அசன்பே சரித்திரம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2024
பார்வையிட்டோர்: 1,129 
 
 

(1885ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கையின் முதல் தமிழ் நாவல்.

இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட முதல் வரலாற்று கற்பனை நாவல். தமிழில் எழுதப்பட்ட இரண்டாவது நாவல் என்றும் இதை கருதலாம் என ஆய்வாளர் சிலர் சொல்வதுண்டு. இந்நாவல் அரேபியக்கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. இது நாவல் என்னும் தலைப்புடன் வெளிவராமல் மதநூலாக வெளிவந்தமையால் நாவலாக ஆய்வாளர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை.

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

அவளிப்படிக் கதவைப் பூட்டிக்கொள்வதற்குக் காரணம் யாதெனில், ஜூலைகா அந்தப் பிள்ளையைப் பற்றி யாதோ ஓர் இரகசியமுளதென்றும் அதை வெளியிடப் போகிறேனென்றும் சொன்னதுதான். 

அவ்விரகசியமாவது, ஜுலைகாவுமவள் சகோதரியாகிய ஜுகறாவும் மிகவும் சிறுபிராய முள்ளவர்களாயிருக்கும்போது, அவர்கள் தகப்பன் தன்னிலைமைக் கேற்றபடி கொஞ்சம் ஆஸ் தியைத் தன் பிள்ளைகளின் போஷணைக்காக வைத்துவிட்டுக் காலஞ்சென்று போனான். தாயும் இந்தப் பிள்ளைகளும் அச் சிறு தனத்தைக் கொண்டு தங்கள் காலங்கழித்து வந்தார்கள். ஜூலைகாவையும் அவளுடைய சகோ தரியாகிய ஜுகராவையும் பார்த்தா லிவ்வருவரில் யார் அதிக சவுந்தரிய முடையவ ளென்று சொல்வது யாருக்கும் எளிதன்று. ஜூலைகா அமரிக்கையும், சாந்தகுணமும், இனிமையான வார்த்தையுமுடை யவள்; தன் அன்னையின் சொல்லை வேத வாக்கியத்தைப் போல் அங்கீகரித்து அவளுக்குக் கீழமைந்து நடப்பவள்; இவ் விதம் அனேக சிறந்த குணமுடையவள், காமாந்தகாரமென் னும் வலையிலகப்பட்டுக் கண்மூடித் திரிகின்ற துஷ்டர்களும் கற்பென்னும் பிரகாசம் விளங்கும் அவள் முகத்தைப் பார்த்து அசுத்தமான சிந்தனைக் கிஞ்சித்தும் மனதிற் கொள்ளார்கள். பரிசுத்தமும் தூய்மையுமான ஓர் பொருளை அசுத்தமான கை களினால் தொடுகிறதற்கு ஒருவருக்கு மனம் வராததுபோல் எவ்வகைத் காமியும் அவளைக் கெட்ட எண்ணத்தோடு பார்க் கத் துணியான். ஒருவேளை துணிந்தாலும் அவன் மனச்சாக்ஷி கொஞ்சமும் இடங்கொடாது ஆனால் அவளைப் பார்க்கிற எவர்களும், தங்கள் சகோதரியின் மீது அல்லது புத்திரியின் மீதுள்ள அன்பை இவளிடத்திலும் பாராட்டி இவளை மிகவும் நேசிப்பார்கள். ஆனால் ஜுகறாவோ, வேடிக்கை விளையாட்டு களிலும் உல்லாசமாய் உலாவித் திரிவதிலும், தன்னை மகா ரூபவதியென பிறர் மதிக்கும்படி ஆடையாபரணங்களினால் தன்னைச் சிங்காரித்து மினுக்குவதிலும், அதிகப் பிரியமுள்ள வள்; அவள் இயற்கையாய் அதிக அழகுள்ளவளாதலால் செயற்கையாயும் அலங்கரித்துக் கொள்வதினால் அழகிற்கழகு செய்தது போலிருந்தது ஆகையால் இவளைப் பார்த்த வாலி பர்களெல்லாம் அவள் மேல் மோகித்துக் கல்யாணம் பேசி யனுப்பினார்கள். இவ்விதம் பலர் கல்யாணம் பேசியனுப்பவே இவளுக்கு நாள் தோறும் கர்வமதிகரித்துக் கொண்டு வந்த படியால் சதா சர்வ காலமும் தன்னை யலங்கரித்துக் கொள் வதிலேயே தன் மன தைச் செலுத்திவந்தாள். எப்படியெனில், காலையில் எழுந்து மேகம் போல கறுத்து நீண்ட கூந்தலைச் சம்பங்கியெண்ணெய் முதலிய வாசனைத் தைலங்களைத்தடவி. வாரிச் சிக்கெடுத்துப் பளபௌன மின்னும்படி மினுக்கெண் ணெய் பூசி, பலவகைப்புஷ்பங்கள், கொடிகள் முதலியன விழும்படி, தன் கூத்தல் மயி ரைப் பின்னிச் சடைபோடுவாள். மாணிக்கங்க எழுத்திய சடை பில்லையைத் தலையில் வைப் பாள், இது மாணிக்கத்தைத் தலையில் வைத்துக்கொண்டிருக் ஓர் பெரிய கருநாகத்திற்கொப்பாயிருந்தது, தனதிரு பக்கத்து (ஸுல்பு) நெற்றி மயிரை வாரி, இரு கன்னங்களிலும் பல வளைவுகளாய் வளைத்து, அவற்றின் நடுவில் வர்ணமேற்றிய தங்கத் தகட்டை வைத்தழுத்துவாள். இவையிரண்டும் அப்பெருநாகத்தின் சிறு குட்டிகளை யொத்திருந்தன. அல் லது அந்தப் பெரும் பாம்பின் விஷத்தைச் செலுத்தும்படி ஏற் பட்ட இரு சூஸ்திரக் குழல்களை யொத்திருந்தன பின்பு அம் பாகிய தன் கண்களுக்கு அம்பர், பச்சைக் கற்பூர முதலிய உயர்ந்த வஸ்துக்களின் செய்யப்பட்ட சத்துக்களினாற் மையை பைய இடுவாள். இது அம்பினால் குத்துண்டவர்கள் ஒருபோதும் திரும்பி உயிர் தப்பாவண்ணம் அதற்குக்கொடிய நஞ்சூட்டினது போலும், அந்தப் பெருநாகம் அந்த சூஸ்தி ரர்க்குழல்களினால் கண்ணாகிய அம்பிற்கு சதாகாலமும் நஞ் சைச் செலுத்திக் கொண்டிருந்தது போலுமிருந்தது. இவ் விதம் மூக்கு, உதடு, பல், தனம், கை, இடை, பாதம் முதலிய உறுப்புக்களில் அதற்கேற்ற விதமாய் அலங்கரித்துக் கொள்வாள். இப்படிப் பலவாறாக தனது இயற்கை அழகை விர்த்தி செய்து, பச்சை, சிவப்பு, மஞ்சள் முதலிய பல வருணப் பட்டு ஆடைகளைத் தரித்தும், மகா உன்னதமான வேலைப்பாடுள்ள ஆபரணங்களைப் பூண்டும் “விலைமகட்கழகு தன்மேனி மினுக் குதல்” என்ற முதுமொழிக்கேற்ப ஓர் புது மகளிரைப்போல் தன் மேனி மினுக்குவாள், ஒருவாறு அவளுடைய மினுக்கை யும், குலுக்கையும் சொல்லப்புகின் இப்புத்தகம் அதிவிரிவாய் விடும். ஆகையால் சுருக்கிச் சொல்லில், அவள் ஸ்நானம் செய்கிற ஜலமானது அவள் கூந்தலிலும், தேகத்திலும்; அணிந்த அத்தர், புனுகு, ஜவ்வாது முதலிய சுகத்தங்களைக கழுவிக்கொண்டு ஓர் ஆற்றின் மூலமாய்க் கடலில் விழுந்தா லும், அக்கடலிலுள்ள புலால் நாற்றம் உடனே நீங்குமென்ப தற்குச் சந்தேகமிராது. 

ஆகையால், இதை வாசிப்பவர்கள் அவளுடைய கன்னிப் பருவத்திற்குத் தகாதவண்ணம் எவ்விதவீண் ஜம்பம் செய் தாளென எளிதில் அறிந்து கொள்ளக்கூடும். மேற்கண்ட விதமாய் ஜுலைகாவும், ஜுகறாவும் ஆகிய இருவரும் வளர்ந்து வரும்போது அவர்கள் தாயானவள் தம் மக்களை முக்கியம் ஜுகறாவை மகா கோடீஸ்வரனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கவேண்டுமென்று நெடுநாளாக விருப்புற்றிருந்தாள்; தந்தையானவன், தன் புதல்வியை, கல்வியிற் சிறந்த ஓர் மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துகொடுக்க வேண்டு மென்று கருதுவதும், அந்தப் பெண்ணானவள் அழகிற் சிறந்த ஓர் கணவனுக்கு வாழ்க்கைப்பட வேண்டுமென்று கருதுவதும் சுற்றத்தார் மாப்பிள்ளை நல்ல குணத்தினனாயிருக்கவேண்டு மென்று கருதுவதும், தாயோ தன் மருமகன் மிகுத்த செல்வ முள்ளவனாக இருக்கவேண்டுமென்று கருதுவதும் உலகத்தின் இயற்கையே. ஆனால் இவளோ எந்தக் கனவான் பெண்பேச வந்தாலும், அவனிலும் அதிக தனவான் வருவானோவென்று பேராசைகொண்டு பேயாய்த் திரிந்தாள். இப்படியிருக்கையில், ஜுகறவை ஓர் பெரிய பாக்கியவான் கண்டு அவள்மீது மீது மோகங்கொண்டு அவள் தாய்க்கு ஆள் அனுப்பினான். இதைக்கேட்ட அத்தாயானவள். பழம் நழுவிப் பாலில் விழுந் தது, அவையிரண்டும் நழுவி யென் வயிற்றில் விழுந்தது, எனற பழமொழிக்கேற்க மிகுந்த ஆனந்த முடையவளாய், நாடியபடி வலியத்தேடிவந்த அந்தப்பாக்கியவானுக் குத் தன் மகளை விவாகம் செய்துகொடுக்கச் சம்மதித்துக் கொண்டாள். அந்தப் பாக்கியவானுக்கு இரண்டு புகைக் கப்பல்களும். நான்கு பாய்மரக் கப்பல்களுமுண்டு. இவை யன்றி, பம்பாய், கல்கத்தா முதலியவிடங்களில் பெருத்த ஷாப்புகளும் பூஸ்திதிகளும், திரண்ட திரவியமும், ஆபரணங்களுமிருந்தன ஜுகறாவின் தாய் தனது மருமக னுக்கு இருக்கிற ஆஸ்திகளைக் கேட்கக் கேட்க ஆனந்தம் பொங்கியோடிப்போய் தன் மகளைக் கட்டித்தழுவி முத்தமிட்டு என்னருமை மகளே உன்னாலல்லவோ யாமெல்லோரும் செல்வத்தை யடைந்தோம்; உன்னழகைக் கண்டு உன்மேல் நீங்காத ஆசை கொண்ட ஓர் கனவானான தனவான் நமது கைவசமாகிவிட்டான்; நமக்கினி யாதுகுறைவு. உன்மேல் எல்லையை அவன் கொண்டிருக்கிற ஆசையின் யாரால் அறியக்கூடும், அவனுடைய செல்வமெல்லாம் உனது பாதார விந்தங்களில் காணிகையாக வைத்து, இருவேளையும் உனக்கு சாஷ்டாங்க தண்டஞ்செய்து அடிபணிந்திடுவான். ஆகையால், நமக்கு ஒருவரும் நிகராகார். ஒருவேளை நமது எளிய நிலைமையை அறிந்த அயலார் நம் செல்வத்தைப் பார்த்து. நம்மிடத்தில் பொறாமை கொள்ளினும் கொள் வார்கள். அப்படியவர்கள் பொறாமையுற்றாலும் எல்லாவற் றிற்கும் மகா பாக்கியவந்தர்களாகிய நம்மிடம் வராதிருக்க முடியாது. ஆகையால் அக்காலங்களில் அவர்களுக்குத் தக்கபடி செய்வோமாக; ஆகையால் நாம் ஒன்றுக்கும் அஞ்ச வேண்டுவதில்லை யென்று சொல்லி தன் மகளைக கொண்டாடி அந்தக் கனவானிடமிருந்து வந்த தூதனுக்குப் பலவகை வெகுமதிசெய்து அவனை யனுப்பிவிட்டாள் ஜுலைகாவுக்கோ அவளுடன் சிறுபிராயமுதல் சிநேகமாயிருந்து அவளுடைய நற்குணம், நற்செய்கைகளையும் கற்பின் மேன்மையையுங் கண்டு அவள் மேல் நீங்காத காதல்கொண்ட அப்துல்ஹமீது என்கிற வாலிபனுக்கு விவாகம் செய்துகொடுக்கத் திடடம் செய்து இருந்தபடியால், அவன் கல்கத்தாவிலிருந்து தனது கல்வியைப் பூர்த்திசெய்துகொண்டு திரும்பி வந்தவுடனே அவனுக்கு விவாகம் செய்வதாகத் தீர்மானம் செய்திருந்தார்கள். 

இப்படியிருக்க ஜூகறாவானவள் தற்புகழ்ச்சிக் கிச்சித்து, தன்னையலங்கரித்துக் கொள்வதில். தினே தினே அதிகப் பிரியமுற்றுத் தன்னைச் சிங்காரித்தக்கொண்டு, தன் கன்னிகைப் பருவத்திற்குத் தகாவண்ணம்; அன்னிய பாலியர் களோடு வேடிக்கையாகவும், பரிகாசமாகவும் கூசாமல் பேசி வந்தாள். பஞ்சும் நெருப்பும் நெருங்க, தீப்பற்றக் கொஞ்ச முந் தாமதியாததுபோல, அவள் அயல் வீட்டிலிருக்கிற ஓர் வாலிபனுடனே சினேகமாயிருந்து ஒரு நாள் மோசம்போய் விட்டாள். ஆனால் அவளுடைய தீச்செயலை யாரும் அறி யார்கள். அவளுக்கும், அவ்வாலிபனுக்குமே இது தெரிந்த விஷயம். ஆகிலும் அத் தீச்செயலை மறைக்கக் கூடாதோ வெனில் அத் தீச்செயல்கள் மறைவிடங்களில் நடந்தபோதி லும், அதைக் கொஞ்சக் காலத்திற்கு மாத்திரம் மறைத்து வைக்கக் டுமேயன்றி, நீண்ட காலத்துக்கு மறைத்து வைப்பது அரிது, இதையறிந்தே. 

“மறைவழிப்பட்ட பழமொழி தெய்வம் 
பறையறைந்தாங்கோடிப் பறக்கும் – கழிமுடைப்
புன் புலால்நாற்றம் புறம் பொதிந்து மூடினுஞ்
சென்றுதைக்குஞ்சேயார் முகத்து” 

என்றார் பெரியோர். 

ஆனால். அவளுடைய துற்செய்கை பிறரறியாமல் நெடு நாள் மறைத்துவைத்திருந்தாள். ஆயினும் புலால் நாற்றம் மறைத்து வைப்பினும் வெளிப்படுமென்கிற பழமொழியைப் போல் அவள் பிரசவ வேதனைப்படுகிற காலத்தில் வெளிப் பட்டது; அதை யறிந்த தாய், யானை தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொள்வதுபோல ஐயோ! தனக்குத் தானே தீங்கு வருவித்துக்கொண்டனளே யென்று வாய்விட் டலறி மார்பிலறைந்துகொண்டு, மண்ணையள்ளித் தலையில் போட்டுக்கொண்டு மோசம்போனோம், மோசம் போ னோ மென்று கதறியழுது தன் கூந்தலையும் பிய்த்துக்கொண்டாள். இப்படி நெடுநேரவரையில் அழுதபின்னர், நான் இக்காரியத் தை எவரிடமும் வெளிப்படுத்தாமல் மறைத்துவைத்து ஜுகறாவை விவாகஞ் செய்துகொள்ளத் தீர்மானித்திருக்கிற மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் படுத்துவதற்கு ஓர் தந்திரஞ் செய்யவேண்டுமென்று தனக்குளாலோசித்து தீர்மானஞ் செய்துகொண்டு, தன் இளைய குமாரத்தியாகிய ஜுலைகா விடம் போய் என் கண்மணி போன்ற அருமை யிரத்தினமே, நானுனக்கு ஒரு காரியஞ் சொல்லுகிறேன் நீ யென்னுடைய சொல்லுக்குக் கீழமைந்து நடப்பேனென்பதாய் வாக்குக் கொடுவென்று கேட்டாள்; அதைச் செவியுற்ற ஜுலைகா என் அன்பானதாயே! நான் இதுவரையில் ஒருபோதும் தங்க ளுடைய சொல்லை மீறி நடந்ததில்லையே, அப்படியிருக்க, தாங்களேனிவ்வாறு சந்தேகப்படவேண்டும், தாங்களெப்படி நியமனஞ் செய்திருக்கிறீர்களோ, அவ்வாறே நடந்து கொள்ளச் சித்தமுள்ளவளாயிருக்கிறேன் என்று தெள்ளு
மணிபோன்ற ஜூலைகா இவ்விதஞ் சொன்னபோது, தாய் அம்மா உன் தமக்கையாகிய ஜுகறாவுக்கு நேரிட்டிருக்கிற சங்கட முனக்குத் தெரியுமே; அது வெளிப்படில் அவளை மணம்புரியத் தீர்மானித்திருக்கிற கனவான் மறுத்துவிடுவார். அந்தக் காரியம் அப்படிச் சிதைவுறாவண்ணம் நீ சில நாளைக்கு ஓர் அறை வீட்டுக்குள்ளேயிருந்து பின்பு இக் குழந்தையை உன்னுடைய குழந்தையென்று நீ யேற்றுக் கொள்வாயானால், ஜுகறாவுக்குத் தீர்மானஞ் செய்திருக் கிறபடி விவாகத்தை நிறைவேற்றிவிலாமென்று சொன்னாள்; இவைகளைச் செய்யுற்ற ஜூலைகா, அசனிகண்ட அரவம் ேலப் பயந்து நடுங்கிச் சற்றுநேரம் பதில்பேச நாவெழாமல் மெளன மாயிருந்துவிட்டுப் பின்பு தாயே! நானோர் ப வமுஞ் செய்யா மலிருக்க இப் பெரும்பாதகத்தை நானெவ்வாறு சதித்து என் தலைமீது சுமத்திக் கொள்ளுவேன்; ஐயோ! என்னைப் பார்த்த வர்களெல்லோரும் இவள் மிகவும் கற்புடைய கன்னிபோல வேஷம் பூண்டு, அமரிக்கையாயிருப்பதுபோல நடித்துத் திரிந்தனளே ஆ! ஹா இப்பொழுது பார்த்தீர்களா, (மறை வழிப்பட்ட) என்ற முதுமொழிக்கேற்ப அவளறையிற் செய்த காரியம் இப்பொழுது அம்பலமாகிவிட்டதல்லவா? என்றென னைப் பழித்துத் தூஷிப்பார்களே, அவர்கள் முகங்களை நானெவ்வாறு பார்ப்பேன் என்று சொல்லி, கண்ணீர் ததும்ப நின்றேங்கி யழுதாள். 

அதைக் கண்ணுற்ற தாயானவள், என் செல்வ மகளே நீ யொன்றுக்கும் விசாரப்படவேண்டாம்; உன் சகோதரியின் கல்யாணம் முடிந்து சிலகாம் சென்றதின் பின்பு, அவளிட மிருந்து பெருந்துகையான திரவியம் பெற்றுக்கொண்டு அதிக துலைவான ஓர் ஊரிற் குடிபுகுந்து, அங்கே உனக்குத் தகுந்த கணவனைத் தேடிக் கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று தாய் சொல்ல, அதைச் செவியுறக்கேட்ட ஜுலைகா, என் தாயே! என்னை உள்ளன்போடு நேசித்து என்மீது மிகுந்த காதல் கொண்டு விவாகம் செய்ய உத்தேசித்திருப்பவருக்கு நான் ஒருபோதும் துரோகஞ்செய்யத் துணியேன். மேலும் தாய் சொற்றுறந்தால் வாசகமில்லை என்றும் ” 

கடவுளை வருந்திச் சூலாய்க் கைப்புறை யுண்டனந்த, மிடர்களுற்றுதரந் தன்னி லீரைந்து திங்கடாங்கிப் புடவியீ லீன்று பன்னாள் பொற்றெனப் பாலையூட்டித், திடமுற வளர்த்துவிட்ட செல்வியை வணங்காய்நெஞ்சே. 

என்றும் நீதிநூல் முறையிடுகிறபடியால், தாங்கள் சொல்லுகிற நியாயமான எவ்வித வார்த்தையையும் சிரமேற் கொண்டு தங்களுக்ககுப்பணிந்து, தங்கள் கட்டளையின்படி நடந்துகொள்வேன். ஆனால் தாங்கள் இப்போது சொன்ன இந்த வார்த்தைக்கு மாத்திரம் நானிடங்கொடேன் என்று சொன்னவுடனே தாய் மிகுந்த கோபங்கொண்டு கண்களில் தீப்பொரி பறக்க வோடியோர் அறைக்குள் நுழைந்து, அங் கிருந்த ஓர் கத்தியைத் தன்கையிலெடுத்துத் தன் மகளுக்கு எதிரேவந்து நின்று, அக்கத்தியைத் தனது நெஞ்சுக்கு நேரே பிடித்துக்கொண்டு ஜுலைகாவைப் பார்த்து நீ நான் சொன்ன படி செய்வேனென்று சத்தியஞ் செய்து தராமற்போனால் நான் இக்கத்தியினாற் குத்திக்கொண்டு இறந்து விடுவது திண்ணமென்று சொல்லவே ஜூலைகா பயந்து, மெய்விதிர்ப் புற்று தன் தாயின் கையை இறுகப்பிடித்து, அம்மா! நீ கேட்டபடியே நான் சத்தியஞ்செய்து தருகிறேன் 

என்று நீயுள்ளவரையில் இந்த இரகசியத்தை வெளியிடுகிறதில்லை யெனச் சத்தியஞ் செய்து கொடுத்தாள். ஜுகறாவுக்குப் பிள்ளையும் பிறந்தது. தாய் அந்தப் பிள்ளையை ஜூலைகா பெற்றாளென்று பிரஸ்தாபப்படுத்தினாள்; இச்சூதையறியாத அக்கனவானும், ஜுகறாவை மணம்புரிந்து அவளைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டான். இந்தக் கல்யாணம் நடந்து சில நாள் வரையில் தாய் உயிரோடிருந்து பின்பு இறந்து விட்டாள். 

தன்தாய் இறந்த பின்பு ஜுலைகாவும் அந்தப்பிள்ளையும் ஆதரவற்ற அநாதிகளைப்போலத் தனித்தபொழுது ஜுககு அவர்களுக்கு உதவியாக ஓர் கிழவியை யனுப்பி அக்கிழவி விடத்தில் தன் உண்மையைச் சொல்லி நீ யென் சகோதரி வினுடைய நடத்தைகளைச் கவனிப்பாய்ப் பார்த்துக்கொள், எப்பொழுதாவது என் இரகசியத்தை வெளியிடப்போகிறாள் என்ற குறிப்பை நீ யறிலாயானால் உடனே நீயதை யெனக்கு அறிவியென்றுசொல்லி வைத்தாள். அவ்வாறே அந்தக் கிழவி மைமூன் ஜுகா வீட்டுக்கு வந்ததன் பின் அவள் அப்துல் ஹமீது வீட்டுக்குப் போகிறதையும், அங்குபோய் நடக்கிற சமாசாரங்களை அறிந்து வந்து ஜுலைகாவிடத்தில் அறிந்துவந்து சொல்லுகிறதையும் கவனிப்பாய்ப் பார்த்திருத்து 

பார்த்திருத்து ஜுகறா வுக்கு அறிவித்தாள். அதைக்கேட்ட ஜுகறாவும் தன் கண வன் வீட்டை வீட்டுவந்து தனது சகோதரியின் வீட்டுக்குள் நுழையும்போது, ஜுலைகா மைமூனிடத்தில் நான் என்னி ரகசியத்த வெளியிடப் போகிறே னென்ற வர்த்தை அவள் காதில் விழுந்தது. ஆகையால், தான் ஓடிவந்து ல ம மூனை வெளியே தள்ளிவிட்டுத் தன் சகோதரியை அறைக்குள் இழுத்து இருத்திக் கதவைப் பூட்டிக் கொண் டாள் 

இவ்விதமாய் மைமூனை வெளியே தள்ளிவிட்டு வீட்டுக் குள்ளே நுழைந்து தன் சகோதரியின் கால்களில் விழுந்து அவள் கால்களைத் தனது காகங்களால் பறறி அழுது கெஞ்சி மன்றாடிச் சொல்லுகிறாள் எனது பிராண சகோதரியே என்னுடைய ஆவி முதலிய யாவும உன்னு டைய நாவினுனி யிலிருக்கின்றன; நீ யுன்னாவைச் சற்று அஃசப்பாயானால் அவை எல்லாமழிந்துபோம்; நான் உயிரையு மாய்த்துக் கொள்வேன், நீ என் தாய்க்குச் செய்துகொடுத்த சத்தி யத்தை நிறைவேற்றி என்னையுங் காப்பாற்றவேண்டும். என்னாயுசுள்ள வரைக்கும் உனக்கு அடிமையாகவிருக் கின்றேன், என்னுடைய கணவனுக்கு அளவற்ற திரவிய மிருக்கிறது, உனக்கு எவ்வளவு திரவியம்வேண்டியிருந் தாலும் நான் தருகிறேன், நீ யிந்தச் சமயத்தில் என்னைக் காப்பாற்றவேண்டும். என்று சொன்னாள் அதற்கு ஜுலைகா, ஜுகறாவை நோக்கி யென்சகோதரியே, நீ அல்லாகுத்தாலா வுடைய கட்டளைக்கு மாறாகவும், எங்கள் குடும்பத்திற் கெல்லாம் ஈன்மாகவும் நடந்து கற்பழிந்துபோனாய். 

மற்றொருவனைச்சேர் மாதிறந்தாலும் வசை நிற்குமுலக முள்ளளவும். சுற்றமும் வாழ்வுந் துணையுமே நீங்குஞ் சோர நாயகனுமே மதியான். பெற்ற சந்ததியு மிழிவுற மாண்டபின் னவியாவெரி நரகஞ். சற்றுநேரங்கொள் சுகத்தினால்விளையுந் தன்மை யீதரிவையீருணவீர். 

என்ற இந்த நீதிவாக்கியப்படி நீ கெட்டதுந் தவிர நம் உற்றார், பெற்றார் முதலிய எல்லோருக்கும் இழிச்சொல்லை யுண்டாக்கி, நீ செய்த பாவத்தை, ஒன்று மறியாதவென்னை ஒப்புக்கொள்ளச் சொன்னாய் ; என்தாயின் கட்டளைக்குட் பட்டு அந்தப்பாவத்தை யேற்று நானிராப்பகலாக இவ்விசா ரததினாலே நித்திரை யின்றிப் பலவருத்தத்தோடு உன் இரக சியத்தை யிதுவரையிலும்பிறர் அறியாமல் என்மனதில் அடக்கிவைத்திருந்தேன் இப்பொழுதோ என்னுயிர்க்கு யிரான அருமைநாயகனுக்கு நான்துரோகஞ் செய்தே னென்ற விசாரத்தினால் நோயுண்டாகி அவர் மரண வாச லுக்குச் சமீபித்திருக்கிறார். என்னால் அவர் உயிரிழக்கப் பொருந்தேன். ஆகையால், இனி உனது இரகசியத்தை மறைக்க என்னால் முடியாது, நான் அவரிடம் சென்று நடந்த காரியங்களை யெல்லாம் சவிஸ்தாரமாகச் *சொல்லப் போகி றேனென்று சொன்னாள். அப்பொழுது ஜுகறா ஜூலைகா வுடைய காலைப்பிடித்துக் கொண்டும், அவளைக் கட்டித் தழுவிக்கொண்டும் மூகத்தோடு முகம் வைத்து முத்தமிட் டுக் கொண்டும் தன்னாலியன்ற மட்டும் கெஞ்சி மன்றாடி அழுது நிள்றாள். ஆயினும் ஜுலைகாவினுடைய மனம் இவள் மன்றாட்டுக்கு இணங்காம லிருப்பதைக் கண்டு அவள் வெளியில் ஓடிப்போகாமல் அறைக்குள்ளே வைத்துக் கதவைப்பூட்டிக்கொண்டு வெளியேவந்தாள், ஜலைகா அங்கிருந்த சன்னலைத் திறந்துகொண்டு வெளியே குதிததுப் பாய்ந்து, மைமூனே நீ யென்னைப்பின் தொடர்ந்து வாவென்று சத்தமிட்டுக் கொண்டோடினாள். அந்தச் சத்தத் தைக்கேட்ட மைமூனும் அவளைப் பின்பற்ற இருவரும் அப் துல் ஹமீதின் வீட்டை நோக்கியோடவே, அவர்களைப்பின் தொடர்ந்து ஜுகறாவும் ஓடினாள். 

ஆகிலும், ஜுகறாவுக்கு அவர்களை நெருங்கிப் பிடித்துத் தடை செய்யக்கூடாமற் போய்விட்டது; ஜுலைகாவும். மைமூனும் ஒரே ஓட்டமாயோடி அப்துல்ஹமீது வீட்டுக்குள் நுழைந்து, அவனிருக்கு மறைக்குட்சென்று அவனைப்பார்த்து என்னாசைக் காதலனே, நான் ஓர் பாவமும் செய்தறியேன்; என் சகோதரியாகிய ஜுகறா செய்த பாவத்திற்கு நான் ஆளாவேன், என்று உரத்த சத்தமிட்டு அவன் காலில் வீழ்ந்தழுதாள் அப்துல்ஹமீது. இக்கூச்சலைக் கேட்டுத் திடுக்கிட்டெழுந்து ஜுலைகா அழுததைப் பார்த்துத் தானும் அழத் தொடங்கினான். இப்படி யிருவரும் கொஞ்ச நேரம் சக்தியற்றவர்களாய்த் தேம்பித் தேம்பி யழுது கண்ணீருகுத்தார்கள். இதைக் கண்ணும் மைமூனும் அழுது நினறாள்; அப்துல் ஹமீதுடையதாயும் அந்த வீட்டில் வசித்த மற்றவர்களும் ஜூலைகா மொழிந்த வார்த்தைகளைச் செவியுற்றுக் கவனிக்கையில் இக்கன்னிகைக்கும் அவ்வாலிப னுக்கும் உள்ள உள்ளன்பையும், அவவிருவருஞ் சில நாள் பிரிந்திருந்ததினால் அவர்களுக்குண்டான துயரத் தையும் அறிந்து, அவர்களும் அழுது கண்ணீருகுத்துத் துக்கித் தார்கள். பின்பு அப்துல் ஹமீது தனக்குண்டான ஆனந்தப் பெருக்கால் நோயின் கொடுமை நீங்கி உடனே சவுக்கிய மடைந்துவிட்டான். பின்பு ஜூலைகாவானவள் காரியங்களெல்லாவற்றையும் ஆதியோடந்தமாய்ச் சால்லக் கேட்டு வியப்புற்றான். 

பின்பு மைமூன் தன்னுடைய சரித்திரத்தையும் சொல்ல,  அதைக்கேட்டு அவன் மிகவும் ஆச்சரியமடைந்தான். மைமூன், ஹமீதுக்குத் தன் சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டு வருகையுல் தன் சகோதரனுடைய உயிர் நண்பனாகிய அஸன் என்பவனுடைய பெயரைச் சொன்னபோது, அப்துல்ஹமீது அவனுடைய வயதையும், வடிவையும் சொல்லும்படி கேட்க அவள் அவனுடைய அங்க அடையா னங்களைத் திட்டமாய் எடுத்துச்சொல்லக் கேட்டு இவன் மிகவும் ஆனந்தங்கொண்டு சர்வதயாபரனாகிய அல்லாகுத் லாவைப் புகழ்ந்து. நீ மிகவும் தூய்மையானவன்; திக்கற்றவர்களாக யிருக்கிற ஏழைகள் முதலிய எல்லோரின் துயர் தீர்த்து ரக்ஷிக்கும் ரக்ஷகன் நீ யன்றி வேறில்லை என்று இவ் விதம் பலவகையாகத் துதித்துக் கொண்டாடி மைமூனைப் பார்த்து, நீ மொழிந்த அஸன் என்னும் வாலிபன் என்னுயிர்த் தோழனன்றோ? அவனும், நானும் கல்கத்தாவில் ஒரே கல்விச் சாலையில் படிக்கின்றோம். என்று சொல்வி விட்டு, தனக்கு அன்று பொம்பாயிலிருந்துவந்த வர்த்தமானப் பத்திரிகை யொன்றைக் கையிலெடுத்து வாசித்துக்கொண்டிருந்தான் அதில் காஸீம் என்பவன் அஸனையும், அவனுடைய ஊழியக் காரர்களிலொருவனையும் கொன்றுவிட்டான் என்பதாய்க் குற்றஞ்சாற்றப்பட்டு அந்தமாதம் 23ந் திகதியில் நியாய விசாரணை செய்யப்படுவானென்றும், அந்த விசாரணையில் அவன் குற்றம் ருஜுவுக்கு வரும் ஆகையால் அவன் தூக்கப் படுவானென்றும், பிரசுரஞ் செய்யப்பட்டிருந்தது. இதை யவன் வாசித்துப் பார்த்தவுடன் திடுக்கிட்டு, மைமூனை நோக்கி, உன் சகோதரன் வழக்கை விசாரணை செய்ய இன் னும் ஆறுநாள் தானிருக்கின்றன என்றாலும் நீ பதறவேண் டாம். அல்லாகுத் தாலா உன்னை யென் வீட்டுக்கு வரும்படி செய்தது உன் சகோரனுடைய உண்மையை வெளிப்படுத்தி, நேரிட்டிருக்கிற தீங்கினின்றும் அவனை மீட்கும் பொருட்டே யாம் நான் இந்த க்ஷணத்திலேயே என் சிநேகிதராகிய அஸன் நண்பருக்குத் தந்தி மூலமாய்ச் சமாசாரம் அனுப்பி உடனே அவரை யிங்கு வரவழைக்கிறேன். அவர் நாளைக்கு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டால் இன்னும் மூன்று நாளைக் குள் வஇங்குந்து சேர்வார். அவரிவ்விடம் வந்து சேர்ந்த வுடனே நீயும் நானும் அவரை யழைத்துக்கொண்டு பொம் பாய்க்குநேரேபோய்க் காஸீமை மீட்பதற்குரிய காரியங்களைச் செய்வோமென்று சொன்னான். 

ஜுலைகாவானவள், மைமூன் எனக்குச் செய்த நன்றியை நான் மறக்கமாட்டேன்; தாங்களிவருவரும், ஓரன்னை வயிற் றிற் பிறந்த சகோதரிகளைப் போல் நடந்துகொள்வோம். அவளோடுகூட நானும் பொம்பாய்க்கு வருவேன், அவளுக்குத் துக்கமுண்டானால் நானும் அத்துக்கத்திற்காளாவேன், அவளுக்குச் சந்தோஷமுண்டானால் அச் சந்தோஷத்தை நானும் அவளோடு கூட அனுபவிப்பேன், அவளை இப்பரி தாப நிலையில் விட்டுப்பிரிய என் மனஞ் சகியாது. நாங்க ளிருவரும் உடலும் உயிரும், மணமும் பூவும்போல் இணை பிரி யாது வாழ்ந்திருக்கக் கருதி யிருக்கின்றோம். என்று சொன் போது, அப்துல் ஹமீதுடைய தாய், என்னருமை மருமகளே! நீ சொன்னது சரிதான், ஆயினும் என் புத்திரனுக் கத்தியந்த சிநேகிதராகிய அஸன் இங்கு வந்திறங்கினவுடனே உங்கள் விவாகத்தை நிறைவேற்றி, பின்பு உன்னுடன் நானும் வருகி றேன். மைமூனை நான் பெற்ற பிள்ளைகளிலொருத்தியாய்ப் பாவித்து நேசித்து வருவேனென்று சொல்ல, அப்துல் ஹமீது முதலான யாவரும் ஆனத்தப் பரவசமானார்கள். 

பின்பு அப்துல்ஹமீது, அஸனுக்கு மின் தபால் மூலமாய், சூரத்திலிருந்த உமது நண்பனாகிய காசீம் உம்மைக்கொலை புரிந்ததாகக் குற்றஞ் சாற்றப்பட்டு நாளது மாதம் 23ந் திகதி யில் நியாயாதிபதி முன்பு அவனை க்கொண்டுவந்து விசாரணை செய்யும்படி நியமித்திருக்கிறார்கள். நீர் இதையறிந்த க்ஷணமே புறப்பட்டுவராவிடில் சந்தேகமின்றி அவனை நியா யாதிபதி மரண தண்டனைக்குள்ளாகித் தூக்கிப் போடும்படி தீர்மானஞ் செய்வார் ஆகையால், நீருடனே வரவேண்டும் ; அவன் சகோதரியாகிய மைமூனும் இங்கேயிருக்கிறாள் என் னும் சமாசாரம் அனுப்பினான், இச்செய்தியை வரைந்த பத்தி ரிகை அஸன் கையுற்றபோது அவன் மிகவும் வியப்படைந்து உடனே அச்சமாசாரத்தை, தன்னை யாதரித்துவருகிற சிரேஷ்ட தேசாதிபதியிடத்திற்குச் சென்று அவருக்கு அறிவித்து, தன்னுடைய சரித்திரத்தையும் சொல்லி, தான் மறுநாட்காலமே ரெயில்வண்டியிலேறி பொம்பாய்க்குப் போக உத்தரவு கேட்டுநின்றான். அவ்விராசப்பிரதி நிநி இந்தச் செய்தியைக்கேட்டு மிகவும் அதிசயப்பட்டு அவ்வூர் நியா யாதிபதிக்கொரு கடிதமும் சூரத்து நியாயாதிபதிக்கோர் கடிதமும் எழுதிக் கொடுற்தார், அக்கடிதங்களில். அவ் விருவர்களும் அஸனுக்கு மிகுந்த உதவியாயிருக்கும்படி எழுதியிருந்தது; இக்கடிதங்களோடு இன்னும் அவனுக்கு வழிச் செலவுக்காகும்படி இருநூறு பவுனையும் கொடுத்து பொம்பாயில் வழக்கு முடிந்தவுடனே திரும்பிவரும்படி சொல்லியனுப்பினார். 

மறுநாட்காலமே, அஸன் கல்கத்தாவை விட்டுப் புறப் பட்டுப் புகைவண்டி மார்க்கமாய் மூன்றாம் நாள் அப்துல் அப்துல் ஹமீது ஹமீது வசிக்கிற ஊருக்கு வந்திறங்கினான். ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போய் அவனை யெதிர்கொண் டழைத்து, ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்துக் கொண்டு மிகுந்த பிரிய வசனத்தோடு பேசி அவனைத் தன் கிரகத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தான். இவ்விருவரும் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தபொழுது, அப்துல் ஹமீதுக்கு ஜூலைகாவை மணம்புரிவிக்க வேண்டிய காரியங்களெல்லாம் ஆயத்தமாயிருந்தன. அஸனை மைமூன் கண்டவுடன், ஆற்றிலமிழ்த்தி யிருக்குந்தருவாயிலிருந்த ஒருவனுக்குத் தெப்பம் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவானோ அவ் வளவு சந்தோஷ மடைந்து, அவனுக்குச் சமீபததிற்சென்று அவன் கைகளைப் பிடித்துத் தன் கண்களில்வைத்து, தனது சகோ தரனினிலைமையைக் குறித்த துக்கமும், அதினூடே அவனை மீட்க அஸன் வந்து சேர்ந்தானென்ற ஆனந்தமும் கலந்து பொங்கக் க்ண்ணீருகுத்து நின்று ஏங்கி, ஆதியோடந் தமாய் நடந்த காரியங்களை யெல்லாம் சவிஸ்தாரமாய்ச் சொன்னாள். 

பின்பு அப்துல் ஹமீதுக்கும் ஜுலைகாவுக்கும் கல்யாணம் நிறைவேறி, அதற்காக விருந்தும் நடத்தப்பட்டு மற்றுஞ் சடங்குகளும் முடித்து அடுத்த நாட்காலமே அவ்விருவரும், மைமுனும், அப்துல்ஹமீதுடைய தாயும் ஆகிய ஐவரும் புகை வண்டியேறிப் பொம்பாய்க்குச் சென்றார்கள். காஸிமுடைய வழக்கு விசாரணைக்கு வர ஒரு நாளைக்கு முன்பு இவர்களெல் லோரும் பொம்ாய்க்குப் போய்ச் சேரக்கூடியதாயிருத்த போதிலும் இடைவழியிலோர் தனடநேரிட்டதால், விசாரணை யாகிற தினம் பகல் சுமார் மூன்று மணிக்குப் பொம்பாய்ப் பெரிய ஸ்டேஷனுக்குப்போய்ச் சேர்ந்தார்கள். அங்கிருந்த படியே, குதிரை பூட்டிய நான்கு சக்கரவண்டி கொண்டுவரச் செய்து அதில் யாவரும் ஏறி நியாய ஸ்தலத்திற்குச் சென் றார்கள்; அப்பொழுது ஜுலைகாவும் மைமூனும் அப்துல் ஹமீ துடைய தாயும் முகப்போர்வை போட்டுக்கொண்டிருந்தார் கள். வண்டி குறித்தவிடத்திற்குச் சென்ற பின்பு அஸனும் அப்துல்ஹமீதும் வண்டியைவிட்டிறங்கி, மற்றவர்களை வண்டி யிலேயே யிருக்கச்செய்து, நியாயாதிபதியைப் பார்க்கும்படி நியாயஸ்தலத்திற்குள் நுழைந்தார்கள். அவர்கள் நுழைந்து பார்த்தபொழுது காஸீமுடைய வழக்கை விசாரித்து மூடிந்த பின்பு ஜூரிமார்கள் தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட ஆலோசனை யறையைவிட்டு வெளியேவந்து அவர்களுடைய ஆசனங்களில் உட்கார, அவர்களுள் தலைமையாயிருந்தவர் தன்னிருப்பிடத்தை விட்டு எழுந்துபேச ஆரம்பிக்குந் தருணமாயிருந்தது; அங்கே குற்றஞ்சாற்றப்பட்டு நின்ற காஸீமானவன், தன்னுயிர்த்தோழனாகிய அஸன் வருவதைக் கண்ணுற்று, என்னாண்டவனாகிய அல்லாகுத் தாலா என் னைக் காப்பாற்றிவிட்டான், என உரத்த சத்தமிட்டு, அவனைப் பார்ந்து நண்பனே! என்னைக் காப்பாற்றும் படி யுன்னையிங்கே எனதாண்டவன் கொண்டுவந்துவிட்டான்; நீ ரின்னும் சற்று தாமதித்து வருவீரானால் நியாயாதிபதி யென்னை மரண தண்டனைக்குள்ளாகிவிடுவார். இதையறிந் தன்றோ பெரியோர்கள், (அவனன்றி யோரணுவுமசையாது) என்று திருவாய் மலர்ந்தருளினார்களென்று மிகுந்த ஆனந்தத் துடன் கூத்தாடினான் 

இதைப்பார்த்த நியாயாதிபதி யிவனுக்கென்ன பயித்திய மோ, ஏன் இவன் கூச்சலிட்டுக் கூத்தாடுகிறான் என்று தன்னருகே நின்ற துவிபாஷகரைக் கேட்க, அவர் காஸீமை விசாரித்தார். அதற்கு காஸீம் ஐயா நான் யாரைக் கொலை புரிந்ததார்க் குற்றஞ்சாற்றப்பட்டு நிற்கிறேனோ அர்மகானு பாவன், என்மீது மாறாக்கிருபையுள்ள சர்வதபாபரன் கிருபை யால் இதோ வந்துவிட்டார், அவரை விசாரித்தால் தங்களுக்கு என்னுடைய உண்மை நன்றாய் வெளிப்படும் என்று சொல்லி முடிக்கு முன்னே அஸன் நியாயாதிபதி யிருக்கிற ஆசனத் துக்குச் சமீபத்திற் சென்று சிரேஷ்ட தேசாதிபதி கொடுத்த கடிதத்தை அவரிடம் நீட்டினார். அதை அவர் வாங்கி வாசித்துப்பார்த்து மிகவும் ஆச்சரியமடைந்து ஜூரிமார்களை நோக்கி, கனவான்களே கொலையுண்டதாகச் சொல்லப்பட்ட அஸன் என்பவர் இவர் தான் இவரைப்பற்றி மேன்மைதங்கிய இராஜப்பிரதிநிதியவர்கள் எனக்குக் கடிதமெழுதியிருக்கிறார், என்று சொன்னபோது அங்குள்ள யாவரும் அதைக்கேட்டு வியப்புற்று வாய் பேசக்கூடாதவர்களாய்ப் பிரமித்துப் போனார்கள். பின்பு நியாயாதிபதி அஸனை விசாரனைக் கூண் டில் நிற்கச்செய்து அவரை விசாரித்தார்; அப்பொழுது அஸன் தன்னைக் கொலை புரியும்படி சில கள்வர்கள் ஆலோ சித்திருந்த சமாசாரம் தனக்குத் தெரியவந்ததையும், அவ் வாபத்தினின்றும் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்வதற் காகத் தான் வீட்டை விட்டு வெளியே யோடிப்போவதை யும், போகிற வழியில் நண்பனாகிய காஸீமைச் சந்தித்து இரு வரும் உடுப்பை மாற்றிக்கொண்டதையும், சவிஸ்தாரமாய்ச் சொல்லிமுடித்தார்; அஸன் வாக்குமூலத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ஜூரிமார்கள் காஸீம் குற்றமற்றவனென்று தீர்ப்புச் செய்தார்கள். உடனே நியாயாதிபதி அவனை விடுதலை செய்தார். 
 
பின்பு காஸீம் தன் சிநேகதரருகேயோடி, அவரைக் கட்டித் தழுவிக் கண்ணீர் சொரிந்து கதறியழுதான். நியாயாதிபதியானவர், காசீமுடைய சகோதரி முதலிய சில முஸ்லீமான பெண்கள் வண்டியிலிருக்கிறார்களென அறிந்து. அவர்களைத் தன்னறைக்குள்ளே வரவழைத்து அஸனையும் காஸீமையும் சந்தித்துப்பேசும்படி வுத்தரவளித்தார். அப்படி யே அவர்கள் அவ்வறைக்குட் சென்றபொழுது, காஸீமும் அவன் சகோதரியும் ஒருவரையொருவர் கண்டவுடனே ஓடி கட்டித்தழுவிக் கதறியழுததைக் கேட்டவர்களெல்லோரும் ஆ, ஆ, இவர்கள் சகோதர வுரிமையைப் பார்த்தீர்களா? இது வெகு அருமை, இவ்விதக்காட்சி மிகு புதுமை யென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு ஆச்சரியமடைந்து நின்றார்கள். காளீம் தான் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட தின்பின் நடந்த சங்கதிகள் யாவற்றையும் ஆதியோ டந்தமாய்ச் சொல்ல. அவர்கள் அதைக்கேட்டறிந்து அல்லா குத்தாலா நம்மை யிந்தத் துன்பங்களுக்குட்படுத்தி, பரிசோ தித்துப் பின்பு இவைகளில் நின்றும் மீட்டுவிட்டான் என்று அவனைப் புகழ்ந்து கொண்டாடித் துதிசெலுத்தினார்கள். 

இவ்விடத்தில் இவ்வாறு நடக்கும் பொழுது மைமூனை விவாகஞ் செய்துகொள்ள உத்தேசித்திருந்த மகம்மது என் பவனும் சூரத்திலிருந்து பம்பாய்க்கு காசீமுடைய வியாச்சிய ஈறங்கித் தினம் வந்தான்; ஆனால் மைமூன் முதலிய யாவரும் நியாயஸ்தலத்திற்கு வந்திருப்பதை யறியாதவனாய்க் கோர்ட் டிற்கு வெகு தூரத்திலிருந்த ஒரு வீட்டில் ஓர் அறைக்குள் யோசனையுடன் இருந்து நீங்காத துயரத்தால், பலவகை கலங்கின சிந்தையுள்ளவனாய் மெலிந்து நலிந்து கொண்டிருந் தான். அப்படி யிருக்க காஸீம் விடுதலையானான் என்ற செய் தியைக் கேள்விப்பட்டு, நியாயஸ்தலத்திற்கு உடனே வந்து அங்கே நடக்கிற காரியங்களெல்லாம் ஒன்றுந் தெரியாமல் பிரமித்து முகம்வாடி நின்றான். இதை அப்துல் ஹமீது அவ னுடைய முகக்குறியால் துக்கமுற்றிருக்கிறா னென்றறிந்து, இவன் மைமூனைப்பற்றி யல்லவா இவ்வாறு விசனமடைந் திருக்க வேண்டும் என்று தனக்குள்ளாலோசித்துக்கொண்டு அவனுக்குச் சமீபமாய்ப்போய், மைமூனைப்பற்றி நடந்த விசேஷங்களையெல்லாம் அவனுக்கு ஆதியோடந்தமாயெடுத் துச் சொல்ல, அதைக்கேட்ட மகம்மது மிகுந்த ஆச்சரிய மடைந்து அவனும் அவர்களிருந்த அறைக்குள் நுழைந்து அவர்களுடனே கூடி ஒவ்வொருவருந் தங்கள் தங்கள் வர லாற்றை விரித்துச்சொன்னார்கள். பின்பு இவையெல்லாம் அல்லாவுடைய கற்பனை யென்று அவனைப் புகழ்ந்து அவன் செய்வதெல்லாம் நன்மைக்காகவே யென்று வந்தனம் செலுத் தினார்கள். 

பின்னர் அஸன் நியாயாதிபதி யிடம்போய், சூரத்தில் தன் தகப்பனாராகிய ஜகுபருடைய செல்வங்களை யெல்லாம் அலீ யென்னும் ஒர் கள்வன் தன்னுடைய சிறிய தகப்ப னென்று தன்னை ஏமாற்றித் தனது வசப்படுததிக்கொண்டு இப்பொழுது அதிகாரஞ் செலுத்தி வருகின்றான். அச்செல் வங்க ளெல்லாவற்றையும் துரைத்தன உத்தியோகஸ்தர் களைக் கொண்டு துரைத்தனத்தார் வசப்படுத்தி அவற்றை நான் பெற்றுக் கொள்ளுமளவும் அதைப் பாதுகாத்து வரும் படிக்கும் அலீ யென்பவனுடைய மனை வியும், பிள்ளைகளும் மிகவும் ஏழைகளா யிருப்பதால் அவர்களிப்போது வசிக்கிற மாளிகையிலேயே குடியிருக்கும்படி திட்டஞ் செய்யவும், அவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு நூறுபவுன் கொடுக்கும்படி உத்திரவளிக்கவும், எனக்கு நண்பர்களாயிருக்கிற காசீம்; மகம்மது ஆகிய இருவர்களுக்கும் தலைக்கு வருடம் ஓன்றுக்கு ஐம்பது பவுன் விகிதம் கொடுத்து வரும்படி யேற்பாடு செய் யவும், தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ளுகிறேன். இவை யன்றி; என்னைக் கொலைசெய்யத் துணிந்ற்வர்களாகிய அப் பாதகர்களிள் பெயரை நானறியேனாயினும், அவர்களுடைய உருவத்தினால் அவர்களை யின்னாரென வறிந்துகொள்ளக் கூடும். ஆகையால், அவர்களைப் பிடிப்பதற்குக் கட்டளை யிட்டருளும்படியாயும் பிரார்த்திக்கின்றே னென்றுசொல்ல, நியாயாதிபதி அஸன் கேட்டுக் கொண்டபடியே நடத்துவிப்ப தாக வாக்களித்து, சூரத்திலிருக்கிற நியாயாதிபதிக்குத் தானொரு சிபாரிசுக்கடிதம் எழுதி முடித்து முத்திரையிட்டு அஸன் கையிற்கொடுத்து, இதைச் சூரத்து நியாயாதிபதி யிடத்தில் கொண்டுபோய்க்கொடும்; அவர் உம்முடைய விண்ணப்பங்களை நிறைவேற்றுவாரென்று சொன்னார். அதைக்கேட்ட அஸன் தனது உயிர்த் தோழர்களிருக்கிற அறைக்குள் நுழைந்து, அவர்களையுமழைத்துக்கொண்டு சூரத்துக்குவந்து நியாயாதிபதியைக்கண்டு தான்கொண்டு வந்த இரண்டு கடிதங்களையுங் கொடுத்து, பேசியபின்னர் அலீ வசித்துக்கொண்டிருக்கிற மாளிகைக்குட்சென்றார். அப்பொழுது அலீ அஸனைக்கண்டவுடனே திடுக்கிட்டு கருடனைக் கண்ட அரவம்போல் பயந்து, தன்மாளிகையை விட்டு வெளியே ஒடிப்போகும்படி யத்தனப்படும்போது, அஸன் அவனுக்குச் சமீபமாய்ச் சென்று ஒ அலியே உமது தந்திரங்கள் யாவையும் நானறிந்துகொண்டேன். நீ யென்னைக் கொலைபுரிய யத்தனித்ததையுந் தெரிந்து மீண் டேன்; அதுவுமல்லாமல் நீ யென்னுடைய தந்தையின் சகோதரன் அல்லவென்பதும், என்னுடைய ஆஸ்திக ளெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வதற்காக நீரும் உமது தோழர்களாகிய இரண்டு சண்டாளர்களும் கூடிச் செய்த மோசங்கள் ஒவ்வொன்றும் எனக்கு நன்றாய் விளங்கிற்று.

ஆகையால் உம்மையிப்போதே துரைத்தனக் காவற் சேவகர்கள் வசம் ஒப்புவித்து நீர் செய்த குற்றத்திற்குத் தக்கபடி யும்மைத் தண்டணைக்குள்ளாக்க எனக்கு விருப்ப மிருந்தாலும் உம்முடைய மனைவி மக்களுடைய நன்மைக்காக வும் மனதிரங்கி, உம்மைத் தண்டனைக்குள்ளாகாதபடி விட்டு விடுகிறேன், ஆயினும், நீ யுடனே இவ்விந்து தேசத்தை விட்டுப் பறப்பட்டு கடலுக்கப்புறஞ்சென்று அங்குள்ள தீவாந் தரங்களில் வசிக்கவேண்டும், அப்படி நீ செய்யாது இந்த இந்து தேசத்தில் வசிக்கிறதாகத் துரைத்தனத்தாருக்குத் தெரியவருமாயின் உன்னைப்பிடித்துக் கைத்தளையிட்டுச் சிறைச்சாலையில் வைப்பார்களென்று அஸன் சொன்னபோது, அலீ மறுமொழியொன்றுஞ் சொல்லக்கூடாதவனாய்ச் சற்று நேரஞ் சும்மா இருந்துவிட்டுத் தாங்கள் ஆக்கிஞாபித்தபடி யே நடந்துகொள்கிறேன். நான் செய்த குற்றத்தைத் தயவு செய்து அல்லாவுக்காக மன்னித்துக்கொள்வீர்களாக வென்று மிகவும் வணங்கி மிகவும் மரியாதையுடனே உத்தாரஞ் சொல்லியபின், அந்த மாளிகையை விட்டு வெளியே புறப் பட்டுப் போய்விட்டான். பின்பு அஸன் அலீயினுடைய மனைவி மக்களிடத்திற்குப்போய்த் தான் அந்த மாளிகையை விட்டு ஓடிப்போக நேரிட்ட காரணத்தையும், அதற்குப் பின் நடந்த சங்கதிகளெல்லாவற்றையும் அலீயை அவ்வூரை விட்டு ஓடிப்போகத் தான் கட்டளையிட்டிருப்பதை யுஞ் சொல்ல, துஷ்டமிருகங்களிருக்கிற குகையிலிருந்து உயிர் தப்பியோடும்படி விடுவிக்கப்பட்ட ஒருவன் எவ்வாறு மனமகிழ்ச்சியடைவானே அவ்வாறு அவர்கள் இதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்களுடைய ஜீவனாம்சத்திற் காகத் தன் ஆஸ்தியிலிருந்து வருடம் ஒன்றுக்கு நூறு பவுன் கொடுத்துவரும்படி துரைத்தனத்தாருக்கு தான் சிபாரிசு செய்திருப்பதையவர்களுக்கு அஸன் அறிவித்தவுடன் அவர்கள் கண்களிலிருந்து மாலைமாலையாய் ஆனந்த பாஷ்பஞ் சொரி யத் தங்கள் இருகரங்களையும் உயர்த்தி அல்லாகுத்தாவைச் துதித்து நாம் அஸனுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத் தில் உதவி செய்ததினாலன்றோ நாம் எதிர்பாராத சமயத்தில் நமக்கு இப்பேருதவி கிடைத்தது. இதை யறிந்தன்றோ, 

நன்றி யொருவருக்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லென வேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு, தாளுண்ட நீரைத்
தலையாலே தான் றருதலால், 

என்றிப்படி நீதிநூல் கட்டளையிட்டிருக்கிறதெனச் சொல் லித் தங்கள் நன்றியறிதலைக் காட்டினார்கள். பின்பு, அஸன் கொல்லப்படவில்லை; இப்பொழுது அலீயிருந்த வீட்டில் வந் திருக்கிறார் என்னும் சங்கதி அப்பட்டணமுழுதும் பரவின வுடனே, அவரிடம் உபகாரம் பெற்றிருந்த ஏழையனாதி களனேகர்களும் அவருக்குயிராயிருந்த சில நண்பர்களும் அவருடைய மாளிகைக்கு வந்து அவரைக் கண்டு அஸ்ஸ லாமு அலைக்கும் வரகமதுல்லாகி, வபரகாதுஹூ என்று ஆசி கூறியவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டு, ஆசீர்வதித்துக் கொண்டாடினார்கள். அந்தச் சமயத்தில் சந்தோஷமென்னுஞ் சூரியனுதயமானவுடன், துக்கமென்னும் இருளகல யாவரும் ஆனந்த சாகரத்தில் ஆழ்ந்தினவர்களாயிருந்தார்கள்; அஸன் தனது உயிரைக் காப்பாற்றி வைத்த மரியம் என்னும் பெயரி னளைக் காசீமுக்குப் பாணிக்கிரகணஞ் செய்துகொடுக்க வேண்டுமென்று சொல்ல, அதைக் கேட்ட யாவரும் மிகவுஞ் சந்தோஷமாய் அதற்குடன்பட்டுககொண்டார்கள். 

மறுநாளிரவு மைமூனை மகம்மதுவுக்கும், மரியமை காசீ மூக்கும் விவாகம் செய்துகொடுப்பதற்குத் தக்க ஆயக்கங்களெல்லாம் செய்து மிகவும் சிறப்பாக விவாக காரியம் நடத் தப்பட்டது. அஸன் மூன்றுநாள் வரையிலும் அந்த வீட்டில் அவர்களுடனிருக்கச் சந்தோஷமாய்க் காலங் கழித்தார்கள். இதற்கிடையில் தனக்காக வேண்டிய காரியங்களையும் நிறை வேற்றிக்கொண்டார். பின்பு அஸனும், ஜுலைகா, அப்துல் ஹமீது, மரியம் ஆகிய யிவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு ரெயில்வே ஸ்டேஷனுக்குப் போய், ரெயிலேறி தங்கள் ஊருக் குப் போய்ச் சேர்ந்தார். 

அஸன் கல்கத்தாவுக்குப் போய்ச் சேர்ந்தவுடன் வழக்கப் படி பாடசாலைக்குப் போய் தர்க்கம், இராஸயனம், தத்துவ முதலிய சகல சாஸ்திரங்களைக் கற்க மிகவும் ஆவலபய் முயற்சியெடுத்துக் கொண்டு வந்ததால் (முயற்சி திருவினை யாக்கும்) என்றபடி இவர் அவைகளைக் கற்று மிக்க தேர்ச்சி யடைந்துவந்தார். 

இவைகளிப்படியிருக்க, முந்தித் தன்னை யாதரித்துவந்த சிரேஷ்ட தேசாதிபதியின் மாளிகைக்கு வாரந்தோறும் தவறா மல் ஒருமூறை போய்வருவார். 

அவரவ்வாறு அங்கே போயிருக்கிற சமயத்தில், அந்த மாளிகைக்கு வருகிற ஐரோப்பிய கனவான்களும், துரைசானி மார்களும், வாலிபர்களும், வாலிபப் பெண்களும் மற்றெல்லோ ரும் அஸனுடைய முகவசீகரத்தையும் நற்குண நற்செய்கை களையும் கண்டறிந்து அவருக்கு மிகுந்த அன்பு பாராட்டி, அவரை நேசித்து வந்தார்கள்; இவையன்றி, அம்மாளிகை யில் வசிக்கின்ற வாலிபத்துரைமக்கள் வேட்டையாடும்படி காட்டுக்குப் போகும்போதெல்லாம் அஸனையும் தங்கள்கூட கூட்டிக்கொண்டு போவார்கள். அங்குள்ள வாலிபப் பெண் களோ, தாங்கள் நடனசாலைகளுக்கும், சங்கீத சாலைகளுக் கும் போகும்போதெல்லாம் அவரைத் தங்களுக்கொரு துணைவ னாகத் தங்களோடு அழைத்துக்கொண்டு போவது வழக்கம். அல்லாமலும் அவர்களுக்குள் ஏதாவது ஆட்டம் கேளிக்கை கள் நடக்குங் காலங்களில் அவற்றிற்கு இவரையும் தங்களில் ஒருவராய்ச் சேர்த்துக்கொள்வார்கள். அஸன் நாளடைவில் இவ்வாறு பழகி ஆங்கிலேய சங்கீதங்களைப் பாடுவதிலும் பியாநோ முதலிய கீதவாததியக் கருவிகளை வாசிப்பதிலும் மிகவும் சமர்த்தராயிருந்ததால் சங்கீதங்கள் பாடவும் கீதவாத தியங்களை வாசிக்கவும் எவர்களும் மிகுந்த ஆவலுடனே அவரைத் தங்கள் வீடுகளுக்கு அழைத்துக்கொண்டு போவார்கள். 

இவர் இப்படி நாடோறும் ஐரோப்பியர்களோடு இடை விடாது பழகி வந்ததால் அவர்களுடைய நாகரீகம் உபசாரம் முதலிய திருத்தமான நடையுடை பாவனை மூதலியவைகள் இவருக்கும் படிந்துவிட்டன. மேலும், அவரைப் படைத்துக் காத்தருளும் அல்லாகுத்தாலாவுக்கு அஞ்சி அஞ்சு வேளை களிலும் ஓர் நேரமேனுந் தவறவிடாமல் அந்தந்த வேளைகளில் தொழுது முடித்து தருதோஷரீப் முதலிய திக்ருகளும் (ஜெபங் களும்) ஒயாது செய்து உண்மையான (ஆபீதா) தேவபக்தனா யிருந்தார். தங்களைக்கண்ட வாலிபர்களின் மனமுங்கண் ணும் வண்டெனப் பறந்து பின் தொடர்ந்து, மயங்கித்தியங்கிக் கலங்கிக் காமாக்கினி தகிப்பதினால் சகிக்கமாட்டாமல் தடு மாற்றம் கொள்ளும்படி செய்யத்தக்க மோகினிகளைப் போன் றும், மின்னற்கொடியிடைமாதோ, குயிலின் ஓசையைப் பழித்த குரலினளோ, மயில்சாயலையுடைய மடமாதோ என்று கற்றோர்களும் வியக்கும்படியாய் அழகே ஓர் உருவங்கொண்டு அவதரித்த தேவப்பெண்களைப் போன்றும் அழகிய மாதர்க ளுடனே அவர் எப்பொழுதாவது நெருங்கிச் சிநேகம் செய்ய நேரிட்டபோதிலும் அவர்களிடத்தில் தன்னோடு பிறந்த சகோதரிகளைப்போல அன்பு பாராட்டி நேசிப்பதேயன்றி, எள்ளளவேனும் காமாந்தகாரம் கொண்ட தூர்த்தர்களைப் போல அவர் அவர்களிடத்திற் கெட்ட எண்ணத் தோடு சிநேகம் செய்வது வழக்கமில்லை. அம்மாதர்களோ இவருடைய பூரணச்சந்திர விலாசம் போன்ற சுந்தரம் பொருந்திய முகத்தின் வடிவைப்பார்த்துச் சந்தோஷங் கொள்வதுமன்றி அவருடைய நாவிலிருந்து எழுகின்ற இனிமையான வார்த்தைகளைக் காதாறக்கேட்டு அகமகிழ் வுற்றிருப்பார்கள். அம்மங்கையரில் அநேகர் நாம் இந்த அஸனைப்போன்ற அழகுள்ள வாலிபனையன்றே நமக்கு வர னாகத் தேடிக்கொள்ளவேண்டு மென்று நினைத்து நினைத்துப் பெருமூச்சு விடுவார்கள்; சிலர் தங்கள் சொற்பனத்தில் அவ ரைத் தாங்கள் விவாகம் செய்துகொள்வதுபோலும், அவரோடு கூடி விளையாடி யின்பம் நுகர்வதுபோலும் கண்டு மனமுருகு வார்கள். அஸனே, தம் வயதிற்குரிய இன்பங்களைப் பூரண மாய் அனுபவிக்கத் தக்க நிலைமையிலிருந்தும் இச்சிற்றின்பங் களில் ஆசைகொண்டு பாவச் செய்கைகளைச் செய்வோமா னால் மறுமையில் அவியாத எரி நகரத்துக்கு ஆளாகவேண்டி யிருப்பதுமன்றி, இம்மையிலும் அல்லாகுத் தாலாவுடைய தெண்டனை மிகக் கொடுமையா யிருக்குமென்ற பயம் தம் மனதில் நீங்காது குடிகொண் டிருந்ததால் தீய வழியினின் றும் விலகி நன்னெறியிலொழுகிவந்தார். அவர் ஒவ்வோரிர வும் நித்திரை செய்யப்போகும்பொழுது அல்லாகுத்தாலா வைத் தொழுது நாயனே யென்னைப் பரிசோதிக்கும்படிக்கு நீ, என்னைப் புறமதஸ்ர்களுக்கிடையில் கொண்டுவந்து விட் டிருக்கிறாய்; என்னை மருட்டத்தக்க சோதனைகள் என் பக்கத் தைச் சூழ்ந்திருக்கின்றன; ஆகையால் இத்தீமைகளுக்கு நான் இடங்கொடாமல் என்னுடைய ஈமானை உறுதிப்படுத்துவாயாக. நான் நல்வழியை விட்டு விலகாமலிருக்க எனக்கு நேர்வழி காட்டி யருள்வாயாக, என்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையர்கள் யாவரென்று எனக்கு அறிவித்தருள்வாயாக, என்று பிரார்த்தித்துப் புகழ்ந்து பின்பு நித்திரை செய்வது வழக்கம். 

இப்பொழுது அஸனுக்கு வயது பத்தொன்பதாகிவிட் டது. அப்பொழுது ஒருநாள் பகல் நேரத்தில் அந்நகர்க்கு வெளிப்புறத்தில் இருந்த வோர் மைதானத்தில் அஸன் உலா விக் கொண்டிருக்கும்போது ஓர் துரைசானி மருண்டு ஓடி வருவதையும், அவளைப் பின்தொடர்ந்து அதிவேகத்துடன் கூர்மையான கொம்புகளையுளடயவோர் பருத்த எருது தன் தலையைச் சாய்த்துக்கொண்டு கண்களில் நெருப்புப்பொறி பறக்க வாயில் நுரைதள்ள வாலைத் தூக்கிக்கொண்டு அத் துரைமகளை முட்டிக்கொல்லும்படி துரத்திக்கொண்டு வருவதையும் அவர் கண்டவுடனே அவளுக்குதவி செய்து அவ ளுயிரை மீட்கும்படி முன் பாய்ந்து ஓடி அவ்வெருதுக்குச் சமீபமாக நெருங்குமுன் அவள் கால் தடுமாறித் தரையில் விழ, அந்தமாடு ஓடிவந்த விரைவினால் அங்கு நின்று அவளைக் குத்திக் கொல்லக் கூடாததாய், அதின் கொம்புகள் அவ ளுடுப்பில் மாட்டிக்கொண்டபடியால் அதைக் கிழித்துக் கொண்டு அவ்விடத்தினின்று இருபதடித் தூரம் தாண்டிப் போய் மீண்டும் திரும்பியவளை முட்டிக்கொல்ல மிகுந்த கோபத்துடன் சீறிப்பாய்ந்து வரும்போது, அஸன் அவளுக் கும் அம்மாட் டிற்கும் இடையில் ஒடிப்போய் நின்றுகொண்டு தன் கையிலிருந்த பட்டுக் குடையை விரித்து மாட்டுக்கு முன்னே பிடிக்க அவ்வெருது சற்று பிரமித்துப் பின்வாங்கித் திரும்பவும் மிகுந்த வேகத்துடன் சீறிப்பாய்ந்து கொண்டு வந்தது. இதற்கிடையில் அஸன் அந்தத் துரைமகளைப் பார்த்து, அம்மா நீங்கள் சீக்கிரம் எழுந்து ஓடிவிடுங்கள், ஓடிவிடுங்களென்று சத்தமிட அவள் நொடிக்கு ளெழுந்து கொஞ்சந் தூரம் ஒடி அங்கு நின்றவோர் பருத்த ஆலமரத் தின் மறைவில் ஒளிந்துகொண்டு நின்றாள், அப்பொழுது அந்தமாடு அதிவேகமாய் அஸனுடைய குடையில் வந்து தாக்க, அந்த மாட்டின் கொம்பு அக்குடையில் குத்திக் கொண்டு அது கிழியாமலிருக்கும்படி அஸன் அதைச் சாய்த் துப் பிடிக்க, கொம்பு அதில் படாது சறுகி மாடு அப்புறம் போய் வீழ்ந்து திரும்ப முன்போல் பாய எத்தனிக்கையில், இவரும் திரும்பிக் குடையை முன்போலவே விரித்துப் பிடித்து, அவ்வெருதின் ஒவ்வெரு ஒவ்வொரு இலக்கி னுக்குந் தப்பி நின்றார். இவவாறு சுமார் ஐந்து நிமிஷ நேரம் அந்த மாடு அடுத்தடுத்துப் பாய்ந்து மோதியும், இவர் ஒவ் வொரு தடவையும் அபாயத்தினின்று தப்பித்து நின்றார். அஸன் இப்படி அபாய நிலையில் நிற்பதைக் கண்ணுற்ற அந்தத் துரைமகள் மனஞ்சகியாது. தன்னுயிரைக் காப்பாற் றிய வாலிபன் அபாய நிலையிலிருக்கின்றானே அவனுக்கு இந்தச் சமயத்தில் நாமும் உதவி செய்யவேண்டுமே யென்று கூக்குரலிட்டுக்கொண்டு ஓடிவரும்போது, அயலில் வேலை செய்துகொண்டு நின்ற சில கூலிக்காரர்கள் இவளிட்ட கூக்குரலைக் கேட்டு ஓடிவந்து அஸனும், எருதும் பொருதுவதைக் கண்ணுற்று, உடனே சமீபித்துத் தங்கள் கையிலிருந்த மூங்கிற்றடிகளால் அம்மாட்டை யடித்துப் புடைத்து ஓட்டி விட்டார்கள். பின்பு அந்தப்பெண் தன்னைக் காப்பாற்றிய அஸனுக்குச் சமீபமாய்ச்செல்ல அவர் இவளழகைக் கண்டு திகைத்துவிட்டார்; ஏனெனில், அவரிது வரையிலும் அநேக அழகான ஸ்திரீகளைப் பார்த்திருந்தாலும் இவளுடைய அழ கிற்கு ஒப்பான வேறெந்தப் பெண்களையும் இதுவரையிலும் இவர் கண்டதில்லை. அவளுடைய உருவம் துலையில் நிறுத்துக்குகையில் உருக்கி அச்சில் வார்க்கப்பட்ட தங்கச் சிலை, அல்லது உறைந்த பனிக்கட்டியைத் திரட்டி உரு வாக்கப்பட்ட சித்திரப் பாவையோ வென்று கண்டோர் அதிசயிக்கத் தக்க மேனியும், கிருபை யென்னும் சுடர் விட்டிலங்கி, எதிர்த்துப்போர் செய்கின்ற இரண்டு கெண்டை மீன்களையொத்த இணை விழிகளும், முருக்கம் பூவையும் பவளத்தையும் பழிக்கத்தக்க இதழ்களும், முல்லை மொக்கு களை அல்லது ஆணிமுத்துக்களை வரிசையாகக் கோர்த்துக் கட்டினதைப்போன்ற தந்தப்பந்திகளும், அன்னத்தின் கழுத் தோ, அல்லது வலம்புரிச்சங்கமோ வென்று சொல்லத்தக்க நீண்டகளுத்தும், சூதாடும் வட்டோ நீர்க்குமிழியோ அல்லது தெங்கிள நீரோவென்று சந்தேகிக்கும்படி தடித்து அடிபரந்து, பூரித்தெழுந்து, அண்ணாந்து நிமிர்ந்து தளதளென விளங்கும் தங்கக் கிண்ணத்தை யொத்த தனங்களும், அவை சாய்ந்து விழாதபடி கடாவிய இரும்பின் குமிளாணியை யொத்த அவற் றினரும்பும், மின்னற்கொடியையொத்த இடையும், வாழை மரத்தை யொத்த தொடைகளும் நண்டையொத்த முழங்காற் சிப்பியும், வராலை யொத்த முன்காலும் உடையவளும்; அழகே ஒருருக்கொண்டு வந்தவளுமான அம்மாதரசியை யிவர் கண்டு தன் மனங் கலங்கித் தன்னறிவொடுங்கி, ஒன்றுந் தெரியாது மயங்கித் தியங்கிநின்றார். அவரப்படி, நிற்பதைக் கண்ட மாது அவரது கையைப் பிடிததாள்; அப்படியவன் கையிவர் மேற்பட்ட தக்ஷணமே மின்சார சிகிச்சை செய்ததுபோல் இழந்த அறிவு முதலியன முன்போலவே யுண்டாகிவிட்டது. பின் பவள், அவனை நோக்கி, ஐயா நீரின்று எனக்குச் செய்த பேருதவிக்கு நானெப்போது பிரதியுபகாரஞ் செய்யப் போகின்றேன். எனது உயிர் மிகவும் அபாய நிலைமை யிலிருந்த சமயத்தில் தாங்க ளூன்றுகோல் போல் வந்துதவி, என் பிராணனை காப்பாற்றினீர்கள். தங்களுடைய வுத்தமமான இச்செய்கையை நானெவ்வாறு புகழ்வேன். தாங்கள் செய்த உதவிக்குச் சரியான பிரதியுபகாரம் என்னாற் செய்வதரிதெனினும் கூடியமட்டும் தங்களுக்குச் சந்தோஷ முண்டாகும்படி நான் நடந்துகொள்ள விருப்பமுள்ளவளா யிருக்கிறேன்; ஆகையால் தாங்கள் தயவுசெய்து என் தந் தையிடம் என்னோடு வரவேண்டுமென்று மன்றாடிக் கேட் டுக்கொள்ள, அஸன், குயிலிசை போன்ற இவளது குரலைச் செவியுற்று அகமகிழ்வு கொண்டு அவள் வார்த்தைக்கிணங்க அவளிவனை யழைத்துக்கொண்டு தன் தந்தையினிடஞ் சென்றாள். 

அம்மங்கை, இவ்வாலிபனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு சற்று தூாஞ் சென்று, அங்கிருந்த ஓர் பெரிய அழகான மாளிகைக்குள் நுழைந்தாள். அங்கே, குளிர்ந்த பார் வையும், நரைத்த மயிரும், திரைத்ததோலும், பருத்த உட லும், சாந்தகுணமுள்ளவருமான ஓர் துரைதானுட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டெழுந்து இவர்களுக் கெதிர் கொண்டுவந்து தன்னருமைத் திருமகளாகிய அந்தப் பெண்னை முத்தமிட்டு, எனதன்புள்ள கண்ணே! என்னுயிர்க் குயிரான பெண்ணே! நீயேனிவ்வளவு நேரஞ்சென்று வந் தாய்; நீ இவ்வளவு நேரஞ்சென்று வருவதற்குக் காரண மென்ன? உன் முகத்தைப்பார்க்க நீயேதோ ஓரபாயத்தில் அகப்பட்டு மீண்டவள் போல் தோன்றுகிறதே; உன்னைப் பின் பற்றி வந்திருக்கிற இவ்வாலிபன் யார்? என்று வினவினார். அதற்கவள் மறுமொழி சொல்ல வாயெடுக்கு முன் தடுமாறி விழுந்த குழந்தை தன் தாயைக் கண்டலறுவது போல் “ தன் தந்தையைக் கண்டயிவழுக்கு மனத்துயரதிகத்து விம்மி யழுது களிமொழிபோன்ற இனிமையான சொற்களால் தன் னுடைய உயிருக்கு நேரிட்ட அபாயத்தையும், அத்தருணத்தில் “மெய்யில் விழ வருகிற அடியைத் தாங்கவருங் கையைப் போல” இவ்வாலிபன் தன்னுயிரையும் ஒரு பொருட்டாக எண்ணாது வந்து தனக்கு உதவிசெய்த அவனது பெருங் கொடைவள்ளற்றன்மையையும் விபரமாய்ச் சொன்னாள். அதைச் செவியுற்ற அத்துரை அஸனுடைய கையைப் பிடித்து அவருக்கு அநேகந்தடவை வந்தனஞ் செய்து தனக் கருகிலிருந்த ஓராசனத்தின் மீது அவரையிருக்கச்செய்து வீரத்தன்மை பொருந்திய ஒ வாலிபனே! உம தருமையான சூரத் தன்மைக்கும், ஆபத்திற் குதவிய உபகாரத்திற்கும் நான் மிகவு மகிழ்வுற்றேன். நான் ஆங்கிலேய இராச்சியத் திற்குப் பிரதான நகராகிய லண்டன் நகரத்திற் பிறந்தவன்; என்னை டெலிங்டன் என்று கூப்பிடுவார்கள். நானவ்வூரி லிருந்து இப்பொழுது இத்தேசத்திற் சிலகாலம் வசித்திருக் கலா மென்று வந்திருக்கிறேன்; எனக்கு அளவிறந்த ஆஸ்தி களிலிருந்தும் அவைகளையனுபவிக்க எனது குமாரத்தியாகிய இப்பெண்ணை யன்றி வேறொருவருமில்லை. என்னுடைய மனைவி இப்பெண் சிறு பிராயமாயிருக்கையிலேயே தேக வியோகமானாள். பின்பு இவ்வுலகத்தில் நான் விசுவாசித்து அன்பு பாராட்டத்தக்க பொருள் இப்பெண்னை யன்றி வே றொன்று மில்லை; இந்தப் பெண்ணில்லாவிட்டால் என்னுயிரும் நிலைத்திராது. அவ்வாறு எனதுயிருக்குயிரான பிள்ளைக்கு நேரிட்ட அபாயத்தினின்றும் இரட்சித்ததற்காகத் தகுதி யான பிரதியுபகாரம் என்னாற்செய்யக்கூடாத தாயிருக்கினும் என்னுடைய பொருளின் மூலமாயாவது அல்லது செல்வாக் கின் மூலமாயாவது என்னாற் கூடினவரையில் உமக்குபகாரஞ் செய்யக் கடைமைப்பட்டிருக்கின்றேன், ஆகையால், இன்ன உபகாரஞ் செயவேண்டுமென என்னிடத்தில் தெரிவித்தால், நான் மிகவும் சந்தோஷத்தோடு செய்வதற்குச் சித்தமா யிருக்கிறேனென்று சொல்ல, அதைக்கேட்ட அஸன் மிகவும் களிகூர்ந்து அந்த ஆங்கிலேய பிரபுவை நோக்கி ஐயா தாங் கள் ஏழையாகிய என்மீதிலிரங்கித் திருவாய்மலர்ந் தருளிய தயவான வார்த்தைகளுக்காக நான் தங்களுக்கு அநேக வந்தனஞ் செலுத்துகின்றேன்; நான் செய்த இந்த அற்பகாரியத்திற்குப் பதிலுபகாரமடைய நான் பாத்திரவானல்ல. ஏனெனிலொருவன் ஒரு பெண் அபாய நிலைமையிலிருப்பதைப் பார்த்து அவளுக்குதவிசெய்து இவ்வாபத்தினின்று மீட்க எத்தனிக்காமலிருப்பானாகில் அவனை ஆண்தன்மை யுடைய வனென்று கூறுதல் தகாது; ஆகையால், தாங்கள் என்பேரில் பட்சமகியிருப்பதே பெரும்பேறு. இஃதன்றி, தாங்கள் எனக்கு வேறொன்றும் செய்யத் தேவையில்லை யென்று மறு மொழிகூற, அதைக் கேட்ட அந்தக் கனவான் வனுடைய வார்த்தையின் மகத்துவத்தைப் பார்த்து, இவன் மிகவும் பெருந்தகைமை யுடையவனா யிருக்க வேண்டுமென்று தனக்கு ளாலோசித்து, மீண்டும்மவனை நோக்கிக் குமாரனே, உம்முடைய பெயரென்ன? நீர் வசிப்பதெங்கே? என்று வினாவ, அதற்கு அவர், ஐயா என் பெயர் அஸன்; யான் இந் நகரிலிருக்கும் பெரிய கல்விச்சாலையில்வாசித்துவருகின்றேன்; இத்தேசத்தை யரசாளுகிற சிரேஷ்டதேசாதிபதி யவர்கள் எனக்கு வேண்டிய பொருளுதவி செய்து ஆதரித்து வருகிறா ரென்று சொல்ல, அதற்கு அந்த ஆங்கிலேயப் பிரபுவும் அவ ருடைய குமாரத்தியாகிய பாளினா என்னும் பெயரினளாகிய அத்தப் பெண்ணும் அவன் மீது மிகவும் அன்புபாராட்டித் தங்களை மறுநாள் வந்து கண்டுக்கொள்ளும்படி மிகவும் மன்றா டிக் கேட்டுக்கொள்ள, அஸனும் அதற்குடன்பட்டு அவர்களி டத்தில், விடைபெற்றுக் கொண்டு தனதிருப்பிடஞ் சென்றார். 

மறுநாட் காலையில் அங்கே தாம் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் முடித்துவிஅடு, தான் சொன்ன வாக்கின்படி மேற்சொல்லிய கனவானு மவர்புத்திரியாகிய பாளினா வும் வசிக்கிற மாளிகைக்கு வந்து அவர்களைக்ககாண, அவர்கள் அவரை நோக்கி அஸனென்னும் புருடசிகா மணியே! நான் நேற்றிரவு சிரேஷட தேசாதிபதியின் மாளி கைக்குப்போய் அவரைச் சந்தித்து உம்மைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர் உம்முடைய சரித்திர முழுவதை யும் ஆதியோடந்தமாய்ச் சொன்னார்; அதைக் கேட்டு நான் மிகவும் ஆனந்தமடைந்தேன். பின்பு நானவரை நோக்கி அந்த வாலிபனைத் தாங்களிதுவரையிலும் ஆதரித்து வந்தது போதும்; இனியான் அவருக்கு வேண்டிய பொருளுதவி செய்து அவருடைய கல்வியை விர்த்தி செய்து வருகிறேன்; தாங்கள் தயவு செய்து அவரையென் வசம் ஒப்புவித்து விடுங்களென்று மிகவும் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன். அப்படிக் கேட்டும் அவருக்கு உமது பேரிலிருக்கிறபட்ச மிகுதியால் எனது வேண்டுகோளுக்கு இணங்காமல் மறுத்து விட்டார்; ஆகிலும் இன்னம் ஒருவருடம் சென்றபிறகு உமக் கிஷ்டமிருக்குமாயின் உமது தந்தை தாயார் இன்னாரென்று தேடிப்போ யறியும்படி அனுப்புவதாக உத்தேசித்திருக் கிறாராம்; அப்படித் தேடிப்போகும்படி நீர் புறப்படுவீராகில் அந்த நாள் முதலுமக்கு வேண்டிய பொருள் செலவுகளெல் லாம் நான் கொடுத்துதவுவதாகச் சொன்னதற்கு அவருடன் பட்டிருக்கிஓர். நீருமிதற்குச் சம்மதப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்ள, அஸன், ஐயா! தங்கள் சித்த மென்பாக்கி யம் என்று அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தி முகமன் கூறி அவர் வேண்டுகோளின்படி நடந்து கொள்வதாக உடன் பட்டனர். 

அன்று முதல் அஸன் கிழமைக்கிரண்டு மூன்றுதரம் அந்தப் பிரபுவின் மாளிகைக்குப்போய் அவரையும் அவர் குமாரத்தியையுந் தரிசித்துக்கொண்டு வந்தார். இப்படி வரு கிறநாளில் சுமார் பதினைந்து பிராயமுடைய பாளினா வென்னு மந்தக் கன்னிகையும், அஸனும் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்பு பாராட்டி நேசித்து வந்தார்கள். அந்தக் கன்னிகைக் குத தகப்பனையன்றி வேறு இனத்தவர்கள் ஒருவரு மில்லா ததினாலும், அஸனுக்கும் இரத்த சம்பந்தமான பந்துக்க ளொருவருமில்லாததினாலும் ஒருவர்க்கொருவர் சகோதரியும் சகோதரன்ம் போல் அன்பு பாராட்டி வந்தார்கள். அவளு டைய தகப்பனுக்கு, அஸன் மாசற்ற நெஞ்சுடையானும், நன்னெறியினின்றும் விலகாதவனுமாகிய வாலிபனென்கிற நம்பிக்கை யிருந்ததால், அவர்களிருவரும் தனியே உலாவி திரியவும் வண்டியிலேறிச் சவாரி செய்யவும் இடங் கொடுத்தி ருந்தார்; அஸனுடைய நன்னடக்கை யாவருக்குந் தெரிந்ருத்ததால், அவர் மகமதிய மார்க்கத்தை யனுசரித்தவரா யிருந்தும் இந்தப் புறசமயத்தாளகிய இப்பெண்ணோடு இவரிப்படி யுலாவித் திரிகிறதைப் பற்றி யொருவருஞ் சந்தேப் பதேயில்லை. இவ்விருவருமிவ்வாறு சிநேகமாயிருக்கையில், பாளினா வென்னும் அப்பெண்ணுக்கு அரபிபாஷை கற்றுக் கொள்ள விருப்பமுண்டான தகல் அதை அஸனிடத்தில் தெரி விக்க, அவரு மப்பாஷையில் மிகத் தேர்ச்சியடைந்தவராகை அப்பெண்ணுக்குக் கற்றுக் கொடுக்கவுடன் பட்டார். அன்று முதல் நாடோறு மிடைவிடாது அவரைத் தனக்கு உபாத்தி யாயராக நியமித்துக்கொண்டு மூன்று மாதத்திற்குள் அந்தப் பாஷையில் இலக்கண வழுவின்றிப் பேசவும் எடுத்த புத்த கங்களைத் தாராளமாய் வாசிக்கவும் தன்னாலியன்ற மட்டும் முயற்சி செய்து கற்றுக்கொண்டாள். இவர்களிருவரும் சந்திக்கும் பொழுதெலலாம் அரபி பாஷையிலேயே சாம்பா ஷித்துக் கொள்வார்கள். சில வேளைகளில் தன்னுடைய கல்வித்திறமையை அஸனுக்குத் காண்பிக்கும் பொருட்டு அரபி பாஷையில் கவிகளைப்பாடி அவரிடத்திற் கொடுப்பாள்; இந்தப் பிரகாரம் அவ்விளைஞர்களிருவர்களும் காலங் கழித்து வருநாளி லோர்நாள் பாளினா ஒரு கனவான் வீட்டுக்கு நடன விருந்திற்குப் போகும்படி யுத்தேசித்துக்கொண்டு தனதன்புள்ள சிநேகிதனாகிய அஸனையுந் தன் கூட வரும்படி யழைக்க, அவரும் உடன்பட்டார். ஆயினும்,விருந்துக்குப் போகக் குறித்த காலத்தில் அஸனுக்கு ஏதோவோர சந்தர்ப்பம் நேரிட்டு; அஸன் வருவதற்குச் சற்று தாமதித்த படியால், அந்தத் துரைசானி தான் முந்திச்சென்றான். 

சற்று நேரஞ் சென்றபின் அஸனும் தனது மித்திரியாகிய பாளினா போயிருக்கிற கனவான் வீட்டை விசாரித்துக் கொண்டு அங்கேபோய் அம்மாளிகைக்குன் நுழைந்தார்; அவரிதுவரையிலும் ஆங்கிலேயர்களின் இவ்வித நடன விருந்து செய்யும் இடத்திற்குப் போகாதவராகையால், அங்கு நடக்கிற விநோதங்களைக் கண்டு பிரமித்து நின்று, அக்கட்டடததினுள் மிகவும் அலங்காரமாய் (சான்டிலீயர்) பளிங்குக் கிளைவிளக்குகளில் கொளுத்தி வைக்கப்பட்டிருந்த தீபங்கள் சூரியோதய காலத்தில் அதின் பிரகாசம் ஓர் பெரிய சோலையில் வீச அச்சோலையினடுவே சூரியனுடைய ஒளியும், அம்மரங்களினிலையின் நிழலும் கலந்து பிரகாசிப்பதுபோல் பிரகாசிப்பதையும் தங்கள் மார்பின் வடிவு தோற்றியும் தோற் றாமலும் இருக்கத்தக்க வுடைகளையும் சுகந்த பரிமளங்களையு அழகான மாதர்களும், வாலிபர்களும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து, பாண்டுவாத்தியத்திற்கிணங்க மேற் சொல்லிய சோலையில் சிறகுவிரித்தாடுகின்ற மயில்களைப் போலாடுவதை யும், சிலர் குயிலோசைக் கிணங்கப் பாடுவதையும், அச் சோலைகளில் நேக பட்சிகளிருந்து பழ மருந்துவபோல் அந் நடனசாலையின் சுவர்களில் தொங்கவிட்டிருந்த பற்பல விசித் திரமான படங்களினழகையுங் கண்டு ஆச்சரிய மடைந்தார். 

அவர் இவ்வாறு நின்றுகொண்டிருக்கிற சமயத்தில், பாளினாவை ஒரு வாலிபன் தன் மார்போடனைத்து அவளு டைய ஒருகையைப் பிடித்துக்கொள்ள, அவன் தன் மற்றொரு கையைத் தன் கூர்மை பொருந்திய ஸ்தனங்களிரண்டும் அவ் வாலிபன் மார்பில் தைத்து அப்புறம் உருவிப்போய் விட் டதோ வென்று தடவிப் பார்பதுபோல் அவன் முதுகிற் போட்டு அணைத்துக்கொண்டு நடிப்பதை அஸன் கண்ணுற் றவுடனே, மனம் பதறித் திடுக்கிட்டு வெயர்வை யுண்டாக நின்று, திகைத்துக்கொண்டிருந்தார் அவருக்குத் தன்மனம் இப்படிப் பதறுவதற்குக காரணம் இன்னதென்று தோன்ற வில்லை. அந்த வாலிபன் அவளை மார்போடணைத்துக் கொண்டு ஆடிச் சுற்றிவரும்போதெல்லா மிவருக்குத் தன்னி ருதயத்தில் ஒரம்பு ஊடுருவிச் செல்கிறது போலிருந்தது. அந்தச் சமயததில ஓடிப்போய் பாளினாவையும், அவளை யணைத்துக்கொண்டாடுகிற வாலிபனையும் பிரித்து விடலாமா வென்று அவர் தனக்குள் யோசித்தார் என்றாலும் நடையுடை பாவனைகளில் முற்றும் நமக்கு வித்தியாசமாக விருக்கிற ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஜாதிவழக்கப்படி நடந்து கொள்வதைக் குறித்து நாமே னிவ்வளவு தூரம் வியாகூலப் படவேண்டும்; நமக்கு மந்தத்துரை மளுக்கும் என்ன பாத்திய மிருக்கிறது,என்று அவர் தன்மனதைச் சற்று கண்டித்துக் கொண்டார் இப்படியெல்லாம் அவர் தன்மனதைத் திடப் படுத்தியும் அவருக்கு ஆறுதலுண்டாகவில்லை. இவ்வாறு அஸன் எண்ணாது மெண்ணிக்கொண்டு துன்புற்று நிற்கும் பொழுது, முதல்முறையாட்டம் முடிந்தது, பாளினா களை தீரும் படி ஓர் சோபவில் வந்துட்கார்ந்தாள். உட்கார்ந்த அந்த நிமிஷத்திற்றானே அஸன் நின்று கொண்டிருந்த பக்கத்தில் தனது பார்வையைச் செலுத்த, அவர் சற்று தூரத்தில் நின்று கொண்டு கண்ணிமையாது தன்னைப்பார்த்த வண்ணமாய் இருப்பதைக்கண்டு எழுந்துபோய்த் தானும் அவருமுட் கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சற்று நேரஞ் சென்றபின் பாண்டுவாத்தியம் முழங்க மறுமூறை ஆட்டம் துவங்கிவிட்டார்கள். அச்சமயத்தில் ஓர் வாலிப துரை மகன் வந்து பாளினாவைக் கைலாகு கொடுத்து எழுந்திருக்கச் செய்து மீண்டும் அவளைத் தன் மார்போ டணைத்துக்கொண்டு ஆடத்துவக்கினான். ஒவ்வொரு முறை பாளினா யும் ஆடிக்கொண்டு சுற்றி வரும்போதெல்லாம் அஸன், மனவருத்தமுற்றிருக்கிறாரென்று அறிந்து சிரித்துக் கொண்டு பார்க்க, ”அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சங், கடுத்தது காட்டுமுகம்” என்ற நீதி வாக்கியபடி அஸன் தன்னுள்ளே கோபங் கொண்டிருப்பதையவர் முகக் குறியால் அவள் அறிந்துகொண்டாள். இவ்வாறு ஆடும் பொழுதே அஸன் கோபமுற்றிருக்கிறார் என்றறிந்த பாளினா அவரை ரச் சந்தோஷப்படுத்தும்பொருட்டு, அந்த ஆட்டம் முடிந்த பின்பு அவரருகே சென்று அவர் முகத்தைக் குனிந்து ஏறிட்டுப்பார்த்து என்னருமையான புருஷோத்தமராகிய அஸனே தமது முகம் வாட்டமாயிருப்பதேன். நான் உல் லாசமாய் ஆடிக்கொண்டிருக்கும்பொழுதே தாங்கள் என்னை கடிந்து பார்த்ததுபோல் தோன்றினதே அதேனென்று வினவினாள். அஸன் அவளுக்கு மறுமொழி சொல்லயத்த னிக்கையில் மிகுந்த சீற்றத்தால் கடுஞ்சொலுரையாமல் துக்கமென்னும் பூட்டிட்டதுபோல் நாவெழவில்லை. அவர் இதழ்கள் துடித்தது. கண்களினின்றும் தாரை தாரையாய்க் கண்ணீர் ஓடிற்று. இதை பாளினா கண்டவுடனே அவளுக்கு விசனமுண்டாகி அவர் மீது இரக்கங்கொண்டு அவர் கையை தனது மிருதுவாகிய தாமரை மலர் போன்ற கையால் இறுகப் பிடித்தாள். அப்படிப்பிடித்தபொழுது அவருக்கு மின்சாரம் சரீரத்தில் ஏற்றியதுபோல் இன்பம் தேகமெல்லாம் ஏறிப் பொங்க காமபாணம் தைத்து, மோகமீறிக் கண் சோர்ந்து சோகமுற்று மயங்கிநின்றார். 

அஸன் இவ்வாறு மையல் மீறி மனம் உருகி நின்று பார்ப்பதை பாளினா கண்டவுடனே, 

“கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனுமில.” 

என்ற வாக்கின்படி அவர் குறிப்பை இவளறிந் தவுடனே காமத்தீ சுவாலை விட்டெழும்பிப் பற்றியெரிய, அதைச் சகிக்கமாட்டாமையால் அவளுடைய சரீரம் படபடவென்று துடித்து மாந்தளிர் மேனி கருகி, தன் மனம் தன் வசத்தி னின்று நீங்கி அஸனுடனே ஒன்றுபட்டு விட்டதுபோல் அவ ளுக்குத் தோன்ற அவளும் ஸ்மரணையற்றவளாய் மயங்கி நின்றாள். இப்படி இவ்விருவர்களும் மையலிலே சொக்கித் தங்களைச் சூழ நடக்கின்ற காரியங்களொன்றும் இன்ன வென்று உணரமாட்டாதவர்களாய்ச் சற்றுநேரம் அறிவற்று நிற்கும்பொழுது. ஓர் துரை மகன் பாளினாவுக்கு அருகில் வந்து அவளுடன் பேசத் தொடங்கினான். அப்பொழுது அவ் விருவரும் உறங்கி விழித்தவர்களைப்போல் திடுக்கெட் டெழுந்து, தங்கள் நிலைமையைப் பிறர் அறிந்தார்களோ வென்று நாணமுற்றார்கள். அதற்குச் சற்று முன்வரையிலும் அவ்விருவர்களும் சகோதரனும் சகோதரியும் போல் ஒருவரையொருவர் நேசித்துக் களங்கமற்ற நெஞ்சினராய் அன்பு பாராட்டி வந்தபோதிலும், இப்போது அவர்கள் எண் ணங் குலைந்து சுபாவமாறிப் போய்விட்டது. 

உடனே அஸன் எழுந்து பாளினாவிடத்தில் விடை பெற்றுக்கொண்டு தன் வீட்டுக்குப் போய் அன்றிரா முழுதும் உறக்கமுமின்றி, தனக்கு நேரிட்டிருக்கிற காரியங்களைக் குறித்து ஆலோசிக்கலானார், 

பாளினாவின் சுந்தரரூபம் தன்கண்ணிற் பதிந்தாற் போலும் தன்னிருதயத்தில் அவள் குடி கொண்டிருக்கிறது போலும் இருந்தமைால், உலக இன்பத்திற் பற்றற்ற நெஞ்ச முடையவர்களாகிய மற்ற விஷயாதிகள்கண் மனதைச் செல்லவிடாது தடுத்து வைப்பதுபோல், அஸன் உலகத்தில் பொருள்கள் யாவற்றையும் மறந்து வீட்டார். அப்படி யிருந்தும், தனக்கும் அந்தப்பெண்ணுக்கும் நடை உடை பாவனைகளிலும், மத விஷயத்திலும் இருக்கிற வேற்றுமையை யும், தனக்கும் அப்பெண்ணுமிருக்கிற அந்தஸ்து வித்தியா சத்தையும் அவர் சற்று நிதானித்து யோசித்துப்பார்க்கையில் யா அல்லாஹு இந்தப்பெண்ணுக்கு இவ்வளவு பூரண அழ கைக் கொடுத்து எனக்கு முற்றும் வித்தியாசமான சாதியாகிய ஆங்கிலேயர் வயிற்றில் ஏன் பிறக்கச் செய்தாய்? அல்லாமலும் நான் விரும்பாதிருக்கும்பொழுதேஎன்னுயிரும்அவள் உயிரும் அன்பென்னும் தளையாற் பூட்டப்பட்டிருக்கின்றனவே என்று தனக்குள்ளே நினைந்து நினைந்துருகி பிரலாபித்துக் கொண் டிருந்தார். இவ்வாறு அவர் விசனமடைந்து ஊண் உறக் கத்தில் சிந்தனையில்லாதவராய், தன் கல்வியைக் கவனி யாமல் பித்துப் பிடித்தவரைப்போலிருந்தபடியால், வழக்கம் போல் பாளினாவைப்போய்ச் சந்திக்காமல் எட்டுநாள் வரைக் கும் தன் வீட்டிலிருந்து கொண்டே துக்கித்துக் கொண்டிருந்தார். 

– தொடரும்…

– அசன்பே சரித்திரம் (நாவல்), முதற் பதிப்பு: 1885, 1974 பதிப்பு – புனைவகம், கொழும்பு.

அசன்பே சரித்திரம் இலங்கையைச் சேர்ந்த சித்தி லெப்பை (லெவ்வை) மரைக்காயர் என்னும் முகம்மது காசிம் மரைக்காயர் எழுதிய நாவல். 1885-ல் இந்நாவலை எழுதி வெளியிட்டார். 1890-ல் மறுபதிப்பு வெளிவந்தது. 1974-ல் அடுத்த பதிப்பு வெளியாகியது.

சித்திலெப்பை மரைக்காயர் (முகம்மது காசிம் சித்திலெப்பை மரைக்காயர்) (சித்தி லெவ்வை) (ஜூன் 11, 1838 - பிப்ரவரி 5, 1898) ஈழத்து தமிழ் எழுத்தாளர், இதழாசிரியர், கல்வியியலாளர், சமூக செயல்பாட்டாளர். ஈழத்தின் முதல் நாவலான 'அசன்பே சரித்திரம்' எழுதியவர். முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பல முன்னெடுப்புகள் செய்தவர். சித்திலெப்பை மரைக்காயரின் நினைவாக ஜூன் 11, 1977-ல் மத்திய அரசு ஒரு ரூபாய் அஞ்சல் தலை வெளியிட்டது சித்திலெப்பை மரைக்காயர் இலங்கையின்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *