அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2021
பார்வையிட்டோர்: 3,449 
 

அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 | அத்தியாயம்-19

டாக்டர் தொட்டுப் பார்த்ததும் காமாக்ஷிக்கு வலி பொறுக்க முடியாமல் ”தொடாதேள்,நேக்கு ரொம்ப வலிக்கறது” என்று கத்தி,டாக்டரின் கையைத் தள்ளினான்.

டாக்டருக்கு காமாக்ஷி சொன்னது அதிர்ச்சியைத் தந்தது.

டாக்டர் உடனே வெளியிலே உட்கார்ந்துக் கொண்டு இருந்த சாம்பசிவனைக் கூப்பிட்டு “ஐயரே,நான் இவங்க வயித்தை தொட்டதும்,இவங்க வலியை தாங்க முடியாம ‘தொடாதேள்.நேக்கு ரொம்ப வலிக்கறது’ன்னு கத்தறாங்க.நான் இவங்க வயித்தே உடனே ‘ஸ்கேண்’ பண்ணீப் பாக்கணும்” என்று சொன்னதும் சாம்பசிவனும்,பரமசிவமும் பயந்து விட்டார்கள்.

“பயப் படறதுக்கு ஒன்னும் இல்லையே டாக்டர்.’ஸ்கேண்’ ‘அது’ ‘இது’ன்னு என்ன வெல்லாமோ சொல்றேளே.நாங்க இது வரை அந்த வார்த்தையைக் கேட்டதே இல்லையே .எனக்கு ரொம்ப கவலை யாவும்,பயமாவும் இருக்கு” என்று கேட்டார் சாம்பசிவன்.

“ஐயரே,நான் இப்போ ஒன்னும் சொல்ல முடியாது.இவங்க வயித்தே ‘ஸ்கேண்’ பண்ணீப் பாத்தா தான்,ஏன் இவங்களுக்கு இவ்வளவு வலி இருக்குதுன்னு கண்டுப் பிடிக்க முடியும்.இந்த வலி என்ன வலின்னு கண்டு பிடிக்க ‘ஸ்கேன்’ ஒன்னு தான் வழி.வேறே எப்படியும் இந்த வலிக்கு காரணம் கண்டு பிடிக்க முடியாது” என்று சொன்னார் அந்த லேடி டாக்டர்.

“சரி,’ஆபரேஷனை’ப் பண்ணுங்கோ.நான் அந்த நடராஜரை வேண்டிண்டு வறேன்” என்று சாம்பசிவன் சொன்னதும்,அந்த லேடி டாக்டர்,அங்கே இருந்த ‘நர்ஸை’க் கூப்பிட்டு “’நர்ஸ்’ இவங்க ளே ‘ஸ்கேன்’ பண்ற ரூக்குக்கு இட்டு கிட்டு போங்க.அவங்க இந்த அம்மாவை ‘ஸ்கேண்’ பண்ண பிறகு,அவங்க குடுக்கற ‘ஸ்கேண்’’ ரிப்போர்ட்டை’ என் கிட்டே கொண்டு வந்து குடுங்க.”நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியே குந்திக் கிட்டு இருங்க” என்று சொன்னார் லேடிடாக்டர்.

உடனே சாம்பசிவனும்,பரமசிவமும் அந்த லேடி டாக்டர் ‘ரூமை’ விட்டு வெளியே வந்து, அங்கே போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்துக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.காமாக்ஷி வலி அதிகமாக இருக்கிறது என்று சொன்னதால்,அந்த ‘நர்ஸ்’காமாக்ஷியை ஒரு ‘தள்ளும்’ கட்டிலில் படுக்க வைத்து,அந்த கட்டிலை தள்ளிக் கொண்டு,’ஸ்கேண் ரூமுக்கு’ அழைத்துப் போனாள்.

இரண்டு மணி நேரம் கழித்து அந்த ‘நர்ஸ்’ காமாக்ஷியை தள்ளும் கட்டிலில் படுக்க வைத்து டாக்டர் ரூமுக்கு அழைத்து வந்து ‘ஸ்கேன் ரிப்போர்ட்டை’ அந்த லேடி டாக்டர் கிட்டே கொடுத்தாள்.

டாக்டர் அந்த ‘ரிப்போர்ட்டை’ பார்த்ததும் தன் நெற்றியை சுருக்கினார்.இரண்டு தடவை அந்த ‘ஸ்கேன் ரிப்போர்ட்டை’ப் பார்த்த பிறகு நர்ஸைக் கூப்பிட்டு “வெளியே குந்திக் கிட்டு இருக்கிற ஐயரை யும்,அவர் பையனையும் உள்ளே வரச் சொல்” என்று சொன்னதும் ‘நர்ஸ்’டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்து “உங்களே டாக்டர் கூப்பிடறாங்க” என்று சொன்னாள்.

சாம்பசிவனும் பரமசிவமும் சுவாமியை வேண்டிக் கொண்டே டாக்டர் ‘ரூமு’க்குள்ளே போனார் கள்.காமாக்ஷி அந்த ‘தள்ளு கட்டிலில்’ கண்ணைத் திறக்காமல் படுத்துக் கொண்டு இருந்தாள்.

சாம்பசிவன் வந்ததும் அந்த லேடி டாக்டர் ”நீங்க ரொம்ப ‘டிலே’ பண்ணீ இவங்களே என் கிட்டே கொண்டு வந்து இருக்கீங்க.இவங்களுக்கு இந்த வலி ஒரு நாலு,ஐஞ்சு மாசமாவது இருந்துக் கிட்டு இருக்கணும்.இவங்க வலது பக்கத்லே இருக்கிற பெருங்குடலில் அடிப்பாகத்தில் ஒரு வீக்கம் வந்து,அது ஒரு கட்டியா மாறி,அந்த கட்டி உடைஞ்சுப் போய் இப்போ ‘செப்டிக்’ ஆயி இருக்குது” என்று சொன்னதும் சாம்பசிவனும்,பரமசிவமும் பயந்துப் போய் விட்டார்கள்.

“இவங்களுக்கு உடனே ‘ஆபரேஷன்’ பண்ணீயே ஆகனும்.இவங்களுக்கு இந்த வலி ஆரம்பிச்ச உடனே,நீங்க உடனே வந்து இருந்தா ரொம்ப சுலபமா இந்த ‘ஆபரேஷனை’ப் பண்ணி,அவங்க உடம்பே சரிப் படுத்தி இருக்கலாமேங்க.ஏன் இவ்வளவு ‘லேட்டா’ இட்டுக் கிட்டு வந்து இருக்கீங்க” என்று கத்தி சொன்னதும்,சாம்பசிவனுக்கும்,பரமசிவத்துக்கும் இன்னும் பயம் அதிகம் ஆகி விட்டது.

“டாக்டர்,’ஆபரேஷன்’ பண்ணீத் தான் ஆகணுமா.மருந்த்லே தேவலே ஆக்க முடியாதா” என்று சாம்பசிவன் கேட்டதும் ”ஐயரே,இப்பவே நீங்க ரொம்ப ‘லேட்’.அவங்க கட்டி‘செப்டிக்’ ஆகி வெடிச்சு இருக்கு.இப்போ ‘ஆபரேஷன்’ பண்ணாலே,அவங்க பிழைக்கிறதே கஷ்டம்” என்று அந்த லேடி டாக்டர் சொல்லி விட்டு,‘நர்ஸை’ப் பார்த்து “இவங்களே,உடனே ‘ஆபரேஷன் தியேட்டருக்கு’ அழைச்சுக் கிட்டு போங்க” என்று சத்தம் போட்டு சொன்னார்.

அந்த ‘நர்ஸ்’ பயந்துப் போய்,காமாக்ஷி படுத்துக் கொண்டு இருந்த ‘தள்ளு கட்டிலை’ வேகமாக தள்ளிக் கொண்டு ‘ஆபரேஷன் தியேட்டருக்கு’ ப் போனாள்.

காமாக்ஷி தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.

சாம்பசிவனையும்,பரமசிவத்தையும் ‘ஆபரேஷன் தியேட்டருக்கு’ வரச் சொல்லி விட்டு அந்த லேடி டாக்டர் ‘ஆபரேஷன் தியேட்டருக்கு’ வேகமாகப் போனார்.

சாம்பசிவனும்,பரமசிவமும் அந்த லேடி டாக்டர் பின்னாலேயே போனார்கள்.

‘ஆரேஷன் தியேட்டருக்கு’ப் போய், அங்கே போய் வாசலில் போட்டு இருந்த சேர்களில் உடகார் ந்துக் கொண்டு சுவாமியை வேண்டிக் கொண்டு இருந்தார்கள்.

மூன்று மணி நேரம் கழித்து அந்த ‘லேடி’ டாக்டர் ‘ஆபரேஷன் தியேட்டரை’ விட்டு வெளியே வந்தார்.

“எங்களாலே உங்க சம்சாரத்தே காப்பாத்த முடியலே.’ஆபரேஷன்’ பண்ணிக் கிட்டு இருக்கும் போதே,அந்த கட்டியிலே இருந்து வந்த ‘சீ’அவங்க ரத்தத்லே கலந்து, உடம்பு பூரா பரவிடிச்சி. அதனால்லே அவங்க ‘ஹார்டு’ நின்னுப் போச்சு.எங்களாலே ஒன்னும் பண்ண முடியலே” என்று சாம்பசிவனைப் பார்த்து சொல்லி விட்டு வேகமாகப் போய் விட்டார் அந்த டாக்டர்.

“காமாக்ஷி,என்னையும்,பரமுவையும் தனியா தவிக்க வீட்டுட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்தது.இனிமே நீ இல்லாம நாங்க ரெண்டு பேரும் என்னப் பண்ணப் போறோம்.உன் உடம்பு சின்னதா இருக்கும் போதே,நான் இந்த ‘நர்ஸிங்க் ஹோம்’லே காட்டி இருந்தா,நீ இப்படி அநியாயமா செத்துப் போய் இருக்க மாட்டியே.நான் தானே உன் கிட்டே மீரா கல்யாணம் ஆன பிற்பாடு காட்டிக் கலாம்ன்னு சொன்னேன்.நான் தான் உன்னே அநியாயமா சாகடிச்சுட்டேன்.நானும், பரமசிவமும் இனிமே அந்த ஆத்லே நீ இல்லாம எப்படி வாழ்ந்துண்டு வறப் போறோம்.ஈஸ்வரா எனக்கு ஏன் இந்த சோதனையே குடுத்து இருக்கே” என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் சாம்பசிவன்.

“அம்மா,நீங்கோ இல்லாம இந்த ஆத்லே நானும்,அப்பாவு எப்படி தனியா இருந்துண்டு வறப் போறோம்”என்று சொல்லி விட்டு,விக்கி அழுதுக் கொண்டு இருந்தான் பரமசிவம்.

அடுத்த பத்தாவது நிமிஷம் ‘ஆபரேஷன் தியேட்டரில்’ இருந்து, வெள்ளைத் துணியைப் போர்த்தி காமாக்ஷியின் ‘பாடியை’,வெளியேக் கொண்டு வந்தார்கள்.

அந்த லேடி டாக்டர் ‘நர்ஸிங்க் ஹோம்’ ‘மானேஜிங்க் டைரக்டர்’ இடம் பேசி ‘பீஸ்’ ஒன்றும் வாங்காமல்,அந்த ‘நர்ஸிங்க் ஹோம்’ ‘ஆம்புலன்ஸை’ இலவசமாகக் கொடுத்தாள்.அந்த ‘ஆம்புலன்ஸ்’ ஆட்கள் காமாக்ஷியின் ‘பாடி’யை ஏற்றிக் கொண்டு,சாம்பசிவனையும்,பரமசிவத்தையும் ஏற்றீக் கொண்டு,சாம்பசிவன் வீட்டுக்கு வந்து காமாக்ஷியின் ‘பாடியை’ இறக்கி வைத்து விட்டு, ’ஆம்புலன் ¨ஸை’ ‘ஸ்டார்ட்’ பண்ணிக் கொண்டு போனார்கள் அந்த ஆடகள்.

காமாக்ஷியின் ‘பாடி’யின் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு சாம்பசிவனும், பரமசிவமும் அழுதுக் கொண்டு இருந்தார்கள்.

விஷயம் கேள்விப் பட்டு,சாம்பசிவனுடன் கூடவேலை செய்து வந்த குகுக்கள் எல்லோரும் சாம்பசிவன் வீட்டுக்கு வந்து சாம்பசிவனை துக்கம் விசாரித்தார்கள்.

“விசு,நீ கொஞ்சம் சமையல் கார மாமி லலிதாவை,இன்னிக்கு ராத்திரிக்கு எங்க ரெண்டு பேருக்கு ஆற மாதிரி,அரிசி உப்புமாவையும்,கத்திக்காய் கொத்ஸையும் பண்ணிக் கொண்டு வந்து வச்சுட்டு,அடுத்த பதிமூனு நாளைக்கும் காத்தாலே ‘காபி’ மத்தியானம் சாப்பாடு ராத்திரி ஏதாவது பலகாரம் பண்ணிக் கொண்டு எங்க ஆத்லே வக்கச் சொல்லு நான் எல்லாத்துக்கும் அப்புறமா என்ன செலவு ஆச்சுன்னு அந்த மாமியே கேட்டு பணம் குடுத்தடறேன்” என்று சொன்னார் சாம்பசிவன்.

“நான் நிச்சியமா சொல்றேன் மாமா” என்று சொல்லி விட்டு,விசு குருக்கள் அவர் வீட்டுக்குக் கிளம்பினார்.மற்ற குருக்களும் ஒவ்வொருவராக சாம்பசிவன் இடம் சொல்லிக் கொண்டு அவர்கள் வீட்டுக்குக் கிளம்பிப் போனார்கள்.

ஒரு மணி நேரம் கழித்து சாம்பசிவன் சிவபுரிக்குப் ‘போன்’ பண்ணி அக்கா,அத்திம்பேர் இடம் காமாக்ஷி இறந்துப் போன சமாசாரத்தை அழுதுக் கொண்டே சொன்னார்.சாம்பசிவன் சொன்னதைக் கேட்ட ராதாவுக்கும் சுந்தரத்துக்கும் அதிர்ச்சியாய் இருந்தது.”என்ன ஆச்சு சாம்பு.காமாக்ஷி மீரா கல்யாணத்தின் போது நன்னாத் தானே இருந்தா.இப்போ ‘திடீர்’ன்னு என்ன ஆச்சு.எங்களாலே நம்ப முடியலையேடா” என்று கத்திக் கேட்டாள் ராதா.

சாம்பசிவன் அழுதுக் கொண்டே காமாக்ஷியைப் பற்றின எல்லா விவரத்தையும் சொன்னான். ”சாம்பு,இப்ப ரொம்ப சாயங்காலமா ஆயிடுத்து.என் மாமியாருக்கு ஒரு துணையை ஏற்பாடு பணணி ட்டு,நானும் அவரும் காத்தாலே முதல் ‘பஸ்ஸே’ப் பிடித்துக் கொண்டு உங்க ஆத்துக்கு வறோம்” என்று சொல்லி விட்டு, ராதா ‘போனை கட்’ பண்ணினாள்.

சாம்பசிவன் சென்னைக்கு ‘போன்’ பண்ணி மீராவுக்கு காமாக்ஷி இறந்துப் போன சமாசாரத் தை விவரமாகச் சொன்னான்.மீரா அழுதுக் கொண்டே”அப்பா,நானும்,இவரும் இன்னிக்கு ராத்திரி கிளம்பி நாளைக்குக் காத்தாலே ஆத்துக்கு வறோம்” என்று சொல்லி ‘போனை கட்’ பண்ணீனாள்.

மணி எட்டடித்ததும் லலிதா மாமி ஒரு பொ¢ய தூக்கில் அரிசி உப்புமாவையும்,ஒரு சின்ன தூக்கில் கத்தா¢க்காய் கொத்ஸையும் கொண்டு வந்து வைத்து விட்டு,சாம்பசிவனை துக்கம் விசாரித்து விட்டுப் போனாள்.

“பரமு மணீ எட்டடித்துடுத்து.நீ அந்த மாமி கொண்டு வந்த வச்சு இருக்கற அரிசி உப்புமாவை யும் கொத்ஸையும் சாப்பிடு.எனக்கு பசி இல்லே” என்று சாம்பசிவன் பரசிவத்தை பார்த்து சொன்னதும் “அப்பா,நீங்கோ காத்தாலே குடிச்ச ‘காபி’யோட் இருந்துண்டு வறேள்.இன்னிக்கு ராத்திரி நீங்கோ சாப்பிடாம இருந்தா நாளைக்கு,நீங்கோ ரொம்ப ‘டயர்ட்’ ஆயுடுவேள்.நாளைக்கு நிறைய காரியம் இருக்கு.நீங்கோ இப்போ கொஞ்சம் வயத்துக்கு சாப்பிடுங்கோ.இனிமே நீங்கோ எனக்கு முக்கியம்ப்பா” என்று அவர் கையைப் பிடித்து கெஞ்சினான் பரமசிவம்.

“சரி பரமு,நானும் நீ சொல்றயேன்னு கொஞ்சம் சாப்பிடறேன்” என்று சொல்லி விட்டு,பரமசிவத்துடன் உட்கார்ந்துக் கொண்டு அரிசி உப்புமாவையும் கொத்ஸையும் சாப்பிட்டார் சாம்பசிவன்மணீ பன்னிரண்டு ஆனதும் பரமசிவம் தூக்கம் வரவே படுத்துக் கொண்டு தூங்கப் போய் விட்டான்.

சாம்பசிவன் இரவு பூராவும் உட்கார்ந்துக் கொண்டே இருந்தார்.

ராதா தன் மாமியாருக்கு பக்கத்து வீட்டு மாமியை காவல் வைத்து விட்டு,தன் கணவரை அழைத்துக் கொண்டு முதல் ‘பஸ்’ பிடித்து சிதம்பரம் வந்து சாம்பசிவன் வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

ராதா காமாக்ஷியின் ‘பாடி’க்குப் பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டு இருந்தாள்.சுந்தரம் சாம்பசிவனுக்கும்,பரசிவத்திற்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தார்.

மீரா தன் அம்மா ‘திடீர்’ என்று இறந்து போன சமாசாரத்தை ராகவனுக்கு ‘போன்’ பண்ணி சொல்லி,அவனை ஒரு நாள் ‘லீவு’ப் போட்டு விட்டு வரும் படி சொன்னதும் ராகவன் “மீரா நீ கவலை ப் படாதே.நான் ஒரு நாள் ‘லீவு’ப் போட்டு விட்டு வறேன்.நாம சிதம்பரம் போய் வரலாம்” என்று சொன்னதும் மீரா ராகவனை ‘தாங்க்’ பண்ணீனாள்.

“சார்,என் அம்மா திடீர்ன்னு செத்துப் போயிட்டா.என் அப்பா இப்போ ‘போன்’ பண்ணி எனக்குச் சொன்னார்.என் அப்பாவும்,தம்பியும் இப்போ தனியா இருக்கா.எனக்கு ரெண்டு வாரம் லீவு தர முடியுமா”என்று கண்களில் தளும்ப மீரா தன் ‘ஆபீஸ்’ மானேஜர் இடம் கேட்டாள்.

மீரா அழுவதைப் பார்த்த அந்த மானேஜர் பா¢தாபப் பட்டு “சரிம்மா,நீ ரெண்டு வாரம் லீவு எடுத்துக்கோ” என்று சொன்னதும் அவரைப் பார்த்து “ரொம்ப ‘தாங்க்ஸ்’ சார்” என்று சொல்லி விட்டு வந்தாள்.

அன்று இரவு பஸ்ஸைப் பிடித்து ராகவனும்,மீராவும் காலையில் சிதம்பரம் வந்து சாம்பசிவன் வீட்டுக்கு வந்தார்கள்.

மீரா அம்மா பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு “இப்படி அநியாயமா எங்களே எல்லாம் தவிக்க விட்டுட்டு போயிட்டேளே.என் கல்யாணத்துக்காக உங்க உடம்பே வைத்தியம் பண்ணிக்காம இருந்து ட்டேளே.உங்க உடம்பு ‘சின்னதா’ இருக்கும் போதே நீங்கோ டாக்டர் கிட்டே காட்டி இருந்தா,அவர் உங்களே காப்பாத்தி இருப்பாரே.நீங்கோ இன்னும் ரொம்ப வருஷம் அப்பாவோடவும்,தம்பியோடவும் இருந்து வந்து இருக்கலாமே” என்று கதறி அழுதாள்.

சாம்பசிவன் வாத்தியாரை கூப்பிட்டு,விஷயத்தை சொல்லி அவரை வீட்டுக்கு வர சொன்னார்.

வாத்தியார் வந்ததும் சாம்பசிவன்,பரமசிவத்தை வைத்துக் கொண்டு காமாக்ஷி ‘பூத உடலை’ ‘தகனம்’ பண்ணி விட்டு,இருவரும் வீட்டுக்கு வந்து குளித்து விட்டு ஹாலுக்கு வந்தார்கள்.எல்லோ ரும் லலிதா மாமி பண்ணிக் கொண்டு வைத்த சமையலை சாப்பிட்டார்கள்.

ராதாவும்,சுந்தரமும் சாம்பசிவனிடமும் பரமசிவத்திடமும் சொல்லிக் கொண்டு, ஒரு ‘மினி பஸ்’ ஏறி சிவபுரிக்குக் கிளம்பிப் போனார்கள்.இருவரும் காமாக்ஷி இப்படி அகாலமாக இறந்துப் போனதை நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டு இருந்தர்கள்.

“மாமா,மீரா உங்க கூட‘சுபம்’ ஆற வரைக்கும் இருந்து வரட்டும்.நான் இன்னிக்கு ராத்திரி கிளம்பிப் போய் ‘சுபம்’ அன்னைக்கு கத்தாலேயே வந்துடறேன்.நான் வந்து மீராவை அழைச்சுண்டு போறேன்.அது வரைக்கு மீரா உங்க கூட இருந்து வரட்டும்.அவ ரெண்டு வாரம் லீவு வாங்கிண்டு இருக்கா.எனக்கு தான் ‘லீவு’ ரொம்ப இல்லே.தவிர எனக்கு ‘ஆபீஸ்லே’ வேலே ரொம்ப இருக்கு. நான் ‘ஆபீஸ்’க்கு போயே ஆகனும்”என்று ராகவன் சாம்பசிவனிடம் சொல்லி விட்டு, ராத்திரி கடைசி ‘பஸ்ஸை’ப் பிடித்து சென்னைக்குக் கிளம்பிப் போனார்.

சாம்பசிவன் வாத்தியாரை வைத்துக் கொண்டு ‘பன்னிரண்டு நாள் காரியங்களை’ எல்லாம் மனதில் சுமையோடு ‘கிரமமாக’ செய்து முடித்தார்.

‘சுபம் அன்று காலையில் ராகவன் சிதம்பரத்துக்கு வந்தார்.

வாத்தியாரை வைத்துக் கொண்டு சாம்பசிவன் ‘சுபத்தை’ முடித்து விட்டு,வீட்டை ‘புண்யா வசனம்’ பண்ணி,வாத்தியாரை ’புண்யாவசன’ ஜலத்தை வீடு பூராவும் தெளிக்க வைத்தார்.

வாத்தியாருக்கு எல்லா நாட்களுக்கும் கொடுக்க வேண்டிய ‘தக்ஷணை’யை வெத்திலை, பாக்கு,தேங்காய், ஒரு சீப்பு வாழைப் பழத்தையும் வைத்து அவருக்குக் கொடுத்து விட்டு,அவருக்கு தன் நன்றீயை சொல்லி அனுப்பினான்.

வாத்தியார் கிளம்பிப் போனதும் சாம்பசிவன் எல்லோர் கூடவும் உட்கார்ந்துக் கொண்டு லலிதா மாமி சமைத்துக் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டார்.சாப்பிட்டு முடிந்ததும்,சாம்பசிவன் “எல்லா நாளுக்கும் சாப்பாட்டுக்கு என்ன செலவு ஆச்சு மாமி” என்று லலிதா மாமியைக் கேட்டார்.லலிதா மாமி சொன்ன பணத்தை அந்த மாமிக்கு பணம் கொடுத்து அனுப்பினார்.

கொஞ்ச நேரம் ஆனதும் சாம்பசிவன் மாபிள்ளையும்,பொண்ணையும் தன் அருகில் கூப்பீட்டு உட்காரச் சொன்னார்.இருவரும் ‘நம்மை ஏன் இவர் கூப்பிடறார்’ என்று யோஜனைப் பண்ணீக் கொண்டு வந்து அவர் அருகில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.

சாம்பசிவன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு “நான் சொல்றதே கொஞ்சம் கவனமா கேளுங்கோ.நானும் காமக்ஷியும் இந்த ஆத்லே ‘நகமும் சதையும்’ போல வாழ்ந்துண்டு வந்தோம். ‘நகத்தையோ’’ சதையையோ’ பிரிச்சா எப்படி வலிக்குமோ அப்படிபட்ட வலி என் மனசிலே இருந்து ண்டு இருக்கு.அந்த வலி என்னே விட்டுப் போக ரொம்ப வருஷம் ஆகும்.நான் வெறுமனே பத்தாவது தான் ‘பாஸ்’ பண்ணீ இருக்கேன்.எனக்கு அதுக்கு மேலே படிக்க ஆசையே இல்லை.எனக்கு ஒரு குருக்கள் ஆயி,தினம் நடராஜருக்கு அபிஷேகம் பண்ணீ,அலங்காரம் பண்ணீ வந்து,அவருக்கு மந்திரங்கள் சொல்லி வரணும்ன்னு ரொம்ப ஆசையா இருந்தது.இந்த ஆசைய நான் என் அம்மா அப்பா கிட்டே சொன்னேன்.ரெண்டு பேரும் சந்தோஷப் பட்டு என்னே குருக்கள் ஆக சொன்னா” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் “நான் பத்தாவது ‘பாஸ்’ பண்ணீனதும்,குருக்கள் வேலைக்குப் போக நினைத்த போது ஒரு நாள் என் அம்மா ‘திடீர்’ன்னு செத்துப் போயிட்டா.நான் என் அப்பாவோட ஒரு வருஷம் சிவபுரிலே சும்மா இருந்துண்டு வந்தேன்.என் அம்மா ‘வருஷாப்திகம்’ ஆனவுடனே என் அப்பா என்னை குருக்கள் வேலேக்கு போய் முயற்சி பண்ணச் சொன்னார்.என் அப்பா சம்மதம் குடுக் கவே நான் சிதம்பரம் வந்தேன்.சிதம்பரத்லே எனக்கு யாரையும் தொ¢யாது” என்று சொல்லி விட்டு எதிரில் இருந்த ‘ட்ம்ளரில்’ இருந்து கொஞ்சம் தண்ணிரைக் குடித்தார் சாம்பசிவன்.

தண்ணீரைக் குடித்து குடித்ததும் அவர் தொடர்ந்தார் “அந்த நடராஜர் தான் எனக்கு சிதம்பரத்லே காமாக்ஷியின் அப்பா மஹா தேவ குருக்களை என் கண்லே காட்டினார்.அவர் தயவாலே நான் சிதம்பரம் கோவில்லே ஒரு சின்ன ரூம்லே தங்கி,ரமணி குருக்கள் கிட்டே குருக்கள் வேலேயே நன்னா கத்துண்டேன். மஹா தேவ குருக்கள் ஒரு நாள் ரமணி குருக்களைப் பாக்க வந்தபோது அவர் மஹா தேவ குருக்களைப் பாத்து ‘இந்த பையன் குருக்கள் மந்திரங்களை எல்லாம் நன்னா கத்துண்டு ரொம்ப ‘ஸ்பஷ்டமா’ சொல்றான்.இவன் இப்போ ஒரு குருக்கள் வேலேக்கு ரெடியா இருக்கான்’ என்று சொன் னதும்,காமாக்ஷியின் அப்பா என்னை அவர் கூட ஒரு ‘ஜூனியர்’ குருக்களா வேலேக்கு வச்சுண்டார்” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் சும்மா இருந்தார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ”எப்படியோ என்னே காமாக்ஷி அப்பாவுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அவரே வலிய வந்து எங்க அப்பா கிட்டே கேட்டு ஜாதகதப் ‘பா¢வர்த்தணை’ப் பண்ணீ,எங்க ரெண்டு ஜாதகங்களும் நன்னா பொருந்தி இருக்கவே,அவர் தன் பொண்ணு காமாக்ஷியை எனக்குக் கல்யாணம் பண்ணீக் குடுத்தார்.அப்புறமா எங்களுக்கு மீராவும்,பரமசிவமும் பொறந்தா.என் கூட காமாக்ஷி இருந்தாலே,என்னாலே மீராவே B.Com.படிக்க வக்க முடிஞ்சது” என்று சொல்லி நிறுத்தி னார் சாம்பசிவன்.

“இப்போ என் உடம்ப்லேயும் திடம் இல்லே மனசிலேயும் திடம் இல்லே.பரமசிவம் ரொம்ப புத்தி சாலிப் பையன்.அவன் வளந்து முன்னுக்கு வந்து நன்னா வாழ வேண்டிய பையன்.காமாக்ஷி இல்லாம என்னாலே அவனே வளத்து வர முடியாது.காமாக்ஷி போன பிறகு எனக்கு சிதம்பரத்லே இருந்து வரவே ஆசை இல்லே.நான் என் கிட்டே இருக்கிற பணத்தை எல்லாம் எடுத்துண்டு காசிலே போய் இருந்துண்டு,காசி விஸ்வநாதரையும்,விசாலாக்ஷி அம்மனையும் தினம் தா¢சனம் பண்ணிண்டு வந்து, என் ஆயுசு முடியும் போது காசிலே என் மூச்சே வுடணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு. இது ஒன்னேத் தவிர எனக்கு வேறே எந்த ஆசையும் இல்லே” என்று சொல்லி விட்டு கொஞ்ச நேரம் தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தார் சாம்பசிவன்.

அவர் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.

“நீங்கோ ரெண்டு பேரு தயவு செஞ்சி பரமசிவத்தை உங்க கூடவே அழைச்சிண்டு போய், அவனை ஒரு நல்ல பள்ளீக் கூடத்லே சேத்து படிக்க வச்சு முன்னுக்குக் கொண்டு வந்து,அவனுக்கு ஒரு நல்ல பொண்னாப் பாத்து ஒரு கல்யாணத்தையும் பண்ணி வையுங்கோ.நீங்கோ அப்படி பண்ண நான் நிம்மதியா காசிக்கு போய் என் கடைசி காலத்தே கழிக்க முடியும்.நீங்கோ தயவு செஞ்சி அப்படி பண்ணுவேளா” என்று சொல்லி மாப்பிள்ளை கையையும்,மீரா கையையும் பிடித்து சொல்லும் போது அவர் விக்கி விக்கி அழுதார் சாம்பசிவன்.

மாமனார் கெஞ்சி கேட்டு அழுததைப் பார்த்த ராகவன் மனசு நெகிழ்ந்தது.

“உங்க தர்ம சங்கடம் எனக்கு நன்னா புரியறது.நீங்கோ காசிக்குப் போய்,உங்க கடைசி காலத் தை நிம்மதியா கழிச்சுண்டு வாங்கோ.நானும் மீரவும் பரமசிவத்தை எங்களோட சென்னைக்கு அழைச் சுண்டுப் போய்,அவனை நன்னா படிக்க வச்சு,ஒரு நல்ல பொண்ணாப் பாத்து ஒரு கல்யாணத்தையும் பண்ணீ வக்கிறோம்” என்று சாம்பசிவன் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார் ராகவன்.

“இவ்வளவு நல்ல மனசு இருக்கிற ஒரு மாப்பிளையே அந்த நடராஜர் தான் எனக்கு கண்லே காட்டி இருக்கார்.அது என் பாக்கியம்” என்று சொல்லி விட்டு,தன் கண்களை மூடிக் கொண்டு தான் தினம் வேண்டி வரும் நடராஜருக்கு தன் நன்றிகளை சொன்னார் சாம்பசிவன்.பிறகு தன் கண்களைத் திறந்துக் கொண்டு ”நான் உங்களுக்கு ஒரு ஐஞ்சு லக்ஷ ரூபாய்க்கு உங்க பேருக்கு ஒரு ‘செக்’கைத் தறேன்.தயவு செஞ்சி வேண்டாம்ன்னு மட்டும் சொல்லிடாதேள்.மீராவுக்கு வளை காப்பு வந்தால், அவளுக்கு பிடிச்சா மாதிரி ரெண்டு ஜதை தங்க வளையல்கள் வாங்கி,வளைக் காப்பை பண்ணுங்கோ. .மீதி பணத்தே பரமசிவம் படிப்பு செலவுக்கு வச்சுக்கோங்கோ” என்று சொல்லி செக்கை எழுதப் போனார் சாம்பசிவன்.

உடனே மீராவும் ராகவனும்”நீங்கோ எங்களுக்கு பணம் எல்லாம் குடுக்கவே வேணாம்.நாங்க ரெண்டு பேரும் சம்பாத்திச்சுண்டு வறோம்…” என்று சொல்லி முடிக்கவில்லை,சாம்பசிவன் ”காமாக்ஷி உயிரோடு இருந்தா,என்னே மீரா வளைக் காப்புக்கு ரெண்டு ஜதை தங்க வளையல்களை வாங்கி, பண்ண சொல்லி இருப்பா இல்லையா.அதே போல பரமசிவம் படிப்புக்கு நான் செலவு பண்ணீண்டு தானே வந்துண்டு இருப்பேன்.அந்த ரெண்டு பணத்தையும் நான் இப்போ முன் கூட்டி உங்க கிட்டே த் தறேன்.அவ்வளவு தான் வித்தியாசம்.நீங்கோ தயவு செஞ்சி மறுக்காம வாங்கிக்கோங்கோ” என்று சொல்லி விட்டு,ஐஞ்சு லக்ஷ ரூபாய்க்கு ஒரு ‘செக்கை’ ராகவன் பேர்லே எழுதி மாப்பிள்ளையிடம் கொடுத்தார் சாம்பசிவன்.

“நான் மறுபடியும் வேணம்ன்னு சொன்னா,நீங்கோ மனசு கஷ்டப் படுவேள்.உங்க சந்தோஷத் துக்காக நான் இந்த ‘செக்கை’ வாங்கிக்கறேன்”என்று சொல்லி வாங்கிக் கொண்டார் ராகவன்.

“அப்பா,நீங்கோ காசிலே உங்க உடம்பே ஜாக்கிறதையா கவனிச்சுண்டு வாங்கோ.இத்தனை வருஷமா எங்க சந்தோஷத்துக்காக நீங்கோ வாழ்ந்துண்டு வந்தேள்.இனிமே உங்களுக்கு சந்தோஷத் தே தறதே நீங்கோ பண்ணீண்டு வாங்கோ.நாங்கோ எங்க சந்தோஷத்துக்காக உங்களே சிதம்பரத்லே தனியா இருந்துண்டு வாங்கோன்னு சொல்றது ரொம்ப தப்பு.நீங்கோ காசிக்குப் போனதும் உன் விலாச த்தே எங்களுக்கு எழுதுங்கோ.நாங்கோ பதில் போடறோம்”என்று அழுதுக் கொண்டே சொன்னார்கள் மீராவும்,பரமசிவமும்.
“நான் நிச்சியமா எழுதறேன்.அடிக்கடி பதிலும் போடறேன்” என்று சொன்னார் சாம்பசிவன்.

சாமபசிவன் சிவபுரிக்கு ‘போன்’ பண்ணி,தன் அக்கா அத்திம்போ¢டம் எல்லா விஷயத்தையும் சொன்னான்.“சாம்பு,நீ காசிலே ஜாக்கிறதையா இருந்துண்டு வா.காசிக்குப் போனதும் உன் விலாசத் தே எங்களுக்கு எழுது.நாங்கோ உனக்கு பதில் போடறோம்” என்று வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னான் ராதா.

“நான் நிச்சியமா எழுதறேன்க்கா.உங்களுக்கு அடிக்கடி பதிலும் போடறேன்” என்று சொன்னார் சாம்பசிவன்.

பரமசிவம் தன் பெட்டியில் தன் துணிமணீகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டான்.

அன்று இரவே மீராவும்,ராகவனும் பரமசிவத்தை தங்களுடன் சென்னைக்கு அழைத்துப் போக ரெடி ஆனதும் பரமசிவம் அப்பா காலில் விழுந்து நமஸ்காரத்தைப் பண்ணீ விட்டு ‘அபிவாதயே’ சொன்னான்.

உடனே சாம்பசிவன் பரமசிவத்தின் தோளைத் தொட்டு எழுப்பி,அவன் தலையைத் தொட்டு “பரமசிவ ஷர்மன் தீர்காயு¢ஷ்மான் பவ”என்று சொல்லி ஆசீர்வாதம் பண்ணீனார்.

அடுத்து ராகவனும் மீராவும் சாமசிவனுக்கு நமஸ்காரம் பண்ணீனார்கள்.”நீங்கோ ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்துண்டு வாங்கோ.என் ஆசீர்வாதமும்,’சொர்க்க வாசி’யான காமாக்ஷியோட ஆசீர்வாதமும் உங்களுக்கு இருக்கு” என்று கண்களில் கண்ணீர் மல்கச் சொன்னார் சாம்பசிவன்.

ஒரு ‘கால் டாக்ஸி’ வந்ததும் ராகவனும், மீராவும்,பரமசிவமும் தங்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த ‘கால் டாக்ஸி’யிலே ஏறிக் கொண்டார்கள்.’கால் டாக்ஸி’ கிளம்பும் வரையில் சாம்ப சிவன் தன் கையை ஆட்டிக் கொண்டு இருந்தார்.பிறகு வீட்டுக்குள்ளே வந்தார் சாம்பசிவன்.

‘பஸ் ஸ்டாண்டு’க்குப் போய்,தங்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு,சென்னைக்குப் போகும் ‘பஸ்ஸில்’,ஏறிக் கொண்டு சென்னைக்குப் போய் அவர்கள் வீட்டுக்குப் போய் சேர்ந்தார்கள் மீராவும், ராகவனும்,பரமசிவமும்.

அடுத்த நாள் முதல் ராகவனும்,மீராவும் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தார்கள்.

மீரா ‘ஆபிஸ்’க்குப் போகும் போது பரமசிவத்தை,அவள் ‘ஆபீஸ்’ கிட்டே ஒரு மூணாவது வகுப்பு வரை பள்ளிக் கூடமும்,கூடவே ஒரு ‘கரெச்சும்’ நடத்தற நிறுவனத்தில்,ஒண்ணாம் வகுப்பிலே சேர்த்து படிக்க வைத்து விட்டு,சாயங்காலம் ‘ஆபீஸ்’ முடிந்ததும்,அந்த ‘க்ரெச்சுக்கு’ப் போய், பரமசிவ த்தை வீட்டுக்கு அழைத்து வந்துக் கொண்டு இருந்தாள்.
அடுத்த நாள் சாம்பசிவன் தன் வீட்டில் இருந்த ‘காஸ் கனெக்ஷனை’ காஸ் கடையிலே கொடுத் து விட்டு அவன் கொடுத்த வந்த ‘டெபாஸீட்’ பணத்தை வாங்கி கொண்டு வந்தார்.’காஸ்’ கடைக்கார பையன் சாம்பசிவன் வீட்டுக்கு வந்து ‘காஸ் சிலிண்டரையும்’ ’ரெகுலேடரையும்’ எடுத்துக் கொண்டுப் போனான்.

காமாக்ஷியின் துணீமணீகளையும்,பரமசிவத்துக்கு சின்னதாக போன துணி மணீகளையும், மீராவுக்கு சின்னதாக போன துணி மணீகளையும்,சிதம்பரத்லே இருந்த ஒரு ‘முதியோர் இல்லத்தில்’ கொடுத்து விட்டு வந்தார்.தன் துணி மணிகளை ஒரு பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டார் சாம்பசிவன்.

‘பாங்கு’க்குப் போய் ‘மானேஜரை’ப் பார்த்து,”சார்,சம்சாரம் ஒரு பதினைஞ்சு நாளுக்கு முன்னா லே செத்துப் போயிட்டா.எனக்கு அவ இல்லாம இங்கே இருக்கப் பிடிக்கலே.நான் காசிக்குப் போய், என் கடைசி காலத்தை கழித்து வராலாம்ன்னு இருக்கேன்.அதனால்லே நீங்கோ என் ‘அக்கவுன்ட் லே’ இருந்த பணத்தையும்,என் அப்பா ‘ஜாயிண்ட் ‘அக்கவுன்ட்லே’ இருக்கற பணத்தையும் ஒன்னாச் சேர்த்து,என் பேர்லே ஒரு ‘ட்ராப்டா’ குடுக்க முடியுமா” என்று கேட்டார் சாம்பசிவன்.

சாம்பசிவன் சொன்னதைக் கேட்டு அந்த ‘மானேஜர்’ மிகவும் வருத்தப் பட்டார்.”நீங்கோ சொல்றதே கேக்க எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு” என்று சொல்லி விட்டு,”சரி சார்,நீங்கோ சொன்னபடி நான் பண்றேன்” என்று சொல்லி விட்டு ‘பியூனை’ அனுப்பி தன் ‘அசீஸ்டெண்ட் மானேஜரை’ தன் ‘ரூமு’க்கு வரச் சொன்னார் மானேஜர்.

‘அசீஸ்டெண்ட் மானேஜர்’ வந்ததும் அவரைப் பார்த்து “நீங்கோ இவர் ‘அக்கவுன்ட்லே’ இருக் கிற பணத்தையும், இவர் அப்பா ‘ஜாயிண்ட் ‘அக்கவுன்ட்லே’ இருந்த பணத்தையும் ஒன்னா சேத்து. இவர் பேர்லே குடுத்துட்டு,ரெண்டு ‘அக்கவுண்டையும் க்ளோஸ்’ பண்ணீடுங்கோ”என்று சொன்னதும் அந்த ‘அசீஸ்டெண்ட் மானேஜர்’ “சரி சார்.நான் பண்றேன்”என்று சொல்லி விட்டு,சாம்பசிவனை தன் ‘ரூமு’க்கு அழைத்துப்போய்,ரெண்டு ‘அக்கவுண்டையும் க்ளோஸ்’ பண்ணீவிட்டு,மொத்த பணத்துக் கும் ஒரு ‘ட்ராப்ட்’ தயார் பண்ணீ சாம்பசிவனிடம் கொடுத்தார்.

சாம்பசிவன் அந்த ‘அஸிஸ்ண்ட் மானேஜருக்கு’ தன் நன்றியை சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தார்.வாத்தியாரை கூப்பிட்டு” வாத்தியார் நமஸ்காரம்.நான் சாம்பசிவன் பேசறேன்.நான் என் பையன் பரமசிவத்தை என் மாப்பிள்ளை,பொண்ணு கூட சென்னைக்கு அனுப்பி, அவனை படிக்க வச்சு முன்னுக்குக் கொண்டு வரச் சொன்னேன்.அவாளும் ஒத்துண்டு பரமசிவத்தை அவாளோட அழைச்சுண்டு போயிட்டா.எனக்கு சிதம்பரத்லே இருந்து வர பிடிக்கலே.நான் காசிக்குப் போயிடலாம் ன்னு முடிவு பன்ணீ இருக்கேன்.நான் காசிக்குப் போக ஒரு நல்ல நாள் பாத்து கொஞ்சம் சொல்ல முடியுமா” என்று கேட்டார் சாம்பசிவன்.“நீங்கோ சொல்றதே கேக்க நேக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. சித்தே இருங்கோ.நான் பஞ்சாகத்தைப் பாத்துட்டு சொல்றேன்” என்று சொல்லி விட்டு பஞ்சாங்கத்தை பார்த்து ஒரு நல்ல நாளாகப் பார்த்து சாம்பசிவனுக்கு சொன்னார் வாத்தியார்.

வாத்தியார் சொன்ன நல்ல நாளில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்குப் போய், சிதம்பரத்தில் இருந்து சென்னைக்கும்,சென்னயிலே இருந்து காசிக்கும் ஒரு ‘சீட்டை’ முன் பதிவு பண்ணீ விட்டுக்கு வந்தார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *