அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 2,432 
 
 

அத்தியாயம்-7 | அத்தியாயம்-8 | அத்தியாயம்-9

மஹா தேவ குருக்களும் மரகதமும் ‘பஸ் ஸ்டாண்டு’க்கு வந்து சிதம்பரம் போகும் ‘மினி பஸ்ஸூ’ காக’க் காத்துக் கொண்டு இருந்தார்கள்.”நான் அந்த மாமா கிட்டே‘இந்த சம்மந்தம் சுபமா முடியற வரைக்கும் நாங்க உங்க ஆத்லே கையே நனைக்க ஆசைப் படலே.எங்களே தப்பா எடுத்துக்காதீங்கோ’ ன்னு சொன்னேன்.அந்த மாமாவேப் பாத்தா ரொம்ப நல்லவரா இருந்தார்.எனக்கு எப்படியாவது இந்த சம்மந்தம் அமையணுமேன்னு நினைச்சுத் தான்,நம்ம பெரியவா எல்லாம் பண்ணீ வந்த பழக்க த்தே சொன்னேன்” என்று சொல்லி விட்டு மஹா தேவ குருக்கள் முகத்தைப் பார்த்தாள்.

மஹா தேவ குருக்கள் ஒரு புன் சிரிப்பு சிரித்துக் கொண்டு இருந்தார்.

“சிரிக்காதேள்.நீங்கோ என்னவோ உடனே ‘இந்தப் பழக்கம் எல்லாம் ரொம்ப சரியே இல்லே. என்னமோ அந்த காலத்லே இருந்தது இந்த பழக்கம்.இவ இன்னும் அதே பண்ணீண்டு வறா’ன்னு என்னை அந்த மாமா எதிரே விட்டுக் குடுத்து இருகேளே.நீங்கோ பண்ணது ரொம்ப தப்பு.நேக்கு ரொம்ப கோவம் வந்தது.வந்த இடத்லே ‘ரசா பாசம்’ வேணம்ன்னு நான் ‘கம்’முன்னு இருந்தேன்” என்று சொன்னாள்.

உடனே மஹா தேவ குருக்கள்” மரகதம்,நான் ஏன் அப்படி சொன்னேன்னா,நீ சொன்னதேக் கேட்டு அந்த மாமா “இந்த குருக்களும்,அவர் சம்சாரமும் சுத்த பழங்காலத்து மனுஷாளா இருக்காளே. இவா சம்மந்தம் நமக்கு வேணாம்ன்னு சொல்லிடப் போறாறேன்னு பயந்து தான் அப்படி சொல்லி சமாளிச்சேன்.ஆனா கடைசியிலே அந்த மாமா ‘நான் எதையுமே தப்பா எடுத்துக்க மாட்டேன்.என் சுபாவம் அப்படி. நீங்கோ உங்க ஆத்து வழக்கப் படியே பண்ணுங்கோ’ன்னு சொன்னப்ப,நான் சொல்லி இருக்க வேணாமோன்னு எனக்குத் தோனித்து.ஆனா நீ என்னே கோவமா பாத்தே.நான் அதே கண்டுக்காம சும்மா இருந்து விட்டேன்” என்று சொன்னார்.

கணவர் நல்ல எண்ணத்தில் சொன்னார் என்று தெரிந்ததும் “நாம ரெண்டு பேரும் இந்த சம்மந்தம் நல்ல விதமா அமையணுமேன்னு தான் சொல்லி இருக்கோம்.ரெண்டு பேர் சொன்னதிலும் ஒரு அர்த்தம் இருக்கு” என்று சொன்னதும் குருக்கள் நிம்மதி அடைந்து “ஆமாம் மரகதம்” என்று சொன்னார். ‘மினி’ பஸ் வந்ததும் இருவரும் அந்த ‘பஸ்’ ஏறி சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள்.

வீட்டுக்கு வந்ததும் “காமாக்ஷி,அந்தப் பையனோட அப்பா ரொம்ப நல்ல மாதிரி பேசினார். அவர் பையனோட ஜாதகத்தே சுவாமி பாதத்லே வச்சுட்டு,வேண்டிண்டு வந்து அப்பா கையிலேக் குடுத்துட்டு,உன் ஜாதகத்தே மறுபடியும் சுவாமி பாதத்லே வச்சார்.’நீங்கோ ஜாதகப் பொருத்தம் பாருங்கோ.நானும் பாக்கறேன்.அந்த நடராஜர் அனுக்கிரஹம் இருந்தா இவா ரெண்டு பேர் கல்யா ணமும் நடக்ககட்டுமே’ன்னு சொன்னார்.அப்புறமா எங்களேப் பாத்து ‘ஜாக்கிரதையா போய் வாங்கோ’ ன்னு சொல்லி வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்பினார்” என்று சந்தோஷமாகச் சொன்னாள் மரகதம்.மஹா தேவ குருக்கள் மரகதம் சொன்னது போதும் என்று நினைத்து சும்மா இருந்தார்.

அந்த சனிக் கிழமை சாயங்காலம் சாம்பசிவன் வந்ததும் வராததுமாய் ராமசாமி மஹாதேவ குருக்களும்,அவர் சம்சாரமும் வந்த விஷயத்தையும்,ஜாதகப் பரிவர்த்தணைப் பண்ணிக் கொண்ட சமாசாரத்தையும் சொன்னார்.”நான் தான்ப்பா குருக்கள் கிட்டே நம்மாத்து விலாசத்தேக் குடுத்து, உங்களே வந்து பாக்கச் சொன்னேன்” என்று சொன்னான் சாம்பசிவன்.

“நீ தான் அவாளுக்கு என் விலாசத்தேக் குடுத்து இருப்பேன்னு எனக்குத் தெரியும்.இல்லாட்டா அவாளுக்கு என் விலாசம் எப்படி தெரிஞ்சு இருக்கும்” என்று சொன்னார் ராமசாமி.

சாப்பிட்டுக் கொண்டே ராமசாமி “சாம்பு,குருக்களும்,அவர் சம்சாரமும் பாக்க ரொம்ப ‘சிரேஷட மான’க் குடும்பத்தே சேந்தவா மாதிரி நேக்குத் தோண்றது.ஜாதகப் பொருத்தம் நன்னா இருந்தா,நீ அவா பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ.அந்தப் பொண்ணு அவாளுக்கு ஒரே பொண்னாம். பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம்.அவா குடும்பமும் ஒரு குருக்கள் குடும்பம் தான்.அதனால்லே அந்தப் பொண்ணு உனக்கு ஏத்தவளா இருபோன்னு நான் நினைக்கிறேன்.நீ என்ன சொல்றே” என்று கேட்டார்.

சாம்பசிவன் பவ்யமாக “அப்பா,இந்த நாள் வரைக்கும் நீங்கோ எதே சொல்லி நான் பண்ணாம இருந்து வந்து இருக்கேன் சொல்லுங்கோ.உங்களுக்கு அவா குடும்பத்தே பிடிச்சி இருந்தா சரி. எனக்கும் பிடிச்சா மாதிரி தான்“ என்று சொல்லி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

சாப்பிட்டு விட்டு “அப்பா,நான் அக்காவையும் அத்திம்பேரையும் பாத்துட்டு சிதம்பரம் கிளம்பிப் போறேன்.அடுத்த வாரம் மறுபடியும் நான் வந்து உங்களேப் பாக்கறேன்” என்று சொல்லி விட்டு சாம்பசிவன் அக்காவையும்,அத்திம்பேரையும் பார்த்து விட்டு ஒரு ‘மினி பஸ்’ஸில் வந்துக் கொண்டு இருந்தான்.

‘பஸ்ஸில்’ உட்கார்ந்துக் கொண்ட சாம்பசிவன் மனம் ஆகாயத்தில் பறந்துக் கொண்டு இருந்தது.

‘நம்ம அப்பாவுக்கு மஹா தேவ குருக்கள் குடும்பத்தை ரொம்ப பிடிச்சி இருக்கு.ஜாதகங்கள் நன்னா பொருந்தி இருந்தா நமக்கு நிச்சியமா இந்தக் கல்யாணம் நடந்து விடும்.நாமும் காலா காலத்லே ஒரு கல்யாணத்தே பண்ணீண்டு வாழக்கையிலே சீக்கிரமா ‘செட்டில்’ ஆயிடலாம்’என்று மனக் கோட்டை கட்டி வந்தான்.

‘மினி பஸ்’ சிதம்பரம் வந்து சேரவே சாம்பசிவன் பஸ்ஸை விட்டு கீழே இறங்கி தன் ரூமு’க்கு வந்தான்.

அந்த வாரமே ராமசாமி அவர் வீட்டு வாத்தியாரைக் கூப்பிட்டு ரெண்டு பேருடைய ஜாதகப் பொருத்தம் பார்க்கச் சொன்னார்.வாத்தியார் ரெண்டு ஜாதங்ககளையும் ஒரு அரை மணி நேரம் நன்றாகப் பார்த்து விட்டு “ரெண்டு ஜாதகமும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்கு.பத்துப் பொருத்த த்திலே ஒன்பது பொருத்தம் இருக்கு இந்த ரெண்டு ஜாதகத்திலும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

ராமசாமி சந்தோஷப் பட்டு “ரொம்ப சந்தோஷம் வாத்தியார்” என்று சொல்லி விட்டு வாத்தியா ருக்கு ‘தக்ஷணையை’க் கொடுத்து அனுப்பினார்.

மஹா தேவ குருக்களும் அவர் வீட்டு வாத்தியாரை வீட்டுக்குக் கூப்பிட்டு,ரெண்டு ஜாதகங்க ளையும் அவர் கையிலேக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னார்.ரெண்டு ஜாதகதங்களையும் கையிலே வாங்கிக் கொண்டு,தன் பையிலே இருந்த பஞ்சாங்கத்தை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு,தன் மூக்குக் கணாடியைப் போட்டுக் கொண்டார்.

மரகதமும்,காமாக்ஷியும் ‘வாத்தியார் ரெண்டு ஜாதங்களையும் பார்த்து விட்டு என்ன சொல்லப் போறார்’ என்று அவர் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வாத்தியார் “குருக்கள்ளே,ஒரு வெள்ளைக் காகிதத்தையும்,பேனாவையும் சித்தே குடுங்கோ” என்று கேட்டார்.குருக்கள் காகிகத்தையும் பேணாவையும் குடுத்தவுடன்,அதிலே நிறைய கூட்டல், கழித்தல் எல்லாம் போட்டுப் பார்த்தார்.

ஒரு அரை மணி நேரம் கழித்து “குருக்கள்வாள்,ரெண்டு ஜாதகமும் ரொம்ப நன்னாப் பொருந்தி இருக்கு.நீங்கோ பேஷா இவா ரெண்டு பேருக்கும் கல்யாணத்தேப் பண்ணி வக்கலாம்.ரெண்டு பேரும் அமோகமகா இருந்து வருவா” என்று சொல்லி விட்டு தன் மூக்குக் கண்னாடியை கழட்டி, ‘கண்னாடி கேஸில்’ வைத்து விட்டு,பஞ்சாங்கத்தை மூடினார்.

வாத்தியார் சொன்னதைக் கேட்ட மரகதமும் காமாக்ஷியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள். மஹா தேவ குருக்கள் சந்தோஷப் பட்டு வாத்தியாருக்கு ‘தக்ஷனையை’க் கொடுத்து அனுப்பினார்.

வாத்தியார் கிளம்பிப் போனதும் மஹதேவ குருக்கள் மரகத்ததையும்,காமாக்ஷியையும் பார்த்து “ஆத்து வாத்தியார் ரெண்டு ஜாதகங்களும் நன்னா பொருந்தி இருக்கு ‘நீங்கோ பேஷா இவா ரெண்டு பேருக்கும் கல்யாணத்தேப் பண்ணி வக்கலாம்.ரெண்டு பேரும் அமோகமகா இருந்து வருவா’ன்னு சொல்லிட்டார்.நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ”இந்த சந்தோஷ சமாசாரத்தே,மறுபடியும் சிவபுரிக்குப் போய் சொல் லிட்டு,அந்த மாமாவையும் சாம்பசிவனையும் ஒரு நல்ல நாளாப் பாத்து காமாக்ஷியைப் பொண்ணு பாக்க வரச் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்.நீங்கோ ரெண்டு பேரும் என்ன சொல்றேள்” என்று கேட்டார் மஹா தேவ குருக்கள்.

“இதிலே நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு.நீங்கோ சொன்னா மாதிரியே பண்ணலாம்.சுப காரியங்களே எல்லாம் ‘சட்டு’,’புட்டு’ன்னு பண்ணனும்.’சுபஸ்ய சீக்கிரம்’ன்னு பெரியவா சொல்லி இருக்கா.இதே நான் சொல்லி உங்களுக்குத் தெரியணும் என்கிறது இல்லே” என்று சொன்னாள் மரகதம்.அப்பா, அம்மா பேசுவதைக் கேட்ட காமாக்ஷி சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தாள்.

இரண்டு நாள் கழித்து, ஒரு நல்ல முஹ¥ர்த்த நாளாகப் பார்த்து மஹா தேவ குருக்களும், மரகதமும் ஒரு ‘மினி பஸ்’ ஏறிசிவபுரிக்குப் போனர்கள்.

சுவாமியை வேண்டிக் கொண்டு குருக்கள் ராமசாமி வீட்டின் கதவைத் தட்டினார்.

ராமாசமி கதவைத் திறந்து குருக்களையும்,அவர் சம்சாரத்தையும் பார்த்து “வாங்கோ,வாங்கோ” என்று சொல்லி வரவேற்று அவர்களை சோ¢ல் உட்காரச் சொன்னார்.இருவரும் ராமசாமி காட்டின சேர்களில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.

ராமசாமி ஹாலில் இருந்த ‘பானை’ப் போட்டார்.

மஹாதேவ குருக்கள் ராமசாமியைப் பார்த்து “எங்க ஆத்து வாத்தியார் ரெண்டு ஜாதகங்ககளும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னார்.நீங்கோ ஜாதகப் பொருத்தம் பாத்தேளா.உங்க ஆத்து வாத்தியார் என்ன சொன்னார்” என்று பயந்துக் கொண்டே கேட்டார்.

ராமசாமி “நான் ரெண்டு ஜாதங்ககளையும் எங்க ஆத்துக்கு வாத்தியார் கிட்டேக் காட்டினேன். அவரும் ரெண்டு ஜாதங்ககளும் நன்னா பொருந்தி இருக்குன்னு தான் சொன்னார்” என்று சொல்லி நிறுத்தினார்.

“நேக்குக் கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.ரெண்டு ஆத்து வாத்தியாரும் ஜாதங்ககள் நன்னா ஒத்துண்டு இருக்குன்னு சொல்லிட்டா.நீங்கோ ஒரு நல்ல நாளாப் பாத்து,உங்க பொண் ணையும், மாப்பிள்ளேயையும்,பையனையும் அழைச்சுண்டு சிதம்பரம் வந்து,எங்க ஆத்துக்கு வந்து
எங்க பொண்ணு காமாக்ஷியை ‘பொண்ணுப் பாக்கணும்” என்று தன் கைகளைக் கூப்பிக் கொண்டு கேட்டுக் கொண்டார் மஹா தேவ குருக்கள்.

“உங்க பையனே எங்க ஆத்துக்காரருக்கு ரொம்பப் பிடிச்சு இருக்கு.நீங்கோ எல்லாரும் ஒன்னா வந்து பாக்கற வேளை எங்க காமாக்ஷியே உங்க எல்லாருக்கும் பிடிச்சு,அவளுக்கு சுபமா கல்யாணம் ஆகணும்.அந்த அம்பாள் அனுக்கிரஹம் அருள் புரியணும்” என்று சொல்லி அம்பாளை வேண்டிக் கொண்டாள் மரகதம்.

உடனே ராமசாமி “உங்க ஆத்துக்கார் தான் முப்பது வருஷத்துக்கு மேலேயே அந்த நடராஜரு க்கு தினமும் அபிஷேகம் பண்ணீ,அலங்கரம் எல்லாம் பண்ணி, நிவேதனம் பண்ணீ கற்பூரம் காட்டி வந்துண்டு இருக்காரே.அந்த பகவான் காரியம் எல்லாம் வீண் போகவே போகாது. நீங்கோஆசைப் படறா மாதிரி எல்லாம் நலலபடியா முடிஞ்சி,உங்க பொண்ணுக்கும், என் பையனுக்கும் கல்யாணம் ‘ஜாம்’ ‘ஜாம்’ன்னு நடக்கும்.நீங்கோ கவலையே படாம இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னார்.

மஹா தேவ குருக்களும்,மரகதமும் “ரொம்ப சந்தோஷம் மாமா.உங்க வாய் முஹ¥ர்த்தம் பலிச்சு அவா ரெண்டு பேருக்கும் சுபமா கல்யாணம் சீக்கிரமா நடக்கணும்” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

மஹ தேவ குருக்கள் “வர புதன் கிழமை நாள் ரொம்ப நன்னா இருக்கு.பொன் கிடைச்சாலும் கிடைக்கும் புதன் கிடைக்காதுன்னு’ சொல்லுவா பெரியவா.அன்னிக்கு நீங்கோ உங்க பொண்ணு, மாப்பிள்ளை யையும்,பையனையும் அழைச்சுண்டு எங்க ஆத்துக்கு வந்து என் பொண்ணேப் பாருங்கோ” என்று சொன்னதும் ராமசாமி “நாங்க அப்படியே செய்யறோம்.என் பையன் இந்த வர சனி கிழமை வரும் போது நான் அவன் கிட்டே சொல்லிட்டு மத்த ஏற்பாடுகளை எல்லாம் பண்ணச் சொல்றேன்”என்று சொன்னார்.

“ரொம்ப சந்தோஷம்.இப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்” என்று சொல்லி எழுந்தார் மஹா தேவ குருக்கள்.தன் கணவர் எழுந்ததும் மரகதமும் எழுந்துக் கொண்டாள்.இருவரும் ராமசாமி இடம் சொல்லிக் கொண்டு சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள்.

அந்த சனிக் கிழமை சாம்பசிவன் அப்பாவைப் பார்க்க வந்த போது ராமசாமி “சாம்பசிவா குருக்க ளும்,அவர் சம்சாரமும் இங்கே வந்து இருந்தா.அவா வாத்தியார் ரெண்டு ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னாராம்.நம்ப வாத்தியாரும் ரெண்டு ஜாதங்கககளும் நன்னா பொருந்தி இருக்கு ன்னு சொன்னார்.வர புதன் கிழமை என் கிட்டே,உன்னையும்,ராதாவையும்,மாப்பிள்ளையையும் அழைச்சுண்டு அவா ஆத்துக்கு வந்து அவா ‘பொண்ணேப் பாக்க’ வர சொன்னா.நான் ராதாவையும், மாப்பிள்ளையையும் அழைச்சுண்டு ‘மினி பஸ்’ ஏறி ஒரு மூனு மணிக்கா சிதம்பரம் வறேன்.நீ ‘பஸ்’ ஸ்டாண்டுக்கு வந்து,எங்களே குருக்கள் ஆத்துக்கு அழைச்சுண்டு போ.எங்களுக்கு குருக்கள் ‘ஆம்’ தெரியாது.மறக்காம ‘பஸ் ஸ்டாண்டுக்கு’வந்து எங்களே அவா ஆத்துக்கு அழைச்சு ண்டு போ” என்று சொன்னார்.

உடனே சாம்பசிவன் “சரிப்பா,நான் சிதம்பரம் ‘பஸ்’ ஸ்டாண்டுக்கு’ வந்து உங்களே எல்லாம் மஹா தேவ குருக்கள் ஆத்துக்கு அழைச்சுண்டு போறேன்.நீங்கோ கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னான்.

ராமசாமி சாம்பசிவனைப் பார்த்து “சாம்பு,நாம ரெண்டு பேருமா ராதா ஆத்துக்குப் போய், உன் கல்யாண சமாசாரத்தே எல்லோருக்கும் விவரமா சொல்லிட்டு,ராதாவையும்,அவ ஆத்துக்காரரையும், வர புதன் கிழமை மத்தியானம் ரெண்டு மணிக்கு என் ஆத்துக்கு வர சொல்லணும்.வா,அந்த மாமா, மாமி கிட்டே சொல்லிட்டு வர அவா ஆத்துக்குப் போயிட்டு வரலாம்” என்று சொன்னார்.

”சரிப்பா,நாம இப்பவே கிளம்பலாம்.அவா கிட்டே சொல்லிட்டு,நான் ஆத்துக்கு வந்து சாப்பிட்டு விட்டு சிதம்பரம் கிளம்ப ‘டயம்’ சரியா இருக்கும்” என்று சாம்பசிவன் சொன்னதும்,ராமசாமி சாம்பசிவ னை அழைத்துக் கொண்டு ராதா வீட்டுக்குப் போனார்.

ராமசாமியையும் சாம்பசிவனையும் பார்த்த கணேசன் “வாங்கோ,வாங்கோ எங்கே இவ்வளவு தூரம்”என்று கேட்டு விட்டு இந்த ‘சோபா’விலே உக்காருங்கோ” என்று சொல்லி அவர்கள் வீட்டு ‘சோபாவை’க் காட்டினார்.

ராமசாமியும் சாம்பசிவனும் ‘சோபாவி’லே உட்கார்ந்துக் கொண்டார்கள்.

”எல்லாம் நல்ல சமாசாரம் தான்.போன வாரம் சிதம்பரத்தில் இருந்து நடராஜர் கோவில்லே குருக்களா வேலே பண்ணீண்டு வர மஹாதேவ குருக்களும் அவர் சம்சாரமும்….”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது கணேசன் “யார் மஹாதேவ குருக்களா.அவரே நேக்கு நன்னாத் தெரியும். அவரா உங்க ஆத்துக்கு அவர் சம்சாரத்தோடு வந்து இருந்தார்.என்ன விஷயம்.அவர் முப்பது வருஷ மா சிதம்பரம் கோவில்லே குருக்களா இருந்துண்டு வறாறே” என்று கேட்டார்.

உடனே ராமசாமி “உங்களுக்கு அவரை எப்படி தெரியும்” என்று ஆச்சரியமாகக் கேட்டார் ராமசாமி.

“சுந்தரத்துக்கு கல்யாணம் ஆன மறு வாரமே நானும் கமலாவும் சிதம்பரத்துக்குப் போனோம். சிதம்பரத்லே என்னோட ஒன்னு விட்ட பெரியப்பா பையன் சிதம்பரம் நடராஜர் கோவிலிலே வரவு செலவு பாக்கற உத்யோகம் பண்ணீண்டு வந்துண்டு இருந்தான்.நான் அவன் கிட்டே’வாசு,சிதம்பரம் நடராஜர் கோவில்லே இவா ரெண்டு பேரைச் சொல்லி ஒரு ‘அபிஷேகம்’ பண்ணனும்.நீ கொஞ்சம் அங்கே இருக்கற ஒரு நல்ல குருக்கள் கிட்டே சொல்லிப் பண்ணச் சொல்றயா’ன்னு கேட்டப்ப,அவன் உடனே என்னேப் பாத்து ‘வாங்கோண்ணா,நான் அந்த கோவில்லே இருக்கற பெரிய குருக்களேப் பாத்து அபிஷேகத்தேப் பண்ண சொல்றேன்’ன்னு சொல்லி விட்டு,எங்களே அழைச்சிண்டுப் போய் மஹா தேவ குருக்கள் கிட்டே போய்,எங்களே அறிமுகப் படுத்தினான்.அவர் எங்களே மூலக் கிரஹத் துக்குள்ளேயே அழைச்சுண்டு போய் சுந்தரம்,ராதா ரெண்டு பேர் பேரையும் சொல்லி,அபிஷேகத்தைப் பண்ணீ,நிறைய பிரசாதததையும் குடுத்தார்” என்று சொன்னார் கணேசன்.

“நீங்கோ அவரேப் பாத்துப் பேசி இருக்கேள்ன்னு கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு”என்று சொன்னார் ராமசாமி.

கொஞ்ச நேரம் ஆனதும் “அவரும் அவர் சம்சாரமும் எங்காத்துக்கு வந்து கொஞ்ச நேரம் பேசிண்டு இருந்து விட்டு,அவா பொண்ணு ஜாதகத்தே என் கிட்டே குடுத்துட்டு,சாம்பசிவன் ஜாதக த்தே வாங்கிண்டு ‘நான் அவா ரெண்டு பேருடைய ஜாதகப் பொருத்தம் பாக்க சௌகியரியமா இருக் கும்’ன்னு சொல்லிட்டுப் போனார்.நான் எங்க ஆத்து வாத்தியார் கிட்டே ஜாதகங்களைக் குடுத்து பொருத்தம் பாக்கச் சொன்னேன்.அவர் ‘ரெண்டு ஜாதகங்ககளும் நன்னா பொருந்தி இருக்கு’ ன்னு சொல்லிட்டுப் போனார்.நேக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது” என்று சொன்னார் ராமசாமி.

கொஞ்ச நேரம் ஆனதும் ”இந்த வாரம் குருக்களும்,அவர் சம்சாரமும் எங்க ஆத்துக்கு வந்து ‘ரெண்டு ஜாதகங்ககளும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்கு.வர புதன் கிழமை நாள் ரொம்ப நன்னா இருக்கு.அன்னிக்கு நீங்கோ உங்க பொண்ணு,மாப்பிள்ளையையும்,பையனையும் அழைச்சுண்டு எங்க ஆத்துக்கு வந்து என் பொண்ணேப் பாருங்கோ”ன்னு சொல்லிட்டுப் போனா.அதனால்லே நீங்கோ கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ராதாவையும்,மாப்பிள்ளையையும் வர புதன் கிழமை ஒரு ரெண்டு மணிக்கா எங்காத்துக்கு அனுப்ப முடியுமா”என்று கேட்டார் ராமசாமி.

“நேக்குக் கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.மஹா தேவ குருக்கள் உங்களுக்கு சம்மந்தி யாகப் போறாரா.அவர் குடும்பம் ரொம்ப ‘ஸ்ரேஷ்டமான’ குடும்பம்.சாம்பசிவனுக்கு போன ஜென்மத் லே பண்ன புண்ணீயம் தான்,எல்லாம் நல்ல படியா அமைஞ்சுண்டு வறது” என்று சொல்லி சந்தோஷ ப் பட்டார் கணேசன்.

“நான் நிச்சியமா அவா ரெண்டு பேரையும் உங்காத்துக்கு மத்தியானமா ஒரு ரெண்டு மணிக்கு அனுப்பி வக்கறேன்.நீங்கோ எல்லாம் மஹா தேவ குருக்கள் பொண்ணேப் பாத்து உங்க எல்லாருக்கும் அந்தப் பொண்ணேப் பிடிச்சி இருந்து,அந்தப் பொண்ணுக்கும் சாம்பசிவனைப் பிடிச்சி, இந்தக் கல்யா ணம் நல்ல படியா நடக்கணும்” என்று சந்தோஷமாகச் சொன்னார் கணேசன்.

உடனே ராமசாமி “உங்க வாய் முஹ¥ர்த்தம் பலிச்சி,சாம்பசிவன் கல்யாணம் மஹாதேவ குருக்கள் பொண்ணோட நல்ல படியா நடக்கணும்.அப்படி நடந்துடுத்துன்னா என்ன விட இந்த ‘லோகத்லே’ சந்தோஷப் படறவா யாரும் இருக்க மாட்டா.பத்மாவும் என்னே விட்டுட்டு போயிட்டாளே, எப்படி சாம்பசிவனுக்கு ஒரு நல்லப் பொண்ணாப் பாத்து கல்யாணத்தேப் பண்ணப் போறோம்ன்னு நான் தினமும் கவலைப் பட்டுண்டு வந்துண்டு இருந்தேன்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்சம் நேரம் ஆனதும் “தினமும் அந்த சுவாமியே வேண்டிண்டு வந்துண்டு இருந்தேன். நீங்கோ சொன்னா மாதிரி சாம்பசிவன் போன் ஜென்மத்லே பண்ணி இருக்கற புண்ணீயம் தான்,மஹா தேவ குருக்களையும்,அவர் சம்சாரத்தையும் எங்காத்துக்கு வர வழைச்சு,அவர் பொண்ணே சாம்பசிவ னுக்கு கல்யாணம் பண்ணீக் குடுக்க ரொம்ப ஆசைப் படறோம்ன்னு சொல்ல வச்சு இருக்கு.இல்லை யா சொல்லுங்கோ” என்று சொன்னார் ராமசாமி தன் கண்களைத் துடைத்துக் கொண்டே.

“நிச்சியமா.அந்த மாதிரி புண்ணீயம் சாம்பசிவன் போன் ஜென்மத்லே பண்ணி இருக்கணும். எல்லாருக்கும் அந்த மாதிரி ஒரு ‘ஸ்ரேஷடமான’ குருக்களும்,அவர் சம்சாரமும் உங்க ஆத்துக்கு சம்மந்தம் பேச வரப் பாக்கியம் இருக்கவே இருக்காது” என்று கணேசன் சொல்லி சந்தோஷப் பட்டார்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ராமசாமியும்,சாம்பசிவனும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

சாம்பசிவன் ராத்திரி அப்பாவோடு சாப்பீட்டு விட்டு,சிதம்பரம் கிளம்பிப் போனான்.

புதன் கிழமை மத்தியானம் ரெண்டு மனிக்கு ராதாவும்,சுந்தரமும், நிறைய பூ,தேங்காய் வெத்திலைப் பாக்கு,ஒரு சீப்பு வாழைப் பழம்,ஆறு ஆப்பிள் பழம்,ஆறு ஆரஞ்சுப் பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு ராமசாமி வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டில் ரெடியாக இருந்த ராமசாமி ராதாவையும்,சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு ‘பஸ் ஸ்டாண்டுக்கு’ப் போனார்.சிதம்பரம் போகும் ஒரு ‘மினி பஸ்’ வந்ததும்,மூன்று பேரும் அதில் ஏறி சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள்.

‘அப்பா,அக்கா,அத்திம்பேர் எல்லாம் எப்போ வருவா.நாம மஹா தேவ குருக்கள் ஆத்துக்குப் போய் அவ பொண்ணேப் பாக்கப் போறோம்’ என்று ஆவலுடன் சிதம்பரம் ‘பஸ் ஸ்டாண்டில்’ காத்துக்
கொண்டு இருந்தான் சாம்பசிவன்.

பஸ்ஸில் இருந்து அப்பாவும்,அக்காவும்,அத்திமேபேரும் இறங்குவவதைப் பார்த்த சாம்பசிவன் சந்தோஷப் பட்டு அவர்களை ரெண்டு ஆட்டோ ஏற்பாடு பண்ணி,மஹா தேவ குருக்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனான்.

வாசலிலேயே காத்துக் கொண்டு இருந்த மஹா தேவ குருக்களும்,அவர் சம்சாரமும் ராமசாமி குடும்பத்தார் ரெண்டு ஆட்டோவிலே இறங்குவதைப் பார்த்ததும் ஓடிப் போய் “வாங்கோ,வாங்கோ” என்று கையைக் கூப்பி வரவேற்று,வீட்டுக்குள் அழைத்துப் போய் எல்லோரையும் ஹாலில் இருந்த ‘சோபா’வில் உட்காரச் சொன்னார்கள்.

மஹா தேவ குருக்கள் காட்டின ‘சோபா’வில் உட்கார்ந்துக் கொண்டார்கள் எல்லோரும்.

மஹா தேவ குருக்கள் ராதாவிடமும்,அவள் கணவா¢டமும் தன்னையும் தன் மணைவியையும் அறிமுகப் படுத்திக் கொண்டார்.

உடனே சுந்தரம் “மாமா,நானும் ராதாவும் உங்களேப் பாத்து இருக்கோம்.அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்த கோவில்லே வரவு செலவு பாத்துண்டு இருந்த வாசு மாமா எங்க குடும்பத்தே உங்க ளுக்கு அறிமுகம் பண்ணி,எங்க ரெண்டு பேர் பேரையும் சொல்லி சுவாமிக்கு அபிஷேகம் பண்ணச் சொன்னார்.அப்போ எங்க அம்மாவும் அப்பாவும் எங்க கூட வந்து இருந்தா.நீங்கோ சுவாமிக்கு அபிஷேகத்தைப் பண்ணீட்டு எங்களுக்கு நிறைய பிரசாதமும் குடுத்தேள்” என்று சொன்னார்

“ஓ அப்படியா.வாசு உங்களுக்கு என்ன உறவு” என்று கேட்டார் குருக்கள்.

“வாசு,எங்க அப்பாவுக்கு ஒன்னு விட்ட பெரியப்பா பையன்”

“உன் தோப்பனார் பேர் என்ன”

“என் அப்பா பேர் கணேசன்.அவ ரொம்ப வருஷமா சிவபுரியிலே இருந்து வறார்”

“ஓ அப்படியா.வாசு இப்போ இந்த கோவிலே வேலே பணறது இல்லே.அவன் என் கிட்டே’மாமா வேறே இடத்லே எனக்கு நல்ல சம்பளம் தறா.நான் அங்கே போய் வேலே செய்யப் போறேன்’ன்னு சொல்லிட்டு இந்த கோவில் வேலேயே விட்டுட்டு போயிட்டான்” என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் மஹா தேவ குருக்கள் மரகதத்தைப் பார்த்து” மரகதம்,காமாக்ஷியே அழைச்சுண்டு வந்து எல்லோருக்கும் ஒரு நமஸ்காரத்தே பண்ணச் சொல்லு” என்று சொன்னார்.

உடனே மரகதம் உள்ளேப் போய் காமாக்ஷியை அழைத்துக் கொண்டு வந்து “எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணும்மா” என்று சொன்னதும்,காமாக்ஷி எல்லோருக்கும் நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு ‘பவ்யமாக’ உட்கார்ந்துக் கொண்டாள்.

உட்கார்ந்துக் கொண்ட காமாக்ஷியை எல்லோரும் பார்த்தார்கள்.அவள் தங்க விகரகம் போல மிகவும் உருண்டு திரண்டு மிகவும் அழகாக இருந்தாள்.

சாம்பசிவனுக்கு காமாக்ஷியை மிகவும் பிடித்து இருந்தது.தன் மனதில் ‘இவ்வளவு அழகான ஒரு பொண்ணு நமக்கு பொண்டாட்டியா வருவான்னு,நாம எதிர் பார்க்கவே இல்லை. எல்லாம் அந்த நடராஜர் ‘அனுக்கிரஹம்’ தான்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டான் சாம்பசிவன்.

ராமசாமிக்கும் காமாக்ஷியை ரொம்ப பிடித்து இருந்து.’பொண்ணு ரொம்ப அழகா இருக்கா.சாம்ப சிவனுக்கு அவளே நிச்சியமாப் பிடிச்சு இருக்கும்’ என்று மனதில் சொல்லிக் கொண்டார் ராமசாமி.

ராதா காமாக்ஷியைப் பார்த்து “உனக்குப் பாட்டு பாட வருமா” என்று கேட்டதும் காமாக்ஷி “எனக்கு பாட வரும்” என்று சொல்லி விட்டு திருப்புகழில் இருந்து ‘நாத விந்து கலாதி நமோ நம’ என்கிற பாட்டை தன் கணகளை மூடிக் கொண்டு ‘கணீர்’ என்று பாடி விட்டு,பிறகு தன் கண்களைத் திறந்தாள்.

“ரொம்ப நன்னா பாடறயே.நீ யார் கிட்டே இந்த பாட்டைக் கத்துண்டே” என்று ராதா கேட்டதும் காமாக்ஷி ”என் அம்மா தான் எனக்கு ‘அபிராமி அந்தாதி’ ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’,’லலிதா சஹஸ்ர நாமம்’‘நாராயணீயம்’‘திருப்புகழ் ஸ்லோகங்கள் எல்லாம் கத்துக் குடுத்து இருக்கா” என்று சொன்னாள்.

“கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீ இத்தனை ‘ஸ்லோகங்களை’ உன்னோட அம்மா கிட்டே இருந்தா கத்துண்டே” என்று சொல்லி பாராட்டினார் ராமசாமி.

நேரம் ஆகிக் கொண்டு இருக்கவே குருக்கள் மரகதத்தைப் பார்த்து “மரகதம்,எல்லாருக்கும் சாப்பிட நீ பண்ணி இருக்கும் ‘ஸ்வீட்’ காரத்தைக் குடு.அப்புறமா அவா சாப்பிட்ட பிறகு ‘காபி’க் குடுக்கலாம்“ என்று சொன்னதும் காமாக்ஷி எழுந்துப் போய் அம்மாவுடன் போனாள்.

மரகதமும் காமாக்ஷியும் எல்லோருக்கும் ‘ஸ்வீட்’ காரம் வைத்து இருந்த தட்டைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.எல்லோரும் அந்த ‘ஸ்வீட்டையும் காரத்தையும் ரசித்து சாப்பீட்டார்கள்.

சுந்தரம்” ’ஸ்வீட்’ காரம் ரொம்ப ருசியா இருந்தது.எல்லாம் நீங்கோ பண்ணதா” என்று மரகத த்தைப் பார்த்து கேட்டதும் “நான் மட்டும் தனியா எல்லாம் பண்ணலே. காமாக்ஷியும் என் கூட உதவி பண்ணா” என்று சொன்னதும்,சுந்தரம் “சாம்பு,நீ ரொம்ப குடுத்து வச்சவன்.நீ காமாக்ஷியே கல்யாணம் பண்ணீண்டா உனக்கு வகை வகையா ‘ஸ்வீட்’டும் காரமும் தினமும் கிடைக்கும்” என்று சொன்னதும் எல்லோரும் சிரித்தார்கள்.

ராதாவுக்கு கோவம் வந்து “நான் உங்களுக்கு எந்த ‘ஸ்வீட்’டும் காரமும் பண்ணீயே குடுத்தது இல்லையா.நிறைய பண்ணிக் குடுத்து இருக்கேன்.நீங்களும் ரொம்ப குடுத்து வச்சவர் தான்” என்று சொன்னதும் “உண்மை தான்.நான் இல்லேன்னு சொல்லலே ராதா” என்று சொல்லி அந்த பேச்சுக்கு ஒரு முற்று புள்ளீ வைத்தார் சுந்தரம்.

“கொஞ்சம் இருங்கோ,நான் என் பொண்ணோட பேசிட்டு வறேன்” என்று மஹாதேவ குருக்கள் சொல்லி விட்டு உள்ளே போனார்.அந்த நேரம் பார்த்து சாம்பசிவன் அப்பாவிடமும்,அக்காவிடமும் “எனக்கு இந்தப் பொண்ணு பிடிச்சு இருக்கு” என்று ரகசியமாகச் சொன்னான்.

உள்ளே வந்த காமாக்ஷி தன் அம்மாவிடமும்,அப்பாவிடமும்,”எனக்கு,அவரே ரொம்ப பிடிச்சு இருக்கு” என்று வெட்கப் பட்டுக் கொண்டே சொன்னாள்.மஹா தேவ குருக்கள் வெளியே வந்து “காமாக்ஷிக்கு உங்க பையனே பிடிச்சி இருக்குன்னு சொல்லிட்டா” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

ராமசாமியும் “எங்க பையனுக்கும் உங்க பொண்ணேப் பிடிச்சி இருக்குன்னு சொன்னான்” என்று சந்தோஷமாக்ச் சொன்னார்.

மஹா தேவ குருக்களும்,ராமசாமியும் மற்ற விஷயங்களை எல்லாம் பேசி விட்டு,சாம்பசிவனை காமாக்ஷிக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணினார்கள்.மஹா தேவ குருக்கள் ராமசமியைப் பார்த்து “நான் ஆத்து வாத்தியார் கிட்டே கல்யாணத்துக்கு ஒரு நல்ல முஹ¥ர்த்த நாள் பாக்க சொல்றேன்.

அவர் சொன்னததும் உங்க பையன் கிட்டே அந்த தேதியே சொல்றேன்.அப்புறமா நீங்கோ கல்யாணத் துக்கு எல்லா வேண்டிய ஏற்பாடுகளைப் பண்ணுங்கோ” என்று சொல்லும் போது மஹா தேவ குருக்கள் ‘செல் போன்’ அடிக்கவே,அவர் ‘செல் போனை’ ஆன் பண்ணீ பேசிக் கொண்டு இருந்தார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *