கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 2,369 
 

(1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பட்டாபி!’

பதில் இல்லை, ஒரு விநாடி, மீண்டும் ஒரு முறை அழைத் தான் சேஷாத்திரி. பட்டாபி உள்ளே இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஜன்னல் கதவு திறந்திருந்தது. அதுதான் பட்டாபி ஆபீஸி லிருந்து வந்து விட்டானென்பதற்கு அடையாளம். இருந்தால் பதில் சொல்லாமலிருப்பானா? ஒருவேளை, உள்ளே காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாளோ… என்று நினைத்துக் கொண்டே சேஷாத்திரி சிறிது தயங்கிய வண்ணம் படிகளிலேறி ஓரமாய் மூடியிருந்த கதவைத் திறந்தான். சட்டெனப் பின்வாங்கினான்.

நேர் எதிரே முற்றத்தில் பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்த காமாஷி அவசரமாய் எழுந்து நின்று, முழங்கையால் புடவையின் மேல் பாகத்தைச் சரியாய்த் தள்ளியமைத்துக் கொண்டான்.

‘பட்டாபி வரவில்லையா இன்னும்?’ என்றான் சேஷாத்திரி, ஒரு விநாடி தயங்கிய பின்.

காமாஷி கையிலிருந்த பாத்திரத்தைப் பார்த்தாள். அவளுடைய உதடுகள் அசைந்தது போல் தெரித்தன. ஆனால் பதில் இல்லை.

மறு நிமிஷம் சேஷாத்திரி ழே இறங்கிப் போய்விட்டான். கொஞ்ச தூரம் சென்றதும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றிற்று. எப்பொழுது வருவான் என்று கேட்காமல் போனோமே… வந்தால் ‘ஆற்றங்கரையில் பார்க்கச் சொல்லியிருக்கலாமே.. என்று நினைத்தான். ஆயினும் பதில் சொல்லுவதற்கு சங்கோஜப்பட்ட காமாக்ஷியை இன்னும் கஷ்டப்படுத்த அவள் மணம் இணங்க வில்லை. தான் அவளைக் கேட்டதுகூடத் தப்பு என்று நினைத்தான். பட்டாபிராமனின் மனைவியை முதல் முதலில் அப்பொழுது. தான் பார்க்க நேரிட்டதால், புது மனிதனாகிய அவளிடம் அவன் பதில் சொல்லத் தயங்கியது இயற்கைதான் என்று அவனுக்குப் புலப் பட்டது.

சேஷாத்திரி போன கால் மணி நேரத்தில் பட்டாபி ராமன் கடையிலிருந்து தெய்யும் சில சாமான்களும் வாங்கிக் கொண்டு வந்தான்.

அவற்றை உள்ளே எடுத்து வைக்கும் போது காமாக்ஷி, ‘கடுகு மறந்து போய்விட்டேனா?’ என்றாள்.

‘கடுகு சொன்னயா?’ என்றான் பட்டாபிராமன், சில்லரையைக் கணக்குப் பார்த்துக் கொண்டே.

‘நான்தான் முணுதரம் சொன்னேனே. கடுகு இல்லாமே என்ன பண்றது?’

‘பொய்யெல்லாம் சொல்லாதே. நான் போனப்புறம் கடுகு ஞாபகம் வந்திருக்கும்.’

‘ஆமாம் பொய் சொல்றா உங்ககிட்டே வந்து – எங்கெயோ நினைச்சிண்டிருந்தா சொல்றது காதிலே விழுமா?’

‘அடேயப்பா, கோபம் வந்திட்டாப் போலே ருெக்கே. உன்னையேதான் நினைச்சுண்டிருந்தேன். தப்புத் தான் மன்னிக்கணும்’ என்றான் பட்டாபி பரிகாசமாக.

‘போதும், மறந்து போயிட்டா கேலியென்ன வந்தது?’ என்று பாதி வெட்கத்துடனும் பாதி சந்தோஷத்துடனும் சொல்லிக் கொண்டே காமாக்ஷி சர்க்கரைப் பொட்டலத்தை அவிழ்த்து ஒரு புட்டியில் சர்க்கரையைப் போட்டுக் கொண்டே இருந்தாள்,

‘சரியம்மா, தானைக்கு வாங்கிண்டு வந்துடறேன். இப்போ காபி உண்டா இல்லையா?’

‘இதோ வந்துட்டேன்,’ என்று சொல்லிக் கொண்டு காமாக்ஷி சர்க்கரைப் புட்டியை எடுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள்.

சேஷாத்திரி ஆற்றங்கரை மணலில் மெதுவாக நடந்து கொண் டிருந்தாள். ஆங்காங்கே பையன்கள் விளையாடிக் கொண்டும் ஓடிக் கொண்டுமிருந்தனர். பெண்கள் ஒடுகால்களிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். பாலத்தில் ஒரு கூட்ஸ் வண்டி முடிவே கிடையாதோ என்று தோன்றும்படி மெதுவாகச் சென்று கொண்டிருந்தது.

சேஷாத்திரிக்குப் பட்டாபியைச் சந்திக்க முடியவில்லையே என்று கொஞ்சம் வருத்தந்தான். அவன் தல்லாகுளத்தில் மதுரை ஜில்லா போர்டு ஆபீஸில் வேலை பார்த்து வந்தான். பட்டாபி சேதுபதி ஹைஸ்கூலில் ஒரு உபாத்தியாயராக இருந்தான். இருவரும் சந்தித்து ஆறு மாதம் தான் ஆகிறது என்றாலும் நேசம் முற்றி விட்டது. தினந்தோறும் ஆற்று மணலில் சந்திப்பது அவர்கள் வழக்கம். இரவு ஏழு மணி வரையில் பேசிக் கொண்டிருப்பார்கள். சேஷாத்திரி தல்லாகுளத்திலேயே ரூம் வைத்துக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டு வந்தான். பட்டாபியும் சேஷாத்திரி அவனைச் சந்தித்தது முதல் ஹோட்டலில்தான் சாப்பிட்டு வந்தாள். பட்டாபியின் மனைவி வரப் போகிறாளென்று குடித்தனம் வைப்பதற்காக சேஷாத்திரியும் அவனும் சேர்ந்துதான் வீடு பார்த் தார்கள். தன் மனைவி வந்து ஒரு வாரமாகப் பட்டாபிக்கு சேஷாத் திரியைச் சந்திக்க முடியவில்லை. சேஷாத்திரிக்கும் ஆபீரில் வேலை அதிகமாயிருந்ததால் வரச் சரிப்படவில்லை . இன்று தான் ஒரு விதமாகக் காகிதங்களை யெல்லாம் மூட்டை கட்டிப்போட்டு விட்டுப் புறப்பட்டான். மூன்று நாளைக்கு முன்பே சேஷாத்திரியை வீட்டுக்கு வரும் படி பட்டாபி சொல்லி வனுப்பியிருந்தான். இன்று தவறினால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரையில் பட்டாபியைச் சந்திக்க சேஷாத்திரிக்கு சௌகரியப்படாது.

சேஷாத்திரி பிரம்மசாரிதாள். பட்டாபியைப் பற்றி நினைக்கும் போது அவனுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி இயற்கையாய் எண்ணங்கள் எழுந்தன. காமாகதி அவ்வளவு கர்நாடகமான பெண். பதில் கூடச் சொல்ல மாட்டாள் என்று சேஷாத்திரி நினைக்கவே யில்லை. ஒருவேளை வேண்டுமென்றே பேசாமலிருந்திருப்பாளோ என்றுகூட சேஷாத்திரி நினைத்தான். பட்டாபியைச் சந்திக்கத் தனக்கிருந்த ஆவலில் அவனுக்கு அம்மாதிரி பட்டது. ஆனால் உடனே தன்னுடைய நியாயமற்ற மனப்பான்மையும் அவனுக்குத் தெரிந்தது.

புதிதாகக் குடித்தனம் வைத்திருக்கும் போது ஒரு இளம் பெண், தன் கணவன் நண்பர்களோடு காலங் கழிப்பதை விடத் தன்னருகில் இருக்க வேண்டுமென்று நினைப்பது இயற்கைதானே. ஆகவே காமாக்ஷி வேண்டுமென்றே பேசாமலிருந்தாலும் அதில் தப்பு ஒன்றும் இல்லை என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டான். உண்மையில், தன்னோடு அப்பெண் பேசாதது தன்னுடைய சுயமதிப்பைப் பாதித்துவிட்டதென்பது மாத்திரம் சேஷாத்திரிக்குத் தோன்றவில்லை.

பட்டாபி பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் மனைவி மூலம் தன் வரவைப் பற்றிக் கேள்விப்படுவான்; வழக்கம் போல் தன்னைச் சந்திக்க ஆற்றங்கரைக்கே வருவான் என்று சமாதானப்படுத்திக் கொண்டு சேஷாத்திரி மணலில் உட்கார்ந்தான்.

பட்டாபிக்குக் காபியை ஆற்றிக் கொடுத்து விட்டு, காமாக்ஷி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்தரைக்கு மேலாகியிருந்தது. புன்முறுவலை வரவழைத்துக் கொண்டு கொஞ்சலாகப் பேசத் தொடங்கினாள்.

‘வெளியிலே போகப் போறேளா?’

‘ஏன்?’

‘இல்லெ, கேட்டேன்.. ‘

‘கடுரு வாங்கிண்டு வரணுமோ?’

‘ஆம். கத்திரிக்காய் வேணும். கேட்டா..’

‘ஒருவேளை நீயும் வரலாம்னு எண்ணமோ?’ என்று குறும்பாகக் கேட்டான் பட்டாபி.

காமாக்ஷிக்கு முதலில் சந்தோஷம், பிறகு கேட்டது பரிகாசம் என்று தெரிந்ததும் ஏமாற்றம்.

‘ஆம். போறபோதெல்லாம் ரொம்ப அழைச்சிண்டு போறேளோ இல்லியோ…’

‘வந்து ஒரு வாரமாகல்லே. அதுக்குள்ளேயா சண்டை ஆரம்பிச்சுட்டே. நீ கேட்டுத்தான் அழைச்சிண்டு போகாமெ இருந்துட்டேனா?’

‘உங்களுக்கு இஷ்டமில்லாத போது நான் கேக்கணுமாக்கும். உங்களுக்குத்தான் ஏதாவது வேலை இருந்துண்டே இருக்கே. சாயங்கால வெளையிலே…எப்பொ பார்த்தாலும் சினேகிதாள்….’ என்று பாசாங்குக் கோபத்துடன் சொல்லிக் கொண்டே காமாக்ஷி காபி டம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.

‘ஏதேது. ரொம்ப கோபம் வராப் போலேயிருக்கே. அதுவும் பாவம் என் சினேகிதா மேலே. யாராவது சினேகிதன் வந்தாக்கூட விரட்டி விடுவே போலிருக்கே. பார்க்கப் போனா என் சினேகிதா என்ன சொல்றா தெரியுமா? நீ வந்துட்டா நான் அவாளை மறந்துடு வேன்னு முந்தியே பரிகாசம் பண்ணிண்டிருந்தா…’ என்று சொல்லிக் கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்தான் பட்டாபி.

‘ஆம், இப்பொ என்னோடுதானே சினிமாவுக்கும் டிராமாவுக்கும் போறேன். சொல்ல மாட்டேனா!’ என்று முணுமுணுத்தாள் காமாக்ஷி.

பட்டாபி சிரித்து விட்டான். ‘ஓகோ, சினிமாவுக்குப் போகணும்னா இவ்வளவு தூரம் பேசினே!’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே போனான். உட்கார்ந்த வண்ணம் அடுப்பருகில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த காமாக்ஷி எழுந்து நின்றாள். மனதிற்குள் மீண்டும் சந்தோஷம். ‘நான் சினிமாவுக்குப் போகணும்னு சொன்ளேனா’ என்று தன் அழகிய நெற்றி சுருங்கக் கொஞ்சினாள்.

‘அதுக்காகத்தானே இத்தனை கேள்வி போட்டே. நேற்று முழுவதும் சினிமாவைப் பற்றித்தானே எதிர்த்தாத்து அம்மாமி யோட பேசிண்டிருந்தே..’

‘ஒண்ணுமில்லை. அந்த மாமி போயிருந்தாளாம். கதையைச் சொல்லிண்டு இருந்தா..’

‘கதை பூராவும் தெரியுமோல்லியோ, பின்னே சினிமாவுக்குப் போக வேண்டியதில்லையே.’

காமாக்ஷிக்குத் திரும்பவும் ஏமாற்றம். ‘என்னை அழைச்சிண்டு போக இஷ்டமில்லாட்டா இப்படி யெல்லாம் தர்க்கம் பண்ணணு மாக்கும், நான் கேட்டேனா இப்போ?’

‘பின்னே நீ வரவில்லையா? ஏழு மணி ஆட்டத்துக்குப் போகலாம்னு இருக்கேன்.’

தன் பக்கம் வெற்றி என்பது காமாக்ஷிக்கு இப்போது நிச்சய மாய் விட்டது. சந்தோஷமும் பரிகாசமும் கலந்து தோன்ற, “நான் ஏதுக்காக? யாராவது சினேகிதா வருவா. நான் வந்ததினாலே அவா ளோடே போக முடியல்லேன்னு சொல்றதுக்கா. நான் சினிமாவே பார்த்ததில்லையா – அதிசயம்’ என்று சொல்லிவிட்டு வேலையில் ஈடுபடுபவளைப் போல் இரும்படுப்பை மூட்டப் போனாள்.

மணி ஆறே முக்கால் இருக்கும். சேஷாத்திரி ஆற்று மணலை விட்டுப் புறப்பட்டான். அன்று கொஞ்சம் தமாஷாகக் காலம் கழிக்கலாமென்று வந்தும் தண்பனைச் சந்திக்க முடியாததால் ஏமாற்றமும் மந்தமும் அதிகரித்தது. மெல்ல தல்லாகுளத்தை நோக்கி நடந்தான். திடீரென்று மனதில் ஏதோ யோசனை தோன்ற ஊர்ப்பக்கம் திரும்பி வேகமாகச் சென்றான்.

சினிமா முடித்து கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. பட்டாபி ஓரத்தில் காமாக்ஷியுடன் ஒதுங்கி நின்று கூட்டம் முழுவதும் போகும்வரை காத்திருந்தான். காமாக்ஷியின் முகத்தில் பிரகாசம். கணவனோடு சந்தோஷமாக சினிமா சென்ற வெற்றியுடன் அவளுடைய சந்தோஷம் அதிகரித்தது. கூட்டம் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. பட்டாபி குறிப்பற்ற பார்வையுடன் கூட்டத் தினரைப் பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று இரண்டடி முன்சென்று தலை நிமிர்ந்து பார்த்தான்.

‘கூட்டமெல்லாம் போகட்டுமே!” என்றாள் காமாக்ஷி.

‘இல்லை, யாரோ போறாப்போலே இருந்தது. அது தான் பார்த்தேன், ‘ என்று கூட்டத்தை மீண்டும் பார்வையால் அலசிப் பார்த்தான். அவன் எதிர் பார்த்த படி ஒருவரும் கூட்டத்தில் இருந்த தாகத் தெரியவில்லை .

கூட்டம் கலைந்த பின் இருவரும் ஒரு ஜட்கா அமர்த்திக் மணிக்கொடி கொண்டு புறப்பட்டார்கள். வண்டி சிறிது தூரம் சென்று ஒரு தேர்தோப்பு தெருவில் திரும்பும் சமயத்தில் பட்டாபி திடீரென்று தூரத்தில் பார்த்துக் கைதட்டினான். வண்டியை நிறுத்தச் சொன்னான், வண்டிக்காரன் அவனுடைய சொற்படி நிறுத்துவதற்குள் வண்டி கொஞ்ச தூரம் சென்று விட்டது. பட்டாபி இறங்கப் போனாள். அதற்குள் தான் கைதட்டி அழைத்த பேர்வழி தெருக் கோடியில் திரும்பி மறைந்து விட்டதைப் பார்த்து மீண்டும் வண்டியிலேறிக் கொண்டான்.

‘யார் அது?’ என்றாள் காமாக்ஷி.

“சினிமாவுக்குப் போக வந்தவள் வீட்டுக்கு வராமல் போயிருக் கிறான்…’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, பட்டாபி, காமாக்ஷியின் கேள்விக்குப் பதிலாக, ‘ஊம்… ஒரு சினேகிதன்,’ என்றான்.

‘அவரையா சினிமாவிலே தேடினேள்?’

‘ஊம்…வீட்டுக்கு வருவான்னு இருந்தேன். ரொம்ப நாளா வரவில்லையே இவன்” என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டான்.

‘உங்களோடே போட்டோவிலே நிற்கிறாரே, அவரா? தல்லா குளத்திலே இருக்கிறதாச் சொன்னேனே?’

‘என்னைப் பார்க்கவில்லையா என்ன? வெளியிலே போற வரைக்கும் வென் சினிமாவிலே இருப்பதை நான் பார்க்க வில்லையே. கூட்டம் கலைகிற போதே நான் கூப்பிட்டிருக் கணும்… ஆமா, சேஷாத்திரிதான், ‘ என்றான் கடைசியில் அவளுடைய கேள்விக்குப் பதிலாக,

‘ஐயையோ, மறந்தே போயிட்டேன். நீங்க கடைக்குப் போயிட்டு வரதுக்கு கொஞ்ச நாழிக்கு முன்னேதான் அவர் வந்துட்டுப் போனார்..’

‘வீட்டுக்கு வந்திருந்தானா? நான் வந்துடுவேன்னு சொன்னாயோ ?’

‘நான் எப்படிச் சொல்றது. ரெண்டு தரம் கூப்பிட்டார். இருக்கச் சொல்லலாம்னு பார்த்தேன். பேசுறதுக்கு வெட்கமாயிருந்தது. அதுக்குள்ளே போயிட்டார். ‘

பட்டாபிராமனுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘சினிமாவுக்குப் போறதுக்கு வெட்கமில்லையோ? அவன் எப்போ வருவான்னு நான் ஒரு வாரமா காத்துண்டிருக்கேன்…’ “நீங்க வந்தவுடனே சொல்லணும்னு இருந்தேன்… மறந்து….

ஆம், அதுக்குள்ளே சினிமா முக்கியமாய்ப் போய் விட்டது. இப்பொவே ஆரம்பிச்சுட்டையோ இல்லையோ வீட்டுக்கு வரவாளே விரட்டறதுக்கு…

‘நீங்களும் ஒன்றும் சொல்லிட்டுப் போகல்லே….’

‘சொல்லணுமோ? மறந்து போயிடுத்தாம்! மனசிலே ஏதாவது நல்லெண்ணம் இருந்தால் தானே’ என்று கடுமையாகச் சொல்லி விட்டுப் பட்டாபி மௌனம் சாதித்தான். காமாக்ஷிக்கு அழுகை வந்து விட்டது. வண்டி வீடு போய்ச் சேரும்வரை இருவரும் பேசவில்லை. இருவரும் வண்டியை விட்டிறங்கியதும் பட்டாபி வண்டிக்காரனுக்குக் கூலி கொடுக்கும் போதுதான் அவனுடைய கோபத்தின் வேகம் தெரிந்தது.

ஜட்கா வண்டிக்காரர்கள் வழக்கம் தவறாமல், வண்டிக்காரன் கூலி வாங்கிக் கொண்டு கையை இன்னும் தீட்டிக் கொண்டு பல்லை இளித்தான்.

‘என்னடா இன்னும்?’

‘என்னமோ சாமி, ஒரு அரையணா….’

‘போடா, உதைக்கப் போறேன் இரண்டணா போறாதோ வக்ஷணத்துக்கு. சி போ’ என்று எரிந்து விழுந்தான் பட்டாபி. இந்த எதிர்பாராத கோபத்தைக் கண்டு பயந்து கொண்டே காமாக்ஷி உள்ளே சென்றாள்.

மணி பத்து இருக்கும். சேஷாத்திரி ஒரு ஹோட்டலில் காபியை மாத்திரம் சாப்பிட்டுவிட்டு ரூம் போய்ச் சேர்ந்தான். எப்படியாவது பொழுதைப் போக்கவேண்டுமென்று சினிமாவுக்குப் போனவன் பட்டாபியையும் காமாக்ஷியையும் கவனிக்கவே யில்லை. அவன் ஏன் ஆற்றங்கரைக்கு வரவில்லை என்ற ஏமாற்றம் கலந்த வியப்பு அவன் மனதைக் கஷ்டப்படுத்திற்று. புதிதாகக் குடித் தனம் வைத்திருக்கும் பட்டாபி நண்பர்களுடன் காலம் கழிக்க வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமல்ல என்று தன் மனதைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான். ஆயினும் மாலையில் தோன்றிய மத்தம் இரவில் மலர்ந்துவிடவில்லை. இனி அடிக்கடி பட்டாபி வீட்டுக்குப் போய் அவனைத் தொந்தரவு செய்வதுக்கூடச் சரியல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டான் சேஷாத்திரி.

அன்றிரவு பட்டாபியும் சாப்பிடவில்லை. காமாக்ஷியும் சாப்பிடவில்லை. சாப்பிடுவதற்காகக் காமாக்ஷி இரண்டு மூன்று தரம் அழைத்த பிறகு பட்டாபி தனக்குப் பசிக்கவில்லை என்று சீறி விழுந்தான். ஏதோ சிறிய சந்தோஷத்திற்குச் செய்த முயற்சி இந்த விபரீதத்தில் முடிந்ததே யென்று வருந்தி, காமாக்ஷி தன்னைத்தானே நொந்து கொண்டாள். கணவன் சாப்பிடாததால் தானும் சாப்பிட அவளுக்கு மனம் வரவில்லை .

மறுநாள் காலையும் பட்டாபி பேசவில்லை . அரைமனதாகச் சாப்பிட்டு விட்டு ஆபிஸுக்குப் புறப்பட்டான். கதவு வரையில் போய் விட்டுத் திரும்பி, ‘நாள் ராத்திரி சாப்பிட வர மாட்டேன்” என்று பொதுவாகச் சொன்னான்.

காமாக்ஷி கதவோரத்தில் தலை குனிந்தவாறு நின்று கொண் டிருந்தான். கால் கட்டைவிரலில் இரண்டு துளிக் கண்ணீர் சொட்டின.

பட்டாபி அப்பெண்ணை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தான். அவள்மீது திடீரென இரக்கம் தோன்றிற்று, ஆயினும் தன்னுடைய பொய்க் கௌரவத்தைக் கைவிட மனமில்லை.

‘அழுகையென்ன வந்தது? நீலித்தனம் வேறேயோ?’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

இந்த மூளை முன்னாலேயே தோன்றியிருந்தால் இவ்வளவு விபரீதம் நேர்ந்திருக்காதே என்று நினைத்து வருந்தினாள். இருத் தாலும் புதிதாகப் பார்க்கும் ஒருவரிடம் நான் எப்படிப் பேசி யிருக்கக் கூடும் என்ற ஆக்ஷேபணையும் அவளுக்குத் தோன்றியது. எப்படி இருந்தாலும் பட்டாபி வந்ததும் சேஷாத்திரியின் வரவைப் பற்றித் தெரிவிக்க மறந்து போன துரதிருஷ்டத்தைப் பற்றிய நிளைவே அவளை அதிகமாக வாட்டிற்று. தன் கணவனுக்கும், நண்பர்களுக்கும் நடுவில் தான் நிற்பதாகப் பட்டாபி பாவித்து விட்டானே என்பது தான் அவளுக்குச் சகிக்கவில்லை.

அன்று சேஷாத்திரிக்கும் மன நிம்மதியில்லை. தான் திடீ ரென்று வந்து விட்டது தவறு என்று நினைத்தான். ஆற்றங்கரைக்கு வந்த பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை பட்டாபி வீட்டுக்குப் போயிருக்க வேண்டுமென்று அவனுக்கு இப்பொழுது தோன்றிற்று. பட்டாபிக்கும் அவனுக்கும் இருந்த தெருங்கிய சினேகத்தில் சம்பிரதாய மரியாதைகளுக்கு இடம் கிடையாது. பட்டாபி அழைத்த பிறகுதான் சேஷாத்திரி அவன் வீட்டுக்குப் போவதென்று இருந்து விட்டால் பட்டாபி வருத்தப்படுவான். முத்திய நாள் சேஷாத்திரி போனதில் பலன் ஒன்றுமில்லை. காமாக்ஷி பதில் சொல்ல வெட்கப்பட்டுப் பேசாமல் இருந்து விட்டான் என்றாலும் பட்டாபி வந்த பிறகு சொல்லாமலிருத் திருப்பாளா? ஆனால் பட்டாபி என் ஆற்றங்கரைக்கு வரவில்லை? குடித்தனம் என்று ஏற்பட்டு விட்டால் பட்டாபிக்கு சேஷாத்திரி அவ்வளவு முக்கியமாகத் தோன்றவில்லையோ? அப்படியிருக்கும் படித்தில் சேஷாத்திரி பட்டாபி வீட்டுக்கு இனிப் போவது உசித மில்லை யென்ற முடிவுக்கே மீண்டும் வந்தான். ஆனால் தான் கோபித்துக் கொண்டதாகப் பட்டாபி நினைத்து விட்டால்? கடைசியில் அன்று மாலை மீண்டும் பட்டாபி வீட்டுக்குப் போவதென்றே சேஷாத்திரி தீர்மானித்தான்.

தனது வேலை முடிந்ததும் பட்டாபி தல்லாகுளத்திற்குப் புறப் பட்டான். சேஷாத்திரியைப் பார்த்து, தான் சந்திக்க முடியாமற் போனதை விளக்க வேண்டுமென்று அவனுடைய விருப்பம். சேஷாத்திரியை வீட்டுக்கழைத்துச் சாப்பிடச் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்ததெல்லாம் காமாக்ஷி பாழாக்கி விட்டாளென்று நினைத்தான். சேஷாத்திரி சினிமாவுக்கு வந்தும் தன்னைப் பார்க்காமலிருப்பானா என்ற சந்தேகமும் அவனுக்குத் தோன்றிற்று. இந்த சந்தேகத்தின் பலனாக சேஷாத்திரி ஒருவேளை ஏமாற்றத்தினால் கோபமடைந்திருப்பான் என்ற முடிவும் பட்டாபிக்குத் தோன்றிற்று. ஆகவே அன்று சேஷாத் திரியை நேரில் பார்த்துவிட்டுத் தன் வீட்டுக்கு ஒரு நாள் சாப்பாட் டுக்கு அழைக்க வேண்டு மென்ற நோக்கத்துடன் சென்றான். அதோடு அன்று சேஷாத்திரியுடன் இருந்துவிட்டு வீட்டில் சாப்பிடாமல் காமாக்ஷியைத் தண்டிப்பதென்றும் தீர்மானித்தான்.

பட்டாபி சேஷாத்திரி ஆபீஸை அடைந்ததும் ஏமாற்ற மடைந்தாள். சேஷாத்திரி பட்டாபி வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போனதாக அருகிலிருந்த குமாஸ்தா மூலம் கேள்விப்பட்டான்.

ஏறக்குறைய அதே சமயத்தில் ‘பட்டாபி’ என்று சேஷாத்திரி கூப்பிடுவதையறிந்து வியப்படைந்த காமாக்ஷி, தன் வாடிய முகத்தைத் துடைத்துக் கொண்டு ரேழிக்கு விரைந்து வந்தான். சென்ற நாள் மாலை நினைவு வந்தது. ஏதோ பேச வாயெடுத்தாள். வார்த்தை வரவில்லை. அதற்குள் சேஷாத்திரி, ‘இன்னும் வர வில்லையா?’ என்று கேட்டுக் கொண்டே நகர ஆரம்பித்தான்.

காமாக்ஷியின் நெஞ்சம் பதறிற்று. தைரியமாக வாயைத் திறந்து, கதவு மறைவிலிருந்தபடியே, ‘இப்போ வந்து விடுவார். வந்தா இருக்கச் சொன்னார்!’ என்று பெரிய பொய் ஒன்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள். ஏமாற்றத்தையே எதிர்பார்த்திருந்த சேஷாத்திரி வியந்து நின்றான். மணி ஐந்துக்கு மேலாகி விட்டது. பட்டாபி வரும் சமயம்தான். இருந்தாலும் அவன் வரும் வரை அங்கேயே இருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. பட்டாபி சொல்லிவிட்டுப் போயிருக்கும் போது இருக்காமல் என்ன செய்வது…. இதற்குள் காமாக்ஷி ரேழியில் ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள். சேஷாத்திரி இந்தச் சுருக்கமான வழியை உபயோகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

பட்டாபி விரைத்து வீடு நோக்கி வந்து கொண்டிருந்தான். ஒரு பக்கம் அவறுக்கு சந்தோஷம். மறுபுறம் தான் காமாஷியைத் தண்டிக்க நினைத்தது கெட்டுப் போய்விடுமோ என்று பயம், முந்திய நாள் போலவே சேஷாத்திரி வந்து பார்த்து விட்டுப் போயிருப்பான் என்றே நினைத்துக் கொண்டு வந்தான். எப்படியும் சேஷாத்திரியை ஆற்றங்கரையில் சந்திக்கலாம். அவனையும் அழைத்துக் கொண்டு ஹோட்டலில் போய்ச் சாப்பிட்டு விடலாம் என்று தீர்மானித்தான். காலையில் கூறியபடி வீட்டில் சாப்பிடுவ தில்லை என்ற தீர்மானத்தை மட்டும் கைவிடக் கூடாதென்பது பட்டாபியின் வைராக்கியம்.

பட்டாபியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சேஷாத்திரி சிறிது தூரம் வெளியில் போய் விட்டு வரலாமென்று தீர்மானித்து எழுந்தான். திரும்பி வருவதாகக் காமாக்ஷியிடம் சொல்லிவிட்டுப் போவதா வேண்டாமாவென்று தயங்கினான்.

அதே சமயத்தில் பட்டாபியும் வேகமாக வந்து சேர்ந்தாள்.

‘ரொம்ப நாழியா காத்துக் கொண்டிருக்கையா? நேத்து கூட வத்திருந்தையாமே!’ என்று முகத்தில் அசடு தட்டப் பட்டாபி குசலம் விசாரித்தான்.

‘இல்லை , வந்து 15 நிமிஷம் இருக்கும்!” என்றான் சேஷாத்திரி.

பட்டாபி வேகமாக உள்ளே சென்று சட்டையைக் கழற்றி விட்டு வந்து கீழே உட்கார்ந்தான். முதலில் சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் மேலும் கீழுமாகப் பார்த்துக் கொண்டிருத் தார்கள். பிறகு பட்டாபி சேஷாத்திரியை சினிமாவில் பார்த்ததையும் சந்திக்க முடியாததையும் பற்றித் தெரிவித்தான். அதிலிருந்து பேச்சு வளர்ந்து விட்டது.

சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொண்டே இருந்தார்கள். பட்டாபியின் மனதில் மாத்திரம் வேதனையாக இருந்தது. சேஷாத்திரியைச் சாப்பிடச் சொல்ல முடியாதே. ஏதாவது சாக்குச் சொல்லி ஹோட்டலுக்கு அழைத்துக் கொண்டு போக வேண்டுமே என்ற யோசனை மாத்திரம் அவனுடைய மனதின் பகைப்புலத்தில் நடந்து கொண்டிருந்தது.

தனக்கு காமாக்ஷி மேல் ஏற்பட்ட கோபம் வெளியில் தெரியக் கூடாது, காமாக்ஷியிடம் சாப்பாடு தயாரிக்கச் சொல்லவும் மன மில்லை. மணி ஏழரை ஆகிவிட்டது. இந்த சமயத்தில் சேஷாத்திரி தனக்கு நேரமாகி விட்டது என்று எழுந்தான். சேஷாத்திரியே தன் னுடைய சங்கடமான நிலையிலிருந்து தப்ப வழி காண்பித்ததைக் கண்டு பட்டாபிக்கு மனதில் கொஞ்சம் சந்தோஷந்தான்.

‘என்ன, அவசரமா?’ என்று பொதுவாகக் கேட்டான்.

கொஞ்சம் வேலையிருக்கு. நாளை காலையிலேயே ஆபீஸுக்குப் போகணும்!” என்றான் சேஷாத்திரி.

இங்கே யிருந்தே போனால் போகிறது’ என்று பட்டாபி மரியாதையாகக் கூறினான்.

தான் இரவு அங்குதான் சாப்பிட வேண்டும் என்று சேஷாத் திரிக்குத் தோன்றிற்று. இருந்தாலும் மரியாதைக்காக,

‘அதுக்கென்ன, இன்னொரு நாள் வரேன், ‘ என்று சொல்லிக் கொண்டே எழுந்தான். சேஷாத்திரி இருக்கச் சம்மதித்துவிட்டால் தன் வைராக்கியம் போவதோடு தன் நிலைமையும் அசம்பா விதமாய் விடுமே என்று திகிலுடனிருந்த பட்டாபிக்கு இந்தப் பதில் மன நிம்மதியைக் கொடுத்தது.

‘சரி, சனிக்கிழமை ராத்திரியாவது கட்டாயம் வந்துடு… இரு, நானும் வரேன். கடைக்குப் போகணும்,’ என்று சொல்லிக் கொண்டு தன் மேல் வேஷ்டியை எடுக்க உள்ளே சென்றாள்.

வாசற்படியில் நின்று கொண்டிருந்த சேஷாத்திரிக்குப் பட்டாபி அடைந்த வியப்பு கொஞ்சம்கூடத் தெரிந்திருக்க முடியாது. பட்டாபி உள்ளே நுழைந்ததும் காமாக்ஷி ஏதோ ஆவலோடு அவனிடம் சொல்ல வந்தான். தன் வைராக்கியத்தை மறக்காத பட்டாபி முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாக அறைக்குள் நுழைந்து மேல் வேஷ்டியை எடுத்துப் போட்டுக் கொண்டாள். சட்டைப் பையிலிருந்து கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டு கூடத்திற்கு வந்ததும் அப்படியே பிரமித்து நின்று விட்டான். – காமாக்ஷி ஒரு கூஜாவிலிருந்து இரண்டு வெள்ளி டம்ளர்களில் வெந்நீர் வார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டு இலைகள் போடப் பட்டு அருகில் பலகைகளும் போடப்பட்டிருந்தன. பட்டாபி நிற்பதைக் கண்டு தலை நிமிர்த்திய காமாசுகி, தன் வெற்றிப் புன்னகையை மறைத்துக் கொண்டு, ‘சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்லுங்கள்!’ என்றாள்.

பட்டாபிக்கு ஏற்பட்ட எதிர்பாராத வியப்பில் ஒன்றும் தோன்ற வில்லை . அவனுடைய வைராக்கியம் அவன் மனதில் வெகு ஆழத்திலிருந்து ஈனஸ்வரத்துடன் கத்தியது அவனுக்குக் கேட்க வில்லை. இருந்தாலும் தன் பெருமையை விட்டுக் கொடுக்காமல், ‘முன்னாலேயே சொல்றதுக்கென்ன, அவன் போகணுமாம்,’ என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.

‘நான்தான் அவரை இருக்கச் சொன்னேன். நீங்க சொன்னதா சொன்னேன். சாப்பிடாது அனுப்பினால் ஏதாவது நினைச்சுக்கப் போறார்!’ என்றாள் காமாக்ஷி. காமாக்ஷியே சேஷாத்திரியை இருக்கச் சொன்னாள் என்பதைக் கேட்ட பட்டாபிக்கு வியப்பு அதிகரித்தது. கடைசியில் காமாக்ஷி வெற்றி பெற்று விட்டாளே என்னும் உணர்ச்சி அவளுடைய வார்த்தைகளில் அவனுக்கு உண்மையாகவே பட்டது.

முகத்தில் முன்னைவிட அதிக அசடு வழிய வாசலுக்குப் போனான்.

‘டே, சாப்பிட்டுட்டே போகலாம். வா, சமையல் ஆயிடுத் தாம்!’ என்றான்.

பட்டாபி முதலில் தான் போவதற்குச் சம்மதித்ததைப் பற்றி வியந்து கொண்டிருந்த சேஷாத்திரி பட்டாபி ஏதோ சங்கடமான நிலையில் அகப்பட்டுக் கொண்டு விட்டாள் என்ற உணர்ச்சியுடன் உள்ளே சென்றாள்.

சாப்பிடும் போது சேஷாத்திரி சமையலைப்பற்றித் தன் பாராட்டுதலைப் பட்டாபியிடம் ஆங்கிலத்தில் தெரிவித்தான். ஹோட்டலிலேயே சாப்பிட்டுக் கொண்டிருந்து விட்டு அன்று வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதினால் ஏற்பட்ட மாறுதலைக் குறிப் பிட்டாள்.

அதுவரை பேசாமல், மனோவேதனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பட்டாபி தன் தோல்வி முழுவதையும் ஒப்புக் கொள்ளத் தீர்மானித்தான். பரிமாறிக் கொண்டிருந்த காமாக்ஷியைத் தலை நிமிர்ந்து பார்த்தான். அவளுடைய முகம் சந்தோஷத்தால் மலர்த்திருந்தது. அவளுடைய மகிழ்ச்சி அவனையும் பாதித்தது.

‘அவளா சமைச்சதினாலே நன்னாருக்கு போலிருக்கு. நான் சொன்னா கேட்டுடுவான்னு நினைக்கிறாயா? உனக்குச் சாப்பாடு போடணும்னு அவளா இஷ்டப்பட்டிருக்கா.’

‘உனக்கு இஷ்டமில்லையா என்ன?’ என்றான் சேஷாத்திரி சிரித்துக் கொண்டே.

‘உனக்கு சமாசாரம் தெரியாது. ரெண்டு நாளா எங்களுக்குள்ளே சண்டை அப்பா. இன்னைக்கு சாப்பாடு கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை. நீ வந்ததினாலே ஒருவாறாய்ச் சண்டை தின்று விட்டது. இனி மேல் சண்டை வந்தால் சொல்லியனுப்பு கிறேன். சாப்பிட வந்துடப்பா!” என்று பரிகாசத்தில் உண்மையை மறைத்து விளக்கினான் பட்டாபி.

‘அப்படியானா நீங்க சந்தோஷமா இருக்கிற போது வந்தா சாப்பாடு கிடையாது போலிருக்கு!’ என்றான் சேஷாத்திரி.

‘அதென்னமோ அவளுடைய இஷ்டமப்பா’ என்று கேலி செய்து கொண்டே பட்டாபி, கதவோரத்தில் நின்று கொண்டிருந்த காமாஷியைப் பார்த்தான்.

காமாக்ஷி வெற்றியின் பலனான அலட்சியத்துடன் இந்த சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தாள். பட்டாபி தள்னைப் பார்ப்பது கண்டு, பாசாங்குக் கோபமும் உண்மைப் புன்னகையும் சேர்ந்து பிரகாசிக்கும் தன் முகத்தைச் சட்டெனத் திருப்பிக் கொண்டாள்.

– மணிக்கொடி இதழ் தொகுப்பு, 1937

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *