அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2021
பார்வையிட்டோர்: 2,964 
 
 

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

அந்த மானேஜர் சாம்பசிவனைப் பார்த்து “ஐயரே,ஒரு நாள் ‘ரூம்’வாடகை இருபது ரூபாய். மாசத்துக்கு நீங்க தங்கினா அறு நூரு ரூபாய்.இங்கே தங்கி இருக்கிறங்களுக்கு குளிக்க நாலு ‘ரூமும்’,நாலு ‘பாத் ரூமிம்’ இருக்கு.நீங்க ‘அட்வான்ஸா’ நூரு ரூபாய் தரணும்.நீங்க ‘ரூமே’ காலிப் பண்ணும் போது நான் உங்களுக்கு,மீதி பணத்தேத் திருப்பிக் குடுப்பேன்” என்று சொன்னார்.

சாம்பசிவன் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “சார்,நான் மூனு நாளைக்குத் தங்க வேண்டி இருக்கும்.இந்தாங்க நூறு ரூபா.எனக்கு என் ‘ரூமே’க் காட்டுங்க” என்று சொன்னான்.அந்த மானேஜர் சாம்பசிவன் கொடுத்த நூரூ ரூபாயை வாங்கி கல்லாவில் போட்டு பூட்டி விட்டு ஒரு ‘நோட்டு புக்கை’ எடுத்து சாம்பசிவனைப் பார்த்து “உங்க பேர்,உங்க அப்பாவின் பேர்,உங்க ‘அட்ரஸ் ஸை’யும் சொல்லுங்க” என்று சொன்னதும் சாம்பசிவன் அவர் கேட்ட எல்லா விவரமும் சொன்னான்.

சாம்பசிவன் சொன்ன எல்லா விவரத்தையும் அந்த ‘நோட்டு புக்கில்’ எழுதி முடித்த பிறகு, மானேஜர் ‘டிராயா¢ல்’ இருந்த சாவிக் கொத்திலே ஒரு சாவியை எடுத்துக் கொண்டு,சாம்பசிவனை அழைத்துக் கொண்டு வந்து காலியாக இருந்த ‘ரூமை’த் திறந்து காட்டினார்.

அந்த ‘ரூமி’ல் ஒரு கட்டிலும்,பழைய மெத்தையும்,ஒரு சேரும்,ஒரு அலமாரியும்,ஒரு ஜன்னலும் தான் இருந்தது.

“ஐயரே ‘ரூம்’ பிடிச்சு இருக்கா.பிடிச்சி இருந்தா எங்க வேலைக்கார பையன்,மெத்தே மேலே ஒரு புதுத் துணியே போடுவான்.நீங்க தங்கி இருக்கலாம்.இந்த வராண்டா கோடியிலே இருக்குது நான் சொன்ன ‘பாத் ரூம்’களும்,குளிக்கும் ரூம்களும்” என்று சொன்னார்.‘நாம இந்த் ‘ரூம்’லெ ரெண்டோ மூனோ நாளைக்குத் தானே தங்கப் போறோம்.இந்த ‘ரூம்’ நமக்குப் போதுமே’ என்று நினைத்து “சார்,எனக்கு இந்த ‘ரூம்’ பிடிச்சு இருக்கு.நீங்க உங்க பையனை அனுப்பி இந்த மெத்தைக்கு ஒரு புது துணியே போடச் சொல்லுங்க” என்று சொன்னதும் அந்த மானேஜர் போய் விட்டார்.

பத்து நிமிஷத்துக்கு எல்லாம் ஒரு பையன் வந்து மெத்தைக்கு ஒரு புது துணியையும், தலை அணைக்கு ஒரு உரையையும் போட்டு விட்டுப் போனான்.சாம்பசிவன் பகவானையும்,அப்பா,அம்மா ரெண்டு பேரையும் நன்றாக வேண்டிக் கொண்டு அந்து ‘ரூமு’க்குள் போய் தன் துணிப் பையை அந்த ‘ரூமி’ல் இருந்த அலமாரியிலே வைத்தான்

பிறகு தன் ‘ரூமை’ பூட்டிக் கொண்டு,ஒரு ‘டவலை’ எடுத்துக் கொண்டு,அந்த மானேஜர் காட்டின குளியல் ‘ரூமு’க்குப் போய் நன்றாகக் குளித்து விட்டு.துடைத்துக் கொண்டு தன் ‘ரூமு’க்கு வந்து,ஒரு நாலு முழம் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு,நெற்றியிலே பட்டையாக விபுதியை இட்டுக் கொண்டு,காலில் செருப்பைப் போட்டுக் கொள்ளாமல் ஒரு துண்டை மட்டும் தோள் மேலே போட்டுக் கொண்டு,’ரூமை’ விட்டு வெளியே வந்து,‘ரூமை’ நன்றாகப் பூட்டி விட்டு,சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

சாம்பசிவன் வெளியே போகும் போது அந்த மானேஜர் “ஐயரே,’ரூம்’ சாவியே குடுத்து போங்க. ‘ரூம்’ சாவி எங்க கிட்டே தான் இருக்கணும்.நீங்க திரும்பி வரும் போது நானோ,இல்லே வேறே மானே ஜரோ உங்க ‘ரூம்’சாவியே குடுப்போம்.உங்க ‘ரூம்லே’ இருகிற சாமான்களுக்கு நாங்க முழு பொறுப்பு. உங்க ‘ரூம்’ நம்பர் 16. ஞாபகம் வச்சுகுங்க” என்று சொன்னார்.

உடனே சாம்பசிவன் “சா¢ங்க,இந்தாங்க ‘ரூம்’ சாவி” என்று சொல்லி அவன் கையிலே இருந்த ‘ரூம்’சாவியை மானேஜா¢டம் கொடுத்தான்.’அப்பாடா,நல்ல வேளையா ‘ரூம்’ சாவியே வாங்கிண்டாரே. நாம அந்த சாவியேப் பத்தி நாம கவலைப் படாம இருந்து வரலாம்’ என்று நினைத்து சந்தோஷப் பட்டான்.

‘ஹாஸ்டலை’ விட்டு வெளீயே வந்த சாம்பசிவன்,நேராக சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குப் போனான்.போகிற வழியிலே இருந்து ஒரு பூக்கடையிலே ஒரு வில்வ மாலையும்,ஒரு அர்ச்சனைத் தட்டையும் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் போனான்.

கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை டிக்கட்டைவாங்கிக் கொண்டு,நடராஜரை தா¢சனம் பண்ணி விட்டு,அங்கே இருந்த ஒரு குருக்கள் இடம் வில்வ மாலையும் அர்ச்சனைத் தட்டையும் கொடுத்து “சுவாமி பேருக்கு ஒரு அர்ச்சனைப் பண்ணுங்கோ” என்று சொன்னான் சாம்பசிவன்.

உள்ளே போன குருக்களைப் போல நானும் ஒரு நாள் இந்த கோவில்லே ஒரு குருக்கள் ஆகணும் என்று மிகவும் ஆசைப் பட்டான் சாம்பசிவன்.

அந்த குருக்கள் சாம்பசிவன் கொடுத்த வில்வ மாலையையும், அர்ச்சனைத் தட்டையும் வாங்கிக் கொண்டு போய், நடராஜருக்கு அர்ச்சனைப் பண்ணி விட்டு,பிறகு தேங்காயை உடைத்து. சுவாமிக்கு ‘நைவேத்யம்’ பண்ணி விட்டு,சுவாமிக்கு கற்பூரம் காட்டி விட்டு,அந்த கற்பூரத்தை சாம்பசிவனிடம் காட்டினார்.

அது வரை கண்களை மூடிக் கொண்டு சிவ மந்திரங்களை சொல்லிக் கொண்டு வந்து இருந்த சாமசிவன் அந்த குருக்கள் “தீபத்தை ஒத்துகோங்கோ” என்று சொன்னவுடன்,சாம்பசிவன் தன் கண்களைத் திறந்து கற்பூரத் தீபத்தை ஒத்திக் கொண்டு,குருக்கள் கொடுத்த விபூதியை வாங்கிக் கொண்டு தன் நெற்றீயிலே இட்டுக் கொண்டு அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டான்.

“பகவானே,எனக்கு இந்த ஊரிலே யாரையும் தெரியாது.ஆனா எனக்கு தினமும் உங்களே அபிஷேகம் பண்ணி,அலங்காரம் பண்ணி,உங்களுக்கு நைவேத்யம் பண்ணி,கற்பூரம் காட்டும் ஒரு அர்ச்சகர் வேலையை எப்படியாவது வாங்கிக் குடுங்கோ” என்று மனதார வேண்டிக் கொண்டு வெளியே வந்தான்.

கோவில் பிரகாரத்தில் மூன்று அர்ச்சகர்களுடன் நின்றுக் கொண்டு இருந்தார் மஹா தேவ குருக்கள்.சாம்பசிவன் அவர்கள் அருகிலே போய் நின்றுக் கொண்டு இருந்தான்.அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார் மஹாதேவ குருக்கள்.

நல்ல வெளுப்பாக இருந்த அவர் நெற்றீயிலே பட்டை பட்டையாக விபூதியை இட்டுக் கொண் டு இருந்தார்.மயில் கண் பஞ்ச கச்ச வேஷ்டியும்,மயில் கண் மேல் துண்டும் போட்டுக் கொண்டு இருந்தார்.

அவர் முகத்திலே ஒரு ‘தேஜஸ்’ தெரிந்தது.

அவர் தன்னுடன் இருந்த ஒரு குருக்களைப் பார்த்து “ஏண்டா ரகுராமா,ஏன் சிவராமன் இப்போ நாலு நாளா கோவிலுக்கு வறது இல்லே.அவனுக்கு உடம்பு சா¢ இல்லையா.உனக்கு அவனைப் பத்தி தெரியுமா” என்று கேட்டதும் ரகுராம குருக்கள் “மாமா,ரெண்டு நாளைக்கு முன்னே சிவராமன் என் கிட்டே சொல்லிண்டு இருந்தான்.அவன் அப்பா அம்மா கும்பகோணத்தில் இருக்காளாம்.அவா அவனுக்கு ஒரு கும்பகோணத்திலேயே ஒரு பெண்ணை நிச்சியம் பண்ணீ இருக்காளாம்.அதனால் அவன் கும்பகோணம் போய்,கல்யாணத்தை பண்ணிண்டு,கும்பக்கோணத்திலே இருக்கிற ஒரு சிவன் கோவிலிலே ஒரு குருக்கள் வேலே செஞ்சிண்டு வரப் போறானாம்.அதான் அவன் ரெண்டு நாளா கோவிலுக்கு வறலே.அனேகமா அவன் கும்பகோணம் போய் விட்டு இருப்பான்” என்று சொன்னான்.

மஹாதேவ குருக்களுக்கு கோவம் வந்தது.

”சுத்த மடப் பயலா இருக்கானே.குருக்கள் வேலேயேக் கத்துக் கொடுத்த என் கிட்டே ஒரு வார் த்தை கூட சொல்லாம போய் இருக்கானே.அவன் உன் கிட்டே சொன்ன சமாசாரத்தே என் கிட்டே சொல்லி இருந்தானா,நான் வேணாம்ன்னா சொல்லி இருக்கப் போறேன்.எதையும் ஒரு குரு கிட்டே சொல்ல வேணமோ.நான் அவனே சந்தோஷமா போக சொல்லி இருபேனே” என்று சொல்லி வருத்தப் பட்டார்.

கொஞ்ச நேரமானதும் மஹாதேவ குருக்கள் ”இப்போ நம்ம கோவிலிலே,சிவராமனையும் சேத்து ரெண்டு குருக்கள் குறைஞ்சுப் போய் இருக்காளே.நான் புது குருக்களை இந்த கோவிலுக்கு கண்டுப் பிடிக்கணும்.அது வரை நீங்க எல்லாம் கோவில்லே குருக்கள் இல்லாம பண்ணிடாதீங்கோ. மாத்தி, மாத்தி ‘டியூட்டி’ பண்ணீண்டு வாங்கோ” என்று சொன்னதும் “சா¢ மாமா,நாங்க நீங்கோ சொன்னா மாதிரி பண்ணீண்டு வறோம்” என்று சொல்லி விட்டுப் போனார்கள்.

மஹாதேவ குருக்கள் தனியாய் இருந்தார்.

’இது தான் நல்ல சமயம்’என்று நினைத்து சாம்பசிவன் தன் தோள் மேலே இருந்த துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக் கொண்டு,அவர் கால்லே ‘சாஷ்டாங்கமாக’ விழுந்து ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,எழுந்து பவ்யமாகக் குனித்துக் கொண்டு ‘அபிவாதயே’ சொன்னான்.

மஹா தேவ குருக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘அவர் யார் இந்தப் பையன்.இவன் என் இப்படி நம்ம கால்லே விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு எழுத்து ‘அபிவாத்யே’ சொல்றான்” என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு,அவன் எழுந்ததும் அவன் தோளைத் தொட்டு “சாம்பசிவன் ஷர்மா தீர்காயுஷ்மான் பவ” என்று ஆசீர்வாதம் பண்ணீனார் மஹா தேவ குருக்கள்.

“நீ யாருப்பா.நீ ஏன் எனக்கு ‘ஷாஷ்டாங்கமா’ ஒரு நமஸ்காரத்தைப் பண்ணீட்டு கூடவே ஒரு ‘அபிவாதயே’ சொன்னே”

“மாமா,என் பேர் சாம்பசிவன்”

“உன் தோப்பனார் பேர் என்ன”

“என் தோப்பனார் பேர் ராமசுவாமி ஐயர்”

“நீ சிதம்பரத்லே இருக்கியா,இல்லே வேறே எங்காயாவது இருந்து வறயா”

“நான் சிவபுரியிலே இருந்து வறேன்,நான் சிதம்பரம் வந்து பத்தாவது படிச்சு‘பாஸ்’ பண்ணி இருக்கேன்.ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் அக்காவுக்கு சிவபுரியிலே இருக்கற என் மாமாவுக்கே கல்யாணம் பண்ணீ குடுத்துட்டா என் அம்மாவும் அப்பாவும்….”என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது மஹாதேவ குருக்கள் சாம்பசிவனைப் பார்த்து “என் கிட்டே உங்க ஆத்து கதை எல்லாம் ஏன் எங்கிட்டே சொல்லிண்டு இருக்கே.நீ ஏன் எனக்கு ‘ஷாஷ்டாங்கமா’ நமஸ்காரம் பண்ணீ ‘அபிவாதயே’ சொன்னே.அதுக்கு காரணத்தே முதல்லே சொல்லு” என்று கொஞ்சம் உரத்தக் குரலில் கேட்டார்.

“மாமா,எனக்கு மேலே படிக்க ஆசை இல்லே.எனக்கு இந்த நடராஜர் கோவிலிலே ஒரு குருக்கள் ஆகணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.எனக்கு ‘உபனயனம்’ நடந்த நாள்ளே இருந்து ரெண்டு வேளையும் தவறாம ‘சந்தியாவந்தனம்’ பண்ணிண்டு வந்துண்டு இருக்கேன்.எனக்கு நடராஜருக்கு அபிஷேகம் பண்ணீ,அலங்காரம் பண்ணி,நேவேத்யம் காட்டி,கற்பூரம் காட்டணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.நீங்கோ எனக்கு இந்த குருக்கள் உத்யோகத்தே கொஞ்சம் சொல்லிக் குடுக்க முடியுமா”என்று சொல்லி விட்டு மறுபடியும் அவர் காலில் விழுந்து நமஸ்காரம் பண்ணீனான்.

சாம்பசிவன் தோளைத் தொட்டு எழுப்பி “நீ ஆசைப் படறே சா¢.உன் அப்பாவும் அம்மாவும் உன்னே இந்த குருக்கள் வேலேக்குப் போக சம்மதிச்சு இருக்காளா.நாளைக்கு உன்னே நான் ஒரு குருக்கள் ஆக்க சொல்லித் தறேங்கிற சமாசாரம் அவாளுக்கு தெரிய வந்தா,அவா என் கிட்டே வந்து ’எங்களேக் கேக்காம எப்படி நீங்கோ எங்க பையனை ஒரு குருக்கள் ஆக்கினேள்’ன்னு சொல்லி சண்டே போட வந்தாள்ன்னா நான் என்ன பண்ணட்டும் சொல்லு” என்று தன் சந்தேகத்தைக் கேட்டார் மஹா தேவ குருக்கள்..

உடனே சாம்பசிவன் “மாமா,நான் என் அப்பாவின் பூரண சம்மதத்துடன் சிதம்பரம் கிளம்பி வந்து இருக்கேன்.என் அம்மாவுக்கும், அக்காவுக்கும்,அத்திம்பேருக்கும் நான் நடராஜர் கோவிலீலே ஒரு குருக்கள் ஆறதுலே பூரண சம்மதம்….”என்று சொல்லும் போது சாம்பசிவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

மஹா தேவ குருக்களுக்கு ஒன்னும் புரியவில்லை.’ஏண்டா இந்த பிள்ளையாண்டான் அவா ஆத்லே எல்லாருக்கும் சம்மதம்ன்னு சொல்லிட்டு கண்லே ஜலம் விடறான்’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தார்.

“என்னே மன்னிசிடுங்கோ மாமா.என் அம்மா பூரண சம்மதம் தந்தாளே ஒழிய, நான் ஒரு குருக்கள் ஆறதே அவ பாக்காம,போன வருஷம் ‘திடீர்’ன்னு நெஞ்சு வலி வந்து சிதம்பரம் ‘ராதா நர்ஸிங்க் ஹாஸ்பிடலிலே’ காலம் ஆயிட்டா.நான் என் அம்மாவே நினைச்சுண்டேன்.என் கண்லே ஜலம் வந்துடுத்து” என்று சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தான் சாம்பசிவன்.

“நீ சிதம்பரத்லே எங்கே தங்கி இருக்கப் போறே” என்று கேட்டார் மஹா தேவ குருக்கள்.

“நான் கோவிலுக்கு எதிரே இருக்கற ‘ஆண்கள் ஹாஸ்டலிலே’ ஒரு ‘ரூமி’லே தங்கி இருக்கேன்” என்று சொன்னான் சாம்பசிவன்.

உடனே மஹா தேவ குருக்கள் “வேணாம்ப்பா.அந்த ‘ஹாஸ்டலிலே’கண்டவா தங்குவா.ராத்திரி பூரா சினிமாப் பாட்டுக் கேட்டுண்டு இருப்பா.கூத்து அடிச்சுண்டு இருப்பா.சில பசங்க குடிச்சிட்டு கூட வருவா.நீ அங்கே தங்க வேணாம்.நான் கோவில் மானேஜர் கிட்டே சொல்லி,உனக்கு இந்த கோவில் லே ஒரு ‘ரூம்’ தரச் சொல்றேன்.நீ அந்த ‘ரூம்’லே தங்கிண்டு வா” என்று சொன்னதும் சாம்பசிவன் “ரொம்ப நன்றி மாமா,நீங்கோ பண்ண இந்த உதவியே நான் என் ‘அயுசு பர்யந்தம்’ மறக்க மாட்டேன்”என்று கண்களில் மல்கச் சொன்னான்.

உடனே மஹாதேவ குருக்கள் ”உனக்கு குருக்கள் வேலேயேச் சொல்லித் தர நான் ஒருத்தர் கிட்டே உன்னே அனுப்பறேன்.அவர் இந்த கோவிலிலே ஒரு அர்ச்சகரா இருந்துட்டு, ரொம்ப வயசாயி ட்டதாலே ஆத்லே இருந்துண்டு வறார்.நீ அவர் கிட்டே குருக்கள் வேலேயே நன்னா கத்துண்டு வா.நீ அந்த வேலேயே நன்னா கத்துண்டு வந்தப்புறம்,அந்த வாத்தியார் என் கிட்டே வந்து சொல்லுவார். அன்னியிலே இருந்து நான் இந்த கோவிலிலே ஒரு குருக்களாச் சேத்துக்கறேன்” என்று சொன்னார்.

சாம்பசிவன் மறுபடியும் அவர் காலில் விழுந்து ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு எழுந்து நின்றுக் கொண்டு இருந்தான்.

”ஆனா ஒரு கண்டிஷன்.நீ என்னோடத் தான் இந்த கோவிலிலே இருந்து ண்டு வரணும்.வேறே சிவன் கோவிலிலே சம்பளம் ஜாஸ்தித் தறான்னு சொல்லிட்டு எல்லாம் போகக் கூடாது”என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

சாம்பசிவன் பவ்யமாக” நான் அப்படி எல்லாம் போகவே மாட்டேன் மாமா.நான் உங்க கூடவே இந்த கோவிலிலே இருந்துண்டு வருவேன்.வேறே எந்த சிவன் கோவிலுக்கும் போக மாட்டேன்” என்று கண்களில் கண்ணீர் தளும்பச் சொன்னான்.”நீ தினமும் சாயங்கால வேளைளே மத்த குருக்கள் கூட இருந்துண்டு அவா சொல்ற மந்திரங்களை எல்லாம் கேட்டுண்டு வா” என்று சொன்னார் மஹா தேவ குருக்கள்.

உடனே சாம்பசிவன் “சா¢ மாமா.நீங்கோ சொன்னபடியே தான் தினமும் சாயங்கால வேளைளே மத்த குருக்கள் சொல்ற மந்திரங்களை எல்லாம் கேட்டுண்டு வறேன்” என்று சொன்னான்.

மஹா தேவ குருக்கள் சாம்பசிவனை அழைத்துக் கொண்டு கோவில் மானேஜர் அறைக்குப் போய் “சார்,இந்தப் பையன் சிவபுரியிலே இருந்து வறான்.இவன் ரமணி குருக்கள் கிட்டே அர்ச்சகர் வேலேயேக் கத்துண்டு வரப் போறான்.நீங்கோ அவனுக்கு கோவிலிலே காலியா இருக்கற ஒரு ‘ரூமை’த் தர முடியுமா” என்று கேட்டார்.

உடனே “நீங்கோ சொல்லி தான் நான் ‘ரூம்’ தராம இருக்கப் போறேனா.நிச்சியமா இவருக்கு நான் ஒரு ரூம் தறேன்”என்று சொல்லி விட்டு கோவிலிலே காலியாக இருந்த ஒரு ரூமைத் திறந்து விட்டு “நீங்க இங்கே தங்கி வாங்கோ”என்று சொல்லி ‘ரூம்’ சாவியை சாம்பசிவனிடம் கொடுத்தார்.

சாம்பசிவன் அவருக்கு தன் நன்றியைச் சொல்லி விட்டு அவர் கொடுத்த ‘ரூம்’சாவியை வாங்கிக் கொண்டான்.பிறகு மஹா தேவ குருக்கள் கோவிலிலே இருந்த ஒரு பையனைக் கூப்பிட்டு “ரகு,நீ இந்தப் பையனை ரமணி குருக்கள் கிட்டே அழைச்சிண்டு போய் நான் அனுப்பினேன்னு சொல்லி,இந்த பையனுக்கு குருக்கள் வேலேயே சொல்லித் தரச் சொல்லு” என்று சொன்னார்.

ரமணி குருக்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலிலே ஒரு குருக்களாக வேலைப் பண்ணி வந்தவர். இவர் குருக்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்.வயது அதிகம் ஆகி விட்டதால்,அவர் வீட்டிலேயே இருந்து வந்தார்.சிதம்பரம் கோவில் நிர்வாகம் அவருக்கு மாச சம்பளம் கொடுத்து வந்து,அவரை குருக்கள் வேலைக்கு பிராமண இளைஞர்களுக்கு குருக்கள் வேலேயே ‘கிரமமா’ சொல்லிக் கொடுக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணி இருந்தது.

அப்போது ரமணி குருக்களிடம் இரண்டு பிராமண இளைஞர்கள் குருக்கள் வேலையைக் கற்றுக் கொண்டு வந்தார்கள்.

சாம்பசிவன் மஹா தேவ குருக்களுக்கு தன் நன்றியைச் சொல்லி விட்டு,கோவில் பையனுடன் ரமணி குருக்கள் வீட்டுக்குப் போனான்.கூட வந்த பையன் “மாமா,மஹாதேவ குருக்கள்,இவரை உங்க கிட்ட அனுப்பி இருக்கார்.நீங்க இவருக்கு கோவில் குருக்கள் வேலேயே சொல்லித் தரச் சொன்னார்” என்று சொல்லி விட்டுப் போனான்.

ரமணி குருக்கள் சாம்பசிவனைப் பார்த்து “ உன் பேர் என்ன” என்று கேட்டதும் ”என் பேர் சாம்பசிவன் மாமா” என்று சொல்லி விட்டு,அவருக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,எழுந்து ‘அபிவாதயே’ முழுக்கச் சொன்னான்.

”உன் சொந்த ஊர் சிதம்பரமா, இல்லே வேறே ஊரா”

“என் சொந்த ஊர் சிவபுரி”

“உன் தோப்பனார் பேர் என்ன”

“என் தோப்பனார் பேர் ராமசுவாமி ஐயர்”

“இப்போ நீ எங்கே தங்கி இருகே” என்று கேட்டதும் சாம்பசிவன் “மாமா,மஹா தேவ குருக்கள் மாமா,கோவில் மானேஜர் கிட்டே சொல்லி எனக்குக் கோவிலிலே ஒரு ‘ரூம்’ வாங்கித் தந்து இருக்கார். நான் அந்த ரூம்லே தங்கிகிண்டு வரப் போறேன்” என்று சொன்னான்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு அவர் “இப்போ மணி பன்னண்டு அடிக்கப் போறது.நீ நாளைக்குக் காத்தாலே சா¢யா ஏழு மணிக்கெல்லாம்,குளிச்சுட்டு,சந்தியாவந்தனத்தைப் பண்ணிட்டு இங்கே வா.நான் இவாளோட சேத்து உனக்கும் குருக்கள் வேலேயே சொல்லித் தறேன்” என்று ரமணி குருக்கள் சொன்னதும் ”ரொம்ப நன்றி மாமா.நான் நாளைக்கு காத்தாலே குளிச்சுட்டு, சந்தியாவந்தனத்தைப் பண்ணிட்டு,சா¢யா ஏழு மனிக்கு எல்லாம் இங்கே வந்துடறேன்” என்று சொல்லி விட்டு ரமணி குருக்கள் வீட்டை விட்டு சந்தோஷமாக வெளீயே வந்தான் சாம்பசிவன்.

சாம்பசிவன் அவன் காலையிலே தங்கி இருந்த ‘ஆண்கள் ஹாஸ்டல்’ ‘ரூமைக் காலி பண்ணி விட்டு,கோவில் ‘ரூமில்’ தங்கி வந்து,மஹாதேவ குருக்கள் சொன்னது போல அன்று சாயங்காலமே மற்ற குருக்கள் கூட இருந்து வந்து குருக்கள் அவர்கள் சொல்லும் மந்திரங்களை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தான்.

சாம்பசிவன் தினமும் காலையிலே எழுந்து குளித்து விட்டு,நெற்றியிலே பட்டை பட்டையாக விபூதியை இட்டுக் கொண்டு சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு ரமணி குருக்கள் வீட்டுக்குப் போய் மற்ற பையன்களுடன் கோவில் குருக்கள் வேலையைக் கற்றுக் கொண்டு வந்தான்.

எல்லா ஞாயிற்றுக் கிழமைகளில் லீவு விட்டு இருந்தார் ரமணி குருக்கள்.

அந்த வார ஞாயிற்றுக் கிழமை சாம்பசிவன் காலையிலேயே எழுந்து குளித்து விட்டு,சந்தியாவ ந்தனத்தைப் பண்ணி விட்டு,சிவபுரிக்குப் போய் சிதம்பரத்தில் நடந்த எல்லாவற்றையயும் ஒன்று விடாமல் அப்பாவிடம் சந்தோஷமாகச் சொன்னான்.

ராமசாமி மிகவும் சந்தோஷப் பட்டு “நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சாம்பு.நீ எப்படியோ, யாரையோ பிடிச்சு இந்த குருக்கள் வேலேயே கத்துண்டு வறே.உங்க அம்மா உயிரோடு இருந்தா,நீ குருக்கள் வேலேயே கத்துண்டு வறேன்னு சொன்னதும்,அவ கால் தரையிலே பாவாது.அவ சந்தோ ஷத்லே குதிப்போ” என்று சொல்லும் அவரை அறியமலே அவர் கண்களில் கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது.

தன் தோள் மேலே போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் துடைத்துக் கொண்டார்.

“ஆமாம்ப்பா,எனக்கும் இந்த சந்தோஷ சமாசாரத்தேக் கேக்க அம்மா இப்போ நம்மோடு இல்லையேன்னு நினைச்சா அழுகை அழுகையா வறது” என்று சொல்லி விட்டு “அப்பா,நீங்களும் பாவம் தனியா இருந்து சமைச்சு சாப்பிட்டுண்டு வறேள்.இந்த ஒரு வருஷமா நான் உங்களோட இருந்து வந்தேன்.இப்போ நீங்க தனியா இருந்து வறதே நினைச்சாலும் நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.அக்காவும்,அத்திம்பேரும் அடிக்கடி வந்து உங்களேப் பாத்துட்டுப் போறாளா” என்று கேட்டான் சாம்பசிவன்.

“அவா ரெண்டு பேரும் தவறாம மாசத்துக்கு ஒரு தடவை என்னே வந்துப் பாத்துட்டுப் போறா” என்று சொன்னார் ராமசாமி.

அன்று பூராவும் அப்பாவுடன் இருந்து விட்டு ராத்திரி சீக்கீரமாக சாப்பிட்டு விட்டு,அக்கா வீட்டுக்குப் போய் அவர்கள் எல்லோர் இடமும் சிதம்பரத்தில் நடந்த எல்லாவற்றையும் சொல்லி சந்தோ ஷப் பட்டான் சாம்பசிவன்.

உடனே கணேசன்” நேக்குக் கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.நீ இன்னும் கொஞ்ச மாசத்லே சித்ம்பரம் நடராஜர் கோவிலிலே குருக்களா இருந்து வறப் போறே.உன் ஆசை நிறை வேறி இருக்கு.எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது.இந்த சந்தோஷ சமாசாரத்தேக் கேக்க இப்போ உன் அம்மா பத்மா உயிரோடு இல்லே” என்று சொல்லி மிகவும் வருத்தப் பட்டார்.

கமலாவும்,ராதாவும்,சுந்தரும் தங்கள் சந்தோஷத்தை சாம்பசிவனுக்கு சொன்னார்கள்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு சாம்பசிவன் கடைசி ‘மினி பஸ்ஸை’ப் பிடித்துக் கொண்டு சிதம்பரம் வந்து தன் கோவில் ’ரூமு’க்கு வந்தான்.

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சாம்பசிவன் சிவபுரிக்கு போய் அப்பாவுடன் இருந்து விட்டு, இரவு சாப்பிட்ட பிறகு,அக்கா,அத்திம்பேரையும்,ராதாவின் மாமனாரையும்,மாமியாரையும் பார்த்து விட்டு சிதம்பரத்துக்கு வந்துக் கொண்டு இருந்தான்.

திங்கட் கிழமையில் இருந்து சனிக் கிழமை வரைக்கும்,சாம்பசிவன் ரமணி குருக்கள் இடம் குருக்கள் வேலையைக் கற்றுக் கொண்டு வந்தான்.சாயங்கால வேளைகளில் மற்ற குருக்கள் கூட குருக்கள் அர்ச்சனை செய்யும் போது சொல்லி வரும் மந்திரங்களையும்,கற்பூரம் காட்டும் போது சொல்லிக் கொண்டு வந்த மந்திரங்களையும் கேட்டுக் கொண்டு வந்தான்.

அடிக்கடி மஹாதேவ குருக்களை சந்தித்து ”மாமா,நான் ரமணி குருக்கள் சொல்லிக் குடுக்கற தே எல்லாம் நன்னா கத்துண்டு வறேன்.கூடவே சாயங்காலத்திலே மத்த குருக்கள் கூட இருந்துண் டு,அவா அர்ச்சனை பண்ணும் போதும்,கற்பூரம் காட்டும் போதும் சொல்லும் மந்திரங்களை எல்லாம் கத்துண்டு வறேன்” என்று சொல்லி வந்தான்.

மஹா தேவ குருக்கள் “நான் எல்லாத்தையும் பாத்துண்டு தானே வறேன்” என்று சொல்லி சிரித்தார்.

சாம்பசிவன் ஞயிற்றுக் கிழமைகளில் சிவபுரிக்குப் போய் அப்பாவைப் பார்த்து போது ரமணி குருக்கள் சொல்லிக் கொடுக்கும் மந்திரங்களை எல்லாம் அப்பாவிடம் சொன்னான்.ராமசாமி மிகவும் சந்தோஷப் பட்டார்.அப்பாவைப் பார்த்து விட்டு கிளம்பி வரும் போது மறக்காமல் அக்கா அத்திம்பேர் குடும்பத்தையும் பார்த்து விட்டு,ராதா மாமனாரிடமும்,அத்திம்போ¢டமும் ரமணி குருக்கள் சொல்லிக் கொடுக்கும் மந்திரங்களை எல்லாம் சொன்னான்.

இருவரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

”பராவயில்லையே,நீ அந்த குருக்கள் சொல்லிக் குடுக்கற மந்திரங்களை எல்லாம் ரொம்ப ‘ஸ்பஷ்டமா’ சொல்றயே.நீ கூடிய சீக்கிரத்லேயே ஒரு குருக்களா ஆயிடுவேன்னு எனக்குப் படறது” என்று சொல்லி சாம்பசிவனை மிகவும் பாராட்டினார் கணேசன்.பிறகு எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு சிதம்பரம் வந்து,அவன் ‘ரூமி’ல் வந்து தங்கிக் கொண்டு வந்தான் சாம்பசிவன்.

ரமணி குருக்கள் சாம்பசிவனைப் பாத்து “இந்த நாத்திக் கிழமே,நீ ‘க்ளாஸ்க்கு’ வா.நான் உங்க ளுக்கு எல்லாம் பரி¨க்ஷ வக்கணும்”என்று சொன்ன ஞாயிற்றுக் கிழமைகளில் சாம்பசிவனுக்கு சிவ புரிக்குப் போக முடியாமல் இருந்தது.அப்போதெல்லாம் சாம்பசிவன் அவன் அப்பாவிடமும்,அத்திம் போ¢டமும்,அவர் அப்பாவிடமும் ‘·போனில்’ பேசி அவர்களிடம் “எனக்கு இந்த நாத்திக் கிழமே ‘குருக்கள் பாடத்லே’ பரி¨க்ஷ வச்சு இருக்கார் ரமணி குருக்கள் மாமா.அதான் என்னால் சிவ புரிக்கு வர முடியலே”என்று சொல்லி விட்டு,அவர்கள் சௌக்கியத்தைக் கேட்டு வந்தான் சாம்பசிவன்.
அந்த ஞாயிற்றுக் கிழமை சாம்பசிவனுக்கு தன்னுடைய அப்பாவையும்,அக்கா அத்திம்பேரை யும் போய் பார்க்க முடிய வில்லையே என்கிற வருத்தம் இருந்தது.

இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.

ரமணி குருக்கள் சாம்பசிவனைப் பார்த்து ”நான் உனக்கு சைவ சிந்தாந்தப் படி கோவில் குருக்கள் வேலையை சொல்லிக் கொடுத்து விட்டேன்.நான் வச்ச பரி¨க்ஷயிலே நீ ‘பாஸ்’ பண்ணிட் டே.நீ இனிமே தனியா குருக்கள் வேலையைப் பண்ணீண்டு வரலாம்” என்று சொன்னதும் சாம்ப சிவன் அவருக்கு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,எழுந்துக் கொண்டு ‘அபிவாதே’ முழுக்கச் சொன்னான்.

ரமணி குருக்கள் உட்கார்ந்துக் கொண்டு இருந்த படியே சாம்பசிவனின் தலையிலே கையை வைத்து “சாம்பசிவன் ஷர்மா தீர்காயுஷ்மான் பவ” என்று ஆசீர்வாதம் பண்ணீனார்.

‘ரொம்ப நாளாச்சே நாம ரமணி குருக்களே பாத்து’ என்று நினைத்து மஹா தேவ குருக்கள் ரமணி குருக்களைப் பார்க்க வந்து இருந்தார்.மஹா தேவ குருக்களைப் பார்த்ததும் ரமணி குருக்கள் “வா மஹாதேவா,எங்கே இவ்வளவு தூரம்.சௌக்கியமா இருக்கியா.உன் ஆத்துக்காரி சௌக்கியமா. உன் பொண்ணு எந்த ‘க்லாஸ்லே’ படிக்கறா” என்று விசாரித்தார்.

மஹா தேவ குருக்கள் ”நமஸ்காரம் மாமா.நானும்,என் ஆத்துக்காரியும்,என் பொண்ணும் உங்க ஆசிர்வாதத்லே சௌக்கியமா இருந்துண்டு வறோம்.என் பொண்ணு பத்தாவது ‘பாஸ்’ பண்ணீட்டா. அவ படிச்சது போறும்ன்னு ஆத்லேயே வச்சுண்டு வறோம்” என்று சொன்னார்

உடனே ரமணி குருக்கள்” உனக்கு ஒரே பொண்ணாச்சே அவ.அவளே மேலே படிக்க வக்க லையா” என்று கேட்டார்.“இல்லே மாமா.காலம் கெட்டு இருக்கு.அவ படிச்சது போறும்ன்னு என் ஆத்துக்காரி சொல்லிட்டா.நானும் சா¢ன்னு சொல்லிட்டேன்”என்று சிரித்துக் கொண்டே சொன்னார் மஹா தேவ குருக்கள். ரமணீ குருக்கள் கிண்டலாக “ஆமாம்,ஆமாம்.ஆத்துக்காரி சொன்னா உடனே கேக்கணும்.அவ தானே ‘அன்ன தாதா’ இல்லையா சொல்லு” என்று தன் பொக்கை வாயால் சிரித்துக் கொண்டேசொன்னார்.

உடனே மஹாதேவ குருக்கள் ” நீங்கோ சொல்றது நூத்துக்கு நூறு நிஜம் மாமா.அவா தினமும் சமையல் பண்ணாட்டா இந்தக் ‘குக்ஷ¢’க்கு சாப்பாடு ஏது.பட்டினியாத் தானே இருந்துண்டு வரணும்” என்று சொல்லி ரமணி குருக்கள் சொன்னதை ஆமோதித்தார்.

கொஞ்ச நேரமானதும் “மாமா,கோவிலிலே குருக்களா இருந்த மூனு பேர் வேறே கோவிலுக்கு குருக்கள் வேலைக்குப் போயிட்டா.கோவில்லே குருக்கள் குறைவா இருக்கா.ரொம்ப சிரமாமா இருக்கு உங்க கிட்டே கத்துக்கற பையங்க யாராவது குருக்கள் வேலேக்கு ரெடியா இருக்காளான்னு கேட்டுண் டு,கூடவே ரொம்ப நாளாச்சேன்னு,உங்களையும் ஒரு எட்டுப் பாத்துட்டு வரலாம்ன்னு நினைச்சுத் தான் வந்தேன்” என்று சொன்னார் மஹாதேவ குருக்கள்.

”இந்த பையன் சாமசிவன் எல்லா மந்திரங்க¨ளையும்,குருக்கள் வேலையை யும் நன்னா கத்து ண்டுட்டான்.இவன் மந்திரங்களை எல்லாம் ரொம்ப ‘ஸ்பஷ்டமா’ சொல்றான்.நான் ஒரு தடவை சொல் லிக் குடுக்கற மந்திரத்தை, இன்னொரு தடவை சொல்லிக் குடுக்கவே வேணாம்.அவன் ‘ரூமு’க்குப் போய்,நான் சொல்லிக் குடுக்கற மந்திரத்தே நன்னா சொல்லி பழகிண்டு வந்து இருக்கான் நான் வச்ச பரிக்ஷலே இவன் ‘பாஸ்’ பண்ணிட்டான்.இவன் ரொம்ப இஷடமா குருக்கள் வேலேயே கத்துண்டு வந்தான்” என்று சொல்லி சாம்பசிவனை காட்டினார் ரமணி குருக்கள்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *