அப்பா, நான் உள்ளே வரலாமா…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 29, 2021
பார்வையிட்டோர்: 5,230 
 
 

அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18

சனி கிழமை இரவு பத்து மணிக்கு ராகவன் சென்னையில் இருந்து சிவபுரிக்கு வந்தான்.

ஞாயிற்றுக் கிழமை ராதா மாமியாருக்கு காபியை கொடுத்தாள்.பசித்தால் சாப்பிட கொஞ்சம் ஆகாரமும் மாமியார் பக்கத்தில் வைத்தாள்.சுந்தரம் சிதம்பரம் போய் வர ஒரு ‘கால் டாக்ஸியை’ ஏற்பாடு பண்ணீனார்.

ராதாவும்,சுந்தரமும்,ராகவனும் குளித்து விட்டு சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு, காபியைக் குடித்து விட்டு,டிரஸ் பண்ணிக் கொண்டு ரெடியாக இருந்தார்கள்.பக்கத்து விட்டு மாமி யும்,சித்ராவும் வந்தவுடன் ராதா சித்ராவை மாமியார் கிட்டே விட்டு விட்டு,மாமியை அழைத்துக் கொண்டு ‘கால் டாக்சியில்’ நாலு பேருமாகக் கிளம்பி சாம்பசிவன் வீட்டுக்கு சரியாக ஒன்பது மணி க்குப் போய் சேர்ந்தார்கள்.

காமாக்ஷி மீராவின் தலையை நன்றாக வாரி,நிறைய பூவை வைத்து விட்டு,ஒரு நல்ல பட்டுப் புடவையைக் கட்டி ரெடி பண்ணினாள்.

வாசலிலே காத்துக் கொண்டு இருந்த சாம்பசிவனும் காமாக்ஷியும் அவர்கள் நாலு பேரையும் “வாங்கோ,வாங்கோ” என்று சொல்லி வீட்டுக்கு உள்ளே அழைத்துப் போய்,’ஹாலில்’ போட்டு இருந்த சேர்களில் உட்காரச் சொன்னார்கள்.

நாலு பேரும் உட்கார்ந்ததும்,‘ஹால் பேனை ஆன்’ பண்ணீனார் சாம்பசிவன்.ராதா காமாக்ஷி இடம் தன் பக்கத்து வீட்டு மாமியை அறிமுகம் பண்ணி விட்டு “காமாக்ஷி மூனு பேராப் ‘பொண்ணு பாக்க’ போக வேணாம்ன்னு மாமியார் சொன்னா.அதனால்லே நான் என் பக்கத்துக்கு ஆத்து மாமியே அழைச்சுண்டு வந்து இருக்கேன்” என்று சொன்னாள்.
உடனே காமாக்ஷி “வாங்கோ மாமி.நீங்கோ வந்தது ரொம்ப சந்தோஷம்” என்று அந்த மாமியிடம் சொன்னாள்.அந்த மாமி “உங்க ஆத்துக்காரர் நடராஜர் கோவில்லே குருக்களா இருக்காரா.ராதா என் கிட்டே சொல்லி இருக்கா” என்று கேட்டதும் “ஆமாம் மாமி” என்று சொல்லி விட்டு “கொஞ்சம் இருங் கோ நான் மீராவை அழைச்சுண்டு வந்து எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணச் சொல்றேன்” என்று சொல்லி விட்டுப் போனாள் காமாக்ஷி.

காமாக்ஷி மீராவை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து மீராவைப் பார்த்து “எல்லோருக்கும் ஒரு நமஸ்காரத்தை பண்ணும்மா” என்று சொன்னதும் மீரா எல்லோருக்கும் பொதுவாக ஒரு நமஸ்கார த்தை பண்ணி விட்டு,பவ்யமாக தரையில் போட்டு இருந்த பாயில் உட்கார்ந்துக் கொண்டாள்.

கூட வந்து இருந்த மாமி “உங்க பொண்ணு தங்க விக்ரகமாட்டம் ரொம்ப நன்னா இருக்கா.என் கண்ணே பட்டுடும் போல இருக்கு,நாங்கோ எல்லாரும் போன பிற்பாடு நீங்கோ அவளுக்கு மறக்காம சுத்திப் போடுங்கோ”என்று சொன்னாள்.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த மாமி “ஏம்மா மீரா,உனக்குப் பாட வருமா” என்று கேட்டதும் “வரும் மாமி” என்று சொல்லி விட்டு சும்மா இருந்தாள்.

ராதா மீராவைப் பார்த்து “மீரா,நீ ஒரு பாட்டு பாடேன்.நாங்கோ கேக்கறோம்” என்று சொன் னதும் மீரா ‘அபிராமி அந்தாதியிலே’ இருந்து ஒரு பாட்டைப் பாடினாள்.பாட்டு முடிந்தததும் அந்த மாமி “ரொம்ப நன்னா பாடி இருக்கே இந்தப் பாட்டே.உனக்கு இந்த பாட்டை எந்த வாத்தியார் சொல்லிக் குடுத்தார்” என்று கேட்டதும் “என் அம்மா தான் எனக்கு சொல்லிக் குடுத்தா” என்று மீரா சொன்னாள்.

உடனே காமாக்ஷி “எனக்கு என் அம்மா சொல்லிக் குடுத்தா.நான் மீராவுக்கு சொல்லி குடுத்து இருக்கேன்.அவ குழந்தேக்கு சொல்லி குடுப்போ.இந்த ‘ஸ்லோகங்ககள்’ எல்லாம் வாழை அடி வாழை யாக நம்ப குடும்பங்கள்ளே வந்துண்டு இருக்கும்” என்று சொன்னதும் அந்த மாமி “ஆமாம் மாமி. நீங்கோ சொல்றது ரொம்ப நிஜம்” என்று சொன்னாள்.

“கொஞ்சம் இருங்கோ.நான் மீராவை எல்லோருக்கும் நாங்க பண்ண ‘ஸ்வீட்’, காரத்தை கொண்டு வந்து தரச் சொல்றேன்” என்று சொல்லி மீராவை அழைத்துக் கொண்டு போனாள்.அவர்கள் எல்லோரும் கொஞ்ச நேரம் தனியாக இருக்கட்டும் என்று நினைத்து சாம்பசிவன் “இதோ ஒரு நிமிஷ த்லே நான் வறேன்”என்று சொல்லி விட்டு ‘சமையல் ‘ரூமு’க்குப் போனார்.

சமையல் ரூமில் காமாக்ஷி மீராவைப் பார்த்து “மீரா உனக்கு ராகவனை பிடிச்சு இருக்கா” என்று மெதுவாகக் கேட்டாள்.மீராவும் வெட்கப் பட்டுக் கொண்டே”பிடிச்சு இருக்கும்மா” என்று சொன்னதை கேட்ட காமாக்ஷிக்கும்,சாம்பசிவனுக்கும் சந்தோஷமாக இருந்தது.

ராதாவும்,சுந்தரமும் ராகவனைப் பார்த்து “ராகவா,உனக்கு மீராவே பிடிச்சு இருக்கா” என்று கேட்டதும் அவன் “எனக்குப் பிடிச்சி இருக்கு” என்று சொன்னான்.
மீரா ஒரு பொ¢ய ‘ட்ரேயில்’ ‘ஸ்வீட்’ காரம் வைத்து இருந்த தட்டுகளை எல்லோர் இடமும் பவ்ய மாகக் கொடுத்து விட்டு,அப்பா சமையல் ரூமில்’ இருந்து வந்ததும்,அவருக்கும் ஒரு தட்டைக் கொடுத்து விட்டு உட்கார்ந்துக் கொண்டாள்.

‘ஸ்வீட்’ காரத்தை சாப்பிட்டுக் கொண்டே சுந்தரம்” ராகவன் மீராவை பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டான்.உங்க பொண்ணுக்கு ராகவனைப் பிடிச்சு இருக்கா” என்று நோ¢டையாகவே கேட்டார்.

உடனே காமாக்ஷி “அவளும் உங்க பையனை பிடிச்சு இருக்குன்னு சொல்லிட்டா” என்று சொன்னதும்,சாம்பசிவன் “நான் தினமும் பூஜைப் பண்ணீண்டு வரும் நடராஜரை வேண்டிண்டு இருந்தேன்.அவர் ‘அனுக்கிரஹம்’தான் எல்லாம் நல்லபடியா ஆயி இருக்கு” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

‘ஸ்வீட்’ காரத்தை சாப்பிட்டு விட்டு,கொஞ்ச நேரம் எலோரும் ‘லோகா பிராமாக’ப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

சாம்பசிவன் “நான் வாத்தியாரை கேட்டு இவா ரெண்டு பேருடைய கல்யாணத்துக்கு ஒரு முஹ¥ர்த்த நாள் பாத்து சொல்ல சொல்றேன்.அவர் சொன்னதும் நான் உங்களுக்கு ‘போன்’ பண்றேன்” என்று சொன்னார்.

சுந்தரம் எழுந்துக் கொண்டு “அம்மா ரொம்ப நேரமா தனியா இருக்கா.இந்த மாமி பொண்ணு தான் அம்மாவுக்கு துணையா இருந்துண்டு இருக்கா.இப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்” என்று சொன்னதும் மற்றவர்கள் எல்லோரும் எழுந்துக் கொண்டார்கள்.

சாம்பசிவனும் காமாக்ஷியும் அவர்கள் கூட ‘கால் டாக்ஸி’ வரைக்கும் போய் அவர்களை வழி அனுப்பி வைத்து வீட்டுக்கு உள்ளே வந்தார்கள்.

பரமசிவம் “அப்பா,இப்போ நான் அக்காவுக்கு ‘டும்’ ‘டும்’ கொட்டலாம்” என்று சொல்லி விட்டு மீரா கிட்டேப் போய் “அக்கா தன் தலையே குனிஞ்சுண்டு இருப்பாளாம்.வாத்தியார் மாங்கலய தாரண மந்திரத்தே சொன்னதும்,எல்லோரும் கை விரலை ஆட்டி,நாதஸ்வர வித்வான் கிட்டே’கொட்டு மேளம் கொட்டச் சொல்வா’.அத்திம்பேர் அக்கா கழுத்லே மூனு முடிச்சு போடுவாராம்.அப்புறமா எல்லோரும் அவர்கள் கையிலே இருக்கிற புஷ்பத்தை அக்கா தலையிலும்,அத்திம்பேர் தலையிலும் போடுவா. அக்கா கல்யாணம் முடிஞ்சுடும்.அக்கா அத்திம்பேருடன் அவா ஆத்துக்கு போயிடுவா.அப்பூறமா நான் தனியா இருந்துண்டு வரணும்” என்று சொல்லி வருத்தப் பட்டான்.

உடனே காமாக்ஷி “ஆமாம் பரமா.அக்காவுக்கு கல்யணம் ஆயிட்டா,அவ அவ ஆத்துக்காரர் ஆத்துக்குப் போய் தான் இருந்துண்டு வருவா.நீ ஏன் தனியா இருந்துண்டு வரணும்.உனக்கு நானும் அப்பாவும் தான் கூட இருக்கோமே” என்று தேத்தறவு சொன்னாள்.

அடுத்த நாள் சாமசிவன் வாத்தியாரை கூப்பிட்டு “வாத்தியார்,ஒரு சந்தோஷ சமாசாரம்.என் அக்கா குடும்பம் எங்க ஆத்துக்கு வந்து மீராவை ‘பொண்ணுப் பாத்து’ பிடிச்சு இருக்கான்னு சொல்லி ட்டு போய் இருக்கா.நீங்க அவா ரெண்டு பேர் நக்ஷத்திரத்துக்கும் பொருந்தற மாதிரி ஒரு ‘முஹ¥ர்த்த நாள்’ பாத்து சொல்ல முடியுமா” என்று கேட்டார்.

“நேக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் அவா ரெண்டு பேரோட நக்ஷத்திரத்திக்கும் ஏத்தாப் போல ஒரு முஹ¥ர்த்த நாளாப் பாத்து சொல்றேன்” என்று சொல்லி விட்டு பஞ்சாகத்தை எடுத்து பார்த்து “அடுத்த மாசம் முப்பதாம் தேதி அன்னைக்கு ஒரு முஹ¥ர்த்த நாள் வறது,அன்னேக்குக் கல்யாணத்தே வச்சுக்குங்கோ” என்று சொன்னார்.

“ரொம்ப சந்தோஷம் வாத்தியார்” என்று சொல்லி விட்டு சாம்பசிவன்,வாத்தியார் சொன்ன முஹ¥ர்த்த நாளை அக்கா அத்திம்பேருக்கு ‘போன்’ பண்ணி சொன்னார்.

மீரா அவள் ‘ஆபீஸ் மானேஜரை’ப் பார்த்து “சார்,எனக்கு இன்னும் ஒரு மாசத்லே கல்யாணம் ஆகப் போறது.’அவர்’ சென்னையிலே இருக்கார்.நீங்கோ தயவு செஞ்சி நான் குடுக்கற விண்ணப்ப த்தை கொஞ்சம் ‘ஸ்டராங்காக’ சிபாரிசு பண்ணீ,எனக்கு சென்னை தலைமை ஆபீஸ்க்கு ஒரு ‘மாத்தல்’ வாங்கித் தர முடியுமா”என்று கேட்டதும் “நீங்கோ உங்க விண்ணப்பத்தை குடுங்கோ.நான் நிச்சியமா ‘ஸ்டராங்காக’ சிபாரிசு பண்ணீ,உங்களுக்கு ஒரு ‘மாத்தல்’ வாங்கித் தறேன்”என்று சொன் னதும் மீரா அவரைப் பார்த்து” ரொம்ப தாங்க்ஸ் சார் உங்களுக்கு” என்று கையைக் கூப்பிச் சொல்லி விட்டு தன் சீட்டுக்கு வந்து வேலைப் பண்ணீக் கொண்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் மீரா ‘ஆபீஸில்’ நடந்த சமாசாரத்தை பூராவும் அம்மா அப்பாவிடம் சொன்னாள்.

உடனே சாம்பசிவன் “ரொம்ப கரெக்டா பண்ணீ இருக்கேம்மா.நீ கல்யாணம் ஆனதும் அவரோ டத் தானே போய் இருந்துண்டு வரணும்.அந்த நடராஜர் தான் உனக்கு ஒரு தடங்கல் இல்லாம இந்த ‘மாத்தலை’த் தரணும்”என்று சொல்லி விட்டு,தன் கண்களை மூடிக் கொண்டு நடராஜரை வேண்டிக் கொண்டார்.

“அந்த மாதிரி ஒரு மாத்தல் கிடைச்சா,நீ கல்யாணம் ஆன பிற்பாடு உன் ஆத்துக் காரரோட இருந்து வர முடியும்.உங்க ஆத்துக்காரர் படிப்புக்கு சிதம்பரத்லே எந்த ‘கம்பெனி’யும் இல்லையே.உன் ‘ஹெட் ஆபீஸ் சென்னையிலே இருக்கிறது ரொம்ப சௌகா¢யமாப் போச்சு.நீ அங்கே மாத்திண்டு போறது தான் சரி” என்று சொன்னாள் காமாக்ஷி.

ராகவனுக்கு ‘போன்’ பண்ணி சாம்பசிவன் சொன்ன முஹ¥ர்த்த நாளை சொல்லி விட்டு, ”ராகவா,நீ சீக்கிரமா ஒரு ரெண்டு ‘பெட் ரூம்’ ஆமாக வடகைக்குப் பார்த்து ‘காஸ் கனெக்ஷன்’ வாங்கி விட்டு,வீட்டுக்கு வேண்டிய சில முக்கியமா பாத்திரங்களை எல்லாம் வாங்கி வைத்து விட்டு அங்கே இருக்கிற ஒரு வாத்தியாரை வச்சுண்டு,அந்த வாடகை ஆத்லே பாலைக் காய்ச்சிக் குடித்து விட்டு சின்னதா ஒரு ‘கிரஹபிரவேசம்’ பண்ணீடு” என்று சொன்னார் சுந்தரம்.

உடனே ராகவன் ”நீங்கோ சொன்னா மாதிரி நான் பண்ணீடறேன்”என்று சொல்லி ‘போனை க் கட்’ பண்ணீனான்.

சென்னைக்கு சுமார் இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அந்த ஊர்.ஒரு சமயம் காஞ்சி ஆச்சார்ய மஹா பொ¢யவா அந்த ஊருக்கு பாத யாத்திரை பண்ன வந்தார்.அன்று சாயந்திரம் அவர் சொன்ன பிரவசனத்தில் “இந்த ஊர்ர் சாதாரண ஊர் இல்லை.இந்த ஊர் ரொம்ப சானித்தியமான ஊர்.இந்த ஊரில் எல்லா சுவாமிகளும் இருக்கா” என்று சொன்னார்.

அவர் சொன்ன தீர்க்க தா¢சனமான பிரவசனம் வீண் போகவில்லை.இன்று இந்த ஊரில் எல்லா சுவாமி கோவில்களும் இருக்கு.எல்லா கோவிகளிலும் நாலு வேளை பூஜை நடக்கிறது.எல்லா கோவில் களிலும் தினமும் சுவாமி பிரசாதம் பக்தர்களுக்கு விநியோகம் பண்ணப் படுகிறது.அந்த மஹா பொ¢ய வா சொன்னது போல மிகவும் சானித்தியமான ஊராக இருக்கிறது அந்த ஊர்.

அந்த ஊர் பேர் தான் நங்க நல்லூர்.

இந்த செய்தியைப் படித்ததில் இருந்து ராகவனுக்கு நங்க நல்லுரில் இருந்து வர வேண்டும் என்று ரொம்ப ஆசையாக இருந்தது.ஒரு ஞாயிற்றுக் கிழமை ராகவன் நங்க நல்லூருக்குப் போய், ஒரு ரெண்டு ‘பெட் ரூம்’ வீட்டை வாடகைக்கு பார்த்து,அந்த வீட்டு ஒனர் கேட்ட ஆறு மாச வாடகையை ‘அட்வான்ஸாக’க் கொடுத்து விட்டு வந்தார்.
தன் ‘ரூமு’க்கு வந்து அப்பா,அம்மாவுக்கு ‘போன்’ பண்ணி,”அப்பா,அம்மா நான் சென்னை க்கு பக்கத்லே இருகிற நங்க நல்லுர்லே ஒரு ரெண்டு ‘பெட் ரூம்’ வாடகைக்குப் பார்த்து ஆறு மாச ‘அட்வான்ஸ்’ குடுத்து இருக்கேன்” என்று சந்தோஷமாகச் சொன்னான்.ராகவன் சொன்னதைக் கேட்டு கமலாவும்,சுந்தரமும்,ராதாவும் சந்தோஷப் பட்டார்கள்.
அடுத்த வாரமே ராகவன் அவன் பார்த்து இருக்கும் வீட்டுக்கு ஒரு ‘காஸ் கனெஷன்’ வாங்கி, சில முக்கியமான ‘எவர் சில்வர்’ பாத்திரங்களையும்,வாங்கி விட்டு,ஒரு வாத்தியாரை அவன் வீட்டுக்கு வரச் சொல்லி,’பால் காய்ச்சி’க் குடித்து விட்டு,வாத்தியாருக்கும் கொடுத்தான்.

வாத்தியார் ராகவன் கொடுத்த பாலைக் குடித்து விட்டு,வீட்டுக்கு ஒரு ‘புண்யாவசனத்தை’ப் பண்ணி விட்டு,வீடு பூராவும் அந்த ‘புண்யாவசன’ ஜலத்தைத் தெளித்து விட்டு,ராகவன் கொடுத்த ‘தக்ஷணை’யை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு போனார்.

ராகவன் அடுத்த நாளே அம்மா அப்பாவை ‘போன்’லே கூப்பிட்டான்.சுந்தரம் ‘போன்லே’ வந்ததும் “அப்பா,நான் நங்க நல்லூர் ஆத்லே பாலைக் காய்ச்சி குடிச்சுட்டு,ஒரு வாத்தியாரை அழைச் சுண்டு வந்து ‘புண்யாவசனத்தை’ப் பண்ணி முடிச்சேன்” என்று சந்தோஷமாக சொன்னான்.

ராகவன் சொன்னதைக் கேட்டு சுந்தரமும்,ராதாவும் “எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ராகவா.மீரா உன்னேக் கல்யாணம் பண்ணீண்டு வந்தா,அந்த ஆத்லே நீங்கோ ரெண்டு பேரும் கஷ்ட ப் படாம இருந்துண்டு வரலாம்.நாங்க கவலை இல்லாம் இருந்துண்டு வருவோம்.நீ ரொம்ப நல்ல காரி யத்தே பண்ணீ இருக்கே.நாங்கோ இந்த சந்தோஷ சமாசாரத்தே இப்பவே பாட்டி கிட்டே சொ¡ல்லிட றோம்.பாட்டி ரொம்ப சந்தோஷப் படுவா” என்று சொல்லி விட்டு ‘போனை கட்’ பண்ணீனார்கள்.

இருவரும் கமலாவிடம் ‘ராகவன் நங்க நல்லூரில் ஒரு ரெண்டு ‘ப்லாட்’ வாங்கி,அந்த ஆத்லே பாலேக் காய்ச்சிக் குடிச்சுட்டு,’புண்யாவசனம்’பண்ணி இருக்கும் சந்தோஷ சமாசாரத்தை’ சொன்னார்கள்.

ஒரு நல்ல நாளாகப் பார்த்து,சாம்பசிவனும்,காமாக்ஷியும் மீராவை ஒரு நகை கடைக்கு அழைத் துக் கொண்டு போய்,அவளுக்கு ஒரு ஜதை வைரத் தோடும்,வைர மூக்குத்தியும்,ஒரு நீள தங்க செயினும்,ஒரு சின்ன தங்க செயினும் வாங்கிக் கொண்டு,ஜவுளிக் கடைக்கு வந்து,கல்யாணத்துக்கு எல்லோருக்கும் வேண்டிய எல்லா ஜவுளீகளையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

சிதம்பரத்தில் புதியதாக திறந்து இருந்த ஒரு சத்திரத்தை மூனு நாள் வாடகைக்கு ‘புக்’ பண்ணி விட்டு,சமையலுக்கு ஒரு நல்ல சமையல் காரரை ஏற்பாடு பண்ணீனார் சாம்பசிவன்.அவா¢டமே கல்யா ணத்திற்கு வேண்டிய,பூ மாலைகள்,பழங்கள்,தேங்காய்கள்,வெற்றிலை,சீவல்,தாம்பூலப்பை,எல்லாவற் றுக்கும் ஏற்பாடு பண்ணீனார் சாம்பசிவன்.

சிவபுரியில் சுந்தரமும்,ராதாவும் ஒரு நல்ல நாள் பார்த்து கூரைப் புடவையையும்,திரு மாங்கல்ய மும் வாங்கிக் கொண்டு,கல்யாணத்திற்கு வேண்டிய எல்லா ஜவுளிகளையும் வாங்கிக் கொண்டு வந்தார்கள்.

காமாக்ஷிக்கு ஒரு வாரமாக வலது வயிற்றின் அடியிலே கொஞ்சம் வலி இருந்துக் கொண்டு வந்தது.காமாக்ஷி இந்த வலியை தன் கணவனிடம் சொன்னாள்

“வலியே கொஞ்சம் பொறுத்துக்கோ காமாக்ஷி.இப்போ நாம டாக்டர் கிட்டே போய் வைத்தியம் பண்ண ஆரம்பிச்சோம்ன்னா,மீரா கல்யாணத்து ஏதாவது தடை வந்துடப் போறது.அவ கல்யாணம் நல்ல படியா முடியட்டும்.நாம அப்புறமா நிதானமா ஒரு டாக்டர் கிட்டே காட்டி வைத்தியம் பண்ணீக் கலாம்” என்று சொன்னார் சாம்பசிவன்.

உடனே காமாக்ஷி “ஆமாண்ணா.நீங்கோ சொல்றது சரி.மீரா கல்யாணத்தே வச்சுண்டு டாக்டர் அமக்களம் எல்லாம் வேணாம்.கல்யாணம் நல்ல படியா ஆனப் பிற்பாடு டாகடர் கிட்டே காட்டி மருந்து வாங்கிக்கலாம்” என்று சொன்னாள்.

ராகவன் கல்யாணத்திற்கு ஒரு வார ‘லீவில்’ சிவபுரிக்கு வந்தான்.

சுந்தரம் ஒரு நல்ல நாள் பார்த்து ராகவன் மீரா கல்யாணப் பத்திரிக்கை அச்சடிக்க கொடுத்தார்.

பத்திரிக்கைகள் அச்சடித்து வந்ததும்,அவருக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் கொடுத்து விட்டு வந்தார்.ராகவன் வந்ததும் அவனுக்கு எத்தனை கல்யாணப் பத்திரிக்கைகள் வேண்டும் என்று கேட்டு அத்தனை பத்திரிக்கைகளைக் கொடுத்தார்.

உடனே ராகவன் தன் நண்பர்களுக்கு எல்லாம் தன் கல்யாண பத்திரிகையை தபால் மூலமாக அனுப்பினான்.சுந்தரம் தன் அம்மாவைப் பார்த்துக் கொள்ள ஒரு சமையல் கார மாமியை ஒரு மாதத்தி ற்கு ஏற்பாடு பண்ணீனார்.ராதாவும் சுந்தரமும் கடைக்குப் போய்,கூரைப் புடவையும்,மாங்கல்யமும் கல்யணத்திற்கு வேண்டிய ஜவுளிகளையும் வாங்கி வந்தார்கள்
சிதம்பரத்தில் சாம்பசிவன் ஒரு நல்ல நாளாகப் பார்த்து மீரா ராகவன் கல்யாணப் பத்திரிக்கை அச்சடிக்கக் கொடுத்தார்.பத்திரிக்கைகள் அச்சடித்து வந்ததும்,சாம்பசிவன் தெரிந்தவர்களுக்கு எல் லாம் கல்யாணப் பத்திரிக்கையை கொடுத்தார்.மீராவைப் பார்த்து அவளுக்கு எவ்வளவு பத்திரிக்கை கள் வேண்டும் என்று கேட்டு பத்திரிக்கைகளைக் கொடுத்தார்.

மீரா தன் ‘ஆபீஸ்’ மானேஜருக்கும்,தன்னுடைய தோழிகளுக்கும் தன் கல்யாண பத்திரிகை யைக் கொடுத்தாள்.

சாம்பசிவன் கல்யாணத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் சரியாக நடந்துக் கொண்டு வருகிறதா என்று அடிக்கடி கண்காணித்து வந்தார்.காமாக்ஷியும்,’மீரா கல்யாணத்துக்கு வேண்டியது எல்லாம் சரியாக இருக்கிறதா’ என்று அடிக்கடி சரி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கல்யாண முஹ¥ர்த்த அன்று காலையிலே ஆறு மணிக்கு சுந்தரம் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு,ஏழு மணிக்கு எல்லாம் ராதாவையும்,ராகவனையும் அழைத்துக் கொண்டு,மூன்று பெட்டி களுடன் ஒரு ‘கால் டாக்ஸியில்’ கல்யாண சத்திரத்திற்கு வந்தார்.

அவர்களைப் பார்த்ததும் சாம்பசிவனும் காமாக்ஷியும் ஓடிப் போய் அவர்களை வரவேற்று, அவர் களுக்காக ஒதுக்கி இருந்த ஒரு பொ¢ய ‘ரூமை’க் காட்டி,”நீங்கோ எல்லாம் இந்த ‘ரூம்’லே சௌகா¢யமா தங்கிக்கோங்கோ.இப்போ எங்களோட வந்து ‘காபி டிபன்’ சாப்பிட வாங்கோ” என்று சொன்னதும் மூன்று பேரும் தங்கள் பெட்டியை வைத்து விட்டு,’ரூமை’ப் பூட்டிக் கொண்டு,சாம்பசிவனுடனும் காமாக்ஷியுடனும் ‘டைனிங்க் ஹாலு’க்கு வந்து ‘காபி ‘’டிபன்’ சாப்பிட்டார்கள்.

‘காபி’யைக் குடித்துக் கொண்டே,ராதா சாம்பசிவன் இடமும்,காமாக்ஷி இடமும் ”ராகவன் நங்க நல்லூரிலே ஒரு ரெண்டு ‘பெட் ரூமை’வீட்டை வாடகைகு எடுத்து,பால் காய்ச்சி குடிச்சு விட்டு, ஆத்தே ‘புண்யாவசனம்’ பண்ணீ இருக்கானாம்.கல்யாணம் ஆனா மீரா ஒரு கஷ்டமும் இல்லாம, அந்த ஆத்லே சந்தோஷமாக் குடித்தனம் பண்ணீண்டு வரலாம்” என்று சொன்னதும் இருவரும் “கேக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.ராகவன் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு ஆத்தேப் பாத்து ரெடிப் பண்ணீ இருக்காரா.மீரா அவர் பாத்து இருக்கும் ஆத்லே சந்தோஷமா இருந்துண்டு வரலாம்” என்று ‘கோரஸாக’ச் சொன்னார்கள்.

சாம்பசிவன் தம்பதிகள் மீரா ராகவன் கல்யாணத்தை எல்லோர் முன்னிலையிலும் விமா¢சையாக மூன்று நாள் முழுக்கக் கொண்டாடினார்கள்.

கல்யாணத்துக்கு வந்து இருந்த எல்லாரும் அவர்கள் கொண்டு வந்த ‘கிப்டை’க் கொடுத்தார் கள்.மீராவின் ஆபீஸ் மானேஜர் கல்யாணத்துக்கு அவர் கொண்டு வந்து ‘கிப்டை’க் கொடுத்து விட்டு, மீராவைப் பார்த்து “சென்னை ‘ஹெட் ஆபீஸ்’ என் சிபாரிசை ஏத்துக் கிட்டு,உனக்கு சென்னை ‘ஆபீஸ்’க்கு மாத்தல் குடுத்து இருக்காங்க.நீ ஒரு மாசத்துக்குள்ளே அந்த வேலேலே சேரணும்.இந்தா அந்த ஆர்டர்” என்று சொல்லி விட்டு, மாற்றல் ‘ஆர்டரை’ மீராவிடம் கொடுத்தார்.

“உங்களுக்கு நான் ‘ரொம்ப தாங்க்ஸ்’ சொல்லணும் சார்.நீங்கோ மட்டும் ‘ஸ்ட்ராங்காக சிபாரிசு பண்ணாம இருந்து இருந்தா,எனக்கு சென்னைக்கு மாத்தல் கிடைச்சே இருக்காது” என்று கண்களில் கண்ணீர் முட்டச் சொல்லி விட்டு,மீரா மாற்றல் ‘ஆர்டரை’ ‘மானேஜர்’ இடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.

உடனே அவர் “இல்லே மீரா.எல்லாம் உங்க ‘ஹப்பி’ ராகவன் அதிர்ஷ்டம தான்.அவர் உன்னே இப்போவே அவரோட சென்னைக்கு அழைச்சுக் கிட்டு போகலாம்.சென்னை மாத்தலுக்கு காத்துக் கிட்டு இருக்க வேணாம்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு ராகவன் கையை குலுக்கினார்.

”ரொம்ப் ‘தாங்ஸ்’ சார் உங்களுக்கு.நீங்கோ மட்டும் மீரா ‘அப்லிகேஷன்லே’ உங்க ‘ஸ்ட்ராங் ரெகமண்டேஷனை’ எழுதாம இருந்தா,மீராவுக்கு சென்னைக்கு மாத்தல் இவ்வளவு சீக்கிரமா கிடை ச்சே இருக்காது” என்று சந்தோஷமாகச் சொல்லி விட்டு,அவர் கையைக் குலுக்கினார்.

ஏற்கெனவே ஏற்பாடு பண்ணீ இருந்த படி,சாம்பசிவன் தம்பதிகள் மீராவுக்கும்,ராகவனுக்கும் “சாந்தி முஹ¥ர்த்த விழா”வை,அந்த சத்திரத்திலேயே வாத்தியாரை வைத்துக் கொண்டு ‘சுபமாக’ செய்து முடித்தார்கள்.

ராகவனுக்கும்,மீராவுக்கும் “சாந்தி முஹ¤ர்த்தம” நல்ல படியாக நடந்ததை நினைத்து மிகவும் ராதாவும்,சுந்தரமும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

அடுத்த நாள் கலையிலே மீரா தன் பெட்டியை எடுத்துக் கொண்டு,தன் கணவருடன் சிவபுரி கிளம்ப தயாரானாள்.

மீரா அம்மா அப்பா காலில் விழுந்து ஒரு நமஸ்காரத்தைப் பண்ணி விட்டு,எழுந்துக் கொண்டு, “நான் போயிட்டு வறேன்.நீங்கோ மூனு பேரும் உங்க உடம்பை ஜாக்கிறதையா பாத்துண்டு வாங்கோ. நான் சதா உங்க ஞாபகமாகவே இருந்துண்டு இருப்பேன் ”என்று சொல்லும் போது மீரா கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.
உடனே காமாக்ஷி “மீரா,நீ உன் ‘புக்காத்து’க்குப் போறே.புக்காத்துக்குக் கிளம்பும் போது கண் லே ஜலம் விடக் கூடாது.உன் ‘புக்காம்’ புதுசு இல்லே.எல்லாம் நம்ம உறவுக்காரா தான்.நீ சந்தோஷமா கிளம்பிப் போய் உன் ஆத்துக்காரரோட இருந்துண்டு வா.நீ அடிக்கடி எங்களுக்கு கடிதாசு போடு. ‘போன்லே’ பேசு.நாங்களும் உனக்கு கடிதாசு போடறோம்.’போன்லே’ பேசறோம்” என்று சொல்லி மீராவைக் கட்டிக் கொண்டாள்.

சாம்பசிவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு இருந்தார்.

காத்துக் கொண்டு இருந்த ‘கால் டாக்ஸியில்’ சுந்தரம் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஏறிக் கொண்டு “நாங்க போயிட்டு வரோம்.கல்யாணம் ரொம்ப பிரமாதமாக பண்ணேள்.எங்க எல்லா ருக்கும் ரொம்ப சந்தோஷம்“ என்று சொன்னார்.

உடனே சாம்பசிவன் தம்பதிகள் ”எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.அந்த நடராஜர் அனுக்கிரஹ த்தாலே கல்யாண நல்ல படியா நடந்தது” என்று சொன்னார்கள்.

‘கால் டாக்ஸி’ கிளம்பும் வரை சாம்பசிவனும்,காமாக்ஷியும்,பரமசிவமும் தங்கள் கையை ஆட்டிக் கொண்டு இருந்து விட்டு,கார் கிளம்பிப் போனதும் சத்திரத்திற்கு வந்தார்கள்.

சாம்பசிவன் சத்திரத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும்,சமையல் காரருக்கு கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்து விட்டு,தங்கள் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

சிவபுரிக்கு வந்த ராகவனும்,மீராவும் பாட்டிக்கு நமஸ்காரத்தை பண்ணீவிட்டு அவருடைய ஆசீர்வாதத்தை வாங்கிக் கொண்டார்கள்.ராகவன் அம்மா,அப்பாவுடன் ரெண்டு நாள் இருந்து விட்டு மீராவை அழைத்துக் கொண்டு,அப்பா,அம்மா,பாட்டி எல்லோர் இடமும் சொல்லிக் கொண்டு, சிதம்பரத்துக்கு ‘போன்’ பண்ணி, சாம்பசிவன்,காமாக்ஷி,பரமசிவம் மூவா¢டமும் இடமும் சொல்லிக் கொண்டு சென்னைக்குக் கிளம்பிப் போனார்.

நங்க நல்லுருக்கு வந்த ராகவன் அடுத்த நாளில் இருந்து அவன் வேலைக்குப் போய் வந்துக் கோண்டு இருந்தார்.மீரா அந்த ‘ப்லாட்டில்’ ராகவன் வாங்கி வைத்து இருந்த சாமான்களை எல்லாம் சரியாக எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள்.வீட்டுக்கு வேண்டிய இன்னும் சில சாமான்களின் பேரை ஒரு காகிதத்திலே எழுதி வைத்துக் கொண்டாள் மீரா.

சாம்பசிவனுக்கும்,காமாக்ஷிக்கும்,பரமசிவதிற்கும் மீரா இல்லாத அந்த வீடு வெறிச்சோடினது போல இருந்தது.”இத்தனை வருஷமா மீரா இந்த ஆத்லே இருந்துண்டு வந்தா.இப்போ அவ ‘புக்காம்’ போய் இருக்கா.இனிமே நாம மூனு பேரும் இந்த ஆத்லே சந்தோஷமா இருந்துண்டு வர பழகணும்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் சாம்பசிவன்.”நீங்கோ சொல்றது ரொம்ப நிதர்சனமான உண்மை.ஆத்லே பொறந்த எல்லா பொண்களும் ஒரு நாள் இல்லே,ஒரு நாள் அவ ‘புக்காம்’ போய்த் தான் ஆகணும்” என்று காமாக்ஷி சொல்லி விட்டு,தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

ராகவனும்,மீராவும் அவர்கள் வீட்டுக்கு கட்டில்,மெத்தை,தலையணகள்,பெட் கவர்,போர்வை கள்.’சோபா செட்’,வீட்டுக்கு வேண்டிய எல்லா பாத்திரங்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள்.

தலைமை ‘ஆபீஸ்’ வேலைக்கு வந்து சேரச் சொன்ன தேதியில் மீரா வேலைக்குப் போய் சேர்ந்தாள்.அன்று சாயந்திரமே மீரா அவள் அம்மா,அப்பாவுக்கும்,மாமனார், மாமியாருக்கும் ‘போன்’ பண்ணீ,தான் சென்னை ‘ஆபீஸி’ல் சேர்ந்து விட்டதாயும்,வீட்டுக்கு வேண்டிய எல்லா சாமான்களை யும் வாங்கி வந்து சௌக்கியமாகக் குடித்தனம் பண்ணீ வருவதாயும் சொன்னாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.ராகவனும் மீராவும் வீட்டில் இருந்தார்கள்.சிவபுரியில் இருந்து ‘போன்’ வந்தது.ராகவன் ‘போனை’ எடுத்துப் பேசினார்.“ராகவா,பாட்டி இன்னிக்கு காத்தாலே தூக்கத்லேயே செத்துப் போயிட்டா.நேத்து ராத்திரி என் கிட்டேயும்,அம்மா கிட்டேயும் நன்னா பேசி ண்டு தான் இருந்தா” என்று வருத்தப் பட்டுக் கொண்டு சொன்னார் சுந்தரம்.

உடனே “ராகவன் அப்படியாப்பா கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.நானும் மீராவும் இன்னிக்கு ராத்திரி கிளம்பி வறோம்” என்று சொல்லி விட்டு,மீராவிடம் அப்பா ‘போன்’ பண்ணீன விஷயத்தை வருத்தப் பட்டுக் கொண்டே சொன்னார்.

சுந்தரம் சிதம்பரத்திற்கு ‘போன்’ பண்ணி “அம்மா,இன்னிக்கு காத்தாலே தூக்கத்லேயே செத்துப் போயிட்டா.நேத்து ராத்திரி என் கிட்டேயும்,ராதா கிட்டேயும் நன்னா பேசிண்டு தான் இருந்தா” என்று வருத்தப் பட்டுக் கொண்டு சொன்னார்.உடனே சாமசிவன் “அப்படியா கேக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.நாங்கோ இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குள்ளே சிவபுரிக்கு வறோம்” என்று சொல்லி விட்டு,பரமசிவத்தையும்,காமாக்ஷியையும் அழைத்துக் கொண்டு சிவபுரிக்குப் போனார்.

சாம்பசிவனும்,காமாக்ஷியும்,ராதாவையும்,சுந்தரத்தையும் துக்கம் விசாரித்து விட்டு,பரமசிவத் தை அழைத்துக் கொண்டு சிதம்பரத்துக்கு வந்தார்கள்.ராகவனும்,மீராவும் சிவபுரிக்கு திங்கட் கிழமை காலையில் போய் அப்பாவையும்,அம்மாவையும் துக்கம் விசாரித்து விட்டு,அன்று இரவே கிளம்பி சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்.

சுந்தரமும்,ராதாவும் கமலாவுக்கு எல்லா ‘ஈமக் கிரியைகளையும்’ பண்ணி விட்டு,பதி மூன்றாம் நாள் வீட்டைப் ‘புண்யாவசனம்’ பண்ணி முடித்தார்கள்.

காமாக்ஷிக்கு தன் வயிற்றின் வலது பக்கத்தில் இருந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி வந்தது.”இந்த வலி இப்போ ரெண்டு நாளாக ரொம்ப ஜாஸ்தியா ஆயிண்டு வரது.என்னால் பொறுத்து க்கவே முடியலே.நாம ஒரு டாக்டர் கிட்டே போய் காட்டிண்டு வரலாமா” என்று வலியுடன் கேட்டாள் காமாக்ஷி.“ஆமாம் காமாக்ஷி.நீயும் ஒரு மூனு மாசமா சொல்லிண்டேஇருக்கே.வா நாம ஒரு நல்ல டாக்டர் கிட்டே காட்டிண்டு வரலாம்” என்று சொன்னார் சாம்பசிவன்.

அடுத்த நாள் சாம்பசிவன் காமாக்ஷியையும்,பரமசிவத்தையும் அழைத்துக் கொண்டு சிதம்பரத் தில் இருந்த ஒரு பொ¢ய ‘நர்ஸிங்க் ஹோமு’க்குப் போய் அங்கே இருந்த லேடி டாக்டரிடம் காமாக்ஷி யின் வயிற்று வலியைச் சொன்னார்கள்.அந்த லேடி டாக்டர் காமாக்ஷியை தனியாக அழைத்துப் போய் “இந்த வலி உங்களுக்கு எத்தனை நாளா இருக்கு” என்று கேட்டு விட்டு காமாக்ஷியின் வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *