அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 3,840 
 
 

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

இவனுக்கு முன்னாலே சேந்த பயலுங்க இன்னும் இங்கே கத்துண்டு வறா.நான் சொல்லிக் குடுக்கற மந்திரங்களை மறுபடியும் ,மறுபடியும்,சொல்லி பாக்கறதே இல்லே.சோம்பேறிப் பயலுங்க. இவனை நீ கோவிலுக்கு அழைச்சிண்டு போய் ஒரு குருக்கள் வேலேயே பண்ணச் சொல்லேன்” என்று சொன்னார்.மஹாதேவ குருக்கள் சாம்பசிவனைக் கூப்பிட்டு சில கோவில் மந்திரங்களை எல்லாம் கேட்டார்.சாம்பசிவன் எல்ல மந்திரங்ககளையும் ‘ஸ்பஷ்டமாகவும்’ தப்பு இல்லாமலும் சொன்னான்.

மஹாதேவ குருக்கள் மிகவும் சந்தோஷப் பட்டார்.

மஹாதேவ குருக்கள் இடம் குருக்களுக்கு சாம்பசிவனை மிகவும் பிடித்து இருந்தது.‘நாம சொன்னவுடனே,இவன் வேறே எந்த சிவன் கோவிலுக்கும் போகாம இந்த கோவிலிலே இருந்து வர ஒத்துக் கொண்டதை நினைத்து சந்தோஷப் பட்டார்.அடுத்த நாளில் இருந்து மஹாதேவ குருக்கள் சாம்பசிவனை தன்னிடம் ஒரு ‘ஜூனியர்’ குருக்களாக வேலை செய்து வரச் சொன்னார்.

சாம்பசிவன் குருக்களைப் பார்த்து “மாமா,நீங்கோ எனக்கு இந்த சனிக்கிழமை சாயங்காலம் ஒரு அரை நாள் லீவு தர முடியுமா.நான் சிவபுரிக்குப் போய் என் அப்பா,அக்கா,அத்திமேபேர் எல்லார் கிட் டேயும் ‘நான் குருக்கள் பா¢ஷை ‘பாஸ்’ பண்ணிட்டேன்.உங்க பேரேச் சொல்லி,நான் அவர் கிட்டே ஒரு ‘ஜூனியர்’ குருக்களா வேலே பண்ணீண்டு வறேன்’ என்கிற சந்தோஷ சமாசாரத்தேச் சொல்லி ட்டு வறேன்” என்று பவ்யமாகக் கேட்டான்.

உடனே மஹாதேவ குருக்கள் சந்தோஷப் பட்டு “நான் உனக்கு இந்த சனிக் கிழமை சாயங்கால மே அரை நாள் லீவு தறேன்.நீ சிவபுரிக்குப் போய் அவா எல்லார் கிட்டேயும்,இந்த சந்தோஷ சமாசாரத் தே சொல்லிண்டு வா” என்று சொன்னதும் சாம்பசிவன் அவருக்கு தன் நன்றியை சொன்னான்.
அந்த சனி கிழமை சாயங்காலம் சாம்பசிவன் மஹா தேவ குருக்களிடம் சொல்லி விட்டு ‘மினி பஸ்’ ஏறி சிவபுரிக்கு வந்தான்.அவன் வீட்டுக்கு வந்ததும் தன் செருப்பை கழட்டி வைத்து விட்டு கால்களை நன்றாகக் கழுவிக் கொண்டு,முதலில் சுவாமி ரூமுக்குப் போய் ”பகவானே,நான் இத்தனை நாள் உன்னே வேண்டிண்டு வந்தது வீண் போகலே.நீ என்னை சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் ஆக்கிட்டே” என்று உரக்கச் சொல்லி ஒரு நமஸ்காரத்தைப் பண்ணீனான்.

சாம்பசிவன் சுவாமி ‘ரூமி’ல் உரக்க சொன்னதைக் கேட்ட ராமசாமி சுவாமி ரூமுக்கு வந்து “நேக்கு கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா சாம்பசிவா.நீ சிதம்பரம் கோவில்லே மஹாதேவ குருக்கள் கிட்டே ஒரு ‘ஜுனியர்’ குருக்கள் ஆயிட்டயா.என் காதுகளே என்னால் நம்பவே முடியலே. இந்த சந்தோஷ சமாசாரத்தே கேக்க உங்க அம்மா இப்போ உயிரோடு இல்லே.அவ ஆசீர்வாதத்தால் தான் உனக்கு இந்த குருக்கள் வேலே கிடைச்சு இருக்கு.இதிலே நேக்கு ஒரு சந்தேகமும் இல்லேடா சாம்பசிவா” என்று சொல்லி மிகவும் சந்தோஷப் பட்டார்.

உடனே சாம்பசிவன் அப்பாவுக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு எழுந்துக் கொண்டு “அப்பா,அம்மா ஆசீர்வாதமும்,உங்க ஆசீர்வாதமும் ஒன்னா சேந்து தான் என்னே சிதம்பரம் நடராஜர் கோவிலிலே ஒரு குருக்கள் ஆக்கி இருக்கு.நீங்கோ ஒருத்தர் தானே எனக்கு இப்போ கண் கண்ட தெய்வம்.உங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதம் எனக்குப் பா¢பூர்ணமா இருக்கு” என்று சொல்லி தன் கண்களீல் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

ராத்திரி அப்பாவுடன் சாப்பிட்டு விட்டு அப்பா கிட்டே சொல்லிக் கொண்டு,சாம்பசிவன் தன் அக்கா,அத்திம்பேர் வீட்டுக்குப் போய் “நான் இப்போ சிதம்பரம் கோவிலிலே மஹாதேவ குருக்கள் கிட்டே ஒரு ‘ஜுனியர்’ குருக்கள் ஆயிட்டேன்” என்று சந்தோஷமாகச் சொன்னான்.சாம்பசிவன்
‘மாஹாதேவ குருக்கள்’ என்று சொன்னவுடன் “அவர் அந்த கோவில்லே ரொம்ப வருஷமா குருக்களா இருந்து வறாரே.நான் அவர் பேரேக் கேள்விப் பட்டு இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொன்னார் கணேசன்.

“ஆமாம் மாமா.அவர் அந்த கோவில்லே இருக்கற எல்லா குருக்களையும் விட வயசிலே பொ¢யவர்.ரொம்ப வருஷமா அந்த கோவில்லே ஒரு குருக்களா இருந்து வறார்.அவருக்கு அந்த கோவில்லே ரொம்ப செல்வாக்கு.அவர் சிபாரிசின் பேர்லே தான் அந்தக் கோவில்லே தங்கி வர ஒரு சின்ன ‘ரூம்’ குடுத்து இருக்கா” என்று சந்தோஷமாகச் சொன்னான்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு சாம்பசிவன் ‘மினி பஸ்’ ஏறி சிதம்பரம் வந்து சேர்ந்தான்.

மஹா தேவ குருக்களுக்கு சாம்பசிவன் நமஸ்காரம் பண்ணீ விட்டு ‘அபிவாதயே’ சொன்ன போது,அவன் ‘ஆத்ரேய கோத்திரம்’ என்று கணீர் என்று சொன்னது ஞாபகம் வந்தது.

‘நல்ல வேளே இந்த பையன் நம்ம கோத்திரம் இல்லே.நாம இவனை நம்முடைய மருமகனாக ஆக்கிக் கொள்ளலாம்’ என்று மனதில் நினைத்தார்.அவர் ’கொஞ்ச வருஷம் போகட்டும்,நம்ம ஆசையை மெல்ல சாம்பசிவன் கிட்டேசொல்லலாம்’ என்று நினைத்து அதற்கான சரியான சர்ந்தப்பத்தை எதிர் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ரெண்டு வருடமானதும் ஆனதும் மஹா தேவ குருக்கள் கோவிலில் ஒரு சேரைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு மற்ற குருக்கள் செய்து வரும் வேலையை மேற்பார்வை செய்து வந்தார்.

கோவிலுக்கு அவருக்கு ரொம்ப தெரிந்தவர்கள்,அல்லது வி.ஐ.பி.யாராவது வந்தால் மட்டும், அவர்களுக்கு அர்ச்சனைப் பண்ணிக் கொண்டு வந்து,சாம்பசிவனை தனியாகவே குருக்கள் வேலை யைப் பண்ணிக் கொண்டு வரச் சொன்னார் மஹா தேவ குருக்கள்.

சாம்பசிவன் தன் நன்றியை அவருக்குச் சொல்லி விட்டு சந்தோஷமாக குருக்கள் வேலையைப் பண்ணிக் கொண்டு வந்தான்.

கோவில் நிர்வாகம் சாம்பசிவனுக்கு ,மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து,சனிக் கிழமை மத்தியானம் அரை நாள் லீவும் கொடுத்து இருந்தார்கள்.

சாம்பசிவன் முதல் சனி கிழமை சாயங்காலமே ஒரு மினி ‘பஸ்ஸீல்’ ஏறி சிவபுரிக்கு வந்து, தனியாக இருந்து வரும் அப்பாவைப் பார்த்து “அப்பா,நீங்கோ எப்படி இருக்கேள்.உங்களுக்கு ஒரு சந்தோஷமான சமாச்சாரம்.மஹாதேவ குருக்கள் என்னை ஒரு முழு நேர குருக்கள் வேலேயே பண்ணீண்டு வரச் சொல்லி இருக்கார்.சிதம்பரம் கோவில் நிர்வாகம் எனக்கு மாசத்துக்கு மூவாயிரம் ரூபா சம்பளம் தரப் போறா.ஒவ்வொரு சனி கிழமையும் எனக்கு அரை நாள் லீவு குடுத்து இருக்கா. இனிமே நான் ஒவ்வொரு சனிகிழமையும் சாயங்காலம் உங்களே வந்து பாத்துட்டு,அக்கா அத்திம்பே ரையும் பாத்துட்டு,கடைசி ‘பஸ்ஸே’ப் பிடிச்சு சிதம்பரம் போவேன்” என்று சந்தோஷமாக சொல்லி விட்டு அப்பாவுக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணீவிட்டு ‘அபிவாதயே’யேச் சொன்னான்.

உடனே ராமசாமி “கேக்க ரொம்ப சந்தோஷம இருக்கு சாம்பசிவா.நீ ரொம்ப ஆசைப் பட்டா மாதிரி சிதம்பரம் கோவில்லே ஒரு குருக்கள் ஆயிட்டே” என்று சொல்லி விட்டு சாம்பசிவனைக் கட்டிக் கொண்டார்.

கொஞ்ச நேரமானதும் ”இந்த சந்தோஷ சமசாரத்தேக் கேக்க உங்க அம்மா இப்போ உசிரோடு இல்லேடா.நீ நடராஜர் கோவில்லே ஒரு குருக்களா தனியா வேலே பண்ணீண்டு வறே,உனக்குக் கோவில் நிர்வாகம் மாசம் மூவாயிரம் சம்பளம் தறா,என்கிற சமாசாரத்தே கேட்டா அவ கால் தரையிலே பாவாது.சந்தோஷத்லே அவ குதிப்பா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

உடனே சாம்பசிவன் “ஆமாம்ப்பா.நீங்கோ சொல்றது நூத்துக்கு நுறு நிஜம்.நான் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் வேலே பண்ணிண்டு வறேன் என்கிற சந்தோஷ சமாசாரத்தேக் கேக்க இப்போ அம்மா நம்மோட இல்லேன்னு நினைச்சா எனக்கு அழுகை,அழுகையா வறது” என்று சொல்லி விட்டு,தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான்.

அப்பாவுடன் இருந்து ராத்திரி சாப்பிட்டு விட்டு “அப்பா,நான் அக்கா,அத்திம்பேரைப் பாத்து ட்டு,நான் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் ஆன சமாசாரத்தை எல்லாம் சொல்லிட்டு,கடைசி ‘பஸ்ஸே’ ப் பிடிச்சி சிதம்பரம் போறேன்.நீங்கோ உங்க உடம்பே ஜாக்கிறதையா பாத்துண்டு வாங்கோ” என்று சொல்லி விட்டு,சாம்பசிவன் அக்கா அத்திம்பேரைப் பார்த்து தன் ‘குருக்கள் கதை’ எல்லாவற் றையும் சொல்லி விட்டு,கடைசி ‘பஸ்ஸை’ப் பிடித்துக் கொண்டு சிதம்பரம் வந்து சேர்ந்தான்.

அப்பாவிடம் சொல்லி விட்டு வந்தது போல சாம்பசிவன் எல்லா சனி கிழமை சாயங்காலம் சிவபுரிக்குப் போய் அப்பாவிடம் இருந்து பேசிக் கொண்டு விட்டு,ராத்திரி சாப்பிட்டு விட்டு,அக்கா அத்திம்பேரையும் பார்த்து விட்டு சிதம்பரம் வந்துக் கொண்டு இருந்தான்.

காமாக்ஷ¢ பத்தாவது ‘பாஸ்’ பண்ணீனதும்,அவள் படித்தது போதும் என்று தீர்மானம் பண்ணி,மஹாதேவ குருக்கள் தம்பதிகள் காமாக்ஷ¢யை வீட்டிலேயே வைத்துக் கொண்டு வந்தார்கள்.

காமாக்ஷ¢ தன் அம்மாவிடம் ‘அபிராமி அந்தாதி’ ‘விஷ்ணு சஹஸ்ரநாமம்’,’லலிதா சஹஸ்ர நாமம்’ ‘நாராயணீயம்’ ஸ்லோகங்கள் எல்லாம் நன்றாகக் கற்றுக் கொண்டு வந்தாள்.

மஹாதேவ குருக்கள் தம்பதிகளுக்கு காமாக்ஷ¢ பிறந்து பதினெட்டு வருடங்கள் ஆகியும் குழந் தையே பிறக்கவவில்லை.அவர்கள் இருவரும் ‘இனிமே நாம குழந்தைக்கு ஆசைப் படக் கூடாது’ என்று தங்கள் மனதை தேற்றி வந்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

தன் மணைவியைப் பார்த்து “மரகதம்,கல்யாணம் ஆன தம்பதிகளுக்கு குழந்தைகள் பொறக்க, அந்த பகவான் அனுக்கிரஹம் நிச்சியமா இருக்கணும்.அவர் அனுக்கிரஹம் இல்லேன்னா குழந்தேயே பொறக்காது. இதே நாம் நன்னா புரிஞ்சுண்டு வந்தா நாம மனசு கஷ்டப் பட மாட்டோம்” என்று சொன்னதும் மரகதம்” நீங்கோ சொல்றது ரொம்ப நியாயமான பேச்சு.’அவன் இன்றி ஒரு துரும்பும் அசையாது’ ன்னு நம்ம பொ¢யவா தெரியாமலா சொல்லி இருப்பா அவா சொன்னது நம்ம விஷயத் லே ரொம்ப சரியா போய் இருக்கே” என்று சொல்லி தன் கணவன் சொன்னதை ஆமோத்தித்தாள்.
இருந்தாலும் இருவர் மனதிலும்’ நமக்கு இன்னொரு குழந்தே பொறக்கலையே’ என்கிற ஏக்கம் இருந்து வந்தது.காமாக்ஷ¢க்கும் தனக்கு ஒரு தம்பியோ தங்கையோ பிறக்கவில்லையே என்கிற ஏக்கம் இருந்துக் கொண்டு இருந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை.அன்று கோவிலுக்கு எந்த வி.ஐ.பி.யும் வரும் செய்தி இல்லை.மஹா தேவ குருக்கள் கோவிலுக்குப் போகாமல் அன்று சாயங்காலம் வீட்டில் இருந்துக் கொண்டு வரலாம் என்று நினைத்தார்.

மஹாதேவ குருக்கள் “சாம்பசிவா,எனக்கு கொஞ்சம் வெளியே ஒரு ஜோலி இருக்கு.நான் இன்னிக்கு சாயங்காலம் கோவிலுக்கு வர மாட்டேன்.நீ கொஞ்சம் கோவில் வேலேயே கவனிச்சுண்டு வா”என்று சொன்னதும் சாம்பசிவன் குருக்கள் “நீங்கோ கவலைப் படாம உங்க ஜோலியே போய் கவனியுங்கோ.நான் கோவில் வேலேயே கவனிச்சுக்கறேன்” என்று சொல்லி மஹாதேவ குருக்களை அனுப்பி வைத்தான் சாம்பசிவன்.

வீட்டிற்கு வந்த மஹதேவ குருக்கள் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கினார்.நாலு மணிக்கு அவர் தூங்கி எழுத்ததும் அவர் மணைவி அவருக்கு சூடாக ‘காபி’யைப் போட்டுக் கொண்டு வந்து அவர் எதிரில் உட்கார்ந்துக் கொண்டாள்.

‘காபி’யே ருசிப் பார்த்துக் கொண்டே மஹாதேவ குருக்கள் தன் மணைவியைப் பார்த்து “நான் இன்னிக்கு சாயங்காலம் கோவிலுக்குப் போகப் போறது இல்லே.உன் கிட்டேயும் காமாக்ஷ¢ கிட்டேயும் ஒரு முக்கியமான சமாச்சாரம் பேசணும்”என்று சொல்லி விட்டு மிதி ‘காபி’யைக் குடித்து முடித்தார்.

பொறுமை இழந்த மரகதம் “நீங்கோ சொல்ல வறதே ‘சட் புட்’டுன்னு சொல்லுங்கோ.நீங்கோ வழக்கமா எதையும் நீட்டி முழக்கித் தான் சொல்லுவேள்.நீங்கோ சொல்றதே கேக்க நேக்கு பொறுமை யே இருக்கிறது இல்லே.தவிர நேக்கு என்னவோ ஏதோன்னு பயம் வேறே வந்துடறது.நான் பண்ணி ண்டு இருந்து வந்த வர வேலேயும் கெடறது” என்று சொன்னாள்.

மஹா தேவ குருக்கள்” மரகதம்.நீ நினைக்கிறாப் போல இந்த விஷயத்தே நான் ‘சட் புட்’டுன் னு சொல்ல முடியாது.நீ பொறுமையாத் தான் கேட்டுண்டு வரணும்.நீ பயப் படறா மாதிரி ஒன்னும் விஷயம் இல்லே.எல்லாம் சுப சமாச்சாரம் தான்.காமாக்ஷ¢ நீயும் வந்து உக்காரு” என்று கூப்பிட்டதும் காமாக்ஷ¢ தான் படித்துக் கொண்டு இருந்த ஆனந்த விகடன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு அம்மா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டாள்.

மரகதம் மனது இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

“மரகதம்,என் கிட்டே அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சாம்பசிவன் என்கிற பையன் குருக்கள் வேலே செய்ய தனக்கு ரொம்ப ஆசையா இருக்குன்னு சொல்லிண்டு என் கிட்டே வந்து கேட்டான். நான் அவனை ரமணி குருக்கள் கிட்டே அனுப்பி குருக்கள் வேலேயேக் கத்துக்க அனுப்பினேன். ரமணி குருக்கள் சொல்லிக் குடுத்த எல்லா மந்திரங்களையும் நன்னா கத்துண்டு,அவன் என் கிட்டே ‘ஜூனியர்’ குருக்களா வேலே பண்ணீண்டு வந்தான்….” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது ‘செல் ‘போன்’ மணி அடிக்கவே மஹா தேவ குருக்கள் அதை ‘ஆன்’ பண்ணிப் பேசினார்.
‘போன்’ பேசி முடிந்ததும், மஹா தேவ குருக்கள் ”ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் அந்த பையனை ஒரு குருக்களா வேலே பண்ணீண்டு வரச் சொல்லி விட்டு,நான் வெறுமனே எனக்கு ரொம்ப தெரிஞ்ச வாளுக்கும்,வி.ஐ.பி.க்கு மட்டும் அர்ச்சனைப் பண்ணீண்டு வறேன்.கோவில்லே ஒரு சேரைப் போட்டு ண்டு எல்லா குருக்களும் பண்ற வேலேயே மேற்பார்வை பண்ணீண்டு வறேன்” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘செல் போன்’அடிக்கவே அதை ‘ஆன்’ பண்ணிப் பேசினார்.

பேசி முடிந்ததும் “கோவில் நிர்வாகம் சாம்பசிவனுக்கு இப்போ மூவாயிரம் ரூபா சம்பளம் தறா. அந்தப் பையன் பாக்க ரொம்ப நன்னாவே இருப்பான்.நல்ல வேளையா அந்த பையன் நம்ம கோத்திரம் இல்லே.அவன் ‘அபிவாதயே’ சொன்னப்ப நான் கேட்டேன்.அவன் ஆத்ரேய கோத்திரமாம்…” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது மஹா தேவ குருக்களுக்கு ‘போன்’ வந்தது.

அவர் ‘போனை ஆன்’ பண்ணிப் பேசி விட்டு,‘போனை ஆப்’ பண்ணிவிட்டு மறுபடியும் பேச ஆரம்பிக்கும் போது, மரகதம் “ஆத்ரேய கோத்திரமா.ஆத்ரேய கோத்திரா காரா எல்லாம் ரொம்ப சாது வானவாளா இருப்பா” என்று சொன்னதும் மஹா தேவ குருக்கள் இது தான் சாக்கு என்று நினைத்து “மரகதம்,நீ கூட ஆத்ரேய கோத்திரம் தானே.ஆனா உன்னேப் பாத்தா அப்படி தெரியலையே” என்று சொன்னதும் மரகதத்துக்கு கோவம் வந்தது.

மரகதம்”நான் என்ன சாதுவா இல்லையா.இத்தனை வருஷத்லே நான் உங்கக் கிட்டே என்னிக் காவது சண்டைப் போட்டு இருக்கேனா.நீங்கோ எதைச் சொல்றேளோ அதேத் தான் பண்ணீண்டு வந்து இருக்கேன்.அப்படி இருக்கும் போது நீங்கோ எப்படி அந்த வார்த்தையை சொல்லலாம்.உங்களே பிடுங்கி எடுக்கற ஒரு ஆத்துக்காரி வந்து இருக்கணும்.அப்போ தெரியும் என் அருமை.நான் ஒரு சாது வான பொம்மணாட்டியா வந்து ‘வாச்சி’ இருக்கேன் உங்களுக்கு.நீங்கோ ஏன்அப்படி சொல்ல மாட்டே ள்.எனக்கு இதுவும் வேணும்,இன்னமும் வேணும்” என்று சொல்லிக் விட்டு,தன் கண்களை கசக்கிக் கொண்டு இருந்தாள்.

உடனே மஹா தேவ குருக்கள்” மரகதம் நான் உன்னே சீண்டத் தான் அப்படி சொன்னேன்.நீ என்னவோ அதே உண்மைன்னு நம்பிண்டு கண்ணே கசக்கிண்டு இருக்கே.நான் மேலே சொல்றதே கொஞ்சம் கவனமா கேளு” என்று சொல்லி விட்டு அவர் சொல்ல வந்த சமாசாரத்தை சொல்ல ஆரம்பித்தார்.

“நான் அவனை கோவில்லே பாத்து அவனைப் பத்தி விசாரிக்கட்டுமா.அந்தப் பையனுக்கு நம்ப காமாக்ஷ¢யே கல்யாணம் பண்ணித் தரலாம்ன்னு நான் ரொம்ப ஆசைப் படறேன்.நீ என்ன நினைக்க றே.காமு நீ என்ன நினைக்கறே” என்று கேட்டு விட்டு மஹாதேவ குருக்கள் தன் மனைவியின் முகத் தையும் மகள் காமாக்ஷ¢யின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தார் மஹா தேவ குருக்கள்.

உடனே மரகதம் “அந்தப் பையன் உங்க கிட்டே ஒரு ‘ஜுனியர்’ குருக்களா வேலே பண்ணீண் டு வந்து இருக்கான்.உங்களுக்கு அந்தப் பையனே பத்தின குணாதிசியம் எல்லாம் நன்னா தெரிஞ்சு இருக்கும்.நம்ப காமாக்ஷ¢யை அந்தப் பையன் காலம் பூராவும் கண் கலங்காம,நன்னா வச்சுண்டு காப் பாத்திண்டு வருவானா.அவன் அம்மா அப்பா எங்கே இருக்கா.அவனுக்குக் கூடப் பொறந்தவா எத் தனை பேர் இருக்கா” என்று கேட்டாள்.

உடனே மஹா தேவ குருக்கள் “ரொம்ப அவசரப் படறயே மரகதம்.நான் இன்னும் அதை எல் லாம் அந்தப் பையன் கிட்டே கேக்கலே.வெறுமனே இந்தக் கல்யாணத்தைப் பத்தி உன் அபிப்பியாய த்தையும் காமாக்ஷ¢யோட அபிபிராயத்தையும் தான் கேட்டேன்” என்று சொன்னார்.
காமாக்ஷ¢ ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்தாள்.

மரகதம் ”நான் சொல்றேன்னு நீங்கோ தப்பா எடுத்துக்காதீங்கோ.நீங்கோ முப்பது வருஷத்து க்கு மேலேயே குருக்களா வேலை செஞ்சிண்டு வந்துண்டு இருக்கேள்.நம்ம குடும்ப சூழ் நிலைக்கு நாம நமம பொண்ணு காமக்ஷ¢க்கு ஒரு குருக்களாப் பாத்து கல்யாணம் பண்ணி வக்கறது தான் உசிதம் ன்னு நேக்கு படறது.அதேத் தவிர அந்த பிள்ளையாண்டனை நீங்கோ தான் ரமணி குருக்கள் கிட்டே அனுப்பி ஒரு குருக்கள் ஆக்க ஏற்பாடு பண்ணீ இருக்கேள்.அதேத் தவிர அந்தப் பையனுக்கு கோவில் நிர்வாகத்துக்கு கிட்டே சொல்லி ஒரு ‘ரூம்’ வேறே வாங்கி குடுத்து இருக்கேள்.இப்போ உங்க கிட்டே ஒரு ஜூனியர் குருக்களா இருந்துண்டு வந்து இருக்கான்.அவன் நிச்சியமா உங்க கிட்டே ரொம்ப விசுவாசமா இருப்பான்.அவன் காமாக்ஷ¢யே காலம் பூராவும் கண் கலங்காம வச்சுண்டு வருவா ன்னுத் தான் நேக்குத் தோன்றது.இந்தப் பையனையே காமாஷிக்கு பாருங்கோ” என்று சொன்னாள்.

உடனே மஹா தேவ குருக்கள் “ மரகதம் எனக்கும் அப்படித் தான் தோன்றது.இந்தப் பையன் பாக்க ரொம்ப சாதுவா இருக்கான்” என்று சொன்னார்.

கொஞ்ச நேரமானதும் மரகதம் “எனக்கு என்னவோ இந்த உத்யோகத்துக்குப் போய் வர பையன் களே காமாக்ஷ¢க்கு வேணாம்ன்னு தோன்றது.நீங்கோ ஒரு உத்யோகத்துக்குப் போய் வர ஆத்துக்கார ரா இருந்தா,உங்களுக்கு உத்யோகத்துக்கு போய் வர பையன்களேப் பத்தித் தெரியும்.பேசாம நீங்கோ உங்க கிட்டே குருக்கள் வேலே பண்ணீண்டு வர பிள்ளையாண்டானைப் பத்தின எல்லா விவரத்தை யும் நன்னா விசாரியுங்கோ.எல்லாம் கூடி வந்து,அந்த அம்பாள் அனுக்கிஹமும் இருந்தா,நாம காமா க்ஷ¢க்கு அந்தப் பையனையே கல்யாணம் பண்ணி வக்கலாம்” என்று சொன்னாள் .

மஹாதேவ குருக்கள் காமாக்ஷ¢யைப் பார்த்து “அம்மா காமாக்ஷ¢,அம்மா தன் அபிபிராயாத்தே, தேங்கா உடைச்ச மாதிரி பட்டுன்னு சொல்லிட்டா.ஆனா நீ ஒன்னும் சொல்லாம இருக்கியே. நான் இந்த பையனை பத்தி விசாரிச்சு எல்லாம் நமக்கு பிடிச்சா மாதிரி இருந்தா அந்தப் பையனை உனக்கு க் கல்யாணம் பண்ணீ வக்கட்டுமா.உனக்கு வயசு ஏறிண்டே போறது.இப்பவே உனக்கு வயசு ஜாஸ்தி ஆயிடுத்து.நாங்க இன்னும் ‘டிலே’ பண்ணக் கூடாது.காலா காலத்லே நானும் உன் அம்மாவும் உனக்கு ஒரு நல்ல பையனாப் பாத்து ஒரு கல்யாணத்தே பண்ணி வக்கணும்” என்று சொன்னார்.

உடனே காமாக்ஷ¢ “நான் சொல்ல என்ன இருக்குப்பா.நீங்களும்,அம்மாவும் எனக்கு நல்லதே தான் பண்ணுவேள்.எனக்கு அந்த நம்பிக்கை பூரணமா இருக்குப்பா” என்று சொன்னாள்.

உடனே “சரி நீங்கோ ரெண்டு பேரும் உங்க அபிப்பிராயத்தே சொல்லி முடிச்சுட்டேள்.நான் அந்தப் பையனை கோவிலிலே தனியா சந்திச்சு,அவன் குடும்ப சமாசாரத்தே விவரமா கேட்டுண்டு வந்து உங்க ரெண்டு பேருக் கிட்டேயும் சொல்றேன்.உங்க ரெண்டு பேருக்கும் அந்த பையன் குடும் பம் பிடிச்சு இருந்து,ரெண்டு பேரோட ஜாதகங்களும் நன்னா பொருந்தி இருந்தா,அந்த நடராஜர் ‘அனுக்கிரஹமும்’ இருந்து காமாக்ஷ¢யோட கல்யாணம்அந்த பையனோட நல்லபடியா நடக்கட்டுமே. அப்படி நடந்தா நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்” என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

மரகதம் ”நீங்கோ மறக்காம அந்தப் பையன் கிட்டே அவனுக்கு நம்ம பொண்ணு காமாக்ஷ¢யே கல்யாணம் ஆசைப் படறானா.இல்லே அவன் இந்த காலத்து பசங்க மாதிரி தனக்குத் தான் ஒரு குருக்கள் வேலே கிடைச்சுட்டதேன்னு,அவன் யாரையாவது ஒரு பொண்ணேக் காதலிக்கறானா. இல்லே,அவன் அம்மா அப்பா அவனுக்கு உறவிலே ஒரு பொண்ணேப் பாத்து கல்யாணம் பண்ணி வக்க ஏதாவது ‘ப்ளான்’ இருக்கா.இது ரெண்டையும் மறக்காம அந்தப் பையனைக் கேளுங்கோ.இது ரொம்ப முக்கியம்ண்ணா” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

உடனே “மரகதம் அந்தப் பையனைப் பாத்தா,அவன் அப்படி எல்லாம் பண்ணக் கூடிய பையன் மாதிரி நேக்குத் தோணலே.பாத்தா ரொம்ப நல்ல பையன் மாதிரித் தான் இருக்கான்.நீ நிம்மத்தியா இருந்துண்டு வா”என்று சொல்லி விட்டு எழுந்துப் போய் தன் கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு,நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு,பஞ்சார்த்த உத்தா¢ணியே கையிலே எடுத்துக் கொண்டு குழாயில் ஜலத்தைப் பிடித்துக் கொண்டு,சாயங்கால சந்தியாவந்தனம் பண்ண ஒரு மணை யைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டார் மஹா தேவ குருக்கள்.

மரகதமும் எழுந்துப் போய் அவள் வேண்டி வரும் அம்பாள் கிட்டே”தாயே, நீ தான் என் பொண் ணுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா ஏற்பாடு பண்ணனும்” என்று வேண்டிக் கொண்டு சமையல் அறை க்குப் போனாள்.சமையலைப் பண்ணிக் கொண்டே ‘நாம இவர் கிட்டே அந்தப் பையன் யாரையாவது காதலிக்கறானான்னு கேக்கச் சொன்னோமே.பாவம் இவர் நான் சொன்னேனேன்னு அவனைக் கேட்டு வச்சா,அந்த பையன் அந்த மாதிரி ஜோலிக்கு எல்லாம் போகாத பையனா இருந்தா அவன் மனசு ரொம்ப வருத்தப்படுமே.அவன் நம்மாத்துக்காரரே தப்பா எடுத்துக்காம இருக்கணுமே.எப்படி அவர் கேகக்கப் போறார்.நாம அதே சொல்லாம இருந்து இருக்கலாமோ.ஒரு குருக்கள் வேலே பண்ற பையன் அந்த மாதிரி தப்பு எல்லாம் பண்ண மாட்டானே.நாம் ஏன் இவர் கேட்டுத் தொலைச்சோம்’ என்று வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தாள்.

காமாக்ஷ¢ தான் தரையிலே வைத்து விட்டு வந்த ஆனத்த விகடன் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள்.ஆனால் அவள் மனம் அந்த புத்தகத்தில் லயிக்கவிலை.

‘அம்மா சொல்றா மாதிரி உத்யோத்துக்குப் போய் வர புருஷாளே பத்தி நம்ம குடும்பத்லே அதிகமா ஒன்னும் தெரியாது.ஆனா ஒன்னு அவா எல்லாம் அப்பா மாதிரி ரெண்டு வேளையும் சந்தி யாவந்தனம் பண்ணீண்டு,சுவாமி மந்திரங்கள் எல்லாம் சொல்லிண்டு வருவாளோ இல்லையோ. ‘ஆபீஸ்’லே நாலு ஐஞ்சு பொம்மணாட்டிகள் கூட பழகிண்டு வருவா.சிலருக்கு சிகெரெட் குடிக்கற பழக்கமும் இருக்கும்.இன்னும் சில கெட்ட வழக்கங்ககளும் இருக்கலாம்.ஆனா அப்பா கோவில்லே குருக்களா இருக்கிற பையனுக்கு இந்த பழக்கம் எல்லாம் நிச்சியமா இருக்காது.அம்மா சொல்றா மாதிரி உத்யோகத்துக்குப் போயிண்டு புருஷாளே வேணாம்.குருக்கள் பையனே நமக்கு தேவலை’ என்று காமாக்ஷ¢யின் மனம் எண்ணம் இட்டுக் கொண்டு இருந்தது.

மஹா தேவ குருக்கள் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு சுவாமி ‘ரூமு’க்குப் போய், மந்திரங்கள் எல்லாம் சொல்லி விட்டு ‘ஹாலு’க்கு வந்து உட்கார்ந்தார்.

அவர் ‘மரகதம் வாய் சுலுவா சொல்லிட்டா.அவ கேட்டதே எல்லாம் நாம எப்படி சாம்பசிவனே கேக்கறது.அவனே நீ வேறே யாராவது பொண்ணேக் காதலிக்கிறாயான்னு கேட்டா,அவன் மனசு சங்கடப் படாதா.அவன் நம்மே தப்பா எடுத்துக்காம இருக்கணுமே.எப்படி அவனே கேப்பது.ஆத்துக்கு வந்தா மரகதம் ‘நான் சொன்னதே அந்தப் பையன் கிட்டே கேட்டேளான்னு கேப்பாளே.அவனே கேக்க முடிய சங்கடம்.ஆத்துக்கு வந்தா மரகதம் நம்மே குடை,குடைன்னு குடைவா.என்ன பண்ண லாம்.ஒன்னு நிச்சியமா கேகலாம்.உங்க உறவிலே உனக்கு பொண்ணு யாராவது இருக்காளான்னு கேக்கலாம்.அவன் நிச்சியமா அதே தப்பா எடுத்துக்க மாட்டான்’ என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார் மஹா தேவ குருக்கள்.

ஒரு மணி நேரம் ஆனதும் ஆத்த்க்காருக்கு அரிசி உப்புமாவையும்,கத்திரிக்கா கொத்சையும் பண்ணி எடுத்துக் கொண்டு வந்து ’என்ன இப்படி ஒரு கோட்டையைப் பிடிக்கிற யோஜனை பண்ணி ண்டு இருக்கேள்.எழுந்து வாங்கோ.உங்களுக்கு பலகாரம் ரெடி”என்று மரதகதம் குரல் கொடுத்தவுட ன் மஹா தேவ குருக்கள் தன் யோஜனையில் இருந்து வெளியே வந்து பலகாரம் சாப்பிட உட்கார்ந்தார்.

அடுத்த நாள் கோவிலில் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது.

மஹாதேவ குருக்கள் சாம்பசிவனைப் பார்த்து “உனக்கு என்ன வயசு ஆறது சாம்பசிவா”என்று கேட்டதும் சாம்பசிவம் “எனக்கு இந்த தை வந்தா இருபத்தி நாலு வயசு ஆறது” என்று சொல்லி விட்டு “ஏன் கேக்கறேள் மாமா”என்று கேட்டதும் மஹாதேவ குருக்கள் “நான் காரணமாத் தான் கேக்கறேன். சிவபுரியிலே உன் தோப்பனார் என்ன பண்றார்” என்று கேட்டார்.

உடனே சாம்பசிவம் ”என் தோப்பனார் விவசாயம் பாத்துண்டு வறார் மாமா” என்று பதில் சொன்னான்.கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின் மஹதேவ குருக்கள் சாம்பசிவனைப் பார்த்து “உன் கூட பொறந்தவா எத்தனை பேர்” என்று கேட்டதும் “எனக்கு ஒரு அக்கா இருக்கா.அவளுக்கு
நாலு வருஷத்துகு முன்னடி கல்யாணம் ஆயிடுத்து.அவ புக்காமும் சிவபுரி தான்.என் அம்மாவும், அப்பாவும் அக்காவே என் அம்மாவோட தம்பிக்கே கல்யாணம் பண்ணி குடுத்து இருக்கா” என்று சொன்னான்.“உன் அத்திம்பேர் சிவபுரிலே என்ன பண்ணீண்டு வறார்” என்று கேட்டார் மஹாதேவ குருக்கள்.“என் அத்திம்பேரும் சிவபுரியிலே விவசாயம் தான் பண்ணீண்டு வறார்” என்று சொன்னான் சாம்பசிவன்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீன மஹாதேவ குருக்கள் சாம்பசிவனைப் பார்த்து ”நான் ஏன் இதே எல்லாம் உன் கிட்டே கேட்டேன்னா,எனக்கு ஒரு பொண்னு இருக்கா.அவ பேர் காமாக்ஷ¢. அவளுக்கு இந்த மாசி மாசம் வந்தா இருபது வயசு ஆகப் போறது.காமாக்ஷ¢க்கு அப்புறமா எங்களுக்கு க் குழந்தயேப் பொறக்கலே…” என்று சொல்லும் போது குருக்கள் கண்களில் கண்ணீர் வந்தது. சாம்பசிவன் மஹா தேவ குருக்கள் அழுவதைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டான்.

கண்களைத் துடைத்துக் கொண்ட பிறகு மஹா தேவ குருக்கள் ”நானும்,என் ஆத்துக்காரியும் அவளுக்கு ஒரு கல்யாணத்தே பண்ணி வக்கலாம்ன்னு இருக்கோம்.நீ ‘அபிவாதயே’ சொல்லும் போது உன் கோத்திரம் ‘ஆத்ரேய கோத்திரம்’ன்னு சொன்னது எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு. எங்க கோத்திரம் ‘பாரத்வாஜ கோத்திரம்’” என்று சொல்லி நிறுத்தினார் .

சாம்பசிவன் மஹா தேவ குருக்களை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான்.’இவர் ஏன் அவர் கோத்திரத்தைப் பத்தி என் கிட்டே சொல்றார்’ என்று புரியாமல்,அவர் மேலே என்ன சொல்லப் போறார்’ என்று அவர் வாயையேப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“சாம்பசிவா,நான் கேக்கறேன்னு என்னே தப்பா எடுத்துக்காதே, நானும்,என் ஆத்துக்காரியும் எங்க பொண்ணு காமாக்ஷ¢யே உனக்குக் கல்யாணம் பண்ணி ரொம்ப ஆசைப் படறோம்.உனக்கு என் பொண்ணே கல்யாணம் பண்ணிக்க ஆசையா.உனக்கு உன் உறவிலேயே கல்யாணத்துக்கு யாராவது ஒரு பொண்ணு இருக்காளா.இல்லே உன் மனசிலே வேறே யாராவது ஒரு பொண்ணு இருக்களா.நீ என் கிட்டே ¨தா¢யமா சொல்லு.இந்தக் கல்யாணத்துக்கு உன் சம்மதம் எனக்கு ரொம்ப முக்கியம்” என்று நோ¢டையாகவே கேட்டார் மஹா தேவ குருக்கள்.

மஹா தேவ குருக்கள் சொல்ல வருகிற விஷயத்தைப் புரிந்துக் கொண்ட சாம்பசிவன் “நீங்கோ இவ்வளவு தூரம் கேட்டப்புறம்,நான் உண்மையை உங்க கிட்டே சொல்றேன்.என் உறவிலே என் கல்யாணத்துக்கு எந்தப் பொண்ணும் இல்லே.என் மனசிலே எந்தப் பொண்ணும் இல்லே மாமா” என்று சொன்னான்.
உடனே மஹா தேவ குருக்கள் “ரொம்ப சந்தோஷம் சாம்பசிவா.நான் உன்னே இதேக் கேட்டே ன்னு என்னே நீ தப்பா எடுத்துக்காதே” என்று சொன்னார்.“நான் என்னேக்கும் நீங்கோ கேக்கறேதே தப்பாவே எடுத்துக்க மாட்டேன் மாமா.என்னே இந்த குருக்கள் ஆக்கினதே நீங்கோ தானே. அன்னை க்கு மட்டும் நீங்கோ கோவில் நிர்வாகத்துக்குக் கிட்டேசொல்லி ஒரு ‘ரூம்’ வாங்கிக் குடுத்தேள் நீங்கோ பொ¢ய மனசு பண்ணி,என்னே ரமணி குருக்கள் மாமா கிட்டே அனுப்பாம இருந்தா.நான் இன்னிக்கு எப்படி இந்த சிதம்பரம் நடராஜர் கோவில்லே ஒரு குருக்கள் வேலேயே பண்ணீண்டு வந்துண்டு இருக்க முடியாதே மாமா.நான் ஒரு வேலேயும் பண்ணீண்டு வறாம,இன்னிக்கு ரொடிலே தானே நின்னுண்டு இருப்பேன்” என்று சொல்லும் போது சாம்பசிவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“சாம்பசிவா,நான் ஒன்னும் பொ¢ய மனசு எல்லாம் பண்ணலே.எல்லாம் அந்த சிதம்பரம் நடராஜர் லீலை.உன் கையாலே அவருக்கு அபிஷேகமும் அலங்காரமமும் பண்ணனும்ன்னு அவர் ஆசைப் பட்டு இருக்கார்.உனக்குக் கோவில்லே ஒரு ‘ரூமையும்’ கொடுத்து இருக்கார்.இதுக்கு அந்த நடராஜர்
என்னேயும்,ரமணி குருக்களையும் உபயோகப் படுத்திண்டு வந்து இருக்கார்.அவ்வளவு தான்”என்று மஹா தேவ குருக்கள் சொன்னதும் சாம்பசிவன் அவரை ஆச்சரியமாகப் பார்த்து கொண்டு இருந்தான்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *