அந்தப் பொண்ணு வேணவே வேணாங்க…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 4,008 
 

அத்தியாயம்-1 | அத்தியாயம்-2

காஞ்சனாவும் மோகனாவும் சின்ன வயதில் இருந்தே இணை பிரியா தோழிகள்.இருவரும் ‘ப்ளஸ் டூ’ படிப்பு முடிந்ததும் ‘பி.எஸ்ஸி. எகானமிக்ஸ்’ படிப்பு படிக்க எத்திராஜ் கல்லுரியில் சேர்ந்தா ர்கள்.

இருவரும் ஒன்றாய் ‘பஸ்’ஸில் வருவதில் இருந்து ,பகல் உணவு சாப்பிடுவது,அரட்டை அடிப்ப து இடைவேளையில் பாடங்களை பற்றி பேசுவது, கல்லுரி முடிந்ததும் ஒன்றாய் வீடு திரும்பும் வரை ஒன்றாகவே நகமும் சதையும் போல் இருந்து வந்தார்கள்.ஒருவரை ஒருவருக்கு மிகவும் பிடித்து இருந்தது.

ஞாயித்துக் கிழமைகளிலும், லீவு நாட்களிலும், காஞ்சனாவும்,மோகனாவும் இருவர் வீட்டுக்கு மாறி மாறிப் போய் நிறைய நேரம் சந்தோஷமாய் பேசியும்,விளையாடியும் வந்துக் கொண்டு இருந்தார் கள்.இருவரும் மிகவும் நெருங்கிய தோழிகளாய் இருந்தும்,காஞ்சனா பழங்கால பழக்க வழக்கங்களை கடைப் பிடித்து வந்தாள்.

காஞ்சனா “நம்ம பழங்கால பழக்க வழக்கங்கள் தான் சரியானது.இப்போ வந்து இருக்கும் ‘மார்டர்ன்’ பழக்க வழக்கங்க எல்லாம் சரி இல்லே,அவைகள் தவறானவை” என்று மோகனாவிடம் அடிக்கடி சொல்லி வந்தாள்.ஆனால் மோகனா “இல்லே காஞ்ச்,இப்போ வந்து இருக்கும் ‘மார்டர்ன் டிரஸ்’ ‘மார்டர்ன்’ பழக்க வழக்கங்க தான் ‘பெஸ்ட்’ எனக்கு இந்த பழங்கால பழக்க வழக்கங்க எல்ல்லாம் சுத்தமா பிடிக்கலே” என்று சொல்லி ‘ஆர்க்யூ’ பண்ணி வந்தாள்.

இந்த ஒன்றில் தான் இருவருக்கும் மன வேறுபாடு இருந்ததே ஒழிய, மற்ற எல்லா விஷயங்க ளிலும் மன வேறுபாடே கிடையாது படிப்பு முடிந்து இருவரும் ‘பி.எஸ்ஸி. எகானமிக்ஸ்’ பா¢¨க்ஷயயை மிக நன்றாக எழுதி ‘பஸ்ட் க்லாஸில்’ ‘பாஸ்’ பண்ணினார்கள்.
இருவரும் ‘பாங்க்’ பா¢¨க்ஷ எழுதி அதில் ‘பாஸ் பண்ணினார்கள்

இருவரும் ‘பாங்க்’ பா¢¨க்ஷ ‘பாஸ்’ பண்ணீனார்கள்.இருவருக்கும் வேலையில் சேர ‘ஆர்டர்’ வந்ததது.அதிர்ஷடவசமாக இருவருக்கும் ஒரே கிளையில் வேலை கிடைத்து அங்கே வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார்கள்.

இரண்டு பேரும் ‘பாங்க்’ வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் ஆகி விட்டது

அப்பா,அம்மா இஷடப்படியே ஜாதகப் பா¢வர்த்தைனை பண்ணி,முறைபடி ‘பெண்’ பார்த்து பழங்கால வழக்கப் படி கல்யாணம் பண்ணிக் கொண்டாள் காஞ்சனா.

கல்யாணம் முடிந்து மோகனா காஞ்சனாவிடம் விடைப் பெற்றுக் கொண்டு போகும் போது காஞ்சனா மோகனாவைப் பார்த்து “மோகா,நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறே. எப்ப எனக்கு கல்யாண சாப்பாடு போடப் போறே” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் உடனே மோகனா “நான் எல்லாம் உன்னாட்டும் கட்டுப் பெட்டி இல்லே காஞ்ச்.அப்பா, அம்மா பாத்த முன் பின் தெரியாத ஒரு பையனை கல்யாணம் பண்ணிக் கொள்ள நான் தயாரா இல்லே.நான் ஒருவரை ‘லவ்’ பண்றேன். நாங்க இருவரும் ஒரு ரெண்டு வருஷம் நல்லா நெருங்கி பழகி, ஒருவரை ஒருவர் நல்லா புரிஞ்சுக் கிட்ட பிறகு தான் கல்யாணம் பண்ணி கொள்ள தீர்மானிச்சு இருக்கோம் காஞ்ச்.நான் உன்னே போல ‘கர்னாடகம்’ இல்லே.நான் ஒரு ‘மார்டரன்’ பொண்ணு” என்று சொல்லி தன் கண்னை சிமிட்டி விட்டு ‘கல’ ‘கல’என்று சிரித்தாள்.

”சரி மோகா,உன் இஷ்டம் போலவே நீ பண்ணு.இது உன்னுடைய ‘பர்ஸனல்‘ லைப்’ பத்தின முடிவு.அதை முடிவு பண்ணும் முழு பொறுப்பும் உன்னைச் சேர்ந்தது.’பெஸ்ட் ஆப் லக்’ மோகா” என்று சொல்லி விட்டு தன் வேலையை கவனிக்கப் போய் விட்டாள் காஞ்சனா.

மோகனா தன் ‘லவ்வரோடு’ தினமும் பீச்,ஹோட்டல், சினிமா என்று சுற்றிக் கொண்டு இருந்தாள்.தன் ‘லவ்வரோடு’ காலத்தை இனிமையாக கழித்து வந்தாள்.

காஞ்சனாவுக்கு அடுத்த வருஷமே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க மோகனா காஞ்சனா வீட்டுக்கு வந்து குழந்தையைப் பார்த்து விட்டு ”காஞ்ச், உன் பையன் ராஜா உன்னே மாதிரி ரொம்ப அழகா இருக்கான்.’கங்கிராட்ஸ்’ காஞ்ச்” என்று சொல்லி கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சி விட்டு அவள் வாங்கி வந்த ‘கிப்ட்டை’ காஞ்சனாவிடம் கொடுத்து விட்டுப் போனாள்.

ஒரு நாள் ‘ஆபீஸி’ல் மோகனா “காஞ்,நானும் என் ‘லவ்வரும்’ ஒரு பத்து நாளைக்கு ஊட்டி, முன்னார் இவைகளுக்கு போவலாம்ன்னு இருக்கோம்.உன்னை தான் நான் ஒரு ’டெண் டேஸ்க்கு’ ‘மிஸ்’ பண்ண வேண்டி இருக்கும்”என்று சந்தோஷத்துடன் சொன்னாள்.

உடனே காஞ்சனா ”அப்படியா மோகா.ஜாலியாப் போய் வா.எல்லா இடத்தையும் நல்லா சுத்தி பாத்து ‘எஞ்சாய்’ பண்ணு.ஆனா கூடவே ரொம்ப ‘ஜாகிறதையா’ இருந்து வா.நான் சொல்றது உனக்கு நல்லாப் புரியும்ன்னு நினைக்கறேன்” என்று கொஞ்சம் அழுத்தமாக சொல்லி விட்டு தன் வேலைகளை கவனிக்கப் போய் விட்டாள்.

தனியாய் உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் போது காஞ்சனா ‘மோகனா இப்படி கல்யாணம் ஆகாம தன் ‘லவ்வருடன்’ தனியே போய் ‘லைப்பை எஞ்சாய்’ பண்றாளே.இது சரியா.ஒரு வயசு பொண்ணும்,வயசு பையனும் பத்து நாள் தனியா இருந்து வரப் போறாங்களே.இதை எப்படி மோகனா அப்பா அம்மா ‘அலவ்’ பண்ணீ இருக்காங்க.ஏதாவது ‘ஏடா கூடமா’ ஆயிடுச்சின்னா,அந்த பையனுக்கு என்ன.’எனக்கும் ஒன்னும் தெரியாது’ன்னு என்று சொல்லி மோகனாவை விட்டு ஓடிப் போய் விடு வானே.அப்புறமா மோகனா தானே அந்தக் ‘கஷ்டத்தை’த் தாங்கி வரணும்.’கடவுளே என் உயிர் தோழிக்கு அந்த மாதிரி ‘கஷ்டம்’ ஒன்னும் வராம இருக்கணுமே’ என்று வேண்டிக் கொண்டாள்.

ஆறு மாதங்கள் ஓடி விட்டது.

ஒரு நாள் மோகனா ரொம்ப கவலையோடு இருந்தாள்.காஞ்சனா அவளை எவ்வளவு கேட்டும், மோகனா சரியான பதில் ஒன்றும் சொல்லாமல் ஏதோ பதில் சொன்னாள்.மோகனா உண்மையான காரணத்தை சொல்லாமல் தட்டி கழித்தாள்.காஞ்சனாவுக்கு இது ஒரு புதிராக இருந்தது.

ஒரு நாள் காஞ்சனாவும் மோகனாவும் தனியாய் இருந்தார்கள்.அப்போது காஞ்சனா ”மோகா, உன உயிர் தோழி நான்.என்னிடமே ஏன் நீ காரணத்தே மறைக்கிறே.உன் ‘ப்ராலெத்தை’ என் கிட்டே சொல்லேன்.நீ இது வரை இதை போல் கவலைப் பட்டதே நான் பாத்ததே இல்லே.’கம்மான்’ மோகா, சொல்லு ‘ப்ளீஸ்’ ”என்று அவளை உலுக்கினாள் காஞ்சனா.

மோகனா உண்மை காரணத்தை சொல்லாததால் ‘சரி,இப்போதைக்கு விட்டு விடலாம்’ என்று காஞ்சனா தன் வேலையை கவனிக்கப் போய் விட்டாள்.ஒரு வாரம் ஆகி விட்டது.இன்னும் மோகனா ‘நார்மலாக’ இல்லை.இதை இப்படியே விடக் கூடாது என்று எண்ணி ‘ஆபீஸ்’ முடிந்ததும் காஞ்சனா விடாப்பிடியாக மோகனாவை ஒரு ‘ரெஸ்டரென்ட்டுக்கு’ அழைத்துப் போய் ‘டிபன்’ வாங்கிக் கொடுக் கும் சாக்கில் அவள் ‘ப்ராப்லெம்’ என்னவேன்று கேட்டு குடைய ஆரம்பித்தாள்.

சற்று நேர அமைதிக்கு பிறகு “நான் ஏமாந்துப் போயிட்டேன் காஞ் நான் இப்போ ‘ப்ரெக்னன்ட் டா’ இருக்கேன்.என் ‘லவ்வர்’ நான் கல்யாண பேச்சை எடுத்தா ‘அப்புறமா பாக்கலாம்’ ‘அப்புறமா பாக்கலாம்’ ன்னு சொல்றாரே,ஒழிய ‘சீரியஸ்’ ஆக ஒரு பதிலும் சொல்வது இல்லே.என்னை நிச்சியமா கல்யாணம் பண்ணிக் கொள்றேன்னு அவர் சத்தியம் பண்ணிக் குடுத்ததால் தான் நான் ‘இதுக்கு’ சரின்னு சொன்னேன்.ஆனா அவர் இப்ப என்னடான்னா எதுக்கும் பிடி குடுத்து சொல்லாம ‘கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்’ன்னு ‘கூலா’ சொல்றார் காஞ்ச்” என்று சொல்லும் போதே அவள் கண்களில் நீர் துளித்தது.

’ஷாக்’ அடித்தது போலிருந்தது காஞ்சனாவுக்கு.

”என்ன மோகா,இப்படியா ஏமாந்துப் போவே. நீ படிச்ச பொண்ணு இல்லே.நீ என் பையனைப் பாக்க வந்தப்ப,நான் உன்னை ‘ஜாக்கிறதையா’ இருந்து வரச் சொன்னேனே.அதுக்கு உனக்கு ‘அர்த்தம்’ புரிஞ்சுமா, நீ எப்படி ‘இதுக்கு’ ஒத்துக் கிட்டே.சரி நடந்தது நடந்துப் போச்சு.இப்போ என்ன பண்ணலாம்ன்னு யோஜனைப் பண்ணு மோகா” என்று கவலையோடு சொன்னாள் காஞ்சனா.

உடனே மோகனா “காஞ்சனா,நான் ஒன்னும் ஏமாந்துப் போவலே.‘ஐ ஆம் வொ¢ கான்பிட ண்ட்’. நான் அவரை நிச்சியமா பண்ணிக் கொள்வேன்.’இட்ஸ் மேட்டர் ஆப் டைம்’ நீ கவலைப் படாதே காஞ்,நான் இதில் நிச்சியமா ஜெயிச்சு காட்டுவேன்” என்று நம்பிக்கையோடு கூறினாள் மோகனா. மோகனா சொன்னதைக் கேட்டதும் காஞ்சனாவுக்கு நிம்மதியாய் இருந்தது.

இதற்கிடையில் மோகனா ‘லவ்வர்’ தன் வேலையை பெங்களுர் மாற்றிக் கொண்டு போய் விட்டான்.

ஒரு வாரம் மோகனா ‘ஆபீஸ்’ வரவில்லை.காஞ்சனா தங்கள் இரண்டு பேருக்கும் தெரிந்த சில ‘ப்ரெண்ட்ஸை’ விசாரித்ததில் மோகனா பெங்களூர் போய் இருப்பதாகவும்,அவ ‘லவ்வர்’ தன் வேலை யை பெங்களுர் மாற்றி கொண்டு போய் விட்டதால், அவனை பெங்ளுரில் சந்தித்து பேச அவள் போய் இருப்பதாயும் தெரிய வந்தது.

கே.கே.நகா¢ல் இருக்கும் வீட்டில் இருந்து இருந்து ‘ஐ.டி. பார்க்’ வேலைக்குப் போய் வருவது கஷ்டமாய் இருந்ததினால் காஞ்சனாவின் கணவன் திருவான்மியூரில் ஒரு வீடு வாடகைக்குப் பார்த் தான்.காஞ்சனா ‘பாங்க்’ மேலிடத்துக்கு ஒரு ‘அப்லிகேஷன்’ எழுதி அடுத்த வாரமே திருவான்மியூர் ‘பாங்க்’ கிளைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டாள்.

மோகனா செல் நம்பருக்கு அடிக்கடி ‘போன்’ பண்ணி வந்தாள் காஞ்சனா.ஆனால் மோகனா செல் ‘போனில்’ ‘இந்த செல் போன் புழக்கத்தில் இல்லை’ என்று பதில் வந்தது.காஞ்சனா மிகவும் கவலைப் பட்டாள்.’தன் ஆறுயிர் தோழி மோகனாவுக்கு நல்லபடியா அவ காதலிச்சவரோடு ஒரு கல்யாணம் ஆகணும்’ என்று கடவுளை வேண்டிக் கொண்டு வந்தாள்.

அதற்கு அப்புறம் காஞ்சனா மோகனாவுக்கு செல் ‘போனில்’ ‘ட்ரை’ப் பண்ணவே இல்லை. காஞ்சனா மோகனாவை ‘ பாங்க்’ ‘போனில்’ கூப்பிட முயற்சி பண்ணினாள்.இரண்டு மூன்று நாட்கள் ‘பாங்கில்’ யாரும் ‘போனை’ ‘அடெண்ட்’ பண்ணவில்லை.மறுபடியும் அன்று காஞ்சனா ‘பாங்கு’ க்குப் ‘போன்’ பண்ணினாள்.

அதிர்ஷ்டவசமாக அன்று ‘போனை’ ‘அட்டெண்ட்’ பண்ணவர் “மேடம், மோகனா மேடம், போன வாரம் ‘பாங்கு’ க்கு வந்து இருந்தாங்க. இப்போ மறுபடியும் ஒரு வார ‘லீவிலே’பெங்களூர் போய் இருக்காங்க” என்று சொன்னார்.தன் தோழி மோகனாவை எண்ணி மிகவும் வருத்தப் பட்டாள்
காஞ்சனா.

இருபது ஐஞ்சு வருஷங்கள் ஓடி விட்டது.

காஞ்சனாவின் பையன் சுரேஷ் BE முடித்து விட்டு ‘இன்போஸிஸ்’ கம்பனியில் வேலை செய்து வந்தான்.அவன் கூட வேலை செய்து வந்த ரமா என்கிற பெண்ணை காதலிச்சு வந்தான்.

நேரம் கிடைக்கும் போது அப்பா,அம்மாவிடம் தன் காதலைச் சொல்லி சம்மதம் வாங்கணும் என்று காத்து இருந்தான்.

ஒரு நாள் ஞாயித்துக் கிழமை சாயங்காலம் ராமன்,காஞ்சனா கொடுத்த ‘டீ’யையும் ‘பிஸ்கெட்’ டையும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.சூடாக இருந்த டீயைக் குடித்துக் கொண்டே “ஏண்டா, சுரேஷ்,உன் கல்யாணத்துக்கு நாங்க பெண் எதாச்சும் பாக்கலாமா.அப்படி நாங்க பெண் பாத்த பிறகு, நீ எங்க கிட்ட வந்து இந்த ‘காதல்’,‘கத்திரிக்கா’ன்னு ஏதாவது சொல்லிக் கிட்டு வராதே.நாங்க எடுத்து க்கற முயற்சி எல்லாம் வீணாயிடும்.சொல்லுடா.நாங்க உனக்கு ஒரு பொண்ணேப் பாக்கலாமாடா” என்று தன் மகன் சுரேஷைக் சொல்லி கேட்டார் ராமன்.

உடனே சுரேஷ் தயங்கி கொண்டே“அப்பா,நான் ஒரு பெண்ணை மனசார காதலிக்கறேன். கல்யாணம் கட்டிக் கிட்டா நான் அவளைத் தான் கட்டிப்பேன்.நீங்க வேறு எந்த பெண்ணையும் என க்கு பாக்க வேண்டாம்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டான்.

அது வரை பொறுமையா கேட்டுக் கொண்டு இருந்த காஞ்சனா ”யார்டா அந்த பொண்ணு தடியா.இது நாள் வரைக்கும் நீ எங்க கிட்ட சொல்லாம இருந்து வந்து இருக்கே.அப்பா உன் கிட்டே கேட்டபுறமா மொள்ளச் சொல்றே” என்று கோபதோடு கேட்டாள்.

தன் மணைவி கோவமாக இருப்பதைப் பார்த்து ராமன் அன்பாக “சுரேஷ்,நீ காதலிக்கிற பொண்ணு யாருடா.அவங்க அப்பா அம்மா என்ன வேலே பண்றாங்க.அவங்க வீடு எங்கே இருக்கு. எல்லா விவரமும் சொல்லுடா” என்று கேட்டார்.

”அப்பா அந்தப் பொண்ணு பேர் சுதாப்பா.அவளும் BE பாஸ் பண்ணிட்டு ‘இபோஸிஸ்லே’ என்னோடு வேலை செஞ்சி வராப்பா.அவ அப்பா ‘ஸ்டேட் பாங்க் ஹெட் ஆபீஸில்’ நம்ப அம்மா மாதிரி ‘சீப் மானேஜரா’ வேலைப் பண்ணீக்கிட்டு இருக்காராம்.சுதா அம்மா ‘இண்டியன் பாங்கிலே’ ‘சீப் மானேஜரா’ வேலை பண்ணி கிட்டு வறாங்களாம்.அவங்க வீடு தி.நகர் லே இருக்கு.ரொம்ப நல்ல பொன்ணுப்பா அவ” என்று மெல்ல தட்டுத் தடுமாறிச் சொன்னான் சுரேஷ்.

“பொண்ணுக்கு நீ ஒன்னும் நல்ல ‘சர்டிபிகேட்’ எல்லாம் தர வேணாம்.நாங்க பாத்து அவ நல்ல பொண்ணா,அவங்க நல்ல குடும்பமான்னு,தீர விசாரிச்சு தான் முடிவு பண்ண முடியும் தெரிதா.அது வரை நீ பொறுத்துக்கிட்டு இருக்கணும்.தெரிதா” என்று பையனை மிரட்டினாள் காஞ்சனா.

ராமனும் காஞ்சனாவும் பெண்ணின் அப்பா அம்மாவோடு ‘போனில்’ பேசி ஜாதகம் மாற்றிக் கொண்டார்கள்.இரண்டு பேருடைய ஜாதகங்கள் நன்றாய் பொருந்து இருக்கவே ‘பெண்ணைப் பார்க்க’ வருவதாகச் சொல்லி அவர்கள் வீட்டு விலாசத்தை வாங்கிக் கொண்டார் ராமன்.

ஒரு நல்ல நாள் பார்த்து ‘போனில்’ சொல்லி விட்டு,‘பெண்’ பார்க்க வருவதாக சொல்லி விட்டு, பையன் சுரேஷை அழைத்துக் கொண்டு தி.நகர்க்கு கிளம்பிப் போனார்கள் ராமன் தம்பதிகள்.பெண் ணின் வீடு ஒரு மூனு ‘பெட் ரூம்’ ‘லக்ஸா¢ ப்லாட்’.’மெல்ல ‘லிப்ட்டில்’ ஏறி ‘ப்லாட்டுக்கு’ வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினர் ராமன்.

வாசல் கதவை திறந்தார் ராஜலிங்கம்.‘ப்லாட்’ பொ¢தாக இருந்தது. வீடு பூராவும் ‘ஸ்ப்லிட் ஏ.ஸி’.வேலை செய்துக் கொண்டு இருந்தது.

உடனே ராமனுக்கு ‘பரவாயில்லே, நம்ம சுரேஷ் ரொம்ப நல்ல பணக்காரா பொண்ணைத் தான் காதலிக்கிறான்.காஞ்சனாவுக்கு பொண்ணைப் பிடிச்சு இருந்தா இந்தப் பொண்ணையே சுரேஷ¤க்கு கல்யாணம பண்ணி முடிச்சிடலாம்’ என்று எண்ணியபடி ‘ப்லாட்’ உள்ளே மெல்ல நடந்து வந்தார்.

வந்தவர்களை “வாங்க, வாங்க” என்று கையைக் கூப்பி வணக்கம் சொல்லி,உள்ளே வரவேற்று ‘சோபா’வில் உட்காரச் சொன்னார் ராஜலிங்கம்.கணவன் வரவேற்பபை கேட்டதும் சமையல் ரூமில் இருந்து வெளியே வந்தாள் லலிதா.

லலிதாவைப் பார்த்ததும் ‘ஷாக்’ அடித்தது போல் இருந்தது காஞ்சனாவுக்கு.

‘இவ வீடா இது.இவ பெண்ணையா சுரேஷ் காதலிக்கிறான்.கடவுளே.இந்தப் பொண்ணு நம்ம சுரேஷ¤க்கு வேணாமே’ என்று காஞ்சனா யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள் காஞ்சனா.

“என் பேர் ராஜலிங்கம்,இது என் மணைவி லலிதா” என்று சொல்லி தன்னையும் தன் மணை வியையும் அறிமுகப் படுத்தினார் ராஜலிங்கம்.

பதிலுக்கு “என் பேர் ராமன்,என் ‘வைப்’ காஞ்சனா,என் ‘ஒன்லி சன்’ சுரேஷ்” என்று மூவரை யும் அறிமுகப் படுத்தினார் ராமன்.

உட்காராமல் லலிதாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள் காஞ்சனா.’இவள் நம்ம தோழி மோகனா இல்லையா.இவ மோகனாவே தான்.அதே நிறம்.அதே உடல் அமைப்பு. முக ஜாடையும் மோகனாவுடையது தான்.இப்ப தன் பேரை ’லலிதா’ன்னு மாத்தி கிட்டு இருப்பாளோ’ என்று பல விதமாக எண்ணி குழம்பினாள் காஞ்சனா.

“என்ன மேடம்,என் ‘வைப்பை’ இப்படி வச்ச கண் வாங்காம அப்படிப் பார்த்துக் கிட்டு இருக் கீங்க.முதல்லே ‘சோபா’லே உக்காருங்க.இவங்களே உங்களுக்கு முன்னமே தெரியுமா” என்று சொல்லி காஞ்சனாவை கேட்டார் ராஜலிங்கம்.என்ன பதில் சொல்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தாள் காஞ்சனா.

”இவ என் அக்கா மகங்க.உறவு விட்டுப் போவக் கூடாதுன்னு,நாங்க ரெண்டு பேரும் கல்யா ணம் பண்ணிக் கிட்டோம்.நீங்க எங்கேயாவது இவங்களை பார்த்து இருப்பீங்கன்னு நான் நினைக்கறேங்க”என்று சொல்லி காஞ்சனாவைப் பார்த்துக் கொண்டு இருந்தார் ராஜலிங்கம்.ராஜலிங்கம் சொன் னது எதுவும் காஞ்சனா காதில் விழவே இல்லை.இன்னும் குழப்பத்திலே தான் இருந்தாள்.

‘இவ வண்டவாளம் நமக்குத் தெரியுமே.இந்தக் குழந்தை ‘தகாத உறவாலே’ தானே இவளுக்கு பொறந்தது.இந்த விஷயம் நமக்கு நல்லா தெரி¢யுமே.அதனால் தான் இவ நம்மைத் தெரியாத மாதிரி நடிக்கிறளா’ என்கிற சந்தேகப் பேய் அவள் காஞ்சனா தலைக்கு ஏறியது.

“பலகாரம் எடுத்துக் கிட்டு நம்ம சுதாவை வரச் சொல் லலிதா” என்று மணைவியை உத்தரவு போட்டார் ராஜலிங்கம்.“இதோ சொல்றேங்க”என்று சொல்லி விட்டு பெண் சுதாவை அழைத்து வரப் போனாள் லலிதா.

சந்தேகமே இல்லை குரலும் மோகனா குரல் போல தான் இருக்குது.காஞ்னா சந்தேகம் இன் னும் வலுத்தது.“பொ¢யவங்களுக்கு நமஸ்காரம் பண்ணிட்டு, காபி பலகாரம் குடும்மா” என்று தன் பெண்ணுக்கு செல்லமாக சொன்னாள் லலிதா.

சுதாவும் எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணி விட்டு,கொண்டு வந்த ‘காபி’ பலகாரத்தை எல்லோருக்கும் கொடுத்தாள்.சுதா தங்க விக்கிரகம் போல் இருந்தாள்.அவ்வளவு அழகு. நல்ல உயரம்.நல்ல கலர்.

சுதா உட்கார்ந்துக் கொண்டதும் லலிதா எல்லோரையும் பாத்து “சுதா எங்களுக்கு ஒரே பொண் ணுங்க.இது வரைக்கும் அவ ஆசைப் பட்ட எதையும் நாங்க அவளுக்குக் கொடுக்காம இருந்ததே இல்லீங்க.எங்க பொண்ணு ஆறு மாசமா உங்க பையன் சுரேஷைக் காதலிக்கறாங்க. எங்க ரெண்டு பேருக்கும் அவ ஆசையை நிறைவேத்தி வைக்கணும்ன்னு ரொம்ப ஆசைங்க.உங்க ரெண்டு பேருக்கும் சுதாவை பிடிச்சு இருந்தா,நீங்க அவங்க கல்யாணத்துக்கு சம்மதம் குடுங்க.அவங்க ரெண் டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்து வரட்டுங்க” என்று தன் கையைக் கூப்பி சொன்னாள் லலிதா.
லலிதா கண்களீல் கண்ணீர் முட்டியது.

காஞ்சனா யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.ராமன் தன் மனைவியைப் பார்த்து “உனக்கும் சுதாவைப் பிடிச்சு இருக்கு இல்லையா காஞ்சனா” என்று சொல்லி கேட்டார் ராமன். காஞ்சனா பதில் ஒன்றும் சொல்லாமல் லலிதாவையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

’நாடகம் ஆடுகிறாளா இந்த மோகனா.நீலிக் கண்ணீர் வேறே விடறா’ என்று மனதுக்குள் கறுவினாள் காஞ்சனா.பலகாரத்தை சாப்பிட்டு விட்டு காஞ்சனா சட்டென்று சோபாவை விட்டு எழுந்துக் கொண்டு “நாங்க வீட்டுக்குப் போய் எல்லோர் கிட்டேயும் கலந்து பேசி உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்ங்க” என்று சொல்லி விட்டு கிளம்பத் தயாரானாள் காஞ்சனா.

ராமனுக்கு காஞ்சனா செய்தது ஆச்சரியமாக இருந்தது.வேறு வழி இல்லாமல் ராமனும் சுரேஷ¤ம் எழுந்து விட்டார்கள்.“நாங்க வரோம்ங்க” என்று சொல்லி விட்டு எல்லோரும் கிளம்பி விட் டார்கள்.

காரில் வீட்டுக்குத் திரும்பி வந்துக் கொண்டு இருக்கும் போது சுரேஷ் ”ஏம்மா,நீங்க இப்படி ஒன்னும் சொல்லாம அவங்க வீட்டை விட்டுக் கிளம்பி வந்தீங்க” என்று கொஞ்சம் கோபமாகக் கேட் டான்.“நீ ஒன்னும்பேசாம வாடா.உனக்கு ஒன்னும் தெரியாது.நாங்க பொ¢யங்க உனக்கு நல்லதைத் தான் பண்ணுவோம்” என்று சொன்னாள்.

”சரி,என்னே இங்கே கொஞ்சம் இறக்கி விட்டு விடுங்க.என் மனசு சரி இல்லே.நான் ஒரு சினிமா பாத்துட்டு வீட்டுக்கு வறேன்” என்று சுரேஷ் சொன்னதும் ராமன் காரை நிறுத்தி சுரேஷை இறக்கி விட்டார்.காஞ்சனாவும் ராமனும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததும் “இந்த பெண் வேணாங்க.இந்த பெண்ணின் அம் மாவை எனக்கு நல்லாத் தெரியும்.அவ பேர் ‘லலிதா’ இல்லைங்க.அவ உண்மை பேர் மோகனா. அவளும் நானும் பத்து வருஷத்துக்கு மேலே ‘க்ளோஸா பழகி வந்து இருக்கோம்.கல்யாணத்துக்கு முன்னாடி,இவ ஒரு கள்ள காதலன் கூட தகாத உடல் உறவு வச்சு கிட்டு இந்த ‘குழந்தையை’ப் பெத்துக் கிட்டு இருக்காங்க.தன் பேரை ‘லலிதா’என்று மாத்தி கிட்டு,தன் மாமாவை வச்சு கிட்டு இந்த ‘டிராமா’ ஆடி,அந்தப் ‘பெண்ணை’ சுரேஷ் தலையில் கட்டப் பார்க்கிறாங்க அவ.’அந்த’ மாதிரி பொறந்த பொண்ணு நம்ம சுரேஷ¤க்கு நிச்சியமா வேணாங்க.நல்ல வேளே நாம பிழைச்சோம்” என்று சொல்லி நிறுத்தினாள் காஞ்சனா.

அவள் முகம் கோபத்தில் சிவந்தது.

கொஞ்ச நேரமானதும் ராமன் “காஞ்சனா நாம தீர விசாரிக்கலாம்,நீ ரொம்ப அவசரப் படறேன் னு எனக்குத் தோணுது” என்று சொன்னார்.காஞ்சனா பொறுமை இல்லாமல் “வேணாங்க.நான் அந்த விஷப் பா¢¨க்ஷ எல்லாம் பண்ணறதா இல்லீங்க” என்று சொல்லி இந்த விஷயத்திற்கு முற்று புள்ளி வைத்தாள்..

ஒரு அரை மணி நேரம் கழித்து காஞ்சனா ராஜலிங்கம் வீட்டிற்கு ‘போன்’ பண்ணி “உங்க பெண்ணை எங்களுக்கு பிடிக்கலைங்க” என்று சொல்லி ‘போனை’ படக் என்று வைத்து விட்டாள்.

ராஜலிங்கம் குடும்பத்தார் இந்த ‘போன்’ செய்தியைக் கேட்டதும் மனம் ஒடிந்துப் போனார்கள்.

”அந்த அம்மா ‘உங்க பெண்ணே பிடிக்கலே’ன்னு சொன்னதுக்கு ஒரு காரணம் கூட சொல்லாம ‘போனை’ப் படக்குன்னு வச்சுட்டாங்க லலிதா” என்று சொன்ன ராஜலிங்கத்தின் குரலில் வருத்தம் தெரிந்தது.

கொஞ்சம் நேரம் கழித்து ராஜலிங்கம் லலிதாவைப் பார்த்து “லலிதா,அந்த அம்மா உன்னே ரொம்ப நேரம் வச்ச கண் வாங்காம பாத்துக் கிட்டு இருந்தாங்க.எனக்கு என்னவோ உன்னே மாதிரி ஒரு அம்மா அவங்க வாழகையிலே ஏதோ ஆழமான ‘பாதிப்பை’ குடுத்து இருப்பாங்க போல இருக்கு. அது அந்த அம்மா ஞாபகத்துக்கு வந்து இருக்கும்.அதே மனசிலே வச்சுக் கிட்டுத் தான் அந்த அம்மா நம்ம சுதாவே ‘பொண்னுப் பிடிக்கலே’ன்னு சொல்லி இருப்பாங்க” என்று வருத்தததுடன் சொன்னார்.

“இருக்கலாங்க.எனக்கும் அந்த மாதிரித் தான் தோணுது” என்று சொல்லி கணவன் சொன்ன தை ஆமோதித்தாள்.

சற்று நேரத்திற்கு பிறகு ராஜலிங்கம் ராமன் வீட்டுக்கு ‘போன்’பண்ணினார்.”சார் நான் ராஜ லிங்கம் பேசறேன்.மிஸ்டர் ராமன் சாரா” என்று கேட்டார்.”ஆமாம்,நான் ராமன் தான் பேசறேன்.என்ன விஷயம் சொல்லுங்க ராஜலிங்கம்” என்று பதிலுக்குக் கேட்டார் ராமன்.

“சார்,இப்படி மொட்டையாய் எங்களுக்கு பெண் பிடிக்கலேன்னு சொன்னா எப்படிங்க.ஏதாவது உங்களுக்கு எங்களைப் பத்தியோ,எங்கக் குடும்பத்தை பத்தியோ தெரிய வேணும்ன்னா வெளிப்படை யா நீங்க எங்களைக் கேளுங்க.இளம் உள்ளங்களை நாம வீணா பிரிக்க கூடாதுங்க” என்று சொல்லும் போதே அவர் குரலில் வருத்தம் தெரிந்தது.”சார்,இந்த முடிவு பூராவும் என் மணைவி எடுத்த முடிவு தான்”என்று சொல்லி ‘போனை’ வைத்து விட்டார் ராமன்.

ஒரு பத்து நிமிஷம் கழித்து ராஜலிங்கம் மறுபடியும் ராமனுக்கு ‘போன்’பண்ணினார்.” எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு.அடுத்த வாரம் உங்களையும், உங்க மணைவியையும் நாங்க நேர்லே வந்து பாக்கறோம்.அது வரை எங்களுக்கு கொஞ்சம் ‘டயம்’ குடுங்க” என்று இழுத்தார் ராஜ லிங்கம்

“சரிங்க.நீங்க அடுத்த வாரமே வாங்க ”என்று சொல்லி விட்டு ‘போனை’ வைத்து விட்டார் ராமன்.

“ஏங்க,நான் அந்த பெண் வேணவே வேணாம்ன்னு சொல்லிக் கிட்டு இருக்கேன்.நீங்க என்ன டான்னா அவரை அடுத்த வாரம் நம்ப வீட்டுக்கு வாங்கன்னு கொஞ்சறீங்க.என்னங்க இது, நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்லீங்க” என்று கோபத்தொடு கத்தினாள் காஞ்சனா.உடனே ராமன் “எப்படி காஞ்சனா அவரே போன் பண்ணி நம்ம வீட்டுக்கு வறேன்னு சொல்லும் போது, நான் வேணாங்கறது சொல்லு ”என்று கேட்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ”அப்படி அவர் வந்தா நீங்க மட்டும் பேசிக்குங்க.தயவு செஞ்சி என்னே கூப்பிடவே கூப்பிடாதீங்க.நான் பேச எல்லாம் நிச்சியமா வர மாட்டேங்க” என்று கோவமாகச் சொல்லி விட்டுப் சமையல் ‘ரூமு’க்குப் போய் விட்டாள் காஞ்சனா.

சுரேஷ் சினிமா பார்த்து விட்டு வெளியே ‘டிபன்’ சாப்பிட்டு விட்டு சாயங்காலம் ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான்.உள்ளே வந்ததும் வராததுமாய் த செருப்பைக் கழட்டிக் கொண்டே” அம்மா, நீங்க பண்ணது கொஞ்சம் கூட நல்லா இல்லே.நான் சுதாவை மனசார காதலிக்ககேறேன்.அவளும் என்னை மனசாரக் காதலிக்கறா.நாங்க ரெண்டு பேரும் எங்களுக்குக் கல்யாணம் நடக்கும்ன்னு ரொம்ப ஆசையா இருதோம்..” என்று சொல்லி முடிக்கவில்ல காஞ்சனா “சுரேஷ் கோவப்படாதே.நான் காரணத்தோடுத் தான் சொல்றேன்.அந்த பொண்ணு உனக்கு வேணாம்.நீ வேறே யாராச்சும் ‘லவ்’ பண்ணு. நான் அந்தப் பொண்ணே உனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறேன்” என்று சொன்னாள்

‘ஏம்மா சுதாவுக்கு என்னம்மா…” என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது காஞ்சனா” சுரேஷ் இப்போதைக்கு என்னை காரணம் கேக்காதே.நான் உனக்கு நிதானமா சொல்றேன்” என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்குப் போய் விட்டாள்.

சுரேஷ¤க்கு அவன் அம்மா சொன்னது தான் இந்த வீட்டிலே நடக்கும் என்று நன்றாகத் தெரியும்.அப்பாவுக்கு இந்த வீட்லே ‘வாய்ஸே’ கிடையாது.அப்பாவே அம்மா ஒன்னு வேணாம்ன்னு சொன்னா,அதே பண்ணமாட்டாரே.அவர் எங்கே நமக்கு ‘சப்போர்டிவ்வா’ பேசப் போறார்’ என்று கோவப் பட்டுக் கொண்டே தன் ‘பெட்’ ரூமுக்குப் போனான்.

திங்கக் கிழமை ஆபீஸில் சுதா சுரேஷ சந்தித்ததும் “என்ன சுரேஷ்,உங்க அம்மா என்னே ‘பொண்ணு’ப் பாக்க வந்துட்டு,அப்ப ஒன்னும் சொல்லாம வீட்டுக்குப் போய் ‘போன்லே’ ‘ என்னேப் பிடிக்கலே’ன்னு சொன்னாங்க.நான் உன்னேத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்,அவங்களே இல்லே” என்று கோவமாகக் கேட்டாள்.உடனே சுரேஷ் “சுதா உன் கோவம் எனக்குப் புரிது.நானும் எங்கம்மாவே கோவமாக் கேட்டேன்.அவங்க என்னேப் பாத்து ‘சுரேஷ் இப்போதைக்கு என்னை கார ணம் கேக்காதே.நான் உனக்கு நிதானமா சொல்றேன்ன்னு சொன்னாங்க.நீ எனக்காகக் கொஞ்சம் பொறுமையா இரு.நான் மெல்ல மெல்ல என் அம்மா கிட்டே கெஞ்சி அவங்களே ஒத்துக்க வக்கிறேன். நான் நிச்சியமா உன்னேத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.நான் உன்னேத் தவிர வேறே எந்தப் பொண்ணேயும் கண் எடுத்துப் பாக்க மாட்டேன்.என்னை நம்பு சுதா ‘ப்ளீஸ்’ “என்று சுதாவின் கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

சுரேஷ் கெஞ்சவே சுதா தன் கோவத்தை மறந்து “சரி சுரேஷ்.நான் காத்துக் கிட்டு இருக்கேன். ஆனா நீயும் உன் அம்மாவும் என் பொறுமையே ரொம்ப நாள் சோதிக்காதீங்க.அப்புறமா நானே உங்க வீட்டுக்கு வந்து அங்க அம்மாவைப் பாத்து ‘ஏன் ஆண்டி என்னே உங்களுக்குப் பிடிக்கலே’ன்னு கேக்கப் போறேன்’.அதுக்கு முன்னாடி நீ எனக்கு சீக்கிரமா ஒரு நல்ல பதிலே சொல்லு சுரேஷ்”என்று சொன்னாள்.உடனே சுரேஷ் “நீ என் வீட்டுக்கு எல்லாம் வர வேணாம் சுதா.நானே இந்த ‘ப்ராப்லெத் தே’ சீக்கிரமா ‘சால்வ்’ பண்ணி,நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றேன்” என்று சொன்னான்.

“சரி, நீ சொல்றேன்னு நான் கொஞ்சம் நாள் பொறுமையா இருந்துக்கிட்டு வறேன்.நீ சட்டு புட்டுன்னு உங்க அம்மா கிட்டே நம்ம காதலைச் சொல்லி,நம்ம கல்யாணத்துக்கு ‘பர்மிஷன்’ வாங்கற வழியேப் பாரு.நீ உங்க அம்மா மனசே எப்படியாச்சும் சொல்லி கொஞ்சம் மாத்து” என்று கொஞ்சம் கடுமையாகச் சொன்னாள் சுதா.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *