அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 15, 2021
பார்வையிட்டோர்: 5,770 
 
 

அத்தியாயம்-27 | அத்தியாயம்-28 | அத்தியாயம்-29

சதாசிவத்திற்கு வயது பன்னிரண்டு முடிந்ததும்,ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையிலே அவனை அழைத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார் ரமேஷ்.

“சதா,உனக்கு இப்போ பன்னன்டு வயசு முடிஞ்சு இருக்கு.உனக்கு இப்பவே உன் வயசு பையன்கள்,பெண்கள் எல்லாம் இங்கே எப்படி வாழ்ந்து வறான்னு நன்னாத் தெரிஞ்சு இருக்கும்.என் படிப்பு முடிஞ்சதும்,’அந்த மாதிரி’ ஒரு வாழக்கைக்கு நான் ஆசைப் பட்டு தான் நான் ‘முட்டாத்தனமா ’ ஜூலி என்கிற ஒரு அமொ¢க்க பொண்ணே ஆசைப் பட்டு,அவளே கல்யாணம் பண்ணிண்டேன். நான் அப்படி பண்ணது என் அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் கொஞ்சம் கூட பிடிக்கலே.என் அப்பாவுக்கு கோவம் வந்து,என்னை அவர் அந்த ஆத்துக்குள்லேயே நுழையக் கூடாதுன்னு சொல்லிட்டார்” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் ரமேஷ்.

அப்பா சொன்னதைக் கேட்டு சதாசிவம் மிகவும் வருத்தப்பட்டான்.

தன் கண்களைத் துடைத்துக் கொண்டே”நீ சின்ன வயசா இருந்தப்ப என் கிட்டே ‘அப்பா எனக்கு அம்மா இல்லையா’ன்னுக் கேட்டே.அதுக்கு நான் உனக்கு இப்போ காரணம் சொல்றேன்.உன் அம்மா உனக்கு ஒரு அமொ¢க்கன் பேரே வக்கச் சொல்லி,உன்னே ஒரு அமொ¢க்கனே போல வளத்து வறணும்’ன்னு பிடிவாதம் பிடிச்சா.ஆனா நான் அவ கிட்டே பிடிவாதமா ‘நான் உனக்கு ஒரு அமொ¢க் கன் பேரே வக்க மாட்டேன்.ஒரு இண்டியன் பேரேத் தான் வச்சு,இண்டியன் ‘கலாசாரப் படி’த் தான் வளப்பேன்’ன்னு சொன்னேன்.நான் சொன்னது பிடிக்காம ஜூலி,நீ மூனு மாச குழந்தையா இருந்தப் ப,என்னேயும்,உன்னேயும் விட்டுட்டுப் போயிட்டா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார் ரமேஷ்.

“நீ மூனு மாச குழந்தையா இருந்ததில் இருந்து,நான் உன்னே வளத்து வந்துண்டு வந்து இருக் கேன்.அன்னைக்கு ஜூலி பிடிவாதம் பிடிச்சப்ப,நான் ரொம்ப நேரம் யோஜனைப் பண்ணினேன்.இந்த அமொ¢க்க பெண்கள் எல்லாம் அவா ‘கலாச்சார வழக்கபடி’த் தான் வாழ்ந்து வருவா.நம்ம ‘கலாச்சாரப் படி’அவ வாழ்ந்து வற மாட்டா.ஆனா நம்மே அவ ‘கலாச்சார வழக்கபடி’ இருந்து வரணும்ன்னு பிடிவா தம் பிடிச்சுண்டு வருவா.இதே யோஜனைப் பண்ணாம,நான் ஒரு தடவை ‘தப்பு’ பண்ணிட்டேன்.மறு படியும் அதே ‘தப்பே’ப் பண்ணக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்.நான் தனியா இருந்துண்டு வந்து உன்னே வளத்து முன்னுக்கு கொண்டு வந்துக் கொண்டு இருக்கேன்.நான் அன்னேக்கு அந்த மாதிரி ஒரு சா¢யான ‘டிஸிஷனே’ எடுக்காம இருந்து இருந்தா,நீ என்னோடு இல்லாம போகும் ஒரு ‘சூழ் நிலை’ ஏற்பட்டு இருக்கலாம்.’பகவான்’ தான் எனக்கு நல்ல புத்தியே குடுத்தார்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார் ரமேஷ்.

“சதா,இன்னும் பன்னண்டு,பதி மூனு வருஷம் ஆனதும்,நீயும் என்னேப் போல ஒரு ‘தப்பான காரியத்தை’ப் பண்ணிடுவாயோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு.உனக்கு இந்த அமொ¢க்கா காரா வாழ்ந்து வர ‘லைப் ஸ்டைல்’ பிடிச்சு இருக்கா.இல்லே நம்ம பழக்க வழக்கங்கள் பிடிச்சு இருக்கா. நீ என்ன நினைக்கறேன்னு என் கிட்டே ¨தா¢யமா சொல்லு.நான் தப்பாவே எடுத்துக்க மாட்டேன்” என்று கேட்டு விட்டு,’நாம கேட்டதுக்கு சதாசிவம் என்ன பதில் சொல்லப் போகிறான்’ என்று ஆவ லாகப் பார்த்துக் கொண்டு இருந்தார் ரமேஷ்.

அப்பா சொன்னதைக் கேட்ட சதாசிவம்”அப்பா, எனக்கு இவா வாழ்ந்து வர ‘லைப் ஸ்டைல்’ கொஞ்சம் கூட பிடிக்கலே.’சின்மயா மிஷன்லே’ சொல்லிக் குடுத்த,நம்ம பழக்க வழக்கங்க தான் ரொம்ப நல்லதுன்னு எனக்குப் படறது.நான் அதே ‘பாலோ’ பண்னத் தான் ரொம்ப ஆசைப்டறேன்” என்று சொன்னவுடன் அவனை கட்டிக்கொண்டு தன் சந்தோஷத்தை த் தெரிவித்தார் ரமேஷ்.

கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு ”சதா நீ எனக்கு ஒரு உதவியே பண்ணுவியா” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார் ரமேஷ். ”சொல்லுங்கோப்பா. நான் நிச்சியமா பண்றேன்” என்று சொன்னான் சதாசிவம்.

ரமேஷ் சந்தோஷப் பட்டு “இந்த வருஷம் பள்ளீகூடம் முடிஞ்சதும்,நான உன்னே அந்த லீவ்லே சென்னைக்கு ஒரு ‘ரிட்டரன் டிக்கட்’வாங்கி ‘ப்லேன்’ ஏத்தி அனுப்பறேன்.கூடவே என் அம்மா,அப்பா ‘ப்லாட் அட்ரஸ்ஸையும்’ தறேன்.நீ சென்னைக்குப் போய் பாட்டிக்கும்,தாத்தாவுக்கும் துணையா இருந்துண்டு வா.இப்போஅவாளுக்கு ரொம்ப வயசாகி இருக்கும்.அவா ரெண்டு பேருக்கும் ஒன்னுக்கும் உபயோகப் படாதா ‘பாவி’யாயிட்டேன் நான்.நீயாவது அவா கூட இருந்துண்டு எனக்கு பதிலா,அவாளுக்கு இந்த வயசான காலத்லே என்ன வேணுமோ அதே எல்லாம் பண்ணிண்டு வறயா” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டே கேட்டார் ரமேஷ்.

உடனே சதாசிவம்” சா¢ப்பா,நான் அப்படியே பண்றேன்” என்று சொன்னதும்,ரமேஷ் சதாசிவ த்தைக் கட்டிக் கொண்டு கொஞ்ச நேரம் அழுதார்.

சிறிது நேரம் ஆனதும் ”நான் உன் கிட்டே ஒரு ‘மன்னிப்பு லெட்டரை’ எழுதித் தறேன்.நீ அதை எடுத்துண்டு எங்க அம்மா அப்பா ஆத்துக்குப் போய் ‘காலிங்க் பெல்லை’ அழுத்து.என் அம்மாவோ, அப்பாவோ உன்னே ஆத்துக்கு உள்ளே வர ‘அலவ்’ பண்ணீனா,நீ என் அப்பாவுக்கு ஒரு நமஸ்காரத் தைப் பண்ணீட்டு,நீ தினமும் சொல்ற ‘அபிவாதயே’ மந்திரத்தே சொல்லிட்டு என் ‘லெட்டரே’ என் அப்பா,அம்மா கிட்டேக் குடு.அவா ரெண்டு பேரும் அந்த ‘லெட்டரை’ப் படிச்சப்புறம், உன்னே அந்த ஆத்துக்குள்ளே இருக்கச் சொன்னா,நீ நான் சொன்னா மாதிரி அவா கூட இருந்துண்டு வந்து, என்ன வேணுமோ அதே எல்லாம் பண்ணிண்டு வா.நீ அங்கேயே தங்கி இருந்துண்டு, எனக்கு ‘போன்’ பண்ணு.அப்படி உன்னே அந்த ஆத்லே தங்க விடாம போகச் சொல்லிட்டா,நான் வாங்கிக் குடுத்து இருக்கிற ‘ரிட்டரன் டிக்கட்டே’ உபயோகப் படுத்திண்டு,நீ ‘டல்லஸ¤க்கு’ திரும்பி வந்துடு.அதுக்கு அப்புறமா,நாம நம்ம வழியே பாத்துக்கலாம்” என்று கண்களில் கண்ணீர் மல்க சொன்னார் ரமேஷ்.

சதாசிவம் அப்பாவின் கண்களைத் துடைத்துக் கொண்டே” அழாதீங்கோப்பா, I think all will go well.I am very optimistic about that” என்று சொன்னான்.

சதாசிவம் சொன்னதைக் கேட்டு சந்தோஷப் பட்டார் ரமேஷ்.உடனே ரமேஷ் “சதாசிவா, நானும் எல்லாம் நல்லபடியா போகணும்ன்னு தினம் பகவானை வேண்டிண்டு வறேன்.நீயும் பகவானை வேண்டிண்டு வா”என்று சொன்னதும் ”நான் தினமும் நீங்கோ சொன்னா மாதிரி பகவானை நன்னா வேண்டிண்டு வறேன்ப்பா” என்று சொன்னான்.

ரமேஷ் ‘சின்மயா மிஷன்’ வாத்தியர் கிட்டே கேட்டு,ஒரு நல்ல நாளாகப் பார்த்து,’டிராவல் ஏஜண்டிடம்’ சிதாசிவத்துக்கு சென்னைக்கு ஒரு ‘ஏர் டிக்கட் புக்’ பண்ணீ,‘ரிடர்ன் ஜர்ணயி’யை ‘ஓபனாக’ வைத்துக் கொள்ளும் படி சொல்லி,ஒரு ‘ரிடர்ன் டிக்கட்டை’ வாங்கிக் கொண்டார்.

சதாசிவம் சென்னையிலே இறங்கின அன்று ‘தாஜ் கோரமண்டல் ஹோட்டலி’ல் தங்க ஒரு ‘ரூம்’ ‘புக் ‘பண்ணீனர் ரமேஷ்.

அந்த நல்ல நாளில் ரமேஷ் சதாசிவத்தை DFW ஏர்போர்ட்டுக்கு காரில் அழைத்து வந்து, அவனுக்கு மறுபடியும் அவன் சென்னையிலே எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்,என்பதை ஞாபகப் படுத்தி விட்டு அவனை சென்னைக்குப் போகும் ‘ப்லேனில்’ ஏற்றீ விட்டு தன் வீட்டுக்கு வந்தார்.

ரமேஷ் மனம் இப்போது சதோஷமாக இருந்தது.

’காலிங்க் பெல்’ அடித்தது.

மெல்ல தன் ‘வாக்கரை’ வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வந்து வாசல் தாழ்பாளைத் திறந்து கதவைத் திறந்தார் பரமசிவம்.

”வாப்பா,அன்ன தாதா சுந்தரம்.நீ வந்தா தான் இந்தக் குக்ஷ¢க்கு ‘காபி’யும் சாப்பாடும்” என்று சமையல் கார சுந்தரத்தை வரவேற்றார் பரமசிவம்.

”நீங்கோ தினம் என்னே ‘அன்ன தாதா’,’அன்ன தாதா’ன்னு சொல்லி வரவேக்கறேள்.நான் வெறுமனே ஒரு சமையல் காரன் தானே மாமா.பகவான் தான் எல்லாருக்கும் ஒரு ‘அன்ன தாதா’ இல் லையா சொல்லுங்கோ” என்று பரமசிவத்திற்கு பதில் சொன்னார் சமையல் வேலை செய்து வரும் சுந்தரம்.

வீட்டுக்கு உள்ளே போய் ‘காஸை’ப் பற்ற வைத்து ‘பில்டரு’க்கு வென்னீர் வைத்தார் சுந்தரம்.

ஒரு நிமிஷம் போனதும் மறுபடியும் ‘காலிங்க் பெல்’ அடித்தது.

“சுந்தரம் கொஞ்ச வாச கதவைத் தொற.என் அருமந்த மச்சினன் வந்து இருக்கான்” என்று சொன்னதும் சுந்தரம் வாசல் கதவைத் திறந்தார்.

”எப்படி இருக்கேள் அத்திம்பேர் “ என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் வரதன்.

”இன்னும் உயிரோடு இருக்கேண்டா வரதா.எனக்குப் ‘போக’ இன்னும் நேரம் வறலே.இன்னும் எத்தனை நான் தனியா திண்டிண்டு வறனோமோ.அந்த பகவானுக்குத் தான் தெரியும்” என்று அலுத்துக் கொண்டே சொன்னார் பரமசிவம்.

அவர் அப்படி சொன்னதும் ”நீங்கோ அப்படி சொல்ல கூடாது அத்திம்பேர்.நீங்கோ நூறு வயசு வரைக்கும் உயிரோடு இருக்கணும் அத்திம்பேர்” என்று சொன்னான்.
”ஏண்டா வரதா,நான் இப்போ ‘வாக்கரை’ வச்சூண்டு கஷ்டப் பட்டுண்டு சாப்பாட்டுக்கே ஒத்தரே நம்பிண்டு வாழ்ந்து வறது போறாதாடா.நான் இன்னும் இருபது வருஷம் இப்படியே கஷ்டப் பட்டுண்டு வரணுமா.இப்போ எல்லாம் இந்த ‘வாக்கரை’ வச்சுண்டு நடக்கறதே நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கேடா.முடியாமத் தான் நான் நடந்துண்டு இருக்கேன்” என்று சொல்லி அலுத்துக் கொண்டார் என்பது வயசை எட்டிப் பார்த்து வந்துக் கொண்டு இருக்கும் பரமசிவம்.

ஒரு பத்து நிமிஷம் ஆனதும் ஒரு கையிலே ‘டவரா ட்ம்ளா¢ல்’ஆவி பறக்க ‘காபி’யையும், இன்னொரு கையிலே ‘பிஸ்கெட் டப்பா’வையும் சுந்தரம் எடுத்துக் கொண்டு வந்து பரமசிவத்தின் முன்னால் வைத்தார் சுந்தரம்.பிஸ்கெட்டை மெல்ல விண்டு வாயிலே போட்டுக் கொண்டு சுந்தரம் கொடுத்த ‘காபி’யை ரசித்துக் குடித்துக் கொண்டு இருந்தார்.சமையல் கார சுந்தரம் சொன்னதற்கு சா¢யான ஒரு பதில் தரணும் என்று யோஜனைப் பண்ணீனார் பரமசிவம்.

‘பிஸ்கெட்டையும்’ காபியையும் குடித்த பரமசிவத்திற்கு இப்போது மூளை வேலை செய்ய ஆரம்பித்தது.அவர் சுந்தரத்திற்கு சொல்ல வேண்டிய பதிலை தன் மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டார்.

’“சுந்தரம் என் கிட்டே வெறும் பணம் தானே இருக்கு.அதே நான் தின்ன முடியாதே.நீ வந்தாத் தானே எனக்கு ‘காபி’யும் சாப்பிட ‘டிபனு’ம் மத்தியானம் சாப்பாடும், ராத்திரி ‘டிபணும்’ கிடைக் கறது.அப்போ நீ எனக்கு ஒரு ‘அன்ன தாதா’ தானே.இல்லையா சொல்லு.நான் சொன்னதிலே என்ன தப்பு சொல்லு” என்று பரமசிவம் கேட்டார்.

“மாமா,உங்க கிட்டே என்னால் பேசி ஜெயிக்க முடியாது.நீங்கோ ‘ஹை கோர்ட்டிலே’ ஒரு ‘லீடிங்க் லாயரா’இருந்த வராச்சே.உங்க ‘சர்வீஸ்’லே நீங்கோ எத்தனை வக்கீல்களே குறுக்கு கேள்வி கள் எல்லாம் ‘கொக்கி’ப் போட்டு மடக்கி இருப்பேள்.நீங்கோ சொன்னதிலே ஒரு தப்பும் இல்லே மாமா. நான் சொன்னது தான் தப்பு” என்று தன் கன்னத்தில் போட்டுக் கொண்டார் சுந்தரம்.

சுந்தரம் அப்படி தன் கன்னத்தில் போட்டுக் கொண்டதைப் பார்த்த பரமசிவம் ”நான் விளையா ட்டுக்காகத் தான் சொல்லி உன்னே கிண்டல் பண்ணேன்.நீ என்னை தப்பா எடுத்துக்தாதே சுந்தரம். உன்னே சீண்டாட்டா எனக்கு பொழுது போகாது” என்று சொல்லி விட்டு மறுபடியும் ‘பிஸ்கெட் டப்பாவை’த் திறந்து ஒரு ‘பிஸ்கெட்டை’கையிலே எடுத்து ‘காபி’யிலே ஊற வைத்து, வாயிலே போட்டுக் கொண்டு மெல்ல மென்று சாப்பிட்டு விட்டு,‘காபி’யை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தார்.

வரதன் சமையல் கார சுந்தரம் கொடுத்த ‘காபி’யைக் குடித்து விட்டு,அவர் சொன்ன காய் கறி களை எல்லாம் வாங்கக் கடைக்குப் போனான்.அவன் கிளம்பிப் போனதும் சுந்தரம் வாசல் கதவை சாற்றி தாழ்பாள் போட்டு விட்டு,தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார்.

பரமசிவம் ‘பிஸ்கெட்டையும்,காபி’யையும் குடித்து விட்டு,தன் மூக்கு கண்ணாடியை,வேஷ்டி நுனியிலே நன்றாகத் துடைத்துக் கொண்டு அன்றைய ‘ஹிண்டு’ பேப்பரைப் படிக்க ஆரம்பித்தார்.
அன்று ஞாயிற்றுக் கிழமை.வழக்கமாக வாரும் பக்கங்களை விட அன்று நிறைய பக்கங்கள் இருந்தது.
பரமசிவத்திற்கு ஞாயிற்றுக் கிழமை ‘ஹிண்டு’ பேப்பர் படிப்பது என்றால் ‘வெல்லம்’.சில பக்கங்களை,குளிக்கும் முன் படிப்பார்.சில பக்கங்களை குளித்து சுவாமி மந்திரம் எல்லாம் சொல்லி விட்டு சாப்பிடுவதற்கு முன் படிப்பார்.சில பக்கங்களை சாப்பிட்ட பிறகு படிப்பார்.மீதி பக்கங்களை மத்தியானம் ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கி எழுந்த பிறகு படிப்பார்.
மொத்தத்தில் எல்லா பக்கங்களையும் ஒரு வா¢ கூட விடாமல் படித்து முடிப்பார் பரமசிவம்.

‘தாஜ் கொரமண்டல் ஹோட்டல்’ நிர்வாகம் ஒரு காரை டிரைவருடன் சென்னை ‘ஏர் போர்ட்டு க்கு’ அனுப்பி இருந்தது.சதாசிவம் சென்னை ‘ஏர் போர்ட்டுக்கு’ வந்ததும், ’ஏர் போர்ட்டை’ விட்டு வெளியே வந்து,அந்தக் காரில் ஏறி ‘தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்கு’ வந்தான்.

ஹோட்டலில் குளித்து விட்டு,நெற்றியிலே விபூதியை இட்டுக் கொண்டு சந்தியாவந்தனத்தை ப் பண்ணி விட்டு,’ஹோட்டலில் ‘ப்ரேக் பாஸ்டை’ச் சாப்பிட்டு விட்டு,ஒரு நல்ல வேஷ்டி சட்டையை ப் போட்டுக் கொண்டு,அவன் பெட்டியை எடுத்துக் கொண்டு, ஒரு ‘கால் டாக்ஸி’யை ஏற்பாடு பண்ணிக் கொண்டு,அவன் அப்பா எழுதிக் கொடுத்த விலாசத்தை விசாரித்துக் கொண்டு,பரமசிவம் ‘ப்லாட்டு’ க்கு வந்து ‘காலிங்க் பெல்லை’அழுத்தி விட்டு,பெட்டியுடன் நின்றுக் கொண்டு இருந்தான் சதாசிவம்.

‘காலிங்க் பெல்’ அடித்தது.

’வரதன் இப்பத் தானே கடைக்குக் கிளம்பினான்.அவன் அதுக்குள்ளே எல்லா காய்கறிகளை யும் வாங்கிக் கொண்டு வந்து இருக்க முடியாதே.தினமும் நம்ப வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்’ அடிக்கும் ரெண்டு நபரும் வந்தாச்சே.அதுக்கு அப்புறமா அந்த ‘காலிங்க் பெல்லை’ அடிக்க ஒரு ஜீவ னும் வராதே.யார் ‘காலிங்க் பெல்லை’அழுத்தறா’ என்று யோஜனைப் பண்ணினார் பரமசிவம்.

பேப்பா¢ல் இருந்து தன் கவனத்தை எடுத்து வாசலைப் பார்த்துக் கொண்டு இருந்தார் பரமசிவம்.

“மாமா,இந்த வரதன் தான் பணம் எடுத்துண்டு போக மறந்துட்டு இருப்பான்.பணம் எடுத்து ண்டுப் போக பல்லே இளிச்சுண்டே வந்து நிக்கறான் போல் இருக்கு” என்று சொல்லிக் கொண்டு சமையல் ரூமை விட்டு வெளியே வந்து,வாசல் தாழ்பாளைத் திறக்கப் போனார் சுந்தரம்.பரமசிவம் மறுபடியும் பேப்பரைப் படிக்க ஆரம்பித்தார்.
நெற்றீயிலே விபூதியுடன்,வேஷ்டி சட்டையுடன்,ஒரு பன்னிரண்டு வயது பையன்,ஒரு ‘இழுத்து’க் கொண்டு போகும் பையை’ கையிலே வைத்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான். அந்தப் பையன் பார்க்க ஒரு வெள்ளைகாரப் பையன் போல கலராகவும்,அழகாகவும் இருந்தான்.

வாசலில் நின்றுக் கொண்டே அந்த பையன் “உள்ளே வரட்டுமா தாத்தா” என்று ‘கணீர்’ என்று கேட்டதும் பரமசிவம்,பேப்பர் படித்துக் கொண்டு இருந்ததில் இருந்து,தன் கண்ணை நிமிர்த்தி,அந்த பையனைப் பார்த்து “உள்ளே வாப்பா.நீ யாரு.என்னே எதுக்குத் தாத்தான்னு கூப்பிட்டே” என்று ஆச்சா¢யத்துடன் கேட்டார்.

அந்த பையன் தன் பையை உள்ளே இழுத்துக் கொண்டு ஒரு ஓரமாக வைத்து விட்டு,அவன் காலிலே போட்டுக் கொண்டு இருந்த செருப்பை ஒரு ஒரமாக கழட்டி வைத்து விட்டு,நேரே பரமசிவத் தின் கால்களைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு,ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,எழுந்து தன் காதுகளை பொத்துக் கொண்டு “அபிவாதயே” சொன்னான்.அவன் பேரே ‘சதாசிவ ஷ்ர்மா’ என்று சொன்னது பரமசிவத்தின் காதில் விழுந்தது.

அவர் அவனைத் தொட்டு ‘சதாசிவ ஷர்மா தீர்காயுஷ்னான் பவ” என்று சொன்னதும்,அந்தப் பையன் எழுந்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தான்.

‘காலிங்க் பெல்’ அடிக்கவே சுந்தரம் வாசல் கதவைத் திறந்தார்.வரதன் ரெண்டு கைகளிலும் ரெண்டு பைகளில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்து விட்டு,“நான் அந்த காய் கறி கடைக்காரன் கிட்டே போய்,வேறே ஒரு நூறு ரூபா தந்துட்டு வறேன்.இந்த நூறு ரூபாய் ‘நோட்டு’ செல்லாதாம்.இது ஒரு ‘ஜாலி நோட்டாம்’” என்று சொல்லி விட்டு,கடைக்காரன் திருப்பிக் கொடுத்த நூறு ரூபாய் நோட்டை காட்டினான்.

சுந்தரமும் பரமசிவமும் வரதன் காட்டிய நோட்டை வாங்கிப் பார்த்தார்கள்.“இந்த நூறு ரூபாய் நோட்டே ‘பாங்க்லே’ குடுத்தது தானே வரதா.’பாங்க்லே’ குடுத்த ‘நோட்’ எப்படிடா ஒரு ‘ஜாலி நோட் டா’ இருக்க முடியும்.நீ சா¢யா கவனிச்சு இருக்க மாட்டே.அந்த காய் கறி கடைகாரன்,நீ குடுத்த நோட் டே வாங்கிண்டு,அவன் கிட்டே இருக்கிற ஒரு ‘ஜாலி நோட்டே’உன் கிட்டே குடுத்து இருக்கான்.நீ அதே கவனிக்காம வாங்கிண்டு வந்து இருக்கேடா வரதா”என்று சொல்லி சிரித்தார் பரமசிவம்.

“எனக்கும் மாமா சொல்றது தான் சா¢யா இருக்கும்ன்னு தோன்றது.அந்த காய் கறிக் கடைக் காரன்,அவன் கிட்டே இருகிற ‘ஜாலி நோட்டே’ உன் கிட்டே குடுத்து ஏமாத்தி இருக்கான்.நீ கவனிக் காம அந்த நூரூ ரூபாய் நோட்டே வாங்கிண்டு வந்து இருக்கே” என்று சுந்தரமும் பரமசிவம் சொன்ன காரணத்தையே சொன்னார்.

வரதன் ஒன்றும் புரியாமல் நின்றுக் கொண்டு இருந்தான்

“சா¢ வேறே நூரூ ரூபாய் நோட்டே எடுத்துண்டுப் போய்,அந்த காய்கறி கடைகாரன் குடுத்து ட்டு வா.நீ கடைக்கு வர ‘லேட்டானா’,அவன் உன்னே தேடிண்டு இங்கே வந்துடப் போறான்” என்று சொல்லி விட்டு,மெல்ல எழுந்து, ‘பெட் ரூமு’க்கு உள்ளே போய்,வேறே ஒரு நூறு ரூபாய் நோட்டை கொண்டு வந்து வரதன் கையிலே கொடுத்தார் பரமசிவம்.

பரமசிவம் கொடுத்த நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு காய் கறி கடைக்குப் போனான் வரதன்.

’நாம இப்படி ஏமாந்துப் போய் விட்டோமே.அத்திம்பேர் சொல்றா மாதிரி ‘பாங்க்லே’ இருந்து தானே நாம நூறு ரூபாய் கட்டை வாங்கிண்டு வந்தோம்.அந்தக் கட்டில் இருந்து தானே காத்தாலே அத்திம்பேர் நமக்கு பணம் குடுத்து காய்கறி கடைக்கு அனுப்பினார்.அந்த காய்கறிக் கடைக்காரன் ஒரு ‘அயோக்கியனா’ இருப்பான் போல இருக்கு.நாம நாளேலே இருந்து அவன் கடைலே காய் கறி வாங்கக் கூடாது’ என்று நினைத்துக் கொண்டே போய்,அந்த காய் கறி கடைக்காரன் கிட்டே,அவன் கொண்டுப் போன நோட்டை கொடுத்து விட்டு,‘ப்லாட்டு’க்கு திரும்பி வந்துக் கொண்டு இருந்தான் வரதன்.

சதாசிவம் தன் பையைத் திறந்து ஒரு ரமேஷ் அவனிடன் கொடுத்து இருந்த கடிதத்தை எடுத்து பவ்யமாக பரமசிவத்திடம் கொடுத்தான்.

பரமசிவம் அந்தப் பையனைப் பார்த்து “இந்த சோபாவிலே உக்காருப்பா. எனக்கு என்ன கடிதாசு நீ கொண்டு வந்து இருக்கே.யார் எனக்கு இந்த கடுதாசியே எழுதி இருக்கா” என்று சொன்ன தும் அந்தப் பையன் “நான் சோபாவிலே எல்லாம் உக்காரலே தாத்தா.இப்படி தரையிலேயே உக்காந் துக்கறேன்” என்று சொல்லி விட்டு பரமசிவத்தின் கால்களுக்கு பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டான்.

அந்தப் பையன் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பிரித்து உரக்க படிக்க ஆரம்பித்தார் பரமசிவம்.

“அன்புள்ள அப்பா,அம்மாவுக்கு, ரமேஷின் நமஸ்காரங்கள்.நான் உங்க ரெண்டு பேருக்கும் ‘பிடிக்காத’ ஒரு ‘தப்பு’காரியத்தைப் பண்ணி விட்டு,உங்க ரெண்டு பேர் கிட்டேயும் உங்க ஆசீர்வாதத் தைக் கேட்ட போது.நீங்க ரொம்ப கோவப் பட்டு ‘அசாரமான இந்தக் குடும்பத்தில் பிறந்த நீ இப்படி ஒரு கேவலமான காரியத்தே பண்ணுவேன்னு நாங்க கனவிலே கூட நினைக்கலே.நீ எங்களுக்குப் பொறந்த பிள்ளையே இல்லேடா.இந்த ‘ போன்’ காலோட நமக்கு இருந்த உறவு முறிஞ்சிப் போச்சு டா.இனிமே எங்களே உன் அம்மா,அப்பான்னு கூப்பிடாதே.எப்போ எங்களேக் கேக்காம நீ கல்யாணத் தே பண்ணீண்டு இருக்கியோ,இனிமே இந்த ஆத்துக்கு உள்ளே நீ வறாதே’ன்னு சொல்லி ‘போனை’ ‘கட்’ பண்ணிட்டேள்.அதுக்கு அப்புறமா நான் விடாம ஒரு பத்து நாள் உங்களுக்கு ‘போன்’ பண்ணீ னேன்.ஆனா நான் தான் கூப்பிடறேன்னு தெரிஞ்சுண்டு ,நீங்கோ அந்த ‘போன் காலை’ எடுக்கவே இல்லே.நீங்க ரெண்டு பேரும் ரொம்ப கோவப் பட்டு எனக்குக் குடுத்த சாபம் வீண் போக லே.ஜூலி எங்களுக்கு சதாசிவம் பொறந்து மூனு மாசம் ஆனதும்,என்னை விவாக ரத்து பண்ணிட்டா.

’நான் இந்த வெள்ளைக்கார பொண்ணே கல்யாணம் பண்ணிக்காம,நீங்கோ எனக்குப் பாத்து பண்ற நம்ம ஊர் பொண்ணே கல்யாணம் பண்ணீண்டு இருந்து இருக்கணும்.நான் ரொம்ப ‘பெரியத் தப்பு’ப் பண்ணீட்டேன்.அந்த கல்யாண வயசிலே என்னாலே அந்த அமொ¢க்கப் பொண்ணு ஜூலி மேலே இருக்கற ஆசையை அடக்கிக்க முடியலே.அவளும் என் மேலே உயிரா இருந்தா.அவ என் மேலே வச்சு இருந்த ஆசை எல்லாம் என்னையும்,எங்களுக்குப் பொறந்த குழந்தையையும் ஒரு அமெ ரிக்கனா ‘மாத்தணும்’ என்பதிலே தான் குறியாக இருந்தது.எனக்கு அது தெரியாம போச்சு.நான் அந்த ஆசைக்கு இடம் குடுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சு வந்தேன்.ஜூலி குழந்தைக்கு மூனு மாசம் ஆகும் போது,என்னே விவாக ரத்து பண்ணிட்டா.அப்போ தான் நாம எவ்வளவு பெரிய ‘தப்பே பண்ணீட்டோம்’ ன்னு நினைச்சு ரொம்ப வருத்தப் பட்டு நாலு நாளைக்கு அழுதேன்.

ஜூலி என்னை விவாக ரத்து பண்ண அடுத்த நாளே நான் என்னை மாத்திண்டுட்டேன். ‘நாம இனிமே இந்த மாதிரி மறுபடியும் ஒரு ‘தப்பு’ப் பண்ணக் கூடாது.அம்மா,அப்பா நம்மே சென்னேலே வளத்து வந்த மாதிரி இருக்கணும்ன்னு முடிவு பண்ணினேன்.உங்க ரெண்டு பேரின் கோவம் எனக்கு நன்னா புரிஞ்சது.நான் பகவான் கிட்டே என் கஷ்டத்தே சொல்லி அழுதேன்.அப்புறமா நான் இங்கே இருக்கும் ‘சின்மயா மிஷன்’லே இருக்கற ஒரு வேதம் படிச்ச பிராமணரை சந்திச்சு,அவர் கிட்டே எனக்கும் ஜூலிக்கும் பொறந்த குழந்தைக்கு ‘சதாசிவம்’ன்னு ‘நாம கரணம்’ பண்ணீ சொல்லி தக்ஷனையைக் குடுத்தேன்.அந்த வேதம் படிச்ச வாத்தியார் என் குழந்தைக்கு ‘சதாசிவம்’ன்னு ஒரு நல்ல பேரை ‘நாம கரணம்’ பண்ணீனார்.நான் அன்னேக்கு ரொம்ப சந்தோஷப் பட்டேன்.

சதாசிவத்திற்கு பதினோறு வயது ஆனதும்,’சின்மயா மிஷன்’ வாத்தியாரை ஏற்பாடு பண்ணி, அவனுக்கு கிரமமாக ‘உபனயனம்’ போட்டேன்.சதாசிவன்,என்னுடன் ரெண்டு வேளையும் தவறாமல் ‘சந்தியாவந்தனம்’ பண்ணீண்டு வறான்.

சதாசிவம் இனிமே இந்த ஊரிலே இருந்தா,இங்கே இருக்கறவா மாதிரி,ஏன் என்னே மாதிரி ஆயிடுவானோன்னு பயந்து,அவனை உங்க கிட்டே அனுப்பி இருக்கேன்.நான் பண்ண ஒரு பெரிய ‘தப்பாலே’ உங்க பிள்ளையா நான் இருந்து என் ‘கடமைகளை’ பண்ண ‘அருகதை இல்லாதவானா’ ஆயிட்டேன்.நீங்க ரெண்டு பேரும் தயவு செஞ்சி என்னை ‘மன்னிச்சுட்டு’,சதாசிவத்தை ஆத்துக்கு உள்ளே வரச் சொல்லி,அவனுக்கு அந்த ‘பாக்கியத்தே’ குடுங்கோ.அவனை உங்க கூடவே நிரந்தரமா இருந்து வர அனுமதி குடுங்கோ.இதே நான் உங்க ரெண்டு பேரையும் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.

இப்படிக்கு ‘சிரேஷ்டமான’ ஒரு குடும்பத்லே பொறந்து ‘கெட்டுப் போன’ உங்க பையன் ரமேஷ்.

கடிதத்தைப் படித்த பரமசிவம் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.தன் தோள் மேலே போட்டுக் கொண்டு துண்டினால் துடைத்துக் கொண்டார்.
சுந்தரம் பரமசிவம் படித்த ‘லெட்டரை’க் கேட்டு அழுதுக் கொண்டு இருந்தான்

இந்த நேரம் பார்த்து வரதன் ப்லாட்டுக்கு வந்து ‘காலிங்க்’பெல்லை’ அழுத்தினான்.சுந்தரம் வாசல் கதவைத் திறந்ததும்,வரதன் அசடு வழிய ’ப்லாட்டு’க்கு உள்ளே வந்து வாசல் கதவை தாழ் பாள் போட்டான்.

அத்திம்பேரும் சுந்தரமும் அழுதுக் கொண்டு இருப்பதைப் பார்த்த வரதனுக்கும் ஒன்றும் புரியவில்லை.’இவா ரெண்டு பேரும் ஏன் அழறா’என்று யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.

பரமசிவம் கண்களைத் துடைத்துக் கொண்டே” வாடா பேரா சதாசிவா.என் பக்கத்லே உக்காரு. உங்க பாட்டி இந்த உலகத்து விட்டுப் போய்,இந்த தை மாசம் வந்தா பதிமூனு வருஷம் ஆகப் போறது. நானும் அவ கூடவே போகாம இப்படி ‘ஒரு தனி மரமா’ உக்காந்துண்டு இருக்கேன்” என்று சொல்லி அவன் உட்கார்ந்ததும் அவனை கட்டிக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதார்.

தாத்தா சொன்னதைக் கேட்ட சதாசிவத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டு இருந்தது.

அவர் சொன்னதை கேட்ட சதாசிவத்திற்கு தூக்கி வாரிப் போட்டது.

‘உங்க பாட்டி இந்த உலகத்து விட்டுப் போய்,இந்த தை மாசம் வந்தா பதிமூனு வருஷம் ஆகப் போறது’ன்னு தாத்தா சொல்றாரே’ என்று நினைக்கும் போது அவனுக்கு அவனுக்கு அழுகை வந்தது.

அழுதுக் கொண்டே” என்ன சொல்றேள் தாத்தா.பாட்டி செத்துப் போயிட்டாளா.அப்பா என் கிட்டே ’சதா,நீ சென்னைக்குப் போய் பாட்டி,தாத்தாவுக்குத் துணையா இருந்துண்டு வா.இப்போ அவாளுக்கு ரொம்ப வயசாகி இருக்கும்.அவா ரெண்டு பேருக்கும் ஒன்னுக்கும் உபயோகப் படாதா ‘பாவி’யாயிட்டேன் நான்.நீயாவது அவா கூட இருந்துண்டு எனக்கு பதிலா,அவாளுக்கு இந்த வயசா ன காலத்லே என்ன வேணுமோ அதே பண்ணிண்டு வா’ன்னு அழுதுண்டே சொல்லி,என்னே சென் னைக்கு ‘ப்லேன்’ ஏத்தி அனுப்பினாரே தாத்தா”என்று ஒரு அமொ¢க்கனைப் போல கொஞ்சம் இழுத் து,இழுத்துச் சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் சதாசிவம்.

“அப்படியா சொன்னான் என் பையன் ரமேஷ்.எனக்குக் கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு டா சதாசிவா” என்று சொல்லி பரமசிவமும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் பரமசிவம் சதாசிவத்தைப் பார்த்து பார்த்து “உங்க அப்பா இப்போ எந்த ஊர்லே இருக்கான்.என்ன வேலே பண்ணீண்டு இருக்கான்” என்று கேட்டார்.

“அப்பா இப்போ ‘டல்லஸ்’லே இருக்கார்.Texas Instruments என்கிற ஒரு கமப்னியிலே ‘டைரக்டரா’ வேலே பண்ணீண்டு வறார்.இதான் அவர் visiting card” என்று சதாசிவம் மறுபடியும் ஒரு அமொ¢க்கனைப் போல கொஞ்சம் இழுத்து,இழுத்து சொல்லி விட்டு, தன் பையிலே இருந்து ஒரு visiting card ஐ எடுத்து பரமசிவத்திடம் கொடுத்தான்.
அந்த visiting card ஐ பரம்சிவம் வாங்கிப் படித்தார்.அவர் கண்கள் குளமாயிற்று. அவர் அழுதுக் கொண்டு இருந்தார்.கொஞ்ச நேரம் ஆனதும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “உங்க அப்பா இப்போ தனியா இருக்கானா.இல்லே வேறே யாராவது ஒரு பொம்மணாட்டியே,மறுபடியும் கல்யாணம் பண்ணீண்டு சந்தோஷமா இருக்கானா” என்று கேட்டார் பரமசிவம்.

உடனே சதாசிவம் “இல்லே தாத்தா,அப்பா தனியாத் தான் இருந்து வறார்.எனக்கு மூனு வயசு ஆகும் போது என் அம்மா ஜூலி எங்களே விட்டுட்டுப் போயிட்டா.அப்புறமா அப்பா வேறே யாரையும் கல்யாணம் பண்ணிக்காம என்னே தனியாத் தான் வளத்துண்டு வறார்” என்று இழுத்து,இழுத்து ஒரு அமொ¢க்கனைப் போலச் சொன்னான்.சதாசிவம் சொன்னதைக் கேட்டு சந்தோஷப் பட்டார் பரமசிவம்.

கொஞ்ச நேரம் ஆனதும் பரமசிவம் “ஓ அப்படியா.சா¢, நீ உன் பையை எடுத்துண்டு,அதோ பூட்டி இருக்கற அந்த ‘ரூம்’லே தங்கிண்டு வா.அந்த ‘ரூம்’லே தான் உன் அப்பா இந்த ஆத்லே ஆறு வயசிலே இருந்து படுத்துண்டு வந்துண்டு இருந்தான்.அவன் அமொ¢க்கா போன பிற்பாடு,அந்த ‘ரூம்’ இப்போ நாப்பது வருஷமா பூட்டியே இருக்கு.வரதா,நீ அந்த ‘ரூமை’த் தொறந்து நன்னா சுத்தம் பண்ணிட்டு,கட்டில் மெத்தைக்கு எல்லாம் புது கவர் போட்டுக் குடு.போத்துக்க ஒரு புது போர்வையும் குடு.இந்த பையன்,இல்லே என் பேரன் சதாசிவம் இனிமே அந்த ‘ரூம்’லே தங்கி இருப்பான்” என்று சொன்னார்.

உடனே வரதன் ஆச்சா¢யப் பட்டுக் கொண்டே”என்ன அத்திம்பேர். இந்தப் பையனே என் பேரன்னு சொல்றேள்.இந்தப் பையன் ரமேஷ்க்குப் பொறந்த பையனா.எனக்கு ரொம்ப ஆச்சா¢யமா இருக்கே அத்திம்பேர்” என்று கேட்டான்.

“ஆமாண்டா வரதா.இந்தப் பையன் ரமேஷ¤க்குப் பொறந்த பையன் தான்.ரமேஷ் தான் இவனை அமொ¢க்காவிலே இருந்து என்னோட இருந்து வர சென்னைக்கு அனுப்பி இருக்கான்.என் பேரன் பேர் சதாசிவம்.சதாசிவம் இனிமே என்னோடவே தான் இருக்கப்
போறான் வரதா” என்று சந்தோஷத்தில் சொன்னார் பரமசிவம்.

உடனே சமையல் கார மாமா சுந்தரமும் “மாமா எனக்கும் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் அந்த சந்தோஷத்லே என் சமையலை இன்னும் நன்னா கவனிச்சு செஞ்சுண்டு வறப் போறேன்” என்று சொன்னதும்,”அப்போ இந்த நாள் வரைக்கும்,நீ எனக்கு ‘ஏனோ தானோன்னு’ சமையல் பண்ணீண்டு வந்து இருக்கே போல இருக்கு.அது வரைக்கும் என் பேரன் இங்கே வந்த பிற்பாடாவது எனக்கு நல்ல சாப்பாடு கிடைக்கப் போறதுன்னு நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று சுந்தரத்தைக் கிண்டல் பண்ணினார் பரம்சிவம்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *