக்களும்,மரகதமும் சாம்பசிவனிடம் சொல்லிக் கொண்டு ஒரு ஆட்டோவிலே ஏறிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பி வந்தார்கள்.

வீட்டுக்கு வந்த மரகதம் காமாக்ஷ¢யைப் பார்த்து “காமு,மாப்பிள்ளை பாத்து இருக்கும் ‘ஆம்’ ரொம்ப நன்னா இருக்கு.அந்த ஆத்லே ரெண்டு ‘பெட் ரூமும்’,ஒரு சமையல் ‘ரூமும்’ ஒரு ‘ஹாலும்’ இருக்கு.அதேத் தவிர மாப்பிள்ளை அந்த் ஆத்லே ‘காஸ் கனெக்ஷனும்’ வாங்கி இருக்கார்.நீ கல்யா ணம் பண்ணீண்டு அந்த ஆத்துக்குப் போனா,சிரமம் ஒரு இல்லாம குடித்தனம் பண்ணீண்டு வரலாம்.அதேத் தவிர அந்த ‘ஆம்’ கோவிலுக்கு ரொம்ப பக்கமா வேறே இருக்கு” என்று சந்தோஷ மாகச் சொன்னாள்.

எல்லோரும் கிளம்பிப் போன பிறகு,சாம்பசிவன் சுவாமி படத்துக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,அந்த வீட்டை நன்றாகப் பூட்டிக் கொண்டு,தன் ரூமுக்குப் போனான்.

மஹா தேவ குருக்கள் தன் பெண் கல்யாணத்திற்கு சிதம்பரத்தில் இருந்த ஒரு பொ¢ய சத்திரத் தை ஏற்பாடு பண்ணி,சமையலுக்கும்,பூவுக்கும்,பழத்துக்கும்,கல்யாண தாம்பூல பைகளுக்கும் ஒரு பிரபலமான சமையல் காரா¢டம் ஒரு ‘கான்ராக்ட்’ கொடுத்தார்.

சத்திரம் ஏற்பாடு ஆனதும் குருக்கள் சிதம்பரத்திலே இருந்த ‘பிரிண்டிங்க் ப்ரஸ்ஸில்’ 100 கல்யாணப் பத்திரிக்கை அச்சடித்து,தன் உறவுக்காரர்களுக்கும்,நண்பர்களுக்கும் கொடுத்தார். சாம்பசிவனைப் பார்த்து “இந்தாங்கோ 25 கல்யான பத்திரிக்கை.நீங்கோ இந்த கல்யாண பத்திரிக்கை களை உங்க உறவுக்காரங்களுக்கும்,தொ¢ஞ்சவாளுக்கும் குடுங்கோ” என்று சொல்லிக் கொடுத்தார்.

மஹா தேவ குருக்கள் கொடுத்த கல்யாண பத்திரிக்கைகளை வாங்கிக் கொண்டான் சாம்பசிவன்.

வாத்தியாரைக் கேட்டு ஒரு நல்ல நாளாகப் பார்த்து மஹா தேவ குருக்களும்,மரகதமும் நகைக் கடைக்குப் போய் காமாக்ஷ¢க்கு காதுகளுக்கு வரைத் தோடும்,மூக்குக்கு வரை மூக்குத்தியையும்,வித விதமான ‘டிஸைன்களில்’ ஆறு ஜோடி தங்க வளையல்களும்,ஒரு நீள செயினும்,ஒரு குட்டி செயினும்  வாங்கினார்கள்.
அன்றே குருக்கள் தனக்கும்,மரகதத்துக்கும்,காமாக்ஷ¢க்கும் கல்யாணத்திற்கு வேண்டிய ஜவுளீகளை வாங்கினார்.

நல்ல விலை கிடைக்கவே,ரெண்டு ஏக்கர் நஞ்சை நிலத்தையும்,ரெண்டு ஏக்கர் புஞ்சை நிலத் தையும் விற்றார் ராமசாமி.விற்று வந்த பணத்தை அவர் கணக்கில் ‘பாங்க்லே’ போட்டு விட்டு வந்தார்.

ராமசாமியும் வாத்தியார் சொன்ன ஒரு நல்ல நாளில் ராதாவை அழைத்துக் கொண்டு போய் காமாக்ஷ¢க்கு கூரைப் புடவையையும்,மாங்கல்யமும் வாங்கி ஜாக்கிரதையாக வீட்டில் வைத்துக் கொண்டார்.
கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி வந்த சனி கிழமை அன்று சாம்பசிவன் சிவபுரிக்கு வந்தான்.அவன் வந்தவுடன் ராமசாமி “சாம்பசிவா,நல்ல விலை கிடைச்சதாலே நான் என் கிட்டே இருந்த ரெண்டு ஏக்கர் நஞ்சை நிலத்தையும்,ரெண்டு ஏக்கர் புஞ்சை நிலத்தையும் வித்துட்டேன்.இந்த ‘ஆம்’ ஒன்னு தான் விக்கணும்” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

கொஞ்ச நேரம ஆனதும் “சாம்பசிவா,நான் வாத்தியாரைக் கேட்டு ஒரு நல்ல நாளாப் பார்த்து, ராதாவை அழைச்சுண்டுப் போய் காமாக்ஷ¢க்கு கூரைப் புடவைடையும்,மாங்கல்யமும் வாங்கிண்டு வந்து ஜாக்கிறதையா வச்சுண்டு இருகேன்” என்று சொன்னதும்,சாம்பசிவன் ராதாவை ‘போன்லே’ ‘தாங்க்’ பண்ணீனான்.

சாம்பசிவன் “அப்பா குருக்கள் என் கிட்டே 25 கல்யாண பத்திரிக்கை களைக் குடுத்து,நம்ப உறவுக்காராளுக்கும்,தொ¢ஞ்சவாளுக்கும் தரச் சொன்னார்” என்று சொல்லி குருக்கள் கொடுத்த 25 கல்யாணப் பத்திரிக்கைகளைக் கொடுத்தான்.

உடனே ராமசாமி சாம்பசிவனைப் பார்த்து “சாம்பசிவா,நமக்கு மனுஷா ரொம்ப கம்மி.நாம வேறே தனியா உன் கல்யாணப் பத்திரிக்கையே அச்சடிக்க வேணாம்.குருக்கள் குடுத்து இருக்கற இந்த பத்திரியையே நமக்குத் தொ¢ஞ்சவாளுக்கு குடுத்துடலாம்” என்று சொன்னதும் “சா¢ப்பா” என்று சொன்னான் சாம்பசிவன்.
கொஞ்ச நேரம் ஆனதும்”அடுத்த வாரதுக்குள்ளே,இந்த ஆத்தையும் வித்துட்டு நீங்கோ ரெடியா இருங்கோ.நான் அடுத்த வாரம் வரும் போது என் கூடவே நீங்கோ சிதம்பரத்துக்கு வந்து என் கூடவே தங்கி இருங்கோ.எனக்கு கல்யாணம் வர புதன் கிழமை.என் கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு.அதுக்குள்ளே நீங்கோ இந்த ஆத்தே விக்க ‘ட்ரை பண்ணி, ரெடியா இருந்து வாங்கோ” என்று சொன்னான் சாம்பசிவன்.

“சா¢,சாம்பசிவா.நீ அடுத்த வாரம் சனிக் கிழமை அன்னிக்கு வறதுக்குள்ளே,நான் இந்த ஆத் தை வித்துடறேன்.நான் உன்னோடவே கிளம்பி சிதம்பரம் வந்து உன்னோடவே தங்கி இருக்கேன். உனக்கு சந்தோஷமா” என்று கேட்டார் ராமசாமி.

உடனே சாம்பசிவன் “ரொம்ப சந்தோஷம்ப்பா.அப்பா நாம இந்த சமாசாரத்தே அக்கா அத்திம்பேர், அவ மாமாமார்,மாமியார் கிடே எல்லாம் சொலிட்டு வந்துடளாம்” என்று சொன்னதும் ராமசாமி “ஆமாம் சாம்பசிவா.வா அவா ஆத்துக்குப் போய் சொல்லிட்டு,கல்யாண பத்திரிக்கையையும் குடுத்து ட்டு வரலாம்”என்று சொல்லி விட்டு எழுந்துக் கொண்டார்.

சாம்பசிவனுடன் கூட ராதா வீட்டுக்குப் போனார் ராமசாமி.ரெண்டு பேரையும் ஒன்றாகப் பார் த்த கணேசன் “வாங்கோ,வாங்கோ.சாம்பசிவா என்னிக்கு உன் கல்யாண தேதியே வச்சு இருக்கார், உன் வருங்கால மாமனார்” என்று கேட்டார்.

பிறகு ராமசாமியயைப் பார்த்து “குருக்கள் பொண்ணு ரொம்ப நன்னா இருக்கான்னு ராதா சொன்னா.அவ ரொம்ப நன்னா பாடறாளாமே.அவா அம்மா கிட்டே இருந்து நிறைய ‘ஸ்லோகங்கள்’ கூட கத்துண்டு இருக்காளாமே.குருக்கள் ஆத்து பொண்ணாச்சே.அவளுக்கு நிச்சியமா அவ அம்மா நிறைய ‘ஸ்லோகங்களை’க் கத்து குடுத்து இருப்பா.உங்களுக்கு அந்தப் பொண்ணே பிடிச்சி இருக்கா” என்று கேட்டார் கணேசன்.

உடனே ராமசாமி” எனக்கும் ரொம்ப பிடிச்சி இருக்கு.சாம்பசிவனுக்கு அந்தப் பொண்ணே பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டான்.அந்தப் பொண்ணுக்கும்,அவா அம்மாவுக்கும் ரொம்ப தெய்வ பக்தி இருக்கு.அதான் அத்தனை ‘ஸ்லோகங்கள்’ தொ¢ஞ்சுண்டு இருக்கா.அந்த ‘ஸ்லோகங்களே’அவ பொண்ணுக்கும் சொல்லிக் குடுத்து இருக்கா.இவா கல்யாணத்தே ஐப்பசி மாசம் முப்பதாம் தேதி புதன் கிழமை அன்னிக்கு வச்சு இருக்கார் மஹா தேவ குருக்கள்.இந்தாங்கோ அவர் குடுத்த கல்யாணப் பத்திரிக்கை” என்று சந்தோஷமாகச் சொல்லி விட்டு கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்தார்.

கொஞ்ச நேரமானதும் ராமசாமி “நான் என் கிட்டே இருந்த எல்லா நஞ்சை நிலங்களையும், புஞ்சை நிலங்ககளையும் நல்ல விலைக்கு வித்துட்டேன்.’ஆம்’ ஒன்னு தான் இருக்கு.அதே இந்த வாரத்லே வித்துட்டுவர சனிக் கிழமை சாம்பசிவனோட சிதம்பரம் போயிருந்துண்டு வரலாம்ன்னு இருக்கேன்.சாம்பசிவன் என் கிட்டே மூனு வாரமா ரொம்ப பிடிவாதம் பிடிச்சுண்டு வரான்.நான் வர மாடேன் சொன்னா அழறான்.அவனை மீறி என்னால் ஒன்னும் பண்ண முடியலே” என்று சொன்னார்.

உடனே கணேசனும்,கமலாவும் “சாம்பசிவன் பிடிவாதம் பிடிச்சது ‘சா¢’ன்னு தான் எங்களுக்குப் படறது.நீங்கோ பத்மா போன பிறகு பாவம் தனியா சமைச்சு சாப்பிட்டு வந்துண்டு இருக்கேள்.சாம்பசி வனுக்கு கல்யாணம் ஆயிட்டா,நீங்கோ சமைக்க வேணாமே.மாட்டுப் பொண்ணு சமைக்கற சாப்பாட் டை சாப்பிட்டுண்டு வந்து சந்தோஷமா,பிள்ளை மாட்டுப் பொண்ணோட இருந்துண்டு வாங்களேன். நீ£ங்கோ இத்தனை வருஷமா தனியா சமைச்சிண்டு வந்து சாப்பிட்டது போதுமே” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

“நீங்கோ சொல்றது நியாயமானது தான்.நானும் அதே நினைச்சி இந்த முடிவைப் பண்ணீ இரு க்கேன்.எனக்கும் வயசாயிண்டு இருக்கு.இனிமே கொஞ்சம் நிம்மதி வேணும் நேக்கு.நீங்க எல்லாரும் செவ்வாய் கிழமைக் காத்தாலேயே கல்யாண சத்திரத்துக்கு வந்துடுங்கோ”என்று சொன்னார் ராமசாமி.

பிறகு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு,ராமசாமியும் சாம்பசிவனும் அவர்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சாம்பசிவன் அப்பாவுடன் உட்கார்ந்துக் கொண்டு சாப்பீட்டு விட்டு,ஒரு ‘மினி பஸ்’ ஏறி சந்தோஷமாக சிதம்பரம் வந்து சேர்ந்தான்.

ரெண்டு நாள் ஆனதும் ராமசாமி தான் இருந்து வந்த வீட்டை ஒரு நல்ல விலைக்கு விற்றார். ராமசாமி அந்த வீட்டை வாங்கினவர் இடம் “நான் இந்த வீட்டில் ஒரு ஐஞ்சு நாள் இருந்துட்டு, இந்த சனிகிழமை என் பையன் வந்ததும்,அவனோடு நான் சிதம்பரம் கிளம்பிப் போகும் போது, இந்த வீட்டைக் காலி காலி பண்ணித் தறேன்.நீங்கோ எனக்கு ஒரு அஞ்சு நாள் இந்த வீட்லே இருந்து வர  ‘டயம்’ தர முடியுமா” என்று கேட்டதும்,வீட்டை வாங்கினவர் சந்தோஷமாக ஒத்துக் கொண்டு “நீங்க அஞ்சு நாள் கழிச்சு வீட்டே குடுங்க சாமி” என்று சொன்னார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *