அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2021
பார்வையிட்டோர்: 5,212 
 
 

அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 | அத்தியாயம்-24

அந்த நேரம் பார்த்து தான் வெளியே போய் இருந்த பரமசிவம் வீட்டுக்கு வந்தார்.அத்திம் பேரும்,அக்காவும் அழுதுக் கொண்டு இருப்பதையும்,அத்திம்போ¢ன் அப்பா உடம்பு தரையில் ‘மல்லாக்காக’ படுத்து இருப்பதையும் பார்த்த அவருக்கு விஷயம் புரிந்து விட்டது.

உடனே அவனும் அக்கா,அத்திம்பேர் பக்கத்தில் உட்கார்ர்ந்துக் கொண்டு அழுதான்.

விஷயம் கேள்விப் பட்டு,அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ராகவன் வீட்டுக்கு வந்து துக்கம் விசாரித்து விட்டுப் போனார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து ராகவன் வாத்தியாருக்கு ‘போன்’ பண்ணி விஷயத்தைச் சொன் னார்.வரதனும் அன்று அதிசயமாக வீட்டுக்கு சீக்கிரமாக வந்தான்.எல்லோரும் அழுவதைப் பார்த்த அவனும் அழுதான்.

வாத்தியார் வந்ததும் ராகவன் அழுதுக் கொண்டே ‘மயானத்திற்கு’ப் போய் அப்பாவின் ‘பூத உடலை’ ‘தகனம்’ பண்ணி விட்டு,வீட்டுக்கு வந்தார்.

சமையல் கார மாமி தன் வீட்டுக்குப் போய் எல்லோருக்கும் அரிசி உப்புமாவையும்,தொட்டுக் கொள்ள தக்காளி கொத்ஸையும் பண்ணீ கொண்டு வந்து வைத்தாள்.மாமி அடுத்த பன்னிரண்டு நாட்களுக்கும் அவள் வீட்டிலேயே எல்லா வேளைக்கும் வேண்டிய சாப்பாட்டை சமைத்துக் கொண்டு வந்துக் கொடுத்தாள்.

அடுத்த பன்னிரண்டு நாட்களும் ராகவன் அப்பாவுக்கு ‘சிரத்தையாக’ எல்லா காரியங்களையும் பண்ணீனான்.

பதி மூன்றாம் நாள் வாத்தியார் வீட்டை ‘புண்யாவசனம்’ பண்ணி விட்டு,எல்லோருக்கும் மூன்று உத்தரணி ‘புண்யாவசன ஜலத்தை’க் கொடுத்து விட்டு,வீடு பூராவும் ‘புண்யாவசன’ ஜலத்தை தெளித்தார்.அன்று முதல் சமையல் கார மாமி வீட்டில் சமையலைப் பண்ண ஆரம்பித்தாள். வாத்தி யார் சாப்பிட்டு முடிந்தததும் ராகவன் வாத்தியாருக்கு பதி மூன்று நாட்களுக்கும் சேர்த்து ‘தக்ஷணை’ யைக் கொடுத்து அனுப்பினார் ராகவன்.

அடுத்த நாளில் இருந்து ராகவனும்,மீராவும் ஆபீஸ்க்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார் கள்.சமையல் கார மாமி சரோஜாவும்,வரதனும் வீட்டுக்கு வந்ததும்,அவர்களுக்கு ‘காபி ,டிபன்’ கொடுத்து வந்தாள்.

மீரா சரோஜாவுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் நிறைய ‘ஸ்கோகங்களை’ எல்லாம் கற்றுக் கொண்டு வந்தாள்.வரதன் தினமும் ‘கிரிக்கெட் அகாடமிக்கு’ப் போய் கிரிக்கெட் ஆடி விட்டு வந்துக் கொண்டு இருந்தான்.

இரண்டு வருடம் ஆனதும் பரமசிவம் BL பரிக்ஷகளை மிக நன்றாக எழுதி,அவன் ‘பிரின் ஸிபாலிடம்’ சொன்னது போல வகுப்பிலே முதல் மாணவனாக ‘ஹை பஸ்ட் க்ளாஸ்’மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீனார்.

உடனே அந்த சட்டக் கல்லூரி ‘பிரின்ஸிபால்’ பரமசிவத்தைக் கட்டிக் கொண்டு “பரமசிவம், நீ சொன்னது போலவே நீ நல்லாப் படிச்சு,வகுப்பிலே முதல் மாணவனா ‘ஹை பஸ்ட் க்லாஸ் மார்க்’ வாங்கி ‘பாஸ்’ பண்ணி இருக்கே.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் எனக்கு ரொம்பத் தொ¢ந்
த ஒரு ‘லீடிங்க் லாயருக்கு’ப் ‘போன்’ பண்ணி,உன் சட்ட புத்தி கூர்மையைச் சொல்லி உன்னை ஒரு ‘ஜூனியரா’ வேலேக்குச் சேர்த்துக் கொள்ளச் சொல்றேன்.நீ என்னோடு என் ‘ரூமு’க்கு வா” என்று சொல்லி பரமசிவத்தை அவர் ‘ரூமு’க்கு அழைத்து போனார்.

‘பிரின்ஸிபால்’தனக்கு மிகவும் தொ¢ந்த அந்த ‘லீடிங்க் லாயர்’ ராமனிடம் ‘போன்’ பண்ணி, பரமசிவத்தை பற்றீன எல்லா சமாசாரங்களையும் சொல்லி விட்டு,“மிஸ்டர் ராமன்,பரமசிவம் ரொம்ப ரொம்ப ‘இண்டெலிஜெண்ட் பையன்.நீங்க எனக்காக அவனை உங்க ‘ஜூனியரா’ வேலேக்குச் சேத்துக் கொள்ள முடியுமா.அவன் ரொம்ப ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பிராமணப் பையன்.நீங்க எனக்காக இந்த உதவியே பண்ண முடியுமா சார்”என்று கேட்டடார்.

நீங்க இவ்வளவு தூரம் அந்தப் பையனைப் பத்தி கேக்கும் போது, நான் மாட்டேன்னா சொல்லப் போறேன்.அவனை என் ஆத்துக்கு இந்த நாத்திக் கிழமை ஒரு பத்து மணிக்கா வறச் சொல்லுங்கோ.நான் அவன் சட்ட அறிவை ‘டெஸ்ட்’ பண்ணிட்டு,எனக்கு அவனை எனக்குப் பிடிச்சு இருந்தா,நான் அவனை என் ‘ஜூனியரா’ நிச்சியமா வேலேக்குச் சேத்துக்கறேன் நீங்கோ எனக்கு ‘போன்’ பண்ணி சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ்.நானே ஒரு நல்ல ‘ஜூனியரா’ தேடிண்டு இருக் கேன்.என் கிட்டே இருந்த ஒரு ‘ஜூனியர்’ இப்போ தனியா ஒரு வக்கீல் வேலே பண்ணீண்டு வறான்” ”என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனார் அந்த லீடிங்க் லாயர் ராமன்.

உடனே அந்த பிரின்ஸிபால் தன் ஆப்த நண்பர் ராமன் வீட்டு விலாசத்தை பரமசிவத்திடம் கொடுத்தார்.

“பரமசிவம்,என் நண்பர் மிஸ்டர் ராமன் சென்னையிலே ஒரு ‘லீடிங்க் லாயர்’.இது தான் அவர் ‘அடரஸ்’.நீ இந்த நாத்திக் கிழமையே காத்தாலே ஒரு பத்து மணிக்கு அவர் வீட்டுப் போய் அவர், அவர் கேக்கற சட்ட கேள்விகளுக்கு எல்லாம் சரியா பதில் சொல்லு.அவர் உன் சட்ட கூர்மையை மெச்சி,உன்னே நிச்சியமா அவர் கிட்டே ஒரு ‘ஜூனியரா’ சேத்துப்பார்.உன் அதிரிஷ்டம் இப்போ பாத்து அவர் கிட்டே ‘ஜூனியரா’ இருந்த ஒருத்தர்,அவர் கிட்டே இருந்து பிரிஞ்சிப் போய் தனியா ஒரு வக்கீலா வேலே பண்ணிண்டு இருக்காராம். ’பெஸ்ட் ஆப் லக்’ பரமசிவம்.’ஐ ஆம் சூர் யூ வில் ஆன்ஸர் ஆல் ஹிச் டப் க்வெக்ஷன்ஸ் இன் லா’”என்று சொல்லி பரமசிவத்தின் கையைக் குலுக்கிச் சொன்னார் ‘பிரின்ஸிபால்’.

உடனே பரமசிவம் அவர் காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு “சார்,உங்களுக்கு நான் எப்படி என் நன்றியே சொல்றதுன்னு தொ¢யாம தவிக்கறேன்.நீங்கோ எனக்கு உங்க ‘காலேஜ்லே’ ஒரு சீட்டும் குடுத்து,இலவசமா படிக்க அனுமதியும் குடுத்து,இப்போ நான் படிச்சு ‘பாஸ்’ பண்ணின தும்,எனக்கு சென்னையிலே ஒருக்கும் ஒரு ‘லீடிங்க் லாயர்’ கிட்டே,ஒரு வேலையை ஏற்பாடு பண்ணி க் கொடுத்து இருக்கேள்.நான் உங்களுக்கு ஒரு ‘செருப்பா’ இருந்து வந்தா கூட என் நன்றியே முழு க்கச் செலுத்த முடியாது”என்று சொல்லி விட்டு,குலுங்கி குலுங்கி அழுதார்.
“பரமசிவம்,நீ மிஸ்டர் ராமன் கேக்கற சட்டக் கேள்விகளுக்கு எல்லாம் சரியா பதில் சொல்லி அந்த ‘ஜூனியர்’ வேலேயே அவர் கிட்டே இருந்து வாங்கினாலே போதும்.அதுவே நீ எனக்கு பண்ற பொ¢ய நன்றி.எனக்கு உன் சட்ட அறிவு கூர்மையிலே அத்தனை நம்பிக்கை இருக்கு.’பெஸ்ட் ஆப் லக்’.நீ ¨தா¢யமா அவர் கேக்கற சட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லு.உனக்கு அவர் நிச்சிய மா வேலே குடுப்பார்.எனக்கு உன் மேலே அந்த நம்பிக்கே பூரணமா இருக்கு”என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார் அந்த ‘பிரின்சிபால்’.

நன்றி உணர்ச்சியுடன் அவரை மறுபடியும் ‘தாங்க்’ பண்ணி விட்டு அவர் ‘ரூமை’ விட்டு வெளியே வந்து வீட்டுக்கு வந்தார் பரமசிவம்.

வீட்டுக்கு அந்த சட்டக் கல்லூரி ‘பிரின்சிபால்’ சொன்னதை எல்லாம் விவரமாகச் சொன்னார் பரமசிவம்.ராகவனும்,மீராவும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

அந்த ஞாயிற்று கிழமையே பரமசிவம் மிஸ்டர் ராமன் வீட்டுக்கு சரியாக பத்து மணிக்குப் போய் சுவாமியையும்,மாமா,மாமியையும் மனதில் நன்றாக வேண்டிக் கொண்டு ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினார்.

ஒரு வேலைக்காரன் வந்து வாசல் கதவைத் திறந்ததும்,ராமன் அந்த வேலைகாரனைப் பார்த்து “அந்தப் பையனை உள்ளே வரச் சொல்”என்று சொன்னதும் அந்த வேலைக்காரன் பரமசிவத்தை அவர் பங்களாவுக்குள் அனுப்பினான்.

ராமன் பரமசிவத்தை ‘சோபா’வில் தன் எதிரே நிற்க வைத்துக் கொண்டு சட்ட சம்பந்தமான பல கேள்விகளை எல்லாம் கேட்டார்.

பரமசிவம் எல்லா கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லவே,அவர் சந்தோஷப் பட்டு பரமசிவத் தைப் பார்த்து “நான் உன்னே என் ‘ஜூனியரா’ சேத்துக்கறேன்.உனக்கு நான் மாசத்துக்கு ஆறாயிரம் ரூபாய் சம்பளம் தறேன்.நீ நாளைலே இருந்தே தினம் எங்க ஆத்துக்கு சரியா எட்டு மணிக்கு வந்துட ணும்.சரியா” என்று சொன்னார் ராமன்.

கொஞ்ச நேரம் ஆனதும் ‘லாயருக்கு’ பரமசிவத்தின் குடும்ப விஷயங்களை கேட்க ஆசைப் பட்டார். “பரமா,உன் அப்பா என்ன வேலே பண்றார்” என்று கேட்டார் ராமன்.

“என் அப்பா சிதம்பரம் கோவில்லே ஒரு குருக்களா வேலே பண்ணீண்டு இருந்தா”

“என்ன உன் அப்பா ‘சிதம்பரம் கோவில்லே ஒரு குருக்களா வேலே பண்ணீண்டு இருந்தா’ ன்னு சொல்றே” என்று பதறிப் போய் கேட்டார் லாயர்.

உடனே பரமசிவம் “பயப் படறா மாதிரி ஒன்னும் இல்லே சார்.என் அப்பாவும்,அம்மாவும் சென் னையிலே ஒரு ‘கம்ப்யூட்டர் கமபனியிலே’ வேலே செஞ்சிண்டு வந்த ராகவன் என்பவருக்கு என் அக்கா மீராவைக் கல்யாணம் பண்ணிக் குடுத்தா.என் அக்கா கல்யாணம் ஆன ஆறாவது மாசமே என் அம்மா வயத்லே ஒரு கட்டி வந்து வந்து அது ‘செப்டிக்’ ஆயி ‘திடீர்’ன்னு செத்துப் போயிட்டா.அப்போ எனக்கு நாலு வயசு.என் அம்மா இப்படி ‘திடீர்’ன்னு செத்துப் போனதே பாத்த என் அப்பாவுக்கு வாழ் கைலே ரொம்ப விரக்தி வந்துடுத்து.அவர் என்னே என் அக்கா அத்திம்பேர் கிட்டே விட்டுட்டு, காசிக் குப் போயிட்டார்.நான் என் அக்கா,அத்திபேர் ஆத்தில் இருந்து தான்,BAவும், BLல்லும் படிச்சு முடிச்சேன்” என்று சொல்லும் போது அவர் கண்களில் கண்ணீர் வந்தது.

பரமசிவம் தன் பாக்கெட்டில் இருந்து கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

“நீ நாலு வயசிலே இருந்து உங்க அக்கா அத்திம்பேர் ஆத்லே இருந்து படிச்சுண்டு வந்து BA,BL பரி¨க்ஷயிலே ‘ஸ்டேட் பஸ்ட்’ராங்க் வாங்கி இருக்கே.எனக்குக் கேக்கவே ரொம்ப சதோஷமா இருக்கு.நீ உண்மையிலே ரொம்ப ‘இண்டெலிஜெண்ட்’ஸ்டூடண்ட்’ தான்.’ஐ ஆம் ரியலி டூ ப்ரவுட் ஆப் யூ.இட் வில் பி க்ரெட் டு ஹாவ் யூ ஆஸ் மை ஜூனியர் லாயர்.நீ எனக்கு நான் நடத்தி வர கேஸ்களுக்கு ரொம்ப உதவியா இருப்பே..நீ நாளைக்கு காத்தாலே இருந்து எங்காத்துக்கு சரியா எட்டு மணிக்கு வந்துடு” என்று மறுபடியும் சொன்னார்.

பரமசிவம் அவர் காலைத் தொட்டு வணங்கி விட்டு,அவருக்கு நன் நன்றியைச் சொல்லி விட்டு “சார்,நான் நாளைக்கு காத்தாலே சரியா எட்டு மணீக்கு எல்லாம் வந்துடறேன்” என்று சொன்னார்.

வீட்டுக்கு வந்து அக்கா,அத்திம்பேரைப் பார்த்து “எனக்கு அந்த ‘லீடிங்க் லாயர்’ கிட்டே ஒரு ‘ஜூனியர்’ வேலைக் கிடைச்சு இருக்கு.எனக்கு அவர் மாச சம்பளம் ஆறாயிரம் ரூபாய் தறதாய் சொன்னார்” என்று சொல்லி சந்தோஷப்பட்டார்.

பரமசிவம் சொன்னதைக் கேட்டு சந்தோஷப் பட்டார்கள் ராகவனும், மீராவும்.

பரமசிவம் இந்த சந்தோஷ சமாசாரத்தை சட்டக் கல்லுரி ‘பிரின்ஸிபாலு’க்கு ‘போன்’ பண்ணி தன் நன்றியைத் தொ¢வித்தான்.பரமசிவத்திற்கு அந்த ‘லீடிங்க் லாயர்’ இடம் ஒரு ‘ஜூனியர்’ வேலை கிடைத்ததை நினைத்து சந்தோஷப் பட்டு “பரமசிவம்,எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.உன் ‘ப்யூச்சருக்கு’ என் வாழ்த்துகள்”என்று சொல்லி ‘போனை’க் ‘கட்’ பண்ணீனார் ‘பிரின்சீபால்’.

அடுத்த வருடம் சரோஜா B.Com. பரி¨க்ஷயிலே ‘ஹை பஸ்ட் க்லாஸ்’மார்க் வாங்கி ‘பாஸ்’ பண்ணீனாள்.

பரமசிவம் தனக்கு வரும் ஆறாயிரம் ரூபாயை அப்படியே தன் அக்கா அத்திம்பேர் இடம் கொடுத்து கொடுத்து விட்டு,சமையல் கார மாமி கொடுத்த ‘டிபனை’ சாப்பிட்டு விட்டு,மதியம் கொஞ்ச தயிர் சாதத்தை கையில் எடுத்துக் கொண்டு,ஒரு ‘பஸ்’ ஏறி ‘லாயர்’ வீட்டுக்குப் போய்க் கொண்டு இருந்தார்.

பரமசிவத்தைப் பார்த்ததும் “வாப்பா பரமா,நான் ‘டேபிள்’ மேலே இன்னிக்கு ‘கோர்ட்லே’ நடக்கப் போற மூனு ‘கேஸ் பைல்’களே வச்சு இருக்கேன்.நீ அந்த ‘கேஸ் பைல்’களே எல்லாம் நன்னா படிச்சுட்டு,உனக்கு தோன்ற ‘பாயிண்ட்களை’ ஒரு காகிதத்லே எழுதி வை.நான் சுவாமிக்கு மந்திரங்களை சொல்லிட்டு வறேன்” என்று சொன்னார் ராமன்.

உடனே பரமசிவம்” சரி சார்,நான் அந்த ‘கேஸ் பைலை’ எல்லாம் நன்னா படிச்சுட்டு,எனக்கு தோன்ற ‘பாயிண்ட்களை’ ஒரு காகிதத்லே எழுதி வக்கறேன்” என்று சொல்லி விட்டு ‘டேபிள்’ மேலே இன்று ‘கோர்ட்லே’ நடக்கப் போற மூனு ‘கேஸ் பைல்’களையும் படிக்க ஆரம்பித்தார்.

சரோஜா ‘பாங்க்’ பரிக்ஷ எழுதினாள்.

இரண்டு மாசம் ஆனதும் சரோஜா அந்த ‘பாங்க்’பரி¨க்ஷயிலே ‘பாஸ்’ பண்ணினாள்.

‘பாங்க்’ சரோஜாவுக்கு ‘ஆபீஸர் ட்ரெயினிங்க்’ வேலையில் சேர ஒரு ‘ஆர்டர்’ கொடுத்து.அந்த வேலையில் சேர ஒரு வாரம் ‘டைம்’ கொடுத்து இருந்தார்கள்.

சரோஜாவுக்கு அந்த ‘லெட்டரை’ப் பார்த்ததும் சந்தோஷம் தலை கால் புரியவில்லை.அவள் அந்த ‘லெட்டரை’அம்பாள் பாதத்தில் வைத்து விட்டு,தனக்குத் தொ¢ந்த சில ‘ஸ்லோகங்களை’ எல்லாம் சொல்லி நமஸ்காரம் பண்ணி விட்டு,எழுந்து வந்து சமையல் கார மாமிக் கிட்டே ‘தனக்கு ‘பாங்க்லே’ வேலே கிடைச்சு இருக்கு’ என்று சந்தோஷமாகச் சொன்னாள்.

பிறகு அம்மாவுக்கும்,அப்பாவுக்கும் ‘போன்’ பண்ணி ‘தனக்கு ‘பாங்க்லே’ ‘ஆபீஸர் ட்ரெயினிங்க்’ வேலையில் சேர வந்து இருக்கும் ‘லெட்டரை’ப் பற்றீ சந்தோஷமாகச் சொன்னாள். இருவரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.மாமாவுக்கும் ‘போன்’ பண்ணி “மாமா,எனக்கு ‘பாங்க்லே’ ‘ஆபீஸர் ட்ரெயினிங்க்’ வேலையில் சேர வந்து இருக்கும் ‘லெட்டரை’ப் பற்றிச் சொன்னாள் சரோஜா.

பரமசிவம் “கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சரோஜா.’மை கங்கிராஜுலேஷன்ஸ் டு யூ’” என்று சொன்னார்.

ராகவனும்,மீராவும் வீட்டுக்கு வந்து மீரா காட்டின ‘லெட்டரை’ப் படித்து விட்டு “சரோஜா,நீ இப்போ ஒரு ‘பாங்க் ஆபீஸர்’.எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு”என்று சொல்லி சரோஜாவின் கைகளைப் பிடித்து குலுக்கினார்கள்.

வரதன் வீட்டுக்கு வந்ததும்,சரோஜா தனக்கு ‘பாங்க்லே’ வேலே கிடைத்து இருக்கும் ‘லெட்ட ரை’க் காட்டினாள்.அவனும் மிகவும் சந்தோஷப் பட்டு சரோஜாவை பாராட்டினான்.

ஒரு வாரம் ஆனதும் சரோஜா குளித்து விட்டு,சுவாமிக்கு ‘ஸ்லோகங்களை’ சொல்லி விட்டு, நன்றாக வேண்டிக் கொண்டு ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,அப்பா,அம்மாவுக்கு நமஸ்காரம் பண்ணி விட்டு,எழுந்து மாமாவிடமும்,வரதனிடமும் சொல்லிக் கொண்டு,நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு’ ‘பாங்க்’ வேலைக்குக் கிளம்பிப் போனாள்.

சரோஜா ‘பாங்க்’ வேலைக்குப் போவதைப் பார்த்து சந்தோஷப் பட்டார்கள் ராகவனும் மீராவும்.

ஒரு வருடம் ஓடி விட்டது.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

மீராவும்,ராகவனும் எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு ஒரு நண்பரின் கல்யாணத்திற்குக் கிளம்பிப் போனார்கள்.

அவர்கள் கிளம்பிப் போய் ஐந்து நிமிஷம் கூட ஆகி இருக்காது.

அவர்கள் தெரு முனையிலேயே அவர்கள் போய்க் கொண்டு இருந்த ‘ஸ்கூட்டர்’ மேலே ஒரு தண்ணீர் லாரி மோதி,இருவரும் ‘ஸ்கூட்டரில்’ இருந்து தூக்கி எறியப் பட்டார்கள்.

மீராவுக்கு தலையிலே பலமாக அடிப்பட்டு அவள் மூர்ச்சை ஆகி விட்டு இருந்தாள்.

ராகவனுக்கு உடம்பு பூராவும் அடிப்பட்டு ரத்தம் வந்துக் கொண்டு இருந்தது.அவர் மெல்ல எழுந்து தன்னிடம் இருந்த ‘செல் போனில்’ பரமசிவத்துக்கு ‘போன்’ பண்ணி,”பரமு எங்களுக்கு தெரு முனையிலேயே ‘ஒரு ஆக்ஸிடெண்ட்’ ஆயி இருக்கு.நீ உடனே கிளம்பி வா” என்று முனகிக் கொண்டேசொன்னார்.

உடனே பரமசிவம் பீரோவில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு,சமையல் கார மாமி இடம் சமாசாரத்தை சொல்லி விட்டு,சரோஜாவையும்,வரதனையும் அழைத்துக்கொண்டு,வாசலில் போய்க் கொண்டு இருந்த ஒரு காலி ஆட்டோவில் ஏறி தெரு முனைக்கு வந்தார்.
அந்த ஆட்டோவிலே ராகவனை ஏற்றீ விட்டு,சரோஜாவைப் பார்த்து “சரோஜா,நீ அப்பாக் கூட ‘மாதா நர்ஸிங்க் ஹோமு’க்குப் போ.நானும்,வரதனும் என் அக்காவை பின்னாலேயே ஒரு ஆட்டோலே அழைச்சுண்டு அங்கே வறோம்” என்று சொல்லி விட்டு,இன்னொரு ஆட்டோவில் மீராவை ஏற்றிக் கொண்டு,வரதனையும் அழைத்துக் கொண்டு ‘மாதா நர்ஸிங்க் ஹோமு’க்கு ஓடினார் பரமசிவம்.

‘எமர்ஜென்ஸியிலே’ இருந்த இரண்டு ‘ஸ்ட்ரெச்சரில்’,ராகவனையும்,மீராவையும் ஏற்றிக் கொண்டுப் போய் அங்கே இருந்த டாக்டரைப் பார்த்து “டாக்டர்,இவங்க என் அக்கா அத்திம்பேர்.எங்க தெரு முனையிலே இந்த ‘ஆக்ஸிடெண்ட்’ ஆயிடுத்து.நீங்கோ கொஞ்சம் இவங்களுக்கு வைத்தியம்
பண்ணுங்கோ” என்று அழுதுக் கொண்டே சொன்னார்.

சரோஜாவும்,வரதனும் அழுதுக் கொண்டு இருந்தார்கள்.ராகவன் வலியால் முனகிக் கொண்டு இருந்தார்.

உடனே அந்த டாக்டர் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்து முதலில் மீராவை பரிசோதனைப் பண்ணீனார்.ஒரு நிமிஷத்துக்கு எல்லாம் அவர் ‘ஸ்டெத ஸ்கோப்பை எடுத்து விட்டு,“இந்த அம்மா இங்கே வறதுக்கு முன்னாடியே இறந்துட்டாங்க” என்று சொல்லி விட்டு,ராகவனை பரிசோதனை பண்ண ஆரம்பித்தார்.

ராகவன் காதில் டாக்டர் சொன்னது எங்கோ கிணற்றீன் அடியில் இருந்து கேட்பது போல இருந்தது.அவர் முனகிக் கொண்டே”பரமு,மீரா போயிட்டா.நீ தான் சரோஜவையும்,வரதனையும் நன்னா கவனிச்சுண்டு வந்து…..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது,அவர் மூச்சு நின்று விட்டது.

பரமசிவத்துக்கும்,சரோஜாவுக்கும்,வரதனுக்கும் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

பரமசிவம் அழுதுக் கொண்டே” நீங்களும்,அக்காவும் இப்படி ‘திடீர்’ன்னு எங்களே விட்டுட்டு போயிட்டேளே.நாங்க என்ன பாவம் பண்ணோம்.இனிமே நாங்க என்ன பண்ணப் போறோம்” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

“அம்மா,அப்பா நீங்கோ ரெண்டு பேரும் எங்களே இப்படி தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட் டேளே.இனிமே நாங்கோ யாரே அம்மா,அப்பான்னுக் கூப்பிடப் போறோம்” என்று சொல்லி கதறி அழுதார்கள் சரோஜாவும்,வரதனும்.

‘எமர்ஜென்ஸியிலே’ இருந்த டாக்டர்,வந்து இருந்தவர்கள் எல்லோரும் இப்படி கதறீ அழுவதைப் பார்த்ததும்,பரிதாபப் பட்டு, ‘மாதா நர்ஸிங்க் ஹோம்’ ‘சீப் மானேஜா¢டம்’ கலந்துப் பேசி, அவர்கள் ‘ஆம்புலன்ஸை’ இலவசமாகக் கொடுத்து,இரண்டு பேருடைய ‘பாடிகளையும்’ அவர்கள் வீட்டில் இறக்கி வைக்க ஏற்பாடு பண்ணீனார்.

பரமசிவமும்,சரோஜாவும்,வரதனும் அதே ‘ஆம்புலன்ஸில்’ ஏறிக் கொண்டு,வீட்டுக்கு வந்தார் கள்.‘ஆம்புலன்ஸ்’ ஆட்கள் ராகவன்,மீரா ‘பாடியை’ வீட்டில் இறக்கி வைத்து விட்டு, ‘ஆம்புலன்ஸை’ ’ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு போனார்கள்.

‘ஆம்புலண்ஸ்’ ஆட்கள் இரண்டு பேருடைய ‘பாடியையும்’ வீட்டில் இறக்கி வைத்து விட்டுப் போனதைப் பார்த்த சமையல் கார மாமி “என்ன இது.என்ன ஆச்சு இவாளுக்கு.நீங்கோ எல்லோரும் அழுதுண்டே இருக்கேளே” என்று கத்தினாள்.

பரமசிவம் தன் அழுகையை நிறுத்தி விட்டு சமையல் கார மாமி இடம் எல்லா விவரங்களையும் சொல்லி விட்டு அழுதுக் கொண்டு இருந்தார்.

“ஈஸ்வரா.இது என்ன சோதனை.இவா ரெண்டு பேரும் ரொம்ப நல்லவாளாச்சே.இவா ரெண்டு பேரையும் இப்படி அநியாயமா எடுத்துண்டு போயிட்டயே.இது உனக்கே நன்னா இருக்கா.இந்தப் பொண்ணுக்கும்,பையனுக்கும் ரொம்ப சின்ன வயசு ஆச்சே.இவா ரெண்டு பேரும் என்ன பண்ணுவா பாவம்.அவாளுக்கு அம்மா, அப்பா இல்லாம பண்ணீட்டயே” என்று தலையிலே அடித்துக் கொண்டு அழுதாள் சமையல் கார மாமி.சரோஜாவும்,வரதனும் அப்பா,அம்மா ’பாடி’யின் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தார்கள்.

பரமசிவம் அவனுடைய ‘லாயரு’க்குப் போன் பண்ணி,எல்லா விவரத்தையும் பதி மூன்று நாளைக்கு ‘லீவு’ வாங்கிக் கொண்டார்.

சரோஜா தன் ‘பாங்க் மானேஜருக்கு ’போன் பண்ணி,”சார்,என்னோடஅம்மாவும்,அப்பாவும் ‘ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்லே’ ‘திடீர்’ன்னு செத்துப் போயிட்டா.எனக்கு ஒரு பதி மூனு நாள் லீவு வேணும்” என்று அழுதுக் கொண்டே கேட்டாள்.உடனே அந்த ‘பாங்க் மானேஜர் “எனக்குக் கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு சரோஜா.நீ பதி மூனு நாள் லீவு எடுத்துக்கோ” என்று சொன்னார்.

“நான் இன்னும் பன்னண்டு நாளைக்கு இந்த ஆத்லே சமையலைப் பண்ண முடியாது.நான் எங்க ஆத்துக்குப் போய் சமையலைப் பண்ணீண்டு வறேன்” என்று சொல்லி விட்டுப் போனாள் அந்த சமையல்கார மாமி.

ஒரு மணி நேரம் ஆனதும் பரமசிவம் வாத்தியாருக்கு ‘போன்’ பண்ணி,அத்திம்பேரும், அக்காவும் ஒரு ‘ஆக்ஸிடெண்ட்லே’ இறந்து போன சமாசாரத்தை அழுதுக் கொண்டே சொன்னார்.

வாத்தியார் வீட்டுக்கு வந்ததும் பரமசிவம் வரதனை வைத்துக் கொண்டு ராகவனையும்,மீரா வையும் ‘தகனம்’ பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தார்.பரமசிவமும்,வரதனும் ‘பாத் ரூமு’க்குப் போய் குளித்து விட்டு வந்தார்கள்.எல்லோரும் சமையல் கார மாமி பண்ணிக் கொண்டு வந்த சமையலை சாப்பிட்டார்கள்.

பரமசிவமும்,வரதனும் வாத்தியாரை வைத்துக் கொண்டு பன்னிரண்டு நாட்கள் ‘காரியங்களை யும்’ சிரத்தையாகப் பண்ணினார்கள்.வாத்தியார் பதி மூன்றாம் நாள் வீட்டை‘புண்யாவசனம்’ பண்ணி, எல்லோருக்கும் மூன்று உத்தரணி ‘புன்யாவசன ஜலத்தை’க் கொடுத்து விட்டு,வீடூ பூராவும் ‘புண்யா வசன ஜலத்தை’க் தெளித்தார்.பிறகு எல்லோரும் சமையல் கார மாமி பண்ணீ இருந்த சமையலை எல்லோரும் சாப்பிட்டார்கள்.

‘லீவு’ முடிந்ததும் பரமசிவமும்,சரோஜாவும் வேளைக்குப் போய் வர ஆரம்பித்தார்கள்.வரதன் கிரிக்கெட் ஆடப் போய் வந்துக் கொண்டு இருந்தான்.சமையல்கார மாமி வீட்டைப் பார்த்துக் கொண் டு சமையலைக் கவனித்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள்.

பரமசிவத்துக்கு அவன் அத்திம்பேர் உயிர் பிரியும் போது அவர் சொன்ன வார்த்தைகள் அவன் மனதில் ¡£ங்காரம் பண்ணிக் கொண்டு இருந்தது.

ஒரு வாரம் ஆனது.அன்று ஞாயிற்றுக் கிழமை.

பரமசிவம் வரதனைக் கூப்பிட்டு “வரதா,என் அத்திம்பேர் என்னேப் பாத்து ‘பரமு,மீரா போயி ட்டா.நீ தான் சரோஜவையும்,வரதனையும் கவனிச்சுண்டு வந்து…..” ன்னு சொல்லிண்டு இருந்தப்ப, அவர் மூச்சு நின்னுட்டது.நான் அந்த வார்த்தையைக் காப்பாத்தி ஆகணும்.சரோஜாவுக்கு ‘பாங்க்லே’ வேலே கிடைச்சு அவ போய் வந்துண்டு இருக்கா.கவலை இல்லே.உன் கிரிக்கெட் ஆட்டம் எப்படி போயிண்டு இருக்கு.நீ சீக்கிரமா ஒரு நல்ல ‘ப்லேயரா’ வர இன்னும் எத்தனை வருஷம் நீ அந்த ‘அகாடமிக்குப் போய் ஆடிண்டு வரணும்” என்று கவலையுடன் கேட்டார்.

உடனே வரதன் “அத்திம்பேர்,நான் இன்னும் மூனு வருஷமாவது அந்த ‘அகாடமிக்கு’ப் போய் ஆடிண்டு வரணும்.அப்புறமா தான்,நான் அந்த ‘அகாடாமியே’விட்டு வெளியே வந்து,தனியா வந்து எந்த ஒரு ‘டீமு’க்காவது ஆடி வர ‘சான்ஸ்’ கேக்கணும்” என்று சொன்னான்.

”நான் மறுபடியும் உன்னே பணம் கட்டி அந்த ‘அகாடமிலே’ சேக்கறேன்.நீ எப்படியாவது கஷ்டப்பட்டு ‘கிரிக்கெட்’ஆடிண்டு வந்து,உனக்குன்னு ஒரு ‘காரியரே’ சீக்கிரமா அமைச்சுக்கோ.நீ உன் கிரிக்கெட் ஆட்டத்லே முழு கவனத்தே செலுத்தி வாப்பா” என்று சொல்லி வரதனின் கையைப் பிடித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் பரமசிவம்.

“வரதா,அத்திம்பேர் சொன்னதை நீ நன்னா காதிலே வாங்கிண்டயா.நீ உன் கிரிக்கெட் ஆட்ட த்லே முழு கவனத்தே செலுத்தி வந்து,அந்த ‘கிரிகெட்’லே ஒரு ‘காரியரே’அமைச்சுண்டே ஆகணும்.நீ எட்டாவதிலே மூனு தடவை பெயிலானது,உனக்கு அடிக்கடி ஞாபகம் வந்துண்டே இருக்கணும்” என்று அக்கா என்கிற உரிமையில் வரதனிடம் கண்டிப்பாகச் சொன்னாள் சரோஜா.

“எனக்கு நன்னா ஞாபகம் இருக்கு.நான் கிரிக்கெட் ஆட்டத்லே என் முழு கவனத்தே செலுத்தி வந்து, அந்த ‘கிரிகெட்’லே ஒரு ‘காரியரே’அமைச்சுக்கறேன்”என்று சொல்லி விட்டு கிரிகெட் மட்டை யை எடுத்துக் கொண்டு ‘அகாடமிக்கு’ கிரிக்கெட் விளையாடப் போனான்.

இரண்டு வருடங்கள் ஓடி விட்டது.அன்று ஞாயிற்றுக் கிழமை.வரதன் காலையிலேயே ‘காபி, டிபன்’ சாப்பிட்டு விட்டு ‘அகாடமி’யில் கிரிக்கெட் ஆட கிளம்பிப் போய் விட்டான்.சமையல் கார மாமி சமையலை சமைத்து வைத்து விட்டு பரமசிவத்தைப் பார்த்து “மாமா,எனக்கு ஆத்லே கொஞ்ச அவசர ஜோலி இருக்கு.நான் அதை பண்ணீட்டு நாலு இங்கே மணீக்கா வரட்டுமா” என்று தயங்கிக் கொண்டே கேட்டாள்.

”இன்னிக்கு நாத்தி கிழமைத் தானே.நாங்க ரெண்டு பேரும் ஆத்லே தான் இருந்துண்டு வறப் போறோம்.நீங்கோ உங்க ஆத்துக்குப் போய் உங்க ஜோலியே முடிச்சுண்டு,நாலு மணிக்கா வாங்கோ” என்று பரமசிவம் சொன்னவுடன் சமையல் கார மாமி வீட்டுக்குக் கிளம்பிப் போய் விட்டாள்.
சமையல் கார மாமி கிளபிப் போனதும் பரமசிவம் சரோஜாவைக் கூப்பிட்டு “சரோஜா, உன் அம்மா,அப்பா ரெண்டு பேரும் உயிரோடு இருந்தா நான் கவலைப் பட வேணாம்.என் அக்கா விபத்து நடந்த இடத்லே தலையிலே அடிப் பட்டு செத்துப் போயிட்டா.ஆனா அத்திம்பேருக்கு மட்டும் கொஞ்ச நேரம் மூச்சு இருந்து,அவர் பிராணனே விடறதுக்கு முன்னாடி என்னேப் பாத்து ”பரமு,மீரா போயிட்டா.நீ தான் சரோஜவையும்,வரதனையும் நன்னா கவனிச்சுண்டு வந்து…” ன்னு சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்” என்று சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

”நான் வரதனுக்கு சொல்ல வேண்டியதே சொல்லிட்டேன்.உனக்கு வயசு ஏறிண்டே இருக்கு.நீ காலா காலத்லே ஒரு கல்யாணத்தே பண்ணீண்டு, வாழக்கையிலே சீக்கிரமா செட்டில் ஆகணும்.நான் உன்னே கல்யாணம் பண்ணீக்க ஒரு நல்ல பையன் வேணும்ன்னு ‘பேப்பர்லே’ ஒரு ‘அட்வர்ட்’ தரட்டுமா.நீ என்ன சொல்றே”என்று தயங்கிக் கொண்டே கேட்டார் பரமசிவம்.

“மாமா,நான் காலேஜ் படிக்கும் போதிலே இருந்தே நிறைய புருஷப் பசங்களே கவனிச்சுண்டு வந்து இருக்கேன்.இப்ப வேலை செய்யற இடத்லேயும் புருஷாளே கவனிச்சுண்டு வந்துண்டு இருக் கேன்.ஒருத்தர் கூட நல்ல ஒழுக்கமா இல்லே.ஒன்னு சிகெரெட்,இல்லே குடி.பிராமண பாஷை பேசற தே இல்லே.நீங்கோ தப்பா எடுத்துக்காட்டா,நான் என் வெக்கத்தே விட்டு ஒன்னு சொல்லட்டுமா” என்று சொல்லி விட்டு பரமசிவத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“நீ என்ன சொல்றே சரோஜா.நான் உன்னே ஏன் தப்பா எடுத்துக்கப் போறேன்.இது உன் கல்யாணம்.நீ யாரை யாவதுக் காதலிக்கறாயா.நான் ‘பேப்பர்லே’ ஒரு ‘அட்வர்ட்’ தர வேணாமா.நீ இன்னும் கொஞ்சம் விவரமா சொன்னா,நான் நிச்சியமா பண்றேன்.நீ உன் மனசிலே என்ன
நினைச்சுண்டு இருக்கேன்னு என் கிட்டே சொல்லு.நான் இந்த ஆத்து உப்பேத் திண்ணுடுட்டு வளந்தவன்.என் அம்மா,அகாலமா காலம் ஆயி,என் அப்பா காசிக்குப் போயிடப்ப, உன் அம்மாவும், அப்பாவும் தானே என்னே சென்னைக்கு அழைச்சுண்டு வந்து சாதம் போட்டு,படிக்க வச்சு,என்னே இந்த நிலைமைக்கு கொண்டு வந்தா.அவா அப்படி பண்ணாம இருந்து இருந்தா, நான் இன்னிக்கு இந்த நிலைமைக்கு வந்து இருக்க முடியுமா சொல்லு” என்று சொல்லி தன் கண்களில் வழிந்துக் கொண்டு இருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தார் பரமசிவம்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *