(1885ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இலங்கையின் முதல் தமிழ் நாவல்.
இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று கற்பனை நாவல். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல் என்றும் இதை கருதலாம் என ஆய்வாளர் சிலர் சொல்வதுண்டு. இந்நாவல் அரேபியக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இது நாவல் என்னும் தலைப்புடன் வெளிவராமல் மதநூலாக வெளிவந்தமையால் நாவலாக ஆய்வாளர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை.
அத்தியாயம்-4 | அத்தியாயம்-5
மறுநாட்காலமே வண்டி புறப்பட்டு அன்று பகல் முழுவ தும் ஓடி மாலை நேரத்தில் குதிரை மாற்றுகிற விடத்தில் அஸன் இறங்கினார். கள்ளர்களிருக்கிற விட மென்று அந்தக் கிழவன் சொன்ன ஸ்தலம் அங்கிருந்து இரண்டு மைல் தூரமிருக்கிறது. அந்த விடத்திற் சில பிரயா ணிகள் இந்த வண்டியிலிருப்பவர்களைப் பார்த்து, நீங்களிந் நேரத்திலிப் பாதையிற் போகவேண்டாம். நேற்றிரவு போன வண்டியில் ஒரு இங்கிலீஷ் துரைமகனும் ஒரு வாலிப வயதை யுடைய அவன் மகளும் இன்னுஞ் சில பெயர்களும் போகும் போது இருபது கள்ளர்கன் ஆயுதந் தரித்தவர்களாகக் குதி ரையின் மேல் வந்து வண்டியின் குதிரைகளைச் சுட்டுக் கொன்று அதிலிருந்தவர்களுடைய சாமான்களையுங் கொள்ளை யடித்து அந்த இங்கிலீஷ் துரையையுமடித்து அவருடைய மகளையுஞ் சிறையாகக் கொண்டுபோய் விட்டார்களென்று சொல்ல, அல்லா ஹூ வென்றோர் சத்தமிட்டு அந்தப் பெண் ணைக் கள்ளர்கள் எந்தச் திசையாக வெடுத்துக்கொண்டு போனார்கள் என்று கேட்டார். அது எங்களாற் சொல்லக் கூடாது; ஆனால், இன்னும் இரண்டுமைல் தூரத்தில் வலது புறமாக ஓர் சிறு பாதையுண்டு; அந்தப் பாதைவழியாகப் போனால் உன்னதமான ஓர் கன்மலை யொன்றிருக்கின்றது. அந்த மலையுச்சத்தில் அந்தக் கள்ளர்களிருக்கிறார்களென்று கேள்விப்பட்டோமென்று சொன்னார்கள் அஸன் பைத்தியங் கொண்டவனைப்போல் ஒன்றும் பாராமல் வண்டியிலிருந்த தன் சாமான்களையும் எடுக்காமல் குறித்த திசைக்கு ஓடத் தொடங்கினார் அங்கிருந்தவர்களெல்லாம் அஸனைப் பயித்தி யக்காரனென்று நினைத்து அவருடைய அழகையும், வடிவை யும் பார்த்துப் பரதபித்தார்கள். அஸனோடி வந்து, அந்தப் பிரயாணிகள் சொன்ன அடையாளப்படிக்கு அந்தக் குறுக் குப் பாதையைத் தேடி யறிந்து அந்த வழியாக ஓடினார். அந் நேரத்திற் சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்ததால் அந்தக் காட்டு வழியாகப் போகக் கூடியதாயிருந்தது. நடுச் சாமம் வரையிலும் அந்தக் கல்லுங் கரடுமான முரட்டுப் பாதை யில் அதிக வருத்தத்துடன் நடந்துபோனார். வழியில் இடைக்கி!ை… நரியுங் காட்டு மிருகங்களு மோடுவதைக் கண் டாரே யொழிய யாதொரு மனிதரையுங் காணவில்லை.
அப்படிப் போகும்போது துலையில் ஒரு மனிதன் வருவ வதை அவர் கண்டு கள்ளனோவென்று அச்சங் கொண்டு நின்றார். அந்த மனிதனும் அங்கு நின்றான். அவர் வருகிறது வரட்டுமென்று துணிவாய் அந்த மனிதளைச் சமீபிக்கையில் அவன் வழியை விட்டுக் காட்டிற் பாய்ந்தோடினான். ஆகிலும் அவனுடைய முகத்தை அவர் கண்டு என்னுடைய சத்துரு வாகிய அலீ இங்குமல்லவா வந்திருக்கிறானென்று கோபங் கொண்டு அவனைச் சுட்டுக்கொள்ள வேண்டுமென்று தன் னிடையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை யெடுத்துக் கொண்டு கொஞ்சந்தூரம் அலீ முன்னும் அவர் பின்னுமா யோடும்போது ஒரு செங்குத்தான பள்ளத்தில் அவன் விழுந் துருண்டான். அவருக்கு அவனைப்பின்பற்றிப் போகவாவது; அல்லது அவனிறந்து விட்டானோ உயிரோடிருக்கிறானோ வென்றறியப் போகவாவது வழியில்லாமலிருந்தால், திரும்பிப் பாதைக்கு வந்து சேர்ந்து நடக்கும்போது பின்னால் குதிரைக் கூட்டங்கள் விரைவாய் வருகிற சத்தங் கேட்டது; அந்த விடம் வெளியாயிருந்ததால் ஒளியவாவது அல்லது மறைய வாவது இடமில்லை
ஒரு நொடியில் அந்தக் குதிரைக்காரர்கள் வந்து அஸளை வளைந்து நீ யார்? நீ யெங்கே போகிறாய்? என்று கேட்டார் கள். அதற்கு அஸன் மறுமொழியொன்றுஞ் சொல்ல நாவெ ழாமல் சற்று மயங்கி நின்று திகைத்து, நான் கள்வர்களின் தலைவரைக் காணப்போகிறேனென்று சொன்னார். அப்போ தவர்கள் என்ன காரியத்திற்காகிப் போகிறாயென்று கேட்டார் கள்; அதற்கு அஸன், நானுங் கள்ளர்கள் கூட்டத்திலொரு வனாகப் பிரியங்கொண்டு போகிறேன். அவர்களுடைய சட் டங்களுக்கும், கட்டளைகளுக்கும் அடங்கி நடக்கப் பிரியமா யிருக்கிறேனென்று சொன்னார் அப்போது அவர்கள் எங்கள் சட்டத்தின் முதல் நிபந்தனையாவது, உன் வசமிருக்கிற ஆயு தங்களை வாங்கிக்கொண்டு உன் கைகளைக் கட்டி, இந்தக் குதிரையின் மீதேற்றி எங்கள் தலைவர் முன்னுக்குக் கொண்டு போய் விட நீ இடங்கொடுப்பதே என்று சொல்ல, அஸன் அது எனக்குச் சம்மதம்; உங்கள் பிரியம் போற் செய்யுங்களென் றார். அவர்கள் அஸனிடமிருந்த துப்பாக்கியைப் வாங்கிக் கொண்டு அவருடைய கைகளைக் கட்டிக் குதிரையின் மீதேற் றிக் கொண்டு போய் விட்டார்கள்.
இரண்டு மணி நேரம் சென்றபிறகு, அந்த மலையுச்சம் போய்ச் சேர்ந்தார்கள் அந்த உச்சத்திற் சில கற்பொதும்பு களிருந்தன, அந்தப் பொதும்புகளுக்கு முன்னே இருவர் துப் பாக்கி யெடுத்தவர்களாகக் காவல் காத்து நின்றார்கள். அஸ னைப் பிடித்துக்கொண்டு போனவர்களெல்லாம் குதிரையை விட்டிறங்கி அஸனுடைய கட்டுகளை அவிழ்த்துக்கொண்டிருக் கையில் ஒரு குதிரை விரைவாயோடி வருகிற சத்தங் கேட்டது சற்றுநேரத்தில் அந்தக் குதிரை வர அதிலேறியிருந்த மனிதன் இறங்கி அஸனைச் சமீபிக்க, அஸன் திடுக்கிட்டவராகத் திகைத்து நின்றார் அந்த மனிதன் வேறொருவருமல்ல. ஷம் ஷுன்னஹுாறுடைய மைத்துனனாகிய அப்துஸ்ஸமதே’ இவர் கள்ளரிலொருவராயிருக்கக் கூடுமா? இவர் சற்குணரென்றும் அநீதங்களைப் பொருந்தாத உத்தமரென்றுஞ் சொல்லியிருந் தாளே; இவருங் கள்ளரி லொருவரா யிருக்கிறாரென்றல்லவா விளங்குகின்றது என்று யோசிக்கையில் அப்துஸ்ஸமது அஸனை யொருக்காலுங் கண்டிராதவரைப் போல கூர்மையா கப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மற்ற கள்ளர்களைப் பார்த்து இந்த மனிதன் யார்? இவரெப்படி இங்கு வந்தார்? என்று கேட்க அவர்கள் நாங்கள் வரும் வழியிற் கண்டோம்; நாங்களவரை நீ ரார்? நீ ரெங்கே போகிறீர்? என்று கேட் டோம். அவர் நமது கூட்டத்தி லொருவராகச் சேர்ந்து கொள்ள விருப்பங்கொண்டு வந்திருக்கிறாரென்று சொன்னா கள். அப்போது அப்துஸ்ஸமது நம்முடைய தலைவரிப்போது இங்கில்லாததால் இவருண்மையான மனிதனோ அல்லது ரோகியோவென்று நாம் பரிசோதித் தறியும்வரையில் அவரைப் பொதும்பி லோரறையிற் கொண்டுபோய் அடைத்து வையுங்களென்று சொன்னார்; அதுபோலவே யடைக்கப்பட் டது அஸன் அறைக்குள்ளே யிருக்கும்போது பாளினுக்கு என்ன நடந்திருக்குமோ என்னுயிருக்கென்ன மோசம் வந்தா லும் குற்றமில்லை; பாளினுக்கு மாத்திரம் யாதொரு தீங்கும் வராதிருக்கும்படியாக அல்லாகுத்த ஆலாவைத் தோத்தரித் துக் கொண்டிருந்தார். இந்த மட்டும் அஸனுடைய சரித்தி ரத்தைச் சற்று நிறுத்தி, பாளினாவுக்கு நடந்த காரியங்களைச் சொல்லப் போகிறோம்.
அந்தச் சண்டாளனாகிய அலீ, தபால் ஆபீஸிற்குப்போய் பாளின் அஸனுக்கனுப்பிய கடிதத்தை வாங்கி வாசித்து சங் கதியறிந்தவுடனே ஓகோ! இவர்கள் ஷாம் தேசத்திற்கோ போகிறார்கள்; அங்கு ஓர் கள்ளர் கூட்டமிருந்து வழிமறித்து அடித்துப் பறிகொள்ளை செய்கிறார்களென்றும், சீமான்களைச் சிறையாகப் பிடித்துக்கொண்டு பெருந்தொகைப் பணம் பெற்று அவர்களை விடுகிறார்களென்றும் கேள்விப்பட்டிருக் கிறோமே; ஆகையால், அவர்கள் அங்கு வருமுன் நான் அந்தக் கள்ளர்களிடம் போய், மகா பாக்கிய வந்தனாகிய ஒரு இங்கி லீஷ் துரையும் அவருடைய மகளும் வருகிறார்கள், அந்தப் பெண்ணை நீங்கள் சிறையாகக் கொண்டு போனீர்களேயானால் அவளுடைய தகப்பன் நீங்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து மீட்டுக் கொள்வானென்று உளவு சொன்னால், அவர்களுக்குக் கிடைக்திற பணத்தில் தனக்கும் பங்கு கிடைக் வழியுண் டென்று தீர்மானித்து, மறுநாள் மிசுறை விட்டுப் புறப்பட்டு பேறூத்துக்கு வந்து கள்ளர்களிருக்கிற விடத்தை நோத்கி வரும்போது அவனைப் பிடித்துத் தலைவனிடங் கொண்டு போனார்கள். அலீ தான் வந்த நோக்கத்தையெல்லாஞ் சொன்ன தின் பின்பு அந்தத் தலைவன் நல்லது நீ எங்களுக்கு உளவு சொல்ல வந்தவனோ வென்று நாங்கள் தீர்க்கமாய் அறியும் வரையிலும் நீ மறியலிலிருக்க வேண்டுமென்று ஓர் அறையில் அடைத்து வைத்தான்.
பின்பு பாளினும் அவள் தகப்பனும் தபால் வண்டியில் வரும்போது பன்னிரண்டு கள்ளர்கள் அவர்களை மறித்துக் குதிரையைச் சுட்டுக் கொன்றுவிட்டுப் பாளினைத் தூக்கினார் கள்; அவள் தகப்பன் அவளைப் பிடித்துக் கட்டிகொண்டு நின் றார். பின்பு அந்தக் கள்ளர்களிலொருவன் கைத் துப்பாக்கி யால் அவர் தலையிலடிக்க அவர் நினைவற்று விழுந்தார்; அவர் களந்தப் பெண்ணைத் தூக்கிக் குதிரையின்மேல் வைத்துக் கொண்டு போனார்கள். பாளினைக் கள்ளர்கள் பிடித்தபோது அவள் கூச்சலிட்டுத் தகப்பனை இறுகக் கட்டிக் கொண்டே நினைவற்றுப் போனாள். அவளை யவர்கள் மலையுச்சத்திற்குக் கொண்டு போயிறக்கிச் சற்றுநேரஞ் சென்றபின் அவளுக் கறி வுண்டாகிக் கண்ணைத் திறந்து பார்த்தாள்; தகப்பனைக் காண வில்லை. ஓர் வனத்திலிரத்தப் பிரியங்கொண்ட கொலை பாத கர்களாகிய கள்ளர்களுக்குள்ளே யீவள் தனியே யிருக்கக் கண்டாள். அப்பொழுது அவளுடைய ஈரலில் நெருப்புப் பிடித் தது போலிருந்தது; அவளை அன்றிரவு ஓர் அறையிற் கொண்டு போயடைத்துப் போட்டார்கள் அவள் அன்றிரவு முழுவதும் மிகவும் பயங்கரமான சொற்பனங் காண்கிறதும் விழிக்கிறதும் மயங்கிக் கிடக்கிறதுமா யிருந்தாள்; விடிந்தவுடனே ஓர் சிறு சிறு பையன் கதவைத்தட்டி என்ன வேண்டுமென்று கேட்க ண்ணீர் கொண்டுவரும்படி சொல்லித் தன்னை சுத்தி செய்து ஒருவருங் காணாமற்றொழுது அல்லாகுத்தாலாவிடந் தனக்குண்டாயிருக்கிற ஆபத்தினின்றுங் காப்பாற்றும்படி அழு தழுது தோத்திரஞ் செய்து எல்லாக் காரியங்களும் சகலவல்ல மையுள்ள அல்லாகுத்தாலாவின் கட்ட ளைப்படியே நடக்கு மென்ற உறுதியோடிருந்தாள். விடிந்தபின் கள்ளர்களெல்லா மொன்றாய்ச் சேர்ந்து பாளினை வரவழைத்து நடக்கெேண்டிய காரியங்களை ஆலோசித்தார்கள்.
அந்தக் கள்ளர்களுக்குள்ளேயும் ஓர் சட்டமுண்டாயி ருந்தது. அதாவது; ஓர் பெண்ணைச் சிறையாகப் பிடித் தால் அவளுடைய கற்புக்கு விரோதமாயொன்றுஞ் செய்யாமல் அந்தப் பெண்ணை இத்தனை நாளைக்குள்ளாக இவ்வளவு பணங்கொடுத்து அவனைச் சேர்ந்தவர்கள் மீட்டுக்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் மீட்காவிட்டால் அந்தக் கள் னர்களுக்குள்ளே சீட்டுப்போட்டு, சீட்டுவிழுந்தவன் அந்தப் பெண்ணை யொப்புக்கொண்டு சிலகாலம் வைத்திருந்து பிறகு ஓர் தூரமான ஊருக்குக் கொண்டுபோய் விற்றுப்போடுகிறது. இது அவர்கள் சட்டத்திலொன்று. ஆனால், பாளீனாவை அந்தக் கள்ளர்கள் முன் கொண்டு வரப்பட்டவுடனே அவர் களுடைய தலைவன் அவளுடைய அழகைக்கண்டு மயங்கி விரகதாபமீறி மற்றவர்களிடஞ் சொல்லுகிறான், என்சிநேகி தர்களே! நம்முடைய சட்டப்படிக்கு ஓர் தொகைப்பணந் தந்து இந்தப்பெண்ணை மீட்டுக்கொள்ளுமபடி இவன் தகப்ப னுக்கு அறிவிக்கவேண்டும். ஆனால் நானிந்தப் பெண்ணின் பேரில் அடங்காக் காதலுடையவனா யிருக்கிறேன். ஆகை யால், எனக்கிவளைப் பெண்ணாக்கிக் கொள்ள நீங்களெல்லோ ரும் ஒருமித்துச் சம்மதித்தீர்களேயானால் கொள்ளையடித்த பணத்தில் என் வசமிருக்கிற ஆஸ்திமுழுவதையு முங்களுக் குத் தருகிறேன் என்று சொல்ல, அந்தக்கள்ளர்களெல்லாம் ஒன்றாய்ச்சேர்ந்து ஆலோசித்துச் சொன்னதாவது நம்மு டைய சட்டப்பிரகாரமே ஓர் பெருந் தொகைப்பணந் தரும்படி அந்தப் பெண்ணுடைய தகப்பனுக்கு ஆளனுப்புவோம்; அப் படிப் பண மனுப்பாவிட்டால் உங்களுடைய விருப்பப்படியே செய்துகொள்ளச் சம்மதிக்கிறோ மென்று சொல்லி, ஒருகாகித மெழுதி அலீயை அடைத்து வைத்திருந்த அறையிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்து அந்தக் காகிதத்தை யீந்து நீ இந்தப்பெண்ணுடைய தகப்பனிடத்திற்கொண்டுபோய் இதைக்கொடுத்து நாளையே மறுமொழி கொண்டுவரவேண் டும். அவரிந்தத் தொகையைக் கொடுக்கப் பிரியமானால் ஒருமனிதனுடைய கையில் அந்தப்பணத்தைக் கொடுத்து இங்கே அனுப்பிவைத்தால் அந்தப் பெண்ணை அவரோடு அனுப்பிவைப்போமென்று அறிவியுமென்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
பாளீனை அந்தப் பொதும்பில் ஓர் விசாலமான அறையில் வைத்து, தீனி முதலியவைகள் எல்லாங் கொடுத்துச் செளக் கியமாயிருக்கும்படி செய்தார்கள். பாளீனோ நாயகனே இந்த ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளென்று தோத்திரஞ் செய்தவளாக இருந்தாள், அலீ அந்தக் காகிதத்தை யெடுத்துக்கொண்டு போகுர்போது தானு அஸனைக் கண்டு வெருண்டோடிப் பள்ளத்தில் விழுந் துருண்டு புரண்டு போனது வாசிப்பவர்களுக்குத் தெரியும். அவன் கீழேவிழுந்து சரீரமெல்லாம் காயம்பட்டு நொருங்கி வெகுநேரம் வரையிலும் அறிவற்றவனாகக்கிடந்து பின் பெழுந்து வெகு வேதனை யோடு நடந்து அப்பக்கத்தி லிருக்கிற ஓர் வீட்டுக்குவந்து சேர்ந்து அங்கே நோயுற்றிருந்தான். அதனால் பாளீனுடைய தகப்பனுக்கு அந்தக் காகிதம் போய்ச் சேரவில்லை; பாளீனு டைய தகப்பனாகிய லார்ட்டெலிங்டன் சுகவீனமாக வண்டியி லேறி திமிஷ்க்குப் பட்டணம் போய்ச்சேர்ந்தார்.
இதுவரையில் பாளீனுடைய சரித்திரத்தைச் சற்று திருத்தி, அஸனுக்குச் சம்பவித்த காரியங்களைச் சொல்வாம்.
அஸனை யடைத்து வைத்த மறுநாட்காலமே அவரை வெளியேகொண்டுவந்து நிறுத்திக்கள்ளர்களெல்லாஞ் சூழ்ந் திருக்க அந்தத் தலைவன் அஸனைப்பார்த்துச் சொல்லுகிறான், ஓ மனிதனே! நீ யெங்களோடு சேர்ந்து கொள்ளவிருப்பங் கொண்டுவந்திருந்தால், எங்களுடைய சட்டங்களுக்கு நீ கீழ்ப்பட வேண்டும்; அந்தச் சட்டங்களி லொன்றாவது; எங்கள் வசம் ஒர் புத்தக மிருக்கின்றது, அதில் உன்னுடைய பெயரையும் நீ வந்தநாளையுங் கணக்கிட்டு புத்தகத்தைப் பார்த்தால் நீ எங்களுக்குத் துரோகஞ்செய்ய வந்திருப்பவ னென்றும் அல்லது தோழனாகவந்திருப்பவ னென்றுந் தெரிய வரும். நீ துரோகஞ் செய்ய வந்தவ னென்று தெரியவந்தால் உடனே யுன்னைத் தூக்கிக்கொன்று போடுவோம். நீ எங்க ளுக்குத் தோழனாக வந்திருப்பவனென்று தெரியவந்தால் எங்கள் கூட்டத்திற் சேர்த்துக்கொள்வோம் என்று சொன்ன போது, அஸன் சற்றும் மனந் தடுமாறாது உங்கள் சட்டப் படியே நடப்பதற்கு நான் பிரியமாயிருக்கிறேனென்று சொன் னார். அப்பொழுது அந்தத் தலைவன் ஓர் புத்தகத்தைக் கொண்டுவந்து அஸனுடையபெயரையும் அவர்வந்த நாளை யுமெழுதிக்கணக்சிட்டு புத்தகத்தைத் திறந்து பார்த்துவிட்டு அஸனை நோக்கி நீ துரோகியென்று தெரியவருகின்றது.
ஆகையால் இக்ஷணமே யுன்ளைத் தூக்கிக் கொன்றுபோடும் படி தீர்ப்புச் செய்கிறேன். உன்னுடை மரணத்திற்கு முந்தி ஏதாவது சொல்வதற்கு அல்லது செய்து கொள்வதற்கு விருப்பமிருக்கிறதாவென்று கேட்டான். அஸன் எனக்கு தன்னைச்சுத்தி செய்யத்தண்ணீரும்தொழுது கொள்ளுகிறதற்கிடமுந் தரவேண்டுமென்று கேட்டார். அந்தக் கேள்விக் கிடங் கொடுக்கப்பட்டது அஸன் தொழும்வரையில் கள்ளா கள் அந்தவிடத்திலிருக்கிற ஓர் மரத்தின்கிளையில் கயிற்றைக் கட்டிச் சுருக்குப் போட்டுத் தூக்க ஆயத்தமாயிருந்தார்கள். அஸன்தொழுது முடிந்தபின் அவரை அந்த மரத்தின் கீழ்க் கொண்டுவந்து வைத்து அப்துஸ்ஸமது முன்னே வந்து அஸனுடைய கையைக் காட்டி ஓர்நாற்காலியைக் கொண்டு வந்துவைத்து அதில் அவரையேற்றி நிறுத்திக் கழுத்தில் கயிற்றைப்போடுகிற நேரத்தில் அப்துஸ்ஸமது அஸனுடைய பக்கத்திற்போய் நின்று அஸனே அல்லாகுத்தாலாவை முன்னிட்டு தைரியமாயிருமென்றுசொன்னார்.
அஸன் அந்தநேரத்தில் தான் கொல்லப் பட்டபின் பாளி னுக்கு என்ன அபாயம் நேரிடி மோவென்கிற சந்தேகமுண் டாகியும் எல்லாம் அல்லாகுத்தாலாவின் கட்டளைப்படியே நடக்கும் என்கிற உறுதியுடன் ஆண்டவனைத் துதித்தவரா யிருந்தார். அப்போது அந்தக்கள்ளரிலொருவன் வந்து அந்த நாற்காலியையெடுத்துவிட்டான் கயிறு இரண்டு துண்டாய்த் தெறிக்க, அல்லாஹு வென்கிறசத்தத்துடனே அஸன் கீழே விழுந்தார். அஸனுடைய கால் நிலத்தில் தரித்து. அவர் சரீர முழுவதிலும் வியர்வை வடிந்துகொண்டிருந்தது. அந்தத் தலைவன் அஸனை த்தன் முன்னே வரும்படி யழைத்துச் சொல்லுகிறான். ஓ வாலிபனே! எங்களுடைய திட்டங் களி லொன்றாவது யாராவதொருவன் எங்களோடு சேர்ந்து கொள்ள வேண்டுமென்று வந்தால் அவனை நன்றாய்ப் பரிசோ திக்சிறது எங்களுடைய வழக்க மாகையால், உன்னுடைய உண்மையையும், உறுதியையும் சோதிப்பதற்காகவே இக் காரியங்களைச் செய்தோம். நீ எங்களுக்குத் துரோகஞ் செய்யவந்தால் எங்களைக் கெஞ்சி மன்னிக்கும்படி கேட்பாய்; நீ உறுதியற்றவனா யிருந்தால் தருணத்தில் எங்களுக்குக் கப டங்களைச் செய்வாய். அதற்காகவே யுன்னைச் சோதித்தோம். இப்போது நீயோ உண்மையும் உறுதியு முடையவ னென்றும் எங்களுக்குத் தருணத்திலுதவி செய்யும் தரும சீலனென்றும் எங்கள் தொழிலுக்குரிய நட்புடையவனா யிருக்கத் தகுந்தவ னென்றும் நாங்கள் நன்றா யறிந்து கொண்டோ மாகையால் இனி யெங்கள் கூட்டத்தி லொருவனாக விருந்து செல்வத் தைப் பெற்றிருப்பாயாக வென்று சொன்னான்.
அன்று பகற்போய் இரவானபோது கள்ளர்களெல்லோ ரும் தீன் மேசைக்கு வந்தார்கள். அஸனும் வந்தார் அப்போது அந்தத் தலைவன் கள்ளர்களைப் பார்த்து, என் சிநேகிதர்களே நாம் நேற்றுச்செய்து கொண்ட தீர்மானப் படிக்கு அந்தப் பெண்ணின் தகப்பனுக்குக் காகிதங் கொண்டுபோன அலீ இதுவரையிலும் வராதபடியால் நான் இன்றிரவு அந்தப் பெண்ணை ஓப்புக் கொள்ளுகிறேன்; இதற்கு நீங்களென்ன சொல்லுகிறீர்க ளென்று கேட்க, அதற்கந்த கள்ளர்கள் நாங்கள் சம்மதித்தோமென்று சொன் னார்கள். இந்தச் சங்கதி அஸன் காதில் விழுந்தவுடனே அவருக்குண்டான மனோவியாகூலமானது, முன்பு அவர் கழுத்திற் சுருக்குப் போடும்பொழுதும் அவ்வளவிருந்த தில்லை. ஆனாலெப்படி யிருந்ததென்றால் விஷ மேற்றின ஆயிரம் ஊசிகளினால் தன் னீரலிற் குத்தினதைப்போலும், பந்தத்தைக் கொளுத்தி இருதயத்திற் பிடித்தது போலும், தன் மனமான தெரிந்தும், கள்வெறிகொண்ட கசடன் கண் களைப்போலத் தன் கண்கள் சிவந்தும், இரும்புக் கொப்பரை யிற் போட்டு வறுக்கும் சோளப்பொரிப்போல தன் தேக மானது பதைத்துத் துடிதுடித்துக் கொண்டு மிருந்தன. தன்னுயிரையு மதியாது அந்தத் தலைவனிருந்த திசையை நோக்கி, விசைகொண் டெழும்பும் பந்தைப்போல முந்தி யவன்பேரிற் பாய்ந்து விழுந்தடிக்க எண்ணங்கொண் டெழுந்தபோது, அருகே யிருந்த அம்துஸ் ஸமது இவரு டைய நிலைமையைக் கண்டு, அஸனே அல்லாகுத் தாலாவை முன்னிட்டுச் சற்று பொறுமையா யிருமென்று சொன்னார். இந்தச்சொல் அஸன் காதில் விழுந்தவுடன் ஓராயாசமுண் டாகி, அதினால், தனக்குண்டாகிய வேகங் குறைந்து யோசிக் கிறார். நானிப்போது நினைத்தகாரியம் புத்தியீனம் நானப் படிச் செய்வேனாகில் உடனே இவர்களென்ளைப் பிடித்து. கொன்று விடுவார்சுள்; அதனால் பாளீனுக்கு யாதொரு பலனுமில்லாமற் போய்விடும்; ஆகையால் அப்துஸ் ஸமது சொன்னபடியே பொறுமையாயிருந்து ஏதாவ தொரு வுபா யஞ்செய்ய இடங்கிடைக்கிறதோ வென்று பார்த்திருப்பது நல்லதென்று தீர்மானித்துக் கொண்டிருந்தார்.
இப்படி அந்தக் கள்ளர்கள் பாளீனைத் தங்கள் தலைவன் ஒப்புக் கொள்வதற்குச் சம்மதித்த வுடனே அத்தலைவன் சந்தோஷங் கொண்டு விலையுயர்ந்த மது பானங்களைக் கொண்டுவந்து மேசையில் வைக்கவும், பாளீனை மேசைக்கு வரும்படியும் கட்டளையிட்டான். பாளீன் வந்தபோது அவ ளைத் தலைவனுக்கருகே யிருக்கும்படி செய்யப்பட்டது. எல்லோருந் தீன் தின்று முடிந்தபிறகு, குடிக்கத் தொடங்கினார் கள்; பாளீனும் அஸனுங் குடிக்கவில்லை; பாளீனிருந்த விடத் துக்கு அஸன் வெகு துலையிலி ருந்ததாலும் அவள் விசார மென்னுங் கடலிலமிழ்ந்தி யிருந்ததாலும் தலையை யுயர்த்தி ஒரு புறமும் பார்க்கவில்லை. அஸன் குடிக்காம லிருப்பதைத் தலைவன் கண்டு ஓ அஸனே! நீர் ஏன் குடிக்கவில்லை யென்று கேட்க, அஸன் நான் குடிக்கிறதில்லையென்று சொன்னார். அஸனுடையபெயரையும், அவருடைய குரலையும் பாளீன் கேட்டவுடனே மின்சாரத்தைச் சரீரத்திற் பாய்ச்சினது போல் சந்தோஷம் சரீரமெல்லாம் பாய்ந்து பொங்கி விட்டது. அஸன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கண்டு அவளுக்குண்டான ஆச்சரியம் இம்மட்டென்று சொல்லக் கூடாமலிருந்தது. இது உண்மையான தோற் றமோ, அல்லது சொற்பனமோ வென்று மயங்கினாள். இவ்வளவு காலமாய் அவரைக் காணாமலிருந்தும் இப்பொழுது தனக்குண்டாயிருக்கிற ஆபத்தினின்றுங் காத்துக்கொள்ள அல்லாகுத்தாலா இங்கு அவரைக்கொண்டுவந்து விட்டிருக் கிறானோவென்று அல்லாவைப் புகழ்ந்தாள். இவர் கள்ளர்களுளொருவராகவும் அவர்களின் சிநேகிதராகவுமிருப்பதை நினைத்து இது வென் ன புதுமை; மகா சன்மார்க்கராகிய அவரிப்போது இவர்களோடு ஏன் கூடியிருக்கிறா என்று விளங்காமற் றிகைத்தாள். இப்படி யிருக்கும்போது, கள்ளர்கூட்டத் தலைவன் பாளீனைப் பார்த்து, பெண்ணே உன்னுடைய தகப்பனுக்கு ஒரு காகிதமெழுதினோம்; அதி லுன்னை விட்டு விடுவதற்காகப் பணங்கேட்டிருந்தோம்; இதுவரையில் பதிலொன்றும் வந்து சேரவில்லை. ஆகையா லுன்னை என் மனைவியாக்கிக்கொள்ளத் தீர்மானித்திருக் கிறேன், நீ எழுந்து என்னறைக்குப் போ வென்று சொன்னான். மந்திரத்தினால் வசியஞ் செய்யப்பட்டு தன்னிஷ்டப்படி நடக் காமல் மந்திரவாதியின் சொற்போலவே நடப்பவளைப் போ லாகி; பாளின், தன் நாவு திமிர்கொண்டு மறுமொழி சொல் லக் கூடாமல் உடனே எழுந்து அவன் குறித்த அறைக் குள்ளே போனாள்.
அங்கு போனபின் தான் தன்னுடைய உயிர்போகும் வரையிலும் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள யத்தனிக்க வேண்டும்; அதற்குத் தனக்குத் தைரியத்தைத் தரும்படி அல்லாகுத்தாலாவிடம் இரந்து கேட்கவேண்டுமென்று நினைத் துத் தொழத் தொடங்கினாள். அந்தத் தலைவன் சிலநேரங் குடித்துக் கொண்டிருந்து விட்டு, அந்த அறைக்குள்ளே சென்று பார்க்க பாளின் தொழுது கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான், இது என்ன புதுமையாயிருக்கின்றது. இவள் இங்கிலீஷ் ஜாதியிலுள்ள நஸ்ரானிப் பெண்ணாயிருக்க முஸ்லீமாய்ப் பிறந்தவள் தொழுவதுபோல அதி ஒழுங்காய்த் தொழுகிறாளே இதீலேதோ ஒரு இரகசிய முண்டாயிருக்க வேண்டும். அவள் தொழுது முடிந்த பின் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாமென்று நினைத்துத் கொண்டிருந்தான்.
பாளீன் தொழுகிறதும், சலாம் கொடுக்கிறதும் மறுபடி யும் தக்பீர் கட்டித் தொழுகிறது மாயிருந்தாள். இவனோ மனிதர்களி னுயிரை யொருபொருட்டா யெண்ணாத கொடிய சண்டாளனாயிருந்தும், அவள் தொழும்போது அவளை நெருங்கித் தொடலாகாது என்று அவளைப் பார்த்த வண்ண மாகவே நின்று கொண்டிருந்தான்; இப்படி அவன் நின்று கொண்டிருந்ததும் அல்லாகுத் தாலாவுடைய கிருபையே. இப்படியே நடுச் சாமமாகி விட்டது. பாளீனும் தொழு கையை நிறுத்தவில்லை. இப்படி யிருக்கும்போது கள்ளரி லொருவன் மிகவிரைவா யோடிவந்து பல வியாபாரிகள் ஒர் கூட்டமாய் வெகு சாமான்களுடனே வருகிறார்களென்று சொல்ல, கள்ளர்களெல்லா மவர்களை மறித்துக் கொள்ளை செய்வதற்குப் போக ஆயத்த மானார்கள்; தலைவன் நமது வசத்திலிருக்கிற பெண்ணை நம் இஷ்டப்படி எப்போதேனும் நடத்திக்கொள்ளக்கூடும் என்று நினைத்து அவர்களுடன் அவனும் புறப்பட்டான். போகும்போது ஒரு கள்ளன் துப் பாக்கி யெடுத்து அங்கே காவற்காரனா யிருக்கவும்; அப்துஸ் ஸமதும், அஸனும் சுற்றித்திரிந்து பார்த்துக் கொண்டிருக்க வுங் கட்டளை கொடுத்துவிட்டுப் போய் விட்டார்கள்.
அவர்கள் போன சற்று நேரத்துக்குப்பின் அப்துஸ் ஸமது அஸனிடம் வந்து அல்லாகுத்தாலா உங்களுக்குண் டான ஆபத்தில் நின்று முங்களை காப்பாற்றி விட்டான். விரைவாய் வாருமென்று இருவரும் பாளீனிருக்கிற அறைக் குப் போய் பாளீனை மெதுவாய் வெளியே வரும்படி சொல்லி, அங்கு பார்க்கையில் அந்த அறையிலிருக்கிற இருப்புப் பெட்டியின் திறவுகோல் மேசையிலிருந்தது; அப்துஸ் ஸமது அதை யெடுத்துப் பெட்டியைத் திறந்து அதிலிருந்த ஒர் கடுதாசிக் கட்டை யெடுத்துக்கொண்டு மூவரும் வெளியே வந்து பாளீனை ஒரு பக்கத்தில் நிற்கச் செய்து, அப்துஸ் ஸமது தன் கையில் ஓர் தடியை யெடுத்துக்கொண்டு காவற் காரனுக்குப் பின்னாலே போய் அந்தத் தடியால் பலமாய் அவன் தலையிலொரு அடி அடித்தார், அந்த அடிபட்டவு டனே காவற்காரன் நினைவு தடுமாறி நிலத்தில் விழுந்தான். அப்துஸ் ஸமதும் அஸனும் ஓடிப்போய் அவனைப் பிடித் தமுக்கிக் கையையுங் காலையு மொன்றாய்ச் சேர்த்துக்கட்டி ஓர் பிடவையைச் சுருட்டி பந்துசெய்து வாயிலமுக்கிவிட்டு லாயத்திற்குப் போய் இரண்டு குதிரையைக் கொண்டுவந்து ஒரு குதிரையில் அப்துஸ் ஸமதும் மறு குதிரையில் அஸனும் பாளீனுமாக ஏறி ஓடினார்கள். கள்ளர்கள் போனவழி அப்துஸ் ஸமதுக்குந் தெரிந்திருந்த படியால் வேறு வழியாகப் போய்ப் பெரிய பாதையில் வந்திறங்கினார்கள். சில தூரம் போய் ஒரு ஹோட்டலுக்கு வந்து பாளீனுடைய தகப்பனைப் பற்றி விசாரிக்க, அவர் பட்ட அடியின் வேதனையினால் சுக வீனமாகி வண்டியிலேறி திமிஷ்குப் பட்டணத்திற்குப் போய் விட்டாரென்று தெரியவந்தது. அதைக் கேட்ட வுடனே திமிஷ்கை நோக்கி ஒரு விடத்திலும் தங்காமற் போனார்கள் விடிந்தபோது பாளீ னு க் வேறொரு குதிரை வாடகைக் கெடுததுக் கொண்டு மூவரும் போகும் போது வழியில் நூறு துறுக்கிப் போர்ச் சேவகர்களும் ஓர் தளகர்த்தனும் வருகிறதைக் கண்டார்கள். அந்தத் தளகர்த்தனிடம் எங்கே போகிறீர்களென்று இவர்கள் கேட்க, லார்டு டெலிங்டன் என்கிற பிரபுவினுடைய மகளைக் கள்ளர்கள் சிறையாக்கிக் கொண்டு போய்விட்டார்களென்று அந்தப் பிரபு வந்து திமிஷ்க்கு பாஷாவினிடம் முறையிட்டா ராகையால் எங்களைப் போய் அந்தக் கள்ளர்களை சுட்டுக் கொன்றாவது அந்தப் பெண்ணை மீட்டுக் கொண்டுவரக் கட் டளையாகி நாங்கள் போகிறோமென்று சொன்னார்கள்.
அப்துஸ் ஸமது, அந்தப் பெண் இவள்தான், நாங்களிரு வரும் அவளை மீட்டுக்கொண்டு திமிஷ்கிற்குப் போகிறோம். நீங்களித் தருணத்திற் போனால் கள்ளர்களையெல்லாம் கைப் பிடியாகப் பிடித்துக் கொள்ளக் கூடுமென்று, அவர்கள் போக வேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியங்களையும் தெளிவாகச் சொன்னார். இன்னும் அந்தப் பகுதியில் அலீ யென்றொருவ னிருப்பான்; அவன்தான் இந்தப் பெண்ணைச் சிறையெடுக்க உளவு சொல்லிக் கொடுத்தவன்; அவனையும் பிடித்துக் கொண்டுவர பிரயத்தனஞ் செய்யுங்களென்று சொல்லிவிட்டுப் பிரிந்தார்கள். பின்பு இரவும் பகலுமாய் வந்து திமிஷ்க்குப் பட்டணஞ் சேர்ந்து அந்தப் பட்டணததி லே கவர்னராயிருக்கிற பாஷாவுடைய மாளிகைக்குப் போனார்கள். அந்த பாஷா கள்ளர்கள் தூக்கிக்கொண்டுபோன போன பெண்ணும் இன்னும் இருவரும் வந்திருக்கிறார்க ளென்று. அறிந்தவுடனே அவர் எதிர்கொண்டுவந்து இவர் களைக் கண்டு மரியாதையாக அழைத்து இருக்கச் செய்து அவர்களுடைய சரித்திரங்களைச் சொல்லச் சொன்னார். அப் போது அஸன் தன்னுடைய சரிந்திர முழுவதையுஞ் சொல்லி பாளினை மீட்சி செய்துகொண்டு வந்த செய்தி வரையிலுஞ் சொன்னபின், அப்துஸ் ஸமது தன் சரித்திரத்தையுஞ் சொன் னார். தான் ஷம்ஷுன்னஹார் மீது வைத்திருந்த அன்பை யும், கதீவு தன்னைப் பிடித்துக் கொல்லும்படி செய்த கட்டளை யையும், அதனாலந்த வூரை விட்டோடி ஷாம் தேசத்துக்கு வந்ததையுஞ் சொல்லியபின், நான் இந்தப் பட்டணத்தில் வந்து சில நாளிருந்தபின் ஒரு மனிதன் என்னிடஞ் சொன்ன தாவது :-
பேறூத்துக்கப்புறஞ் சில காலமாக புஸ்புசூக கென்கிற சாதிக்கள்ளர்கள் ஒரு கூட்டம் வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் பிரயாணிகளை மறித்து அடித்துக் கொள்ளை செய் கிறார்கள்; ஒரு முறை போர்ச் சேவகர்கள் போய் வளைந்து அவர்களின் தலைவனையும் இன்னும் மூவரையுந் பிடித்துக் கொண்டு வந்து திமிஷ்க்குச் சிறைச்சாலையில் வைத்தார்கள். அப்போது ஒருநாள் மறியல் வீட்டை விட்டு அவர்கள் நால் வரும் ஓடிப்போய் விட்டார்களென்று தெரியவந்தது. ஆனால் அந்தச் சிறைச்சாலையிலிருந்த ஒரு மனிதன் தன்னிடஞ் சொன்னார் அந்தக் கள்ளர்கள் மறியல் வீட்டுக் காவற்காரர் களறியாமற் போகவில்லை; அந்தக் கள்ளர்கள் சில காலத் துக்கு முன் இஸ்தம்பூல் மந்திரி வீட்டையுடைத்துக் களவு செய்தார்கள். அவர்கள் களவெடுத்த சாமான்களுடனே ருசியர்களுக்குஞ் சுல்தானுக்குமிடையெ நடந்த சில பாராதூர மான பத்திரங்களிருந்தன. அந்தப் பத்திரங்களை மற்ற இரா ஜாக்கள் பார்த்தால் அவர்கள் சுல்தானோடு விரோதங் கொள் வார்களன்று அந்தப் பத்திரங்கள் களவு போனதைப் பற்றி சுல்தானும் மந்திரியும் மிகவுங் கவலையுற்றார்கள்.
இந்தச் சிறைச்சாலையில் அந்தக்கள்ளர்களின் தலைவன் அடைக்கப்பட் டிருக்கும்போது இந்தப் பட்டணத்து பாக்ஷாவுக்கு ஓர் கடிதமெழுதினான் அதில் நீங்களென்னைத் தனியே வந்து கண்டுகொள்வீர்களே யானால் மஹா முக்கியமான ஓரி ரகசியத்தை யுங்களுக்கறிவிப்பேன் என்று யெழுதியிருந்தது. இதை அந்தபாக்ஷா வாசித்தவுடனே சிறைச்சாலைக்கு வந்தார். அப்போது அந்தக்கள்ளன் பாக்ஷாவே நான் இஸ்தம்பூல் மந்திரியுடைய வீட்டிற் களவு செய்யும்போது சுல்தானும் ருசியா தேசத்துச் சக்கிரவர்த்தியும் ஒருவருக் கொருவர் எழுதிக்கொண்ட கடிதங்களும் என்வசமாயின. நான் என்தோழருக்குக் கட்டளையிட்டிருப்பதாவது. பிடிக்கப்பட்டு எனக்கு ஆக்சினை நியமித்தது உங்களுக்குத் தெரியவந்தால் நீங்கள் அந்தக்கடிதங்களை பிரான்சு கவர்ண் மெண்டுக் கனுப்பி வையுங்களென்பதே. ஆகையால் பாஷாவே நீங்களென்னை விடுதலை செய்வீர்களே யானால் நானந்தப் பததிரங்களைத் தங்களிடம் தருகிறேன், எப்படி யெனில் நான் என் தோழர்களுக்குக் கடிதமெழுதி ஓரு மனி தன் வசமனுப்பி நான் குறிக்கிற விடத்துக்குப் போனால் அங்கு என்னுடைய தோழர்களிலொருவனிருப்பான். அவனி டத்தி லந்தக் காகிதத்தைக் கொடுத்துவிட்டு வந்தால் அப் பத்திரங்களை நான் குறித்துக்காட்டிய விடத்திச்குக் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருப்பான் என்னை இரண்டு காவற் காரர்களோடு அனுப்பினால், நானந்தப் பத்திரங்களை வாங் கிக் கொடுத்து விட்டு, விடுதலை பெற்றுக்கொண்டு போகிறே னென்று சொல்ல, பாக்ஷா தான் சுல்தானுக்குத் தந்தியனுப்பி மறுமொழி பெற்றதின் பிறகு வந்து பதில் சொல்லுகிறே னென்று தன்னரண்மனைக்குப் போய்விட்டார்.
பின்பு, சுல்தானும் இந்தக் கள்ளனுடைய மனுவிற்குச் சம்மதப்பட்டபடியால் அவனை இரண்டு காவற்காரர்களோடு அனுப்ப அவன் சொன்னபடியே சில பத்திரங்களை தன்னோடு போன காவற்காரர்கள் வசங்கொடுத்துவிட்டு ஒடிப் போய் விட்டான். அந்தக் காவற்காரர்கள் அப்பத்திரங்களைக் கொண்டுவந்து பாாவுக்கு கொடுத்து அவர் வாசித்துப் பார்க்க அவைகள் வேறு கடிதங்களாகவிருந்தன. பாக்ஷ மோசம் போனோமே! அந்தக் கள்ளன் நம்மை யேமாற்றிப் போய்விட்டானே என்று விசனமடைந்து, சுல்தானுக்கு நடந்த காரியங்களெல்லாவற்றையு மெழுதித் தன்னுடைய புத்தியீனத்திற்காகத் தன்னை மன்னிக்கும்படி மன்றாடிக் கொண்டிருந்தார். ஆகிலுஞ் சுல்தானுக்கு கோபமுண்டாகி அவரைமாற்றி வேறொரு பக்ஷா இந்தப் பட்டணத்துக் கனுப் பப்பட்டார் என்று என்னிடஞ் சொன்னான். அந்த மனிதன் இப்படி என்னிடஞ் சொன்னபோது நான் நினைத்தேன் கதீவு என்னைக்கொலைக்குக் குற்றவாளியாக்கித் தீர்ப்பு செய்திருக் என்னைப் பிடித்துக்கொண்டால் நான் உயிரிழப் பேன்; பிடியாமற்போனால் என் தாய் தகப்பனையும் என்னன் பான பெண்ணையும் என்னாயுசுள்ள வரையிலுங் காணக்கூ டாமல் ஊருக்கூர், தேசத்துக்கு தேசம் அலைந்து திரியவேண் டும்; நானிந்தக் கள்ளர் கூட்டத்தோடு போய்ச் சேர்ந் திருந்து அந்தப் பத்திரங்களை எவ்வித தந்திரஞ் செய்தாவது எடுத்துக் கொண்டுவந்து தங்கள் பாதத்தில் அவைகளை வைத்து சுல்தானிடம் மன்னிப்புக் கேட்டருளும்படி தங்களி டம் விண்ணப்பஞ் செய்ய யோசித்துந் தீர்மானித்துக் கொண்டு நான் அந்தக் கள்ளர் கூட்டத்திற்போய்ச் சேர்ந்து பத்துமாதமாகிவிட்டன. இந்தப் பத்துமாதமும் பலவித உபா யங்களினாலும் அப்பத்திரங்களை யெடுக்க யத்தனித்தும்’ ஒன் றும் அநுகூலப்படவில்லை. ஏனெனில், அவைகளை அந்தக் கள்ளர்களுடைய தலைவன் ஓர் இருப்புப் பெட்டியில் வைத்துத் திறவுகோலைத் தன் வசத்தில் வைத்துக் கொண்டிருந்தான். உறங்கும்போதும் ஒரு விடத்திலும் வைக்கிறதில்லை. நான் இந்தக் கள்ளர்களோடு கூடிக் களவு செய்யப் போனாலும் அடிக்கடி கூடிய தருணங்களில் கள்ளர்களுக்குத் தெரியாமற் பிரயாணிகளுக்கு உதவி செய்து வந்தேன்; அந்தத் தலைவன் பாளினைக் கண்டதுமுதல் மஸ்துக் கொண்டவனாகிவிட்டான். அதனால், அன்றிரவு திறவுகோலை மேசையின் மேல் வைத்து விட்டுப் போய்விட்டான்; நான் அதினால் பெட்டியைத் திறந்து அப்பத்திரங்களை யெடுத்துக்கொண்டு வந்திருக்கிறே னென்று சொல்லி அவைகளைப் பாட்சா முன்னே வைத்தார்.
பாட்சா அவைகளை யெடுத்துப் பரிசோதித்துப் பார்த்து விட்டு சந்தோஷங்கொண்டு; சுல்தான் அவர்களுக்கு இப் பத் திரங்களையுமனுப்பி நீர் செய்த சமர்த்துகளையும் எழுதுகிறேன் என்று சொன்னார். பாளினுடைய தகப்பன் இந்த பாட்சா வீட்டுக்கு வந்தபோது மிகவும் அசெளக்கியமாயிருந்ததால் அவரை தன் மாளிகையிலோர் அறையில் வைத்துத் தன்னு டைய டாக்டர்மார்களைக்கொண்டு வைத்தியஞ் செய்துவைத் தார்; அந்த டாக்டர்மார்களை பாட்சா அழைத்து லார்ட்டெ விங்டனுடைய மகள் கள்ளர்களிடமிருந்து தப்பவிக்கப்பட்டு இதோ வந்திருக்கிறான்; அவளிப்போது தன் தகப்பனைப்போய் பார்ப்பது கூடுமாவென்று யோசித்துச் சொல்லுங்களென்று கேட்டார் டாக்டர்மார்கள் அந்தத் துரையிடத்திற் போய் ஆண்டவனுதவியால் உங்கள் மகள் கள்ளர் கையினின்றுந் தப்பிக்கொண்டு வந்திருக்கிறாளென்று சொன்னவுடனே தலை யையுயர்த்தக் கூடாமலிருந்தவர் தலையை யுயர்த்தி என் மக ளெங்கே என்று தன்னிரு கைகளையும் நீட்டிக்கொண்டு அங்கு மிங்கும் பார்த்தார். அப்போது டாக்டர் இன்னுங் கொஞ்ச நேரத்துக்குள்ளாக வருவார்கள். நீங்கள் பொறுமையுடன் பதறாமலிருந்து நடந்தவைக ளெல்லாவற்றையும் மறந்து விட வேண்டுமென்றும், தேறுதல்செய்து மனவருத்தத்தை யாற்றிக் கொண்டிருக்கிறபோதே பாளீன் அறைக்குள்ளே வந்தாள்.
தகப்பன் அவளைக் கண்டவுடன் இருகைகளையும் நீட்டிப் பிடித்து மார்போ ணைத்துக்கொண்டு இருவருந் தேம்பித் தேம்பி யழுதார்கள். வாயினாலொன்றும் பேசவில்லை; பின்பு டாக்டர்மார்கள் பாளீனைக் கொஞ்சம் விலகிநிற்கும்படி செய்து பெலனுண்டாகிற மகுந்துகளைக்கொடுத்துச் சற்று சக்தியுண் டானதின் பின் லார்ட் டெலிங்டன் மகளிடம் நடந்த காரியங் களெல்லாவற்றையும் கேட்டறிந்து அஸனையழைத்து அவரை யுங் கட்டியணைத்து அஸனே என்னுயிருக்குயிரான மகளுக் காக உம்மிடவுயிரை யொருபொருட்டாயெண்ணாமல் இரண்டு முறை பலியாகக்கொடுக்கத் துணிந்து, என் மகளுடைய உயிரைக் காப்பாற்றினீர்; இதை யறிந்தன்றோ, (கைம்மாறுத வாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித் தம்மாலியலுதவி தாஞ செய்வர்) என்று பெரியோர் கூறியபடி நீரும் கற்றறிந்த வல் லமை புருடனானபடியால் இந்தக் காரியத்தைச் செய்யத்து ணிந்தீர்; இந்த நன்றிக்குப் பதில் செய்யமுடியாது; ஆனால், நமக்கிடையே மார்க்கபேதமில்லாதிருந்தால் பாளனை யுமக்கே கலியாண முடித்துவைப்பேன்.
ஆகிலும் உம்மை என்னுடைய மகனென்றேற்று என் ஸ்தியில் றைவாசி யுமக்குத் தரும்படி மரண சாதன மெழுதி வைப்பேன் என்று சொன்னபோது, அதற்கு அஸன் ஐயா தாங்க ளென்பேரில் வைத்திருக்கிற அன்பே யெனக் குப் பிரதியுபகாரம் என்று சொல்லிக் கொண்டிருக்கையில் அப்துஸ்ஸமதும் பாக்ஷாவும் வந்தார்கள் அப்போது அந்தத் துரை அவ்விருவர்களையும் மிகவும் புகழ்ந்து துதி கூறின பின் எல்லோரும் சந்தோஷமாய்ப் பேசிக்கொண்டிருந்தார்கள். பின்பு அப்துஸ்ஸமது எழுந்து நான் ஷம் ஷுன்னஹாரைக் காணப்போகிறேன்; நீங்களெனக்கு உத்தரவு தரவேண்டு மென்று கேட்க, பாக்ஷா நல்லது நீர்போய் அந்தப் பெண் ணையுமிங்கு அழைத்துக்கொண்டு வந்துசேரும்; நானிப் போதே ஷம்ஷூன்னஹுாருடைய தகப்பனுக்குந் தாய்க்கும் ஓர் தந்தியனுப்பி உங்கள் மகளைக் கண்டுகொள்ள திமிஷ்க்கு வந்து சேருங்களென் றறிவிக்கிறேன். இன்னும் உம்முடைய தாயுந் தகப்பனும் இங்கு வரும்படிக்குந் தந்தி யனுப்புகிறே னென்றும் சொன்னார். பாளினும், அஸனும் லார்ட்டெலிங் டன் சுகப்படுகிறதற்காகச் செய்ய வேண்டியவைகளை யெல் செய்துவந்தார்கள். இதை இம்மட்டில் நிறுத்தி, அஸனாடைய தாயின் செய்தியையும், ஜகுபருடைய செய்தியையும் சொல்வோம்.
அஸனுடைய தாய் கடிதமெழுதி அனுப்பினதின் பின் தன் மகனைப்பற்றிய விஷயங்களை யறியப் பலவகை முயற்சி செய்தும் ஓர் சூக்ஷமுந் தெரியவில்லை. சில நாட் சென்றபின் அஸன் அந்த ஹோட்டலிலிருக்கிறாராவென்று கோஜாபோய் விசாரிக்க, அவர் சாமான்கள் ஹோட்டலிலிருக்கிறதென்றும் அவர் போனவிடம் ஒருவருக்குந் தெரியாதென்றும் ஹோட் டற்காரன் சொன்னான்; இந்தச் செய்தியை தாய் கேள்விப் பட்டு மிகவும் வியாகூலமடைந்து என் மகனுக்குச் சிறுபிரா யத்திலே தீங்குசெய்தவர்கள் இப்பொதும் ஏதேனும் மோசஞ் செய்திருக்கவேண்டுமென்று பயந்து, தான் நம்பத் தக்க நாலு பெயரைத் தெரிந்து பல பல ஊர்களுக்கும்போய்த் திரிந்து தன மகனிருக்கிற விடத்தைத் தெரிந்தெழுதும்படி அவர்களுக்கு வேண்டிய திர்வியத்தைக் கொடுத்து, அனுப்பி வைத்தாள். அப்படி யனுப்பியும் வாரங்களும், மாதங்களும் சென்றும் அஸனைப்பற்றி ஒன்றுந் தெரியவரவில்லை. இவ்வி தம் ஒருவருடம் சென்றுவிட்டது. அதற்குப்பின் ஒருநாள் அந்த கோஜா ஹோட்ட லுக்குப் போய் விசாரித்தபோது, அஸனும் ஐகுபரென் றொருவரும் வந்தார்கள். ஆனால் அஸன் மறுநாட்போய்விட்டார்; ஜகுபர் இங்கே யிருக்கிரு ரென்று தெரியவந்தது. கோஜா இந்தச் செய்தியைத் தன் னுடைய நாச்சியாருக்குப் போய்ச் சொன்னான். அப்போது அஸனுடைய தாயாராகிய குல்பனார்பனும் அந்தக் கோஜா விடஞ் சிலை விலையுயர்ந்த வஸ்துக்களைக் கொடுத்து இவை களை ஜகுபரிடம் கொண்டுபோய் நஜராக (தக்ஷணையாக) வைத்து அஸனைப் பெற்ற தாய் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லி, இலவகளைத் தங்களுக்கு வெகுமதியாகக் கொடுத்து அஸனைப்பற்றிய செய்திகளைக் கேட்டறிந்துகொண்டு வரும்ப டிக்குச் சொல்லி யிருக்கிறார்களென்று சொல் என்று அனுப்பி வைத்தாள்
கோஜா அதுபோலவே வந்து ஜகுபரிடம் அந்த நன் கொடைகளைக் காடுத்துத் தன் நாச்சியார்சொன்ன செய்தி களையுஞ் சொன்னான். ஜகுபர் அஸளைப் பற்றிய செய்தியைச் சொல்வது யுக்தம ? அல்லது அயுக்தமா? வென்று சற்று நேரம் வரையில் யோசித்துக் கொண்டிருந்து, அந்த கோஜா வடைய1 ஈர்த்தை·ளும். நல்லொழுக்கமும் அவன் நம்பத் தக்+வனென அறிவிக்க. டியால், தான் பொம்பாயி லிருக்கும் போது ஒரு அபஷி வந்து ஒரு பிள்ளையைத் தந்ததையும், பின்பு காலத்துக்குக் காலங் கடிதமும் பணமும் அனுப்பி வைத்ததையும், தானவைகளுக்கு சீன் என்ற அக்ஷரம் போட்டு மறுமொழி யனுப்பி வந்ததையுஞ் சொல்லி அந்தப் பிள்ளை தான் அஸன், அவரிப்போது ஷாமுக்குப்போ யிருக்கி றார். அவர் வருமளவும் நான் இங்கேயிருப்பேன் என்று சொன்னார்.
கோஜா இந்தச் செய்திகளைக் கேட்டு ஓடிவந்து தன் நாச்சியாரிடஞ்சொல்ல அவள் நீ இக்ஷணமே தபாலாபிஸ் உத்தியோகஸ்தர்களில் புறதேசத்துக் காகிதங்களை வைத்தி ருக்கிறவரிடம் போய்ச் சில நன்கொடைகளைக்கொடுத்து சீன் என்று சூரத்திலிகுந்துவந்த கடிதங்களை யெடுத்துக் கொண்டுபோனவனாரென்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாவென்றனுப்பி வைத்தாள் அதுபோலவே அவன் தபா லாபிஸ் உத்தியோகஸ்தர்களோடு பேசி அக்காகிதங்களை யெடுத்துக்கொண்டு போனவன் பாத்துமதுல்ஹனூ மென்கிற வளுடைய பணிவிடைக்காரனென்றறிந்துகொண்டு தன் நாச்சியாரிடம் வந்து தெரிவித்தான். இந்தப் பெயரைச் சொன்னவுடனே அவள் அஸனுடைய இரகசியத்தில் முக் காற்பாகத்தைத் தெரிந்துகொண்டாள். எப்படியெனில், அவள் யூசுபுபாக்ஷாவைக் கலியாண முடித்து பத்துவருக்ஷ மாகியும் பிள்ளையில்லாம லிருந்தபடியால், அவர் இரகசிய மாக பாத்துமதுல்ஹனூ மென்கிற பெண்ணைக் கலியாணஞ் செய்து கொண்டார்; அவள் வஜீகரமுடையவள்; அதிக ஆஸ்தியையுமுடையவள்; ஆகிலும் அந்த பாக்ஷாவுக்குத் தகுதியானகுலத்தினளல்லள். இவளைக் கலியாணமுடித்துச் சிலமா தங்களுக்குப்பின் குல்னார்பனூன் கருப்பவதியானாள்; இது பாக்ஷாவுக்குத் தெரியவந்து ஆனந்தமடைந்தார்; அது தெரிந்த நாள்முதல் பாத்துமதுஸ்ஹனூமுடைய வீட்டுக்குப் பாக்ஷா போகாததால் அவளுக்கும் பாக்ஷாவுக்கும் மனவருத் தமுண்டாகி யின்னாள் வரையிலும் அவர் அவள் வீட்டுக்குப் போகாமலிருக்கிறார். அவளைப் பாக்ஷ தலாக்கு (கல்யாண பந்தம் ஒறுத்தல்). சொல்லிப் போடவுமில்லை; அவள் தன்னை நீக்கி விடும் படி முறையிடவுமில்லை; இப்படியே அவளும் கிழவியாகிப்போயிருந்தாள். அஸனைக் களவெடுத்துக் கொண்டு போகும்படி அவளே செய்வித்திருக்க வேண்டு மென்பது திடமாகிவிட்டதே; ஆனால், நான் வளர்க்கிறபிள்ளை வாருடைய தென்பதும் இது என்ன கருத்திற்காக இப்படிச் செய்திருக்கிறாளென்பதுந் தெரியவில்லை; இறையும் தீர அறிய வேண்டுமென்று தீர்மானஞ் செய்துகொண்டாள்; இதுவரை யிலும் அவள் தன்னுடைய புருஷனாகிய யூசுபுபாக்ஷ்விவிம் ஒன்றுஞ் சொல்லவில்லை. சகலத்தையும் அறிந்ததின் பின்னால் தெரிவிக்கவேண்டுமென்று திட்ட ஞ் செய்துகொண்டிருந்தாள்.
அன்றுமாலை நேரத்தில் குல்னார்பனூன் தன்னுடைய கினேகிதியாகிய போலீஸ்த் தலைவனின் மனை வியைப்போய்ச் சந்தித்து, தன்னுடைய மன் அஸனைப்பற்றித்தனக்குத் தெரியவந் திருக்கிறவைகளை யெல்லாம் விவரமாய்ச் சொல்லி, தங்கள் கணவருடைய உதவியைக்கொண்டு மறைவாயிருக் கிற மற்ற சங்கதிகளையும் வெளியாக்கிக்கொள்ள வேண்டிய தாயிருக்கிறது; அந்த அபஷியைப் பிடித்துச் சிறைச்சாலையி லடைத்து உருட்டி மிரட்டினால் அவன் உண்மையைச் சொல் லக் கூடும் இந்த உபகாரத்தை நீங்களெனக்குச் செய்விக்க வேண்டுமென்றுகேட்க, அதற்கவள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும்படிக்குச் செய்கிறேனென்று வாக்குக் கொடுத்தாள்.
போலீஸ்த் தலைவனிடம் அவர் கனைவி குல்னார்பனூன் சொன்ன செய்திகளை யெல்லாந் தெரியப்படுத்தினாள். அவர் நல்லது நான் அந்தக் காரியத்தைப்பற்றி அறிய பிரயாசைப் படுகிறேனென்று சொல்லி தனக்கு விசுவாசமான நாலு சேவகர்களை யழைத்து நீங்கள் பாத்துமதுல்ஹனூமுடைய வீட்டுக்குச் சமீபமாக மறைந்திருந்து இரவு நேரத்தில் அந்த அபஷி தெருவில் வரும்போது அவனோடு இஷ்டமாகப் பேசி எவ்வித தந்திரஞ் செய்தாகிலும் அவனைச் சிறைச்சாலையிற் கொண்டுபோய் அடைத்துப் போடுங்களென்று கட்டளை கொடுத்தார். அந்தச் சேவகர்களுமப்படியே அங்கோரிக்வு மறைந்திருந்து அந்த அபஷி தெருவிற் போகும்போது இவர் கள் நெருங்கிப் பேசிக்கொண்டு நடந்து பின்பு குடிக்கிற வீட்டுக்கு வரும்படி அவனை யழைக்க அவனுஞ் சம்மதித்து, நான்கு சேவகர்களும் பாவனையாகக் குடித்து அபஷி அதிக வெறி சொள்ளும்படி குடிக்கச் செய்து பின்பு அவனை மெது வாயழைத்துக்கொண்டு சிறைச்சாலையில் வந்து பிடித்துக் கட்டி உள்ளே அடைத்து வைத்தார்கள். அப்பொழுது அவனுடைய வெறியினால் விழுந்து உறங்கிவிட்டான். காலை யில் விழிக்கத் தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப் பதை யறிந்து நானெவ்வித மிங்கே வந்தேன்! நான் என்ன குற்றஞ் செய்ததற்கு என்னை மறியலில் வைத்திருக்கிறது என்று யோசித்திருக்கையில், போலீஸ்த் தலைவன் வந்து உன் பெயரென்ன வென்று கேட்டார். அவன் என் பெயர் ஜமா லென்று சொன்னான், போலீஸ்த் தலைவன் நீ யூசுபு பார் வுடைய பிள்ளையைக் களவெடுத்துக்கொண்டு போய்ப் பொம்பாயில் ஜகுப ரென்கிறவருக்குக் கொடுத்தி ருக்கிறாய்; பின்பு நீ காலத்திற்கு காலம் அதருக்குக் கடிதமும் பணமும் அனுப்பி வந்திருக்கிறாய், சீன் என்று ஜகுபர் மேல் விலாசமெழுதி அனுப்பின கடிதங்களைத் தபாலாபீஸிற்குப் போயெடுத்துக்கொண்டு வந்திருக்கிறாய், நீ யூசுபு பாக்ஷா வுடைய வீட்டிற் கொண்டுபோய் வைத்த பிள்ளை யாரு டைய பிள்ளையென்று நீ உண்மையைச் சொன்னால் நீ விடு தலை செய்யப்படுவாய்; இல்லாவிட்டால், உன்னைக் கடூர மான தண்டனைக் குள்ளாக்கப்படுமென்று சொல்ல, அதற் கவன் நான் அப்படி ஒரு பிள்ளையைக் கொண்டுபோனது மில்லை. ஜகுபரென்ற ஒரு மனிதனையும் அறியேன், நான் தபாலாபீஸிற்குப் போய்க் கடிதங்களெடுத்துக்கொண்டு வரவுமில்லை, நான் ஒன்றுமறியேன் என்று சாதித்து நின் றான். போலீஸ்த் தலைவன் சேவகர்களையழைத்து அவனைக் கட்டி இருபத்தைந்து அடி அடிக்கும்படி கட்டளை கொடுக்க அப்படியே யடிக்கப்பட்டது. இப்படி எட்டுநாள் வரையி லும் அடித்து அவன் சதை துண்டு துண்டாய்த் தெறித்து போயும் அவன் உண்மையைச் சொல்லாமல் நானொன்று மறியேன் என்றே சொல்லிக் கொண்டுவந்தான்; எட்டா நாள் போலீஸ்த் தலைவன் ஜகுபரையுந் தபாலாபீஸ் உத்தி யோகஸ்தர்களையும் அழைத்து மறியல் வீட்டுக்குக் கொண்டு வந்து ஜகுபரைக் காட்டி நீ யிவரை பம்பாயிற் கண்டதில் லையா. இந்த உத்தியோகஸ்தர் கடிதங்களை யுன்னிடந்தந்த தில்லையா சொல்லென்று அதட்டிக்கேட்க, அவன் இவர்கள் முகத்தைப் பார்த்துத் தடுமாறித் தலையைக் கவிழ்த்துத் தட்டுக்கெட்டு மலைத்து வலையிலகப்பட்ட மானைப் போலக் கலங்கி நிலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது போலீஸ்த் தலைவன் அவளைப் பார்த்து,நீ இனிமேல் உண்மையைச் சொல்லாதிருந்தால் ஓவ்வொரு நாளும் நூறு நூறடி யடிக்கும்படி திட்டமான கட்டளை கொடுப்பேன் என்று சொன்னபோது. அதற்கவன் நானொரு அடிமை; நானொன்றுஞ் செய்யவில்லை கொடுமை; என்னுடைய நாச்சியாரிட்ட கட்டளையைக் குறைவுன்டு முறையே நிறைவேற்றி வேந்தேன். என்னுடைய நாச்சியா ராகிய பாத்துமதுல் ஹனூம் என்கிறவர்களை யூசுபுபாக்ஷா கலியாண முடித்துச் சில மாதங்களுக்குப் பின் அந்த பாக்ஷா வுடைய மூத்த மனைவி பிள்ளையுண்டா யிருக்கிறா களென்று பிரபலமாகிவிட்டது. அப்போது என்னுடைய நாச்சியாயும் கர்ப்பவதி யானார்கள்; ஆனால். அது பாக்ஷா அவர்களுக்குத் தெரியாது. அதை எங்கள் எசமாட்டியும் அவருக்குச் சொல்லவுமில்லை; பாக்ஷா அவர்கள் எங்கள் வீட்டுக்கு வருவது குறைந்து வந்ததால் ஒருநாள் பாக்ஷா அவர்களுக் கும் என்ன்டைய நாச்கியர்க்குந் தர்க்கமுண்டாகி பாக்ஷ அவர்கள் கோபமாய் போய் விட்டார்கள். என்னுடைய நாச்சியாரும், மூத்த மனைவியும் ஒரே நாளையிற் பிள்ளையைப் பெற்றார்கள். பிள்ளையைப் பெற்ற ஐந்தாம் நாள், நான் என்னுடைய சினேகி தனாகிய ஓர் அபஷி யூ சுபு பாக்ஷ் வீட்டிலிருந்ததால் அவனைக் காண்பதற்குப் போயிருந்தேன். அப்போது தாதிப்பெண்க ளந்தப் பிள்ளையை வெளியே வைத்துக் கொண்டிருந்தார்கள்; நான் அந்தப் பிள்ளையைந் பார்த்தேன். அந்தம் பிள்ளைக்கும் என்னுடைய நாச்சியார் பிள்ளைக்கும் யாதொரு வித்தியாசமில்லை. நானிதை என் நாச்சியாரிடம் சொன்னபோது அவர்கள் அந்தப் பிள்ளை யினால்லவா தான் தன் புருஷனோடு வாழக்கூடமற் போயிற்று: அந்தப்பிள்ளையே பாக்ஷாவுடைய சொந்த குமாரனும்; ருடைய மேன்மை, கீர்த்தி, கனம் முதலிய யாவற்றிற்கும் சுதந்திரனு மாகிவிட்டான். ஆகையால் தன்னுடைய பிள்ளையையோ அவருடைய சொந்தக் குமார னாக்க வேண்டும்; தனக்கு அவர்கள் செய்த அநியாயத் துக்காக அவர்களுடைய பிள்ளையானது தாய் தகப்பன்மார் இன்னாரென அறியாமல் பரதேசியாய் உலகத்திற்றிரியும் படிக்குச் செய்ய வேண்டும்; நான் அந்நாள்தொட்டு அந்தப் பிள்ளையைத் திருடிக்கொண்டு வருகிறதற்கு வழிபார்க்க வேண்டுமென்று சொன்னார்கள்.
அந்நாள் முதல் அந்தப் பிள்ளையை வெளியே கொண்டு வருகிற நேரந்திலே, தோட்டத்திற்போய் ஒளிந்துக் கொண் டிருந்தேன். ஒருநாள் தாதிப்பெண்கள் பிள்ளையை வெளித் தாழ்வாரத்திற் கொண்டுவந்து வைத்துவிட்டுப் பந்து ளிளை யாடிக்கொண்டிருந்தார்கள்; நானத்தருணத்தில் ஒருவருங் காணாமற்போய்ப் பிள்ளையை எடுத்துக்கொண்டு ஒடி என் னாச்சியாருடைய கையிற் கொடுத்தேன். அவள் பிள்ளையை எடுத்துப்பார்த்து இரண்டு பிள்ளைகளுக்கும் யாதொரு வித் தியசமுமில்லை யென்று சொன்னார்கள். சில நாள்வரையிலும் ஒரு பிள்ளையை வெளியே கொண்டு வரும்போது மறு பிள்ளையை ஒளித்துவைக்கிறது; பிள்ளை காணாமற்போன செய்தியை எங்கும் பிரபலமாக்கித் தேடுவதால் நானும் என் னெசமாட்டியும் மிகவும் பயந்திருந்தோம். சில நாளைக்குப் பின் நடுச்சாமத்தில் என்னுடைய நாச்சியார் என்னை யழைத்து அவர்களுடைய பிள்ளையை என் கையிலே தந்து. இதையொருவருங் காணாமற் கொண்டுபோய் பாக்ஷா வுடைய வீட்டு வெளித் தாழ்வாரத்தில், வைத்துவிட்டு வாவென்று சொன்னார்கள். நானப்படியே கொண்டுபோய் வைத்துவிட்டேன். மறுநாள் என்னுடைய நாச்சி யார் என்னையும் அடஷிப் பெண்ணையும் அழைத்து நீங்கள் இந்தப் பிள் ளை யெடுத்துக்கொண்டு இஸ்கந்திரியாப் பட்டண துக்குப்போய் இந்தியா தேசத்துக்குக் கொண்டுபோய் ஒரு இன்பமான மனிதர் வசத்தில் கொடுங்கள்; ஓர் தொகைப் பணங்களையுங் கொடுத்து வருஷத்துக்கொரு முறை அந்தப் பிள்ளை யுடைய செய்திகளை யெழுதி யனுப்பினால் பணம் அனுப்பப்படுமென்றும் சொல்லுங்களென்று எங்களுக்குக் கட் ளையிட்டார்கள்; நாங்களும் அக்கட்டளையினபடியே செய் தோம் ஆகையால் நான் எ னாச்சியாருடைய கட்ட ளை யை நிறைவேற்றினவனேயன்றி என்னிஷ்டபடி யொன்றுஞ் செய்தவனல்லேன் ஆனபடியால் என் குற்றத்தை மன்னிக்க வேண்டுமென்று கெஞ்சி நின்றான்.
போலீஸ் தலைவன் வகளை யெல்லாம் நன்றாய் விசா ரித்துத் தன்மனைவியி ம வந்து இவகளைச் சொல்லி குல்னார் பனூனிடம் போய்ச் சொல்லும்படிக்குச் சொன்னார். அவளுடனே. புறப்பட்டுவந்து குல்னார்டனூனைக் கண்டு அபஷி சொன்னவைகளெல்லாஞ் சொல்ல, அவளோடிப் பாய் யூசுபு பாக்ஷ்£ அவர்களிடம் இவைகளெல்லாவற்றையு அறிவித்தாள். அவரிதைக் கேட்டுப் பிரகித்து இதைப் போல் அதிசயமான காரியமுண்டோ? அந்தத் துரோகியிடம், இட்சணமே போய்க் கேட்கிறேனென்று உடனே புறப்பட்டு பாத்துமதுல்ஹனூ முடை வீட்டுக்கு வந்தார். இவள். பக்ஷ் அவர்கள் வருவதைக்கண்டு இவ்வளவு காலம் வரா மலிருந்து இன்றையத்தினம் தந்ததென்னவென்று எழுந்து வந்தபோது அவருட்கார்ந்து அபஷி சொன்னவைகளை யெல், லாஞ் சொல்லி, நீ இதற்கென்ன சொல்லுகிறாய்? உண்மை யைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக்கொள்; இல்லாவிட்டால்; நியாயாதிபதியிடம் முறையிட்டு உனக்குத் தண்டணை கொடுக்கச் செய்வேன் என்றபோது; அவள் பயந்து என்னாயகமே என்னடிமை சொன்னதெல்லாம் நிஜந்தான் நான் என் புத்தியீனத்தாற் செய்துவிட்டேன்; நீங்கள் மனதிரங்கி மன னிக்க வேண்டுகென்று பாக்ஷ வுடைய காலில் விழுந்து கெஞ் சினாள். பாக்ஷா எழுந்திரென்று சொல்லி நான் உனக்கு ஆக்கினை செய்விக்க மாட்டேன்; ஆனால் தலாக்கு (விவாக பந்த மொறுத்தல்) கொடுத்து உன்னை நீக்கிவிடுகிறே னென்று முத்தலாகும் மொழிந்து நீக்கிவிட்டனர்.
பின்பு அவர் தன் அரண்மனைக்கு வந்து குல்னார் பனூல் வர்களை அழைத்து அவ்விடம் நடந்த சமாசாரங்களை சொன்னார். இச்சங்கதிகளை இப்பொழுது தம் சொந்தக்குமார் னென்று வளர்த்து வருகிற சுலைமான் அபந்திக்குந் தெரிவித்தல் ஆவசியகமெனக் கருதி அவரை வரவழைத்து அவர். சொந்தத் தாய் பாத்தும் துல்ஹ்னூம் செய்தவைகளைச் சொன்னார் இதைக் கேட்டவுடன் அவர் திகைத்து, திடீ ரென இடி விழுந்தது போல கிரமித்து விசாரமென்னுங் கட லில் ஆழ்ந்தினவரானார். சற்று நேரத்திற்குப் பின் தன்னறிவு தெளிந்து, குல்னார்பனூனவர்களை நோக்கி, என்னன்பான தாயே! தாங்கள் என்னைப் பெறாதுபோனாலும் என்னைப்பெற் றீர்களென்றே இதுவரையிலும் வளர்த்தாதரித்தீர்கள். அடியேனும் தாங்களே என்னைப் பெற்ற தாயென்று நினைத் திருந்தேன. என்னைச் சிறுபிராயற் றள்ளிவிட்டவளை தான் இனி தாயென்று கூறேன். தாங்களே அடியேனுக்குத் தாயாகவும், என் சகோதரனுக்கு உரித்தான மேன் மையையுங் கனத்தையும் அவரே பெற்றிருக்கவும் நான் என் சகோதரனுக்குக் கீழ்ப்படிந் திருக்கவும் எளக்கு இடந்தாருங்கள். என்னைத் தள்ளிவிடாதீர்களென்று கெஞ்சி யழுதார், இப்படிச் சொன்னவுடனே குல்னார்பனூனுடைய மனமான து உருகி, கான் ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டு மகனே நான் உங்களிருவரையும் என்னிரு கண் களைப்போல வைத்துக்கொள்வேன். ஒன்றுக்கும் பயப்பட வேண்டாமென்று சொன்னாள். இங்கிப்படியிருக்க பாக்ஷா அவர்கள் தன் வண்டியுல் ஜகுபறை அழைக்துக்கொண்டு வரும்படி தன் பணிவிடைக் காரர்களுக்குக் கட்டளையிட்டார் ஜகுபர் வந்தபோது மிகவும் மரியாதைசெய்து அஸன் தம் முடைய மகனென்றும், களவுபோன செய்தியையும் அபஷி சொன்ன விவரங்களையிஞ் சொன்னபோது ஜகுபா அல்லா வைப் புகழ்ந்து, அஸன் சிறுபிராயமாயிருக்கும்போதே அவருடைய மேன்மையான நடத்தைகளையும் உத்தமமான குணத்தையும் பார்த்து அவர் இராஜவம்சத்திலுள்ள வரா யிருக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்; இந்த மகிழ்ச்சி கொண்டாடுவதற்கு இந்நேரம் என்னருமையான மனைவி இல்லையே என்று கண்ணீர்விட்டழுதார்.
பின்பு பாக்ஷா அவர்கள் அஸனைத்தேட ஷாமுக்குப் போகிறேனென்று சொல்ல ஜகுபரும் நானும் வருகிறே னென்று சொன்னார்.
பாஷா அவர்கள் பயணத்துக்குத் தேவையானவைகளை யெல்லாம் ஆயத்தஞ்செய்யத் தொடங்கினார். அப்போது அவர் மனைவி நான் பத்துமாதம் வயிற்றில் வயித்திருந்த என்னீரக் கொழுந்தை நா ன் காணாமலிருக்க என்மனஞ் சகிக்காது நானும் தங்களுடன் வருவேனென்று பயணப் பட்டார்கள்.
மறுநாட்காலமே கேயிறோப்பட்டணத்திற் பிரசுரங் செய் கிற புதினப் பத்திரிகையை யூசுபுபாக்ஷா அவர்கள் வாசிக் கும் போது அதில் பேறூத்துக்குந் திமிஷ்கிற்குமிடையே பிரயாணிகளை யடித்துப் பறித்துவந்த கள்ளர் கூட்டத்தை திமிஷ்கிலிருந்து ஒரு கம்பேனி போர்ச்சேவர்கள் போய்ப் பிடித்தார்களென்றும் அவர்களைப் பிடிப்பதற்குக் காரணர் களாக விருந்தது அஸன், அப்துஸ்ஸமது ஆகிய இரண்டு வாலிபர்களென்றுங் கண்டிருந்தது. இதை வாசித்தவுடனே பாஷா சந்தோஷப்பட்டு நம்முடைய மனைவியிடம் போய்ப் புதினப் பத்திரிகையை வாசித்துக் காண்பிக்க அவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். சற்றுநேரஞ் சென்றபின் ஷம்ஷுனஹாருடைய தகப்பனாகிய அப்துல்கரீம் பாஷாவும் அவர் மனைவியும், ஆகிய இவர்களை திமிஷ்கும்பட்டணத்து பாஷா அந்தட்ஷனம் அங்கு வரும்படி தந்தியனுப்பியிருப் பதால் அவர்கள் அப்பட்டணத்திற்குப் போகப் பயணமா யிருக்கிறார்களென்று வூசுபுபாஷாவுக்குத் தெரியவந்தது; அவர் அவர்களைக் கண்டுபேசி எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து புறப்பட்டு கப்பலேறி பேறூத்துக்கு வந்து சேர்ந்தார்கள் அங்கிருந்து தபால் வண்டிகளிளேறி இரவும் பகலுமாய் திமிஷ்க்குப் பட்டணத்தில் பாஷாவுடைய மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள். திமிஷ்கு பாக்ஷாவானவர் அவர்களுக்கு மிகவும் ஆசார உபசாரஞ்செய்து அழைத்துக்கொண்டு போய் ஓர் சபாமண்டபத்திலிருக்கச் செய்து அவர்களைப் பார்த்து நான் மணியடிக்கும் வரையில் நீங்கள் இங்கிருக்கும் படி கேட்டுக்கொள்ளுகிறேனென்று சொல்லிவிட்டு அடுத்த சாலையில் அஸனையும் பாளீனையும் அழைத்து வரும்படியும், அப்துஸ்ஸமது பேறூத்துக்குப்போய் ஷம்ஷுன்னஹாரை அழைத்துக் கொண்டு வந்திருந்ததால் அவர்களையும் அழைத்துவரும் படியும் நம்முடைய கோஜாக்களுக்குக் கட்டளைகொடுத்தனர். அப்படியே அவர்களெல்லோருஞ் சற்று நேரத்திற்குள் வந்து கூடினார்கள்.
அப்போது பாட்சா அஸனைப்பார்த்து, “நீர் உம்முடைய சிறுபிராயமுதல் இதுவரையிலும் நடந்த சங்கதிகள் சகலத் தையும் ஒளியாமற் சொல்லும்” என்று கேட்டார். அப்படிச் சொன்னவுடன் அஸன், தனக்குச் சிறுபிராயமுதல் சம்பவித்த காரியங்க ளெல்லாவற்றையுஞ் சொல்லத் தொடங்கித் தன்னை வளர்த்த தாய் தந்தையர்களாகிய ஜகுபருக்கும் ஆயிஷா வுக்கும் நேரிட்ட செய்திகளையும், இபுறாகீம், அலீ, பார்ஸீ ஆகிய இவர்கள் தன்னைக்கொல்ல இரண்டு முறை பிரயத் தனப்பட்டதையும், தான் கல்கத்தாவுக் கோடியதையும், அங்குக் கவர்னர் ஜனரலோடு சிநேகமாய் நடந்த காரியங் களையும், பின்பு பம்பாய்க்கு வழக்குக்காக வந்ததையும், மரியம், காசீம், மைமூன், ஜூலைகர் ஜூகறா, அப்துல் அமீது இவர்களுடைய செய்திகளையுஞ், பாளீன் லார்டு டெலிங்டன் ஆகியவர்களுடைய செய்திகளையுஞ் சொல்லி, அதன் மேல் அதன்மேல் பாளீனுந் தானும் நடனவிருந்திற்குப்போன செய்தியைச் சொல்லும்போது அங்கு நடந்த சங்கதியை வெளிப்படுத்து தற்கு வெட்கப்பட்டுத் தலையைக் கவிழ்ந்துகொண்டு பேசா மலிருந்தான். அதைக் கண்டு பரளீனும் வெட்கத்தினால் முகம் வெளுத்துத் தரையைப் பார்த்தாள்.
அப்போது பாட்சா, அஸனைப்பார்த்து, ”அஸனே! நீர் உண்மையைப் பேசுகிறவர்; ஆதலால், ஒன்றையும் ஒளியா மற் சொல்லும்” என்று சொல்ல, அஸன் தடை செய்யக் கூடாமையால் நாக்குளறிக் குளறி பாளீன் ஒரு வாலிபனோடு ஆடுவதைக்கண்டு மனஞ்சகிக்காமல் தான் வேதனைப்பட் டதையும், பின்னால் இருவருடைய உயிரும் ஒன்றாய்ச் சேர்ந் ததுபோல ஆசையுண்டாயிருந்ததை எண்ணிப்பயந்து, இரு வரும் ஒருவரை யொருவர் காணாமற் பிரிந்திருப்பதே நல மென்று சடுதி யாய்த்தான். கல்கத்தாவை விட்டுப் புறப்பட் டதையும், பாளீன் இஸலாமானதையும், தான் மிஸ்றுக்கு வந்து ஹோட்டலில் தங்கியிருந்ததையும், பற்பல கல்விகளைக் கற்றதையும், தான் தன் தாய் தந்தையரைத்தேடி இராப் பகலாய்த் தெருக்கடோறும் சந்துகடோறும் உலாவித் திரிந் ததையும், ஒரு நாள் ஓர் அபஷியையும் அலீயையும் கண்டதையும் அது முதல் தனக்கு அச்சமுண்டானதையும், ஹோட்டலில் கனவு கண்டு பயந்ததையும், “நீ உன்னைப் பெற்றவர்களைத் தேட வேண்டாம்; அவர்கள் இந்தப் பட்ட ணத்திலேயே யிருக்கிறார்கள்'” என்று தன் தாயிடமிருந்து ஒரு கடிதமும் தன செலவுக்குப் பணமும் வந்ததையும், தன் தாயின் கட்டளைப்படி அது முதல் அவர்களைக் தேடாமலிருந் ததையும், தான் ஹோட்டலிலிருக்கும் போது மோசவழியால் பைத்தியக்காரர் ஆஸ்பத்திரியி லடைக்கப்பட்டதையும், அங்கே ஜகுபரையும் இபுறாஹீமையும் கண்ட செய்தியையும், பின்னால் நடந்த அலீயுடைய கெடுதியையும் ஷம்ஷுன்ன ஹாரோடு பேறூத்துக்கு வந்ததையும், பாளீனைக் கள்ளர் கொண்டு போனதையும், தான் அவளைத் தேடிப்போயிருக் கையில் கள்ளர்கள் கழுத்திற் கயிற்றைப் போட்டுத் தூக்கி னதையும், பின்பு மேசையைச் – சுற்றி யிருத்துகொண்டு கள்ளருடைய தலைவன் பாளீளைப் பெண்ணாக வைத்துக் கொள்ள மற்றக் கள்ளர்கள் சமமதப்பட்டதையும், பாளீன் அவனுடைய அறையிலிருந்து தொழுது கொண்டிருந்ததால் அவனுடைய தீங்கைவிட்டுத் தப்பிககொண்டதையும், பின்பு தப்பியோடி வந்த விதத்தையும் சொல்லி முடித்தான். அப்படி முடித்தவுடனே பாளீன் தான் இஸ்லாமார்க்கத்தில் சேர்ந் ததைத் தகப்பனாரிடத்தில் தெரிவிக்காமல் மறைத்து வந்தவ ளாதலால்,ஓடிவந்து, தகப்பனைக் கட்டிக்கொண்டு, அவர் முகத்தைப்பார்த்து, “என் அன்பான தந்தையே! என்னை மன்னியுங்கள்; நான் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்த்து சில வருடங்களாகியும் தங்களுக் கறிவிக்காமல் மறைத்திருந் தேன்; நான் அறபி பாஷையைப் படித்த பின்பு அந்தப் பாஷையிலுள்ள கிதாபுகளை (வேத புத்தகங்களைப்) பார்த்து அது உண்மையான வேதமென்று என்மனம் உறுதிகொண்ட தால். ஈமான் கொண்டு அந்த நாயகனையே வணங்கி வரு கின்றேன். இதற்காக என்மீது கோபங்கொள்ளாதேயுங்கள்’ என்று சொன்னாள். அமற்கவர் அவளை நோக்கி என் கண்மணி யான மகளே! அஸனிப்போது சொன்னவைகளையெல்லாங் கேட்டதின் பின் நீ விசிவாசித்திருக்கிற நாயகன் ஒப்புவமை பில்லாத தயாபரன் என்பது என்மனதுக்குறுதியாகிவிட்டது; அந்தக கள்ளர்கள் கையினின்று உன்னைக்காப்பாற்றின வனவனே; நீ யவனைத்தொழுது இரந்ததினாலேயே அந்தத் தலைவனுடைய தீங்கை விட்டும் அந்த நாயன் உன்னை மீட்சி செய்தான் அந்த நாயனை நானும் புகழ்கின்றேன்; அந்த நாயனுக்கு ‘நானும் வழிப்பட்டு ஈமான் கொண்டேன்* என்று சொல்லிவிட்டு அவளை யிடது பக்கத்திலும்! அஸனை வலது பக்கத்திலும் சேர்த்து நெஞ்சோடணைத்து அவர்களை நோக்கி “என் பிள்ளைகளே! நாயன் உங்களிருவர் மனதையு மொன்றாக்கிவிட்டான்; உங்களிருவருக்கு மிடையிலுள்ள அன்பைப்போன்ற அன்பு மற்ற யாரிடத்திலுமிராது” என்று கசால்லிப் பின்பு அஸனை மாத்திரம் நோக்கி, “என் அன்பான அஸனே! நீர் என் மகளின் உயிரைக் காப்பாற்ற முயன்று அதற்காக இரண்டு முறை உம்முடைய உயிரைப் பலியாகக் கொடுக்க விரும்பினீர்; அதனால் இந்தப் பெண்ணை உமக்கே உரியவளாக்கிக் கொண்டீர்; ஆதலால். உமது இருதயத் திற்கு உவப்பான இந்தப்பெண்ணை உமக்கே தந்துவிடு கிறேன்; நீங்களிவ்வுலகத்தில் செல்வமாய் வாழ்ந்து மறுலோ’ கத்திலும் பாக்கியம் பெற்றவர்களா யிருப்பீர்களாக” என்று ஆசீர்வதித்தார்.
இப்படி லார்டு டெலிங்டன் சொல்லி முடிந்தவுடனே, பாக்ஷ அவர்கள், அஸனைப் பார்த்து, ‘மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்கள் நீர் செய்த சாமார்த்தியங்களுக்காக மெச்சி உமக்கு ‘பே’ என்னும் பட்டங்கொடுக்கும்படி ஓர் உத்தரவு அனுப்பி யிருக்கிறார்கள்; ஆகையால், இன்று முதல் உமக்கு ‘அஸன் பே’ என்றபட்டம்வழங்கக்கடவது” என்று சொன்னார். இவ்வாறு சுல்தானவர்கள் பட்டங்கொடுத்த தற்குகாரணம், அஸனைப்பற்றிபாக்ஷா அவர்கள், அவர் களுக்கு எழுதியிருந்த கடிதம் தான். இதனோடு அப்து ஸம தைப்பற்றியும் எழுதி நல்லுத்தரவுவரவழைத்திருந்தார்கள்.
பின்பு அந்த பாக்ஷா அவர்கள், அப்துஸ்ஸமதைப் பார்த்து, “ஓ வாலிபரே! சுல்தான் அவர்கள் உம்மைப் பற்றி நல்லுத்தரவுபிறப்பித்திருக்கிறார்கள். அதில், உம்முடைய சமர்த்தைப் புகழ்ந்து துதிகூறி நீர் செய்த குற்றங்களை மன் னித்ததாக அறிவித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். அதைக்கேட்டு அப்துஸமது ஆனந்த மடைந்தான். பின்பு பாக்ஷா அவர்கள் அஸன் பேயைப்பார்த்து, “உம்முடைய தாயுந் தகப்பனும் இன்னாரென்றறிய நீர் விருப்பமா யிரும்பீர்; உம்முடைய தகப்பனார், கேயிறா விலிருக்கிற கீர்த்திபெற்ற யூசுபுபாக்ஷா; உம்முடைய தாய் அவர்கள் பத்தினியாகிய குல்னார் பனூன்; இவர்களை நீர் காணுதற்கும் பிரியமாயிருப் பீராதலின், இதோ நான் காண்பிக்கிறேன்” என்று, ஓர் மணி யைக் கையிலெடுத்தாட்டினார். அப்படி ஆட்டியவன், அடுத்த அறைக் கதவு திறக்கப்பட்டு அங்கிருந்தவர்களெல் லாம் வந்து இவர்களிருந்த அறைக்குள்ளே புகுந்தார்கள்; இந்த அறையிலிருந்தவர்க ளெல்லோரும் அதிசயித்தார்கள்;
அப்போது குல்னார் பனூன் ஓடிவந்து அஸனைக் கட்டி யணைத்து, ”என்மகனே” என்று அழுதாள். அப்துல் கரீமு டைய மனைவி, தன் மகள் ஷம்ஷூன்னஹாரைப் பிடித்தணைத் துக் கண்ணீர் சொரிந்தாள்; அகுமது அபந்தீயுடைய மனைவி ஓடிவந்து அப்துஸ் ஸமதைக்கட்டிக்கொண்டு, ‘இழந்து போன என் மகனே! அப்துஸ் ஸமதே!” என்று கூச்சலிட் டுத் தேம்பித் தேம்பி அழுதாள்; யூசுபு பாக்ஷா, அப்துல்கரீம், ஜகுபர், அஸன், சுலைமான அபந்தி, திமிஷ்குப் பாக்ஷா ஆகி இவர்களெல்லோரும் தத்தம் மனமுருகிக் கண்ணீர் சொரிய அதனைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள்.
இப்படிச் சற்றுநேரஞ் சென்றபின், அஸன்பேபிறந்த செய்தியையும், அவன் களவுபோன செய்தியையும் பின்னால் அவனைத் தேடியறிந்த செய்தியையும் குல்னார் பனூன் அங்குள் ளவர்களிடம் சொன்னாள். அப்படிச் சொல்லி முடித்தவுடன் சுலைமான் அபந்தி. எழுந்து போய் அஸன்பேயுடைய கையைப் பிடித்துக்கொண்டு “நான் இதுவரை தங்கள் தாயை என்தாயென்றே நினைத்திருந்தேன்; இப்பொழுது தான் என்னுடைய தாய் செய்த அநியாயங்களெல்லாம் வெளியாயின; ஆதலின் அவளை நான் வெறுத்துவிட்டேன்; இனி நமது தந்தையவர்களின் சுதந்தரத்துக்குத் தாங்களே உரித்தானவரா யிருக்கவும் நானுங்களுக்குக் கீழமைந்தவனா யிருக்கவும் தீர்மானித்திருக்கிறேன்; ஆதலின் என்னை விலக் காது சேர்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னான். அப்படிச் சொல்லவே அஸன்பே. அவனைக் கட்டியணைத்து. அல்லா குத்தாலா எனக்கு அதிக பாக்கியத்தைத் தந்திருக்கிறான்; நான் கலியாண முடிக்கப்போகிற பெண்ணுக்கு அக்க திரவிய மிருக்கிறது; ஆகையால் இதுவரையிலும் நீங்களிருந்தபடியே என் தகப்பனாருடைய ஆஸ்திகளுக்கும் மேன்மைகளுக்கும் உரித்தானவராய் வாழ்ந்திருப்பீராக” என்று சொன்னான். அதன் பிறகு, பாக்ஷா அவர்கள் காஜியையும். உலமாக்களை யும், சில பெரிய உத்தியோகஸ்தர்களையும் அழைத்து இஸ்லா மார்க்கத்தில் சேரவிரும்பிய லார்டுடெலிங்டனுக்குக் கலிமா வையும். இஸ்லாத்தின் அறிவுகளையுஞ் சொல்லிக் கொடுத்து, அப்துர் றகுமான் என்ற பெயரையுங் கொடுத்து, அதன்மேல், பாளீனை அஸன்பேய்க்கு நிக்காகு முடித்து அவட்கு ஆமீ னென்னும் பெயர் சூட்டினார்கள்; ஷர்ஷூன்னஹாரை அப்துஸ்ஸமதுக்குக் கல்யாணஞ் செய்தார்கள். இவ்வாறான வுடன் எல்லோருஞ் சந்தோஷத்தினால் பூரித்தவர்களாய்த் தங்கள் தங்களுக்குண்டான துன்பங்களை யெல்லாம் விட்டு நீங்கி அல்லாகுத்தாலாவைப் புகழ்ந்திருந்தார்கள். ஆகிலும் லாரீடுடெலிங்ட னாகிய அப்துர் றகுமான் அவர்களுக்குண்டா யிருந்த நோயைப்பற்றிச் சிறிது விசனங் கொண்டிருந்தார்கள். அன்று இரவு பாக்ஷா வீட்டில் எல்லோருக்கும் விருந்து நடந்தது.
மறுநாட்காலமே திமிஷ்குப் பட்டண முழுவதிலும் இந்தப் புதுமையான செய்திகள் பிரபலமாகி அங்குள்ள சகலரும் இவர்களைப் பார்ப்பதற்காக பாக்ஷா அவர்களுடைய மாளிகை யைச் சுற்றிவந்து கூடி இவர்களைப்பார்த்து, உபசாரங்கூறிச் சோபனம் சோபனமென்று சத்தமிட்டுச் சந்தோஷம் கொண் டாடினார்கள். அதன் மேல் பதினைந்து நாள் வரையிலும் இவர் களுக்கு விருந்துகளும் வேடிக்கைகளும் நடந்துவந்தன. இத னிடையில்லார்டு டெலிங்டன் சவுக்கியமடைந்தார்; ஆயினும் தேகம் இயற்கைபோல நல்லஸ்திதிக்கு வரவில்லை. ஆதலால், அதற்காகச் சீக்கிரத்தில் இங்கிலாந்துக்குப் போகவேண்டு மென டாக்டர்மார்கள் அவரைத் தூண்டினார்கள். அதனால், அவர் இங்கிலாந்துக்கும் மற்றவர்கள் மிசுறுக்கும் போக ஆயத்தமானார்கள். அவ்வாறானவுடன் திமிஷ்கு பாட்சா அவர்களுடைய உத்தமமான நடக்கைக்காக எல்லோரும் வரைப் புகழ்ந்து, துதி கூறி, அவரிடத்தில் விடை பெற்றுக் கொண்டு, பேறூத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கிருந்து இங்கிலாந்துக்குப்போகிற இஸ்டீமரில் லார்டு டெலிங்டன் ஏறினார். மற்றவர்கள் மிசுறுக்குப்போகிற கப்பலிலேறிப்புறப் பட்டார்கள் அப்படிப் புறப்படும்போது பாளீனாகிய லேடி அமீனா, தன் தகப்பனைவிட்டுப் பிரிவதற்காகப் பட்டதுயரம் அள விடக் கூடாததாயிருந்தது அதை விரிக்கிற் பெருகு மென்று எழுதாமல் விட்டுவிட்டோம்; இவ்வாறு பிரியும்போது லேடி அமீனா, தன் தந்தைமீதிருந்த விருப்பத்தால், மூன்று மாதத்துக்குள்ளாக அஸன் பேயுடனே தானும் இங்கிலாந்துக்கு வந்து சேருவதாய் வாக்குக் கொடுத்தனுப்பினாள். பின்பு, லார்டு டெலிங்டன் புறப்பட்டு லண்ட னுக்குப் போய்விட்டார். அமினா முதலிய எல்லோரும் மிசுறுக்குப் பிரயாணமாகிப் போனார்கள்.
இப்படி இவர்கள், மிசுறுக்குப்போன செய்தி தெரிந்து அவர்ளை மிகச்சிற புடனே எதிர்கொண்டழைக்க, அங்கிருந்த இவர்கள் உறவினர்களும், பெரிய உத்தியோகஸ்தர்களும் ஆபத்தமாயிருந்து எதிர்கொண்டழைத்தார்கள். இவர்கள் மேற்கண்டவாறு போய்ச்சேர்ந்தவுடன் எல்லோரும் கொண்டாடத் தலைப்பட்டதால் அந்த மிசுறுப்பட்டணத்தில் இவர் களுக்கு ஒரு மாதம் வரையிலும் விருந்துகளும். வேடிக்கை களும் நடந்து வந்தன. அப்படி நடந்துவருங் காலத்தில் அஸன்பேயும் லேடி அமீனாவும் அழகிலும் கல்வியிலும் நாகரீ கத்திலுஞ் சிறந்தவர்களா யிருந்ததால் எந்தச் சபையிலும் இரண்டு நட்சத்திரங்களைப்போற் பிரகாசித்தார்கள்.
இப்படி யிருக்கும்போது ஜகுபர் எந்நேரமுந் தம் மனைவி அடைய கபுறைப்போய்ப் பார்க்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்ததால் அதற்காக அஸன்பேயும், லேடி அமீனா வும் அவரை அழைத்துக்கொண்டு சூரத்துக்குப் புறப்பட உத் தேசித்தார்கள்; அதை யறிந்து அஸன்பேயுடைய தாயுந் தகப்பனும், சகோதரனும், ஷம்ஷூன்ன ஹாரும் அப்துஸ் ஸமதும், அவர்களிருவர்களுடைய தாயுந் தகப்பனும், “நாங்க ளும்வருகிறோம்” என்று அவ்விருவருடன் புறப்பட்டார்கள். அதன் மேல் இவர்க ளெல்லோருங் கப்பலேறிச் சூரத்தில் போய்ச்சேர்ந்தார்கள். அவ்வாறு சேர்ந்தவுடன் அஸனுக்கு வேண்டியவர்களாகிய அலீயுடைய மனைவியும், அவள் பிள்ளை களும், மரியம், காசீம், முகம்மது ஆகிய இவர்களும், இன்னும் அந்தப்பட்டணத்திலுள்ள அஸனுடைய நேயர்களெல்லோரும் வந்து எதிர்கொண்டழைத்துச் சோபனங்கூறினார்கள். ஆனந் தக் கண்ணீர் சொரிந்தார்கள்; புஷ்பங்களை வீசினார்கள்; அத்தர், பன்னீர்களைச் சொரிந்தார்கள். இப்படியே பலவிதமான ஆனந்தச் செய்கைகளை ந த்தி அந்தச் சூரத்துப்பட்டணத்தி லுள்ளவர்கள் அந்த நாளை ஒரு பெருநாளாகக் கொண்டாடினார்கள். அப்போது லேடி அமீனா வுடைய நயகுணமும், மதுர மான பேச்சும் அங்குள்ள எல்லோர் மனத்தையும்வசப்படுத்திக் கொண்டன இவளையும் அஸனையும் தம்பதிகளாக்கிவைத்த. தற்காக நாயனைப் புகழ்ந்து அவனுக்குத் துதி கூறினார்கள்.
இப்படியிருக்கும்போது ஜகுபர் தம் மனைவியுடைய கபுறடி யில், ஓர் மகாமைக்கட்டி, அதிலே குடியிருந்துகொண்டு, அவருடைய காலமுழுவதையும் வணக்கத்திலும், கவர்ண்மெண்டார் ஒப்புக்கொண்டிருந்த தம்முடைய ஆஸ்திகளைக். கொண்டுதான தருமஞ் செய்வதிலும் செலவாக்கி வந்தார். இற்றவர்களோ சூரத்தில் ஒரு மாதமிருந்து அவர்களுள் அஸன் பேயும், லேடி அமீனாவும் லண்டனுக்கும், மற்றவர்கள் மிசுறுக் கும் போய்ச் சேர்ந்தார்கள்.
மேற்கண்டபடி சென்ற அசன்பேயும் அமீனாவும் லண்டனுக்கு போய்ச்சேர்ந்து சந்தோஷித்திருந்தார்கள். அவ்வாறி ருக்கும்போது சிலமா தங்கள் சென்றபின் லார்டு டெலிங்டன் மவுத்தானார்; அல்லாகுத்தாலா அவருக்கு நற்பதவியைக் கொடுத்தான். அதன்மேல், அவருடைய ஆஸ்திகளெல்லா வற்றையும் அஸன்பே யொப்புக்கொண்டு சிலவருடங்கள் அங்கே வசித்துப்பின்பு அந்த ஐரோபாவிலிருந்து அமீனாவோடு புறப்பட்டுப் பல தேசங்களுக்குப் பிரயாணஞ்செய்து முடிவில் மிசுறுக்குத் திரும்பிவந்து, அங்கே சிலகாலந் தங்கியிருந்து மறுபடியும் லண்டனுக்கே போய்விட்டார்கள். அவர்களுக்கு இப்போது இரண்டு பிள்ளைகளிருக்கிறார்கள்! அல்லாகுத்தால அவர்களுக்கு இவ்வுலக சம்பத்துக்களைக் கொடுத்தருளியது போல ஆகிறத்திலும் பூரணபாக்கியத்தையும் பெரிய வாழ்வை யும் கொடுத்தருள்வானாக; ஆமீன்.
அசன்பே சரித்திரம்.
முற்றுப் பெற்றது.
– அசன்பே சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 1885, 1974 பதிப்பு – புனைவகம், கொழும்பு.
அசன்பே சரித்திரம் இலங்கையைச் சேர்ந்த சித்தி லெப்பை (லெவ்வை) மரைக்காயர் என்னும் முகம்மது காசிம் மரைக்காயர் எழுதிய நாவல். 1885-ல் இந்நாவலை எழுதி வெளியிட்டார். 1890-ல் மறுபதிப்பு வெளிவந்தது. 1974-ல் அடுத்த பதிப்பு வெளியாகியது.