தலை திரும்பல சார். தொப்புள்கொடி சுத்திட்டிருக்கு. சிசேரியன்தான் பண்ணனும். இந்த ஃபார்ம்ல கையெழுத்து போடுங்க என்று என் மாமாவிடம் sign வாங்கினார் அந்த லேடி டாக்டர்.
எனக்கு பொண்ணு பொறந்தா நீதான் கட்டிக்கணும் என்று சொன்ன அக்காவின் வாக்குப்படியே எனக்கு மனைவியாகப்போகிற மீனாட்சி பிறந்தாள் அன்று.
எனக்கும் அவளுக்கும் 10 வயது வித்தியாசம்.
நாட்கள் கடந்தன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள் என்னவள்.
என் அக்கா சொன்னபடியே அவளை மனைவியாக கரம் பிடித்தேன் ஒரு மங்களநாளில்..
இன்று.. என் மனைவி மீனாட்சி அதே மருத்துவமனையில்.
நர்ஸ் ஓடி வந்தாள்.
மீனாட்சி அட்டென்டர் சரவணனர யாருங்க இங்க?
நான் ஏதோ சிந்தனையில் இருக்க நர்ஸ் சொன்னதை கவனிக்க வில்லை.
சரவணன்.. சரவணன் என்று மீண்டும் குரல் கொடுக்க..
Sister நான் தான்.. Sorry. சொல்லுங்க.
என்னப்பா கண்ண தொறந்துட்டே தூங்கறயா? உள்ள டாக்டர் கூப்பிட்ராங்க போ என்று தலையில் அடித்துக்கொண்டாள். எல்லா மருத்துவ மனைகளிலும் நர்ஸ்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
சார் உட்காருங்க. கொஞ்சம் critical தான். தொப்புள்கொடி சுத்திட்டிருக்கு.operation தான் பண்ணனும்.
இந்த dialogue எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. சொந்தத்தில் கல்யாணம் செஞ்சிகிட்டா அப்படித்தான் என்றனர் சிலர்.. அப்படியா.
அன்று மாமா கையெழுத்து இட்டது போல் இன்று நான் இட்டேன்.. எனது மகளாய் பிறந்தாள் ப்ரீத்தி..
என்னை பொறுத்தவரை
(1) என் மனைவி மீனாட்சி பிறந்தநாளும,
(2) அவளை மனைவியாக கரம் பிடித்த நாளும்,
(3) இன்று என் மகளாய் ப்ரீத்தி பிறந்த நாளும்தான் மறக்க முடியாத..
அந்த மூன்று நாட்கள்..