அண்ணனின் தியாகமும், தங்கையின் கண்ணீரும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 6, 2021
பார்வையிட்டோர்: 7,820 
 

ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த அண்ணன் , தங்கை. அண்ணனுக்கு நான்கு வயது இருக்கும்போது தங்கை கை குழந்தை, தன் தங்கையை தூக்கி மடியில் வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்.

தங்கையின் மீது அதிகம் பாசம் கொண்டிருப்பார். அவர் சிறுவயதிலேயே தன தங்கையின் மீது பாசமும், நன்கு படிப்பாளராகவும் , விளையாட்டு திறமை, பாட்டு பாடும் திறமை, நடனம் ஆடும் திறமை, என்று பல திறமைகளை கொண்டவர்.

ஆசிரியர், ஊர் மக்கள், நண்பர்கள் அனைவருடைய பாராட்டுதலையும் பெற்றவர். அவரை சுற்றி நண்பர்கள் சூழ்ந்து இருப்பார்கள். இவர் நண்பர்கள் பெற்றோர் இவரை பார்த்து நல்ல பலக்கங்களை கற்றுக்கொள், நன்றாக படி திறமைகளை வளர்த்துக்கொள் என்று கூறுவார்கள்.

தன் தங்கையும் அண்ணனை பார்த்து அவர் திறமைகளை பார்த்து வளர்ந்தாள் .

சில ஆண்டுகள் கழித்து மிக பெரிய கவலைக்குண்டான நிகழ்வு நடந்தது!!!!!!!

அம்மா, அப்பா, கூலி தொழிலாளி, தங்கை ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள், அண்ணன் எட்டாம் வகுப்பு படித்தார், அம்மா ஒரு வெகுளி, அம்மாவுக்கு உழைக்கமட்டும் தான் தெரியும், அம்மாவுக்கு உலகமே தன் குழந்தைகள் மட்டும்தான்.

தன் குழந்தைகளுக்கு வயிற்றுக்கு சாப்பாடு, உடுத்த உடை, படிப்பு, மட்டும் தான் அத்தியாவசிய தேவை என்கிறது அவருக்கு தெரிந்த உண்மை.

அம்மா வீட்டிலும், பழகுபவரிடமும், மிக மென்மையாக நடந்துகொள்வார் . திடீர்!!!! என்று தன் தகப்பனார் மரணம் அடைகிறார்.

உலகமறியாத அம்மா என்ன செய்வது, தன் குழந்தைகளை எப்படி வளர்ப்பது, என்று தெரியாமல் மனம் குழப்பத்தில் இருக்கும்போது, அண்ணன் தன் தங்கைக்கு தந்தையானார். குடும்பத்தின் தலைவனாக மாறினார்.

தன் பதினைந்து வயதிலேயே, தன்னுடைய படிப்பை நிறுத்திவிட்டு ஒரு “சேவக மையத்துக்கு” பணிபுரிய சென்றார்.

நாம் படித்து பல பட்டங்களை பெறவேண்டும், நாம் பலருக்கு பல நன்மைகளை செய்யவேண்டும் என்பது அவருடைய கனவாக இரு ந்தது,

அவருடைய கனவு எல்லாம் தவிடு பொடியாக மாறியது .

அவருடைய படிப்பு, விளையாட்டு, பாட்டு , நடனம், இப்படி அவருக்குள் இருக்கும் எல்லா திறமைகளும் மறைந்து போனது , அவர் பணிபுரியும் இடத்திலும் அவருக்கு ரொம்ப நல்ல பெயர் .

தன் தங்கையை நன்றாக படிக்க வைக்கவேண்டும் , தன் குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும், என்று அவருடைய வேலையாக மாறியது .

தன் தங்கைக்கு அம்மாவாகவும், அப்பாவாகவும், அண்ணன் உருவெடுத்து அவளுக்கு பாசத்தைக்காட்டி, நல்லது, கெட்டது, சொல்லிக்கொடுத்து படிக்கவைத்து தன் தங்கையை பார்த்துக்கொண்டார்.

படிப்பு முடித்தவுடன் திருமணம் செய்துவைத்தார். தன் தங்கையும் தன் அண்ணன் சொன்னதை கேட்டு நடந்துகொண்டாள்.

தங்கையின் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அண்ணன்னுக்கும் திருமணம் நடந்தது அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவரது வாழ்க்கையும் நன்றாக இருந்தது.

சில ஆண்டுகள் கழித்து தங்கை தன் சொந்த ஊர் திருவிழாவுக்கு வந்தாள்.

தன் தோழிகள் அனைவரையும் பார்த்து உறவாடிக்கொண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சையாக இருந்தார்கள்.

ஆனால், அந்த சந்தோசம் சிறிது நேரத்தில் தொலைந்து போனது, தன் அண்ணனை பார்த்து பெரிய அதிர்ச்சி !!!!!

நம்ம அண்ணாவா இப்படி இருக்கிறார் என்று மனம் கலங்கி நின்றாள்.

தன் அண்ணன் அந்த ஊரில் ஒரு பெரிய பொறுப்பில் இருந்தவரா இப்படி ஆகிவிட்டாரே,,, என்று தங்கை மனம் வருந்தியது.

தன் அம்மாவிடம் ஏனம்மா???

அண்ணா இப்படி மாறினார் என்று அம்மாவிடம் கேட்க, அம்மா சொல்ல முடியாமல், “ தொண்டையில் வலி நிற்க”, கண்ணீர் சொட் ,, என்று பூமியில் விழுந்தது.

“ கலங்கிய கண்களோடு ” “ உதடுகள் நடுங்கிக்கொண்டே ” என்னவென்று நான் சொல்வது என்று அழுதுகொண்டே அண்ணனுக்கு வேண்டாத சில நண்பர்கள் அண்ணனை குடிக்க வைத்து அவன் குடிக்கு அடிமையாகினான். கலர் மங்கிய சட்டை , பரட்டை தலைமுடி , தாடி , ஆல்கஹால் அருந்திவிட்டு உளறிய வார்த்தை , சரியாக சாப்பிடாமல் ஒட்டிப்போன உடல் இதையெல்லாம் பார்க்கும்போது தங்கையின் மனம் தவித்துக்கொண்டு இருக்கிறது.

தங்கையின் மனதில் ஒரு உறுத்தல் ஏற்பட்டது நம் அண்ணன் நன்றாக படித்து அவருக்கு பிடித்த வேளையில் இருந்திருந்தால் அண்ணாவின் நிலைமை இதுமாதிரி மாறிருக்காதே,,,

அப்பா இறந்தவுடன் தன் படிப்பை இழந்து, தனக்கென்று இருக்கும் ஆசையெல்லாம் இழந்து தன்னை படிக்கவைத்தார்.

தன் அண்ணனின் குடும்பத்தின் வளர்ச்சிக்கும், அவர் மீண்டும் பழைய அண்ணனா மாறுவதற்கும் நாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று முடிவு பண்ணினாள் தங்கை.

அண்ணனின் பெண் குழந்தைகளுக்கு தேவை அறிந்து நடந்து கொண்டாள், சில வருடம் கழித்து அண்ணனின் முதல் பெண் நான் கல்லூரிக்கு சேர்ந்து படிக்க படிக்க விரும்புகிறேன் என்று தன் அத்தையிடம் கேட்க தன் அண்ணன் மகளை படிக்கவைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று சந்தோசமாக படிக்கவைத்தார்.

நம் அண்ணன் நம்மை படிக்கவைத்தார் நாம் அண்ணன் பொண்ணை படிக்கவைப்போம் என்று பெருமிதம் கொண்டு படிக்கவைத்தார்.

எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு நன்றி என்று நன்றியும் தெரிவித்துக்கொண்டாள்.

அண்ணனை பார்க்கும்போதெல்லாம் வேதனையுடன் இருக்கிறாள்.

மனம் கலங்கிய தங்கை…….

“ பதினைந்து வயதில் பார்த்த அந்த அண்ணனுக்காக காத்துகொண்டு இருக்கிறாள் கண்ணீருடன் ” ………………

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *