அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 4,564 
 

அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30

“அப்படி இல்லே மாமா.நான் தினமும் என் சமையலை ரொம்ப கவனமாத் தான் பண்ணீண்டு வறேன்.இப்போ இன்னும் சந்தோஷமா சமையல் பண்ணீன்டு வருவேன்னு தான் சொன்னேன்”என்று சொன்னார் சுந்தரம்.

“நான் உன்னே ‘சீண்ட’த் தான் சுந்தரம் சும்மா சொன்னேன்.உனக்குத் தான் நன்னா தெரியுமே எனக்கு உன்னையோ,வரதனையோ ‘சீண்டாட்டா’ பொழுது போகாதுன்னு” என்று சொல்லி சிரித்தார் பரமசிவம்.

கொஞ்சம் நேரம் ஆனதும் பரமசிவம் “சதாசிவா,இவன் பேர் வரதன்.உன் பாட்டிக்கு சொந்தத் தம்பி.ரொம்ப வருஷமா வரதன் இந்த ஆத்லே இருந்துண்டு வறான்.இவன் பேர் சுந்தரம்.இந்த ஆத்லே பதி நாலு வருஷமா சமையல் வேலை செஞ்சு வறான்.இவனுக்கு முன்னாடி இவன் அம்மா இந்த ஆத்லே சமையல் வேலை செஞ்சுண்டு இருந்தார்.அந்த மாமி,வயசான அப்பாவுக்குத் துணையா இரு ந்துண்டு,சமைச்சுப் போட்டுண்டு வரணும்ன்னு சொல்லி,அவ பையன் சுந்தரத்தை நம்மாத்துக்கு சமையல் வேலேக்கு அனுப்பினா.அன்னேலே இருந்து சுந்தரம் நம்மாத்திலே சமையல் பண்ணீண்டு வறான்.பாவம் அந்த சமையல் கார மாமி சமீபத்லே காலமாயிட்டா” என்று சொல்லி சுந்தரத்தையும் வரதனையும் அறிமுகப் படுத்த்தினார்.

உடனே சதாசிவம் ரெண்டு பேருக்கும் கையைக் கூப்பி நமஸ்காரம் சொன்னான்.

சதாசிவம் தன் ‘செல் போனை’ ஆன் பண்ணி அவன் அப்பாவுக்கு ‘போன்’ பண்ணினான்.

‘தன் பையன் ‘போன்’ பண்ணி இருக்கான்’ என்று தெரிந்ததும் ரமேஷ்,ஒரு பக்கம் பயத்துட னும்,ஒரு பக்கம் சந்தோஷத்துடனும் ‘போனை ஆன்’ பண்ணி “ ரமேஷ் ஹியர்”’என்று சொன்னான்.

சதாசிவம் உடனே “அப்பா, நான் சதா பேசறேன்.நீங்கோ குடுத்த ‘அட்ரஸ்’ சரியா இருந்தது. நான் அந்த ஆத்துக்குப் போய் ‘காலிங்க் பெல்லை’ அடிச்சேன்.யாரோ ஒருசமையல் கார மாமா தான் கதவைத் தொறந்தார்.நான் தாத்தாவைப் பார்த்து நீங்கோ சொன்னா மாதிரி அவருக்கு ஒரு நமஸ்கா ரத்தைப் பண்ணி விட்டு,’அபிவாதயே’ சொன்னேன்.அப்புறமா நீங்கோ குடுத்து இருந்த ‘லெட்டரை’ தாத்தா கையிலே குடுத்தேன்.அவர் உடனே இந்த ‘சோபா’லே உக்காருப்பா.நீ எனக்கு என்ன கடிதாசு கொண்டு வந்து இருக்கே.யார் எனக்கு இந்த கடுதாசியே எழுதி இருக்கா’ன்னு என் கிட்டே இருந்து வாங்கிண்டா.நான் ‘சோபா’லே எல்லாம் உக்காரலே.அவர் பக்கத்திலே தரையிலேயே உக்கா ந்துண்டேன்” என்று சொல்லி விட்டு அழுதான்.

அவன் அழுவதைக் கேட்ட ரமேஷ்” ஏன் சதா நீ அழறே” என்று கேட்டான்.

“ரொம்ப ‘சாட் நியூஸ்ப்பா’.பாட்டி செத்துப் போய் பதிமூனு வருஷம் ஆயிடுத்தான்ப்பா.தாத்தா இப்போ தனியா இந்த ‘ப்லாட்லே’இருந்துண்டு வறா.அவரும் ரொம்ப ‘வீக்கா’ சோபாவிலே உக்காந் துண்டு இருந்தா.அவர் ஒரு ‘வாக்கரை’ வைத்துக் கொண்டு தான் நடந்துண்டு வறார்” என்று சொல்லி அழுதான் சதாசிவம்.

கொஞ்ச நேரம் ஆனதும் “சுந்தரம் மாமா சமையல் பண்ணீண்டு வறார்.வரதன் மாமா கிட்டே நீங்கோ படுத்துண்டு வந்துக் கொண்டு இருந்த ‘பெட் ரூமை’ சுத்தம் பண்ணச் சொல்லி,என்னே அந்த ‘பெட் ரூம்’லே இருந்து வர சொல்லி இருக்கார் தாத்தா.அவர் என்னே இந்த ஆத்லே இருக்க சொல்லி இருக்கார்.நீங்கோ கவலைப் படாம இருந்துண்டு வாங்கோ” என்று சொன்னான் சதாசிவம்.

“என்ன சொல்றே சதாசிவம்.என் அம்மா செத்துப் போயி பதி மூனு வருஷம் ஆயிடுத்தா என் அப்பாவும் ரொம்ப ‘வீக்கா’ இருக்காரா.அவர் ஒரு ‘வாக்கரே’ வச்சுண்டு நடந்துண்டு இருக்காறா.எனக் கு இந்த ரெண்டு ‘சாட் நியூஸை’க் கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு சதாசிவா” என்று சொல்லி அழுதான் ரமேஷ்.

கொஞ்சம் நேரம் ஆனதும் ரமேஷ் சதாவசிவத்துக்கு ‘போன்’ பண்ணினான்.

”சதாசிவா,நீ சொன்ன ‘சாட் நியூஸை’க் கேட்டதும்,எனக்கு என் அப்பாவை விசாரிக்கணும் ன்னு ரொம்ப ஆசையா இருக்கு.அவர் என் கிட்டே பேசுவாறான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லேன் ‘ப்ளீஸ்’” என்று கெஞ்சினான்.

சதாசிவம் அப்பா கெஞ்சி சொன்னதை பரமசிவத்திடம் சொன்னான்.

பரமசிவத்திற்கு உடனே ரமேஷிடம் பேச மனம் இடம் கொடுக்கவில்லை.

சமையல் கார சுந்தரம் “மாமா,நீங்கோ பழசே எல்லாம்இனிமே உங்க மனசிலே வச்சுக்கக் கூடாது மொள்ள மறக்கக் கத்துக்கணும்.நான் சின்னவன் தான்.உங்களுக்கு நான் சொல்லித் தெரியணும்ன்னு இல்லே.பாவம் ‘அவர்’ தனியா இருந்துண்டு வந்து,அவர் பையனை அமொ¢க்காவிலே இருந்து உங்க கிட்டே அனுப்பி இருக்கார்.இப்போ உங்கப் பையன் அமொ¢க்காலே இருந்து உங்க கிட்டே கெஞ்சிக் கேக்கறார்” என்று தயங்கிக் கொண்டே சொன்னார்.

பரமசிவம் “சுந்தரம் நீ என்னடா எனக்கு பழசே எல்லாம் மறக்க சொல்றது.எனக்கு எல்லாம் தெரியும்டா” என்று கொஞ்சம் கோவத்தில் சொன்னார்.

“தப்பு தான் மாமா.நான் சின்னவன்.நான் உங்களுக்கு சொல்லி இருக்க கூடாது.என்னே தயவு செஞ்சி மன்னிச்சிடுங்கோ.உங்களுக்குத் தெரியாதது ஒன்னும் இல்லே” என்று சொல்லி விட்டு சமையல் வேலையைக் கவனிக்கப் போனார் சுந்தரம்.

பரமசிவம் தன் கண்களை மூடிக் கொண்டு ‘சோபா’வில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.

ஒரு பத்து நிமிஷம் ஆனதும் அவர் தன் கண்களை மெல்லத் திறந்து தன் பேரனைப் பார்த்து “சதாசிவா,நீ உன் அப்பாவுக்கு‘போனை’க் கொஞ்சம் போட்டு என் கையிலே தா” என்று சொன்னார்.

சதாசிவம் சந்தோஷப் பட்டு தன் அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி “அப்பா,தாத்தா என்னைப் பாத்து ‘நீ உன் அப்பாவுக்கு‘போனை’க் கொஞ்சம் போட்டு என் கையிலே தா’ன்னு சொன்னார்” நீங்கோ தாத்தா கிட்டே பேசுங்கோ” என்று சொல்லி ‘போனை’த் தாத்தா கையிலே கொடுத்தான்.

ரமேஷ் ‘போனி’ல் வந்ததும் “அப்பா இந்தப் பாவியே மன்னிச்சிடுங்கோ.நான் ரொம்ப ‘பெரிய தப்பு’ப் பண்ணீட்டேன்.சதா என் கிட்டே பாட்டி செத்துப் போயிட்டான்னு சொன்னான்.என்னாலே தாங்கிக்கவே முடியலே.அப்பா என்ன ஆச்சு அம்மாவுக்கு.அம்மா எப்படி இந்த உலகத்தே விட்டுப் போனா.கொஞ்சம் சொல்லுங்கோப்பா.எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குப்பா.சதாசிவம் சொன்ன வுடன் நான் திடுக்கிட்டுப் போனேன்” என்று கெஞ்சினான் ரமேஷ்.

பரமசிவம் தன் தொண்டையை கனைத்துக் கொண்டு “நீ அமொ¢க்காவிலே இருந்து, நீ ஆசைப் பட்டவளைக் கல்யாணம் பண்ணீண்டேன்னு ‘போன்’ பண்ணீ சொன்னவுடனே உன் அம்மா நெஞ்சைப் பிடிச்சுண்டு ‘நான் ரமேஷ் படிச்சுட்டு சென்னைக்கு வருவான் ஒரு நல்ல பிராமணப் பொண்ணாப் பாத்து கல்யாணம் பண்ணீப்பான்.நான் மாட்டுப் பொண்ணோடவும்,பேரன் பேத்திக ளோட சந்தோஷமா இந்த ஆத்லே இருந்து வறப் போறேன்னு எத்தனை நாள் கனவு கண்டுண்டு வந்து இருந்தேன்ன்னு உங்களுக்குத் தெரியுமா’ன்னு சொல்லி விட்டு ‘சோபா’விலே சாஞ்சவ தான். அப்புறமா அவ கண்ணே முழிக்கலே.ரெண்டு மணி நேரத்லே அவ பிராணன் போயிடித்து” என்று சொல்லி கொஞ்ச நேரம் அழுதார்.

பிறகு “அவ ‘காரியங்களே’ நான் பண்ணீண்டு இருந்ததாலே தான்,நீ அடுத்த பத்து நாளும் பண்ணியும்,நான் ‘போனே’ எடுக்கவே இல்லே” என்று சொன்னார்.

“அம்மா இந்த உலகத்தே விட்டுப் போறதுக்கு நான் காரணமா ஆயிட்டேனே.என்னை அந்த பகவான் கூட மன்னிக்க மாட்டார்.நீங்கோ எங்கே என்னை மன்னிக்கப் போறேள்.நான் அப்படி அவசரப் பட்டு என் கல்யாணத்தே அந்த அமொ¢க்க பொண்ணோட பண்ணீண்டே இருக்கக் கூடாது. நான் ‘ரொம்ப பெரிய தப்பு’ப் பண்ணிட்டேன்” என்று சொல்லி கதறி கதறி அழுதான் ரமேஷ்.

ரமேஷ் அவருக்கு ஒரே பிள்ளை இல்லையா!!.

சரோஜாவும்,பரமசிவமும் தங்களுக்கு இனிமே ‘குழந்தை பாக்கியமே ’ இருக்காது என்று நினை த்து,அந்த ஆசையை மறந்து வாழ்ந்துக் கொண்டு வந்த போது,அவர்கள் தினமும் மனம் உருகி வேண் டி வந்த பகவான் அருளால் பிறந்த ஒரே பையன் அமொ¢க்கவிலே ‘கதறி’ ‘கதறி’ அழுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை பரமசிவத்தால்.

அவரும் கொஞ்ச நேரம் அழுதார்.

பிறகு ”ரமேஷ் அது எல்லாம் நடந்துப் போன கதை.அவ தலை எழுத்து.அவ என்னை தனியா தவிக்க விட்டுட்டு,இந்த உலகத்தே விட்டுப் போய்,இந்த தை மாசம் வந்தா பதி மூனு வருஷம் ஆகப் போறது.சதாசிவம் நீ குடுத்து அனுப்பி இருந்த ‘லெட்டரை’ நான் முழுக்கப் படிச்சேன்.சதாசிவம் நம்மாத்துக்குளே வந்ததும் வராததுமாய்,என் கால்லே விழுந்து ஒரு நமஸ்காரத்தைப் பண்ணீட்டு ‘அபிவாதயே’ சொன்னான்.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

உடனே ரமேஷ் “அப்படியாப்பா.எனக்கும் இத்தனை வருஷத்துக்கு அப்புறமா உங்க கிட்டே ‘சுமுகமா’ பேசினதே நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் உங்க கிட்டே இனிமே தினமும் பேசிண்டு வறேன்ப்பா.நீங்களும் தயவு செஞ்சி என் கிட்டே கொஞ்ச நேரம் பேசிண்டு வாங்கோப்பா” என்று கெஞ்சினான்.

“சரிடா ரமேஷ்.நான் உன் கிட்டே பேசிண்டு வறேன்” என்று சொன்னதும் ரமேஷ் அப்பாவை ‘தாங்க்’ பண்ணி விட்டு, ‘போனைக் கட்’ பண்ணீனான்.

அன்றில் இருந்து ரமேஷ் தன் அப்பாவிடமும் சதாசிவத்திடமும் தினமும் பேசி வந்தான்.

இது வரை தனியாக இருந்து வந்த பரசிவம் தன் பேரன் அமொ¢க்காவிலே இருந்து வந்து இருக் கானே,அவன் கிட்டே கொஞ்ச நேரம் பேசிண்டு இருக்காலாமே என்று நினைத்து,“சதாசிவா,நீ£ மூனு மாச குழந்தையா இருந்தப்ப,உன்னோட அமொ¢க்க அம்மா உன்னே வீட்டுட்டுப் போயிட்டான்னு, உன் அப்பா அந்த ‘லெட்டர்’லே எழுதி இருக்கானே.ரமேஷ் உன்னே எப்படி வளத்து வந்தான்” என்று கேட்டார்.

“தாத்தா,அப்பா எனக்கு தினமும் காத்தாலே பாலே குடிக்க குடுப்பா.அப்புறமா அப்பா ஆபீஸ் க்கு போற வழியிலே இருக்கிற ஒரு ‘க்ரெச்லே’என்னே விட்டுட்டுப் போவா.அந்த ‘க்ரெச்லே’ மூனு ‘லேடீஸ்’ இருந்தா.அவா தான் எனக்கு சாப்பிட கொஞ்சம் வேக வச்ச ‘சீரியல்’ குடுப்பா.நடு நடுவே பாலும் குடிக்கக் குடுப்பா.நாலு மணிக்கு ஒரு தடவே என் ‘டைபரே’ மாத்துவா.நாலு மணிக்கு ஒரு தடவே என்னே தூங்க வச்சுண்டு வருவா.விளயாட நிறைய Toys தருவா.அந்த ‘க்ரெச்லே’ என்னேப் போல பத்து குழந்தைகள் இருந்தா” என்று இழுத்து இழுத்துச் சொன்னான் சதாசிவம்.

சதாசிவம் சொன்னதை ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள் சுந்தரமும் வரதனும்.

கொஞ்ச நேரம் ஆனதும் “அப்பா ஆபீஸ் விட்டு ஆத்துக்கு வரும் போது,என்னே அவர் கார்லே அழைச்சுண்டு வருவார்.அந்த ‘க்ரெச்’க்கு நான் வாரத்லே அஞ்சு நாள் தான் போயிண்டு இருந்தேன். சனிக் கிழமையும்,நாத்தி கிழமையும் நான் அப்பா கூட ஆத்லே இருந்து வந்தேன்.எனக்கு ஒன்னரை வயசு ஆனதும் எனக்கு இங்கிலிஷ் நன்னா பேச வந்தது.அந்த பத்து குழந்தைளே நாலு குழந்தகளே என் அப்பா மாதிரி அவா அப்பா வந்து அழைச்சுண்டு போய்ண்டு இருந்தா.ஆறு குழந்தகளே அவா அம்மா வந்து அழைச்சிண்டு போய்ண்டு இருந்தா” என்று இழுத்து இழுத்துச் சொன்னான் சதாசிவம்.

அது வரையில் சும்மா இருந்த வரதன் “என்ன அத்திம்பேர் இது.அந்த ஊர்லே அவ்வளவு சின்ன குழந்தே விட்டுட்டா,ஆம்படையான்,பொண்டாட்டி பிரிஞ்சிப் போயிடுவாளா என்ன”என்று ஆச்சரியமாகக் கேட்டான்.

“அங்கே ஏண்டா போறே.நம்ம ஊர்லேயே இந்த மாதிரி ஒரு குழந்தே பொறந்ததும் ஆம்படை யான்,பொண்ண்டாட்டி ‘டைவர்ஸ்’ கேட்டுண்டு ‘கேஸ்’ போடறாளே.நானே ரெண்டு பேருக்கு அந்த மாதிரி ‘கேஸே’ வாதாடி ‘டைவர்ஸ்’ வாங்கிக் குடுத்து இருக்கேனே” என்று சர்வ சாதாரணமாக சொன்னார் பரமசிவம்.

“அப்போ அந்த குழந்தேயே யார் வச்சுப்பா அத்திம்பேர்” என்று கேட்டான் வரதன்

“ரெண்டு பேர்லே யாராவது ஒருந்தர் அந்தக் குழந்தேயே வச்சுக்க ஆசைப் பட்டா,அவா அந்தக் குழந்தேயே வச்சுப்பா.ரெண்டு பேருக்கும் அந்தக் குழந்தே வேணாம்ன்னா,ரெண்டு பெரும் சம்மதப் பட்டு அந்த குழந்தேயே ஒரு அனாதை இல்லத்லே விட்டுடுவா” என்று சொன்னார் பரமசிவம்.

“அந்த மாதிரி ஆம்படையான் பொண்டாட்டிக்கு ஒருத்தரே ஒருத்தருக்குப் பிடிக்கலேன்னா ‘டைவர்ஸ்’ பண்ற சமாசாரம் எனக்குத் தெரிஞ்சு இருந்துன்னா,நான் பேசாம லலிதாவே ‘டைவர்ஸ்’ பண்ணிட்டு.சுந்தரம் மாமா மாதிரி ஒண்டிக் கட்டையா இருந்துண்டு வருவேனே” என்று சொன்னான் வரதன்.
பரமசிவம் ”வாயே மூடுடா வரதா.அந்த மாதிரி எல்லாம் பண்ணவே கூடாது.அது ‘மஹா’ பாவமான’ காரியம்.’அக்னி சாட்சியா’,அக்னியே மூனு தரம் வலம் வந்து,வேத மந்திரங்கள் எல்லாம் சொல்லி ஒருத்தியே கல்யாணம் பண்ணீண்டப்புறமா,நம்ம ‘இந்து மத சாஸ்த்ரத்லே’ பகவானாப் பாத்து ஒருத்தரே எப்ப பிரிக்கறோ,அப்ப தான் ஒருத்தரே பிரிஞ்சி ஒருத்தர் வாழ்ந்து வரணும்.என்னே மாதி¡”¢ என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“அப்படியா அத்திம்பேர்.எனக்கு இந்த ‘இந்து தர்ம சாஸ்த்ரம்’ தெரியாது.தெரிஞ்சு இருந்தா நான் அப்படி சொல்லியே இருக்க மாட்டேன்.என்னே மன்னிச்சிடுங்கோ”என்று சொல்லி தன் கன்னத் தில் போட்டுக் கொண்டான் வரதன்.

பரமசிவம் சொன்னதைக் கேட்டு சுந்தரம்,அப்பா தன் அம்மாவே விட்டுட்டு போனதே நினைத்து மிகவும் வருத்தப் பட்டார்.அவர் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

“நீ எந்த வயசு வரைக்கும் அந்த ‘க்ரெச்லே’ இருந்தே”

“எனக்கு முனு வயசு ஆனதும் அப்பா என்னே ஒரு ‘நர்ஸரி’ பள்ளீக் கூடத்லே சேத்து படிக்க வச்சுண்டு வந்தார்.அங்கே இருக்கிற ‘டீச்சர்கள்’ எல்லாம் ரொம்ப நல்லவா.பழைய ‘க்ரெச்லே’என்னே பாத்துண்டா மாதிரி பாத்துண்டு வந்தா.அங்கே தான் எனக்கு A B C D எல்லா ‘ஆல்பபெட்ஸ்’ சொல்லிக் குடுத்தா.கூடவே 1, 2, 3 இருபது வரைக்கும் எழுதவும்,சொல்லவும் கத்துக் குடுத்தா. அப்பா சாயங்காலமா ‘ஆபீஸ்’ முடிஞ்சதும்,என்னே ஆத்துக்கு அழைச்சிண்டு போவா.அந்த பள்ளிக் கூடமும் வாரத்லே அஞ்சு நாள் தான்.சனி கிழமை,நாத்தி கிழமை ரெண்டு நாளும் லீவு” என்று ஒரு அமொ¢க்கனே போலவே இழுத்து இழுத்துப் பேசினான் சாமபசிவம்.

“நீ சென்னைக்கு வந்து இருக்கியே.உனக்கு அங்கே இப்போ பாதி வருஷ படிப்பா இருக்குமே” என்று கேட்டார் பரமசிவம்.

“இல்லே தாத்தா.எனக்கு இப்போ ‘ஆனியுவல்’ லீவு.எனக்கு மறுபடியும் பள்ளிக் கூடம் ஜூன்லே தொறக்கறது” என்றான் சதாசிவம்.

‘உன் அப்பா உன்னே என்னோட நிரந்தரமா வச்சுக்க சொல்லி எழுதி இருக்கானே.நீ இங்கே வறதுக்கு முன்னாடி அமொ¢க்காலே எந்த ‘க்லாஸ்’ படிச்சுண்டு இருந்தே”

“தாத்தா,நான் சென்னைக்கு வறதுக்கு முன்னாடி அமொ¢க்கா பள்ளிக் கூடத்லே எட்டாவது ‘க்லாஸ்லே’ படிச்சுண்டு வந்துண்டு இருந்தேன்” என்று சொன்னான் சதாசிவம்.

சதாசிவம் சொன்னதைக் கேட்டா ‘பாவம் ரமேஷ்.சதாசிவத்தே என் கிட்டே அனுப்பிட்டு, அவன் அமொ¢க்காலே தனியா இருந்துண்டு வறான்.சதாசிவம் மேலே படிச்சு வர நாம தான் ஏறபாடு பண்ணனும்’ என்று நினைத்த பரமசிவத்தின் உடம்பில் ஒரு புது தெம்பு வந்தது.அவர் செயலில் இறங்கினார்.

“சதாசிவா,இந்த ஊர்லே பள்ளீக் கூடம் தொறந்ததும்,நான் உன்னே ‘இங்கிலிஷ் மீடியத்லே’ சொல்லிக் குடுக்கற ஒரு பள்ளீக் கூடத்லே சேக்கறேன்.நீ அங்கே படிச்சுண்டு வா” என்று சொன்னார் பரமசிவம்.

“சரி தாத்தா.நீங்கோ சேக்கற பள்ளீக் கூடத்லே நான் படிச்சுண்டு வறேன்” என்று சந்தோஷமாக சொல்லி விட்டு அவன் பையைத் திறந்து ஒரு ஆங்கில கதை புத்தகத்தை படிக்க அரம்பித்தான் சதாசிவம்.

பரமசிவம் அடையாரில் இருந்த ஒரு பெரிய ‘இண்டர் நாஷனல் பள்ளீகூடத்தின்’ ‘அப்லிகே ஷனை’ வாங்கிக் கொண்டு வந்து,அதை ‘பில் அப்’ பண்ணி,சதாசிவத்துக்கு ஒன்பதாவது வகுப்பில் படிக்க,வருடாந்திர ‘பீஸை’யும்,அவன் பாட புத்தகங்களுக்கும்,நோட்டு புத்தகங்ககளுக்கு எல்லாம் பணம் கட்டி விட்டு வந்தார்.

பள்ளீக் கூடம் திறந்ததும் சதாசிவம் பரசிவத்தின் காரில் வரதனோடு போக ஆரம்பித்தான். அந்த பள்ளீக் கூடம் சாமபசிவத்திற்கு எல்லா பாட புத்தகங்களையும்,நோட் புத்தங்களையும் கொடுத்தார்கள்.

அன்று சாயந்திரமே சதாசிவம் தன் அப்பாவுக்குப் ‘போன்’ பண்ணீ,’போனில்’ அவர் வந்ததும் “அப்பா,தாத்தா என்னே அடையார்லே இருக்கற ஒரு ‘இண்டர்னேஷனல்’ பள்ளீக் கூடத்லே சேத்து,எனக்கு வருஷ’பீஸையும்’ கட்டி விட்டு,எனக்கு எல்லா பாட புத்தகங்களையும்,நோட் புத்தக
ங்களும் வாங்கிக் குடுத்து இருக்கார்.நான் இன்னிலே இருந்து அந்த பள்ளீக் கூடத்துக்கு தாத்தா கார்லே வரதன் மாமாவோட போயிண்டு வறேன்” என்று சந்தோஷமாகச் சொன்னான்.

சதாசிவம் சொன்னத்தைக் கேட்ட ரமேஷ் மிகவும் சந்தோஷப் பட்டு தன் அப்பாவுக்கு ‘போன்’ பண்ணி தன் நன்றியை சொன்னான்.

‘தன் அம்மா தவறிப் போய் விட்டா.அப்பாவும் ரொம்ப வீக்காக இருக்கா.அவர் ஒரு ‘வாக்கரை’ வச்சுண்டு நடந்துண்டு வந்துண்டு இருக்கார்’ என்று சதாசிவம் ‘போன்’ பண்ணி சொன்ன சமாச் சாரம் ரமேஷ் மனதை வெகுவாக பாதித்து விட்டது.அவனால் அமொ¢க்காவில் இருந்து வர பிடிக்க வில்லை.

ரமேஷ் யோஜனைப் பண்ணினான்.

‘அம்மா தவறிப் போயிட்டா.அப்பா ரொம்ப வீக்கா இருக்கா.சதாசிவம் இப்போ சென்னையிலே ஒரு நல்ல பெரிய பள்ளீக் கூடத்துக்குப் போயிண்டு வறான்.நாம இங்கே தனியா இருந்துண்டு வந்து என்ன பண்னப் போறோம்.நாம இங்கே இருகிறதே எல்லாம் வித்துட்டு சென்னைக்குப் போய்,அப்பா இன்னும் ‘இருக்கப் போற’ வருஷங்களே,அவரே நன்னா கவனிச்சுண்டு,சந்தோஷமா வச்சுண்டு வந்து,சதாசிவத்தையும் நன்னா படிக்க வச்சுண்டு வரணும்.இது தான் இப்போ நம்ம ‘priority’’ என்று முடிவு பண்ணினான் ரமேஷ்.

அடுத்த நாளே ரமேஷ் அவன் ‘பாஸிடம்’அவன் கதை பூராவையும் சொல்லி விட்டு “சார், நான் என் வேலேயே ‘ரிசைன்’ பண்ணீட்டு,என் வீட்டையும் கார்களையும் வித்துட்டு,சென்னைக்கு ‘பார் குட்’ போகலாம்ன்னு முடிவு பண்ணீ இருக்கேன்” என்று சொல்லி அவர் ராஜினாமாக் கடிதத்தை அவா¢டம் கொடுத்தார்.

ரமேஷின் பாஸ்’ வருத்தப் பட்டுக் கொண்டே ராஜினாமவை ஏற்றுக் கொண்டார்.

ரமேஷ்,அவன் செய்து வந்து வேலையை ராஜினாமா பண்ணி விட்டு,அவன் கமபனியிலே அவனுக்கு சேர வேண்டிய மொத்த பணத்தையும் வாங்கிக் கொண்டான்.தன்னுடைய விலை உயர்ந்து துணி மணிகளை ஒரு பெட்டியில் ‘பாக்’ பண்ணி வைத்தான்.தன்னுடைய பழைய துணி மணிகளை யும்,சதாசிவத்தின் பழைய துணி மணிகளையும் ஒரு ‘Old age Home’ல் கொடுத்து விட்டு வந்தான்.

ஒரே வாரத்தில் ரமேஷ் அவன் இருந்து வந்து வீட்டையும்,ரெண்டு கார்களையும் விற்றான். தனது ‘தனிமையான’அமொ¢க்க வாழக்கைக்கு ஒரு முற்று புள்ளி வைக்க விரும்பினான் ரமேஷ்.

‘டிராவல் ஏஜண்டிடம் தனக்கு சென்னைக்கு ‘ஒன் வே டிக்கட்’ போடச் சொன்னான்.அந்த ‘ஏர் டிக்கட்’ வந்ததும் ரமேஷ் ‘தாஜ் கோரமண்டல் ஹோட்டலில்’ ஒரு நாளைக்கு ஒரு’ ரூம் புக்’ பண்ணீனான். ரமேஷ் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு ‘DFW ஏர் போர்ட்டு’க்கு வந்து சென்னைக்குப் போகும் ‘ப்ளேன்’ ஏறினான்.சென்னை வந்து இறங்கியதும் ரமேஷ் வாசலில் காத்துக் கொண்டு இருந்த ‘தாஜ் கோரமண்டல்’ காரில் ஏறி ‘ஹோட்டலு’க்கு வந்தான்.

‘ஹோட்டலி’ல் குளித்து விட்டு,வேஷ்டியைக் கட்டிக் கொண்டு,நெற்றியில் விபூதியை இட்டுக் கொண்டு சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு,’ப்ரேக் பாஸ்டை’ சாப்பிட்டான்.பிறகு ஒரு ‘ஷர்ட்டை’போட்டுக் கொண்டு ‘கால் டாக்ஸியை’ ஏற்பாடு பண்ணிக் கொண்டு,தன் பெட்டியை எடுத்துக் கொண்டு,அப்பா வீட்டுக்கு வந்தான்.

‘கால் டாக்ஸி’க்கு பணத்தைக் கொடுத்து விட்டு,தன் பெட்டியை எடுத்துக் கொண்டு,அப்பா ‘ப்லாட்டு’க்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான்.

ரமேஷ் தன் பெட்டியுடன் பயந்துக் கொண்டே அந்த ‘ப்லாட்டின்’ வாசலில் நின்றுக் கொண்டு, பகவானை வேண்டிக் கொண்டு இருந்தான்.அவன் மனம் எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணீ வந்துக் கொண்டு இருந்தது.

‘காலிங்க் பெல்’ அடித்ததும் சதாசிவம் வாசல் கதவைத் திறந்தான்.சுந்தரம் உள்ளே வந்து வாசல் கதவை தாழ்பாள் போட்டார்.

மறுபடியும் ‘காலிங்க்’ பெல் அடித்தது.

“இந்த வரதனுக்கு இன்னைக்குத் தூக்கம் வறலே போல இருக்கு.இல்லே ராத்திரி பூராவும் பொண்டாட்டி கிட்டே சண்டைப் போட்டுட்டு இருந்தானோ என்னவோ.அவன் சீக்கிரமாவே ‘ப்லாட்டுக்கு’ வந்து இருக்கானே” என்று சொல்லி சிரித்தார் பரமசிவம்.

சுந்தரம் வாசல் கதவைத் திறந்தார்.

சிரித்துக் கொண்டே உள்ளே வந்த வரதன் ”ராத்திரி பூராவும் லலிதா ‘எனக்கு இதை வாங்கி குடுங்கோ,’அதே வாங்கிக் குடுங்கோ’ ன்னு சொல்லி சண்டேப் போட்டுண்டு இருந்தா.அவளுக்கு பதில் சொல்லி எனக்கு போறும்,போறும்ன்னு ஆயிடுத்து.சித்தே கூட விவரம் தெரியத பொம்மணா ட்டியா இருக்கா அவ.எப்படா பொழுது விடியப் போறதுன்னு நான் காத்துண்டு இருந்து,கொஞ்சம் சூரிய வெளிச்சம் வந்ததும்,எழுந்து பல்லேத் தேய்ச்சுண்டு,நேரே நம்மாத்துக்கு வந்துட்டேன்” என்று சொன்னான்.

“மாமாவுக்கு நூறு ஆயுசு வரதா.நீ சொன்னதேத் தான் மாமா சித்தே நேரம் முன்னாடி சொல்லி ண்டு இருந்தா.அவர் ஒரு ‘தீர்க்க தா¢சி’.நான் உண்மையேத் தான் சொல்றேன்.நான் சொல்றதிலே உனக்கு சந்தேகம் இருந்தா,நீ வேணும்ன்னா சதாசிவத்தைக் கேட்டுப் பாறேன்” என்று சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தார்.

சதாசிவம் ஒன்றும் சொல்லாமல் வெறுமனே சிரித்துக் கொண்டு இருந்தான்.

உடனே வரதன் “உங்களுக்கு என்ன சுந்தரம் மாமா.நீ சமத்தா ஒரு கல்யாணமும் பண்ணிக் காம,ஒரு கட்டை பிரம்மசாரியா இருந்துண்டு வறேள்.கல்யாணம் பண்ணீன்டவாளுக்குத் தானே ‘பொண்டாட்டிப் படுத்தற கஷ்டம் தெரியும்.உங்களுக்கு எப்படி அந்தக் கஷ்டம் தெரியப் போகிறது. தெரியவே தெரியாதே” என்று சொல்லி அலுத்துக் கொண்டான்.

“உன்மை தான் வரதா.என் அம்மாவும்,தாத்தவும் என்னேப் பாத்து அடிக்கடி ‘சுந்தரம் நீ ஒரு நல்ல பிராணமப் பொண்னாப் பாத்து கல்யாணம் பண்ணிகோயேண்டா’ன்னு சொல்லிண்டு தான் இருந்தா.எனக்கும் கல்யாணம் பண்ணீக்கணும்ன்னு ரொம்ப ஆசை இருந்தது” என்று சொல்லும் போது சுந்தரம் கண்களில் கண்ணீர் முட்டியது.

அவர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே” என்னே கல்யாணம் பண்ணிக்க எனக்கு ரெண்டு பொண்ணோட ஜாதகம் வந்தது.என் அம்மாவும் தாத்தாவும் ரொம்ப சதோஷப் பட்டா. அவாளுக்கு என் அப்பா என் அம்மாவே வீட்டுட்டு,வேறே பொம்மனாட்டியே கல்யாணம் பண்ணீ ண்டு போயிட்டார் என்கிற சமாசாரம் தெரிய வந்தவுடன்,ஜாதகம் குடுத்தவா எங்க குடும்பத்லே சம்ம ந்தம் வச்சுக்கப் பிரியப் படாம ஜாதகத்தே திரும்பி வாங்கிண்டு போயிட்டா” என்று சொல்லி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ”அப்படி இருந்தாலும் பரவயில்லேன்னு,ரெண்டு பிராமணா எங்க அம்மா கிட்டே ஜாதகப் பா¢வர்த்தணைக்கு ஜாதகத்தேக் குடுத்தா.இந்த நேரம் பாத்து என் தங்கே ஒரு முதலியார் பையனோட ஆத்தே வீட்டு ஓடிப் போயிட்டா.இந்த விஷயம் காட்டுத் தீ போல வெளியே தெரிய வர ஆரம்பிச்சது.உடனே ஜாதகம் குடுத்தவா எல்லாம்,எங்க அம்மா கிட்டேயும், தாத்தாக் கிட்டேயும் ‘உங்க பொண்ணு ஒரு முதலியார் பையனோட ஓடிப் போய் இருக்கான்னு எங்களுக்குத் தெரிய வந்தது.அந்த மாதிரி ஒரு குடும்பத்லே சம்மந்தம் வச்சுக்கப் நாங்க பிரியப் படலே’ன்னு சொல் லிட்டு,ஜாதகத்தே திரும்பி வாங்கிண்டு போயிட்டா” என்று சொல்லி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ”எனக்கு ஜாதகம் குடுத்த எல்லா பிராமணா குடும்பமும் இப்படி சொல் லிட்டுப் போனதாலே,எனக்கு எந்த பிராமணப் பொண்ணும் கல்யாணத்துக் கிடைக்கலே.நான் வேறே ஜாதிப் பொண்ணே கல்யாணம் பண்ணிக்க கூடாது.அது ரொம்ப தப்புன்னு நினைச்சு,கல்யாணமே பண்ணிக்காம இன்னி வரைக்கும் ஒரு ‘கட்டே பிரம்மசாரியா’ இருந்துண்டு வறேன்.இந்த ஜெனமத்லே ‘எனக்கு கல்யாண வாழக்கை இல்லே’ன்னு அந்த பகவான் என் தலேலே எழுதி இருக்கார்” என்று சொல்லி வருத்தப் பட்டார் சுந்தரம்.

உடனே வரதன் “சாரி சுந்தரம் மாமா.நான் முழு விவரம் தெரியாம சொல்லிட்டேன்.என்னே தயவு செஞ்சி மன்னிச்சுடுங்கோ” என்று தன் கைகளை கூப்பிக் கொண்டு சொன்னான்.

“சுந்தரம்,உன் தங்கே அப்படி ஒரு முதலியார் பையனோட ஓடிப் போய் இருக்கக் கூடாது.இந்த வயசு பொண்களுக்கு ஏன் தான் இப்படி புத்தி கெட்டுப் போறதோ.என்ன வேண்டி இருக்கு இந்த ‘காதல்’ எல்லாம்.உன் தங்கே ஓடிப் போன மறு நாள்,உங்க அம்மா ராத்திரி பூராவும் அழுதுட்டு, செவந்த கண்களோட எங்க ஆத்துக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அடிச்சா.நான் தான் வாசல் கதவேத் தேறந்தேன்.உன் அம்மா அழுதுண்டே உன் தங்கே எழுதி வச்சுட்டுப் போன லெட்டரே,என் கிட்டே யும் சரோஜா கிட்டேயும் காட்டினா”என்று சொன்னார் பரமசிவம்.

கொஞ்ச நேரம் ஆனதும் “அந்த லெட்டரேப் படிச்சுட்டு நானும் சரோஜாவும் ரொம்ப வருத்தப் பட்டோம்.உங்க அம்மாவுக்குத் தேத்தறவு சொன்னோம்” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார் பரமசிவம்.

“மாமா,நீங்கோ என்னேத் தப்பா புரிஞ்சுண்டாலும் பரவாயில்லே.பையனே பெத்த பிராமணா அப்பா,அம்மாக்களுக்கு இந்த வரதக்ஷணை கேக்கறது,வைரத் தோடு,வைர மூக்குத்தி,இருபது சவரன் தங்க நகை கேக்கறது,மூனு நாள் கல்யாணம் பண்ணச் சொல்லி கேக்கறது போல, ஆசைகளே என்னேக்கு விட்டுட்டு,பொண்ணே பெத்த அப்பா சக்திக்கு பண்ற கல்யாணத்தே ஏத்துக்க முன் வறாளோ,அன்னைக்குத் தான் ஏழே பிராமணப் பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் நடக்கும். இல்லாட்டா,என் தங்கே மாதிரி தான் ஏழே பிராமணப் பொண்ணுங்க வேறே ஜாதி பையங்களோடத் தான் ஓடிப் போயிண்டு இருப்பா.இதே தடுத்து நிறுத்த முடியவே முடியாது ” என்று சொல்லி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார் சுந்தரம்.

“சுந்தரம் மாமா சொல்றது ரொம்ப நிஜம் அத்திம்பேர்.நான் லலிதாவே கல்யாணம் பண்ணீக்க றேன்னு சொன்னப்ப,லலிதா அம்மா அப்பா கிட்டே பணம் ஜாஸ்தி இல்லே.நீங்களும்,அக்காவும் தான் என கல்யாணத்துக்குக் கூரைப் புடவையையும்,மாங்கல்யமும்,கல்யாண ஜவுளிகளும், வைரத் தோடும் வைர மூக்குத்தியும்,ஆறு சவரனுக்கு ஒரு செயினும் வாங்கிக் குடுத்தேன்.என் மாமனார் வெறுமனே கல்யாண சாப்பாடு செலவே மட்டும் தானே பண்ணார்.இந்த சமாசாரம் எல்லாம் உங்களுக்கு நன்னா ஞாபகம் இருக்குமே” என்று கேட்டான் வரதன் .

பரமசிவம் ”இதிலே என் பங்கு ஒன்னும் இல்லே.உன் அக்கா தான் வரதனுக்கு நாம எல்லாம் பண்ணி,அவனுக்கு ஒரு கல்யாணத்தே பண்ணனும்.அவனுக்கு இந்த மாதிரி ஒரு ஏழே ஆத்லே பொறந்த பொண்ணு தான் கிடைக்கும்.பணம் இருக்கிற பிராமணா வரதன் ஒரு ‘பியூன்’ன்னு தெரிஞ் சா,அவா பொண்ணெ கல்யாணம் பண்ணிக் குடுக்க மாட்டான்னு,சொல்லிட்டு,அவ கல்யாண செலவு பூராத்தையும் பண்ணா” என்று சொன்னார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *