அந்நியன்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 16, 2020
பார்வையிட்டோர்: 6,947 
 
 

அன்று ஒரு நாள் ஊருக்கு செல்ல.. பேருந்து நிலைத்தில் காத்திருந்தேன். இரவு பத்துமணிக்கு பேருந்து வரும். அதனால் அருகே உள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு.. காத்திருந்தேன். பேருந்து வரவும் அதில் ஏறி அமர்ந்துக்கொண்டேன். சில நிமிடங்களிலேயே கண்கள் சொருகிட.. அப்படியே உறங்கியும் போனேன். விடியல் வேலையில் என் ஊர் வரவும்.. என்னை வந்து எழுப்பினார் நடத்துனர். அனைத்தையும் வாரிசுருட்டிக் கொண்டு எழுந்தேன். அவசர அவசரமாக கீழே இறங்கி.. நடக்கத் தொடங்கினேன்.

விடியல் நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. இனி தான் ஒவ்வொரு வராய் வருவார்கள் என நினைத்து.. மெல்ல மெல்ல ஊருக்கு செல்லும் பாதையில் நடந்தபடியே இருக்க.. திடிரென என் காலடி சத்தத்துடன்.. வேறு ஒரு காலடிச் சத்தமும் கேட்டிட.. லேசாய் திரும்பி பார்த்தேன். பனிமூட்டம் கொண்ட விடியல் பொழுதானதால்.. இருட்டிலும் பனியிலும் எதுவும் சரியாக தெரியவில்லை. சிறிய பயம் தோற்றிக் கொள்ள.. மீண்டும் நடக்கத்தொடங்கினேன்.

இப்போது காலடிச் சத்தம் பலமாக கேட்டிட.. பயத்தில் என் நடையின் வேகம் அதிகரித்தது. அந்த காலடிச் சத்தத்தின் வேகமும் அதிகரித்தபடியே இருந்தது. உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தால்.. அனைத்துவீட்டு கதவுகளுமே அடைப்பட்டே இருந்தது. ” வர வர நம்ம ஊரூம் நகரம் மாதிரியே மாறிகிட்டு வருது. விடியப்போகுது ஆனா ஒரு ஈ காக்கவைக்கூட காணோம். பெயருக்கு தான் கிராமம்.. ஆனா இப்போ அப்படியா இருக்கு.. இதுவும் அதன் தனிதுவத்தை இழந்து வருது.. எல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சி. தொழில்நுட்பம் வளரவளர.. மனிதன் தன் செயல்திறனின் அளவை குறைக்கிறான். செயல்திறனின் அளவு குறைவதால்.. நோய் நொடிகள் எளிதில் தாக்குகிறது. இதை எல்லாம் சொன்னா.. நம்மை பைத்தியகாரங்கனு சொல்லுவாங்க. ” என்று புலம்பிய படியே நடந்தாலும்..

என்னை தொடந்து வந்த காலடிச் சத்தம்.. கேட்டுக்கொண்டே இருந்ததை என் செவிகள் உணர்தியபடியே இருக்க.. மூளை வேகமாக நடக்கச் சொல்லி தன் கட்டளையை கால்களுக்கு கூறிட.. அதுவும் தன் பணியை செய்தபடியே இருந்தது. இருபது நிமிட நடையில் என் வீட்டின் வாசலை அடைத்தேன். அதன்பின் தான் நிம்மதி பெருமூச்சே வந்தது. அழைப்புமணியை அடித்துவிட்டு காத்திருந்தேன்.

நான் வருவதாக என் வீட்டுக்கு தெரிவிக்கவில்லை. காரணம் இது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதற்குள் அந்த காலடிச் சத்தம் என்னை நெருக்கி வேகமாக வருவதை உணர்ந்தேன். சரியாக கதவு திறக்கப்படவும்.. அந்த காலடிச் சத்தம்.. என்னருகே வந்து நிற்கவும் மிச்சரியாக இருந்தது.

கதவை திறந்த என் தாயோ என்னை கண்டு மகிழாமல்.. அதிர்வாய் என்னை நோக்க.. எனக்கோ குழம்பம்.. என் பின்னே திரும்பி பார்த்தேன். ஒரு ஆடவன் நின்றிருந்தான். ஆறடிக்கு குறையாத உருவம்.. நல்ல தோன்றத்துடன் இருந்தவனை கண்டு என்விழிகளே வியப்பில் விரிந்தது. இவ்வேளை எங்களை சேர்த்து பார்த்திட்ட என் தாயின் நிலையை கேட்கவா வேண்டும்.

“என்ன டி இது. இந்த மாதிரி பண்ணிட்டே. என்னங்க இங்க வாங்க.. உங்க பொண்ணு என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கானு வந்து பாருங்க. ” என்று படியே அவர் உள்ளே ஓடிட.. எனக்கோ பக்கென்றானது.

“ஐய்யையோ.. இது என்ன புதுக் குழப்பம். நம்மை வேலைக்கு விடவே.. ஆயிரம் யோசனை செய்தனர். இப்போது இப்படி பார்த்துவிட்டு இவர்கள் என்ன ஏழறையை கூட்டப்போறார்களோ.. தெரியலையே. கடவுளே என்னை காப்பாத்து. ” என்று எண்ணியபடியே.. அந்த ஆடவனிடம் திரும்பி..

“ஏய் , யாரு டா நீ. எதுக்கு டா என் பின்னாடி வந்தே. ஒரு பொண்ணு தனியா வந்துடக்கூடாதே. உடனே பின்னாடியே வந்துடுவீங்களே. இது ஒன்னும் சிட்டி இல்லை. கிராமம்.. இரு உன்னை என்ன பண்ணறேன் பாரு. ” என்று அவனிடம் சாவால் விட்டபடியே உள்ளே ஓடினேன்.

அவன் என்னை அழைப்பது போல கேட்டாலும்.. அதை பொருட்படுத்தாது உள்ளே சென்று.. என் வீட்டிரிடம் “சத்தியமா அவன் யாருனே எனக்கு தெரியாது. என்னை நம்புங்க. ” என்று புலம்பிட…

அவர்களும் அவனை ஒருவழி செய்திடும் நோக்குடன் வெளியே வந்தனர். விடிய தொடங்கவும்.. ஒவ்வொரு வீட்டு கதவாக திறக்கப்பட.. எங்கள் வீட்டு வாசலில் கூடியது கூட்டம். சரமாரியாக அவனை வசைப்பாடினர் அனைவரும். அவனோ பதிலே பேசவில்லை.

அனைவரும் வசைப்பாடி ஓய்ந்திட.. என் தந்தை அவனை பார்த்து.. ” ஏன் டா இவ்வளவு தூரம் திட்றோம் சோரனையே இல்லாம நிக்கற. போலிசில் பிடிச்சிக் கொடுத்தா தான் சரி வரும். ராஜா நீ நம்ம எஸ்.ஐ செல்வத்துக்கு போன் போடு. ” என்றார் என் அண்ணனிடம்.. அவனும் போனை எடுத்து டையல் செய்திட தொடக்கவும்.. அந்த நேரம் கொஞ்சம் அமைதியாய் இருந்தது.. அதை பயண்படுத்தி ஒரு குரல் வெளிவர முடியாமல் வெளிப்பட்டது..

” சார், நான் உங்க பொண்ணு பின்னாடி வந்தது தப்பு தான். ஆனா அவங்க இதை பஸ்சுலேயே விட்டுட்டு வந்துட்டாங்க. இதை கொடுக்க தான் பஸ்சை நிறுத்தி இறங்கிவந்தேன். அவங்களை கூப்பிட டிரைப்பண்ணினேன். என் தொண்டை சரியில்லே. என்னாலே சத்தமா பேச முடியலே.. அதுதான் அவங்களை ஃப்ளோ பண்ண வேண்டியதா போச்சி.. சாரி சார். சாரி மேடம். இந்தாங்க உங்க பைக். ” என்று பேசிட முடியாமல் பேசி நான் தவறவிட்ட.. என் ஹேன்பேக்கை என்னிடம் நீட்டினான் அந்த அந்நியன்.

அதன் பின்.. அவன் நிலை உணர்ந்து.. அனைவரும் மன்னிப்பும்.. நன்றி தெரிவித்தபடி அவரவர் வேலையை காணச்சென்றிட.. அந்த நபர்.. எங்களிடம் ” உங்களை தொந்தரவு பண்ணினதுக்கு சாரிங்க.. ” என்றபடியே அங்கிருந்து கிளம்பிட நினைக்க..

“தம்பி ஒரு நிமிஷம் இருப்பா, ” என்றார் என் தாய்.

அவன் திரும்பி எங்களை பார்த்திட.. அவனிடம் சென்று.. “தப்பா நினைக்காத கண்ணு காலங்கெட்டு கிடக்கே அந்த பயத்துலே தான் யாரு என்னனு கூட விசாரிக்காம.. பேசிட்டோம். உள்ள வா கண்ணு. ஒரு காபி சாப்பிட்டு போவியாம். ” என்று அன்புடன் கூற.

“நீங்க சொல்றது நியாயம் தான் ஆன்ட்டி. என்னாலே பேச முடியலே அதனாலே தான்.. இல்லையினா முன்னாடியே சொல்லி இருப்பேன். ” என்றான் சிறு இருமலுடன்.. பின் அவனை வம்படியாக உள்ளே அழைத்து வந்தவர்கள் அவனுக்கு சூடாக காபியை கொடுத்து குடிக்க சொன்னார்கள்.. அதன் பின் அவனின் பூர்வீகம் அலசப்பட்டது.. அவனின் விபரங்கள் சேகரிக்கபட்டது. அவன் முழு பையோடேட்டாவும் என் குடும்பத்திற்கு சாதகமாகி விட….

இதோ.. இன்று… மணமேடையில்.. இணைந்தோம் இருவரும் ஒருவராய்.

யாரோ ஒரு அந்நியனாய்

வந்து..

உன் மனம் என்னும் ..

மாய சிறையில்

சிறை வைத்தாய் – என்னை

என் ஆயுள் முழுதும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *