சந்துரு பள்ளிப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான்.
அம்மா ஆபீஸுக்குப் போகுமுன் காலை, மதிய சாப்பாட்டை தயார் செய்து கொண்டிருந்தாள்.
டேய் சந்துரு, கடையிலே போய் காய்கறி வாங்கிவா. பரிமளம் வேலை ஏவினாள். வாங்கி வந்தான்.
அம்மா சேலையை லாண்டரியிலே கொடுத்து அயர்ன் பண்ணி வாங்கி வா. அம்மா செருப்பைக் கொஞ்சம் துடைத்து வை. முகம் சுளிக்காமல் செய்தான்.
அம்மா ஆபீஸ் போக ரெடியானாள்.
பிள்ளையைப் படிக்கவிடாமல் வேலை வாங்கி விட்டேனே என்று கவலைப்பட்ட அம்மா, அவனுக்கு பாக்கெட் மணியாக ஐந்து ரூபாய் கொடுத்தாள்.
சந்துரு திருப்பிக் கொடுத்தான்.
அம்மா உங்க மேலுள்ள அன்பினால் இந்த வேலையை எல்லாம் செய்தேன். அதற்கு இது என்னம்மா கூலியா?
அந்த வார்த்தை பரிமளத்தின் நடையைப் பின்னியது.
– மே 2010